Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

8th & 9th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

8th & 9th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 8th & 9th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

January Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. “Women and girls left behind: Glaring gaps in pandemic responses” என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) உலக பொருளாதார மன்றம்

ஆ) உலக வங்கி

இ) ஐநா பெண்கள் அமைப்பு 

ஈ) NITI ஆயோக்

  • ஐநா அவையின் பெண்கள் அமைப்பானது சமீபத்தில் “Women and girls left behind: Glaring gaps in pandemic responses” என்ற ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, அரசாங்கத்திடமிருந்து பெண்கள் COVID-19 நிவாரணத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.
  • குழந்தைகளுடன் வாழும் வேலைசெய்யும் தாய்மார்களில் குறைந்தது 29 சதவீதம் பேரும் குழந்தைகளுடன் வாழும் வேலை செய்யும் ஆண்களில் 20% பேரும் தங்களின் வேலையை இழந்துள்ளனர். குழந்தைகளுடன் தனித்து வாழும் ஒற்றைப்பெண்களே அதிகம் பின்தங்கியிருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.

2. அண்மையில் 200 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல் கல்லை எட்டிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் யார்?

அ) முகமது ஷமி 

ஆ) இரவிச்சந்திரன் அஸ்வின்

இ) இரவீந்திர ஜடேஜா

ஈ) ஜஸ்பிரித் பும்ரா

  • முகமது ஷமி சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 200 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல் கல்லை எட்டினார். 31 வயதான அவர் தனது 55ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தச் சாதனையை எட்டியதால், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுள் இந்தச் சாதனையை வேகமாக படைத்த மூன்றாவது நபராக அவர் ஆனார்.
  • கபில்தேவ் (434), இஷாந்த் சர்மா (311), ஜாகீர் கான் (311), மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் (236) ஆகியோருக்கு பிறகு அவர் உள்ளார்.

3. ‘பெண்களுக்கான புதிய கொள்கை – 2021’ வரைவை வெளியிட்ட மாநிலம் எது?

அ) தமிழ்நாடு 

ஆ) கேரளா

இ) ஒடிஸா

ஈ) மேற்கு வங்கம்

  • பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் பெண்களுக்கான கட்டாய தற்காப்புக் கலைப் பயிற்சி போன்ற அம்சங்களை உள்ளடக்கிய ‘பெண்களுக்கான புதிய கொள்கை–2021’ஐ தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டது.
  • இக்கொள்கை அனைத்து போக்குவரத்து முறைகளையும் பெண்களுக்கு ஏற்றதாக மாற்ற முயற்சி செய்கிறது.

4. இந்திய இராணுவத்தின் “குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆய்வகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மையம் (AI)” அமைக்கப்பட்டுள்ள மாநிலம் எது?

அ) குஜராத்

ஆ) மகாராஷ்டிரா

இ) மத்திய பிரதேசம் 

ஈ) ஹரியானா

  • இந்திய இராணுவம், மத்திய பிரதேசத்தில் உள்ள மோவ், இராணுவ தொலைத்தொடர்பு பொறியியல் கல்லூரியில் ‘குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆய்வகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மையம்’ ஆகியவற்றை அமைத்துள்ளது.
  • இந்த மையங்கள் ஆயுதப்படைகளால் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியை மேற்கொள்ளும். இது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் ஆதரவுடன் இந்திய இராணுவத்தால் நிறுவப்பட்டுள்ளது.

5. உலகில் ‘அருமண் பொருள்’ உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

அ) இந்தியா

ஆ) ஜப்பான்

இ) சீனா 

ஈ) அமெரிக்கா

  • அருமண் பொருட்களை உற்பத்தி செய்யும் உலகின் முன்னணி நிறுவனமாக ‘ஹினா’ உள்ளது. சமீபத்தில், சீனாவில் மூன்று அரசுக்கு சொந்தமான அருமண் சுரங்க நிறுவனங்கள் ‘சீனா ரேர் எர்த்ஸ்’ குழுமம் என்ற புதிய நிறுவனத்தை உருவாக்குகின்றன. சீனா தனது அருமண் பொருட்களின் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தி வருகிறது. அருமண் என்பது பதினேழு கனிமங்களின் கலவையாகும். இது நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் இராணுவ உபகரணங்களின் உற்பத்தியில் முதன்மைப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகிறது.

6. தேசிய ‘விமான விளையாட்டுக் கொள்கை’ வரைவை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ) இளைஞர் விவகாரங்கள் & விளையாட்டு அமைச்சகம்

ஆ) சிவில் வான்போக்குவரத்து அமைச்சகம் 

இ) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

ஈ) வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

  • சிவில் வான்போக்குவரத்து அமைச்சகம் பொதுமக்களின் கருத்துக்காக தேசிய விமான விளையாட்டுக் கொள்கை வரைவை வெளியிட்டுள்ளது.
  • இக்கொள்கையானது இந்தியாவின் விமான விளையாட் -டுக்கான திறனை ஊக்குவிக்க எண்ணுகிறது மற்றும் பாதுகாப்பில் சிறந்த நடைமுறைகளை உறுதிசெய்வதில் கவனஞ்செலுத்துகிறது. 2030’க்குள் இந்தியாவை சிறந்த விமான விளையாட்டு நாடுகளுள் ஒன்றாக மாற்றுவதுதான் இக்கொள்கையின் நோக்கம்.

7. பின்வரும் எந்தத்துறைக்கு ‘பிரதமர் உயர்சிறப்பு விருது’ வழங்கப்படுகிறது?

அ) விளையாட்டு

ஆ) பொது நிர்வாகம் 

இ) தொழில்முனைவு

ஈ) கல்வி

  • நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர் துறையானது கடந்த 2006ஆம் ஆண்டு முதல் “பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான பிரதமர் உயர் சிறப்பு விருதுகளை” வழங்குகிறது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சமீபத்தில் பிரதமரின் சிறப்பு விருதுக்கான இணையதளத்தைத் தொடங்கினார். விருதுக்கான பதிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன.
  • இந்த ஆண்டு பரிசுத்தொகை `10 இலட்சத்திலிருந்து `20 இலட்சமாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியில் மாவட்ட ஆட்சியர்களின் செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில், கடந்த 2020’இல் இத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டது.

8. 2021-22ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் வருடாந்திர ஏற்றுமதி இலக்கு என்ன?

அ) $100 பில்லியன்

ஆ) $200 பில்லியன்

இ) $400 பில்லியன் 

ஈ) $500 பில்லியன்

  • வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 2021 டிசம்பரில் இந்தியா $37.29 பில்லியன் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஏப்ரல் – டிசம்பரில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி கிட்டத்தட்ட $300 பில்லியனாக இருந்தது.
  • இது ஆண்டுக்காண்டு 48.85 சதவீதம் மற்றும் 2019ஆம் ஆண்டின் இதே காலகட்டத்திற்கு எதிராக 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது. எனவே, இந்தியா தனது வருடாந்திர ஏற்றுமதி இலக்கில் மூன்றில் ஒரு பங்கை எட்டியுள்ளது.
  • அதாவது 2021-22 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் தனது வருடாந்திர இலக்கான $400 பில்லியனில் 1/3 பங்கு. பொறியியல் பொருட்கள், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் இரத்தினங்கள் மற்றும் நகைகளுக்கான அதிக தேவையே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

9. 2021 – DRDO நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) ஆத்மநிர்பார் பாரத்

ஆ) ஏற்றுமதி 

இ) முதன்மை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்

ஈ) வலிமை மற்றும் அறிவியல்

  • DRDO அதன் 63ஆவது நிறுவன நாளை 2021 ஜன.01 அன்று அனுசரித்தது. DRDO, கடந்த 1958ஆம் ஆண்டில் 10 ஆய்வகங்களுடன் பாதுகாப்புத் துறையில் ஆராய்ச்சிப் பணிகளை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்டது.
  • தற்போது, டிஆர்டிஓ, ஏரோநாட்டிக்ஸ், போர் வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங், சிமுலேஷன் உள்ளிட்ட பல துறைகளுடன் இணைந்து செயல்படுகிறது. நடப்பு 2021ஆம் ஆண்டிற்கான DRDO நாளின் கருப்பொருளாக ‘ஏற்றுமதி’யை DRDO தலைவர் அறிவித்தார்.

10. INSACOG என்பது மரபணு வரிசைமுறை மற்றும் COVID திரிபுகளின் மாறுபாட்டைக் கண்காணிப்பதற்காக எந்த நாட்டால் அமைக்கப்பட்ட மன்றமாகும்?

அ) அமெரிக்கா

ஆ) இரஷ்யா

இ) இந்தியா 

ஈ) UK

  • மரபணு வரிசைமுறை மற்றும் COVID-19 திரிபுகளின் மாறுபாட்டைக் கண்காணிக்க, இந்திய மத்திய சுகாதார அமைச்சகம், கடந்த 2020’இல் இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பை (INSACOG) அமைத்தது.
  • INSACOG ஆனது இந்திய மத்திய சுகாதார அமைச்சகம், உயிரி-தொழில்நுட்பத் துறை, CSIR மற்றும் ICMR ஆகியவற்றுடன் இணைந்து தொடங்கப்பட்டது. INSACOG ஆய்வகம், COVID நேர்மறை மாதிரிகளை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துமாறு மாநிலங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை செல்லும்: உச்சநீதி மன்றம் உத்தரவு

தற்போதைய இடஒதுக்கீடு நடைமுறைகளின்படி 2021-22 கல்வி ஆண்டுக்கான இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தலாம். மருத்துவப் படிப்பு சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ இளநிலை படிப்புகளில் 15% இடங்களையும், மருத்துவ முதுநிலை படிப்புகளில் 50% இடங்களையும் அகில இந்திய தொகுப்புக்கு மாநில அரசுகள் அளித்து வருகின்றன.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு (EWS) 10 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. இதை உறுதி செய்து கடந்த ஜூலையில் மத்திய அரசு, அரசாணையை வெளியிட்டது.

இந்த அரசாணையை எதிர்த்துஉச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நிலுவையில் இருந்ததால் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்த முடியவில்லை. இதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதைக் கண்டித்து கடந்த டிசம்பரில் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணை விரைவுபடுத்தப்பட்டது.

இதனிடையே, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பொருளா
-தாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு வருமான உச்ச வரம்பாக ரூ.8 லட்சம் நிர்ணயிக்கப்பட்டதுகுறித்து ஆய்வு செய்ய நிதித்துறை முன்னாள் செயலாளர் அஜய்பூஷண் பாண்டே தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப் -பட்டது. இந்தக் குழு கடந்த டிசம்பர் 31-ம்தேதி தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

அதில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுபிரிவினருக்கு `8 லட்சம் உச்சவரம்பு நியமிக்கப்பட்டது நியாயமானது என்று தெரிவிக்கப்பட்டது. இதை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதிவு செய்தது.

