Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

7th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

7th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 7th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. தேசிய சிறார்கள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) புதிய குறிக்கோள் வாசகம் என்ன?

அ) Support to Children

ஆ) Bhavishyo Rakshati Rakshit 

இ) All-round Protections of Child Rights

ஈ) Dharmo Rakshati Rakshit

  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) புதிய குறிக்கோள் வாசகமான, “பவிஷ்யோ ரக்ஷதி ரக்ஷித் – எதிர்காலத்தை பாதுகாப்போம்” என்பதை அதன் 17ஆவது நிறுவன நாளில் புதுதில்லியில் உள்ள செங்கோட்டையில் வெளியிட்டார்.
  • உயிர்த்தியாகஞ்செய்த BSF வீரர்களின் குழந்தைகளுக்கு உளவியல் மற்றும் சமூக பாதுகாப்பு ஆலோசனை வழங்க ‘ஷகாரா’ என்ற பெயரில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையத்துடன் இணைந்து எல்லை பாதுகாப்பு படை ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நடவடிக்கையையும் மத்திய அமைச்சர் பாராட்டினார்.

2. திட்டம் 15B’இன்கீழ் தயாரிக்கப்படும் இந்தியாவின் 4 மறைந்திருந்து தாக்கும் வழிசெலுத்துதல் இயக்கப்பட்ட ஏவுகணை அழிகலனுள் முதல் அழிகலனின் பெயரென்ன?

அ) ஐஎன்எஸ் கொச்சி

ஆ) ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் 

இ) ஐஎன்எஸ் வீரா

ஈ) ஐஎன்எஸ் கட்டபொம்மன்

  • ‘INS விசாகப்பட்டினம்’ என்னும் நாசகார கப்பலை ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • திட்டம் 15B’இன்கீழ் இந்தியாவிற்காக தயாரிக்கப்படும் 4 மறைந்திருந்து தாக்கும் வழிசெலுத்துதல் இயக்கப்பட்ட ஏவுகணை அழிகலனுள் இது முதல் அழிகலனாகும். இது இந்திய கடற்படையின் கடற்படை வடிவமைப்பு இயக்குந -ரகத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டதாகும்.
  • இது 75% உள்நாட்டு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. மும்பையின் மசகான் கப்பல்கட்டும் நிறுவனத்தின்மூலம் இந்தக் கப்பல் கட்டப்பட்டது.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பேரன்ட்ஸ் கடல், எந்த 2 நாடுகளின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது?

அ) ரஷ்யா-உக்ரைன்

ஆ) ரஷ்யா-நார்வே 

இ) ரஷ்யா-போலந்து

ஈ) ரஷ்யா-பெலாரஸ்

  • ‘பேரன்ட்ஸ் கடல்’ என்பது ஆர்க்டிக் பெருங்கடலின் விளிம்பில் உள்ள ஒரு கடல் ஆகும். இது நார்வே மற்றும் ரஷ்யாவின் வடக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. இது ரஷ்யாவில் ‘மர்மன் கடல்’ என்றும் அழைக்கப்படுகிறது.
  • ரஷ்யாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் பேரன்ட்ஸ் கடலில் பயிற்சி மேற்கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றன. சைபீரியாவிலுள்ள பனிக்காடுகளுக்கிடையில் கையில் எடுத்துச்செல்லக்கூடிய எறிகணை ஏவிகள் காணப்பட்ட
    -தை அடுத்து, ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் படையெடுப்பு பதட்டங்கள்பற்றி தமது நாட்டின் அணுசக்தி படைகளை அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு உத்தரவிட்டார்.

4. குறைந்த கரிமத் தொழில்நுட்பங்கள் பற்றிய தேசிய புத்தாக்க மாநாட்டை ஏற்பாடு செய்த நிறுவனம் எது?

அ) NITI ஆயோக்

ஆ) எரிசக்தி திறன் பணியகம் 

இ) ASSOCHAM

ஈ) IIT மெட்ராஸ்

  • எரிசக்தி திறன் பணியகமானது (BEE) ‘குறைந்த கரிமத் தொழில்நுட்பங்கள்குறித்த தேசிய புத்தாக்க மாநாட்டை” நடத்தி அதன் 20ஆம் நிறுவன நாளை நினைவுகூர்ந்தது.
  • Facility for Low Carbon Technology Deployment (FLCTD) என்பது உலகளாவிய சுற்றுச்சூழல் வசதியால் நிதியுதவி அளிக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இது ஐநா தொழிற்துறை மேம்பாட்டு அமைப்பு (UNIDO)மூலம் எரிசக்தி செயல்திறன் பணியகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.

5. உக்ரைன், எத்தனை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் தனது எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது?

அ) ஒன்று

ஆ) இரண்டு

இ) மூன்று

ஈ) நான்கு 

  • உக்ரைன் 4 ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடுகளான ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா (மேற்கு) மற்றும் ருமேனியா (தெற்கு) ஆகியவற்றுடன் தனது எல்லையை பகிர்ந்துகொள்கிறது. இது கிழக்கு மற்றும் வடகிழக்கில் ரஷ்யாவுடன் தனது எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது.
  • உக்ரைன் வடக்கே பெலாரஸுடனும் தெற்கில் மால்டோவாவுடனும் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. உக்ரைன் அதிபர் உரையாற்றி கைதட்டல்களைப்பெற்ற விவாதத்திற்குப்பிறகு, உக்ரைனை ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமைக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளராக மாற்ற ஐரோப்பிய நாடாளுமன்றம் பரிந்துரைத்தது.

6. ‘உலகளாவிய நெகிழி ஒப்பந்த’ வரைவுக்கான ஆணையை அங்கீகரித்துள்ள சர்வதேச நிறுவனம் எது?

அ) UNFCCC

ஆ) ஐநா சுற்றுச்சூழல் அவை 

இ) IPCC

ஈ) WWF

  • நெகிழி மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக 175 உறுப்பு நாடுகளுடன் ஐநா சுற்றுச்சூழல் பேரவை, நாடுகள் சட்டப்பூர்வமாகக் கட்டுப்படும் ஓர் ஆணையில் கையெழுத்திட்டது. அடுத்த 2 ஆண்டுகளில் உலகளாவிய நெகிழி ஒப்பந்தம் வரைவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படும். நெகிழி உற்பத்தியைக் கையாள்வதற்கும் நெகிழியின் நச்சுச்சுமையை நிவர்த்திசெய்வதற்கும் இந்த ஆணை பரிந்துரைக்கிறது.

7. ‘How Indians View Gender Roles in Families and Society’ என்ற அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) NITI ஆயோக்

ஆ) UNICEF

இ) பிரதம் அறக்கட்டளை

ஈ) பியூ ஆராய்ச்சி மையம் 

  • 29,999 வயதுவந்த இந்தியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், வாஷிங்டன் DC’ஐச் சார்ந்த ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமான பியூ ஆராய்ச்சி மையம், ‘How Indians View Gender Roles in Families and Society’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
  • இவ்வறிக்கையின்படி, பெண்கள் அரசியல் தலைவர்கள் ஆகி நாட்டை ஆள்வதை இந்திய ஆண்கள் வரவேற்கின் -றனர். ஆண்களைப்போலவே பெண்களும் அரசியலில் திறமையாக செயல்பட முடியும் என்ற கருத்தை 55 சதவீத ஆண்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
  • பத்தில் ஒன்பது இந்தியர்கள் மனைவி எப்போதும் தனது கணவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற கருத்தை ஒப்புக்கொள்கிறார்கள். 34% பேர் குழந்தை பராமரிப்பு முதன்மையாக பெண்களால் கையாளப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். 43% பேர் வருமானம் ஈட்டுவது ஆண்களின் கடமை என்று கூறியுள்ளனர்.

8. ‘கொத்துக்குண்டுகள் மீதான தீர்மானம்’ கையெழுத்தா -ன ஆண்டு எது?

அ) 1972

ஆ) 2008 

இ) 2020

ஈ) 2021

  • 2008 மேயில், 107 நாடுகள் கொத்துக்குண்டுகளைத் தடைசெய்யும் ஒரு பன்னாட்டு தீர்மானத்தைக் கொண்டு வந்தன. அதற்கு, ‘கொத்துக்குண்டுகள் மீதான தீர்மானம்’ என்று பெயரிடப்பட்டது. சமீபத்தில், ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான போரில் கொத்துக்குண்டுகள் மற்றும் வெற்றிட குண்டுகளை பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
  • தீர்மானத்தின்படி, கொத்துக் குண்டுகள் ஒவ்வொன்றும் 20 கிகிராம்களுக்கு குறைவான எடையுள்ள வெடிக்கும் துணைக்குண்டுகளை வெளியிடுகின்றன.

9. பன்னாட்டு கழிவெடுப்பவர்கள் (Waste Pickers’) நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ) மார்ச் 01 

ஆ) மார்ச் 02

இ) மார்ச் 03

ஈ) மார்ச் 05

  • 11 தொழிலாளர்களின் கொடூரமான இறப்புக்கு வழிவகுத்த கொலம்பிய படுகொலையைக் குறிக்கும் வகையில் மார்ச்.1ஆம் தேதி பன்னாட்டு கழிவு எடுப்பவர்கள் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் உலகெங்கிலும் உள்ள கழிவெடுப்பவர்கள் அல்லது மறுசுழற்சி செய்பவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முற்படுகிறது.

10. அரசின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தியாவில் COVID-19 காரணமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை என்ன?

அ) 0.74 இலட்சம்

ஆ) 1.54 இலட்சம் 

இ) 5.54 இலட்சம்

ஈ) 15.54 இலட்சம்

  • அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தியாவில் COVID-19 காரணமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1,53,827 ஆகும்.
  • பெற்றோரை அல்லது பராமரிப்பாளர்களை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கையை மட்டும் இது கொண்டிருக்கவில்லை. லான்செட்டின் ஓர் அண்மைய ஆய்வில், இந்தியாவில் 19 லட்சம் குழந்தைகள் COVID-19 காரணமாக தங்களது பெற்றோர் அல்லது பராமரிப்பாளரை இழந்துள்ளனர் என்று கூறியிருந்ததற்கு பதிலளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், இந்த எண்ணிக்கைக்கும் கள நிலவரத்துக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்று கூறியது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பந்தல்குடியில் பல்லுயிர் பெருக்க சுற்றுச்சூழல் பூங்கா

அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடியில் சுண்ணா -ம்புக்கல் சுரங்கத்தில் சுமார் 72 ஏக்கரில் `5.20 கோடியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பல்லுயிர் பெருக்க சுற்றுச் சூழல் பூங்காவை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை – தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள பந்தல்குடியில், ராம்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான 800 ஏக்கர் பரப்பளவில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் உள்ளது. சுற்றுப்புறச்சூழலைக் கருத்தில்கொண்டு அச்சுரங்க பகுதியில் உள்ள செயல்படா 72 ஏக்கர் பரப்பளவில் `5.20 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு செய்து பல்லுயிர் பெருக்க சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மழைநீரை முழுமையாக சுரங்கத்தில் சேகரிப்பது, அதனால் ஏற்படும் பயன்கள் குறித்து இளந்தலைமுறையினர்க்கு எடுத்துரைப்பதற்காக இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

2. குறைந்தபட்ச ஜிஎஸ்டி 5%-லிருந்து 8%-ஆக உயர்த்த பரிசீலனை

வரவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் குறைந்தபட்ச ஜிஎஸ்டி விகிதம் 5%-லிருந்து 8%-ஆக உயர்த்துவது குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஜிஎஸ்டி 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளில் உள்ளன. இந்நிலையில் குறைந்தபட்ச விகிதத்தை 5%லிருந்து 8%ஆக உயர்த்துவது தொடர்பாக அமைச்சர்கள் குழு இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் நடக்கவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும், அது தொடர்பான கலந்தாலோசனை அக்கூட்டத்தில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு குறைந்தபட்ச விகிதம் 8%ஆக உயர்த்தபடுவத
-ன்மூலம் அரசுக்கு `1.50 லட்சம் கோடி கூடுதல் வரி வருவாய் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதுதவிர, ஜிஎஸ்டி 5%, 12%, 18%, 28% என்ற நான்கு அடுக்குகளிலிருந்து 8%, 18%, 28% என்ற மூன்று அடுக்குகளாக குறைப்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு ஜிஎஸ்டி மூன்று அடுக்குகளாக குறைக்கப்படும்பட்சத்தில் 12% அடுக்கில் வருபவை 18% அடுக்கின்கீழ் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3. தேசிய அளவிலான சிலம்பம்: தமிழ்நாடு அணி சாம்பியன்

கன்னியாகுமரியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் சார்பில், தேசிய அளவிலான 18ஆவது மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவில் ஆண், பெண் பங்கேற்ற சிலம்பப்போட்டி கன்னியாகுமரியில் இருநாட்கள் நடந்தது.

இப்போட்டியில் தமிழகம், புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, மகாராஷ்டிராம், தில்லி, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா, இராஜஸ்தான், நாகலாந்து, மிசோரம், ஜம்மு-காஷ்மீர், பீகார், ஒடிஸா, சத்திஸ்கர் உள்ளிட்ட 22 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. 1200’க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

இதில், தமிழகம் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது இடத்தை புதுச்சேரி அணியும், மூன்றாவது இடத்தை மகாராஷ்டிராம் அணியும் பிடித்தது.

4. நாட்டிலேயே முதலாவதாக தூத்துக்குடியில் `1,000 கோடியில் சர்வதேச அறைகலன் பூங்கா: முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அடிக்கல்

இந்தியாவிலேயே முதலாவதாக தூத்துக்குடியில் `1,000 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள சர்வதேச அறைகலன் பூங்காவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

துறைமுக நகரமான தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் `1,000 கோடியில் 1,150 ஏக்கர்பரப்பளவில் ‘சர்வதேச அறைகலன் (Furniture) பூங்கா’ அமைக்கப்படும் என கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார். அறைகலன் பூங்கா அமைக்க சிப்காட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 1,150 ஏக்கர் நிலம் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அறைகலன் தொழிலுக்கென தனியாக நாட்டிலேயே முதல் சிறப்பு பொருளாதார மண்டலமாக அமைக்கப்படும் இந்தப் பூங்காவில் மர அறுவை ஆலை, அறைகலன் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் உள்ளிட்ட சுமார் 100 நிறுவனங்கள் இடம் பெறுகின்றன. அறைகலன் தொழில்சார்ந்த உதிரி பாகங்களை தயார் செய்யும் சிறு, குறு தொழில் நிறுவனங்களும் இந்தப் பூங்காவில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3.5 இலட்சம் பேருக்கு வேலை

அறைகலன் தொழில் தொடர்பாக ஆண்டுதோறும் சுமார் 5 ஆயிரம்பேருக்கு திறன் பயிற்சி அளிக்கும் வகையில் பயிற்சிக்கூடம், அறைகலன் பொருட்களின் தரத்தை பரிசோதிக்கும் ஆய்வுக்கூடம், கூட்ட அரங்கம், தங்கும் விடு -திகள், உணவகங்கள்போன்ற அனைத்து வசதிகளும் அங்கு இடம்பெறும்.

இந்தப் பூங்காமூலம் சுமார் `4,500 கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், நேரடியாகவும், மறைமுகமாகவு -ம் சுமார் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, தூத்துக்குடி ஸ்பிக் நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 22 மெகாவாட் திறன் கொண்ட நீரில் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை முதல்வர் திறந்து வைக்கிறார்.

5. இலங்கை – இந்தியா கூட்டுகடற்படை பயிற்சி –ஸ்லைநெக்ஸ், 07-10 மார்ச் 2022

இந்தியா- இலங்கை இடையே 9ஆவது கூட்டு கடற்படை பயிற்சி இன்று தொடங்கி வரும் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டு கட்டங்களாக இந்தப் பயிற்சி நடத்தப்பட உள்ளது. முதல்கட்டப் பயிற்சி விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. அதன்பின் இரண்டாம் கட்ட பயிற்சி வங்காள விரிகுடாவில் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இலங்கை கடற்படையின், ரோந்துக்கப்பலான LLNS சயூரலா, இந்திய கடற்படையின் INS கிர்ச் கப்பல் ஆகியவை பயிற்சியில் இடம்பெற்றுள்ளன. முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டு கடற்படை பயிற்சி திரிகோணமலையில் நடைபெற்றது.

இருநாட்டு கடற்படைகளுக்கு இடையே புரிந்துணர்வு, அனுபவ பகிர்வு, கடல்சார் நடவடிக்கைகள், ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இக்கூட்டு கடற்படை பயிற்சி நடைபெறுகிறது.

1. What is the new motto of National Commission for Protection of Child Rights (NCPCR)?

A) Support to Children

B) Bhavishyo Rakshati Rakshit 

C) All–round Protections of Child Rights

D) Dharmo Rakshati Rakshit

  • Women and Child Development Minister Smriti Irani launched the new motto of National Commission for Protection of Child Rights, NCPCR on its 17th foundation day at Red Fort, New Delhi. The New Motto is ‘Bhavishyo Rakshati Rakshit’.
  • The Minister also complemented the collaboration between NCPCR & Border Security Force for the initiative called ‘SAHARA’, which provides psycho–social counselling to children of BSF jawans who laid down their lives.

