8th October 2020 Current Affairs in Tamil & English

8th October 2020 Current Affairs in Tamil & English

8th October 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

8th October 2020 Tnpsc Current Affairs in Tamil

8th October 2020 Tnpsc Current Affairs in English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. ‘கரியமில உமிழ்வைத்தடுப்பது & எரிசக்தி மாற்றுத் திட்ட’த்திற்கான எந்த நாட்டின் தூதரகத்துடனான நோக்க அறிக்கையில் NITI ஆயோக் கையெழுத்திட்டுள்ளது?

அ. ஜெர்மனி

ஆ. பின்லாந்து

இ. நெதர்லாந்து

ஈ. ஐக்கியப் பேரரசு

 • தூய்மையான மற்றும் அதிக அளவிலான எரிசக்திக்கு வழிவகுக்கும் வகையில், கரியமில உமிழ்வைத் தடுப்பது மற்றும் எரிசக்தி மாற்றுத் திட்டத்திற்குமான நோக்க அறிக்கை ஒன்றில் NITI ஆயோக்கும், புது தில்லியில் உள்ள நெதர்லாந்து தூதரகமும் கையெழுத்திட்டுள்ளன. கொள்கை வடிவமைப்பாளர்கள், தொழிலமைப்புகள், உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்கள்போன்ற பங்குதாரர்களை ஒருங்கிணைப்பதற்கான தளத்தை இந்த ஒப்பந்தத்தின்மூலம் NITI ஆயோக்கும் நெதர்லாந்து தூதரகமும் உருவாக்கும்.

2.உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஊக்கியுடன்கூடிய எந்த மீயொலி ஏவுகணை, சமீபத்தில், வெற்றிகரமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது?

அ. பிரமோஸ்

ஆ. நிர்பை

இ. ஷெளரியா

ஈ. விராத்

 • இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பல்வேறு உபகரணங்களைக் கொண்டு தயாரான பிரமோஸ் ஏவுகணை, சமீபத்தில், வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஊக்கி (booster), பறக்கும் பிரிவு போன்ற பல்வேறு உபகரணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கண்டம்விட்டு கண்டம்பாயக்கூடிய நவீன ஏவுகணை, ஒடிசா மாநிலத்தின் பாலாசூரில் அமைந்துள்ள சோதனை தளத்திலிருந்து பரிசோதித்து பார்க்கப்பட்டது. இது அதன் முந்தைய 290 கிமீ வரம்பிலிருந்து சுமார் 400 கிமீ என்ற புதிய வரம்பிற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.

3.எந்த வளைகுடா நாட்டின் எமிராக (ஆட்சியாளர்) ஷேக் நவாப் பதவியேற்றுள்ளார்?

அ. ஓமான்

ஆ. பக்ரைன்

இ. குவைத்

ஈ. செளதி அரேபியா

 • ஷேக் நவாப் என்றும் அழைக்கப்படும் ஷேக் நவாப் அல்-அகமத் அல்-சபா குவைத்தின் எமிர் (தலைவர்) ஆக பதவியேற்றுள்ளார். முந்தைய ஆட்சியாளர் ஷேக் சபா அல்-அகமத் அல்-ஜாபர் அல்-சபா, சமீபத்தில், அமெரிக்காவில் தனது 91ஆம் வயதில் காலமானார். ஷேக் சபா, பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆட்சிசெய்தார்; புதிய பட்டத்தரசரான ஷேக் நவாபுக்கு தற்போது 83 வயதாகிறது.

4.USA’இன் ‘Citizen Diplomacy’ விருதுக்கு இணை வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள அமைப்பு எது?

அ. பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை

ஆ. TATA அறக்கட்டளை

இ. ரிலையன்ஸ் அறக்கட்டளை

ஈ. சேகல் அறக்கட்டளை

 • இந்தியாவின் சேகல் அறக்கட்டளை, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (USA) ‘Citizen Diplomacy’ விருதுக்கு இணை வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் அதன் மனித உரிமைகள் மற்றும் கிராமப்புற இந்தியாவில் பெண்களின் அதிகாரமளித்தல் பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 • ஐக்கிய அமெரிக்க நாடுகளின் வெளியுறவுக்கொள்கையை உலகெங்கிலும் வலுப்படுத்தும் குடிமக்கள் மற்றும் அமைப்புகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக அமெரிக்க உலகளாவிய பொது விவகாரங்களுக்கான பணியகம், கடந்த 2017ஆம் ஆண்டில் இவ்விருதை அறிமுகப்படுத்தியது.

5. 16 ஆண்டுகளுக்குப் பிறகு கோலார் தங்க வயல்களில் ஆய்வு செய்யத் தொடங்கிய நிறுவனம் எது?

அ. தேசிய கனிம மேம்பாட்டு கழகம்

ஆ. கனிம ஆய்வுக்கழகம்

இ. ரிலையன்ஸ் தொழிலகங்கள்

ஈ. இந்திய நிலக்கரி நிறுவனம்

 • கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க வயல்களை (KGF) கனிம ஆய்வுக் கழகம் ஆய்வுசெய்யத் தொடங்கியுள்ளது. கனிம ஆய்வுக் கழகம் என்பது சுரங்கங்கள் அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் மினி இரத்னா தகுதிபெற்ற ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்த ஆய்வு நடவடிக்கை, கடந்த பதினான்கு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள தங்க வயலை ஆராய்வது தொடர்பான பாரத் தங்கங்கள் ஆய்வு நிறுவனத்தின் சிக்கலைத் தீர்க்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6.தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் கூற்றுப்படி, முழு வளர்ச்சியடைந்த ஓர் இந்திய ஆண்மகனுக்கான புதிய சிறந்த எடை (ideal weight) என்ன?

அ. 65 கிகி

ஆ. 85 கிகி

இ. 95 கிகி

ஈ. 100 கிகி

 • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்தின்கீழ் இயங்கிவரும் தேசிய ஊட்டச்சத்து கல்வி நிறுவனமானது ஓர் இந்திய ஆணின் சிறந்த உடல் எடையை 2010ஆம் ஆண்டிலிருந்த 60 கிலோவிலிருந்து தற்போது 65 ஆகவும், இந்தியப் பெண்ணின் சிறந்த உடல் எடையை ஐம்பது கிலோவிலிருந்து ஐம்பத்தைந்து ஆகவும் உயர்த்தியுள்ளது. மேலும், வயது வந்த இந்தியர்களுக்கான வரம்பு தற்போது 19-39ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 2010ஆம் ஆண்டில் 20-39ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

7.இந்திய ஆயுதப்படை வீரர்கள் உருவாக்கும் புத்தாக்கங்களை அடையாளங்காணுவதற்காக, பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கியுள்ள முன்னெடுப்பின் பெயர் என்ன?

அ. ஆயுதப்படை திட்டம்

ஆ. ஐடியா படை

இ. iDEX4Fauji

ஈ. Fauji இயக்கம்

 • iDEX4Fauji என்பது இந்திய ஆயுதப்படை வீரர்களால் உருவாக்கப்படும் புத்தாக்கங்களை இனங்காண பாதுகாப்பு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும். ஆயுதப்படைகளின் உறுப்பினர்க -ளால் இனங்காணப்பட்ட புத்தாக்கங்களுக்கு வெகுமதி அளிப்பதற்காக இது தொடங்கப்பட்டுள்ளது. மேலும், வீரர்கள் / கள அமைப்புகளிடமிருந்து புதுமையான எண்ணங்கள் மேலோங்கச் செய்வதை இது அதிகரிக்கும். பாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட்அப் சவால்-4’ஐஉம் அமைச்சர் தொடங்கிவைத்தார்.

8.இந்தியா வழங்கிய கடனுதவியுடன் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மறுஆய்வு செய்வதற்காக, எந்த நாட்டுடன் “உயர்மட்ட கண்காணிப்புக் குழுவை” இந்தியா அமைக்கவுள்ளது?

அ. மாலத்தீவு

ஆ. இலங்கை

இ. மியான்மர்

ஈ. வங்கதேசம்

 • இந்தியா வழங்கிய கடனுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை மறுஆய்வு செய்ய, இந்தியாவும் வங்கதேசமும் ஓர், “உயர்மட்ட கண்காணிப்புக்குழுவை” அமைக்க உத்தேசித்துள்ளன. மெய்நிகராக நடைபெற்ற, இருநாடுகளுக்கும் இடையிலான ஆறாவது கூட்டு ஆலோசனை ஆணையக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 • உயர்மட்ட கண்காணிப்புக் குழுவிற்கு வங்கதேசத்தின் பொருளாதார உறவுகள் பிரிவு செயலாளரும் வங்கதேசத்துக்கான இந்திய உயராணையரும் இணைந்து தலைமை தாங்குவார்கள்.

9. ‘CSIR – ஊரக வளர்ச்சிக்கான தொழினுட்பங்களை’ அறிமுகப்படுத்தியுள்ள நடுவணமைச்சகம் எது?

அ. அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. கல்வி அமைச்சகம்

இ. வேளாண்மை & உழவர்நல அமைச்சகம்

ஈ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

 • மத்திய அறிவியல் & தொழினுட்ப அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ஊரக வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கழகத்தின் (CSIR) தொழினுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். CSIR, உன்னத் பாரத் அபியான், ஐஐடி தில்லி மற்றும் விஞ்ஞான பாரதி ஆகியவற்றின் கூட்டு முயற்சியின்கீழ் இந்தத் தொழினுட்பங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இத்தொழினுட்பங்களுள் மேம்பட்ட தேன்கூடு, ஈரப்பதமற்ற உலர்த்தி மற்றும் வேளாண் கழிவுகளை அடிப்படையாகக்கொண்ட மக்குந்தட்டுகள் ஆகியன அடங்கும்.

10. ‘ஸ்வச்சதா கே 6 சால், பெமிசால்’ என்ற முழக்கம் கீழ்க்காணும் எந்தத்திட்டம் அதன் ஆறு ஆண்டுகளை நிறைவு செய்ததை நினைவுகூரும் வகையில் பயன்படுத்தப்பட்டது?

அ. தூய்மை இந்தியா இயக்கம் – நகர்ப்புறம்

ஆ. தூய்மை இந்தியா இயக்கம் – கிராமப்புறம்

இ. நமாமி கங்கை

ஈ. கந்தகி முக்த் பாரத்

 • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது தூய்மை இந்தியா இயக்கம் – நகர்ப்புறத் திட்டத்தின் (SBM-U) ஆறாமாண்டு நிறைவைக்கொண்டாடுகிறது. இதனை நினைவுகூரும் வகையில், ‘ஸ்வச்சதா கே 6 சால், பெமிசால்’ என்ற தலைப்பில் ஓர் இணையவழிக் கருத்தரங்கை அமைச்சகம் ஏற்பாடு செய்தது. இதுவரை 4,327 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திறந்தவெளி மலங்கழித்தலற்ற நகர்ப்புறங்கள் (ODF) என அறிவிக்கப்பட்டுள்ளதாக அவ்வமைச்சகம் தெரிவித்துள்ளது.

1. NITI Aayog signed SoI with the embassy of which country on ‘Decarbonization and Energy Transition Agenda’?

[A] Germany

[B] Finland

[C] The Netherlands

[D] United Kingdom

 • NITI Aayog and the Embassy of the Netherlands, New Delhi recently signed a Statement of Intent (SoI) on ‘Decarbonization and Energy Transition Agenda’. Under this partnership, NITI Aayog and the Dutch Embassy aim to create innovative technological solutions to accommodate cleaner energy. It also aims to lower the net carbon footprint, to promote bio–energy technologies among others.

2. Which supersonic cruise missile with Indigenous Booster has been successfully flight tested?

[A] BrahMos

[B] Nirbhay

[C] Shaurya

[D] Viraat

 • India has successfully test fired a new version of the surface–to–surface supersonic cruise missile BrahMos. The missile with a number of indigenously developed sub–systems including a booster was flight–tested from the integrated test range at Balasore in Odisha. It has an extended range of about 400 km from the earlier 290 km range.

3. Sheikh Nawaf has been sworn in as the Emir (Ruler) of which Gulf country?

[A] Oman

[B] Bahrain

[C] Kuwait

[D] Saudi Arabia

 • Sheikh Nawaf al–Ahmad al–Sabah, also known as Sheikh Nawaf has been sworn in as the Emir (Head) of Kuwait. The previous ruler Sheikh Sabah al–Ahmad al–Jaber al–Sabah has recently died in the United States at the age of 91. Sheikh Sabah ruled the country for more than 14 years and the new Crown Prince Sheikh Nawaf is 83 years old.

4. Which organization has been selected as co runner up of USA’s Citizen Diplomacy Award?

[A] Bill & Melinda Gates Foundation

[B] TATA Foundation

[C] Reliance Foundation

[D] Sehgal Foundation

 • India’s Sehgal Foundation has emerged as a co–runner up of the USA’s “Citizen Diplomacy Award”. The institution has been selected for its human rights and women empowerment work in rural India. The Department of States – Bureau of Global Public Affairs of USA, launched the Citizen Diplomacy Award in 2017 to recognize significant contributions by citizens and organizations to deepen USA’s foreign policy around the world.

5. Which company has started exploration of Kolar Gold Fields after 16 years?

[A] National Mineral Development Corporation

[B] Mineral Exploration Corporation Limited

[C] Reliance Industries Limited

[D] Coal India Limited

 • Mineral Exploration Corporation Limited (MECL) has commenced the exploration of the Kolar Gold Fields (KGF) in Karnataka. MECL is a Mini Ratna PSU under the Ministry of Mines. This mining activity is expected to help resolve Bharat Gold Mines Limited (BGML) issue over exploration of the gold field, which is pending for past 16 years.

6. What is the new ideal weight for adult Indian Men as per National Institute of Nutrition?

[A] 65 Kg

[B] 85 Kg

[C] 95 Kg

[D] 100 Kg

 • The National Institute of Nutrition (NIN) under the Indian Council of Medical Research (ICMR) has revised the ideal weight for adult Indian men from 60 kg to 65 kg. Similarly, the NIN has revised the ideal weight for adult Indian women from 50 kg to 55 kg. The definition of Indian adult also stands revised from 20–39 years to 19–39 years.

7. What is the name of the initiative by Defence Ministry to identify innovations created by Indian Armed Forces personnel?

[A] Project Armed Force

[B] Idea Force

[C] iDEX4Fauji

[D] Mission Fauji

 • iDEX4Fauji is an initiative launched by the Ministry of Defence to identify innovations created by Indian Armed Forces personnel. The initiative has been launched to reward innovations identified by members of the Armed Forces and will boost innovative ideas from soldiers/ field formations. The Minister also launched Defence India Startup Challenge–4.

8. India is to set up a “High Level Monitoring Committee” with which nation, to review projects implemented with LoC provided by India?

[A] Maldives

[B] Sri Lanka

[C] Myanmar

[D] Bangladesh

 • A ‘High Level Monitoring Committee’ is proposed to be set up by India and Bangladesh to review projects implemented with Line of Credit (LoC) provided by India. The decision was made at the 6th Joint Consultative Commission meeting between the two countries held in a virtual mode. The High–Level Monitoring Committee would be headed by Secretary, Economic Relations Division of Bangladesh and High Commissioner of India in Bangladesh.

9. Which Union Ministry launched the ‘CSIR–Technologies for rural development’?

[A] Ministry of Science & Technology

[B] Ministry of Education

[C] Ministry of Agriculture and Farmers Welfare

[D] Ministry of Rural Development

 • Union Science and Technology Minister Harsh Vardhan has launched the Council of Scientific and Industrial Research (CSIR) Technologies for Rural Development.
 • The technologies have been launched under a joint initiative of CSIR, Unnat Bharat Abhiyan (UBA), Indian Institute of Technology Delhi (IITD) and Vijnana Bharti (VIBHA). The technologies include improved beehive, dehumidified drier and agricultural waste–based biodegradable plates.

10. ‘Swachhata Ke 6 Saal, Bemisaal’ is a tagline used to commemorate six years of completion of which scheme?

[A] Swachh Bharat Mission–Urban

[B] Swachh Bharat Mission–Gramin

[C] Namami Gange

[D] Gandagi Mukt Bharat

 • The Ministry of Housing and Urban Affairs is celebrating the sixth anniversary of Swachh Bharat Mission–Urban (SBM–U). To commemorate the event, the Ministry is organising a webinar titled ‘Swachhata Ke 6 Saal, Bemisaal’. The Ministry said that 4,327 urban local bodies have been declared open defecation–free (ODF) so far.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *