Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

9th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

9th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 9th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

9th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. தாய்மார்கள், இளம்பருவத்தினர் மற்றும் குழந்தைகளின் உடல் பருமனை தடுப்பதற்கான தேசிய மாநாட்டை நடத்திய நிறுவனம் எது?

அ) NITI ஆயோக்

ஆ) எய்ம்ஸ்

இ) உலக சுகாதார அமைப்பு

ஈ) யுனிசெஃப்

  • தாய்மார்கள், இளம்பருவத்தினர் & குழந்தைகளின் உடல் பருமனை தடுப்பதற்கான தேசிய மாநாட்டை NITI ஆயோக் கூட்டியது. உடல் பருமனை ஓர் “அமைதியான தொற்று” என NITI ஆயோக் கூறுகிறது.
  • செயல்பாடு மற்றும் நலமான வாழ்வுமுறையை மேம்படுத்துவதற்காக இளம்பருவத்தினரை இலக்காகக்கொண்ட பல்துறை அணுகுமுறை தேவை என NITI ஆயோக் கூறியது. உலகளாவிய வல்லுநர்கள் மற்றும் UNICEF, WHO மற்றும் WFP உள்ளிட்ட ஐநா அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

2. SCM, AMRUT & PMAY (U) ஆகிய திட்டங்களை செயல்படுத்துகிற அமைச்சகம் எது?

அ) நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம்

ஆ) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

இ) உழவு மற்றும் உழவர்நல அமைச்சகம்

ஈ) சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

  • பொலிவுறு நகரங்கள் திட்டம், அம்ருத், பிரதமரின் வீட்டு வசதி திட்டம் ஆகிவற்றின் ஆறாவது ஆண்டு விழாவை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் கொண்டாடியது. 2022ஆம் ஆண்டுக்குள் அனைவரும் வீட்டுவசதியை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமரின் வீட்டு வசதி திட்டம் 2015 ஜூன்.25 அன்று தொடங்கப்பட்டது.

3. பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணி கட்டமைப்பின் ஒப்பந்தத்தை ஏற்புறுதி செய்த முதல் நாடு எது?

அ) டென்மார்க்

ஆ) பின்லாந்து

இ) பிஜி

ஈ) ஆஸ்திரேலியா

  • பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணி (ISA) என்பது நூற்றியிருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் ஓர் அரசுகளுக்கிடையேயான கூட்டணியாகும். இந்தியாவால் தொடங்கப்பட்ட இந்தக் கூட்டணி குருகிராமை தலைமை இடமாகக்கொண்டுள்ளது. அண்மையில், டென்மார்க், பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணி கட்டமைப்பு ஒப்பந்தத்திற்கு ஏற்புறுதி அளித்தது. இதன் மூலம், இவ்வாறு செய்த முதல் நாடு டென்மார்க் ஆனது.

4. K417N திரிபு, SARS-CoV-2 வைரஸின் எந்த வகைப்பாட்டுடன் தொடர்புடையது?

அ) ஆல்பா

ஆ) பீட்டா

இ) டெல்டா

ஈ) டெல்டா பிளஸ்

  • கடந்த 2020 அக்டோபரில், இந்திய அறிவியலாளர்கள், டெல்டா வகை வைரஸை அடையாளங்கண்டு உலகளாவிய தரவுத்தளத்தில் சமர்ப்பித்தனர். SARS-CoV-2 B.1.617 என்றும் அழைக்கப்படும் டெல்டா வகை, சுமார் 15-17 திரிபுகளைக் கொண்டுள்ளது. இந்த டெல்டா வகை (B.1.617) B1.617.1, B.1.617.2 மற்றும் B.1.617.3 ஆகிய மூன்று துணை வகைகளைக் கொண்டுள்ளது. அவற்றுள் B.1.617.2 (டெல்டா பிளஸ்) ஆனது கவலைகொள்ளத்தக்க மாறுபாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. டெல்டா பிளஸ் வகையில், ‘K417N திரிபு’ என்ற கூடுதல் திரிபும் உள்ளது.

5. இந்தியாவில், ‘இலாப நோக்கற்ற’ மாதிரி மருத்துவமனை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) ஐ.சி.எம்.ஆர்

ஆ) NITI ஆயோக்

இ) எய்ம்ஸ்

ஈ) ஐ.எம்.ஏ.

  • இலாபநோக்கற்ற மருத்துவமனை தொடர்பான துறையில் கொள்கைகளை வலுப்படுத்தவும், இதுபோன்ற நிறுவனங்கள்பற்றிய தகவல்களில் நிலவும் இடைவெளியைக் குறைக்கவும், லாப நோக்கற்ற மாதிரி மருத்துவமனை குறித்த விரிவான ஆய்வறிக்கையை NITI ஆயோக் வெளியிட்டது.
  • இலாப நோக்கில்லாத மாதிரி மருத்துவமனைகளின் செயல்பாடுகளை இந்த ஆய்வறிக்கை எடுத்துரைக்கிறது. இதனை, தனியார் மருத்துவ மனைகள் மற்றும் மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களுடன் ஒப்பீடும் செய்யப்பட்டுள்ளது. இலாப நோக்கற்ற மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படும் கட்டணக் குறைவு உத்திகள் பற்றி இந்த அறிக்கை விரிவாக விவாதிக்கிறது.

6. நடப்பாண்டுக்கான (2021) உலக மொபைல் மாநாட்டை நடத்தும் நிறுவனம் எது?

அ) IEEE

ஆ) GSMA

இ) ITU

ஈ) OMA

  • உலகின் மிகப்பெரிய, புதிய மொபைல்கள் வெளியீட்டு நிகழ்வான உலக மொபைல் மாநாடு, ஜூன்.28 அன்று ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரத்தில் தொடங்கியது. கடந்த ஆண்டு, COVID-19 தொற்று காரணமாக இந்நிகழ்வு இரத்து செய்யப்பட்டிருந்தது. கூகிள், நோக்கியா, ஷாவ்மி, பேஸ்புக் மற்றும் சோனி போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டின் நேரடி நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
  • பார்சிலோனாவில் GSMAஆல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்நிகழ்வு, தொலைத்தொடர்புத்துறையின் புதுமைகளை காட்சிப்படுத்துகிறது.

7. இனநீதி & சமத்துவமின்மை குறித்த உலகளாவிய அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) உலக வங்கி

ஆ) UNHRC

இ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஈ) யுனிசெஃப்

  • இனநீதி மற்றும் சமத்துவமின்மை குறித்த அறிக்கையை ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் வெளியிட்டு, ஐநா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்தார்.
  • இவ்வறிக்கையின்படி, ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான இனவெறி, இன்னும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகிறது. உலகளவில் ஆப்பிரிக்கர்கள் & ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த 190 பேரின் இறப்புகள் குறித்த தகவல்கள் சட்ட அமலாக்க அதிகாரிகளின் கைகளில் இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.

8. நடப்பாண்டின் (2021) போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோதமான போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Share Facts on Drugs, Save Lives

ஆ) Better Knowledge for Better Care

இ) Justice for Health

ஈ) Listen First

  • போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டத்துக்குப்புறம்பான போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச நாளானது ஜூன்.26 அன்று அனுசரிக்கப்படுகிறது. போதைப்பொருள் பயன்பாடற்ற ஒரு நிலையான உலகினை அடைவதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, உலகம் முழுவதும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • “Share Facts on Drugs, Save Lives” என்பது நடப்பாண்டில் (2021) வந்த இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.

9. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘சாம்பல் பட்டியல்’ என்பதுடன் தொடர்புடைய நிறுவனம் எது?

அ) WHO

ஆ) FATF

இ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஈ) உலக வங்கி

  • பாரிஸைச் சார்ந்த நிதி செயற்பாட்டு பணிக்குழு (FATF) என்பது பண மோசடி மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதியுதவிகளை கண்காணிக்கும் உலகளாவிய அமைப்பாகும்.
  • FATF, ஒரு நாட்டை ‘சாம்பல் பட்டியலில்’ வைக்கின்றது எனில், அந்நாடு அதிகப்படியான கண்காணிப்புக்கு உள்ளாகிறது என்பது பொருளாகும். சமீபத்தில், மால்டா, ஹைத்தி, பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு சூடான் மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றை அதன் சாம்பல் நாடுகளின் பட்டியலில் FATF சேர்த்தது. கானாவை பட்டியலில் இருந்து FATF நீக்கியுள்ளது.

10 சமீபத்தில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்ற அபிஷேக் வர்மாவுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) பூப்பந்து

ஆ) துப்பாக்கிச்சுடுதல்

இ) வில்வித்தை

ஈ) குத்துச்சண்டை

  • தனிநபர் ‘காம்பவுண்ட்’ பிரிவு வில்வித்தை போட்டியில் இரண்டு உலகக் கோப்பை தங்கப்பதக்கங்களை வென்ற முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை அபிஷேக் வர்மா உருவாக்கியுள்ளார். அவர் அண்மையில், பாரிஸில் நடைபெற்ற வில்வித்தை உலகக்கோப்பை ‘நிலை-3’இல் ஆண்கள் தனிநபர் கலப்புப் போட்டியில் தங்கம் வென்றார். முன்பு, 2015’ இல் வுரோக்லாவில் நடந்த தனிநபர் நிகழ்வில் தங்கம் வென்றிருந்தார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஐந்து விளையாட்டு வீரர்களுக்கு தலா `5 இலட்சம் ஊக்கத்தொகை: அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள 5 விளையாட்டு வீரர்களுக்கு தலா `5 இலட்சத்தை விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ வீ மெய்யநாதன் அளித்தார்.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள தடகள விளையாட்டு வீரர்கள் ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி ஆகிய 5 வீரர்களுக்கு தலா `5 இலட்சத்துக்கான காசோலைகளை அவர்களது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 வீரர்களுக்கு தலா `5 இலட்சத்தை முதலமைச்சர் ஏற்கனவே வழங்கி உள்ளார். அவர்களுடன் இப்போது கூடுதலாக 5 வீரர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.

2. அரியலூர் மாளிகைமேடு அகழாய்வில் கூடுதல் சுவர் கண்டுபிடிப்பு

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அடுத்த மாளிகை மேட்டில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சிப் பணியில், மாளிகையின் கூடுதல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கீழடி, ஆதிச்சநல்லூர், கங்கைகொண்ட சோழபுரம் உள்பட 7 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் அருகேயுள்ள மாளிகை மேடு பகுதியில் கடந்த மார்ச்சில் முதற்கட்ட ஆய்வுப்பணிகள் நடைபெற்று, அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த ஆய்வில் பானை ஓடுகள், கூரை ஓடுகள், ஆணி வகைகள், செப்புக் காசு, மாளிகையின் சுவர், காப்பர் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இதனிடையே, கரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் அகழாய்வுப்பணிகள் நிறுத்தப்பட்டன. ஜூன்.15’க்குப் பிறகு பொதுமுடக்கத்தில் தளர்வுகளை அரசு அறிவித்ததையடுத்து அகழாய்வுப்பணிகள் மீண்டும் தொடங்கின. மாளிகை மேட்டில் உள்ள மாளிகையின் சுவர் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் கூடுதல் சுவர் கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து தொல்லியல் துறை அலுவலர்கள் கூறுகையில், இப்பகுதியில் புதைந்துள்ள மாளிகையின் சுவர்கள் தற்போது கண்டறியப்பட்டு வருகின்றன. இங்கு கண்டறியப்படும் ஆணி, ஓடுகள் உள்ளிட்ட பொருள்கள் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். தற்போது கண்டறியப்பட்டுள்ள வடிகால் போன்ற சுவர் முழு ஆய்வுக்கு பிறகே எவ்வகையான சுவர் எனத் தெரியவரும். மேலும், முழுமையாக தெரியும் வகையில் பாதுகாப்புடன் பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க பொருள்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.

1. Which institution convened the National Convention on Prevention of Maternal, Adolescent and Childhood Obesity?

A) NITI Aayog

B) AIIMS

C) World Health Organisation

D) UNICEF

  • India’s premier think tank the NITI Aayog had convened a National Convention on Prevention of Maternal, Adolescent and Childhood Obesity. NITI Aayog described obesity as a silent epidemic. It also called for a multi–sectoral approach to target the adolescents for promoting activity and healthy lifestyle. Global experts and representatives from UN bodies including UNICEF, WHO and WFP participated.

2. Which Ministry implements the schemes: SCM, AMRUT and PMAY(U)?

A) Ministry of Health and Family Welfare

B) Ministry of Housing and Urban Affairs

C) Ministry of Agriculture and Farmers Welfare

D) Ministry of Law and Justice

  • The Pradhan Mantri Awas Yojana Urban (PMAY–U) was launched on 25th June, 2015, with an aim to achieve Housing for all by the year 2022. 6 years completed after the launch of three schemes of MoHUA– Ministry of Housing and Urban Affairs: Smart Cities Mission, AMRUT and Pradhan Mantri Awas Yojana–Urban (PMAY–U).

3. Which is the first country to ratify the International Solar Alliance Framework Agreement?

A) Denmark

B) Finland

C) Fiji

D) Australia

  • The International Solar Alliance is an intergovernmental coalition of over 120 countries, initiated by India and is headquartered at Gurugram. Recently, Denmark ratified the International Solar Alliance Framework Agreement and by doing so, it became the first country to do so.

4. K417N mutation is associated with which classification of SARS–CoV–2 virus?

A) Alpha

B) Beta

C) Delta

D) Delta Plus

  • Indian scientists identified the Delta Variant in October 2020 and submitted to Global Database. Delta variant, also known as SARS–CoV–2 B.1.617, has about 15–17 mutations.
  • This Delta variant (B.1.617) has three subtypes B1.617.1, B.1.617.2 and B.1.617.3, among which the B.1.617.2 (Delta Plus) has been classified as a Variant of Concern. The Delta Plus variant has an additional mutation named ‘K417N mutation’.

5. Which institution released a study on the ‘not–for–profit’ hospital model in India?

A) ICMR

B) NITI Aayog

C) AIIMS

D) IMA

  • Indian Government’s think tank NITI Aayog released a comprehensive study on the ‘not–for–profit’ hospital model in the country.
  • It presents research–based findings on not–for–profit hospitals and makes comparisons with private hospitals and health schemes of the Union Government. It also discusses the cost–containment strategies implemented by not–for–profit hospitals.

6. Which institution hosts the Mobile World Congress 2021?

A) IEEE

B) GSMA

C) ITU

D) OMA

  • The world’s biggest mobile event of the year Mobile World Congress (MWC), began in hybrid form on June 28 in Barcelona, a city in Spain.
  • Last year, the event got cancelled due to high number of cases of COVID–19. Top Brands like Google, Nokia, Xiaomi, Facebook and Sony are not attending this year’s in–person event. MWC Barcelona, is an annual event focused on innovations in telecom industry, hosted by GSMA.

7. Which institution published a global report on Racial Justice and Inequality?

A) World Bank

B) UNHRC

C) IMF

D) UNICEF

  • The United Nations Human rights chief released a report on Racial Justice and Inequality and submitted to the UN Human Rights Council.
  • As per the report, racism against people of African descent still remains systemic in many parts of the world. The report highlighted 190 deaths of Africans and people of African descent globally at the hands of law enforcement officials.

8. What is the theme of the ‘International Day Against Drug Abuse and Illicit Trafficking’ 2021?

A) Share Facts on Drugs, Save Lives

B) Better Knowledge for Better Care

C) Justice for Health

D) Listen First

  • International Day Against Drug Abuse and Illicit Trafficking is observed on June 26. The Day is observed worldwide to strengthen action and cooperation in achieving the goal of a sustainable world free of substance abuse. The theme of the Day this year is ‘Share Facts on Drugs, Save Lives’.

9. ‘Grey List’, which was sometimes seen in the news, is associated with which institution?

A) WHO

B) FATF

C) IMF

D) World Bank

  • Paris–based Financial Action Task Force (FATF) is the Global Watchdog dog for money laundering and terror financing.
  • When the FATF places a country in grey list, it means the country is subject to increased monitoring. Recently, it added Malta, Haiti, the Philippines and South Sudan to its grey list of countries and kept Pakistan on the list. It removed Ghana from the list after the country showed progress.

10. Abhishek Verma, who recently won a gold medal for India, is associated with which sports?

A) Badminton

B) Shooting

C) Archery

D) Boxing

  • Abhishek Verma created history by becoming the first man to win two World Cup gold medals in individual compound archery. He recently won the gold in the men’s individual compound event at the Archery World Cup Stage 3, being held in Paris. He had previously won gold at the individual event in Wroclaw in 2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!