TnpscTnpsc Current Affairs

8th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

8th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 8th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

8th August 2022 Tnpsc Current Affairs in Tamil

1. NITI ஆயோக்கின் நிர்வாகக்குழு கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் யார்?

அ. NITI ஆயோக் CEO

ஆ. இந்தியக்குடியரசுத்தலைவர்

இ. இந்தியப்பிரதமர் 

ஈ. நடுவண் நிதியமைச்சர்

  • புது தில்லியில் NITI ஆயோக்கின் 7ஆவது நிர்வாகக்குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. பிரதமர் NITI ஆயோக்கின் அதிகாரபூர்வ தலைவராக உள்ளார். இச்சந்திப்பு மத்திய மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாற்றுப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்புவகைகள் மற்றும் வேளாண் சமூகங்களின் தன்னிறைவை எட்டுதல், தேசிய கல்விக் கொள்கை – பள்ளிக்கல்வியின் அமலாக்கம், தேசிய கல்விக் கொள்கை – உயர்கல்வியின் அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை இந்தக் கூட்டத்தின் விவாதப்பொருளில் இடம்பெற்றது.

2. டெலாய்ட் இந்தியாவை அதன் ஆலோசகராக நியமித்த மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம் 

ஆ. கர்நாடகா

இ. ஒடிஸா

ஈ. தெலுங்கானா

  • உத்தர பிரதேச மாநில அரசானது டெலாய்ட் இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தின் பொருளாதாரத்தை $1 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவதற்கான இலக்கை அடைவதற்கான ஆலோசகராக டெலாய்ட் இந்தியாவை அது நியமித்தது. உயரதிகாரம்கொண்ட குழுவொன்றின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Deloitte India நிறுவனம் துறை வாரியான ஆய்வுக்கு பிறகு எதிர்கால செயல்திட்டத்தை முன்வைக்கவுள்ளது.

3. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘டோனி போலோ வானூர்தி நிலையம்’ அமைந்துள்ள மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. அருணாச்சல பிரதேசம் 

இ. சிக்கிம்

ஈ. மேற்கு வங்காளம்

  • அருணாச்சல பிரதேச மாநில அரசு இட்டாநகரில் கட்டப்பட்டு வரும் மூன்றாவது வானூர்தி நிலையத்திற்கு, ‘டோனி போலோ வானூர்தி நிலையம்’ என்று பெயர்சூட்டியுள்ளது. இது தலைநகரில் உள்ள ஒரே விமான நிலையமாகவும், பாசிகாட் மற்றும் தேசு விமான நிலையங்களுக்குப் பிறகு அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அமையும் மூன்றாவது விமான நிலையமாகவும் உள்ளது. அம்மாநிலத்தின் பழங்குடிகள் மொழியில், ‘டோனி’ என்றால் ‘ஞாயிறு’ என்றும் ‘போலோ’ என்றால் ‘திங்கள்’ என்றும் பொருளாகும்.

4. அனைத்து அதிகாரப்பூர்வ விருதுகளுக்கான பரிந்துரைகளையும் பெற்றுக்கொள்ளும் இணையதளத்தின் பெயர் என்ன?

அ. பாரத் இணையதளம்

ஆ. இராஷ்ட்ரிய இணையதளம் 

இ. ஆத்மநிர்பார் இணையதளம்

ஈ. இந்தியா விருதுகள் இணையதளம்

  • இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள்/முகமைகளின் அனைத்து விருதுகளையும் ஒரே டிஜிட்டல் தளத்தின்கீழ் கொண்டுவருவதற்காக, இந்திய அரசாங்கத்தால் பொதுவான ‘இராஷ்ட்ரிய புரஸ்காரம்’ என்னும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட பல்வேறு விருதுகளுக்கு தனிநபர்கள் அல்லது நிறுவனங்களைப் பரிந்துரைக்க இந்தத் தளம் உதவும். அண்மையில் அரசாங்கம், ‘வயோஸ்ரேஷ்ட சம்மான்’ மற்றும் ‘பத்ம’ விருதுகளுக்கான பரிந்துரைகளை வரவேற்றது.

5. இந்தியாவின் 14ஆவது குடியரசுத்துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

அ. ஜகதீப் தங்கர் 

ஆ. மார்கரெட் அல்வா

இ. கல்யாண் சிங்

ஈ. சிவராஜ் பாட்டீல்

  • 2022 இந்தியத்துணைக்குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் அல்வாவை தோற்கடித்து ஜக்தீப் தங்கர் வெற்றிபெற்றார். இந்தியாவின் 14ஆவது இந்தியத்துணைக்குடியரசுத்தலைவராக இருக்கும் தங்கர், தற்போதைய இந்தியத்துணைக்குடியரசுத்தலைவராக இருக்கும் M வெங்கையாவைத் தொடர்ந்து இந்தப் பதவிக்கு வந்துள்ளார். ஜனதா தள அரசில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சராகப் பணியாற்றியுள்ள ஜகதீப் தங்கர், 2019 ஜூலையில் மேற்கு வங்க ஆளுநரானார்.

6. இந்தியாவில், ‘கார்கில் வெற்றி நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.26 

ஆ. ஜனவரி.26

இ. அக்டோபர்.26

ஈ. மார்ச்.26

  • பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரின் வெற்றியின் 23ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இந்தியா ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.26 அன்று ‘கார்கில் வெற்றி நாளைக்’ கொண்டாடுகிறது. 1998ஆம் ஆண்டு எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு (LoC) வழியாக இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானியர்களுக்கு எதிராக கார்கில் போர் நடைபெற்றது. 1999 ஜூலை.26 அன்று, பாகிஸ்தான் படைகள் இந்தியப் பகுதியிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தை இந்திய இராணுவம் ஏற்பட்டது.

7. ‘உலக நீரில் மூழ்கும் நிகழ்வுகளைத் தடுத்தல் நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.25 

ஆ. ஆகஸ்ட்.25

இ. செப்டம்பர்.25

ஈ. ஜனவரி.25

  • ‘உலக நீரில் மூழ்கும் நிகழ்வுகளைத் தடுத்தல் நாளானது’ ஆண்டுதோறும் ஜூலை.25 அன்று அனுசரிக்கப்படுகிறது. ஐநா பொதுச்சபை இந்நாளை 2021 ஏப்ரலில் அங்கீகரித்தது. ஐநாவின் கூற்றுப்படி, ஆண்டுதோறும் சுமார் 236,000 பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர்; அது உலகெங்கிலும் ஒரு பெரிய பொதுச் சுகாதாரப்பிரச்சனையாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள 1 முதல் 24 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் இறப்புக்கான முக்கிய காரணங்களில் நீரில் மூழ்குவதும் ஒன்றென உள்ளது.

8. ‘பால ரக்ஷா’ என்ற செயலியை அறிமுகப்படுத்திய நடுவண் அமைச்சகம் எது?

அ. ஆயுஷ் அமைச்சகம்

ஆ. பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

இ. சட்டம் & நீதி அமைச்சகம்

ஈ. சுகாதார & குடும்பநல அமைச்சகம்

  • அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் (AIIA) சிறார்களுக்கான தடுப்பூசி மையத்தை நடுவண் ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் திறந்து வைத்தார். ஆயுர்வேதத்தின்மூலம் சிறார்களுக்கான தடுப்பு நலவாழ்வு குறித்து பெற்றோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, ‘பால ரக்ஷா’ செயலியையும் அமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார். சிறார்களின் நலம் மற்றும் நோயெதிர்ப்பு ஆற்றலில் ஏற்படும் தாக்கம் குறித்து பெற்றோர்களிடமிருந்து கருத்துக்களை இந்தச் செயலி சேகரிக்கும்.

9. ‘வியத்தகு இந்தியா கார்கில் மராத்தான் மற்றும் சுற்றுலா விழா, 2022’ஐ நடத்திய நகரம் எது?

அ. சிம்லா

ஆ. மணாலி

இ. கார்கில் 

ஈ. ஸ்ரீநகர்

  • இரண்டு நாள் நடைபெறும், ‘லடாக் சுற்றுலா விழா–2022’ கார்கில் மாவட்டத்தில் சமீபத்தில் தொடங்கியது. கார்கில் மாவட்டத்தின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் பல கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். இந்த நிகழ்ச்சியில், ‘வியத்தகு இந்தியா கார்கில் மராத்தான் போட்டியும்’ தொடங்கப்பட்டது. பாரம்பரிய உணவரங்குகள், குதிரை போலோ, வில்வித்தை உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளின் காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வரும் செப்டம்பரில் ஜான்ஸ்கார் திருவிழா நடைபெறவுள்ளது.

10. தூய பால் மற்றும் பதப்படுத்தப்பட்ட பாலுக்கு விதிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (GST) % எவ்வளவு?

அ. 0% 

ஆ. 5%

இ. 12%

ஈ. 18%

  • தூய பால் மற்றும் பதப்படுத்தப்பட்ட பாலுக்கு சரக்கு மற்றும் சேவைகள் வரியில் (GST) முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அரசு அண்மையில் தெளிவுபடுத்தியுள்ளது. பெட்டியில் அடைக்கப்பட்டவை தவிர வேறு வடிவங்களில் விற்கப்படுகிற தயிர் மற்றும் மோர் உள்ளிட்ட பிற பால் பொருட்களுக்கும் GSTஇல் இருந்து விலக்கு அளிக்கப்படும். உயர்வெப்பநிலைகொண்டு பதப்படுத்தப்பட்டு, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பால் பொருட்களுக்கு 5% GST பொருந்தும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சிஎஸ்ஐஆர் முதல் பெண் தலைமை இயக்குநராக தமிழகத்தின் கலைச்செல்வி நியமனம்!

இந்தியாவின் உயர்அறிவியல் தொழில் ஆராய்ச்சி ஆய்வு நிறுவனமான சிஎஸ்ஐஆர்-இன் முதல் பெண் தலைமை இயக்குநராக தமிழ்நாட்டைச் சேந்த கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 38 ஆராய்ச்சி நிறுவனங்களுடன் செயல்படும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கூட்டமைப்பை (சிஎஸ்ஐஆர்) வழிநடத்தும் முதல் பெண் தலைமை இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி நல்லதம்பி கலைச்செல்வி நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான அம்பாசமுத்திரத்தில் அவர் தனது பள்ளிப்படிப்பை தமிழ்வழியில் பயின்றார்.

2. ஈரநிலங்கள் – இயற்கை சுத்திகரிப்பு நிலையங்கள்!

நிலவாழ் சூழல் மண்டலத்துக்கும், நீர்வாழ் சூழல் மண்டலத்துக்கும் இடையே அமைந்துள்ள ஈரநிலங்கள் இயற்கை சுத்திகரிப்பு நிலையங்களாகத் திகழ்கின்றன. இவை உலகின் பல்லுயிர்த் தன்மையைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உலகின் மொத்தப்பரப்பளவில் 6 சதவீதமே ஈரநிலங்கள் உள்ளன. 40% தாவர & விலங்கின உயிரினங்களுக்கு இவை இருப்பிடமாக உள்ளன. காடுகள் பெருமளவில் கார்பன்-டை-ஆக்சைடு வாயுவை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியேற்றி புவியின் நுரையீரலாகச் செயல்படுகின்றன.

அதேபோன்று, நீரில் விரவியுள்ள வண்டல் படிவுகள், திண்ம மாசுக்களை வடிகட்டி சுத்திகரிக்கும் ஈரநிலங்களைப் ‘புவியின் சிறுநீரகங்கள்’ (இயற்கை சுத்திகரிப்பு நிலையங்கள்) எனலாம். வெள்ளப்பெருக்கின்போது நுரைப்பஞ்சு போன்று செயல்பட்டு அதிகப்படியான வெள்ளநீரை உறிஞ்சி பாதிப்பைக் குறைப்பதில் ஈர நிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஐநா கருத்துப்படி, கடந்த 50 ஆண்டுகளில் 35% ஈரநிலங்கள் அழிந்துள்ளன. ஈரநிலங்களைப் பாதுகாக்க கடந்த 1971-ஆம் ஆண்டு ஈரானின் இராம்சர் நகரில் ஒப்பந்தம் கையொப்பமானது. இதில் 172 நாடுகள் இராம்சர் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் கடந்த 1982-ஆம் ஆண்டு பிப்.1-ஆம் தேதி இந்தியா கையொப்பமிட்டது.

இராம்சர் ஒப்பந்தப் பட்டியலில் 9 தகுதிகளின் அடிப்படையில் சேர்க்கப்படும் ஈரநிலங்கள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறுகின்றன. உலகில் இதுவரை 2,455 ஈரநிலங்கள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் மொத்தப்பரப்பில் ஈரநிலங்களின் பரவல் 4 .6 சதவீதமாகும். மேற்கு வங்கத்தின் சுந்தரவனக்காடுகள் (பரப்பு 4,230 ச.கி.மீ.) இந்தியாவின் மிகப்பெரிய ஈரநிலப்பகுதியாகும். தமிழகத்திலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம், கரிக்கிலி பறவைகள் சரணாலயம், பிச்சாவரம் அலையாத்திக் காடுகள், மிஸோரத்தின் பாலா சதுப்பு நிலம், மத்திய பிரதேசத்தின் சக்யாசாகர் ஏரி ஆகிய 6 ஈரநிலங்கள் இராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக கடந்த ஜூலை 26-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கடந்த ஆக.3-ஆம் தேதி கோவாவின் நந்தா ஏரி, கர்நாடகத்தின் ரங்கண்ணாதிட்டு பறவைகள் சரணாலயம், மத்திய பிரதேசத்தின் சிர்பூர் ஏரி, ஒடிஸா மகாநதியின் சட்கோசியா பள்ளத்தாக்கு மற்றும் தமிழகத்திலிருந்து 6 ஈரநிலங்களும் இப்பட்டியலில் இடம்பெற்றதன்மூலம் இந்தியாவில் இராம்சர் அங்கீகாரம் பெற்ற சதுப்புநிலங்களின் எண்ணிக்கை 64-ஆக உயர்ந்துள்ளது. தெற்கு ஆசிய நாடுகளில் அதிக அளவிலான இராம்சர் ஈர நிலங்களை இந்தியா பெற்றுள்ளது.

ஈர நிலங்களின் வகைகள்

இயற்கையாக உருவானவை

ஆறுகள்

ஏரிகள்

குளங்கள்

சதுப்பு நிலங்கள்

அலையாத்திக் காடுகள்

பவளப்பாறைகள்

மனிதரால் உருவாக்கப்பட்டவை

நீர்த்தேக்கங்கள்

விளைநிலங்கள்

உப்பளம்

மீன்வளர்ப்புக் குளங்கள்

மாநிலங்கள் ஈரநிலங்களின் பரப்பு (ஹெக்டேர்)

குஜராத் – 34,74,950

ஆந்திர பிரதேசம் – 14,47,133

உத்தர பிரதேசம் – 12,42,530

மேற்கு வங்கம் – 11,07,097

மகாராஷ்டிரம் – 10,14,522

தமிழ்நாடு – 9,02,534

சிறப்பம்சங்கள்

1. வடிகட்டியாக செயல்பட்டு நீரைச் சுத்திகரித்தல்

2. வட மற்றும் குறைவான மழைப்பொழிவு காலங்களில் நீர்ப்பாதுகாப்பை உறுதிசெய்தல்

3. நீர்சுழற்சி, கார்பன் சுழற்சி மற்றும் நைட்ரஜன் சுழற்சியைத் தொடர்ந்து இயங்கச்செய்தல்

4. பிற சூழல் மண்டலங்களைக் காட்டிலும் ஈரநில சூழல் மண்டலங்கள் கூடுதல் மதிப்புடையன

5. பல்லுயிர்த்தன்மையைப் பாதுகாத்தல்

6. உணவுச்சங்கிலித்தொடரை உறுதிசெய்தல்

7. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இடர்ப்பாடுகளைத் தணித்தல்

8. உள்ளூர் சமூகங்களுக்கு பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்பை வழங்குதல்

9. வலசை பறவைகளுக்கு தங்கும் விடுதிகளாகச் செயல்படுதல்

10. மண்ணரிப்பைத் தடுத்தல்

11. புயல் மற்றும் சுனாமி போன்ற கடலோரப் பேரிடர் பாதிப்பை தணிப்பதில் அலையாத்திக் காடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள்…

1. கழிவுநீர் வெளியேற்றத்தால் ஏற்படும் மாசுபாடு

2. அயல் இனத்தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பரவல்

3. ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள்

4. கட்டட இடிபாட்டு கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுதல்

5. ஈரநிலங்களில் வாழும் உயிரினங்களை வேட்டையாடுதல்

6. நீர்நிலையின் மேற்பரப்பில் பாசி படர்தல்

7. அதிகளவிலான மீன்பிடிப்பு

8. கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பால் பவளப்பாறைகள் சிதைவடைதல்

தமிழ்நாட்டின் ஈரநிலங்கள் (இராம்சர் பட்டியலில்)

1. கோடியக்கரை பறவைகள் சரணாலயம், நாகப்பட்டினம் – 38,500 ஹெக்டேர்

2. பள்ளிக்கரணை சதுப்புநிலம், சென்னை – 1,248 ஹெக்டேர்

3. கரிக்கிலி பறவைகள் சரணாலயம், செங்கல்பட்டு – 58 ஹெக்டேர்

4. பிச்சாவரம் அலையாத்திக் காடுகள், கடலூர் – 1,479 ஹெக்டேர்

5. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், திருநெல்வேலி – 72 ஹெக்டேர்

6. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், செங்கல்பட்டு – 40 ஹெக்டேர்

7. வேம்பனூர் ஈரநிலம், கன்னியாகுமரி – 20 ஹெக்டேர்

8. வெள்ளோடு பறவைகள் சரணாலயம், ஈரோடு – 77 ஹெக்டேர்

9. உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், திருவாரூர் – 44 ஹெக்டேர்

10. மன்னார் வளைகுடா உயிர்க்கோளக்காப்பகம், இராமநாதபுரம் – 52,672 ஹெக்டேர்

8th August 2022 Tnpsc Current Affairs in English

1. Who chairs the Governing Council meeting of NITI Aayog?

A. NITI Aayog CEO

B. President of India

C. Prime Minister of India 

D. Union Finance Minister

  • Prime Minister Narendra Modi chaired the 7th Governing Council meeting of NITI Aayog in New Delhi. The Prime Minister is the ex–officio Chairperson of the think tank. The meeting aims to create synergies towards collaboration between Centre and States and Union Territories.
  • The Chief Ministers and LGs presented best practices from their States on four agenda items including crop diversification and achieving self–sufficiency in oilseeds, pulses and agri–commodities, implementation of the National Education Policy and urban governance.

2. Which state appointed Deloitte India as its consultant?

A. Uttar Pradesh 

B. Karnataka

C. Odisha

D. Telangana

  • The Uttar Pradesh government has signed a Memorandum of Understanding with Deloitte India, appointing it as a consultant for achieving the target of raising the state’s economy to USD 1 trillion. This decision was based on the recommendation of a high–powered committee. Deloitte India is set to present a future action plan after conducting a sector–wise study.

3. ‘Donyi Polo Airport’, which was seen in the news, is located in which state?

A. Assam

B. Arunachal Pradesh 

C. Sikkim

D. West Bengal

  • The state government of Arunachal Pradesh has given the name of ‘Donyi Polo Airport’ to its third airport, which is under construction in Itanagar. It is the only airport in the capital city and third in the state after Pasighat and Tezu airports. In the state’s tribal language, Donyi means Sun and Polo means Moon.

4. What is the name of the common portal for recommendations and nominations of all official awards?

A. Bharat Portal

B. Rashtriya Portal 

C. Atmanirbhar Portal

D. India Awards Portal

  • A common ‘Rashtriya Puruskar’ Portal has been developed by the Government of India, to bring all the Awards of the various Ministries/Departments/Agencies of the Government of India under one digital platform. This Portal aims to facilitate citizens to nominate individuals or organizations for various Awards instituted by the Government of India. Recently the Government invited nominations for ‘Vayoshreshtha Samman’ and ‘Padma’ awards.

5. Who has been selected as the 14th Vice President of India?

A. Jagdeep Dhankhar 

B. Margaret Alva

C. Kalyan Singh

D. Shivraj Patil

  • Jagdeep Dhankhar has won India’s Vice–Presidential election 2022, defeating Opposition candidate Margaret Alva. Dhankhar will be India’s 14th Vice President, taking over from the incumbent Vice President M Venkaiah. He has served as a Minister of state for Parliamentary Affairs in the Janata Dal government. He became the Governor of West Bengal in July 2019.

6. ‘Kargil Vijay Diwas’ is celebrated on which date in India?

A. July.26 

B. January.26

C. October.26

D. March.26

  • India celebrates the ‘Kargil Vijay Diwas’ on July 26 every year, to celebrate the 23–year anniversary of its victory over Pakistan in the Kargil War. The Kargil War was fought against intruders from Pakistan, who had crossed the Line of Control (LoC) into Indian Territory in 1998. On July 26, 1999, the Pakistan forces were forced to withdraw from the Indian Territory.

7. When is the ‘World Drowning Prevention Day’ observed?

A. July.25 

B. August.25

C. September.25

D. January.25

  • ‘World Drowning Prevention Day’ is observed annually on 25 July. The United Nations General Assembly recognised this day in April 2021. According to the UN, around 236,000 people drown annually, which makes drowning a major public health problem all around the world.
  • Drowning is also one of the major causes of death for children and young people aged between 1 to 24 years around the globe.

8. Which Union Ministry launched the ‘Bal Raksha mobile app’?

A. Ministry of Ayush 

B. Ministry of Women and Child Development

C. Ministry of Health and Family Welfare

D. Ministry of Law and Justice

  • Union Minister of AYUSH Sarbananda Sonowal inaugurated a Vaccination Centre for children at the All–India Institute of Ayurveda (AIIA). The Minister also launched the ‘Bal Raksha’ mobile app, to create awareness among parents on paediatric preventive healthcare through Ayurveda intervention. The app will also collect feedback from parents regarding the impact of the kit on their children’s health and immunity.

9. Which city hosted ‘Incredible India Kargil Marathon and Tourism Festival, 2022’?

A. Shimla

B. Manali

C. Kargil 

D. Srinagar

  • The two–day ‘Ladakh Tourism Festival–2022’ commenced recently in Kargil district. Several cultural programs will be organized, to present the tradition and culture of Kargil district to outsiders. Incredible India Kargil Marathon was also launched on the occasion. Traditional food stalls, display of traditional sports including horse polo and Archery sports were organised. Zanskar Festival is scheduled in September.

10. What is the Goods and Service Tax (GST) for fresh milk and pasteurised milk?

A. 0% 

B. 5%

C. 12%

D. 18%

  • The Government has recently clarified that fresh milk and pasteurised milk are fully exempted from Goods and Service Tax (GST). Other milk products including curd and buttermilk are also exempted from GST if sold in forms other than those pre–packaged and labelled. GST of 5 per cent applies to the milk products when sold in pre–packaged and labelled form and Ultra High–Temperature Milk.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!