Tnpsc

8th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

8th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 8th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

8th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

  1. மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழக பொதுநலச் சங்கத்தின் பரிசு வென்ற KK ஷைலஜா சார்ந்த மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) கர்நாடகா

ஈ) அஸ்ஸாம்

  • கேரளாவின் முன்னாள் நலவாழ்வு அமைச்சரான திருமதி KK ஷைலஜா (பொதுவாக “ஷைலாஜா ஆசிரியர்” என்று அழைக்கப்படுபவர்), பொது நலவாழ்வுச் சேவைகளில் அவரது தன்னலமற்ற அர்ப்பணிப்புக்காக மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் பொதுநலச் சங்கத்தின் பரிசை வென்றுள்ளார். சமுதாயத்தின் பொதுநலத்திற்காக செயலாற்றும் சிறந்த ஆளுமைகளுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.

2. நாஷா முக்த் பாரத் அபியானை செயல்படுத்துகிற அமைச்சகம் எது?

அ) நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம்

ஆ) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

இ) உழவு மற்றும் உழவர்நல அமைச்சகம்

ஈ) சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

  • மத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகமானது நாஷா முக்த் பாரத் (போதை மருந்தில்லா பாரதம்) அபியானை செயல்படுத்துகிறது.
  • மத்திய சமூக நீதி அமைச்சரானவர் அண்மையில் நாஷா முக்த் பாரத் அபியானுக்கான வலைத்தளத்தை தொடங்கிவைத்தார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது இந்தியாவில் போதைப் பொருள் ஒழிப்புக்கான மைய அமைச்சகமாக உள்ளது.

3. ஐநா பொதுச்சேவை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) ஜூன்.21

ஆ) ஜூன்.22

இ) ஜூன்.23

ஈ) ஜூன்.24

  • ஆண்டுதோறும் ஜூன்.23 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச்சேவை நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், பொதுச்சேவையின் பங்கை அங்கீகரிக்கிறது, அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது மற்றும் உலகம் முழுவதுமுள்ள அரசு ஊழியர்களின் பணியை அங்கீகரிக்கிறது.
  • “Innovating the Future Public Service: New Government Models for a New Era to Reach the SDGs” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த கருப்பொருளாகும்.

4. 2021’இல் G20 தலைமைப்பதவியை வகிக்கும் நாடு எது?

அ) ரஷ்யா

ஆ) இத்தாலி

இ) ஜெர்மனி

ஈ) பிரான்ஸ்

  • நடப்பு 2021’இல், G20 கூட்டமைப்பின் தலைமைப்பதவியை இத்தாலி வகிக்கிறது. இது சமீபத்தில், G20 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தியது.
  • இந்திய ஒன்றியத்தின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ் கங்வார், பேரறிவிப்பு மற்றும் EWG முன்னுரிமைகள் குறித்த அமைச்சர் உரையை வழங்குகிறார். G20 கல்வி அமைச்சர்கள் கூட்டத்தையும் இத்தாலி நடத்தியுள்ளது.

5. வரிவசூல் தகவல் பரிமாற்றத்திற்கான எந்தக் கரீபியன் நாட்டின் ஒப்பந்தத்திற்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது?

அ) புனித வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்

ஆ) பார்படாஸ்

இ) டொமினிகா

ஈ) ஜமைக்கா

  • கரீபியன் நாடான புனித வின்சென்ட் மற்றும் கிரெனெடைன்ஸ் மற்றும் இந்தியா இடையே வரிவசூல் தொடர்பான தகவல்கள் மற்றும் உதவிகளை பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இரு நாடுகளிடையேயான இந்தப் புதிய ஒப்பந்தம்மூலம், இருநாட்டின் பிரதிநிதிகளும், மற்ற நாடுகளுக்கு சென்று தனிநபர்களிடம் வரி தொடர்பான விசாரணை மற்றும் ஆய்வுநடத்த முடியும். வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்களிலிருந்து நிதி தொடர்பான தகவல்களைப்பெற முடியும். இதன்மூலம் இருநாடுகளும், வரி ஏய்ப்பு மற்றும் கருப்புப்பண பதுக்கலை தடுக்கவியலும்.

6. அண்மையில் ஐநா அமைப்பு ஒப்புதல் அளித்த CEOS கோஸ்ட் திட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனம் எது?

அ) ISRO

ஆ) எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு

இ) NTPC

ஈ) இந்திய கடற்படை

  • Committee on Earth Observation Satellites – Coastal Observations, Applications, Services, and Tools என்பதன் சுருக்கமான ‘CEOS COAST’ என்பது ஒரு பன்னாட்டுத் திட்டமாகும்.
  • இந்தத் திட்டத்தை அமெரிக்காவிலிருந்து ISRO’உம் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகமும் இணைந்து வழிநடத்துகின்றன. செயற்கைக்கோள் மற்றும் நில-அடிப்படையிலான ஆய்வுக்குறிப்புகளின் அடிப்படையில் கடலோர தரவுகளின் துல்லியத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கு சமீபத்தில் சர்வதேச கடல்சார் ஆணையம் தனது ஒப்புதலை அளித்தது.

7. ‘காவல் பிளஸ் திட்ட’த்தை செயல்படுத்துகிற மாநில அரசு எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளம்

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) ஒடிஸா

  • பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கும், பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகி தப்பிப்பிழைப்பவர்களுக்கும் ஆதரவாக, கடந்த 2020 டிசம்பரில், கேரள மாநில அரசு ‘காவல் பிளஸ் திட்டத்தை’ ஒரு சோதனை திட்டமாக அறிமுகப்படுத்தியது. இச்சோதனை திட்டத்தின் வெற்றியைத்தொடர்ந்து, கேரள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையானது காவல் பிளஸை மேலும் ஐந்து மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தவுள்ளது.
  • இது வீடுகளில் உள்ள குழந்தைகள், சிறார் பராமரிப்பு நிறுவனங்கள் & சமூகநலக்குழுக்களுக்கு அப்பாலுள்ள சமூகத்தை உள்ளடக்குகிறது.

8. DRDO பரிசோதனை செய்த புதிய தலைமுறை அணுசக்தி திறன் ஏவுகணையின் பெயர் என்ன?

அ) அக்னி-பி (பிரைம்)

ஆ) பீம்

இ) அர்ஜுன்-பி (பிரைம்)

ஈ) பாரத்

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அணுவாயுதங்களை சுமந்துசெல்லும் திறன்கொண்ட கண்டம்விட்டு கண்டம்பாயும் புதிய தலைமுறை அக்னி பி ஏவுகணை, ஒடிஸா மாநிலத்தின் பலாசோர் அருகேயுள்ள டாக்டர் APJ அப்துல் கலாம் தீவிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
  • அக்னி இரக ஏவுகணைகளில் புதிய தலைமுறை மேம்பட்ட வகையாக அக்னி பி ஏவுகணை விளங்குகிறது. 1000 முதல் 2000 கிமீ தூரம்வரை பயணிக்கும் திறனை இந்த ஏவுகணை பெற்றுள்ளது.

9. ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கார் யோஜனாவை செயல்படுத்துகிற நடுவண் அமைச்சகம் எது?

அ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஆ) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

இ) பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஈ) உழவு அமைச்சகம்

  • COVID-19 தொற்றுகாலத்தின்போது சமூக பாதுகாப்பு சலுகைகளுடன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதற்கு பணி வழங்குநர்களை ஊக்குவிப்பதற்காக ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கார் யோஜனா தொடங்கப்பட்டது. அது நடுவண் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கார் திட்டத்தை, 2022 மார்ச்.31 வரை நீட்டிக்கப்படும் என்று நிதியமைச்சர் தனது அண்மைய தொகுப்பில் அறிவித்தார்.

10. எதிர்வரும் 2022ஆம் ஆண்டில் இயக்கப்படவுள்ள, இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானந்தாங்கிக்கப்பலின் பெயர் என்ன?

அ) விக்ராந்த்

ஆ) ஆதித்யா

இ) படேல்

ஈ) தீரன்

  • இந்திய கடற்படையின் முதல் உள்நாட்டு விமானந்தாங்கிக்கப்பல், வரும் 2022ஆம் ஆண்டில் சேவையில் ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டவுடன் அக்கப்பல் INS விக்ராந்த் எனப் பெயரிடப்படும். இந்தக் கப்பல் கேரள கொச்சியின் கொச்சின் கப்பல்கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்டு வருகிறது. ஆத்ம நிர்பார் பாரதத்திற்கு இந்த விமானந்தாங்கிக்கப்பல் ஓர் எடுத்துக்காட்டு என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இத்தாலிய கடற்படை கப்பலுடன் INS தபார் பயிற்சி

இத்தாலிய கடற்படை கப்பலுடன் இணைந்து INS தபார் கப்பல் பயிற்சி மேற்கொண்டது. மத்திய தரைக்கடலில் நடைபெற்றுவரும் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக INS தபார் கப்பல், இத்தாலியின் நேபிள்ஸ் துறை முகத்துக்கு சென்றது. வான்பாதுகாப்பு நடைமுறைகள், கடலில் மீட்பு நடவடிக்கைகள், தகவல் தொடர்புப் பயிற்சிகள் முதலிய பல்வேறு கடல்சார் பயிற்சிகளில் இரு கப்பல்களும் ஈடுபட்டன.

இயங்குதளத்தை மேம்படுத்துவதற்கும், கடல்சார் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும் இப்பயிற்சி இருநாடுகளுக்கும் பயனளித்தது. கடற்படையின் வழக்கப்படி நடந்த ‘நீராவி அணிவகுப்பு’டன் பயிற்சி நிறைவடைந்தது.

1. K K Shailaja, who has been awarded with the Central European University (CEU) Open Society Prize, belongs to which state?

A) Tamil Nadu

B) Kerala

C) Karnataka

D) Assam

  • Ms K K Shailaja – commonly known as “Shailaja Teacher”, the former Health Minister of Kerala has been awarded with the Central European University (CEU) Open Society Prize, for her selfless commitment to the public health services. This price is awarded to personalities of exceptional distinction who have served the ideals of an open society.

2. Which Union Ministry implements the Nasha Mukt Bharat Abhiyaan?

A) Ministry of Health and Family Welfare

B) Ministry of Social Justice & Empowerment

C) Ministry of Agriculture and Farmers Welfare

D) Ministry of Law and Justice

  • Union Ministry of Social Justice & Empowerment implements the Nasha Mukt Bharat Abhiyaan (NMBA).
  • Union Social Justice Minister recently launched the website for the Nasha Mukt Bharat Abhiyaan (NMBA). Ministry of Social Justice & Empowerment is the nodal ministry for Drug Demand Reduction in India.

3. When is the United Nations Public Service Day observed every year?

A) June.21

B) June.22

C) June.23

D) June.24

  • Every year, the United Nations Public Service Day is observed on 23rd of June. This day recognizes the role of public service, stresses the importance of the same and recognizes the work of public servants across the globe.
  • The theme for this year is “Innovating the Future Public Service: New Government Models for a New Era to Reach the SDGs”.

4. Which country holds the G20 Presidency in 2021?

A) Russia

B) Italy

C) Germany

D) France

  • Italy holds the G20 Presidency in 2021. It has recently hosted the G20 Labour and Employment Ministers’ Meeting in hybrid mode. India’s Union Minister for Labour and Employment Santosh Gangwar delivers Ministerial Address on Declaration and EWG Priorities. G20 Education Ministers’ Meeting was also hosted by Italy in blended mode.

5. Union Cabinet of India approved agreement with which Caribbean country for tax information exchange?

A) St Vincent and the Grenadines

B) Barbados

C) Dominica

D) Jamaica

  • The Union Cabinet approved an agreement between India and Saint Vincent and the Grenadines for the exchange of tax information and assistance in the collection.
  • The agreement between India and St Vincent and the Grenadines, will help in facilitate sharing of information held by the banks and other financial institutions including the information regarding the legal and beneficial ownership.

6. Which Indian institution is involved in CEOS COAST project, which was recently endorsed by a UN body?

A) ISRO

B) Border Roads Organization

C) NTPC

D) Indian Navy

  • CEOS COAST, a multinational project, stands for Committee on Earth Observation Satellites–Coastal Observations, Applications, Services, and Tools. The project is co–led by ISRO and National Oceanic and Atmospheric Administration (NOAA) from the US.
  • It aims to improve the accuracy of coastal data based on satellite and land–based observations. The project has been recently endorsed by International Oceanographic Commission (IOC).

7. Which Indian state is implementing the ‘Kaval Plus programme’?

A) Tamil Nadu

B) Kerala

C) Andhra Pradesh

D) Odisha

  • In December 2020, Kerala launched the pilot project of ‘Kaval Plus programme’, to support children in need of care and survivors of sexual abuse in the state.
  • After the success of the pilot project, the Department of Women and Child Development in Kerala is set to expand Kaval Plus to five more districts. It covers the children at homes, child care institutes, and those in the community outside the ambit of child welfare committees.

8. What is the name of the new generation nuclear capable missile tested by the DRDO?

A) Agni–P (Prime)

B) Bhim

C) Arjun–P (Prime)

D) Bharat

  • The Defence Research and Development Organisation (DRDO) successfully flight tested the new generation nuclear–capable ballistic missile, Agni–P from Dr APJ Abdul Kalam island off the coast of Odisha. Agni P is an advanced variant of the Agni class of missiles and is a canisterised missile with a range capability between 1000km and 2000 km.

9. Which Union Ministry implements the Aatma Nirbhar Bharat Rozgar Yojana?

A) Ministry of Rural Development

B) Ministry of Housing and Urban Affairs

C) Ministry of Labour and Employment

D) Ministry of Agriculture

  • Aatma Nirbhar Bharat Rozgar Yojana was launched to incentivize employers for creation of new employment along with social security benefits during COVID–19 pandemic. It is implemented by the Ministry of Labour and Employment.
  • In the recent package, the finance minister announced that Aatma Nirbhar Bharat Rozgar Yojana be extended till 31st March 2022.

10. What will be the name of India’s first Indigenous Aircraft Carrier (IAC), which will be commissioned in 2022?

A) Vikrant

B) Aditya

C) Patel

D) Theeran

  • Indian Navy’s first Indigenous Aircraft Carrier (IAC) is proposed to be commissioned into service in the year 2022, and it would be named as INS Vikrant upon being commissioned.
  • The vessel is being constructed at the Cochin Shipyard Limited, Kochi. Union Defence Minister has stated that the carrier would be an example of Atmanirbhar Bharat.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!