Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

7th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

7th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 7th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. நெசவாளர் சேவைகள் மற்றும் வடிவமைப்பு வள மையம் அமைக்கப்படவுள்ள மாநிலம் / UT எது?

அ) ஜம்மு & காஷ்மீர்

ஆ) இமாச்சல பிரதேசம் 

இ) சிக்கிம்

ஈ) மேற்கு வங்கம்

  • இமாச்சல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில், “நெசவாளர் சேவைகள் மற்றும் வடிவமைப்பு வள மையம்” அமைக்கப்படவுள்ளதாக நடுவண் வர்த்தகம், தொழில் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார். இந்த மையம், அம்மாநிலத்தின் ஈர்க்கத்தக்க கைவினைப் பொருட்களை ஊக்குவிக்கவும், சர்வதேச சந்தையில் அப்பொருட்களை ஏற்றுமதி செய்யவும் சிறந்த தளத்தை வழங்கும். 2021 செப்.27 அன்று இமாச்சல பிரதேசத்தின் பொன்விழா ஆண்டை நினைவுகூரும் வகையி -ல் ‘சேவா & சமர்பன்’ திட்டத்தின்கீழ் இது ஏற்பாடு செய்யப்பட்டது.

2. “My Life in Full: Work, Family and Our Future” என்பது யாரின் நினைவுக்குறிப்பாகும்?

அ) ஜெப் பெசோஸ்

ஆ) ஆண்டி ஜாஸி

இ) இந்திரா நூயி 

ஈ) கிரண் மஜும்தார் ஷா

  • “My Life in Full: Work, Family and Our Future” என்பது 65 வயதான முன்னாள் பெப்சிகோ தலைமைச் செயல் அதிகாரி இந்திரா நூயியின் நினைவுக்குறிப்பு ஆகும். இது போர்ட்போலியோ புத்தகங்களால் 2021 செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும். இது குழந்தைப் பருவத்திலிருந்து உலகின் மிக சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக மாறும் வரை அவரது வாழ்க்கையை விவரிக்கிறது. இந்திரா நூயி, பெப்சிகோவின் தலைமைச் செயல் அதிகாரியாக பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.

3. சமீப செய்திகளில் இடம்பெற்ற லூசி திட்டத்துடன் தொடர்புடைய விண்வெளி நிறுவனம் எது?

அ) இஸ்ரோ

ஆ) நாசா 

இ) புளூ ஆர்ஜின்

ஈ) ஸ்பேஸ் எக்ஸ்

  • லூசி திட்டம் என்பது அமெரிக்காவின் நாசாவின், வியாழனின் டிரோஜன் விண்கற்களை ஆய்வுசெய்வதற்கான ஒரு திட்டப்பணியாகும். இது 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய மண்டலத்தின் உருவாக்கம் பற்றிய புதிய நுண்ணறிவுகளை வழங்க அமைக்கப்பட்டுள்ளது.
  • மனித உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய நுண்ணறிவுக -ளை வழங்கிய ஒரு பழங்கால புதைபடிவத்தின் பெயர் இந்த ஆய்வுக்கு சூட்டப்பட்டுள்ளது. இது அக்டோபர்.16 அன்று புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி படை நிலையத்திலிருந்து ஏவப்படவுள்ளது.

4. இந்தியாவில், ‘படைப்பாளி கல்வி திட்டத்தை’த் தொடங்கியுள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?

அ) கூகிள்

ஆ) அமேசான்

இ) மைக்ரோசாப்ட்

ஈ) பேஸ்புக் 

  • பேஸ்புக் தனது மிகப்பெரிய ‘படைப்பாளி கல்வி மற்றும் செயல்படுத்தும் திட்டத்தை’ இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. “Born on Instagram” என பெயரிடப்பட்ட இத்திட்டத்தில் படைப்பாளர்களை ஊக்குவித்தல், கல்வி கற்பது மற்றும் செயல்படுத்துவதை இலக்காகக் கொண்ட மின்னணு கற்றல் படிப்பு அடங்கும். இத்திட்டம் முதலில் 2019’இல் தொடங்கப்பட்டது.

5. இந்திய ரிசர்வ் வங்கியுடன் தொடர்புடைய PCA கட்டமைப்பில் ‘P’ என்பது எதைக் குறிக்கிறது?

அ) Public

ஆ) Private

இ) Prompt 

ஈ) Priority

  • Prompt Corrective Action (PCA) என்பது ரிசர்வ் வங்கியின் பலவீனமான வங்கிகளின் கண்காணிப்பு பட்டியலைக் குறிக்கிறது. அத்தகைய வங்கிகள் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது போன்ற கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதிக்கிறது.
  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI), சமீபத்தில், இந்திய வெளிநாட்டு வங்கியை PCA கட்டமைப்பிலிருந்து நீக்கியது. அவ்வங்கி, கடந்த 2015’இல் PCA கட்டமைப்பின்கீழ் வைக்கப்பட்டது. வெளியிடப்பட்ட 2020-21 நிதியியல் முடிவுகளின் அடிப்படையில், அவ்வங்கி PCA அளவுருவை மீறவில்லை என்பதை நிதி மேற்பார்வை வாரியம் கண்டறிந்தது.

6. 2020 மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிப்புறக் கடன் வீதம் என்ன?

அ) 1.11%

ஆ) 11.1%

இ) 21.1% 

ஈ) 41.1%

  • இந்தியாவின் வெளிப்புறக் கடன் பற்றிய மத்திய நிதி அமைச்சகத்தின் நிலை அறிக்கையின்படி, 2020 மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவின் வெளிப்புறக் கடன் மற்றும் GDP விகிதம் 20.6%’இலிருந்து 21.1%ஆக அதிகரித்துள்ளது. 2021 மார்ச் மாத இறுதிப்படி இந்தியாவின் வெளிப்புறக் கடன் 2.1% உயர்ந்து $570 பில்லியன் டாலராக உள்ளது. வெளிப்புறக் கடன் விகிதத்திற்கான ஒதுக்கீடு அதே காலகட்டத்தில் 85.6%’இலிருந்து 101.2%ஆக அதிகரித்துள்ளது.

7. ‘Ease of Logistics’ வலைதளத்தைத் தொடங்கியுள்ள நடுவண் அமைச்சகம் எது?

அ) MSME அமைச்சகம்

ஆ) வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் 

இ) உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம்

ஈ) கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம்

  • இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு (FIEO) என்பது 1965ஆம் ஆண்டில் வர்த்தக அமைச்சகம் மற்றும் தனியார் வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்புகளால் அமைக்கப்பட்ட வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு ஆகும். மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சரான பியூஷ் கோயல், அண்மையில், ‘ஈஸ் ஆப் லாஜிஸ்டிக்ஸ்’ என்ற வலைதளத்தைத் தொடங்கினார். இந்தப் புதிய தளம், ஏற்றுமதியாளர்களுக்கும் லாஜிஸ்டிக் சேவை வழங்குநர்களுக்கும் இடையே ஓர் இணைப்பாக இருக்கும்.

8. பிரான்ஸ் நாட்டுடன் பல பில்லியன் மதிப்புள்ள யூரோ பாதுகாப்பு ஒப்பந்தத்தை அறிவித்துள்ள நாடு எது?

அ) கிரேக்கம் 

ஆ) துருக்கி

இ) இத்தாலி

ஈ) ஸ்பெயின்

  • பிரான்ஸும் கிரேக்கமும் பல பில்லியன் மதிப்புடைய யூரோ பாதுகாப்பு ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன. இதில் 3 பிரெஞ்சு போர்க்கப்பல்களை வாங்கும் கிரேக்கத்தின் முடிவும் அடங்கும். கிழக்கு மத்திய தரை கடலில் துருக்கியுடனான பதட்டங்களுக்கு இடையே கிரீஸ் தனது பாதுகாப்புத் திறனை அதிகரிக்கும் முடிவை எடுத்துள்ளது. அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் கிரேக்க பிரதமர் கிரியகோஸ் மிட்சோடகிஸ் ஆகியோர் பாரிஸில் உத்திசார் பாதுகாப்பு கூட்டாண்மையை அறிவித்தனர். கிரீஸ் ஏற்கனவே 18 பிரெஞ்சு ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளது.

9. பின்வரும் எந்நகரத்தில் CIPET: பெட்ரோ இரசாயன தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது?

அ) காந்தி நகர்

ஆ) ஜெய்ப்பூர் 

இ) சென்னை

ஈ) ஹைதராபாத்

  • பிரதமர் மோடி, காணொலிக்காட்சிமூலம் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள CIPET: பெட்ரோ இரசாயன தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கிவைத்தார். மத்திய பெட்ரோகெமிக்கல்ஸ் எஞ்சினியரிங் & டெக்னாலஜி நிறுவனம் ஆனது முன்னர் மத்திய பிளாஸ்டிக் எஞ்சினியரிங் & டெக்னாலஜி நிறுவனம் என அழைக்கப்பட்டது. அது, சென்னையில், கடந்த 1968’இல் ஐநா வளர்ச்சித்திட்டத்தின் உதவியுடன் இந்தியாவில் நிறுவப்பட்டது.

10. தேசிய ஏற்றுமதி காப்பீட்டு கணக்கு திட்டத்தை எந்த ஆண்டு வரை தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்தது?

அ) 2022-23

ஆ) 2023-24

இ) 2024-25

ஈ) 2025-26 

  • தேசிய ஏற்றுமதி காப்பீட்டு கணக்கு திட்டத்தை தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2021-2022 நிதியாண்டு முதல் 2025-2026 வரை ஐந்து ஆண்டுகளில் `1,650 கோடி மானிய நிதி உதவியை அரசாங்கம் அறிவித்துள்ளது. பட்டியலிடா CPSEஆன ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தை (ECCG) பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கும் அமைச்சர -வை ஒப்புதலளித்தது. 2021-22 நிதியாண்டில் தொடங்கி, 5 ஆண்டுக -ளில், `4,400 கோடி அளவுக்கு ECCG’இல் முதலீடு செய்யப்படும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. புலம்பெயர் தமிழர் நல வாரியம் உருவாக்கப்படும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

வெளிநாடு வாழ் தமிழா்களின் நலன்களைக் காக்க புலம்பெயா் தமிழா் நல வாரியம் தோற்றுவிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இதுகுறித்து, புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:- புலம்பெயா்ந்து வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழா் நலன் காக்க, புலம்பெயா் தமிழா் நலவாரியம் அமைக்கப்படும். அரசு மற்றும் புலம்பெயா்ந்த தமிழா் பிரதிநிதிகள் 13 நபா்களைக் கொண்டு இந்த வாரியம் ஏற்படுத்தப்படும். ரூ.5 கோடி புலம்பெயா் தமிழா் நலநிதி என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு வாரியம் உருவாக்கப்படும்.

என்னென்ன திட்டங்கள்?: மூலதனச் செலவினமாக ரூ.1.40 கோடியும், நலத் திட்டங்கள் மற்றும் நிா்வாகச் செலவினங்களுக்காக ரூ.3 கோடியும் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும். புலம்பெயா் தமிழா் குறித்த தரவு தளம் ஏற்படுத்தப்படும். வாரியத்தில் பதிவு செய்பவா்களுக்கு விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம், அடையாள அட்டையுடன் வழங்கப்படும். வெளிநாடுகளுக்குச் செல்லும் குறைந்த வருவாய் பிரிவைச் சோ்ந்த தமிழா்கள் பணியின் போது இறக்க நேரிட்டால் அவா்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, கல்வி மற்றும் திருமண உதவித் தொகைகள் அளிக்கப்படும்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக தமிழா்கள் புலம்பெயரும் போது, பயண புத்தாக்கப் பயிற்சி சென்னை மட்டுமின்றி, இனி ராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூா், பெரம்பலூா், சிவகங்கை, விழுப்புரம் மாவட்டங்களிலும் நடத்தப்படும். வெளிநாடுகளுக்கு புலம்பெயா்ந்துள்ள தமிழா்களுக்கு ஆலோசனை வழங்க வசதியாக கட்டணமில்லாத தொலைபேசி வசதி மற்றும் இணையதளம், செல்லிடப்பேசி செயலி அமைத்துத் தரப்படும். வெளிநாடுகளில் புலம்பயொ்ந்துள்ள தமிழா்களுக்கு என தனியாக சட்ட உதவி மையம் அமைக்கப்படும். கரோனா தொற்று காரணமாக சுமாா் ஏழு லட்சம் தமிழா்கள் தாயகம் திரும்பியுள்ளனா். அவா்களில் பலா் வேலை இழந்துள்ளனா். அவா்களுக்கு உதவி செய்யும் நோக்கில் தமிழ்நாடு திரும்பியோருக்கு சிறு தொழில்கள் தொடங்கிட அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும். இதற்கென ரூ.6 கோடி ஒதுக்கப்படும்.

வெளிநாடு வாழ் தமிழா்களில் பெரும்பாலானோா் தங்களது சேமிப்பை தாய்நாட்டில் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய ஆா்வத்துடன் உள்ளனா். இதற்காகப் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி, அவா்களது முதலீடுகளை அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பான முதலீடு செய்ய ஏதுவான சூழல் உருவாக்கப்படும்.

எனது கிராமம் திட்டம்: புலம்பெயா்ந்த தமிழா்கள், தாம் பிறந்து வளா்ந்த சொந்த ஊரில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், ஊா் மக்களின் கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளைப் பூா்த்தி செய்யவும் எனது கிராமம் திட்டம் உருவாக்கப்படும். இதில், பள்ளி, மருத்துவமனை, நூலகம் போன்ற கட்டடங்களை கட்டித் தரவும், சீரமைத்திடவும் புலம்பெயா் தமிழா்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். இதற்கான அனைத்து ஒருங்கிணைப்பும் அரசின் தரப்பில் எளிய முறையில் செய்து தரப்படும்.

கல்வி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்று அங்கே நிரந்தரமாக குடியுரிமை பெற்றுள்ள தமிழா்களின் வாரிசுகளுக்கு தமிழ் கற்கும் ஆா்வம் உருவாக்கப்படும். தமிழ் மொழியை கற்றிட ஏதுவாகவும், தமிழ் பரப்புரைக் கழகம் மற்றும் தமிழ் இணைய கல்விக் கழகம் மூலமாக குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கப்படும். மேலும், அங்குள்ள கல்வி நிறுவனங்களில் தமிழ் பயிற்றுவிப்பதற்காக ஊக்கத் தொகை மற்றும் தமிழ் கல்வி கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு பயிற்சியும் வழங்கப்படும்.

புலம்பெயா்ந்துள்ள தமிழா்கள் அந்தந்த நாடுகளில் உருவாக்கியுள்ள நலச்சங்கங்கள் ஒருங்கிணைக்கப்படும். இந்தச் சங்கங்களின் மூலமாக நமது கலை, இலக்கியம், பண்பாடு பரிமாற்றங்கள் நடைபெறும். இதற்காக ரூ.4 கோடி ஒதுக்கப்படும்.

வெளிநாட்டில் உள்ள தமிழா் நலனைப் பேணிட, நலவாரியம், அதுசாா்ந்த திட்டங்களுக்காக மட்டும் ரூ.20 கோடி ஒதுக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

பெட்டிச் செய்தி….ஜனவரி 12 உலகத் தமிழா் நாள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ஆம் தேதி, புலம்பெயா் உலகத் தமிழா் நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். பல்வேறு நாடுகளில் உள்ள தமிழா்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவா்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ஆம் தேதி, புலம்பெயா்ந்த உலகத் தமிழா் நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று தனது அறிவிப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

2. இந்தியாவில் 7 இடங்களில் ரூ.4,445 கோடியில் ஜவுளி பூங்கா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வேலை வாய்ப்பை அளிக்கும் ஜவுளித் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் ரூ.4,445 கோடி முதலீட்டில் 7 மெகா ஜவுளிப் பூங்காக் களை அமைக்க பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்பு தல் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.

இந்தியாவில் ஜவுளித் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் ‘பி.எம்.மித்ரா’ திட்டத்தின்கீழ் 7 மெகா ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை பூங்கா அமைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்திய ஜவுளித் தொழிலை சர்வதேச அளவில் போட்டியிடும் வகையில் மேம்படுத்துவது இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

அத்துடன் அதிக அளவில் முதலீடுகளை ஈர்ப்பது, வேலைவாய்ப்பை உருவாக்குவது, ஏற்றுமதியை அதிகரித்து, அந்நியச் செலா வணியை ஈட்டுவது, சர்வதேச தரத்திலான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தந்து, அதன்மூலம் வெளிநாட்டு சந்தையில் போட்டியிடும் வகையில் இந்திய தயாரிப்பு களை உருவாக்குவது போன்ற அம்சங்கள் இத்திட்டத்தின் நோக்கங்களாக இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், ‘பிஎம் மித்ரா’ திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கூறியதாவது:

நாட்டின் 7 இடங்களில் ‘பிஎம் மித்ரா’ திட்டத்தின்கீழ் மெகா ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைப் பூங்கா அமைக்க மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.4,445 கோடி செலவிடப்படும். தனியார் முதலீடுகளும் அனுமதிக்கப்படும். இதன்மூலம் ஜவுளி உற்பத்தி அதிகரித்து ஏற்றுமதி வளர்ச்சி ஏற்படும். மேலும், லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளும் உருவாகும்.

பெரிய அளவில் அமைக்கப்படும் இந்த ஜவுளிப் பூங்காக்கள், அந்நிய முதலீடு களை பெருமளவில் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021-22 நிதி ஆண்டில் ஜவுளி ஏற்றுமதி மூலம் 4,400 கோடி டாலர் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு ஜவுளி ஏற்றுமதியை எட்ட இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பியுஷ் கோயல் தெரிவித்தார்.

ரயில்வே ஊழியருக்கு 78 நாள் ஊதியம் போனஸ்

புதுடெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு, 72 நாள் ஊதியத்தை போனஸாக அளிக்கலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. இந்நிலையில், நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது. பிரதமரும் அமைச்சரவைக் குழுவினரும் 78 நாள் ஊதியத்தை ரயில்வே ஊழியர்களுக்கு போனஸாக அளிக்க ஒப்புதல் அளித்தனர்.

இத்தகவலை செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்தார். ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதன் மூலம் அரசுக்கு ரூ.1,985 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

3. பருவநிலை மாற்றமும் இயற்பியல் நோபலும்

இரண்டு, நான்கு, ஆறு என இப்படியே இரண்டின் மடங்கில் கூட்டிக்கொண்டே செல்கிறோம், இந்தத் தொடரில் 1,000-க்கு அடுத்து எந்த எண் வரும் என்று கேட்டால், 1,002 என்று எளிதாகக் கணிக்க முடியும். இதுவே ஒன்றிலிருந்து ஒன்பது வரை எண்களைக் கொடுத்து, நம் மனப்போக்கில் மாறிமாறி எண்களைச் சொல்லச் சொன்னால், நம் இஷ்டத்துக்கு 2, 9, 7, 5, 1, 4 என்று சொல்லிக்கொண்டே போவோம். இதே போக்கில் போனால், ஒருவர் அடுத்து என்ன எண்களைச் சொல்லுவார் கணிக்க முடியுமா? இப்படி உலகில் பல விஷயங்கள் தற்போக்காகத்தான் நடைபெறுகின்றன. இதனாலேயே அறிவியல் ஆய்வுகளும் கணிப்புகளும் நேரடியானவையாக இருப்பதில்லை.

கூட்டமாகப் பறக்கும் பறவைகள் அடுத்து எந்தத் திசையில் திரும்பும்? வளிமண்டலத்தில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களால் நூறாண்டுகள் கழித்துக் கடலின் வெப்பநிலை என்னவாக இருக்கும்? இப்படித் தன் போக்கில் நடக்கும் விஷயங்களைக் கணிக்க முடியாது என்று நாம் நினைத்தாலும், முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள், இந்த ஆண்டு இயற்பியலில் நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகளான சுகுரோ மனாபே (Syukuro Manabe), கிளவுஸ் ஹாஸல்மான் (Klauss Hasselmann), ஜார்ஜோ பரீசி (Giorgio Parisi) ஆகிய மூவரும். மிகவும் சிக்கலான விஷயங்களில்கூட அடிப்படையில் ஓர் ஒழுங்கு இருக்கிறது, வடிவுரு இருக்கிறது என்னும் புரிதலைக் கொடுத்திருக்கிறார்கள். எனவே “சிக்கலான இயற்பியல் அமைப்புகளைப் புரிந்துகொள்வதற்குத் திறவுகோலாக இருந்த ஆய்வுப் பங்களிப்புகளுக்காக” இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

இரவில் வெப்பம் எப்படி?

சூரியனிலிருந்து வரும் கதிர்களால் பூமிக்கு வெப்பம் கிடைக்கிறது. அப்படியென்றால், சூரியன் மறைந்த பின்பு வெப்பம் இல்லாமல் பூமி குளிர்நிலைக்குச் சென்றுவிட வேண்டும் இல்லையா? ஆனால், இரவிலும் குறிப்பிட்ட அளவு வெப்பம் நிலவுகிறது. அதனால்தானே நாம் உறைந்துபோகாமல் இருக்கிறோம். இது ஏன் என்று சிந்தித்த ஃபூரியர், பூமியில் இருக்கும் வளிமண்டலம் வெப்பத்தைத் தக்க வைக்கிறது என்று 200 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிந்தார்.

ஜப்பானைச் சேர்ந்த இயற்பியலாளரான மனாபே இரண்டாம் உலகப் போரினால் சிதைந்த டோக்கியோ நகரிலிருந்து 1950-களில் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து, ஆய்வுப் பணிகளை மேற்கொண்டவர். வளிமண்டலம்தான் வெப்பத்தைத் தக்கவைக்கிறது என்றாலும், அதில் எந்த வாயு எவ்வளவு வெப்பத்தைத் தக்கவைக்கிறது என்கிற கேள்வி அவருக்கு எழுந்தது. வளிமண்டலத்தில் பல வாயு மூலக்கூறுகள், பல்வேறு அடுக்குகள் இருப்பதால், இது மிகுந்த சிக்கலான கேள்வி. எனினும் தன் அசாத்திய உழைப்பால், இதற்கான விடையை மனாபே கண்டறிந்தார். காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனும் நைட்ரஜனும் வெப்பநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், வளிமண்டலத்தில் இருக்கும் கரியமில வாயுவின் அளவு இரட்டிப்பானால் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கிறது என்று துல்லியமாகக் கணக்கிட்டுச் சொன்னது, 1960-களில் இவர் கண்டுபிடித்த பருவநிலை மாதிரி. அதற்குப் பின், தினசரி மாறும் வானிலையையும், பொதுவான பருவநிலையையும் இணைக்கும் பணியில் ஈடுபட்டவர் ஜெர்மனியைச் சேர்ந்த பருவநிலையாளர் ஹாஸல்மான்.

மனிதரே காரணம்

ஒரு நாயைக் கூட்டிக்கொண்டு நீங்கள் சாலையில் நடந்துபோனால், அது முன்னே செல்லும், பின்னால் இழுக்கும், காலைச் சுற்றும். இதுபோன்ற சிறுசிறு மாற்றங்களைக் கொண்டதுதான் வானிலை. ஆனால், நீங்களோ சீராக நடந்துபோய் இலக்கை அடைந்துவிடுவீர்கள். இதுதான் பருவநிலை. இன்றளவும் ஒரு வாரம், பத்து நாட்களுக்கு மேல் வானிலை எப்படியிருக்கும் என்று துல்லியமாகக் கணிக்க முடியாது. ஆனால், 50 ஆண்டுகள் கழித்துப் பருவநிலை எப்படியிருக்கும் என்று சொல்ல முடிகிறது.

நாள்தோறும் விரைவாக மாறும் வானிலையால், கடலில் சிறிய மாறுபாடு உண்டாகும் என்பதை 1980-களில் தன் கணக்கீட்டு மாதிரிகளின் அடிப்படையில் ஹாஸல்மான் நிரூபித்தார். மேலும், பருவநிலையில் மனிதச் செயல்பாடுகளால் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கிட்டுச் சொன்னார். பசுங்குடில் விளைவால் புவி வெப்பமடைகிறது என்பதை அறுதியிட்டுச் சொன்னவை, இன்றளவும் பயன்பாட்டில் உள்ள இவருடைய மாதிரிகள். 1980-களில் ஒழுங்கற்ற பொருட்களில் மறைந்திருக்கும் வடிவுருக்களைக் கண்டுபிடித்தவர் இத்தாலியைச் சேர்ந்த ஜார்ஜோ பரீசி.

காந்தத் தன்மையின் ரகசியம்

தற்சுழற்சிக் கண்ணாடி (spin glass) என்று சொல்லப்படும் பொருட்களில் காந்தத் தன்மை கொண்ட அணுக்கள் இருக்கும். அருகில் உள்ள அணுக்களின் தன்மையால் தங்களின் காந்த அமைப்பை இவை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டிவரும். இருப்பினும், அவற்றில் ஓர் அடிப்படை உருமாதிரி இருப்பதைக் கண்டுபிடித்து, எப்படி அணுக்களின் காந்தத்தன்மை அமையும் என்னும் சிக்கலைத் தீர்த்துவைத்தவர் பரீசி. மேலும், இதன் அடிப்படையில், பறவைக் கூட்டம் முதற்கொண்டு கோள்கள் வரை பல்வேறு சிக்கலான அமைப்புகள் சார்ந்து விடையளித்தவர் பரீசி.

பருவநிலை மாற்றத்துக்கு அங்கீகாரம்

நோபல் பரிசுத் தொகையின் ஒரு பாதியை மனாபேவும் ஹாஸல்மானும் பிரித்துக்கொள்ள, மறுபாதி பரீசிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பரீசியின் கண்டுபிடிப்புகள் மற்றவற்றிலிருந்து மாறுபட்டவை போலத் தோன்றினாலும் மூவரும் சிக்கலான, சீரற்ற இயற்பியல் அமைப்புகளைப் புரிந்துகொள்ளும் வழிமுறைகளைக் கொடுத்திருக்கிறார்கள். நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது அரிய கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும் என்பதைத் தாண்டி, ஒரு கண்டுபிடிப்பால் உலகம் எந்த அளவுக்குப் பயனடைந்திருக்கிறது என்பதும் முதன்மையாகக் கொள்ளப்படுவதுண்டு. அப்படிப் பார்க்கையில் இவர்களின் பணி பல்வேறு துறை ஆய்வாளர்களுக்கு ஒளிவிளக்காகத் திகழ்கிறது.

பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வுகளுக்கு நோபல் பரிசு வழங்கியதன் மூலம், உலகத் தலைவர்களுக்கு ஒரு செய்தியை உணர்த்துகிறீர்களா என்று தேர்வுக் குழுவினரை நோக்கிக் கேள்வி எழுப்பப்பட்டது. ‘‘ஆமாம், புவி வெப்பமாதல் என்பது வெறும் வார்த்தை விளையாட்டல்ல, அறிவியல்பூர்வமானது என்று உரக்கச் சொல்லியிருக்கிறோம்’’ என்று அதற்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இது ஒன்று போதாதா இந்த ஆண்டு நோபல் பரிசின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்

4. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் 23 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் ‘மணிமேகலை’ காப்பியம்

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான ‘மணிமேகலை’ காப்பியத்தை சீனம், ஜப்பனீஸ், கொரியன், சிங்களம் உள்ளிட்ட 23 மொழிகளில் மொழிபெயர்க்கும் பணியை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று ‘மணிமேகலை’. சிலப்பதிகார காப்பியத்தின் கதாபாத்திரங் களான மாதவி, கோவலனுக்குப் பிறந்த மணிமேகலையைப் பற்றிக்கூறும் இலக்கியமாகும்.

பவுத்த மதத்தை தழுவிய மணிமேகலையின் வாழ்க்கை குறிப்பு மற்றும் பவுத்த மதத்தின் அறநெறிகளை 30 அத்தியாயங்கள், 4,861 அகவல் அடிகளாக இந்தக் காப்பியத்தை ‘சீத்தலைச் சாத்தனார்’ இயற்றியுள்ளார்.

பாலி, சம்ஸ்கிருதம், தமிழ்உள்ளிட்ட பிற இந்திய மொழிகளில் இயற்றப்பட்ட பவுத்த மத நூல்கள் பல்வேறு காரணங்களால் அழிந்தபோதிலும், மணிமேகலை காப்பியம் மட்டுமே அழிவில் இருந்து தப்பியது. அதன்படி, பவுத்த மதக் கருத்துகளை எடுத்துரைக்கும் தலைசிறந்த நூலாகவும், மிகவும் தொன்மையான தாகவும் இது கருதப்படுகிறது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ‘மணிமேகலை’ காப்பியம் தற்போது மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தால் 15 வெளிநாட்டு மொழிகளிலும், பாலி, லடாக்கி, இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 8 இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குநர் இரா.சந்திரசேகரன், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: உலகிலேயே பவுத்த மதக் காப்பியமாக மணிமேகலை மட்டுமே எஞ்சியுள்ளதாக, பவுத்த மதத் தலைவர் தலாய் லாமா பல ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

அதில், பவுத்த மத அறநெறிகள், அதுகுறித்த அரிய தகவல்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, பவுத்த மதத்தைப் பின்பற்றும் நாடுகளில் மணிமேகலை காப்பியத்தை கொண்டுசெல்ல மத்திய தமிழாய்வு நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, மலேசியா (மலாய்),கம்போடியா (கெமர்), இந்தோனேசியா (இந்தோனேசியா), லாவோஸ் (லாவோ), மியான்மர் (பர்மீஸ்), சீனா (மாண்டரின் – சீனம்), திபெத்திய மொழி, தாய்லாந்து (தாய்), வியட்நாம் (வியட்நாமிஸ்), ஜப்பான் (ஜப்பனீஸ்), மங்கோலியா (மங்கோலியன்), வடகொரியா, தென்கொரியா (கொரியன்), பூடான் (திஃசொங்கா), இலங்கை (சிங்களம்), நேபாளம் (நேபாளி) ஆகிய நாடுகளின் 15 மொழிகள், பாலி, லடாக்கி, சீக்கியம் உள்ளிட்ட 3 இந்திய மொழிகள் என மொத்தம் 18 மொழிகளில் மணிமேகலை காப்பியம் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது.

இதற்காக சம்பந்தப்பட்ட நாடுகளின் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் தமிழ் பேராசிரியர்கள், அறிஞர்கள் பணியில் அமர்த்தப்பட் டுள்ளனர். இக்காப்பியத்தை ஒரு மொழியில் மொழிபெயர்க்க ரூ.2.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு பணிகள் விரைவில் நிறைவு பெற உள்ளன.

பின்னர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் அவை நூல்களாக வெளியிடப்படும். இதன்மூலம், சர்வதேச அளவில் தமிழ் காப்பியம் சிறப்புமிக்க தகுதியை பெறும். அதேபோல, இந்தி, கன்னடம், மலையாளம், சம்ஸ்கிருதம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளிலும் மணிமேகலை மொழி பெயர்க்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

5. ராணுவ மைதானத்தின் ஒரு பகுதிக்கு ‘ஆரோக்கிய ராஜீவ்’ பெயர்: தொடர்ந்து 2 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற திருச்சி வீரருக்கு உதகையில் கவுரவம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வழுதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ராஜீவ்(30). உதகை வெலிங்டனில் உள்ள இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமெண்டில் சுபேதாராக பணிபுரிந்து வரும் இவர், தேசிய அளவிலான போட்டிகளில் மட்டுமின்றி சர்வதேச தடகளப் போட்டிகளிலும் சாதனை படைத்து வருகிறார்.

2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம், 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி வென்றார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றார். 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள், கலப்பு 4X400 தொடர் ஓட்டம் என 2 பிரிவுகளில் இந்தியா சார்பில் பங்கேற்றார்.

இப்போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்ல முடியவில்லை. எனினும்முகமது அனஸ் யஹியா, நோநிர்மல் டாம், ஆரோக்கிய ராஜீவ்,அமோஜ் ஜேக்கப் ஆகிய வீரர்கள்இடம்பெற்ற ஆண்கள் பிரிவு அணியினர் 4X400 தொடர் ஓட்டத்தில் குறைந்த நிமிடங்களில் (3:00:25) பந்தய தூரத்தைக் கடந்து ஆசிய அளவில் சாதனை படைத்தனர்.

இந்நிலையில், இவர் பணிபுரிந்துவரும் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமெண்ட் வளாகத்தில் உள்ள தங்கராஜ் மைதானத்தின் ஒரு பகுதிக்கு (பார்வையாளர் மாடம்) ஆரோக்கிய ராஜீவ் பெயரைச் சூட்டி கவுரவப்படுத்தியுள்ளது இந்திய ராணுவம். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள ஆரோக்கிய ராஜீவ், வெலிங்டன் ராணுவ மைதானத்தில் தனது பெயர் சூட்டப்பட்ட பகுதிக்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்து ‘பெரிதாக தோல்வியடையத் துணிந்தவர்களால் மட்டுமே, எப்போதும் பெரியளவில் சாதிக்க முடியும்’ என்ற வாசகத்துடன் அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஆரோக்கிய ராஜீவ் கூறியதாவது: நான் பயிற்சி பெறும் மைதானத்தின் ஒரு பகுதிக்கு எனது பெயர் சூட்டப்பட்டிருப்பது எனக்கு கிடைத்த அங்கீகாரங்களில் மிகப்பெரிய ஒன்றாக கருதுகிறேன். 2016 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அடுத்த ஆண்டில், இந்தியஅரசு எனக்கு அர்ஜூனா விருது கொடுத்தது. அதன் பின்பு 2021-ல்2-வது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று திரும்பியுள்ள நிலையில், இந்திய ராணுவ வரலாற்றில் இடம்பெறும் வகையில் தற்போது இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கிடைத்துள்ள உற்சாகம், என்னை இன்னும்வேகமாக ஓட வைக்கும். எனவே,நிச்சயம் மேலும் மேலும் வெற்றிகளை குவிப்பேன் என்றார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்ற, அர்ஜூனா விருதுபெற்ற உதகையைச்சேர்ந்த கால்பந்து வீரர் தங்கராசுவின் பெயர், வெலிங்டன் மைதானத்துக்கு ஏற்கெனவே சூட்டப்பட்டுஉள்ளது குறிப்பிடத்தக்கது.

6. விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்பவர்களுக்கு ரொக்கப் பரிசு: மத்திய அரசு அறிவிப்பு

சாலை விபத்தில் சிக்கியவர்களை அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அவர்கள் உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம். இதை மருத்துவத் துறையில் ‘கோல்டன் ஹவர்’ என்று சொல்கின்றனர்.

ஆனால் சாலை விபத்துகளில் சிக்கியவர்களை சரியான நேரத்தில் அழைத்துச் செல்ல முடியாததால் பலர் உயிரிழக்கின்றனர். மேலும் காயம் அடைந்தவர்களை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்வதால் வழக்கு, போலீஸ் விசாரணை என பல்வேறு தொல்லைகள் வரும் என பயப்படுகின்றனர்.

இந்நிலையில் சாலை விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நபர்களுக்கு ரொக்கப் பரிசு தருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சாலை விபத்தில் சிக்கியவர்களை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரைக் காப்பாற்ற உதவும் நல்ல உள்ளம் கொண்ட நபர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இதற்காக உள்ளூர் போலீஸ் நிலையத்தில் இருந்தோ அல்லது மருத்துவமனையில் இருந்தோ அவர்கள் ரசீதைப் பெற்று வரவேண்டும். மாவட்ட அளவிலான குழுக்கள் இதை பரிசீலனை செய்து மாதம்தோறும் இந்த பரிசுகள் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்துக்காக ஒவ்வொரு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தலா ரூ.5 லட்சத்தை மத்திய அரசு வழங்கும். இந்த நிதியிலிருந்து ரொக்கப் பரிசுகள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும். உள்துறை முதன்மை செயலர் தலைமையில் மாநில கண் காணிப்புக் குழு, இந்தத் திட்டத்தை கண்காணித்து அமல்படுத்தும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு நபர், ஓராண்டில் 5 முறை பரிசுகளை பெற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-பிடிஐ

7. கிராமப் பொருளாதாரத்தை வலிமைப்படுத்தும் – இ-சொத்து அட்டை திட்டம் நாடு முழுவதும் அமல் : பயனாளிகளுடனான கலந்துரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி தகவல்

சோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட இ-சொத்து அட்டை திட்டம் கிராமப் பொருளாதாரத்தை வலிமைப்படுத்தி உள்ளதாகவும் இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இ-சொத்து அட்டை (ஸ்வமித்வா) திட்டத்தை சோதனை முறையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். கிராமப்புறங்களில் சொத்து உரிமையை தெளிவாக நிறுவுவதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இதன்படி, ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் (ட்ரோன்) நிலப்பரப்பை அளவிட்டு வரைபடம் உருவாக்கப்பட்டு நில உரிமையாளர்களுக்கு மின்னணு சொத்துஅட்டை வழங்கப்படும். அதில் சம்பந்தப்பட்ட நபருக்கு சொந்தமான சொத்து விவரங்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும். இந்ததிட்டத்தின் மூலம் சமூக-பொருளாதார நிலை மேம்படுவதுடன் கிராமங்கள் தன்னிறைவு பெறும் என மத்திய அரசு கருதுகிறது.

22 லட்சம் சொத்து அட்டை

இந்நிலையில், மத்திய பிரதேசமாநிலம் ஹர்தா மாவட்டத்தில் காணொலி மூலம் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 1.7 லட்சம் பேருக்கு இ-சொத்து அட்டையை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். பின்னர் பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

ஸ்வமித்வா திட்டம் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, உத்தராகண்ட், ராஜஸ்தான், ஹரியாணா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது. இதன்படி இதுவரை 22 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மத்திய பிரதேசத்தில் மட்டும் 3 ஆயிரம் கிராமங்களுக்குட்பட்ட 1.7 லட்சம் குடும்பங்களுக்கு இ-சொத்து அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சொத்து அட்டைகளைப் பயன்படுத்தி வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம், அதிக வட்டி வசூலிக்கும் தனியாரிடமிருந்து கடன் வாங்குவதை கிராம மக்கள் தவிர்க்க முடியும். இதுபோன்ற காரணங்களால் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் கிராமப் பொருளாதாரம் வலுவடைந்துள்ளது.

இந்த திட்டம் கிராமங்களின் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும். வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். கிராம சுயாட்சிக்கு எடுத்துக்காட்டாக இந்த திட்டம் விளங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.- பிடிஐ

8. வேதியியலுக்கான நோபல் பரிசு: இரு விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்தளிப்பு

2021ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு இரு விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்தளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.

அந்த வகையில் வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட், பிரிட்டனைச் சேர்ந்த டேவிட் மெக்மில்லன் ஆகியோருக்கு இவ்வாண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தரப்பில் அறிவிக்கப்பட்டது,

இரு விஞ்ஞானிகளும் வேதியியல் மூலக்கூறு கட்டுமானத்திற்கான புதிய மற்றும் தனித்துவமான வினையூக்கி (asymmetric organocatalysis ) கருவியை உருவாக்கியதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

வேதியியலில் இருவித வினையூக்கிகளே (உலோகங்கள் மற்றும் நொதிகள்) உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் நீண்டகாலமாக நினைத்துவந்த சூழலில், இவர்களின் இந்தக் கண்டுபிடிப்பு புதிய மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு உதவிகரமாக அமைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9. ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 74 சதவீத வாக்குப்பதிவு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களில் புதன்கிழமை நடைபெற்ற முதல்கட்ட வாக்குப் பதிவில் 74.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 78 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், 755 ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 1,577 கிராம ஊராட்சித் தலைவா்கள், 12,252 கிராம ஊராட்சி உறுப்பினா்கள் பதவிக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு புதன்கிழமை (அக்.6) நடைபெற்றது. 41 லட்சத்து 94 ஆயிரம் வாக்காளா்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இணையதளம் வழியே கண்காணிப்பு: வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யவும், அசம்பாவிதங்களைத் தவிா்க்கவும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. வாக்குப் பதிவை சென்னையில் உள்ள மாநிலத் தோ்தல் ஆணையா் அலுவலகத்தில் இருந்து ஆணையா் வெ.பழனிகுமாா், செயலா் சுந்தரவல்லி ஆகியோா் இணையதளம் வழியே கண்காணித்தனா். இதையடுத்து ஆணையா் வெ.பழனிகுமாா் செய்தியாளா்களிடம் கூறியது: 9 மாவட்டங்களில் முதல்கட்ட வாக்குப் பதிவுக்காக 7,921 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இவற்றில் 12 ஆயிரத்து 318 கண்காணிப்பு கேமராக்களும், 1,132 வாக்குச் சாவடிகளில் விடியோ பதிவும், சென்னையில் இருந்து வாக்குப் பதிவை நேரடியாகக் கண்காணிக்க 1,123 ஆன்லைன் கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. 9 தோ்தல் பாா்வையாளா்கள், 129 பறக்கும் படைகள், 1,168 நுண் பாா்வையாளா்கள், 74 வட்டாரப் பாா்வையாளா்கள், 1 லட்சத்து 17 ஆயிரம் தோ்தல் பணியாளா்கள், 39,408 போலீஸாா் தோ்தல் பணியில் ஈடுபட்டுத்தப்பட்டனா். அசம்பாவிதம் இன்றி அமைதியாக தோ்தல் நடைபெற்றது.

765 வழக்குகள் பதிவு: தோ்தல் நடத்தை விதிகளை மீறியது தொடா்பாக 9 மாவட்டங்களில் 765 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ. 97 லட்சத்து 98 ஆயிரம் ரொக்கமும், 34 லட்சம் மது பாட்டில்களும், 14.48 கிலோ சந்தனக் கட்டைகளும், 1,551 பட்டுப் புடவைகள், 1,341 துண்டுகள், 100 மின் விசிறிகள், 250 பித்தளை விளக்குகள், 600 குங்குமச் சிமிழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

விறுவிறு வாக்குப் பதிவு: புதன்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. பிற்பகல் வரை பெரும்பாலான மாவட்டங்களில் வாக்குப் பதிவு மந்தமாக நடைபெற்றது. அதன்பிறகு மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் வாக்களிக்கும் வகையில் கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. மாலை 6 மணிக்குள் வாக்களிக்க வந்தவா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. முகக்கவசம் அணிந்து வந்தவா்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டதுடன், வாக்காளா்களுக்கு கையுறை இலவசமாக வழங்கப்பட்டன. புதன்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, 7.72 சதவீத வாக்குகளும், மாலை 4 மணி நிலவரப்படி சுமாா் 50 சதவீத வாக்குகளும், வாக்குப் பதிவு முடிவடைந்தபோது சராசரியாக 74.37 சதவீத வாக்குகளும் பதிவானதாக மாநிலத் தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

10. மாசில்லா சுவாசம் எப்போது?

ஒவ்வோர் ஆண்டும் காற்று மாசு உலகளவில் 70 லட்சம் முன்கூட்டிய இறப்புகளை ஏற்படுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. காற்று மாசால் குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சியும் இயக்கமும் குறைகிறது; சுவாச நோய்த்தொற்றும் ஆஸ்துமாவும் ஏற்படுகிறது.

உலக சுகாதார அமைப்பானது காற்று மாசு தொடர்பான மாற்றப்பட்ட தர விதிகளை கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி, காற்றில் காணப்படும் பிஎம்2.5 எனப்படும் நுண் துகள்களின் அதிகபட்ச சுவாசிக்கத்தக்க அளவு ஒரு கனமீட்டருக்கு 15 மைக்ரான்களாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டு இந்த அளவு 25 மைக்ரான்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

10 மைக்ரான் விட்டம் அல்லது அதற்கு குறைவான நுண் துகள்கள் பிஎம்10 எனவும், 2.5 மைக்ரான் விட்டம் அல்லது அதற்கு குறைவான நுண் துகள்கள் பிஎம்2.5 எனவும் அழைக்கப்படுகின்றன. இந்த இரு அளவிலான நுண் துகள்களும் மனிதர்களின் நுரையீரலுக்குள் ஊடுருவும் திறன் கொண்டவை. அதிலும் பிஎம்2.5 நுண் துகளானது ரத்த ஓட்டத்தில் கலந்து இதய மற்றும் சுவாச உறுப்புகளைப் பாதித்து, பிற உறுப்புகளையும் பாதிக்கிறது.

போக்குவரத்து, எரிசக்தி, வீடுகள், தொழிற்சாலைகள், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் எரிபொருள் எரிக்கப்படும்போது இந்த நுண்துகள்கள் வெளியாகின்றன.

இந்தியாவில் தேசிய சுற்றுப்புற காற்று தரநிலைகளின்படி (சஅஅணந), பிஎம்2.5 அளவானது அதிகபட்சம் 60 மைக்ரான்களாக இருக்க வேண்டுமென 2009-இல் நிர்ணயிக்கப்பட்டது. 2021-இல் இந்தியாவின் பெரிய நகரங்கள் பல, உலக சுகாதார நிறுவனத்தின் 2005-ஆம் ஆண்டு தர நிர்ணய அளவைத் தாண்டியுள்ளன.

புதிய விதிகளின்படி பார்த்தால் இந்த நகரங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காற்று மாசு காரணமாக அதிகரிக்கும் உயிரிழப்பும் இந்தியாவில் அதிகரித்துள்ளது.

காற்று மாசானது அனைத்து நாடுகளிலும் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றாலும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம்கொண்ட நாடுகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் புதிய காற்றுத் தர வழிகாட்டுதல்கள் ஆதாரத்தின் அடிப்படையிலானது. அனைத்து உயிர்கள் தொடர்புடைய காற்றின் தரத்தை உயர்த்த இது வழிகாட்டும்.

அனைத்து நாடுகளும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் போராட வேண்டும் – டெட்ரோஸ் அதானோம், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்.

புதிய தரவிதிகள்

உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய காற்று மாசு தரவிதியானது 24 மணி நேரத்தில் பிஎம்2.5 நுண் துகள்களின் சுவாசிக்கத்தக்க அளவு 15 மைக்ரான்களாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட அளவானது 60 மைக்ரான்களாக உள்ளது.

நகரங்களில் காற்றின் தரம்

2021 ஜன. 1-ஆம் தேதி முதல் செப். 27-ஆம் தேதி வரை, உலக சுகாதார நிறுவனத்தின் புதிய அறிவிப்பின்படி நகரங்களில் காணப்பட்ட நுண்துகள்களின் விவரம், காற்றில் பிஎம்2.5 நுண் துகள்களின் அனுமதிக்கப்பட்ட அளவான 15 மைக்ரான்கள், 25-மைக்ரான்களுக்கு மேல் 60 மைக்ரான்கள் வரை, இந்தியாவின் தரநிலையான 60 மைக்ரான்களுக்கு மேல் வரை காணப்பட்ட சராசரி நாள்கள் குறித்த அட்டவணை:

நகரங்கள் >15 25-60 >60

1 தில்லி 0 32 68

2 பாட்னா 1 37 44

3 லக்னௌ 4 47 31

4 கொல்கத்தா 11 39 29

5 ஜெய்ப்பூர் 4 62 23

6 ஆமதாபாத் 0 70 23

7 ஹைதராபாத் 43 38 8

8 மும்பை 16 47 7

9 கோவை 0 86 6

10 சென்னை வேளச்சேரி 53 29 2

11 பெங்களூரு 34 40 1

12 திருவனந்தபுரம் 11 39 0.4.

15 மைக்ரான்கள் வரை காணப்பட்ட சராசரி நாள்கள்

25 மைக்ரான்களுக்கு மேல் 60-க்குள் காணப்பட்ட சராசரி நாள்கள்

60 மைக்ரான்களுக்கு மேல் காணப்பட்ட சராசரி நாள்கள்

11. 2025-இல் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலக்கப்படும்: இந்தியன் ஆயில் அதிகாரி தகவல்

நாடு முழுவதும் வரும் 2025-ஆம் ஆண்டில் பெட்ரோலுடன் 20 சதவீதம் அளவுக்கு எத்தனால் கலக்கப்படும். பெட்ரோல், டீசலில் எத்தனால் கலப்பதால் பயனாளருக்கு எவ்வித இழப்பும் ஏற்படாது என இந்தியன் ஆயில் நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநா் எஸ்.எஸ்.வி.ராமகுமாா் தெரிவித்துள்ளாா்.

இந்தியன் ஆயில் நிறுவன விரிவாக்கம் குறித்தும், மாற்று எரிசக்தி குறித்தும் விளக்கமளிப்பதற்காக இந்தியன் ஆயில் நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநா் எஸ்.எஸ்.வி.ராமகுமாா் சென்னையில் புதன்கிழமை செய்தியாளா்களை சந்தித்தாா்.

அப்போது அவா் கூறியது: பெட்ரோல், டீசல் ஆகியவற்றுடன் எத்தனால் கலப்பதால் என்ஜின் செயல்பாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படாது. பெட்ரோல், டீசல் என்ஜினில் எரியும் திறனோடு எத்தனால் சோ்ந்தால் அதிக அளவு ஆக்டான்ஸ் கிடைக்கும். எனவே பெட்ரோல், டீசலில் எத்தனால் கலப்பதால் எவ்வித இழப்பும் பயனாளருக்கு ஏற்படாது.

தற்போது 10 சதவீதம் அளவுக்கு பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படும் நிலையில், 2025- ஆம் ஆண்டு முதல் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்படும். சிஎன்ஜி (இசஎ) வாயு தயாரிக்கும், விநியோகிக்கும் நிலையங்களை நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவனம் நிறுவவுள்ளது. இதன் மூலம் 5,000 தொழில் முனைவோருக்கு வாய்ப்புக் கிடைக்கும். இந்த சிஎன்ஜி வாயுவுடன் ஹைட்ரஜன் வாயுவை கலப்பதால் அதி திறன் கொண்ட சிஎன்ஜி வாயு கிடைப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே அவற்றை உற்பத்தி, விநியோகம் செய்வது குறித்து பாதுகாப்பு நடவடிக்கைக்காக உச்ச நீதி மன்றத்தை அணுகியுள்ளோம். அதன் அனுமதி கிடைத்தவுடன் சிஎன்ஜி வாயுவுடன் ஹைட்ரஜன் வாயு கலந்து விநியோகம் செய்யப்படும்.

இந்தியாவில் 90 சதவீத மக்கள் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்துகின்றனா். ஆனால் 50 சதவீதத்துக்கும் குறைவான உற்பத்திதான் இந்தியாவில் நடக்கிறது. எனவே இந்தியா, பெரும்பாலான எரிவாயுவுக்கு இறக்குமதியை நம்பியே உள்ளது. இதற்கு முன்பு சலுகை விலையில் சமையல் எரிவாயு (கடஎ) விநியோகம் செய்யப்பட்டது. தற்போது அரசின் கொள்கையின் படி, சா்வதேச சந்தை விலையை பொறுத்து விற்கப்படுகிறது. இதனால் விலை மாறுதல் ஏற்படுகிறது என்றாா் எஸ்.எஸ்.வி.ராம்குமாா்.

12. விவசாயியும் விவசாயமும்

இந்திய கிராமப்புற குடும்பத்தின் வருமானத்தில் நான்கில் மூன்று பங்கு விவசாயத்திலிருந்து வந்தது. இது 1970-இல். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு 2020- ஆம் ஆண்டில் இது மூன்றில் ஒரு பங்கிற்கும் கீழே குறைந்துள்ளது.

தற்போது பெரும்பாலான விவசாயக் குடும்பங்கள் விவசாயத்தினைக் கைவிட்டு வேறு தொழில்கள் மூலம் சம்பாதிக்கின்றன. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரம், ஒவ்வொரு நாளும் 2,000 விவசாயிகள் விவசாயத்தைக் கைவிடுகின்றனா் என்று கூறுகிறது.

காலநிலை மாற்றம் விவசாயத்தினை கடுமையாக பாதிக்கிறது. காலநிலை மாற்ற பாதிப்புகளால் விவசாயிகளின் வருமானம் 25 சதவீதம் வரை குறையும் என்கிறது அரசாங்க தரவு. காலநிலை மாற்றம், விவசாயம் அதிகம் நடைபெறும் இந்தியாவின் நூறு ஏழை மாவட்டங்களில் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற காலநிலை மாற்ற பாதிப்புகள் ஆண்டுக்கு 700 கோடி ரூபாய் வரை இழப்பை ஏற்படுத்துகின்றன. உலகின் அதிக மக்களை பாதிக்கும் இரண்டாவது மிக மோசமான பாதிப்பான வறட்சி, 30 கோடி இந்திய மானாவாரி விவசாயிகளைக் கடுமையாக பாதிக்கிறது.

1950-இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 51 சதவீதமாக இருந்த விவசாயத்தின் பங்களிப்பு, தற்போது 16 சதவீதமாக குறைந்துள்ளது. அதேவேளையில், 1951-ஆம் ஆண்டில் ஏழு கோடி குடும்பங்கள் விவசாயத்தை நம்பியிருந்த நிலையில், தற்போது அது 12 கோடி குடும்பங்களாக உயா்ந்துள்ளது.

உலகின் மிக வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியப் பொருளாதாரமும் ஒன்று என்ற தரவு விவசாயிக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தவில்லை. ஏனெனில் நமது நாட்டின் ஒவ்வொரு இரண்டாவது விவசாயியும் கடன் வாங்குகிறாா்.

இந்திய விவசாயி சராசரியாக மாதம் 6,426 ரூபாய் சம்பாதித்து 6,223 ரூபாயை செலவிடுகிறாா். 15% இந்திய விவசாயிகள் மட்டுமே வருமானத்தில் 91%-ஐ சம்பாதிக்கின்றனா். இது வருமான சமத்துவமின்மைக்கு காரணமாக அமைகிறது.

ஒரு ஹெக்டோ் நிலத்தில் பயிரிடப்படும் கோதுமையிலிருந்து 7,639 ரூபாய் மட்டுமே ஒரு விவசாயி சம்பாதிக்கிறாா். கோதுமைக்கான உற்பத்திச் செலவு 32,644 ரூபாய். ஒரு ஹெக்டேருக்கான நஷ்டம் 25,005 ரூபாய். இது பெரும் இழப்பு என்கிறது ஒரு ஆய்வு.

விவசாயக் குடும்பங்கள், கிராமப்புறங்களில் விவசாய நிலம் வைத்திருப்பவா்களின் 2019-ஆம் ஆண்டுக்கான நிலை மதிப்பீட்டு அறிக்கை செப்டம்பா் 10, 2021 அன்று வெளியிடப்பட்டது. பாதிக்கும் மேற்பட்ட இந்திய விவசாய குடும்பங்கள் கடனில் உள்ளதாகவும், சராசரியாக அவா்களின் கடன்தொகை 74,121 ரூபாய் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.

2013-ஆம் ஆண்டிற்கான நிலை மதிப்பீட்டுக் கணக்கீட்டுடன் ஒப்பிடும்போது 2019-ஆம் ஆண்டில் கடனில் தவிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 51.9%-லிருந்து 50.2%-ஆக சற்று குறைந்துள்ளது. இருப்பினும் கடன்பெற்ற குடும்பங்களின் கடன்தொகை 47,000 ரூபாயிலிருந்து 74,121 ரூபாயாக அதிகரித்துள்ளது.

69.6% விவசாயிகள் வங்கிகள், கூட்டுறவுச் சங்கங்கள், அரசு சாா்ந்த நிறுவனங்களிலிருந்தும் 20.5% விவசாயிகள் தனியாா் நிதி நிறுவனங்களில் இருந்தும் கடன் பெற்றதாக தேசிய புள்ளியியல் அலுவலகத் தரவு கூறுகிறது. விவசாயிகள் வாங்கிய மொத்தக் கடனில் 57.5 சதவீதம் மட்டுமே விவசாய நோக்கங்களுக்காக வாங்கப்பட்டது என்கிறது இத்தரவு.

28 இந்திய மாநிலங்களில் அதிக கடன் பெற்றுள்ள விவசாயக் குடும்பங்கள் கொண்ட ஆந்திர மாநிலத்தில் 93.2 சதவீத விவசாயக் குடும்பங்கள் கடனில் உள்ளன என்றும், அவற்றின் சராசரி கடன் தொகை 2.45 லட்சம் என்றும் 2019-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு கூறுகிறது.

இதற்கு அடுத்தபடியாக விவசாய கடன் பெற்ற 91.7% குடும்பங்களைக் கொண்ட தெலங்கானா மாநிலத்தின் சராசரி கடன் தொகை 1.52 லட்சமாகவும் 69.9% குடும்பங்களைக் கொண்ட கேரள மாநிலத்தின் சராசரி கடன் தொகை 2.42 லட்சமாகவும் இருப்பதாக இக்கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

ஹரியாணா, பஞ்சாப், கா்நாடகம், ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் கடன் பெற்ற விவசாயக் குடும்பங்கள் சராசரியாக ஒவ்வொன்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றுள்ளது. மொத்தத்தில் 11 மாநிலங்களில் இந்தத் கடன் தொகை தேசிய சராசரியான 74,121 ரூபாயை விட அதிகமாக உள்ளது.

ஒரு விவசாயக் குடும்பம் பயிா் சாகுபடி, விளைபொருட்கள் வணிகம் மட்டுமல்லாது விவசாயக் கூலி, கால்நடைகள் வளா்த்தல், உரம் – பூச்சிமருந்துகள் போன்ற விவசாயம் தொடா்பான பொருட்களின் வணிகம் ஆகியவற்றின் மூலமாக வருமானம் ஈட்டலாம். 2013-ஆம் ஆண்டில் 6,426 ரூபாயாக இருந்த விவசாயக் குடும்பங்களின் சராசரி வருமானம் 2019-ஆம் ஆண்டில் 10,218 ரூபாயாக அதாவது 57% அதிகரித்துள்ளது என்றும் ஆண்டு வளா்ச்சி விகிதம் 7.8% என்றும் தரவு கூறுகிறது.

இந்த வருமான அதிகரிப்பு, விவசாயத் தொழிலுக்கான ஊதியத்தாலும் கால்நடை வளா்ப்பாலும் உருவானது. 2018-19 ஆண்டில் விவசாய கூலி, பயிா் சாகுபடி, கால்நடை வளா்ப்பு, விவசாய சம்பந்தப்பட்ட பொருட்கள், வணிகம் வேளாண்துறை மொத்த வருமானத்தில் முறையே 40%, 38%, 16%, 6% பங்குகளைக் கொண்டிருந்தன. இதுவே 2012-13 ஆண்டில் முறையே 32%, 48%, 12%, 8% என இருந்தது.

இத்தரவுகள் விவசாயக் குடும்பங்கள் தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை விவசாய சாகுபடி மூலமாக சம்பாதிக்கவில்லை என்பதைத் தெளிவாக்குகின்றன. மொத்த சராசரி வருமானத்தில் அதிக பங்கு (ரூ. 4,063) ஊதியத்திற்கான வருமானம்.

வேளாண் துறையில் ஒரு தொழிலாக சுருங்கி வரும் விவசாயம் விவசாயிகளின் பெரும் வருமான ஆதாரமாக இல்லை என்பது உண்மையில் வருத்தம் தரும் செய்தி. கரோனா தீநுண்மியின் தாக்கம் உச்சம் பெற்ற காலத்தில் விவசாயிகளின் உழைப்பு காரணமாக இந்தியாவில் வேளாண் துறை மட்டுமே வளா்ச்சிபெற்றது.

தன்னிறைவு உணவு உற்பத்தி கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. அதற்குக் காரணமான விவசாயி தன்னிறைவு கொள்ள வேண்டுமானால் அவன் கடனின்றி வாழ வேண்டும். அதற்கு ஆவன செய்யட்டும் அரசு.

13. பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகங்களின் இலக்கு நிறைவு

வறுமைக்கோட்டுக்குள் இருக்கும் மக்கள் பயன் பெறும் வகையிலான பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகம் நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் திறக்கப்பட்டுவிட்டதாக மத்திய ரசாயனம், உரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கின்படி 8,300 மக்கள் மருந்தகங்கள் இதுவரை திறக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண நோய்கள் முதல் நீடித்த நோய்கள் வரையிலான அலோபதி மருந்துகள், வெளிச் சந்தைகளில் அதிக விலையில் விற்கப்படுகின்றன. இந்த மருந்துகள் பொதுமக்களுக்கு மலிவான விலையில் கிடைக்க மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டம்தான் “பிரதம மந்திரி பாரதிய மக்கள் மருந்தக திட்டம் (பிஎம்பிஜேபி)’ ஆகும். இந்தத் திட்டத்தை இந்திய மருந்துகள், மருத்துவ சாதனங்கள் பணியகம் (பிஎம்பிஐ) பொறுப்பேற்று நாடு முழுவதும் மலிவு விலையில் முக்கிய மருந்துகளை விற்பனை செய்யும் வகையில், பிரதம மந்திரி பாரதிய மக்கள் மருந்தகங்களைத் திறந்து வருகிறது.

இந்த மருந்தகங்கள் மூலம் சுமார் 1,451 மருந்துகள், 240 மருத்துவ சாதனங்கள் மலிவான விலையில் பொதுமக்களுக்கு விற்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தின்கீழ் கடந்த 2020, மார்ச் வரை 696 மாவட்டங்களில் 6,068 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டன. நிகழ் 2021-22-ஆம் நிதியாண்டில் 8,300 மக்கள் மருந்தகங்கள் திறக்கத் திட்டமிடப்பட்டு அக்டோபர் 5-ஆம் தேதி வரை 8,355 மருந்தகங்கள் திறக்கப்பட்டுவிட்டதாக ரசாயனத் துறை தெரிவித்துள்ளது. மேலும், 2024-ஆம் ஆண்டுக்குள் 10,000 மக்கள் மருந்தகங்களைத் திறக்கவும் மத்திய ரசாயனத் துறை திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழகத்தில்… தற்போது நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் (725) மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுவிட்டன. தமிழகத்தில் இதுவரை சுமார் 827 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டு நாட்டிலேயே சிறப்பாகச் செயல்படுவதாகவும் மத்திய ரசாயனத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் அனைத்து மக்கள் மருந்தகங்களும் விநியோகச் சங்கிலியால் இணைக்கப்பட்டு நிகழ்நேர அடிப்படையில் மருந்து விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது.

2020-21- ஆம் ஆண்டில் மக்கள் மருந்தகங்கள் மூலம் ரூ.665.83 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் ரூ. 4,000 கோடி வரை சேமிக்க முடிந்துள்ளது என்று அமைச்சகம் கூறியுள்ளது.

14. சர்வதேச ஆக்கி சம்மேளனத்தின் அனைத்து விருதுகளையும் அள்ளியது இந்தியா

சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனை உள்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர், வீராங்கனை உள்ளிட்ட விருதுக்கான பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது. இதில் இருந்து ஒவ்வொரு பிரிவிலும் ஒருவரை விருதுக்கு தேர்வு செய்ய ‘ஆன்-லைன்’ மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தேசிய ஆக்கி அணிகளின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், ரசிகர்கள் மற்றும் வீரர்கள், ஊடகங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அளிக்கும் வாக்குகளின் சதவீதத்தை அடிப்படையாக கொண்டு விருதுக்கு தேர்வாகி இருக்கும் வீரர், வீராங்கனைகளின் பெயரை சர்வதேச ஆக்கி சம்மேளனம் நேற்று அறிவித்தது.

இதன்படி அனைத்து பிரிவுகளின் விருதுகளையும் இந்தியா கைப்பற்றியது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய அணியில் அதிக கோல்கள் அடித்த ஹர்மன்பிரீத் சிங் 52.11 சதவீத வாக்குகளுடன் சிறந்த வீரர் விருதுக்கும், டோக்கியோ ஒலிம்பிக்கில் 4-வது இடம் பெற்ற இந்திய பெண்கள் அணியில் அதிக கோல்கள் போட்ட குர்ஜித் கவுர் 46.63 சதவீத வாக்குகளுடன் சிறந்த வீராங்கனை விருதுக்கும் தேர்வாகி இருக்கிறார்கள்.

சிறந்த கோல்கீப்பர் விருதுக்கு இந்திய அணியை சேர்ந்த ஸ்ரீஜேஷ் (ஆண்கள்), சவிதா புனியா (பெண்கள்) ஆகியோரும், வளர்ந்து வரும் நட்சத்திர விருதுக்கு ஷர்மிளா தேவி (பெண்கள்), விவேக் சாகர் பிரசாத் (ஆண்கள்) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளர் கிரகாம் ரீட், பெண்கள் அணியின் பயிற்சியாளர் ஜோர்ட் மர்ஜினே ஆகியோர் சிறந்த பயிற்சியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.

சிறந்த வீரர்கள் தேர்வுக்கு பெல்ஜியம் ஆக்கி சம்மேளனம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த சம்மேளனம் வெளியிட்டு இருக்கும் டுவிட்டர் பதிவில், ‘ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பெல்ஜியம் அணியை சேர்ந்த வீரர்கள் பட்டியலில் இருந்தும் ஒருவர் கூட விருதுக்கு தேர்வாகாதது விருதுக்கான வாக்கெடுப்பு முறையின் தோல்வியை எடுத்துக்காட்டுகிறது. வருங்காலத்தில் விருது தேர்வுக்கான முறை நியாயமானதாக இருக்கும் வகையில் மாற்றி அமைக்க நாங்கள் சர்வதேச ஆக்கி சம்மேளனத்துடன் இணைந்து பணியாற்றுவோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு சர்வதேச ஆக்கி சம்மேளனம் அளித்த விளக்கத்தில் ‘விருதுக்கு தேர்வானவர்கள், 3 பிரிவினரும் அளித்த வாக்குகளில் முதலிடத்தை பெற்றுள்ளனர். தேவைப்பட்டால் விருது வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டியது குறித்து மறுபரிசீலனை செய்வோம். தேசிய சம்மேளன பிரதிநிதிகள் முழுமையாக வாக்களிக்காதது ஏன்? என்பது குறித்து கவனம் செலுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

15. உலகின் முதல் மலேரியா தடுப்பூசி: ஆப்பிரிக்க குழந்தைகள் பெறுகிறாா்கள்

உலகின் முதல் மலேரியா தடுப்பூசி, ஆப்பிரிக்க குழந்தைகளுக்குச் செலுத்தப்படவுள்ளது. மலேரியா காய்ச்சலைத் தடுப்பதற்காக மாஸ்குயிரிக்ஸ் என்ற தடுப்பூசியை கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் நிறுவனம் கடந்த 1987-இல் உருவாக்கியது. அந்த தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருந்ததால், அதை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடா்ச்சியாக, கடந்த 2019-இல் இருந்து கானா, கென்யா, மாலவி ஆகிய நாடுகளில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறாா்களுக்கு மலேரியா தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆராய்ச்சியில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு உலக சுதாகார அமைப்பு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. முதல் முறையாக, ஆப்ரிக்காவைச் சோ்ந்த சிறுவா்கள், மலேரியா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள இருக்கிறாா்கள். ‘இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்’ என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் கூறினாா். மலேரியாவைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மந்தமாகியிருந்த நிலையில், தடுப்பூசி வந்திருப்பது அதிகாரிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

1. ‘Weaver Services and Design Resource Center’ is set to be setup in which state/UT?

A) Jammu and Kashmir

B) Himachal Pradesh 

C) Sikkim

D) West Bengal

  • Union Minister for Commerce, Industry and Textiles Piyush Goyal announced to set up a “Weaver Services and Design Resource Center” in Kullu district of Himachal Pradesh.
  • This centre will help in encouraging the attractive handicraft products of the state and provide a better platform to export these products at the international market. Programme was organized under ‘Seva & Samarpan Abhiyan’ to commemorate the golden jubilee year of statehood of Himachal Pradesh on September 27, 2021.

2. My Life in Full: Work, Family and Our Future’ is a memoir of which Indian personality?

A) Jeff Bezos

B) Andy Jassy

C) Indra Nooyi 

D) Kiran Mazumdar Shaw

  • “My Life in Full: Work, Family and Our Future” is the memoir of 65–year–old former PepsiCo CEO Indra Nooyi. It will be published in the month of September 2021 by Portfolio books. It narrates her life from childhood till her becoming one of the world’s most powerful women. Indra Nooyi served as the CEO of PepsiCo for 12 years.

3. Lucy Mission, which was seen in the news recently, is associated with which space agency?

A) ISRO

B) NASA 

C) Blue Origin

D) SpaceX

  • Lucy is a mission of the USA’s NASA, to study Jupiter’s Trojan asteroids. This is set to provide new insights into the solar system’s formation 4.5 billion years ago. The probe is named Lucy after an ancient fossil that provided insights into the evolution of human species. It is set to be launched on Oct.16 from Cape Canaveral Space Force Station in Florida.

4. Which technology company has launched ‘Creator education programme’ in India?

A) Google

B) Amazon

C) Microsoft

D) Facebook 

  • Facebook launched its largest creator education and enablement programme in India. Named “Born on Instagram” the programme includes e–learning course, aimed at encouraging, educating and enabling creators. The programme was originally launched in 2019. It focusses on content creators who drive more users, viewers and commerce across different platforms.

5. What does ‘P’ stand for in the PCA Framework, related with the Reserve Bank of India?

A) Public

B) Private

C) Prompt 

D) Priority

  • Prompt Corrective Action (PCA) refers to the watchlist of weak banks, by the Reserve Bank of India. The regulator imposes restrictions like curbs on lending among others, on such banks.
  • The Reserve Bank of India (RBI) has recently removed Indian Overseas Bank from the Prompt Corrective Action Framework. The bank was placed under the PCA framework in 2015. On the basis of the published financial results for 2020–21, the Board for Financial Supervision, found that the bank has not breached PCA parameter.

6. What is the External debt ratio to GDP of India, as of March 2020?

A) 1.11%

B) 11.1%

C) 21.1% 

D) 41.1%

  • According to the Union Finance Ministry’ status report on India’s external debt, India’s External debt to GDP ratio increased marginally to 21.1% from 20.6% as at end–March 2020.
  • India’s external debt rose by 2.1% year–on–year to $570 billion as of March–end 2021. Reserves to external debt ratio increased to 101.2% from 85.6% during the same period.

7. Which Union Ministry has launched the ‘Ease of Logistics’ portal?

A) Ministry of MSME

B) Ministry of Commerce and Industry 

C) Ministry of Agriculture and Farmers Welfare

D) Ministry of Animal Husbandry and Dairying

  • Federation of Indian Export Organisations (FIEO) is the apex trade promotion organisation set up by the Ministry of Commerce, and private trade and industry bodies in 1965. Union Minister of Commerce & Industry Piyush Goyal recently launched the ‘Ease of Logistics’ portal. The new portal will be a connecting link between exporters and logistic service providers.

8. Which country has recently announced a multibillion–euro Defence deal with France?

A) Greece 

B) Turkey

C) Italy

D) Spain

  • France and Greece announced a multibillion–euro Defence deal, which includes the decision of Greece to buy three French warships. Greece will boost its Defense capacities in the Eastern Mediterranean amid tensions with Turkey.
  • President Emmanuel Macron and Greek Prime Minister Kyriakos Mitsotakis announced a Defense and security strategic partnership in Paris. Greece has already bought 18 French Rafale fighter jets.

9. CIPET: Institute of Petrochemicals Technology has been inaugurated with which city?

A) Gandhi Nagar

B) Jaipur 

C) Chennai

D) Hyderabad

  • Prime Minister Narendra Modi inaugurated CIPET: Institute of Petrochemicals Technology, Jaipur through video conference.
  • The Central Institute of Petrochemicals Engineering & Technology (CIPET), formerly called as the Central Institute of Plastics Engineering & Technology, was established in 1968 by India with the assistance of United Nations Development Programme at Chennai.

10. The Cabinet approved the continuation of the National Export Insurance Account (NEIA) scheme till which year?

A) 2022–23

B) 2023–24

C) 2024–25

D) 2025–26 

  • The Cabinet approved the continuation of the National Export Insurance Account (NEIA) scheme. The Government has announced an infusion of Rs 1,650 crore grant–in–aid over five years from FY 2021–2022 to FY 2025–2026. The Cabinet also approved the listing of Export Credit Guarantee Corporation Ltd. (ECCG), an unlisted CPSE, on the stock exchange. Rs 4,400 crore will be invested in ECGC Ltd in five years, starting from the financial year 2021–22.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!