Tnpsc

9th & 10th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

9th & 10th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 9th & 10th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

9th & 10th January 2021 Tnpsc Current Affairs in Tamil

1. ‘இந்தியாவில் நீண்ட முதுமை குறித்த ஆய்வறிக்கை’யை வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?

அ) புவி அறிவியல் அமைச்சகம்

ஆ) சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

இ) வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

ஈ) MSME அமைச்சகம்

  • இந்தியாவில் நீண்ட முதுமை பற்றிய ஆய்வறிக்கை (LASI), அலை-1’ஐ மத்திய சுகாதாரம் & குடும்பநல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்டார். மக்கள் முதுமையடைவதால் நாட்டில் ஏற்படும் சுகாதார, பொருளாதார, சமூக மாற்றங்கள், விளைவுகள் குறித்த முழு அளவிலான, அறிவியல் பூர்வமான தேசிய ஆய்வே LASI ஆகும். முதியோர்களுக்கான தேசிய மற்றும் மாநில அளவிலான கொள்கைகளை வகுக்க இவ்வறிக்கை உதவும்.

2. இந்தியாவில் மிகவும் அருகிவரும் உயிரினங்களுக்கான மீட்பு திட்டத்தின்கீழ், எத்தனை வனவுயிரினங்கள் உள்ளன?

அ) 12

ஆ) 16

இ) 22

ஈ) 35

  • தேசிய வனவுயிரி வாரியத்தின் நிலைக்குழுவானது அண்மையில் நாட்டில் மனித-வனவுயிரி மோதலை நிர்வகிப்பதற்கான ஆலோசனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தின் சில பகுதிகளில் காணப்படும், ‘கராகல்’ என்ற காட்டுப்பூனையை மிகவும் அருகிவரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கவும் அக்குழு ஒப்புதல் அளித்தது.
  • தற்போது, மிகவும் அருகிவரும் உயிரினங்களுக்கான மீட்பு திட்டத்தின்கீழ் 22 வனவுயிரினங்கள் உள்ளன.

3. அண்மைச் செய்திகளின் இடம்பெற்ற, அங்கமாலி-அழுதா சபரி இரயில் திட்டமானது எந்த மாநிலத்தில் அமையவுள்ளது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளம்

இ) கர்நாடகா

ஈ) ஆந்திர பிரதேசம்

  • அங்கமாலி-அழுதா சபரி இரயில் திட்டத்திற்கு கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தின் நிதியைப் பயன்படுத்த நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பை இரயில்வே மேற்கொள்ளும்; அதே வேளையில், நிலையத்தின் வளர்ச்சி, பொதுத்துறை-தனியார் கூட்டாண்மையின் கீழ் இருக்கும். செலவினங்களைக்கழித்தபின்னர், வருமானம், கேரள மாநில அரசுக்கும் இரயில்வே துறைக்கும் இடையில் பகிரப்படும்.

4. எந்தவொரு கடவுளரின் பெயரையும் பயன்படுத்தி மேற்கொள் -ளப்படும் எந்தவொரு விளம்பரமும் சட்டத்துக்குப்புறம்பானது என அண்மையில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் எது?

அ) மெட்ராஸ் உயர்நீதிமன்றம்

ஆ) பம்பாய் உயர்நீதிமன்றம்

இ) குஜராத் உயர்நீதிமன்றம்

ஈ) கெளகாத்தி உயர்நீதிமன்றம்

  • பம்பாய் உயர்நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் அமர்வு, எந்தவொரு கடவுளரின் பெயரையும் பயன்படுத்தி எந்தவொரு பொருளையும் விளம்பரம் செய்வது மற்றும் அப்பொருளில் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் இருப்பதாகக் கூறுவது சட்டத்துக்குப் புறம்பானது என்று அறிவித்துள்ளது.
  • இந்த நடைமுறை, மகாராஷ்டிரா நரபலி தடுப்பு மற்றும் ஒழிப்பு மற்றும் பிற மனிதாபிமானமற்ற, தீய மற்றும் அகோரி நடைமுறைகள் மற்றும் பில்லி, சூனியம், ஏவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வருகிறது. அனுமன் சாலிசா யந்திரம், இலக்ஷ்மி யந்திரம், மேரு மோதிரம் போன்ற பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விளம்பரங்களைத் தடுப்பதற்காக அம்மனு தாக்கல் செய்யப்பட்டது.

5. தேசிய பசு அறிவியல் தேர்வை நடத்தும் நிறுவனம் எது?

அ) PeTA

ஆ) தேசிய காமதேனு ஆயோக்

இ) தேசிய விலங்கு நல நிறுவனம்

ஈ) புளூ கிராஸ்

  • நாட்டுப்பசுக்கள்குறித்து இளம் மாணாக்கர்களிடையேயும், மக்களிடையேயும் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், பசு அறிவியல் குறித்த நூல்களை அனைவருக்கும் கிடைக்க செய்யவும், “காமதேனு கெள-விஞ்ஞான் பிரச்சார்-பிரசார் தேர்வு” என்னும் தேர்வை நடத்தவும் தேசிய காமதேனு ஆயோக் முன்வந்துள்ளது.
  • இத்தேர்வு, ஆண்டுதோறும் நாடு முழுவதும் நடைபெறுகிறது. தேசிய காமதேனு ஆயோக் என்பது மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின்கீழ் பசுக்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட ஓர் அரசு அமைப்பாகும்.

6. DRDO ஆனது பயோடைஜெஸ்டர் MK-II தொழில்நுட்பத்தை பின்வரும் எந்த மாநிலத்தின் மெட்ரோ இரயில் நெட்வொர்க்கில் நிறுவவுள்ளது?

அ) தமிழ்நாடு

ஆ) மகாராஷ்டிரா

இ) கர்நாடகா

ஈ) ஆந்திர பிரதேசம்

  • இந்திய அரசின் முன்னணி ஆராய்ச்சி முகமையான பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமும் (DRDO), இந்திய, மகாராஷ்டிர அரசுகளின் கூட்டு நிறுவனமான மகாராஷ்டிரா மெட்ரோ இரயில் நிறுவனமும் (மகா-மெட்ரோ) தண்ணீர் சேமிப்பிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் இணைந்து பணிபுரிந்து வருகின்றன.
  • மெட்ரோ இரயில் மையங்களில் மனிதக்கழிவுகளை கையாள்வதற்காக மேம்படுத்தப்பட்ட பயோ டைஜெஸ்டர் (MK-II) தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஆதரவை DRDO வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், மகாராஷ்டிரா மெட்ரோ இரயில் நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே கையெழுத்தானது.

7. ஆறு ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள உஜாலா மற்றும் SLNP திட்டங்கள், எந்த அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகின்றன?

அ) உழவு மற்றும் உழவர்கள் நலன் அமைச்சகம்

ஆ) எரிசக்தி அமைச்சகம்

இ) ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம்

ஈ) தகவல் தொடர்பு அமைச்சகம்

  • அனைவருக்கும் LED விளக்குகள் வழங்கும் திட்டம் (UJALA), தேசிய தெருவிளக்கு திட்டம் (SLNP) ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015 ஜன.5 அன்று தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்கள் 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன. இந்த இரண்டு திட்டங்களையும், எரிசக்தி அமைச்சகத்தின் கீழுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு முயற்சியில், எரிசக்தி திறன் சேவைகள் நிறுவனம் (EESL) அமல்படுத்தியது.
  • உஜாலா திட்டத்தின்கீழ், நாடு முழுவதம் 36.69 கோடி LED பல்புகளை EESL நிறுவனம் வழங்கியது. தேசிய தெருவிளக்கு திட்டம்மூலம் நாடு முழுவதும், 1.14 கோடி LED தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன.

8. சிறு நிதி வங்கியாக மாற்றப்பட்ட இந்தியாவின் முதல் நகர்ப்புற கூட்டுறவு வங்கி எது?

அ) அகமதாபாத் வணிகர்கள் கூட்டுறவு வங்கி

ஆ) சிவாலிக் வணிகர்கள் கூட்டுறவு வங்கி

இ) கோவா நகர கூட்டுறவு வங்கி

ஈ) ஆந்திர பிரதேச மகேஷ் நகர கூட்டுறவு வங்கி

  • உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சிவாலிக் வணிகர்கள் கூட்டுறவு வங்கி இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து ஒரு சிறு நிதி வங்கியாக உரிமம் பெற்றுள்ளது. இதன்மூலம், தானாக முன்வந்து மாறும் திட்டத்தின்கீழ், ஒரு சிறு நிதி வங்கியாக மாறிய நாட்டின் முதல் நகர கூட்டுறவு வங்கி ஆனது சிவாலிக் கூட்டுறவு வங்கி. இவ்வங்கி, 2021 ஏப்ரல் வாக்கில் தனது வணிகத்தைத் தொடங்கவுள்ளது.

9. நிதியமைச்சகம் இயக்கிய 4 மக்கள் மைய சீர்திருத்தங்களில் மூன்றனை முதலில் முடித்த இரண்டு மாநிலங்கள் எவை?

அ) தமிழ்நாடு & கேரளா

ஆ) மத்திய பிரதேசம் & மகாராஷ்டிரா

இ) மத்திய பிரதேசம் & ஆந்திர பிரதேசம்

ஈ) கேரளா & கர்நாடகா

  • மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை நிர்ணயித்த நான்கு சீர்திருத்தங்களில், ஒரே நாடு-ஒரே குடும்ப அட்டை, தொழில் செய்வதை எளிதாக்குதல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு ஆகிய 3 மக்கள் மைய சீர்திருத்தங்களை ம.பியும், ஆந்திர பிரதேசமும் நிறைவேற்றியுள்ளன.
  • இதற்காக இந்த இரு மாநிலங்களுக்கும், புதிதாக தொடங்கப்பட்ட “மாநிலங்களின் மூலதன செலவுக்கான சிறப்பு நிதியுதவி” திட்டத்தின் கீழ் `1004 கோடி நிதி வழங்க நிதியமைச்சகத்தின் செலவினத்துறை முடிவு செய்துள்ளது.

10. உழவர்களின் வருவாயை அதிகரிப்பதற்காக, ‘கிசான் கல்யாண் திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ) உத்தர பிரதேசம்

ஆ) மத்திய பிரதேசம்

இ) ஹிமாச்சல பிரதேசம்

ஈ) ஆந்திர பிரதேசம்

  • உழவர்களின் வருவாயை அதிகரிப்பதற்காக உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கிசான் கல்யாண் திட்டத்தை தொடங்கினார். இந்தத் திட்டம், வரும் 2022’க்குள் உத்தர பிரதேச மாநில உழவர்களின் வருவாயை இரட்டிப்பாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் 825 வட்டங்களில் உழவர்களு -க்கான மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கப்படும் என்பதையும் அம்மாநில முதல்வர் உறுதிபட தெரிவித்தார்.

1. Which Union Ministry launched the ‘Longitudinal Ageing Study of India (LASI)’ report?

A) Ministry of Earth Sciences

B) Ministry of Health and Family Welfare

C) Ministry of Commerce and Industry

D) Ministry of MSME

  • Union Health Minister Dr. Harsh Vardhan released the India report on Longitudinal Ageing Study of India (LASI) Wave–1.
  • LASI is a nation–wide survey of scientific investigation of the health, economic, and social factors and consequences of the ageing population in India. The report will be used as a basic framework for developing programmes in national and state–level.

2. How many wildlife species are under recovery programme for critically endangered species in India?

A) 12

B) 16

C) 22

D) 35

  • The Standing Committee of National Board of Wildlife (SC–NBWL) has recently approved the advisory for management of Human–Wildlife Conflict (HWC) in the country.
  • The Committee also approved the inclusion of Caracal, a wild cat found in some parts of Rajasthan and Gujarat, in the list of critically endangered species. At present, there are 22 wildlife species under recovery programme for critically endangered species.

3. ‘Angamaly–Azhutha Sabari rail project, which was making news recently, is to be constructed in which state?

A) Tamil Nadu

B) Kerala

C) Karnataka

D) Andhra Pradesh

  • The Union Cabinet approved to use funds from the Kerala Infrastructure Investment Fund Board (KIIFB), for the Angamaly–Azhutha Sabari rail project. The Railways will undertake the construction and maintenance of the project, while development of station will be through public–private partnership and a special purpose vehicle.
  • The income will be shared between the State Government of Kerala and the Railways after deducting the expenses.

4. Which High Court recently ruled that advertisement of any article using the name of any God as illegal?

A) Madras High Court

B) Bombay High Court

C) Gujarat High Court

D) Guwahati High Court

  • The Aurangabad bench of the Bombay High Court has declared that advertisement of any article using the name of any God and claiming that it has supernatural qualities, is illegal.
  • This practice falls under the Maharashtra Prevention and Eradication of Human Sacrifice and other Inhuman, Evil and Aghori Practices and Black Magic Act. A petition was filed to prevent advertisements that promote the sale of articles like Hanuman Chalisa Yantra, Lakshmi Yantra, Meru Ring etc.

5. Which institution is to conduct the National Cow Science Examination?

A) PeTA

B) Rashtriya Kamdhenu Aayog

C) National Animal Welfare Institute

D) Blue Cross

  • Rashtriya Kamdhenu Aayog (RKA) is set to conduct a national level Cow Science Exam, to educate students on the importance of cows. Called as the ‘Kamdhenu Gau Vigyan Prachar Prasar Examination’, it will be held annually across the country. RKA is a government body set up for cow welfare under the Ministry of Fisheries, Animal Husbandry and Dairying.

6. DRDO is to establish Biodigester Mk–II Technology in which state’s metro rail network?

A) Tamil Nadu

B) Maharashtra

C) Karnataka

D) Andhra Pradesh

  • State–owned research agency, the Defence Research and Development Organisation (DRDO) is to install its eco–friendly bio–digester units across the network operated by Maharashtra Metro Rail Corporation (MAHA–METRO).
  • DRDO will provide technical support to implement advanced bio–digester Mk–II technology for treating the human waste in the metro rail network.

7. UJALA and SLNP schemes, which has completed six years, is implemented by which ministry?

A) Ministry of Agriculture and Farmers Welfare

B) Ministry of Power

E) Ministry of Rural Development

D) Ministry of Communications

  • The Prime Minister of India Narendra Modi launched the Unnat Jyoti by Affordable LEDs for All (UJALA) and Street Lighting National Programme (SLNP) in 2015.
  • The two programmes are being implemented by Energy Efficiency Services Limited (EESL), a joint venture of PSUs under the Ministry of Power. Under the schemes, EESL distributed LED bulbs and LED street lights across the country, to save energy.

8. Which is the first Urban Cooperative Bank in India, to be converted into a Small Finance Bank?

A) Ahmedabad Mercantile Co–operative Bank

B) Shivalik Mercantile Co–operative Bank

C) Goa Urban Co–operative Bank

D) Andhra Pradesh Mahesh Co–operative Urban Bank

  • Uttar Pradesh–based Shivalik Mercantile Co–operative Bank (SMCB) has received a license from the Reserve Bank of India (RBI) as a Small Finance Bank (SFB).
  • With this, SMCB became the first Urban Cooperative Bank (UCB) in the country to make a transition to a Small Finance Bank, under the voluntary transition scheme. The Shivalik Small Finance Bank is set to commence business by April 2021.

9. Which two states are the first to complete three out of four citizen–centric reforms directed by the Finance Ministry?

A) Tamil Nadu & Kerala

B) Madhya Pradesh & Maharashtra

C) Madhya Pradesh & Andhra Pradesh

D) Kerala & Karnataka

  • Madhya Pradesh and Andhra Pradesh have become the first states to complete three out of four citizen–centric reforms directed by the Ministry of Finance.
  • The two states completed the One Nation, One Ration Card reforms, Ease of Doing Business reforms, and Urban Local Bodies reforms. Hence, the Ministry is to provide an additional financial assistance of Rs 1,004 crore for Capital Expenditure.

10. Which state launched ‘Kisan Kalyan Mission’ to promote the income of farmers?

A) Uttar Pradesh

B) Madhya Pradesh

C) Himachal Pradesh

D) Andhra Pradesh

  • The Chief Minister of Uttar Pradesh Yogi Adityanath launched Kisan Kalyan Mission, to promote the income of farmers. The scheme aims to double the income of the farmers in Uttar Pradesh by 2022.
  • The Chief Minister also ensured that the development schemes for farmers will be launched in 825 localities across the state.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!