Tnpsc

9th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

9th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 9th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

9th August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. நடப்பாண்டின் (2021) “கடத்தலுக்கு எதிரான உலக நாளுக்கான” கருப்பொருள் என்ன?

அ) Save lives

ஆ) The future we want, the UN we need

இ) Human Trafficking: Call Your Government To Action

ஈ) Victims voices lead the way 

  • “போதைப்பொருள் மற்றும் அது தொடர்புடைய குற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம்” ஜூலை.20 அன்று “கடத்தலுக்கு எதிரான உலக நாளை” கடைப்பிடித்தது. “Victims voices lead the way” என்பது நடப்பு ஆண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
  • ஆட்கடத்தலில் தப்பிப்பிழைத்தவர்களுடன் தொடர்புகொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்தக் கருப்பொருள் அமைந்துள்ளது. போதைப்பொருள் மற்றும் அது தொடர்புடைய குற்றத்திற்கான ஐநா அலுவலகம் ஒரு சர்வதேச அமைப்பு அல்லது நிறுவனமாகும். அது கடந்த 1997’இல் நிறுவப்பட்டது. இது வியன்னாவை (ஆஸ்திரியா) தலைமையிடமாகக் கொண்டுள்ளது.

2. “NISAR” என்ற திட்டத்தை தொடங்குவதற்காக ஒத்துழைத்துள்ள இரண்டு விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் எவை?

அ) ரோஸ்கோஸ்மோஸ் மற்றும் நாசா

ஆ) நாசா மற்றும் சிஎன்எஸ்ஏ

இ) இஸ்ரோ மற்றும் ரோஸ்கோஸ்மோஸ்

ஈ) இஸ்ரோ மற்றும் நாசா 

  • NISAR (NASA-ISRO Synthetic Aperture Radar) – இது இஸ்ரோ மற்றும் நாசாவின் கூட்டுப்பணியாக 2023’இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது அதிநவீன ரேடார் படமாக்கல் நுட்பத்தைப் பயன்படுத்தி நிலத்தின் மேற்பரப்பு மாற்றங்களை உலக அளவில் அளவிடுவதில் கவனம் செலுத்துகிறது. இத்தகவலை புவி அறிவியல் அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். NISAR செயற்கைக்கோள், இரட்டை அதிர்வெண்களைப் பயன்படுத்தும் முதல் செயற்கைக்கோளாக இருக்கும்.
  • இது தொலையுணரி நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படும். இது துருவ தாழ்வெப்ப மண்டலம் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதி உட்பட அனைத்து நிலப்பரப்பு ஆய்வுக்கும் பயன்படுத்தப்படும். இதன்மூலம் பூமியின் இயற்கை செயல்முறைகளைப் புரிந்துகொள்ள இயலும்.

3. இந்திய இராணுவம் மற்றும் இரஷ்ய இராணுவத்தின் கூட்டு இராணுவப்பயிற்சியான INDRA-21 நடைபெறும் இடம் எது?

அ) புது தில்லி

ஆ) மாஸ்கோ

இ) வோல்கோகிராட் 

ஈ) காசியாபாத்

  • ஆக.1 முதல் ரஷ்யாவில் அமைந்துள்ள வோல்கோகிராட் நகரில் இந்திய மற்றும் ரஷ்ய ராணுவத்திற்கு இடையேயான 13 நாள் மெகா ராணுவப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய & இரஷ்ய இராணுவத்திற்கு இடையிலான இக்கூட்டு இராணுவப்பயிற்சியின் பெயர் INDRA.
  • இது இந்தப்பயிற்சியின் 12ஆவது பதிப்பாகும், அதற்கு “INDRA-21” என்று பெயரிடப்பட்டுள்ளது. இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த இராணுவப்பயிற்சி உதவுகிறது. இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நீண்டகால நட்பு உறவை இது வலுப்படுத்த உதவும்.

4. மோசமான நிதிநிலை காரணமாக 2021 ஜூலை மாத இறுதியில், ரிசர்வ் வங்கியால், எந்த வங்கியின் உரிமம் இரத்து செய்யப்பட்டது?

அ) ஆந்திர பிரதேச கிராம விகாஸ் வங்கி

ஆ) ஆர்யவர்த் வங்கி

இ) மட்காம் நகர கூட்டுறவு வங்கி லிட் 

ஈ) பிரதம யூபி கிராமின் வங்கி

  • இந்திய ரிசர்வ் வங்கியாது கோவாவின் மட்கவில் அமைந்துள்ள மட்காம் நகர கூட்டுறவு வங்கியின் உரிமத்தை இரத்து செய்தது. 2021 ஜூலை 29 அன்று அதன் உரிமம் இரத்து செய்யப்பட்டது. ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, அவ்வங்கியின் தற்போதைய நிதி நிலைமையைக்கொண்டு வைப்புதாரர்களுக்கு முழு தொகையை செலுத்த முடியாது. எனவே அதன் உரிமம் இரத்து செய்யப்பட்டது.

5. “சர்வதேச தூயவளி வினையூக்கி – International Clean Air Catalyst” திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய நகரம் எது?

அ) சூரத்

ஆ) குருகிராம்

இ) இந்தூர் 

ஈ) போபால்

  • இந்தூர் இந்தியாவின் தூய்மையான நகரமாகும். தற்போது, “சர்வதேச தூயவளி வினையூக்கி” திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய நகரமாகவும் இது மாறியுள்ளது. நகரத்தின் காற்றை தூய்மைப்படுத்தும் நோக்கில், இந்தத் திட்டம் 5 ஆண்டுகள் இயங்கும். இந்தூர் மாநகராட்சி மற்றும் மத்தியப் பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இத்திட்டத்தை கவனிக்கும்.
  • சர்வதேச தூயவளி வினையூக்கி திட்டம் என்பது நகரங்களில் தூய வளிக்கான தீர்வுகளை விரைவுப்படுத்துவதற்காக பன்னாட்டு வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனம் (USAID), WRI மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதி ஆகியவற்றின் முயற்சியாகும். வாஷிங்டன் DC’ஐ தலைமையிடமாகக் கொண்டு USAID இயங்கி வருகிறது. அது 3 நவம்பர் 1961’இல் ஜான் எப் கென்னடியால் நிறுவப்பட்டது.

6. 3ஆவது ஆர்க்டிக் அறிவியல் அமைச்சர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்த இரண்டு நாடுகள் எவை?

அ) இந்தியா மற்றும் ஜப்பான்

ஆ) ஜப்பான் மற்றும் ஐஸ்லாந்து 

இ) ஜப்பான் மற்றும் ரஷ்யா

ஈ) இந்தியா மற்றும் இலங்கை

  • மூன்றாவது ஆர்க்டிக் அறிவியல் அமைச்சர்கள் கூட்டத்தை ஜப்பானும் ஐஸ்லாந்தும் இணைந்து ஏற்பாடு செய்தன. இது மெய்நிகராக ஜப்பானால் நடத்தப்பட்டது. ஆர்க்டிக் பிராந்தியத்தில் ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பு பற்றி விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. “Knowledge for a Sustainable Arctic” என்பது இந்தச் சந்திப்பின் கருப் பொருளாகும்.

7. 2021 ஜூலை நிலவரப்படி, உள்நாட்டு வான் போக்குவரத்து அமைச்சகத்தின் அமைச்சர் யார்?

அ) பியூஷ் கோயல்

ஆ) ஜோதிராதித்ய சிந்தியா 

இ) நரேந்திர மோடி

ஈ) நிர்மலா சீதாராமன்

  • வானூர்தி நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணைய (AERA) (திருத்த) மசோதா, 2021 ஜூலை.29 அன்று மக்களவையில் உள்நாட்டு வான்போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவால் அறிமுகம் செய்யப்பட்டது. AERA சட்டம், 2008இன் கீழ் முக்கிய வானூர்தி நிலையத்தின் வரையறையை மாற்ற இம்மசோதா முன்மொழிகிறது.
  • இது ஒரு சிறிய வானூர்தி நிலையத்தை ஒரு பெரிய வானூர்தி நிலையத்துடன் இணைப்பதன்மூலம் நஷ்டத்தில் இயங்கும் ஒரு சிறிய வானூர்தி நிலையத்தை தனியார்மயமாக்க வழிவகுக்கிறது. உதான் பிராந்திய இணைப்பை விரைவுப்படுத்தவும் இது உதவும்.

8. நடப்பாண்டின் (2021) ஐநா உணவு அமைப்புகளின் ஒத்திகை உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?

அ) பாரிஸ்

ஆ) ரோம் 

இ) நியூயார்க்

ஈ) சுவீடன்

  • ஐநா உணவு அமைப்புகளின் ஒத்திகை உச்சிமாநாடானது சமீபத்தில் ஐநா மற்றும் இத்தாலி அரசாங்கத்தால் ரோமில் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • மத்திய உழவு மற்றும் உழவர்கள் நலத்துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர், இந்த ஒத்திகை உச்சிமாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். 2030ஆம் ஆண்டுக்குள் நிலைக்கத்தக்க வளர்ச்சி இலக்குகளை அடைவதில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வேளாண் அமைச்சகத்தின் அறிக்கையை நரேந்திர சிங் தோமர் வழங்கினார். மொத்தமுள்ள 17 நிலைக்கத்தக்க வளர்ச்சி இலக்குகளில், 12 நிலைக்கத்தக்க வளர்ச்சி இலக்குகள் நேரடியாக உழவைச் சார்ந்துள்ளன.

9. இயங்குபடம், காட்சி விளைவுகள், விளையாட்டு & வரைகதை ஆகியவற்றிற்கான தேசிய அளவிலான சிறப்பு மையத்தை நிறுவ உதவும் கல்வி நிறுவனம் எது?

அ) ஐஐடி மும்பை 

ஆ) ஐஐடி சென்னை

இ) ஐஐடி கரக்பூர்

ஈ) ஐஐடி பெங்களூரு

  • இயங்குபடம் (animation), காட்சி விளைவுகள் (visual effects), இணைய விளையாட்டு (gaming) மற்றும் வரைகதை (comics) ஆகியவற்றிற்கான தேசிய அளவிலான சிறப்பு மையமானது ஐஐடி மும்பையுடன் இணைந்து அமைக்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார். இந்தியாவில் ஓர் உலகத்தரம் வாய்ந்த திறமைக்குழுமத்தை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கம். ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறையானது இந்தியாவில் வளர்ந்து வரும் துறைகளுள் ஒன்றாகும்.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற காங்ரா ஓவியத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ) இமாச்சல பிரதேசம் 

ஆ) உத்தரகாண்ட்

இ) மத்திய பிரதேசம்

ஈ) உத்தர பிரதேசம்

  • காங்ரா ஓவியம் என்பது இமாச்சல பிரதேச மாநிலத்தின் காங்ராவின் சித்திரக்கலையாகும். இந்தக் காங்ரா ஓவியம், முன்னாள் சமஸ்தான பிரதேசமான காங்ராவின் ஆட்சியாளர்களின்கீழ் ஒரு தனித்துவமான கலை வடிவமாக உருவானது.
  • ஆனால் அரசாங்கத்தின் ஆதரவில்லாமல், இந்தத் தனித்துவமான கலை பிரபலமடையாமல் போனது. இந்தக் கலையை மீண்டும் பிரபலமாக்கும் நோக்கில், காங்ரா ஓவியக் கலைஞர்களுக்கு உதவுவதற்காக, காங்ரா கலையின் வணிக வடிவத்தை தயாரிப்பதில், காங்ரா கலை ஊக்குவிப்பு சங்கம் சோதனை மேற்கொண்டது. அவர்கள் காங்ரா ஓவியத்தைக் கொண்டு சேலைகளை அலங்கரிக்க முடிவுசெய்துள்ளனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கண்கவர் வாணவேடிக்கைகளுடன் நிறைவுபெற்ற ஒலிம்பிக் திருவிழா

கண்கவர் கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகளுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது. டோக்கியோ ஒலிம்பிக்கின் நிறைவு விழா மைதானத்தில் பார்வையாளர்களின்றி நடத்தப்பட்டு முடித்து வைக்கப்பட்டது. கடந்த 2020 ஜூலை – ஆகஸ்டில் நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, கரோனா தொற்று சூழல் காரணமாக இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கரோனா சூழலின் தீவிரம் குறையாத நிலையில் இந்த ஆண்டும் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் சிக்கல் இருந்தது. டோக்கியோ நகர மக்கள் உள்பட பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. எனினும், அத்தகைய சவால்களைக் கடந்து பெரிதாக பாதிப்புகள் ஏதும் இன்றி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒலிம்பிக்கின் தொடக்க நிகழ்ச்சியானது ‘ஒன்றிணைந்து முன்னேறுதல்’ என்பதை கருத்துருவை அடிப்படையாகக் கொண்டிருந்த நிலையில், நிறைவு நிகழ்ச்சியானது ‘நாம் பகிர்ந்துகொள்ளும் உலகம்’ என்ற கருத்தைக் கொண்டிருந்தது. அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒட்டுமொத்தமாக 39 தங்கப்பதக்கங்களை வென்றுள்ள அமெரிக்கா 41 வெள்ளி, 33 வெண்கலம் உள்பட மொத்தம் 113 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 38 தங்கப்பதக்கங்களை வென்றுள்ள சீனா 2ஆவது இடத்தில் உள்ளது. 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் இந்தியா 48ஆவது இடத்தில் உள்ளது. ஒலிம்பிக்கின் கடைசி தங்கப்பதக்கத்தை செர்பியா வென்றது. முதல் தங்கப் பதக்கத்தை சீனா வென்றது.

2. இனி வாட்ஸ் அப்பில் கரோனா தடுப்பூசி சான்றிதழ்

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை வாட்ஸ் அப்பில் இனி நொடிகளில் பெறலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், 90131 51515 வாட்ஸ்அப் எண்ணில் covid certificate என அனுப்ப வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் OTP எண்ணை பதிவு செய்தவுடன் தடுப்பூசி சான்றிதழை நொடிகளில் பெறலாம்.

3. மத்திய அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கௌபாவுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு

மத்திய அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கௌபாவுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு அளித்து மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. முன்னாள் உள்துறை செயலரான கௌபா, கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவைச் செயலராக இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். இப்போது, அப்பதவிக்காலம் நிறைவடைவதையடுத்து அவருக்குப் பணிநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநில பிரிவைச் சேர்ந்த, கடந்த 1982ஆம் ஆண்டு இஆப அதிகாரியான ராஜீவ் கௌபா, அடுத்த ஓராண்டுக்கு மத்திய அமைச்சரவைச் செயலர் பதவியில் இருப்பார். ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட பிறகு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப்பிரிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மறு நிர்மாணச்சட்டத்தை வகுப்பதில் ராஜீவ் கௌபா முக்கிய பங்கு வகித்தார்.

4. முதல் பெண் அதிகாரிகளை போரில் ஈடுபடுத்தும் ஐடிபிபி

இந்தியா-திபெத்திய எல்லை காவல் படையை பாதுகாக்கும் இந்தியா-சீன எல்ஏசி, முதல் இரண்டு பெண் அதிகாரிகளை போரில் நியமித்தது. முசோரியில் அமைந்துள்ள ஐடிபிபி அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் மொத்தம் 53 அதிகாரிகள் தேர்ச்சி பெற்ற அணிவகுப்பு நடைபெற்றது. எல்லைப் பாதுகாப்புப் படையின் பல அறியப்படாத உண்மைகள் மற்றும் புகைப்படங்களைக் கொண்ட 680 பக்கங்களைக் கொண்ட முதல் ‘ஐடிபிபியின் வரலாறு’ புத்தகம் ஐடிபிபி இயக்குநர் ஜெனரல் எஸ் எஸ் தேஸ்வாலால் வெளியிடப்பட்டது.

ஐடிபிபி 2016ஆம் ஆண்டு முதல் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் நடத்தப்பட்ட அகில இந்தியத் தேர்வின்மூலம் தனது போராளிகளில் பெண் போர் அதிகாரிகளை நியமிக்கத் தொடங்கியது. இதற்கு முன்பு, இது கான்ஸ்டபூலரி வரிசையில் போர் பெண்களை மட்டுமே கொண்டிருந்தது. மொத்தமுள்ள 53 அதிகாரிகளில், 42 அதிகாரிகள் பொதுப்பணிப்போரில் உள்ளனர், அதே நேரத்தில் 11,000 பேர் சுமார் 90,000 பணியாளர்கள் வலுவான மலைப்போர் பயிற்சி பெற்ற பொறியியல் பிரிவில் உள்ளனர். இந்த அதிகாரிகள் இப்போது நாட்டின் ஐடிபிபி அமைப்புகளில் நியமிக்கப்படுவார்கள், இதில் சீனாவுடனான எல்ஏசி மற்றும் சத்தீஸ்கரிலுள்ள நக்சல் எதிர்ப்பு செயல்பாட்டு தியேட்டர் ஆகியவை அடங்கும்.

5. இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் கூட்டு கடற்படைப் பயிற்சி

இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக இரு நாடுகளும் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டன. ஐக்கிய அரபு அமீரகம் தலைநகர் அபுதாபியை ஒட்டிய கடற்பகுதியில் நடைபெற்ற இப்போர் பயிற்சி தொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையே அபுதாபியில் ‘ஸையத் தல்வார்’ கூட்டு கடற்படை பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் இந்திய கடற்படை சார்பில் INS கொச்சி போர்க்கப்பல், இரண்டு ஒருங்கிணைந்த சீ கிங் எம்கே 42பி ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன.

ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் அல்-தாஃப்ரா போர்க் கப்பல், ஏஎஸ்565பி பேந்தர் ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டன. இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான திறன் மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்த தேடுதல், மீட்பு, மின்னணு தொழில்நுட்பம் உள்பட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளரும் கமாண்டருமான விவேக் மத்வால் தெரிவித்தார்.

கடந்த வாரம் இந்திய வான்படை தலைமை தளபதி ஆர் கே எஸ் பதெளரியா ஐக்கிய அரபு அமீரகம் சென்றதைத் தொடர்ந்து இந்தக் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. What was the theme of the “World Day against Trafficking 2021”?

A) Save lives

B) The future we want, the UN we need

C) Human Trafficking: Call Your Government to Action

D) Victims voices lead the way 

  • “World Day against Trafficking 2021” was observed on July 30 by the ‘United Nations Office on Drugs and Crime’. The theme of 2021 was “Victims’ voices lead the way”.
  • This theme was set to raise awareness about the importance of interacting with the survivors of human trafficking. United Nations Office on Drugs and Crime is an international organisation or agency that was founded in 1997. It is headquartered in Vienna (Austria). Its parent organisation is United Nations Secretariat.

2. Which two space agencies collaborated to launch the mission called “NISAR”?

A) ROSCOSMOS and NASA

B) NASA and CNSA

C) ISRO and ROSCOSMOS

D) ISRO and NASA 

  • NISAR (NASA–ISRO Synthetic Aperture Radar) which is a joint mission of ISRO and NASA is proposed to be launched in 2023. It is focusing on making global measurement of land surface changes using advanced radar imaging. The information was given by Jitendra Singh, Earth Sciences Minister.
  • NISAR Satellite will be the first satellite to use dual frequencies. It will be used for remote sensing. It will be also used for global observations over all land masses including the Polar cryosphere and the Indian Ocean region i.e., it will help in understanding the natural processes of the Earth.

3. What is the venue of INDRA–21, the Joint Military Exercise of Indian Army and Russian Army?

A) New Delhi

B) Moscow

C) Volgograd 

D) Ghaziabad

  • A 13–day mega military exercise between Indian and Russian army is scheduled to be organised from August 1 at Volgograd city located in Russia. The name of the Joint military exercise between Indian and Russian army is INDRA. The exercise is the 12th edition of INDRA and it is named “INDRA–21”.
  • The military exercise will help in strengthening the bilateral security cooperation and will serve to reinforce the longstanding bond of friendship between India and Russia.

4. Which Bank’s license has been cancelled by RBI in the end of July 2021 due to poor financial conditions?

A) Andhra Pradesh Gramin Vikas Bank

B) Aryavart Bank

C) Madgaum Urban Co–operative Bank Limited 

D) Prathama UP Gramin Bank

  • Reserve Bank of India (RBI) cancelled the license of Madgaum Urban Co–operative Bank Limited which is located at Margao in Goa. The license was cancelled on July 29, 2021. According to RBI, the bank would not be able to pay full amount to its depositors with its current financial position so its license has been cancelled.

5. Which is the first Indian city to be selected for “International Clean Air Catalyst” Programme?

A) Surat

B) Gurugram

C) Indore 

D) Bhopal

  • Indore is the India’s Cleanest city. It is now the first Indian city to be selected for the “International Clean Air Catalyst” Programme. The programme/project will run for 5 years with an aim to purify the air of the city. Indore Municipal Corporation and Madhya Pradesh Pollution Control Board will look after this project.
  • The International Clean Air Catalyst programme is an initiative by the U.S. Agency for International Development (USAID), WRI and the Environmental Defense Fund to expedite clean air solutions in cities. The Headquarter of USAID is in Washington D.C. (USA). It was founded on 3 November 1961 by John F. Kennedy.

6. Which two countries organised the 3rd Arctic Science Ministerial Meeting, 2021?

A) India and Japan

B) Japan and Iceland 

C) Japan and Russia

D) India and Sri Lanka

  • 3rd Arctic Science Ministerial Meeting, 2021 was organised by Japan and Iceland. It was virtually hosted by Japan.
  • The meeting was organised for discussing research and cooperation in the Arctic region. The theme of the meeting was “Knowledge for a Sustainable Arctic”.

7. As of July 2021, who is the Union Minister of Civil Aviation?

A) Piyush Goyal

B) Jyotiraditya Scindia 

C) Narendra Modi

D) Nirmala Sitharaman

  • Airport Economic Regulatory Authority (AERA) Amendment Bill was introduced on July 29, 2021 in the Lok Sabha by Jyotiraditya Scindia, Minister of Civil Aviation. The Bill proposes to modify the definition of major airport under the AERA Act 2008. It paves the way for privatisation of a small loss–making airport by clubbing it with a larger airport. It will also help in accelerating the UDAN regional connectivity.

8. Where was the UN Food Systems Pre–Summit 2021 organised recently?

A) Paris

B) Rome 

C) New York

D) Sweden

  • UN Food Systems Pre–Summit 2021 was organised recently by United Nations and Government of Italy in Rome. Narendra Singh Tomar, Union Minister of Agriculture and Farmers Welfare represented India in this Pre–Summit. Narendra Singh Tomar delivered the Ministerial statement which highlighted the importance of Agriculture in achieving the Sustainable Development Goals (SDGs) 2030. Out of 17 SDGs, 12 SDGs are directly dependent on agriculture.

9. Which educational institute will help in establishing a National Centre of Excellence for Animation, Visual effects, Gaming and Comics?

A) IIT Mumbai 

B) IIT Chennai

C) IIT Kharagpur

D) IIM Bengaluru

  • Anurag Thakur, Union Minister for Information and Broadcasting has announced that a National Centre of Excellence for Animation, Visual effects, Gaming and Comics (CoE) will be set up in collaboration with IIT Bombay. The main objective of the CoE is creating a world–class talent pool in India. Media and Entertainment sector is one of the largest growing sectors in India.

10. Kangra painting, which was recently in news, is associated with which state?

A) Himachal Pradesh 

B) Uttarakhand

C) Madhya Pradesh

D) Uttar Pradesh

  • Kangra painting is the pictorial art of Kangra, Himachal Pradesh. Kangra painting evolved as a unique form of art under the reign of the rulers of the former princely state, Kangra.
  • But without government patronage, this unique art is getting unpopular slowly and its almost dying. To make the art popular again, Kangra Arts Promotion Society has experimented in producing a commerial form of Kangra art that could help sustain artists. They have decided to adorn sarees with Kangra painting.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!