Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

8th 9th March 2020 Current Affairs in Tamil & English

8th 9th March 2020 Current Affairs in Tamil & English

8th 9th March 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

8th 9th March 2020 Current Affairs Tamil

8th 9th March 2020 Current Affairs English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.அண்மையில் வெளியான, “Chronicles of Change Champions” என்னும் நூல், எந்தத் திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்ட முன்னெடுப்புகளின் தொகுப்பாகும்?

அ. தூய்மை இந்தியா இயக்கம்

ஆ. போஷன் மா அபியான்

இ. பெண் குழந்தைகளை பாதுகாப்போம், கற்பிப்போம்

ஈ. சுகம்ய பாரத்

  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி, “Chronicles of Change Champions” என்ற நூலை வெளியிட்டார். இந்நூல், “பெண் குழந்தைகளை பாதுகாப்போம், கற்பிப்போம்” திட்டத்தின்கீழ் மாநிலம் & மாவட்ட அளவில் எடுக்கப்பட்ட 25 புதுமையான முயற்சிகளின் தொகுப்பாகும். இந்தத் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015ஆம் ஆண்டில் ஹரியானாவின் பானிபட்டிலிருந்து தொடங்கிவைத்தார். இது பெண்கள் & குழந்தைகள் மேம்பாடு, மனிதவள மேம்பாடு மற்றும் சுகாதார மற்றும் குடும்பநலன் ஆகிய மத்திய அமைச்சகங்களின் முத்தரப்பு முயற்சியாகும்.

2. ‘SCORES’ என்பது இந்தியாவின் எந்த ஒழுங்காற்று அமைப்பின் அலைபேசி செயலியாகும்?

அ. மனை விற்பனை ஒழுங்குமுறை ஆணையம்

ஆ. இந்திய ரிசர்வ் வங்கி

இ. இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்

ஈ. தேசிய வீட்டுவசதி வங்கி

  • SEBI புகார்களுக்கு தீர்வுகாணும் அமைப்பு (SCORES) வலைதளத்தில், முதலீட்டாளர்கள் தங்களது குறைகளை உள்ளிட உதவுவதற்காக, SEBI (இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்) சமீபத்தில் ஓர் அலைபேசி செயலியை அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே செயலிலுள்ள, ‘SCORES’ வலைதளத்தின் அனைத்து அம்சங்களையும் இச்செயலி கொண்டுள்ளது. iOS மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் கிடைக்கக்கூடிய, ‘SEBI SCORES’ என்ற இச்செயலி, SEBI’க்கு கடிதங்களை அனுப்புவதற்குப் பதிலாக SCORES’இல் புகாரளிக்க முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும்.

3.உலகின் 100 ஆற்றல்வாய்ந்த பெண்களின் அண்மைய பட்டியலில், எந்த இந்தியப்பெண்மணியை, ‘1947ஆம் ஆண்டின் பெண்’ என TIME இதழ் குறிப்பிட்டுள்ளது?

அ. அம்ரித் கெளர்

ஆ. சரோஜினி நாயுடு

இ. இந்திரா காந்தி

ஈ. சாவித்ரிபாய் புலே

  • TIME இதழ், அண்மையில் தனது சிறப்பிதழில், கடந்த நூற்றாண்டை வரையறுத்த, “உலகின் நூற்று ஆற்றல்வாய்ந்த பெண்களின்” பட்டியலை வெளியிட்டது. அதில், விடுதலைப்போராளி அம்ரித் கெளரை ‘1947ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண்’ என்றும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை, ‘1976ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அமைச்சரவையில்சேர்ந்த முதல் பெண்மணியான அம்ரித் கெளர், 10 ஆண்டுகள் சுகாதார அமைச்சராக பணியாற்றினார். இந்திய குழந்தைகள் நலத்துறையை நிறுவிய அவர், பெண் கல்வி, வாக்களிக்கும் உரிமை, மணமுறிவு மற்றும் குழந்தை திருமணத்திற்கு எதிராக பாடுபட்டார்.

4.பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அறிவித்தபடி, நடப்பு நிதியாண்டில் (2019-20) வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் என்ன?

