Tnpsc

7th November 2020 Current Affairs in Tamil & English

நடப்பு நிகழ்வுகள்

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற இராஜா கிருஷ்ணமூர்த்தி, மூன்றாவது முறையாக எந்த நாட்டின் சட்டப்பேரவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

அ. நியூசிலாந்து

ஆ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ. ஐக்கியப் பேரரசு

ஈ. சிங்கப்பூர்

  • இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஜனநாயக பேரவை உறுப்பினரான இராஜா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 47 வயதான அவர், எண்ணப்பட்ட மொத்த வாக்குகளில் எழுபது சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இவரது குடும்பம் தமிழ்நாட்டில் வசித்து வந்தது. இவர் முதன்முதலாக கடந்த 2016ஆம் ஆண்டில் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, லுஹ்ரி நிலை-I நீர்மின் திட்டம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. ஹிமாச்சல பிரதேசம்

இ. பீகார்

ஈ. அஸ்ஸாம்

  • 210 MW லுஹ்ரி நிலை-1 நீர்மின் திட்டத்திற்கு 1,810 கோடி ரூபாய் முதலீடு செய்யும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இது இமாச்சல பிரதேசத்தின் சிம்லா மற்றும் குலு மாவட்டங்களில் பாய்ந்தோடும் சட்லுஜ் ஆற்றில் அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தால் ஆண்டுக்கு 758.20 மில்லியன் அலகு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை, சத்லுஜ் ஜல் வித்யுத் நிகாம் லிட் செயல்படுத்துகிறது.

3. பிரசாத் திட்டத்தின்கீழ், எந்த நகரத்தில், ‘சுற்றுலா உதவி மையம்’ திறக்கப்பட்டுள்ளது?

அ. வாரணாசி

ஆ. மைசூரு

இ. குருவாயூர்

ஈ. வேளாங்கண்ணி

  • மத்திய சுற்றுலாத்துறையின் பிரசாத் திட்டத்தின்கீழ், “குருவாயூரின் வளர்ச்சி, கேரளா” என்ற பெயரில் தொடங்கப்பட்ட சுற்றுலா உதவி மையத்தை மத்திய சுற்றுலா (தனிப்பொறுப்பு) மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் பாட்டீல் காணொலிக்காட்சி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.
  • Pilgrimage Rejuvenation and Spiritual, Heritage Augmentation Drive (PRASHAD) திட்டமானது சுற்றுலா அமைச்சகத்தால் 2014-15’இல் தொடங்கப்பட்டது. குறிப்பிட்ட யாத்திரை மற்றும் பாரம்பரிய தலங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கூட்டுப்பணிக்குழுவில், இந்தியாவுடன் தொடர்புடைய நாடு எது?

அ. ஐக்கியப் பேரரசு

ஆ. ஐக்கிய அரபு அமீரகம்

இ. ஜப்பான்

ஈ. ஆஸ்திரேலியா

  • முதலீடுகள் தொடர்பான இந்தியா-ஐக்கிய அரபு அமீரக உயர்மட்ட கூட்டுப்பணிக் குழுவின் எட்டாவது கூட்டத்தை இந்தியா மெய்நிகர் வடிவத்தில் நடத்தியது. இந்தக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அபுதாபி அமீரகத்தின் நிர்வாக சபை உறுப்பினர் சேக் ஹமேத் பின் சையீத் அல் நயான் ஆகியோர் தலைமைதாங்கினர். ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளா -தார உறவை மேம்படுத்துவதற்காக, கடந்த 2012ஆம் ஆண்டில் கூட்டுப்பணிக்குழு உருவாக்கப்பட்டது.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, T N கிருஷ்ணனுடன் தொடர்புடைய துறை எது?

அ. அரசியல்

ஆ. இசை

இ. விளையாட்டு

ஈ. இலக்கியம்

  • இந்தியாவின் புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞரான T N கிருஷ்ணன் அண்மையில் தனது 92ஆம் வயதில் சென்னையில் காலமானார். கேரளத்தை பிறப்பிடமாகக்கொண்ட இவர், கடந்த 1940’களின் முற்பகுதியில் சென்னைக்கு புலம்பெயர்ந்தார். ‘பத்ம விபூஷன்’, இசை அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ உட்பட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார். தில்லி பல்கலைக்கழகத்தின் இசைக்கல்லூரி & இசைப்பள்ளி மற்றும் நுண்கலை ஆகியவற்றில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

6. ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வி தொலைக்காட்சி அலைவரிசைகளைத் தொடங்குவதற்காக, எந்த மத்திய அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிரசர் பாரதி கையெழுத்திட்டுள்ளது?

அ. மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. தகவல் தொடர்பு அமைச்சகம்

இ. தகவல் & ஒலிபரப்பு அமைச்சகம்

ஈ. அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்

  • இந்திய பொது ஒலிபரப்புத்துறையான பிரசார் பாரதி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் செயல்படும் பாஸ்கராச்சாரியா விண்வெளி பயன்பாடுகள் மற்றும் புவி தகவலியல் தேசிய நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், 51 DTH கல்வி தொலைக்காட்சி அலைவரிசைகளைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்மூலம் கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதியில், ஒவ்வொரு வீட்டுக்கும் தரமான கல்விசார் நிகழ்ச்சிகள் சென்றடையும். அனைவருக்கும் கல்வி வழங்கும் அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் இந்த முயற்சி அமையும்.

7. MyGov ஆனது கீழ்க்காணும் எந்த அமைப்பின் ஒத்துழைப்புடன், ‘COVID-19 ஸ்ரீ சக்தி சவாலை’ ஏற்பாடு செய்துள்ளது?

அ. ஐநா பெண்கள் அமைப்பு

ஆ. உலக பொருளாதார மன்றம்

இ. உலக வங்கி

ஈ. ஆசிய வளர்ச்சி வங்கி

  • ஐநா பெண்கள் அமைப்பும் இந்திய அரசும் (MyGov) இணைந்து நடத்திய, ‘COVID-19 ஸ்ரீ சக்தி சவால்’ விருது, மகளிர் நடத்தும் 6 துளிர் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. பெருமளவிலான பெண்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணுதல் (அ) COVID-19’க்கு எதிரான போரில் உதவுவதற்கான புதுமையான தீர்வுகளுடன் செயல்படும் பெண்கள் நடத்தும் துளிர் நிறுவனங் -களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தப் போட்டி கடந்த 2020 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.

8. மருந்துத் தயாரிப்பு ஒழுங்குமுறை & ICT துறையில் எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட நடுவணமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

அ. இரஷ்யா

ஆ. இஸ்ரேல்

இ. ஐக்கிய அரபு அமீரகம்

ஈ. ஐக்கியப் பேரரசு

  • இந்தியாவின் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் ஐக்கியப் பேரரசின் மருந்து மற்றும் நலவாழ்வுப் பொருட்களுக்கான ஒழுங்குமுறை முகமை ஆகியவற்றுக்கு இடையே மருந்துப்பொருட்கள் ஒழுங்குமுறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு நடுவணமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • மேலும், இந்தியாவின் தொலைத்தொடர்பு அமைச்சகம் மற்றும் ஐக்கியப் பேரரசின் டிஜிட்டல், கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறைகள் ஆகியவற்றுக்கு இடையே தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

9. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் நடத்தப்படவுள்ள 13ஆவது இந்திய நகர்ப்புற போக்குவரத்து கருத்தரங்கத்தின் கருப்பொருள் என்ன?

அ. Emerging Trends in Urban Mobility

ஆ. Decoding Urban Mobility

இ. Leveraging Urban Mobility

ஈ. Innovation in Urban Mobility

  • 13ஆவது இந்திய நகர்புற போக்குவரத்து கருத்தரங்கு – 2020’ஐ நவ.9 அன்று மத்திய வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தொடங்கிவைக்கிறார். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை சார்பில் இந்த இணையவழி கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
  • இந்த ஆண்டு, ‘நகர்ப்புற போக்குவரத்தில் வளர்ந்துவரும் போக்குகள்’ என்ற தலைப்பில் நாள் முழுவதும் இக்கருத்தரங்கு நடைபெறவுள்ளது. COVID-19 தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில் மக்களுக்கு அணுகக்கூடிய மற்றும் வசதியான போக்குவரத்தை வழங்குவதற்கு சர்வதேச, தேச அளவில் எடுக்கப்படும் புதிய நடவடிக்கைகள் குறித்து கருத்தரங்கில் கவனத்தில் கொள்ளப்படும்.

10. அண்மையில் தனது முதல் அணுமின் நிலையத்தின் செயல்பாடுகளைத் தொடங்கிய நாடு எது?

அ. வங்கதேசம்

ஆ. பெல்ஜியம்

இ. பெலாரஸ்

ஈ. இலங்கை

  • ‘ஆஸ்ட்ரோவெட்ஸ் ஆலை’ என்ற பெயரைக் கொண்ட தனது முதல் அணுமின் நிலையத்திலிருந்து பெலாரஸ் வெற்றிகரமாக மின்னுற்பத்தியை தொடங்கியுள்ளது. அதன் அலகு-1’இலிருந்து மின்னுற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. அலகு-2 ஆனது அடுத்த ஆண்டு முதல் செயல்பாடுகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘பெலாரஸ் குடியரசு’ நாடானது சுற்றிலும் நிலங்களால் சூழப்பட்ட ஒரு கிழக்கு ஐரோப்பிய நாடாகும்.

1. Raja Krishnamoorthi, who was seen in news recently, has been re–elected to the Legislature of which country, for the third time?

[A] New Zealand

[B] United States of America

[C] United Kingdom

[D] Singapore

  • Indian–origin Democratic congressman Raja Krishnamoorthi has been re–elected to the US House of Representatives for the third term in a row. The 47–year–old has said to have secured over 70 per cent of the total votes counted. His family was based in Tamil Nadu. The congressman was first elected to the House of Representatives in the year 2016.

