Tnpsc

7th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

7th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 7th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘ZAPAD 2021’ என்ற பெயரில் பன்னாட்டு இராணுவப்பயிற்சி நடைபெறுகிற நாடு எது?

அ) ரஷ்யா 

ஆ) சீனா

இ) இலங்கை

ஈ) இந்தியா

  • செப்.3-16 வரை ரஷ்யாவின் நிஷ்னியில் நடைபெறும் ‘ZAPAD-2021’ என்ற பன்னாட்டு பயிற்சியில் இந்திய இராணுவம் பங்கேற்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த இரண்டு வாரகால இராணுவப்பயிற்சி. யூரேசியா மற்றும் தெற்காசியாவிலிருந்து 10க்கும் மேற்பட்ட நாடுகள் இப்பயிற்சியில் பங்கேற்கின்றன. இப்பயிற்சியில் சீனாவும் பாகிஸ்தானும் பார்வையாளர் -களாக பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ராணுவத்தின் சார்பாக 200 பேர்கொண்ட ஒரு குழு இப்பயிற்சியில் பங்கேற்கிறது.

2. மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளவர் யார்?

அ) J B மோகபத்ரா 

ஆ) இராஜேஷ் தாமோர்

இ) பிரமோத் Y தேவிகர்

ஈ) தீபா ரசல்

  • மூத்த அதிகாரியான J B மோகபத்ரா மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 1985-தொகுதி இந்திய வருவாய் சேவை அதிகாரியான மோகபத்ரா, தற்போது வருமான வரித்துறையின் கொள்கையை உருவாக்கும் குழுவில் உறுப்பினராக உள்ளார். அமைச்சரவை நியமனக்குழுவானது CBDT’இன் தலைவராக மோகபத்ரா அவர்களை நியமிக்க ஒப்புதலளித்துள்ளது.

3. துளிர்நிறுவனங்கள் துறையை ஊக்குவிப்பதற்காக பொதுத்துறை -தனியார்துறை கூட்டாண்மையின் கீழ், ‘புத்தாக்க திட்டம்’ ஒன்றை தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ) தெலுங்கானா

ஆ) பஞ்சாப் 

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) கேரளா

  • துளிர் நிறுவனங்கள் துறையை மேம்படுத்துவதற்காக முதலமைச்சர் அமரீந்தர் சிங், பொதுத்துறை – தனியார்துறை கூட்டாண்மையின் கீழ், ‘புத்தாக்க திட்டம்’ (Innovation Mission-IMPunjab) ஒன்றை தொடங்கினார். துளிர் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு உலக முதலீட்டாளர்களையும் நிபுணர்களையும் கொண்டுவருவதை இது தனது நோக்கமாகக் கொண் -டுள்ளது. வலுவான அரசாங்க ஆதரவுடன் தனியார் துறையால் இந்தப் பணி விரைவுபடுத்தப்படும்.

4. நிதி அமைச்சகத்தின் சமீப தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில், எவ்வளவு GST வரி வருவாய் வசூலிக்கப்பட்டுள்ளது?

அ) `88,000 கோடி

ஆ) `98,000 கோடி

இ) `1,12,000 கோடி 

ஈ) `1,34,000 கோடி

  • 2021 ஆகஸ்ட் மாதம் வசூலிக்கப்பட்ட மொத்த GST வருவாய் `1,12,020 கோடியாகும். 2021 ஆகஸ்ட் மாத GST வருவாய், கடந்தாண்டின் இதே கால GST வருவாயைவிட 30% அதிகம். இந்த மாதத்தில், உள்நாட்டு பரிவர்த்தனை வருவாய், கடந்த ஆண்டின் இதே மாதத்தைவிட, 27% அதிகம். கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத GST வசூல் `1 இலட்சம் கோடி இலக்கை கடந்துள்ளது.

5. “Ubreathe Life” என்ற உலகின் முதல் ‘தாவர அடிப்படையிலான’ ஸ்மார்ட் வளிதூய்மையாக்கியை, கீழ்க்காணும் எந்த நிறுவனத்தின் துளிர் நிறுவனம் உருவாக்கியுள்ளது?

அ) ஐஐடி-மெட்ராஸ்

ஆ) ஐஐடி-ரோபர் 

இ) ஐஐஎஸ்சி

ஈ) என்ஐவி

  • உலகின் முதல் ‘தாவர அடிப்படையிலான’ ஸ்மார்ட் வளிதூய்மையாக்கி ஒன்றை உருவாக்கியுள்ளதாக IIT ரோபரின் ஒரு துளிர் நிறுவனம் கூறியுள்ளது. “Ubreathe Life” என்று பெயரிடப்பட்ட இதனை, அர்பன் ஏர் ஆய்வகம் உருவாக்கியுள்ளது. இது, கட்டடங்களின் உட்புறங்களில், வளி சுத்திகரிப்பு செயல்முறையை மேம்படுத்துகிறது. ‘நகர்ப்புற மூணாறு விளைவு’ என்றவொரு தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது. ‘பைட்டோரெமிடேஷன்’ என்பது தாவரங்கள் காற்றிலிருந்து மாசுக்களை திறம்பட அகற்றும் ஒரு செயல்முறையாகும்.

6. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் (முதல் டோஸ்) தடுப்பூசி செலுத்திய முதல் இந்திய மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) இமாச்சல பிரதேசம் 

இ) இராஜஸ்தான்

ஈ) அஸ்ஸாம்

  • பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை COVID தடுப்பூசியை செலுத்திய நாட்டின் முதல் மாநிலமாக இமாச்சல பிரதேசம் மாறியுள்ளது. ஆகஸ்ட்.31 நிலவரப்படி, இந்தியா 50 கோடி ‘முதல் டோஸ்’ மற்றும் 15 கோடி ‘இரண்டாவது டோஸ்’ என்ற இலக்கை எட்டியுள்ளது. மொத்த செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 65 கோடியை தாண்டியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் இரு நாட்களில், தலா ஒவ்வொரு நாளிலும் 1 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கி இந்தியா சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

7. UNEP’இன்படி, எந்த வகை பெட்ரோல், உலகத்திலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது?

அ) ஈயஞ்சேர் பெட்ரோல் 

ஆ) மெழுகு பெட்ரோல்

இ) உயர் ஆக்டேன்கொண்ட பெட்ரோல்

ஈ) உயர் செடேன்கொண்ட பெட்ரோல்

  • ஐநா சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) அண்மையில் ஈயஞ்சேர் பெட்ரோலின் பயன்பாடு உலகிலிருந்து ஒழிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது மனித உயிர்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது; இது உலகளவில் 1.2 மில்லியன் முன்கூட்டிய மரணங்களைத் தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • குறைந்த தரமுடைய பெட்ரோலின் ஆக்டேன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக அதில் ஈயம் சேர்க்கப்படுகிறது. அந்த ஈயமானது எந்திர செயல்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது.

8. ‘ஹரா பரா’ என்ற பெயரில் டிரோன் அடிப்படையிலான காடு வளர்ப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ) குஜராத்

ஆ) பஞ்சாப்

இ) மணிப்பூர்

ஈ) தெலுங்கானா 

  • தெலுங்கானா மாநில அரசு அண்மையில் ‘ஹரா பரா’ என்ற பெயரிலான டிரோன் அடிப்படையிலான காடு வளர்ப்புத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தைத் தொடங்க, ஐதராபாத்தைச் சார்ந்த டிரோன் தொழில்நுட்ப துளிர் நிறுவனமான மருத் டிரோன்ஸுடன் தெலுங்கானா மாநில அரசு கூட்டுசேர்ந்துள்ளது. இத்திட்டத்தின்கீழ், தெலுங்கானாவின் 33 மாவட்டங்களிலும் உள்ள காடுகளில் 12,000 ஹெக்டேர் பரப்பில் 50 இலட்சம் மரங்களை நடும்.
  • ‘Seedcopter’ எனப்பெயரிடப்பட்ட இது, உள்ளூர் பெண்கள் மற்றும் நலச் சமூகங்களால் விதைபந்துகளைத் தயாரிப்பதை உள்ளடக்கியது; அவை, இலக்குவைக்கப்பட்ட பகுதிகளில் டிரோன்கள் வழியாக விதைக்கப்படும்.

9. சமீபத்தில் ‘நாடோடி விழாவை’ நடத்திய இந்திய மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் எது?

அ) லடாக் 

ஆ) சிக்கிம்

இ) அந்தமான் & நிக்கோபார் தீவுகள்

ஈ) கேரளா

  • லடாக்கின் துணைநிலை ஆளுநர் R K மாத்தூர், சமீபத்தில் கிழக்கு லடாக்கின் சாங்தாங் பகுதியில் உள்ள கோர்சோக் புவில் இரண்டு நாள் நடைபெறும் லடாக் நாடோடி விழாவை தொடங்கிவைத்தார். இந்த விழா, லடாக் கலாச்சார அகாதமியால் லடாக் சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இது சாங்தாங் பிராந்தியத்தின் தனித்துவமான கலாச்சாரத்தை முன்னி -லைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சாங்தாங்கி என்பது லடாக்கை பூர்வீகமாகக்கொண்ட ஒரு காஷ்மீர் ஆட்டினமாகும். இதனை இப்பகுதியில் வாழும் நாடோடி இனக்குழுக்கள், அதிலிருந்து பெறப்படும் சிறந்த தரமான ‘பஷ்மினா கம்பளி’க்காக வளர்க்கின்றனர்.

10. ‘Eat Right Station’ சான்றிதழ் என்பது கீழ்காணும் எந்த அமைப்பின் முன்னெடுப்பாகும்?

அ) FAO

ஆ) FSSAI 

இ) NABARD

ஈ) FCI

  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையமானது (FSSAI), ரயில் நிலையங்களுக்கு ‘Eat Right Station’ என்ற சான்றிதழை வழங்குகிறது. FSSAI உடன் இணைந்த ஒரு மூன்றாந்தரப்பு தணிக்கை நிறுவனம் 1 முதல் 5 வரையுள்ள மதிப்பீடுகளுடன் சான்றிதழை வழங்குகிறது.
  • பயணிகளுக்கு உயர்தரமான, சத்தான உணவுகளை வழங்கி வருவதற்காக, இந்திய இரயில்வேயின் சண்டிகர் ரயில் நிலையத்துக்கு ‘Eat Right Station’ என்ற 5☆ தரச்சான்றிதழை FSSAI வழங்கியுள்ளது. உணவு மற்றும் சுகாதார நடவடிக்கைகளில் தரமான நடைமுறைகளை பின்பற்றும் ரயில் நிலையங்களுக்கு FSSAI இச்சான்றிதழை வழங்குகிறது. பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் நலமான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய, ரயில்வே நிலையங்களில் முன்மாதிரியான முயற்சிகளை இந்த 5☆ தரமதிப்பீடு குறிக்கிறது.
  • சண்டிகர் ரயில் நிலையம், பயணிகளுக்கு உயர்தர, சத்தான உணவை வழங்கியதற்காக 5☆ ‘Eat Right Station’ சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழ் FSSAI’இன் ‘Eat Right India’ இயக்கத்தின் ஒருபகுதியாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மின்னுற்பத்தி திட்டத்துக்கு ஆலோசனைபெற நடுவணரசு நிறுவனத் -துடன் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு மின்னுற்பத்தி, பகிர்மான கழகத்துக்கும், இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்துக்கும் இடையே, தமிழ்நாட்டில் மின் உற்பத்தித் திறனை மேம்படுத்த புதிய திட்டங்கள், நவீன தொழில்நுட்ப முறைகளை கையாளுதல் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

`1,32,500 கோடி நிதி தேவை

இத்திட்டங்களை செயல்படுத்த `1,32,500 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், மரபுசாரா எரிசக்தி துறையில் திறன் படைத்த நிறுவனங்கள் கையாளும் உத்திகளை ஆய்வுசெய்து ஆலோசனைகள் வழங்கும். மேலும், இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், சந்தை ஆய்வு, திட்டமேம்படுத்துதல், ஒப்பந்தப் புள்ளிகள் மேலாண்மை, அமலாக்கம் ஆகியவை தொடர்பாக தனது மேம்பட்ட ஆலோசனைகளை தமிழ்நாடு மின்னுற்பத்தி, பகிர்மானக் கழகத்துக்கு வழங்கும்.

2. ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரிக்கு அகில இந்திய விருது

சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரிக்கு அகில இந்திய அளவில் 2ஆவது இடத்திற்கான தூய்மை மற்றும் நேர்த்தி விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் தங்கள் கல்வி வளாகங்களை தூய்மை, பசுமை வளாகங்களாக மேம்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் விருதுகள் வழங்கி ஊக்குவித்து வருகின்றது.

நாடு முழுவதும் 326 கல்வி நிறுவனங்களில் சாய்ராம் பொறியியல் கல்லூரி 2ஆம் இடத்திற்கான விருதைப் பெற்றுள்ளது.

3. பெரியார் பிறந்த செப்.17ஆம் தேதி சமூகநீதி நாளாக அறிவிப்பு

‘பெரியார்’ ஈ வெ இராமசாமியின் பிறந்தநாள் (செப்.17) ஆண்டுதோறும் சமூகநீதி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.

4. காரைக்குடி CECRI ஆராய்ச்சியாளருக்கு இளம் விஞ்ஞானி விருது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆய்வக (CECRI) ஆராய்ச்சியாளர் கிரிபாவுக்கு, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம் (CSIR) 2021ஆம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானி விருதை அறிவித்துள்ளது. இரசாயன அறிவியல் துறையில் இவராற்றிய பங்களிப்பிற்காக இவ்விருது அளிக்கப்படுகிறது. இவ்விருது வரும் செப்.26 அன்று CSIR நிறுவன நாள் விழாவில் வழங்கப்படும்.

உணவுப் பொருள்கள் கெடுவதற்குமுன் அறிந்துகொள்ளவும், மனித உடலில் ஏற்படும் நோய்களை கண்டறிந்து கொள்ளும் வகையில் இரசாயனத்தைக்கொண்டு ‘திரவ-திரவ இடைமுகம்’ என்ற கண்டுபிடிப் -புக்காகவும் இவ்விருதை பெற்றுள்ளார்.

5. நிலவை 9,000 முறை சுற்றிவந்துள்ள ‘சந்திரயான்-2’

நிலவை ஆய்வுசெய்வதற்காக இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட ‘சந்திரயான்-2’ விண்கலம், நிலவை 9,000’க்கும் அதிகமான முறை சுற்றிவந்துள்ளது என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய (ISRO) தலைவர் கே சிவன் கூறினார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுவரும் விண்கலத்தின் படம்பிடிக்கும் கருவியும் அறிவியல் உபகரணங்களும் நிலவுகுறித்த அரிய தகவல்களை அளித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலவை சுற்றிவந்து ஆய்வு செய்துவரும் ‘சந்திரயான்-2’ வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்வதை குறிக்கும் வகையில் ‘நிலவு அறிவியல் பயிலரங்கம் 2021’ என்ற தலைப்பிலான இரண்டு நாள் பயிலரங்கு ISRO சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

6. இந்தியா-ஆஸ்திரேலியா இணைந்து ‘ஆஸ்இண்டெக்ஸ்’ என்னும் கூட்டு இராணுவப்பயிற்சி

ஆஸ்திரேலியாவின், ‘ராயல் ஆஸ்திரேலியன்’ கடற்படை, இந்தியாவின் கடற்படையுடன் இணைந்து AUSINDEX என்னும் கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளன. இந்தப் பயிற்சி ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்திய கடற்பகுதியில் நடைபெறுகிறது. AUSINDEX கூட்டு இராணுவப் பயிற்சி 2015 முதல் நடந்து வருகிறது. கடந்த 2019’இல் நீர்மூழ்கி கப்பல் முறியடிப்பு பயிற்சியை இந்தியா இந்த ஒத்திகையின்போது பெற்றது குறிப்பிடத்தக்கது. அண்மையில் குவாமில் நடந்த மலபார்-21 பயிற்சியின் நீட்சியாக இந்தப் பயிற்சி மீண்டும் நடக்கிறது.

7. இந்தியாவில் ஈயத்தால் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்த ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு

சென்னை ஐஐடி மற்றும் கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் ஈய மாசுபாட்டைக் குறைக்க உதவும் கொள்கைகளையும் கருவிகளையும் கண்டறிய ஓர் ஆய்வு நடத்துகின்றனர். ஈய மாசுபாடு மக்களின் மன மற்றும் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிப்பதுடன் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும் என்பதால் ஈயத்தை மறுசுழற்சி செய்வது குறித்த ஆய்வை இரு கல்விநிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் 27.5 கோடி சிறார்கள் உள்பட, உலகில் மூன்றில் ஒருபங்கு சிறார்கள் ஈயத்தால் பாதிக்கப்படுவதாக UNICEF அறிக்கை தெரிவிக்கிறது. ஈயமாசுபாட்டாஸ் பாதிக்கப்படுவர் ரத்தத்தில் ஈயத்தின் அளவு அதிகமாகி, புத்திக்கூர்மை, கவனம் ஆகியவற்றைப் பாதிப்பதுடன், இரத்த சோகை, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களும் ஏற்படுகின்றன.

ஈயத்தை மறுசுழற்சி செய்யும் தொழிலாளர்கள், முறையான வழியில் மறு சுழற்சி செய்ய பயிற்சியில்லாமல், ஈயம்-அமில பேட்டரிகளை உடைத்து, நிலத்திலும் சுற்றுப்புறங்களிலும் அமிலம் மற்றும் ஈயமாசை உருவாக்குகி -ன்றனர். மேலும், திறந்த உலைகளில் ஈயத்தை உருக்குவதால் விஷ வாயுக்கள் வெளியேறி காற்றில் கலக்கின்றன. இது, பல்வேறு தீங்கான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

செலவு குறைவான வழிமுறைகளைப் பின்பற்றும் முறைசாராச் செயல்முறைகளும் அதனால் ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகளும் வளரும் நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன.

இதைத்தடுக்க கடுமையான சட்ட விதிமுறைகள் இல்லாமையும், மாற்று முறைகள் அதிக செலவு உள்ளதும் தவறான வழிமுறைகள் தொடர்வதற் -கு காரணங்களாகக் கூறப்படுகின்றன. முறைசார்ந்த மறுசுழற்சித் துறையில் வரியைக் குறைத்தல் மற்றும் மறுசுழற்சி – மறு உற்பத்தித் துறைகளுக்கு மானியம் வழங்குதல்போன்ற கொள்கைகள் ஈய மாசுபாட்டைக் குறைக்க உதவும் என்று இந்த ஆய்வு பரிந்துரைத்தது. அதே சமயத்தில், முறை சார்ந்த ஈய மறு உற்பத்தித் துறைக்கு அதிக மானியம் வழங்கப்படுவது, முறைசாரா மறுசுழற்சித்துறை முடங்க வழி வகுக்கும் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

8. ஓவல் டெஸ்ட்: இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐந்து ஆட்டங்கள்கொண்ட தொடரில் இந்தியா தற்போது 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

பும்ரா ‘100’ விக்கெட்

இந்த ஆட்டத்தின்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். அவர் தனது 24ஆவது ஆட்டத்தில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். முன்னதாக கடந்த 1980’இல் இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் 25 டெஸ்டுகளில் 100 விக்கெட்டுகள் எட்டியதே விரைவானதாக இருந்தது.

50 ஆண்டுகளில் முதல் வெற்றி

ஓவல் மைதானத்தில் நடைபெறும் டெஸ்டில் இங்கிலாந்தை இந்தியா வீழ்த்தியது, கடந்த 1971ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல்முறை ஆகும். அந்த ஆண்டில் அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. அதன்பிறகு ஓவலில் விளையாடிய எட்டு ஆட்டங்களில் இந்தியா வென்றதில்லை. அதில் ஐந்து ஆட்டங்கள் டிரா ஆக, மூன்று ஆட்டங்களில் இங்கிலாந்து வென்றிருந்தது. தற்போது 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஓவலில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது இந்தியா.

1. The multi–nation military exercise named ‘ZAPAD 2021’ is held in which country?

A) Russia 

B) China

C) Sri Lanka

D) India

  • Indian Army is participating in Exercise ZAPAD 2021, a multination exercise at Nizhniy, Russia from 3 to 16 September. The two–week military exercise named ‘ZAPAD 2021’ aimed at boosting anti–terror cooperation. More than a dozen countries from Eurasia and South Asia will also participate in the same exercise. China and Pakistan are also expected to take part in the exercise as observers. A contingent of 200 personnel of the Indian Army will participate in an exercise.

2. Who has been appointed as the Chairman of the Central Board of Direct Taxes?

A) J B Mohapatra 

B) Rajesh Damor

C) Pramod Y Devikar

D) Deepa Rasal

  • Senior bureaucrat J B Mohapatra has been appointed the chairman of the Central Board of Direct Taxes (CBDT). Mohapatra, is a 1985–batch Indian Revenue Service (Income Tax) officer, is currently the member in the board that frames the policy for the Income Tax department. The Appointments Committee of the Cabinet (ACC) has approved the appointment of J B Mohapatra, as the Chairman of CBDT.

3. Which state has launched ‘Innovation Mission’, a public–private partnership, to boost start–up sector?

A) Telangana

B) Punjab 

C) Andhra Pradesh

D) Kerala

  • Chief Minister Amarinder Singh launched ‘Innovation Mission Punjab’ (IMPunjab), a public–private partnership, to boost start–up sector. The Mission aims to bring in global investors and experts to promote start–ups. The mission will be accelerated by the private sector with strong government backing.

4. What is the GST Revenue collected in the month of August, as per the recent data from Finance Ministry?

A) Rs 88000 Cr

B) Rs 98000 Cr

C) Rs 1,12,000 Cr 

D) Rs 1,34,000 Cr

  • As per the recent data from the Finance Ministry, GST revenue touched Rs 1,12,020 crore. The revenue remained above Rs 1 trillion–mark for the second straight month in August.
  • This is 30 percent higher than the collection in the year–ago period, but lower than Rs 1.16 trillion collected in July 2021. During August, the revenues from domestic transactions were 27 percent higher than the revenues from these sources during the same month last year.

5. “Ubreathe Life”, the world’s first ‘Plant based’ smart air–purifier, has been developed by start–up of which institution?

A) IIT–Madras

B) IIT–Ropar 

C) IISc

D) NIV

  • A start–up company of IIT Ropar has claimed that it has developed the world’s first ‘Plant based’ smart air–purifier. Named the “Ubreathe Life”, has been developed by Urban Air Laboratory. The living–plant–based air purifier amplifies the air purification process in indoor spaces. The technology used in this product is ‘Urban Munnar Effect’. Phytoremediation is a process by which plants effectively remove pollutants from the air.

6. Which is the first Indian state to vaccinate its entire adult population (first dose)?

A) Tamil Nadu

B) Himachal Pradesh 

C) Rajasthan

D) Assam

  • Himachal Pradesh has become the first State in the country where everyone above 18 years has been administered with at least one dose of the Covid–19 vaccine.
  • As of August 31, India has also crossed the mark of 50 crore first doses and 15 crore second doses, with total vaccinations crossing 65 crores. India also set a record by providing more than 1 Crore vaccinations on a single day, for two days in the month of August.

7. According to UNEP, which variant of petrol has been eradicated from the globe?

A) Leaded Petrol 

B) Waxed Petrol

C) High Octane Petrol

D) High Cetane Petrol

  • The United Nations Environment Programme (UNEP) has recently declared that the use of leaded petrol has been eradicated from the globe. This is seen as a major milestone in safeguarding human lives and environment, since this is expected to prevent 1.2 million premature deaths globally. Lead is added to low quality petrol to increase its octane number and hence enhance engine performance.

8. Which Indian state has launched a drone–based afforestation project, named ‘Hara Bhara’?

A) Gujarat

B) Punjab

C) Manipur

D) Telangana 

  • The Telangana government has recently launched a drone–based afforestation project, named ‘Hara Bhara’. The state has partnered with Marut Drones, a Hyderabad–based drone technology start–up, to launch the project.
  • Under the initiative, the state government will plant 50 lakh trees across 12,000 hectares of land in forests in all the 33 districts of Telangana. Named the ‘Seedcopter’, it involves the preparation of the seed balls by the local women and welfare communities, which are dispersed via drones in the targeted areas.

9. Which Indian state/UT recently hosted the ‘Nomadic Festival’?

A) Ladakh 

B) Sikkim

C) Andaman and Nicobar Islands

D) Kerala

  • Ladakh Lieutenant Governor RK Mathur recently inaugurated a 2–Day Ladakh Nomadic Festival at Korzok Phu, Changthang region of eastern Ladakh. The festival is organised by Ladakh Cultural Academy in collaboration with Ladakh Tourism Department.
  • It aims to highlight the distinctive culture of Changthang region. The Changthangi is a breed of cashmere goat native to Ladakh, reared by the nomads of the region for fine–grade Pashmina wool.

10. ‘Eat Right Station’ certification is an initiative of which institution?

A) FAO

B) FSSAI 

C) NABARD

D) FCI

  • ‘Eat Right Station’ certification is awarded by the Food Safety and Standards Authority of India (FSSAI), to Railway Stations. FSSAI empanelled third–party audit agency concludes the certification, with ratings from 1 to 5. The 5–star rating indicates excellent efforts by stations to ensure safe and hygienic food is available to passengers. Chandigarh Railway Station was awarded a 5– star ‘Eat Right Station’ certification for providing high–quality, nutritious food to passengers. The certification is part of the ‘Eat Right India’ movement of FSSAI.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!