அ. 8.9%

ஆ. 8.5%

இ. 8.2%

ஈ. 8.6%

  • நடப்பு நிதியாண்டுக்கான (2019-20) பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) மீதான வட்டி 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2018-19ஆம் நிதியாண்டுக்கான வட்டி 8.65 சதவீதமாக இருந்துவந்த நிலையில், தற்போது 2019-20ஆம் நிதியாண்டுக்கான வட்டி 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிலான குறைந்த வட்டி விகிதமாகும். மத்திய அறங்காவலர் வாரியக்குழுவானது EPF மீதான வட்டியை நிர்ணயிக்கிறது.

5.மகாராஷ்டிராவின் எந்த வானூர்தி நிலையத்திற்கு, ‘சத்ரபதி சம்பாஜி மகாராஜ் வானூர்தி நிலையம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது?

அ. ஒளரங்காபாத் வானூர்தி நிலையம்

ஆ. கோலாப்பூர் வானூர்தி நிலையம்

இ. புனே சர்வதேச வானூர்தி நிலையம்

ஈ. அகோலா வானூர்தி நிலையம்

  • மகாராஷ்டிரா மாநில அரசு அண்மையில் அம்மாநிலத்தின் ஒளரங்காபாத் வானூர்தி நிலையத்திற்கு, ‘சத்ரபதி சம்பாஜி மகாராஜ் வானூர்தி நிலையம்’ எனப் பெயர் மாற்றியது. சிறந்த மராட்டிய போர்வீரரான சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியின் பெயரால் இந்த வானூர்தி நிலையம் மறுபெயரிடப்பட்டுள்ளது. இவ்வானூர்தி நிலையம், இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்திற்கு சொந்தமானதாகும்.

6.கட்டுப்பாடற்ற ஆளில்லா விமானங்களை எதிர்கொள்வதற்காக, செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இயங்கும் ஆளில்லா விமானத்தை உருவாக்கியுள்ள இந்திய நிறுவனம் எது?

அ. இந்திய அறிவியல் நிறுவனம்

ஆ. அறிவியல் & தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகம்

இ. இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மெட்ராஸ்

ஈ. DRDO ஆய்வகம்

  • எதிரி நாட்டு ஆளில்லா உளவு விமானங்களை செயலிழக்கச் செய்யும் செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழினுட்பத்தில் இயங்கும் ஆளில்லா விமானத்தை மெட்ராஸ் IIT ஆராய்ச்சிக்குழு வடிவமைத்துள்ளது. இந்த ஆளில்லா விமானம், ‘Rogue Drones’ என அழைக்கப்படுகிறது.
  • இவ்விமானம், எதிரி நாட்டு உளவு ஆளில்லா விமானத்தைப் பின்தொடர்ந்துசென்று அதன் GPS நிரலில் மாறுதல்களை உருவாக்கி, அதன் பாதையை மாற்றும் அல்லது பாதுகாப்பாக தரையிறங்கச்செய்யும் திறனுடையதாகும். அதுமட்டுமின்றி காவற்துறை கண்காணிப்பு, பிற பாதுகாப்பு செயல்பாடுகளுக்கும் இந்தச் செயற்கை நுண்ணறிவு ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்த முடியும்.

7.நெருக்கடிக்குள்ளான இந்தியாவின் ஐந்தாவது பெரிய தனியார் துறை வங்கி எது?

அ. இண்டஸ்இண்ட் வங்கி

ஆ. YES வங்கி

இ. IDFC முதல் வங்கி

ஈ. பந்தன் வங்கி

  • ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள YES வங்கியின் மறுசீரமைப்புத் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டது. பாரத ஸ்டேட் வங்கி (SBI) YES வங்கியில் முதலீடு செய்து இந்த மறுசீரமைப்புத் திட்டத்தில் பங்கேற்கவுள்ளது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
  • தேவையான மூலதனத்தை திரட்ட முடியாததால் YES வங்கியின் நிதிநிலை படிப்படியாக சரிவைக் கண்டது. இந்நிலையில், YES வங்கியிலிருந்து வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக `50,000 மட்டுமே எடுக்கமுடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. YES வங்கியின் நிர்வாகத்தையும் தன்வசம் எடுத்துக் கொண்டுள்ள ரிசர்வ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி (SBI) முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி பிரசாந்த் குமாரை அதன் நிர்வாகியாக அறிவித்துள்ளது.

8.வர்த்தகம் & வளர்ச்சிக்கான ஐ.நா மாநாடு (UNCTAD) வெளியிட்டுள்ள அண்மைய மதிப்பீடுகளின்படி, COVID-19 வைரஸ் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் எது?

