TnpscTnpsc Current Affairs

9th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

9th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 9th June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ரிசர்வ் வங்கியின் 2022 ஜூன் மாத நிதிக் கொள்கைக் குழு கூட்டத்திற்குப் பிறகு ரெப்போ விகிதம் என்ன?

அ. 4.2 %

ஆ. 4.5 %

இ. 4.9 % 

ஈ. 5.0 %

  • ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகளாக 4.90% அளவிற்கு உயர்த்துவது என இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு முடிவுசெய்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதம் அளவுக்கு தொடரும் என்று இக்குழு கணித்துள்ளது. 2022–23ஆம் நிதியாண்டில் பணவீக்க விகிதம் 6.7 சதவீதமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.

2. கார்டுகள் மற்றும் UPI (2022 ஜூனுக்குப்பிறகு) மூலம் செய்யப்படும் ஆட்டோ டெபிட் பரிவர்த்தனைகளுக்கான புதிய வரம்பு என்ன?

அ. ரூ.5000

ஆ. ரூ.10000

இ. ரூ.15000 

ஈ. ரூ.20000

  • கார்டுகள் மற்றும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) மூலம் மேற்கொள்ளப்படும் ஆட்டோ டெபிட் பரிவர்த்தனைகளுக்கான வரம்பை இந்திய ரிசர்வ் வங்கி முந்தைய `5,000இலிருந்து `15,000ஆக உயர்த்தியது. ஒவ்வொரு முறையும் பணஞ்செலுத்தும்போது வாடிக்கையாளர்கள் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய கடவுச்சொல் (OTP) கொடுத்து பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வந்தனர். தற்போது `15,000 மதிப்பு வரையிலான பணப் பரிவர்த்தனைகளை OTP இல்லாமல் மேற்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

3. பாதுகாப்புப் பணியாளர்களின் தலைமைப் பதவிக்கு தகுதியுடைய அதிகாரிகளுக்கான வயது வரம்பு என்ன?

அ. 60

ஆ. 62 

இ. 65

ஈ. 70

  • உலங்கூர்தி விபத்தில் இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஆயுதப்படைகளின் சேவை விதிகளில் மத்திய அரசு திருத்தஞ்செய்துள்ளது. அந்தப் புதிய விதிகளின்படி, 62 வயதுக்குட்பட்ட முப்படைச்சேவைகளைச்சேர்ந்த 3 நட்சத்திரங்கள் மற்றும் நான்கு நட்சத்திர அதிகாரிகள் அனைவரும் CDS பதவிக்கு தகுதியுடையவர்கள். இதில் கடந்த ஈராண்டுகளில் ஓய்வுபெற்றவர்களும் அடங்குவர். CDS என்பது தரவரிசையில் மிகவும் உயர்ந்த அதிகாரி பதவியாகும்.

4. 75 கிமீ நீளப்பாதையை அமைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ள அமைப்பு எது?

அ. BRO

ஆ. NHAI 

இ. இந்திய இராணுவம்

ஈ. L & T கட்டுமான நிறுவனம்

  • அமராவதி மாவட்டத்தில் இருந்து அக்கோலா மாவட்டம் வரை NH53இல் ஒற்றை வழித்தடத்தில் பெட்ரோலிய உப பொருட்கள் மற்றும் சரளை கற்களுடனான கலவைமூலம் 105 மணி நேரம் 33 நிமிடங்களில் (5 நாட்களுக்குள்) சாலை அமைத்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கின்னஸ் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
  • முன்னதாக கடந்த 2019இல் கத்தார் தலைநகரம் தோகாவில் 25.275 கிமீ தொலைவிற்கு இத்தகைய சாலை அமைக்கப்பட்டதே இதுநாள் வரை கின்னஸ் உலக சாதனையாக இருந்தது.

5. ஆறு உலகக்கோப்பைகளில் பங்கேற்ற முதல் கிரிக்கெட் வீராங்கனை யார்?

