Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Science Questions

7th Std Science Lesson Wise Questions in Tamil – Part 1

7th Science Lesson 4 Questions in Tamil

4] அணு அமைப்பு

1) நியூக்ளியான்கள் என அழைக்கப்படும் துகள் எவை?

A) புரோட்டான்

B) எலக்ட்ரான்

C) நியூட்ரான்

D) A&C

விளக்கம்: அணுக்கருவில் காணப்படும் இரண்டு வகை துகள்களான புரோட்டானும், நியூட்ரானும் சேர்ந்து நியூக்ளியான்கள் என அழைக்கப்படுகிறது. அணுக்கருவின் நிறையானது நியூக்ளியான்களின் நிறையை சார்ந்தது.

2) எலக்ட்ரானை கண்டறிந்தவர் யார்?

A) ரூதர்போர்டு

B) தாம்சன்

C) போல்ட்

D) ஜேம்ஸ் சாட்விச்

விளக்கம்: எலக்ட்ரானை கண்டறிந்தவர் தாம்சன் ஆவார். இவர் அணுவிலிருந்து எலக்ட்ரானை பிரித்தெடுத்ததற்காக 1909 ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.

3) ஒரு அணுவில் காணப்படும் புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களின் மொத்த நிறை அந்த அணுவின் _______ என அழைக்கிறோம்?

A) நிறை எண்

B) அணு எண்

C) குவாண்டம்

D) அணுவியல் எண்

விளக்கம்: ஒரு அணுவில் காணப்படும் எலக்ட்ரான் அல்லது புரோட்டான்களின் மொத்த நிறையே அந்த அணுவின் அணு எண் எனப்படுகிறது, ஒரு அணுவின் அணுஎண் தெறிந்தால் அதில் உள்ள புரோட்டான் அல்லது எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை நாம் அறியலாம்.

4) கூற்று: ஓர் அணு மின்சுமையற்றது மேலும் நடுநிலையானது.

காரணம்: அணுக்கள் சம எண்ணிக்கையான புரோட்டான்களையும் எலக்ட்ரான்களையும் கொண்டுள்ளது.

A) கூற்று காரணம் இரண்டும் சரி

B) கூற்று சரி

C) காரணம் சரி

D) கூற்று காரணம் இரண்டும் தவறு

விளக்கம்: ஓர் அணு மின்சுமையற்றது மேலும் நடுநிலையானது. அணுக்கள் சம எண்ணிக்கையான புரோட்டான்களையும் எலக்ட்ரான்களையும் கொண்டுள்ளது.

5) ஓர் அணுவின் உட்கருவினை சுற்றிவரும் துகள் எவ்வாறு அழைக்கலாம்?

A) புரோட்டான்

B) நியூட்ரான்

C) எலக்ட்ரான்

D) A&C

விளக்கம்: ஓர் அணுவின் உட்கருவினை சுற்றிவரும் துகள் எலக்ட்ரான் என அழைக்கப்படுகிறது, இது எதிர் மின் சுமையுடையது உட்கருவை சுற்றி வெளி வட்டபாதையில் சுற்றிவருகிறது.

6) அணுக்கருவில் நேர் மின்னூட்டம் பெற்ற துகள் எது?

A) நியூட்ரான்

B) எலக்ட்ரான்

C) புரோட்டான்

D) குளுக்கான்

விளக்கம்: அணுக்கருவின் நேர் மின்னூட்டத்திற்கு காரணமான துகள் புரோட்டான் ஆகும். இவை அணுவில் நியூட்ரான்களுடன் இணைந்து காணப்படுகிறது.

7) நியூட்ரான்களை கொண்டிராத ஒரே ஒரு அணு எது?

A) ஹீலியம்

B) ஹைட்ரஜன்

C) ஆக்ஸிஜன்

D) கார்பன்

விளக்கம்: இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து தனிமத்தின் அணுக்களும் நியூட்ரான்களை கொண்டுள்ளது. ஆனால் ஹைட்ரஜன் அணு மட்டும் நியூட்ரான்களை கொண்டிருக்கவில்லை.

8) அணுக்கருவில் உள்ள மொத்த புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை எவ்வாறு அழைக்கலாம்?

A) நிறை எண்

B) அணு எண்

C) குவாண்டம் எண்

D) அணுவியல் எண்

விளக்கம்: அணுவில் உள்ள மொத்த புரோட்டான்களும் மற்றும் நியூட்ரான்களும் எண்ணிக்கையே அணுவின் நிறைஎண் என வரையறுக்கப்படுகிறது. ஒரு அணுவின் மொத்த நிறையும் இதில் அடங்கியுள்ளது.

9) கூற்று: ஓர் அணுவின் நிறையானது அதன் உட்கருவின் நிறையாகும்.

காரணம்: உட்கரு மையத்தில் அமைந்துள்ளது.

A) கூற்று காரணம் இரண்டும் சரி

B) கூற்று சரி

C) காரணம் சரி

D) கூற்று காரணம் இரண்டும் தவறு

விளக்கம்: ஓர் அணுவின் நிறையானது அதன் உட்கருவின் நிறையாகும். உட்கரு மையத்தில் அமைந்துள்ளது.

10) கார்பனின் இணைதிறன் 4 மற்றும் ஹைட்ரஜனின் இணைதிறன் 1 எனில் மீத்தேனின் மூலக்கூறு வாய்ப்பாடு என்ன?

A) CH3

B) CH4

C) CH6

D) NH3

விளக்கம்: மீத்தேன் ஆனது ஒரு கார்பன் அணுவுடன் நான்கு ஹைட்ரஜன் அணு வேதிப்பிணைப்பின் மூலம் இணைவதால் மீத்தேன் உருவாகிறது. இந்த மீத்தேன் வாயுவானது இயற்கை வாயுவாகும்.

11) பருப்பொருளின் அடிப்படை அலகு _______ ஆகும்?

A) தனிமம்

B) அணு

C) மூலக்கூறு

D) எலக்ட்ரான்

விளக்கம்: பருப்பொருளின் அடிப்படை அலகு அணு ஆகும். இந்த அணுவினுள் மற்ற துகள்களான புரோட்டான், எலக்ட்ரான் மற்றும் நியூட்ரான் போன்ற துகள்கள் காணப்படுகிறது.

12) ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் பெற்றுள்ள தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) ஐசோடோப்புகள்

B) ஐசோபார்கள்

C) ஐசோடோன்கள்

D) இணைதிறன் எலக்ட்ரான்கள்

விளக்கம்: ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டுள்ள தனிமங்களை ஐசோடோப்புகள் என அழைக்கப்படுகிறது, இதற்கு உதாரணம் ஹைட்ரஜன் ஐசோடோப்பு

13) அணுவில் காணப்படும் எலக்ட்ரானின் மின்சுமை என்ன மேலும் அதன் நிறை எவ்வளவு?

A) எதிர் மின்சுமை, 1.6726 X 10-27

B) நேர் மின்சுமை, 1.6726 X 10-27

C) எதிர் மின்சுமை, 9.1093 X 10-31

D) நேர் மின்சுமை, 9.1093 X 10-31

விளக்கம்: அணுவில் காணப்படும் எலக்ட்ரானின் மின்சுமையானது எதிர் மின்சுமையுடையது மேலும் அதன் நிறையானது ஏறத்தாழ 6.1093 X 10-31 கிகி ஆகும்.

14) ஓர் தனிமம் தன்னைப்போன்ற மற்ற அணுக்களை கொண்ட தனிமத்துடனோ அல்லது வேறு வகையான அணுக்களை கொண்ட தனிமத்துடனோ இணைவதை இதுவே தீர்மானிக்கிறது?

A) தனிமத்தின் மின்சுமை

B) தனிமத்தின் இணைதிறன்

C) தனிமத்தின் ஐசோடோப்புகள்

D) நியூட்ரான்களின் எண்ணிக்கை

விளக்கம்: ஓர் தனிமம் தன்னைப்போன்ற மற்ற அணுக்களை கொண்ட தனிமத்துடனோ அல்லது வேறு வகையான அணுக்களை கொண்ட தனிமத்துடனோ இணைவதை அத்தனிமத்தின் இணைதிறனே தீர்மானிக்கிறது.

15) 1. ஒரு இணைதிறன் கொண்ட தனிமம் – ஆக்ஸிஜன் மற்றும் பெரிலியம்

2. இரு இணைதிறன் கொண்ட தனிமம் – நைட்ரஜன் மற்றும் அலுமினியம்

3. மூன்று இணைதிறன் கொண்ட தனிமம் – கார்பன்

4. நான்கு இணைதிறன் கொண்ட தனிமம் – ஹைட்ரஜன் மற்றும் சோடியம்

A) 2 1 4 3

B) 2 4 1 3

C) 4 1 2 3

D) 1 2 4 3

விளக்கம்: ஒரு இணைதிறன் கொண்ட தனிமம் – ஹைட்ரஜன் மற்றும் சோடியம்

2. இரு இணைதிறன் கொண்ட தனிமம் – ஆக்ஸிஜன் மற்றும் பெரிலியம்

3. மூன்று இணைதிறன் கொண்ட தனிமம் – நைட்ரஜன் மற்றும் அலுமினியம்

4. நான்கு இணைதிறன் கொண்ட தனிமம் – கார்பன்

16) அணுக்கருவை சுற்றிவரும் அடிப்படை துகள்கள் எவ்வாறு அழைக்கிறோம்?

A) அணு

B) நியூட்ரான்

C) எலக்ட்ரான்

D) புரோட்டான

விளக்கம்: அணுக்கருவை சுற்றிவரும் அடிப்படை துகள்கள் எலக்ட்ரான் ஆகும். இவை எதிர் மின்னூட்டம் கொண்டு அணுக்கருவை சுற்றிவருகிறது.

17) மெக்னீசியம் அணுவின் வெளி வட்டபாதையில் 2 எலக்ட்ரான்கள் காணப்படுகிறது எனில் மெக்னீசியம் அணுவின் இணைதிறன் எவ்வளவு?

A) 2

B) 4

C) 5

D) 11

விளக்கம்: மெக்னீசியம் அணுவின் வெளிவட்ட பாதையில் உள்ள 2 எலக்ட்ரான்கள் இணைதிறன் எலக்ட்ரான்கள் என அழைக்கபடுகிறது எனவே மெக்னீசியத்தின் இணைதிறன் 2 ஆகும.இணைதிறன் எலக்ட்ரான்களே வேதிவினையில் ஈடுபடுகிறது.

18) 1. இணைதிறன் – Fe

2. மின்சுமையற்ற பொருள் – புரோட்டான்

3. இரும்பு – வெளிவட்டபாதையில் காணப்படும் எலக்ட்ரான்

4. ஹைட்ரஜன் – நியூட்ரான்

5. நேர்மின் சுமைகொண்ட துகள் – ஓர் இணைதிறன்

A) 3 4 1 5 2

B) 4 1 5 3 2

C) 2 5 3 1 4

D) 3 4 2 1 5

விளக்கம்: இணைதிறன் – வெளிவட்டபாதையில் காணப்படும் எலக்ட்ரான்

மின்சுமையற்ற பொருள் – நியூட்ரான்

இரும்பு – Fe

ஹைட்ரஜன் – ஓர் இணைதிறன்

நேர்மின் சுமைகொண்ட துகள் – புரோட்டான்

19) ஹைட்ரஜன் அணு எத்தனை ஐசோடோப்புகளை கொண்டுள்ளது?

A) 2

B) 3

C) 4

D) 1

விளக்கம்: ஹைட்ரஜன் அணு 3 ஐசோடோப்புகளை கொண்டுள்ளது, ஹைட்ரஜன் அணுவின் ஐசோடோப்புகளாவன ஹைட்ரஜன், ட்டியூட்ரியம் மற்றும் டிரிட்டியம்

20) ஒரே நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்டுள்ள அணுக்களை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) ஐசோடோப்புகள்

B) ஐசோபார்கள்

C) ஐசோடோன்கள்

D) இணைதிறன் எலக்ட்ரான்கள்

விளக்கம்: ஒரே நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்டுள்ள அணுக்களை நாம் ஐசோபார்கள் என அழைக்கிறோம். இதற்கு எடுத்துக்காட்டு கால்சியம் -40 மற்றும் ஆர்கான் -40

21) 1. ஆக்ஸிஜன் அணுவின் இணைதிறன் – 4

2. நைட்ரஜன் அணுவின் இணைதிறன் – 1

3. குளோரின் அணுவின் இணைதிறன் – 2

4. கார்பன் அணுவின் இணைதிறன் – 3

A) 2 4 3 1

B) 4 1 2 3

C) 3 4 2 1

D) 3 2 1 4

விளக்கம்: ஆக்ஸிஜன் அணுவின் இணைதிறன் – 2

நைட்ரஜன் அணுவின் இணைதிறன் – 3

குளோரின் அணுவின் இணைதிறன் – 1

கார்பன் அணுவின் இணைதிறன் – 4

22) 1. ஒரு தனிமத்தின் அடிப்படை அலகு மூலக்கூறு ஆகும்.

2. எலக்ட்ரான்கள் நேர்மின்சுமை கொண்டவை.

3. ஓர் அணு மின்சுமையற்ற நடுநிலைத் தன்மையை பெற்றிருக்கும்.

4. அணுவின் உட்கருவை சுற்றி புரோட்டான்கள் காணப்படுகிறது.

A) 1 3 சரி

B) 1 2 4 சரி

C) 1 3 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: ஒரு தனிமத்தின் அடிப்படை அலகு மூலக்கூறு ஆகும். எலக்ட்ரான்கள் எதிர்மின்சுமை கொண்டவை.

ஓர் அணு மின்சுமையற்ற நடுநிலைத் தன்மையை பெற்றிருக்கும். அணுவின் உட்கருவை சுற்றி எலக்ட்ரான்கள் காணப்படுகிறது.

23) 1. புரோட்டான் – 1.6749 X 10-27

2. எலக்ட்ரான் – 1.6726 X 10-27

3. நியூட்ரான் – 9.1093 X 10-31

A) 1 3 2

B) 2 3 1

C) 2 1 3

D) 3 2 1

விளக்கம்: புரோட்டான் – 1.6726 X 10-27

எலக்ட்ரான் – 9.1093 X 10-31

நியூட்ரான் – 1.6749 X 10-27

24) நமது உடம்பில் எத்தனை பில்லியன் செல்கள் காணப்படுகிறது?

A) 6 பில்லியன்

B) 7 பில்லியன்

C) 8 பில்லியன்

D) 10 பில்லியன்

விளக்கம்: நமது உடம்பில் ஏறத்தாழ 7 பில்லியன் செல்கள் காணப்படுகிறது, ஒவ்வொரு வருடமும் நமது உடம்பில் உள்ள செல்களில் 98 சதவிகிதம் செல்கள் இறந்து புது செல்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.

25) 1. அணு என்பது ஒரு நடுநிலை துகள் ஆகும்.

2. அணுவின் கொள்கைகளை டால்டன் முதல் முதலில் 1808 ல் வெளியிட்டார்

3. ரூதர்போர்டின் அணுமாதிரி ஏற்கத்தக்க அளவில் இருந்தது.

4. டால்டன் கொள்கைபடி அணுவானது கோள வடிவமுடைய மின்தன்மையற்றது.

A) 1 3 சரி

B) 1 2 4 சரி

C) 1 3 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: அணு என்பது ஒரு நடுநிலை துகள் ஆகும். அணுவின் கொள்கைகளை டால்டன் முதல் முதலில் 1808 ல் வெளியிட்டார். ரூதர்போர்டின் அணுமாதிரி ஏற்கத்தக்க அளவில் இருந்தது. டால்டன் கொள்கைபடி அணுவானது கோள வடிவமுடைய மின்தன்மையற்றது.

26) அணு அமைப்பு பற்றிய பரிமாணகோட்பாட்டில் எத்தனை கொள்கைகள் அணு பற்றி வெளிவந்துள்ளது?

A) 3

B) 4

C) 5

D) 6

விளக்கம்: அணு பற்றிய பரிமான கோட்பாட்டின் படி அணுக்கொள்கையானது 5 கொள்கைகளாக வெளிவந்துள்ளது அவையாவன

டால்டன் அணுகொள்கை 1803

ஜே ஜே தாம்சன் அணுக்கொள்கை 1904

ரூதர்போர்டின் அணுக்கொள்கை 1911

போரின் அணுக்கொள்கை 1913

சிராடிங்கர் அணுக்கொள்கை 1926

27) ஒரு நானோ மீட்டர் என்பது எத்தனை மீட்டர்?

A) 1 X 109

B) 1 X 108

C) 1 X 1011

D) 1 X 1015

விளக்கம்: ஒரு நானோமீட்டர் என்பது 1 X 109 ஆகும், இது மிகச்சிறிய நீளங்களை அளக்க உதவும் அலகாகும்.

28) 1. பென்சில் – 1 X 10-4மீ

2. தூசித் துகள் – 1 X 10-9 மீ

3. இரத்த சிவப்பணு – 1 X 10-2 மீ

4. அணு – 1 X 10-7 மீ

A) 1 2 4 3

B) 2 4 1 3

C) 3 4 1 2

D) 4 2 1 3

விளக்கம்: பென்சில் – 1 X 10-2 மீ

தூசித் துகள் – 1 X 10-7 மீ

இரத்த சிவப்பணு – 1 X 10-4மீ

அணு – 1 X 10-9 மீ

29) அணுவின் உட்கருவினை எந்த பொருள் சுற்றி வருகிறது?

A) புரோட்டான்

B) எலக்ட்ரான்

C) நியூட்ரான்

D) குவார்க்

விளக்கம்: அணுவின் உட்கருவினை எலக்ட்ரான்கள் சுற்றி வருகின்றன இது அணுவினை நீள் வட்டமாக எலக்ட்ரான் ஆற்றல் மட்டத்தில் சுற்றிவருகின்றன.

30) கூற்று: புரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை அணு எண் ஆகும்.

காரணம்: புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை நிறை எண்ணாகும்.

A) கூற்று காரணம் இரண்டும் சரி

B) கூற்று சரி

C) காரணம் சரி

D) கூற்று காரணம் இரண்டும் தவறு

விளக்கம்: புரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை அணு எண் ஆகும், புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை நிறை எண்ணாகும்.

Previous page 1 2 3 4 5 6 7 8Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!