8th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

8th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 8th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

8th January 2021 Tnpsc Current Affairs in Tamil

1. வடகிழக்கு இந்தியாவின் முதல் கேலோ இந்தியா விளையாட்டுப்பள்ளி அமைந்துள்ள நகரம் எது?

அ) ஷில்லாங்

ஆ) இம்பால்

இ) கெளகாத்தி

ஈ) கேங்டாக்

 • கேலோ இந்தியா விளையாட்டுப் பள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஷில்லாங்கின் அஸ்ஸாம் ரைபிள்ஸ் பள்ளியை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடங்கிவைத்தார். வடகிழக்கு மாகாணங்களின் முதல் பள்ளியாக அஸ்ஸாம் ரைபிள்ஸ் பள்ளி அமைந்துள்ளது. மொத்தம் ஒன்பது விளையாட்டுப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 • கல்வியுடன் விளையாட்டை ஒருங்கிணைத்து, அதன் வாயிலாக நாட்டில் விளையாட்டுகளை மேம்படுத்தி வீரர்களின் ஒட்டுமொத்த திறனை வளர்ப்பதே கேலோ இந்தியா விளையாட்டுப் பள்ளிகளின் முக்கிய குறிக்கோளாகும்.

2. தேசிய அளவியல் மாநாடு – 2021’ஐ ஏற்பாடு செய்துள்ள ஆராய்ச்சி அமைப்பு எது?

அ) CSIR

ஆ) DRDO

இ) ICMR

ஈ) ICAR

 • தனது 75ஆவது ஆண்டுக்குள் நுழையும், புது தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மையம் – தேசிய இயற்பியல் ஆய்வகம், தேசிய அளவியல் மாநாடு 2021’ஐ ஏற்பாடு செய்தது. “நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு அளவியல்” என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும். தேசிய அளவியல் மாநாட்டில், பிரதமர் மோடி காணொலிக்காட்சிமூலம் தொடக்க உரையாற்றினார்.

3. ‘தைப்பூசம்’ என்பது கீழ்க்காணும் எந்த இந்திய மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும்?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளம்

இ) நாகாலாந்து

ஈ) அருணாச்சல பிரதேசம்

 • ‘தமிழ்க்கடவுள்’ முருக வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ‘தைப் பூசம்’ என்ற திருவிழாவை உலகம் முழுமைக்கும் பரவி வாழும் தமிழ் மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க தமிழர்கள் கோரியதை அடுத்து, அதற்கான உத்தரவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் க.பழனிசாமி வெளியிட்டார்.
 • இந்த விழா, கேரளாவின் சில பகுதிகளிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற பிற நாடுகளிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

4. அண்மையில் தொடங்கப்பட்ட, “தேசிய அணு கால அளவின்” துல்லியம் என்ன?

அ) 2.7 நானோ வினாடிகள்

ஆ) 2.8 நானோ வினாடிகள்

இ) 2.1 நானோ வினாடிகள்

ஈ) 2.0 நானோ வினாடிகள்

 • தேசிய அளவியல் மாநாட்டின் தொடக்க விழாவின்போது பிரதமர் மோடி, ‘தேசிய அணு கால அளவை’ நாட்டுக்கு அர்ப்பணித்தார் . இந்த நடவடிக்கையின்மூலம், இந்திய திட்ட நேரமானது பன்னாட்டு திட்ட நேரத்துடன் ஒத்தமைக்கப்படுகிறது. 2.8 நானோ நொடிகள் என்னும் துல்லியத்துடன் இந்திய நிலையான நேரத்தை தேசிய அணு கால அளவு வழங்கும். தேசிய சுற்றுச்சூழல் தரநிர்ணய ஆய்வகத்துக்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டினார்.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, கொச்சி – மங்களூரு இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை அமைக்கின்ற பொதுத் துறை நிறுவனம் எது?

அ) ONGC

ஆ) GAIL

இ) IOCL

ஈ) CIL

 • கேரளாவின் கொச்சிக்கும் கர்நாடகாவின் மங்களூருக்கும் இடையில் 450 கிமீ நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய்பாதை, GAIL (இந்தியா) நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது. `3000 கோடி மதிப்பிலான திட்டத்தை இந்திய பிரதமர் வணிக நடவடிக்கைகளுக்காக திறந்து வைத்துள்ளார். இதன்மூலம், நாள் ஒன்றுக்கு 12 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் இயற்கை எரிவாயு கடந்துசெல்லும்.

6. உலக பிரெய்லி நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) ஜனவரி 2

ஆ) ஜனவரி 3

இ) ஜனவரி 4

ஈ) ஜனவரி 6

 • உலக பிரெய்லி நாளானது 2018 டிசம்பரில் ஐநா பொதுச் சபையால் நிறுவப்பட்ட பின்னர், ஆண்டுதோறும் ஜன.4 அன்று அனுசரிக்கப்படு -கிறது. பார்வைக்குறைபாடுள்ளவர்கள் பயன்படுத்தும் வாசிப்பு மற்றும் எழுதுதலுக்கான முறையை கண்டுபிடித்த லூயிஸ் பிரெய்லியின் பிறந்தநாளை இந்தத்தேதி குறிக்கிறது. இந்த ஆண்டு, உலகளாவிய தொடுதல்-அடிப்படையிலான தகவல் தொடர்பு அமைப்பின் முக்கியத்துவத்தை ஐ.நா சிறப்பித்துக்காட்டுகிறது.

7. எக்கருவியை நிறுவுவதற்காக PM கேர்ஸ் நிதிய அறக்கட்டளை `120 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது?

அ) ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள்

ஆ) வளி சுத்திகரிப்பான்கள்

இ) RO-நீர் சுத்திகரிப்பான்கள்

ஈ) ஷிப்ட் மருத்துவமனைகளை உருவாக்குங்கள்

 • பிரதமரின் அவசரகால மக்கள் உதவி மற்றும் நிவாரண (PM CARES) நிதிய அறக்கட்டளை, நாடு முழுவதுமுள்ள பொது நலவாழ்வு மையங்க -ளில் 162 பிரத்யேக அழுத்த விசை உறிஞ்சுதல் (PSA) பிராணவாயு தயாரிப்பு வசதிகளை நிறுவ `201.58 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
 • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தன்னாட்சிபெற்ற அமைப்பான மத்திய மருத்துவ விநியோக விற்பனை கூடத்தால் கொள்முதல் நடத்தப்படும். இந்த ஆலைகள் மருத்துவ தரத்திலான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும்.

8. பின்வரும் எவ்வமைப்பு சமீபத்தில் தனது அனைத்து பெண்கள் அணியையும் எதிர்பாரா பணிகளுக்காக அனுப்பியது?

அ) மத்திய ஆயுத காவல் படை

ஆ) இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படை

இ) தேசிய பேரிடர் மீட்புப் படை

ஈ) மத்திய தொழிலக பாதுகாப்புப்படை

 • கங்கையாற்றின் கரையிலுள்ள உத்தர பிரதேசத்தின் கர் முக்தேஷ்வர் நகரத்தில், எதிர்பாரா பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் அனைத்து பெண் குழுவும் அண்மையில் ஈடுபடுத்தப்பட்டது.
 • தொழிற்முறை பயிற்சிபெற்ற இந்த அனைத்து பெண்கள் குழு, மீட்புப் படகுகள் மற்றும் அது தொடர்புடைய உபகரணங்களை கையாண்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண் போராளிகளை தேசிய பேரிடர் மீட்புப் படை தனது அணியில் சேர்த்துள்ளது.

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஸ்வஸ்த்வாயு’ என்ற உடலில் செலுத்த தேவையில்லாத செயற்கை சுவாச வழங்கியை உருவாக்கியுள்ள அமைப்பு எது?

அ) DRDO

ஆ) CSIR

இ) ISRO

ஈ) BARC

 • அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழு – தேசிய வானூர்தி ஆய்வகத்தை (CSIR-NIL) சேர்ந்த விஞ்ஞானிகள், CSIR-IGIB மருத்துவப் பணியாளர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ள ‘சுவஸ்த் வாயு’ என்னும் உடலில் செலுத்த வேண்டிய தேவையில்லாத சுவாசக் கருவிக்கு அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
 • மத்திய சுகாதார & குடும்பநல அமைச்சின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநர் அமைத்த நிபுணர் குழு இந்தச் சுவாசக் கருவியை பரிசோதித்து, இதை 35% வரை பிராணவாயு உதவி தேவைப்படும் COVID நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம் என்று சான்றளித்தது.

10. அண்மையில் தொடங்கப்பட்ட ‘டாய்கத்தான்’ முன்னெடுப்புக்கு எத்தனை அமைச்சகங்கள் கூட்டு சேர்ந்துள்ளன?

அ) 5

ஆ) 6

இ) 7

ஈ) 8

 • உள்நாட்டு விளையாட்டுப் பொருட்கள் தொழிற்துறையை மேம்படுத் -துவதற்கும் இறக்குமதியைக் குறைப்பதற்குமாக இந்திய அரசு, “டாய் கத்தான்” என்ற புதிய முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
 • கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழிற்துறை, MSME, I&B உள்ளிட்ட ஆறு அமைச்சகங்கள் மற்றும் AICTE ஆகியவை இம்முன்னெடுப்புக்கு ஒத்துழைக்கின்றன. உள்நாட்டு விளையாட்டுப் பொருட்களை உருவாக்க மாணவர்கள், ஆசிரியர்கள், வடிவமைப்பு வல்லுநர்கள் மற்றும் துளிர்நிறுவனங்கள் இணைந்து செயல்படுவார்கள்.

1. The first Khelo India Sports school of the North–East India, is situated in which city?

A) Shillong

B) Imphal

C) Guwahati

D) Gangtok

 • Union Minister for Youth Affairs and Sports Kiren Rijiju has recently launched the Assam Rifles Public School in Shillong. This school has become the first Khelo India Sports school of the North–East India. At present, nine Sports Schools have been approved across the country.
 • The schools aim to integrate sports with education with the Government bearing the expenses of the athletes of the school.

2. Which research body has organized the National Metrology Conclave 2021?

A) CSIR

B) DRDO

C) ICMR

D) ICAR

 • The National Metrology Conclave 2021 has been organized by the Council of Scientific and Industrial Research–National Physical Laboratory (CSIR–NPL), New Delhi.
 • This research organization has entered its 75th year of inception. The theme of the function was ‘Metrology for the Inclusive Growth of the Nation’. The inaugural function was attended by the Prime Minster of India via video conferencing.

3. ‘Thai Poosam’ is a festival celebrated in which Indian state?

A) Tamil Nadu

B) Kerala

C) Nagaland

D) Arunachal Pradesh

 • People of Tamil Nadu celebrate the ‘Thai Poosam’ festival, which is dedicated for the worship of the Tamil God Lord Muruga. After the devotees requested to declare the day as a public holiday, the Tamil Nadu Chief Minister K Palaniswami issued an order for the same.
 • It is also celebrated in some parts of Kerala and in other countries like Sri Lanka, Singapore, Malaysia, Mauritius and Indonesia

4. What is the accuracy of ‘National Atomic Timescale’, which was recently launched?

A) 2.7 Nano seconds

B) 2.8 Nano seconds

C) 2.1 Nano seconds

D) 2.0 Nano seconds

 • Prime Minister Narendra Modi launched the ‘National Atomic Timescale’, during the inauguration of the National Metrology Conclave. With this move, the Indian Standard Time is aligned with the International Standard Time, only by less than 3 nano seconds.
 • The Prime Minister also laid the foundation stone of the ‘National Environmental Standards Laboratory’.

5. The Kochi – Mangaluru Natural Gas Pipeline that is seen in news recently is constructed by which PSU?

A) ONGC

B) GAIL

C) IOCL

D) CIL

 • The 450 km long Natural Gas Pipeline between Kochi in Kerala and Mangaluru in Karnataja is constructed by GAIL (India) Ltd. The 3000–crore project has been inaugurated by the Prime Minister of India, for commercial operations. The pipeline has the transportation capacity of 12 million metric standard cubic metres per day.

6. When is World Braille Day observed every year, across the world?

A) January 2

B) January 3

C) January 4

D) January 6

 • World Braille Day is observed annually on 4 January, after it was established by the UN General Assembly in December 2018.
 • The date also marks the birth anniversary of Louis Braille, who invented the system for reading and writing, used by people who are visually impaired. This year, the UN highlights the importance of the universal touch–based communication system.

7. The PM CARES Fund Trust has allocated Rs 201 crores for installation of which equipment?

A) Oxygen Generation Plants

B) Air Purifiers

C) RO– Water Purifiers

D) Make Shift Hospitals

 • The Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations (PM CARES) Fund Trust has allocated Rs 201.58 crore rupees for installation of 162 dedicated Medical Oxygen Generation Plants.
 • The Pressure Swing Adsorption (PSA) plants are to be procured by the Central Medical Supply Store, an autonomous body under the Ministry of Health and Family Welfare. The PSA plants are source of medical–grade oxygen.

8. Which organisation recently deployed its all–women team for contingency duties?

A) Central Armed Police Force

B) Indo–Tibetan Border Police

E) National Disaster Response Force

D) Central Industrial Security Force

 • An all–female team of National Disaster Response Force (NDRF) was recently deployed for contingency duties in Uttar Pradesh’s Garh Mukteshwar town, on the banks of the Ganga river.
 • The team who are professionally trained handled the rescue boats and related equipment. The first batch of over a hundred women disaster combatants and rescuers was also inducted in the NDRF.

9. ‘SwasthVayu’, a Non–invasive Ventilator, which was seen in the news recently, was developed by which organsiation?

A) DRDO

B) CSIR

C) ISRO

D) BARC

 • Scientists at the CSIR – National Aerospace Laboratories recently developed a non–invasive ventilator named Swasthya Vayu.
 • The scientists have collaborated with the medical professionals from CSIR–IGIB, to develop the ventilator. It has been certified by the Health Ministry’s Expert Committee to be used for Covid–19 patients who require oxygen supplementation up to 35%.

10. How many Ministries have partnered for the Toycathon Initiative, which was recently launched

A) 5

B) 6

C) 7

D) 8

 • The Government of India has launched a new initiative called the ‘Toycathon’, to promote indigenous toy industry and reduce imports.
 • Six Ministries, including Education, Women & child development, Textile, Commerce and industries, MSME, I&B and AICTE are collaborating for this initiative. Students, Teachers, Design experts and start–ups will work together to develop indigenous toys and games.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *