Tnpsc

8th & 9th November 2020 Current Affairs in Tamil & English

நடப்பு நிகழ்வுகள்

1. உள்நாட்டிலேயே கட்டப்பட்டு அண்மையில் இந்திய கடலோரக் காவல்படையில் புதிதாக சேர்க்கப்பட்ட கப்பலின் பெயர் என்ன?

அ. ICG தட் ரக்ஷக்

ஆ. ICG ஷெளரியா

இ. ICG யுவா

ஈ. ICG C–452

  • உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட, ‘ICG C-452’ என்ற புதிய கப்பல் இந்திய கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலை இந்திய கடலோரக் காவல்படையின் கூடுதல் தலைமை இயக்குநர் இணைத்து வைத்தார். பிரதமர் மோடியின் “இந்தியாவில் தயாரிப்போம்” மற்றும் “தற்சார்பு இந்தியா” பற்றிய பார்வைக்கு ஏற்ப சூரத்தின் லார்சன் & டூப்ரோ நிறுவனம் இந்தக் கப்பலை வடிவமைத்து கட்டியுள்ளது.

2. வானியல் துறையில் எந்த நாட்டுனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது?

அ. ஜெர்மனி

ஆ. ஹாலந்து

இ. போர்ச்சுகல்

ஈ. ஸ்பெயின்

  • இந்தியா மற்றும் ஸ்பெயினுக்கிடையே வானியற்பியல் துறையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்பந்தம், பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனம் மற்றும் ஸ்பெயினில் உள்ள வானியற்பியல் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தாகும்.
  • புதிய அறிவியல் முடிவுகள், புதிய தொழில்நுட்பங்கள், கூடுதலான அறிவியல் உரையாடல் & பயிற்சியின் மூலம் திறன் வளர்த்தல் மற்றும் கூட்டு அறிவியல் திட்டங்கள் உள்ளிட்டத் துறைகளில் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

3. எந்த நாட்டின் தேர்தல் ஆணையம், “பன்னாட்டு தேர்தல் பார்வையாளர்கள் திட்டம்” என்றவொன்றை ஏற்பாடு செய்துள்ளது?

அ. இந்தியா

ஆ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ. ஜப்பான்

ஈ. ஆஸ்திரேலியா

  • பீகார் சட்டப்பேரவை பொதுத்தேர்தலை பார்வையிடுவதற்கான ‘பன்னாட்டு தேர்தல் பார்வையாளர்கள் திட்டம் 2020’ஐ இணையம் வாயிலாக நவம்பர்.5-7 வரை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது.
  • அயல்நாட்டுத் தேர்தல் மேலாண்மை அமைப்புகள் மற்றும் அமைப்புகளுக்காக இந்தத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரநிதிதிகள் பன்னாட்டு ஐடிஇஏ, தேர்தல் முறைமைகளுக்கான பன்னாட்டு அறக்கட்டளை மற்றும் உலக தேர்தல் நிறுவனங்களின் சங்கம் ஆகியவையும் இணையவழியில் நடந்த இந்தப் ‘பன்னாட்டு தேர்தல் பார்வை -யாளர்கள் திட்டம் – 2020’க்கு அழைக்கப்பட்டனர்.

4. இடம்பெயர்ந்த பறவைகளை, குறிப்பாக அமுர் வல்லூறுகளை வேட்டையாடுதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள மாநில அரசு எது?

அ. ஹிமாச்சல பிரதேசம்

ஆ. திரிபுரா

இ. மேற்கு வங்கம்

ஈ. ஒடிசா

  • திரிபுரா மாநிலத்தில் குளிர்காலம் தொடங்கவுள்ள வேளையில் புலம்பெயர்ந்த பறவைகளை, குறிப்பாக அமுர் வல்லூறுகளை வேட்டையாடுவதற்கு எதிராக அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமுர் வல்லூறுகள் உள்ளிட்ட புலம்பெயர்ந்த பறவைகள், கடந்த 1972’இல் இயற்றப்பட்ட வனவுயிரி பாதுகாப்பு சட்டத்தின்கீழ் உள்ளன என்பதை அறிவிக்க வனத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புலம்பெய -ர்ந்த பறவைகளை பாதுகாக்க, நாகாலாந்து ஏற்கனவே இதுபோன்ற ஆணையை பிறப்பித்துள்ளது.

5. 2020 நவம்பரில், மெய்நிகராக தொழில்நுட்ப உச்சிமாநாட்டை நடத்தவுள்ள இந்திய நகரம் எது?

அ. சென்னை

ஆ. பெங்களூரு

இ. ஹைதராபாத்

ஈ. கோவா

  • பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாட்டின் 23ஆவது பதிப்பு மெய்நிகராக்க இந்த ஆண்டு நவ.19 முதல் 21 வரை நடைபெறவுள்ளது. இந்த உச்சிமாநாட்டை கர்நாடக மாநில அரசின் மின்னணு, தகவல் தொழினுட்பம், உயிரி-தொழினுட்பம் மற்றும் அறிவியல் & தொழினுட்பத்துறை ஏற்பாடு செய்யவுள்ளது. இவ்வுச்சிமாநாட்டில் பல தொழினுட்ப தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6. அண்மையில் உணவு விலைக் குறியீட்டை வெளியிட்ட அமைப்பு எது?

அ. உலக வங்கி

ஆ. உணவு மற்றும் உழவு அமைப்பு

இ. உலக பொருளாதார மன்றம்

ஈ. பன்னாட்டுச் செலவாணி நிதியம்

  • அண்மையில் உணவு விலைக் குறியீட்டை உணவு மற்றும் உழவு அமைப்பு (FAO) வெளியிட்டுள்ளது. இந்தக் குறியீட்டு எண்ணானது அக்டோபர் மாதத்தில் 100.9 புள்ளிகளை எட்டியதாக ஐநா உணவு நிறுவனம் அண்மையில் அறிவித்தது. அது இந்த ஆண்டில் எட்டப்பட்ட அதிகபட்ச புள்ளியாகும்.
  • தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பால் பொருட்கள், இறைச்சி மற்றும் சர்க்கரை ஆகியவற்றில் மாதந்தோறும் ஏற்படும் விலை மாற்றங்களை இந்தக் குறியீடு அளவிடுகிறது.

7. ஆந்திர பிரதேச மாநிலத்தில், ‘Go Electric’ பரப்புரையத் தொடங்கியுள்ள அமைப்பு எது?

அ. இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை

ஆ. இந்திய தர நிர்ணய அமைவனம்

இ. எரிசக்தி திறன் அமைவனம்

ஈ. நடுவண் எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனம்

  • எரிசக்தி திறன் அமைவனமானது (BEE) ஆந்திர பிரதேச மாநிலத்தில், ‘Go Electric’ என்ற பரப்புரையை முன்னெடுத்துள்ளது. மின்னேற்று நிலையங்களை அமைப்பதற்கான மாநிலத்தின் மைய முகமையாக ஆந்திர பிரதேச மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டுக்கழகத்தை அம்மாநில அரசு நியமித்துள்ளது. மாநிலத்தில் 400 மின்னேற்று நிலையங்களை நிறுவவும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘சார்-சபோரிஸ்’ என்பதுடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. மேற்கு வங்கம்

ஆ. ஒடிசா

இ. அஸ்ஸாம்

ஈ. பஞ்சாப்

  • சார்-சபோரிஸ் என்பவை பிரம்மபுத்திரா ஆற்றில் அமைந்துள்ள மாறிவரும் தீவு நிலப்பரப்பாகும். அங்கு, ‘மியாஸ்’ என்று குறிப்பிடப்படும் பெங்காலி வம்சாவளியைச்சார்ந்த இசுலாமியர்கள் முதன்மையாக வசித்து வருக்கின்றனர். சார்-சப்போரிஸில் வாழும் இசுலாமிய மக்களின் பண்பாடு & பாரம்பரியத்தை பிரதிபலிக்கும், ‘மியா’ அருங்காட்சியகத்தை விரைவாக நிறுவுமாறு அஸ்ஸாம் மாநிலத்தின் பல்வேறு மக்கள் அம்மாநில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

9. மின்வெளிக்குற்றம் தொடர்பான தகவல்தொடர்புகளை எளிதாக்குவதற்காக இரு புதிய சேவைகளை உருவாக்கியுள்ள பன்னாட்டு அமைப்பு எது?

அ. பன்னாட்டுக் காவலகம்

ஆ. நடுவண் புலனாய்வுச் செயலகம்

இ. தேசிய புலனாய்வு முகமை

ஈ. இந்திய உளவுத்துறை

  • சட்ட அமலாக்க நிறுவனங்களிடையே மின்வெளிக்குற்றம் தொடர்பான தகவல்தொடர்புகளை எளிதாக்க பன்னாட்டுக் காவலகம் இரண்டு பாதுகாப்பான மற்றும் நெகிழ்வான சேவைகளை உருவாக்கியுள்ளது.
  • அவற்றில் ஒன்று மின்வெளிக்குற்றம் குறித்த அறிவு பரிமாற்ற பணியிடம் (Cybercrime Knowledge Exchange Workspace), மற்றொன்று கூட்டிணைந்த மின்வெளிக்குற்ற இயங்குதளம் – செயல்பாடு (Cybercrime Collaborative Platform-Operation). முந்தையது பொதுவான, காவல்சாராத தகவல்களைக் கையாளுகிறது மற்றும் தொடர்புடைய அனைத்து பயனர்களுக்குமானதாக அது இருக்கும். அதேசமயம் பிந்தையது தேர்ந்தெடுக்கப்பட்ட சில முகமைகளுக்கானதாக மட்டும் இருக்கும்.

10. “சுற்றுப்புறங்களை பேணுதல்” என்ற சவாலை அறிமுகப்படுத்தியுள்ள அமைச்சகம் எது?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ. வெளியுறவு அமைச்சகம்

இ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ஹர்தீப் சிங் புரி மூன்று புதிய திட்டங்களை புது தில்லியில் தொடக்கி வைத்தார். இளம் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஏற்றவாறு மாநகரங்களை உருவாக்குவதில் கவனஞ்செலுத்தும் “சுற்றுப்புறங்களைப் பேணுதல்” என்ற சவால்; மாநகரங்களின் தரவு சூழலியலை மதிப்பிடுவதற்கான கட்டமைப்பு; மற்றும் 100 பொலிவுறு நகரங்களின் மாநகர தரவு அலுவலர்களுக்கான இணையம் சார்ந்த பயிற்சித்திட்டம் ஆகியவை ஆகும்.
  • 3 வருட திட்டமான ‘சுற்றுப்புறங்களைப் பேணுதல்’ என்ற சவால், இளஞ்சிறார்கள், பராமளிப்பாளர்கள் / குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கான தீர்வுகளை உருவாக்குவதில் மாநகரங்க -ளுக்கு ஆதரவளிக்கும். பெர்னார்ட் வான் லியர் பவுண்டேசன், நெதர்லாந்தின் ஆதரவோடும், டபுள் யூ ஆர் ஐ இந்தியாவின் தொழில்நுட்பத்தின் ஆதரவோடும் இந்த சவால் நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

  • ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உள்நாட்டு சுற்றுலாத் தலங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் நடைபெறும் எனது தேசத்தைப் பார் என்ற இணைய கருத்தரங்கு தொடரில் ‘சென்னையின் கதைகள்’ என்ற தலைப்பில் 2020 நவம்பர்.7 அன்று கருத்தரங்கு நடைபெற்றது.
  • முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாத 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு எழுத்தறிவை வழங்கிட பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின்மூலம், “கற்போம் எழுதுவோம் இயக்கம்” என்ற புதிய வயது வந்தோர் கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • நாட்டில் நீர் மேலாண்மையை சிறப்பாகக் கையாண்ட மாநிலங்களுக்கான தேசிய விருதுப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. ‘சிறந்த மாவட்டங்கள்’ அடிப்படையில், தென் மாநிலப் பிரிவில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை வேலூர், கரூர் மாவட்டங்கள் பிடித்துள்ளன. ‘ஆறு புதுப்பித்தல்’ என்ற வகையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதேபோல், நீர் பாதுகாப்பு என்ற வகையில் இரண்டாவது இடத்துக்கு பெரம்பலூர் மாவட்டமும், நீர் மேலாண்மையில் சிறந்த நகர்ப்புற உள்ளாட்சிக்கான விருதில் இரண்டாம் இடத்துக்கு மதுரை மாநகராட்சியும் தேர்வுசெய்யப்பட்டுள்ளன.
  • நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில், நடமாடும் தேநீர் வாகனங்களை (INDCO Tea Van) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
  • ‘தமிழ்நாடு நாள்’ விழாவையொட்டி, கடந்த 2019ஆம் ஆண்டுக்கான “தமிழ்ச்செம்மல்” விருதுகளுக்கு தேர்வுசெய்யப்பட்ட முப்பத்தேழ்வருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி க பழனிச்சாமி விருதுகளை வழங்கினார்.
  • வாணியம்பாடியில், தோல் பதனிடுதல் துறையில் பல்நோக்கு திறன் மேம்பாட்டு மையம் அமைத்திட, மத்திய காலணி பயிற்சி நிறுவனத்திற்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
  • மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள AIIMS மருத்துவமனையின் தலைவராக வி எம் கடோச் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது புதுச்சேரி JIPMER மருத்துவமனையின் தலைவராக உள்ளார். மேலும், MGR மருத்துவப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் Dr சுதா ஷேஷையன், மத்திய சுகாதார துறையின் தலைமை இயக்குநர் மற்றும் கூடுதல் செயலர், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், Dr சண்முகம் சுப்பையா – KMC மருத்துவக் கல்லூரியின் தலைமை பேராசிரியர் உள்ளிட்டோர் மதுரை AIIMS மருத்துவமனையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு வகித்த வேளாண் துறையானது, உயர்கல்வித்துறை அமைச்சர் K P அன்பழகனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி க பழனிச்சாமி அளித்த பரிந்துரையை அடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

1. What is the name of the new indigenously built ship commissioned in the Indian Coast Guard?

[A] ICG Tat Rakshak

[B] ICG Shaurya

[C] ICG Yuva

[D] ICG C–452

  • The new indigenously designed and built ship named ICG C–452 has been commissioned into the Indian Coast Guard. The ship was commissioned by Additional Director General (Western Seaboard) of Indian Coast Guard. The ship was designed and built by Larsen & Toubro, Surat in lines with the Prime Minister Narendra Modi’s vision of “Make in India” and “Atmanirbhar Bharat”.

2. India has approved a MoU with which county in the field of Astrophysics?

[A] Germany

[B] Holland

[C] Portugal

[D] Spain

  • The Union Cabinet headed by Prime Minister has approved for an MoU between Indian Institute of Astrophysics (IIA), Bengaluru and its counterpart of Spain. The MoU aims to develop scientific and technical collaborations in astronomy field. The agreement is expected to enhance capacity building through increased scientific interaction and training between the two countries.

3. The Election Commission of which country has organised ‘International Virtual Election Visitors Programme’?

[A] India

[B] United States of America

[C] Japan

[D] Australia

  • Election Commission of India is organizing a three–day International Virtual Election Visitors Programme. In the context of the ongoing Bihar Legislative Assembly Elections, the programme is being organised for Foreign Election Management Bodies and Organizations. Delegates from over 40 countries across the world are invited.

4. Which Indian state has issued warning against hunting of migratory birds, especially Amur falcons?

[A] Himachal Pradesh

[B] Tripura

[C] West Bengal

[D] Odisha

  • Tripura has recently issued warning against hunting of migratory birds, especially Amur falcons, amidst the onset of winter. The Forest Department is set to issue order to inform that the migratory birds including the Amur falcons are covered under the Wildlife Protection Act enacted in 1972. The state of Nagaland had already issued an order to save the migratory birds.

5. Which Indian city is set to host a virtual Tech Summit in the month of November 2020?

[A] Chennai

[B] Bengaluru

[C] Hyderabad

[D] Goa

  • The 23rd edition of Bengaluru Tech Summit (BTS) is to be held virtually between November 19 and 21, this year. The summit will be organised by the Department of Electronics, Information Technology, Bio Technology and Science and Technology of the State Government of Karnataka. Several Technology Leaders are expected to participate in the summit.

6. Food Price Index, which was seen in news recently, is released by which organisation?

[A] World Bank

[B] Food and Agriculture Organization

[C] World Economic Forum

[D] International Monetary Fund

  • The Food Price Index, which was seen in news recently, is released by the Food and Agriculture Organization (FAO). The United Nations Food agency has recently announced that the index reached 100.9 points in October, which is the highest since January this year. The index measures monthly changes for a basket of cereals, oilseeds, dairy products, meat and sugar.

7. Which organisation has launched ‘Go Electric’ campaign in Andhra Pradesh?

[A] Indian Renewable Energy Development Agency

[B] Bureau of Energy Efficiency

[C] Bureau of Indian Standards

[D] Central Power Research Institute

  • The Bureau of Energy Efficiency (BEE) has launched the ‘Go Electric’ campaign in the state of Andhra Pradesh. The state government has nominated the Non–conventional Energy Development Corporation of Andhra Pradesh Limited (NREDCAP), as the state nodal agency to set up charging stations. The state government has also planned to launch 400 charging stations in the state.

8. ‘Char–chaporis’, which were seen in news recently, is associated with which state?

[A] West Bengal

[B] Odisha

[C] Assam

[D] Punjab

  • Char–chaporis are shifting riverine islands of the Brahmaputra river and they are primarily inhabited by the Muslims of Bengali–origin referred to as ‘Miyas’. Several people of Assam were requesting the government to fast–track the establishment of Miya museum reflecting the culture and heritage of the people living in char–chaporis.

9. Which international organisation has created two new services to facilitate cybercrime related communication?

[A] INTERPOL

[B] Central Bureau of Investigation

[C] National Investigation Agency

[D] Intelligence Bureau

  • Two secure and flexible services have been created by the Interpol to facilitate cybercrime related communication among law enforcement agencies. One of them is the Cybercrime Knowledge Exchange workspace and the other is Cybercrime Collaborative Platform–Operation. The former handles general, non–police information and is open to all relevant users whereas the latter is restricted to select few agencies only.

10. Which Ministry has launched the “Nurturing Neighbourhoods Challenge”?

[A] Ministry of Home Affairs

[B] Ministry of External Affairs

[C] Ministry of Housing and Urban Affairs

[D] Ministry of Defence

  • Hardeep Singh Puri, Minister of State (Independent Charge) for Ministry of Housing & Urban Affairs launched three initiatives, namely, the Nurturing Neighborhoods Challenge focusing on shaping cities for young children and their families; the Data Maturity Assessment Framework to evaluate data ecosystems of cities; and an online training programme for City Data Officers of 100 Smart Cities in an event.
  • The Nurturing Neighborhoods Challenge, a 3–year initiative, will support cities to develop, pilot, and scale solutions that enhance the quality of life of young children, their caregivers and families in the public realm. The challenge is conducted with the support of the Bernard van Leer Foundation, Netherlands with technical support from WRI lndia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!