அ. அமெரிக்கா

ஆ. சீனாவின் தைவான் மாகாணம்

இ. ஐரோப்பிய ஒன்றியம்

ஈ. ஜப்பான்

  • ஐ.நா’இன் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி தொடர்பான மாநாட்டில் (UNCTAD) சீனாவில் பரவிய COVID-19 வைரஸ் பாதிப்பால் உலகின் முன்னணி 15 பொருளாதார நாடுகளில் ஏற்படும் பாதிப்பு பற்றிய மதிப்பீடு வெளியிடப்பட்டது. COVID-19 வைரஸ் பாதிப்பால் சீனாவில் ஏற்பட்டுள்ள உற்பத்தி மந்த நிலையால், உலக அளவில் சுமார் $50 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதன்படி, இந்தியாவில் சுமார் $348 மில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஐரோப்பிய யூனியன் ($15.6 பில்லியன்), அமெரிக்கா ($5.8 பில்லியன்), ஜப்பான் ($5.2 பில்லியன்), தென்கொரியா (3.8 பில்லியன்), தைவான் ($2.6 பில்லியன்) போன்ற நாடுகளின் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

9.எந்தப் பன்னாட்டு அமைப்பின் புதிய தலைமை இயக்குநராக சிங்கப்பூரைச் சார்ந்த டேரன் டாங் (Daren Tang) பரிந்துரைக்கப்பட்டுள்ளார்?

அ. உலக அறிவுசார் சொத்து நிறுவனம்

ஆ. உலக சுங்க அமைப்பு

இ. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு

ஈ. உலக நலவாழ்வு அமைப்பு

  • உலக அறிவுசார் சொத்து நிறுவனத்தின் (World Intellectual Property Organization) ஒருங்கிணைப்புக் குழுவானது அண்மையில் சிங்கப்பூரைச் சார்ந்த டேரன் டாங்கை தலைமை இயக்குநர் பதவிக்கு பரிந்துரைத்தது. WIPO’இன் பொது அவை, ஒருங்கிணைப்புக் குழுவின் நியமனத்தை உறுதிப்படுத்தும்.
  • டாங், தற்போது சிங்கப்பூரின் அறிவுசார் சொத்து அலுவலகத்தின் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். தற்போதைய தலைமை இயக்குநராக பணியாற்றிவரும் பிரான்சிஸ் குர்ரி அவர்களின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் முடிவடைகிறது.

10.சுதிர் பார்கவாவையடுத்து இந்தியாவின் புதிய தலைமை தகவலாணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. பிமல் ஜலன்

ஆ. பிமல் ஜூல்கா

இ. கஸ்தூரி ரங்கன்

ஈ. கோபால சுவாமி

  • மத்திய தகவலாணையத்தின் புதிய தலைமை தகவலாணையராக பிமல் ஜூல்கா (Bimal Julka) நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய தகவலாணையத்தின் தலைமை ஆணையராக இருந்த சுதிர் பார்கவா கடந்த ஜன.11 அன்று ஓய்வுபெற்றார். தலைமை தகவலாணையராக நியமிக்கப்பட்ட பிமல் ஜூல்காவுக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில், குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
  • புதிய தலைமை தகவலாணையராக பிமல் ஜுல்கா பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, மத்திய தகவல் ஆணையத்தில் ஆணையருக்கென அனுமதிக்கப்பட்ட மொத்த 11 இடங்களுள் தற்போது 5 ஆணையர் பணியிடங்கள் மட்டும் காலியாகவுள்ளன.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

Image result for tamilnadu map logo

  • சர்வதேச பெண்கள் நாளையொட்டி, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், “மகளிருக்கு அதிகாரமளித்தல் – சவால்களும், வாய்ப்புகளும்” என்பது பற்றிய கருத்தரங்கமும், கலந்துரையாடலும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இளைஞர் மேம்பாட்டுக்கான இராஜீவ் காந்தி தேசிய நிறுவனத்தில் நடைபெற்றது.
  • தேனியில் அரசு சட்டக்கல்லூரி கட்டடத்துக்காக, முதலமைச்சர் பழனிசாமி, தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலிக்காட்சிமூலமாக அடிக்கல் நாட்டினார்.
  • நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையில் `150 கோடியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க, அரசு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!