2. What is the name of India’s first of the four stealth guided missile destroyers under Project 15B?

A) INS Kochi

B) INS Visakhapatnam 

C) INS Veera

D) INS Kattabomman

  • Chief Minister of Andhra Pradesh Jagan Mohan Reddy dedicated the destroyer INS Vishakhapatnam. This is India’s first of the four stealth guided missile destroyers under Project 15B. It has been designed in–house by the Indian Navy’s Directorate of Naval Design.
  • It has 75 percent indigenous content and was constructed by Mazagon Dock Shipbuilders Limited, Mumbai.

3. The Barents Sea, which was seen in the news recently, is located along the coasts of which two countries?

A) Russia–Ukraine

B) Russia–Norway 

C) Russia–Poland

D) Russia–Belarus

  • The Barents Sea is a marginal sea of the Arctic Ocean, located along the northern coasts of Norway and Russia. It is also called as the Murman Sea in Russia.
  • Russian nuclear submarines sailed off for drills in the Barents Sea and mobile missile launchers were seen among snow forests in Siberia after President Vladimir Putin ordered his country’s nuclear forces put on high alert over tensions with the West amidst the invasion of Ukraine.

4. Which Institution organised the ‘National Innovation Conclave on Low Carbon Technologies’?

A) NITI Aayog

B) Bureau of Energy Efficiency 

C) ASSOCHAM

D) IIT Madras

  • Bureau of Energy Efficiency (BEE) commemorated its 20th Foundation Day by organising the National Innovation Conclave on Low Carbon Technologies.
  • Facility for Low Carbon Technology Deployment (FLCTD) is a project financed by the Global Environment Facility (GEF), implemented by the United Nations Industrial Development Organisation (UNIDO) in association with the Bureau of Energy Efficiency (BEE).

5. Ukraine shares border with how many European Union Member states?

A) One

B) Two

C) Three

D) Four 

  • Ukraine shares borders with four European Union (EU) member states namely Hungary, Poland, Slovakia (West) and Romania (South). It shares border with Russia to the east and north–east. Ukraine also shares borders with Belarus to the north; and Moldova to the south.
  • The European Parliament, after a debate in which the President of Ukraine addressed and received applause, recommended that Ukraine be made an official candidate for EU membership.

6. Which international institution approved a mandate to draft ‘Global Plastics Treaty’?

A) UNFCCC

B) UN Environment Assembly 

C) IPCC

D) WWF

  • The United Nations Environment Assembly (UNEA) with 175 member countries, signed a mandate which makes it legally binding for the signatories to end plastic pollution.
  • The Global Plastics Treaty will be drafted and ratified in the next two years. The mandate recommends measures to tackling plastic production and addressing the toxic burden of plastic.

7. ‘How Indians View Gender Roles in Families and Society’ is a report released by which institution?

A) NITI Aayog

B) UNICEF

C) Pratham Foundation

D) Pew Research Center 

  • Pew Research Center, a Washington DC–based non–profit released a report titled ‘How Indians View Gender Roles in Families and Society’, based on a survey of 29,999 Indian adults.
  • As per the report, while 55% of Indians believed that men and women make equally good political leaders, nine–in–ten Indians agree with the view that a wife must always obey her husband. 34% said that child care should be handled primarily by women. 43% believed that earning an income is the obligation of men.

8. When was the ‘Convention on Cluster Munitions’ signed?

A) 1972

B) 2008 

C) 2020

D) 2021

  • In May 2008, 107 states concluded an international treaty prohibiting the cluster weapons, named the ‘Convention on Cluster Munitions’. Recently, Russia has been accused for using cluster bombs and vacuum bombs in the ongoing war against Ukraine.
  • As per the convention, the cluster munitions release explosive sub–munitions each weighing less than 20 kilograms.

9. The International Waste Pickers’ Day is observed on which date?

A) March 01 

B) March 02

C) March 03

D) March 04

  • International Waste Pickers’ Day is observed on March 1 to mark the Colombian massacre that led to the brutal death of 11 workers. This day seeks to give voice and recognition to waste pickers/recyclers across the world.

10. As per the official data of the Government, what is the number of children affected due to COVID–19 in India?

A) 0.74 lakh

B) 1.54 lakh 

C) 5.54 lakh

D) 15.54 lakh

  • According to the official data the number of children affected due to Covid in India is 1,53,827. This is not restricted to children who lost their parents or caregivers.
  • Responding to a recent study by Lancet, which claimed that 19 lakh children in India lost a parent or caregiver to COVID–19, the Ministry of Women and Child Development said that the findings have no correlation to ground realities.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!