TnpscTnpsc Current Affairs

9th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

9th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 9th May 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. அண்மையில் வெளியான, “The boy who wrote a constitution” என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ. ராஜேஷ் தல்வார் 

ஆ. அருந்ததி ராய்

இ. ரோமிலா தாப்பர்

ஈ. அர்ஜுன் தேவ்

  • பிரபல நாடக ஆசிரியரும் எழுத்தாளருமான ராஜேஷ் தல்வார் எழுதிய, “The Boy Who Wrote a Constitution” என்ற நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. அம்பேத்கரின் 131ஆவது பிறந்தநாளையொட்டி, அம்பேத்கரின் குழந்தைப் பருவத்து நினைவுகளை அடிப்படையாகக் கொண்ட இக்குழந்தைகள் நாடகம் வெளியிடப்பட்டது. ஆசிரியரின் பிற நூல்களுள், “The Vanishing of Subhash Bose”, “Gandhi, Ambedkar, and the Four–Legged Scorpion”, மற்றும் “Aurangzeb” ஆகியவை அடங்கும்.

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஷிங்கு லா கணவாய்” அமைந்துள்ள மாநிலம் எது?

அ. உத்தரகாண்ட்

ஆ. ஹிமாச்சல பிரதேசம் 

இ. அருணாச்சல பிரதேசம்

ஈ. சிக்கிம்

  • ஹிமாச்சல பிரதேசத்தை லடாக்குடன் இணைக்கும் வகையில் 16,580 அடி உயரத்தில் ஷிங்கு லா கணவாயில் உலகின் மிகவுயரமான சுரங்கப்பாதையை எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு உருவாக்கவுள்ளது. ஷிங்கு லா கணவாயில் அமைந்துள்ள உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த ஹிமாச்சல்–சான்ஸ்கர் சாலையைத் திறந்துவைக்கும் போது BROஇன் தலைமை இயக்குநர் Lt Gen இராஜீவ் சௌத்ரி இவ்வாறு கூறினார். இந்த இலட்சியத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு BRO–இன் ‘Project Yojak’ஐ நடுவண் அரசு தொடங்கியுள்ளது.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘டான்பாஸ்’ என்பது எந்த நாட்டில் உள்ள ஒரு பகுதியாகும்?

அ. ரஷ்யா 

ஆ. ஜப்பான்

இ. உக்ரைன்

ஈ. இஸ்ரேல்

  • ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் படைகள் 300 மைல்களுக்கு மேல் முன்னோக்கிச் சென்று தாக்குதல் நடத்தியதுடன், அது டான்பாஸ் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற முன்னேறியது. சரமாரியான பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதலின் ஆதரவுடன் ஆயிரக்கணக்கான ரஷ்யப் படைகள் டான்பாஸ் பிராந்தியத்தில் முன்னேறின; உக்ரேனிய அதிகாரிகள் அதை ‘டான்பாஸ் போர்’ என்று அழைத்தனர்.

4. இந்தியாவின் முதல் கையடக்க சூரிய மேற்கூரை அமைப்பு திறக்கப்பட்ட நகரம் எது?

அ. மும்பை

ஆ. ஜெய்சால்மர்

இ. காந்திநகர் 

ஈ. சண்டிகர்

  • இந்தியாவின் முதல் கையடக்க சூரிய மேற்கூரை அமைப்பானது காந்திநகரில் உள்ள சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோவில் வளாகத்தில் திறக்கப்பட்டது. ஜெர்மன் மேம்பாட்டு நிறுவனமான Deutsche Gesellschaft fur Internationale Zusammenarbeit மூலம் அக்கோவில் வளாகத்தில் 10 PV போர்ட் அமைப்புகள் நிறுவப்பட்டது. இந்தியா முழுவதும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நகரங்களை மேம்படுத்துதற்காக புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் முன்முயற்சியின்கீழ் இந்த அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.

5. விண்வெளி செயற்கைக்கோள்களுக்கு எதிரான ஏவுகணை சோதனைகளுக்கு தடை விதித்த முதல் நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. அமெரிக்கா 

இ. இஸ்ரேல்

ஈ. ஜப்பான்

  • விண்வெளி செயற்கைக்கோள்களுக்கு எதிரான ஏவுகணை சோதனைகளுக்கு தடை விதித்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை அமெரிக்கா பெற்றுள்ளது. தேசிய விண்வெளி கவுன்சிலின் தலைவரான அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், இதுபோன்ற சோதனைகளால் உருவாகும் குப்பைகள் விண்வெளி வீரர்கள் மற்றும் செயற்கைக்கோள்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அறிவித்தார். அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதுபோன்ற சோதனைகளை மேற்கொண்டு விண்வெளி குப்பைகளை உருவாக்கி உள்ளன.

6. ‘லா ரோடா பன்னாட்டு ஓப்பன் செஸ் போட்டியில்’ வென்ற இந்திய செஸ் வீரர் யார்?

அ. R பிரக்ஞானந்தா

ஆ. D குகேஷ் 

இ. இனியன்

ஈ. கோனேரு ஹம்பி

  • இளம் இந்திய கிராண்ட்மாஸ்டரான D குகேஷ், 48ஆவது ‘லா ரோடா சர்வதேச ஓப்பன் செஸ் போட்டியில்’ ஒன்பது சுற்றுகளில் எட்டுப் புள்ளிகளைப் பெற்று வெற்றியைப்பெற்றார். ஒன்பது சுற்றுகளில் ஆட்டமிழக்காமல் இருந்த தமிழ்நாட்டைச்சேர்ந்த 15 வயதான D குகேஷ், இறுதிச்சுற்றில் இஸ்ரேலின் விக்டர் மிகலெவ்ஸ்கியை தோற்கடித்தார். மற்றொரு இளம் இந்திய கிராண்ட்மாஸ்டரான R பிரக்ஞானந்தா மூன்றாமிடத்தைப் பிடித்தார்.

7. பூடான் மற்றும் சிங்கப்பூருக்குப் பிறகு, UPI அடிப்படையிலான கொடுப்பனவு சேவைகளை வழங்க, கீழ்காணும் எந்த நாட்டிற்கு NPCI விரிவுபடுத்தப்பட்டுள்ளது?

அ. இலங்கை

ஆ. நேபாளம்

இ. வங்காளதேசம்

ஈ. ஐக்கிய அரபு அமீரகம் 

  • NPCI–இன் சர்வதேசப் பிரிவான NPCI இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிட் (NIPL), Mashreq வங்கியின் கொடுப்பனவு துணை நிறுவனமான ‘NeoPay’ உடன் கூட்டுசேர்ந்து UAE சந்தையில் நுழைந்துள்ளது. BHIM UPI சேவை ‘NeoPay’ முனையங்களில் இயக்கப்பட்டுள்ளது. இக்கூட்டாண்மை இந்தப் பிராந்தியங்களுக்கு பயணிக்கும் இந்தியர்களுக்கு ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகம் அடிப்படையிலான கொடுப்பனவு சேவைகளை வழங்கும். பூடான் மற்றும் சிங்கப்பூருக்குப் பிறகு NPCI–இன் மூன்றாவது சர்வதேச விரிவாக்கமாக இது உள்ளது.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘SAANS பிரச்சாரம்’ என்பதுடன் தொடர்புடைய நோய் எது?

அ. COVID–19

ஆ. நிமோனியா 

இ. நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்

ஈ. நுரையீரல் ஃபைப்ரோஸிஸ்

  • Social Awareness and Action to Neutralise Pneumonia Successfully” (SAANS) என்பது நடுவண் சுகாதார அமைச்சகத்தால் குழந்தைகளிடையே நிமோனியா குறித்த விழிப்புணர்வு மற்றும் நிமோனியாவை முன்கூட்டியே கண்டறிவதை உறுதிசெய்யும் நோக்கோடு தொடங்கப்பட்டது. சமீபத்தில், கர்நாடக சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சகம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியாவை முன்கூட்டியே கண்டறிவதை உறுதி செய்வதற்காக மாநிலத்தில் ‘SAANS பிரச்சாரத்தை’த் தொடங்கியுள்ளது. நிமோனியா இறப்பு விகிதத்தை 1000–க்கு 3 அல்லது அதற்கும் குறைவாகக் கொண்டு வருதலை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. நிமோனியா என்பது பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சையால் ஏற்படும் ஒரு நுரையீரல் தொற்று ஆகும்.

9. நிர்வாகச் சேவை அதிகாரிகளுக்கு இடையே யார் உரையாற்றியதை நினைவுகூரும் வகையில், இந்தியா, ‘குடிமைப் பணிகள் நாளை’க் கொண்டாடுகிறது?

அ. மகாத்மா காந்தி

ஆ. ஜவஹர்லால் நேரு

இ. B R அம்பேத்கர்

ஈ. சர்தார் வல்லபாய் படேல் 

  • 1947ஆம் ஆண்டு விடுதலை இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல், தில்லியில், தகுதிகாண் பருவத்தில் இருந்த நிர்வாகச் சேவைகள் அதிகாரிகளிடையே உரையாற்றிய நாளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஏப்.21 அன்று, இந்திய அரசு, ‘குடிமைப் பணிகள் நாளை’க் கொண்டாடுகிறது. புகழ்பெற்ற அவ்வுரையில், அவர் நிர்வாகச் சேவைகள் அதிகாரிகளை, “இந்தியாவின் எஃகுச் சட்டகம்” என்று குறிப்பிட்டார். இதுபோன்ற முதல் கொண்டாட்டம் 2006 ஏப்ரல்.21 அன்று நடந்தது. ‘பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான பிரதமர் விருதுகள்’ ஆண்டுதோறும் இவ்விழாவின்போது வழங்கப்படுகிறது.

10. சமீப செய்திகளில் இடம்பெற்ற அர்ஜுன் ஹலகுர்கி, சுனில் குமார் மற்றும் நீரஜ் ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. ஹாக்கி

ஆ. டென்னிஸ்

இ. மல்யுத்தம்

ஈ. டபிள் டென்னிஸ்

  • மங்கோலியாவின் தலைநகர் உலன் பாட்டரில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில், கிரேக்க–ரோமன் மல்யுத்த வீரர்களான அர்ஜுன் ஹலகுர்கி, சுனில் குமார் மற்றும் நீரஜ் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். இன்னும் ஐந்து கிரேகோ பிரிவுகள், பிரீஸ்டைல் மற்றும் பெண்கள் மல்யுத்தம் போட்டிகள் நடைபெற உள்ளன. எந்த கிரேக்க–ரோமன் மல்யுத்த வீரரும் டோக்கியோவிற்குத் தகுதி பெறாததால், கிரேக்க–ரோமன் பிரிவு இந்திய மல்யுத்தத்தில் தேவையற்ற இணைப்பாகக் கருதப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

Newspaper, news icon - Free download on Iconfinder

Newspaper, news icon - Free download on Iconfinder

1. வங்கக்கடலில் உருவானது ‘அசானி’ புயல்

வங்கக்கடலில் ‘அசானி’ என்ற புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் அடுத்தடுத்து வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. இந்தப் புயலுக்கு இலங்கை நாடு ‘அசானி’ என்று பெயர் வழங்கியுள்ளது. இந்தப் புயல் மேலும் தீவிரமாகி ஒடிஸா கடற்கரை நோக்கி நகரவுள்ளது.

2. நூல் வெளியீடு

முன்னாள் இகாப அதிகாரி பிரகாஷ் சிங் எழுதிய, “இந்தியாவில் காவல்துறை சீர்திருத்தங்களுக்கான போராட்டம்” என்ற நூலை தில்லியில் வைத்து இந்திய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா வெளியிட்டார்.

3. புயல்களின் பெயர்களும் பின்னணியும்…

வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள புயலுக்கு, ‘அசானி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர் இலங்கையால் அளிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சிங்கள மொழியில் ‘அசானி’ என்பதற்கு ‘பெருஞ்சினம்’ என்று பொருள்.

ஏன் பெயர் சூட்டப்படுகிறது?

அதற்கு பதிலளிக்கும் விதமாக உலக வானிலை அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, ஒரு குறிப்பிட்ட புவியியல் இடத்தில் அல்லது பூமியின் எந்தவொரு பகுதியிலும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாகக்கூடும். அந்தப் புயல்களை வேறுபடுத்திக் காண்பித்து குழப்பத்தைத் தவிர்க்கவும், பேரிடர் அபாய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்கவும் ஒவ்வொரு புயலுக்கும் பெயர்சூட்டப்படுகிறது.

புயல்களுக்கு சிறிய மற்றும் அழைப்பதற்கு எளிமையாக உள்ள பெயர்கள் சூட்டப்படுகின்றன. இதுபோல் பெயர் சூட்டுவது நூற்றுக்கணக்கான நிலையங்கள், கடலோர தளங்கள் மற்றும் கப்பல்களுக்கு விரைந்தும், திறம்படவும் புயல் குறித்த தகவல்களை அனுப்ப உதவுகிறது.

பெண் பெயர் வைக்கும் வழக்கம்:

தொடக்கத்தில் புயல்களுக்குத் தன்னிச்சையாகப் பெயரிடப்பட்டன. 1900-ஆம் ஆண்டுகளின் மத்தியில் இருந்து புயல்களுக்கு பெண் பெயர் வைக்கும் வழக்கம் தொடங்கியது. பின்னர் பெயர் வைப்பதில் மேலும் ஒழுங்கான, ஆற்றல்மிக்க நடைமுறையைக் கொண்டிருப்பதற்குப் பெயர் பட்டியல் தயாரிக்க வானிலை ஆய்வாளர்கள் தீர்மானித்தனர்.

பெயர்சூட்டலில் ருசிகரம்:

வானிலை விஞ்ஞானிகள் புயல்களுக்குத் தன்னிச்சையாகப் பெயர்சூட்டி வந்த காலத்தில், தங்களுக்குப் பிடிக்காத பெண்கள், அரசியல்வாதிகள் பெயர்களைச் சூட்டி வந்தார்கள்!

புயல்களுக்குப் பெயர்சூட்டும் வழக்கத்தைத் தொடங்கியவர் பிரிட்டனைச்சேர்ந்த வானியல் விஞ்ஞானி கிளெமென்ட் ராக் (1852-1922) என்பவர். இவர் முதலில் பிரிட்டனிலும் பின்னர் ஆஸ்திரேலியாவிலும் வானிலையை அளவிடுவதற்கான கருவிகளை தனிப்பட்ட முறையில் அமைத்து ஆய்வு செய்துவந்தார். முதலில் கிரேக்க எழுத்துகளைக் கொண்ட பெயர்களையும் கிரேக்க புராணங்களில் காணப்படும் பெயர்களையும் புயல்களுக்குச்சூட்ட அவர் முடிவுசெய்தார். பின்னர் புயல்களின் பெயர்கள் வரிசையில் அவருக்குப் பிடிக்காத ஆஸ்திரேலிய பிரதமர்களின் பெயர்களும் இடம்பிடித்தன!

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும்:

ஒருமுறை சூட்டப்படும் பெயர் மீண்டும் பயன்படுத்தப்படாது. புயல்களுக்கான பெயர்கள் அதிகபட்சம் 8 எழுத்துகளைக் கொண்டிருக்கலாம். அந்தப் பெயர் எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும், எந்தவொரு இனத்தைச் சேர்ந்தவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதமாகவும் இருக்கக்கூடாது.

கடந்த 2020-ஆம் ஆண்டு புயல்களுக்குச்சூட்ட 13 நாடுகள் வழங்கிய 169 பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு நாடும் தலா 13 பெயர்களை அளித்தன. அவற்றில் இந்தியா சார்பில் அளிக்கப்பட்ட பெயர்களில் கதி, மேக், ஆகாஷ் ஆகிய பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய பங்களிப்பு:

உலக அளவில் 6 சிறப்பு பிராந்திய வானிலை மையங்கள் உள்ளன. அவற்றில் இந்திய வானிலை ஆய்வு மையமும் ஒன்று. வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல் மணிக்கு 62 கிமீ அல்லது அதற்கும் அதிகமான வேகத்தை எட்டும்போது, அதற்குப் பெயர் சூட்டும் பொறுப்பு இந்திய வானிலை ஆய்வு மையத்திடம் வழங்கப்பட்டு உள்ளது. வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியையொட்டியுள்ள 13 நாடுகளுக்கு புயல் குறித்த ஆலோசனைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்குகிறது.

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் புயல்களுக்குப் பெயரிடும் வழக்கம் 2004ஆம் ஆண்டு செப் மாதம் தொடங்கியது.

அகவரிசைப்படி உள்ள நாடுகள் அளிக்கும் பெயர்களுக்கு ஏற்ப பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அவை பாலினம், அரசியல், மத நம்பிக்கைகள், பண்பாடுகள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.

தமிழ்ப்பெயர்…

தற்போது உருவாகியுள்ள ‘அசானி’ புயலைத் தொடர்ந்து அடுத்து உருவாகும் புதிய புயலுக்கு ‘சித்ரங்’ எனப் பெயரிடப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தியா அளித்துள்ள ‘குர்மி’, ‘பிரவாஹோ’, ‘ஜார்’, ‘முரசு’ போன்ற பெயர்களும் எதிர்காலத்தில் பயன்படுத்தப்படவுள்ளன.

1. Who is the author of the “The boy who wrote a constitution”, which was recently released?

A. Rajesh Talwar 

B. Arundhati Roy

C. Romila Thapar

D. Arjun Dev

  • A book titled “The Boy Who Wrote a Constitution” written by noted playwright and author Rajesh Talwar was released recently. The children drama, based on Ambedkar’s own recollection of his childhood, was released on the occasion of Dr BR Ambedkar’s 131st birth anniversary. The author’s other books include “The Vanishing of Subhash Bose”, “Gandhi, Ambedkar, and the Four Legged Scorpion”, and “Aurangzeb”.

2. ‘Shinku La Pass’, which was seen in the news, is located in which state?

A. Uttarakhand

B. Himachal Pradesh 

C. Arunachal Pradesh

D. Sikkim

  • The Border Roads Organisation will construct the world’s highest tunnel at Shinku La Pass at 16,580 feet to connect Himachal Pradesh to Ladakh. BRO Director General Lieutenant General Rajeev Chaudhary stated this while opening the strategically important Himachal to Zanskar Road at Shinku La Pass. The Centre has launched ‘Project Yojak’ of BRO to implement this ambitious project.

3. ‘Donbas’, which was seen in the news recently, is a region in which country?

A. Russia 

B. Japan

C. Ukraine

D. Israel

  • Russian President Vladimir Putin’s forces have attacked a front stretching more than 300 miles as it advances to take control of the Donbas region. Thousands of Russian troops backed by artillery and rocket barrages were advancing in the region, and the Ukrainian officials called it as the Battle of the Donbas.

4. India’s first portable solar rooftop system was inaugurated at which city?

A. Mumbai

B. Jaisalmer

C. Gandhinagar 

D. Chandigarh

  • India’s first portable solar rooftop system was inaugurated at Swaminarayan Akshardham temple complex in Gandhinagar. The installation of 10 PV Port systems in the temple complex is supported by the German development agency Deutsche Gesellschaft fur Internationale Zusammenarbeit (GIZ). The systems have been installed under Ministry of New and Renewable Energy’s initiative to develop renewable energy cities across India.

5. Which is the first country to announce a ban on missile tests against space satellites?

A. Russia

B. USA 

C. Israel

D. Japan

  • The United States has become the first country in the world to announce a ban on missile tests against space satellites. US Vice–President Kamala Harris, who chairs the National Space Council, announced that the debris created by such tests presents a risk to the safety of astronauts and satellites. Many countries including U.S, China, Russia and India have carried out such tests and generated space debris.

6. Which Indian chess player won the ‘La Roda International Open Chess tournament’?

A. R Praggnanandhaa

B. D Gukesh 

C. Iniyan

D. Koneru Humpy

  • Young Indian Grandmaster D Gukesh clinched victory in the 48th La Roda International Open Chess tournament, scoring eight points from nine rounds. The 15–year–old GM from Tamil Nadu, who remained unbeaten through the nine rounds, defeated Israel’s Victor Mikhalevski in the final round. His compatriot R Praggnanandhaa, another young GM, took the third spot.

7. After Bhutan and Singapore, NPCI has expanded to which country, to offer UPI–based payments?

A. Sri Lanka

B. Nepal

C. Bangladesh

D. UAE 

  • NPCI International Payments Ltd (NIPL), the international arm of NPCI, has entered the UAE market by partnering with NeoPay, the payment subsidiary of Mashreq Bank.
  • BHIM UPI service has been made live on NeoPay terminals. This partnership will offer Unified Payments Interface–based payments for Indians travelling to these regions. This is NPCI’s third such international expansion after Bhutan and Singapore.

8. ‘SAANS Campaign’ which was seen in the news, is associated with which disease?

A. COVID–19

B. Pneumonia 

C. Chronic Obstructive Pulmonary Disease

D. Pulmonary Fibrosis

  • ‘Social Awareness and Action to Neutralise Pneumonia Successfully’ (SAANS) was launched by Union Health Ministry to ensure greater awareness and early detection of pneumonia in children. Recently, Karnataka Health and Medical Education Ministry launched SAANS campaign in the state to ensure early detection of pneumonia in children under five.
  • It aims to reduce pneumonia mortality to less than 3 per 1,000 live births. Pneumonia is a lung infection caused by bacteria, virus or fungus.

9. India celebrates ‘Civil Services Day’ to commemorate the address of which leader to the Administrative Services Officers?

A. Mahatma Gandhi

B. Jawaharlal Nehru

C. B R Ambedkar

D. Sardar Vallabhai Patel 

  • Every year on April 21, the Government of India celebrates ‘Civil Services Day’, to commemorate the day in 1947 when Sardar Vallabhbhai Patel, the first Home Minister of Independent India, addressed the probationers of Administrative Services Officers in Delhi.
  • In the famous speech, he referred to public workers as the “steel frame of India”. The first such celebration took place on April 21, 2006. ‘The Prime Minister’s Awards for Excellence in Public Administration’ is awarded during the occasion annually.

10. Arjun Halakurki, Sunil Kumar and Neeraj, who were seen in the news, are associated with which sports?

A. Hockey

B. Tennis

C. Wrestling

D. Table Tennis

  • In the Asian championships being held in Ulan Baatar (Capital city of Mongolia), Greco–Roman wrestlers Arjun Halakurki, Sunil Kumar and Neeraj won bronze medals. Five more Greco categories, freestyle and women’s wrestling are yet to follow in the competition. Greco–Roman category is seen as a weak link in Indian wrestling as No Greco–Roman wrestler qualified for Tokyo.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!