Tnpsc

9th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

9th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 9th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

9th March 2021 Tnpsc Current Affairs in Tamil


  1. உலகின் முதல் வாத்தலகி (platypus) சரணாலயத்தை உருவாக்கு -கிற நாடு எது?

அ) இந்தியா

ஆ) இலங்கை

இ) பாகிஸ்தான்

ஈ) ஆஸ்திரேலியா

  • நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கமும் ஆஸ்திரேலியாவின் தரோங்கா பாதுகாப்பு சங்கமும் இணைந்து உலகின் முதல் பிளாட்டிபஸ் சரணாலய -த்தை கட்டுவதாக அறிவித்தன. இது, காலநிலை மாற்றத்தால் அழிவை எதிர்கொண்டுள்ள வாத்தலகி பாலூட்டிகளின் இனப்பெருக்கம் மற்றும் மறுவாழ்வை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிட்னியில் இருந்து 390 கிமீ தூரத்தில் உள்ள மிருகக்காட்சிசாலையில் இந்த வசதி உருவாக்கப்படவுள்ளது.

2. நடப்பாண்டில் (2021) வரும் உலக செவித்திறன் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Hearing care for All

ஆ) Save Hearing

இ) Care for hearing

ஈ) Hearing care

  • செவித்திறன் இழப்பைத் தடுக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மார்ச்.3ஆம் தேதி உலக செவித்திறன் நாள் அனுசரிக்கப்படுகிறது. இது உலக சுகாதார அமைப்பின் குருட்டுத்தன்மை மற்றும் காதுகேளாமை தடுப்பு அலுவலகத்தால் ஒவ்வோர் ஆண்டும் நட -த்தப்படும் ஒரு பிரச்சாரமாகும். 2021ஆம் ஆண்டிற்கான பிரச்சாரத்தின் கருப்பொருள் “Hearing care for All”.

3. பன்னாட்டு கழிவெடுப்பவர்கள் (Waste Pickers’) நாள் கடைபிடிக் -கப்படுகிற தேதி எது?

அ) மார்ச் 1

ஆ) மார்ச் 2

இ) மார்ச் 3

ஈ) மார்ச் 4

  • 11 தொழிலாளர்களின் கொடூரமான இறப்புக்கு வழிவகுத்த கொலம்பிய படுகொலையை குறிக்கும் வகையில் மார்ச்.1ஆம் தேதி பன்னாட்டு கழிவு எடுப்பவர்கள் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் உலகெங்கிலும் உள்ள கழிவெடுப்பவர்கள் / மறுசுழற்சி செய்பவர்களுக்கு குரல் மற்றும் அங்கீகாரத்தை வழங்க முற்படுகிறது.

4. நடப்பாண்டில் (2021) வரும் உலக வனவுயிரிகள் நாளுக்கான கருப்பொருள் என்ன?

அ) Forests and Livelihoods: Sustaining People and Planet

ஆ) For people, For planet, For ecosystem

இ) Forests – Pillars for people and planet

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

  • வனவுயிரிகளைக் கொண்டாடுவதற்கும், மனித நடவடிக்கைகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் வனவிலங்குகளில் ஏற்படும் பாதகமான தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உலக வனவுயிரி நாள் மார்ச்.3 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு (2021), “Forests and Livelihoods: Sustaining People and Planet” என்ற கருப்பொருளின்கீழ் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

5. NADMP என்பதன் முழு வடிவம் என்ன?

அ) National Agriculture Disaster Management Plan

ஆ) Ninth Agriculture Disaster Management Plan

இ) New Agriculture Disaster Management Plan

ஈ) Ninth Agriculture Disaster Mitigation Planning

  • வறட்சி, வெள்ளம் மற்றும் COVID-19 கொள்ளைநோய்போன்ற திடீர் இயற்கை பேரிடர்களுக்கு சரியான நேரத்தில் பதிலளிப்பதை உறுதி செய்வதில் தேசிய வேளாண் பேரிடர் மேலாண்மை திட்டம் (NADMP) மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு வழிகாட்ட முயற்சி செய்கிறது.
  • வேளாண் துறைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 34 இடர்களை இது அடையாளங்காட்டுகிறது. வெப்ப அலைகள், பூகம்பங்கள், விலங்குகளின் தாக்குதல்கள், பாலைவனமாக்கல், வேளாண் தீ, சூறாவளிகள் மற்றும் இரசாயனங்கள் மீது அதிக சார்பு ஆகியவை இவற்றுள் அடங்கும்.

6. இந்திய கடல்சார் துறையை சீரமைக்கும் நோக்குடன் சமீபத்தில் வெளியிடப்பட்ட உத்தி எது?

அ) கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030

ஆ) கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2032

இ) கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2035

ஈ) கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2040

  • கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030 என்பது இந்திய கடல்சார் துறையை சீரமைக்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்ட பத்தாண்டுக்கா -ன உத்தியாகும். இது, `3 இலட்சம் கோடி முதலீட்டை ஈர்க்கவும், 20 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் முயல்கிறது. முக்கிய துறைமுகங்களிலிருந்து `20,000 கோடி மதிப்புள்ள ஆண்டு வருவாய்த் திறனை அதிகரிக்கவும் இந்த உத்தி முயல்கிறது.

7. அரோமா திட்டத்தின் ஒருபகுதியாக ஜம்முவில் பயிரிடப்படுகிற மூலிகை எது?

அ) லாவெண்டர்

ஆ) வேர்க்கோசு

இ) புதினா

ஈ) துளசி

  • 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அரோமா திட்டத்தின் ஒருபகுதியாக ஜம்முவில் லாவெண்டர் பயிரிடப்பட்டுவருகிறது. ‘லாவெண்டர்’ என்பது மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு நறுமண மூலிகையாகும். இது, வணிகரீதியாக ஒரு முக்கியமான பயிராக கருதப்படுகிறது, முக்கியமாக அத்தியாவசிய எண்ணெய்களை உற்பத்தி செய்வதற்காக இது பயிரிடப்ப -டுகிறது. ஒரு லிட்டர் லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய் 10,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

8. ICLED என்பதன் முழு வடிவம் என்ன?

அ) Inter-band cascade light emitting device

ஆ) Interior-based cascade light emitting diode

இ) Intern link- band inter-band cascade light emitting

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

  • ICLED அல்லது Interband cascade light emitting device என்பது ஒரு புதிய வகை உயராற்றல்கொண்ட ஒளி உமிழும் டையோடு ஆகும், அவை பல் வேறு வேதிப்பொருட்களின் அளவுபகுப்பாய்வில் பயன்படுத்தப்படுகின்ற -ன. இது இடைநிலை IR அலைநீள பகுதிகளில் ஒளியை வெளியிடுகிற -து. மீத்தேன் உமிழ்வை அதிக துல்லியத்துடன் கண்டறிவதற்கு, மலிவு விலை உணரிகளை உருவாக்க இது சமீபத்தில் பயன்படுத்தப்பட்டது.

9. ஆஸ்திரேலியாவின் கீழைக்கடற்கரையில் அண்மையில் எந்த அரியவகை ஆஸ்திரேலிய தேனீ காணப்பட்டது?

அ) Pharohylaeus lactiferous

ஆ) Apis dorsata

இ) Apis florea

ஈ) Apis cerana indica

  • Pharohylaeus lactiferous என்பது ஓர் அரிய வகை ஆஸ்திரேலிய தேனீ வகையாகும். இது சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் கீழைக்கடற்கரையில் தென்பட்டது. இது கடைசியாக, ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, 1923’இல் குயின்ஸ்லாந்தில் காணப்பட்டது.
  • இதுவரை அறுவர் மட்டுமே இதனை கண்டறிந்துள்ளனர். காட்டுத்தீ, நில துண்டாடல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் இந்த முதுகெலு -ம்பிலிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன.

