Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

8th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

8th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 8th September 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

8th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. எந்த மாநிலத்திற்கான புதிய கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்திற்கு நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது?

அ. கேரளா

ஆ. கர்நாடகா

இ. கோவா

ஈ. மகாராஷ்டிரா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கர்நாடகா

  • வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் சமீபத்தில் கர்நாடகாவுக்கான புதிய கடலோர மண்டல மேலாண்மை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கோல்ட்ஃபிஞ்ச் நகரத்தில் `3,800 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். புதிய கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பின்படி இந்தத் திட்டத்தைத் தயாரித்து ஒப்புதல் பெற்ற தென்னிந்தியாவின் முதல் மாநிலம் மற்றும் நாட்டிலேயே இரண்டாவது மாநிலமாக கர்நாடகா உள்ளது.

2. 2022 மார்ச் நிலவரப்படி, நிதியமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவின் அயல்நாட்டுக்கடன் எவ்வளவு?

அ. $220 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

ஆ. $420 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

இ. $620 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

ஈ. $820 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. $620 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

  • நடுவண் நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் வெளிநாட்டுக் கடன் நிர்வாகப்பிரிவு இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 2021–22 குறித்த 28ஆவது நிலைமை அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2021 மார்ச் இறுதியில், $573.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் வெளிநாட்டுக்கடன், 2022 மார்ச் இறுதியில் 8.2 சதவீதம் அதிகரித்து $620.7 பில்லியன் அமெரிக்கன் டாலர் ஆகியுள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதத்தில் வெளிநாட்டுக்கடன் அளவு ஓராண்டுக்கு முன் 21.2 சதவீதம் என்பதிலிருந்து கணிசமாக குறைந்து 2022 மார்ச் இறுதியில், 19.9 சதவீதம் ஆகியுள்ளது.
  • அந்நிய செலாவணி கையிருப்பு, விகிதத்தில் ஓராண்டுக்கு முன் 100.6% என்பதைவிட, 2022 மார்ச் இறுதியில் 97.8 சதவீதம் என வெளிநாட்டுக்கடன் லேசாக குறைந்துள்ளது. நீண்டகால கடன் அளவு $499. 1 பில்லியன் அமெரிக்க டாலர் என்றும், குறுகிய காலக்கடன் அளவு $121.7 பில்லியன் அமெரிக்க டாலர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

3. இந்தியாவின் சலுகை நிதி திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட மைத்ரீ சூப்பர் அனல்மின்திட்டத்தில் உற்பத்தியைத் தொடக்கிய நாடு எது?

அ. இலங்கை

ஆ. வங்காளதேசம்

இ. நேபாளம்

ஈ. மியான்மர்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. வங்காளதேசம்

  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இணைந்து மைத்ரீ சூப்பர் அனல்மின் திட்டத்தின் அலகு–1–ஐ தொடக்கி வைத்தனர். இந்தத் திட்டம் இந்தியாவின் சலுகை நிதி திட்டத்தின்கீழ் கட்டமைக்கப்படுகிறது. இது வங்காளதேசத்தின் தேசிய கட்டமைப்பிற்கு 1320 மெகாவாட்களைக்கொண்டுசேர்க்கும். நீர்வளம், இரயில்வே, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட 7 ஒப்பந்தங்கள் இவ்விரு நாட்டு பிரதமர்களிடையே பரிமாறிக்கொள்ளப்பட்டன.

4. இந்தியாவின் முதல் நாசியுள் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசியான iNCOVACC–ஐ உருவாக்கிய நிறுவனம் எது?

அ. பயோகான்

ஆ. Dr ரெட்டி ஆய்வகம்

இ. பாரத் பயோடெக்

ஈ. இந்திய சீரம் நிறுவனம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. பாரத் பயோடெக்

  • பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவசரகால பயன்பாட்டிற்கான நாட்டின் முதல் நாசியுள் செலுத்தப்படும் COVID–19 தடுப்பூசிக்கு இந்திய தலைமை மருந்துக்கட்டுப்பாட்டு இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ளது. ‘iNCOVACC’ என்று பெயரிடப்பட்ட இத்தடுப்பூசி பாரத் பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இது, சீனாவின், ‘CanSino Biologics’ தடுப்பூசிக்குப் பிறகு, ஓர் ஒழுங்குமுறை அனுமதியைப் பெற்ற உலகின் இரண்டாவது தடுப்பூசி ஆகும். ‘iNCOVACC’ என்பது சிம்பன்சி அடினோவைரஸ் வெக்டார்டு மறுசீரமைப்பு நாசியுள் செலுத்தக்கூடிய தடுப்பூசி ஆகும்.

5. முடக்கச் செயலிக்கு எதிரான சர்வதேச முனைவின் ஒருபகுதியான சைபர் பாதுகாப்புப் பயிற்சியை, இந்தியா, எந்த நாட்டுடன் இணைந்து நடத்தியது?

அ. ஜப்பான்

ஆ. பிரான்ஸ்

இ. இங்கிலாந்து

ஈ. ஆஸ்திரேலியா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இங்கிலாந்து

  • இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகமும் (NSCS) இங்கிலாந்து (UK) அரசும் BAE அமைப்புகளுடன் இணைந்து இருபத்தாறு நாடுகளுக்கு இணையவெளிப் பாதுகாப்புப் பயிற்சியை வெற்றிகரமாக நடத்தின. தேசிய இணையவெளிப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் (NCSC) தலைமையில் இந்தியாவால் நடத்தப்படும் முடக்கச் செயலிக்கு எதிரான சர்வதேச மென்பொருள் முனைவு – நெகிழ்திறன்மிக்க பணிக்குழுவின் ஒருபகுதியாக இந்தப் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.

6. ‘தேசிய பெண் காவலர்கள் மாநாடு’ நடைபெறும் இடம் எது?

அ. புது தில்லி

ஆ. லக்னோ

இ. சிம்லா

ஈ. மைசூரு

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. லக்னோ

  • ஹிமாச்சல பிரதேச மாநில காவல்துறையுடன் இணைந்து சிம்லாவில் உள்துறை அமைச்சகமும் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணியகமும் (BPRD) இணைந்து இரண்டு நாள் நடைபெறும், ‘தேசிய பெண் காவலர்கள் மாநாட்டை’ ஏற்பாடு செய்தது. இம்மாநாட்டில் பெண் காவலர்களின் சாதனைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதிக்கப்படும். வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மற்றும் குற்றங்களின் அடிப்படையில் பெண் காவலர்களின் புதிய பதவிகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும் இதில் விவாதிக்கப்படும்.

7. INS சுமேதாவின் பங்கேற்புடன் இந்தியா சமீபத்தில் எந்த நாட்டுடனான, ‘கடல்சார் கூட்டாண்மை பயிற்சியை (MPX)’ நிறைவு செய்தது?

அ. அமெரிக்கா

ஆ. ஆஸ்திரேலியா

இ. பிரான்ஸ்

ஈ. ஜப்பான்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஆஸ்திரேலியா

  • இந்திய கடற்படைக்கும் இராயல் ஆஸ்திரேலிய கடற்படைக்கும் இடையிலான வலுவான தொடர்புகள் மற்றும் இயங்குநிலையை மறுவுறுதிப்படுத்தும் பயிற்சியில் HMAS அன்சாக்குடன் INS சுமேதா பங்கேற்றது. INS சுமேதா என்பது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கடற்படை கடல் ரோந்துக்கப்பல் ஆகும். ‘விடுதலை அமுதப்பெருவிழா’ கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக அனைத்து கண்டங்களிலும், ‘மூவர்ணக்கொடி’யை ஏற்றி வைப்பது இந்திய கடற்படையின் முனைவின் ஒருபகுதியாகும்.

8. மிகநீண்ட வறட்சியை எதிர்கொண்டு வரும் இந்தியாவின் அண்டை நாடு எது?

அ. மியான்மர்

ஆ. சீனா

இ. இலங்கை

ஈ. நேபாளம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சீனா

  • ஒரு மாதத்திறக்கும் மேல் வீசிவரும் வெப்ப அலை மற்றும் குறைந்த மழைப்பொழிவு ஆகியவை சீனாவில் நீண்ட வறட்சியை அந்த நாட்டின் மிகநீளமான ஆறான யாங்சியில் ஏற்படுத்தியுள்ளது. டோங்டிங் போன்ற ஏரிகளும் கிளை ஆறுகளும் வறட்சியின் விளைவாக வற்றிப்போயுள்ளன. ஆற்றின் குறைந்த நீர்மட்டம் அப்பகுதியில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி செய்யும் திறனையும் குறைத்துள்ளது.

9. ‘உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்டு’ என்ற பெயரில் இராணுவப் பயிற்சியை நடத்தும் நாடு எது?

அ. தென் கொரியா

ஆ. ஜப்பான்

இ. சீனா

ஈ. ரஷ்யா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. தென் கொரியா

  • தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து தென்கொரியாவில், ‘உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்ட்’ என்ற களப்பயிற்சியை மீண்டும் தொடங்குவதன்மூலம் தங்களின் மிகப்பெரிய இராணுவக் கூட்டணியை மறுவுறுதி செய்துள்ளன. இந்த ஆண்டு கோடைக்கால பயிற்சியானது தென் கொரிய அதிபர் யூன் சுக்–யோல் அவர்களால், ‘Ulchi Freedom Shield’ என அழைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த பயிற்சிகளை இயல்பாக்குவதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.

10. அண்மையில் தொடங்கப்பட்ட, ‘சில்க் மார்க் கண்காட்சி’ நடைபெற்று வரும் இடம் எது?

அ. புது தில்லி

ஆ. சென்னை

இ. முசோரி

ஈ. காஞ்சிபுரம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. புது தில்லி

  • நடுவண் ஜவுளித்துறை இணையமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் புது தில்லியில் சில்க் மார்க் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். ஜவுளி அமைச்சகத்தின் நடுவண் பட்டு வாரியத்தின்கீழ் உள்ள இந்திய சில்க் மார்க் அமைப்பு இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. சில்க் மார்க் என்பது தரம் உறுதி செய்யும் லேபிள் ஆகும்; இது தயாரிப்பு ஆனது தூய இயற்கைப் பட்டால் ஆனது என்பதை தீர்மானிக்க அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது ஆகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. உச்சநீதிமன்றத்தில் நடுவணரசின் வழக்குரைஞராக இராம்சங்கர் இராஜா நியமனம்

உச்சநீதிமன்றத்தில் நடுவணரசின் தரப்பில் வழக்குரைஞராக ஆஜராக இராஜபாளையத்தை சேர்ந்த இராம் சங்கர் இராஜா நியமிக்கப்பட்டுள்ளார். நடுவணரசின் சட்டம், நீதித்துறை மற்றும் சட்ட விவகாரங்கள் துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் நடுவணரசின் வழக்குரைஞராக இராம்சங்கர் இராஜாவை நியமித்து அரசாணை வெளியிட்டது. இதில் அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2. காலை சிற்றுண்டி திட்டம்: செப். 15-இல் மதுரையில் தொடக்கம்

காலை சிற்றுண்டி திட்டம் மதுரையில் வரும் 15-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை மதுரையில் உள்ள பள்ளிகளில் முதல்வர் மு க ஸ்டாலின் தொடக்கிவைக்கிறார்.

தமிழகத்தில் மாநில அரசின் முழுமையான நிதியைக்கொண்டு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்காக `33.56 கோடி ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அன்று சென்னை- இன்று மதுரை: பள்ளியில் உணவளிக்கும் திட்டம் சென்னையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே, முன்மொழியப்பட்டு மாநகராட்சி நிர்வாகத்தால் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய மாமன்றத்தின் தலைவராக இருந்த சர் பிட்டி தியாகராயர் தலைமையில் 1920-ஆம் ஆண்டு செப்.16-இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இந்தியாவிலேயே முதன்முறையாக, சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அதே செப்டம்பர் மாதத்தில் காலை சிற்றுண்டி திட்டம், மதுரையில் தொடங்கப்படவுள்ளது.

8th September 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. The Union Environment Ministry approved the New Coastal Zone Management Plan for which state?

A. Kerala

B. Karnataka

C. Goa

D. Maharashtra

Answer & Explanation

Answer: B. Karnataka

  • Ministry of Forest, Environment and Climate Change recently approved the New Coastal Zone Management Plan for Karnataka. Prime Minister Narendra Modi laid the foundation for various works worth Rs 3,800 crore at Goldfinch city in Karnataka. Karnataka is the first State in southern India and only the second state in the country to get the Plan prepared and approved as per the new Coastal Regulation Zone (CRZ) notification.

2. As of March 2022, what is India’s external debt, as per the Finance Ministry’s data?

A. USD 220 billion

B. USD 420 billion

C. USD 620 billion

D. USD 820 billion

Answer & Explanation

Answer: C. USD 620 billion

  • The External Debt Management Unit (EDMU) in the Department of economic Affairs, Ministry of Finance, has released 28th edition of the Status Report on India’s External Debt 2021–22. India’s external debt, at US$ 620.7 billion as at end–March 2022, grew by 8.2 per cent over US$ 573.7 billon as at end–March 2021. While 53.2 per cent of it was denominated in US dollar, Indian rupee denominated debt, estimated at 31.2 per cent, was the second largest. External debt as a ratio to GDP fell marginally to 19.9 per cent as at end–March 2022 from 21.2 per cent a year ago.
  • Foreign currency reserves as a ratio to external debt stood slightly lower at 97.8 per cent as at end–March 2022 than 100.6 per cent a year ago. The long–term debt estimated at US$ 499.1 billion, constituted the largest chunk of 80.4 per cent, while the short–term debt, at US$ 121.7 billion, accounted for 19.6 per cent of the total.

3. Which country inaugurated Maitree Super Thermal Power Project, constructed under India’s concessional financing scheme?

A. Sri Lanka

B. Bangladesh

C. Nepal

D. Myanmar

Answer & Explanation

Answer: B. Bangladesh

  • Prime Minister Narendra Modi and Bangladesh Prime Minister Sheikh Hasina jointly unveiled Unit–I of the Maitree Super Thermal Power Project.
  • The project is being constructed under India’s concessional financing scheme. It will add 1320 MW to Bangladesh’s National Grid. Seven agreements, including on water resources, railways, science and technology, space technology was exchanged between the Prime Ministers.

4. Which company developed iNCOVACC, India’s first intranasal Corona vaccine?

A. BioCon

B. Dr Reddy’s Lab

C. Bharat Biotech

D. Serum Institute of India

Answer & Explanation

Answer: C. Bharat Biotech

  • The Drugs Controller General of India (DCGI) approved the country’s first intra–nasal Covid–19 vaccine for restricted emergency use in those aged above 18 years. The vaccine named ‘iNCOVACC’ was developed by Bharat Biotech and it is the only the second such vaccine in the world after CanSino Biologics’ vaccine in China, to get regulatory approval. iNCOVACC is a chimpanzee adenovirus vectored recombinant nasal vaccine.

5. India conducted a Cyber Security Exercise part of the International Counter Ransomware Initiative, in collaboration with which country?

A. Japan

B. France

C. UK

D. Australia

Answer & Explanation

Answer: C. UK

  • India’s National Security Council Secretariat (NSCS) and the UK Government in collaboration with BAE Systems successfully conducted the Cyber Security Exercise for 26 Countries. The exercise has been conducted as part of the International Counter Ransom ware Initiative– Resilience Working Group, which is being led by India under the leadership of National Cyber Security Coordinator (NCSC).

6. Which is the venue of ‘National Conference of Women Police’?

A. New Delhi

B. Lucknow

C. Shimla

D. Mysuru

Answer & Explanation

Answer: B. Lucknow

  • A two–day ‘National Conference of Women Police’ is being organised by the Ministry of Home Affairs (MHA) and Bureau of Police Research and Development (BPRD) in Shimla in collaboration with Himachal Police. The conference will showcase the achievements of women police officers and discuss challenges faced by them. It will also discuss the new roles and responsibilities of women in terms of emerging technologies and crimes.

7. India recently concluded a ‘Maritime Partnership Exercise (MPX)’ with which country, with the participation of INS Sumedha?

A. USA

B. Australia

C. France

D. Japan

Answer & Explanation

Answer: B. Australia

  • INS Sumedha participated with HMAS Anzac in the exercise reaffirming the strong navy–to–navy links and interoperability between Indian Navy and Royal Australian Navy. INS Sumedha is an indigenously built Naval Offshore Patrol Vessel. It is part of the Indian Navy’s initiative to hoist ‘Tiranga’ on all continents as part of Azadi Ka Amrit Mahotsav celebrations.

8. Which neighbouring country is experiencing its longest ever drought?

A. Myanmar

B. China

C. Sri Lanka

D. Nepal

Answer & Explanation

Answer: B. China

  • A month–long heatwave and record low rainfall have resulted in China’s longest–ever drought along the Yangtze, the country’s longest river. Lakes such as the Dongting Lake and tributaries have diminished as a result of the drought, exposing riverbeds. Low river levels have reduced the ability of hydro–electric power stations in the area to generate energy.

9. Which country is the host of ‘Ulchi Freedom Shield’ military exercise?

A. South Korea

B. Japan

C. China

D. Russia

Answer & Explanation

Answer: A. South Korea

  • South Korea and the United States began their largest joint military drills in years with a resumption of field training ‘Ulchi Freedom Shield’ in South Korea. The annual summertime exercise has been renamed Ulchi Freedom Shield this year by the South Korean President Yoon Suk–yeol. Aim of this field training is to normalize the combined exercises.

10. Which is the venue of ‘Silk Mark Expo’, which was recently inaugurated?

A. New Delhi

B. Chennai

C. Mussoorie

D. Kanchipuram

Answer & Explanation

Answer: A. New Delhi

  • Union Minister of State for Textiles Darshana Jardosh inaugurated the Silk Mark Expo in New Delhi. The expo is being organised by the Silk Mark Organisation of India under Central Silk Board, Ministry of Textiles. Silk Mark is a quality assurance label launched by government to determine that the product is made up of pure natural silk.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!