7th October 2020 Current Affairs in Tamil & English

7th October 2020 Current Affairs in Tamil & English

7th October 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

7th October 2020 Tnpsc Current Affairs in Tamil

7th October 2020 Tnpsc Current Affairs in English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிப்பதற்காக மும்பை பங்குச்சந்தை (BSE) ஆனது கீழ்க்காணும் எந்த வங்கியுடன் கூட்டிணைந்துள்ளது?

அ. ஆக்ஸிஸ் வங்கி

ஆ. YES வங்கி

இ. கோட்டக் மஹிந்திரா வங்கி

ஈ. ஐசிஐசிஐ வங்கி

 • சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (SME) ஊக்கமளிப்பதற்காக YES வங்கியுடனான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மும்பை பங்குச்சந்தை (BSE) அறிவித்துள்ளது. BSE’இன் கூற்றுப் படி, பட்டியலிடப்பட்டுள்ள SME’களுக்கு விழிப்புணர்வு மற்றும் அறிவுப்பகிர்வு திட்டங்களின் மூலம், ஏற்றுமதி மேம்பாடு மற்றும் வங்கியியல் & நிதியியல் தீர்வுகள் ஆகியவற்றில் அதிகாரமளிப்பதை இந்த ஒப்பந்தம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. பட்டியலிடப்பட்ட SME’களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட சேவைகள் மற்றும் தயாரிப்புகளையும் YES வங்கி வழங்கும்.

2.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Cat Que’ என்பது எந்த நாட்டில் கண்டறியப்பட்ட நச்சுயிரியாகும்?

அ. இந்தியா

ஆ. சீனா

இ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஈ. கென்யா

 • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்தின் (ICMR) ஓர் அண்மைய எச்சரிக்கை அறிவிப்பின்படி, சீனாவில் ‘Cat Que’ என்ற ஒரு புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் சீனா & வியட்நாமில் உள்ள கியூலெக்ஸ் கொசுக்கள் மற்றும் பன்றிகளிலிருந்து பரவுகிறது. ICMR’இன் கூற்றுப்படி, இந்த வகை கியூலெக்ஸ் கொசுக்களுக்கேற்ற இனப்பெருக்க காலநிலை இந்தியாவில் நிலவி வருகிறது. இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

3.மனிதவுரிமைகள் குழுமமான பன்னாட்டு அவை, எந்த நாட்டிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது?

அ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ. இந்தியா

இ. சீனா

ஈ. வட கொரியா

 • மனிதவுரிமைகள் குழுமமான பன்னாட்டு பொது மன்னிப்பு அவையானது தான் இந்தியாவில் நடத்தி வரும் அனைத்து பரப்புரை மற்றும் ஆராய்ச்சிப் பணிகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. உரிமை மீறல்கள்குறித்து பேசியதற்காக வங்கிக்கணக்குகளை அரசு முடக்கியுள்ளது என குழு தெரிவித்துள்ளது.
 • ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்த உரிமை மீறல்கள் மற்றும் தில்லியில் நடந்த கலவரங்கள் குறித்து இந்தப் பன்னாட்டு பொது மன்னிப்பு அவை முன்னர் எடுத்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

4. MSF’இன்கீழ் வங்கிகளுக்கான மேம்பட்ட கடன் வசதியை, ரிசர்வ் வங்கி, எதுவரை நீட்டித்துள்ளது?

அ. 2021 ஜனவரி

ஆ. 2021 மார்ச்

இ. 2021 ஏப்ரல்

ஈ. 2021 ஜூன்

 • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) வங்கிகளுக்கு வழங்கும் மேம்பட்ட கடன் வசதியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. 2021 மார்ச்.31 வரை பணப்புழக்க பற்றாக்குறையை பூர்த்தி செய்ய, MSF திட்டத்தின்கீழ் கடன் பெறுவதற்கான வசதி இதுவாகும். கடந்த மார்ச் மாதத்தில், RBI, வங்கிகளின் நிகர தேவையின் வரம்பை 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக அதிகரித்திருந்தது.

5.தனது ஐந்தாண்டுகால விண்மீன்கள் படமாக்கல் பணியை நிறைவுசெய்துள்ள இந்திய விண்வெளி செயற்கைக்கோள் எது?

அ. அஸ்ட்ரோஸாட்

ஆ. ரிஸாட்

இ. கார்டோஸாட்

ஈ. தெற்காசிய செயற்கைக்கோள்

 • இந்தியாவின் முதல் பன்னலைநீள வானியல்சார் செயற்கைக்கோளான “அஸ்ட்ரோஸாட்”, சமீபத்தில் விண்வெளியில் தனது ஐந்தாண்டு கால விண்மீன்கள் படமாக்கல் பணியை நிறைவுசெய்துள்ளது. இந்தச் செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) கடந்த 2015’இல் ஏவியது. இது, எண்ணூறு தனித்துவமான விண்மூலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்டது. புவியிலிருந்து சுமார் 10 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு விண்மீன் திரளும் இதைப் பயன்படுத்தி கண்டறியப்பட்டுள்ளது.

