Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
General Tamil

8th Tamil Unit 1 Questions

8th Tamil Unit 1 Questions

Here We have Winmeen Tnpsc Self Preparation Course Study Materials. By reading line by line, we have framed these questions for Tnpsc all group exams.

6th to 12th Tamil Unit Wise Questions With Answer Pdf – Once you practice these Questions, you can easily score above 95 out of 100 Questions in General Tamil Section.

First time preparing candidates get idea how to study tamil and how to start tamil, experienced candidates get practice from these questions, so utilize this opportunity.

Also this questions framed with answers and explanation, best practice for all tnpsc aspirants. 8th Tamil Unit 1 Questions With Answers Uploaded Below.

1) இந்தியா, விஜயா போன்ற இதழ்களின் ஆசிரியர் யார்?

A) நாமக்கல் கவிஞர்

B) பாரதிதாசன்

C) பாரதியார்

D) கண்ணதாசன்

விளக்கம்: இந்தியா, விஜயா போன்ற இதழ்களை நடத்தி விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்டவர் பாரதியார்.

2) “செந்தமிழே செங்கரும்பே! செந்தமிழர் சீர்காக்கும்

நந்தா விளக்கனைய நாயகியே! – முந்தை

மொழிக்கெல்லாம் மூத்தவளே! மூவேந்தர் அன்பே!

எழில்மகவே! எந்தம் உயிர்!” – என்று தமிழ்மொழியை பாடியவர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) து. அரங்கன்

D) கவிமணி

விளக்கம்: “செந்தமிழே செங்கரும்பே!செந்தமிழர் சீர்காக்கும்

நந்தா விளக்கனைய நாயகியே! – முந்தை

மொழிக்கெல்லாம் மூத்தவளே! மூவேந்தர் அன்பே!

எழில்மகவே! எந்தம் உயிர்!” – என்று தமிழின் இனிமை குறித்து பாடியவர் பாரதியார் அவர்கள்.

3) சிந்துக்குத் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?

A) பாரதிதாசன்

B) பாரதியார்

C) நாமக்கல் கவிஞர்

D) வாணிதாசன்

விளக்கம்: சிந்துக்குத் தந்தை என்று போற்றப்படுபவர் பாரதியார். அவ்வாறு பாரதியாரை கூறியவர் புரட்சிக் கவி பாரதிதாசன்.

4) பாரதியாரின் இயற்பெயர்?

A) சுப்பிரமணிய பாரதியார்

B) சுத்தானந்த பாரதியார்

C) செந்தமிழ்ச் செல்வன்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: பாரதியாரின் இயற்பெயர் சி. சுப்பிரமணிய பாரதியார் என்பதாகும். இவர் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்.

5) மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்?

A) வைப்பு

B) கடல்

C) பரவை

D) ஆழி

விளக்கம்: மக்கள் வாழும் நிலப்பகுதியை குறிக்கும் சொல் வைப்பு என்பதாகும். வைப்பு என்றால் நிலப்பகுதி என்று பொருள். பரவை, ஆழி என்பது கடலைக் குறிக்கும் சொற்களாகும்.

6) ‘என்றென்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) என் + றென்றும்

B) என்று + என்றும்

C) என்றும் + என்றும்

D) என் + என்றும்

விளக்கம்: என்றென்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்றும் + என்றும் எனப் பிரித்து எழுதலாம்

7) ’வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) வான + மளந்தது

B) வான் + அளந்தது

C) வானம் + அளந்தது

D) வான் + மளந்தது

விளக்கம்: வானமளந்தது என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது வானம் + அளந்தது. வானம் + அளந்தது என்னும் சொல்லின் நிலைமொழியில் உள்ள ம் என்னும் எழுத்து உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி வருமொழியின் முதல் எழுத்து அ என்பதுடன் புணர்ந்து (ம் + அ – ம) வானமளந்தது என கிடைக்கும்.

8) அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்———

A) அறிந்ததுஅனைத்தும்

B) அறிந்தனைத்தும்

C) அறிந்ததனைத்தும்

D) அறிந்துனைத்தும்

விளக்கம்: அறிந்தது + அனைத்தும் என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைப்பது அறிந்ததனைத்தும். நிலைமொழயின் இறுதி எழுத்து து. இதனை த் + உ எனப் பிரிக்கலாம். வருமொழியின் முதல் எழுத்து அ. எனவே உயிர்வரின் உக்குரல் மெய்விட்டேடும் என்னும் விதிப்படி நிலைமொழியிலுள்ள உ என்னும் எழுத்து விலகி த் என்னும் எழுத்து மட்டுமே நிற்கும். அறிந்தத் + அனைத்தும். பின் உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி த் + அ – த எனப்புணர்ந்து. அறிந்ததனைத்தும் என எழுதலாம்.

9) “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்” என்று கூறும் நூல் எது?

A) அகத்தியம்

B) பரிபாடல்

C) திருக்குறள்

D) தொல்காப்பியம்

விளக்கம்: நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்ததே இந்த உலகம் என்று கூறும் நூல் தொல்காப்பியம் ஆகும். இதனை இயற்றியவர் தொல்காப்பியர் ஆவார்.

10) வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?

A) வானம்அறிந்து

B) வான்அறிந்த

C) வானமறிந்த

D) வான்மறிந்த

விளக்கம்: வானம் + அறிந்த என்பதனைச் சேர்ந்து எழுதக் கிடைக்கும் சொல் வானமறிந்த. நிலைமொழியில் இறுதிஎழுத்து ம் என்பது வருமொழியின் முதல் எழுத்தாகிய அ என்னும் எழுத்துடன் உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி புணர்ந்து வானமறிந்த என்று கிடைக்கும்

11) “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” இதில் விசும்பு என்ற சொல்லின் பொருள்?

A) வானம்

B) விண்மீன்

C) கோள்கள்

D) பூமி

விளக்கம்: விசும்பு என்ற சொல்லின் பொருள் வானம் ஆகும். தொல்காப்பியர் இந்த உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்பதை கூறும்போது வானம் என்பதை விசும்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

12) பறவைகள்_____________பறந்து செல்கின்றன?

A) நிலத்தில்

B) விசும்பில்

C) மரத்தில்

D) நீரில்

விளக்கம்: பறவைகள் விசும்பில் பறந்து செல்கின்றன என்பதே சரியானதாகும். விசும்பு என்றால் வானம் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

13) இயற்கையைப் போற்றுதல் தமிழர்___________

A) மரபு

B) பொழுது

C) வரவு

D) தகவு

விளக்கம்: இயற்கையைப் போற்றுதல் தமிழர் மரபாகும். ஆகவே தமிழர்கள் இயற்கையையும் வழிபட்டு வருகின்றனர். புலவர்களும் தங்களது பாடல்களில் இயற்கையை போற்றி பாடல்களை எழுதியுள்ளனர். சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்று இயற்கையை போற்றியுள்ளார்

14) இருதிணை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A) இரண்டு + திணை

B) இரு + திணை

C) இருவர் + திணை

D) இருந்து + திணை

விளக்கம்: இருதிணை என்னும் சொல்லை பிரித்து எழுதினால் இரு + திணை எனப் பிரியும்.

15) பொருத்துக

அ. புலி – 1. கன்று

ஆ. சிங்கம் – 2. பறழ்

இ. யானை – 3. குருளை

ஈ. ஆடு – 4. குட்டி

A) 2, 1, 3, 4

B) 4, 2, 3, 1

C) 2, 3, 1, 4

D) 3, 2, 1, 4

விளக்கம்: புலி – பறழ்

சிங்கம் – குருளை

யானை – கன்று

ஆடு – குட்டி

16) ஆடு-ன் ஒலி மரபு

A) உறுமும்

B) முழங்கும்

C) கதறும்

D) கத்தும்

விளக்கம்: ஆடு – கத்தும்

புலி – உறுமும்

சிங்கம் – முழங்கும்

பசு – கதறும்

17) பசு – ன் இளமைப் பெயர்?

A) கன்று

B) குட்டி

C) பறழ்

D) குருளை

விளக்கம்: பசு – ன் இளமைப்பெயர் கன்று என்பதாகும். யானையின் இளமைப் பெயரும் கன்று. பறழ் என்பது புலியின் இளமைப்பெயர். குருளை என்பது சிங்கத்தின் இளமைப் பெயர். குட்டி என்பது ஆடு-ன் இளமைப் பெயர்.

18) தமிழில் நமக்கு கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் எது?

A) அகத்தியம்

B) நன்னூல்

C) அகப்பொருள் விளக்கம்

D) தொல்காப்பியம்

விளக்கம்: தொல்காப்பியமே தமிழில் நமக்கு கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் ஆகும். தொல்காப்பியரின் ஆசிரியர் அகத்தியர். அகத்தியர் எழுதிய அகத்தியம் என்னும் நூலே மிகப்பழமையான இலக்கண நூல். ஆனால் அந்நூல் முழுமையாக கிடைக்கவில்லை.

19) தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களை கொண்டுள்ளது?

A) 2

B) 3

C) 5

D) 4

விளக்கம்: தொல்காப்பியம் 3 அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அவை எழுத்து, சொல், பொருள் என்பதாகும்.

20) தொல்காப்பியத்தின ஒவ்வொரு அதிகாரமும் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது?

A) 10

B) 5

C) 8

D) 9

விளக்கம்: தொல்காப்பியத்தில் ஒவ்வொரு அதிகாரமும் 9 இயல்களைக் கொண்டுள்ளது . தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்கள் உள்ளன. எனவே 27 இயல்களை கொண்ட நூலாக தொல்காப்பியம் உள்ளது.

21) செய்யுளில் எழுத்துக்கள் தன் மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதை_________என்பர்

A) குற்றியலுகரம்

B) குற்றியலிகரம்

C) அளபெடை

D) குறுக்கம்

விளக்கம்: புலவர்கள் சில எழுத்துக்களை அவற்றுக்கு உரிய மாத்திரை அளவைவிட நீண்டு ஒலிக்குமாறு பயன்படுத்துவது உண்டு. இவ்வாறு செய்யுளில் எழுத்துக்கள் தன் மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதை அளபெடை என்பர்

22) பொருத்துக

அ. பசு – 1. உறுமும்

ஆ. யானை – 2. முழங்கும்

இ சிங்கம் – 3. பிளிரும்

ஈ. புலி – 4. கதறும்

A) 4, 3, 2, 1

B) 3, 2, 1, 4

C) 2, 1, 3, 4

D) 1, 2, 3, 4

விளக்கம்: பசு – கதறும்

யானை – பிளிறும்

சிங்கம் – முழங்கம்

புலி – உறுமும்

23) வாழ்வுக்கு ஒழுங்குமுறை ஒழுக்கம் எனில் மொழிக்கு ஒழுங்குமுறை__________

A) உச்சரிப்பு

B) மாத்திரைகள்

C) மரபு

D) பிழையின்மை

விளக்கம்: வாழ்க்கைக்கு உரிய ஒழுங்குமுறை ஒழுக்கமே. அதே போல மொழிக்குரிய ஒழுங்குமுறை மரபு எனப்படும்

24) செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி கூறும் நூல்?

A) அகத்தியம்

B) தொல்காப்பியம்

C) திருக்குறள்

D) நன்னூல்

விளக்கம்: வாழ்வுக்குரிய ஒழுங்குமுறை ஒழுக்கம். அதேபோல மொழிக்குரிய ஒழுங்குமுறை மரபு. செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் கூறுகிறது.

25) இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமை – இதில் அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பு.

A) குற்றியலுகரம்

B) குற்றியலிகரம்

C) உயிரளபெடை

D) ஒற்றளபெடை

விளக்கம்: வழாஅமை என்ற சொல்லின் இலக்கண குறிப்பு உயிரளபெடை என்பதாகும். இப்பாடலில் இடம்பெற்றுள்ள வழாஅமை என்ற சொல்லில் உள்ள ழா என்னும் எழுத்தை மூன்று மாத்திரை அளவு நீட்டி ஒலிக்க வேண்டும் என்ற நோக்கில் ழா-வை அடுத்து அ இடம் பெற்றுள்ளது. இவ்வாறு அமைவது உயிரளபெடை எனப்படும்.

26) மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை – இதில் திரிதல் என்ற சொல்லின் பொருள்?

A) மாறுபடுதல்

B) செல்லுதல்

C) கலவை

D) கெட்டுபோதல்

விளக்கம்: மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை – இதில் திரிதல் என்ற சொல்லின் பொருள் மாறுபடுதல் என்பதாகும். இவ்வரி இடம் பெற்ற நூல் தொல்காப்பியம்

27) தழாஅல் என்ற சொல்லின் பொருள்?

A) தழுவி

B) தழுவு

C) தழுவுதல்

D) தாவுதல்

விளக்கம்: தழா அல் என்ற சொல்லின் பொருள் தழுவுதல் ஆகும். தழுவுதல் என்றால் பயன்படுத்துதல் என்று பொருள்.

28) மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்க___________ஐப் பயன்படுத்தினான்?

A) மொழி

B) ஓவியம்

C) எழுத்து

D) சைகை

விளக்கம்: மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துக்களையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்க முதலில் சைகைகளைப் பயன்படுத்தினான்.

29) தமிழ்மொழியை எழுத எத்தனை வகை எழுத்துக்கள் வழக்கிலிருந்தன என அறிகிறோம்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: தமிழ்மொழியை எழுத இருவகை எழுத்துக்கள் வழக்கிலிருந்தன என அறிகிறோம். இதனை கூறும் கல்வெட்டு அரச்சலூர் கல்வெட்டு ஆகும்.

30) செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் யார்?

A) பாரதிதாசன்

B) வாணிதாசன்

C) பெருஞ்சித்தனார்

D) இரா. இளங்குமரனார்

விளக்கம்: செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் இரா. இளங்குமரனார் ஆவார். இவர் பள்ளி ஆசிரியராக பணியாற்றினார்.

31) சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

துலங்குக வையகமே! – இதில் சூழ்கலி என்ற சொல்லின் பொருள்?

A) சூழ்ந்துள்ள அறியாமை இருள்

B) சூழ்ந்துள்ள மொழி அறிவு

C) சூழ்ந்துள்ள அறிவு ஒளி

D) சூழ்ந்துள்ள மக்களின் பண்பு

விளக்கம்: சூழ்கலி என்ற சொல்லின் பொருள் சூழ்ந்துள்ள அறியாமை இருள் ஆகும். இதனை பாரதியார் தன் தமிழ்மொழி வாழ்த்து எனும் தலைப்பில் விளக்கியுள்ளார்.

32) வான மளந்தது அனைத்தும் அளந்திடு

வண்மொழி வாழியவே! – இதில் இடம்பெற்றுள்ள வண்மொழி என்னும் சொல்லின் பொருள்?

A) வலிமையான மொழி

B) வளமிக்க மொழி

C) வளர்ந்த மொழி

D) வளமை குன்றிய மொழி

விளக்கம்: வண்மொழி என்ற சொல்லின் பொருள் வளமிக்க மொழி என்பதாகும். இதனை தமிழ் மொழிக்கு ஒப்பிட்டு பாரதியார் கூறியுள்ளார்

33) முந்தை மொழிக்கெல்லாம் மூத்தவளே! மூவேந்தர் அன்பே!

எழில்மகவே! எந்தம் உயிர் – என்று தமிழ்மொழியை வாழ்த்தி பாடியவர்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) து. அரங்கன்

D) கவிமணி

விளக்கம்: முந்தை மொழிக்கெல்லாம் மூத்தவளே! மூவேந்தர் அன்பே!

எழில்மகவே! எந்தம் உயிர் – என்று தமிழ்மொழியை வாழ்த்தி பாடியவர் – து. அரங்கன்

34) உலகத்து பொருள்களை இரு திணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ்மொழியின் மரபு என்று கூறும் நூல்?

A) திருக்குறள்

B) அகத்தியம்

C) பரிபாடல்

D) தொல்காப்பியம்

விளக்கம்: தமிழில் நமக்கு கிடைத்துள்ள மிகப்பழமையான நூலான தொல்காப்பியம், உலகத்துப் பொருள்களை உயர்திணை, அஃறிணை என்ற இருதிணைகளாகவும், ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றான் பால், பலவின்பால் என்று ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ்மொழியின் மரபு என்று கூறுகிறது.

35) அளபெடை எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: அளபெடை இரண்டு வகைப்படும். அவை உயிரளபெடை, ஒற்றளபெடை. . ஓர் எழுத்து அவற்றுக்கு உரிய மாத்திரை அளவைவிட நீண்டு ஒலித்தால் அது அளபெடை எனப்படும். உயிரெழுத்து நீண்டு ஒலித்தால் உயிரளபெடை என்றும், ஒற்றெழுத்து நீண்டு ஒலித்தால் ஒற்றளபெடை என்றும் கூறுவர்.

36) உயிரளபெடை எத்தனை வகைப்படும்?

A) 3

B) 4

C) 5

D) 6

விளக்கம்: உயிரளபெடை மூன்று வகைப்படும்.

1. செய்யுளிசை அளபெடை அல்லது இசைநிறை அளபெடை

2. இன்னிசை அளபெடை

3. சொல்லிசை அளபெடை.

37) மனிதனின் முதல் கண்டுபிடிப்பு?

A) ஓவியம்

B) மொழி

C) எழுத்து

D) சைகை

விளக்கம்: மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துக்களையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கச் சைகைகளைப் பயன்படுத்தினான்.

38) எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை?

A) வரி வடிவம்

B) சைகை

C) குறியீடு

D) இலக்கணம்

விளக்கம்: மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும் பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பினான். அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.

39) ஏகலைவன் என்பது எதில் வல்லவனைக் குறிக்கிறது?

A) கட்டிடம் கட்டுதல்

B) அம்புவிடுதல்

C) மொழித்திறன் உடையவர்

D) எழுத்துச் சீர்திருத்தம் செய்பவர்

விளக்கம்: ஏகலைவன் என்பது அம்பு விடுவதில் வல்வனைக் குறிக்கிறது. ஏகலை என்னும் சொல் அம்பு விடும் கலையைக் குறிக்கிறது.

40) கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களின் அமைப்பு முறை பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. ஸ என்னும் வடமொழி எழுத்து காணப்படவில்லை

2. மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தவில்லை

3. எகர, ஒகரக் குறில் நெடில் வேறுபாடில்லை

A) 1, 2 சரி

B) 2, 3 சரி

C) 1, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: ஸ என்னும் வடமொழி எழுத்து காணப்படுகிறது

மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தவில்லை

எகர, ஒகரக் குறில் நெடில் வேறுபாடில்லை

41) தமிழ் எழுத்துக்கள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற_________காரணமாக அமைந்தது?

A) ஓவியக்கலை

B) இசைக்கலை

C) அச்சுக்கலை

D) நுண்கலை

விளக்கம்: காலந்தோறும் தமிழ் எழுத்துகளின் வரி வடிவங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி அடைந்து வந்துள்ளன. அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துக்கள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.

42) கல்வெட்டுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன?

A) கி. மு. 3

B) கி. பி. 3

C) கி. மு. 7

D) கி. பி. 7

விளக்கம்: கல்வெட்டுகள் கி.மு (பொ.ஆ.மு) மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன. இத்தகைய கல்வெட்டுகளை கோவில் சுவர்களில் காணலாம்.

43) செப்பேடுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன?

A) கி. மு. 3

B) கி. பி. 3

C) கி. மு. 7

D) கி. பி. 7

விளக்கம்: தமிழ் எழுத்துக்களின் பழைய வரி வடிவங்களைக் கோவில்களில் உள்ள செப்பேடுகளில் காணமுடிகிறது. இத்தகைய செப்பேடுகள் கி. பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.

44) பாரதியார் பற்றிய கூற்றகளை ஆராய்க.

1. கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்த்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப்போராட்ட வீரர்.

2. இயற்பெயர் சுத்தானந்த பாரதியார்

3. இந்தியா, விஜயா போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

4. சந்திரிகையின் கதை, தராசு போன்ற காப்பியங்களையும் எழுதியுள்ளார்

A) 1, 4 மட்டும் சரி

B) 1, 2 மட்டும் சரி

C) 1, 2, 4 சரி

D) 2, 3, 4 தவறு

விளக்கம்: 1. கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்த்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப்போராட்ட வீரர்.

2. இயற்பெயர் சுப்பிரமணிய பாரதியார்

3. இந்தியா, விஜயா போன்ற இதழ்களை நடத்தி விடுதலை போராட்டதிற்கு வித்திட்டார்

4. சந்திரிகையின் கதை, தராசு போன்ற உரைநடை நூல்களை எழுதியுள்ளார்

45) பாரதியாருக்கு பொருத்தமில்லாது எது?

1. உரைநடை ஆசிரியர்

2. வசனகவிதையாளர்

3. சீட்டுக்கவிதையாளர்

4. சமூக சீர்திருத்த சிந்தனையாளர்

5. ஆன்மீக அன்பர்

6. அரசியல் ஈடுபாட்டாளர்

A) 3, 5, 6

B) 5, 6

C) 2, 3, 5, 6

D) 2, 3, 4, 5, 6

விளக்கம்: கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்த்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப்போராட்ட வீரர், உரைநடையாளர், சீட்டுகவியாளர், வசனகவிதையாளர் என பன்முகத் திறன் பெற்றவர் சி. சுப்பிரமணிய பாரதியார்

46) செந்தமிழ்த் தேனீ என்று பாரதியாரை புகழ்ந்தவர்?

A) சுப்புரத்தின தாசன்

B) வாணிதாசன்

C) பாரதிதாசன்

D) கண்ணதாசன்

விளக்கம்: பாரதிதாசன், பாரதியாரை செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை என்று புகழ்ந்துள்ளார்.

47) தொல்காப்பியம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இதன் ஆசிரியர் தொல்காப்பியர்

2. இந்நூல் 3 இயல்களை கொண்டுள்ளது.

3. 27 அதிகாரங்களை கொண்டுள்ளது.

4. ஒவ்வொரு இயல்களிலும் 9 அதிகாரங்கள் உள்ளன

A) 1 மட்டும் சரி

B) 1, 2 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர். இந்நூல் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் 9 இயல்களை கொண்டுள்ளன. எனவே தொல்காப்பியம் 27 இயல்களைக் கொண்ட நூலாகும்

48) தொல்காப்பியரின் ஆசிரியர்?

A) அகத்தியர்

B) முதலாம் தொல்காப்பியர்

C) நன்னூலார்

D) பவணந்தி முனிவர்

விளக்கம்: தொல்காப்பியரின் ஆசிரியர் அகத்தியர். இவர் எழுதிய நூல் அகத்தியம். தொல்காப்பித்திற்கு முன்னர் எழுதப்பட்ட நூல் அகத்தியம் ஆகும். இருப்பினும் இந்நூல் முழுமையாக கிடைக்கவில்லை.

49) இவ்வுலகம் ஐம்பூதங்களால் ஆனது என்று கூறும் தொல்காப்பியத்தின் மரபியல் எந்த அதிகாரத்தில் உள்ளது?

A) எழுத்து அதிகாரம்

B) சொல்அதிகாரம்

C) பொருள் அதிகாரம்

D) யாப்பு அதிகாரம்

விளக்கம்: இவ்வுலகம் ஐம்பூதங்களால் ஆன கலவை என்று கூறும் மரபியல் தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. யாப்பு அதிகாரம் என்பது தொல்காப்பியத்தில் இல்லை. எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரம் மட்டுமே தொல்காப்பியத்தில் உள்ளன.

50) காகத்தின் ஒலி மரபு

A) கத்தும்

B) கதறும்

C) பேசும்

D) கரையும்

விளக்கம்: காகம் கரையும் என்பதே சரி.

ஆடு – கத்தும்

பசு – கதறும்

கிளி – பேசும்

51) கல்வெட்டுகள், செப்பேடுகளில் காணப்படும் வரிவடிவங்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: கல்வெட்டுகள், செப்பேடுகளில் காணப்படும் வரிவடிவங்களை வட்டெழுத்து, தமிழெத்து என இருவகையாகப் பிரிக்கலாம்.

52) வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழமையான தமிழ் எழுத்து__________என அழைக்கப்படுகிறது?

A) கோட்டெழுத்து

B) வட்டெழுத்து

C) சித்திர எழுத்து

D) ஓவிய எழுத்து

விளக்கம்: கல்வெட்டுகள், செப்பேடுகளில் காணப்படும் வரிவடிவங்களில் வட்டெழுத்து, வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து என அழைக்கப்படுகிறது.

53) எந்தப் பகுதிகளில் காணப்படும் சாசனங்களில் வட்டெழுத்துகளே இடம்பெற்றுள்ளன?

A) சேர, சோழ மண்டலம்

B) சோழ, பாண்டிய மண்டலம்

C) சேர, பாண்டிய மண்டலம்

D) பாண்டிய, பல்லவ மண்டலம்

விளக்கம்: சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துகளே இடம் பெற்றுள்ளன.

54) கண்ணெழுத்துப்படுத்த எண்ணுப் பல்பொதி என்னும் தொடர் இடம்பெற்றுள்ள நூல் எது?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

C) கம்பராமாயணம்

D) பரிபாடல்

விளக்கம்: கண்ணெழுத்துகள் பற்றிய செய்தியை கூறும் இத்தொடர் இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது.

55) ___________சங்க காலத்தில தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் கண்ணெழுத்துகள் என்று அழைக்கப்பட்டன?

A) முதல்

B) இடை

C) கடை

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள் என்று அழைக்கப்பட்டன. இதனைச் சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி என்னும் தொடரில் அறியலாம்

56) தமிழ்மொழியை எழுத இருவகை எழுத்துகள் வழக்கிலிருந்தன என கூறும் கல்வெட்டு எது?

A) உத்திரமேரூர் கல்வெட்டு

B) அரச்சலூர் கல்வெட்டு

C) கொடுமணல் கல்வெட்டு

D) சிவகங்கை கல்வெட்டு

விளக்கம்: தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துக்கள் வழக்கிலிருந்தன என அறிகிறோம். அரச்சலூர் கல்வெட்டே இதற்கு சான்றாகும். இக்கல்வெட்டில் தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் கலந்து எழுதப்பட்டுள்ளன.

57) கூற்று: பாறைகளில் நேர்கோடுகள் பயன்படுத்தப்பட்டன.

காரணம்: வளைகோடுகளை பயன்படுத்த முடியாது

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. கூற்று காரணத்தை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் கூற்று காரணத்தை விளக்கவில்லை.

விளக்கம்: பாறைகளில் செதுக்கும் போது வளைகோடுகளைப் பயன்படுத்த முடியாது என்பதால் நேர்க்கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

58) கூற்று: தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார்

காரணம்: தமிழ் மீது ஏற்பட்ட ஆர்வம்

A) கூற்று சரி காரணம் தவறு

B) கூற்று தவறு காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. கூற்று காரணத்தை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் கூற்று காரணத்தை விளக்கவில்லை.

விளக்கம்: தந்தை பெரியார் எழுத்துச் சீர்த்திருத்தம் மேற்கொண்டார். ஆனால் காரணம் தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதே ஆகும்.

59) தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர்?

A) தந்தை பெரியார்

B) வீரமாமுனிவர்

C) கால்டுவெல்

D) ஈராஸ்பாதிரியார்

விளக்கம்: தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் வீரமாமுனிவர். இவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். இவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராகப் போற்றப்படுகிறார்.

60) “ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!” – இதில் இசை என்ற சொல்லின் பொருள்?

A) ஓசை

B) இன்னிசை

C) புகழ்

D) இன்பம்

விளக்கம்:“ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!” – இப்பாடலில் இசை என்ற சொல்லின் பொருள் புகழ் என்பதாகும்

61) புதிய அறம் பாட அறிஞன் என்று பாராட்டப்படுபவர் யார்?

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) வாணிதாசன்

D) கண்ணதாசன்

விளக்கம்: சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட அறிஞன் என்ற சிறப்பு பெயர் பெற்றவர் – பாரதியார். இவ்வாறு பாரதியாரை புகழ்ந்தவர் பாரதிதாசன்

62) மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை – என்று செய்யுளுக்கு இலக்கணம் வகுத்தவர்?

A) அகத்தியர்

B) தொல்காப்பியர்

C) பவணந்தி முனிவர்

D) வீரமாமுனிவர்

விளக்கம்: மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை என்று செய்யுளுக்கு இலக்கணம் வகுத்த நூல் தொல்காப்பியம். இதன் ஆசிரியர் தொல்காப்பியர். தொல்காப்பியரின் ஆசிரியர் அகத்தியர்.

63) கூற்றுகளை ஆராய்க.

1. வட்டெழுத்து என்பது நேர்க்கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து ஆகும்.

2. தமிழெழுத்து என்பது இக்காலத்தில் எழுதப்படும் தமிழ் எழுத்துக்களின் பழைய வரி வடிவம் ஆகும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: வட்டெழுத்து என்பது வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து ஆகும். தமிழெழுத்து என்பது இக்காலத்தில் எழுதப்படும் தமிழ் எழுத்துக்களின் பழைய வரி வடிவம் ஆகும்

64) பழங்காலத்தில் கீழ்க்கண்ட எதை எழுத பயன்டுத்தவில்லை?

A) கற்பாறை

B) செப்பேடு

C) ஓலை

D) பானை

விளக்கம்: பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினார். ஆனால் பானை மீது வண்ணங்களால் ஓவியம் தீட்டினர்

65) கூற்று: ஓலைகளில் வளைகோடுகளை அதிகமாகப் பயன்படுத்தினர்

காரணம்: ஓலைகளில் நேர்க்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது எளிது.

A) கூற்று சரி காரணம் தவறு

B) கூற்று தவறு காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. கூற்று காரணத்தை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் கூற்று காரணத்தை விளக்க வில்லை.

விளக்கம்: ஓலைகளில் வளைகோடுகளை அதிகமாகப் பயன்படுத்தினர். ஓலைகளில் நேர்க்கோடுகளையும் புள்ளிகளையும் பயன்படுத்துவது கடினம்

66) தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்?

A) பாரதிதாசன்

B) தந்தை பெரியார்

C) வ. உ. சிதம்பரனார்

D) பெருஞ்சித்திரனார்

விளக்கம்: தமிழ் மொழியில் எழுத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுத்துச் சீர்த்திருத்தம் மேற்கொண்டவர் தந்தை பெரியார். இவர் இருபதாம் நூற்றாண்டு வரை வேறு வடிவில் இருந்த சில எழுத்துக்களை சீர்திருத்தம் செய்தார். இவற்றில் சில அரசால் ஏற்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது

67) எழுத்துக்களில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் யார்?

A) தந்தை பெரியார்

B) கால்டுவெல்

C) ஈராஸ்பாதிரியார்

D) வீரமாமுனிவர்

விளக்கம்: வீரமாமுனிவர் தமிழ் எழுத்துக்களில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் ஆவார். இவரே தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தம் செய்தவர் ஆவார்

68) பாரதியாருக்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க?

A) சிந்துக்குத் தந்தை

B) செந்தமிழ்த் தேனீ

C) புதிய அறம் பாட வந்த அறிஞன்

D) தமிழ்த் தாத்தா

விளக்கம்: சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன் என்று பாரதியாரை புகழ்ந்தவர் பாரதிதாசன். இதில் தாமிழ்த் தாத்தா என்பது உ. வே. சா-வைக் குறிக்கும்

69) இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமை – இதில் குறிப்பிடப்படும் இருதிணை எது?

A) அகத்திணை, புறத்திணை

B) குறிஞ்சித் திணை, முல்லைத் திணை

C) வெட்சித்திணை, வஞ்சித்திணை

D) உயர்திணை, அஃறிணை

விளக்கம்: இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமை என்ற தொல்காப்பியப் பாடலில் தொல்காப்பியர் குறிப்படுவது உயர்திணை, அஃறிணை என்பதாகும்.

70) சில எழுத்துக்களின் மேற்பகுதியில் குறுக்குகோடு இடக் காரணம்?

A) நெடில் எனக் குறிப்பிடுவதற்கு

B) குறில் எனக் குறிப்பிடுவதற்கு

C) மெய்யெழுத்து எனக் குறிப்பிடுவதற்கு

D) அழகுபடுத்துவதற்காக

விளக்கம்: சில எழுத்துகளை அழகுபடுத்துவதற்காக அவற்றின் மேற்பகுதியில் குறுக்குக்கோடு இடப்பட்டது. பின்னர் அவையே நிலையான வடிவங்களாக அமைந்துவிட்டன.

71) எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் யாருடைய காலம் முதல் இருந்து வந்துள்ளது?

A) அகத்தியர்

B) தொல்காப்பியர்

C) தந்தை பெரியார்

D) பவணந்தி முனிவர்

விளக்கம்: எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் தொல்காப்பியர் காலம் முதல் இருந்து வந்துள்ளது.

72) தமிழில் சொல் என்பதற்கு________என்று பொருள்?

A) பதர்

B) பொருள்

C) எழுத்து

D) நெல்

விளக்கம்: தமிழில் சொல் என்பதற்கு நெல் என்பது ஒரு பொருள். சொன்றி, சோறு என்பவை அவ்வழியில் வந்தவை.

73) எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது யாருடைய கூற்று?

A) அகத்தியர்

B) பவணந்தி முனிவர்

C) வீரமாமுனிவர்

D) தொல்காப்பியர்

விளக்கம்: தொல்காப்பியத்தின் ஆசிரியரான தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று கூறியுள்ளார்.

74) மறம் பாட வந்த மறவன் – இதில் மறவன் என்று குறிப்பிடப்படுபவர்?

A) பாரதிதாசன்

B) வீரமாமுனிவர்

C) பாரதியார்

D) கண்ணதாசன்

விளக்கம்: மறம் பாட வந்த மறவன் என்று குறிப்பிடப்படுபவர் பாரதியார். இவ்வாறு பாரதியாரை புகழ்ந்தவர் பாரதிதாசன்.

75) வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழியெ! – என்று பாடியவர் யார்?

A) பாரதிதாசன்

B) வாணிதாசன்

C) பாரதியார்

D) கண்ணதாசன்

விளக்கம்: வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழியெ! – என்று தமிழ்மொழியை பாடியவர் – பாரதியார்

76) உயிரளபெடையை எத்தனை மாத்திரை அளவு நீட்டி ஒலிக்க வேண்டும்?

A) 2

B) 2½

C) 3

D) 1½

விளக்கம்: உயிரளபெடையை மூன்று மாத்திரை அளவு நீட்டி ஒலிக்க வேண்டும். உயிரளபெடை மூன்று வகைப்படும்.

77) தவறாக பொருந்தியுள்ளதை தேர்க.

A) புலி – பறழ்

B) யானை – குட்டி

C) பசு – கன்று

D) சிங்கம் – குருளை

விளக்கம்: யானையின் இளமைப் பெயர் கன்று ஆகும். குட்டி என்பது ஆட்டின் இளமைப் பெயராகும்.

78) மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க________ஐ கண்டுபிடித்தான்?

A) எழுத்து

B) வரி

C) மொழி

D) இலக்கியம்

விளக்கம்: மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க மொழியைக் கண்டுபிடித்தான். மொழியை நிலைபெறச் செய்ய எழுத்துக்களை உருவாக்கினான். எழுத்துக்களின் வரிவடிவங்கள் மொழிக்கு மொழி வேறுபடுகின்றன.

79) நெடிலைக் குறிக்க இக்காலத்தில் துணைக்கால் பயன்படுத்தப்படுகிறது. அக்காலத்தில் என்ன பயன்படுத்தப்பட்டது?

A) இரட்டைப் புள்ளி

B) கோடு

C) ஒற்றைப்புள்ளி

D) கொம்பு

விளக்கம்: நெடிலைக் குறிக்க ஒற்றைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் பயன்படுத்தப்படுகிறது.

80) ஏய் என்ற சொல்லின் பொருளில் பொருந்தாதது எது?

A) கூடு

B) பொருந்து

C) சேர்

D) வா

விளக்கம்: எட்டத்தில் போகிற ஒருவனை ஏய் என அழைத்தனர். ஏய் என்பது என்னோடு கூடு, பொருந்து, சேர் என்னும் பொருளை உடையது.

81) திருவள்ளுவர் தவச்சாலையை நிறுவியர் யார்?

A) துரை. மாணிக்கம்

B) பெருஞ்சித்தனார்

C) டி. கே. சிதம்பரனார்

D) இரா. இளங்குமரனார்

விளக்கம்: செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும். இரா. இளங்குமரனார் திருவள்ளுவர் தவச்சாலையை அமைத்துள்ளார்.

82) கூற்றுகளை ஆராய்க.

1. ஏய் என்பது ஏ என வழக்கில் ஊன்றிவிட்டது.

2. அம்பு விரைந்து செல்வது போலச் சென்று உரிய கடமை புரிபவன் ஏவலன் எனப்பட்டான்.

3. அம்புவிடும் கலையை ஏகலை என்றது தமிழ்

4. அம்புவிடுவதில் வல்லவனை ஏகலைவன் என்று கூறுகிறோம்

A) 1, 2 சரி

B) 1, 2, 3 சரி

C) 1, 2, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: ஏய் என்பது ஏ என வழக்கில் ஊன்றிவிட்டது.

அம்பு விரைந்து செல்வது போலச் சென்று உரிய கடமை புரிபவன் ஏவலன் எனப்பட்டான்.

அம்புவிடும் கலையை ஏகலை என்றது தமிழ்

அம்புவிடுவதில் வல்லவனை ஏகலைவன் என்று கூறுகிறோம்

83) முள்ளம்பன்றியின் பழம்பெயர்?

A) ஏய்ப்பன்றி

B) எய்ப்பன்றி

C) எயிற்றுபன்றி

D) எயிறுப்பன்றி

விளக்கம்: ஏவு என்னும் சொல் ஏ என்று ஆனது மட்டுமின்றி எய் எனவும் ஆயிற்று. ஏவுகின்ற அம்பைப் போல் கூர்முள்ளை உடைய முள்ளம்பன்றியின் பழம்பெயர் எய்ப்பன்றி.

84) அம்பை எய்பவர் எயினர். அவர்தம் மகளிர்____________?

A) எயிற்றி

B) எயினி

C) எயினியர்

D) எயினியி

விளக்கம்: அம்பை எய்பவர் எயினர். அவர்தம் மகளிர் எயினியர். சங்கப்புலவர்களுள் எயினனாரும் உளர். எயினியாரும் உளர்.

85) தவறான ஒன்றைத் தேர்வு செய்க

A) ஆன் – ஆ

B) மான் – மா

C) கோன் – கோ

D) தேன் – தோ

விளக்கம்: ஆன் என்பது ஆ ஆகியது. மான் என்பது மா ஆகியது. கோன் என்பது கோ ஆகியது. தேன் என்பது தே ஆகியது. பேய் என்பது பே ஆகியது. இவையெல்லாம் காலவெள்ளத்தில் கரைந்து தேய்ந்தவை.

86) மொழியை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: மொழியை (சொல்லை) ஓரெழுத்து மொழி, ஈரெழுத்து மொழி, இரண்டுக்கும் மேற்பட்ட எழுத்துகள் உடைய மொழி என மூன்று வகையாக்குவர்.

87) ஓரெழுத்து மொழி என்பது நெட்டெழுத்துகள் ஏழே என்று கூறியவர்?

A) தொல்காப்பியர்

B) அகத்தியர்

C) நன்னூலார்

D) பவணந்தி முனிவர்

விளக்கம்: ஓர் எழுத்து மொழி எவை எனின், நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி என்பார் தொல்காப்பியர்.

88) நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி – இதில் குறிப்பிடப்படும் நெட்டெழுத்துகள் எவை?

A) உயிர் நெடில் எழுத்து

B) உயிர்மெய் நெடில் எழுத்து

C) மெய் எழுத்து

D) A மற்றும் B

விளக்கம்: நெட்டெழுத்துகள் ஏழே ஓரெழுத்து ஒருமொழி என்பார் தொல்காப்பியர். இதில் குறிப்பிடப்படும் ஏழு நெட்டெழுத்துகள் என்பது உயிர் நெடில் எழுத்து என்றோ உயிர்மெய் நெட்டெழுத்து என்றோ கூறாமல் நெட்டெழுத்து என்று மட்டும் கூறினார்.

89) உயிர் மெய் நெட்டெழுத்துக்கள் எத்தனை?

A) 216

B) 126

C) 247

D) 18

விளக்கம்: தமிழுள்ள முதல் எழுத்துகள் 30. இதில் மெய்யெழுத்துக்கள் 18. உயிர் எழுத்துகள் 12. உயிர்எழுத்துகள் 12-ல் 7 மட்டுமே நெடில் எழுத்துகள். இந்த 7 எழுத்துகளை உயிர்நெடில் என்கிறோம். உயிர் நெடில் 7-ம் மெய்யெழுத்து 18 உடன் சேரும் போது உயிர்மெய் நெட்டெழுத்து கிடைக்கிறது. ஆகவே 18 x 7 =126.

90) கூற்றுகளை ஆராய்க.

1. தமிழ் மொழியிலுள்ள எல்லா எழுத்துகளும் எல்லா நிலைகளிலும் வாரா.

2. சில எழுத்துக்கள் அரிச்சுவடியில் இருப்பினும் அவை மொழிநிலையில் இடம்பெறா.

3. ஆனால் நெட்டெழுத்துகளில் சொல் என்னும் நிலையைப் பெறாதவை இல்லை.

A) 1, 3 சரி

B) 1, 2 சரி

C) 1 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. தமிழ் மொழியிலுள்ள எல்லா எழுத்துகளும் எல்லா நிலைகளிலும் வாரா.

2. சில எழுத்துக்கள் அரிச்சுவடியில் இருப்பினும் அவை மொழிநிலையில் இடம்பெறா.

3. ஆனால் நெட்டெழுத்துகளில் சொல் என்னும் நிலையைப் பெறாதவையும் உண்டு.

91) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க (ஓரெழுத்து ஒருமொழி பற்றியதில்)

A) உயிர் வரிசையில் ஏழு எழுத்துக்கள்

B) ம வரிசையில் ஆறு எழுத்துக்கள்

C) த, ப, ந என்னும் வரிசையில் ஐந்து ஐந்து எழுத்துக்கள்

D) க, ச, வ என்னும் வரிசைகளில் நான்கு நான்கு எழுத்துகள்

விளக்கம்: ஓரெழுத்து ஒருமொழியில் உள்ள மொத்த எழுத்துகள் – 42 ஆகும். இதில்

1. உயிர் வரிசையில் ஆறு எழுத்துக்கள்

2. ம வரிசையில் ஆறு எழுத்துக்கள்

3. த, ப, ந என்னும் வரிசையில் ஐந்து ஐந்து எழுத்துக்கள்

4. க, ச, வ என்னும் வரிசைகளில் நான்கு நான்கு எழுத்துகள்

5. ய வரிசையில் ஒரு எழுத்து

6. நெ, து என்னும் இரு எழுத்துகள்

92) மாநிலம் என்ற சொல்லின் பொருள்?

A) மாங்காய் விளையும் நிலம்

B) மாமரம் இருக்கும் நிலம்

C) பெருநிலம்

D) விளைநிலம்

விளக்கம்: மா என்னும் ஓரெழுத்து ஒருமொழியில் பிறந்தது மாநிலம் என்ற சொல். பல குறு நிலங்களை உள்ளடக்கிய பெருநிலத்தை மாநிலம் என்கிறோம்.

93) மாஞாலம் – இச்சொல்சொலிலுள்ள ஞாலம் என்பதன் பொருள்?

A) நாடு

B) கண்டம்

C) உலகம்

D) கடல்

விளக்கம்: மா என்பது ஓரெழுத்து ஒருமொழியில் ஒன்று. மா என்றால் பெரிய என்று பொருள். ஞாலம் என்றால் உலகம் என்று பொருள். மாஞலம் என்றால் உலகப் பெரும் பரப்பையும் இயக்கத்தையும் சுட்டப் பயன்படுத்தப்படுகிறது.

94) மா என்ற ஓரெழுத்து ஓரு மொழிக்கு பொருத்தமானது?

A) பறவை

B) விலங்கு

C) மனிதன்

D) உலகம்

விளக்கம்: மா என்ற ஓரெழுத்து ஒரு மொழி விலங்கை குறிக்கிறது. அரிமா, பரிமா, நரிமா, வரிமா, கரிமா என்றெல்லாம் வந்து விலங்கினப் பெயராகி நின்கின்றது.

95) ஓயாது ஒலி செய்யும் ஒலிக் குறிப்பைக் காட்டி நிற்கும் ஓரெழுத்து ஒரு மொழி?

A) மா

B) வீ

C) ஏ

D) ஈ

விளக்கம்: ஈ என்னும் பொதுப்பெயர் ஓயாது ஒலி செய்யும் ஒலிக்குறிப்பைக் காட்டி நிற்கிறது. மாட்டு ஈ, தேன் ஈ எனப் பகுத்து வழங்கும் வழக்கம் உள்ளது. ஈ என்பது ஈக என்னும் பொருளில் வழங்குதல் வெளிப்படை. ஈ என்று பல்லைக் காட்டதே என்று அறிவுரை கூறுவதும் உண்டு.

96) குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே – என்று கூறியவர்?

A) தொல்காப்பியர்

B) அகத்தியர்

C) நன்னூலார்

D) பவணந்தி முனிவர்

விளக்கம்: குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே என்று ஓரெழுத்து ஒருமொழி பற்றி தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

97) கூற்றுகளை ஆராய்க.

1. நன்னூலார் கூறிய சில ஒரெழுத்து ஒரு மொழிகள் இன்று வழக்கில் இல்லை

2. வழக்கிலுள்ள எல்லா ஓரெழுத்து ஒரு மொழிகளும் நன்னூலார் கூறியது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

விளக்கம்: 1. நன்னூலார் கூறிய சில ஒரெழுத்து ஒரு மொழிகள் இன்று வழக்கில் இல்லை

2. வழக்கிலுள்ள சில ஓரெழுத்து ஒரு மொழிகள் நன்னூலார் கூறிய பட்டியலில் இல்லாதவை.

98) தனித்தமிழ் இயக்கம் என்ற நூலை எழுதியவர்?

A) தேவநேய பாவாணர்

B) இரா. இளங்குமரனார்

C) மறைமலையடிகள்

D) பரிதிமாற்கலைஞர்

விளக்கம்: செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் இரா. இளங்குமரனார் தனித்தமிழ் இயக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

99) ஓரெழுத்து ஒரு மொழியில் குறில் எழுத்துக்களை இடம்பெற செய்தவர்?

A) தொல்காப்பியர்

B) அகத்தியர்

C) நன்னூலார்

D) பவணந்தி முனிவர்

விளக்கம்: தொல்காப்பியருக்கு நெடிதுநாள் பின்னே தோன்றிய நன்னூலார் ஓரெழுத்து ஒரு மொழியில் குறில் எழுத்துகளையும் இணைத்தார்.

100) ஓரெழுத்து ஒரு மொழியில் இடம்பெற்றுள்ள குறில் எழுத்துகளின் எண்ணிக்கை?

A) 1

B) 2

C) 3

D) 4

விளக்கம்: ஓரெழுத்து ஒரு மொழி மொத்தம் 42. இதில் நொ, து என்னும் இரண்டு குறில் எழுத்துகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

101) தேவநேயம் என்ற நூலை தொகுத்தவர் யார்?

A) தேவநேய பாவாணர்

B) இரா. இளங்குமரனார்

C) மறைமலையடிகள்

D) பரிதிமாற்கலைஞர்

விளக்கம்: செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் இரா. இளங்குமரனார் தேவநேயம் என்ற நூலைத் தொகுத்துள்ளார். இவர் நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.

102) ஆய்த எழுத்தின் பிறப்பிடம்?

A) கழுத்து

B) மார்பு

C) மூக்கு

D) தலை

விளக்கம்: ஆய்த எழுத்து – தலை

வல்லின மெய் எழுத்துக்கள்(6) – மூக்கு

மெல்லின மெய் எழுத்துக்கள்(6) – மார்பு

இடையின மெய் எழுத்துக்கள்(6) – கழுத்து

103) இடப்பிறப்பில் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்.

A) மார்பு

B) தலை

C) கழுத்து

D) நாக்கு

விளக்கம்: எழுத்துக்களின் பிறப்பை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. இடப்பிறப்பு 2. முயற்சிபிறப்பு

இதில் இடப்பிறப்பு என்பது மார்பு, தலை, மூக்கு, கழுத்து ஆகும்.

இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகியவை முயற்சிப் பிறப்பு ஆகும்.

104) வாய்த்திறக்கும் முயற்சியுடன் நாக்கின் அடி ஓரமானது மேல்வாய்ப்பல்லைப் பொருந்தும் முயற்சியால் சில உயிர் எழுத்துக்கள் பிறக்கின்றன. இந்த கூற்றுக்கு பொருந்தாத எழுத்து எது?

A) இ, ஈ

B) எ, ஏ

C) ஐ

D) ஓள

விளக்கம்: இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்தும் வாய்திறக்கும் முயற்சியுடன் நாக்கின் அடி ஓரமானது மேல்வாய்ப் பல்லைப் பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன. ஆனால் ஒள என்னும் எழுத்து வாய்திறக்கும் முயற்சியுடன் இதழ்களைக் குவிப்பதால் பிறக்கின்றன.

105) இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்கள்_____________?

A) இ, ஈ

B) உ, ஊ

C) எ, ஏ

D) அ, ஆ

விளக்கம்: உ, ஊ என்னும் எழுத்துகள் உதடுகள் குவிப்பதால் பிறக்கின்றன.

106) ஓரெழுத்து ஒரு மொழியில் இடம்பெற்றுள்ள நெடில் எழுத்துக்களின் எண்ணிக்கை?

A) 2

B) 42

C) 30

D) 40

விளக்கம்: ஓரெழுத்து ஒருமொழி மொத்தம் 42. இதில் நொ, து என்னும் இரு எழுத்துக்களை தவிர மீதி உள்ள 40 எழுத்துக்களும் நெடில் எழுத்துகள் ஆகும்.

107) பழங்கால கல்வெட்டுகளில் க என்னும் எழுத்தில் நெடில் வடிவத்தை எவ்வாறு எழுதலாம்?

A) க:

B) கா

C) க.

D) க. .

விளக்கம்: அகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துக்களை அடுத்துப் பக்கத்தில் புள்ளி இடப்பட்டால் அவை நெடிலாகக் கருதப்பட்டன. எனவே க என்னும் எழுத்தின் நெடில் வடிவம் க.

108) எகர வரிசை உயிர்மெயக் குறில் எழுத்துக்களை அடுத்து இரு புள்ளிகள் இடப்பட்டால் அவை____________எழுத்துகளாக கருதப்பட்டன.

A) ஐகார

B) ஓளகார

C) மகர

D) ஆய்த

விளக்கம்: எகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துக்களை அடுத்து இரு புள்ளிகள் இடப்பட்டால் அவை ஒளகார வரிசை எழுத்துக்களாகக் கருதப்பட்டன.

109) மேல் வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்து?

A) ப்

B) வ்

C) ற், ன்

D) ள்

விளக்கம்: ற், ன் – மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றன.

மேல்வாய்ப் பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் தோன்றும் எழுத்து – வ்

ள் – மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கிறது.

ப் – மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கின்றன.

110) ஆய்த எழுத்தின் முயற்சிப் பிறப்பு?

A) தலை

B) வாயை திறந்து ஒலித்தல்

C) உதடுகளை குவித்தல்

D) நாவினது ஓரங்கள் மேல் அண்ணத்தை தடித்து தடவுதல்

விளக்கம்: ஆய்த எழுத்தின் இடப்பிறப்பு – தலை. ஆய்த எழுத்தின் முயற்சிப் பிறப்பு – வாயைத்திறந்து ஒலித்தல் ஆகும்.

111) ஆந்தையின் ஒலி மரபை தேர்வு செய்க.

A) கரையும்

B) கூவும்

C) அலறும்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: ஆந்தை அலறும்

காகம் கரையும்

சேவல் கூவும்

112) பாவாணர் நூலகத்தை அமைத்தவர்?

A) தேவநேய பாவாணர்

B) இரா. இளங்குமரனார்

C) மறைமலையடிகள்

D) பரிதிமாற்கலைஞர்

விளக்கம்: செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் இரா. இளங்குமரனார் திருச்சிக்கு அருகில் உள்ள அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும் அமைத்துள்ளார்.

113) பொருத்துக

அ. க், ங் – 1. நாவின் இடை, அண்ணத்தின் இடை

ஆ. ச், ஞ் – 2. நாவின் நுனி, மேல்வாயப்பல்லின் அடி

இ. ட், ண் – 3. நாவின் முதல், அண்ணத்தின் அடி

ஈ. த், ந் – 4. நாவின் நுனி, அண்ணத்தின் நுனி

A) 3, 1, 4, 2

B) 3, 2, 1, 4

C) 3, 1, 2, 4

D) 1, 2, 3, 4

விளக்கம்: க், ங் – நாவின் முதல், அண்ணத்தின் அடி

ச், ஞ் – நாவின் இடை, அண்ணத்தின் இடை

ட், ண் – நாவின் நுனி, அண்ணத்தின் நுனி

த், ந் – நாவின் நுனி, மேல்வாயப்பல்லின் அடி

114) தமிழிசை இயக்கம் என்ற நூலை எழுதியவர்?

A) தேவநேய பாவாணர்

B) இரா. இளங்குமரனார்

C) மறைமலையடிகள்

D) பரிதிமாற்கலைஞர்

விளக்கம்: செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் இரா. இளங்குமரனார் தமிழிசை இயக்கம் என்ற நூலை எழுதியுள்ளார். இவர் நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.

115) வாயைத் திறந்தாலே பிறக்கும் எழுத்துக்கள்?

A) உ, ஊ

B) எ, ஏ

C) ஐ, ஒள

D) அ, ஆ

விளக்கம்: அ, ஆ என்னும் இரண்டு உயிரெழுத்துக்களும் வாயைத் திறந்து ஒலித்தாலே பிறக்கின்றன. ஆனால் பிற எழுத்துகள் நா, அண்ணம், உதடு போன்ற உறுப்புகளில் செயல்பாட்டால் மட்டுமே பிறக்கும்.

116) எழுத்துகளின் பிறப்பின் வகைகள் எத்தனை?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: எழுத்துகளின் பிறப்பை இரண்டு வகைப்படுத்தலாம். அவை இடப்பிறப்பு, முயற்சி பிறப்பு ஆகும்.

117) பொருத்துக.

அ. வல்லின மெய் எழுத்துக்கள்(6) – 1. மூக்கு

ஆ. மெல்லின மெய் எழுத்துக்கள்(6) – 2. மார்பு

இ. இடையின மெய் எழுத்துக்கள்(6) – 3. கழுத்து

A) 1, 2, 3

B) 2, 3, 1

C) 2, 1, 3

D) 3, 1, 2

விளக்கம்: வல்லின மெய் எழுத்துக்கள்(6) – மார்பு

மெல்லின மெய் எழுத்துக்கள்(6) – மூக்கு

இடையின மெய் எழுத்துக்கள்(6) – கழுத்து

118) இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்கள்__________?

A) இ, ஈ

B) உ, ஊ

C) எ, ஏ

D) அ, ஆ

விளக்கம்: இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்தும் வாய்திறக்கும் முயற்சியுடன் நாக்கின் அடி ஓரமானது மேல்வாய்ப் பல்லைப் பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன. ஆனால் உ, ஊ என்னும் எழுத்து வாய்திறக்கும் முயற்சியுடன் இதழ்களைக் குவிப்பதால் பிறக்கின்றன.

119) நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துக்கள்?

A) க், ங்

B) ச், ஞ்

C) ட், ண்

D) ப், ம்

விளக்கம்: க், ங் ஆகிய இரு மெய்களும் நாவின் முதற்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.

ச், ஞ் – ஆகிய இருமெய்களும் நாவின் இடைப்பகுதி, நடு அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.

ட், ண் – ஆகிய இருமெய்களும் நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கின்றன

ப், ம் – ஆகிய இருமெய்களும் மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கின்றன.

120) கீழ் இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து?

A) ம்

B) ப்

C) ய்

D) வ்

விளக்கம்: வ் என்னும் எழுத்து மேல்வாய்ப்பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கிறது

121) பழங்காலத்தில் ஐகார எழுத்தைக் குறிப்பிடும் முறை?

A) அதன் முன் ஒரு புள்ளி வைப்பர்

B) அதன் பின் இரு புள்ளி வைப்பர்

C) அதன் முன் இரு புள்ளி வைப்பர்

D) அதன் பின் ஒரு புள்ளி வைப்பர்

விளக்கம்: ஐகார எழுத்துக்களைக் குறிப்பிட எழுத்துக்களின்முன் இரட்டைப் புள்ளி இட்டனர்.

உதாரணமாக கை – க

122) கூற்றுகளை ஆராய்க

1. செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் – இரா. இளங்குமரனார்

2. இவர் திருச்சிக்கு அருகில் அல்லூரில் விவேகானந்தர் தவச்சாலையும், திருவள்ளுவர் நூலகமும் அமைத்துள்ளார்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

விளக்கம்: செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் – இரா. இளங்குமரனார். இவர் திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவணர் நூலகமும் அமைத்துள்ளார்.

123) இரா. இளங்குமரனார் எழுதிய நூல்களில் பொருந்தாது எது?

A) இலக்கண வரலாறு

B) தமிழிசை இயக்கம்

C) தனித்தமிழ் இயக்கம்

D) தேவநேயம்

விளக்கம்: செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் இரா. இளங்குமரனார் இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் உள்ளி;ட்ட பல நூல்களை எழுதியுள்ளார். தேவநேயம் என்னும் நூல் அவர் தொகுத்த நூலாகும்.

124) உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் ________ஐ இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

A) கழுத்து

B) மார்பு

C) மூக்கு

D) தலை

விளக்கம்: உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. தலையை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்து ஆய்தம். மார்பை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்து வல்லின எழுத்து. மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்து மெல்லினம்.

125) முயற்சிப் பிறப்புக்கு பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.

A) மார்பு

B) இதழ்

C) நாக்கு

D) பல்

விளக்கம்: எழுத்துக்களின் பிறப்பினை இடப்பிறப்பு, முயற்சி பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

இடப்பிறப்பு – மார்பு, தலை, கழுத்து, மூக்கு

முயற்சி பிறப்பு – இதழ், நாக்கு, பல், மேல்வாய்

126) மேல்வாயைப்பல்லைப் பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கும் எழுத்து?

A) ப்

B) வ்

C) ற், ன்

D) ள்

விளக்கம்: மேல்வாய்ப் பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் தோன்றும் எழுத்து – வ்

ள் – மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கிறது.

ற், ன் – மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றன.

ப் – மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கின்றன.

127) கூவும் என்ற ஒலி மரபுடன் தொடர்புடைய பறவை எது?

A) சேவல்

B) குயில்

C) காகம்

D) A மற்றும் B

விளக்கம்: சேவல் – கூவும்

குயில் – கூவும்

காகம் – கரையும்

128) பொருத்துக.

அ. ஒலிப்பிறப்பியல் – 1. Consonant

ஆ. மெய்யொலி – 2. Articulatory Phonetics

இ. மூக்கொலி – 3. Epigraph

ஈ. கல்வெட்டு – 4. Nasal consonant sound

A) 2, 3, 4, 1

B) 2, 1, 4, 3

C) 1, 4, 2, 3

D) 2, 4, 1, 3

விளக்கம்: ஒலிப்பிறப்பியல் – 1. Articulartory Phonetics

மெய்யொலி – 2. Consonant

மூக்கொலி – 3. Nasal consonant sound

கல்வெட்டு – 4. Epigraph

129) எந்த நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துக்கள் காணப்படுகின்றன?

A) 10

B) 12

C ) 11

D) 14

விளக்கம்: முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக் காலமான 11-ம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துக்கள் காணப்படுகின்றன.

130) மகர எழுத்தைக் குறிப்பிட__________எழுத்தின் உள்ளே புள்ளி இட்டனர்?

A) தகர(த)

B) பகர(ப)

C) நகர(ந)

D) டகர(ட)

விளக்கம்: பழங்காலத்தில் மகர எழுத்தைக் குறிப்பிட பகர எழுத்தின் உள்ளே புள்ளி இட்டனர்.

131) ___________ குனுகும்

A) காகம்

B) ஆந்தை

C) குயில்

D) புறா

விளக்கம்: புறா – குனுகும்

காகம் – கரையும்

ஆந்தை – அலறும்

குயில் – கூவும்

132) பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க

A) மக்கள் கூட்டம்

B) ஆநிரை

C) ஆட்டு மந்தை

D) மக்கள் நிரை

விளக்கம்: மக்கள் கூட்டம் என்பதே சரியானதாகும்.

ஆ(பசு) – நிரை

ஆட்டு – மந்தை

133) பொருத்துக

அ. கோழி – 1. பேசும்

ஆ. மயில் – 2. குழறும்

இ. கிளி – 3. அகவும்

ஈ. கூகை – 4. கொக்கரிக்கும்

A) 4, 3, 1, 2

B) 4, 1, 2, 3

C) 1, 4, 2, 3

D) 3, 2, 4, 1

விளக்கம்: கோழி – கொக்கரிக்கும்

மயில் – அகவும்

கிளி – பேசும்

கூகை – குழறும்

134) சோறு__________, முறுக்கு__________

A) தின், உண்

B) உண், தின்

C) பருகு, தின்

D) பருகு, உண்

விளக்கம்: சோறு – உண்

முறுக்கு – தின்

பால் – பருகு

135) பூ__________

A) பறி

B) எடு

C) கொய்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: பூ கொய் என்பது சரியானது.

136) கூற்றுகளை ஆராய்க.

1. அகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துக்களை அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டால் அவை நெடில்.

2. ஐகார எழுத்துக்களைக் குறிப்பிட எழுத்துக்களின் முன் ஒற்றைப் புள்ளி இட்டனர்.

3. எகர வரிசை உயிர்மெயக் குறில் எழுத்துக்களை அடுத்து ஒரு புள்ளி இடப்பட்டால் அவை ஒளகார வரிசை எழுத்துக்களாகக் கருதப்பட்டன.

4. மகர எழுத்துக்களைக் குறிப்பிட பகர எழுத்தை அடுத்து புள்ளி இட்டனர்

5. குற்றிலுகர, குற்றியலிகர எழுத்துக்களைக் குறிக்க அவற்றின் மேலேயும் புள்ளி இட்டனர்

A) 1, 2, 3, 5 சரி

B) 1, 2, 4, 5 சரி

C) 1, 4, 5 சரி

D) 1 மற்றும் 5 சரி

விளக்கம்: 1. அகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துக்களை அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டால் அவை நெடில்.

2. ஐகார எழுத்துக்களைக் குறிப்பிட எழுத்துக்களின் முன் இரட்டைப் புள்ளி இட்டனர்.

3. எகர வரிசை உயிர்மெயக் குறில் எழுத்துக்களை அடுத்து இரு புள்ளி இடப்பட்டால் அவை ஒளகார வரிசை எழுத்துக்களாகக் கருதப்பட்டன.

4. மகர எழுத்துக்களைக் குறிப்பிட பகர எழுத்தின் உள்ளே புள்ளி இட்டனர்

5. குற்றிலுகர, குற்றியலிகர எழுத்துக்களைக் குறிக்க அவற்றின் மேலேயும் புள்ளி இட்டனர்

137) பொருத்துக

அ. கூடை – 1. பறி

ஆ. பூ – 2. வனை

இ. இலை – 3. கொய்

ஈ. பானை – 4. முடை

A) 3, 4, 2, 1

B) 3, 4, 1, 2

C) 4, 3, 2, 1

D) 4, 3, 1, 2

விளக்கம்: கூடை – முடை

பூ – கொய்

இலை – பறி

பானை – வனை

138) சுவர்___________?

A) கட்டு

B) எழுப்பு

C) வரை

D) வனை

விளக்கம்: சுவர் எழுப்பு என்பதே சரியானதாகும்.

பானை வனை

139 Lexicography- என்பதன் தமிழ்ச்சொல்?

A) அகராதியியல்

B) சொல் அகராதி

C) சித்திர எழுத்து

D) உயிரொலி

விளக்கம்:அகராதியியல் – Lexicography

சித்திர எழுத்து – Pictograph

உயிரொலி – Vowel

140) கூற்றுகளை ஆராய்க.

1. ஓலைச்சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துக்களை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.

2. ஓலைச் சுவடிகளில் நிறுத்தற் குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

விளக்கம்: 1. ஓலைச்சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துக்களை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.

2. ஓலைச் சுவடிகளில் நிறுத்தற் குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது.

141) தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள் என்னும் நூலை எழுதியவர்?

A) மறைமலை அடிகள்

B) தேவநேயப் பாவாணர்

C) இரா. இளங்குமரனார்

D) பாரதியார்

விளக்கம்: தமிழின் தனிப்பெருஞ்சிறப்புகள் என்னும் நூலை எழுதியவர் இரா. இளங்குமரனார் ஆவார். இவரின் பிற நூல்கள் – இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம். இவர் தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்துள்ளார்.

142) தொடக்க கால எழுத்தின் வடிவம்?

A) ஒலி

B) சைகை

C) ஓவியம்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!