Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

9th & 10th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

9th & 10th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 9th & 10th August 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

9th & 10th August 2022 Tnpsc Current Affairs in Tamil

1. `4.3 இலட்சம் கோடி மதிப்புள்ள 5G அலைக்கற்றைகளின் ____Ghz-க்கான இந்தியாவின் மிகப்பெரிய அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் தொடங்கியது.

அ. 1.2 ஜிகாஹெர்ட்ஸ்

ஆ. 12 ஜிகாஹெர்ட்ஸ்

இ. 7.2 ஜிகாஹெர்ட்ஸ்

ஈ. 72 ஜிகாஹெர்ட்ஸ் 

  • `4.3 இலட்சம் கோடி மதிப்பிலான 72 ஜிகாஹெர்ட்ஸ் 5ஜி அலைக்கற்றைகளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் தொடங்கியது. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் கௌதம் அதானியின் அதானி நிறுவனத்தின் ஒரு பிரிவு 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்கின்றன. பல்வேறு தாழ் (600 மெகா ஹெர்ட்ஸ், 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ்), இடை (3300 மெகா ஹெர்ட்ஸ்) மற்றும் உயர் (26 ஜிகாஹெர்ட்ஸ்) அலைவரிசைகளில் அலைக்கற்றை ஏலம் நடத்தப்படுகிறது.

2. உலகின் பரபரப்பான முதல் இருபது வானூர்தி நிலையங்களின் ACI பட்டியலில் 13ஆம் இடத்தில் உள்ள இந்திய வானூர்தி நிலையம் எது?

அ. இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம், புது தில்லி 

ஆ. சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்

இ. சத்ரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம், மும்பை

ஈ. கெம்பேகௌடா பன்னாட்டு வானூர்தி நிலையம், பெங்களூரு

  • ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் (ACI) உலகின் பரபரப்பான முதல் 20 விமான நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அவ்வானூர்தி நிலையம் அமெரிக்காவில் உள்ளது. பட்டியலின் முதல் ஏழு வானூர்தி நிலையங்களும் அமெரிக்காவில் அமைந்துள்ளதுதான். முதல் 20 வானூர்தி நிலையங்கள், 2021இல், உலகளாவிய போக்குவரத்தில் 19 சதவீதத்தினைக் கொண்டுள்ளன. புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் இந்தப் பட்டியலில் 13ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

3. இந்திய ராணுவத்திற்கு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விரைவாக எதிர்வினையாற்றும் போர் வாகனத்தை வழங்கிய நிறுவனம் எது?

அ. TATA அதிநவீன அமைப்பு 

ஆ. பாரத் மின்னணு நிறுவனம்

இ. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட்

ஈ. DRDO

  • TATA அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் ஆனது இந்திய இராணுவத்திற்கு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விரைவாக எதிர்வினையாற்றக் கூடிய போர் வாகனத்தை வழங்கியுள்ளது. இந்த ராணுவ வாகனங்கள் அனைத்து வானிலை மற்றும் அனைத்து நிலப்பரப்புகளிலும் தேசத்தின் போர்த்திறனை அதிகரிக்கும். மேலும் மேம்பட்ட பாதுகாப்பை இது வழங்கும். இவ்வாகனத்தின் அறிமுகம், இந்திய ராணுவத்தின் செயல்பாட்டுத் திறனை மென்மேலும் மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.

4. 2022 – உலக கல்லீரல் அழற்சி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Leaving No one Behind.

ஆ. Hepatitis can’t wait. 

இ. One dies every 30 seconds.

ஈ. Ramping up Healthcare.

  • உலக கல்லீரல் அழற்சி நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.28 அன்று கல்லீரல் அழற்சியின் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. “Hepatitis can’t wait – கல்லீரல் அழற்சி காத்திராது” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் உலக கல்லீரல் அழற்சி நாளுக்கானக் கருப்பொருள் ஆகும். கல்லீரல் அழற்சி தொடர்பான நோயால் ஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒருவர் இறக்கிறார்.
  • கல்லீரல் அழற்சி B தீநுண்மத்தை (HBV) கண்டுபிடித்து, அந்தத் தீநுண்மத்திற்கு நோய் கண்டறிதல் பரிசோதனை மற்றும் தடுப்பூசியை உருவாக்கிய நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் டாக்டர் பாரூச் பிளம்பெர்க்கின் பிறந்தநாள் என்பதால் ஜூலை.28ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது.

5. 2022 – உலக இளையோர் திறன்கள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Transforming Youth Skills for the Future 

ஆ. Reimagining Youth Skills Post Pandemic

இ. Learning to Learn for Life and Work

ஈ. Skills Development to Improve Youth Employment

  • 2014ஆம் ஆண்டு ஐநா பொதுச்சபையின் பேரறிவிப்பிற்குப் பிறகு ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.15ஆம் தேதி அன்று உலக இளையோர் திறன்கள் நாள் கொண்டாடப்படுகிறது. “Transforming Youth Skills for the Future” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் உலக இளையோர் திறன்கள் நாளுக்கானக் கருப்பொருளாகும். வேலைவாய்ப்பு, நல்ல வேலை மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றுக்கான திறன்களுடன் இளையோர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

6. ‘உலக இயற்கை பாதுகாப்பு நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.28 

ஆ. ஜனவரி.28

இ. அக்டோபர்.28

ஈ. மார்ச்.28

  • இயற்கை வளங்களின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.28ஆம் தேதியன்று உலக இயற்கை பாதுகாப்பு நாள் கொண்டாடப்படுகிறது. “Forests and Livelihoods: Sustaining People and Planet” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்ட உலக இயற்கை பாதுகாப்பு நாளுக்கானக் கருப்பொருளாகும். IUCN ஆனது மனித நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழலில் அவற்றின் தாக்கத்தைக் கண்காணித்து வருகிறது.

7. சதுப்புநில சுற்றுச்சூழலைக் காப்பதற்கான உலக நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.26 

ஆ. ஆகஸ்ட்.26

இ. செப்டம்பர்.26

ஈ. ஜனவரி.26

  • சதுப்புநில சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான உலக நாள் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.26ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. தனித்துவம் மிகுந்த சுற்றுச்சூழலமைப்பான சதுப்புநிலங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த உலக நாள், 2015ஆம் ஆண்டில் ஐநா கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO) பொது தீர்மானத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

8. இங்கிலாந்தின் லீசெஸ்டர் கிரிக்கெட் மைதானத்திற்கு எந்த இந்திய கிரிக்கெட் வீரரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது?

அ. கபில் தேவ்

ஆ. சுனில் கவாஸ்கர் 

இ. சச்சின் டெண்டுல்கர்

ஈ. மகேந்திர சிங் தோனி

  • இங்கிலாந்தின் லீசெஸ்டர் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் கேப்டனுமான சுனில் கவாஸ்கரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 10,000 ரன்களை எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் மற்றும் அதிக சதம் (34) அடித்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். 1983 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியிலும் அவர் இடம்பிடித்திருந்தார். ஐக்கிய அமெரிக்காவின் (USA) கென்டக்கி பகுதியில் சுனில் கவாஸ்கர் பெயரில் மற்றொரு மைதானம் அமைந்துள்ளது.

9. ‘ஹிம் டிரோன்-ஏ-தோன்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய இந்திய ஆயுதப்படை எது?

அ. இந்திய வான்படை

ஆ. இந்திய கடற்படை

இ. இந்திய இராணுவம் 

ஈ. இந்திய கடலோர காவல்படை

  • இந்திய டிரோன் கூட்டமைப்புடன் இணைந்து, ‘ஹிம் டிரோன்-ஏ-தோன்’ என்ற திட்டத்தை இந்திய இராணுவம் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம் தொழிற்துறை, கல்வியாளர்கள், மென்பொருள் உருவாக்குநர்கள் மற்றும் டிரோன் உற்பத்தியாளர்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களையும் ஒன்றிணைக்கிறது.
  • இந்தியாவின் டிரோன் சூழலமைப்புக்கான இந்திய இராணுவத்தின் இந்த ஆதரவு, ‘உலகளவில் கிடைக்கும் சிறந்தவற்றை’விட, ‘உள்நாட்டில் கிடைப்பது மேலானவை’ என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

10. ‘புது தில்லி பன்னாட்டு நடுவர் மையத்தின்’ புதிய பெயர் என்ன?

அ. பாரத் பன்னாட்டு நடுவர் மையம்

ஆ. இந்திய பன்னாட்டு நடுவர் மையம் 

இ. பிரதமர் நடுவர் மையம்

ஈ. ஆத்மநிர்பர் நடுவர் மையம்

  • நடுவணரசு, மக்களவையில், ‘புது தில்லி பன்னாட்டு நடுவர் மையம் (திருத்த) மசோதா, 2022’ஐ முன்வைத்தது. புது தில்லி பன்னாட்டு நடுவர் மையச் சட்டம், 2019ஐ திருத்த, சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு மசோதாவை முன்வைத்தார். இது நகர அளவிலான நோக்கத்திற்குப்பதிலாக, பரந்த நாடு அளவிலான நோக்கத்தை வழங்குவதற்காக, அந்நடுவர் மையத்தை, ‘இந்திய பன்னாட்டு நடுவர் மையம்’ என மறுபெயரிட எண்ணுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. கொந்தகை அகழாய்வில் 74 சூது பவள மணிகள் கண்டெடுப்பு

கொந்தகை அகழாய்வில் முதுமக்கள் தாழிக்குள் 74 சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகளில் எட்டாம் கட்ட அகழாய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் இதுவரை 57 முதுமக்கள் தாழிகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு தாழியினுள் அடர்சிவப்பு நிறமுடைய 74 சூது பவள மணிகள் உள்ளன. பழங்காலத்தில் இறந்தவர்களை தாழியுனுள் வைத்து புதைக்கும்போது, அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் வைத்து புதைப்பது வழக்கம். அந்தவகையில், தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள சூது பவள மணிகளும் வைக்கப்பட்டிருக்கலாம். இவை அனைத்தும் 3 செமீ நீளமுள்ள பவளமணிகள். இதனை இறந்தவர் மாலையாக அணிந்திருக்கலாம் என தொல்லியலாளர்கள் தெரிவித்தனர்.

2. செஸ் ஒலிம்பியாட் நிறைவு: 17 இந்தியர்களுக்கு பதக்கம்

மாமல்லபுரத்தில் நடந்த 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மொத்தம் 17 இந்தியர்கள் பதக்கம் வென்றுள்ளனர். இதில் 2 பேருக்கு தனிநபர் தங்கம், ஒரு வெள்ளி, தலா 4 வெண்கலம், அணிகள் சார்பில் 10 பேருக்கு வெண்கலம் என 17 பதக்கங்கள் அடங்கும்.

தமிழ்நாடு அரசு, சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE), அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (AICFI) சார்பில் `100 கோடி செலவில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரம் போர் பாயிண்ட் ஷெரட்டன் ஹோட்டலில் கடந்த ஜூலை 28ஆம் தேதி தொடங்கியது.

ஓபன் பிரிவில் 187, மகளிர் பிரிவில் 162 நாடுகளைச் சேர்ந்த ஈராயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 11 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை 11-ஆம் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்றன. ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான், ஆர்மீனியா, இந்திய பி அணிகள் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றன.

மகளிர் பிரிவில் உக்ரைன், ஜார்ஜியா, இந்திய ஏ அணிகள் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனர்.

இந்திய பி, ஏ அணிகளுக்கு வெண்கலம்:

இந்திய பி அணியில் அதிபன், குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹால் சரீன், ரௌனக் சத்வானி இடம்பெற்றிருந்தனர். இந்திய மகளிர் ஏ அணியில் ஹரிகா துரோணவல்லி, கொனேரு ஹம்பி, ஆர் வைஷாலி, பக்தி குல்கர்னி, தான்யா சச்தேவ் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் வெண்கலப்பதக்கங்கள் வழங்கப்பட்டன.

குகேஷ், நிஹால் சரீனுக்கு தங்கம்:

விளையாட்டு வீரர்களின் வெற்றி, ரேட்டிங் அடிப்படையில் வழங்கப்படும் தனிநபர் பதக்கங்களில் இந்திய இளம் வீரர்கள் டி குகேஷ், நிஹால் சரீன் ஆகியோர் தங்கம் வென்றனர். ஏ அணி வீரர் அர்ஜுன் எரிகைசி வெள்ளியும் பி அணி வீரர் பிரக்ஞானந்தா வெண்கலமும் வென்றனர். மகளிர் பிரிவில் தான்யா சச்தேவ், திவ்யா தேஷ்முக், ஆர் வைஷாலி வெண்கலம் வென்றனர்.

3. `25 கோடியில் ஒலிம்பிக் தங்கவேட்டை திட்டம்: முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வகையில் விளையாட்டு வீரர்களை உருவாக்க, `25 கோடியில் ஒலிம்பிக் தங்கவேட்டை திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.

ஒலிம்பிக் தங்கவேட்டை: தமிழ்நாட்டில் உலகத்தரம்வாய்ந்த விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் பதக்கங்கள் வெல்வோரை உருவாக்கும் பொருட்டு “ஒலிம்பிக் தங்கவேட்டை” என்ற திட்டம் `25 கோடியில் நடைமுறைப்படுத்த -ப்படவுள்ளது. இதன்படி, ஐம்பது விளையாட்டு வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டு, நான்கு ஆண்டுகளில் அவர்களின் திறன்களை மேம்படுத்த `60 கோடி செலவுசெய்யப்படும்.

இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டர் ஆரோனுக்கு கௌரவம்

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில், இந்தியாவின் முதல் செஸ் சர்வதேச மாஸ்டர் மானுவல் ஆரோன் கௌரவிக்கப்பட்டார்.

4. 44ஆவது செஸ் ஒலிம்பியாட் நிறைவு: ஹங்கேரியிடம் FIDE கொடி ஒப்படைப்பு

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கொள்கை விளக்கப்பாடலுடன் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் விழா நிறைவுபெற்றது. அதனைத் தொடர்ந்து செஸ் போட்டியின் அடையாளமாக கொண்டுவரப்பட்ட தீப்பந்தம் அணைக்கப்பட்டது. முன்னதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கொடி ஹங்கேரி நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. 45ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரியில் நடைபெறவுள்ளது.

5. திறமையான தலைமைத்துவ திட்டம்

2022 ஜுலையில், இந்திய வான்படை, எகிப்திய வான்படையுடன் இணைந்து, கைரோ மேற்கு வான்படை தளத்தில் உள்ள ஆயுதப்பள்ளியில் ஒருமாதகால கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டன. இருநாட்டுப் படைகளின் போர் வானூர்திகளு -க்கு இடையே, முதன்முறையாக இக்கூட்டுப்பயிற்சி நடத்தப்பட்டது. இந்திய வான்படையின், போர்தந்திர உத்திகள் மற்றும் வான்படை போர்தந்திர மேம்பாட்டு நிறுவனத்தின் மூன்று சுகோய்-30 ரக MKI வானூர்திகள் இதில் இடம்பெற்றன. மேலும், போர் வானூர்திகளின் பயிற்றுவிப்பாளர் அறுவர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

9th & 10th August 2022 Tnpsc Current Affairs in English

1. India’s biggest spectrum auction for ……………….. of 5G airwaves worth ₹4.3 lakh crore has commenced recently.

A. 1.2 Gigahertz

B. 12 Gigahertz

C. 7.2 Gigahertz

D. 72 Gigahertz 

  • India’s biggest spectrum auction for 72 Gigahertz of 5G airwaves worth ₹4.3 lakh crore has commenced recently. Reliance Jio, Bharti Airtel, Vodafone Idea and a unit of Gautam Adani’s Adani Enterprises are bidding for 5G spectrum.
  • The auction is held for spectrum in various low (600 Mhz, 700 MHz, 800 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz, 2300 MHz), mid (3300 MHz) and high (26 GHz) frequency bands.

2. Which Indian airport was ranked 13th in the ACI List of top 20 busiest airports in the world?

A. Indira Gandhi International Airport, New Delhi 

B. Chennai International Airport

C. Chhatrapati Shivaji International Airport, Mumbai

D. Kempegowda International Airport, Bengaluru

  • Airports Council International (ACI) has released the list of top 20 busiest airports in the world. The top seven ranks are held by US airports, with Hartsfield–Jackson Atlanta International Airport leading the list. The top 20 airports accounted for 19% of global traffic in 2021. The Indira Gandhi International Airport in New Delhi was ranked 13th on the list.

3. Which company delivered the indigenously developed Quick Reaction Fighting Vehicle to the Indian Army?

A. TATA Advanced System 

B. Bharat Electronics Ltd

C. Hindustan Aeronautics Ltd

D. DRDO

  • Tata Advanced Systems successfully delivered the indigenously developed Quick Reaction Fighting Vehicle to the Indian Army. These protected vehicles will boost the combat potential of the protector to the Nation in all–weather and all–terrain conditions and provide protection. It is further said that the induction of this vehicle will enhance the operational capabilities of the Indian Army.

4. What is the theme of the ‘World Hepatitis Day – 2022?

A. Leaving No one Behind.

B. Hepatitis can’t wait. 

C. One dies every 30 seconds.

D. Ramping up Healthcare.

  • The World Hepatitis Day (WHD) takes places every year on 28 July to raise awareness of the global burden of Hepatitis. ‘Hepatitis can’t wait’ is the new theme of World Hepatitis Day 2022. One person dies every 30 seconds from a hepatitis related illness. 28 July was chosen because it is the birthday of Nobel–prize winning scientist Dr Baruch Blumberg, who discovered hepatitis B virus (HBV) and developed a diagnostic test and vaccine for the virus.

5. What is the theme of ‘World Youth Skills Day – 2022’?

A. Transforming Youth Skills for the Future 

B. Reimagining Youth Skills Post Pandemic

C. Learning to Learn for Life and Work

D. Skills Development to Improve Youth Employment

  • World Youth Skills Day 2022 is celebrated every year on July 15 after the United Nations General Assembly’s (UNGA) declaration in 2014. The theme for 2022 is ‘Transforming youth skills for the future’. The day is celebrated to mark the importance of equipping young people with skills for employment, decent work and entrepreneurship.

6. When is the ‘World Nature Conservation Day’ celebrated?

A. July.28 

B. January.28

C. October.28

D. March.28

  • Every year, World Nature Conservation Day is celebrated on 28 July to create awareness among people about the importance of natural resources. The theme for this year’s World Conservation Day 2022 is ‘Forests and Livelihoods: Sustaining People and Planet’. IUCN has been monitoring human activities and their impact on the environment.

7. When is the ‘International Day for the Conservation of the Mangrove Ecosystem’ observed?

A. July.26 

B. August.26

C. September.26

D. January.25

  • The International Day for the Conservation of the Mangrove Ecosystem is celebrated every year on 26 July. It aims to raise awareness of the importance of mangrove ecosystems as a unique, special and vulnerable ecosystem. This International Day was adopted by the General Conference of the UN Educational, Scientific and Cultural Organization (UNESCO) in 2015.

8. England’s Leicester Cricket Ground has been named after which Indian cricketer?

A. Kapil Dev

B. Sunil Gavaskar 

C. Sachin Tendulkar

D. Mahendra Singh Dhoni

  • England’s the Leicester Cricket Ground has been named after Indian cricketer and former Captain, Sunil Gavaskar. He was the first cricketer to score 10,000 runs and also held the record for most number (34) of centuries once. He was also part of the Indian team that won the 1983 World Cup. There is another ground named after Sunil Gavaskar in the Kentucky area of the United States of America (USA).

9. Which Indian Armed Force launched the ‘Him Drone–a–thon’ programme?

A. Indian Air Force

B. Indian Navy

C. Indian Army 

D. Indian Coast Guard

  • The Indian Army has launched the ‘Him Drone–a–thon’ programme in association with the Drone Federation of India. The programme is connecting all stake holders including industry, academia, software developers and drone product manufacturers. The Indian Army’s support to India’s drone ecosystem is based on the principle of ‘good available indigenously’ is better than the ‘best available globally’.

10. What is the new name of the ‘New Delhi International Arbitration Centre’?

A. Bharat International Arbitration Centre

B. India International Arbitration Centre 

C. Pradhan Mantri Arbitration Centre

D. Atmanirbhar Arbitration Centre

  • The Central government moved the ‘The New Delhi International Arbitration Centre (Amendment) Bill, 2022’ in the Lok Sabha. Law Minister Kiren Rijuu moved the Bill to amend the New Delhi International Arbitration Centre Act, 2019. It seeks to rename the centre to ‘India International Arbitration Centre’, to give it a wider country–level scope instead of a city–level scope.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!