2. Luhri Stage–I Hydro Power Project, which was seen in news recently, is located in which state?

[A] Uttar Pradesh

[B] Himachal Pradesh

[C] Bihar

[D] Assam

  • The Union Cabinet has recently approved the proposal to invest Rs 1,810 crore for 210 MW Luhri Stage–1 hydro–power project. It is located on river Satluj in Shimla and Kullu districts of Himachal Pradesh. The project is expected to generate 758.20 million units of electricity annually. The project is being implemented by Satluj Jal Vidyut Nigam Ltd.

3. In which city, the “Tourist Facilitation Centre” facility has been inaugurated under PRASHAD Scheme?

[A] Varanasi

[B] Mysore

[C] Guruvayur

[D] Velankanni

  • Tourism Minister Prahlad Singh Patel has recently inaugurated Tourist Facilitation Centre at Guruvayur, Kerala under PRASHAD Scheme, virtually. The Pilgrimage Rejuvenation and Spiritual, Heritage Augmentation Drive (PRASHAD) scheme was launched by the Ministry of Tourism in 2014–15. It aims for the integrated development of those specified pilgrimage and heritage destinations.

4. The Joint Task Force, that was seen in news recently, is associated with India and which country?

[A] United Kingdom

[B] UAE

[C] Japan

[D] Australia

  • The eighth meeting of the India–UAE High Level Joint Task Force on Investments was hosted by India in virtual format. The meeting was co–chaired by Union Minister Piyush Goyal and Sheikh Hamed bin Zayed Al Nahyan, Member of the Executive Council of the Emirate of Abu Dhabi. The Joint Task Force was created in 2012 to boost the economic ties between the UAE and India.

5. TN Krishnan, who was seen in news recently, was related with which field?

[A] Politics

[B] Music

[C] Sports

[D] Literature

  • Legendary Carnatic Musician of India TN Krishnan has recently passed away in Chennai at the age of 92. The Musician was born in Kerala and shifted to Chennai in early 1940s. He was also a recipient of several awards, including the Padma Vibhushan and the Sangeetha Kalanidhi of Music Academy. He also served as teacher in Music College and School of Music and Fine Art at the University of Delhi.

6. Prasar Bharati has signed MoU with which Union Ministry to launch over 50 education TV channels?

[A] Ministry of Electronics and Information Technology

[B] Ministry of Communication

[C] Ministry of Information and Broadcasting

[D] Ministry of Science and Technology

  • India’s public broadcaster Prasar Bharati has recently entered into an MoU with the Ministry of Electronics and Information Technology. The MoU, which aims to launch 51 direct–to–home (DTH) education TV channels, has been signed between Prasar Bharati and Bhaskaracharya National Institute for Space Applications and Geo–Informatics under MEITY.
  • This move aims to bring quality educational programmes to every household, including those in rural and remote areas. This Government initiative will go a long way in achieving Government’s goal of providing education to all.

7. COVID–19 Shri Shakti Challenge, which was seen in news recently, is organised by MyGov in collaboration with organisation?

[A] UN Women

[B] World Economic Forum

[C] World Bank

[D] Asian Development Bank

  • COVID–19 Shri Shakti Challenge was organized by MyGov in collaboration with UN Women. It was seen in news because six women led start–ups have won the challenge. The challenge, which was launched in April 2020 aimed to encourage women led start–ups to come up with innovative solutions to fight against COVID19 or solve problems faced by women community.

8. The Union Cabinet has given its approval for signing a MoU with which country in the field of medical Product Regulation as well as ICT?

[A] Russia

[B] Israel

[C] UAE

[D] United Kingdom

  • The Union Cabinet, chaired by the Prime Minister has given its approval for signing a MoU between the Central Drugs Standard Control Organization (CDSCO), India and its counterpart in the United Kingdom, on cooperation in the field of medical Product Regulation. The Cabinet also approved to sign another MoU with the United Kingdom Government on cooperation in the field of Information and Communication Technologies (ICTs).

9. What is the theme of the 13th Urban Mobility India (UMI) Conference to be organised by MoHUA?

[A] Emerging Trends in Urban Mobility

[B] Decoding Urban Mobility

[C] Leveraging Urban Mobility

[D] Innovation in Urban Mobility

  • The 13th Urban Mobility India (UMI) Conference is to be organised by the Ministry of Housing and Urban Affairs (MoHUA) on November 9, 2020 virtually. The day–long Conference will be organised on the theme of “Emerging Trends in Urban Mobility”.
  • It aims to focus on innovative measures taken to address the challenges posed by COVID–19 pandemic and to provide accessible transport to all.

10. Which country has recently commenced operations of its first Nuclear Power Plant?

[A] Bangladesh

[B] Belgium

[C] Belarus

[D] Sri Lanka

  • Belarus has successfully commenced the electricity generation from its first nuclear plant namely “Ostrovets plant”. The power generation has commenced from its Unit 1 and the Unit 2 is expected to commence operations from the next year. Belarus, officially the Republic of Belarus is a landlocked country in Eastern Europe.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!