அ. ஜூலன் கோஸ்வாமி

ஆ. மிதாலி ராஜ் 

இ. சார்லோட் எட்வர்ட்ஸ்

ஈ. கிளேர் டெய்லர்

  • பிரபல கிரிக்கெட் வீராங்கனை மிதாலி இராஜ், அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்தார். 39 வயதான இவர், இதுவரை ஆறு உலகக்கோப்பைகளில் பங்கேற்ற உலகின் முதல் மற்றும் ஒரே கிரிக்கெட் வீராங்கனை ஆவார். இந்தச் சாதனைக்காக அண்மையில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பாகிஸ்தானின் ஜாவேத் மியாண்டட் முதலானோர் இடம்பெற்றுள்ள பட்டியலில் இணைந்தார். 232 ஒருநாள் போட்டிகளில் 7,805 ரன்கள் குவித்ததே பெண்களுக்கான ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக உள்ளது. மொத்தம் 10,868 ரன்கள் குவித்து, இந்திய பெண்கள் கிரிக்கெட்டணியின் நீண்டகால அணித்தலைவராக இருந்தவர் மிதாலி.

6. உலகப் பொருளாதார மன்றத்தின் அதிநவீன உற்பத்தி மையங்களின் (AMHUB) உலகளாவிய வலையமைப்பில் இணைந்துள்ள இந்திய மாநிலம் எது?

அ. தெலுங்கானா

ஆ. ஆந்திர பிரதேசம் 

இ. ஒடிஸா

ஈ. கர்நாடகா

  • உலகப்பொருளாதார மன்றத்தின் (WEF) அதிநவீன உற்பத்தி மையங்களின் உலகளாவிய வலையமைப்பில் (AMHUBs) ஆந்திர பிரதேச மாநிலம் இணைந்துள்ளது. டாவோஸில் நடந்து வரும் WEF–இன் ஆண்டுக் கூட்டத்தின் ஒருபுறத்தில், ஆந்திர பிரதேச மாநிலமும் WEF–உம், “அதிநவீன உற்பத்தி & மதிப்பு சங்கிலிகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதில்” தங்களது கூட்டாண்மையை பரிமாறிக்கொண்டன. “மூவிங் இந்தியா” முயற்சிகளில் தெரிவான முதல் மாநிலமாக ஆந்திர பிரதேச மாநிலம் உள்ளது.

7. சர்க்கரை ஏற்றுமதிக்கான புதிய கட்டுப்பாடுகள் கீழ்காணும் எந்தத் தேதியிலிருந்து அமலுக்கு வருகின்றன?

அ. 2022 மே.01

ஆ. 2022 ஜூன்.01 

இ. 2022 ஆகஸ்ட்.01

ஈ. 2023 ஜனவரி.01

  • கோதுமை ஏற்றுமதியை கட்டுப்படுத்திய பிறகு, சர்க்கரை ஏற்றுமதிக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் ஜூன்.1 முதல் அமலுக்கு வரும். உள்நாட்டு சந்தையில் பொருட்களின் கிடைக்கும் தன்மையை அதிகரிப்பதற்கும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புவிசார் அரசியல் பதட்டங்களால் தூண்டப்பட்ட பணவீக்கத்தின் காரணமான விலை உயர்வுக்குப் பிறகு, உள்நாட்டுச் சந்தைகளில் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

8. 2022 – ‘WEF பயண மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் குறியீட்டில்’ இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ. 34

ஆ. 45

இ. 54 

ஈ. 43

  • உலகப் பொருளாதார மன்றத்தின் ஒரு சமீபத்திய ஆய்வு, 117 நாடுகளை மதிப்பீடு செய்து ‘பயண மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் குறியீட்டை’ வெளியிட்டது. இந்தியா ஒட்டுமொத்த தரவரிசையில் 54ஆவது இடத்தில் உள்ளது. 2019–இல் 46ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. இவ்வாய்வின்படி, COVID–19 தொற்றுநோயால் ஏற்பட்ட ஈராண்டு மந்த நிலைக்குப் பிறகு, இந்தியாவின் பயண மற்றும் சுற்றுலாத்துறையானது மீட்சிக்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளது.

9. இந்தியக் கடற்படையானது எந்த நாட்டு கடற்படையுடன் இணைந்து போங்கோசாகர் பயிற்சியில் பங்கேற்கிறது?

அ. பிரான்ஸ்

ஆ. வங்காளதேசம் 

இ. மியான்மர்

ஈ. நேபாளம்

  • இந்தியக் கடற்படை மற்றும் வங்காளதேச கடற்படை பங்கேற்கும் 3ஆவது இருதரப்பு பயிற்சியான, ‘போங்கோசாகர்’ வங்காளதேசத்தின் மோங்லா துறைமுகத்தில் தொடங்கியது. துறைமுகக் கட்டப் பயிற்சியைத் தொடர்ந்து வடக்கு வங்காள விரிகுடாவில் கடல்சார் பயிற்சிகள் நடைபெறும். போங்கோசாகர் பயிற்சியானது இரு கடற்படைகளுக்கு இடையே பரந்த அளவிலான கடல்சார் பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகளை நடத்துவதன்மூலம் கூட்டு செயல்பாட்டு திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

10. ‘ஊரகச் சாலைகளில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்த சர்வதேச மாநாடு’ ஏற்பாடு செய்யப்பட்ட நகரம் எது?

அ. கான்பூர்

ஆ. புது தில்லி 

இ. வாரணாசி

ஈ. சென்னை

  • “ஊரகச்சாலைகளில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள்” குறித்த மூன்று நாள் சர்வதேச மாநாட்டை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் தொடங்கி வைத்தார். தொடக்க அமர்வின் போது, புதிய “தொழில்நுட்பப் பார்வை, 2022” உள்ளிட்ட ஆவணங்கள் வெளியிடப்பட்டன. இத்தொலைநோக்கு ஆவணத்தின்கீழ், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மாற்றுப்பொருட்களைப் பயன்படுத்தி குறைந்தபட்சம் சரிபாதி ஊரகச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று ஊரக மேம்பாட்டு அமைச்சகம் கோருகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. கைவிடப்படும் ஜயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டம்: நிலங்கள் திரும்ப ஒப்படைப்பு

ஜயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் உரிமையாளர்களிடம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக கடந்த 1992ஆம் ஆண்டில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு 24 ஆண்டுகளாகியும் திட்டம் தொடங்கப்படாததால், நிலத்தை உரிமையாளர்களிடம் திருப்பித் தர தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதனால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

2. அரசுப்பள்ளிகளில் LKG; UKG வகுப்புகள் மூடல் ஏன்? தொடக்கக்கல்வித்துறை விளக்கம்

அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வந்த LKG; UKG வகுப்புகள் மூடப்பட்டது குறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி:

அரசு நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 2,381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் 2019-ஆம் ஆண்டு சோதனை முறையில் தொடங்கப்பட்டன. இந்த மழலையர் வகுப்புகளைக் கையாள தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாற்றப்பட்டனர்.

இந்த ஆசிரியர்கள் அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் மழலையர் வகுப்பு குழந்தைகளை கையாள்வதில் சிக்கல்களும், புரிதல் இன்மையும் நீடித்தது. மறுபுறம் தொடக்கக்கல்வி இயக்குநரகத்தில் 2013-14ம் கல்வியாண்டு முதல் ஆசிரியர் பணிநியமனம் செய்யப்படவில்லை.

ஆசிரியர்கள் பற்றாக்குறை: இதனால் கடந்த கல்வியாண்டின் இறுதியில் இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களில் 4,863 காலிப்பணியிடங்கள் ஏற்பட்டது. இதனால் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளை ஒரே ஒரு ஆசிரியர்தான் கவனித்துள்ளார்.

ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களுக்கு சரியான முறையில்கல்வி போதிக்க இயலாத சூழல் ஏற்பட்டு அதன் விளைவாக மாணவர்களின் கல்வித்தரம் வெகுவாக குறைந்தது. இதற்கிடையே கரோனா பரவலுக்கு பின்னர், அரசுப்பள்ளிகளில் 5 லட்சத்துக்கு மேல் புதிதாக மாணவர்கள் சேர்ந்தனர். அதில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மட்டும் 2.80 இலட்சம் பேர்கள் அரசுப்பள்ளிகளின் மேல் நம்பிக்கை வைத்து கூடுதலாக சேர்ந்துள்ளனர்.

இதன்காரணமகக மாணவர் ஆசிரியர் விகிதப்படி 4,500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கூடுதலாக தேவைப்படுகிறது. ஏற்கனவே உள்ள காலிப்பணியிடங்களோடு சேர்த்தால் மொத்தம் 9,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேவைப்படும் நிலை ஏற்பட்டு கல்வித்தரம் குறைய வாய்ப்பு அதிகமானது. இதுகுறித்து அனைத்து உயர்மட்ட அலுவலர்கள் கூட்டத்தில் விவாதித்து எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, மழலையர் வகுப்புகளைக் கையாள நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் தொடக்கப்பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டனர்.

எண்ணும்-எழுத்தும் திட்டத்துக்கு… இதுதவிர கரோனாவால் அரசுப்பள்ளி மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை சரிசெய்ய ‘எண்ணும் எழுத்தும்’ என்னும் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 30,000 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தவும், சரியான பாதையில் மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்கவும் தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்துக்கு போதுமான எண்ணிக்கையில் இன்னும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.

பழைய நடைமுறையில்… இதைக்கருத்தில்கொண்டு அங்கன்வாடி மையங்களில் ஏற்கனவே இருந்த சிறார்களுக்கு முந்தைய நடைமுறையை பின்பற்றி இந்தாண்டு முதல் அங்கன்வாடி உதவியாளர்மூலம் தற்காலிகமாக கற்றல் செயல்பாட்டை மேற்கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டது. மேலும், ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வெற்றிகரமாகச் செயல்படுத்தும் போது தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி மாணவர்கள் கற்றல் நிலைகளில் மேம்படுவார்கள். இதுதவிர மூன்றாண்டுகளுக்கு பின்பு தேசிய அளவிலான கற்றல் அடைவு சோதனை முடிவுகளில் (நாஸ்) 27-ஆவது இடத்தில் இருக்கும் தமிழ்நாடு, முதல் 10 இடத்துக்குள் வந்துவிடும்.

3. வட்டி விகிதம் 4.9%-ஆக அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக்கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ) 4.9 சதவீதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்துவது கடந்த ஐந்து வாரங்களில் இது இரண்டாவது முறையாகும். இதனால், தனிநபர் கடன், வீடு, வாகனக்கடன் ஆகியவற்றுக்கான வட்டி அதிகரித்து மாதத்தவணைத் தொகையை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில், ரெப்போ விகிதத்தை 4.4 சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதம் அதிகரித்து 4.9 சதவீதமாக நிர்ணயிப்பது என ஒருமனதமாக முடிவெடுக்கப்பட்டது. கடந்த மே மாதம் வட்டி விகிதம் 0.4 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது. 4 சதவீதமாக இருந்த வட்டி விகிதம், கடந்த 2 மாதங்களில் மட்டும் 0.9 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: உக்ரைனில் நடைபெறும் போரால் உலக அளவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. மேலும், அதிகபட்ச அளவைவிட அதிகமாக பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியபோதிலும், கரோனாவுக்கு முந்தைய நிலையான 5.15 சதவீதத்துக்கும் குறைவாகவே வட்டி விகிதம் உள்ளது.

மாநில அரசுகள் வரியைக் குறைக்க வேண்டும்: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி கடந்த மே மாதம் 21-ஆம் தேதி குறைக்கப்பட்டது. எரிபொருள்கள் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) மாநிலங்கள் குறைத்தால் விலைவாசியைக் குறைக்க முடியும். முறைப்படி பதிவு செய்யாமல் செயலிகள்மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் மீது காவல்துறையில் பொதுமக்கள் புகாரளிக்கலாம் என்றார் அவர்.

கூட்டுறவு வங்கிகளுக்கு அனுமதி: வீட்டுவசதித்திட்டங்களுக்கு ஊரக மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சந்தா தொகை, காப்பீட்டுத்தொகை, கல்விக்கட்டணம் ஆகியவற்றுக்கு ஒருமுறை செலுத்தும் தொகையை `5,000-இலிருந்து `15,000-ஆக உயர்த்தி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூபே கடன் அட்டைகளைப் பயன்படுத்தியும் யுபிஐ முறையில் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது படிப்படியாக பிற வகை கடன் அட்டைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

பணவீக்கம் 6.7%: உக்ரைன்-ரஷியா போர்காரணமாக சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்துள்து. எனவே நடப்பு நிதியாண்டில் (2022-23) பணவீக்கம் விகிதம் 6.7 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் பணவீக்க விகிதம் 5.7 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி ஏப்ரலில் கணித்திருந்தது.

பொருளாதார வளர்ச்சி 7.2%

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், ‘கடந்த ஏப்ரல், மே மாதங்களின் தகவல்படி, உள்ளூர் பொருளாதாரச் செயல்பாடுகள் மீண்டு வருகின்றன. இது, பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதைக் காட்டுகிறது. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும்.

தென்மேற்குப் பருவமழையால் காரீப் பருவ சாகுபடியும் திருப்திகரமாக இருக்கும். இருப்பினும் சர்வதேச அளவிலான பதற்றம், பொருள்களின் விலை உயர்வு, சர்வதேச அளவிலான நிதிக் கட்டுப்பாடுகள் போன்றவை வளர்ச்சிக்கு பாதகமாக இருக்கும் என்றார் அவர். நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணிப்பு வெளியிட்டிருந்தது.

4. NSIL-உக்கு 10 தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பொதுத்துறை நிறுவனமான நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துக்கு (NSIL) 10 தொலைத்தொடர்பு செயற்கைக் கோள்களை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதலளித்தது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: புவிவட்டப் பாதையில் வலம்வரும் 10 தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்களை NSIL நிறுவனத்துக்கு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தீவிர மூலதன திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு நிதி விவகாரங்களில் அந்த நிறுவனம் சுதந்திரமாக முடிவெடுக்க வழிவகுக்கும். அதன்மூலம் இதர துறைகளுக்கு மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பளிக்கும் திறனும், தொழில்நுட்ப உபகரணங்களும் கிடைக்கும். இதுதவிர, NSIL நிறுவனத்தின் பங்கு மூலதனத்தை `1,000 கோடியில் இருந்து `7,500 கோடியாக அதிகரிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்புதல் விண்வெளித் துறையில் உள்நாட்டு பொருளாதாரச் செயல்பாடுகளை ஊக்குவித்து, உலக அளவிலான விண்வெளி சந்தையில் இந்தியாவின் பங்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. NSIL என்பது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ISRO) வர்த்தகப் பிரிவாகும்.

UAE ஒப்பந்தப் பரிந்துரைக்கு ஒப்புதல்: இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே தொழிற்துறை மற்றும் அதிநவீன தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

காற்றின் தரம் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பாக இந்தியாவின் ஆர்யபட்டா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், ஜப்பானின் தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து மேற்கொள்ளும் கூட்டு ஆராய்ச்சி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

5. ஹர்மன்ப்ரீத் கௌர் புதிய கேப்டன்

இந்திய மகளிர் ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக இளம் வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கௌர் நியமிக்கப்பட்டு உள்ளார். ஏற்கெனவே கேப்டனாக இருந்த மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் ஓய்வுபெற்ற நிலையில் இந்நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஹர்மன்ப்ரீத் கௌர் T20 அணியின் கேப்டனாக உள்ளார். இந்நிலையில் தற்போது ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

1. What is the repo rate after the RBI’s June 2022 Monetary Policy Committee (MPC) meeting?

A. 4.2%

B. 4.5%

C. 4.9% 

D. 5.0%

  • Reserve Bank of India’s Monetary Policy Committee (MPC) decided to hike the Policy Repo Rate by 50 basis points to 4.9 per cent in its June 2022 meeting. The MPC members voted unanimously to hike rates and to continue the withdrawal of the accommodative stance. RBI’s MPC last month raised the repo rate by 40 basis points. Real GDP forecast for FY23 has been retained at 7.2% while inflation projection was revised for FY23 to 6.7%.

2. What is the new limit for auto–debit mandates done through cards and UPI (after June 2022)?

A. Rs 5000

B. Rs 10000

C. Rs 15000 

D. Rs 20000

  • The Reserve Bank of India increased the limit for auto–debit mandates done through cards and Unified Payment Interface (UPI) to ₹15,000 from the earlier ₹5,000. It means Customers will no longer be required to authenticate recurring transactions on their subscriptions, utility bills, EMIs up to ₹15,000 with a one–time password (OTP) every time during payment.

3. What is the age limit for officers to be eligible for the post of Chief of Defence Staff (CDS)?

A. 60

B. 62 

C. 65

D. 70

  • The Central Government has amended service rules of the armed forces six months after General Bipin Rawat, India’s first Chief of Defence Staff, died in a helicopter crash. As per the new rules, all three–star and four–star officers from the three services under the age of 62 eligible for the post of CDS. It also includes those who retired in the last two years. The CDS is the most senior uniformed officer in rank.

4. Which organisation created a Guinness World Record for the longest continuously laid lane of 75 kms?

A. BRO

B. NHAI 

C. Indian Army

D. L & T Construction

  • National Highways Authority of India (NHAI) created the Guinness World Record for completing the construction of 75 km continuous bituminous concrete in a single lane on NH 53 between Amravati and Akola in Maharashtra. The lane was laid in 105 hours and 33 minutes (under 5 days), breaking Qatar’s record.

5. Who is the first woman cricketer to appear in six World Cups?

A. Jhulan Goswami

B. Mithali Raj 

C. Charlotte Edwards

D. Clare Taylor

  • Ace woman cricketer Mithali Raj recently announced her retirement from all forms of Cricket. The 39–year–old player is the first and only woman cricketer in the world to appear in six World Cups so far. She joined the list of Sachin Tendulkar and Pakistan’s Javed Miandad recently, for this feat. Her tally of 7,805 runs from 232 ODIs is the highest in the women’s ODI game. She is also the long–serving India captain with a total of 10,868 runs, a women’s cricket record.

6. Which Indian state has joined the Global Network of Advanced Manufacturing Hubs (AMHUBs) of World Economic Forum (WEF)?

A. Telangana

B. Andhra Pradesh 

C. Odisha

D. Karnataka

  • Andhra Pradesh has joined the Global Network of Advanced Manufacturing Hubs (AMHUBs) of the World Economic Forum (WEF). On the sidelines of the annual Davos meeting of WEF, the state government and WEF exchanged the platform partnership on “Shaping the Future of Advanced Manufacturing and Value Chains”. Andhra Pradesh is the first state selected of Shaping the Future of Mobility and “Moving India” initiatives.

7. The new restrictions on Sugar Exports is effective from which date?

A. 2022 May 01

B. 2022 June 01 

C. 2022 August 01

D. 2023 January 01

  • India has imposed restrictions on sugar exports, after curbing wheat exports. The new restrictions will come into effect from June 1. The move is primarily aimed at increasing availability of the commodity in the domestic market and curbing price rise. After an unprecedented rise in inflation fuelled by geopolitical tensions, India has been taking several measures to facilitate lowering of prices of commodities in the domestic markets.

8. What is the rank of India in the ‘WEF Travel and Tourism development index’ in 2022?

A. 34

B. 45

C. 54 

D. 43

  • The World Economic Forum’s latest study released the travel and tourism development index, which assessed as many as 117 countries. India was placed at the 54th spot in the overall rankings, down from 46th in 2019. As per the study, after two years of slowdown caused by the Covid–19 pandemic, India’s travel and tourism sector has shown signs of recovery.

9. Indian Navy participates in Exercise Bongosagar, along with which country’s Navy?

A. France

B. Bangladesh 

C. Myanmar

D. Nepal

  • The third edition of Indian Navy – Bangladesh Navy Bilateral Exercise ‘Bongosagar’ commenced at Port Mongla, Bangladesh. The Harbour Phase of exercise will be followed by a Sea Phase in the Northern Bay of Bengal. Exercise Bongosagar is aimed at developing joint operational skills through the conduct of a wide range of maritime exercises and operations between the two navies.

10. ‘International Conference on New Technologies and Innovations in Rural Roads’ was organised in which city?

A. Kanpur

B. New Delhi 

C. Varanasi

D. Chennai

  • Union Minister for Rural Development & Panchayati Raj, Giriraj Singh inaugurated the 3–day International Conference on New Technologies and Innovations in Rural Roads. During the Inaugural Session, documents including the New Technology Vision, 2022 were released. Under the Vision document, the Ministry of Rural Development seeks at least half of rural roads length to be constructed using New Technologies and Alternative Materials.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!