Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

8th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

8th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 8th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. உணவு இழப்பு மற்றும் சேதம் குறித்த சர்வதேச விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?

அ) செப்டம்பர்.29 

ஆ) செப்டம்பர்.30

இ) அக்டோபர்.1

ஈ) அக்டோபர்.2

  • செப்.29 அன்று உணவுவிழப்பு மற்றும் சேதம் குறித்த இரண்டாவது சர்வதேச விழிப்புணர்வு நாளை உலகம் கொண்டாடுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஐநா உணவமைப்பு உச்சிமாநாட்டில் “உணவு ஒருபோதும் வீணாகாது” என்ற கூட்டணியை UNEP அறிமுகப்படுத்தியது.
  • “Stop Food Loss and Waste; For the People; For the Planet” என்பது இந்த ஆண்டின் (2021) கருப்பொருளாகும். உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் சுமார் 14% அறுவடை மற்றும் சில்லறை விற்பனையின் போது வீணாகின்றது. அதே நேரத்தில், உலகளாவிய உணவு உற்பத்தி -யில் 17% வரை பல்வேறு நிலைகளில் வீணாகின்றது. உலக இருதய நாளானது செப்டம்பர்.29 அன்று கொண்டாடப்படுகிறது. “‘Use Heart to Connect” என்பது இந்த ஆண்டின் கருப்பொருள் ஆகும்.

2. ‘இனிப்புப்புரட்சி’ என்ற NBHM திட்டத்துடன் தொடர்புடையது எது?

அ) கரும்பு

ஆ) தேன் 

இ) பழங்கள்

ஈ) பனை

  • தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கமானது (NBHM), மூன்று ஆண்டுகளுக்கு (2020-21 முதல் 2022-23 வரை) அறிவித்துள்ளது. இது, ‘இனிப்புப்புரட்சி’ என்ற இலக்கை அடைவதற்காக நாட்டில் அறிவியல் பூர்வமான முறையில் தேனீ வளர்ப்பை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது தேசிய தேனீ வாரியம் (NBB) மூலம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், சமீபத்தில், ‘தேசிய தேனீ வாரியத்தின்’ ஒத்துழைப்புடன் குஜராத் கூட்டுறவு பால் சந்தை கூட்டமை -ப்பின் தயாரிப்பான ‘அமுல் தேன்’ என்பதை வெளியிட்டார்.

3. சமீப செய்திகளில் இடம்பெற்ற புமியோ கிஷிடா, எந்த நாட்டின் அடுத்த பிரதமராவார்?

அ) ஜப்பான் 

ஆ) வட கொரியா

இ) தாய்லாந்து

ஈ) வியட்நாம்

  • ஜப்பானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான புமியோ கிஷிடா, யோஷிஹைட் சுகாவுக்கு மாற்றாக பிரதமராகவுள்ளார். அவர், ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். COVID தொற்று, வரலாறு காணாத பொது சுகாதார நெருக்கடி மற்றும் சீனாவின் எல்லைமீறிய அரசியல் அச்சுறுத்தல் ஆகியவற்றால் நிலை குலைந்த பொருளாதாரத்தை ஜப்பான் எதிர்கொண்டுள்ளது.

4. ‘Independent Engineer’மூலம் “தகராறு தவிர்ப்பு வழிமுறையை” அங்கீகரித்துள்ள மத்திய அமைச்சகம் எது?

அ) எரிசக்தி அமைச்சகம் 

ஆ) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

இ) மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

  • மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் அண்மையில் “இன்டிபென்டன்ட் எஞ்சினியர்” வழிமுறையிலான “தகராறு தவிர்ப்பு வழிமுறையை” அங்கீகரித்தார். முதலாளி மற்றும் ஒப்பந்தக்காரருக்கு இடையேயான தொடக்க நிலை தகராறுகளுக்கு, நீர்மின் துறையில் தற்போதுள்ள தீர்வு காண்முறைகள் பலனளிக்கவில்லை என நீர்மின் திட்டங்களை செயல்படுத்துகின்ற CPSE’கள் குரல் எழுப்பின.

5. அவசரகால கடனளிப்பு உத்தரவாத திட்டத்துடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ) MSME அமைச்சகம்

ஆ) நிதி அமைச்சகம் 

இ) வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஈ) ஜவுளி அமைச்சகம்

  • மத்திய நிதி அமைச்சகமானது அவசரகால கடனளிப்பு உத்தரவாதத் திட்டத்தின் செல்லுபடிகாலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கோ (மார்ச் 31, 2022) அல்லது ஒட்டுமொத்த உச்சவரம்பு 4.5 இலட்சம் கோடியை எட்டும் வரையோ நீட்டித்துள்ளது. இத்திட்டம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதிப்பற்றாக்குறையை சமாளிக்கவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2021 செப். 24 நிலவரப்படி, 2.86 இலட்சம் கோடிக்கு மேல் இக்கடன் திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

6. தேசிய மதிய உணவு திட்டத்தின் புதிய பெயர் என்ன?

அ) PM மதிய உணவுத் திட்டம்

ஆ) PM போஷான் 

இ) PM போஜன்

ஈ) PM ஆகார்

  • தேசிய மதிய உணவுத்திட்டத்திற்கு ‘PM போஷான்’ திட்டம் என்று பெயர் மாற்றஞ்செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதில் உழவர்கள் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் பெண்கள் சுயஉதவிக் குழுக்களின் பங்களிப்பும் புதிய அம்சங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • நாடு முழுவதுமுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு சூடான சமைத்த உணவை வழங்கும் ‘பள்ளிகளில் PM போஷான்’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது பால்வாடி பள்ளி மாணவர்களையும் உள்ளடக்கும்.

7. மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா 

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) குஜராத்

  • மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம் (CIFT) 1957’இல் கொச்சினில் அமைக்கப்பட்டது. மீன்பிடித்தல் மற்றும் மீன் பதப்படுத்துதல் தொடர்பான அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் முதல் மற்றும் ஒரே தேசிய மையம் இதுவாகும். CIFT ஆனது இறால் ஓடுகளிலிருந்து உரத்தையும் செல்லப்பிராணிகளுக்கான உணவையும் உருவாக்கி உள்ளது. ஆண்டிமைக்ரோபியல் ஊக்கிகளுடன் தனிப்பயனாக்கப்பட்ட உரமான ‘போலியர் ஸ்பிரே’ பயிர்விளைச்சலை அதிகரிக்கின்றது.

8. ஏறத்தாழ இந்தியாவின் ஏற்றுமதியில், MSME’களின் பங்களிப்பு மட்டும் எவ்வளவாக உள்ளது?

அ) 30

ஆ) 40 

இ) 50

ஈ) 60

  • இந்தியாவில் 63 மில்லியனுக்கும் அதிகமான MSME’கள் உள்ளன. அவை, இந்தியாவின் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 40 சதவீதமும் நாட்டின் உற்பத்தி GDP’இல் 6.11 சதவீதமும் ஆகும். சேவைத்துறையின்மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு MSME’கள் 24.63 சதவீத அளவிற்கு பங்களிப்பு செய்கின்றன. இந்திய MSME அமைச்சர் நாராயண் ரானே, இந்திய SME மன்றத்தின் இந்திய ஏற்றுமதி முயற்சி மற்றும் இந்திய ஏற்றுமதிகள்-2021 வலைதளத்தைத் தொடங்கி வைத்தார்.
  • இந்த நிதியாண்டில் இந்தியா தனது ஏற்றுமதி இலக்கை 400 பில்லியன் அமெரிக்க டாலராக நிர்ணயித்துள்ளது. MSME’கள், 2027’க்குள் அதை $1 டிரில்லியன் டாலராக உயர்த்தும் என அமைச்சர் கூறினார்.

9. இந்தியாவின் எந்த மாநிலத்திலிருந்து ‘தூய்மை இந்தியா திட்டம்’ தொடங்கப்பட்டது?

அ) பீகார்

ஆ) உத்தர பிரதேசம் 

இ) குஜராத்

ஈ) மேற்கு வங்கம்

  • மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், உத்தரபிரதேசத்தின் மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து ஒரு மாத காலம் நடக்கும் ‘தூய்மை இந்தியா திட்டத்தை’ தொடங்கினார். ஆசாதி கா அம்ருத் மகோத்சவத்தின் ஒருபகுதியாக இது தொடங்கப்பட்டுள்ளது.
  • விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மக்களை ஊக்குவிப்பதும், குறிப்பாக நாடு முழுவதும் ‘ஒற்றை பயன்பாடுகொண்ட நெகிழி’ கழிவுகளை சுத்தம் செய்வதில் அவர்களை ஈடுபடுத்துவதும் இந்தத் தூய்மை இயக்கத்தின் நோக்கமாகும். அக்டோபர்.31 வரை இந்த இயக்கம் தொடரும்.

10. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘Hwasong-8’ என்பது எந்நாட்டின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையாகும்?

அ) சீனா

ஆ) ஜப்பான்

இ) இஸ்ரேல்

ஈ) வட கொரியா 🗹

  • ‘ஹ்வாசாங்-8’ என்ற புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்ததாக வட கொரியா கூறியுள்ளது.
  • ஏவுகணைகளை எரிபொருள் நிரப்பி பின்னர் களத்திற்கு அனுப்புவதற்கு இத்தொழில்நுட்பம் அனுமதிக்கிறது. இந்தச் சோதனையை நடத்தி பல நாட்களுக்குப் பிறகு, வடகொரியா புதிய விமானந்தாக்கி ஏவுகணையை சோதனை செய்ததாகக் கூறியது. கடந்த ஒரு மாதத்திற்குள் வட கொரியா மேற்கொள்ளும் 4ஆவது ஆயுதசோதனையாகும் இது. தற்காப்புக்காக தனக்கு ஆயுதங்கள் தேவை என்றும் வட கொரியா கூறியுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கன்னியாகுமரி கிராம்புக்கு புவிசார் குறியீடு

கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகளில் விளையும் கிராம்புக்கு ‘கன்னியாகுமரி கிராம்பு’ என புவிசார் குறையீடு வழங்கப்பட்டுள்ளது.

நறுமணப் பயிரான கிராம்பு தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் சரிவு பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான மாறாமலை, கரும்பாறை, வேளிமலை, மகேந்திரகிரி பகுதிகளில் 750 ஹெக்டேர் பரப்பளவில் கிராம்பு பயிரிடப்பட்டுஉள்ளது. இது, தமிழகத்தில் கிராம்பு பயிரிடப்படும் மொத்த பரப்பில் 73 சதவீதமாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலவும் மிதமான வெப்பநிலை காரணமாக, கிராம்பில் உள்ள வாசனை திரவியங்கள் குறைந்த அளவிலேயே ஆவியாகி, அடர்த்தியான வாசனை எண்ணெய் கிடைக்கிறது. இங்குள்ள கிராம்பு மரத்தின் மொட்டுகள், உதிர்ந்த இலைகள் மற்றும் தண்டுகளும் வாசனை எண்ணெய் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவிலேயே, கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகளில் விளையும் கிராம்பு தரத்தில் முதலிடத்தில் உள்ளது. இதனால், குமரி மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன், மாறாமலை தோட்ட விவசாயிகள் சங்கம், கரும்பாறை மலைத்தோட்ட விவசாயிகள் சங்கத்தினரால் ‘கன்னியாகுமரி கிராம்பு’ என புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியில் உற்பத்தியாகும் நெட்டை ரக தென்னைக்கு இதற்குமுன் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதுபோக, மார்த்தாண்டம் தேன், நேந்திரன் வாழை, மட்டி வாழை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கேட்டுள்ளனர். இந்நிலையில், கன்னியாகுமரி கிராம்பு புவிசார் குறியீடை பெற்றிருப்பது வேளாண் ஆர்வலர்கள் மற்றும் மலைத்தோட்ட விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

2. பளிச் பத்து 99: இந்திய விமானப்படை

இந்திய விமானப்படை கடந்த 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி தொடங்கப்பட்டது.

முதலில் வெறும் 25 வீரர்களைக் கொண்டு இந்திய விமானப் படை தொடங்கப்பட்டது.

ஆரம்ப காலகட்டத்தில் ‘ராயல் இந்தியன் ஏர் போர்ஸ்’ என்ற பெயரில் விமானப்படை அழைக்கப்பட்டது. விடுதலைக்குப் பிறகு அதிலிருந்து ராயல் என்ற வார்த்தை நீக்கப்பட்டது.

இந்திய வான்படை உலகில் 7ஆவது வலிமையான விமானப்படையாக உள்ளது.

1933ஆம் ஆண்டுமுதல் இதுவரை இந்திய வான்படையின் இலச்சினை 4 முறை மாற்றப்பட்டுள்ளது.

வான்படைக்கு இந்தியாவின் பல்வேறு இடங்களில் அறுபது தளங்கள் உள்ளன.

இந்திய விமானப் படையில் முதல் பெண் ஏர் மார்ஷலாக பத்மாவதி பந்தோபாத்யாய நியமிக்கப்பட்டார்.

இந்தியாவுக்கு வெளியில் தஜிகிஸ்தானில், இந்திய விமானப் படைக்கு ஒரு தளம் உள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது 20 ஆயிரம் பேரை மீட்டு விமானப் படை சாதனை படைத்துள்ளது.

இந்திய வான்படையின் அருங்காட்சியகம் தில்லியில் அமைந்துள்ளது.

3. தான்சானியா எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

தான்சானியா எழுத்தாளர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இதுவரை 10 நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

தான்சானியாவின் சான்சபா தீவைச் சேர்ந்த இவர் கடந்த 1960ஆம் ஆண்டில் அகதியாக பிரிட்டனில் குடியேறினார். இதன் காரணமாக இவரது படைப்புகளில் அகதிகள் அனுபவிக்கும் இன்னல்கள், காலனி ஆதிக்கம் உள்ளிட்ட சிக்கல்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. இதற்காக இவர் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

4. மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு `40,000 கோடி

சரக்கு-சேவை வரி (GST) இழப்பீடாக மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் `40,000 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதில், தமிழகத்துக்கு `2,036.53 கோடி வழங்கப்பட்டுள்ளது.

சரக்கு-சேவை வரியை மத்திய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாடு முழுவதும் அமல்படுத்தியது. ஜிஎஸ்டி அமலாக்கத்தின் காரணமாக மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய்ப் பற்றாக்குறையை ஈடுசெய்யும் நோக்கில் 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்நிலையில், நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் `2.59 இலட்சம் கோடியை ஜிஎஸ்டி இழப்பீடாக வழங்க கடந்த மே மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அந்த இழப்பீட்டுத் தொகையில் `1 லட்சம் கோடியை ஜிஎஸ்டி வருவாய் மூலமாக வழங்கவும், மீதமுள்ள `1.59 லட்சம் கோடியைக் கடனாகப் பெற்று வழங்கவும் மத்திய அரசு முடிவெடுத்தது. அதனடிப்படையில், முதல் தவணையாக `75,000 கோடியைக் கடனாகப் பெற்று மாநிலங்க -ளுக்கும் சட்டப்பேரவையைக் கொண்ட யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு கடந்த ஜூலையில் வழங்கியிருந்தது.

தற்போது மேலும் `40,000 கோடியை ஜிஎஸ்டி இழப்பீடாக மத்திய அரசு வியாழக்கிழமை விடுவித்துள்ளது. அதிகபட்சமாக கர்நாடகத்துக்கு `4,555.84 கோடியும், மகாராஷ்டிரத்துக்கு `3,467.25 கோடியும், குஜராத்துக்கு `3,280.58 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு `2,036.53 கோடியும், கேரளத்துக்கு `2,198.55 கோடியும், புதுவைக்கு `275.73 கோடியும் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இழப்பீடாக ஒட்டுமொத்தமாக `1.15 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள தொகையானது படிப்படியாக விடுவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் `1.10 லட்சம் கோடியைக் கடனாகப் பெற்று ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

5. கணித அறிவியல் பேராசிரியருக்கு ‘சாந்தி ஸ்வரூப் பட்நாகர்’ விருது

சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் கோட்பாட்டு கணினி அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் சாகேத் சௌரவுக்கு கணித அறிவியலுக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ‘சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது 2021’ வழங்கப்பட்டுள்ளது.

6. ரஷியாவிடம் எஸ்-400 ஏவுகணை கொள்முதல்: அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை; அரிந்தம் பாக்சி

ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வது தொடர்பாக அமெரிக்காவுடன் இந்தியா தொடர்ந்து விவாதித்து வருகிறது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி, ரஷியாவிடம் இருந்து 4 எஸ்-400 ரக ஏவுகணைகளை `37,414 கோடியில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கடந்த 2018’இல் கையெழுத்திட்டது. முதல் தவணையாக `5,986 கோடியை ரஷியாவுக்கு கடந்த 2019’இல் இந்தியா அளித்தது. இதற்கிடையே, ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளைக் கொள்முதல் செய்ததற்காக துருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்தது. அதேபோன்று இந்தியா மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவியது.

இந்நிலையில், 3 நாள் பயணமாக இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவு துறை இணையமைச்சர் வென்டி ஷெர்மன், இந்திய வெளியுறவு துறைச் செயலர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லாவை சந்தித்துப்பேசினார். அப்போது, ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை இந்தியா கொள்முதல் செய்வதற்கு வெண்டி ஷெர்மன் ஆட்சேபம் தெரிவித்தார். இருப்பினும், இந்த விவகாரத்தில் சமுக உடன்பாடு எட்டப்படும் என்று இருவரும் நம்பிக்கை தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, எஸ்-400 ரக ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வதற்கு இந்தியாவுக்குத் தடை விதிப்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோபைடன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் முடிவு செய்வார்கள் என்று வென்டி ஷெர்மன் கூறினார்.

7. ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: 4ஆவது தங்கம் வென்றார் மானு பாக்கர்

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மானு பாக்கர் 4ஆவது தங்கம் வென்றார்.

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் ISSF ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. நடைபெற்ற மகளிர் அணி 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் மானு பாக்கர், நாமியா கபூர், ரிதம் சங்வான் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 16-4 என்ற புள்ளிக்கணக் கில் அமெரிக்க அணியை இறுதிச்சுற்றில் வென்று தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியது. இப்போட்டியில் மானு பாக்கர் பெறும் நான்காவது தங்கம் இதுவாகும். அதே நேரம் 14 வயதே ஆன நாமியா கபூர் இரண்டாவது தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

ஆடவர் 25 மீ ரேபிட் பையர் பிரிவில் இந்தியாவின் ஆதர்ஷ் சிங் 40 புள்ளிகளுக்கு 28 புள்ளிகளை குவித்து வெள்ளி கைப்பற்றினார். இரட்டையரான உதய்வீர்-விஜய்வீர் தோல்வியடைந்தனர். 50மீ ரைபிள் புரோன் கலப்பு அணி பிரிவில் இந்தியா தோல்வியைத் தழுவியது.

பதக்கப்பட்டியலில் ஒன்பது தங்கம், ஏழு வெள்ளி, 3 வெண்கலத்துடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஐந்து தங்கத்துடன் அமெரிக்க அணி இரண்டாமிடத்தில் உள்ளது.

8. தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவராக ஐசரி கணேஷ் போட்டியின்றி தேர்வு

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் 2021-2025ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி கே மோகன்ராம் மேற்பார்வையில் இந்தத் தேர்தல் நடைபெற்றது. இதில் அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். N இராமச்சந்திரன் செயல் தலைவராகவும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், இந்திய தேக்வாண்டோ சம்மேளன தலைவருமான ஐசரி கே கணேஷ் தலைவராகவும், ஆதவ் அர்ஜூனா பொதுச்செயலாளராகவும், செந்தில் வி தியாகராஜன் பொருளாளராகவும், சோலை M ராஜா, TV சீத்தாராமராவ், M ராமசுப்பிரமணி, VVR ராஜ்சத்யன், சைரஸ் போஞ்சா, S பாலசுப்பிரமணியன் ஆகியோர் துணைத்தலைவரா -கவும், பாலாஜி மரதபா, A சரவணன் ஆகியோர் இணைசெயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1. ‘International Day of Awareness on Food Loss and Waste Reduction’ is observed on which day?

A) September.29 

B) September.30

C) October.1

D) October.2

  • The world marks the second International Day of Awareness on Food Loss and Waste on September 29, 2021. UNEP also launched the ‘Food is Never Waste’ Coalition at the UN Food Systems Summit held recently. The theme of the day this year is ‘Stop Food Loss and Waste; For the People; For the Planet”.
  • Around 14 percent of food produced is lost between harvest and retail, while 17 percent of total global food production is wasted across the world in various stages. World Heart Day is also celebrated on 29 September. The theme of this year is ‘Use Heart to Connect’.

2. Sweet Revolution, a NBHM scheme is associated with which product?

A) Sugarcane

B) Honey 

C) Fruits

D) Palm

  • National Beekeeping & Honey Mission (NBHM), which was announced for three years (2020–21 to 2022–23), aims for the development of scientific beekeeping in the country to achieve the goal of ‘Sweet Revolution’. It is being implemented through National Bee Board (NBB).
  • Union Agriculture Minister Narendra Singh Tomar recently launched ‘Amul Honey– a product of Gujarat Cooperative Milk Marketing Federation Ltd. with cooperation with ‘National Bee Board’.

3. Fumio Kishida, who was seen in the news recently, is the next Prime Minister of which country?

A) Japan 

B) North Korea

C) Thailand

D) Vietnam

  • Japan’s former foreign minister Fumio Kishida is set to replace Yoshihide Suga as the Prime minister. He has won the ruling Liberal Democratic Party’s leadership vote. Japan is facing a stagnant economy damaged by the coronavirus pandemic, unprecedented public health crisis, and increased political threatening by China.

4. Which Union Ministry has approved a “Dispute Avoidance Mechanism” through ‘Independent Engineer’ (IE)?

A) Ministry of Power 

B) Ministry of Housing and Urban Affairs

C) Ministry of Electronics and IT

D) Ministry of Science and Technology

  • Union Minister of Power has recently approved a “Dispute Avoidance Mechanism” through ‘Independent Engineer’ (IE).
  • The CPSEs executing Hydro Power Projects had been raising concerns that the present mechanism of dispute resolution in Hydro Power sector did not address the conflicts between the Employer and the Contractor at their initial stage.

5. Emergency Credit Line Guarantee Scheme is associated with which Ministry?

A) Ministry of MSME

B) Ministry of Finance 

C) Ministry of Commerce and Industry

D) Ministry of Textiles

  • The Union Finance Ministry has extended the validity of the Emergency Credit Line Guarantee Scheme (ECLGS) by another six months till March 31, 2022, or till guarantees for the overall ceiling of Rs 4.5 lakh crore are issued, whichever is earlier.
  • The scheme is aimed to support micro, small and medium enterprises, by helping them deal with funds shortage and promote exports. As of September 24, 2021, over Rs 2.86 lakh crore worth of loans were sanctioned under the scheme.

6. What is the new name of the national Mid–Day Meal Scheme?

A) PM Mid–Day Meal

B) PM Poshan 

C) PM Bhojan

D) PM Aahar

  • The national Mid–Day Meal Scheme has been renamed as PM POSHAN Scheme. Involvement of Farmers Producer Organizations (FPO) and Women Self Help Groups in implementation of the scheme are also mentioned in the new features.
  • The Union Cabinet approved the ‘PM POSHAN in Schools’ scheme that will provide hot cooked meal to students of elementary classes in government and government–aided schools across the country. It will also cover students of balvatikas or pre–primary classes.

7. ‘Central Institute of Fisheries Technology’ is located in which state?

A) Tamil Nadu

B) Kerala 

C) Andhra Pradesh

D) Gujarat

  • The Central Institute of Fisheries Technology (CIFT) was set up in 1957 in Cochin. It is the first and only national center where research in all disciplines relating to fishing and fish processing is undertaken. CIFT has developed fertiliser and pet supplement from shrimp shell. ‘Foliar Spray’, the customised fertiliser with antimicrobial agents, is developed to enhance crop yield and improve disease.

8. What percent of India’s exports is contributed by MSMEs, approximately?

A) 30

B) 40 

C) 50

D) 60

  • India has more than 63 million MSMEs. They account for nearly 40 per cent of India’s exports, about 6.11 percent of the country’s manufacturing GDP. MSMEs contribute to 24.63 percent of the GDP from services sector.
  • Union MSME Minister Narayan Rane has inaugurated the India Export Initiative and IndiaXports 2021 portal of the India SME Forum. India has fixed its exports target of USD 400 billion for this fiscal year. The Minister said that MSMEs would further take it to $1 trillion by 2027.

9. ‘Clean India Programme’ has been inaugurated from which state?

A) Bihar

B) Uttar Pradesh 

C) Gujarat

D) West Bengal

  • Union Minister of Information and Broadcasting, Youth Affairs and Sports Anurag Thakur launched a month–long Clean India Programme from Motilal Nehru National Institute of Technology–Prayagraj, Uttar Pradesh. The programme has been launched as a part of Azadi ka Amrit Mahotsav.
  • The aim of the cleanliness drive is to create awareness, encourage people and make them involve in cleaning waste especially the, ‘Single Use Plastic’ waste throughout the country. This campaign will continue till 31st October.

10. Hwasong–8, which was seen in the news recently, is a new hypersonic missile tested by which country?

A) China

B) Japan

C) Israel

D) North Korea 

  • North Korea has claimed that it successfully tested a new hypersonic missile called Hwasong–8. This technology allows missiles to be pre–fuelled and then sent to the field. Days after the hypersonic missile, North Korea said it test–fired a new anti–aircraft missile. This marks the country’s fourth weapons test in under a month. North Korea also said that its weapons are needed for self–defence.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!