6.எந்த நடிகருக்கு, UNDP’இன் “SDG சிறந்த மனிதநேயச் செயற்பாட்டாளர்” விருது வழங்கப்பட்டுள்ளது?

அ. சிவகார்த்திகேயன்

ஆ. கீர்த்தி சுரேஷ்

இ. சோனு சூத்

ஈ. தீபிகா படுகோனே

 • நடிகர் சோனு சூத் அவர்களுக்கு ஐநா வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) “SDG சிறந்த மனிதநேயச் செயற்பாட்டாளர் விருது” வழங்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்தோர், அயல்நாடுகளில் சிக்கித்தவிக்கும் மாணாக்கரை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான அவரது தன்னலமற்ற உதவிக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்காக மும்பையில் உள்ள தனது உணவகத்தையும் அவர் திறந்து வைத்தார்.

7.பிளிப்கார்ட் ஆனது எந்தக் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து இணைவழி பணமோசடிகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?

அ. தேசிய காப்பீட்டு நிறுவனம்

ஆ. பஜாஜ் அலையன்ஸ்

இ. TATA AIG

ஈ. சுந்தரம் காப்பீடு

 • பிளிப்கார்ட் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து “டிஜிட்டல் சுரக்ஷா குழுமக் காப்பீட்டை” வழங்க முன்வந்துள்ளன. இணையவழித் தாக்குதல்கள், இணையவழி மோசடிகள் (அ) இணையதளங்களில் இதுபோன்ற பிற நடவடிக்கைகள் காரணமாக ஏற்படும் பண இழப்புகளுக்கு எதிராக தங்களை தற்காத்துக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களை காப்பதை இந்தக் காப்பீட்டுத் திட்டம் நோக்கமாகக்கொண்டுள்ளது. இக்காப்பீட்டுத் திட்டம், இணைவழி மோசடி ஏற்பட்டால், காப்பீடு செய்யப்பட்ட முழுத்தொகையையும் காப்பீடுதாரருக்கு வழங்குகிறது.

8.எந்த நாட்டிலிருந்து 72,000 தாக்குதல் துப்பாக்கிகளை இந்தியா வாங்கவுள்ளது?

அ. இஸ்ரேல்

ஆ. ஈரான்

இ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஈ. இரஷ்யா

 • பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கழகம் ஆனது `2290 கோடி மதிப்புள்ள கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதலளித்துள்ளது. இத்திட்டங்களுள் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலிருந்து 72,000 தாக்குதல் துப்பாக்கிகள் பெறுவதும் அடங்கும். உள்நாட்டுத் தொழிலகங்கள் மற்றும் அயல்நாட்டு விற்பனையாளர்களிடமிருந்து இவை கொள்முதல் செய்யப்படும். இது, ‘தற்சார்பு இந்தியா’ கொள்கையுடன் இணக்கமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

9.தமிழ்நாட்டில், புதிய ‘சேமிப்புக்கிடங்கைத்’ தொடங்கியுள்ள மின்னணு வணிக நிறுவனம் எது?

அ. பிளிப்கார்ட்

ஆ. கிளவுட் டெயில்

இ. அலிபாபா

ஈ. அமேசான்

 • முதன்மை மின்னணு வணிக நிறுவனமான அமேசான் தனது புதிய சேமிப்பு மையத்தை தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது. இது, அந்நிறுவனத்தின் வலையமைப்பை தமிழ்நாட்டில் வலுப்படுத்துவதை நோக்கம் எனக்கொண்டுள்ளது. இவ்வசதி, தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகளை வழங்கும் மற்றும் பொருளாதாரத்திற்கு ஓர் ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏழு இலட்சம் கன அடி அளவுக்கு சேமிப்பு இடம் கொண்டுள்ள இந்தச்சேமிப்புக்கிடங்கில், இலட்சக்கணக்கான தயாரிப்புகள், உபகரணங்கள் மற்றும் தளவாடங்கள் ஆகியவற்றைச் சேமிக்கவியலும்.

10.மத்திய எரிசக்தி அமைச்சகத்துடன் கையெழுத்திட்டு, 2020-21ஆம் ஆண்டிற்கான தனது இலக்குகளை நிர்ணயித்துள்ள பொதுத்துறை நிறுவனம் எது?

அ. ONGC

ஆ. NTPC

இ. PFC

ஈ. GAIL

 • மத்திய எரிசக்தி அமைச்சகத்துடனான ஒப்பந்தம் ஒன்றில் அண்மையில் NTPC கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், 2020-21ஆம் நிதியாண்டில் அடைய வேண்டிய இலக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 340 BU மின்னுற்பத்தி, 15 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரி தயாரிப்பு, `21,000 கோடி முதலீட்டு செலவினங்கள் மற்றும் செயல்பாடுகளிலிருந்து `98,000 கோடி வருவாய் ஆகியவை சிறப்புப்பிரிவின் கீழ் 2020-21ஆம் ஆண்டுக்கான முக்கிய இலக்குகளாம். CAPEX உள்ளிட்ட இதர நிதி அளவுகோல்களும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

1. Bombay Stock Exchange partners with which bank, to empower Small and Medium Enterprises?

[A] Axis Bank

[B] YES Bank

[C] Kotak Mahindra Bank

[D] ICICI Bank

 • Leading stock exchange, the Bombay Stock Exchange (BSE) announced that it has signed a pact with private sector bank Yes Bank to empower the small and medium enterprises (SMEs). As per the BSE, the agreement aims to empower SMEs listed on the platform, through awareness and knowledge–sharing programmes, for export promotion and banking and financial solutions. The bank will also offer customised services and products to the listed SMEs.

2. ‘Cat Que’, that was seen in news recently, is a virus said to have emerged in which country?

[A] India

[B] China

[C] United States of America

[D] Kenya

 • As per the recent cautionary message from the Indian Council of Medical Research (ICMR), a new virus named ‘Cat Que’ emerged in China. This virus comes from Culex mosquitoes and pigs in China and Vietnam. As per ICMR, India also provides breeding climate to this species of Culex mosquitoes. This is published in the Indian Journal of Medical Research (IJMR).

3. Human Rights group Amnesty International has announced to quit from which country?

[A] United States of America

[B] India

[C] China

[D] North Korea

 • Human rights group Amnesty International has announced that it is halting all its ongoing campaign and research work in India. The Group said that the Government has frozen the bank accounts for speaking out about rights violations. Amnesty had earlier highlighted rights violations that occurred in Jammu and Kashmir and riots in Delhi.

4. Until which month, the Reserve Bank of India has extended the enhanced borrowing facility for banks under MSF?

[A] 2021 January

[B] 2021 March

[C] 2021 April

[D] 2021 June

 • The Reserve Bank of India (RBI) has extended the enhanced borrowing facility provided to banks by six more months. The facility to borrow under MSF scheme to meet liquidity shortage till March 31, 2021. Earlier in the March, the RBI had increased the limit from 2 per cent to 3 per cent of their net demand and time liabilities.

5. Which astronomical observatory of India has completed five years of mapping stars?

[A] ASTROSAT

[B] RISAT

[C] CARTOSAT

[D] South Asian Satellite

 • India’s 1st multi–wavelength astronomical observatory named ‘ASTROSAT’ has recently completed five years of imaging objects in space. The satellite was launched by the Indian Space Research Organisation (ISRO) in 2015. It has successfully carried out over 1000 observations of 800 unique celestial sources. A discovery of a galaxy located at a distance of about 10 billion light–years from Earth has been made using it.

6. Which Indian actor has been conferred with UNDP’s SDG Special Humanitarian Action Award?

[A] Sivakarthikeyan

[B] Keerthy Suresh

[C] Sonu Sood

[D] Deepika Padukone

 • Famous Actor Sonu Sood has been conferred with “SDG Special Humanitarian Action Award” by the United Nations Development Programme (UNDP). The award has been conferred upon him for his selfless assistance rendered to migrants, stranded students abroad and bring them back to India. He also opened his hotel in Mumbai for health care workers of nearby hospitals.

7. Flipkart and which General insurance company has launched insurance cover for online financial frauds?

[A] National Insurance Company

[B] Bajaj Allianz

[C] TATA AIG

[D] Sundaram Insurance

 • Flipkart and Bajaj Allianz have collaborated to offer “Digital Suraksha Group Insurance”. The insurance product is aimed at customers who wish to cover themselves against financial losses incurred due to cyber–attacks, cyber frauds, or other such activities on online platforms. This insurance covers for direct financial loss due to online frauds up to the sum insured.

8. India is set to acquire 72,000 assault rifles from which country?

[A] Israel

[B] Iran

[C] United States of America

[D] Russia

 • The Defence Acquisition Council (DAC) headed by the Defence Minister Rajnath Singh has approved capital acquisition proposals in Defence sector worth Rs.229 crore. The proposals include acquisition of 72,000 assault rifles from the United States of America. These proposals include material acquisitions from both Indian and foreign players and is aligned with Atma Nirbhar Policy of Self Reliance.

9. Which e–commerce giant has launched a new ‘Fulfilment Centre’ in Tamil Nadu?

[A] Flipkart

[B] Cloud Tail

[C] Alibaba

[D] Amazon

 • Major e–commerce giant Amazon has launched its new Fulfilment Centre in Tamil Nadu. This is aimed to strengthening the firm’s network in the state. This facility is expected to offer significant employment opportunities in Tamil Nadu and give a boost to the Economy. The facility has a 7 lakh cubic feet of storage space and can accommodate lakhs of products, appliances and furniture.

10. Which public sector organisation has signed with the Ministry of Power, and set its targets for the year 2020–21?

[A] ONGC

[B] NTPC

[C] PFC

[D] GAIL

 • Leading Power Sector organisation, NTPC Ltd has recently signed the Memorandum of Understanding (MoU) with Ministry of Power.
 • Under the MoU, the key targets were fixed for the year 2020–21, which include 340 BU of electricity generation, 15 MMT of coal production under excellent category. It also includes other financial parameters including Capex and Revenue from operations.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *