Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

8th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

8th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 8th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

8th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. ‘பூர்வகுடி மற்றும் பழங்குடி மக்களின் வன ஆளுகை’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ) உலக வங்கி

ஆ) உணவு & உழவு அமைப்பு

இ) ஐக்கிய நாடுகள்

ஈ) ஆசிய வளர்ச்சி வங்கி

  • ஐநா அவையின் உணவு மற்றும் உழவு அமைப்பானது அண்மையில், ‘பூர்வீக மற்றும் பழங்குடி மக்களின் வன ஆளுகை’ என்ற அறிக்கையை வெளியிட்டது. அறிக்கையின்படி, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் காடழிப்பு விகிதங்கள், பூர்வீக மற்றும் பழங்குடி பகுதிகளில் கணிசமாகக் குறைவாக உள்ளன.
  • லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பூர்வகுடிகளின் மேம்பாட்டுக்கான நிதியம், இந்த அறிக்கையை கூட்டாக இணைந்து வெளியிட்டது.

2. ‘CACTus மற்றும் CIISCO’ என்பது அறிவியல் & தொழில்நுட்பத் துறையால் தொடங்கப்பட்ட மென்பொருளாகும். இது எத்துறையுடன் தொடர்புடையது?

அ) சூரிய திட்டம்

ஆ) நீடித்த வேளாண்மை

இ) இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பு

ஈ) நீர் திட்டம்

  • சூரியனிலிருந்து வெளியேற்றப்படும் வளியின் மிகப்பெரிய குமிழ்களை கண்டறிய அறிவியலாளர்கள் ஒரு புதிய நுட்பத்தை உருவாக்கியுள்ளதா -க அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது. இப்புதிய நுட்பம், இந்தியாவின் முதல் சூரியனை ஆராயும் திட்டமான ஆதித்யா-L1’இல் பயன்படுத்தப்படும். Computer Aided CME Tracking Software (CACTus) மற்றும் CMEs Identification in Inner Solar Corona (CIISCO) ஆகிய இரு மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

3. COVID-19’க்கு எதிரான உலகின் முதல் விலங்கு தடுப்பூசியை அறிவித்துள்ள நாடு எது?

அ) சீனா

ஆ) ரஷியா

இ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஈ) இஸ்ரேல்

  • COVID-19’க்கு எதிரான உலகின் முதல் விலங்கு தடுப்பூசி ரஷியாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கு, ‘Carnivac-Cov’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாட்டின் வேளாண் பாதுகாப்பு கண்காணிப்புக் குழுவான ரோ -சல்கோஸ்னாட்ஸரின் கூற்றுப்படி, தடுப்பூசிபோட்ட ஆறு மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நீடிக்கும். இந்தத் தடுப்பூசியின் பயன்பாடு வைரஸ் பிறழ்வுகளின் வளர்ச்சியைத் தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4. ‘முக்திஜோதா உதவித்தொகை திட்டம்’ என்பது கீழ்காணும் எந்த நாட்டின் மாணாக்கர்களுக்காக இந்திய அரசால் வழங்கப்படுகிறது?

அ) நேபாளம்

ஆ) வங்காளதேசம்

இ) இலங்கை

ஈ) மியான்மர்

  • இந்திய அரசு தனது புதிய முக்திஜோதா உதவித்தொகை திட்டத்தின் கீழ் வங்காளதேச விடுதலைப் போராளிகளின் 2000 குடும்பத்தினருக்கு உதவித்தொகை அறிவித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம், 5 ஆண்டுகாலத்திற்குள், வங்கதேசத்தில் உள்ள 10,000 மாணவர்களுக்கு பயனளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு, மேல்நிலை மற்றும் இளங்கலை பிரிவுகளைச் சேர்ந்த தலா 1000 மாணவர்களுக்கு அவர்களது கணக்கில் நேரடியாக உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

5. ‘லா பெரெளஸ்’ என்பது எந்த நாட்டால் நடத்தப்படவுள்ள பாதுகாப்புப் பயிற்சியாகும்?

அ) இத்தாலி

ஆ) இஸ்ரேல்

இ) பிரான்ஸ்

ஈ) அமெரிக்கா

  • ஏப்ரல் 5 முதல் 7 வரை வங்காள விரிகுடாவில் ‘லா பெரெளஸ்’ என்ற கூட்டு கடற்படைப் பயிற்சியை பிரான்ஸ் நடத்தவுள்ளது. இந்தியா தனது QUAD கூட்டாளர்களான ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுடன் இந்தப் பயிற்சியில் இணைய உள்ளது.
  • இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் USA ஆகிய நாடுகளைச் சார்ந்த கடற்படைக் கப்பல்களுடன் இரு பிரெஞ்சு கப்பல்கள் இணைந்து இதில் பங்கேற்கவுள்ளது. இந்தியாவும் பிரான்சும் இணைந்து இருதரப்பு கடற்படைப் பயிற்சியான ‘வருணா’வை இந்த மாத இறுதியில் மேற்கொள்ளவுள்ளன.

6. விரைவான சாலைகட்டுமானத்திற்காக உலக சாதனை படைத்த நாடு எது?

அ) சீனா

ஆ) ஜப்பான்

இ) இந்தியா

ஈ) ஐக்கிய அரபு அமீரகம்

  • மிகவிரைவான சாலை கட்டுமானத்திற்கான உலக சாதனையை இந்தியா படைத்திருப்பதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்தார். இந்தியா, 24 மணி நேரத்திற்குள் 2.5 கிமீ நீள நான்கு வழிச்சாலையை கான்கிரீட் சாலையாக அமைத்து கின்னஸ் உலக சாதனை படைத்திருப்பதாக நுழைந்துள்ளது. மேலும், 24 மணி நேரத்திற்குள்ளாக சோலாப் பூர்-பீஜப்பூர் சாலையை 25 கிமீ நீள நிலக்கீல் சாலையாகவும் அமைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2020-21 நிதியாண்டில் ஒரு நாளைக்கு 37 கிமீ சாலை என்ற சராசரி விகித சாதனையும் படைக்கப்பட்டுள்ளது.

7. இந்தியாவில் உள்ள ஜப்பானிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கு கடன் வழங்குதற்காக, ஜப்பானின் JBIC உடன் கூட்டு சேர்ந்துள்ள வங்கி எது?

அ) பஞ்சாப் தேசிய வங்கி

ஆ) பாரத வங்கி

இ) கனரா வங்கி

ஈ) ஐசிஐசிஐ வங்கி

  • இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத வங்கியானது (SBI) ஜப்பான் வங்கியுடன் $1 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அறிவித்துள்ளது.
  • JBIC முற்றிலும் ஜப்பான் அரசாங்கத்திற்கு சொந்தமான வங்கியாகும். இக் கடன், இந்தியாவில் உள்ள ஜப்பானிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் வணிக நடவடிக்கைகளுக்கான நிதியை சீராக ஊக்குவிக்க விரும்புகிறது. SBI கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் JBIC’உடன் இதேபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பயனாளிகளில் வழங்குநர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இறுதிப்பயனர்கள் அடங்குவர்.

8. அதன் காந்தப்புலங்களை பயன்படுத்தி M 87 கருந்துளையைக் கைப்பற்றிய தொலைநோக்கி எது?

அ) ஹப்பிள் தொலைநோக்கி

ஆ) ஈவண்ட் ஹாரிசான் தொலைநோக்கி

இ) Giant Magellan தொலைநோக்கி

ஈ) Thirty Meter தொலைநோக்கி

  • சமீபத்தில், ஈவண்ட் ஹாரிசான் தொலைநோக்கி கொண்டு பணிபுரியும் வானியலாளர்களால் கருந்துளையின் புதிய தோற்றம் வெளியிடப்பட்டது. இந்தத் தோற்றத்தில், வானியலாளர்கள், துளைக்கு அருகேயுள்ள காந்தப் புலங்களை வரைபடமாக்கியுள்ளனர்.
  • இந்த ஈவண்ட் ஹாரிசான் தொலைநோக்கி, முதன்முதலில் 2018ஆம் ஆண்டில், கருந்துளையின் படங்களை வெளிப்படுத்தியது. இக்கருந்து ளை, விண்மீன் பேரடை M87’இல் 55 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.

9. நகரங்கள் மற்றும் தேசிய தலைநகர பிராந்தியத்திற்கு அருகில் அனல்மின்னுற்பத்தி நிலையங்கள் அமைத்தல் தொடர்பான விதிகளை திருத்தியுள்ள அமைச்சகம் எது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) எரிசக்தி அமைச்சகம்

இ) புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

ஈ) சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்

  • மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகைகொண்ட தேசிய நகரங்கள் மற்றும் தேசிய தலைநகர பிராந்தியத்தில் 10 கிமீ தூரத்திற்குள் அனல் மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுவது தொடர்பான விதிகளை திருத்தியுள்ளது. இத்திருத்தப்பட்ட விதிகளின்படி, சில உமிழ்வு விதிகள், 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனல் மின்னுற்பத்தி நிலையங்களால் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

10. அவையொழுங்கைப் பராமரிப்பதற்காக சட்டமன்றத்தில் அதன் விதிகளை திருத்திய மாநிலம் எது?

அ) பீகார்

ஆ) ஹரியானா

இ) உத்தர பிரதேசம்

ஈ) மத்திய பிரதேசம்

  • ஹரியானா மாநிலம் அண்மையில் அதன் மாநில சட்டமன்றத்தில் அதன் நடைமுறை&நடத்தை விதிகளின்கீழ் பல்வேறு விதிகளை திருத்தியது. இந்தப் புதிய விதிகளில், குறைந்தது 2 அமைச்சர்களாவது அவையில் இருப்பதை கட்டாயமாக்குதல் மற்றும் அமளியின்போது, உறுப்பினர்கள், அவையில் ஆவணங்களை கிழிக்கவிடாமல் தடுப்பது ஆகியவை அடங் -கும். இது அவையொழுங்கைப்பராமரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்நாட்டில் 72.78% வாக்குப் பதிவு: தலைமைத் தேர்தல் அதிகாரி அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 72.78 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். மேலும், மாவட்ட வாரியாகவும் வாக்குப் பதிவு சதவீத விவரங்களை அவர் வெளியிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 06-04-2021 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92 சதவீதமும், அரியலூர் மாவட்டத்தில் 82.47 சதவீதமும், தருமபுரி மாவட்டத்தில் 82.35 சதவீதமும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 80.14 சதவீதமும், நாமக்கல் மாவட்டத்தில் 79.92 சதவீத வாக்குகளும் பதிவாகின. குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.09 சதவீதமும், திருநெல்வேலியில் 66.65 சதவீத வாக்குகளும் பதிவாகின. மாவட்ட வாரியாக வாக்குப் பதிவு விவரங்கள்: (சதவீதத்தில்…)

கரூர் – 83.92.

அரியலூர் – 82.47.

தருமபுரி – 82.35.

கள்ளக்குறிச்சி – 80.14.

நாமக்கல் – 79.72.

சேலம் – 79.22.

பெரம்பலூர் – 79.09.

திருவண்ணாமலை – 78.62.

விழுப்புரம் – 78.56.

இராணிப்பேட்டை – 77.92.

திருப்பத்தூர் – 77.33.

கிருஷ்ணகிரி – 77.30.

திண்டுக்கல் – 77.13.

ஈரோடு – 77.07.

திருவாரூர் – 76.53.

கடலூர் – 76.50.

புதுக்கோட்டை – 76.41.

நாகப்பட்டினம் – 75.48.

தஞ்சாவூர் – 74.13.

திருச்சி – 73.79.

விருதுநகர் – 73.77.

வேலூர் – 73.73.

தென்காசி – 72.63.

காஞ்சிபுரம் – 71.98.

தேனி – 71.75.

திருவள்ளூர் – 70.56.

மதுரை – 70.33

தூத்துக்குடி – 70.20.

திருப்பூர் – 70.12.

நீலகிரி – 69.68.

இராமநாதபுரம் – 69.60.

சிவகங்கை – 68.94.

கோவை – 68.70.

கன்னியாகுமரி – 68.67.

செங்கல்பட்டு – 68.18.

திருநெல்வேலி – 66.65.

சென்னை – 59.06.

———————

மொத்தம் – 72.78.

———————

ஊரகப் பகுதிகளில் வாக்கு சதவீதம் அதிகம்:

மாநகராட்சி தொகுதிகளில் மிகவும் குறைவு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாலக்கோடு தொகுதியில் அதிகபட்சமாக 87.33 சதவீத வாக்குகள் பதிவாகின. அதைத்தொடர்ந்து கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதியில் 86.15 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 11 தொகுதிகளில் 60 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டிலே -யே மிகக்குறைந்த அளவாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

2. AC., LED விளக்குகள் தயாரிப்பு: `6,238 கோடியில் உற்பத்திசார் ஊக்குவிப்பு திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

குளிர்சாதனங்கள் (AC), LED மின்விளக்குகள் தயாரிப்பில் `6,238 கோடி செலவில் உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: உள்நாட்டில் குளிர்சாதனங்கள், LED விளக்குகள் ஆகியவற்றின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், இந்திய தயாரிப்புகள் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்கவும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மின்சாதனங்களை ஐந்து ஆண்டுகள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு 4 முதல் 6 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

சூரியமின்சக்தி தகடுகள்: உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் `4,500 கோடி முதலீட்டில் சூரிய மின்தகடுகளை தயாரிப்பதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 13 முக்கிய துறைகளில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மத்திய பட்ஜெட்டில் உற்பத்திசார்ந்த ஊக்குவிப்பு திட்டத்துக்கு `1.97 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மின்சாதனங்கள், மருந்துப்பொருள்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், உணவு தயாரிப்பு, LED விளக்கு மற்றும் குளிர்சாதனங்கள், சூரியமின்சக்தி தகடுகள் ஆகிய 6 துறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கல்வி, ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு: இந்தியா, ஜப்பானிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்:

கல்வி, ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் பகிர்தலுக்காக இந்திய அரசின் விண்வெளித் துறையின்கீழ் இயங்கும் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம், ஜப்பானின் கியோடோவில் உள்ள கியோடோ பல்கலைக்கழகத்தின் நீடித்த மனித மண்டல ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம், இந்தியாவில் 2020 நவம்பர் 4ஆம் தேதியும், ஜப்பானில் 2020 நவம்பர் 11ஆம் தேதியும் கையெழுத்திடப்பட்டு அஞ்சல் மூலம் பரிமாறிக்கொள்ளப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சரவைக்கு எடுத்துரைக்கப்பட்டது.

3. காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக்கத்தின் துணைவேந்தராக எஸ் மாதேஸ்வரன் பொறுப்பேற்பு

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக்கத்தின் புதிய துணைவேந்தராக S மாதேஸ்வரன் பொறுப்பேற்றுக்கொண்டார். மத்திய உயர்கல்வித்துறை பரிந்துரையின்படி காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக்கத்தின் வேந்தர் K M அண்ணாமலைமூலம், புதிய துணைவேந்தராக S மாதேஸ்வரன் (58) நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியில் அவர் 5 ஆண்டு காலம் நீடிப்பார் என பல்கலை பதிவாளர் வி பெ ரா சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

4. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 63.63 இலட்சம்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 63.63 இலட்சமாக உள்ளது. கடந்த பிப்ரவரிமாத நிலைவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து காத்திருப்போரின் விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: 18 வயதுக்கட்பட்ட பள்ளி மாணவர்கள் 16.87 இலட்சம் பேரும், கல்லூரி மாணவர்கள் 12.98 இலட்சமும், 24 முதல் 35 வயது வரையிலானோர் 22.78 இலட்சம் பேரும், 36 வயது முதல் 57 வயது வரையிலானோர் 10.89 இலட்சம் பேரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பெயர்களைப் பதிவுசெய்துள்ளனர்.

58 வயதுக்கு மேற்பட்ட 8, 841 பேருடன் சேர்த்து அரசுவேலைக்காக பதிவு செய்து காத்திருக்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை 63, 63, 122 ஆக உள்ளது என தமிழக அரசு வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. பிரதமரின் முத்ரா திட்டம் மூலம் ஆறு ஆண்டுகளில் 28 கோடி பேருக்கு `14.96 இலட்சம் கோடி கடனுதவி

பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் 28.68 கோடி பேருக்கு `14.96 லட்சம் கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித் துறை தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் 2015ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது முத்ரா திட்டம்.

பொருளாதார ரீதியாக புறக்கணிக்கப்பட்ட வகுப்பினர், வளர்ந்து வரும் தொழில்முனைவோர், வர்த்தகம் மற்றும் சேவைத்துறை, வேளாண் சார்புடைய தொழில்முனைவோர், பெருநிறுவனங்கள் அல்லாத சிறு குறு நிறுவனங்கள் போன்றோர் கடன் பெரும் வகையில் மூன்று வகையான முத்ரா திட்டம் கொண்டுவரப்பட்டது. வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங் -கள், ஊரக வட்டார வங்கிகள்மூலம் இக்கடனுதவிகள் வழங்கப்படுகின்ற -ன. இதில் அதிகபட்சம் `10 இலட்சம் வரை கடன் அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்தத் திட்டத்தில் கடந்த மார்ச்.19 வரை அடைந்துள்ள இலக்குகள் குறித்த பட்டியலை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. சிசு, கிஷோர், தருண் ஆகிய மூன்று திட்டங்கள் வாயிலாக கடன் அளிக்கப்படுகிறது. இதில் சிசு திட்டத்தில் `50,000 வரையிலும், கிசோர் திட்டத்தில் `5 இலட்சம் வரையிலும், தருண் திட்டத்தில் `10 இலட்சம் வரையிலும் கடன் அளிக்கப்படுகிறது.

முத்ரா திட்டம் தொடங்கப்பட்ட ஆறு ஆண்டுகளில் 14.96 இலட்சம் கோடி 28.68 கோடி பேருக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. நெருக்கடியான 2020-21 நிதியாண்டிலும் 4.20 கோடி பேருக்கு 2.66 லட்சம் கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளன. கடன்பெற்றவர்களில் சராசரியாக `52,000 பெற்றுள்ளனர். 88% கடன் ‘சிசு’ வகை கடனாக இருந்தது. 24% பேர் புதிய தொழில்முனைவோராக இருந்தனர். பாலின ரீதியாக பார்த்தால் அதிக கடன் பெற்றவர்களில் 68 சதவீதம் பேர் பெண் தொழில்முனைவோர்கள்.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 22.53%, சிறுபான்மையினர் 11 சதவீதம் என உள்ளனர். இந்தக் கடன்களால் 2015 முதல் 2018 வரை சுமார் 1.12 கோடி பேர் வேலைவாய்ப்பை பெற்றனர். இதில், பெண்கள் 69 இலட்சம் பேராக இருந்தனர் என நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. பிரதமர் மோடியுடன் ஜான் கெரி சந்திப்பு: பருவநிலை மாற்ற மாநாடு குறித்து ஆலோசனை

பிரதமர் மோடியை அமெரிக்க அதிபரின் பருவநிலை மாற்றத்துக்கான சிறப்புத் தூதர் ஜான் கெரி சந்தித்துப்பேசினார். இந்தச் சந்திப்பின்போது இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடுகுறித்து அவர்கள் விவாதித்தனர்.

7. `1 லட்சம் கோடி மதிப்பிலான அரசு நிதிப்பத்திரங்கள் வாங்கப்படும்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், அரசு வெளியிடும் `1 இலட்சம் கோடி மதிப்பிலான நிதிப்பத்திரங்களை நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வாங்கவுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி உறுதியளித்துள்ளது. நடப்பு 2021-22ஆம் நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் முதலாவது நிதிக்கொள்கைக்குழுக்கூட்டம் மும்பையில் நடைபெற்றது. RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ் உட்பட அக்குழுவின் 6 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

முதலீட்டு நிதி:

பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் வங்கிகளுக்கு மூலதன நிதியை வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, NABARD வங்கிக்கு `25,000 கோடி, சிறு தொழில்நிறுவனங்கள் வளர்ச்சி வங்கிக்கு `15,000 கோடி, தேசிய வீட்டுவசதி வங்கிக்கு `10,000 கோடி வழங்கப்படவுள்ளது. நடப்பு நிதியாண்டில் வழங்கப்படவுள்ள இந்த மூலதன நிதியானது, வங்கிகளின் கடன் வழங்கும் திறனை அதிகரிக்கும்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) நடப்பு நிதியாண்டில் 10.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி 26.2 சதவீதமாகவும், 2ஆவது காலாண்டில் 8.3 சதவீதமாகவும், 3ஆவது காலாண்டில் 5.4 சதவீதமாகவும், கடைசி காலாண்டில் 6.2 சதவீதமாகவும் இருக்கும்.

8. இருவருக்கு கரோனா: ஒலிம்பிக் தகுதிப் போட்டியிலிருந்து இந்திய ஜூடோ அணி விலகியது

கிர்ஜிஸ்தானில் நடைபெறும் ஜூடோ போட்டியில் பங்கேற்கச் சென்றிருந்த இந்திய அணியில் இருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அணியினர் அனைவரும் போட்டியிலிருந்து விலகியுள்ளனர். இப்போட்டி, ஆசியா-ஓசியானியா பகுதிக்கான ஒலிம்பிக் தகுதிப்போட்டியாகும். இந்திய அணி ஒன்று, கரோனா பாதிப்பு காரணமாக ஒலிம்பிக் தகுதிப்போட்டியில் இருந்து வெளியேறுவது இது முதல்முறை.

73 கிலோ பிரிவு வீரர் அஜய் யாதவ், 52 கிலோ பிரிவு வீராங்கனை ரிது ஆகியோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

9. ஆசிய பாக்ஸிங்: மேரி கோம் தலைமையில் இந்திய அணி

தில்லியில் மே மாதம் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக மேரி கோம் உள்ளிட்ட வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 21 முதல் 31 வரை நடைபெற்றவுள்ள இந்தப் போட்டியில் மோனிகா (48 கிலோ), மேரி கோம் (51 கிலோ), சாக்ஷி (54 கிலோ), ஜேஸ்மின் (57 கிலோ), சிம்ரன்ஜித் கௌர் (60 கிலோ), பவிலாவ் பசுமதாரி (64 கிலோ), லோவ்லினா போர்கோ ஹெய்ன் (69 கிலோ), பூஜா ராணி (75 கிலோ), சவீதி பூரா (81 கிலோ) அனுபமா (81 கிலோவுக்கு மேல்) ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதில், ஆசிய போட்டியில் ஆறு முறை பதக்கம் வென்றுள்ள மேரி கோம், உலக சாம்பியன்ஷிப்பில் இரண்டு பதக்கம் வென்றவரான லோவ்லினா போர்கோஹெய்ன், சிம்ரஞ்சித் கௌர், பூஜா ராணி ஆகியோர் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றவர்களாவர்.

10. கல்வராயன் மலை சமவெளி வனப்பகுதியில் வாழும் இருவாச்சி பறவைகள்

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை, தருமபுரி மாவட்டம், சித்தேரி மலைப்பகுதி இடையே காணப்படும் சமவெளி வனப்பகுதியில் இந்திய சாம்பல் இருவாச்சி பறவைகள் அதிக அளவில் வாழ்ந்து வருவது வனத் துறையினர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை, தருமபுரி மாவட்டம், சித்தேரி மலைத்தொடர்களுக்கு இடையே, சேலம் மாவட்டம் தும்பல் மாமாஞ்சியில் தொடங்கி, தருமபுரி மாவட்டம், சேலூர், வேலனுார், சிட்லிங், கோட்டப்பட்டி வரை 50 சதுர மைல் பரப்பளவில் சமவெளி வனப்பகுதி காணப்படுகிறது. இந்தக் காட்டுப்பகுதியில் காட்டெருமை, பல்வேறு இன மான்கள், கரடி உள்ளிட்ட ஏரளமான வனவுயிரிகள் வாழ்ந்து வருகின்றன.

11. நாட்டில் முதல்முறையாக சூரிய ஒளியில் இயங்கும் சோலார் கோழிக்குஞ்சு பொரிப்பான் இயந்திரம் வடிவமைப்பு: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் புதிய முயற்சி

சூரிய ஒளியில் இயங்கும் கோழிக்குஞ்சு பொரிப்பான் இயந்திரத்தை, தனியார் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சென்னையை அடுத்த மாதவரத்தில் செயல்பட்டு வருகிறது. இதன்கீழ் இயங்கும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கருவிமயமாக்கல் ஆய்வு மையம் கால்நடை மற்றும் கோழி வளர்ப்புக்கு தேவையான நவீன கருவிகளை குறைந்த விலையில் வடிவமைத்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

அந்தவகையில் பல்கலைக்கழகம் ஆய்வு மையம் சார்பில் நாட்டிலேயே முதல்முறையாக சூரிய ஒளியில் இயங்கும் வகையிலான கோழிக்குஞ்சு பொரிப்பான் இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை பனிமலர் பொறியியல் கல்லூரியின் மாணவிகளுடன் இணைந்து பல்க
-லை பேராசிரியர்கள் ர வெங்கடரமணன், கே சங்கிலி மாடன் ஆகியோர் இந்தக் கருவியை வடிவமைத்துள்ளனர்.

12. நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 12.5%: சர்வதேச செலாவணி நிதியம் கணிப்பு

கரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சென்று ஆண்டுமார்ச் மாதம் இந்தியாவில்ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. உலக நாடுகள் அதன் எல்லைகளை மூடின. இதனால் உலகளாவிய அளவில் பொருளாதா -ரச் செயல்பாடுகள் முடங்கின. வேலையிழப்பு, ஊதியக்குறைப்பை மக்கள் எதிர்கொண்டனர். இதனால் உலகப் பொருளாதாரம் கடும் சரிவுக்கு உள்ளானது.

இந்தியாவில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து தொழிற்செயல்பாடுகள் ஊக்கம் பெறத் தொடங்கின. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் சர்வதேச செலாவணி நிதியம் (IMF) வெளியிட்ட கணிப்பில் 2021-22ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11.5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்தது. இந்நிலையில் தற்போதைய கணிப்பில் வளர்ச்சி விகிதம் 1 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 12.5 சதவீதமாக இருக்கும் என்று ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது. அதேபோல் 2022-23ஆம் நிதி ஆண்டில் வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் 12.5 சதவீத வளர்ச்சி என்பது வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் வளர்ச்சி விகித்தைவிட அதிகம்.

1. Which organisation released the ‘Forest Governance by Indigenous and Tribal Peoples’ report?

A) World Bank

B) Food & Agricultural Organization

C) United Nations

D) Asian Development Bank

  • The Food and Agriculture Organization of the United Nations (FAO) released the ‘Forest Governance by Indigenous and Tribal Peoples’ report recently. As per the report, deforestation rates in Latin America and the Caribbean are significantly lower in Indigenous and Tribal territories. The report was jointly released by Fund for the Development of Indigenous Peoples of Latin America and the Caribbean (FILAC).

2. ‘CACTus and CIISCO’ are the software launched by the Department of Science and Technology, associated with which field?

A) Solar Mission

B) Sustainable Agriculture

C) Himalayan Ecosystem

D) Water Mission

  • The Department of Science and Technology announced that Scientists have developed a new technique to track the huge bubbles of gas, which are ejected from the Sun. This new technique will be used in India’s first solar mission Aditya–L1. A software named Computer Aided CME Tracking Software (CACTus) and CMEs Identification in Inner Solar Corona (CIISCO) algorithm have been developed.

3. Which country has released the world’s first animal vaccine against the novel coronavirus?

A) China

B) Russia

C) USA

D) Israel

  • The world’s first animal vaccine against the novel coronavirus has been registered in Russia. It has been as ‘Carnivac–Cov’. As per the country’s agriculture safety watchdog Rosselkhoznadzor, the immunity lasts for six months after the vaccination. The use of this vaccine is expected to prevent the development of virus mutations.

4. The ‘Muktijoddha Scholarship scheme’ is provided to the students of which country, by the Government of India?

A) Nepal

B) Bangladesh

C) Sri Lanka

D) Myanmar

  • The Government of India has announced scholarships to 2000 descendants of the Liberation War fighters of Bangladesh under its new Muktijoddha Scholarship scheme, which was announced it 2017.
  • The scheme aims to benefit 10,000 students from Bangladesh over a period of five years. This year, 1000 students each from the Higher Secondary and Undergraduate categories have been given as scholarship directly in their account.

5. ‘La Pérouse’ is a Defence Exercise to be conducted by which country?

A) Italy

B) Israel

C) France

D) UAE

  • France is set to conduct the joint naval exercise, La Pérouse, in the Bay of Bengal from April 5 to 7. India is set to join its Quad partners — Australia, Japan, and the United States in the exercise.
  • Two French Navy ships will be joined by ships from India, Australia, Japan, and the US. India and France will also hold the bilateral naval exercise, Varuna later this month.

6. Which country has created a world record for Fastest Road construction?

A) China

B) Japan

C) India

D) UAE

  • Union Minister Nitin Gadkari announced that India holds the world record for fastest road construction.
  • India has entered Guinness World Records by building a 2.5 km 4–lane concrete road within 24 hours. It also built 25–km bitumen Solapur–Bijapur road within 24 hours. A record construction of 37 km per day was achieved in financial year 2020–21.

7. Which bank has partnered with Japan’s JBIC to extend loans to Japanese automobile manufacturers in India?

A) Punjab National Bank

B) State Bank of India

C) Canara Bank

D) ICICI Bank

  • India’s largest lender State Bank of India (SBI) announced that it has signed a loan agreement of up to USD 1 billion with Japan Bank for International Cooperation (JBIC). JBIC is wholly owned by the Government of Japan.
  • This loan intends to promote smooth flow of funds for the business operations of Japanese automobile manufacturers in India. SBI had signed a similar deal with JBIC in October last year. The beneficiaries include suppliers, dealers and the end users.

8. Which telescope captured the M 87 black hole with its magnetic fields?

A) Hubble

B) Event Horizon Telescope

C) Giant Magellan Telescope

D) Thirty Meter Telescope

  • Recently, a new view of the black hole has been released by astronomers working with the Event Horizon Telescope (EHT).
  • In this view, the astronomers have mapped the magnetic fields close to the hole. The event horizon telescope first revealed the images of black hole, in the year 2018, which is located in the galaxy M87 at a distance of 55 million light–years.

9. Which Ministry has amended the rules pertaining to location of thermal power plants near cities and national capital region?

A) Ministry of Home Affairs

B) Ministry of Power

C) Ministry of New and Renewable Energy

D) Ministry of Environment, Forest and Climate Change

  • The Union Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC) has amended the rules pertaining to location of thermal power plants within 10 km of major cities with more than 10 lakh population and the National Capital Region.
  • As per the amended rules, certain emission norms have been mandated to be adhered by the thermal power plants latest by the end of 2022.

10. Which state has amended its provisions in Legislative Assembly to maintain the decorum of the house?

A) Bihar

B) Haryana

C) Uttar Pradesh

D) Madhya Pradesh

  • Haryana has recently amended several provisions under its Rules of Procedure and Conduct of Business in the Legislative Assembly of the state. The new provisions include mandating presence of at least two ministers and preventing the members from tearing off documents in the House in protest. This is expected to maintain the decorum of the house.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!