Tnpsc

9th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

9th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 9th September 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. “Atlas of Mortality and Economic Losses from Weather, Climate and Water Extremes” என்றவொன்றை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) FAO 

ஆ) WMO

இ) WTO

ஈ) IMF

  • உலக வானிலை அமைப்பானது (WMO) ‘Atlas of Mortality and Economic Losses from Weather, Climate and Water Extremes’ஐ (1970–2019) வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, கடந்த ½ நூற்றாண்டில் தீவிர வானிலை, காலநிலை அல்லது நீரழுத்தத்தால் ஏற்படும் ஒவ்வொரு மூன்றாவது இறப்பும் (35 சதவீதம்) ஆப்பிரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
  • உலக மக்கள்தொகையில் 17 சதவீதம் மட்டுமே ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் வானிலை, தட்பவெப்ப நிலை மற்றும் நீர்நிலைகளால் ஆப்பிரிக்காவில் நடந்த மொத்த இறப்புகளில் 89 சதவீத இறப்பிற்கு நான்கு வறட்சிகள் (1973 மற்றும் 1983 எத்தியோப்பியா, 1981 மொசாம்பிக் & 1983 சூடான்) காரணமாக இருந்தன. கிட்டத்தட்ட 99% இறப்புகள் ஆப்பிரிக்காவின் குறைந்த முதல் கீழ்-நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் நிகழ்ந்துள்ளன.

2. 2021 செப்டம்பரில் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறையால் நடத்தப்படும் நிகழ்வின் பெயர் என்ன?

அ) ஷிக்ஷக் பர்வ் 

ஆ) ஷிக்ஷக் கால்

இ) ஷிக்ஷக் செப்டம்பர்

ஈ) வித்யா பர்வ்

  • பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறையானது சிக்ஷக் பர்வ்-2021’ஐ செப்.5 முதல் 20 வரை கொண்டாட முடிவுசெய்துள்ளது. குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் செப்டம்பர்.5 அன்று மெய்நிகர் முறையில் 44 விருதுகளை வழங்குகிறார்.
  • தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சிறப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிப்பதற்காக ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் 1958ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றன.

3. ஆண்டுதோறும் நடைபெறும் கிழக்குப் பொருளாதார மன்றத்தின் (EEF) கூட்டம் நடைபெறும் நாடு எது?

அ) சுவிச்சர்லாந்து

ஆ) ரஷ்யா 

இ) ஜப்பான்

ஈ) சிங்கப்பூர்

  • கிழக்குப் பொருளாதார மன்றம் என்பது ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெறும் வருடாந்திர சந்திப்பாகும். இது ரஷ்யாவின் வளம் நிறைந்த ஆனால் வளர்ச்சியடையாத தூரக்கிழக்குப்பகுதிகளில் அந்நிய முதலீடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டில், பிரதமர் மோடி, தூரக்கிழக்கிற்கு 1 பில்லியன் டாலர் கடனை அறிவித்தார். முன்மொழியப்பட்ட சென்னை-விளாடிவோஸ்டாக் கடல் வழிப்பாதை இருதரப்பு உறவுகளை ஒன்றாக ஊக்குவிக்கும்.
  • மசகான் டாக்ஸ் லிமிடெட், ஸ்வெஸ்டாவில் உள்ள ரஷ்ய கப்பல்கட்டும் வசதியுடன் கூட்டுசேர்ந்து முக்கிய வணிகக் கப்பல்களை உருவாக்கும். ககன்யான் திட்டத்தின் மூலம் இந்தியாவும் ரஷ்யாவும் விண்வெளி ஆராய்ச்சியில் பங்குதாரர்களாக உள்ளன.

4. நெகிழி ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ள முதல் ஆசிய நாடு எது?

அ) தாய்லாந்து

ஆ) நேபாளம்

இ) இந்தியா 

ஈ) இலங்கை

  • இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF இந்தியா) மற்றும் இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நெகிழிக்கான ஒரு சுழற்சி அமைப்பை ஊக்குவிக்க ஒரு தளத்தை உருவாக்கியுள்ளன. புதிய தளம், ‘இந்தியா நெகிழி ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படுகிறது.
  • இந்தியா, ஆண்டுக்கு 9.46 மில்லியன் டன் நெகிழிக்கழிவுகளை உருவாக்குகிறது; அதில் 40% சேகரிக்கப்படாமல் உள்ளது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து நெகிழியிலும் சரிபாதி பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலானவை ஒற்றைப்பயன்பாட்டு நெகிழி ஆகும். நெகிழி பேக்கேஜிங்கைக் குறைத்தல், புதுமைப்படுத்துதல் மற்றும் மறு-ஆக்கம் செய்வதற்கான இலக்குகளை இது கொண்டுள்ளது.