இந்தச் சூழலில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்திர சூட், போபண்ணா அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதில் கூறியிருப்பதாவது:

பாண்டே கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்கிறோம். தற்போதைய இடஒதுக்கீடு நடைமுறைகளின்படி 2021-22 ஆண்டு இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தலாம். அதாவது, மருத்துவப்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு, பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையைப் பின்பற்றி கலந்தாய்வு நடத்தலாம்.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கவகை செய்யும் அரசாணை செல்லும். இதுகுறித்து தொடர்ந்து விசாரிக்கத் தேவையில்லை. எனினும், பொருளாதாரத்தில் நலிந்தபொது பிரிவினருக்கான வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது குறித்து மார்ச் 3-வது வாரத்தில் இறுதி விசாரணை நடத்தப்படும். இதுதொடர்பான பாண்டே கமிட்டியின் அறிக்கை ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

2. ‘பொறியியல் புரட்சிகள்’ என்ற தலைப்பில் விஞ்ஞானி டில்லிபாபு எழுதிய நூல் இன்று வெளியீட்டு விழா: இணைய வழியில் நடைபெறுகிறது

ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு எழுதிய ‘பொறியியல் புரட்சிகள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு இணைய வழியில் நடைபெறுகிறது.

தேசிய வடிவமைப்பு, ஆராய்ச்சி மன்றத்தின் (என்டிஆர்எஃப்) இயக்குநரான ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு, அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பாக பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அந்த வரிசையில், தேசிய அளவில் வளர்ச்சியை கட்டமைத்த அறிவியல் தொழில்நுட்ப நிகழ்வுகள் தொடர்பாக ‘பொறியியல் புரட்சிகள்’ என்ற தலைப்பிலான நூலை டில்லிபாபு எழுதியுள்ளார். தொழில்நுட்ப முயற்சிகளில் இந்திய விஞ்ஞானிகள் சந்தித்த சவால்கள், சாதனைகள் குறித்த தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த நூல் வெளியீட்டு விழா இணைய வழியில் இன்று (ஜன.8) மாலை 6 மணிக்கு நடக்க உள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையில் நிகழும் நூல் வெளியீட்டு விழாவில், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, எழுத்தாளர் திலகவதி ஐபிஎஸ் ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகின்றனர். ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு ஏற்புரை நிகழ்த்துகிறார்.

திசையெட்டு பதிப்பகம், ஆளுமைச் சிற்பி மாத இதழ் இணைந்து இந்த நிகழ்வை வழங்குகின்றன. எழுத்தாளர் பிரியசகி, ஆளுமைச் சிற்பி மாத இதழ் ஆசிரியர் மெ.ஞானசேகர் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்கின்றனர். விழா நேரலையை https://youtu.be/W9BoXP_xRWc என்ற வலைதளம் மூலமாக அனைவரும் காணலாம்.

3. கூட்டுறவு சங்க இயக்குநர்களின் பதவிக்காலம் 3 ஆண்டாக குறைப்பு; பேரவையில் மசோதா நிறைவேற்றம்:

கூட்டுறவு சங்க இயக்குநர்கள் குழுவின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க வகை செய்யும் சட்டமுன்வடிவு பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த சட்ட முன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழகத்தில் கூட்டுறவுச் சங்க இயக்குநர்கள் குழுவின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க வகை செய்யும் சட்டமுன்வடிவை சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி நேற்று அறிமுகம் செய்தார். இந்தசட்ட முன்வடிவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு இந்த சட்ட முன்வடிவு பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

முறைகேடு புகார்கள்

இந்த சட்ட முன்வடிவில் கூறப்பட்டிருப்பதாவது: கூட்டுறவு சங்கங்களில் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்தும், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களிடம் இருந்தும் பல புகார்கள் வரப்பெற்றுள்ளன. கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டதில் அதிக அளவிலான நிதி முறைகேடுகளும், போலி நகைகள் மீதான கடன்கள் மற்றும் கோடிக்கணக்கில் போலிக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது போன்றவை வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளன.

எனவே, கூட்டுறவு சங்கங்களின் நலனை பாதுகாக்கும் நோக்கில், அவற்றின் நிர்வாகங்களை நெறிப்படுத்தவும் முறையான ஆளுகையை உறுதி செய்யவும், கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளின் திறனை அதிகரிக்கவும், சங்கங்களின் இயக்குநர்கள் குழுவின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.

அத்துடன் ஒரு சட்டத்தை மேற்கொள்வதன் மூலம் இந்தியஅரசியலமைப்பின் 9-பி பகுதி யின் வகைமுறைகளுடன் இசைந்து செய்யப்பட்ட திருத்தங்களுக்கு முந்தைய 1983-ம் ஆண்டு கூறப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில் இருக்கும் சில வகைமுறைகளை மீட்டெடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிவானது மேற்சொன்ன முடிவுக்கு செயல்வடிவம் கொடுக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

4. சட்டப்பேரவையில் 13 மசோதாக்கள் நிறைவேறின

தமிழகத்தில் 6 மாநகராட்சிகள், 2 காவல் ஆணையரகங்களை புதிதாகத் தொடங்கியது உட்பட 13 சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் இடையில், தாம்பரம், காஞ்சிபுரம், சிவகாசி, கடலூர், கும்பகோணம், கரூர் ஆகிய 6 புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் தொடர்பான சட்ட மசோதாக்களை அமைச்சர் கே.என்.நேரு நேற்று முன்தினம் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து, நகர ஊரமைப்பு சட்டத்தில் நிலம் அல்லது கட்டிட மேம்பாட்டுக்காக வழங்கப்பட்ட திட்ட அனுமதிக்கான காலஅளவை ஐந்திலிருந்து 8 ஆண்டுகளாக உயர்த்துவது தொடர்பான சட்ட முன்வடிவை அமைச்சர் சு.முத்துசாமி தாக்கல் செய்தார்.

பேரவைக் கூட்டத்தில் இறுதிநாளான நேற்று சென்னை மாநகர காவல் சட்டத்தை, புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஆவடி, தாம்பரம் மாநகரங்களுக்கு நீட்டிப்பு செய்வதற்கான சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து, தமிழ்நாடு வேளாண்விளை பொருள் சந்தைப்படுத்துதல் திருத்த சட்ட மசோதவை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதாவை அமைச்சர் எஸ்.ரகுபதி, நிதி ஒதுக்க சட்ட மசோதாவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தாக்கல் செய்தனர்.

இதுதவிர, தமிழக அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனங்கள், அரசுக் கழகங்கள், சட்டப்பூர்வமான வாரியங்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளஅதிகார அமைப்புகளின் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை தொடர்பான கூடுதல் பணிகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்கு வழி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (கூடுதல்செயற்பணிகள்) சட்ட மசோதவை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இந்த சட்ட மசோதாக்கள் அனைத்தும் நேற்றே பிரிவு வாரியாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

5. ஒமைக்ரான் பாதிப்பு குறைவா? – கூடுதல் எச்சரிக்கை அவசியமில்லையா?

2021ஆம் ஆண்டுடன் கரோனா விடை பெற்றுவிடும் என்று நினைத் திருந்த நிலையில், கரோனாவின் தாக்கம் மீண்டும் உச்சமடைந்துவருகிறது. 2021 டிசம்பர் பிற்பகுதியில் ஒமைக்ரான் (Omicron) சென்னையில் நுழைந்ததால், புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. பத்தாம் வகுப்புக்குக் கீழுள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் மூடப்பட்டன. பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

இரண்டாம் அலையின் உச்சத்தைச் சரியாகக் கணித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பால் கட்டுமன், ஒமைக்ரான் பரவலின் வளர்ச்சிப் போக்கை ‘அதிவேகம்’ என்கிறார். தினசரி கரோனா பாதிப்பு பத்துநாட்களுக்குள் நான்கு மடங்காக, அதாவது நாற்பதாயிரமாக உயர்ந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்தபோதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஒமைக்ரான் வேற்றுருவால் கடுமையான பாதிப்பு ஏற்படும் சாத்தியம் குறைவு என்பதை இது உணர்த்தினாலும், இதில் நிறைய ஆபத்துகள் மறைந்தும் இருக்கலாம். ஒமைக்ரானின் வீரியத்தை இந்த நேரத்தில் குறைத்து மதிப்பிடுவது பேராபத்தில் முடியக்கூடும்.

ஒமைக்ரான் பாதிப்பு

பொதுவாக, வைரஸ் எப்படிப்பட்ட தாக்கத்தை இனிமேல் ஏற்படுத்தும் என்பதை முழுமையாகக் கணிக்க முடியாது. இருப்பினும், ஆய்வக விலங்குகள் மீதும் மனித திசுக்களின் மீதும் நடத்தப்பட்ட புதிய ஆய்வுகள், மற்ற வேற்றுருக்களைப் போல் ‘ஒமைக்ரான்’ வேற்றுரு நுரையீரலுக்குள் தீவிரமாகப் பரவாது என்று கணித்துள்ளன. எலிகள், வெள்ளெலிகள் ஆகியவற்றின் மீதான ஆய்வுகளில், ஒமைக்ரான் தொற்று குறைவான பாதிப்புகளையே ஏற்படுத்தியது. அந்தப் பாதிப்பும் மேல் சுவாசக்குழாய், மூக்கு, தொண்டை, மூச்சுக்குமாய் ஆகியவற்றில் மட்டும் பெரும்பாலும் இருந்துள்ளது. நுரையீரலுக்குக் குறைவான தீங்கையே விளைவித்திருந்தது. சுவாச மண்டலத்தின் மேல்பகுதியையே ஒமைக்ரான் பாதிக்கும் என்கிற கருத்துக்கான தொடக்கப்புள்ளி இது.

கரோனா பாதிப்பைப் பொறுத்தவரை, அது மூக்கு, வாய், தொண்டை ஆகியவற்றில் ஏற்படுத்தும் பாதிப்பினால் பெரிய ஆபத்து ஏற்படுவதில்லை. நுரையீரலுக்குள் நுழையும்போதுதான் உயிருக்கு ஆபத்தானதாக மாறுகிறது. கடந்த புதன் அன்று, ஓமைக்ரான் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட எலிகள், வெள்ளெலிகள் குறித்து ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை, ஒமைக்ரானால் அவற்றின் நுரையீரல் லேசாகப் பாதிக்கப்பட்டுள்ளது, அவற்றின் எடை குறையவில்லை, மரணத்துக்கான சாத்தியம் மிகவும் குறைவாக உள்ளது என்று தெரிவிக்கிறது.

ஒமைக்ரான் பாதிப்பு நுரையீரலில் ஏன் குறைவு?

நுரையீரல் செல்களின் மேற்பரப்பில் TMPRSS2 எனும் புரதம் இருக்கிறது. இந்தப் புரதமே நுரையீரலுக்குள் கரோனா வைரஸ் நுழைவதற்கு வழிவகுக்கிறது. ஆனால், ஒமைக்ரான் வைரஸ் இந்தப் புரதத்தை இறுக்கமாகப் பற்றிக்கொள்ளவில்லை. இதன் விளைவாக, டெல்டா வேற்றுருவைப் போல், ஒமைக்ரான் வேற்றுருவால் நுரையீரலுக்குள் ஊடுருவிப் பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. நுரையீரலுக்குள் நுழைந்தால் வைரஸ் அழிக்கப்படும் என்பதாலோ என்னவோ, ஒமைக்ரான் இந்தப் புரதத்தைப் பற்றிக்கொள்ளும் இயல்பற்றதாகத் தன்னைத் தகவமைத்துக்கொண்டிருக்கலாம்.

TMPRSS2 புரதம் இல்லாத செல்களைக் கொண்டிருக்கும், சுவாசக் குழாய், மூக்கு, தொண்டை ஆகியவற்றில் மட்டும் ஓமைக்ரான் பாதிப்பு அதிகமாக இருப்பதால், அது எளிதாகவும் அதிவேகமாகவும் பரவுகிறது. ஆனால், இது ஆரம்பக்கட்ட சிந்தனையே, இந்தக் கருதுகோளை அங்கீகரிப்பதற்கு இன்னும் கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கள உண்மை நிலவரம்

இரண்டாம் அலையின் உச்சத்தில் தினசரி பாதிப்பு நான்கு லட்சமாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, தற்போதைய தினசரி பாதிப்பு குறைவாக இருப்பதைப் போலத் தோன்றலாம். குறைவான அரசுப் பதிவுகள், பெரிய நகரங்களில் அதிகமாகப் பரவும் முறை உள்ளிட்ட காரணங்களால், தினசரி பாதிப்பு எண்ணிக்கை உண்மையான களநிலவரத்தைப் பிரதிபலிக்காது.

பிசிஆர் பரிசோதனை விகிதமே உண்மையான ஆபத்தை உணர்த்தும். இரண்டாம் அலையின் உச்சத்தில் பிசிஆர் பரிசோதனையின் நேர்மறை முடிவுகளின் விகிதம் 25 சதவீதம் என்றிருந்தது. டிசம்பர் 27 அன்று 0.5 சதவீதத்துக்கும் கீழே சென்றிருந்த அது, தற்போது மும்பையில் 17 சதவீதத்தை நெருங்கிவிட்டது. மற்ற நகரங்களிலும் அதிவேகமாக உயர்ந்துவருகிறது. ஒமைக்ரான் எவ்வளவு வீரியத்துடன் பரவுகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

தடுப்பாற்றலும் தயார்நிலையும்

புதிய அலை அச்சுறுத்தலாக விளங்கினாலும், அதை எதிர்கொள்வதற்குத் தற்போது நாடு தயார் நிலையில் இருப்பது நம்பிக்கையளிக்கிறது. இந்தியாவில் 44 சதவீத மக்களுக்கு இரண்டு தவணைத் தடுப்பூசியும் போடப்பட்டிருக்கிறது. இத்துடன் கோடிக்கணக்கானோர் முந்தைய தொற்றினால் பெறப்பட்ட நோயெதிர்ப்பாற்றலையும் கொண்டிருக்கின்றனர். முக்கியமாக ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் நடத்தப்பட்ட தேசிய செரோ-சர்வேயில் 68 சதவீதத்தினர் ஏற்கெனவே கோவிட் ஆன்டிபாடிகளைக் கொண்டிருந்தனர். சமீபத்திய சர்வேயில், அது இன்னும் அதிகரித்திருக்கிறது.

ஒப்பீட்டளவில் நாட்டின் மருத்துவக் கட்டமைப்பும் தயார் நிலையில் உள்ளது. இரண்டாம் அலையில் கற்ற பாடங்கள், மருத்துவர்களையும் சுகாதாரக் கட்டமைப்பையும் கூடுதல் திறன்மிக்கவையாக மாற்றியுள்ளன. தமிழ்நாடு அரசும் கோவிட் சிறப்பு மருத்துவமனைகளைத் தயார்நிலையில் வைத்திருக்கிறது.

எச்சரிக்கை தேவை

ஒமைக்ரான் தொற்றால் கடுமையான பாதிப்போ மரணமோ ஏற்படும் சாத்தியம் குறைவாக இருப்பது போல் தோன்றினாலும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியத்தை மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள்.

ஒமைக்ரான் வேற்றுருவின் ஆரம்ப கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையோர் இளம்வயதினர், அவர்களுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படும் சாத்தியம் முந்தைய வேற்றுருக்களிலும் குறைவாக இருந்தது. மேலும், முந்தைய கரோனா தொற்றாலோ தடுப்பூசியாலோ நோயெதிர்ப்பாற்றல் பெற்றவர்களையே ஒமைக்ரான் பெருமளவில் பாதித்திருக்கிறது. எனவே, தடுப்பூசி போடப்படாத வயதானவர்களை ஒமைக்ரான் எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்த தெளிவு இல்லை. குறிப்பாக இந்திய மக்கள்தொகை, நெரிசலான வாழ்க்கை முறை, அதிக ஊட்டச்சத்துக் குறைபாடு, நீரிழிவு, காசநோய் போன்ற காரணிகள் மக்களை அதிக ஆபத்தில் தள்ளக்கூடும்.

சமூகப் பொறுப்புணர்வு அவசியம்

கரோனா இரண்டாம் அலை, அதிகார வர்க்கத்தின் போதாமையையும் அரசியல்வாதிகளின் இயலாமையையும் வெட்ட வெளிச்சமாக்கியது. தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காத நிலையிலும், அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்கிற பெருமிதம் எஞ்சியிருந்தது. மிகப் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடிய மதநிகழ்வுகளும், தேர்தல் பரப்புரைகளும் ஊக்குவிக்கப்பட்டன.

புதிய ஆண்டில் உருவாகிவரும் புதிய அலையின் காலகட்டம் இரண்டாம் அலையின் காலகட்டத்துடன் ஒத்துப்போகிறது. தற்போதும், பல மாநிலங்கள் தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் நாம் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயலாற்ற வேண்டும். தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை சோப்பால் கழுவுதல், கூட்டங்களைத் தவிர்த்தல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடைமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

6. ஆண்டு தேசிய வருமானம் 2021-2022, முதல் முன்கூட்டிய உத்தேச மதிப்பீடுகள்

மத்திய புள்ளிவிவரம் & திட்ட நடைமுறைப்படுத்துதல் அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் 2021-2022 நிதியாண்டிற்கான ஆண்டு வருமானத்தின் முன்கூட்டிய உத்தேச மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.

2021-22-ம் ஆண்டுக்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அல்லது நிலையான விலை மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 147.54 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக 2020-2021-ம் ஆண்டின் தற்காலிக மதிப்பீட்டின்படி இது 135.13 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2021-2022-ம் ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2020-2021-ம் ஆண்டில் இது 7.3 சதவீதமாக இருந்தது.

தற்போதைய விலைமதிப்பின் அடிப்படையிலான 2021-2022-ம் ஆண்டுக்கான ஜிடிபி ரூ 232.15 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2020-2021-ம் ஆண்டில் தற்காலிக மதிப்பீடுகளின்படி இது 197.46 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2021-22-ம் ஆண்டில் 17.6 சதவீதம் என்னும் அளவில் வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனிநபர் வருமானம் மற்றும் இதர விவரங்கள் அறிக்கைகள் 1 முதல் 4 வரையில் வழங்கப்பட்டுள்ளன.

நிலையான விலைமதிப்புள்ள பொருள்களுக்கான வரியைப் பெறுவதில் வால்யூம் எக்ஸ்ட்ராபொலேஷன் என்ற முறைப்படி எண்ணிக்கையில் வளர்ச்சியைப் பொறுத்து வரி விதிக்கப்படும். பொருட்களுக்கும், சேவைகளுக்குமான வரி கணக்கிடப்பட்டு, மொத்த வரி அளவு கணக்கிடப்படுகிறது.

7. 3-வது தேசிய தண்ணீர் விருதுகளை அறிவித்தார் மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர்.

சிறந்த மாநிலங்களுக்கான பிரிவில் தமிழ்நாட்டிற்கு மூன்றாம் பரிசு

3-வது தேசிய தண்ணீர் விருதுகளை, மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத், புதுதில்லியில் இன்று அறிவித்தார். 2020-ம் ஆண்டுக்கான இந்த விருதில், நீர்வளத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்கான சிறந்த மாநிலங்களுக்கான பிரிவில், தமிழ்நாட்டிற்கு மூன்றாம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் உத்தரப்பிரதேசம் முதல்பரிசையும், ராஜஸ்தான் இரண்டாம் பரிசையும் பெறுகின்றன.

தென் மாநிலங்களில், இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய சிறந்த கிராமப் பஞ்சாயத்துக்கான பிரிவில், செங்கல்பட்டு மாவட்டம் வெள்ளப்புத்தூர் ஊராட்சி 2-ம் பரிசையும், சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரிவில், மதுரை மாநகராட்சி 3-வது பரிசையும், சிறந்த பள்ளிக்கூடங்களுக்கான பிரிவில், காவேரிப்பட்டிணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசையும், புதுச்சேரி, அமலோற்பவம் லூர்து அகாடமி 2-ம் பரிசையும், புதுச்சேரி மனப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளி 3-ம் பரிசையும் பெற உள்ளன.

சிறந்த தொழிற்சாலைகளுக்கான பிரிவில், தமிழ்நாட்டில் உள்ள ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் (ஹுண்டாய் கார் தொழிற்சாலை)-க்கு இரண்டாம் பரிசும், சிறந்த தொண்டு நிறுவன பிரிவில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா-வுக்கு 2-ம் பரிசும் வழங்கப்பட உள்ளது.

விருது அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத், வாழ்க்கைக்கு தண்ணீர் மிகவும் அடிப்படையானது என்றார். இந்தியாவின் தற்போதைய தண்ணீர் தேவை, ஆண்டுக்கு சுமார் 1,100 பில்லியன் கன மீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது 2050-ம் ஆண்டு வாக்கில், 1,447 பில்லியன் கன மீட்டராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடான இந்தியாவிற்கு, தண்ணீர் வளம் மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். உலகின் மொத்த மக்கள் தொகையில் 18% பேர் இந்தியாவில் வசிக்கும் நிலையில், உலகின் புதுப்பிக்கத்தக்க தண்ணீர் வளத்தில் 4% தான் இந்தியாவில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

தண்ணீர் சுழற்சியில், மேற்பரப்பில் கிடைக்கும் தண்ணீர் மற்றும் நிலத்தடி நீர் ஆகிய இரண்டும் ஒருங்கிணைந்த அங்கம் என்பதால், ஒன்றுபட்ட தேசிய தண்ணீர் விருதை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தே இந்த விருதுகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் மத்திய அமைச்சர் திரு.ஷெகாவத் தெரிவித்தார்.

8. பந்துவீச தாமதமானால் 1 ஃபீல்டர் குறைப்பு: ஐசிசியின் புதிய விதிமுறை

ர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி பந்துவீச நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக நேரம் எடுத்துக் கொண்டால், 30 யார்டு வட்டத்துக்கு வெளியே 1 ஃபீல்டர் குறைக்கப்பட வேண்டும் என்ற புதிய விதியை ஐசிசி வெள்ளிக்கிழமை அறிவித்தது.

வழக்கமாக அந்த இடத்தில் 5 ஃபீல்டர்கள் (முதல் 6 ஓவர்க -ளுக்குப் பிறகு) அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்புதிய விதிமுறை இம்மாதத்திலிருந்து நடைமுறைக்கு வருகிறது. பந்துவீச்சு தாமதத்துக்கு ஏற்கனவே, புள்ளிகள் குறைப்பு, அணியினருக்கான ஆட்ட ஊதியத்தில் அபராதம் ஆகிய விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், தற்போது கூடுதலாக இந்த ஃபீல்டர் குறைப்பு விதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விதியின்படி, பந்துவீச்சுக்கென நிர்ணயிக்கப் -பட்ட நேரத்தின் முடிவில் பௌலிங் செய்யும் அணி கடைசி ஓவரின் முதல் பந்தை வீசும் நிலையில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் போனால், நிர்ணயிக்கப்பட்ட நேரம் முடிவதிலிருந்து எஞ்சியிருக்கும் ஓவர்கள் நிறைவடையும் வரை 30 யார்டுக்கு வெளியே 5 ஃபீல்டர்களுக்கு பதிலாக, 4 ஃபீல்டர்களே நிறுத்தப்பட வேண்டும்.

இதுதொடர்பான அறிவுறுத்தலை ஃபீல்டிங் செய்யும் அணியின் கேப்டன், பேட்டர், லெக் நடுவர் ஆகியோருக்கு பௌலிங் சைடில் இருக்கும் நடுவர் வழங்குவார். அனைத்து ஃபார்மட்டுகளிலும் ஆட்டத்தின் வேகத்தை அதிகரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஐசிசி கிரிக்கெட் கமிட்டி வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் இந்த புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது.

9. பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல்பெண் நீதிபதி நியமனம்

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்திற்கு முதன்முறையாக ஒரு பெண் நீதிபதி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியான ஆயிஷா மாலிக் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுகிறார். இதற்கு பாகிஸ்தானின் சட்ட கமிஷன் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. ஹாவார்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நீதிபதி ஆயிஷா மாலிக் முன்னணி கார்ப்பரேட் மற்றும் சட்ட ஆலோசனை மையம் நடத்தி வந்தார்.

பின்னர் லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட் -டு 20 ஆண்டுகள் பணியாற்றி தற்போது பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாகியிருக்கிறா -ர். கரும்பு விவசாயிகளுக்கு கூலி வழங்குதல், தேர்தலில் சொத்து அறிவிப்பு வெளியிடுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளார்.

10. சீனா மீண்டும் ஒரு சாதனை 7 கோடி டிகிரி வெப்பத்தில் செயற்கை சூரியன் தகதக…ஒரிஜினலை விட 5 மடங்கு அதிக வெப்பம்

சீனா உருவாக்கி உள்ள செயற்கை சூரியன் ஏழு கோடி டிகிரி செல்சியசில் தொடர்ந்து 17 நிமிடங்கள் ஒளி வீசி சாதனை படைத்துள்ளது. இது சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பமாகும். உலக நாடுகளில் அரசியல், எல்லை பிரச்னை, கடல் பகுதி ஆக்கிரமிப்பு, ஏவுகணை தயாரிப்பு மற்றும் சோதனை, விளையாட்டு, அறிவியல், ஆராய்ச்சிகள், ஆய்வுகள் என அனைத்து துறைகளிலும் தனக்கென்று ஒரு தனி முத்திரையை சீனா தொடர்ந்து பதித்து வருகிறது. இந்த சாதனைக்கு அணி சேர்க்கும் விதமாக சீனாவின் செயற்கை சூரியன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தியானது அணுக்கரு இணைவு மூலம் உருவாகிறது.

சூரியனின் மையப் பகுதி ஹைட்ரஜன் கருக்களை ஹீலியமாக இணைப்பதன் மூலம் 1.5 கோடி டிகிரி செல்சியஸ் வெப்பத்தை ஏற்படுத்துகிறது. இது, பல வகைகளில் மனித இனத்துக்கு பலனை அளித்து வருகிறது. சீனா கடந்த 1999ம் ஆண்டிலிருந்தே ‘ஈஸ்ட்’ என்ற பெயரில் செயற்கை சூரியனை உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, ரூ.70 லட்சம் கோடி வரை செலவிட்டுள்ளது. ஆரம்பத்தில், மிக குறைந்த நேரம் மட்டுமே குறைந்த அளவிலான வெப்பத்தை மட்டுமே இந்த செயற்கை சூரியன் உற்பத்தி செய்தது. இதை படிப்படியாக மேம்படுத்திய சீன விஞ்ஞானிகள், சில தினங்களுக்கு முன் 7 கோடி டிகிரி செல்சியசிஸ் வெப்பத்தை உருவாக்கினர்.

இது சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பமாகும். 17 நிமிடங்கள் இந்த வெப்பநிலை நீடித்தது. மாசு ஏற்படாத வகையில் சுத்தமான எரிசக்தியை தயாரிப்பதற்கான சீனாவின் செயற்கை சூரியன் திட்டத்துக்கு உலகளவில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம், சீனா இந்த திட்டத்தை தீய நோக்கங்களுக்கு பயன்படுத்தவும் வாய்ப்புகள் இருப்பதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் செயற்கை சூரியனை உருவாக்கிய அதே விஞ்ஞானிகள் பிரான்ஸ் நாட்டிலும் இதே போன்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதற்கு, ‘இட்டர்’ என பிரான்ஸ் பெயரிட்டுள்ளது.

1. Which institution released the ‘Women and girls left behind: Glaring gaps in pandemic responses’ report?

A) World Economic Forum

B) World Bank

C) UN Women 

D) NITI Aayog

  • United Nations Women recently released a new report titled “Women and girls left behind: Glaring gaps in pandemic responses”. As per the report, women were less likely to receive COVID–19 relief from government. At least 29% of working mothers living with children lost their jobs compared to 20% of working men living with children. Single women living with children were left behind more, as per the report.

2. Which Indian Pace bowler achieved the milestone of 200 Test wickets recently?

A) Mohammed Shami 

B) Ravichandran Ashwin

C) Ravindra Jadeja

D) Jasprit Bumrah

  • Mohammed Shami recently achieved the milestone of 200 Test wickets, during the first Test against South Africa.
  • The 31–year–old bowler is third–fastest among Indian pacers to reach the landmark, as he achieved this feat in his 55th Test match. He is only behind Kapil Dev (434), Ishant Sharma (311), Zaheer Khan (311), and Javagal Srinath (236), at present.

3. Which state has unveiled the draft of ‘New Policy for Women 2021’?

A) Tamil Nadu 

B) Kerala

C) Odisha

D) West Bengal

  • Tamil Nadu Government recently unveiled “New Policy for Women 2021”, which includes features such as compulsory martial arts training for school and college females. The policy also seeks to make all modes of transportation women–friendly.

4. The Indian Army’s ‘Quantum computing laboratory and a centre for artificial intelligence (AI)’ has been set up in which state?

A) Gujarat

B) Maharashtra

C) Madhya Pradesh 

D) Haryana

  • The Indian Army has set up a ‘Quantum computing laboratory and a Centre for artificial intelligence (AI)’ at Military College of Telecommunication Engineering, Mhow, Madhya Pradesh. The centres will carry out research in developing transformative technologies to be used by the armed forces. It has been established by the Indian Army, with support from the National Security Council Secretariat (NSCS).

5. Which country is the world’s top producer of ‘Rare earth material’?

A) India

B) Japan

C) China

D) USA

  • hina is the world’s top producer of rare earth material. Recently, the country has 3 state–owned rare earth mining companies to form a new entity named ‘China Rare Earths Group’. China has been strengthening its supply chain of rare earth materials. Rare earth is a combination of 17 minerals used as vital ingredients in the production of consumer electronics as well as military equipment.

6. Which Union Ministry has released draft National Air Sports Policy?

A) Ministry of Youth Affairs and Sports

B) Ministry of Civil Aviation 

C) Ministry of Renewable Energy

D) Ministry of Housing and Urban Affairs

  • The Ministry of Civil Aviation has released draft National Air Sports Policy (NASP) for public feedback. The policy seeks to propmote India’s potential for air sports and focuses on ensuring international best practices in safety. The vision of the policy is to make India as one of the top air sports nations by 2030.

7. ‘PM’s Excellence Award’ is being awarded for which sector?

A) Sports

B) Public Administration 

C) Entrepreneurship

D) Education

  • The Department of Administrative Reforms & Public Grievances (DARPG) awards the “Prime Minister’s Awards for Excellence in Public Administration” since 2006. Union Minister Jitendra Singh has recently launched the Web Portal for PM’s Excellence Award, whose registrations began. The prize money was doubled this year from 10 lakh rupees to 20 lakh rupees.
  • The Scheme was restructured in 2020, to recognize the performance of District Collectors towards economic development of the District.

8. What is the annual export target of India, for the year 2021–22?

A) $100 billion

B) $200 billion

C) $400 billion 

D) $500 billion

  • India exported goods worth 37.29 billion in December 2021, the highest ever in a month, as per the data released by the commerce and industry ministry. India′s merchandise export in April−December was nearly 300 billion, which is an increase of 48.85 percent year–on–year and 26 percent against the same period in 2019.
  • Hence, India has achieved three–fourths of its annual export target of $400 billion in the first 9 months of FY22. This is due to the high demand for engineering products, petroleum items, and gems and jewellery.

9. What is the theme declared for the DRDO Day 2021?

A) Atmanirbhar Bharat

B) Export 

C) Critical defence technologies

D) Strength and Science

  • DRDO observed the 63rd Foundation Day of its establishment on January 01, 2021. DRDO was established in 1958 with 10 laboratories to enhance the research work in Defence sector.
  • At present, DRDO is working with several areas including aeronautics, combat vehicles, electronics, instrumentation, advanced computing, simulation among others. DRDO Chairperson declared ‘Export’ as the theme of DRDO for 2021.

10. INSACOG is the forum set up by which country to monitor genome sequencing and variation of Covid strains?

A) USA

B) Russia

C) India 

D) UK

  • Union Health Ministry of India set up the Indian SARS–CoV–2 Genomics Consortium (INSACOG) in 2020, to monitor genome sequencing and variation of Covid strains. INSACOG is jointly initiated by the Union Health Ministry, along with Department of Biotechnology, CSIR and ICMR. An INSACOG Lab has asked States to temporarily pause sending COVID–19 positive samples.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!