Tnpsc

7th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

7th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 7th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

7th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. சமீப செய்திகளில் இடம்பெற்ற ருஷிகுல்யா ஆறு பாயும் மாநிலம் எது?

அ) கர்நாடகா

ஆ) ஒடிஸா

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) பீகார்

  • ஒடிஸா மாநிலத்தில் பாயும் ருஷிகுல்யா ஆற்றுமுகத்துவாரம், ககிர்மாதா -வுக்குப் பிறகு, இந்தியாவில், ஆலிவ் ரிட்லி ஆமைகளின் இரண்டாவது பெரிய பொறிப்பகமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு, ருஷிகுல்யா ஆற்று முகத்துவாரத்துக்கு அருகே ஆலிவ் ரிட்லி கடலாமைகள் கூடுகட்ட வரவில்லை. ஏனெனில் கூடு கட்டும் காலம் கடந்துவிட்டது. கடந்த 2020 மார்ச்சில், மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆமைகள் இந்த இடத்தில் கூடு கட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2. உலக டூனா நாளானது ஆண்டுதோறும் மே.2ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. பெருங்கடல்கள் மற்றும் கடல்வளங்களின் நீடித்த பயன்பாட்டிற்கு அழைப்பு விடுக்கும் SDG எது?

அ) SDG 7

ஆ) SDG 9

இ) SDG 11

ஈ) SDG 14

  • டூனா மற்றும் டூனா போன்ற இனங்கள், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் அவற்றின் ஊட்டச்சத்து பண்புகளின் காரணமாக உணவின் குறிப்பிடத்தக்க ஆதாரமாக விளங்குகின்றன. அவற்றின் இறைச்சியில் ஒமேகா-3 நிறைந்துள்ளது. மேலும் இதில் தாதுக்கள், புரதங்கள் மற்றும் வைட்டமின் B12 ஆகியவை உள்ளன. 2016ஆம் ஆண்டில், ஐநா பொது அவை ஆண்டுதோறும் மே.2 அன்று உலக டூனா நாள் கடைப்பிடிக்கப்ப -டும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
  • பதினான்காவது நீடித்த வளர்ச்சி இலக்கு – பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் கடல்வளங்களை பாதுகாத்தல் மற்றும் நீடித்த முறையில் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அது உலகளாவிய டூனா சந்தைக்கு இணங்கும் விதத்தில் உள்ளது.

3. கிரிம்சன் சூரிய ஆற்றல் உற்பத்தித் திட்டம் அமைக்கப்படவுள்ள நாடு எது?

அ) ஐக்கிய அரபு அமீரகம்

ஆ) ரஷியா

இ) ஜெர்மனி

ஈ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

  • கலிபோர்னியா பாலையில் ஒரு மிகப்பெரிய சூரிய ஆற்றல் உற்பத்தித் திட்டத்தை நிறுவ அமெரிக்க அரசு ஒப்புதலளித்துள்ளது. இது கிட்டத்தட்ட 90,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் திறன்கொண்டது.
  • கலிபோர்னியாவில், 2000 ஏக்கர் கூட்டாட்சி நிலத்தில் 550 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் கிரிம்சன் சூரிய திட்டம் நிறுவப்படும். இதை கனேடிய சூரிய ஆற்றல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த நடவடிக் -கை காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது, வேலைகளை உருவாக்குவது மற்றும் புதைபடிவ எரிபொருட்களின் சார்புநிலையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

4. கீழ்காணும் எந்த நோய் முற்றுபெற்றதாக, காங்கோ மக்களாட்சிக் குடியரசு அறிவித்துள்ளது?

அ) பெரியம்மை

ஆ) எபோலா

இ) மலேரியா

ஈ) மூளையழற்சி நோய்

  • காங்கோ மக்களாட்சிக் குடியரசானது எபோலா பெருந்தொற்று முற்று பெற்றதாக அறிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் 12 பேரைப் பாதித்த எபோலா, அவர்களுள் அறுவரின் இறப்பிற்குக் காரணமாக அமைந்தது. மெர்க்கின் (MRK.N) எபோலா தடுப்பூசியைப் பயன்படுத்தி அந்நாடு எபோலாவை ஒழித்தது. நோயிலிருந்து மீண்ட நோயாளி ஒருவரின் விந்து உட்பட சில உடல் திரவங்களில் இந்த வைரஸ் இருக்கக்கூடும்.

5. “துருவ் Mk – III MR” என்றால் என்ன?

அ) ICAR’இன் புதிய அரிசி வகை

ஆ) நவீன இலகு இரக உலங்கூர்தி

இ) தரையிலிருந்து தரை பொருளைத் தாக்கும் ஏவுகணை

ஈ) பல்ஸ் டாப்ளர் ராடார்

  • துருவ் Mk – III MR என்பது ஒரு நவீன இலகு இரக உலங்கூர்தி ஆகும். இதனை, பெங்களூரு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட் வடிவமைத்து உருவாக்கியுள்ளது. இந்த உலங்கூர்தி பரிசோதனை செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில், ஓர் இந்திய கடலோர காவல்படை கப்பலின் மேல் தளத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்திய கடலோர காவல்படையினர் பயன்படுத்துவதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.

6. தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்படும் உயிர்வளி செறிவூட்டிகளுக்கு பொருந்தும் புதிய IGST விகிதம் என்ன?

அ) 5%

ஆ) 10%

இ) 12%

ஈ) 18%

  • தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்படும் உயிர்வளி செறிவூ -ட்டிகளுக்கான IGST’ஐ தற்போதைய 28 சதவீதத்திலிருந்து 12 சதவீத -மாக இந்திய அரசு குறைத்துள்ளது. இது, 2021 ஜூன்.30ஆம் தேதி வரை பொருந்தும். COVID பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் உயிர்வளியின் தேவை திடீரென அதிகரித்ததை அடுத்து இந்த அரிய வரிகுறைப்பு நிகழ்வு நடந்துள்ளது.

7. இந்திய அரசியலமைப்பின் சரத்து 164, கீழ்காணும் எதனைக் கையாளுகிறது?

அ) இந்தியக்குடியரசுத்தலைவர்

ஆ) மாநில அரசின் அமைச்சரை நியமித்தல்

இ) மத்திய அரசு & மாநில அரசிற்கு இடையிலான அதிகாரப்பகிர்வு

ஈ) இந்திய உச்சநீதிமன்றம்

  • இந்திய அரசியலமைப்பின் 164ஆவது சரத்து ஒரு மாநில அமைச்சரின் நியமனம் பற்றியதாகும். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கப்படுவதாகவும், மாநிலத்தின் மற்ற அமைச்சர்கள் முதல்வருடன் கலந்தாலோசித்து ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள் என்றும் அச்சரத்து கூறுகிறது. தொடர்ந்து 6 மாதங்களுக்கு சமஉ’வாக இல்லாத அமைச்சர் ஒருவர், 6 மாதங்கள் நிறைவடைந்த பிறகு, ஒரு அமைச்சராக செயல்பட அருகதையற்றவர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

8. தேசிய மனிதவுரிமைகள் ஆணையத்தின் இடைக்கால தலைவ -ராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) SA பாப்டே

ஆ) A K சிக்ரி

இ) P K மிஸ்ரா

ஈ) P C பந்த்

  • தேசிய மனிதவுரிமைகள் ஆணையத்தில் உறுப்பினராக உள்ள நீதிபதி (ஓய்வு) பிரபுல்லா சந்திர பந்த், 2021 ஏப்ரல்.25 முதல் அமலுக்கு வரும் வகையில் அதன் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • NHRC உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, 2014-2017 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக அவர் பதவி வகித்து வந்தார். மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2013 முதல் 2014 வரை அவர் பதவி வகித்துள்ளார்.

9. COVID-19 தொற்றுநோயை கையாளுவதற்காக இந்திய ஆயுதப் படை தொடங்கியுள்ள நடவடிக்கையின் பெயர் என்ன?

அ) ஆபரேஷன் பாரத்

ஆ) ஆபரேஷன் ஆத்மநிர்பார்

இ) ஆபரேஷன் CO-JEET

ஈ) ஆபரேஷன் CO-WIN

  • இந்திய ஆயுதப்படைகள் நாட்டின் COVID-19 பெருந்தொற்றுக்கு எதிரான முயற்சிகளுக்கு ஆதரவாக “CO-JEET” என்ற நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன. இது மருத்துவ உட்கட்டமைப்பு & உயிர்வளி விநியோக சங்கிலிகளை வலுப்படுத்துவதையும் மக்களின் மனநலனை உறுதி செய்வதையும் நோக்கமாகக்கொண்டுள்ளது.
  • உயிர்வளி விநியோகச்சங்கிலிகளை மீட்டெடுக்கவும், COVID படுக்கைக -ளை அமைக்கவும், நிர்வாகத்திற்கு உதவவும் இராணுவம், வான்படை மற்றும் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

10. கங்கையின் முக்கிய கிளையாறான பத்மா ஆறு பாய்கிற நாடு எது?

அ) நேபாளம்

ஆ) வங்காளதேசம்

இ) சீனா

ஈ) மியான்மர்

  • பத்மா ஆறு கங்கையின் முக்கிய கிளையாறாகும். அது வங்காளதேசத்து -க்குள் நுழைவதற்கு முன்பு இந்தியாவிற்கும் வங்காளதேசத்துக்கும் இடையிலான மேற்கு எல்லையை உருவாக்குகிறது. சமீபத்தில், பத்மா ஆற்றில், மணல் ஏற்றிச் சென்ற ஒரு சரக்குக் கப்பலைத் தாக்கியதில், 30’க்கும் மேற்பட்ட பயணிகளைக் கொண்ட ஒரு படகு கவிழ்ந்தது.
  • வங்காளதேசத்தின் பழைய காந்தல்பரி படகு முனையத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் குறைந்தது 26 பேர் மரணித்திருப்பர்.

1. Rushikulya river, which was making news recently, is located in which state?

A) Karnataka

B) Odisha

C) Andhra Pradesh

D) Bihar

  • The Rushikulya river mouth, located in the state of Odisha is considered as the second–biggest rookery of Olive Ridley Turtles in India after Gahirmatha. This year, the annual mass nesting of millions of Olive Ridley sea turtles near the Rushikulya river mouth is likely to be missed, as the time for nesting process is set to be over. In March 2020, over 3 lakh turtles nested in the same place.

2. World Tuna Day is observed on May 2 every year. Which SDG calls for sustainable use of Oceans and marine resources?

A) SDG 7

B) SDG 9

C) SDG 11

D) SDG 14

  • Tuna and tuna–like species is a significant source of food, due to their nutritional properties, in both developed and developing countries. Their meat is rich in Omega–3 and it also contains minerals, proteins, and vitamin B12. In 2016, the United Nations General Assembly declared to officially observe World Tuna Day on May 2 every year.
  • Sustainable Development Goal 14 aims to conserve and sustainably use the oceans, seas and marine resources – applies to the global tuna market.

3. Crimson Solar Project, is a mega solar energy project, is to be set up in which country?

A) UAE

B) Russia

C) Germany

D) USA

  • The USA Government has approved a major solar energy project in the California desert that would be capable of powering nearly 90,000 homes. The USD–550 million Crimson Solar Project will be set up on 2,000 acres of federal land at California. It is being developed by Canadian Solar unit Recurrent Energy. This step aims to fight climate change, create jobs and reduce dependence on fossil fuels.

4. The Democratic Republic of Congo has declared the end of outbreak of which disease?

A) Smallpox

B) Ebola

C) Malaria

D) Encephalitis

  • The Democratic Republic of Congo declared the end of Ebola outbreak, which infected 12 people in the eastern province and killed six of them. The country contained the outbreak using Merck’s (MRK.N) Ebola vaccine. The virus can remain in certain body fluids, including semen, of a patient who has recovered from the disease.

5. What is “Dhruv Mk – III MR”?

A) ICAR’s new rice variety B) Advanced Light Helicopter

C) Surface to Surface Missile D) Pulse Doppler Radar

  • Dhruv Mk – III MR is an Advanced Light Helicopter designed and developed by Hindustan Aeronautics Limited (HAL), Bengaluru.
  • The helicopter has been tested and it has successfully demonstrated deck operations on board an Indian Coast Guard Ship, off the coast of Chennai. The helicopter has been developed to be deployed by the Indian Coast Guard.

6. What is the new rate of IGST applicable to Import of Oxygen Concentrators for personal use?

A) 5%

B) 10%

C) 12%

D) 18%

  • The Government of India has brought down the IGST for import of Oxygen Concentrators for personal use from the present 28% slab to 12%. This would be applicable till 30th June 2021. This rare reduction comes in the wake of a sudden surge in the demand for oxygen, used for COVID infected patients.

7. Article 164 of the Indian constitution deals with …….?

A) President of India

B) Provisions of Minister of State Government

C) Division of Powers between Centre and state

D) Appointment of Chief Justice of Supreme Court

  • The Article 164 of the Indian constitution deals with the Provisions of the Minister of a state.
  • It stated that the Chief Minister of a state shall be appointed by the Governor and the other Ministers of the state shall be appointed by the Governor in consultation with the Chief Minister. It also states that a Minister, who is not an MLA for six consecutive months, ceases to be a Minster, after the expiry of 6 months.

8. Who has been appointed as the Acting Chairperson of the National Human Rights Commission (NHRC)?

A) S A Bobde

B) A K Sikri

C) P K Mishra

D) P C Pant

  • Justice (retired) Prafulla Chandra Pant, who is a member of the National Human Rights Commission (NHRC), has been appointed its Acting Chairperson with effect from April 25 2021. Prior to his appointment as NHRC member, he was a Judge of the Supreme Court from 2014 to 2017. He had also held the position of Chief Justice of the High Court of Meghalaya from 2013 to 2014.

9. What is the name of the operation launched by the Indian Armed Force, to tackle COVID–19 pandemic?

A) Operation Bharat

B) Operation AatmaNirbhar

C) Operation CO–JEET

D) Operation CO–WIN

  • The Indian armed forces have launched operation “CO–JEET” to support anti–COVID–19 efforts of the country. It aims to strengthen medical infrastructure and oxygen supply chains and to ensure mental wellbeing of people. The personnel of the Army, the Air Force and the Navy have been engaged to help restore oxygen supply chains, set up COVID beds and provide help to the administration.

10. Padma river, the main distributary of the Ganges, flows in which country?

A) Nepal

B) Bangladesh

C) China

D) Myanmar

  • Padma river is main distributary of the Ganges, which forms the western boundary between India and Bangladesh before it enters Bangladesh. Recently, a ferryboat with over 30 passengers overturned after hitting a sand–laden cargo vessel in the Padma River. At least 26 people dead in the accident occurred at the old Kanthalbari ferry terminal of Bangladesh.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!