5. பனிச்சிறுத்தை மற்றும் கருப்பு கழுத்து கொக்கு ஆகியவற்றை மாநில விலங்கு மற்றும் பறவையாக ஏற்றுக்கொண்ட மாநிலம் எது?

அ) தில்லி

ஆ) ஹரியானா

இ) பஞ்சாப்

ஈ) லடாக் 

  • லடாக் யூனியன் பிரதேச விலங்காக பனிச் சிறுத்தை, பறவையாக கருப்புக் கழுத்து கொக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இனங்களும் அழிவின் விளிம்பில் உள்ள இனங்களாகும். கருப்பு கழுத்து கொக்குகள் லடாக்கை பூர்வீகமாகக் கொண்டவை. அதே நேரத்தில், பனிச்சிறுத்தைகள் இந்த பகுதியில் அதிகம் காணப்படுகின்றன.
  • IUCN’இன்படி, கருப்பு கழுத்து கொக்கு, “கிட்டத்தட்ட அருகிவிட்ட இனம்” ஆகும். பனிச்சிறுத்தை “அழிவாய்ப்பு நிலையிலுள்ள இனம்” ஆக உள்ளது. 2019 ஆகஸ்ட் வரை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மாநிலப் பறவையாக கருப்பு கழுத்து கொக்கு இருந்தது.

6. புதிய ‘காலநிலை நிதி தலைமைத்துவ முன்னெடுப்பு – இந்தியா’ கூட்டாண்மையானது எந்த நாட்டுடன் கையெழுத்திடப்பட்டது?

அ) அமெரிக்கா

ஆ) பிரான்ஸ்

இ) இங்கிலாந்து 

ஈ) ஆஸ்திரேலியா

  • 11ஆவது இந்தியா-இங்கிலாந்து பொருளாதார & நிதி பேச்சுவார்த்தையில், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். பசுமைத் திட்டங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவற்றில் பொது மற்றும் தனியார் முதலீடுகளின் $1.2 பில்லியன் டாலர் தொகுப்பில் அவர்கள் இருவரும் கையெழுத்திட்டனர்.

7. இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் மற்றும் எறிகணை கண்காணிப்பு கப்பலின் பெயர் என்ன?

அ) அஜித்

ஆ) துருவ் 

இ) நரேன்

ஈ) ருத்ரா

  • இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் & எறிகணை கண்காணிப்பு கப்பலான ‘துருவ்’ விசாகப்பட்டினத்திலிருந்து இந்திய கடற்படையில் இணைக்கப்படவுள்ளது. இந்தக் கப்பல் ஹிந்துஸ்தான் கப்பல்கட்டும் நிறுவனத்தால் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டது.
  • எதிரிநாட்டு நீர்மூழ்கிக்கப்பல்களை கண்டறிதலுக்காக ‘INS துருவ்’ கடல் படுக்கைகளை வரைபடமாக்க முடியும்.

8. SAGAR திட்டத்தின்கீழ், இந்திய கடற்படையின் கடல்ரோந்துக் கப்பலான INS சாவித்திரி, எந்த நாட்டில் உள்ள சாட்டோகிராம் துறைமுகத்திற்கு சென்றது?

அ) இலங்கை

ஆ) வங்காளதேசம் 

இ) நேபாளம்

ஈ) தாய்லாந்து

  • இந்திய கடற்படையின் கடல் ரோந்து கப்பலான ஐஎன்எஸ் சாவித்ரி வங்காளதேசத்தின் சாட்டோகிராம் துறைமுகத்திற்கு சென்றடைந்தது. COVID-19 தொற்றை கையாளுவதில் வங்கதேசத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஆதரவாக இரண்டு 960 LPM மருத்துவ ஆக்ஸிஜனை அது எடுத்துச்சென்றது. இவை இந்தியாவில் DRDOஆல் உருவாக்கப்பட் -டு தயாரிக்கப்பட்டது. இந்தக் கப்பல் சட்டோகிராம் துறைமுகத்திலிருந்து புறப்படும் போது BN கப்பலுடன் கடல்சார் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளது.

9. பாராலிம்பிக்ஸ் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் இஆப அதிகாரி யார்?

அ) சுஹாஸ் யாதிராஜ் 

ஆ) தேவேந்திர ஜஜாரியா

இ) யோகேஷ் கதுனியா

ஈ) பாவினா படேல்

  • நொய்டா மாவட்ட நீதிபதி சுஹாஸ் L யாதிராஜ், பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இஆப அதிகாரியாக என்ற வரலாறுச் சாதனையை படைத்தார். அவர் இந்தோனேசியாவின் ஃப்ரெடி செட்டியவானை SL 4-குரூப் ஏ’இல் தோற்கடித்தார். அவர் முன்பு 2017 மற்றும் 2019’இல் BWF துருக்கிய சாம்பியன்ஷிப்பில் பல பதக்கங்களை வென்றுள்ளார். அவர் 2020’இல் பிரேசிலில் தங்கப்பதக்கத்தையும் வென்றார்.

10. எந்த நிறுவனத்துடன் இணைந்து, இஸ்ரோ, விண்வெளியில் நுண்ணுயிரிகளை வளர்க்க ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளது?

அ) ஐஐடி-மெட்ராஸ்

ஆ) ஐஐடி-பம்பாய்

இ) ஐஐஎஸ்சி 

ஈ) டிஆர்டிஓ

  • இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் குழு இணைந்து விண்வெளியில் நுண்ணுயிரிகளை வளர்ப்பதற்கான ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளன. இந்தச் சாதனம் நுண்ணுயிர் மற்றும் பாக்டீரியா வளர்ச்சியைக்கண்காணிக்க எல்இடி மற்றும் போட்டோடியோட் உணரி கலவையைப் பயன்படுத்துகிறது.
  • இந்தச் சாதனம் விண்வெளி வீரர்களால் இந்தியாவின் முதல் குழு விண்கலமான ‘ககன்யான்’ பயணத்தின் போது விண்வெளியில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்ள பயன்படும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்

கவிஞரும், பாடலாசிரியருமான புலமைப்பித்தன் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 08-09-2021 காலமானார். அவருக்கு வயது 85.

பிரபல திரைப்படப் பாடலாசிரியராக அறியப்பட்ட புலமைப்பித்தன் (85), தமிழக சட்ட மேலவையின் முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்தவர்.

2. ஜவுளி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.10,683 கோடி திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஜவுளித் துறையில் ரூ.10,683 கோடி மதிப்பிலான உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு (பிஎல்ஐ) பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பெரும் பயன் கிடைக்கும். தில்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம், பிரதமா் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு, மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

‘தற்சாா்பு இந்தியா’ என்ற தொலைநோக்குப் பாா்வையை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக, உள்நாட்டு உற்பத்தியையும், ஏற்றுமதியையும் அதிகரிக்கும் நோக்கில் 13 முக்கியத் துறைகளில் உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு (பிஎல்ஐ) மத்திய பட்ஜெட்டில் ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, செயற்கை இழை மற்றும் தொழில்நுட்பத்துக்கான பிரத்யேக இழை சாா்ந்த ஜவுளித் துறையில் உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதியை அதிகரிக்க அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.10,683 கோடி திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

13 துறைகளுக்கு பிஎல்ஐ திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதன் வாயிலாக இந்தியாவின் குறைந்தபட்ச உற்பத்தி அடுத்த 5 ஆண்டுகளில் சுமாா் ரூ. 37.5 லட்சம் கோடியாகவும், இதே காலகட்டத்தில் குறைந்தபட்ச வேலைவாய்ப்பு சுமாா் ஒரு கோடியாகவும் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வெவ்வேறு ஊக்குவிப்புக் கட்டமைப்புடன் இரண்டுவிதமான முதலீடுகளுக்கு வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் ரூ. 300 கோடி முதலீடு செய்ய விரும்பும் எந்த நபரும் திட்டத்தில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். இரண்டாவதாக, குறைந்தபட்சம் ரூ. 100 கோடி முதலீடு செய்ய விருப்பமுள்ளவா்களும் விண்ணப்பிக்கலாம். மேலும், விருப்பம் உள்ள மாவட்டங்கள், 3 மற்றும் 4-ஆம் நிலை நகரங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் முதலீடு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன்மூலம் பின்தங்கிய பகுதிகளுக்கும் தொழில் துறை சென்றடையும். இந்தத் திட்டத்தால் தமிழ்நாடு, குஜராத், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப், ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் மாபெரும் மாற்றம் ஏற்படும் என்றாா் அவா்.

3. அரசுத் துறைகளை எண்மமயமாக்க புதிய திட்டம்

அரசுத் துறைகளின் செயல்பாடுகளை படிப்படியாக எண்மமயமாக்க, ‘எண்ம (டிஜிட்டல்) தமிழ்நாடு’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் அறிவித்தாா். சட்டப் பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் துறை மானியக் கோரிக்கைகளுக்கு பதிலளித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:-

வெளிப்படையான நிா்வாகத்தை குடிமக்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மின்னாளுகையை படிப்படியாக அரசின் அனைத்து நிலைகளிலும் புகுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை நோக்கமாகக் கொண்டு ‘எண்ம தமிழ்நாடு’ திட்டம் செயல்படுத்தப்படும். மக்களுடன் நேரடித் தொடா்பு கொண்ட மற்றும் அவா்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் அரசுத் துறைகளின் செயல்பாடுகள் படிப்படியாக எண்மமயமாக்கப்படும். தரவுகளை ஏற்படுத்தி அவற்றை பகுப்பாய்வு செய்து அதன்மூலம் கொள்கைகளை வகுக்க ஏதுவாக, தமிழக அரசின் கொள்கை முடிவுகளுக்கான ஆதரவு அமைப்பு செயல்படுத்தப்படும். தரவுகளின் அடிப்படையில் அமைந்த ஆளுகையை முதலமைச்சரின் தகவல் பலகை வழியாக வழங்கவும், பல்வேறு தரவுத்தளப் பயனாளிகளின் தகவல்களை ஒருங்கிணைந்த வகையில் காண்பதற்கும் இந்த அமைப்பு உதவும்.

எண்மமயமாக்கும் திட்டம்: தமிழக அரசுத் துறைகளின் அலுவலகச் செயல்பாடுகளை எண்மமயமாக்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படும். இது விரைந்து முடிவெடுப்பதற்கான செயல்திறனை மேம்படுத்த உதவும். இது காகிதப் பயன்பாட்டைக் குறைக்கவும் உதவும். இந்தத் திட்டம் முதல்கட்டமாக தலைமைச் செயலகத்தில் இந்த ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும். இரண்டாவது கட்டமாக பிற அரசுத் துறை அலுவலகங்களில் அமல்படுத்தப்படும். இணையவழி வாணிபத்தின் வளா்ச்சி, வாடிக்கையாளா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்திடும் வகையில், தரவு மையங்கள் வேகமாக வளா்ந்து வருகின்றன. அடுத்த 4 ஆண்டுகளுக்குள் அதன் வளா்ச்சி விகிதம் 4 சதவீதத்துக்கும் மேல் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தரவு மையக் கொள்கை வெளியிடப்படும். தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த ஆற்றல்மிக்க உலகளாவிய திறன் மையங்களை ஈா்க்கும் முக்கிய மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது.

இதன் மூலம் மாநிலத்தை உலகளாவிய திறன் மையங்களுக்கான முக்கிய முனையமாக மாற்றிடும் வகையில் திறன் மையக் கொள்கை வெளியிடப்படும்.

மெய்நிகா் அருங்காட்சியகம்: மெய்நிகா் அருங்காட்சியகம், தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் அமைக்கப்படும். இதன்மூலம் தமிழகத்தின் பாரம்பரியம், வரலாற்றுச் சின்னங்கள், கலைப் பொருள் குறித்த ஆவணங்களை மெய்நிகா் மூலமாக அறிந்திட முடியும். இந்த அருங்காட்சியகம் மூன்று ஆண்டுகளுக்குள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் உள்ள புத்தகங்கள், ஓலைச் சுவடிகள் ஆகியவற்றைக் கொண்ட மின்நூலகத்தை பாா்வைக் குறைபாடு கொண்டவா்களும் எளிதாக வாசிக்க, உள்ளடக்கத் தமிழ் மின்நூலகமாக மாற்றப்படும். அரிய ஒலி-ஒளி ஆவணங்கள், ஒளிப்படங்கள், புகைப்படங்கள் ஆகியன மின்னுருவாக்கம் செய்யப்படும். தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து யூமாஜின் எனும் வருடாந்திர தொழில்நுட்பத் தலைமை உச்சி மாநாடு தமிழகத்தின் பல்வேறு சுற்றுலா நகரங்களில் நடத்தப்பட உள்ளது. முதலாவது மாநாடு சென்னையில் நடத்தப்படும் என்று அமைச்சா் மனோ தங்கராஜ் அறிவித்தாா்.

3-வது நிலை நகரங்களில் ஐ.டி. பூங்கா

தமிழகத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிவிப்பு: வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த வளா்ச்சியை ஊக்குவிக்கவும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் படிப்படியாக அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளாா்

4. இந்திய விமானப் படைக்கு புதிதாக 56 போக்குவரத்து விமானங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்திய விமானப் படைக்கு புதிதாக 56 போக்குவரத்து விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் அவ்ரோ விமானங்களுக்கு மாற்றாக, சி-295 ரக விமானங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. பிரதமா் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஸ்பெயினில் உள்ள ஏா்பஸ் டிபன்ஸ் அண்ட் ஸ்பேஸ் நிறுவனத்திடம் இருந்து 16 விமானங்கள் கொள்முதல் செய்யப்படும். இந்த விமானங்கள் 48 மாதங்களில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். 40 விமானங்கள், டாடா நிறுவனம் தலைமையிலான கூட்டமைப்பு சாா்பில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன. இந்த விமானங்கள், 10 ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியா-இந்தியா இடையே ஒப்பந்தம்:

புவி அறிவியல் துறையில் இந்தியா, ரஷியா இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இந்திய புவியியல் ஆய்வு நிறுவனமும், ரஷியாவின் ஜாயின்ட் ஸ்டாக் கம்பெனி ராஸ்ஜியாலோஜியா நிறுவனமும் இணைந்து கனிம வள ஆராய்ச்சி, வான் புவி இயற்பியல் தரவுகளின் ஆய்வு, பிளாட்டினம் குழும கூறுகள் (பிஜிஇ) மற்றும் அரிய பூமிக் கூறுகளின் (ஆா்இஇ) ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்புடன் செயல்படும்.

இந்தியா-அஜா்பைஜான் இடையே ஒப்பந்தம்:

இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனத்துக்கும், அஜா்பைஜான் குடியரசின் தணிக்கையாளா் மன்றத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தொழில்முறை கணக்கியல் பயிற்சி, தொழில் நெறிமுறைகள், கணக்கியல் சாா்ந்த அறிவை மேம்படுத்துதல், தொழில்நுட்ப ஆராய்ச்சி, தொழில்முறை மற்றும் அறிவுசாா் வளா்ச்சி ஆகிய துறைகளில் பரஸ்பரம் ஒத்துழைப்பு ஏற்பட இந்த ஒப்பந்தம் உதவிகரமாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா-போா்ச்சுகல் இடையே ஒப்பந்தம்:

போா்ச்சுகல் குடியரசில் இந்திய குடிமக்களைப் பணியில் அமா்த்துவதற்காக, இந்தியா- போா்ச்சுக்கல் அரசுகளுக்கு இடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

1. Which institution released ‘Atlas of Mortality and Economic Losses from Weather, Climate and Water Extremes’?

A) FAO

B) WMO 

C) WTO

D) IMF

  • The World Meteorological Organization (WMO) released the Atlas of Mortality and Economic Losses from Weather, Climate and Water Extremes (1970–2019).
  • As per the report, every third death (35%) from extreme weather, climate or water stress in half a century was in Africa. The African continent accounts for only 17% of global population. Four droughts (1973 and 1983 in Ethiopia, 1981 in Mozambique and 1983 in Sudan) were responsible for 89 per cent of the total deaths in Africa from weather, climate and water extremes in the last 50 years. Almost 99% of all reported deaths occurred in low–to–lower–middle–income countries in Africa.

2. What is the name of the event to be conducted by the Department of School Education & Literacy, during September 2021?

A) Shikshak Parv 

B) Shikshak Kaal

C) Shikshak September

D) Vidya Parv

  • The Department of School Education & Literacy has decided to celebrate Shikshak Parv–2021 from 5th September till 17th September 2021. President Ram Nath Kovind will confer the awards to 44 Awardees, on 5th September, 2021 through virtual mode. The National Awards to Teachers were first instituted in 1958 to recognize excellence and commitment of teachers working in elementary and secondary schools.

3. Eastern Economic Forum (EEF) is an annual meet held in which country?

A) Switzerland

B) Russia 

C) Japan

D) Singapore

  • Eastern Economic Forum (EEF) is an annual meet held in Vladivostok, Russia. It aims to encourage foreign investments in Russia’s resource–rich but underdeveloped Far East regions. In 2019, PM Modi had announced a $1–billion line of credit for the Far East.
  • The proposed Chennai–Vladivostok maritime corridor will promote tbe bilateral relationships together. Mazagon Docks Limited will partner with the Russian ship–building facility at Zvezda to build important commercial ships. India and Russia are partners in space exploration through the Gaganyaan programme.

4. Which is the first Asian country to launch a Plastics pact?

A) Thailand

B) Nepal

C) India 

D) Sri Lanka

  • World–Wide Fund for Nature–India (WWF India) and the Confederation of Indian Industry (CII) have joined hands to develop a platform to promote a circular system for plastics. The new platform is called, the ‘India Plastic Pact,’. India generates 9.46 million tonnes of plastic waste annually, of which 40 percent is not collected.
  • About half of all plastics produced in the country are used in packaging, most of it is single use in nature. The pact has time–bound targets for reducing, innovating and re–imagining plastic packaging.

5. Which State/UT has adopted snow leopard and black–necked crane as State/UT animal and bird?

A) Delhi

B) Haryana

C) Punjab

D) Ladakh 

  • The Union Territory of Ladakh has officially adopted snow leopard and black–necked crane as its state animals. These two species are endangered. The Black–necked cranes are endemic to the UT while the snow leopards are largely found in this region.
  • As per IUCN, Black–necked crane is “Nearly Endangered” while snow leopard is placed in “vulnerable” category. The black–necked crane was the state bird of the erstwhile state of Jammu and Kashmir till August 2019.

6. A new ‘Climate Finance Leadership Initiative (CFLI) India’ partnership has been signed with which country?

A) USA

B) France

C) UK 

D) Australia

  • At the 11th India–UK Economic and Financial Dialogue (EFD), the Indian Finance Minister Nirmala Sitharaman and UK Chancellor Rishi Sunak met virtually. They signed a USD 1.2–billion package of public and private investment in green projects and renewable energy.

7. What is the name of the India’s first satellite and ballistic missile tracking ship?

A) Ajit

B) Dhruv 

C) Naren

D) Rudra

  • India’s first satellite and ballistic missile tracking ship named ‘Dhruv’ is set to be commissioned from Visakhapatnam. The ship is built by Hindustan Shipyard in collaboration with Defence Research and Development Organisation (DRDO) and National Technical Research Organisation (NTRO). INS Dhruv can also map ocean beds for research and detection of enemy submarines.

8. Under SAGAR mission, Indian Navy’s Offshore Patrol Vessel INS Savitri arrived Chattogram harbour, at which country?

A) Sri Lanka

B) Bangladesh 

C) Nepal

D) Thailand

  • Indian Navy’s Offshore Patrol Vessel INS Savitri arrived Chattogram harbour, Bangladesh, carrying two 960 LPM (Litres Per Minute) Medical Oxygen Plants (MOP) to support the ongoing efforts of the Bangladesh in tackling Covid–19. The MOPs were developed and manufactured by DRDO in India. The ship is also scheduled to participate in a Maritime Partnership Exercise with BN ship on departure from the Chattogram port.

9. Who is the first IAS officer from India to win a Paralympics medal?

A) Suhas Yathiraj 

B) Devendra Jhajharia

C) Yogesh Kathuniya

D) Bhavina Patel

  • Suhas L Yathiraj, Noida District Magistrate, created history as the first–ever IAS officer to win a medal at the Paralympics. He defeated Fredy Setiawan of Indonesia in his men’s singles SL4–Group A.
  • In 2016, he participated in the Asian Championship in Beijing and became the first non–ranked player to win the gold medal. He has earlier won many medals at BWF Turkish championship in 2017 and 2019. He also won a gold medal in Brazil in 2020.

10. ISRO in association with which institution has developed a device to cultivate microorganisms in space?

A) IIT–Madras

B) IIT–Bombay

C) IISc 

D) DRDO

  • A team of researchers at the Indian Institute of Science (IISc.) and Indian Space Research Organisation (ISRO) have jointly developed a modular device to cultivate microorganisms in space. The device uses LED and photodiode sensor combination to track micro–organism and bacteria growth. This device would be used by astronauts to carry out biological experiments in outer space during mission ‘Gaganyaan’ which is India’s first crewed spacecraft.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!