10. இந்தியாவின் மிகப்பெரிய தரைநிலை ஆப்டிகல் தொலைநோக் -கி நிறுவப்பட்டுள்ள மாநிலம் எது?

அ) உத்தரகண்ட்

ஆ) கோவா

இ) கர்நாடகா

ஈ) பஞ்சாப்

  • உத்தரகண்ட் நைனிடால் பகுதியில் உள்ள தேவஸ்தல் என்ற இடத்தில் உலகத்தரத்திலான 3.6 மீட்டர் ஆப்டிக்கல் தொலைநோக்கி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத்தொலைநோக்கி இந்தோ-பெல்ஜிய கூட்டு முயற்சியின் விளைவாகவும், இரஷ்ய அறிவியல் அகாதமி உதவியுடனும் கடந்த 2007’இல் நிறுவப்பட்டதாகும்.
  • தன்னாட்சி ஆராய்ச்சி அமைப்பான ஆர்யபட்டா கூர்நோக்கு அறிவியல் பற்றிய ஆராய்ச்சி நிறுவனத்தால் இந்தத் தொலைநோக்கி இயக்கப்பட உள்ளது. இந்த அமைப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கி வருகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 2019-ம் ஆண்டில் 61 சதவீத வீடுகள், 26 சதவீத உணவு விடுதிகளில் இந்தியர்கள் விரயம் செய்த உணவு 6.80 கோடி டன்: ஐநா ஆய்வு அறிக்கையில் தகவல்

இந்தியர்கள் 2019-ம் ஆண்டில் 6.80 கோடி டன் அளவில் உணவுகளை விரயம் செய்திருப்பதாக ஐநாவின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

‘உணவு விரயக் குறியீடு 2021’ என்று உணவு விரயம் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை ஐநா வெளியிட்டுள்ளது. உலக ளாவிய அளவில் 2019-ம் ஆண்டு 9.31 கோடி டன் அளவில் உணவுகள் விரயம் செய்யப்பட்டுள்ளன. இதில் 61 சதவீதம் வீடுகளிலிருந்தும், 26 சதவீதம் உணவு விடுதிகளிலிருந்தும், 13 சதவீதம் சில்லறை விற்பனையின் மூலமும் விரயம் ஆகியிருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்திய வீடுகளில் 2019-ம் ஆண்டு 6.80 கோடி டன் அளவில் உணவு விரயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் தனி நபர் ஆண்டுக்கு 50 கிலோ உணவை விரயம் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தனி நபர் ஆண்டுக்கு 59 கிலோ உணவையும், சீனாவில் தனி நபர் ஆண்டுக்கு 64 கிலோ உணவையும் விரயம் செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக உலக அளவில் தயாரிக்கப்படும் உணவில் 17 சதவீதம் விரயம் ஆக்கப்படுகிறது.

பசுமை குடில் வாயு வெளியேற்றத் துக்கு உணவு விரயம் முக்கிய காரண மாக இருக்கிறது என்றும் உணவு விரயத்தைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியும் என்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் தொடர்பான அமைப் புத் தெரிவித்துள்ளது. உணவு விரயம் சுற்றுச்சூழலில் மட்டுமல்ல சமூகம் மற்றும் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் வளர்ந்த நாடுகளில்தான் உணவு அதிக அளவில் விரயம் செய்யப்படுவதாக நம்பப்பட்டு வந்தது. இந்நிலையில் ஐநாவின் இந்த ஆய்வறிக்கை வளரும் மற்றும் பின் தங்கிய நாடுகளிலும் உணவு அதிக அளவில் விரயம் செய்யப்படுகிறது என்பதைக் காட்டியுள்ளது.

2. ஜிஎஸ்எல்வி – எஃப்10 ராக்கெட் மூலம் மார்ச் மாத இறுதியில் விண்ணில் பாயும் ஜிஐசாட்-1

ஜிஎஸ்எல்வி – எஃப்10 ராக்கெட் மூலம் ஜிஐசாட்-1 செயற்கைக் கோள் இம்மாத இறுதியில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. புவி கண்காணிப்பு, பேரிடர் மீட்பு பணிகளுக்காக ஜிஐசாட்-1 என்ற அதிநவீன ‘ஜியோ இமேஜிங்’ செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்தது. இதை ஹரிகோட்டாவில் இருந்துஜிஎஸ்எல்வி – எஃப்10 ராக்கெட்மூலம் கடந்த 2020 மார்ச் 5-ம் தேதிவிண்ணில் செலுத்த இஸ்ரோதிட்டமிட்டது. தொழில்நுட்பக் காரணங்களால் ராக்கெட் பயணம்நிறுத்தப்பட்டு, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜிஐசாட்-1 செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி – எஃப்10 ராக்கெட் மூலம் இம்மாத இறுதியில் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். செயற்கைக் கோள் வடிவமைப்பு, செயல்பாடுகளில் சில தொழில்நுட்ப அம்சங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது. 2,268 கிலோ எடை கொண்டது ஜிஐசாட்-1. இதில் உள்ள 5 விதமான 3டி கேமராக்கள், தொலைநோக்கி மூலம் புவிப் பரப்பை துல்லியமாக பார்க்கவும், படம் எடுக்கவும் முடியும்.

3. துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டி – நடிகர் அஜித் அணி 6 தங்கம், வெள்ளி வென்றது:

தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் நடிகர் அஜித் அணியினர் 6 தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர். நடிகர் அஜித் தற்போது ‘வலிமை’ படப்பிடிப்பில் கவனம்செலுத்தி வருகிறார். படப்பிடிப்புக்கு இடையே கார், பைக் பந்தயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபகாலமாக துப்பாக்கி சுடும் போட்டியில் அதிக ஆர்வம் செலுத்தி வந்த அவர் தற்போது அதற்கான போட்டிகளில் கலந்துகொண்டு விருதுகளையும் வென்றுள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் 46-வதுசாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. இதில் தமிழ்நாட்டிலிருந்து 900 பேர் பங்கேற்றனர். சென்னை ரைஃபிள் கிளப் அணியில் அஜித் இடம்பெற்றிருந்தார்.

4. இணையவழியில் சர்வதேச பெண்கள் மாநாடு

ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் பெற்ற அலையன்ஸ் கிரியேட்டிவ் கம்யூனிட்டிவ் புரஜெக்ட் மற்றும் கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்திய சர்வதேச பெண்கள் மாநாடு, மார்ச் 6-ம் தேதி கனடிய நேரம் காலை 8- மணிக்கு ஆரம்பமாகி 11- மணிக்கு நிறைவடைந்தது. மிகவும் நேர்த்தியான முறையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பதினெட்டு நாடுகளை சேர்ந்த, பல் துறை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நவீன காலத்தில் பெண்களை அரசியல் மற்றும் தலைமைத்துவத்தில் ஈடுபட ஊக்குவித்தல் என்னும் பொருள்படும் தலைப்பில், இன்றைய 21-ம் நூற்றாண்டிலும் பெண்கள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

குழு விவாதத்தில், குறிப்பாக யுத்தம் காரணமாக சிரியா, காஷ்மீர், இலங்கை மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் லட்சக்கணக்கான பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளதுடன் அவர்களே பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அத்துடன் இன்னும் பல நாடுகளில் அடிப்படை கல்வி உரிமை கூட பெண்களுக்கு மறுக்கப்படுகின்றதுடன், பல சித்திரவதைகளுக்கு ஆளாகின்ற நிலைமை தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டது. சர்வதேச ரீதியாக பெண்கள் ஒன்றிணைந்து பலமான அமைப்பாக பெண்களுக்கான உரிமை தொடர்பில் கவனம் செலுத்துவதுடன் உலகளவில் பிரச்சாரம் ஒன்றை மேற்கொள்ளுவது காலத்தின் தேவையாக இருக்கின்றது என கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. அதேவேளை பெண்கள் பொதுத்துறையில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது எனினும் அவர்கள் பல சவால்களுக்கு முகம் கொடுத்தே முன்னுக்கு வர வேண்டியிருக்கின்றது.

அவர்கள் மனரீதியான தாக்கங்கள் மற்றும் வெளியில் எதிர்நோக்கும் அவலங்களை மிக உறுதியுடன் கடந்து வரும் பட்சத்தில் பல முன்னேற்றங்களை காண முடியும். அத்துடன் மற்ற பெண்களையும் வழி நடத்த முடிவதுடன் தொடர்ந்து பல கருத்தரங்குகள் நடத்துவதன் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி , பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் விதவை பெண்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட உலகளாவிய ரீதியில் பெண்கள் பாடுபட வேண்டும் என்ற ஆலோசனையுடன் சர்வதேச பெண்கள் மாநாடு நிறைவடைந்தது.

5. அகில இந்திய அளவில் ராஜஸ்தான் முதலிடம்; கரோனா தடுப்பூசி போடுவதில் 9-வது இடத்தில் தமிழகம்

இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடுவதில் தமிழகம் 9-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் முதல் இடத்தையும் குஜராத் 2-வது இடத்தையும், மகாராஷ்டிரா 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியாவில் கரோனா பரவலைதடுக்க கோவேக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் போடப்பட்டுவருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கும், கடந்த 1-ம் தேதிமுதல் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணிதொடங்கியது.

தமிழகத்தில் 1,300-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்றுமீண்டும் அதிகரிப்பதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்துமாறு மாநிலஅரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில், “மார்ச் 7-ம்தேதி (நேற்று) காலை 7 மணி நிலவரப்படி நாடு முழுவதும் இதுவரைமுதல் தவணையாக 1 கோடியே71 லட்சத்து 68,303, இரண்டாம்தவணையாக 37 லட்சத்து 54,041 என 2 கோடியே 9 லட்சத்து 22,344டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ராஜஸ்தானில் 21.31 லட்சம், குஜராத்தில் 17.65 லட்சம், மகாராஷ்டிராவில் 17.44 லட்சம், உத்தர பிரதேசத்தில் 17.12 லட்சம், மேற்கு வங்கத்தில் 15.81 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழகம் 9-வது இடத்தில் உள்ளது.

6. சா்வதேச மல்யுத்தம்: வினேஷுக்கு தங்கம்

மேட்டியோ பெலிகோன் தரவரிசை சா்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகாட் மகளிருக்கான 53 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றாா். இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் உலகின் முதல்நிலை வீராங்கனை இடத்தையும் அவா் எட்டினாா். இறுதிச்சுற்றில் வினேஷ் 4-0 என்ற கணக்கில் கனடாவின் டயானா மேரி ஹெலன் வெய்கரை வீழ்த்தினாா். கடந்த வாரத்தில் கீவில் நடைபெற்ற போட்டியிலும் தங்கம் வென்ற வினேஷுக்கு இது தொடா்ந்து 2-ஆவது தங்கமாகும். இப்போட்டியில் வென்ற 14 புள்ளிகளின் மூலம் சா்வதேச தரவரிசையில் வினேஷ் முதலிடம் பிடித்தாா். முன்னதாக 3-ஆம் இடத்தில் இருந்த நிலையில் அவா் இப்போட்டியில் பங்கேற்றிருந்தாா்.

ஆடவருக்கான 65 கிலோ பிரிவில் பஜ்ரங் புனியா தனது அரையிறுதியில் அமெரிக்காவின் ஜோசப் கிறிஸ்டோபா் மெக்கென்னாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். அதில் அவா் மங்கோலியாவின் துல்கா துமுா் ஒசிரை எதிா்கொள்கிறாா். 74 கிலோ பிரிவில் இந்தியாவின் நா்சிங் பஞ்சம் அரையிறுதியில் ஜோா்டானின் எா்னெஸ்ட் புரோஸிடம் தோல்வி கண்டாா்.

7. கத்தார் ஓபன் டென்னிஸ் : குவித்தோவா சாம்பியன்

கத்தார் டோட்டல் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசாவுடன் (16வது ரேங்க், 27 வயது) நேற்று மோதிய குவித்தோவா (10வது ரேங்க், 30 வயது) 6-2, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 6 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. 2018ல் நடந்த இத்தொடரின் பைனலிலும் குவித்தோவா 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் முகுருசாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். அந்த போட்டி 2 மணி, 16 நிமிடத்துக்கு நீடித்தது குறிப்பிடத்தக்கது. குவித்தோவா தனது டென்னிஸ் வாழ்க்கையில் வென்ற 28வது சாம்பியன் பட்டம் இது.

8. மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களால் ஏழை, நடுத்தரக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000 கோடி சேமிப்பு: 7,500-வது மக்கள் மருந்தகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி பெருமிதம்

மக்கள் மருந்தகம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு சுகாதாரத் திட்டங்களால் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000 கோடி மிச்சமாகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். நாட்டு மக்கள் அனைவருக்கும் குறிப்பாக ஏழைகளுக்கு தரமான மருந்துகள் குறைவான விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பிரதம மந்திரி பாரதிய ஜன்அவுஷாதி பரியோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் மக்கள் மருந்தகங்கள் நாடு முழுவதும் திறக்கப்பட்டன.

சந்தைவிலையை விடவும் 50 முதல் 90 சதவீதம் குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் மார்ச் 1 முதல் 7 வரையில் ‘மக்கள் மருந்தக வாரம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கடந்த ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, சிம்லா, போபால், அகமதாபாத், மங்களூரு மற்றும் டையுவில் உள்ள மாருதி நகர் ஆகிய 5 நகரங்களில் மக்கள் மருந்தக மையங்களில் உள்ள பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் கலந்துரையாடினார்.

மேலும் மேகாலயா மாநிலம் ஷில்லாங் நகரில் உள்ள ‘நார்த் ஈஸ்டர்ன் இந்திரா காந்தி ரீஜனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சயின்ஸ்’ நிறுவனத்தில், நாட்டின் 7,500-வது மக்கள் மருந்தகத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

9. கரோனா வைரஸ் தொற்று நோயால் இந்திய குழந்தைகளின் உடல்நலம், மனநலம் பாதிப்பு: யுனிசெப் அறிக்கையில் தகவல்

ஐ.நா. சர்வதேச குழந்தைகள் நல நிதியம் (யுனிசெப்) வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: கரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் குழந்தைகள் கல்வி பாதிக்கப்பட்டது. குழந்தை கள் தங்கள் சகாக்களுடன் கலந்துரையாடுவது குறைந்தது. இது பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் 5 கோடி குழந்தைகள் தொற்று நோய்க்கு முன்பே மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். கரோனா பரவத் தொடங்கியதில் இருந்து உலக அளவில் ஏழு குழந்தைகளில் ஒருவர் அல்லது 33.2 கோடி குழந்தைகள் குறைந்தபட்சம் 9 மாதங்களுக்கு வீட்டிலேயே தங்க நேரிட்டது.

இது அவர்களின் உடல்நலம் மற்றும் மனநலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆசிரியர்கள், பெற்றோர் களிடம் இருந்து குழந்தைகளுக்கு உளவியல் ஆதரவு மிகவும் அவசியம். குழந்தைகளும் அவர்களை பராமரிப்பவர்களும் மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றில் இருந்து விடுபட உதவும் கட்டமைப்புகளை பலப்படுத்த வேண்டும். கரோனா காலத்தில் இந்தியாவில் குழந்தைகளுக்கு உளவியல் ஆதரவு அளிக்க 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்களுக்கு யுனிசெப் பயிற்சி அளித்தது.

17 மாநிலங்களில் 4,46,180குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு உளவியல் ஆதரவு அளிக்கப்பட்டது. 7 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் அரசு சலுகைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் பெறுவதில் யுனிசெப் துணை நின்றது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

10. பழைய வாகனங்களை அழித்தால் புதிதாக வாங்கும் வாகனங்களுக்கு 5% தள்ளுபடி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு

நீண்ட காலமாக பயன்பாட்டில் இருக்கும் பழைய வாகனங் களினால் சுற்றுச்சூழல் மாசு அதிகரிக்கிறது. இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன் பாட்டில் இருக்கும் தனிநபர்களுக்கான வாகனங்களையும், 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் வர்த்தக ரீதியிலானவாகனங்களையும் பயன்பாட்டில் இருந்து நீக்க மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது. இந்நிலையில் பழைய வாகனங்களை அழிக்க முன்வரும் வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாகவே பழைய வாகனங்களை அழிக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிதாக வாகனங்கள் வாங்கும் போது 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். பழைய வாகனங்களை பயன்பாட்டிலிருந்து நீக்குவது தொடர்பான மத்திய அரசின் திட்டத்தால் இந்திய வாகனத் துறையின் வருவாய் 30 சதவீதம் அளவு உயரும் என்று நிதின் கட்கரி தெரிவித்தார். ‘தற்போது இந்திய வாகனத் துறையின் ஆண்டு வருவாய் ரூ.4.5 லட்சம் கோடியாக உள்ளது. வரும் ஆண்டுகளில் வருவாய் ரூ.10 லட்சம் கோடியாக உயரும் என்று அவர் கூறினார்.

இந்தத் திட்டத்தின் மூலம் வாகனத் துறையில் ரூ.10,000 கோடி அளவில் புதிய முதலீடு களும், 50,000 அளவில் வேலை வாய்ப்புகளும் உருவாகும் என்றும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

11. நவீன தொழில்நுட்பத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை அருகேஉள்ள, திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவியில், நவீன தொழில்நுட்பத்தில், வெள்ள அபாய எச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், அமணலிங்கேஸ்வரர் கோவில், பஞ்சலிங்கம் அருவி, வண்ண மீன் பூங்கா, திருமூர்த்தி அணை என, சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் பெய்த கன மழையால், 2008, மே 25ல், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 13 பேர் இறந்தனர். மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறை, வளம் மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், முழுதும் நவீன தொழில்நுட்பத்தில், தானியங்கி முறையில், முதல் முறையாக, அருவியில் வெள்ள அபாய எச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதை வடிவமைத்த, ஆராய்ச்சியாளர் பிராங்க்ளின் கூறுகையில், ”வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை, தானியங்கி முறையில் எச்சரிக்கும் வகையில், கருவி வடிவமைக்கப்பட்டு உள்ளது.”காட்டாறுகளில் நீர் வரத்து அதிகரித்தால், கட்டுப்பாட்டு மையம், கோவில் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கும். வனச்சூழல் பாதிக்காத வகையில், சோலார் மின்சாரம் வழியாக, இக்கருவிகள் இயங்குகின்றன,” என்றார்.

1. Which country is building the world’s first Platypus Sanctuary?

A) India

B) Sri Lanka

C) Pakistan

D) Australia

  • The New South Wales State government and the Taronga Conservation Society of Australia announced that they are building the world’s first Platypus Sanctuary. This first–of–its kind refugee centre aims to promote breeding and rehabilitation of the duck–billed mammal, which has been facing extinction due to climate change. The facility is to be created in a zoo which is over 390 km from Sydney.

2. What is the theme of World Hearing Day 2021?

A) Hearing care for All

B) Save Hearing

C) Care for hearing

D) Hearing care

  • World Hearing Day is observed on 3 March to raise awareness about the measures that can be taken to prevent hearing loss. It is a campaign held each year by Office of Prevention of Blindness and Deafness of the World Health Organization (WHO). The theme of the campaign for 2021 is Hearing Care for All.

3. The International Waste Pickers’ Day is observed on which date?

A) March 1 B) March 2

C) March 3 D) March 4

  • International Waste Pickers’ Day is observed on March 1 to mark the Colombian massacre that led to the brutal death of 11 workers. This day seeks to give voice and recognition to waste pickers/recyclers across the world.

4. What is the theme of World Wildlife Day 2021?

A) Forests and Livelihoods: Sustaining People and Planet

B) For people, For planet, For ecosystem

C) Forests – Pillars for people and planet

D) None of the above

  • World Wildlife Day is observed on March 3 across the world to celebrate wildlife and create awareness about the adverse impact of human activities and climate change on the wildlife.
  • This year, it is being celebrated under the theme– Forests and Livelihoods: Sustaining People and Planet.

5. What is the full form of NADMP?

A) National Agriculture Disaster Management Plan

B) Ninth Agriculture Disaster Management Plan

C) New Agriculture Disaster Management Plan

D) Ninth Agriculture Disaster Mitigation Planning

  • National Agriculture Disaster Management Plan (NADMP) seeks to guide the Union Agriculture Ministry in ensuring timely response to natural disasters like drought, floods and sudden crisis like COVID–19 pandemic.
  • It identifies 34 hazards posing threats to the agriculture sector. These include heat waves, earthquakes, animal attacks, desertification, agricultural fires, cyclones and overdependence on chemicals.

6. Which strategy has recently been launched with the objective of revamping the Indian maritime sector?

A) Maritime India Vision 2030

B) Maritime India Vision 2032

C) Maritime India Vision 2035

D) Maritime India Vision 2040

  • Maritime India Vision 2030 is a 10–year strategy with the objective of revamping the Indian maritime sector. It seeks to attract Rs.3 lakh crore investment and generate employment for 20 lakh individuals. The plan also seeks to augment the annual revenue potential worth Rs.20,000 crore from major ports.

7. Which herb is being cultivated in Jammu as part of the Aroma Mission?

A) Lavender B) Parsley

C) Mint D) Basil

  • Lavender is being cultivated in Jammu as part of the Aroma Mission that was launched in 2016. Lavender is an aromatic herb with medicinal properties. It is a commercially important crop cultivated mainly for production of essential oils. Each litre of lavender essential oil is sold for INR 10,000.

8. What is the full form of ICLED?

A) Inter–band cascade light emitting device

B) Interior–based cascade light emitting diode

C) Intern link– band inter–band cascade light emitting

D) None of the above

  • ICLED or inter–band cascade light emitting device is a new type of high–powered light emitting diode that are used in quantitative analysis of several chemicals. It emits light in the mid IR wavelength regions. It was recently used to develop low–cost sensors to detect methane emission with high accuracy.

9. Which rare species of native Australian bee was recently spotted along the east coast of Australia?

A) Pharohylaeus lactiferous

B) Apis dorsata

C) Apis florea

D) Apis cerana indica

  • Pharohylaeus lactiferous is a rare species of native Australian bee that was recently spotted along the east coast of Australia. It was last spotted a century ago in 1923 in Queensland and only 6 individuals have ever been found. The invertebrate is threatened by wildfires, land fragmentation and climate change.

10. India’s largest ground–based optical telescope has been installed in which state?

A) Uttarakhand

B) Goa

C) Karnataka

D) Punjab

  • The telescope is the product of an Indo–Belgian collaborative effort, assisted by the Russian Academy of Sciences, that was kicked off in 2007. It is going to be operated by the Aryabhatta Research Institute of Observational Sciences (ARIES), an autonomous research body under the Department of Science and Technology.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!