Tnpsc

8th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

8th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 8th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. பத்திரிகையாளர் நலத்திட்டத்தின் தற்போதைய வழிகாட்டுதல்க -ளை ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?

அ) அசோக் டாண்டன் 

ஆ) சசி சேகர் வேம்படி

இ) நீரஜா சேகர்

ஈ) அலோக் அகர்வால்

 • பத்திரிகையாளர் நலத்திட்டத்தின் தற்போதைய வழிகாட்டுதல்களை மதிப்பாய்வு செய்வதற்காக பன்னிருவர்கொண்ட குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது. இக்குழுவுக்கு பிரசார் பாரதி வாரிய உறுப்பினர் அசோக் டாண்டன் தலைமைதாங்குகிறார். இக்குழு, மரணத்தின்போது வழங்கப் -படும் கருணைத்தொகை மற்றும் பத்திரிகையாளர் நலத்திட்டத்தின்கீழ் உள்ள பிற வழக்குகளின் திருத்தத்தின் அவசியத்தை ஆராயும்.

2. முதல் BRICS திரைப்பட தொழில்நுட்ப கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்த நாடு எது?

அ) ரஷ்யா

ஆ) பிரேசில்

இ) சீனா

ஈ) இந்தியா 

 • இந்தியாவின் மத்திய தகவல் & ஒலிபரப்பு அமைச்சகமும் வெளியுறவு அமைச்சகமும் இணைந்து BRICS திரைப்பட தொழில்நுட்ப கருத்தரங்கத் -தை செப்.1-2 அன்று ஏற்பாடு செய்தது. மெய்நிகர் வடிவத்தில் FICCI உடன் இணைந்து இந்தக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. BRICS உச்சி மாநாட்டிற்கு முன்னதாக திட்டமிடப்பட்ட சிறப்பு நிகழ்வின் ஒருபகுதியாக இந்தியா முதல் பிரிக்ஸ் திரைப்பட தொழில்நுட்ப கருத்தரங்கை ஏற்பாடு செய்தது. இதன் கவனம் சேவைத்துறை மற்றும் திரைப்படத்துறையில் பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை அங்கீகரிப்பதில் உள்ளது.

3.கொரோனா வைரஸின் C.1.2 திரிபானது, பின்வரும் எந்த நாட்டில் முதன்முதலில் பதிவுசெய்யப்பட்டது?

அ) சீனா

ஆ) தென்னாப்பிரிக்கா 

இ) இந்தியா

ஈ) அமெரிக்கா

 • கொரோனா வைரஸின் C.1.2 திரிபானது, தென்னாப்பிரிக்காவிலிருந்து முதன்முதலில் பதிவுசெய்யப்பட்டது. உலக நலவாழ்வு அமைப்பின்படி, இந்தத் திரிபு, தற்போதுவரை குறைந்தது ஆறுநாடுகளுக்கு பரவியுள்ளது. இந்திய அரசின் கூற்றுப்படி, இந்தியாவில் இதுவரை இந்தப் புதிய C.1.2 திரிபின் பாதிப்பு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஐநா அவையின் பொதுநல அமைப்பு, இப்புதிய C.1.2 வைரஸ் திரிபை கண்காணிப்பதாக அறிவித்துள்ளது.

4. ‘நிஞ்சா’ வெடிகுண்டு என்றழைக்கப்படுகிற R9X ஹெல்பையர் ஏவுகணையுடன் தொடர்புடைய நாடு எது?

அ) அமெரிக்கா 

ஆ) சீனா

இ) ஐக்கிய அரபு அமீரகம்

ஈ) இந்தியா

 • ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட டிரோன் தாக்குதலில் அமெரிக்கா ஒரு சிறப்புவகை ஏவுகணையைப் பயன்படுத்தியது. வெடித்துச் சிதறுவதற்கு பதிலாக கூர்மையான கத்திகளை அது ஏவுகிறது.
 • ஹெல்பையர் ஏவுகணையைப் பயன்படுத்தி அமெரிக்கா தனது டிரோன் தாக்குதல்களை நடத்தியது. ஹெல்பையர் ஏவுகணையில் பல்வேறு வகைகள் உள்ளன. R9X (‘நிஞ்சா’ வெடிகுண்டு) என அழைக்கப்படும் இது, சுமார் 45 கிலோ கிராம் எடைகொண்டதாகும். உலங்கூர்திகள், வானூர்திகள் ஆகியவற்றிலிருந்து இந்த ஏவுகணையை ஏவமுடியும். இந்த ஏவுகணைகளின் தாக்கு தூரம் 500 மீட்டர் முதல் 11 கிமீ வரை உள்ளது. அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியாக இரண்டு டிரோன் தாக்குதல்களை நடத்தின.

5. சமீபத்தில், எந்த நாட்டின் பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப் நியமிக்கப்பட்டார்?

அ) மலேசியா 

ஆ) ஆஸ்திரேலியா

இ) மியான்மர்

ஈ) இந்தோனேசியா

 • மலேசிய அரசரானவர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பை மலேசிய நாட்டின் பிரதமராக நியமித்துள்ளார். முகைதீன் யாசினுக்குப் பதிலாக இஸ்மாயில் சப்ரி யாகோப் பிரதமராக நியமிக்கப்பட்டார். பொது சுகாதார அமைப்பை திறம்பட நிர்வகிக்க தவறியதால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததை அசுத்து யாசின் பதவி விலகினார்.
 • பிரதமராக நியமிப்பதற்கு முன் துணை பிரதமராக இருந்தார் இஸ்மாயில். இஸ்மாயில், 222’க்கு 114 என்ற பெரும்பான்மை ஆதரவைப் பெற்றார்.

6. சமீபத்தில், ஸ்ரீநகரின் தால் ஏரியில் உள்ள ஒரு படகு இல்லத்தில், ATM வசதியைத் திறந்த வங்கி எது?

அ) பாரத ஸ்டேட் வங்கி 

ஆ) HDFC வங்கி

இ) ஐசிஐசிஐ வங்கி

ஈ) இந்தியன் வங்கி

 • பாரத ஸ்டேட் வங்கியானது (SBI) உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஸ்ரீநகரின் தால் ஏரியில் ஒரு படகு இல்லத்தில் ATM’ஐ திறந்துள்ளது. இம்மிதக்கும் ATM’ஐ SBI தலைவர் தினேஷ் கரே திறந்துவைத்தார். SBI, 2004’இல் கேரளாவில் தனது முதல் மிதக்கும் ATM’ஐ அறிமுகப்படுத்தியது. SBI’இன் இந்த மிதக்கும் ATM கேரள கப்பல் மற்றும் உள்நாட்டு நீர்வழி கழகத்திற்கு சொந்தமான ஜாங்கர் படகில் நிறுவப்பட்டது.

7. “பிரைட் ஸ்டார்” என்றவொரு பன்னாட்டு இராணுவப் பயிற்சியை நடத்துகிற நாடு எது?

அ) இந்தியா

ஆ) ஜப்பான்

இ) அமெரிக்கா

ஈ) எகிப்து 

 • “பிரைட் ஸ்டார்” என்பது எகிப்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒரு பன்னாட்டு இராணுவப் பயிற்சியாகும். இந்த ஆண்டு பயிற்சி, அமெரிக்கா உட்பட 21 நாடுகள் பங்கேற்கின்றன. எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, இதுபோன்ற பயிற்சி 1980’இலிருந்து நடத்தப்பட்டு வருகின்றது. கடைசியாக 2018’இல் இது நடத்தப்பட்டது. அதில் 16 நாடுகள் பங்கேற்றன.

8. ‘பத்திரகார் கல்யாண் கோஷ்’ என்பது பின்வரும் எம்மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிற பத்திரிகையாளர்களுக்கான திட்டமாகும்?

அ) உத்தர பிரதேசம்

ஆ) மகாராஷ்டிரா

இ) ஹரியானா

ஈ) சத்தீஸ்கர் 

 • சத்தீஸ்கர் மாநில அரசு ‘பத்திரகார் கல்யாண் கோஷ்’ என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்தத்திட்டத்தின் கீழ், COVID’ஆல் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.
 • மேலும், இத்திட்டத்தின்கீழ், COVID தொற்றுநோய்க்கான சிகிச்சைக்காக பத்திரிகையாளர்களுக்கு `2 இலட்சம் வழங்கப்படுகிறது. மூத்த பத்திரி
  -கையாளர் சம்மன் நிதி திட்டத்தின்கீழ், மூத்த பத்திரிகையாளருக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை `5000’லிருந்து `10,000 ஆக உயர்த்த அரசு முடிவுசெய்துள்ளது.

9. ‘சுகாதார அறிவியல் பல்கலைக்கழக மசோதா’ நிறைவேற்றப்பட்டு உள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) ஒடிஸா 

ஈ) கர்நாடகா

 • ஒடிஸாவின் சட்டமன்றம் சமீபத்தில் சுகாதார அறிவியல் மசோதா-2021ஐ நிறைவேற்றியது. இந்த மசோதா, மாநிலத்தின் அனைத்து மருத்துவ மற்றும் துணை மருத்துவ நிறுவனங்களையும் ஒரே சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் கொண்டுவர எண்ணுகிறது. தற்போது, அந்த மாநிலத்தின் பல்வேறு மருத்துவ & துணை மருத்துவ நிறுவனங்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
 • இந்த மசோதா, பல்வேறு தரப்பினரின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

10. உலக அஞ்சல்தலை கண்காட்சியான ‘Philanippon 2021’ எங்கு நடைபெற்றது?

அ) சீனா

ஆ) மலேசியா

இ) தைவான்

ஈ) ஜப்பான் 

 • ‘Philanippon-2021’ என்ற உலக அஞ்சல்தலை கண்காட்சியானது, சமீபத் -தில் ஜப்பானின் டோக்கியோ நகரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு, ஜப்பானில் அஞ்சல் சேவை தொடங்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் கடந்த 1971 முதல் ஒவ்வொரு பத்து ஆண்டுக்கும் ஒருமுறை ஜப்பானில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, ஜப்பான் தனது அஞ்சல் சேவையின் 150ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஜனவரி 2022 முதல் அகவிலைப்படி உயர்வு அமல்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2022 முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி கடந்த ஜூலை மாதம் முதல் வழங்கியுள்ளது. இதே அகவிலைப்படி உயர்வை அதே தேதியில் இருந்து தமிழக அரசும் வழங்கும் என ஊழியர்கள், ஆசிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் முதல்தான் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவைக் காரணம் காட்டி ஏற்கெனவே 27 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டதால் அரசு ஊழியர்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அகவிலைப்படி உயர்வு வழங்குவதைத் தள்ளிவைக்கக் கூட்டாது என்றும், இதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் ஜனவரி 2022 முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். பட்ஜெட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அகவிலைப் படி உயர்வு அமலாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனவரி முதல் அமலாகும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் என்றும், அகவிலைப்படி மூன்று மாதம் முன்கூட்டியே வழங்கப்படுவதால், அரசுக்கு 1,620 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசைப் போலவே தமிழக அரசும் அகவிலைப்படியை 28 சதவீதமாக உயர்த்தி வழங்கும் எனத் தெரிகிறது.

2. பத்திரிகையாளர்களுக்கு நலவாரியம்-விருது: அமைச்சர் மு பெ சாமிநாதன் அறிவிப்பு

பத்திரிகையாளர்களுக்கு நலவாரியம் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் விருதளிக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் அறிவித்தார்.

செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கைமீது நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த பத்திரிகையாளர்கள் நலவாரியம் அமைக்கப்படும். இயற்கை எய்தும் பத்திரிகையாளர்களுக்கு முதல்வரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் குடும்ப உதவி நிதி `3 இலட்சத்திலிருந்து `5 இலட்சமாக உயர்த்தப்படும்.

பத்திரிகையாளர்களின் பணிகளைமேம்படுத்த பயிற்சிகள் அளிக்கப்படும். இளம்பத்திரிகையாளர்கள் இதழியல் துறையில் உயர்கல்வி படிக்கவும், பயிற்சிபெறவும் நிதியுதவி அளிக்கப்படும். சிறந்த இதழியலாளருக்கு ‘கலைஞர் எழுதுகோல் விருது’ அளிக்கப்படும். இந்த விருது `5 இலட்சம் பரிசுத்தொகையுடன், பாராட்டுச்சான்றிதழ் அடங்கியது என அமைச்சர் மு பெ சாமிநாதன் அறிவித்தார்.

3. 2023’இல் இந்தியா தலைமையில் G20 மாநாடு

வரும் 2023ஆம் ஆண்டில் G20 நாடுகள் மாநாடு இந்தியா தலைமையில் நடைபெறவுள்ளது. அதற்கான இந்தியாவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த G20 மாநாடு இத்தாலி தலைமை -யில் வருகிற அக்.30-31ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், 2023ஆம் ஆண்டு மாநாட்டுக்கு இந்தியா முதன்முறையாக தலைமை வகிக்கவுள்ளது. G20 கூட்டமைப்புக்கு வரும் 2024ஆம் ஆண்டு நவ.30 வரை இந்தியா தலைமை வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: G20 நாடுகள் கூட்டமைப்புக்கு வரும் 2022 டிச.1ஆம் தேதி முதல் இந்தியா தலைமை வகிக்கவுள்ளது. அதன்மூலம், 2023ஆம் ஆண்டில் முதன்முறையாக இந்தியா தலைமையில் அந்த கூட்டமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டுக்கான இந்தியாவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை G20 ஒருங்கிணைப்பு அதிகாரியாக மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு இருந்துவந்தார்.

G20 நாடுகள் கூட்டமைப்பில் 1999ஆம் ஆண்டு இந்தியா உறுப்பினர் ஆனது. இந்த கூட்டமைப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து நேரடியாகப் பங்கேற்று வருகிறார். இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா, பிரேஸில், தென்னாப்பிரிக்கா, தென்கொரியா, ஆர்ஜென்டீனா, மெக்சிகோ, பிரான்ஸ், இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், துருக்கி, சௌதி அரேபியா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை G20 கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளன.

4. பிரிட்டிஷ் அகாதெமி பரிசு: இறுதிப்பட்டியலில் இந்திய வம்சாவளி எழுத்தாளர்

2021ஆம் ஆண்டுக்கான பிரிட்டிஷ் அகாதெமி புத்தகப்பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இந்திய வம்சாவளி எழுத்தாளர் மகமூத் மம்தானியின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து PTI செய்திநிறுவனம் தெரிவித்துள்ளதாவ -து: சர்வதேச கலாசாரப் புரிதலுக்கான பிரிட்டிஷ் அகாதெமி புத்தகப் பரிசுக்குத் தகுதியுடையவர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது.

உலகம் முழுவதிலிருந்தும் தேர்வு செய்து இறுதி செய்யப்பட்ட அந்தப் பட்டியலில் 4 எழுத்தாளர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில், இந்திய வம்சாவளி எழுத்தாளர் மகமூத் மம்தானியும் ஒருவர். 75 வயதான அவர், இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டவர். மும்பையில் பிறந்தவர்.

இவரது ‘நெய்தர் செட்லர் நார் நேட்டிவ்: தி மேக்கிங் அண்ட் அன்மேக்கிங் ஆப் பர்மனன்ட் மைனாரிட்டிஸ்’ என்ற புத்தகம் பிரிட்டிஷ் அகாதெமி பரிசுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இறுதியில் மகமூத் மம்தானி தேர்ந்தெடுக்கப்பட்டால், அவருக்கு 25,000 பிரிட்டிஷ் பவுண்ட் (சுமார் `25 இலட்சம்) ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

1. Who is the head of the committee set up to review the existing guidelines of the Journalist Welfare Scheme?

A) Ashok Tandon 

B) Shashi Shekhar Vempati

C) Neerja Sekhar

D) Alok Agrawal

 • The Government set up a 12–member committee to review the existing guidelines of the Journalist Welfare Scheme (JWS). The committee is headed by Prasar Bharti Board member Ashok Tandon. The committee will examine the need for revision of the amount of ex–gratia payment in death as well as other cases under the JWS.

2. Which country is organising the first ever BRICS Film Technologies Symposium in 2021?

A) Russia

B) Brazil

C) China

D) India 

 • India’s Union Ministry of Information and Broadcasting and Ministry of External Affairs is organising BRICS Film Technologies Symposium on 1–2 September. The symposium has been conducted in collaboration with FICCI in virtual format.
 • India is organising the first ever BRICS Film Technology Symposium as a part of the special event planned before BRICS summit to be held in India. The focus of the BRICS Film Tech symposium is to acknowledge the service sector and technicians working for the film industry.

3. The C.1.2 variant of the Coronavirus disease, was first reported in which country?

A) China

B) South Africa 

C) India

D) USA

 • The C.1.2 variant of the Coronavirus disease was first reported from South Africa. The variant has now spread to at least six countries, according to the World Health Organisation (WHO).
 • As per the Indian Government, India has no cases of the new C.1.2 coronavirus disease (COVID–19) variant detected so far. The public health body of the United Nations announced that it was monitoring the new C.1.2 virus strain.

4. R9X Hellfire missile, also called as the ‘Ninja’ bomb, is associated with which country?

A) USA 

B) China

C) UAE

D) India

 • The United States used a special missile in its drone strikes in Afghanistan that does not explode but releases knife–like blades. The US drone strikes were carried out using the Hellfire missile. There are various variants of the Hellfire missile.
 • The R9–X is also called the ‘Ninja’ bomb. It weighs about 45 kg and the missile can also be launched from helicopters, aircraft and Humvees. The range of these missiles varies from 500 metres to 11 km.

5. Recently, Ismail Sabri Yaakob has been appointed as the prime minister of which country?

A) Malaysia 

B) Australia

C) Myanmar

D) Indonesia

 • King of Malaysia has appointed Ismail Sabri Yaakob as the prime minister of the country on August 20, 2021. Ismail Sabri Yaakob replaced Muhyiddin Yassin as Prime Minister.
 • Yassin stepped down as he lost the majority in parliament as he failed to effectively manage public health system. Ismail Sabri was earlier Muhyiddin’s deputy. Ismail Sabri secured majority support of 114 out of 222 members in Parliament.

6. Recently, which bank has opened an ATM on a Houseboat at Dal Lake, Srinagar?

A) State Bank of India 

B) HDFC Bank

C) ICICI Bank

D) Indian Bank

 • State Bank of India (SBI) has opened an ATM on a Houseboat at Dal Lake, Srinagar for the convenience of locals and tourists. The floating ATM was inaugurated by the SBI Chairman Dinesh Khare. SBI had launched the first floating ATM in Kerala in 2004. This floating ATM of SBI was installed in Jhankar yacht owned by Kerala Shipping and Inland Navigation Corporation (KSINC).

7. Exercise Bright Star is a multinational military exercise, held in which country?

A) India

B) Japan

C) USA

D) Egypt 

 • Exercise Bright Star is a multinational military exercise, held once in two years at Egypt. This year’s exercise would witness participation from 21 countries including the USA. The first such exercises were held in the year 1980 after signing of the peace treaty between Egypt and Israel. The last Bright Star exercise was conducted in 2018, with 16 participating nations.

8. ‘Patrakar Kalyan Kosh’ is a scheme for journalists, implemented in which state?

A) Uttar Pradesh

B) Maharashtra

C) Haryana

D) Chhattisgarh 

 • The State Government of Chhattisgarh has implemented the scheme named ‘Patrakar Kalyan Kosh’. Under this scheme, the families of journalists who lost their lives in COVID, would be provided with financial assistance. Further, under this scheme, a sum of Rs 2 lakh would be given to journalists for treatment of COVID disease.
 • The state has also decided to increase the monthly pension to senior journalist from Rs.5000 to Rs.10,000, under the Senior Journalist Samman Nidhi scheme.

9. “University of Health Sciences Bill” has been passed by the assembly of which state?

A) Tamil Nadu

B) Kerala

C) Odisha 

D) Karnataka

 • The Legislative Assembly of Odisha has passed the University of Health Sciences Bill 2021, recently. This bill seeks to bring all the medical and paramedical institutions of the state under a single University of Health Sciences.
 • Presently, various medical and paramedical institutions of the state are affiliated to different universities. This bill has been passed amidst strict opposition from various fronts.

10. Where was the World Stamp Exhibition ‘Philanippon 2021’ held?

A) China

B) Malaysia

C) Taiwan

D) Japan 

 • Philanippon 2021 is the World Stamp Exhibition, held recently in Tokyo, Japan. This event is held every 10 years in Japan since 1971, to mark the founding of Postal service in Japan. This year marked the 150th year anniversary of Japan’s postal service.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Turnoff the Ad Blocker to view the content