9th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

9th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 9th February 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

9th February 2021 Tnpsc Current Affairs in Tamil

1. ‘கோபர்தன்’ திட்டத்திற்காக ஒருங்கிணைந்த இணையதளத்தை தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) எரிசக்தி அமைச்சகம்

இ) ஜல் சக்தி அமைச்சகம்

ஈ) வேளாண் அமைச்சகம்

 • மத்திய ஜல் சக்தி அமைச்சகமானது சமீபத்தில், ‘கோபர்தன்’ திட்டத்திற்கு என ஓர் ஒருங்கிணைந்த இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. இத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்தை கண்காணிப்பதை இந்தத்தளம் நோக்கமாகக்கொண்டுள்ளது. கால்நடைகள் மற்றும் மக்கும் கழிவுகளை நிர்வகிப்பதற்கும் உழவர்களின் வருவாயை மேம்படுத்துவ -தற்கும் இந்திய அரசாங்கத்தால் ‘கோபார்தன்’ திட்டம் தொடங்கப்பட்டது. தூய்மை இந்தியா இயக்கம் கிராமப்புறம் – கட்டம் 2’இன்கீழ் இது செயல்படுத்தப்படுகிறது.

2. ‘பிரக்யன் பாரதி’ மற்றும் ‘பாஷா கெளரப்’ ஆகியவை எந்த இந்திய மாநிலத்தின் முன்னெடுப்புகளாகும்?

அ) உத்தரகாண்ட்

ஆ) அஸ்ஸாம்

இ) தெலங்கானா

ஈ) ஒடிஸா

 • அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் சமீபத்தில் ‘பிரக்யன் பாரதி’ மற்றும் ‘பாஷா கெளரப்’ ஆகிய இரண்டு திட்டங்களைத் தொடங்கினார். ‘பிரக்யன் பாரதி’ திட்டத்தின்கீழ், கல்லூரி மாணவர்களு -க்கு பாடநூல்களை வாங்க நிதி வழங்கப்படுகிறது. அதே வேளையில், ‘பாஷா கெளரப்’ திட்டத்தின்கீழ், 21 சாகித்திய அவைகளுக்கு (இலக்கிய அமைப்புகளுக்கு) மாநில அரசு நிதியுதவி வழங்குகிறது.

3. 2021 பிப்ரவரியில், இந்தியப் பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டை நடத்திய நாடு எது?

அ) இலங்கை

ஆ) இந்தியா

இ) வங்கதேசம்

ஈ) மாலத்தீவுகள்

 • ‘ஏரோ இந்தியா’ கண்காட்சிக்கு இடையே இந்தியப் பெருங்கடல் பகுதி நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டை இந்தியா நடத்தியது.
 • “Enhanced Peace, Security and Cooperation in the Indian Ocean” என்பது இந்த மாநாட்டுக்கான கருப்பொருளாகும். இம்மாநாட்டின்போது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகள், LCA மற்றும் பிற ஆயுத அமைப்புகளை வழங்கத் தயாராக இருப்பதாக இந்தியா அறிவித்தது.

4. IUCN சிவப்புப்பட்டியலின்படி, மீன்பிடி பூனையின் (Fishing Cat) வகைப்பாடு என்ன?

அ) தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்

ஆ) மிக அருகிவிட்ட இனம்

இ) அழிவாய்ப்பு நிலையிலுள்ள இனம்

ஈ) அற்றுவிட்ட இனம்

 • ‘மீன்பிடி பூனை’ என்பது ஈரநிலம் மற்றும் சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளில் காணப்படும் ஒரு சிறப்புப் பூனை இனமாகும். IUCN சிவப்புப்பட்டியலின்படி, இப்பூனை இனங்கள் அழிவாய்ப்பு நிலையிலுள்ள இனங்கள் (vulnerable) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மீன்பிடி பூனை பாதுகாப்பு கூட்டணி என்ற ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டணி, உலகெங்கிலும் உள்ள பாதுகாவலர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்களை உள்ளடக்கியதாகும்.

5. தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தில் நியமிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப தொழில்முனைவோர் யார்?

அ) ரஜினி பெக்டர்

ஆ) ரத்தன் லால்

இ) ஸ்ரீதர் வேம்பு

ஈ) அலி மாணிக்பான்

 • இந்திய பன்னாட்டு மென்பொருள் நிறுவனமான சோகோவின் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு, தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வாரியத்திற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாள் தலைமைதாங்குகிறார்.
 • ISRO’இன் முன்னாள் தலைவர் K ராதாகிருஷ்ணன், கல்வி உறுப்பினர் அன்சுமான் திரிபாதி மற்றும் முன்னாள் தூதர் அருண் K சிங் ஆகியோர் இந்த வாரியத்தின் பிற புதிய உறுப்பினர்களாவர்.

6. எந்த இந்திய அமைப்பின் செயல் தலைவராக பிரவீன் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்?

அ) புலனாய்வுப் பணியகம்

ஆ) மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்

இ) மத்திய புலனாய்வு முகமை

ஈ) இந்திய தேர்தல் ஆணையம்

 • மத்திய புலனாய்வு முகமையின் (CBI) கூடுதல் இயக்குநரான பிரவீன் சின்ஹா CBI’இன் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ஓய்வுபெற்ற ரிஷி குமார் சுக்லாவுக்குப் பிறகு, புதிய இயக்குநர் குறித்து முடிவு எடுக்கும் வரை செயல் தலைவர் பொறுப்பிலிருப்பார். கடந்த ஐந்து ஆண்டுகளில், CBI’க்கு இடைக்கால தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

7. இந்தியாவின் முதல் இடி, மின்னல் குறித்த ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படவுள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) ஒடிஸா

இ) மேற்கு வங்கம்

ஈ) மகாராஷ்டிரா

 • ஒடிஸா மாநிலம் பாலசூரில் நாட்டின் முதல் இடி, மின்னல் குறித்த ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது. புவி அறிவியல் அமைச்சகம், IMD, DRDO மற்றும் ISRO இடையேயான ஒத்துழைப்பில் இந்த ஆராய்ச்சி நிலையம் நிறுவப்படும். மின்னல் தாக்குதல்களால் நிகழும் மனித இறப்பு மற்றும் சொத்து இழப்பு ஆகியவற்றைக் குறைப்பதை இந்த ஆராய்ச்சி நிலையம் தனது நோக்கமாகக்கொண்டு செயல்படும்.

8. எந்த உலகளாவிய டிஜிட்டல் கட்டண நிறுவனம் இந்தியாவில் அதன் கட்டண நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது?

அ) PayPal

ஆ) Capital One

இ) American Express

ஈ) Aeropay

 • அமெரிக்க டிஜிட்டல் கொடுப்பனவு நிறுவனமான PayPal, இந்தியாவில் அதன் கொடுப்பனவு நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்திய பிராண்டுகள் மற்றும் இணையவழி வணிகர்களுக்கு அதன் கொடுப்பனவு நுழைவாயிலை வழங்கும் PayPal, இந்தியாவில் அதன் உள்நாட்டு கொடுப்பனவு சேவைகளை ஏப்.1 முதல் நிறுத்தவுள்ளது. இது, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பன்னாட்டளவில் பணமனுப்பும் சேவைகளையும் வழங்கி வருகிறது.

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘KAPILA’ திட்டம், பின்வரும் எந்தத் துறையுடன் தொடர்புடையது?

அ) அறிவியல்

ஆ) அரசியல்

இ) வணிகம்

ஈ) அறிவுசார் சொத்துரிமை

 • 2020 அக்டோபரில், மத்திய கல்வி அமைச்சரான இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ அறிவுசார் சொத்துரிமை குறித்த கல்வியறிவு & விழிப்புணர்வு பரப்புரைக்காக, ‘KAPILA’ கலாம் திட்டத்தைத்தொடங்கினார். இந்தத் திட்டத்தின்கீழ், உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணாக்கர்கள் தங்கள் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெறுவதற்கான விண்ணப்ப செயல்முறைகுறித்த தகவல்களைப்பெறுவார்கள்.
 • அறிவுசார் சொத்துரிமை குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

10. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையில், பின்வரும் எந்நாட்டுடனான முதல் கூட்டு செயற்குழு கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது?

அ) செளதி அரேபியா

ஆ) பக்ரைன்

இ) பிரான்ஸ்

ஈ) ஜப்பான்

 • புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், இந்தியா – பக்ரைன் இடையே முதல் கூட்டு செயற்குழுக்கூட்டம் காணொலிக்காட்சி வாயிலாக நடந்தது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து இந்தியா – பக்ரைன் இடையே கடந்த 2018’இல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. சூரிய ஒளி எரிசக்தி, வளியாற்றல் மற்றும் தூய கைட்ரஜன் ஆகிய துறைகளில் மேம்பட்ட ஒத்துழைப்பு குறித்து இந்தக் கூட்டம் கவனம் செலுத்தியது.

தமிழக நடப்பு நிகழ்வுகள்

 • தென் மாவட்டமான திருநெல்வேலியில் முதன்முறையாக மண்டல புற்றுநோய் மையம் திறக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் புற்றுநோய்க்கு உயரிய சிகிச்சையளிக்கும் வகையில், நவீன கருவிகள் நிறுவப்பட்டுள் -ளன. தென்தமிழ்நாட்டில் முதன்முறையாக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கக்கூடிய கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 • மேகமலை வனவுயிரிகள் சரணாலயம், திருவில்லிப்புத்தூர் சாம்பல் அணில்கள் சரணாலயம் ஆகியவற்றை இணைத்து தமிழ்நாட்டின் ஐந்தாவது புலிகள் காப்பகமாக, திருவில்லிப்புத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது, இந்தியாவின் 51ஆவது புலிகள் காப்பாகமாகும்.
 • தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டது. முதலமைச்சர் க. பழனிசாமி இந்த மசோதாவை தாக்கல்செய்தார். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் `5,000 அபராதம், ஆறு மாதம் சிறைத்தண்டனை என்றும் ஆன்லைன் சூதாட்ட அரங்கம் வைத்திருப்போருக்கு `10,000 அபராதம், ஈராண்டு சிறைத்தண்டனை என்றும் இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
 • விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லூரிகளை நிர்வகிக்கும் வகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா பெயரில் தனியாக பல்கலைக்கழகம் உருவாக்கப்படவுள்ளது. இதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
 • தமிழ்நாட்டின் ஏற்றுமதி திறனை முழுவதும் பயன்படுத்தும் நோக்கில், நடுவணரசின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி, மேம்பாட்டு ஆணையம் (APEDA), தனது மண்டல அலுவலகத்தை சென்னையில் திறந்துள்ளது.
 • தமிழ்நாடு அரசின் 47ஆவது தலைமைச்செயலாளராக இராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு முன் தலைமைச் செயலாளராக இருந்த க சண்முகம், தமிழ்நாடு அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 • நடப்பு 2021ஆம் ஆண்டுக்கான டைகர் விருதை ‘கூழாங்கல்’ என்ற திரைப்படம் பெற்றுள்ளது. இந்த விருதை வெல்லும் முதல் தமிழ்த் திரைப் படமும், இரண்டாவது இந்திய திரைப்படமும் இதுவாகும். இதன் இயக்கு -நர் வினோத்.
 • `250 பணஞ்செலுத்தினால் அஞ்சல் மூலம் பழனிமலை பஞ்சாமிர்த பிரசாதத்தை வீட்டுக்கே அனுப்பிவைக்கும் திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

1. Which Union Ministry has launched a unified portal for ‘Gobardhan’ scheme?

A) Ministry of Home Affairs

B) Ministry of Power

C) Ministry of Jal Shakti

D) Ministry of Agriculture

 • The Union Jal Shakti Ministry has recently launched a unified portal on the ‘Gobardhan’ scheme. The portal aims to monitor the progress made under the scheme. The ‘Gobardhan’ scheme was launched by the Government of India to manage cattle and biodegradable waste and also help enhance farmers’ income. It is being implemented under the Swachch Bharat Mission Grameen–Phase 2.

2. ‘Pragyan Bharati’ and ‘Bhasha Gourab’ are the recent initiatives of which Indian state?

A) Uttarakhand

B) Assam

C) Telangana

D) Odisha

 • Assam Chief Minister Sarbananda Sonowal recently launched two schemes named ‘Pragyan Bharati’ and ‘Bhasha Gourab’.
 • Under Pragyan Bharati scheme, funds are provided to college students for purchasing text books while under the Bhasha Gourab scheme, the state government provides financial assistance to 21 Sahitya Sabhas (literary bodies).

3. Which country hosted the Indian Ocean Region (IOR) Defence Ministers’ Conclave in February 2021?

A) Sri Lanka

B) India

C) Bangladesh

D) Maldives

 • India hosted the Indian Ocean Region (IOR) Defence Ministers’ Conclave on February 4, 2021 on the side–lines of Aero India 2021 event.
 • The broad theme of the conclave is ‘Enhanced Peace, Security and Cooperation in the Indian Ocean’. During the conclave, India announced that it is ready to supply missile systems, LCA and other weapons systems to the countries in Indian Ocean Region.

4. What is the classification of Fishing Cat, as per IUCN Red list?

A) Least Concern

B) Endangered

C) Vulnerable

D) Extinct

 • Fishing Cat is a special cat species that is found in wetland and mangrove ecosystems.
 • The cat species is classified as ‘Vulnerable’ as per IUCN Red list. A team named Fishing Cat Conservation Alliance has been formed that comprise of conservationists, researchers and enthusiasts across the world working to conserve and protect Fishing Cat species.

5. Which technology entrepreneur has been appointed to the National Security Advisory Board (NSAB)?

A) Rajni Bector B) Rattan Lal

C) Sridhar Vembu D) Ali Manikfan

 • The founder of the Indian multinational Software company Zoho, Sridhar Vembu has been appointed to the National Security Advisory Board (NSAB).
 • The board is led by National Security Advisor (NSA) Ajit Doval. Other new members are former ISRO Chairman K Radhakrishnan, academic member Anshuman Tripathy and former ambassador Arun K Singh.

6. Praveen Sinha has been appointed as the Acting Chief of which Indian organisation?

A) Intelligence Bureau

B) Central Vigilance Commission

C) Central Bureau of Investigation

D) Election Commission of India

 • The Additional Director of the Central Bureau of Investigation (CBI), Praveen Sinha has been appointed as the acting chief of CBI.
 • After Rishi Kumar Shukla who retired recently, the acting Chief has been appointed till a decision on a New Director is taken. This is the third time in last five years that an interim chief will head CBI.

7. India’s first thunderstorm research testbed is to be set up in which state/UT?

A) Tamil Nadu

B) Odisha

C) West Bengal

D) Maharashtra

 • The India Meteorological Department (IMD) has announced that the country’s first thunderstorm research testbed is to be set up in Balasore, Odisha.
 • The testbed will be established in a collaboration between the Ministry of Earth Sciences, IMD, DRDO and ISRO. It aims to reduce human fatalities and loss of property due to lightning strikes.

8. Which global digital payment company has announced to shut down its payment operations in India?

A) PayPal

B) Capital One

C) American Express

D) AeroPay

 • American digital payments major, PayPal Inc. announced that it will shut down its payment operations in the country.
 • PayPal, which was offering its payment gateway to Indian brands and online merchants, will shut down its domestic payment services in India, from April 1. It was also providing international remittance services for small and medium enterprises.

9. ‘KAPILA’ programme, which was making news recently, is associated with which sector?

A) Science

B) Politics

C) Business

D) Intellectual Property Rights

 • In October 2020, the Union Education Minister Shri Ramesh Pokhriyal ‘Nishank’ virtually launched the ‘KAPILA’ Kalam Program for Intellectual Property Literacy and Awareness campaign.
 • Under the programme students of higher educational institutions will get information about the system of application process for patenting their invention. It aims to create awareness about the Intellectual Property Rights.

10. India recently participated in the first meeting of Joint Working Group in the field of Renewable Energy, with which country?

A) Saudi Arabia

B) Bahrain

C) France

D) Japan

 • The first meeting of the Joint Working Group in the field of Renewable Energy between India and the Kingdom of Bahrain was held recently in virtual format.
 • A Memorandum of Understanding (MoU) was signed between India and Bahrain in July 2018, for promoting bilateral cooperation in the field of Renewable Energy. The meeting focussed on enhanced cooperation in the field of solar, wind and clean hydrogen.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *