TnpscTnpsc Current Affairs

9th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

9th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 9th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

February Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. இந்தியாவின் முதல் பெண் ரபேல் போர் விமானி யார்?

அ) ஷிவாங்கி சிங் 

ஆ) பாவனா காந்த்

இ) மோகனா சிங்

ஈ) அவனி சதுர்வேதி

  • நாட்டின் முதல் பெண் ரபேல் போர்விமானி ஷிவாங்கி சிங் குடியரசு தின அணிவகுப்பில் இந்திய விமானப்படையின் அலங்கார ஊர்தியில் பங்கேற்றார்.
  • கடந்த ஆண்டு பிளைட் லெப்டினன்ட் பாவனா காந்த், IAF அலங்கார ஊர்தியின் ஒருபகுதியாக இருக்கும் முதல் பெண் போர் ஜெட் விமானி ஆனார். ஷிவாங்கி சிங், IAF அலங்கார ஊர்தியில் ஓர் அங்கமாக விளங்கும் 2ஆவது பெண் போர் ஜெட் விமானி ஆனார்.

2. இந்தியாவின் முதல் ‘கிராபீன் புத்தாக்க மையத்தை’ அமைப்பதற்கான எந்த மாநில அரசின் திட்டத்திற்கு MeiTY ஒப்புதல் அளித்துள்ளது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா 

இ) ஒடிஸா

ஈ) கர்நாடகா

  • இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்தியாவின் முதலாவது ‘கிராபீன் புத்தாக்க மையத்தை’ அமைப்பதற்கு கேரள மாநில அரசுக்கு ஒப்புதலளித்துள்ளது.
  • கேரள மாநில அரசு நடத்தும் கேரள டிஜிட்டல் பல்கலை, CMET-திருச்சூர் உடன் இணைந்து, ‘கிராபீன் இந்தியா புத்தாக்க மையம்’, R&D அடைவு மையத்தை அமைக்க உள்ளது. கேரள அரசின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் இதற்கு, TATA ஸ்டீல் லிட் தொழிற்துறை பங்குதாரராக இருக்கும். கிராபீன் என்பது உலகின் மிகமெல்லிய மற்றும் வலிமையான பொருளாகும்.

3. உலகின் மிகப்பெரிய கடல் மடையான இஜ்முய்தீன் கடல் மடையை திறந்த நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) நெதர்லாந்து 

இ) ஆஸ்திரேலியா

ஈ) இந்தியா

  • டச்சு மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் அதிகாரப்பூர்வ -மாக இஜ்முய்தீன் கடல் மடையைத் திறந்து வைத்தார். இது உலகின் மிகப்பெரிய கடல் மடை என்று கூறப்படுகிறது. வடகடல் கால்வாயை ஆம்ஸ்டர்டாம் துறைமுகத்துடன் இணைக்கும் துறைமுக நகரமான இஜ்முய்தீனில் 500-மீட்டர் நீளமும் 70-மீட்டர் அகலமும் கொண்ட இந்த மடை அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த மடை ஆழமாக இருப்பதால் கப்பல்கள் கால்வாயில் நுழைவதற்கு சாதகமான நீர்மட்டத்திற்காக காத்திருக்க வேண்டியதில்லை.

4.‘மூலதனப்பொருட்கள் துறையின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கான திட்டத்துடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ) எஃகு அமைச்சகம்

ஆ) கனரக தொழில்துறை அமைச்சகம்

இ) ஜவுளி அமைச்சகம்

ஈ) வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் 

  • வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் மூலதனப் பொருட்கள் துறையில் போட்டித்தன்மையை மேம்படுத்து -வதற்கான திட்டத்தின் 2ஆம் கட்டத்தை அறிவித்தது. இத் திட்டம் `1,207 கோடி நிதி ஒதுக்கீட்டில் அறிவிக்கப்பட்டது.
  • இதில் `975 கோடியை அரசாங்கத்தின் பட்ஜெட் மூலமும் மீதமுள்ள `232 கோடி தொழில்துறை பங்களிப்பு மூலமும் பெறப்படும்.

5. ‘உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) ஜனவரி 25

ஆ) ஜனவரி 30 

இ) பிப்ரவரி 1

ஈ) பிப்ரவரி 3

  • புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வோர் ஆண்டும் ஜன.30 அன்று ‘உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் நாள்’ அனுசரிக்கப்படுகிறது. “Achieving health equity to end the neglect of poverty-related diseases” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில்வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள் ஆகும்.
  • சிக்குன்குனியா, டெங்கு, தொழுநோய் மற்றும் ரேபிஸ் போன்றவை புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்க -ளுக்கான சில எடுத்துக்காட்டுகள். இவ்வகை நோய்கள் உலகளவில் 1 பில்லியன் மக்களைப் பாதிக்கின்றன.

6. ‘ஆல்பர்ட் ஏரி’, எந்த இருநாடுகளுக்கு இடையேயான எல்லையாக அமைந்துள்ளது?

அ) உகாண்டா-காங்கோ மக்களாட்சிக் குடியரசு 

ஆ) அல்ஜீரியா-லிபியா

இ) தென்னாப்பிரிக்கா – தான்சானியா

ஈ) உகாண்டா – எத்தியோப்பியா

  • 2 மிகப்பெரும் எண்ணெய் நிறுவனங்களான பிரான்சின் டோட்டல் எனர்ஜிஸ் மற்றும் சீனா நேஷனல் ஆஃப்ஷோர் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியன உகாண்டாவின் எரிசக்தி வளங்களை மேம்படுத்துவதற்கும் பிராந்திய எண்ணெய் குழாய் அமைப்பதற்கும் 10 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • உகாண்டாவிற்கும் காங்கோ மக்களாட்சிக் குடியரசிற்கும் இடையே 160 கிமீட்டர் இயற்கை எல்லையான ஆல்பர்ட் ஏரியிலுள்ள கச்சா எண்ணெய் இருப்புக்களை எடுப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

7. பாஸ்சிம் லெகர் என்பது எந்த நாடு நடத்திய கூட்டு பாதுகாப்புப் பயிற்சியாகும்?

அ) நேபாளம்

ஆ) இந்தியா 

இ) பங்களாதேஷ்

ஈ) மியான்மர்

  • ‘பாஸ்சிம் லெகர்’ என்ற பெயரில் கடற்படையின் மேற்கு மண்டலக்கட்டுப்பாட்டு மையம் மேற்கொண்ட கூட்டுக் கடல்சார்பயிற்சி 2022 ஜன.25 அன்று நிறைவடைந்தது.
  • இந்திய கடற்படை, வான்படை, இராணுவம் & கடலோரப் பாதுகாப்புப்படைகள் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்ப -தற்காகவும், தனது செயல்பாட்டுத் திட்டங்களை மதிப்பிடு -வதற்காக இந்திய கடற்படையின் மேற்கு மண்டலக் கட்டுப்பாட்டு மையம் இக்கூட்டுப்பயிற்சியை 20 நாட்கள் நடத்தியது.

8. ‘டிரோன் சான்றளிப்புத் திட்டத்தை’ வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?

அ) அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ) சிவில் வான்போக்குவரத்து அமைச்சகம் 

இ) மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ) தகவல் & ஒலிபரப்பு அமைச்சகம்

  • மத்திய உள்நாட்டு வான்போக்குவரத்து அமைச்சகமானது குறைந்தபட்ச பாதுகாப்பு மற்றும் தரத்தேவைகளை உறுதி செய்வதற்கும் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற் -குமாக ‘டிரோன் சான்றளிப்புத் திட்டத்தை’ அறிவித்தது.
  • தாராளமயமாக்கப்பட்ட டிரோன் விதிகள், 2021’இன்கீழ் வெளியிடப்பட்ட இதன் நோக்கம், டிரோன்களுக்கான பாதுகாப்புத் தேவைகளுக்கான குறைந்தபட்சத் தேவைக -ளை வழங்குவதும், சான்றிதழுக்கான மதிப்பீட்டை செயல்படுத்துவதும் ஆகும்.
  • தாராளமயமாக்கப்பட்ட டிரோன் விதிகள், 2021, ஆகஸ்ட் 2021’இல் MoCA’ஆல் வெளியிடப்பட்டது.

9. UNESCO பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்ட ‘கிளிங்கர் படகுகள்’ சார்ந்த பகுதி எது?

அ) நோர்டிக் நாடுகள் 

ஆ) பால்டிக் நாடுகள்

இ) பால்கன் பகுதிகள்

ஈ) கீழை ஆப்பிரிக்க நாடுகள்

  • மனிதகுலத்தின் தொட்டுணர முடியா கலாச்சார பாரம்பரி -யத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாரம்பரியங்களின் பட்டியலில் UNESCO ‘கிளிங்கர் படகுகளை’ சேர்த்துள்ளது.
  • டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் கூட்டாக UNESCO’இடம் இதற்காக நாடின. இது ஒரு நோர்டிக் பாரம்பரியம் ஆகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, பாய்மரப்படகுகள் வட ஐரோப்பாவின் வர்த்தகத்திற்கு உதவியுள்ளன.

10. முதல் இந்திய-மத்திய ஆசிய உச்சிமாநாட்டை நடத்திய நாடு எது?

அ) இந்தியா 

ஆ) கஜகஸ்தான்

இ) தஜிகிஸ்தான்

ஈ) உஸ்பெகிஸ்தான்

  • இந்திய-மத்திய ஆசிய உச்சிமாநாட்டை இந்தியா மெய் நிகர் வடிவத்தில் நடத்தியது. இந்தியாவுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் முப்பது ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், இந்தியாவும் மத்திய ஆசிய நாடுகளும் ஒரு இலட்சிய பார்வையை வரையறுக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
  • கஜகஸ்தான், கிர்கிஸ்தான் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட ஐந்து நாடுகளின் அதிபர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வங்கிக் கணக்கில் மோசடி; வாடிக்கையாளர் பணத்தை மீட்க ‘155260’ ஹெல்ப் லைன் அறிமுகம்: சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை

வங்கிக்கணக்கிலிருந்து வாடிக்கையாளர்களின் பணத்தை நூதனமுறையில் கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதைத் தடுக்க சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, ‘155260’ என்ற உதவி எண் சைபர் கிரைம் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2. ஆசிய பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானி முதலிடம்: பின்தங்கினார் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி

ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் தொழிலதிபர் கவுதம் அதானி. தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டார்.

59 வயதாகும் கவுதம் அதானின் சொத்து மதிப்பு 8,850 கோடி டாலராக உயர்ந்துள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 8,790 கோடி டாலராக உள்ளது.

கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 1,200 கோடி டாலர் அதிகரித்ததில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்த ஆண்டில் உலகிலேயே அதிகபட்ச வருமானத்தை ஈட்டிய தொழிலதிபர் என்ற பெருமையும் இவரைச் சாரும்.

நிலக்கரி சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட அதானி நிறுவனம் ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கத்துக்கு பெற்ற அனுமதி பெரும் சர்ச்சைக்குள்ளானது.

பருவநிலை மாறுபாடு விழிப்புணர்வு ஆதரவாளர்கள் பலரும் நிலக்கரி சுரங்கத் தொழில் குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மரபுசாரா எரிசக்தித் தொழிலில் அதிக கவனம் செலுத்தி வருகிறது அதானி குழுமம். இது தவிர விமான நிலைய பராமரிப்பு, ராணுவ தளவாட ஒப்பந்த பணி உள்ளிட்ட தொழில்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த 2 ஆண்டில் அதானி குழுமபங்குகள் விலை 600% அளவுக்கு அதிகரித்துள்ளன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அடுத்த 3 ஆண்டுகளில் பசுமை சார்ந்த எரிசக்திக்கென 1,000 கோடி டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார். அதானி அடுத்த 8 ஆண்டுகளில் 7,000 கோடி டாலர் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

1. Who is India’s first woman Rafale fighter jet pilot?

A) Shivangi Singh 

B) Bhawana Kanth

C) Mohana Singh

D) Avani Chaturvedi

  • The country’s first woman Rafale fighter jet pilot Shivangi Singh was part of the Indian Air Force tableau at the Republic Day parade. Last year, Flight Lieutenant Bhawna Kanth became the first female fighter jet pilot to be part of the IAF tableau. Shivangi is only the second woman fighter jet pilot to be part of the IAF tableau.

2. MeiTY has approved the project of state to set up India’s first ‘Graphene Innovation Centre’?

A) Tamil Nadu

B) Kerala 

C) Odisha

D) Karnataka

  • The Ministry of Electronics and IT, Government of India, has given approval to Kerala for setting up India’s first ‘Graphene Innovation Centre’. The state–run Digital University Kerala (DUK), along with CMET–Trichur, is to set up “India Innovation Centre for Graphene”, an R&D incubation centre.
  • It will be implemented with the support of Government of Kerala, and Tata Steel Ltd will be the industrial partner of the centre. Graphene is the thinnest and strongest material in the world.

3. Which country inaugurated the Ijmuiden Sea Lock, the world’s largest sea lock?

A) USA

B) The Netherlands 

C) Australia

D) India

  • Dutch King Willem–Alexander officially opened the Ijmuiden Sea Lock, which is claimed to be the largest sea lock in the world. The 500–metre long and 70–metre–wide structure replaces a smaller 100–year–old one at Ijmuiden, a port city connecting the North Sea Canal to the port of Amsterdam. The structure is deep enough that ships will not have to wait for a favourable water level to enter the canal.

4. ‘Scheme for enhancement of competitiveness of capital goods sector’ is associated with which Ministry?

A) Ministry of Steel

B) Ministry of Heavy Industries 

C) Ministry of Textiles

D) Ministry of Commerce and Industry

  • Ministry of Commerce and Industry notified the second phase of the scheme for enhancement of competitiveness in the capital goods sector. The scheme was notified with a financial outlay of ₹1,207 crore.
  • It would consist of a budgetary support from the government of ₹975 crore and the rest of ₹232 crore would come through the industry contribution.

5. When is the ‘World Neglected Tropical Diseases Day’ observed?

A) January 25

B) January 30 

C) February 1

D) February 3

  • ‘World Neglected Tropical Diseases Day’ is observed on January 30 every year, to raise awareness on neglected tropical diseases.
  • This year’s World NTD Day was commemorated under the theme “Achieving health equity to end the neglect of poverty–related diseases”. Some examples of NTDs are Chikungunya, Dengue, Leprosy and Rabies among others. They affect 1 billion people globally.

6. ‘Lake Albert’ is located as a border between which two countries?

A) Uganda–Democratic Republic of Congo 

B) Algeria–Libya

C) South Africa– Tanzania

D) Uganda– Ethiopia

  • Two Oil Giants– France’s TotalEnergies and the China National Offshore Oil Corporation (CNOOC) signed a USD 10 million deal to develop Uganda’s energy resources and build a regional oil pipeline.
  • The project aims to exploit the crude oil reserves at Lake Albert, a 160–kilometre natural border between Uganda and the Democratic Republic of Congo.

7. Paschim Lehar, is a joint Defence Exercise held by which country?

A) Nepal

B) India 

C) Bangladesh

D) Myanmar

  • A joint maritime exercise Paschim Lehar was conducted by the Indian Navy concluded off the West Coast recently. The Exercise aims to enhance the inter–service synergy among the Indian Navy, Indian Air Force, Indian Army and Coast Guard.
  • It was conducted over a duration of 20 days with participation of various equipment of the armed forces.

8. Which Ministry released the ‘Drone certification scheme’?

A) Ministry of Science and Technology

B) Ministry of Civil Aviation 

C) Ministry of Electronics and IT

D) Ministry of Information and Broadcasting

  • The Ministry of Civil Aviation (MoCA) notified a ‘Drone certification scheme (DCS)’ to ensure minimum safety and quality requirements and to boost indigenous manufacturing.
  • The objective of this DCS, released under liberalized Drone Rules, 2021, is to provide the minimum requirements for security requirements for drones and enable their evaluation for certification. The liberalised Drone Rules, 2021, was released by the MoCA in Aug–2021.

9. ‘Clinker Boats’ which were added to UNESCO Heritage List, belongs to which region?

A) Nordic Countries 

B) Baltic Countries

C) Balkan States

D) East African Countries

  • UNESCO has added ‘Clinker Boats’ to its list of traditions that represent the Intangible Cultural Heritage of Humanity.
  • Denmark, Finland, Iceland, Norway and Sweden jointly sought the UNESCO designation. It is a Nordic Tradition and for thousands of years, wooden sailboats enabled the peoples of Northern Europe to undertake trade.

10. Which country played host to the first India–Central Asia Summit?

A) India 

B) Kazakhstan

C) Tajikistan

D) Uzbekistan

  • India hosted first India–Central Asia Summit in a virtual format. Prime Minister Narendra Modi stressed on the need for India and Central Asian countries to define an ambitious vision, as the relations completed 30 years. The event that saw a participation of the Presidents of five countries, including Kazakhstan, the Kyrgyz Republic, Tajikistan, Turkmenistan, and Uzbekistan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!