Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

8th September 2020 Current Affairs in Tamil & English

8th September 2020 Current Affairs in Tamil & English

8th September 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

8th September Tamil Current Affairs 2020

8th September English Current Affairs 2020

 

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.கங்கையில் காணப்பட்ட, Systomus gracilus’ என்பது கீழ்க்கண்டவற்றுள் எவ்வினம் சார்ந்தது?

அ. மீன்

ஆ. ஆமை

இ. ஆக்டோபஸ்

ஈ. முதலை

  • கங்கையாற்றில், Systomus gracilus என்ற புதிய வகை நன்னீர் மீனினம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கேரளா & மேற்கு வங்கத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த உண்ணக்கூடிய மீனினத்தை மேற்கு வங்கத்தில் அடையாளம் கண்டுள்ளனர். இது ஒரு மெல்லிய மற்றும் சுருக்கப்பட்ட உடலமைப்பைக்கொண்டுள்ளது. இதனை உள்நாட்டு நீர்நிலைகளிலும் வளர்க்கவியலும். இப்புதிய வகை மீன் குறித்த தகவல்கள், ‘Experimental Zoology’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

2. ‘SpiceOxy’ என்ற பெயரில் புதிய செயற்கை சுவாச வழங்கியை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?

அ. ஸ்பைஸ்ஜெட்

ஆ. இண்டிகோ

இ. ரிலையன்ஸ்

ஈ. அமுல்

  • குர்கானைச் சார்ந்த இந்திய வானூர்தி நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், அண்மையில், ‘ஸ்பைஸ் ஆக்ஸி’ என்ற பெயரில் கைக்கு அடக்கமான, எங்கும் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு செயற்கை சுவாச வழங்கியை அறிமுகப்படுத்தியது. லேசான & மிதமான சுவாச பிரச்சனைகள் உள்ள நோயாளிகளுக்கு இந்தச் சாதனத்தை பயன்படுத்தப்படவியலும். ஸ்பைஸ்ஜெட், ஒரு விரல் நுனி துடிப்பு ஆக்ஸிமீட்டரையும் அறிமுகப்படுத்தியுள்ளது; அது, குருதியில் உள்ள உயிர்வளியின் செறிவை அளவிட பயன்படுகிறது.

3.எந்நாட்டின் ஒற்றுமை இயக்கத்தைக் குறிக்கும் வகையில், குதுப் மினார், வெண்மை மற்றும் செம்மை வண்ணங்களில் ஒளிரப்பட்டது?

அ. ஜெர்மனி

ஆ. இரஷ்யா

இ. போலந்து

ஈ. ஜப்பான்

  • போலந்தின் தூதரகம் மற்றும் தில்லியில் அமைந்துள்ள போலந்து நிறுவனம் ஆகியவை, அண்மையில், குதுப் மினாரை, போலந்தின் தேசிய வண்ணங்களான வெண்மை மற்றும் செம்மை வண்ணங்களில் ஒளிரச்செய்துள்ளன. போலந்தின் ஒற்றுமை இயக்கம் உருவாக்கப்பட்ட நாற்பதாம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இது செய்யப்பட்டது. அவ்வியக்கம், காந்தியின் அகிம்சை கொள்கைகளை அடிப்படையாகக்கொண்ட ஒரு மக்களுரிமை இயக்கமாகும்.

4.நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக, இந்திய உச்சநீதிமன்றம், பிரசாந்த் பூஷனுக்கு விதித்த அபராதம் எவ்வளவு?

அ. ரூ.1,00,00,000

ஆ. ரூ.1,00,000

இ. ரூ.1,000

ஈ. ரூ.1

  • நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷனுக்கு `1 அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. `1 அபராதத்தைத் செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சிறை மற்றும் 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்றவும் தடை விதிக்கப்படும் என்றும் இந்திய உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

5.மும்பை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் (MIAL) 74% பங்குகளை வாங்கியுள்ள நிறுவனம் எது?

அ. TATA குழுமம்

ஆ. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

இ. அதானி குழுமம்

ஈ. GMR இன்ப்ரா

  • மும்பை பன்னாட்டு விமான நிலையத்தின் 74% பங்குகளை, அதானி குழுமம் கையகப்படுத்தியுள்ளது. மும்பை பன்னாட்டு வானூர்தி நிலையத்தை நிர்வகித்துவரும் GVK குழுமத்திடமிருந்து 50.5 சதவீத பங்கையும், MIAL’இல் 23.5% பங்குகளையும் அதானி குழுமம் கைப்பற்றுகிறது. இதன்மூலம், அதானி குழுமம், தில்லி மற்றும் ஹைதராபாத் வானூர்தி நிலையங்களை இயக்கும் GMR குழுமத்திற்குப் பிறகு, நாட்டின் இரண்டாவது பெரிய வானூர்தி நிலைய நிர்வாகிப்பு நிறுவனமாக மாறியுள்ளது.

6.இந்தியா & எந்தப் பன்முகச் சங்கத்துடனான பொருளாதார அமைச்சர்கள் ஆலோசனைக்கூட்டமானது, அண்மையில், மெய்நிகராக நடைபெற்றது?

அ. BRICS

ஆ. ASEAN

இ. SAARC

ஈ. BIMSTEC

  • இந்தியாவின் வணிகம் & தொழிற்துறை, இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் வியட்நாமின் தொழில் & வர்த்தக அமைச்சர் இட்ரான் துவான் ஆன் ஆகிய இருவரும் இணைந்து தலைமையேற்க, மெய்நிகராக 17ஆவது ASEAN-இந்தியா பொருளாதார அமைச்சர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், 10 ASEAN நாடுகளின் பொருளாதார அமைச்சர்களும் கலந்துகொண்டனர். சரக்குகள் குறித்த ASEAN இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை மீளாய்வுசெய்வது குறித்து அமைச்சர்கள் விவாதித்தனர்.

7.ஓணம் என்பது எந்த இந்திய மாநிலத்தின் பண்பாட்டுத் திருவிழாவாகும்?

அ. கேரளம்

ஆ. கர்நாடகா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. குஜராத்

  • ஓணம் என்பது கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு மிக முக்கியமான பண்டிகையாகும். இது, “திருவோணம்” என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் திருவிழா, மலையாள நாட்காட்டியின் சிங்கம் மாத தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக, பூக்கள் மற்றும் மலரிதழ்களால் அலங்கரிக்கப்படும், “ஓணப்பூக்கோலம்” உள்ளது. கொண்டாட்டங்களுள், “வல்லம்கலி” (படகுப்பந்தயம்) மற்றும் “ஓணசதயம்” (விருந்து) ஆகியவை அடங்கும்.

8.எந்த நாட்டின் பிரதமராக, முஸ்தபா ஆதிப், பரிந்துரைக்கப்பட்டுள்ளார்?

அ. சிங்கப்பூர்

ஆ. சவூதி அரேபியா

இ. இஸ்ரேல்

ஈ. லெபனான்

  • லெபனானின் பிரதம அமைச்சர் பதவிக்கு முஸ்தபா ஆதிப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவர் 2013ஆம் ஆண்டு முதல் ஜெர்மனிக்கான லெபனானின் தூதராக இருந்துவருகிறார். ஆகஸ்ட்.4 அன்று பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து, பதவி விலகிய ஹசன் டயப்புகக்குப் பதிலாக அவர் முன்மொழியப்பட்டுள்ளார். லெபனான் அதிபர் மைக்கேல் அவுன், பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆதரவைப்பெற்றபின், ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக முஸ்தபாவை லெபனானின் பிரதம அமைச்சராக பரிந்துரைத்துள்ளார்.

9. ‘ஸ்வச்சதா’ பிரச்சனைகளில் கவனஞ்செலுத்துவதற்காக, அனைத்து அமைச்சகங்களாலும் பதினைந்து நாட்கள் கடைப்பிடிக்கப்படும் ஒரு நிகழ்வின் பெயரென்ன?

அ. ஸ்வச்சதா பக்வாடா

ஆ. ஸ்வச்சதா சமிக்ஷா

இ. ஸ்வச்சதா வித்யா

ஈ. ஸ்வச்சதா சர்வேக்ஷன்

  • ஜல் சக்தி அமைச்சகத்தின் தூய்மை இந்தியா இயக்கத்தின்கீழ், தூய்மை குறித்த சிக்கல்களில் கவனம் செலுத்துவதற்காக, பதினைந்து நாட்கள் நீளும் ஒரு நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது. ‘ஸ்வச்சதா பக்வாடா’ என்று பெயரிடப்பட்ட இந்நிகழ்ச்சி, 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஓர் அமைச்சகம் என இதனைக் கடைப்பிடித்து வருகின்றன. அண்மையில், உரங்கள் அமைச்சகம், செப்டம்பர் 1-15 முதல் ‘ஸ்வச்சதா பக்வாடா’வை அனுசரித்து வருகிறது.

10.விநியோகச் சங்கிலி நெகிழ்திறன் தொடர்பான ஆஸ்திரேலியா-இந்தியா-ஜப்பான் அமைச்சர்களின் கூட்டத்தில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியது யார்?

அ. நிர்மலா சீதாராமன்

ஆ. பியூஷ் கோயல்

இ. நிதின் கட்கரி

ஈ. இராம் விலாஸ் பஸ்வான்

  • இந்தியாவின் மத்திய வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஆஸ்திரேலிய மற்றும் ஜப்பானிய பொருளாதார அமைச்சர்கள் ஆகிய மூவரும், விநியோகச் சங்கிலிகள் நெகிழ்திறன் குறித்த ஆஸ்திரேலியா-இந்தியா-ஜப்பான் பொருளாதார அமைச்சர்களின் கூட்டுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
  • அவர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையின்படி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், நெகிழ்திறன் மிக்க ஒரு விநியோகச்சங்கிலியை உருவாக்க இந்த மூன்று நாடுகளும் முடிவுசெய்துள்ளன. மேலும், தங்கள் சந்தைகளை கட்டற்ற நிலையில் வைத்திருக்கவும், அதன்மூலம் வெளிப்படையான வர்த்தகச்சூழலை உருவாக்கவும் இந்த மூன்று நாடுகள் முடிவுசெய்துள்ளன. இது சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1. What species is ‘Systomus gracilus’, that has been identified in the Ganges?

[A] Fish

[B] Turtle

[C] Octopus

[D] Crocodile

  • A new species of freshwater fish named ‘Systomus gracilus’ has been identified in the Ganges river. The researchers from Kerala and West Bengal have identified the edible fish species, at West Bengal. It has a thin and compressed body and can be cultured in inland waterbodies. The discovery of the fish has been published in the Journal of Experimental Zoology.

2. The Qutub Minar was illuminated in white and red, to mark the Solidarity movement of which country?

[A] Germany

[B] Russia

[C] Poland

[D] Japan

  • The Embassy of Poland and Polish Institute in Delhi has recently illuminated Qutub Minar in white and red, Poland’s national colours. It was done to commemorate the 40th anniversary of the creation of Solidarity movement of Poland. This year marks the 40th anniversary of the creation of Solidarity movement, which is a civil rights movement based on Gandhian principles of non–violence.

3. Which company has launched a new ventilation device named ‘SpiceOxy’?

[A] SpiceJet

[B] IndiGo

[C] Reliance

[D] Amul

  • Gurgaon–based Indian airline SpiceJet has recently launched a compact, portable ventilation device named ‘SpiceOxy’. The handy and affordable device can be used for patients with mild to moderate breathing issues. SpiceJet has also introduced a fingertip pulse oximeter, which can be used to measure the oxygen level of the blood.

4. What is the penalty imposed on Prashant Bhushan by the Supreme Court, for his criminal contempt of court?

[A] Rs.1,00,00,000

[B] Rs.1,00,000

[C] Rs.1,000

[D] Re.1

  • The Supreme Court of India has imposed a penalty of Re 1 on lawyer cum activist Prashant Bhushan as a punishment for his criminal contempt of the Supreme Court. This judgment was pronounced by a bench headed by Justice Arun Mishra. The bench ordered that Prashant Bhushan should deposit Re 1 by September 15 else he will be imprisoned for 3 months and would be debarred from practice for a period of 3 years.

5. Which company has purchased 74% stake in Mumbai International Airport Limited (MIAL)?

[A] Tata Group

[B] Reliance Industries Ltd

[C] Adani Group

[D] GMR Infra

  • 74 % stake in Mumbai International Airport Limited (MIAL) has been acquired by the Multinational conglomerate company, Adani Group. With the purchase of 50.5% stake of GVK group and 23.5% stake of other minority partners in MIAL, the Adani Group becomes the second largest Airport operator in the country after GMR Group that operates Delhi and Hyderabad airports.

6. The Economic Ministers consultation meeting of India with which multilateral association was virtually held recently?

[A] BRICS

[B] ASEAN

[C] SAARC

[D] BIMSTEC

  • The 17th ASEAN–India Economic Ministers Consultations was held virtually and was co–chaired by Piyush Goyal, the Union Minister for Commerce and Industry & Railways. The virtual meeting was attended by the Trade Ministers of 10 ASEAN countries. The discussion was focused on ASEAN India Trade in Goods Agreement (AITIGA).

7. Onam is the cultural festival of which Indian State/UT?

[A] Kerala

[B] Karnataka

[C] Andhra Pradesh

[D] Gujarat

  • Onam is the most important festival celebrated in the state of Kerala. It is also called as “Thiruvonam” and is celebrated at the beginning of the month Chingam of Malayalam calendar. One important aspect of the celebration is “Onapookolam” which is a floral carpet similar to rangoli that is decorated with flowers and petals. The celebrations also include “Vallamkali” (boat race) and “Onasadaya” (banquet).

8. Mustapha Adib has been nominated to be Prime Minister of which country?

[A] Singapore

[B] Saudi Arabia

[C] Israel

[D] Lebanon

  • Mustapha Adib has been nominated for the position of Lebanon’s Prime Minister. He has been Lebanon’s ambassador to Germany, since 2013. He is proposed to replace Hassan Diab, whose Government resigned following the aftermath of August 4 blast at Beirut Port. The President of Lebanon Michel Aoun designated him to form a new government after he secured the support of a majority of MPs.

9. What is the name of the event observed by all Ministries for a fortnight, to focus on the issues of ‘Swachhata’?

[A] Swachhata Pakhwada

[B] Swachhta Samiksha

[C] Swachhata Vidhya

[D] Swachhata Survekshan

  • Under the Swachh Bharat Mission of the Ministry of Jal Shakti, an event with a duration of a fortnight is observed to focus on the issues of Swachhata.
  • Named as ‘Swachhata Pakhwada’, the event was started in the year 2016 and an annual calendar is provided to the Ministries with a fortnight allotted to them. Recently, the Department of Fertilizers is observing Swachhta Pakhwada from September 1–15.

10. Who represented India in the Australia–India–Japan Ministers’ meeting on Supply Chains Resilience?

[A] Nirmala Sitharaman

[B] Piyush Goyal

[C] Nitin Gadkari

[D] Ramvilas Paswan

  • Indian Union Minister for Commerce and Industry Piyush Goyal, and his counterparts from Australia and Japan attended the Australia–India–Japan Economic Ministers’ Joint meeting on Supply Chains Resilience. As per the joint statement released, the countries have decided to launch an initiative to build a resilient supply chain in Indo–Pacific region. They have also decided to keep their markets open and thereby creating a transparent trade environment. This is expected to reduce China’s dominance.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!