TnpscTnpsc Current Affairs

8th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

8th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 8th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. கீழ்காணும் எந்த மாநிலம் / UT–இல் ‘தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனம்’ தொடங்கப்பட்டுள்ளது?

அ. கர்நாடகா

ஆ. புது தில்லி 

இ. மத்திய பிரதேசம்

ஈ. ஜார்கண்ட்

  • விடுதலைப்பெருவிழாவின் ஒருபகுதியாக பழங்குடியினர் நல அமைச்சகத்தின் சார்பில், ‘தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா புது தில்லியில் தொடங்கி வைத்தார். பழங்குடியினர் ஆராய்ச்சி மையங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் ஆகிய திட்டங்களை தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் கண்காணிக்கும். ஆராய்ச்சி மற்றும் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துவதற்கான நெறிமுறைகளையும் அது வகுக்கும்.

2. டார்னியர் வானூர்தி மற்றும் Su–30 MKI ஏரோ எஞ்சின்களை, கீழ்காணும் எந்த நிறுவனம் தயாரிப்பதற்கு, பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் கவுன்சில் ஒப்புதலளித்துள்ளது?

அ. ISRO

ஆ. DRDO

இ. HAL 

ஈ. BHEL

  • பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் கவுன்சில் (DAC), உள்நாட்டு தொழிற்சாலைகளிலிருந்து `76,390 கோடி மதிப்பிலான இராணுவ தளவாடங்கள் மற்றும் தளங்களை வாங்க ஒப்புதலளித்தது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)மூலம் டார்னியர் விமானம் மற்றும் Su–30 MKI ஏரோ–எஞ்சின்கள் தயாரிக்க DAC ஒப்புதல் அளித்தது. மேலும், ‘டிஜிட்டல் கடலோர காவற்படை’ திட்டத்திற்கும் DAC ஒப்புதல் அளித்துள்ளது.

3. அண்மையில் இந்தியாவால் சோதிக்கப்பட்ட, ‘அக்னி–4’ என்றால் என்ன?

அ. இடைநிலை நெடுக்க எறிகணை 

ஆ. அடுத்த தலைமுறை சேமக்கலன்

இ. நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்பு ஏவுகணை

ஈ. கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை

  • அக்னி–4 என்ற இடைநிலை நெடுக்க எறிகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது. ஒடிஸாவில் உள்ள ஆபஜெ அப்துல் கலாம் தீவிலிருந்து வெற்றிகரமாக இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அக்னி–4 என்பது 4,000 கிமீ தூரம் வரை சென்று தாக்கக்கூடிய ஓர் இடைநிலை நெடுக்க ஏவுகணையாகும். இது பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. 1,000 கிகி எடை வரை சுமந்து 900 கிமீ வரை செல்லக்கூடியது.

4. பன்னாட்டு அமைதி காக்கும் பயிற்சியான, ‘கான் குவெஸ்ட் – 2022’ஐ நடத்திய நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. மங்கோலியா 

இ. கஜகஸ்தான்

ஈ. பிரான்ஸ்

  • பன்னாட்டு அமைதி காக்கும் பயிற்சியான, ‘Khan Quest – 2022’ சமீபத்தில் மங்கோலியாவில் தொடங்கியது. இந்தப் பயிற்சியில் இந்தியா உட்பட 16 நாடுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின்படி, இந்திய இராணுவம் லடாக் சாரணர்களின் ஒரு குழுவால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. 14 நாள் பயிற்சியானது, பங்கேற்கும் நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பின் அளவை மேம்படுத்தும்.

5. ‘பைகோ பண்டிகை’ கொண்டாடப்படுகிற இந்திய மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. பஞ்சாப்

இ. அஸ்ஸாம் 

ஈ. மகாராஷ்டிரா

  • இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் உள்ள மக்கள், ‘பைகோ பண்டிகை’ என்ற வசந்த விழாவைக் கொண்டாடுகிறார்கள். ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் அஸ்ஸாம் மாநிலாத்திலுள்ள மக்களால் இது முக்கியமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. நன்னலத்துடன் கூடிய மங்களகரமான பயிர் அறுவடைக்காலத்தைக் கொண்டு வருவதே இந்தத் திருவிழாவின் நோக்கமாகும்.

6. KVIC–இன் தலைவர் வினைகுமார் சக்சேனா, கீழ்க்காணும் எந்த மாநிலம் / UT–இன் ஆளுநர் / துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்?

அ. கோவா

ஆ. புது தில்லி 

இ. புதுச்சேரி

ஈ. மேற்கு வங்கம்

  • தற்போது காதி மற்றும் கிராமப்புற தொழிற்சாலைகள் ஆணையத்தின் (KVIC) தலைவராக பணியாற்றிவரும் வினை குமார் சக்சேனா, தில்லியின் புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலின் இராஜினாமாவை இந்தியக்குடியரசுத்தலைவர் ஏற்றுக்கொண்டு அவரைத் தொடர்ந்து சக்சேனாவை நியமித்துள்ளார். இந்தியாவின் 75ஆவது விடுதலை நாளை நினைவுகூரும் வகையில் பிரதமர் தலைமையிலான தேசியக் குழுவின் உறுப்பினராகவும் அவர் இருந்தார்.

7. மூத்த இஆப அதிகாரி நிதி சிப்பர், கீழ்காணும் எந்த நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்?

அ. CBSE 

ஆ. AIIMS

இ. CSIR

ஈ. DRDO

  • மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) தலைவராக மூத்த IAS அதிகாரி நிதி சிப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் கேடரின் 1994 தொகுதி இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான நிதி சிப்பர், தற்போது கனரக தொழிற்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக உள்ளார். பணியாளர் அமைச்சகம் பிறப்பித்த ஆணையின்படி, தற்போதைய தலைவர் Dr வினீத் ஜோஷி இஆப–ஐத் தொடர்ந்து நிதி சிப்பர் பதவியேற்றார்.

8. 75ஆவது உலக சுகாதார அவையின் கருப்பொருள் என்ன?

அ. Invest in Health Service

. Health for Peace, Peace for Health 

இ. Health Amid Pandemic

ஈ. Health and Global Cooperation

  • 75ஆவது உலக சுகாதார மாநாடு 2022 மே.22–28 வரை சுவிச்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் நடைபெறுகிறது. COVID–19 தொற்றுகாலத்திற்குப்பிறகு நேரடி முறையில் நடைபெற்ற முதல் சுகாதார மாநாடு இதுவாகும். “Health for Peace, Peace for Health” என்பது இந்த ஆண்டு (2022) நடைபெறும் சுகாதார பேரவையின் கருப்பொருளாகும். உலக சுகாதார அவை என்பது WHOஇன் முடிவெடுக்கும் அமைப்பாகும். இதில் அனைத்து WHO உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

9. இந்திய எரிவாயு பரிமாற்றகத்தில் வீட்டு உபயோக எரிவாயு வர்த்தகம் செய்யும் முதல் இந்திய நிறுவனம் எது?

அ. GAIL

ஆ. ONGC 

இ. IOCL

ஈ. HPCL

  • ONGC ஆனது இந்திய எரிவாயு பரிமாற்றகத்தில் வீட்டு உபயோக எரிவாயுவை வர்த்தகம் செய்யும் இந்தியாவின் முதல் ஆய்வு மற்றும் உற்பத்தி நிறுவனமாக மாறியுள்ளது. இந்தியாவின் முதல் தானியங்கி தேசிய அளவிலான எரிவாயு பரிமாற்றகமான IGX–இல் ONGCஆல் முதல் இணையவழி வர்த்தகம் சமீபத்தில் செய்யப்பட்டது. ONGC, கிருஷ்ணா கோதாவரி தொகுதியில் இருந்து எரிவாயு வர்த்தகம் மேற்கொள்கிறது.

10. 2022 – மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடைபெறும் இடம் எது?

அ. இஸ்தான்புல் 

ஆ. மங்கோலியா

இ. புது தில்லி

ஈ. டாக்கா

  • சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (IBA) 2022 – மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்றது. இந்திய அணி மொத்தம் மூன்று பதக்கங்களுடன் (1 தங்கம் மற்றும் 2 வெண்கலம்) போட்டியை நிறைவுசெய்தது. தெலங்கானாவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் 52 கிலோ பிரிவில் தங்கமும், மனிஷா (57 கிலோ), பர்வீன் (63 கிலோ) வெண்கலமும் வென்றனர். சிறந்த குத்துச்சண்டை வீராங்கனையாக ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான புசேனாஸ் சுர்மெனெலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. 1,000 மீனவ இளைஞர்களுக்கு உயிர்பாதுகாப்புப் பயிற்சி – முதல்வர் மு க ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

தமிழ்நாட்டில் 14 கடலோர மாவட்டங்களைச்சேர்ந்த 1,000 மீனவ இளைஞர்களுக்கு உயிர் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சியளிக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடக்கிவைத்தார். இந்தத் திட்டத்தில், முதற்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் 25 மீனவ இளைஞர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு 1,076 கிமீ நீளமுள்ள கடற்கரையைக் கொண்டது. இங்குள்ள 608 மீனவ கிராமங்களில் 10.48 இலட்சம் மீனவர்கள் வாழ்கின்றனர். கடற்கரைப் பகுதிகளுக்கு மக்கள் செல்லும்போது அங்கு ஏற்படும் விபத்துகளால் மனித உயிர்களை இழக்க நேரிடுகிறது. இதுபோன்ற விபத்துகளைக் குறைக்கவும், நீரில் தவறி மூழ்கி தவிப்பவர்களைக் காப்பாற்றிடும் வகையிலும் மீனவ இளைஞர்களுக்கு, ‘கடற்கரை உயிர்காக்கும் பயிற்சிகள்’ வழங்கப்பட உள்ளன.

இந்தப் பயிற்சியானது தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதி உதவியுடன் `53 லட்சம் மதிப்பீட்டில் தனியார் நிறுவனம்மூலம் மாநிலத்தின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 மீனவ இளைஞர்களுக்கு அளிக்கப்படுகிறது.

2. உணவுத் தரக் கட்டுப்பாடு: தமிழ்நாடு முதலிடம்

உணவுப்பாதுகாப்பு துறை செயல்பாடுகளில் இந்திய அளவில் தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக தேர்ந்தெடுக்கப் -பட்டு, மத்திய அரசு சார்பில் தில்லியில் விருது வழங்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வுத் துறை கூறியதாவது:

நாடு முழுவதும் 75 உணவுத் தரம் நிறைந்த மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டன இடம்பெற்றன. அதில், தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 11 மாவட்டங்களுக்கு அத்தகைய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், சென்னை, ஈரோடு, திருநெல்வேலி, திருப்பூர், தூத்துக்குடி, மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறைக்கு தர நிர்ணய பரிசுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

3. நிகழ் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.5%: உலக வங்கி திருத்தி மதிப்பீடு

நிகழ் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இந்த நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என்று கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்த அந்த வங்கி, அதனை திருத்தி மதிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:

பணவீக்கம் (விலைவாசி உயர்வு விகிதம்) அதிகரிப்பு, விநியோக நடைமுறைகளில் இடர்ப்பாடுகள், புவி அரசியல் பதற்றம் ஆகியவை காரணமாக நிகழ் நிதியாண்டான 2022-23-இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். தனியார்துறையின் நிலையான முதலீடு, தொழிற்துறை சூழலை மேம்படுத்த இந்திய அரசு அறிமுகம் செய்துள்ள ஊக்கத்தொகை திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

இந்திய பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருக்கும் என்று கடந்த ஜனவரி மாதம் தெரிவிக்கப்பட்டது. அதைவிட தற்போதைய மதிப்பீடு 1.2 சதவீதம் குறைவாகும். வேலைவாய்ப்பின்மை விகிதம் கரோனா பரவலுக்கு முன்பிருந்த நிலைக்குத் திரும்பியுள்ளது. எனினும் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் கரோனா பரவலுக்கு முன்பு இருந்ததைவிட குறைவாகத்தான் உள்ளது. உழைப்பாளர்களும் குறைந்த ஊதியம் கொண்ட பணிகளுக்கு மாறியுள்ளனர்.

தற்போது இந்தியாவில் உட்கட்டமைப்பில் முதலீடு செய்வதை நோக்கி அரசின் செலவினம் திரும்பியுள்ளது. தொழிலாளர் விதிமுறைகள் எளிமைப்படுத்தப்படுகின்றன. நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுகின்றன. அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. செஸ் ஒலிம்பியாடிலும் இனி ‘ஜோதி ஓட்டம்’ – எப்போதும் இந்தியாவில் தொடக்கம்

ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கத்துக்கு முன்பாக நடத்தப்படுவதைப் போன்று, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கத்துக்கு முன்பாகவும் ‘ஜோதி ஓட்டத்தை’ நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இந்த நடைமுறை முதன்முதலாக, சென்னை அருகே மகாபலிபுரத்தில் வரும் ஜூலை – ஆகஸ்டில் நடைபெறவுள்ள 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியிலிருந்து தொடங்க இருக்கிறது. அதன் பிறகு இனி செஸ் ஒலிம்பியாட் நடைபெறும்போதெல்லாம் அதற்கு முன்பாக இந்த ‘ஜோதி ஓட்டம்’ நடத்தப்படும். இந்தியாவில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக்கிற்கு ஏதென்ஸ் போல, செஸ் விளையாட்டின் பிறப்பிடமாக இருக்கும் இந்தியாவிலிருந்தே இனி ஒவ்வொரு முறையும் இந்த ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் தொடங்கும். அதன் பிறகு, சர்வதேச செஸ் சம்மேளனத்தில் உறுப்பினராக இருக்கும் நாடுகளில் வலம்வரும் அந்த ஜோதி, இறுதியாக போட்டி நடைபெற இருக்கும் நாட்டையும், சம்பந்தப்பட்ட நகரத்தையும் வந்தடையும்.

தற்போது மகாபலிபுரத்தில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு இன்னும் 50 நாள்களே இருப்பதால், இந்த அறிமுக ‘ஜோதி ஓட்டமானது’ இந்தியாவுக்குள்ளாக மட்டுமே நடக்கவுள்ளதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஜோதியை ஏந்தி ஓடுபவர்களில் ஒருவராக இந்திய செஸ் நட்சத்திரமான விஸ்வநாதன் ஆனந்தும் இருப்பார்.

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது மகாபலிபுரத்தில் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க இதுவரை 187 நாடுகளில் இருந்து 343 அணிகள் ஓபன் மற்றும் மகளிர் பிரிவுகளில் பதிவு செய்துள்ளன.

5. சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு: 180 நாடுகள் பட்டியலில் கடைசி இடத்தில் இந்தியா

அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில் 180 நாடுகள் அடங்கிய நிகழாண்டுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு பட்டியலில் இந்தியா கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

180 நாடுகளின் சுற்றுச்சூழல் செயல்திறன் தொடர்பாக அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் யேல் சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் கொள்கை மையம், கொலம்பியா பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் சர்வதேச புவி அறிவியல் தகவல் மையம் ஆகியவை ஆய்வு மேற்கொண்டன. அந்த ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. அந்த முடிவுகளின்படி, அப்பட்டியலில் இந்தியா கடைசி இடம் பிடித்துள்ளது.

நாடுகள் சுற்றுச்சூழல் செயல்திறன் தரவரிசை

டென்மார்க் – 1

பிரிட்டன் – 2

பின்லாந்து – 3

மால்டா – 4

சுவீடன் – 5

ஆய்வின் பல்வேறு பிரிவுகள் இந்தியாவின் தரவரிசை

பல்லுயிர்ப் பெருக்கம் பாதுகாத்தல் – 179

உயிரினங்கள் பாதுகாப்பு குறியீடு – 175

உயிரினங்கள் வாழ்விட குறியீடு – 80

காடுகள் இழப்பு – 75

புல்வெளிப் பகுதிகள் இழப்பு – 116

சதுப்புநிலப் பகுதிகள் இழப்பு – 60

காற்றின் தரம் – 179

கடலில் நெகிழிக் கலப்பு – 135

பருவநிலை மாற்றம் – 165

கரியமில வாயு வெளியேற்றம் அதிகரிப்பு – 136

வேளாண்மையில் பூச்சிக்கொல்லி பயன்பாடு – 47

1. The ‘National Tribal Research Institute’ was inaugurated in which state/UT?

A. Karnataka

B. New Delhi 

C. Madhya Pradesh

D. Jharkhand

  • Union Home Minister Amit Shah inaugurated National Tribal Research Institute in New Delhi as part of the celebrations of the Azadi Ka Amrit festival. The National Tribal Research Institute (NTRI) will provide the tribal communities with necessary resources. NTRI will also provide policy inputs to the Ministry of Tribal Affairs and State Welfare Departments for programs and studies that support the socio–economic aspects of the tribes.

2. Defence Acquisition Council (DAC) approved the manufacture of Dornier aircraft and Su–30 MKI aero–engines by which institution?

A. ISRO

B. DRDO

C. HAL 

D. BHEL

  • The Defence Acquisition Council (DAC), chaired by Defence Minister Rajnath Singh, approved the procurement of military equipment and platforms worth Rs 76,390 crore from domestic industries. The DAC approved manufacture of Dornier aircraft and Su–30 MKI aero–engines by Hindustan Aeronautics Limited (HAL). DAC also approved ‘Digital Coast Guard’ project.

3. What is ‘Agni–4’, which was recently tested by India?

A. Intermediate Range Ballistic Missile 

B. Next–generation corvette

C. Anti Submarine Missile

D. Inter–continental Ballistic Missile

  • India successfully tested the Intermediate Range Ballistic Missile Agni–4. The successful training launch was carried out from APJ Abdul Kalam Island in Odisha. Agni–4 is an Intermediate Range Ballistic Missile with a range of around 4,000 km. It was developed by Defence Research and Development Organisation (DRDO) and can carry a 1,000–kg payload and can go as high as 900 km.

4. Which country hosted the multinational peacekeeping exercise ‘Ex Khaan Quest 2022’?

A. USA

B. Mongolia 

C. Kazakhstan

D. France

  • A multinational peacekeeping exercise– Ex Khaan Quest 2022 commenced recently in Mongolia. Military contingents from 16 countries including India are participating in the exercise. As per India’s Defence Ministry, Indian Army is represented by a contingent from the Ladakh Scouts. The 14–day exercise will enhance the level of defence co–operation among participating countries.

5. ‘Baikho festival’ is predominantly celebrated in which Indian state?

A. Uttar Pradesh

B. Punjab

C. Assam 🗹

D. Maharashtra

  • People in India’s north–eastern state of Assam celebrate a spring festival named ‘Baikho festival’. It is predominantly observed by the people of Assam every year in June. The festival is meant to bring an auspicious harvest season with abundant crops and good health.

6. KVIC Chairman Vinai Kumar Saxena has been appointed as the Lieutenant Governor/ Governor of which state/UT?

A. Goa

B. New Delhi

C. Puducherry

D. West Bengal

  • Vinai Kumar Saxena, who is currently serving as the Chairperson of the Khadi and Village Industries Commission (KVIC), has been appointed as the new Lieutenant Governor (L–G) of Delhi. The President of India has accepted the resignation of former L–G Anil Baijal and appointed Saxena as his successor. He was also the member of National Committee headed by Prime Minister to commemorate the 75th Anniversary of India’s Independence.

7. Senior IAS officer Nidhi Chibber has been appointed as the chairperson of which institution?

A. CBSE

 B. AIIMS

C. CSIR

D. DRDO

  • Senior IAS officer Nidhi Chibber has been appointed as the chairperson of the Central Board of Secondary Education (CBSE). Nidhi Chibber, a 1994 batch Indian Administrative Service officer of Chhattisgarh cadre, is currently Additional Secretary, Ministry of Heavy Industries. She succeeds the incumbent chairperson Dr Vineet Joshi IAS, as per the order issued by the Personnel Ministry.

8. What is the theme of the 75th World Health Assembly, 2022?

A. Invest in Health Service

B. Health for Peace, Peace for Health 

C. Health Amid Pandemic

D. Health and Global Cooperation

  • The 75th World Health Assembly is being held in Geneva, Switzerland, from 22–28 May 2022. This is the first in–person Health Assembly since the start of the COVID–19 pandemic. The theme of this year’s Health Assembly is: Health for peace, peace for health. The World Health Assembly is the decision–making body of WHO and it is attended by delegations from all WHO Member States.

9. Which is the first Indian company to trade domestic gas on the Indian Gas Exchange (IGX)?

A. GAIL

B. ONGC 

C. IOCL

D. HPCL

  • ONGC has become the first exploration and production (E&P) company in India to trade domestic gas on the Indian Gas Exchange (IGX). The first online trade was made recently by ONGC on India’s first automated national level Gas Exchange, IGX. The gas traded is from ONGC Krishna Godavari block.

10. Which is the venue of the 2022 Women’s World Boxing Championship?

A. Istanbul 

B. Mongolia

C. New Delhi

D. Dhaka

  • The International Boxing Association’s (IBA) 2022 Women’s World Boxing Championship was held in Istanbul, Turkey. Indian contingent finished the tournament with a total of three medals (one gold and two bronze). Telangana–based boxer Nikhat Zareen won gold in 52–kg category, Manisha (57kg) and Parveen (63kg) won bronze. Busenaz Sürmeneli, the Olympic and world champion was named best boxer.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!