8th & 9th December 2020 Current Affairs in Tamil & English

8th & 9th December 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

8th & 9th December 2020 Current Affairs in Tamil

நடப்பு நிகழ்வுகள்

1. இந்திய ரிசர்வ் வங்கியின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, தொடுதலற்ற அட்டையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கான புதிய வரம்பு என்ன?

அ. ரூ. 1000

ஆ. ரூ. 2000

இ. ரூ. 3000

ஈ. ரூ. 5000

 • தொடுதலற்ற அட்டையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைக்கான வரம்பை 2021 ஜனவரி.1 முதல் 2,000 ரூபாயிலிருந்து 5,000 ஆக உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, ரிசர்வ் வங்கியின் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகள் குறித்த அறிக்கையின் ஒரு பகுதியாகும். அட்டைகள் மற்றும் UPI ஆகியவற்றைப் பயன்படுத்தி தொடர்ச்சியான பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான வரம்பும் `5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

2. உறவுகளை வலுப்படுத்துவதற்காக, இந்தியாவுடன் ‘நட்பு சங்கம்’ என்றவொன்றை நிறுவவுள்ளதாக அறிவித்துள்ள நாடு எது?

அ. சவுதி அரேபியா

ஆ. ஓமான்

இ. பிரேசில்

ஈ. ஐக்கியப் பேரரசு

 • அண்மையில் மெய்நிகராக நடைபெற்ற இந்தியா-ஓமான் உரையாடலின்போது, ‘ஓமான்-இந்தியா நட்பு சங்கத்தை’ நிறுவவுள்ளதாக ஓமான் அறிவித்தது. மேற்கத்திய ஆசியாவில் வெளியுறவு அமைச்சகத்தின் தலைமையில் இதுபோன்றதொரு முயற்சி மேற்கொள்வது இது முதன்முறையாகும். 2019 டிசம்பரில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஓமான் நாட்டிற்கு சென்றிருந்தபோது, இந்தியாவும் ஓமானும் கடல் போக்குவரத்து குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

3. போதை மருந்துகள் தொடர்பான ஐநா ஆணையத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ. வியன்னா

ஆ. ஜெனிவா

இ. ரோம்

ஈ. வாஷிங்க்டன் D C

 • ஆஸ்திரியாவின் வியன்னாவை தலைமையிடமாகக் கொண்ட போதை மருந்துகள் தொடர்பான ஐநா ஆணையம் என்பது ஐநா பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் (ECOSOC) ஆணையங்களுள் ஒன்றாகும்.
 • அண்மையில், அவ்வாணையத்தின் மறுகூட்டப்பட்ட அமர்வின்போது, 53 உறுப்புநாடுகள், 1966ஆம் ஆண்டின் போதைப்பொருள் மீதான ஒற்றை தீர்மானத்தின் அட்டவணை IV’இலிருந்து கஞ்சாவை நீக்க வாக்களித்தன. அத்தீர்மானத்தில் அது கொடிய மற்றும் போதை மருந்து எனப்பட்டியலிடப்பட்டிருந்தது. இந்தியா உட்பட 27 உறுப்புநாடுகள் வாக்களித்தன.

4. DCOAS (உத்தி) என்பது கீழ்க்காணும் எந்த இந்திய ஆயுதப்படையில் உருவாக்கப்படவுள்ள புதிய பதவியாகும்?

அ. இந்திய இராணுவம்

ஆ. இந்தியக் கடற்படை

இ. இந்திய வான்படை

ஈ. இந்தியக் கடலோரக் காவல்படை

 • இராணுவத்தில் கட்டமைப்பு சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்காக நடுவணரசு இராணுவப் பணியாளர்களின் துணைத்தலைவர் அல்லது DCOAS (உத்தி) என்ற புதிய பதவியை அறிவித்துள்ளது. இந்தப்பதவியை உருவாக்குவதற்கான திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் (DGMO) மற்றும் இராணுவ புலனாய்வுக்கான தலைமை இயக்குநர் (DGMI) ஆகியோரின் பணிகளை DCOAS மேற்பார்வையிட்டு, துணை தலைமை இராணுவ தலைவருக்கு அறிக்கையளிப்பார்.

5. கீழ்க்காணும் எந்த இந்திய மாநிலத்தில் குறியிடப்பட்ட வரகுக்கோழிகள், அண்மையில் தெலுங்கானா மாநிலத்துக்கு பறந்துசென்றன?

அ. தமிழ்நாடு

ஆ. குஜராத்

இ. ஆந்திரப் பிரதேசம்

ஈ. ஒடிசா

 • குஜராத் மாநில வனத்துறையால் குறியிடப்பட்ட இரண்டு வரகுக்கோழிகளுள் ஒன்று தெலுங்கானா மாநிலத்திற்கு பறந்து சென்றுள்ளது. பாவ்நகரில் உள்ள வேளாவதரில் அமைந்துள்ள வெளிமான் தேசிய பூங்காவில் அந்த வரகுக்கோழி குறியிடப்பட்டிருந்தது. வரகுக்கோழிகள் தங்களது இனப்பெருக்க காலத் -திற்குப் பிறகு இந்தியாவின் மேற்குப்பகுதியிலிருந்து தீபகற்ப இந்திய நிலப்பரப்புக்கு குடிபெயர்கின்றன என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

6. தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?

அ. மும்பை

ஆ. நைனிடால்

இ. சென்னை

ஈ. புனே

 • தேசிய இயற்கை மருத்துவ நிறுவனமானது (NIN) புனே நகரில் அமைந்துள்ளது. NIN’இன் தற்போதைய கட்டடம், “பாபு பவன்” என அழைக்கப்படுகிறது. காந்திஜி இங்கு தங்கியிருந்தபோது பல்வேறு இயற்கை மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார். மேலும் பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டு நிகழ்வுக -ளுக்கும் ஏற்பாடு செய்தார். AYUSH அமைச்சகம், புனேவின் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனத்தின் வரவிருக்கும் புதிய வளாகத்திற்கு, “நிசர்க் கிராம்” என்று பெயரிட பரிந்துரைத்துள்ளது.

7. பிரகாஷ் சிங் பாதல் என்பவர் கீழ்க்காணும் எந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தார்?

அ. ஹரியானா

ஆ. பஞ்சாப்

இ. உத்தரகண்ட்

ஈ. ஹிமாச்சல பிரதேசம்

 • பஞ்சாபின் முன்னாள் முதலமைச்சரும், ஷிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல், ‘பத்ம விபூஷன்’ விருதை அரசுக்கு திருப்பியளித்துள்ளார். நடுவணரசு கொண்டுவந்த வேளாண் சீர்திருத்தங்களுக்கு எதிரான தனது எதிர்ப்பைக்காட்டுவதற்காக அவர் இந்த விருதை திருப்பியளித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டில் அவருக்கு இம்மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டது.

8. இந்திய விலங்கியல் ஆய்வுமையத்தின் ஓர் அண்மைய ஆய்வின்படி, கீழ்க்காணும் எந்த வகை அணில் அழிவின் விளிம்பில் உள்ளது?

அ. பெரிய மலாயன் அணில்

ஆ. பறக்கும் அணில்

இ. இந்திய மலை அணில்

ஈ. பசும் புதர் அணில்

 • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின்கீழ், இந்திய விலங்கியல் ஆய்வு மையம் மேற்கொண்ட இத்தகைய முதலாம் ஆய்வில், பெரிய மலாயன் அணில்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. 2050ஆம் ஆண்டில் இந்தியாவில் பெரிய மலாயன் அணில்களின் எண்ணிக்கை 90 சதவீத அளவுக்கு குறையக்கூடும் என அது கணித்துள்ளது. அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இவ்வகை இனங்கள் இந்தியாவிலிருந்து முற்றிலுமாக அழிந்துபோகக்கூடும்.

9. நடப்பாண்டில் (2020) வரும் உலக மண் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Keep Soil Alive, Protect Soil Biodiversity

ஆ. Life of Soil

இ. Soil and Nature

ஈ. Conserve Soil to Conserve World

 • நலமான மண்ணின் முக்கியத்துவம் மற்றும் மண் வளங்களின் நிலையான மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்.5 அன்று உலகம் முழுவதும் உலக மண் நாளாக கொண்டாடப்படுகிறது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் திட்டத்தின்படி, “Keep soil alive, protect soil biodiversity” என்பது நடப்பாண்டில் (2020) வரும் உலக மண் நாளுக்கான கருப் பொருளாகும். பன்னாட்டு மண் அறிவியல் சங்கம், இந்நாளைக்கொண்டாட 2002’இல் பரிந்துரைத்தது.

10. NITI ஆயோக்கின் முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கான, 2020 அக்டோபர் மாத தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த மாமித் மாவட்டம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. சிக்கிம்

இ. மிசோரம்

ஈ. மத்திய பிரதேசம்

 • மிசோரம் மாநிலத்தின் மாமித் மாவட்டம், NITI ஆயோக்கின் முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கான, 2020 அக்டோபர் மாத தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது. பீகார் மாநிலத்தின் பாங்கா மற்றும் ஒடிசா மாநிலத்தின் தெங்கனல் ஆகியன முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன. ஆறு வளர்ச்சிக்கூறுகளில் 112’க்கும் மேற்பட்ட முன்னேற விரும்பும் மாவட்டங்கள் மேற்
  -கொண்ட முன்னேற்றத்தை NITI ஆயோக் மதிப்பிட்டுள்ளது.

8th & 9th December 2020 Current Affairs in English

1. What is the new limit of transaction made using contactless card, as per the recent statement of the RBI?

[A] Rs 1000

[B] Rs 2000

[C] Rs 3000

[D] Rs 5000

 • The Reserve Bank of India (RBI) has proposed to increase the limit for contactless card transactions to Rs 5,000 from Rs 2,000 per transaction from January 1, 2021.
 • This announcement was part of the RBI’s Statement on Developmental and Regulatory Policies, announced during the RBI’s bi–monetary policy announcement. The limit for e–mandates for recurring transactions using cards and UPI is also raised to Rs 5000.

2. Which country has announced to establish ‘Friendship Association’ with India, to strengthen its ties?

[A] Saudi Arabia

[B] Oman

[C] Brazil

[D] United Kingdom

 • During the India–Oman virtual dialogue recently held, Oman announced to establish first–of–its–kind Oman–India Friendship Association. This is the first such initiative in West Asia led by the Foreign Ministry. In December 2019, India and Oman signed a Maritime Transport Agreement during the visit of Foreign Minister Jaishankar to the country.

3. Which is the headquarters of the United Nations Commission on Narcotic Drugs (CND)?

[A] Vienna

[B] Geneva

[C] Rome

[D] Washington D C

 • The United Nations Commission on Narcotic Drugs (CND) is one of the commissions of the United Nations Economic and Social Council (ECOSOC), headquartered at Vienna, Austria.
 • Recently, during a reconvened session of CND, 53 member states voted for removing Cannabis from Schedule IV of the 1961 Single Convention on Narcotic Drugs, where it was listed with deadly & addictive drugs. 27 members including India, voted for removing Cannabis from the convention.

4. DCOAS (Strategy) is the new post to be created in which Indian Armed Force?

[A] Indian Army

[B] Indian Navy

[C] Indian Air Force

[D] Indian Coastal Guard

 • The Union Government has announced the post of a Deputy Chief of the Army Staff, or DCOAS, (Strategy), to bring about structural reforms in the army. The proposal for creating this post was initiated before two years. The DCOAS would oversee the work of the Director General of Military Operations (DGMO) and the Director General Military Intelligence (DGMI), who would otherwise report to the Vice Chief f Army Staff.

5. Lesser florican birds, tagged in which Indian state, has flown to Telangana recently?

[A] Tamil Nadu

[B] Gujarat

[C] Andhra Pradesh

[D] Odisha

 • One of the two lesser florican birds that was tagged by the Gujarat forest department has flown all the way to the state of Telangana. The bird was tagged at the Blackbuck National Park (BBNP), Velavadar, in Bhavnagar. This has confirmed a research finding that lesser florican birds migrate to peninsular India from the western part of India after their breeding season.

6. Where is the National Institute of Naturopathy (NIN) located?

[A] Mumbai

[B] Nainital

[C] Chennai

[D] Pune

 • The National Institute of Naturopathy (NIN) is located in the city of Pune. The present building of NIN is called the “Bapu Bhavan”.
 • Gandhiji performed many Naturopathy experiments and organised various national and International activities while staying here. The Ministry of Ayush has proposed to name the upcoming new campus of National Institute of Naturopathy (NIN), Pune as “Nisarg Gram”.

7. Parkash Singh Badal was the former Chief Minister of which state?

[A] Haryana

[B] Punjab

[C] Uttarakhand

[D] Himachal Pradesh

 • Parkash Singh Badal, who is the former Chief Minister of Punjab and a leader of Shiromani Akali Dal party has returned Padma Vibhushan award back to the Government. He has returned the award to show his protest against Agriculture reforms brought by the Centre. He was honoured with the prestigious award in the year 2015.

8. As per the recent study by the Zoological Survey of India, which type of squirrel is on the verge of extinction?

[A] Malayan Giant Squirrel

[B] Flying Squirrel

[C] Indian Giant Squirrel

[D] Green Bush Squirrel

 • In the first–of–its–kind study by the Zoological Survey of India (ZSI) under the Union Ministry of Environment, Forest and Climate Change, the Malayan Giant Squirrel is at the verge of extinction.
 • It has projected that the numbers of the Malayan Giant Squirrel could decline by 90 per cent in India by 2050. If steps are not taken by the Govt., the species could become extinct in the country.

9. What is the theme of the ‘World Soil day 2020’?

[A] Keep Soil Alive, Protect Soil Biodiversity

[B] Life of Soil

[C] Soil and Nature

[D] Conserve Soil to Conserve World

 • Every year December 5 is celebrated as World Soil Day across the world since 2014, to create awareness about the importance of healthy soil and sustainable management of soil resources. According to the Food and Agriculture Organization (FAO) campaign, the theme of World Soil day 2020 is “Keep soil alive, protect soil biodiversity”. International Union of Soil Sciences (IUSS) recommended it in 2002 recommended to celebrate this day in 2002.

10. Mamit district, which topped the NITI Aayog’s October rankings of aspirational districts, is in which state?

[A] Assam

[B] Sikkim

[C] Mizoram

[D] Madhya Pradesh

 • Mamit district of the state of Mizoram has topped the rankings of aspirational districts by Niti Aayog for October. Banka of Bihar and Dhenkanal of Odisha have been placed at the second and third positions, respectively. NITI Aayog assesses the incremental progress made by over 112 aspirational districts across six developmental areas.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *