Tnpsc

8th & 9th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

8th & 9th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 8th & 9th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

8th & 9th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. ‘குறிப்பிடத்தக்க பொருளாதார இருப்பு கொள்கை’ என்பது எந்த வகை வரியினை விதிக்கப்பயன்படும் ஒரு கருத்துருவாகும்?

அ) வருமான வரி

ஆ) GST

இ) டிஜிட்டல் வரி

ஈ) சுங்க வரி

  • பண மசோதா 2018-19’இல் குறிப்பிடத்தக்க பொருளாதார இருப்பு கொள் -கை அறிமுகப்படுத்தப்பட்டது. தரவு அல்லது மென்பொருளைப் பதிவிறக்குவதுபோன்ற பரிவர்த்தனைகளில், மொத்த கொடுப்பனவுகள் ஒரு குறி -ப்பிட்ட தொகையை அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களைக்காட்டிலும் அதிகமாக இருந்தால், அது ‘வணிக இணைப்பு’ நோ -க்கத்தை விரிவுபடுத்தியது.
  • அண்மையில் இந்தியா, வரி செலுத்துவதற்கு `2 கோடி வருவாய் வரம் -பையும், கூகிள், பேஸ்புக் போன்ற இந்தியா சாராத தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 300,000 பயனர்களின் வரம்பையும் அறிவித்தது.

2. இந்தியா, கீழ்காணும் எந்த நாட்டுடன் இணைந்து $1.4 பில்லியன் டாலர் மதிப்பிலான தனியார் துறை வர்த்தகம் மற்றும் முதலீட்டை அறிவித்துள்ளது?

அ) அமெரிக்கா

ஆ) இங்கிலாந்து

இ) ரஷியா

ஈ) பிரேஸில்

  • இந்தியாவும் இங்கிலாந்தும் 1 பில்லியன் பவுண்டுகள் ($1.4 பில்லியன் டாலர்) தனியார் துறை வர்த்தகம் மற்றும் முதலீட்டை அறிவித்துள்ளன. சீரம் இந்தியா நிறுவனத்தின் 240 மில்லியன் பவுண்டுகள் முதலீடும் இதில் அடங்கும். சீரம் நிறுவனம், கோடஜெனிக்ஸ் உடன் இணைந்து, COVID-19’க்கு எதிராக ஒரு டோஸ் நாசி தடுப்பூசியின் ஆரம்பக்கட்ட சோதனைகளைத்தொடங்கியுள்ளது. இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான வர்த்தகம் ஆண்டுக்கு சுமார் 23 பில்லியன் பவுண்டுகள் ஆக உள்ளது.

3. இந்தியாவில் சாலை & நெடுஞ்சாலைத்துறையில் அனுமதிக்கப்ப -ட்ட அந்நிய நேரடி முதலீட்டின் வரம்பு என்ன?

அ) 10%

ஆ) 20%

இ) 50%

ஈ) 100%

  • இந்தியாவில், சாலைகள் & நெடுஞ்சாலைத்துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. அண்மையில், மத்திய சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகம் அடுத்த ஈராண்டுகளில் `15 இலட்சம் கோடி மதிப்புள்ள சாலை கட்டுமான இலக்கை நிர்ணயித்துள்ளது. நடப்பாண்டில், நெடுஞ்சாலை கட்டுமானத்தின் ஒரு நாள் இலக்கை 40 கிலோமீட்டர் ஆகவும் அவ்வமைச்சகம் கொண்டுள்ளது.

4. அவசரகால பயன்பாட்டு பட்டியலை பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டை அங்கீகரிக்கிற நிறுவனம் எது?

அ) FAO

ஆ) WHO

இ) UNICEF

ஈ) CDC

  • உலக நலவாழ்வு நிறுவனம் அதன் அவசரகால பயன்பாட்டு பட்டியல் நடைமுறையின்மூலம், தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கும் நிர்வகிப்பதற்கும் நாடுகள் தங்கள் சொந்த ஒழுங்குமுறை ஒப்புதல் செயல்முறை -களைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. இது UNICEF மற்றும் நலவாழ்வு அமைப்புகளுக்கு, தேவைப்படும் நாடுகளுக்கு விநியோகிப்பதற்கான தடு -ப்பூசியை வாங்க உதவுகிறது. மாடர்னாவின் COVID-19 தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு WHO சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

5. OECD’இன்படி, கடந்த 2020ஆம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீட்டிற்கான முக்கிய தலமாக நின்ற நாடு எது?

அ) இந்தியா

ஆ) சீனா

இ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஈ) ஐக்கியப் பேரரசு

  • கடந்த 2020ஆம் ஆண்டில், உலகளவில், அந்நிய நேரடி முதலீடானது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 38% குறைந்துள்ளதாகவும் OECD (பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு) தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்க நாடுகளை முந்தி, சீனா, அந்நிய நேரடி முதலீட்டிற்கான முக்கிய தலமாக இருந்தது.

6. Yamatosaurus izanagii என்ற புதிய வகை வாத்தலகு டைனோசர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாடு எது?

அ) சீனா

ஆ) கிரேக்கம்

இ) ஜப்பான்

ஈ) இந்தோனேசியா

  • ஜப்பானின் தெற்கு தீவுகளில் ஒன்றில் ஹாட்ரோசார் அல்லது வாத்தலகு டைனோசர், Yamatosaurus izanagii என்ற புதிய இனத்தை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் குழு அடையாளம் கண்டுள்ளது. இந்தக்கண்டுபிடிப்பு இவ்விலங்குகள் ஆசியாவிலிருந்து வட அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த ஹாட்ரோசாரின் இடம்பெயர்வுபற்றிய புதிய தகவல்களை கூறுகின்றன. இவ்வுயிரினங்கள் நிமிர்ந்து நடப்பதிலிருந்து நான்கு கால்களில் நடப்பது வரை பரிணமித்தன என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.

7. எந்த நாட்டின் தேசிய பெருங்கடல் & வளிமண்டல நிர்வாகம், ‘புதிய காலநிலை இயல்புகளை’ வெளியிட்டுள்ளது?

அ) அமெரிக்கா

ஆ) ரஷியா

இ) சீனா

ஈ) பிரான்ஸ்

  • அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் புதிய காலநிலை இயல்புகளை வெளியிட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க நாடுகள் முழுவதும் வானிலை வெப்பமடைந்து வருவதாக இத்தரவுகள் வெளிப்படுத்துகிறன. NOAA, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை காலநிலை இயல்புகளை வெளியிடுகிறது. மேலும் அவை, கடந்த 30 ஆண்டுகளின் தரவையும் பிரதிபலிக்கின்றன.
  • சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவுத்தொகுப்பு, 1991-2020 வரையிலான சராசரி வெப்பநிலை, படிவு மற்றும் மழையை உள்ளடக்கியதாகும்.

8. INS கொல்கத்தா, திரவ மருத்துவ உயிர்வளி மற்றும் மருத்துவப் பொருட்களைக் கொண்டுவருவதற்காக எந்த நாட்டிலுள்ள ஷுவைக் துறைமுகத்தை சென்றடைந்தது?

அ) ஐக்கிய அரபு அமீரகம்

ஆ) குவைத்

இ) ஓமன்

ஈ) இஸ்ரேல்

  • ஆபரேஷன் சமுத்ர சேது II’இன் ஒருபகுதியாக, INS கொல்கத்தா, குவைத் துறைமுகமான ஷுவைக்கிற்கு சென்று அங்கிருந்து திரவ மருத்துவ உயிர்வளி மற்றும் மருத்துவ பொருட்களை கொண்டுவரும். முன்னதாக இக்கப்பல் கத்தார் தோகாவிலிருந்து 200 பாட்டில்கள் உயிர்வளி மற்றும் 43 உயிர்வளி செறிவாக்கிகளை ஏற்றிக்கொண்டது.
  • நட்புநாடுகளிலிருந்து திரவமருத்துவ உயிர்வளியைப்பெற்றுவர இந்திய கடற்படை ஏழு இந்திய கடற்படைக் கப்பல்களை அனுப்பியுள்ளது.

9. 2021 மே நிலவரப்படி, மிக நீண்டகாலம் பணியாற்றிய பெண் முதலமைச்சர் யார்?

அ) ஜெ ஜெயலலிதா

ஆ) மம்தா பானர்ஜி

இ) மாயாவதி

ஈ) ஷீலா தீட்சித்

  • மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக மேற்கு வங்க மாநில முதல் அமைச்சராக பதவியேற்றார். அவர், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்துவருகிறார். மூத்த தலைவர் ஷீலா தீட்சித், தில்லியின் மிகநீண்டகால முதலமைச்சராகவும், எந்தவொரு இந்திய மாநிலத்தைச் சார்ந்த முதலமைச்சர்களிலும் மிக நீண்டகாலம் பணியாற்றிய பெண் முதலமைச்சராகவும் உள்ளார். அவர், 1998ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகள் முதலமைச்சராக பணியாற்றியுள்ளார்.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘மேபிளவர் 400’ என்றால் என்ன?

அ) சுரங்கப்பணி மேற்கொள்ளும் ரோபோ

ஆ) செயற்கை நுண்ணறிவு கப்பல்

இ) சூரிய ஆய்வுத் திட்டம்

ஈ) தடுப்பூசி வழங்கும் ரோபோ

  • ‘மேபிளவர் 400’ உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு கப்பலாகும். இந்தக்கப்பல், சூரிய தகடுகளால் மூடப்பட்டுள்ளது. கடல்மாசுபாடு குறித்து ஆய்வுசெய்து, தண்ணீரில் உள்ள நெகிழிகளை பகுப்பாய்வு செய்து நீர்வாழ் பாலூட்டிகளையும் இது கண்காணிக்கும். இந்தியா, அமெரிக்கா, சுவிச்சர்லாந்துபோன்ற பல்வேறு நாடுகளைச்சார்ந்த நூற்றுக்கணக்கான நபர்கள் இந்தக் கப்பல் தயாரிப்பில் ஈடுபட்டனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இறையன்பு நியமனம்

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச்செயலாளராக வெ இறையன்பு இஆப நியமிக்கப்பட்டுள்ளார். இதற்குமுன் தலைமைச்செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு செய்தித்தாள் கழகத்தின் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

எட்டாவது உலகத்தமிழ் மாநாடு: தமிழகத்தில் கடந்த 1995’இல் எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டின் தனி அலுவலராக வெ இறையன்பு இஆப நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, நகராட்சி நிர்வாக இணை ஆணையர், செய்தி & மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஆகிய பதவிகளை வகித்தார்.

அரசு நிர்வாகத்தில் மட்டுமின்றி எழுத்தாளர், கட்டுரையாளர் என இலக்கிய -த்தடத்திலும் முத்திரை பதித்த, வெ இறையன்பு, தமிழ்நாடு அரசின் 48ஆவது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.

2. பெண்களுக்கு இலவசப் பயணம் ஏன்? அரசு உத்தரவில் விளக்கம்

பெண்களுக்கு இலவசமாகப் பயணிக்க அனுமதியளித்தது ஏன்? என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து சமூக நலத்துறைச் செயலர் தயானந்த் கட்டாரியா வெளியிட்ட உத்தரவு: 2021ஆம் ஆண்டு பொதுத்தோ்தலுக்கான முதலமைச்சரின் தேர்தல் அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் இலவசமாக உள்ளூர்ப்பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லா பயண வசதி அளிக்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். தற்போது மாறிவரும் சமூக, பொருளாதார சூழலில், பெண்கள் உயர்கல்வி பெறுவதற்கும், குடும்பத்தின் பொருளாதார தேவையை நிறைவேற்றும் பொருட்டு பணிகளுக்குச் செல்வதற்கும், சுய தொழில் புரிவதற்கும் போக்குவரத்துத் தேவை இன்றியமையாதது ஆகும்.

பெண்களின் பங்களிப்பை உயர்த்துவது அவசியம்: தமிழ்நாட்டில் பணிபுரியும் ஆண்களின் விகிதத்தைக் கணக்கில் கொள்ளும்போது பணிபுரியும் பெண்களின் விகிதம் பெருமளவு குறைவாகவே உள்ளது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பணிகளில் பெண்களின் பங்களிப்பு 31.8 சதவீதமாகவும், ஆண்களின் பங்களிப்பு 59.3 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்குப் பெண்களும் சிறப்பான பங்களிப்பை நல்க இயலும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், பணிகளில் பெண்களின் பங்களிப்பு சதவீதத்தை உயர்த்த வேண்டியது அவசியமாகிறது. பொருளாதார தேவைக்கு உகந்தது: உயா்கல்வி கற்பதற்காகவும், பணிநிமித்தமாகவும், பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு பாதுகாப்பான பயணங்களை அமைத்துக் கொடுப்பதும், பொதுப் போக்குவரத்து பயணங்களை ஊக்குவிப்பதும், பெண்களின் சமூகப்பொருளாதாரத் தேவைக்கு உகந்ததாக அமையும்.

சாதாரணக் கட்டணப் பேருந்தில் அனுமதி: இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் பணிபுரியும் மகளிர் மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவிகள் உள்ளிட்ட அனைத்துப் பெண்களும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3. வங்கிகள் வழங்கிய கடன் 5.71% உயர்வு

வங்கிகள் வழங்கிய கடன் 2021 ஏப்ரல் 23ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் 5.71 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஏப்.23 தேதியுடன் நிறைவடைந்த இருவார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் 5.71% அதிகரித்து `108.60 லட்சம் கோடியை எட்டியது. அதேபோன்று வங்கிகள் திரட்டிய டெபாசிட்டும் 10.28% வளர்ச்சி கண்டு `151.34 லட்சம் கோடியைத் தொட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்.24ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் `102.73 லட்சம் கோடியாக -வும், திரட்டிய டெபாசிட் `137.23 லட்சம் கோடியாகவும் இருந்தன.

கடந்த 2020-21 நிதியாண்டில் வங்கிகள் வழங்கிய கடன் 5.56 சதவீதமு -ம், திரட்டிய டெபாசிட் 11.4 சதவீதமும் உயர்ந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

4. மே 9 – உலக அன்னையர் நாள்.

5. உலகின் மிகப்பெரிய சரக்குவிமானம்மூலம் உயிர்வளி ஆக்கிகளை அனுப்பியது பிரிட்டன்

உலகின் மிகப்பெரிய சரக்குவிமானம்மூலம் உயிர்வளி ஆக்கிகளை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா 2ஆவது அலையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. கரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உலக நாடுகள் இந்தியாவுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன.

அவ்வகையில் 18 டன் உயிர்வளி ஆக்கிகள் மற்றும் 1,000 செயற்கை சுவாச வழங்கிகளை இந்தியாவுக்கு அனுப்பிவைத்துள்ளதாக பிரிட்டன் வெளியுறவு, காமன்வெல்த் மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. இந்த உயிர்காக்கும் உபகரணங்கள் ஏற்றப்பட்ட உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டனோவ்-124 பெல்பாஸ்ட் நகரிலிருந்து புறப்பட்டுள்ளது.

1. ‘Significant Economic Presence (SEP) principle’, is a concept used to levy which category of tax?

A) Income Tax

B) GST

C) Digital Tax

D) Customs Duty

  • Significant Economic Presence (SEP) principle was introduced in the Finance Bill 2018–19. It widened the scope of ‘business connection’ to include download of data or software, if aggregate payments from such transactions exceed a prescribed amount, or a prescribed number of users. India recently notified a revenue threshold of Rs 2 crore and a limit of 300,000 users for non–resident technology firms such as Google, Facebook, to pay tax in India.

2. India announced a USD 1.4 billion of private–sector trade and investment, with which country?

A) US

B) UK

C) Russia

D) Brazil

  • India and UK announced 1 billion pounds (USD1.4 billion) of private–sector trade and investment. It also includes a 240 million pounds investment by the Serum Institute of India The Serum Institute, in collaboration with Codagenix, has begun early–stage trials of a one–dose nasal vaccine against Covid–19. Trade between the India and UK accounts for about 23 billion pounds annually.

3. What is the limit of FDI permitted in the Road and Highways Sector in India?

A) 10%

B) 20%

C) 50%

D) 100%

  • In India, 100% FDI has been allowed for roads and highways sector allowed under the automatic route. Recently, Union Road Transport and Highways Ministry has set a target of road construction worth Rs 15 lakh crores in next two years. The Ministry also aims to achieve the target of 40 kilometres per day of highways construction, in the current year.

4. Which institution approves the emergency use of vaccines around the world, using the Emergency Use Listing (EUL)?

A) FAO

B) WHO

C) UNICEF

D) CDC

  • The World Health Organisation, through its Emergency Use Listing (EUL) procedure, allows countries to use their own regulatory approval processes to import and administer the vaccine. It also enables UNICEF and Health Organizations to procure the vaccine for distribution to needy countries. WHO has recently given the approval for emergency use of Moderna’s COVID–19 vaccine.

5. As per OECD, which country stood as the top destination for FDI in 2020?

A) India

B) China

C) USA

D) UK

  • The OECD (Organisation for Economic Co–operation and Development) has reported that FDI globally has plunged to a 15 year low in the year 2020 and has dropped by 38% compared to previous years. Among the nations, China has emerged as the leading FDI destination in 2020 and has overtaken the USA in this regard.

6. A new species of duck–billed dinosaur, Yamatosaurus izanagii has been discovered in which country?

A) China

B) Greece

C) Japan

D) Indonesia

  • A team of palaeontologists has identified a new species of hadrosaur or duck–billed dinosaur, Yamatosaurus izanagii, on one of the southern islands of Japan. This discovery suggests new information about hadrosaur migration that the animals migrated from Asia to North America. It also highlights that the giant creatures evolved from walking upright to walking on all four limbs.

7. Which country’s National Oceanic and Atmospheric Administration released the ‘New Climate Normals’?

A) US

B) Russia

C) China

D) France

  • The United States’ National Oceanic and Atmospheric Administration has released the new climate normal. The data reveal that weather across the US is getting warmer. NOAA releases the climate normals every 10 years and they reflect the data from the past 30 years. The recently released data set comprises of the average temperature, precipitation and rainfall from 1991 to 2020.

8. INS Kolkata arrived Port Shuwaikh, to bring Liquid Medical Oxygen and medical supplies, from which country?

A) UAE

B) Kuwait

C) Oman

D) Israel

  • As a part of the Operation Samudra Setu II, INS Kolkata arrived Port Shuwaikh, Kuwait and will bring Liquid Medical Oxygen and medical supplies from Kuwait. Earlier the ship had boarded 200 bottles of oxygen and 43 oxygen concentrators from Doha, Qatar. Indian Navy has deployed seven Indian Naval ships for shipment of liquid medical oxygen from friendly countries.

9. Who is the longest–serving female Chief Minister of any Indian state, as of May 2021?

A) J Jayalalitha

B) Mamata Banerjee

C) Mayavati

D) Sheila Dikshit

  • Mamata Banerjee was sworn as Bengal Chief Minister for the third time. She has been the Chief Minister of the state since 2011. Veteran leader Sheila Dikshit is the longest–serving Chief Minister of Delhi, as well as the longest–serving female chief minister of any Indian state. She served for a period of 15 years since 1998.

10. What is ‘Mayflower 400’, which was making news recently?

A) Mining Robot

B) Artificial Intelligence Ship

C) Solar Probe

D) Vaccine Delivering Robot

  • ‘Mayflower 400’ is the world’s first Artificial intelligent ship. This ship is covered in solar panels and will study marine pollution and analyse plastic present in water and track aquatic mammals. Hundreds of individuals from different countries such as India, United States and Switzerland, were involved in the making of this ship.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!