Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Science Questions

9th Std Science Lesson Wise Questions in Tamil – Part 2

9th Science Lesson 9 Questions in Tamil

9] அண்டம்

1) இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தாலமி என்னும் வானியலாளர் எந்த நாட்டை சார்ந்தவர்?

A) கிரேக்கம்

B) ஆப்பிரிக்கா

C) எகிப்து

D) சீனா

(குறிப்பு – வானியல் கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பு, நம் முன்னோர்கள் அண்டத்தில் உள்ள பொருட்கள் அனைத்திற்கும் பூமியே மையமாக உள்ளது எனக் கருதினர். இது புவி மைய மாதிரி என அழைக்கப்பட்டது. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வானியலாளர் தாலமி மற்றும் இந்திய வானியலாளர் ஆரியபட்டர் உள்ளிட்ட பல வானியலாளர்கள் இந்த மாதிரியை நம்பினர்.)

2) சூரிய மாதிரியை வெளியிட்டவர் யார்?

A) ஆரியப்பட்டர்

B) நிகோலஸ் கோபர்நிக்கஸ்

C) கெப்ளர்

D) தாலமி

(குறிப்பு – போலந்து நாட்டை சேர்ந்த வானியலாளர் நிக்கோலஸ் கோபர்நிகஸ் என்பவர் விண்வெளியை கூர்ந்து நோக்கி சூரிய மைய மாதிரியை வெளியிட்டார். இதன்படி சூரிய மண்டலத்தின் மையத்தில் சூரியன் அமைந்துள்ளது.)

3) தொலைநோக்கி எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?

A) 1602 ஆம் ஆண்டு

B) 1604 ஆம் ஆண்டு

C) 1606 ஆம் ஆண்டு

D) 1608 ஆம் ஆண்டு

(குறிப்பு – 1608 ஆம் ஆண்டு, நெதர்லாந்தில் தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டது. தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் வானியலில் ஒரு புரட்சி ஏற்பட்டது. தொலைநோக்கியின் மூலம் அண்டத்தின் கட்டுறுப்புகள், பிற கோள்கள் ஆகியவை கண்டறியப்பட்டன.)

4) அண்டம் என்பது கீழ்க்கண்டவற்றுள் எவற்றை உள்ளடக்கியது?

I. விண்மீன் திரள்கள்

II. புவி

III. கோள்கள்

IV. வான்வெளி

A) I, II, III மட்டும்

B) II, III, IV மட்டும்

C) I, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – கோடிக்கணக்கான விண்மீன்களை உள்ளடக்கிய ஒளி வீசக்கூடிய விண்மீன் திரள்களே அண்டத்தின் அடிப்படைக் கூறுகள் ஆகும். புவி, கோள்கள், விண்மீன்கள், வான்வெளி மற்றும் விண்மீன் திரள்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய அமைப்பு அண்டம் ஆகும்.)

5) பார்க்கக்கூடிய அண்டம் எவ்வளவு ஒளியாண்டுகள் அளவு கொண்டது?

A) 90 பில்லியன் ஒளி ஆண்டுகள்

B) 93 பில்லியன் ஒளி ஆண்டுகள்

C) 96 பில்லியன் ஒளி ஆண்டுகள்

D) 99 பில்லியன் ஒளி ஆண்டுகள்

(குறிப்பு – பருப்பொருள்கள், ஆற்றல் மற்றும் காலம் உள்ளிட்ட அனைத்தும் அண்டத்தில் அடங்கும். அண்டம் எவ்வளவு பெரியது என்று எவருக்கும் தெரியாது. எல்லையற்றதாக இருக்கலாம். தங்களால் பார்க்க முடிந்ததை வைத்து அண்டத்தின் அளவை அறிவியலாளர்கள் கணிக்கின்றனர். இதற்கு பார்க்கக்கூடிய அண்டம் என்று பெயர். இந்த பார்க்கக்கூடிய அண்டம் 93 பில்லியன் ஒளி ஆண்டுகள் அளவு கொண்டது.)

6) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. அண்டத்தின் எல்லை மிக வேகமாக விரிவடைந்து கொண்டு வருகிறது.

II. அண்டமானது மேலும் மேலும் பெரிதாகி கொண்டே வருகின்றது.

III. அண்டத்தின் பெரும்பகுதி வெற்றிடமாக உள்ளது

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – அண்டத்தைப் பற்றி ஆர்வத்தைத் தூண்டக்கூடியது என்னவென்றால், அது தற்போது விரிவடைந்து கொண்டிருக்கிறது என்பதே. அண்டமானது மேலும் மேலும் பெரிதாகி கொண்டே வருகின்றது. இது மட்டுமல்ல அண்டத்தின் எல்லை மிக வேகமாக விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இருப்பினும் அண்டத்தின் பெரும்பகுதி வெற்றிடமாகவே உள்ளது.)

7) அண்டத்தில் உள்ள அனைத்து அணுக்களையும் ஒன்று சேர்த்தால் தற்போது உள்ள அண்டத்தில் எத்தனை சதவீதம் வரும்?

A) இரண்டு சதவீதம்

B) மூன்று சதவீதம்

C) நான்கு சதவீதம்

D) ஐந்து சதவீதம்

(குறிப்பு – அண்டத்தில் உள்ள அனைத்து அணுக்களையும் ஒன்று சேர்த்தால் தற்போது உள்ள அண்டத்தில் வெறும் 4% மட்டுமே வரும். அண்டத்தின் பெரும்பகுதி இருண்ட பொருள் (Dark matter) மற்றும் இருண்ட ஆற்றலாகவே (Dark energy) உள்ளது.)

8) எத்தனை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பெருவெடிப்பு ஏற்பட்டதாக வானியலாளர்கள் கூறுகின்றனர்?

A) 12.3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்

B) 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்

C) 14.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்

D) 16.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்

(குறிப்பு – ஒரு மாபெரும் வெடிப்பிலிருந்து தான் அண்டம் தோன்றியது என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இந்தக் கொள்கையின்படி அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருள்களும் அதிக அடர்த்தி கொண்ட ஓர் பருப்பொருளில் செறிந்திருந்தன. ஏறத்தாழ 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பெருவெடிப்பு ஏற்பட்டு விண்மீன் திரள்களின் வடிவில் அனைத்து பொருள்களும், அனைத்து திசைகளிலும் வெடித்து சிதறின.)

9) அண்டத்தின் அடிப்படை தனிமம் என்ன?

I. ஹீலியம்

II. ஹைட்ரஜன்

III. கார்பன்

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – ஏறத்தாழ 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பெருவெடிப்பு ஏற்பட்டு விண்மீன் திரள்களின் வடிவில் அனைத்து பொருள்களும், அனைத்து திசைகளிலும் வெடித்து சிதறின. அண்டத்தில் உள்ள அனைத்து பொருள்களும் பெருவெடிப்பின் போது தோன்றிய அடிப்படை தனிமங்களான ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகியவற்றால் ஆனவை ஆகும்.)

10) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன், நம் உடலில் உள்ள கார்பன், கால்சியம் மற்றும் இரும்பு உள்ளிட்ட ஏனைய தனிமங்கள் அனைத்துமே விண்மீன்களின் உள்ளடக்கத்தில் உள்ளன.

II. விண்மீன்கள் அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் ஈர்ப்புவிசை அண்டத்திலுள்ள தனிமங்கள் அனைத்தையும் உள்ளே ஈர்த்து வைத்துள்ளது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன், நம் உடலில் உள்ள கார்பன், கால்சியம் மற்றும் இரும்பு உள்ளிட்ட ஏனைய தனிமங்கள் அனைத்துமே விண்மீன்களின் உள்ளடக்கத்தில் உள்ளன. விண்மீன்கள் அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் ஈர்ப்புவிசை அண்டத்திலுள்ள தனிமங்கள் அனைத்தையும் உள்ளே ஈர்த்து வைத்துள்ளது. இந்த விண்மீன்கள் வெடித்து சிதறும் போது, அவற்றின் உள்ளே இருக்கும் தனிமங்கள் வெளியிடப்படுகின்றன.)

11) விண்மீன் திரள்கள் என்பது கீழ்கண்டவற்றுள் எவற்றைக் கொண்டுள்ளது?

I. வாயு

II. தூசு

III. கோடிக்கணக்கான விண்மீன்கள்

IV. சூரிய மண்டலங்கள்

A) I, II, III மட்டும்

B) II, III, IV மட்டும்

C) I, III, IV மட்டும்

D) இவை அனைத்தையும்

(குறிப்பு – பெருவெடிப்பு நிகழ்ந்த உடனேயே ஈர்ப்பு விசையினால் வாயு மேகங்கள் யாவும் ஈர்க்கப்பட்டு விண்மீன் திரளின் கட்டுறுப்புகளை உருவாக்கின. விண்மீன் திரள் என்பது வாயு, தூசு, கோடிக்கணக்கான விண்மீன்கள் மற்றும் சூரிய மண்டலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய திரண்டதொரு அமைப்பு ஆகும்.)

12) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. விண்மீன் திரள்கள் பெரும்பாலும் பல வடிவங்களில் உள்ளன.

II. சுருள் திரள், நீள்வட்ட திரள் மற்றும் வடிவமற்ற திரள் என்பன விண்மீன் திரள்களின் வகைகள் ஆகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – விண்மீன் திரள்கள் அனைத்தும் பல வடிவங்களில் உள்ளன. அவற்றின் வடிவத்தைப் பொறுத்து அவை சுருள் திரள், நீள்வட்ட திரள் மற்றும் வடிவமற்ற திரள் என வகைப்படுத்தப்படுகின்றன. விண்மீன் திரள்கள் தனியாகவோ, இரட்டையாகவோ, தொகுதியாகவோ அல்லது பெரும் தொகுதியாகவோ காணப்படுகின்றன.)

13) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. சூரியன் மற்றும் சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் அனைத்தும் பால்வெளி வீதி விண்மீன் திரளில் உள்ளன.

II. பால்வெளி வீதியை தவிர பல விண்மீன் திரள்கள் அண்டத்தில் உள்ளன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – சூரியன் மற்றும் சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் அனைத்தும் பால்வெளி வீதி விண்மீன் திரளில் உள்ளன. பால்வெளி வீதியை தவிர பல விண்மீன் திரள்கள் அண்டத்தில் உள்ளன. நமக்கு அருகில் உள்ள அடுத்த விண்மீன் திரளின் பெயர் ஆண்டிரோமீடா விண்மீன் திரள் ஆகும்.)

14) பால்வெளி வீதி விண்மீன் திரள் எந்த வடிவம் கொண்டது?

A) வட்ட வடிவம்

B) சுருள் வடிவம்

C) வடிவம் இல்லை

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – பால்வெளி வீதி விண்மீன் திரள் சுருள் வடிவை கொண்டது. வானில் ஒரு பால் வண்ண பட்டை போன்று காணப்படுவதால் அது பால்வெளி வீதி (Milkyway galaxy) என பெயர் பெற்றது.)

15) பால் வெளி வீதியில் உள்ள விண்மீன்களின் எண்ணிக்கை எத்தனை?

A) 1 பில்லியன்

B) 10 பில்லியன்

C) 100 பில்லியன்

D) 200 பில்லியன்

(குறிப்பு – பால்வெளி வீதியில் 100 பில்லியன் விண்மீன்கள் உள்ளன. மேலும் அதன் விட்டம் 1,00,000 ஒளி ஆண்டுகள் ஆகும். அதன் மையத்தில் இருந்து சுமார் 25,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் நம் சூரிய மண்டலம் உள்ளது.)

16) நம் சூரியன், விண்மீன் திரளின் மையத்தை சுற்றி வர எத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது?

A) 200 மில்லியன் ஆண்டுகள்

B) 250 மில்லியன் ஆண்டுகள்

C) 300 மில்லியன் ஆண்டுகள்

D) 350 மில்லியன் ஆண்டுகள்

(குறிப்பு – பால்வெளி வீதியில் 100 பில்லியன் விண்மீன்கள் உள்ளன. மேலும் அதன் விட்டம் 1,00,000 ஒளி ஆண்டுகள் ஆகும். அதன் மையத்தில் இருந்து சுமார் 25,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் நம் சூரிய மண்டலம் உள்ளது. பூமி சூரியனை சுற்றி வருவதை போல, நமது விண்மீன் திரளின் மையத்தை சுற்றி வர சூரியன் 250 மில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.)

17) நமக்கு அருகாமையில் உள்ள ஆண்டிரோமீடா விண்வெளி திரளின் தொலைவு எவ்வளவு?

A) 2 மில்லியன் ஒளி ஆண்டுகள்

B) 2.5 மில்லியன் ஒளி ஆண்டுகள்

C) 3 மில்லியன் ஒளி ஆண்டுகள்

D) 3.5 மில்லியன் ஒளி ஆண்டுகள்

(குறிப்பு – நமக்கு அருகாமையில் உள்ள ஆண்டிரோமீடா விண்வெளி திரளின் தொலைவு 2.5 மில்லியன் ஒளி ஆண்டுகள் ஆகும். பூமி இயங்கும் வேகத்தில் ( அதாவது 40 கிமீ / வினாடி ) நாம் சென்றால் கூட அதை சென்றடைய, 25 பில்லியன் ஆண்டுகள் தேவைப்படும்.)

18) விண்மீன்கள் கீழ்க்கண்டவற்றுள் எவற்றை உருவாக்குகின்றன?

I. வெப்பம்

II. ஒளி

III. புற ஊதா கதிர்கள்

IV. X-கதிர்கள்

A) I, II, III மட்டும்

B) II, III, IV மட்டும்

C) I, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – விண்மீன் திரள்களின் அடிப்படை கட்டுறுப்புகள் விண்மீன்கள் ஆகும். பெருவெடிப்பில் விண்மீன் திரள்கள் உருவான போதே அவையும் தோன்றின.வெப்பம், ஒளி, புற ஊதாக் கதிர்கள், X-கதிர்கள் உள்ளிட்ட பல கதிர்வீச்சுகளை விண்மீன்கள் உருவாக்குகின்றன. அவை வாயு மற்றும் பிளாஸ்மா ( அதிக சூடேற்றப்பட்ட பருப்பொருள் நிலை) ஆகியவற்றை அதிகமாக உள்ளடக்கியவை ஆகும்.)

19) விண்மீன்கள் அனைத்தும் எந்த வாயுவால் நிரம்பியுள்ளன?

A) ஹைட்ரஜன்

B) ஹீலியம்

C) போரான்

D) கார்பன்டைஆக்ஸைடு

(குறிப்பு – விண்மீன்கள் அனைத்தும் ஹைட்ரஜன் வாயுவால் நிரம்பியுள்ளன. இந்த ஹைட்ரஜன் அணுக்கள்யாவும் இணைந்து ஹீலியம் அணுக்கள் உருவாகும்போது மிக அதிக அளவில் வெப்பம் வெளியாகிறது. ஒரு இருண்ட இரவில் சுமார் 3 ஆயிரம் விண்மீன்களை நமது கண்கள் மூலம் நம்மால் காண முடியும்.)

20) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. நமது அண்டத்தில் 100 பில்லியன் விண்மீன் திரள்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 100 பில்லியன் விண்மீன்களோ அல்லது அதற்கு அதிகமான விண்மீன்களோ உள்ளன.

II. விண்மீன்கள் தனியாக இருப்பது போல் தோன்றினாலும் பெரும்பாலும் அவை இணைந்து காணப்படுகின்றன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – நமது அண்டத்தில் 100 பில்லியன் விண்மீன் திரள்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 100 பில்லியன் விண்மீன்களோ அல்லது அதற்கு அதிகமான விண்மீன்களோ உள்ளன. விண்மீன்கள் தனியாக இருப்பது போல் தோன்றினாலும் பெரும்பாலும் அவை இணைந்து காணப்படுகின்றன. விண்மீன் எந்த அளவிற்கு வெளிச்சமாக தெரிகிறது என்பது அவற்றின் செறிவையும், பூமியிலிருந்து அவற்றின் தூரத்தையும் பொறுத்து உள்ளது.)

21) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. விண்மீன்கள் வெவ்வேறு வண்ணங்களில் தோன்றும்

II. வெப்பமான விண்மீன்கள் வெண்மையாகவோ அல்லது நீலமாகவோ தோன்றும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – வெப்பநிலையைப் பொறுத்து விண்மீன்கள் வெவ்வேறு வண்ணங்களில் தோன்றலாம். வெப்பமான விண்மீன்கள் வெண்மையாகவும் அல்லது நீல நிறமாக தோன்றும். குளிரான விண்மீன்கள் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறமாக தோன்றும். விண்மீன்கள் அளவிலும் வேறுபடும்.)

22) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. விண்மீன்கள் குழுக்களாக இணைந்து ஒரு அமைப்பினை விண்வெளியில் ஏற்படுத்துகின்றன.

II. விண்மீன்கள் குழுவாக காணப்படுவது, நட்சத்திரக் கூட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு சில விண்மீன்கள் குழுக்களாக இணைந்து ஒரு அமைப்பினை விண்வெளியில் ஏற்படுத்துகின்றன. அவை ஒரு விலங்கினையோ, புராதான நபரையோ அல்லது உயிரினத்தையோ, கடவுளையோ அல்லது ஏதாவது ஒரு பொருளையோ குறிப்பது போல அமைந்திருக்கும். இப்படிப்பட்ட விண்மீன்களின் குழுக்கள் நட்சத்திரக் கூட்டங்கள் (Constellation) என்று அழைக்கப்படுகின்றன.)

23) இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட நட்சத்திரக் கூட்டங்களின் எண்ணிக்கை எத்தனை?

A) 80

B) 84

C) 88

D) 92

(குறிப்பு – பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள், பல்வேறு வடிவம் உள்ள நட்சத்திரக் கூட்டங்களை அடையாளம் கண்டறிந்துள்ளனர். பாரி ஏற்றுக்கொள்ளப்பட்ட நட்சத்திரக் கூட்டங்களின் எண்ணிக்கை 88 ஆகும். ஆட்டுக்கிடா, மிதுனம், சிம்மம், சூரியன் மற்றும் தேள் போன்றவை ஒரு சில நட்சத்திர கூட்ட வடிவங்களாகும்.)

24) சூரிய மண்டலம் என்பது கீழ்க்கண்டவற்றுள் எவற்றை கொண்டது?

I. வால் விண்மீன்கள்

II. சிறுகோள்கள்

III. விண்கற்கள்

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தையும்

(குறிப்பு – சூரியன் மற்றும் அதை சுற்றி வரும் வான் பொருள்கள் அனைத்தும் சேர்ந்ததே சூரிய மண்டலம் ஆகும். சூரிய மண்டலம் என்பது கோள்கள், வால் நட்சத்திரங்கள், விண்கற்கள் மற்றும் சிறுகோள்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. சூரியனுக்கும் அப்பொருள்களுக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசையினால் அவை சூரியனை சுற்றி வருகின்றன.)

25) சூரியனைப் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. சூரியன் ஒரு நடுத்தர அளவுள்ள விண்மீன் ஆகும். சூரியன் மிக அதிக வெப்பமுள்ள சுழன்று கொண்டிருக்க கூடிய வாயு பந்து ஆகும்.

II. சூரியனில் முக்கால் பகுதி ஹைட்ரஜன் வாயுவாலும், கால்பகுதி ஹீலியம் வாயுவாலும் நிரம்பியுள்ளது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – சூரியன் ஒரு நடுத்தர அளவுள்ள விண்மீன் ஆகும். சூரியன் மிக அதிக வெப்பமுள்ள சுழன்று கொண்டிருக்க கூடிய வாயு பந்து ஆகும். சூரியனில் முக்கால் பகுதி ஹைட்ரஜன் வாயுவாலும், கால்பகுதி ஹீலியம் வாயுவாலும் நிரம்பியுள்ளது. சூரியன் பூமியை விட மில்லியன் மடங்கு பெரியதாகும்.)

26) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. சூரியனில் அணுக்கரு இணைவு என்று அழைக்கப்படும் நிகழ்வினால் பெருமளவு ஆற்றல் ஒளி மற்றும் வெப்பம் உருவாகின்றது.

II. சூரியனில் அணுக்கரு இணைவிற்கு காரணம் ஹைட்ரஜன் அணுக்கள் ஆகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – சூரியனில் உள்ள ஹைட்ரஜன் அணுக்கள் அதிக அழுத்தத்தினால் இணைந்து ஹீலியம் அணுக்களாக மாறுகின்றன. இது அணுக்கரு இணைவு என்று அழைக்கப்படுகிறது. இதனால் சூரியனில் பெருமளவு ஆற்றல் ஒளி மற்றும் வெப்பம் உருவாகிறது. இந்த ஆற்றலினால் சூரியன் ஒளிருகின்றது, மேலும் வெப்பத்தை அளிக்கின்றது.)

27) சூரியன் எத்தனை ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது?

A) 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக

B) 5.6 பில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக

C) 6.6 பில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக

D) 7.6 பில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக

(குறிப்பு – சூரிய மண்டலத்தின் மையத்தில் சூரியன் அமைந்துள்ளது. அதன் வலிமையான ஈர்ப்பு புலத்தினால் பிற சூரிய பொருள்கள், கோள்கள், வால் விண்மீன்கள், விண்கற்கள் மற்றும் பிற பொருள்கள் யாவும் சூரியனை சுற்றி வருகின்றன. 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக சூரியன் இருந்து வருகிறது.)

28) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது

I. பெரு வெடிப்பின் போது வெப்பமான ஹைட்ரஜன் வாயுக்கள் குளிர்வடைந்து மிகப்பெரிய மேகங்களை உருவாக்கின. பின்னர் அவை மேலும் அடர்வு மிகுந்து விண்மீன் திரள்களை உருவாக்கின.

II. காலப்போக்கில் ஹைட்ரஜன் வாயுக்களின் அடர்வு மிகுந்து சூரியன் மற்றும் சூரிய மண்டலமானது உருவாக காரணமானது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – பெரு வெடிப்பின் போது வெப்பமான ஹைட்ரஜன் வாயுக்கள் குளிர்வடைந்து மிகப்பெரிய மேகங்களை உருவாக்கின. பின்னர் அவை மேலும் அடர்வு மிகுந்து விண்மீன் திரள்களை உருவாக்கின. காலப்போக்கில் ஹைட்ரஜன் வாயுக்களின் அடர்வு மிகுந்து சூரியன் மற்றும் சூரிய மண்டலமானது உருவாக காரணமானது. நாளடைவில் அவை மெதுவாக சுற்ற கூடிய தன்மையை அடைந்தன.)

29) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. நிர்ணயிக்கப்பட்ட வளைவான சுற்றுப்பாதையில் கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன.

II. சூரியனை சுற்றிவரும் கோள்களின் பாதை நீள்வட்ட வடிவில் உள்ளது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – நிர்ணயிக்கப்பட்ட வளைவான சுற்றுப்பாதையில் கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. சூரியனை சுற்றிவரும் கோள்களின் பாதை நீள்வட்ட வடிவில் உள்ளது. சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு கோள்கள் எடுத்துக்கொள்ளும் காலம் சுற்று காலம் என அழைக்கப்படுகிறது. சூரியனை சுற்றி வரும் அதே வேளையில் பம்பரத்தை போல் ஒரு கோளானது தன்னைத்தானே சுற்றி வருகிறது.)

30) பூமியின் சுழற்சிக் காலம் எவ்வளவு?

A) 23 மணி 52 நிமிடங்கள்

B) 23 மணி 54 நிமிடங்கள்

C) 23 மணி 56 நிமிடங்கள்

D) 23 மணி 58 நிமிடங்கள்

(குறிப்பு – ஒரு கோளானது தன்னைத்தானே ஒரு முறை சுழல்வதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் சுழற்சிக்காலம் என அழைக்கப்படுகிறது. பூமியின் சுழற்சி காலம் 23 மணி 56 நிமிடங்கள் ஆகும். எனவே பூமியில் ஒரு நாள் என்பது 24 மணிநேரம் ஆகும்.)

31) கோள்களையும் அதன் ஒரு நாளின் அளவினையும் பொருத்துக

I. புதன் – a) 243 நாள்கள்

II. வெள்ளி – b) 58.65 நாள்கள்

III. பூமி – c) 24.62 மணி

IV. செவ்வாய் – d) 23.93 மணி

A) I-b, II-a, III-d, IV-c

B) I-a, II-d, III-c, IV-b

C) I-b, II-a, III-c, IV-d

D) I-d, II-a, III-c, IV-b

(குறிப்பு – ஒவ்வொரு கோள்களிலும் ஒரு நாளின் அளவு மாறுபடுகிறது. புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகியவற்றின் ஒரு நாளின் அளவு முறையே 58.65 நாள்கள், 243 நாள்கள், 23.93 மணி மற்றும் 24.62 மணி ஆகும். இது கோள்களின் சுழற்சி காலம் என அழைக்கப்படுகிறது.)

32) கோள்களையும் அதன் ஒரு நாளின் அளவினையும் பொருத்துக

I. வியாழன் – a) 10.23 மணி

II. சனி – b) 18 மணி

III. யுரேனஸ் – c) 9.92 மணி

IV. நெப்ட்யூன் – d) 17 மணி

A) I-c, II-a, III-d, IV-b

B) I-a, II-d, III-c, IV-b

C) I-b, II-a, III-c, IV-d

D) I-d, II-a, III-c, IV-b

(குறிப்பு – ஒவ்வொரு கோள்களிலும் ஒரு நாளின் அளவு மாறுபடுகிறது. வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்ட்யூன் ஆகிய கோள்களின் ஒருநாளின் அளவானது முறையே 9.92 மணி, 10.23 மணி, 17 மணி மற்றும் 18 மணி ஆகும்.)

33) குறைந்த அளவு ஒரு நாளின் அளவினை கொண்ட சூரிய குடும்பத்தில் உள்ள கோள் எது?

A) வியாழன்

B) சனி

C) பூமி

D) புதன்

(குறிப்பு – சூரிய குடும்பத்தில் மொத்தம் எட்டு கோள்கள் உள்ளன. அவை புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்ட்யூன் என்பன ஆகும். இவற்றில் வியாழன் கோள் மிகக்குறைவான ஒருநாளின் அளவினை கொண்டுள்ளது. வியாழன் கோளின் ஒரு நாளின் அளவு 9.92 மணி ஆகும். வெள்ளி கோள் நீண்ட ஒருநாளின் அளவை கொண்டுள்ளது. வெள்ளி கோளின் ஒரு நாளின் அளவு 243 நாட்கள் ஆகும்.)

34) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் யாவும் வெவ்வேறு இடைவெளிகளில் காணப்படுகின்றன.

II. சூரிய குடும்பத்தில் உள்ள முதல் நான்கு கோள்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக உள்ளது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் யாவும் வெவ்வேறு இடைவெளிகளில் காணப்படுகின்றன. முதல் நான்கு கோள்கள் ஒன்றுக்கு ஒன்று நெருக்கமாகவும், சூரியனுக்கு அருகாமையிலும் உள்ளன. மேலும் அவை உட்புற சூரிய மண்டலத்தை அமைகின்றன. வெளிப்புற மண்டலத்தில் உள்ள கோள்கள் சூரியனுக்கு வெகு தொலைவில் இடைவெளிவிட்டு காணப்படுகின்றன.)

35) கீழ்க்காணும் எந்த இரண்டு கோள்களுக்கு இடையேயான தூரம் பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையே உள்ள தொலைவை விட பல மடங்கு அதிகமாக உள்ளது?

A) புதன் – வெள்ளி

B) யுரேனஸ் – நெப்ட்யூன்

C) வியாழன் – சனி

D) சனி – யுரேனஸ்

(குறிப்பு – சனி கோளுக்கும், யுரேனஸ் கோளுக்கும் இடையே உள்ள தொலைவு, பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையே உள்ள தொலைவை விட பலமடங்கு அதிகமாக உள்ளது. அதாவது சுமார் 20 மடங்கு அதிகமாக உள்ளது.)

36) கீழ்க்கண்டவற்றுள் எது சூரிய மண்டலத்தின் உட்புற கோள் அல்ல?

A) புதன்

B) பூமி

C) வியாழன்

D) வெள்ளி

(குறிப்பு – உட்புற சூரிய மண்டலத்தில் காணப்படும் நான்கு கோள்களாவன, புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் என்பன ஆகும். உட்புற கோள்களின் புறப்பரப்பு திண்மப்பாறை மேலோட்டினால் அமைந்துள்ளதால், அவை நிலம்சார்கோள்கள் அல்லது பாறைக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன.)

37) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. சூரிய மண்டலத்தின் உட்புற கோள்களின் உட்பகுதி, புறப்பரப்பு மற்றும் வளிமண்டலம் ஆகியவை ஒரே முறையில், ஒரே வடிவில் உருவானவை ஆகும்.

II. சூரிய மண்டலத்தின் உட்புற கோள்கள் ஒத்த அமைப்பில் உள்ளன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – உட்புற சூரிய மண்டலத்தில் காணப்படும் நான்கு கோள்களாவன, புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் என்பன ஆகும். இவற்றின் உட்பகுதி, புறப்பரப்பு மற்றும் வளிமண்டலம் ஆகியவை ஒரே முறையில், ஒரே வடிவில் உருவானவை ஆகும். சூரிய மண்டலத்தின் உட்புற கோள்கள் ஒத்த அமைப்பில் உள்ளன. நம் பூமியை இவற்றுக்கான மாதிரியாக கொள்ளலாம்.)

38) வெளிப்புற சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

I. வாயு பெருங்கோள்கள்

II. வாயுக்கோள்கள்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – வெளிப்புற சூரிய மண்டலத்தில் ஒப்பீட்டளவில் சூரியனை மெதுவாக சுற்றி வரும் கோள்களான வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை வெளிப்புற கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் உள்ளிட்ட பிற வாயுக்களால் நிரம்பிய அடர்வு மிகு வளிமண்டலத்தை கொண்டுள்ளன. இவை வாயு பெருங்கோள்கள் என்றும் வாயுக் கோள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.)

39) வளையங்கள் இல்லாத கோள் கீழ்க்கண்டவற்றுள் எது?

A) வியாழன்

B) சனி

C) யுரேனஸ்

D) வெள்ளி

(குறிப்பு – வெளிப்புற சூரிய மண்டலத்தில் சூரியனை மெதுவாக சுற்றி வரும் கோள்களான வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்கள் வெளிப்புற வளையங்களை கொண்டுள்ளன. ஆனால் நான்கு உட்புற கோள்களுக்கு வளையங்கள் இல்லை. இந்த வளையங்கள் பனியால் மூடப்பட்ட பாறை துகள்களை கொண்டுள்ளன.)

40) புதன் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள கோள் ஆகும்.

II. புதன் கோள் பகலில் மிக அதிக வெப்பத்துடனும், இரவில் அதிக குளிருடனும் காணப்படும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள பாறைக் கோள் புதன் ஆகும். இது பகலில் மிக அதிக வெப்பத்துடனும், இரவில் அதிக குளிருடனும் காணப்படும். புதன் மிகவும் மங்கலாகவும், சிறியதாகவும் காணப்படுவதால் வெறும் கண்ணால் பார்ப்பதை விட ஒரு தொலைநோக்கியால் அதை நன்கு காண முடியும்.)

41) புதன் கோளானது எப்போதும் எந்த திசையின் கீழ் வானத்தில் மட்டுமே காண முடியும்?

A) கிழக்கு அல்லது மேற்கு

B) மேற்கு அல்லது தெற்கு

C) வடக்கு அல்லது தெற்கு

D) தெற்கு அல்லது கிழக்கு

(குறிப்பு – புதன் மிகவும் மங்கலாகவும், சிறியதாகவும் காணப்படுவதால் வெறும் கண்ணால் பார்ப்பதை விட ஒரு தொலைநோக்கியால் அதை நன்கு காண முடியும். முதல் கோல் அது எப்போதும் கிழக்கு அல்லது மேற்கு திசையின் கீழ்வானத்தில் மட்டுமே காண முடியும்.)

42) வெள்ளி கோளை பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. வெள்ளி கோளானது கிட்டத்தட்ட பூமியின் அளவை ஒத்த ஒரு சிறப்பு கோளாகும்.

II. சூரிய மண்டலத்தில் காணப்படும் கோள்களிலேயே அதிக வெப்ப நிலை கொண்டது வெள்ளி கோள் ஆகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – வெள்ளி கோளானது கிட்டத்தட்ட பூமியின் அளவை ஒத்தது. சூரிய மண்டலத்தில் காணப்படும் கோள்களிலேயே அதிக வெப்ப நிலை கொண்டது வெள்ளி கோள் ஆகும். நிலவிற்கு பிறகு வானத்தில் தெரியும் மிகப் பிரகாசமான வான்பொருள் வெள்ளி கோள் ஆகும்.)

43) கீழ்காணும் எந்த கோள் மற்ற கோள்களைப் போலல்லாமல் எதிர்திசையில் சுழல்கிறது?

A) வியாழன்

B) வெள்ளி

C) புதன்

D) யுரேனஸ்

(குறிப்பு – வெள்ளி கோளானது மற்ற கோள்களைப் போல் அல்லாமல் எதிர்திசையில் சொல்கிறது. எனவே வெள்ளி கோளில் சூரியன் மேற்கே தோன்றி கிழக்கே மறைகிறது. வெள்ளி கோளை நாம் வெறும் கண்ணால் எளிதில் காண முடியும். வெள்ளி கோளானது கிழக்கு அல்லது மேற்கு திசையில் கீழ் வானத்தில் தெரியும்.)

44) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களிலேயே, பூமியில் மட்டும்தான் சரியான வெப்பநிலை, நீர் ஆதாரம், சரியான வளிமண்டலம் மற்றும் ஓசோன் படலம் ஆகியவை உள்ளது.

II. விண்ணில் இருந்து பார்க்கும்போது பூமி நீலம் கலந்த பச்சை நிறத்தில் காணப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களிலேயே நாம் வாழும் பூமியில் மட்டும் தான் உயிர் வாழ தகுதியான சூழல் அமைந்துள்ளது. பூமியில் மட்டும்தான் சரியான வெப்பநிலை, நீர் ஆதாரம், சரியான வளிமண்டலம் மற்றும் ஓசோன் படலம் ஆகியவை உள்ளது. பூமியின் மீதுள்ள நீர் மற்றும் நில பகுதிகளின் மீது ஒளி எதிரொளிப்பதினால் விண்ணில் இருந்து பார்க்கும்போது பூமி நீலம் கலந்த பச்சை நிறத்தில் காணப்படுகிறது.)

45) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பூமியின் சுற்றுப் பாதைக்கு வெளியில் அமைந்துள்ள முதல் கோல் செவ்வாய் ஆகும்.

II. செவ்வாய் கோள் அல்லது சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – புவியின் சுற்றுப் பாதைக்கு வெளியில் அமைந்துள்ள முதல் கோள் செவ்வாய் ஆகும். இது சற்று சிவப்பு நிறத்தில் காணப்படுவதால் இது சிவப்பு கோள் என அழைக்கப்படுகிறது. செவ்வாய் கோளுக்கு டீமோஸ் மற்றும் போபோஸ் என்று அழைக்கப்படும் இரு இயற்கை துணைக்கோள்கள் உள்ளன.)

46) பெருங்கோள் என்று அழைக்கப்படும் கோள் எது?

A) வியாழன்

B) யுரேனஸ்

C) நெப்ட்யூன்

D) புதன்

(குறிப்பு – வியாழன் கோளானது, பெருங்கோள் என்று அழைக்கப்படுகிறது. சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களிலேயே மிகப் பெரியது வியாழன் ஆகும். வியாழன் கோள் மூன்று வளையங்களையும், 65 நிலவுகளையும் கொண்டுள்ளது.)

47) வியாழன் கோளானது புவியை விட எத்தனை மடங்கு பெரியது ஆகும்?

A) 10 மடங்கு

B) 11 மடங்கு

C) 12 மடங்கு

D) 13 மடங்கு

(குறிப்பு – வியாழன் கோளானது பூமியை விட 11 மடங்கு பெரியதாகும். மேலும் வியாழன் கோள் பூமியை விட 318 மடங்கு அதிக எடை கொண்டது.)

48) கீழ்காணும் எந்த கோளின் நிலவு சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய நிலவாகும்?

A) புதன்

B) பூமி

C) வியாழன்

D) யுரேனஸ்

(குறிப்பு – வியாழன் கோளானது 65 நிலவுகளை கொண்டுள்ளது. அதில் கானிமீடு இன்று அழைக்கப்படும் நிலவுதான் சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய நிலவாக உள்ளது.)

49) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. வளையங்களுக்கு பெயர்போன கோள், சனி கோள் என்று அழைக்கப்படுகிறது.

II. சனி கோள் ஆரஞ்சு நிறத்தில் காணப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – வளையங்களுக்கு பெயர்போன கோள், சனி கோள் என்று அழைக்கப்படுகிறது. சனி கோள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. வெளிப்புற சூரிய மண்டலத்தில் காணப்படும் சனி கோளானது, வியாழனுக்கு அடுத்த இரண்டாவது பெரியவாயுக்கோளாகும்.)

50) சூரிய மண்டலத்தில் மேகங்களுடன் கூடிய ஒரே நிலவு எது?

A) டைட்டன்

B) டிரைட்டான்

C) கிரிப்டான்

D) கானிமீடு

(குறிப்பு – சனி கோளானது 60 நிலவுகள் கொண்டுள்ளது. அவற்றுள் டைட்டன் என்ற நிலவே மிகப்பெரியதாகும். சூரிய மண்டலத்தில் மேகங்களுடன் கூடிய ஒரே நிலவு டைட்டன் ஆகும். சனிக்கோளின் அடர்த்தி மிகவும் குறைவாக உள்ளது.( சனிக்கோளின் அடர்த்தி புவியை விட 30 மடங்கு குறைவானது). இந்த கோல் கனமற்றது.)

51) கீழ்க்காணும் எந்த கோளானது மிகவும் சாய்ந்த சூழல் அச்சைக் கொண்டுள்ளது?

A) வியாழன்

B) யுரேனஸ்

C) நெப்ட்யூன்

D) வெள்ளி

(குறிப்பு – யுரேனஸ் ஒரு குளிர் மிகு வாயு பெருங்கோளாகும். பெரிய தொலைநோக்கியின் மூலமாகவே இதை காண முடியும். யுரேனஸ் கோளானது மிகவும் சாய்ந்த சூழல் அச்சைக் கொண்டுள்ளது. அதனால் இது உருண்டு ஓடுவது போல் தெரிகின்றது.)

52) யுரேனஸ் கோளின் கோடைகாலம் மற்றும் குளிர்காலத்தின் சராசரி காலம் எவ்வளவு?

A) 40 ஆண்டுகள்

B) 42 ஆண்டுகள்

C) 44 ஆண்டுகள்

D) 46 ஆண்டுகள்

(குறிப்பு – யுரேனஸ் கோளானது மிகவும் சாய்ந்த சூழல் அச்சைக் கொண்டுள்ளது. அதனால் இது உருண்டு ஓடுவது போல் தெரிகின்றது. இதன் அசாதாரண சாய்வின் காரணமாக இங்கு கோடைகாலம், குளிர்காலம் மிக நீண்டு இருக்கும். அதாவது கோடை காலமும், குளிர்காலமும் சராசரியாக 42 ஆண்டுகள் இருக்கும்.)

53) கீழ்காணும் எந்த கோள் பச்சை நிற விண்மீன் போன்று காட்சியளிக்கும்?

A) யுரேனஸ்

B) நெப்ட்யூன்

C) வியாழன்

D) வெள்ளி

(குறிப்பு – நெப்டியூன் கோளானது பச்சை நிற விண்மீன் போன்று காட்சியளிக்கும். சூரியனிலிருந்து எட்டாவதாக உள்ள இந்த கோள் மிகவும் காற்று வீசக்கூடிய கோளாகும். 248 ஆண்டுகளுக்கு ஒருமுறை புளூட்டோ கிரகம், நெப்ட்யூன் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை கடக்கிறது. இந்த நிலை 20 ஆண்டுகளுக்கு தொடர்கிறது.)

54) சூரிய மண்டலத்தில் கோளின் சுழற்சிக்கு எதிர் திசையில் சுழலும் ஒரே நிலவு எது?

A) கானிமீடு

B) டைட்டான்

C) டிரைட்டான்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – நெப்ட்யூன் கோளின் சுற்றுப்பாதையை 248 ஆண்டுகளுக்கு ஒருமுறை புளூட்டோ கடக்கிறது. இந்த நிலை 20 ஆண்டுகளுக்குத் தொடர்கிறது. நெப்ட்யூன் கோளுக்கு 13 நிலவுகள் உள்ளன, அதில் டிரைட்டான் என்ற நிலவே பெரியதாகும். சூரிய மண்டலத்தில் கோளின் சுழற்சிக்கு எதிர்த்திசையில் சுற்றும் ஒரே நிலவு டிரைட்டான் ஆகும்)

55) சூரிய மண்டலத்தில் உள்ள பிற பொருள்கள் கீழ்க்கண்டவற்றுள் எது?

I. விண்கற்கள்

II. சிறு கோள்கள்

III. வால் விண்மீன்கள்

IV. துணைக்கோள்கள்

A) I, II, III மட்டும்

B) II, III, IV மட்டும்

C) I, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – சூரிய மண்டலத்தில் எட்டு கோள்களை தவிர வேறு சில பொருள்களும் சூரியனை சுற்றி வருகின்றன. அவைகளும் சூரிய மண்டலத்தை சேர்ந்தவைகளே ஆகும். அவை சிறுகோள்கள், வால் விண்மீன்கள், விண்கற்கள் மற்றும் விண்வீழ்கற்கள் மற்றும் துணைக்கோள்கள் என்பன ஆகும்.)

56) சிறுகோள்கள் (Asteroids) கீழ்க்காணும் எந்த இரு கோள்களுக்கு இடையே காணப்படுகின்றன?

A) புதன் – வெள்ளி

B) செவ்வாய் – வியாழன்

C) பூமி – வியாழன்

D) வியாழன் – நெப்ட்யூன்

(குறிப்பு – செவ்வாயின் சுற்றுப்பாதைக்கும், வியாழனின் சுற்றுப்பாதைக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது. இந்த இடைவெளியில் கோள்கள் தோன்றிய போது உருவான லட்சக்கணக்கான பாறைத் துண்டுகள் சுற்றிவருகின்றன இவை சிறு கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன.)

57) சிறுகோள்களிலேயே பெரியது எது?

A) செரஸ்

B) நிம்பஸ்

C) குப்ராஸ்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – சிறுகோள்களிலேயே மிக பெரியது செரஸ் என்பதாகும். இதன் விட்டம் 946 கிமீ ஆகும். சுமார் 50 மில்லியன் ஆண்டுக்கு ஒருமுறை நம் பூமியின் மீது சிறுகோள் விழுவதுண்டு. அது 10 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும். இவற்றையும் பெரிய தொலைநோக்கியால் மட்டுமே காண முடியும்.)

58) மிகப்பெரிய வால் விண்மீனின், வாலின் நீளம் எவ்வளவாக இருக்கும்?

A) 120 மில்லியன் கிலோமீட்டர்

B) 140 மில்லியன் கிலோமீட்டர்

C) 160 மில்லியன் கிலோமீட்டர்

D) 180 மில்லியன் கிலோமீட்டர்

(குறிப்பு – அதி நீள்வட்ட பாதையில் நம் சூரியனை சுற்றிவரும் தூசு மற்றும் பனி நிறைந்த பொருள்களே வால் விண்மீன்கள் என அழைக்கப்படுகிறது. இவற்றின் சுற்றுக்காலம் அதிகமாகும். இவை சூரியனை நெருங்கும்போது ஆவியாகி தலை மற்றும் வால் ஆகியவை உருவாகின்றன. ஒரு சில வால் விண்மீன்களுக்கு, 160 மில்லியன் கிலோமீட்டர் நீளமுள்ள வால் உள்ளது.)

59) ஹாலி வால் விண்மீன் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றுகிறது?

A) 72 ஆண்டுகளுக்கு ஒருமுறை

B) 74 ஆண்டுகளுக்கு ஒருமுறை

C) 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை

D) 78 ஆண்டுகளுக்கு ஒருமுறை

(குறிப்பு – சில வால் விண்மீனின் வால் பகுதி 160 மில்லியன் கிலோமீட்டருக்கும் அதிகமாக இருக்கும். இது பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவை விட அதிகமாகும். ஹாலி பால் விண்மீன், 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை தெரியும்.)

60) கடைசியாக ஹாலி வால் விண்மீன் எந்த ஆண்டு தோன்றியது?

A) 1982 இல்

B) 1984 இல்

C) 1986 இல்

D) 1988 இல்

(குறிப்பு – ஹாலி வால் விண்மீன், 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெரியும். இது கடைசியாக 1986 ஆம் ஆண்டு தோன்றியது. அடுத்து 2062 ஆம் ஆண்டு இது தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.)

61) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. சூரிய மண்டலம் முழுவதும் பரவலாக சிதறிக் கிடக்கும் சிறு பாறை துண்டுகளே விண்கற்கள் என்று அழைக்கப்படுகின்றன.

II. மிக அதிக வேகத்துடன் பயணிக்கும் இவை புவியின் வளிமண்டலத்தை நெருங்கும்போது, அதன் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு, உராய்வின் காரணமாக உருவாகும் வெப்பத்தின் காரணமாக பெரும்பாலும் எரிந்து விடுகின்றன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – சூரிய மண்டலம் முழுவதும் பரவலாக சிதறிக் கிடக்கும் சிறு பாறை துண்டுகளே விண்கற்கள் (Meteors) என்று அழைக்கப்படுகின்றன. மிக அதிக வேகத்துடன் பயணிக்கும் இவை புவியின் வளிமண்டலத்தை நெருங்கும்போது, அதன் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு, உராய்வின் காரணமாக உருவாகும் வெப்பத்தின் காரணமாக பெரும்பாலும் எரிந்து விடுகின்றன. சில பெரிய விண்கற்கள் முழுவதுமாக எரியாமல் கற்களாக பூமியில் மீண்டும் விழும். அவை விண்வீழ் கற்கள் (Meteorites) என அழைக்கப்படுகின்றன)

62) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு சுற்றுப்பாதையில் சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் சுற்றி வரும் பொருள், துணைக்கோள் என்று அழைக்கப்படுகிறது,

II. மனிதனால் உருவாக்கப்பட்ட துணைக்கோளில் இருந்து வேறுபடுத்துவதற்காக இயற்கையான துணைக்கோள்களை நாம் நிலவுகள் என்று அழைக்கிறோம்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு சுற்றுப்பாதையில் சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் சுற்றி வரும் பொருள், துணைக்கோள் என்று அழைக்கப்படுகிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட துணைக்கோளில் இருந்து வேறுபடுத்துவதற்காக இயற்கையான துணைக்கோள்களை நாம் நிலவுகள் என்று அழைக்கிறோம். பூமியின் இயற்கை துணைக்கோள் சந்திரன் (Moon) ஆகும்.)

63) கீழ்க்காணும் எந்த கோளுக்கு நிலவு இல்லை?

A) வெள்ளி

B) பூமி

C) வியாழன்

D) நெப்ட்யூன்

(குறிப்பு – சூரிய மண்டலத்தில் உள்ள எட்டு கோள்களில், ஆறு கோள்களுக்கு நிலவுகள் உள்ளன. புதன் மற்றும் வெள்ளி கோள்களுக்கு நிலவுகள் இல்லை.)

64) ஒரு காஸ்மிக் ஆண்டு என்பது கீழ்க்கண்டவற்றுள் எவற்றுக்கு சமமாகும்?

A) 200 மில்லியன் புவி ஆண்டுகள்

B) 210 மில்லியன் புவி ஆண்டுகள்

C) 225 மில்லியன் புவி ஆண்டுகள்

D) 240 மில்லியன் புவி ஆண்டுகள்

(குறிப்பு – நொடிக்கு 250 கிமீ (மணிக்கு லட்சம் கிமீ) வேகத்தில் பால்வெளி வீதியை சுற்றி வர பூமி எடுத்துக்கொள்ளும் காலம் காஸ்மிக் ஆண்டு எனப்படும். இது 225 மில்லியன் புவி ஆண்டுகளுக்கு சமமாகும்.)

65) முதல் முறையாக எந்த ஆண்டு செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது?

A) 1952 ஆம் ஆண்டு

B) 1954 ஆம் ஆண்டு

C) 1956 ஆம் ஆண்டு

D) 1958 ஆம் ஆண்டு

(குறிப்பு – கோள்களுக்கும், துணை கோள்களுக்கும் இடையே ஈர்ப்பு விசை செயல்படுகிறது. தற்காலத்தில் பல செயற்கை கோள்கள் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்படுகின்றன. 1956 ஆம் ஆண்டு செலுத்தப்பட்ட ஸ்புட்னிக் என்ற செயற்கைகோளே முதன்முறையாக செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஆகும்.)

66) இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எந்த ஆண்டு செலுத்தப்பட்டது?

A) 1973 ஆம் ஆண்டு

B) 1975 ஆம் ஆண்டு

C) 1977 ஆம் ஆண்டு

D) 1979 ஆம் ஆண்டு

(குறிப்பு – இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா ஆகும். இது ஏப்ரல் 19, 1975 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. செயற்கைக்கோள்கள் சில நூறு கிலோ மீட்டர் உயரத்தில் பூமியைச் சுற்றி வரும் வகையில் விண்ணில் செலுத்தப்படுகின்றன. இந்த உயரத்தில் காற்றினால் ஏற்படும் உராய்வு புறக்கணிக்கதக்கதாக இருக்கும்.)

67) 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செயற்கைக் கோள் ஒன்று கிட்டத்தட்ட எத்தனை கிலோமீட்டர் வேகத்திற்கு சற்று அதிகமான வேகத்துடன் இயங்க வேண்டும்?

A) 27,000 கிலோமீட்டர் / மணி

B) 27,200 கிலோமீட்டர் / மணி

C) 27,400 கிலோமீட்டர் / மணி

D) 27,600 கிலோமீட்டர் / மணி

(குறிப்பு – ஒரு கோளில் இருந்து, ஒரு நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில் செயற்கைகோள் ஒன்று வட்டப்பாதையில் சுற்றி வருவதற்கு, அதற்கு அளிக்கப்படும் கிடைமட்ட திசைவேகம் சுற்றியக்கத் திசைவேகம் என அழைக்கப்படுகிறது.ஒரு செயற்கைகோளின் சுற்றியக்க திசைவேகம் என்பது அது புவியிலிருந்து உள்ள உயரத்தைப் பொறுத்தது ஆகும்.)

68) சுற்றியக்க திசைவேகத்தின் சமன்பாடு கீழ்க்கண்டவற்றுள் எது?

A) v = √ GM / ( R + h )

B) v = √ GM / ( R h )

C) v = √ GM / ( R – h )

D) v = √ GM ( R + h )

(குறிப்பு – 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செயற்கைக் கோள் ஒன்று கிட்டத்தட்ட 27,400 கிலோமீட்டர் / மணி வேகத்திற்கும் சற்று அதிகமான வேகத்துடன் இயங்கவேண்டும். அவ்வாறு இயங்கும் போது அது 24 மணி நேரத்தில் பூமியை சுற்றி வரும். புவியின் சுழற்சி காலமும் 24 மணியாக இருப்பதால் அந்த செயற்கை கோளானது புவியின் பரப்பிற்கு மேல் ஒரே இடத்தில் இருப்பது போல் தோன்றும். சுற்றியக்க திசைவேகத்தை (v) = √ GM / ( R + h ) என்னும் வாய்ப்பாட்டை கொண்டு கணக்கிடலாம்.)

69) சுற்றியக்க திசைவேகம் (v) = √ GM / ( R + h ) என்பதில் G என்பது ஈர்ப்பியல் மாறிலி ஆகும். அதன் மதிப்பு?

A) 6.27 × 10-11 நிமீ2 கிகி-2

B) 6.47 × 10-11 நிமீ2 கிகி-2

C) 6.67 × 10-11 நிமீ2 கிகி-2

D) 6.87 × 10-11 நிமீ2 கிகி-2

(குறிப்பு – புவியை பொருத்து ஒரே நிலையில் இருப்பதால், செயற்கை கோள்களுக்கு, புவிநிலை செயற்கை கோள்கள் என்று பெயர். அதன் சுற்றியக்க திசைவேகம் (v) = √ GM / ( R + h ) என்னும் வாய்ப்பாடு கொண்டு அறிய முடியும். இதில் G என்பது ஈர்ப்பியல் மாறிலி ஆகும். அதன் மதிப்பு

6.67 × 10-11 நிமீ2 கிகி-2 ஆகும்.)

70) புவியின் ஆரம்?

A) 6231 கிமீ

B) 6371 கிமீ

C) 6461 கிமீ

D) 6571 கிமீ

(குறிப்பு – புவியின் நிறை, 5.972 × 1024 கிலோகிராம் ஆகும். மேலும் புவியின் ஆரம் 6371 கிமீ ஆகும்.)

71) 500 கிலோமீட்டர் உயரத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் செயற்கைகோளின் சுற்றியக்க திசைவேகத்தை கணக்கிடுக?

A) 7610 மீவி-1

B) 7613 மீவி-1

C) 7617 மீவி-1

D) 7619 மீவி-1

(குறிப்பு –

G = 6.67 × 10-11 நிமீ2 கிகி-2

M = 5.972 × 1024 கிகி

R = 6371000 மீ

h = 500000 மீ

v = √ ( 6.67 × 10-11 × 5.972 × 1024 / 6371000 + 500000

v = 7613 மீவி-1 )

72) சுற்றுக்காலம் T =?

A) T = 2πr / v

B) T = 2πr + v

C) T = 2πrv

D) T = 2πr – v

(குறிப்பு – புவியை ஒருமுறை முழுமையாக சுற்றிவர ஒரு செயற்கை கோள் எடுத்துக் கொள்ளும் காலம், சுற்றுக்காலம் என அழைக்கப்படும்.

சுற்றுக்காலம் T = கடந்த தொலைவு / சுற்றியக்க திசைவேகம்

T = 2πr / v

v இன் மதிப்பை பிரதியிட,

T = 2π(R + h) / √ GM / (R + h) என்ற சமன்பாடு பயன்படுத்தப்படுகிறது.)

73) 500 கிலோ மீட்டர் உயரத்தில் ஒரு செயற்கைக்கோளின் சுற்று காலம் எவ்வளவு?

A) 90 நிமிடங்கள்

B) 92 நிமிடங்கள்

C) 95 நிமிடங்கள்

D) 97 நிமிடங்கள்

(குறிப்பு – T = 2π(R+h) / v

T = 2 × 22/7 × (6371 + 500) /7616

= 5.6677 × 103 வி

= 5667 வி

அதாவது T = 95 நிமிடங்கள்)

74) வானில், ஒரே ஒரு விண்மீன் மட்டும் நகராமல் உள்ளது போல் தெரியும்.அந்த விண்மீனின் பெயர் என்ன?

A) துருவ விண்மீன்

B) நகரா விண்மீன்

C) ஸ்திர விண்மீன்

D) உறுதியான விண்மீன்

(குறிப்பு – அனைத்து விண்மீன்களும் கிழக்கிலிருந்து மேற்காக நகர்வது போல் தோன்றினாலும், ஒரே ஒரு விண்மீன் மட்டும் நகராமல் உள்ளது போல் தெரியும். அது துருவ விண்மீன் என்று அழைக்கப்படுகிறது. நிலையாக அமைந்துள்ள பூமியின் சுழல் அதற்கு நேராக அமைந்திருப்பதால் துருவ விண்மீன் ஒரே இடத்தில் உள்ளது போல் தோன்றுகிறது.)

75) ஜோகனஸ் கெப்ளர் வெளியிட்ட கோள்களின் இயக்கத்திற்கான விதிகள் எத்தனை?

A) இரண்டு விதிகள்

B) மூன்று விதிகள்

C) நான்கு விதிகள்

D) ஐந்து விதிகள்

(குறிப்பு – 1600 களின் தொடக்கத்தில் ஜோகனஸ் கெப்ளர் கோள்களின் இயக்கத்திற்கான மூன்று விதிகளை வெளியிட்டார். அவர் தமது வழிகாட்டியான டைகோ பிராகே என்பவரால், கவனமாக சேகரிக்கப்பட்ட தகவல்களின் மூலம் சூரிய-மைய அமைப்பின் அடிப்படையில் மூன்று விதிகளை கூறினார். கோள்களின் இயக்கத்திற்கான கெப்ளரின் கருத்துகள் இப்போது ஒப்புக் கொள்ளப்படவில்லை.எனினும் அவரது விதிகள் கோள்கள் மற்றும் துணைக் கோள்களின் இயக்கத்தை பற்றிய மிகச் சரியான கணிப்பாகும்)

76) கீழ்க்காணும் கெப்ளர் விதிகளில் எது சரியானது?

I. சூரியனின் மையம் ஒரு குவியத்தில் உள்ளவாறு நீள்வட்டப்பாதையில் கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன.

II. கோளின் மையத்தையும், சூரியனின் மையத்தையும் இணைக்கும் கற்பனைக் கோடு சம காலங்களில் சம பரப்புகளை கிடக்கிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – கெப்ளரின் முதல் விதி “சூரியனின் மையம் ஒரு குவியத்தில் உள்ளவாறு நீள்வட்டப்பாதையில் கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன.” என்பதாகும். அவரின் இரண்டாம் விதி ” கோளின் மையத்தையும், சூரியனின் மையத்தையும் இணைக்கும் கற்பனைக் கோடு சம காலங்களில் சம பரப்புகளை கிடக்கிறது” என்பதாகும். மேலும் கெப்ளரின் மூன்றாம் விதி ” எந்த இரு கோள்களுக்கும், சுற்றுக் காலங்களின் இருமடிகளின் விகிதம் சூரியனிலிருந்து அவற்றின் பாதி அளவு பேரச்சுகளின் (Major axis) மும்மடிகளின் விகிதத்திற்கு சமம் ஆகும்” என்பதாகும்.)

77) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. கெப்ளரின் முதல் விதி நீள்வட்டங்களின் விதி என்று அழைக்கப்படுகிறது.

II. கெப்லரின் இரண்டாவது விதி சம பரப்புகளின் விதி என்று அழைக்கப்படுகிறது

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – கெப்ளரின் முதல் விதி நீள்வட்டங்களின் விதி என்று அழைக்கப்படுகிறது. கெப்ளரின் இரண்டாவது விதி சம பரப்புகளின் விதி என்று அழைக்கப்படுகிறது. கெப்ளரின் மூன்றாம் விதி ஒத்திசைவுகளின் விதி என்று அழைக்கப்படுகிறது.)

78) பன்னாட்டு விண்வெளி மையம் புவி வட்டப்பாதையில் எத்தனை கிலோமீட்டர் தொலைவில் இயங்குகிறது?

A) 400 கிமீ

B) 500 கிமீ

C) 600 கிமீ

D) 700 கிமீ

(குறிப்பு – விண்வெளி வீரர்கள் தங்குவதற்கான ஒரு பெரிய விண்வெளி கலமே பன்னாட்டு விண்வெளி மையம் என்று அழைக்கப்படுகிறது. இது தாழ்வான புவி வட்டப் பாதையில் சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் இயங்குகிறது. இது ஒரு அறிவியல் ஆய்வகமாகவும் செயல்படுகிறது.)

79) பன்னாட்டு விண்வெளி மையத்தின் முதல் பகுதி எந்த ஆண்டு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது?

A) 1992 ஆம் ஆண்டு

B) 1994 ஆம் ஆண்டு

C) 1996 ஆம் ஆண்டு

D) 1998 ஆம் ஆண்டு

(குறிப்பு – பன்னாட்டு விண்வெளி மையத்தின் முதல் பகுதி 1998 ஆம் ஆண்டு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அதன் முக்கிய பகுதிகளின் கட்டுமானம் 2011ம் ஆண்டில் முடிக்கப்பட்டது. விண்ணில் உள்ள பொருள்களில், வெறும் கண்ணால் பார்க்கக் கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட பெரிய பொருள் இதுவே ஆகும்)

80) பன்னாட்டு விண்வெளி மையத்துக்கு முதன் முதலில் மனிதர்கள் எந்த ஆண்டு சென்றனர்?

A) 2000 ஆம் ஆண்டு

B) 2001 ஆம் ஆண்டு

C) 2002 ஆம் ஆண்டு

D) 2003 ஆம் ஆண்டு

(குறிப்பு – பன்னாட்டு விண்வெளி மையத்திற்கு முதன்முதலாக 2000 ஆம் ஆண்டுதான் மனிதர்கள் சென்றனர். அதன்பிறகு ஒரு பொழுதும் அதில் மனிதர்கள் இல்லாமல் இருந்தது இல்லை. ஒரு குறிப்பிட்ட நாளில் குறைந்தது ஆறு மனிதர்கள் அங்கு இருப்பார்கள். தற்போதைய திட்டப்படி 2024 ஆம் ஆண்டு வரை பன்னாட்டு விண்வெளி மையமானது இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.)

81) பன்னாட்டு விண்வெளி மையத்திற்கு உருவாக்கப்பட்ட நீர் மீட்பு அமைப்பு மற்றும் ஆக்சிஜன் உருவாக்கும் அமைப்பு எந்த நாட்டிற்கு பயன்படுத்தப்பட்டது?

A) ஈரான்

B) ஈராக்

C) ஆப்கானிஸ்தான்

D) கஜகிஸ்தான்

(குறிப்பு – பன்னாட்டு விண்வெளி மையத்திற்கு உருவாக்கப்பட்ட நீர் மீட்பு அமைப்பு (WRS) மற்றும் ஆக்சிஜன் உருவாக்கும் அமைப்பு (OGS) ஆகியவை, ஈராக் நாட்டில் சுத்தமான குடிநீர் இல்லை என்பதால் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு கிராமத்தை காப்பாற்றி அவர்களை மீண்டும் அங்கு வாழ வழிவகை செய்தது).

82) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. கண்ணை தொடரும் தொழில்நுட்பம் என்பது, அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளால் பன்னாட்டு விண்வெளி மையத்தில் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பமாகும்.

II. கண்ணை தொடரும் தொழில்நுட்பம் என்பது நுண் ஈர்ப்பு நிலையில் ஆய்வுகளை செய்வதற்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமாகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – நுண் ஈர்ப்பு நிலையில் ஆய்வுகளை செய்வதற்காக உருவாக்கப்பட்ட கண்ணை தொடரும் கருவி, பல லேசர் அறுவை சிகிச்சைகளில் பயன்பட்டுள்ளது. இயக்க குறைபாடு மற்றும் பேச்சில் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த கண்ணை தொடரும் தொழில்நுட்பமானது வெகுவாகப் பயன்படுகிறது.)

83) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. தானியங்கி கைகள் பன்னாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்காக உருவாக்கப்பட்டவை ஆகும்.

II. தற்போது தானியங்கி கைகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற இயலாத கட்டிகளை நீக்குவதற்கு பயன்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – அறுவை சிகிச்சை மூலம் அகற்ற இயலாத கட்டிகள், எடுத்துக்காட்டாக மூளை கட்டிகள் போன்றவற்றை நீக்குவதற்கும், மிகத்துல்லியமான முறையில் உடல் திசு ஆய்வு செய்வதற்கும், பன்னாட்டு விண்வெளி மையத்தில் ஆராய்ச்சிக்கு துணையாக இருப்பதற்காக உருவாக்கப்பட்ட தானியங்கி கைகள் பெரிதும் உதவுகின்றன. இத்தகைய கருவிகளால் மிகத்துல்லியமான முறையில் உடல் திசு ஆய்வுகளை செய்ய முடியும் என்று இதை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.)

84) பன்னாட்டு விண்வெளி மையத்தை அமைக்க எத்தனை நாடுகள் இணைந்து செயல்பட்டன?

A) 15 நாடுகள்

B) 16 நாடுகள்

C) 17 நாடுகள்

D) 18 நாடுகள்

(குறிப்பு – பன்னாட்டு விண்வெளி மையத்தின் அறிவியல் சாதனைகளுக்கு சற்றும் குறையாத சாதனை என்னவென்றால், இந்த மையத்தை உருவாக்குவதற்கு தேவைப்பட்ட பன்னாட்டு ஒத்துழைப்பு ஆகும். பன்னாட்டு விண்வெளி மையத்தை இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் 16 வெவ்வேறு நாடுகளின் 5 விண்வெளி நிறுவனங்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது.)

85) நாடுகளையும் அதன் விண்வெளி நிறுவனங்களையும் பொருத்துக.

I. அமெரிக்கா – a) ROKOSMOS

II. ரஷ்யா – b) ESA

III. ஐரோப்பா – c) JAXA

IV. ஜப்பான் – d) NASA

A) I-d, II-a, III-b, IV-c

B) I-d, II-b, III-a, III-c

C) I-d, II-b, III-c, IV-a

D) I-d, II-c, III-b, IV-a

(குறிப்பு – பன்னாட்டு விண்வெளி மையம் இயங்குவதற்கும், அதைப் பராமரிப்பதற்கும் ஐந்து நாடுகளை சேர்ந்த விண்வெளி நிறுவனங்கள் உதவுகின்றன. அவை அமெரிக்காவின் NASA, ரஷ்யாவின் ROSKOMOS, ஜப்பானின் JAXA, கனடாவின் CSA மற்றும் ஐரோப்பாவின் ESA என்பன ஆகும்.)

86) பன்னாட்டு விண்வெளி மையத்தை பராமரிக்கும் நாடுகளின் பட்டியலில் அல்லாதது எது?

A) டென்மார்க்

B) ஸ்பெயின்

C) வங்கதேசம்

D) இங்கிலாந்து

(குறிப்பு – பன்னாட்டு விண்வெளி மையத்தை பராமரிப்பதற்கும், இயக்குவதற்கும் 16 நாடுகள் இணைந்து பணியாற்றுகின்றன. அவை அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான், பெல்ஜியம், பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஹாலந்து, நார்வே, ஸ்பெயின், ஸ்வீடன், ஸ்விசர்லாந்து மற்றும் இங்கிலாந்து என்பன அந்த 16 நாடுகள் ஆகும்.)

87) இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எது?

A) ஆரியப்பட்டா

B) ரோகிணி

C) பாஸ்கரா

D) ஆப்பிள்

(குறிப்பு – இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா என்பதாகும். 1975 ஆம் ஆண்டு, ஏப்ரல் 19 ஆவது நாள் விண்ணில் ஏவப்பட்டது. பொதுவாக செயற்கைக்கோள்கள் சில நூறு கிலோ மீட்டர் உயரத்தில் பூமியைச் சுற்றி வரும் வகையில் விண்ணில் செலுத்தப்படுகின்றன.)

9th Science Lesson 10 Questions in Tamil

10] நம்மை சுற்றியுள்ள பொருட்கள்

1) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. அண்டத்தில் உள்ள அனைத்து பொருள்களையும் குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு சொல் பருப்பொருள் என்பதாகும்.

II. மேகம், கற்கள், தாவரங்கள், விலங்குகள், மணல் அனைத்தும் பொருள்கள் ஆகும்.

III. பருப்பொருள்கள் நிறை மற்றும் இடத்தை அடைக்கும் இயல்பு என்னும் இரு பண்புகளை கொண்டுள்ளன.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – அண்டத்தில் உள்ள அனைத்து பொருள்களையும் குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு சொல் பருப்பொருள் என்பதாகும். நம்மை சுற்றி உள்ள அனைத்துமே பருப்பொருள் ஆகும். நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, எழுதும் எழுதுகோல், மேகம், கற்கள், தாவரங்கள், விலங்குகள், ஒரு துளி நீர், மணல் கூறு ஆகிய அனைத்தும் பருப்பொருள்கள். பருப்பொருள்கள் அனைத்திலும் இரண்டு பொதுவான பண்புகள் இடம்பெற்றுள்ளன. அவை நிறை மற்றும் இடத்தை அடைக்கும் இயல்பு என்பனவாம்.)

2) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. நிறை மற்றும் இடத்தை அடைக்கும் அனைத்துப் பொருள்களையும் பருப்பொருள்கள் என அழைக்கலாம்.

II. சூரிய ஒளி, விசை, ஆற்றல் என்பன பருப்பொருள்கள் ஆகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – நிறை மற்றும் இடத்தை அடைக்கும் அனைத்துப் பொருள்களையும் பருப்பொருள்கள் என அழைக்கலாம். நாம் பார்க்கும் அல்லது உணரும் அனைத்தும் பருப்பொருள்கள் அல்ல. எடுத்துக்காட்டாக சூரிய ஒளி, ஒலி, விசை மற்றும் ஆற்றல் ஆகியன நிறை அற்றவை மற்றும் இடத்தை அடைப்பவை இல்லை.எனவே, இவை பருப்பொருள்கள் ஆகாது.)

3) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பருப்பொருள்கள் பெரும்பாலும் தூய்மையான மற்றும் தூய்மையற்ற பொருட்களாகவே வகைப்படுத்தப்படுகின்றன.

II. தூய பொருட்கள் என்பவை ஒரே வகையான துகள்களையும், தூய்மையற்ற பொருள்கள் என்பவை ஒன்றுக்கு மேற்பட்ட துகள்களையும் பெற்றுள்ளன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – பருப்பொருள்கள் பெரும்பாலும் தூய்மையான மற்றும் தூய்மையற்ற பொருட்களாகவே வகைப்படுத்தப்படுகின்றன. தூய பொருட்கள் என்பவை ஒரே வகையான துகள்களையும், தூய்மையற்ற பொருள்கள் என்பவை ஒன்றுக்கு மேற்பட்ட துகள்களையும் பெற்றுள்ளன. தூய்மையான பொருட்களுக்கு எடுத்துக்காட்டு தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் ஆகும். தூய்மையற்ற பொருட்களுக்கு எடுத்துக்காட்டு உப்பு ஆகும்.)

4) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. தனிமங்கள் என்பவை எளிய பொருட்களாக உடைக்க இயலாத ஆகும்.

II. சேர்மங்கள் என்பவை நிலையான இயைபைக் கொண்டதாகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – தனிமங்கள் என்பவை எளிய பொருட்களாக உடைக்க இயலாததாகும்.எடுத்துக்காட்டாக காப்பர், ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் போன்றவை தனிமங்கள் ஆகும். சேர்மங்கள் என்பவை நிலையான இயைபைக் கொண்டது. வேதி அல்லது மின் வேதிவினைகள் மூலம் எளிய பொருட்களாக மாற்றக் கூடியவை. எடுத்துக்காட்டாக நீர், சர்க்கரை, உப்பு போன்றவை ஆகும்.)

5) கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

I. சர்க்கரை + நீர் என்பது சீரான இயைபு உடையவை.

II. மணல் + சர்க்கரை என்பது சீரற்ற இயைபு உடையவை.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – பருப்பொருள்களுள் தூய்மையற்ற பொருட்கள் என்பவை ஒருபடித்தானவை மற்றும் பலபடித்தானவை என இருவகைப்படுத்தப்பட்டுள்ளன. சர்க்கரை + நீர் மற்றும் நீர் + ஆல்கஹால் என்பவை சீரான இயைபு உடையவை. அதேவேளை மணல் +, சர்க்கரை மற்றும் நீர் + எண்ணெய் என்பவை சீரற்ற இயைபு உடையவை ஆகும்.)

6) நவீன ஆவர்த்தன அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் எத்தனை தனிமங்கள் இயற்கையில் காணப்படுகின்றன?

A) 90 தனிமங்கள்

B) 92 தனிமங்கள்

C) 94 தனிமங்கள்

D) 96 தனிமங்கள்

(குறிப்பு – நவீன ஆவர்த்தன அட்டவணையில் நமக்கு தெரிந்து இதுவரை உள்ள 118 தனிமங்களில், 92 தனிமங்கள் இயற்கையில் காணப்படுகின்றன. 26 தனிமங்கள் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டவை ஆகும். இத்தகைய 118 தனிமங்களிலிருந்து பில்லியன் சேர்மங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.)

7) எளிய பொருட்களாக பகுக்க முடியாத பொருள்களுக்கு தனிமங்கள் என பெயரிட்டவர் யார்?

A) ராபர்ட் ஹென்றி

B) ராபர்ட் பாயில்

C) ராபர்ட் வில்லியம்

D) ராபர்ட் கீன்ஸ்

(குறிப்பு – ராபர்ட் பாயில் என்பவர் எளிய பொருட்களாக பகுக்க முடியாத பொருட்களுக்கு தனிமங்கள் என்று பெயரிட்டார். தனிமங்கள் ஒவ்வொன்றும் ஒரே வகையான அணுக்களால் ஆனவை எனவும் இவர் வரையறுத்துள்ளார். எடுத்துக்காட்டாக அலுமினியம் என்னும் தனிமம், அலுமினியம் அணுக்களால் ஆனது. அலுமினிய அணுக்களில் இருந்து வேதியியல் ரீதியாக எளிமையான பொருட்களை பெற முடியாது.)

8) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. அலுமினிய அணுக்களில் இருந்து வேதியியல் ரீதியாக எளிமையான பொருட்களை பெற முடியாது.

II. அலுமினிய அணுக்களில் இருந்து அலுமினியம் ஆக்சைடு, அலுமினியம் நைட்ரேட் மற்றும் அலுமினியம் சல்பேட் போன்ற சிக்கலான வேதிப் பொருட்களை உருவாக்க முடியும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – அலுமினியம் என்னும் தனிமம், அலுமினியம் அணுக்களால் ஆனது. அலுமினிய அணுக்களில் இருந்து வேதியியல் ரீதியாக எளிமையான பொருட்களை பெற முடியாது. ஆனால், அலுமினிய அணுக்களில் இருந்து அலுமினியம் ஆக்சைடு, அலுமினியம் நைட்ரேட் மற்றும் அலுமினியம் சல்பேட் போன்ற சிக்கலான வேதிப் பொருட்களை உருவாக்க முடியும். இதனை கண்டறிந்து கூறியவர் ராபர்ட் பாயில் என்பவர் ஆவார்.)

9) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு தனிமம் அல்லது ஒரு சேர்மத்தின் மிகச்சிறிய துகள் மூலக்கூறு ஆகும்.

II. மூலக்கூறு என்பது தனித்து காணப்படும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – வேதி வினையில் ஈடுபடும் ஒரு தனிமத்தின் மிகச்சிறிய துகள் அணு ஆகும். அணு தனித்தோ அல்லது சேர்ந்தோ காணப்படும். ஒரு தனிமம் அல்லது ஒரு சேர்மத்தின் மிகச்சிறிய துகள் மூலக்கூறு ஆகும். இது தனித்து காணப்படும். மேலும் மூலக்கூறு, பொருட்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.)

10) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஹைட்ரஜன் மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் உள்ளன.

II. ஆக்சிஜன் மூலக்கூறில் இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் உள்ளன

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஹைட்ரஜன் மூலக்கூறில் (H2) இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் உள்ளன. அதேபோல ஆக்சிஜன் மூலக்கூறில் (O2) இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் உள்ளன. மூலக்கூறு என்பது ஒரு பொருளின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.)

11) கீழ்க்கண்டவற்றுள் எது உலோகம் அல்ல?

A) காப்பர்

B) போரான்

C) தங்கம்

D) பாதரசம்

(குறிப்பு – அனைத்து தனிமங்களும் அவற்றின் பல்வேறு பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக காப்பர், குரோமியம், தங்கம், பாதரசம் போன்றவை உலோகங்கள் ஆகும்.)

12) கீழ்க்கண்டவற்றுள் எது உலோகப்போலி அல்ல?

A) போரான்

B) ஆர்சனிக்

C) சிலிகான்

D) நியான்

(குறிப்பு – அனைத்து தனிமங்களும் அவற்றின் பல்வேறு பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக போரான், சிலிக்கான், ஜெர்மானியம், ஆர்சனிக் போன்றவை உலோகப்போலிகள் ஆகும்.)

13) கீழ்கண்டவற்றுள் எது அலோகம் அல்ல?

A) ஆக்சிஜன்

B) கார்பன்

C) ஆர்சனிக்

D) குளோரின்

(குறிப்பு – அனைத்து தனிமங்களும் அவற்றின் பல்வேறு பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக கார்பன், ஆக்சிஜன், நியான் மற்றும் குளோரின் ஆகியவை அலோகம் ஆகும்.)

14) சர்க்கரையானது எத்தனை தனிமங்களால் ஆனது?

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

D) ஐந்து

(குறிப்பு – சேர்மம் என்பது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் கூடி இருப்பதாகும். எடுத்துக்காட்டாக சர்க்கரையானது கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய மூன்று தனிமங்களால் ஆனது.)

15) சர்க்கரையின் சரியான வேதியியல் வாய்ப்பாடு கீழ்க்கண்டவற்றுள் எது?

A) C12H12O12

B) C12H22O11

C) C12H12O11

D) C12H11O12

(குறிப்பு – சர்க்கரையானது கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய மூன்று தனிமங்களால் ஆனது. சர்க்கரையின் வேதியியல் வாய்பாடு C12H22O11 ஆகும்.)

16) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. சேர்மத்தின் பண்புகள் அவற்றில் இணைந்துள்ள தனிமங்களில் இருந்து முழுவதும் வேறுபட்டவை ஆகும்.

II. சோடியம் குளோரைடு ஒரு சேர்மம் ஆகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – சேர்மம் என்பது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் கூடி இருப்பதாகும். சேர்மத்தின் பண்புகள் அவற்றில் இணைந்துள்ள தனிமங்களில் இருந்து முழுவதும் வேறுபட்டவை. சோடியம் குளோரைடு என அழைக்கப்படும் சாதாரண உப்பு ஒரு சேர்மம் ஆகும். இது உணவிற்கு சுவை ஊட்டுகிறது. மேலும் இது உலோகமான சோடியம் மற்றும் அலோகமான குளோரின் மூலம் உருவாகிறது.)

17) கீழ்க்காணும் எதன் சேர்மங்கள் கணிப்பொறி துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன?

A) பாஸ்பரஸ்

B) ஹைட்ரஜன்

C) சிலிக்கான்

D) பொட்டாசியம்

(குறிப்பு – பாஸ்பரஸ், நைட்ரஜன் மற்றும் பொட்டாசியத்தின் சேர்மங்கள் உரம் தயாரிக்க பயன்படுகின்றன. சிலிக்கான் சேர்மங்கள் கணிப்பொறி துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. )

18) பற்பசையில் பயன்படுத்தப்படும் சேர்மம் கீழ்க்கண்டவற்றுள் எது?

A) பாஸ்பரஸ்

B) ஹைட்ரஜன்

C) ஃப்ளோரின்

D) பொட்டாசியம்

(குறிப்பு – பாஸ்பரஸ், நைட்ரஜன் மற்றும் பொட்டாசியத்தின் சேர்மங்கள் உரம் தயாரிக்க பயன்படுகின்றன. சிலிக்கான் சேர்மங்கள் கணிப்பொறி துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஃப்ளோரின் சேர்மங்கள் நம் பற்களை வலுப்படுத்த உதவும் பற்பசையில் பயன்படுத்தப்படுகிறது.)

19)கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு தனிமத்தின் அனைத்து பண்புகளையும் மிகச்சிறிய துகளான அணுவானது தன்னகத்தே கொண்டுள்ளது.

II. ஒரு சேர்மத்தின் அனைத்து பண்புகளையும் மூலக்கூறு தன்னகத்தே கொண்டுள்ளது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – தனிமம் என்பது ஒரே வகையான அணுக்களைக் கொண்டது. சேர்மம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்களால் ஆனது. ஒரு தனிமத்தின் அனைத்து பண்புகளையும் மிகச்சிறிய துகளான அணுவானது தன்னகத்தே கொண்டுள்ளது. ஒரு சேர்மத்தின் அனைத்து பண்புகளையும் மூலக்கூறு தன்னகத்தே கொண்டுள்ளது.தனிமத்தை வேதியியல் முறையில் எளிய பொருட்களாக பிரிக்க முடியாது. சேர்மங்களை வேதியியல் முறையில் தனிமங்களாக பிரிக்க இயலும்.)

20) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. கலவைகள் ஒரு தூய்மை அற்ற பொருளாகும்.

II. கலவைகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் அல்லது சேர்மங்கள் இயற்பியல் முறையில் ஒழுங்கற்ற விகிதத்தில் கலந்து இருக்கும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – கலவைகள் ஒரு தூய்மை அற்ற பொருளாகும். கலவைகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் அல்லது சேர்மங்கள் இயற்பியல் முறையில் ஒழுங்கற்ற விகிதத்தில் கலந்து இருக்கும். எடுத்துக்காட்டாக குழாய் நீரில், நீர் மற்றும் சில உப்புகள் கலந்து இருக்கும். எனவே இது கலவை என அழைக்கப்படுகிறது.)

21) கீழ்க்கண்டவற்றுள் எது கலவை ஆகும்?

I. எலுமிச்சை பானம்

II. குழாய் நீர்

III. காற்று

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – குழாய் நீரில், நீர் மற்றும் சில உப்புகள் கலந்து இருக்கும். எனவே இது கலவை என அழைக்கப்படுகிறது. எலுமிச்சை பானத்தில் எலுமிச்சை சாறு, சர்க்கரை மற்றும் நீர் கலந்து உள்ளன. காற்றில் ஹைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு, நீராவி மற்றும் வாயுக்கள் கலந்துள்ளன. மண்ணில் மணல், களிமண் மற்றும் பல்வேறு உப்புகள் கலந்துள்ளன. எனவே இவையாவும் கலவைகள் ஆகும்.)

22) திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG – Liquefied Petroleum Gas) கீழ்காணும் எந்த வாயுக்களின் கலவையே கொண்டுள்ளது?

I. புரோப்பேன்

II. பியூட்டேன்

III. மெத்திலீன்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG – Liquefied Petroleum Gas) என்பது மிக எளிதில் தீப்பற்றக்கூடிய ஹைட்ரோ கார்பன் வாயு ஆகும்.புரோபென் மற்றும் பியூட்டேன் வாயுக்களின் கலவையை இது கொண்டுள்ளது. இது அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு திரவம் ஆக்கப்படும்.)

23) இரும்பு மற்றும் சல்பர் ஆகியவற்றை வெப்பப்படுத்தும் போது கிடைக்கும் சேர்மம் என்ன?

A) இரும்பு சல்பைடு

B) இரும்பு ஆக்சைடு

C) இரும்பு சல்பைட்

D) இரும்பு நைட்ரைட்

(குறிப்பு – இரும்பு மற்றும் சல்பர் ஆகியவற்றை வெப்பப்படுத்தும் போது இரும்பு சல்பைடு என்னும் சேர்மம் கிடைக்கிறது. இரும்பு + சல்பர் (வெப்பப்படுத்துதல்) ————-> இரும்பு (II) சல்பைடு (சேர்மம் ). இந்த இரும்பு சல்பைடு கருப்பு நிறம் உடையது ஆகும்.)

24) கீழ்க்காணும் பொருள்களையும் அதன் தோற்றத்தையும் பொருத்துக.

I. இரும்பு (தனிமம்) – a) கருப்பு நிற திடப்பொருள்

II. சல்பர் (சேர்மம்) – b) அடர் சாம்பல் நிறத்தூள்

III. இரும்பு + சல்பர் (கலவை) – c) மஞ்சள் தூள்

IV. இரும்பு சல்பைடு (சேர்மம்) – d) கலங்கலான மஞ்சள்தூள்

A) I-b, II-c, III-d, IV-a

B) I-b, II-a, III-d, IV-c

C) I-c, II-b, III-a, IV-d

D) I-d, II-a, III-b, IV-c

(குறிப்பு – இரும்பு என்பது ஒரு தனிமம் ஆகும். இது அடர் சாம்பல் நிற தூண் ஆகும். இது காந்தத்தினால் ஈர்க்கப்படும். சல்பர் என்பது ஒரு மஞ்சள் நிற தூள் ஆகும். இது காந்தத்தால் ஈர்க்கப்படாது. இரும்பு சல்பைடு என்பது ஒரு கருமை நிற திடப் பொருள் ஆகும். இது காந்தத்தால் ஈர்க்கப்படாது.)

25) ரத்தம் கீழ்க்கண்டவற்றுள் எதை உள்ளடக்கியது?

I. சிவப்பு அணுக்கள்

II. வெள்ளை அணுக்கள்

III. பிளாஸ்மா

IV. இரத்த தட்டுக்கள்

A) I, II, III மட்டும்

B) II, III, IV மட்டும்

C) I, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – ரத்தம் என்பது ஒரு கலவை ஆகும். ஏனெனில் இதில் இரத்த தட்டுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள், சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் பிளாஸ்மா போன்ற பல்வேறு கூறுகள் கலந்துள்ளன.)

26) கீழ்க்கண்டவற்றுள் எது ஒருபடித்தானவை ஆகும்?

I. உண்மை கரைசல்கள்

II. உலோக கலவைகள்

III. தொங்கல்கள்

IV. கூழ்மங்கள்

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) III, IV மட்டும்

D) I, III மட்டும்

(குறிப்பு – அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் பெரும்பாலானவை கலவைகள் ஆகும். சிலவற்றின் பகுதி பொருட்களை நம்முடைய வெற்றுக்கண்களால் பார்க்க முடியும். ஆனால் பெரும்பாலான கலவைகளின் பல்வேறு பகுதிப்பொருட்கள் நம்முடைய வெற்றுக் கண்களுக்குப் புலப்படுவதில்லை. கலவைகள் என்பது ஒருப்படித்தானவை மற்றும் பலப்படித்தானவை என இருவகைப்படும். உண்மை கரைசல்கள் மற்றும் உலோக கலவைகள் என்பவை ஒருபடித்தானவை ஆகும். தொங்கல்கள் மற்றும் கூழ்மங்கள் ஆகியவை பலபடித்தானவை ஆகும்.)

27) கீழ்க்கண்டவற்றுள் எது ஒருபடித்தானவை அல்ல?

A) பனிக்கூழ்

B) சர்க்கரை பாகு

C) சல்பர்

D) பால்

(குறிப்பு – ஒருபடித்தான கலவையில் அதன் பகுதிப் பொருட்களை தனித்தனியாக பார்க்க இயலாது. இக்கலவையில் பகுதி பொருட்கள் கலந்து ஒத்த பண்புகளை பெற்றிருக்கும்.எடுத்துக்காட்டாக குழாய் நீர், பால், காற்று, பனிக்கூழ், சர்க்கரைப்பாகு, மை போன்றவை ஒருபடித்தான கலவைகள் ஆகும்.)

28) கீழ்க்கண்டவற்றுள் எது பலபடித்தானக்கலவை அல்ல?

A) உப்புக் கலவை

B) நீர் மற்றும் எண்ணெய் கலவை

C) பால் மற்றும் தானிய கலவை

D) எஃகு

(குறிப்பு – பலபடித்தான கலவையில் அதன் பகுதிப் பொருட்களை தனித்தனியாக பார்க்க இயலும். இக்கலவையின் பகுதி பொருட்கள் சீராக கலந்து இருப்பதும் இல்லை. ஒத்த பண்புகளை பெற்றிருப்பதும் இல்லை.எடுத்துக்காட்டாக மண், அயோடின் மற்றும் உப்பு கலவை, சர்க்கரை மற்றும் மணல் கலவை, நீர் மற்றும் எண்ணெய் கலவை போன்றவை ஆகும்.)

29) பலபடித்தான கலவையை பிரித்தெடுக்கும் முறைகளில் கீழ்கண்டவற்றுள் எது தவறானது?

I. கையால் பொறுக்கி எடுத்தல்

II. தெளிய வைத்து இறுத்தல்

III. பதங்கமாதல்

IV. வண்ணப்பிரிகை முறை

A) I மட்டும் தவறு

B) II மட்டும் தவறு

C) III மட்டும் தவறு

D) IV மட்டும் தவறு

(குறிப்பு – பலபடித்தான கலவைகள் என்பது, திண்மம் மற்றும் திண்மம், கரையாத திடப்பொருள் மற்றும் திரவம், ஒன்றாக கலவாத திரவங்கள் ஆகியவற்றால் ஆன கலவை ஆகும். இவை கையால் பொறுக்கி எடுத்தல், சலித்தல், காற்றால் தூற்றுதல், விழ் படிவதால் மற்றும் தெளிய வைத்து இறுத்தல்போன்ற முறைகளில் பிரித்தெடுக்கப்படுகிறது.)

30) ஒருப்படித்தான கலவையை பிரித்தெடுக்கும் முறைகளில் கீழ்கண்டவற்றுள் எது தவறானது?

I. ஆவியாதல்

II. காய்ச்சி வடித்தல்

III. பின்ன காய்ச்சி வடித்தல்

IV. மைய விலக்கல்

A) I மட்டும் தவறு

B) II மட்டும் தவறு

C) III மட்டும் தவறு

D) IV மட்டும் தவறு

(குறிப்பு – ஒருபடித்தான கலவை என்பது கரையும் திடப்பொருள் மற்றும் திரவம், கலக்கும் பண்புள்ள திரவங்கள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திடப்பொருள்கள் கொண்ட கரைசல்களால் ஆன கலவை ஆகும். இது ஆவியாதல், காய்ச்சி வடித்தல், படிக்கமாக்கல், பின்ன காய்ச்சி வடித்தல், வண்ண பிரிகை முறை ஆகியவற்றின் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது.)

31) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. சில திண்மப் பொருட்களை வெப்பப்படுத்தும் போது அவை திரவ நிலையை அடையாமல் நேரடியாக வாயு நிலைமைக்கு மாற்றமடைகின்றன.

II. ஆவியை குளிர வைக்கும் போது மீண்டும் திண்மநிலைக்கு திரும்புகின்றன. இது பதங்கமாதல் என்று அழைக்கப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – சில திண்மப் பொருட்களை வெப்பப்படுத்தும் போது அவை திரவ நிலையை அடையாமல் நேரடியாக வாயு நிலைமைக்கு மாற்றமடைகின்றன. ஆவியை குளிர வைக்கும் போது மீண்டும் திண்மநிலைக்கு திரும்புகின்றன. இது பதங்கமாதல் என்று அழைக்கப்படுகிறது.)

32) கீழ்கண்டவற்றுள் எது பதங்கமாதல் என்பதற்கு தவறான எடுத்துக்காட்டாகும்?

A) அயோடின்

B) கற்பூரம்

C) அம்மோனியம் குளோரைடு

D) இரும்பு

(குறிப்பு – சில திரும்ப பொருட்களை வெப்பப்படுத்தும் போது அவை திரவ நிலையை அடையாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாற்றமடைகின்றன. மீண்டும் குளிர வைக்கும்போது நிலைக்குத் திரும்புகின்றன. எடுத்துக்காட்டு அயோடின், கற்பூரம், அமோனியம் குளோரைடு போன்றவை ஆகும்.)

33) கழிவறைகளில் காற்று தூய்மையாக்கியாக பயன்படுத்தப்படுவது எது?

A) பினாப்தலின்

B) நாஃப்தலீன்

C) ப்ரொபேலின்

D) மெத்திலீன்

(குறிப்பு – கழிவறைகளில் காற்று தூய்மையாக்கியாக பயன்படுத்தப்படுபவை பதங்கமாதல் என்னும் முறைக்கு உட்பட்டவை ஆகும்.கழிவறைகளில் காற்று தூய்மையாக பயன்படுத்தப்படும் நாப்தலின் எனும் நறுமணத்தை உள்ளடக்கிய உருண்டையானது, பதங்கமாகி வாயுவாக மாறுகிறது. இதனால் கழிவறைகளில் நறுமணம் வீசுகின்றது.)

34) பால் பொருட்களில் உள்ள பாலாடையையும் கொழுப்பினையும் நீக்க பயன்படுத்தும் முறை கீழ்க்கண்டவற்றுள் எது?

A) மைய விலக்கல்

B) எளிய காய்ச்சி வடித்தல்

C) கரைப்பான் சாறு இறக்கல்

D) பதங்கமாதல்

(குறிப்பு – மையவிலக்கு முறையானது திரவத்தில் எளிதில் படியாத மிக சீரான மற்றும் மிகச்சிறிய துகள்களை பிரிக்க பயன்படுகிறது.கலவையானது மையவிலக்கு இயந்திரத்தில் உள்ள மையவிலக்கு குழாயில் எடுத்துக்கொள்ளப்பட்டு மையவிலக்குக்கு உட்படுத்தப்படுகிறது. அவ்வாறு சுழலும்போது குழாயின் அடியில் திடப்பொருள் படிகிறது. மேலே உள்ள தெளிந்த நீர்மம் சாய்த்து வடிகட்டப்படுகிறது.)

35) சலவை எந்திரங்களில் ஈரத்துணியில் இருக்கும் நீர் பிழிந்து வெளியேற்றப்பட பயன்படுத்தும் முறை கீழ்கண்டவற்றுள் எது?

A) மைய விலக்கல்

B) எளிய காய்ச்சி வடித்தல்

C) கரைப்பான் சாறு இறக்கல்

D) பதங்கமாதல்

(குறிப்பு – மையவிலக்கு முறை பால் பொருட்களில் பாலாடையையும், கொழுப்பினையும் நீக்கி பதப்படுத்தப்பட்ட பால் தயாரிக்க பயன்படுகிறது. சலவை இயந்திரங்களில் இந்த தத்துவத்தின் மூலமே ஈரத்துணியில் இருக்கும் நீர் பிழிந்து வெளியேற்றப்படுகிறது.நோய் கண்டறியும் பரிசோதனை கூடங்களில் இரத்திலிருந்து, ரத்த செல்களை பிரித்தெடுக்கவும் இந்த முறை உதவுகிறது)

36) பெட்ரோலிய தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் முறையானது கீழ்கண்டவற்றுள் எது?

A) மைய விலக்கு முறை

B) கரைப்பான் சாறு இறக்கல்

C) எளிய காய்ச்சி வடித்தல்

D) பின்ன காய்ச்சி வடித்தல்

(குறிப்பு – ஒன்றாக கலவாத திரவங்களை கரைப்பான் சாறு இறக்கல் முறைமூலம் பிரிக்க முடியும். இந்த முறையானது ஒரு கரைப்பானில் உள்ள இரண்டு தனித்தனியான திரவங்களின் கரைதிறன் வித்தியாசத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. எடுத்துக்காட்டாக எண்ணெய் மற்றும் நீர் கலவையை பிரிபுனல் மூலம் பிரிக்கலாம். கரைப்பான் சாறு இறக்கல் முறை மருந்தாக மற்றும் பெட்ரோலிய தொழிற்சாலைகளில் பயன்படுகிறது.)

37) வாசனை திரவியங்கள் தயாரித்தலில் பயன்படுத்தப்படும் முறையானது கீழ்க்கண்டவற்றுள் எது?

A) மைய விலக்கு முறை

B) கரைப்பான் சாறு இறக்கல்

C) எளிய காய்ச்சி வடித்தல்

D) பின்ன காய்ச்சி வடித்தல்

(குறிப்பு – கரைப்பான் சாறு இறக்கல் என்பது பன்னெடுங்காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் முறை ஆகும். வாசனை திரவியங்கள் தயாரித்தல் மற்றும் பல்வேறு மூலங்களில் இருந்து சாயங்கள் தயாரித்தலில் இது பயன்படுகிறது.மருந்தாக்க மற்றும் பெட்ரோலிய தொழிற்சாலைகளிலும் இது பயன்படுகிறது.)

38) கீழ்க்கண்டவற்றுள் எது ஆவியாதல் மற்றும் குளிர்வித்தலின் கூட்டாகும்?

A) மைய விலக்கு முறை

B) கரைப்பான் சாறு இறக்கல்

C) எளிய காய்ச்சி வடித்தல்

D) பின்ன காய்ச்சி வடித்தல்

(குறிப்பு – எளிய காய்ச்சி வடித்தல் ஒரு கரைசலில் இருந்து தூய திரவத்தை பெறுவதற்கான முறை ஆகும். இது ஆவியாதல் மற்றும் குளிர்வித்தலின் கூட்டாகும். காய்ச்சி வடித்தல் = ஆவியாதல் + குளிர்வித்தல். இந்த முறையில் திரவத்தை ஆவி ஆக்குவதற்காக கரைசல் வெப்பபடுத்தப்படுகிறது. நீராவியை குளிர்விக்கும் போது தூய திரவம் கிடைக்கிறது.)

39) கடல் நீரிலிருந்து குடிநீர் பெற பயன்படுத்தப்படும் முறை கீழ்க்கண்டவற்றுள் எது?

A) மைய விலக்கு முறை

B) கரைப்பான் சாறு இறக்கல்

C) எளிய காய்ச்சி வடித்தல்

D) பின்ன காய்ச்சி வடித்தல்

(குறிப்பு – எளிய காய்ச்சி வடித்தல் முறையில், திரவத்தை ஆவி ஆக்குவதற்காக கரைசல் வெப்பபடுத்தப்படுகிறது. நீராவியை குளிர்விக்கும் போது தூய திரவம் கிடைக்கிறது. பல நாடுகளில் கடல் நீரிலிருந்து குடிநீர் இந்த முறை மூலம் பெறப்படுகிறது. 25K கொதிநிலை வேறுபாடு உள்ள இரண்டு திரவங்கள் கொண்ட கரைசலை பிரித்து எடுக்க இந்த முறையானது பயன்படுத்தப்படுகிறது.)

40) இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கொதிநிலை வேறுபாடு இல்லாத கரையக்கூடிய திரவங்களை பிரிக்க பயன்படுத்தப்படும் முறை எது?

A) மைய விலக்கு முறை

B) கரைப்பான் சாறு இறக்கல்

C) எளிய காய்ச்சி வடித்தல்

D) பின்ன காய்ச்சி வடித்தல்

(குறிப்பு – இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கொதிநிலை வேறுபாடு இல்லாத கரையக்கூடிய திரவங்களை (கொதிநிலை வேறுபாடு 25K க்கு குறைவாக இருக்கவேண்டும்) பிரிக்க பின்னக் காய்ச்சி வடித்தல் முறை பயன்படுகிறது.)

41) பின்னக் காய்ச்சி வடித்தல் முறை கொண்டு கீழ்க்கண்டவற்றுள் எவை மேற்கொள்ளப்படுகிறது?

I. பெட்ரோலிய பின்னங்களை பிரிக்கவும்

II. காற்றில் இருந்து வாயுக்களை பிரிக்கவும்.

III. மெத்தில் ஆல்கஹால் மற்றும் எதில் ஆல்கஹால் ஆகியவற்றை பிரிக்கவும்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – பெட்ரோலிய வேதி தொழிற்சாலையில் பெட்ரோலிய பின்னங்களை பிரிக்கவும், காற்றிலிருந்து வாயுக்களை பிரிக்கவும், மெத்தில் ஆல்கஹால் மற்றும் எத்தில் ஆல்கஹால் ஆகியவற்றை பிரித்தெடுக்கவும் பின்ன காய்ச்சி வடித்தல் முறை பயன்படுகிறது.)

42) வண்ணப்பிரிகை முறையில் அதிகமாக பயன்படுத்தப்படும் இரு சொற்றொடர்கள் எது?

I. உறிஞ்சுதல்

II. இழுத்தல்

III. பரப்பு கவர்தல்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) III, I மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – வண்ணப்பிரிகை முறையின் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் முக்கியமான இரு சொற்றொடர்கள் ஆவன, உறிஞ்சுதல் மற்றும் பரப்பு கவர்தல் என்பன ஆகும்.)

43) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு பொருள் பெருமளவில் மற்றொரு பொருளால் உட்கவரப்படும் நிகழ்வு உறிஞ்சுதல் எனப்படும்.

II. ஒரு பொருளின் மேற்பரப்பில் வேறொரு பொருளின் துகள்கள் கவரப்படும் நிகழ்வு பரப்புக்கவர்தல் எனப்படும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு பொருள் பெருமளவில் மற்றொரு பொருளால் உட்கவரப்படும் நிகழ்வு உறிஞ்சுதல் எனப்படும். எடுத்துக்காட்டாக நீரில் தோய்க்கப்பட்ட காகிதம் உறிஞ்சியாக செயல்பட்டு நீரை உறிஞ்சுகிறது. ஒரு பொருளின் மேற்பரப்பில் வேறொரு பொருளின் துகள்கள் கவரப்படும் நிகழ்வு பரப்புக்கவர்தல் எனப்படும். எடுத்துக்காட்டாக ஒரு சுண்ணாம்புக் கட்டியை நீல நிற மையில் ஊற வைக்கும்போது, அதன் மேற்பரப்பு நீல நிற மூலக்கூறுகளை கவர்ந்து கொள்கின்றது.)

44) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. வண்ணப்பிரிகை முறை ஒரு பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் ஆகும். ஒரு கலவையில் உள்ள பல்வேறு கூறுகள், ஒரு கரைப்பானில், வெவ்வேறாக கரையும் திறனை பெற்றிருக்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் வண்ணப்பிரிகை முறை கலவைகளை பிரித்து எடுக்க பயன்படுகிறது

II. பல்வேறு வகையான வண்ணபிரிகை முறைகள் உள்ளன.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – வண்ணப்பிரிகை முறை ஒரு பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் ஆகும். ஒரு கலவையில் உள்ள பல்வேறு கூறுகள், ஒரு கரைப்பானில், வெவ்வேறாக கரையும் திறனை பெற்றிருக்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் வண்ணப்பிரிகை முறை கலவைகளை பிரித்து எடுக்க பயன்படுகிறது. பல்வேறு வகையான வண்ணபிரிகை முறைகள் உள்ளன. தாள் வண்ணப்பிரிகை முறை என்பது எளிமையானவகை ஆகும்.)

45) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தூய பொருட்கள் சேர்ந்த ஒருபடித்தான கலவையே கரைசல் ஆகும்.

II. ஒரு கரைசலில் எந்த பொருள் குறைந்த அளவு உள்ளதோ அது கரைபொருள் எனவும்,எந்த பொருள் அதிக அளவு நிறையில் உள்ளதோ அது கரைப்பான் எனவும் அழைக்கப்படும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தூய பொருட்கள் சேர்ந்த ஒருபடித்தான கலவையே கரைசல் ஆகும். ஒரு கரைசலில் எந்த பொருள் குறைந்த அளவு உள்ளதோ அது கரைபொருள் எனவும்,எந்த பொருள் அதிக அளவு நிறையில் உள்ளதோ அது கரைப்பான் எனவும் அழைக்கப்படும்.

கரைபொருள் + கரைப்பான் = கரைசல்,

என கரைசலை குறிப்பிடலாம்)

46) கரைசல்கள் எத்தனை வகைப்படும்?

A) இரண்டு

B) மூன்று

C) நான்கு

D) ஐந்து

(குறிப்பு – பொருள்களில் உள்ள துகள்களின் அளவை பொருத்து கரைசல்கள் மூன்று வகைப்படும். அவை தொங்கல், கூழ்மக்கரைசல் மற்றும் உண்மைக்கரைசல் என்பன ஆகும்.)

47) தொங்கல் என்னும் கரைசலின் பண்புகளில் தவறானது எது?

A) தொங்கல் கரைசலை வடிகட்டி பிரித்தல் இயலும்.

B) டின்டால் விளைவு தொங்கலில் காண்பிக்கிறது.

C) பிரௌனியன் இயக்கம் தொங்கலில் காண்பிக்க முடியாது.

D) தொங்கல் என்பவை பலபடித்தானவை

(குறிப்பு – தொங்கல் எனும் கரைசலில் துகளின் உருவ அளவு >100 nm ஆகும். இதில் வடிகட்டி பிரித்தல் செய்ய முடியும். தொங்கல் கரைசலில் துகள்கள் தானாகவே படியும். தொங்கல் கரைசலில் டிண்டால் விளைவு நிகழும். மேலும் பிரௌனியன் இயக்கமும் காண்பிக்க முடியும்.)

48) கூழ்மக்கரைசல் என்னும் கரைசலின் பண்புகளில் தவறானது எது?

A) கூழ்ம கரைசலை வடிகட்டி பிரித்தல் இயலும்.

B) டின்டால் விளைவு கூழ்மக்கரைசலில் காண்பிக்கிறது.

C) பிரௌனியன் இயக்கம் கூழ்மக்கரைசலில் காண்பிக்கிறது.

D) கூழ்மக்கரைசல் என்பவை பலபடித்தானவை.

(குறிப்பு – கூழ்மக்கரைசல் என்பதன் துகளின் உருவ அளவு 1 இல் இருந்து 100 nm ஆகும். இதை வடிகட்டி பிரித்தல் இயலாது. துகள்கள் படிதல் என்பது மைய விலக்கம் செய்தால் கூழ்மகரைசலில் படியும். கூழ்மகரைசல் டிண்டால் விளைவு காண்பிக்கும். கூழ்மகரைசலில் துகள்கள் மெதுவாக விரவுகிறது.)

49) கீழ்க்காணும் பண்புகளில் எது உண்மை கரைசலின் பண்பு அல்ல?

A) உண்மை கரைசல் என்பதன் துகளின் அளவு < 100 nm ஆகும்.

B) உண்மை கரைசலில் துகள்கள் படியாது.

C) உண்மை கரைசல் டிண்டால் விளைவு காண்பிக்காது.

D) உண்மை கரைசல் என்பது பலப்படித்தானவை ஆகும்.

(குறிப்பு – உண்மை கரைசல் என்பதின் துகளின் உருவ அளவு < 100 nm ஆகும். உண்மை கரைசலில் வடிகட்டி பிரித்தல் இயலாது. உண்மை கரைசலில் துகள்கள் படியாது. மேலும் உண்மை கரைசல் டிண்டால் விளைவு காண்பிப்பதில்லை. உண்மை கரைசல் பிரௌனியன் இயக்கம் காண்பிக்கும் அல்லது காண்பிக்காது எனும் இரண்டு நிகழ்வுகளும் உண்டு. மேலும் உண்மை கரைசல் என்பது ஒரு படித்தானவை ஆகும்.)

50) கீழ்கண்டவற்றுள் எது தொங்கல் எனப்படும் கரைசலுக்கான எடுத்துக்காட்டு ஆகும்?

A) ஸ்டார்ச் மற்றும் நீர் கலவை

B) கோதுமை மாவு மற்றும் நீர் கலவை

C) சர்க்கரை கரைசல்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – கோதுமை மாவை நீரில் கலக்கும் போது தொடக்கத்தில் கலங்கலான கலவை உருவாகிறது. சிறிது நேரத்திற்குப் பின் அதன் நுண்ணிய துகள்கள் அடியில்படிகின்றன. இந்தவகையான கரைசல் தொங்கல் என அழைக்கப்படுகிறது. சர்க்கரை கரைசலை உற்று நோக்கினால் அது தெளிவான கரைசலாக இருப்பதை காண முடியும். மேலும் அக்கரைசலின் துகள்கள் படிவதில்லை. எனவே இந்த வகையான கரைசல் உண்மை கரைசல் எனப்படுகிறது.)

51) கீழ்கண்டவற்றுள் எதில் துகள்கள் விரவுதல் மிகவேகமாக நிகழ்கிறது?

A) தொங்கல் கரைசல்

B) கூழ்மகரைசல்

C) உண்மை கரைசல்

D) இம்மூன்றிலும்

(குறிப்பு – தொங்கல் என்பதில் துகள்கள் விரவுவதில்லை. கூழ்மக்கரைசலில் துகள்கள் மெதுவாக விரவுகிறது. உண்மை கரைசலில் துகள்கள் மிக வேகமாக விரவுகிறது.)

52) கூழ்மக் கரைசல்களில் மொத்தம் எத்தனை வகையான வேறுபட்ட கூடுகைகள் சாத்தியம் ஆகும்?

A) ஆறு

B) ஏழு

C) எட்டு

D) ஒன்பது

(குறிப்பு – கூழ்மக் கரைசல் என்பது பரவிய நிலைமை மற்றும் பரவல் ஊடகம் கொண்ட பலப்படித்தான அமைப்பாகும். பரவிய நிலைமை அல்லது பரவல் ஊடகம் ஆகியவை திண்மம், திரவம் அல்லது வாயுவாக இருக்கலாம். மொத்தம் எட்டு வகையான வேறுபட்ட கூடுகைகள் இதில் சாத்தியமாகும்.)

53) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. கூழ்மக் கரைசல்களை செறிவுமிக்க நுண்ணோக்கியில் பார்க்கும்போது, கூழ்மதுகள்கள் இங்குமங்குமாக ஒழுங்கற்ற நிலையில் சீராகவும் வேகமாகவும் நகர்ந்து கொண்டிருப்பதை காண முடியும். இந்த நகர்வு பிரௌனியன் நகர்வு என அழைக்கப்படுகிறது.

II. பிரவுனியன் இயக்கத்திற்கு காரணமாக அமைவது பரவல் ஊடகத்தில் உள்ள மூலக்கூறுகளுடன் பரவிய நிலைமை மூலக்கூறுகள் சமநிலையற்ற முறையில் மோதிக் கொள்வதே ஆகும்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – கூழ்மக் கரைசல்களை செறிவுமிக்க நுண்ணோக்கியில் பார்க்கும்போது, கூழ்மதுகள்கள் இங்குமங்குமாக ஒழுங்கற்ற நிலையில் சீராகவும் வேகமாகவும் நகர்ந்து கொண்டிருப்பதை காண முடியும். இந்த நகர்வு பிரௌனியன் நகர்வு என அழைக்கப்படுகிறது. பிரவுனியன் இயக்கத்திற்கு காரணமாக அமைவது பரவல் ஊடகத்தில் உள்ள மூலக்கூறுகளுடன் பரவிய நிலைமை மூலக்கூறுகள் சமநிலையற்ற முறையில் மோதிக் கொள்வதே ஆகும்)

54) டிண்டால் விளைவு கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?

A) 1866 ஆம் ஆண்டு

B) 1867 ஆம் ஆண்டு

C) 1868 ஆம் ஆண்டு

D) 1869 ஆம் ஆண்டு

(குறிப்பு – ஒரு வலுவான ஒளிக்கற்றையை கூழ்மக் கரைசலின் வழியே செலுத்தும்போது, ஒளிக்கற்றையின் பாதையை பார்க்க முடியும் என்பதை டிண்டால் என்பவர் 1869 ஆம் ஆண்டு கண்டறிந்தார். இந்த நிகழ்ச்சி டிண்டால் விளைவு என்றும் அவ்வாறு ஒளிரும் பாதை, டிண்டால் குவிகை வடிவு என்றும் அழைக்கப்படுகிறது.)

55) டிண்டால் விளைவு கீழ்காணும் எந்த கரைசலில் உருவாகாது?

A) தொங்கல்

B) கூழ்மக்கரைசல்

C) உண்மைக்கரைசல்

D) இம்மூன்றிலும்

(குறிப்பு – ஒரு வலுவான ஒளிக்கற்றையை கூழ்மக் கரைசலின் வழியே செலுத்தும்போது, ஒளிக்கற்றையின் பாதையை பார்க்க முடியும் என்பதை டிண்டால் என்பவர் 1869 ஆம் ஆண்டு கண்டறிந்தார். இந்த நிகழ்ச்சி டிண்டால் விளைவு என்று அழைக்கப்படுகிறது. இது உண்மைக் கரைசலில் உண்டாகாது.)

56) பரவிய நிலைமை மற்றும் பரவல் ஊடகம் இணைவதால் தோன்றும் பெயர்களை பொருத்துக.

I. வாயு + திண்மம் – a) பால்மம்

II. வாயு + திரவம் – b) திண்ம நுரை

III. திரவம் + திரவம் – c) தூசிபடலம்

IV. திண்மம் + வாயு – d) நுரை

A) I-b, II-d, III-a, IV-c

B) I-a, II-d, III-c, IV-b

C) I-b, II-a, III-d, IV-c

D) I-a, II-d, III-b, IV-c

(குறிப்பு – பரவிய நிலைமை மற்றும் பரவல் ஊடகம் ஆகியவை திண்மம் மற்றும் திண்மமாக இருந்தால் அதன் பெயர் திண்ம கரைசல் என்பதாகும். திண்மம் மற்றும் திரவம் என்றால் கரைசல் என்றும் திண்மம் மற்றும் வாயு என்றால் தூடிப்படலம் என்பதாகும். திரவம் மற்றும் வாயு ஆகியவை இணைந்தால் தூசிபடலம் ஆகும்.)

57) கீழ்க்கண்டவற்றுள் எது திண்மகரைசலுக்கான எடுத்துக்காட்டு அல்ல?

A) உலோகக்கலவை

B) விலை உயர்ந்த கற்கள்

C) வெண்ணெய்

D) வண்ணக்கண்ணாடி

(குறிப்பு – பரவிய நிலைமை மற்றும் பரவல் ஊடகம் ஆகிய இரண்டும் திண்மமாக இருந்தால், அது திண்மக்கரைசல் எனப்படும். உலோககலவை, விலை உயர்ந்த கற்கள் மற்றும் வண்ண கண்ணாடி ஆகியவை இதற்கான எடுத்துக்காட்டாகும்.)

58) கீழ்கண்டவற்றுள் எது கூழ் (திரவம் + திண்மம்) என்பதன் எடுத்துக்காட்டு அல்ல?

A) தயிர்

B) பால்

C) பாலாடைக்கட்டி

D) ஜெல்லி

(குறிப்பு – பரவிய நிலைமை திரவமாகவும், பரவல் ஊடகம் திண்மமாகவும் இருப்பின், அவற்றின் பெயர் கூழ் ஆகும். கூழ் என்பதன் எடுத்துக்காட்டு தயிர், பாலாடைக்கட்டி, ஜெல்லி போன்றவை ஆகும்.)

59) கீழ்க்கண்டவற்றுள் திண்மநுரைக்காண எடுத்துக்காட்டாகும்?

I. கேக்

II. ரொட்டி

III. பாலாடைக்கட்டி

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – பரவிய நிலைமை வாயுவாகவும், பரவல் ஊடகம் திண்மமாகவும் இருப்பின், அதன் பெயர் திண்மநுரை ஆகும். கேக், ரொட்டி போன்றவை திண்ம நுரைக்கான எடுத்துக்காட்டு ஆகும்.)

60) கரைசல் என்பதற்கான எடுத்துக்காட்டு எது?

I. வர்ணம்

II. மை

III. பனி

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – பரவிய நிலைமை திண்மமாகவும், பரவல் ஊடகம் திரவமாகவும் இருப்பின் அது கரைசல் என அழைக்கப்படுகிறது. வர்ணம், மை, முட்டையின் வெள்ளைப் பகுதி ஆகியவை கரைசல் என்பதற்கான எடுத்துக்காட்டு ஆகும்.

61) ஒன்றோடு ஒன்று கலவாத இரண்டு திரவங்களை சேர்ப்பதனால் உருவாகும் ஒரு சிறப்புக்கலவையின் பெயர் என்ன?

A) பால்மம்

B) திண்ம திரவம்

C) கூழ்மம்

D) உண்மை கரைசல்

(குறிப்பு – பால்மம் என்பது ஒன்றுடன் ஒன்று கலவாத இரண்டு திரவங்களை சேர்ப்பதனால் உருவாகும் ஒரு சிறப்பு வகையான கலவை ஆகும். இது இயல்பாகவே கலப்பதில்லை.)

62) பால்மம் என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்ட சொல்லாகும்?

A) கிரேக்கம்

B) லத்தீன்

C) அரேபிய

D) பிரெஞ்சு

(குறிப்பு – பால்மம் என்பது லத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும். பால்மம் என்பதின் அர்த்தம் பாலாக்கல் (பால் என்பது கொழுப்பும், நீரும் கலந்த ஒரு பால்மத்திற்கு எடுத்துக்காட்டாகும்) எனப்படும். திரவக் கலவை பால்மமாக மாறக்கூடிய நிகழ்வு பால்மமாக்கல் என அழைக்கப்படுகிறது.)

63) கீழ்க்கண்டவற்றுள் எது பால்மத்திற்கான பொதுவான எடுத்துக்காட்டு ஆகும்?

I. மஞ்சள் கரு

II. இருமல் மருந்து

III. வெண்ணெய்

IV. பூச்சிக்கொல்லி மருந்து

A) I, II, III மட்டும்

B) II, III, IV மட்டும்

C) I, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – திரவக் கலவை பால்மமாக மாறக்கூடிய நிகழ்வு பால்மமாக்கல் என அழைக்கப்படுகிறது. பால், வெண்ணெய், பால் குழவி, முட்டையின் மஞ்சள் கரு, வர்ணம், இருமல் மருந்து, முகப்பூச்சு, பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவை பால்மத்திற்கான சில பொதுவான எடுத்துக்காட்டுகளாகும்.)

64) பால்மங்கள் கீழ்க்காணும் எந்த தொழிற்சாலைகளில் அதிக அளவில் பயன்படுகின்றன?

I. உணவு பதப்படுத்தும் முறை

II. மருந்துகள் தயாரித்தல்

III. உலோகவியல்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – இரண்டு திரவங்கள் கலந்து வெவ்வேறு வகையான பால்மங்களை உருவாக்குகின்றன.எடுத்துக்காட்டாக எண்ணெய் மற்றும் நீர் இரண்டும் கலந்து நீரில்எண்ணெய் என்ற பால்மம் உருவாகிறது. (எ.கா – பால்குழவி). இங்கு எண்ணெய் துளிகள் நீரில் பரவியுள்ளன அல்லது எண்ணெயில் நீர் என்ற பால்மத்தை உருவாக்குகின்றன. (எ.கா – வெண்ணெய்). உணவு பதப்படுத்தும் முறை, மருந்துகள், உலோகவியல் மற்றும் பல முக்கியமான தொழிற்சாலைகளில் பால்மங்களின் பயன்பாடுகள் மிகுந்த அளவில் காணப்படுகின்றன.)

9th Science Lesson 11 Questions in Tamil

11] அணு அமைப்பு

1) உலக பிரசித்தி பெற்ற தங்கத்தகடு அணு ஆய்வு சோதனையை நிகழ்த்தியவர்?

A) டால்டன்

B) ஜே.ஜே.தாம்சன்

C) ரூதர்போர்டு

D) கோல்டுஸ்டீன்

விளக்கம்: தங்கத் தகட்டின் மீது மிகச் சிறிய நேர் மின் துகள்களான ஆல்பா கதிர்களை விழச்செய்து தன்னுடைய உலக பிரசித்தி பெற்ற தங்கத்தகடு அணு ஆய்வு சோதனையை நிகழ்த்தினார் ருதர்போர்டு.

2) ரூதர்போர்டின் அணுக் கொள்கை______________அமைப்போடு ஒத்துள்ளது.

A) தர்பூசணி

B) ஆரஞ்சுபழம்

C) சூரிய குடும்பம்

D) ஆப்பிள்

விளக்கம்: ரூதர்போர்டின் அணுக் கொள்கை சூரிய குடும்பத்தின் அமைப்போடு ஒத்ததாக உள்ளது. சூரிய குடும்பத்தின் மையத்திலிருக்கும் சூரியனைச் சுற்றி அதன் கோள்கள் சுழல்வதைப்போல ஒரு அணுவின் மையத்திலிருக்கும் உட்கருவினைச் சுற்றியுள்ள ஆர்பிட்டுகளில் அதன் எலக்ட்ரான்கள் சுழல்கின்றன.

3) வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் எலக்ட்ரான் தொடர்ந்து ஆற்றலை இழக்கவேண்டும் என்று கூறும் கொள்கை?

A) வெப்பவிளைவு கொள்கை

B) ஆற்றல் இழப்புக் கொள்கை

C) மின்காந்த கொள்கை

D) அணுக்கொள்கை

விளக்கம்: மின்காந்தக் கொள்கைப்படி, வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் எலக்ட்ரான் தொடர்ந்து ஆற்றலை இழக்கவேண்டும். இவ்வாறு ஆற்றலை இழப்பதால், எலக்ட்ரான் அணுக்கருவைச் சுற்றிவரும் பாதை சுருங்கி இறுதியில் அணுக்கருவினுள் விழ வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் அணு அதன் நிலைப்புத் தன்மையை இழக்க நேரிடும்.

4) எந்த ஆண்டு அணுவின் உட்கருவில் நடுநிலைத்தன்மை உடைய துகள் ஒன்று உள்ளது என்று ரூதர்போர்டு தீர்மானித்தார்?

A) 1911

B) 1913

C) 1915

D) 1920

விளக்கம்: 1920 ஆம் ஆண்டு அணுவின் உட்கருவில் நடுநிலைத்தன்மை உடைய துகள் ஒன்று உள்ளது என ரூதர்போர்டு தீர்மானித்தார்.

5) 1913-ல் அணுக்கொள்கையை வெளியிட்டவர்?

A) டால்டன்

B) ஜே.ஜே.தாம்சன்

C) நீல்ஸ்போர்

D) ரூதர்போர்டு

விளக்கம்: 1913-ஆம் ஆண்டு நீல்ஸ்போர் என்ற இயற்பியலாளர், அணுக்கொள்கையை வெளியிட்டார்.

ரூதர்போர்டு 1911-ல் அணுக்கொள்கையை வெளியிட்டார்.

6) தவறாக பொருந்தியுள்ளதை தேர்க.

A) எலக்ட்ரான் – 9.1X10-28

B) புரோட்டான் – 1.6X10-24

C) நியூட்ரான் – 1.6X10-24

D) எதுவுமில்லை

விளக்கம்: அணு பல்வேறு அடிப்படைத் துகள்களினால் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனினும், எலக்ட்ரான், புரோட்டான், நியூட்டரான் ஆகிய மூன்று அடிப்படைத் துகள்களும் அணுவின் அமைப்பினைப் புரிந்து கொள்வதில் பெரும் பங்காற்றுகின்றன. அவற்றின் நிறைகள்.

எலக்ட்ரான் – 9.1X10-28

புரோட்டான் – 1.6X10-24

நியூட்ரான் – 1.6X10-24

7) ஒரே வட்டப்பாதையில் எலக்ட்ரான் சுற்றி வருகையில் ஆற்றலை இழப்பதோ அல்லது ஏற்பதோ இல்லை என்று கூறியவர்?

A) டால்டன்

B) ஜே.ஜே.தாம்சன்

C) ரூதர்போர்டு

D) நீல்ஸ்போர்

விளக்கம்: 1913ல் அணுக்கொள்கையை வெளியிட்ட நீல்ஸ்போர், ஒரே வட்டப்பாதையில் எலக்ட்ரான் சுற்றி வருகையில் ஆற்றலை இழப்பதோ அல்லது ஏற்பதோ இல்லை என்று கண்டறிந்தார்.

8) கூற்று: நியூட்ரான்கள் ஒரு மின்சுமையற்ற நடுநிலையான துகளாகும்.

காரணம்: இது மின் புலத்தால் விலக்கமடைவதில்லை. ஆனால் காந்தப்புலத்தினால் விலக்கமடையும்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: நியூட்ரான்கள் ஒரு மின்சுமையற்ற நடுநிலையான துகளாகும்.இது மின் புலம் அல்லது காந்தப்புலத்தினால் விலக்கமடைவதில்லை.

9) ஜேம்ஸ் சாட்விக் எதன் உட்கருவை ஆல்பா கதிரால் தாக்கும் போது நியூட்ரானைக் கண்டறிந்தார்?

A) போரான்

B) பெரிலியம்

C) காப்பர்

D) பொட்டாசியம்

விளக்கம்: ஜேம்ஸ் சாட்விக் என்னும் அறிவியலாளர் பெரிலியம் உட்கருவை ஆல்ஃபா கதிரால் தாக்கும்போது புரோட்டான்களுக்கு இணையான நிறை உள்ள துகள்கள் வெளியேறுவதைக் கண்டறிந்தார். இதுவே நியூட்ரான் என்று அழைக்கப்பட்டது.

10) ஜேம்ஸ் சாட்விக் யாருடைய மாணவர்?

A) ரூதர்போர்டு

B) ஜே.ஜே. தாம்சன்

C) டால்டன்

D) கோல்டுஸ்டீன்

விளக்கம்: ஜேம்ஸ் சாட்விக் நியூட்ரானைக் கண்டறிந்தார். இவர் ரூதர்போர்டின் மாணவர்.

11) சரியான ஒன்றை தேர்வு செய்க.

A) பெரிலியம் + ஆல்ஃபா கதிர்->ஹைட்ரஜன்+நியூட்ரான்

B) பெரிலியம்+ஆல்ஃபா கதிர்->கார்பன்+நியூட்ரான்

C) பேரியம்+ஆல்ஃபா கதிர்->ஹைட்ரஜன்+நியூட்ரான்

D) பேரியம்+ஆல்ஃபா கதிர்->கார்பன்+நியூட்ரான்

விளக்கம்: 1932 இல் ஜேம்ஸ் சாட்விக் என்னும் அறிவியலாளர் பெரிலியம் உட்கருவை ஆல்ஃபா கதிரால் தாக்கும்போது புரோட்டான்களுக்கு இணையான நிறை உள்ள துகள்கள் வெளியேறுவதைக் கண்டார். இதுவே நியூட்ரான் என்று அழைக்கப்பட்டது. இதன் சமன்பாடு,

பெரிலியம்+ஆல்ஃபா கதிர்->கார்பன்+நியூட்ரான்

12) ஒரு அணுவில் எத்தனை கட்டமைப்புப் பாகங்கள் உள்ளன?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: ஒரு அணுவில் இரண்டு கட்டமைப்பு பாகங்கள் உள்ளன. அவை,

1. உட்கரு

2. வெற்றிட இடைவெளிகளிலுள்ள கற்பனைப் பாதைகளான ஆர்பிட்டுகள்.

13) பொருத்துக.

அ. எலக்ட்ரான் – 1. 0n1

ஆ. புரோட்டான் – 2. 1H1

இ. நியூட்ரான் – 3. -1e0

A) 1, 2, 3

B) 3, 2, 1

C) 3, 1, 2

D) 2, 3, 1

விளக்கம்: எலக்ட்ரான் – -1e0

புரோட்டான் – 1H1

நியூட்ரான் – 0n1

14) எந்த ஆண்டு நியூட்ரான் துகள் கண்டறியப்பட்டுள்ளது?

A) 1913

B) 1920

C) 1930

D) 1932

விளக்கம்: 1932இல் ஜேம்ஸ் சாட்விக் பெரிலியம் உட்கருவை ஆல்ஃபா கதிரால் தாக்கும் போது நியூட்ரான் கண்டறியப்பட்டது.

15) நியூக்ளியஸ் என்பது கீழ்க்கண்ட எதைக் குறிக்கும்?

A) புரோட்டான்+நியூட்ரான்

B) புரோட்டான்+எலக்ட்ரான்

C) எலக்ட்ரான்+நியூட்ரான்

D) புரோட்டான்+நியூட்ரான்+எலக்ட்ரான்

விளக்கம்: நியூக்ளியஸ் என்பது ஒரு அணுவின் உட்கருவில் புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் இணைந்தது ஆகும்.

16) ஓர்அணு எவ்வகைத் தனிமம் என்பதை நிர்ணயிப்பது?

A) நிறை எண்

B) ஐசோடோப்பு

C) ஐசோபார்

D) அணு எண்

விளக்கம்: அணுவின் உட்கருவிலிருக்கும் புரோட்டான்களின் எண்ணிக்கையே, அது எவ்வகைத் தனிமம் என்பதனை நிர்ணயிக்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த எண் அணு எண் எனப்படுகிறது.

17) நியூட்ரான்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன?

A) 0n1

B) 1n0

C) 1n1

D) 0n0

விளக்கம்: நியூட்ரான்கள் 0n1 என குறிக்கப்படுகின்றன. இதற்கு மின்சுமை ஏதும் இல்லை. இதனைக் கண்டறிந்தவர் ஜேம்ஸ் சாட்விக்.

18) பொருத்துக.

அணு புரோட்டான்களின் எண்ணிக்கை

அ. ஹைட்ரஜன் – 1. 79

ஆ. ஹீலியம் – 2. 1

இ. தங்கம் – 3. 2

A) 3, 2, 1

B) 2, 3, 1

C) 1, 2, 3

D) 3, 1, 2

விளக்கம்: ஹைட்ரஜன் – 1

ஹீலியம் – 2

தங்கம் – 79

19) ரூதர்போர்டு எந்த ஆண்டு அணுக்கருவை கண்டறிய சோதனை நிகழ்த்தினார்?

A) 1911

B) 1913

C) 1912

D) 1915

விளக்கம்: 1911 ஆம் ஆண்டு, நியூசிலாந்து நாட்டின் அறிவியலாளர் ரூதர்போர்டு, ஒரு மெல்லிய தங்கத்தகட்டின் மீது சிறிய நேர் மின் துகள்களான ஆல்பா கதிர்களை விழச்செய்து தன்னுடைய உலக பிரசித்தி பெற்ற தங்கத்தகடு அணு ஆய்வு சோதனையை நிகழ்த்தினார்.

20) கூற்றுகளை ஆராய்க.

A) ஒரு அணுவின் மொத்த நிறையை நிர்ணயிப்பது நியூட்ரான்கள்

B) ஒரு அணுவின் மொத்த நிறையை நிர்ணயிப்பது புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்

C) ஒரு அணுவின் மொத்த நிறையை நிர்ணயிப்பது நியூட்ரான் மற்றும் புரோட்டான்

D) ஒரு அணுவின் மொத்த நிறையை நிர்ணயிப்பபது புரோட்டான், நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான்

விளக்கம்: ஒரு அணுவின் மொத்த நிறையை நிர்ணயிப்பது நியூட்ரான் மற்றும் புரோட்டான். இந்த நிறையை ஒப்பிடும்போது எலக்ட்ரானின் நிறை புறக்கணிக்கத்தக்கதாகும்.

21) ஒரு தனிமத்திலுள்ள அணுவின் நிறை எண் மற்றும் அணு எண்களின் வேறுபாடு, அத்தனிமத்தின் அணுவிலுள்ள————————ன் எண்ணிக்கையை வழங்குகிறது?

A) எலக்ட்ரான்

B) நியூட்ரான்

C) புரோட்டான்

D) நியூக்ளியான்

விளக்கம்: ஒரு தனிமத்திலுள்ள அணுவின் நிறை எண் மற்றும் அணு எண்களின் வேறுபாடு, அத்தனிமத்தின் அணுவிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கையை வழங்குகிறது

நியூட்ரான்களின் எண்ணிக்கை = நிறை எண் – அணுஎண்

22) ஒரு ஆற்றல் மட்டத்திலிருக்கும் எலக்ட்ரான் உயர் அல்லது குறைந்த ஆற்றல் மட்டத்திற்கு நகரும்போது ஆற்றலை ஏற்கவோ அல்லது இழக்கவோ செய்யும் என்பது யாருடைய அணுக்கொள்கை?

A) டால்டன்

B) ஜே.ஜே.தாம்சன்

C) ரூதர்போர்டு

D) நீல்ஸ்போர்

விளக்கம்: 1913ல் அணுவின் நிலைப்புத்தன்மை பற்றி அணுக்கொள்கையை வெளியிட்டார் நீல்ஸ்போர். ஒரு ஆற்றல் மட்டத்திலிருக்கும் எலக்ட்ரான் உயர் அல்லது குறைந்த ஆற்றல் மட்டத்திற்கு நகரும்போது ஆற்றலை ஏற்கவோ அல்லது இழக்கவோ செய்யும் என்று அவரே கண்டறிந்தார்.

23) கூற்று: 1913-ஆம் நீல்ஸ்போர் அணுக்கொள்கையை வெளியிட்டார்

காரணம்: அணுவின் நிலைப்புத் தன்மையை நியாப்படுத்தினார்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: 1913ஆம் ஆண்டில், டென்மார்க் நாட்டைச் சேர்ந்த நீல்ஸ்போர் எனும் இயற்பியலாளர், அணுவின் நிலைப்புத் தன்மையை நியாயப்படுத்துவதற்காக புதிய அணுக்கொள்கையினை உருவாக்கினார்.

24) கூற்றுகளை ஆராய்க.

1. 1930ல் ஜேம்ஸ் சாட்விக் என்னும் அறிவியலார் நியூட்ரானைக் கண்டறிந்தார்

2. இவர் பேரியத்தின் உட்கருவை ஆல்ஃபா கதிரால் தாக்கும் போது நியூட்ரானைக் கண்டறிந்தார்.

3. நியூட்ரானுக்கு மின்சுமை உண்டு

4. நியூட்ரான் 1n0 என குறிக்கப்படுகின்றன.

A) 1, 2 சரி

B) 3, 4 சரி

C) அனைத்தும் தவறு

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. 1932ல் ஜேம்ஸ் சாட்விக் என்னும் அறிவியலார் நியூட்ரானைக் கண்டறிந்தார்

2. இவர் பெரிலியத்தின் உட்கருவவை ஆல்ஃபா கதிரால் தாக்கும் போது நியூட்ரானைக் கண்டறிந்தார்.

3. நியூட்ரானுக்கு மின்சுமை இல்லை

4. நியூட்ரான் 1n0 என குறிக்கப்படுகின்றன.

25) ஆர்பிட் என்பது கீழ்க்கண்ட எதைக்குறிக்கும்?

A) நியூட்ரான்கள் உட்கருவினைச் சுற்றி வரும் வட்டப்பாதை

B) புரோட்டான்கள் உட்கருவினைச் சுற்றி வரும் வட்டப்பாதை

C) எலக்ட்ரான்கள் உட்கருவினைச் சுற்றி வரும் வட்டப்பாதை

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: ஆர்பிட் அல்லது ஆற்றல் மட்டங்கள் எனப்படுவது எலக்ட்ரான்கள் உட்கருவினைச் சுற்றி வரும் வட்டப்பாதை ஆகும். இது K, L, M, N என அழைக்கப்படுகிறது.

26) நியூக்ளியான் எண் என்பது?

A) புரோட்டான்+நியூட்ரான் மொத்த நிறை

B) புரோட்டான்+எலக்ட்ரான் மொத்த நிறை

C) எலக்ட்ரான்+நியூட்ரான் மொத்த நிறை

D) புரோட்டான்+நியூட்ரான்+எலக்ட்ரான் மொத்த நிறை

விளக்கம்: ஒரு அணுவின் மொத்த நிறை என்பது புரோட்டான் மற்றும் நியூட்ரானின் மொத்த நிறையாகும். எலக்ட்ரானின் நிறை புறக்கணிக்கத்தக்கதாகும். புரோட்டான் மற்றும் நியூட்ரான் இணைந்தது நியூக்ளியான் என்பர். எனவே இவற்றின் எடை நியூக்ளியான் எண் எனப்படும்

27) அணு எண்ணின் மற்றொரு பெயர்?

A) நியூட்ரான் எண்

B) எலக்ட்ரான் எண்

C) புரோட்டான் எண்

D) ஐசோபார்

விளக்கம்: அணு எண் என்பது அந்த அணுவின் உட்கருவிலிருக்கும் புரோட்டான்களின் எண்ணிக்கையே ஆகும். எனவே அணு எண்ணின் மற்றொரு பெயர் புரோட்டான் எண் ஆகும்.

28) நிறை எண்————-என்ற ஆங்கில எழுத்தாலும், அணு எண்——————என்ற ஆங்கில எழுத்தாலும் குறிப்பிடப்படுகிறது?

A) A, Z

B) Z, A

C) N, Z

D) A, Z

விளக்கம்: நியூட்ரான் எண்ணிக்கை – n

அணு எண் – Z

நிறை எண் – A

29) நீல்ஸ்போரின் அணுக்கொள்கை பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. ஓர் அணுவில் எலக்ட்ரான்கள் நிலையான வட்டப்பாதையில் அணுக்கருவைச் சுற்றி வருகின்றன. இவ்வட்டப் பாதைகள் ஆர்பிட்டுகள் அல்லது ஆற்றல் மட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.

2. ஒரே வட்டப்பாதையில் எலக்ட்ரான்கள் சுற்றி வருகையில் ஆற்றலை இழப்பதோ அல்லது ஏற்பதோ இல்லை.

3. ஒரு ஆற்றல் மட்டத்திலிருக்கும் எலக்ட்ரான் உயர் அல்லது குறைந்த ஆற்றல் மட்டத்திற்கு நகரும்போது ஆற்றலை ஏற்கவோ அல்லது இழக்கவோ செய்யும்.

4. இவ்வட்டப்பாதைகள் 1, 2, 3, 4 அல்லது k, l, m, n எனப் பெயரிடப்படுகின்றன.

A) 1, 2 சரி

B) 1, 3 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. ஓர் அணுவில் எலக்ட்ரான்கள் நிலையான வட்டப்பாதையில் அணுக்கருவைச் சுற்றி வருகின்றன. இவ்வட்டப் பாதைகள் ஆர்பிட்டுகள் அல்லது ஆற்றல் மட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.

2. ஒரே வட்டப்பாதையில் எலக்ட்ரான்கள் சுற்றி வருகையில் ஆற்றலை இழப்பதோ அல்லது ஏற்பதோ இல்லை.

3. ஒரு ஆற்றல் மட்டத்திலிருக்கும் எலக்ட்ரான் உயர் அல்லது குறைந்த ஆற்றல் மட்டத்திற்கு நகரும்போது ஆற்றலை ஏற்கவோ அல்லது இழக்கவோ செய்யும்.

4. இவ்வட்டப்பாதைகள் 1, 2, 3, 4 அல்லது K, L, M, N எனப் பெயரிடப்படுகின்றன

30) அணுவில் உள்ள பிற அடிப்படைத் துகள்களில் பொருந்தாதது எது?

A) மெசான்கள்

B) நியூட்ரியோன்கள்

C) ஆன்டி நியூட்ரினோக்கள்

D) பாசிட்ரான்கள்

விளக்கம்: அணுவின் அடிப்படைத் துகள்களான புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள் நீங்கலாக, அணுவின் உட்கருவில் உள்ள பிற அடிப்படைத் துகள்களாவன:

1. மெசான்கள்

2. நியூட்ரினோக்கள்

3. ஆன்டி நியூட்ரினோக்கள்

4. பாசிட்ரான்கள்

31) ரூதர்போர்டு அணுக்கருவை கண்டறிய பயன்படுத்திய கதிர்?

A) ஆல்பா கதிர்

B) பீட்டா கதிர்

C) காமா கதிர்

D) எக்ஸ் கதிர்

விளக்கம்: 1911 ஆம் ஆண்டு, நியூசிலாந்து நாட்டின் அறிவியலாளர் ரூதர்போர்டு, ஒரு மெல்லிய தங்கத்தகட்டின் மீது சிறிய நேர் மின் துகள்களான ஆல்பா கதிர்களை விழச்செய்து தன்னுடைய உலக பிரசித்தி பெற்ற தங்கத்தகடு அணு ஆய்வு சோதனையை நிகழ்த்தினார்.

32) கூற்று: எலக்ட்ரான் சுற்றி வரும்பாதை ஆற்றல் மட்டங்கள் எனப்படுகின்றன.

காரணம்: உட்கருவிலிருந்து தொலைவு அதிகரிக்கும்போது, ஆர்பிட்டின் ஆற்றல் குறைகிறது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: உட்கருவிலிருந்து தொலைவு அதிகரிக்கும்போது, ஆர்பிட்டின் ஆற்றலும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு ஆர்பிட்டும் நிலையான ஆற்றல் அளவினைப் பெற்றிருப்பதால், அவை ஆற்றல் மட்டங்கள் அல்லது ஆற்றல் நிலைகள் எனப்படுகின்றன.

33) கூற்றுகளை ஆராய்க.

1. அணு எண் Z என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது. Z என்றால் ஸ்ஸாஃல். ஜெர்மானிய மொழியில் ‘எண்’ என்று பொருள். Z என்பதை அணுஸ்ஸாஃல் அல்லது அணு எண் எனலாம்

2. A என்கிற குறியீடு M ஜெர்மானிய மொழியில் மாசென்ஸ்ஸால் என்கிற குறியீட்டுக்குப் பதிலாக ACS வழிமுறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. அணு எண் Z என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது. Z என்றால் ஸ்ஸாஃல். ஜெர்மானிய மொழியில் ‘எண்’ என்று பொருள். Z என்பதை அணுஸ்ஸாஃல் அல்லது அணு எண் எனலாம்

2. A என்கிற குறியீடு M ஜெர்மானிய மொழியில் மாசென்ஸ்ஸால் என்கிற குறியீட்டுக்குப் பதிலாக ACS வழிமுறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

34) உட்கருவிற்கு அருகில் இருக்கும் ஆற்றல் மட்டம்————–என அழைக்கப்படுகிறது?

A) K

B) L

C) M

D) N

விளக்கம்: உட்கருவிற்கு அருகாமையில் இருக்கும் கூடு K ஆகும். இது குறைந்த ஆற்றலை உடையது.

35) கூற்றுகளை ஆராய்க.

1. ஒரு அணுவின் மொத்த நிறையை புரோட்டான்கள் மட்டும் நிர்ணயிப்பதில்லை.

2. நியூட்ரான்களும் உட்கருவின் மொத்த நிறைக்கு பங்களிக்கிறது

3. அணுவின் மொத்த நிறையை ஒப்பிடும்போது மிகக் குறைந்த நிறையைப் பெற்றுள்ள எலக்ட்ரானின் நிறை புறக்கணிக்கத்தக்கது.

4. அணு எண் என்பது நியூக்ளியான் எண் எனவும் அழைக்கப்படுகிறது.

A) 1, 2 சரி

B) 1, 2, 3 சரி

C) 1, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. ஒரு அணுவின் மொத்த நிறையை புரோட்டான்கள் மட்டும் நிர்ணயிப்பதில்லை.

2. நியூட்ரான்களும் உட்கருவில் மொத்த நிறைக்கு பங்களிக்கிறது

3. அணுவின் மொத்த நிறையை ஒப்பிடும்போது மிகக் குறைந்த நிறையைப் பெற்றுள்ள எலக்ட்ரானின் நிறை புறக்கணிக்கத்தக்கது.

4. நிறை எண் என்பது நியூக்ளியான் எண் எனவும் அழைக்கப்படுகிறது.

36) அணு—————–என்ற அலகால் குறிப்பிடப்படுகிறது.

A) கிராம்

B) நானோ மீட்டர்

C) அணு நிறை அலகு

D) மில்லி கிராம்

விளக்கம்: அணுக்கள் மிக நுண்ணிய நிறை எண்களைப் பெற்றுள்ளதால் அவற்றை கிராமில் அளவிட முடியாது. அவை amu(அணு நிறை அலகு) என்ற அலகால் அளவிடப்படுகின்றன.

37) கூற்று: புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த நிறை = நிறை எண்

காரணம்: எலக்ட்ரான்களின் நிறை, நிறை எண்ணை ஒப்பிடும்போது புறக்கணிக்கத்தக்கதாகும்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: அணுவின் மொத்த நிறையை ஒப்பிடும்போது மிகக் குறைந்த நிறையைப் பெற்றுள்ள எலக்ட்ரானின் நிறை புறக்கணிக்கத்தக்கதாகும். எனவே நிறை என்பது புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த நிறை ஆகும்.

38) எலக்ட்ரான்கள் அணுவின் ஆர்பிட்களில் எந்த விதிக்கு உட்பட்டு நிரப்பப்படுகிறது?

A) போர் வதி

B) புரி விதி

C) ஆற்றல் மட்ட விதி

D) A மற்றும் B

விளக்கம்: எலக்ட்ரான்கள் ஆர்பிட் எனப்படும் வட்டப்பாதைகளில் உட்கருவைச் சுற்றி வருகின்றன. ஆர்பிட்டுகள் ஒவ்வொன்றிற்கும் எலக்ட்ரான்களைப் பகிர்ந்து நிரப்புதல் எலக்ட்ரான் பகிர்வு எனப்படும். அணுக்களில் உள்ள இந்த ஆர்பிட்களில் எலக்ட்ரான்கள் பகிர்ந்து நிரப்பப்படுவது, குறிப்பிட்ட விதிகள் அல்லது நிபந்தனைகளுக்குட்பட்டே நிகழ்கிறது. இவ்விதிகள் எலக்ட்ரான் அமைப்புக்கான போர் மற்றும் புரி விதிகள் என்று அழைக்கப்படுகின்றன.

39) ஒரு தனிமத்தின் அணுவின் நிறைஎண் 39, நியூட்ரான்களின் எண்ணிக்கை 20 எனில் அதன் அணு எண்ணைக் கணக்கிடுக மற்றும் அத்தனிமத்தின் பெயரைக் கண்டுபிடி.

A) 19, பொட்டாசியம்

B) 59, கால்சியம்

C) 20, பொட்டாசியம்

D) 19, கால்சியம்

விளக்கம்: நிறை எண் = அணு எண்+நியூட்ரான்களின் எண்ணிக்கை

அணு எண் = நிறை எண்-நியூட்ரான்களின் எண்ணிக்கை

= 39-20

= 19

அணு எண் 19-ஐக் கொண்ட தனிமம் பொட்டாசியம் ஆகும்.

40) புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் இணைக்கும் விசை—————என அழைக்கப்படுகிறது.

A) ஈர்ப்பு விசை

B) ஸ்ஸாஃல் விசை

C) மாசென்ஸ்ஸால் விசை

D) யுகாவா விசை

விளக்கம்: புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் இணைக்கும் விசையானது ஈர்ப்பு விசையைக் காட்டிலும் மிகவும் வலிமையானது. இது யுகாவா விசை என அழைக்கப்படுகிறது.

41) ஓரு வட்டப்பாதையில் இடங்கொள்ளும் அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை—————–என்ற வாய்ப்பாட்டால் கணக்கிடப்படுகிறது?

A) 2n2

B) 2n

C) 2n3

D) 4n2

விளக்கம்: ஓரு வட்டப்பாதையில் இடங்கொள்ளும் அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 2n2 என்ற வாய்ப்பாட்டால் கணக்கிடப்படுகிறது.

42) பொருத்துக.

அணு இணைதிறன்

அ. ஹைட்ரஜன் – 1. 4

ஆ. பெரிலியம் – 2. 3

இ. நைட்ரஜன் – 3. 1

ஈ. கார்பன் – 4. 2

A) 4, 1, 2, 3

B) 1, 2, 3, 4

C) 4, 3, 2, 1

D) 3, 4, 2, 1

விளக்கம்: ஹைட்ரஜன் – 1

பெரிலியம் – 2

நைட்ரஜன் – 3

கார்பன் – 4

43) தவறான கூற்றை தேர்க.

1. அணு எண் = புரோட்டான் எண்ணிக்கை = எலெக்ட்ரான் எண்ணிக்கை

2. நிறை எண் = புரோட்டான் எண்ணிக்கை + நியூட்ரான் எண்ணிக்கை

3. நியூக்ளியான்கள் = புரோட்டான் + நியூட்ரான்

4. நியூட்ரான்களின் எண்ணிக்கை = நிறை எண் – அணு எண்

A) 1, 2 சரி

B) 3, 4 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. அணு எண் = புரோட்டான் எண்ணிக்கை = எலெக்ட்ரான் எண்ணிக்கை

2. நிறை எண் = புரோட்டான் எண்ணிக்கை + நியூட்ரான் எண்ணிக்கை

3. நியூக்ளியான்கள் = புரோட்டான் + நியூட்ரான்

4. நியூட்ரான்களின் எண்ணிக்கை = நிறை எண் – அணு எண்

44) கூற்றுகளை ஆராய்க.

1. உட்கருவிற்கு அருகில் இருக்கும் ஆற்றல் மட்டமான K-அதிக ஆற்றலை உடையது

2. உட்கருவிலிருந்து வெகுதொலைவில் இருக்கும் ஆற்றல் மட்டமான N குறைந்த ஆற்றல் உடையது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. உட்கருவிற்கு அருகில் இருக்கும் ஆற்றல் மட்டமான K-குறைந்த ஆற்றலை உடையது

2. உட்கருவிலிருந்து வெகுதொலைவில் இருக்கும் ஆற்றல் மட்டமான N அதிக ஆற்றல் உடையது

45) எந்த ஒரு தனிமத்திலும் அணு எண் தனிமத்தின் குறியீட்டிற்கு__________யும், நிறை எண்____________யும் குறிப்பிடப்படுகிறது?

A) மேலே, கீழே

B) கீழே, கீழே

C) கீழே, மேலே

D) மேலே, மேலே

விளக்கம்: எந்த ஒரு தனிமத்திலும், அணு எண் தனிமத்தின் குறியீட்டிற்கு கீழேயும், நிறை எண் மேலேயும் குறிப்பிடப்படுகிறது. எடுத்துகாட்டாக, நைட்ரஜனின் குறியீடு 7N 14

நைட்ரஜனின் அணு எண் – 7

நைட்ரஜனின் நிறை எண் – 14

46) அக்ஸிஜனின் அணு எண்?

A) 4

B) 8

C) 7

D) 10

விளக்கம்: ஆக்ஸிஜனின் அணு எண் 8. இதன் எலக்ட்ரான் பகிர்வு 8.

47) ரூதர்போர்டு எந்த நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர்;?

A) டென்மார்க்

B) நியூசிலாந்து

C) இங்கிலாந்து

D) அமெரிக்கா

விளக்கம்: ரூதர்போர்டு நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் . இவர் 1911 ஆம் ஆண்டு ஒரு மெல்லிய தங்கத்தகட்டின் மீது சிறிய நேர் மின் துகள்களான ஆல்பா கதிர்களை விழச்செய்து அணுக்கருவை கண்டறிந்தார்.

48) நீல்ஸ்போரின் அணுக்கொள்கை எந்த அயனிகளுக்கு மட்டுமே பொருந்தியது?

A) ஹைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் போன்ற அயனி

B) ஆக்ஸிஜன் மற்றும் ஆக்ஸிஜன் போன்ற அயனி

C) கார்பன் மற்றும் கார்பன் போன்ற அயனி

D) மந்த வாயுக்கள்

விளக்கம்: 1913ஆம் ஆண்டு நீல்ஸ் போரின் அணுக்கொள்கை ஹைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் போன்ற அயனிகளுக்கு மட்டுமே பொருந்தியது. இந்த அணுக்கொள்கை, பல எலக்ட்ரான்களை உடைய அணுக்களுக்கு விரிவாக்கம் செய்யப்படவில்லை.

49) நியூட்ரான் துகளைக் கண்டறிந்தவர்?

A) ஜேம்ஸ் சாட்விக்

B) ஜே.ஜே.தாம்சன்

C) ரூதர்போர்டு

D) நீல்ஸ்போர்

விளக்கம்: ஜேம்ஸ் சாட்விக் என்னும் அறிவியலாளர் பெரிலியம் உட்கருவை ஆல்ஃபா கதிரால் தாக்கும்போது புரோட்டான்களுக்கு இணையான நிறை உள்ள துகள்கள் வெளியேறுவதைக் கண்டறிந்தார். இதுவே நியூட்ரான் என்று அழைக்கப்பட்டது.

50) பின்வருவனவற்றுள் எது அலோகம்?

A) லித்தியம்

B) போரான்

C) ஃபுளுரின்

D) ஹைட்ரஜன்

விளக்கம்: மேற்கண்டவற்றில் ஹைட்ரஜன் மட்டும் அலோகம் ஆகும்.

51) அணுவின் உருவ அளவு——————என்ற அலகால் அளவிடப்படுகிறது?

A) கிராம்

B) நானோ மீட்டர்

C) அணு நிறை அலகு

D) மில்லி கிராம்

விளக்கம்: அணுவின் உருவ அளவு நானோமீட்டர் என்ற அலகினால் அளவிடப்படுகின்றது.(1nm=109m) அணுக்கள் மிகவும் நுண்ணிய பொருளாக உள்ளதால் அவை ஸ்கேனிங் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்(SEM) மூலம் பார்வையிடப்படுகின்றன.

52) கீழ்க்கண்டவற்றை அவற்றின் இணைதிறன் அடிப்படையில் ஏறுவரிசைப்படுத்துக.

1. லித்தியம் 2. சிலிகான் 3. போரான் 4. ஆக்ஸிஜன்

A) 3, 4, 2, 1

B) 3, 4, 1, 2

C) 1, 4, 3, 2

D) 1, 2, 3, 4

விளக்கம்: லித்தியம் – 1

சிலிகான் – 2

போரான் – 3

ஆகஸிஜன் – 4

53) நீல்ஸ்போர் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. 1915-ஆம் ஆண்டு அணுக்கொள்கையை உருவாக்கினார்

2. இவர் நியூசிலாந்து நாட்டைச் சார்ந்தவர்.

3. இவரின் அணுக்கொள்கை அணுவின் நிலைப்புத் தன்மையை நியாயப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.

A) 1 மட்டும் சரி

B) 1, 2 தவறு

C) 3 மட்டும் தவறு

D) அனைத்தும் தவறு

விளக்கம்: 1. 1913-ஆம் ஆண்டு அணுக்கொள்கையை உருவாக்கினார்

2. இவர் டென்மார்க் நாட்டைச் சார்ந்தவர்.

3. இவரின் அணுக்கொள்கை அணுவின் நிலைப்புத் தன்மையை நியாயப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.

54) கூற்று: தனிமங்களின் வேதிப்பண்புகள் அவற்றின் இணைதிறன் எலக்ட்ரான்களால் தீர்மானிக்கப்படுகின்றன.

காரணம்: இணைதிறன் எலக்ட்ரான் மட்டுமே வேதி வினையில் பங்கெடுக்கின்றன.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: அணுவின் உட்கருவிலிருந்து கடைசியாக உள்ள வெளிக்கூடு இணைதிறன் கூடு என்றும், அதில் உள்ள எலக்ட்ரான்கள் இணைதிறன் எலக்ட்ரான்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. தனிமங்களின் வேதிப்பண்புகள் அவற்றின் இணைதிறன் எலக்ட்ரான்களால் தீர்மானிக்கப்படுகின்றன. ஏனெனில் அவை மட்டுமே வேதி வினையில் பங்கெடுக்கின்றன.

55) ஒத்த அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் வெவ்வேறு அணுக்கள்——————எனப்படும்?

A) ஐசோடோப்பு

B) ஐசோடான்

C) ஐசோபார்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: ஒத்த அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் வெவ்வேறு அணுக்கள் ஐசோடோப்பு எனப்படும். (எ.கா) குளோரின் மற்றும் கார்பன்

56) கூற்) றுகளை ஆராய்க.(அணுக்களின் எலக்ட்ரான் பகிர்வு)

1. ஒரு வட்டப்பாதையில் இடங்கொள்ளும் அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 2n2 என்ற வாய்ப்பாட்டால் கணக்கிடப்படுகிறது. n என்பது முதன்மை குவாண்டம் எண் ஆகும்.(அதாவது உட்கருவிலிருந்து கூட்டின் வரிசை எண்)

2. கூடுகள் அவற்றின் ஆற்றல்களின் இறங்குவரிசையில் எலக்ட்ரான்களால் படிப்படியாக நிரப்பப்படுகின்றன.

3. ஒரு அணுவின் வெளிவட்ட ஆர்பிட்டினால் கூடுதலாக எலக்ட்ரான்களைப் பெற முடிந்தாலும், இந்த ஆர்பிட்டில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 8-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

A) 1, 2 சரி

B) 1, 3 சரி

C) 1 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. ஒரு வட்டப்பாதையில் இடங்கொள்ளும் அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 2n2 என்ற வாய்ப்பாட்டால் கணக்கிடப்படுகிறது. n என்பது முதன்மை குவாண்டம் எண் ஆகும்.(அதாவது உட்கருவிலிருந்து கூட்டின் வரிசை எண்)

2. கூடுகள் அவற்றின் ஆற்றல்களின் ஏறுவரிசையில் எலக்ட்ரான்களால் படிப்படியாக நிரப்பப்படுகின்றன.

3. ஒரு அணுவின் வெளிவட்ட ஆர்பிட்டினால் கூடுதலாக எலக்ட்ரான்களைப பெற முடிந்தாலும், இந்த ஆர்பிட்டில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 8க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

57) கூற்று: ரூதர்போர்டு தங்கத் தகட்டைப் பயன்படுத்தி அணுக்கருவை கண்டறிந்தார்

காரணம்: தங்கம் எளிதில் தகடாகக் கூடியது

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: ரூதர்போர்டு தங்கத் தகட்டின் மீது மிகச்சிறிய நேர்மின் துகள்களான ஆல்பா கதிர்களை பயன்படுத்தி அணுக்கருவை கண்டறிந்தார். இவர் தங்கம் எளிதில் தகடாகக் கூடியதாக இருப்பதால் அதனை தேர்ந்தெடுத்தார்.

58) கீழ்க்கண்டவற்றில் எது மந்த வாயு அல்ல?

A) ஹீலியம்

B) நியான்

C) ஆர்கான்

D) ஹைட்ரஜன்

விளக்கம்: மேற்கண்டவற்றில் ஹைட்ரஜன் மட்டுமே அலோகம். ஹீலியம், நியான், ஆர்கான் போன்றவை மந்த வாயுக்கள் ஆகும்.

59) தலைகீழ் விகித விதியைப் பற்றி கூறியவர்?

A) ஜெர்மியஸ் ரிச்சர்

B) ஜான் டால்டன்

C) நீல்ஸ்போர்

D) ரூதர்போர்டு

விளக்கம்: ஜெர்மியஸ் ரிச்சர் என்பர் தலைகீழ் விகித விதியைப் பற்றிக் கூறினார்.

60) கூற்றுகளை ஆராய்க.

1. வெளிவட்டப்பாதையில் சம எண்ணிக்கையில் எலக்ட்ரான்களை உடைய தனிமங்கள் ஒரே மாதியான பண்புகளைக் கொண்டிருக்கும்.

2. 1, 2 அல்லது 3 இணைதிறன் எலக்ட்ரான்களை உடைய தனிமங்கள்(ஹைட்ரஜனைத் தவிர்த்து) அலோகங்கள் எனப்படுகின்றன.

3. வெளிவட்டப்பாதையில் வெவ்வேறு எண்ணிக்கையில் எலக்ட்ரான்களை உடைய தனிமங்கள் வெவ்வேறு மாதியான பண்புகளைக் கொண்டிருக்கும்.

4. வெளிக்கூட்டில் 4 முதல் 7 வரை கொண்ட தனிமங்கள் உலோகங்கள் எனப்படும்.

A) 1, 3 சரி

B) 2, 4 சரி

C) அனைத்தும் சரி

D) அனைத்தும் தவறு

விளக்கம்: 1. வெளிவட்டப்பாதையில் சம எண்ணிக்கையில் எலக்ட்ரான்களை உடைய தனிமங்கள் ஒரே மாதியான பண்புகளைக் கொண்டிருக்கும்.

2. 1, 2 அல்லது 3 இணைதிறன் எலக்ட்ரான்களை உடைய தனிமங்கள்(ஹைட்ரஜனைத் தவிர்த்து) உலோகங்கள் எனப்படுகின்றன.

3. வெளிவட்டப்பாதையில் வெவ்வேறு எண்ணிக்கையில் எலக்ட்ரான்களை உடைய தனிமங்கள் வெவ்வேறு மாதியான பண்புகளைக் கொண்டிருக்கும்.

4. வெளிக்கூட்டில் 4 முதல் 7 வரை கொண்ட தனிமங்கள் அலோகங்கள் எனப்படும்.

61) கூற்றுகளை ஆராய்க (அணுவின் இணைதிறன் பற்றி)

1. ஒரு தனிமத்தின் இணை திறன் என்பது அத்தனிமம் மற்றொரு தனிமத்துடன் சேரும் திறனின் அளவு.

2. ஒரு தனிமத்தின் இணை திறன் என்பது அத்தனிமம் வேதி வினையில் பங்கு பெறும் எலக்ட்ரான் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கும்.

3. 1, 2, 3, 4 போன்ற இணைதிறன் எலக்ட்ரான்களை உடைய தனிமங்களின் இணைதிறன் – 7, 6, 5, 4 ஆக இருக்கும்.

4. ஒரு தனிமத்தின் இணைதிறன் எலக்ட்ரான்கள் 5, 6, 7 ஆக இருந்தால் அதன் இணைதிறன் 3, 2, 1 ஆகவே இருக்கும்

A) 1, 2, 4 சரி

B) 1, 2 மட்டும் சரி

C) 4 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. ஒரு தனிமத்தின் இணை திறன் என்பது அத்தனிமம் மற்றொரு தனிமத்துடன் சேரும் திறனின் அளவு.

2. ஒரு தனிமத்தின் இணைதிறன் என்பது அத்தனிமம் வேதி வினையில் பங்கு பெறும் எலக்ட்ரான் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கும்.

3. 1, 2, 3, 4 போன்ற இணைதிறன் எலக்ட்ரான்களை உடைய தனிமங்களின் இணைதிறன் – 1, 2, 3, 4 ஆக இருக்கும் .

4. ஒரு தனிமத்தின் இணைதிறன் எலக்ட்ரான்கள் 5, 6, 7 ஆக இருந்தால் அதன் இணைதிறன் 3, 2, 1 ஆகவே இருக்கும்

62) ஒரு அணு நிலைப்புத்தன்மையை அடையத் தேவையான எலக்ட்ரான்களின் எண்ணிக்கை?

A) 1

B) 4

C) 8

D) 5

விளக்கம்: ஒரு அணு நிலைப்புத்தன்மை அடையத் தேவையான எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 8.

63) ரூதர்போர்டின் அணுக்கரு சோதனை பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. பெரும்பாலான ஆல்பா துகள்கள் வந்தப் பாதையிலே திருப்பி அனுப்பப்பட்டன.

2. சில ஆல்பா துகள்கள் தங்கத் தகட்டினுள் ஊடுருவி நேர்க்கோட்டுப் பாதையில் சென்றன.

3. மிகக் குறைந்த ஆல்பா துகள்கள் நேர்க்கோட்டுப் பாதையில் இருந்து சிறு கோணத்தில் விலக்கம் அடைந்தன.

A) 1 மட்டும் தவறு

B) 1, 2 தவறு

C) 1, 2, 3 தவறு

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. பெரும்பாலான ஆல்பா துகள்கள் தங்கத் தகட்டினுள் ஊடுருவி நேர்க்கோட்டுப் பாதையில் சென்றன.

2. சில ஆல்பா துகள்கள் நேர்க்கோட்டுப் பாதையில் இருந்து சிறு கோணத்தில் விலக்கம் அடைந்தன.

3. மிகக் குறைந்த ஆல்பா துகள்கள் வந்தப் பாதையிலே திருப்பி அனுப்பப்பட்டன.

64) அணுவின் கூடுகளில் எலட்ரான் பங்கீட்டுக்கான விதிகளை வகுத்தவர்?

A) டால்டன் மற்றும் ரூதர்போர்டு

B) போர் மற்றும் புரி

C) ஜே.ஜே. தாம்சன் மற்றும் கோல்டுஸ்டீன்

D) மேற்கண்ட யாருமில்லை

விளக்கம்: அணுவின் கூடுகளின் எலக்ட்ரான் பங்கீட்டுக்கான விதிகளை போர் மற்றும் புரி ஆகியோர் முன்மொழிந்தனர்.

65) ஒரு அணுவின் இணைதிறன் பூஜ்ஜியம் எனில் அதன் வெளிக்கூடு பெற்றுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை?

A) 1

B) 0

C) 8

D) 10

விளக்கம்: அணு நிலைப்புத்தன்மையை அடையத் தேவையான எலக்ட்ரான்கள் 8. அணுவின் வெளிக்கூடு முழுமையாக எலக்ட்ரான்களால் நிரப்பப்பட்டிருப்பின், அத்தனிமத்தின் இணைதிறன் பூஜ்ஜியம் ஆகும்.

66) பொருத்துக.

அ. பெரிலியம் – 1. Na

ஆ. போரான் – 2. Ne

இ. நியான் – 3. B

ஈ. சோடியம் – 4. Be

A) 3, 4, 1, 2

B) 4, 3, 1, 2

C) 3, 4, 2, 1

D) 4, 3, 2, 1

விளக்கம்:பெரிலியம் – Be

போரான் – B

நியான் – Ne

சோடியம் – Na

67) கீழ்க்கண்டவற்றுள் எதன் இணைதிறன் பூஜ்ஜியம் அல்ல?

A) ஆர்கான்

B) ஹீலியம்

C) நியான்

D) ஃபுளுரின்

விளக்கம்: ஃபுளுரின் தனிமத்தின் இணைதிறன் – 1. மேற்கண்ட வாயுக்களில் ஆர்கர், நியான், ஹீலியம் போன்றவை மந்த வாயுக்கள். இதன் இணைதிறன் – 0

68) ஒத்த நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்ட வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள்——————எனப்படும்

A) ஐசோடோப்பு

B) ஐசோடான்

C) ஐசோபார்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: ஒத்த நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்ட வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள் ஐசோபார்கள் எனப்படும். எ.கா. கால்சியம் மற்றும் ஆர்கான்

69) ஐசோடோப்பு எத்தனை வகைப்படும்?

A) 4

B) 3

C) 2

D) 5

விளக்கம்: ஐசோடேப்புகள் இரண்டு வகைப்படும். அவை,

1. நிலைப்புத் தன்மை உடையவை.

2. நிலைப்புத் தன்மை அற்றவை.

70) கூற்று: ஐசோடோப்புகள் நிலையற்ற தன்மையும் கொண்டவை.

காரணம்: அதன் அணுக்கருவில் உள்ள குறைவான நியூட்ரான்கள் ஆகும்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: ஐசோடேப்புகள் இரண்டு வகைப்படும். அவை, 1. நிலைப்புத் தன்மை உடைய ஐசோடோப்பு 2. நிலைப்புத் தன்மையற்ற ஐசோடோப்பு.

ஐசோடோப்புகளின் நிலையற்ற தன்மைக்குக் காரணம் அவற்றின் அணுக்கருவிலுள்ள கூடுதல் நியூட்ரான்களாகும்.

71) கீழ்க்கண்டவற்றில் எது கதிரியக்க ஐசோடேப்பு?

A) யுரேனியம்-235

B) கோபால்ட்-60

C) A மற்றும் B

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: அணுக்கரு உலையின் மூலமாகிய யுரேனியம்-235 மற்றும் கதிர்வீச்சு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கோபால்ட்- 60 ஆகியவை கதிரியக்க ஐசோடோப்புகள் ஆகும்.

72) ஐசோபார்கள் என்பதற்கு பொருத்தமில்லாதது எது?

A) வெவ்வேறு எண்ணிக்கையில் புரோட்டான்கள்

B) வெவ்வேறு எண்ணிக்கையில் எலக்ட்ரான்கள்

C) ஒரே நியூக்ளியான் எண்

D) வெவ்வேறு நியூட்ரான் எண்ணிக்கை

விளக்கம்: ஐசோபார்கள் என்பது,

1. வெவ்வேறு எண்ணிக்கையில் புரோட்டான்கள்

2. வெவ்வேறு எண்ணிக்கையில் எலக்ட்ரான்கள்

3. ஒரே நியூக்ளியான் எண்

4. ஒரே நிறை எண்

எ.கா. ஆர்கான் மற்றும் கால்சியம்

73) கூற்றுகளை ஆராய்க (ரூதர்போர்டு பற்றி)

1. 1913 ஆம் ஆண்டு அணுக்கருவை கண்டறிந்தார்

2. இவர் நியூசிலாந்து நாட்டைச் சார்ந்தவர்

3. தங்கத் தகட்டின் மீது மிகச்சிறிய எதிர் மின் துகள்களான ஆல்பா கதிர்களை விழச் செய்து சோதனை நிகழ்த்தினார்

4. தங்கம் அதிக பளபளப்புத் தன்மை கொண்டதால், தங்கத்தை சோதனைக்கு தேர்ந்தெடுத்தார்.

A) 1, 2 சரி

B) 1, 2, 3 சரி

C) 1, 3, 4 தவறு

D) 3, 4 தவறு

விளக்கம்: 1. 1911 ஆம் ஆண்டு அணுக்கருவை கண்டறிந்தார்

2. இவர் நியூசிலாந்து நாட்டைச் சார்ந்தவர்

3. தங்கத் தகட்டின் மீது மிகச்சிறிய நேர் மின் துகள்களான ஆல்பா கதிர்களை விழச் செய்து சோதனை நிகழ்த்தினார்

4. தங்கம் எளிதில் தகடாகக் கூடியதாக இருப்பதால், தங்கத்தை சோதனைக்கு தேர்ந்தெடுத்தார்

74) ஒத்த நியூட்ரான் எண்ணிக்கை கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள்?

A) ஐசோடோப்பு

B) ஐசோடான்

C) ஐசோபார்

D) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: ஒத்த நியூட்ரான் எண்ணிக்கை கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும். போரான் மற்றும் கார்பன் ஆகியவை ஒத்த எண்ணிக்கையில் நியூட்ரான்களைப் பெற்றுள்ளன. ஆனால் புரோட்டான் எண்ணிக்கை வேறுபடுவதால் அவற்றின் அணு எண்களும் வேறுபடுகின்றன.

75) கூற்று: யுரேனியம்-235 கதிரியக்க ஐசோடோப்பு என அழைக்கப்படுகிறது

காரணம்: அதன் அணுக்கருவில் கூடுதல் நியூட்ரான்கள் உள்ளது

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: அணுக்கருவில் நியூட்ரான்களின் எண்ணிக்கை அதிகமானால் அவை நிலைப்புத்தன்மையற்ற ஐசோடோப்பு என அழைக்கப்டுகின்றன. இவ்வகை ஐசோடோப்பு கதிரியக்கத் தன்மையை பெற்றிருப்பதால், அவை கதிரியக்க ஐசோடோப்புகள் என அழைக்கப்படுகின்றன.

76) சேர்க்கை விதிகள் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: சேர்க்கை விதிகள் ஐந்து வகைப்படும். அவை,

1. நிறை மாறா விதி

2. மாறா விகித விதி

3. பெருக்கல் விகித விதி

4. தலைகீழ் விகித விதி

5. கேலூசாக்கின் பருமன் இணைப்பு விதி

77) பெருக்கல் விகித விதியை முன்மொழிந்தவர்?

A) ரூதர்போர்டு

B) ஜான் டால்டன்

C) கோல்டுஸ்டீன்

D) ஜே.ஜே தாம்சன்

விளக்கம்: பெருக்கல் விகித விதியை 1804 ஆம் ஆண்டு ஜான் டால்டன் என்பவர் முன்மொழிந்தார்.

78) கீழ்க்கண்ட நபர்களில் ஒருவர் மட்டும் பொருந்தாதவர். அவர் யார்?

A) ஜேம்ஸ் சாட்விக்

B) ஜே.ஜே. தாம்சன்

C) டால்டன்

D) நீல்ஸ்போர்

விளக்கம்: ஜே.ஜே. தாம்சன், டால்டன், நீல்ஸ்போர் போன்றோர் அணுக்கொள்கையை வெளியிட்டனர். ஜேம்ஸ் சாட்விக் என்பவர் அணுவின் அடிப்படைத் துகள்களில் ஒன்றான நியூட்ரானைக் கண்டறிந்தார்.

79) A மற்றும் B என்ற இரண்டு தனிமங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒன்றுக்கும் மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும் பொழுது A-ன் நிறையானது B-ன் நிறையோடு எளிய விகிதத்தில் சேர்ந்திருக்கும் எனக் கூறும் விதி?

A) நிறை மாறா விதி

B) மாறா விகித விதி

C) பெருக்கல் விகித விதி

D) தலைகீழ் விகித விதி

விளக்கம்: இரண்டு தனிமங்கள் ஒன்றாக சேர்ந்து ஒன்றுக்கும் மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும் பொழுது அவற்றின் நிறையானது எளிய விகிதத்தில் சேர்ந்திருக்கும் என்று கூறும் விதி பெருக்கல் விகித விதி. இதனை 1804 ஆம் ஆண்டு முன் மொழிந்தவர் ஜான் டால்டன்.

80) தலைகீழ் விகித விதியை முன்மொழிந்தவர் யார்?

A) ஜான் டால்டன்

B) ரூதர்போர்டு

C) ஜெர்மியஸ் ரிச்சர்

D) கோலூசாக்

விளக்கம்: இரண்டு மாறுபட்ட தனிமங்கள் தனித்தனியே ஒரே நிறையுள்ள மூன்றாவது தனிமத்துடன் சேரும்போது, அவற்றின் நிறைகளின் விகிதம் சமமாகவோ அல்லது எளிய பெருக்கல் விகிதத்திலோ இருக்கும் என்று கூறும் தலைகீழ் விகித விதியை முன்மொழிந்தவர் ஜெர்மியஸ் ரிச்சர் ஆவார்.

81) கார்பன் ஆக்ஸிஜனுடன் இணைந்து கார்பன்-டை-ஆக்ஸைடை தருவது?

A) நிறை மாறா விதி

B) மாறா விகித விதி

C) பெருக்கல் விகித விதி

D) தலைகீழ் விகித விதி

விளக்கம்: கார்பன், ஆக்சிஜன் உடன் இணைந்து கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டைஆக்ஸைடு என்ற இரு ஆக்சைடுகளை தருகிறது.

ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள கார்பனுடன், ஆக்ஸிஜன் இணைந்து உருவாகும் கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு ஆகியவற்றில் உள்ள ஆக்சிஜனின் நிறை விகிதம் 1:2 ஆகும். இது எளிய பெருக்கல் விகித விதி ஆகும்.

82) சல்பர் டை ஆக்ஸைடு மற்றும் சல்ஃபர் ட்ரை ஆக்ஸைடு ஆகியவற்றில் உள்ள ஆக்சிஜனின் நிலையான நிறை விகிதம்?

A) 1:2

B) 2:3

C) 1:3

D) 3:4

விளக்கம்: சல்ஃபர், ஆக்சிஜனுடன் வினை புரிந்து சல்பர் டை ஆக்ஸைடு மற்றும் சல்ஃபர் ட்ரை ஆக்ஸைடு ஆகியவற்றில் உள்ள ஆக்சிஜனின் நிலையான நிறை விகிதம் 2:3

83) ஜெர்மியஸ் ரிச்சர் எந்த ஆண்டு தலைகீழ் விகித விதியை முன்மொழிந்தார்?

A) 1798

B) 1792

C) 1804

D) 1805

விளக்கம்: ஜெர்மியஸ் ரிச்சர் என்பவர் 1792ல் தலைகீழ் விகித விதியைப் பற்றிக் கூறினார்.

84) நீரில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனின் நிறை விகிதம்?

A) 1:2

B) 2:3

C) 1:4

D) 1:8

விளக்கம்: ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் இணைந்து நீரிணை உருவாக்குகின்றன. இதில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனின் நிறை விகிதம் 1:8. ஆகும். இவை தலைகீழ் விகித விதி ஆகும்.

85) வாயுக்கள் வினைபுரியும் போது, அவற்றின் பருமன்கள் அவ்வினையின் விளைபொருள்களின் பருமனுக்கு எளிய ————————விகிதத்தில் இருக்கும்

A) பெருக்கல்

B) தலைகீழ்

C) முழு எண்

D) கூட்டல்

விளக்கம்: வாயுக்கள் வினைபுரியும் போது, அவற்றின் பருமன்கள் அவ்வினையின் விளைபொருள்களின் பருமனுக்கு எளிய முழு எண் விகிதத்தில் இருக்கும்(வாயுக்களின் பருமன்கள் ஒரே வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் அளவிடப்படும் பட்சத்தில்) . இதுவே கோலூசக்கின் பருமன் இணைப்பு விதி ஆகும்.

86) அணுவின் உள்ளிருக்கும் அணு ஆர்ப்பிட்டல் மற்றும் எலக்ட்ரான்களின் வடிவமைப்பு மற்றும் வேறுபாட்டைக் குறிக்கும் எண்கள்——————-

A) நிறைஎண்

B) அணு எண்

C) அணுக்கரு எண்

D) குவாண்டம் எண்

விளக்கம்: அணுவின் உள்ளிருக்கும் அணு ஆர்ப்பிட்டல் மற்றும் எலக்ட்ரான்களின் வடிவமைப்பு மற்றும் வேறுபாட்டைக் குறிக்கும் எண்கள் குவாண்டம் எண்கள் எனப்படும்.

87) அணுவில் உள்ள ஒவ்வொரு எலக்ட்ரானின் தனித்தன்மை அதன் ————-குவாண்டம் எண்களின் அடிப்படையிலேயே அமையும்

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: அணுவில் உள்ள ஒவ்வொரு எலக்ட்ரானின் தனித்தன்மை அதன் 4 குவாண்டம் எண்களின் அடிப்படையிலேயே அமையும். அவை,

1. முதன்மை குவாண்டம் எண்

2. கோண உந்தக் குவாண்டம் எண்

3. காந்த குவாண்டம் எண்

4. சுழற்சி குவாண்டம் எண்

88) பொருத்துக.

அ.முதன்மை குவாண்டம் எண் – 1. m

ஆ.கோண உந்தக் குவாண்டம் எண் – 2. s

இ.காந்த குவாண்டம் எண் – 3. n

ஈ.சுழற்சி குவாண்டம் எண் – 4. l

A) 3, 4, 1, 2

B) 3, 4, 2, 1

C) 4, 3, 1, 2

D) 4, 3, 2, 1

விளக்கம்: முதன்மை குவாண்டம் எண் – 1. n

கோண உந்தக் குவாண்டம் எண் – 2. l

காந்த குவாண்டம் எண் – 3. m

சுழற்சி குவாண்டம் எண் – 4. s

89) பொருத்துக.

அ. முதன்மை குவாண்டம் எண் – 1. முதன்மை ஆற்றல் மட்டம்

ஆ. கோண உந்தக் குவாண்டம் எண் – 2. துணைக்கூடு அல்லது ஆர்பிட்டல் வட்டம்

இ. காந்த குவாண்டம் எண் – 3. ஆர்பிட்டல் அமைவிடம்

ஈ. சுழற்சி குவாண்டம் எண் – 4. எலக்ட்ரான் சுழற்சி

A) 4, 3, 2, 1

B) 1, 2, 3, 4

C) 2, 3, 4, 1

D) 3, 4, 1, 2

விளக்கம்: முதன்மை குவாண்டம் எண் – முதன்மை ஆற்றல் மட்டம்

கோண உந்தக் குவாண்டம் எண் – துணைக்கூடு அல்லது ஆர்பிட்டல் வட்டம்

காந்த குவாண்டம் எண் – ஆர்பிட்டல் அமைவிடம்

சுழற்சி குவாண்டம் எண் – எலக்ட்ரான் சுழற்சி

9th Science Lesson 12 Questions in Tamil

12] தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை

1) 1800ல் எத்தனை தனிமங்கள் அறியப்பட்டிருந்தன?

A) 63

B) 118

C) 31

D) 59

விளக்கம்: 1800ல் 31 தனிமங்கள் மட்டுமே அறியப்பட்டிருந்தன. இவ்வுலகில் உள்ள பல்வகைத் தன்மையுடைய பொருள்கள் எல்லாம் வெவ்வேறு தனிமங்கள் இணைந்தமையால் உருவானவை.

2) தனிமங்களை டபார்னீர் எதன் அடிப்படையில் வகைப்படுத்தினார்?

A) அணுநிறை

B) ஆங்கில அகரவரிசை

C) அணு எண்

D) பயன்பாடுகள்

விளக்கம்: டாபர்னீர் என்னும் ஜெர்மானிய வேதியியலாளர் தனிமங்களை அவற்றின் அணு நிறையின் அடிப்படையில் வகைப்படுத்தினார்.

3) கூற்று: டாபர்னீரின் வகைப்பாடு மும்மை விதி என அழைக்கப்பட்டது

காரணம்: தனிமங்களை ஒவ்வொரு தொகுதிக்கும் முப்பது தனிமங்கள் கொண்ட குழுக்களாக அல்லது தொகுதிகளாகப் பிரித்து அமைத்தார்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்:ஜோகன் வுல்ஃப்காங் டாபர்னீர் எனும் ஜெர்மானிய வேதியலாளர் தனிமங்களை அவற்றின் அணு நிறையின் அடிப்படையில் வகைப்படுத்தும் ஒரு கருத்தை எடுத்துரைத்தார். இவர் தனிமங்களை ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று தனிமங்கள் கொண்ட குழுக்களாக அல்லது தொகுதிகளாகப் பிரித்து அமைத்தார். இவர் இந்த குழுக்களை “மும்மை” என்று குறிப்பிட்டார் (மும்மை – மூன்று)

4) டாபர்னீரின் மும்மை விதிப்பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. டாபர்னீரால் அக்கால கட்டத்தில் மூன்று தொகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்களில் மட்டுமே மும்மைத் தனிமங்களைக் காண முடிந்தது.

2. மிகக்குறைந்த அணு நிறை கொண்ட தனிமங்களுக்கு இதனை பயன்படுத்த முடிந்தது.

3. மிக அதிக அணு நிறை கொண்ட தனிமங்களுக்கு இதைப்படுத்த முடியவில்லை.

4. எல்லா தனிமங்களும் இந்த மும்மை விதிக்கு உட்படவில்லை.

A) 1, 2, 4 சரி

B) 1, 3, 4 சரி

C) 1, 2 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. டாபர்னீரால் அக்கால கட்டத்தில் மூன்று தொகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்களில் மட்டுமே மும்மைத் தனிமங்களைக் காண முடிந்தது.

2. மிகக்குறைந்த அணு நிறை கொண்ட தனிமங்களுக்கு இதனை பயன்படுத்த முடியவில்லை.

3. மிக அதிக அணு நிறை கொண்ட தனிமங்களுக்கு இதைப்படுத்த முடியவில்லை.

4. எல்லா தனிமங்களும் இந்த மும்மை விதிக்கு உட்படவில்லை.

5) தனிமங்களின் வகைபாடு பற்றிய எண்ம விதியை வெளியிட்டவர்?

A) டாபர்னீர்

B) நியூலாந்து

C) மெண்டலீவ்

D) ஹென்றி மோஸ்லே

விளக்கம்: தனிமங்களை வகைப்படுத்த ஜான் நியூலாந்து என்பவர் எண்ம விதியை கண்டறிந்தார். இதில் தனிமங்கள் அவற்றின் அணு நிறையின் அடிப்படையில் ஏறுவரிசையில் ஒழுங்கமைப்பட்டது.

6) எண்ம விதியானது எந்த தனிமத்தைக் காட்டிலும் அதிக அணு நிறை கொண்ட தனிமங்களுக்கு ஏற்புடையதாக இல்லை?

A) மெக்னீசியம்

B) புளோரின்

C) குளோரின்

D) கால்சியம்

விளக்கம்: எண்ம விதியானது கால்சியத்தைக் காட்டிலும் அதிக அணு நிறை கொண்ட தனிமங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. எண்ம விதியை கூறியவர் நியூலாந்து.

7) எண்ம விதி கண்டறியப்பட்ட பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அரிய வாயுக்கள் எந்த இரு தனிமத்திற்குமான ஒத்த பண்பைக் காண்பித்தன.

A) முதல் மற்றும் எட்டாவது

B) முதல் மற்றும் ஒன்பதாவது

C) இரண்டாம் மற்றும் எட்டாவது

D) இரண்டாம் மற்றும் ஒன்பதாவது

விளக்கம்: எண்மவிதி கண்டறியப்பட்ட பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அரிய வாயுக்கள்(மந்த வாயுக்கள் நியான், ஆர்கான்) ஒன்பதாவது தனிமத்திற்கும் முதலாம் தனிமத்திற்கும் ஒத்த பண்பைக் காண்பித்தன. எ. கா. புளுரின் மற்றும் சோடியத்திற்கு இடையில் வைக்கப்பட்ட நியான்.

8) எண்ம விதியில் கீழ்க்கண்ட எந்த தனிமம் ஹாலஜன் தொகுதியில் அமைக்கப்படவில்லை?

A) கோபால்ட்

B) இரிடியம்

C) ஆர்கான்

D) பல்லடியம்

விளக்கம்: நியூலாந்தால் கண்டறியப்பட்ட ஹாலஜன் தொகுதியில் இடம்பெற்ற தனிமங்கள்,

1. கோபால்ட் 2. இரிடியம்

3. பல்லடியம் 4. பிளாட்டினம்

5. இரிடியம்

9) தனிம ஆவர்த்தன விதியை உருவாக்கியவர்?

A) டாபர்னீர்

B) டால்டன்

C) நியூலாந்து

D) டிமிட்ரி மெண்டலீவ்

விளக்கம்: தனிமங்களின் பண்புகள், அவை அணு நிறையின் அடிப்படையில் அடுக்கப்படும்போது ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் வருவதைக் கண்டறிந்தார். இதன் அடிப்படையில் டிமிட்ரி மெண்டலீவ் தனிம ஆவர்த்தன விதியை உருவாக்கினார்.

10) 1865ல் எத்தனை தனிமங்கள் அறியப்பட்டிருந்தன?

A) 31

B) 63

C) 118

D) 40

விளக்கம்: 1865ல் 63 தனிமங்கள் அறியப்பட்டிருந்தன. எல்லா தனிமங்களும் அவற்றின் தன்மை மற்றும் பண்புகளில் தனித் தன்மை உடையவை. ஒன்று போல் மற்றொன்று இருக்காது.

11) மெண்டலீவ் தனிம வரிசை அட்டவணை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

A) 1800

B) 1865

C) 1866

D) 1869

விளக்கம்: 1869இல் இரஷிய வேதியலாளர் டிமிட்ரி மெண்டலீவ் தனிமங்களின் பண்புகள், அவை அணுநிறையின் அடிப்படையில் ஆவர்த்தன விதியைப் பயன்படுத்தி அப்போது அறியப்பட்ட 56 தனிமங்களை வகைப்படுத்தினார்.

12) தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் எதைப் பொருத்து ஆவர்த்தன முறையில் மாற்றம் அடைவதாக ஆவர்த்தன விதி கூறுகிறது?

A) அணு எண்

B) பண்புகள்

C) பயன்பாடுகள்

D) அணு நிறைகள்

விளக்கம்: தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணுநிறைகளை பொருத்து ஆவர்த்தன முறையில் மாற்றம் அடைகிறது ஆவர்த்தன விதி கூறுகிறது. இவ்விதியை கண்டறிந்தவர் மெண்டலீவ் ஆவார்.

13) கூற்றுகளை ஆராய்க.

1. மெண்டலீவ் அப்போது அறியப்பட்ட 63 தனிமங்களை ஆவர்த்தன விதியைப் பயன்படுத்தி வரிசைப்படுத்தினார்.

2. மெண்டலீவின் தனிம வரிசை அட்டவணை, தனிம வரிசை அட்டவணையின் சுருக்கம் எனப்படுகிறது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. மெண்டலீவ் அப்போது அறியப்பட்ட 56 தனிமங்களை ஆவர்த்தன விதியைப் பயன்படுத்தி வரிசைப்படுத்தினார்.

2. மெண்டலீவின் தனிம வரிசை அட்டவணை, தனிம வரிசை அட்டவணையின் சுருக்கம் எனப்படுகிறது.

14) கூற்று: வேதியியில் ஆய்வை எளிதாக்கிய தனிம வரிசை அட்டவணை – மெண்லீவ்

காரணம்: முதன் முறையாக தனிமங்கள் விரிவாக சரியான முறையில் வகைப்படுத்தப்பட்டன.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: வேதியியல் ஆய்வை எளிதாக்கிய தனிம வரிசை அட்டவணை – மெண்லீவ். முதன் முறையாக தனிமங்கள் விரிவாக சரியான முறையில் வகைப்படுத்தப்பட்டன. இதனால் ஒத்த பண்புகளை உடைய தனிமங்கள் ஒரே தொகுதியில் வைக்கப்பட்டன.

15) டாபர்னீர் மூன்று தனிமங்களை அவற்றின் நிறையின் அடிப்படையில் ஏறு வரிசையில் அடுக்கும்போது நடுவில் உள்ள தனிமத்தின் அணுநிறை மற்ற இரண்டு தனிமங்களின் அணுநிறையின் சராசரிக்கு எவ்வாறு இருக்கும்?

A) அதிகமாக இருக்கும்

B) குறைவாக இருக்கும்

C) ஏறத்தாழ சமமாக இருக்கும்

D) கூற இயலாது

விளக்கம்: டாபர்னீர் மூன்று தனிமங்களை அவற்றின் நிறையின் அடிப்படையில் ஏறு வரிசையில் அடுக்கும்போது நடுவில் உள்ள தனிமத்தின் அணுநிறை மற்ற இரண்டு தனிமங்களின் அணுநிறையின் சராசரிக்கு ஏறத்தாழ சமமாக இருக்கும்.

16) மெண்லீவ் எந்த தனிமத்தின் அணுநிறையை தவறாக கண்கிட்டு பின் சரி செய்தார்?

A) புளோரின்

B) போரான்

C) பெரிலியம்

D) நியான்

விளக்கம்: முதலில் பெரிலியத்தின் அணுநிறை 14 என அறியப்பட்டது. இதை மெண்டலீவ் மறுபடியும் ஆராய்ந்து அணுநிறை 9 எனக் கண்டறிந்து சரியான தொகுதியில் அதை வைத்தார்.

17) கூற்று: ஒத்த பண்புகளை உடைய தனிமங்கள் ஒரே தொகுதியில் வைக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்ட போது சில தனிமங்கள் அவற்றிற்கான தொகுதியில் வைக்கப்பட முடியாமல் போனது.

காரணம்: அவற்றிற்கென்று தீர்மானிக்கப்பட்ட அணுஎண் தவறு

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: ஒத்த பண்புகளை உடைய தனிமங்கள் ஒரே தொகுதியில் வைக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்ட போது சில தனிமங்கள் அவற்றிற்கான தொகுதியில் வைக்கப்பட முடியாமல் போனது கண்டறியப்பட்டது. காரணம், அவற்றிற்கென்று தீர்மானிக்கப்பட்ட அணு நிறை தவறு. இது கண்டறியப்பட்டு பின் இந்த தவறு சரி செய்யப்பட்டது. எ. கா. பெரிலியம்

18) நியூலாந்து தனிம வரிசையில் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இரண்டு வேறுபட்ட தனிமங்கள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டன

2. முற்றிலும் மாறுபட்ட பண்புகளை உடைய சில தனிமங்கள் அதே தொகுதியில் வைக்கப்பட்டன.

3. பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்களுக்கு இடம் வழங்கப்பட்டிருந்தது.

4. இவரின் இக்கொள்கைகள் 1866ல் கண்டறியப்பட்டன.

A) 1, 2 மட்டும் சரி

B) 1, 2, 3 சரி

C) 1, 2, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. இரண்டு வேறுபட்ட தனிமங்கள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டன

2. முற்றிலும் மாறுபட்ட பண்புகளை உடைய சில தனிமங்கள் அதே தொகுதியில் வைக்கப்பட்டன.

3. பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்களுக்கு இடம் வழங்கப்படவில்லை

4. இவரின் இக்கொள்கைகள் 1866ல் கண்டறியப்பட்டன.

19) நியூலாந்து என்பவர் எந்த ஆண்டு எண்ம விதியை கண்டறிந்தார்?

A) 1800

B) 1817

C) 1835

D) 1866

விளக்கம்: 1866இல், ஜான் நியூலாந்து 56 அறியப்பட்ட தனிமங்களை அவற்றின் அணு நிறையின் அடிப்படையில் ஏறு வரிசையில் அணு நிறையின் அடிப்படையில் ஏறு வரிசையில் ஒழுங்கமைத்தார்

20) கூற்று: வேதியியல் ஆராய்ச்சிக்கு மேலும் தூண்டுதலை ஏற்படுத்துவதாக அமைந்தது – மெண்டலீவ் தனிம வரிசை அட்டவணை

காரணம்: பிற்காலத்தில் கண்டறியப்படும் தனிமங்களின் பண்புகள் கூட முன்னறியப்பட்டதாக அமைந்தது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்:அந்த நேரத்தில் கண்டுப்பிடிக்க்கப்படாத தனிமங்களுக்கு என்று அட்டவணையின் பத்தியில் இடம் விடப்பட்டது. அவற்றின் பண்புகள் கூட முன்னறியப்பட்டதாக அமைந்தது. இது வேதியியல் ஆராய்ச்சியை இன்னும் தூண்டுவதாக அமைந்தது. எ. கா. மெண்டலீவ், அலுமினியம் மற்றும் சிலிகானுக்குக் கீழே வரக்கூடிய தனிமங்களுக்கு எகா அலுமினியம் மற்றும் எகா சிலிகான் எனப் பெயரிட்டார். மேலும் அவற்றின் பண்புகள் இவ்வாறுதான் இருக்கும் என முன்னறிவித்தார்.

21) தற்பொழுது எத்தனை தனிமங்கள் அறியப்பட்டுள்ளன?

A) 118

B) 63

C) 31

D) 112

விளக்கம்: தற்பொழுது வரை 118 தனிமங்கள் அறியப்பட்டுள்ளன. புதுப்புது தனிமங்களை கண்டுபிடிக்கும்போது அறிஞர்கள் அவற்றின் பண்புகளைக் குறித்தும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை அறிந்து கொள்ள ஆரம்பித்தனர்.

22) கூற்றுகளை ஆராய்க.

1. மென் உலோகங்கள் – செம்பு, வெள்ளி

2. கடின உலோகங்கள் – சோடியம், பொட்டாசியம்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. மென் உலோகங்கள் – சோடியம், பொட்டாசியம்

2. கடின உலோகங்கள் – செம்பு, வெள்ளி

23) ஜெர்மானியம் பற்றி எப்போது மெண்டலீவ் அறிவித்தார்?

A) 1869

B) 1872

C) 1871

D) 1886

விளக்கம்: மெண்டலீவ் என்பவர் 1869ல் அப்போது அறியப்பட்ட 56 தனிமங்களை கொண்டு ஆவர்த்தன விதி அடிப்படையில் வகைப்படுத்தினார். பிற்காலத்தில் கண்டறியப்பட்ட தனிமங்களின் பண்புகளை முன்னரே கண்டறிந்து கூறினார். அதில் ஒன்று ஜெர்மானியத்தின் பண்புகள்.

24) தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணு எண்ணைப் பொறுத்து இருக்குமே தவிர அவற்றின் நிறையைப் பொறுத்து இருக்காது என்று நிரூபித்தவர்?

A) டாபர்னீர்

B) நியூலாந்து

C) மெண்டலீவ்

D) ஹென்றி மோஸ்லே

விளக்கம்: ஆங்கில இயற்பியலாளர் ஹென்றி மோஸ்லே என்பவர் தன்னுடைய X-கதிர் சிதைவு சோதனை மூலம் தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணு எண்ணைப் பொறுத்து இருக்குமே தவிர அவற்றின் நிறையைப் பொறுத்து இருக்காது என்று நிரூபித்தார்.

25) எந்த ஆண்டு ஹென்றி மோஸ்லே நவீன கால தனிம வரிசை அட்டவணையை வெளியிட்டார்?

A) 1911

B) 1912

C) 1913

D) 1915

விளக்கம்: 1913இல் ஆங்கில் இயற்பியலாளர் ஹென்றி மோஸ்லே என்பவர் அணு எண்ணைப் பொறுத்து தனிமங்களை அட்டவணைப்படுத்தினார். இது நவீன தனிம வரிசை அட்டவணை எனப்படுகிறது.

26) கூற்றுகளை ஆராய்க.

1. மெண்டலீப் அட்டவணை – குறும் அட்டவணை

2. நவீன அட்டவணை – நீண்ட அட்டவணை

3. மெண்டலீப் அட்டவணை – தனிம அட்டவணையின் சுருக்கம்.

4. நியூலாந்து அட்டவணை – மும்மை அட்டவணை

A) 1, 2 சரி

B) 1, 2, 3 சரி

C) 1, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. மெண்டலீப் அட்டவணை – குறும் அட்டவணை

2. நவீன அட்டவணை – நீண்ட அட்டவணை

3. மெண்டலீப் அட்டவணை – தனிம அட்டவணையின் சுருக்கம்.

4. நியூலாந்து அட்டவணை – எண்ம விதி

27) கூற்றுகளை ஆராய்க.

1. ஒரு தனிமத்தின் அணு எண் அவற்றிலுள்ள புரோட்டான் மற்றும் எலக்ட்ரானின் எண்ணிக்கையை குறிக்கிறது.

2. ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் புரோட்டானின் எண்ணிக்கையைச் சார்ந்தவை.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஒரு தனிமத்தின் அணு எண் அவற்றிலுள்ள புரோட்டான் மற்றும் எலக்ட்ரானின் எண்ணிக்கையை குறிக்கிறது.

2. ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் புரோட்டான் மற்றும் எலக்ட்ரானின் எண்ணிக்கையைச் சார்ந்தவை.

28) தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின்—————–ன் தனிம வரிசை செயல்பாடுகளாகும்.

A) நிறை எண்

B) அணு எண்

C) ஐசோடோப்பு

D) ஐசோபார்

விளக்கம்: தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு எண்களின் தனிம வரிசை செயல்பாடுகளாகும். இதுவே நவீன ஆவர்த்தன விதி என்று கூறலாம். இந்த நவீன விதியை வைத்து நவீன தனிம வரிசை அட்டவணை உருவாக்கப்பட்டது.

29) நவீன தனிம வரிசை அட்டவணையில்______________தொடர்களும், _____________தொகுதிகளும் உள்ளன.

A) 7, 8

B) 7, 17

C) 7, 18

D) 7, 10

விளக்கம்: தனிம வரிசை அட்டவணையில் 7 தொடர்களும், 18 தொகுதிகளும் உள்ளன.

தொடர்கள் – கிடைமட்டமாக இருப்பது

தொகுதிகள் – செங்குத்தாக இருப்பது

30) ஆவர்த்தன விதியை பயன்படுத்தி எத்தனை தனிமங்கள் வரிசைப்படுத்தப்பட்டன?

A) 31

B) 63

C) 56

D) 118

விளக்கம்: தனிமங்களின் பண்புகள், அவை அணு நிறையின் அடிப்படையில் அடுக்கப்படும்போது ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் வருவதைக் கண்டறிந்தார். இதன் அடிப்படையில் இவர் தனிம ஆவர்த்தன விதியை உருவாக்கினார். இதனடிப்படையில் அந்த நேரத்தில்அறியப்பட்ட 56 தனிமங்கள் வகைப்படுத்தப்பட்டன.

31) பிற்காலத்தில் கண்டறியப்பட்ட தனிமங்களின் பண்புகளை முன்னரே கூறியவர்?

A) ரூதர்போர்டு

B) மெண்டலீவ்

C) டாபர்னீர்

D) நியூலாந்து

விளக்கம்: பிற்காலத்தில் கண்டறியப்பட்ட தனிமங்களின் பண்புகளை முன்னரே கூறியவர் மெண்டலீவ். அந்த நேரத்தில் கண்டறியப்படாத தனிமங்களுக்கு என்று அட்டவணையின் பத்தியில் இடம்விடப்பட்டது. அவற்றின் பண்புகள் கூட முன்னறியப்பட்டதாக அமைந்தது. இது வேதியியல் ஆராய்ச்சியை இன்னும் தூண்டுவதாக அமைந்தது.

32) பொருத்துக.

குழு தொகுதிகள்

அ. 1 – 1. இடைநிலை உலோகங்கள்

ஆ. 2 – 2. கார உலோகங்கள்

இ. 3-12 – 3. போரான் குடும்பம்

ஈ. 13 – 4. கார மண் உலோகங்கள்

A) 1, 2, 3, 4

B) 3, 4, 1, 2

C) 2, 1, 4, 3

D) 2, 4, 1, 3

விளக்கம்: 1 – கார உலோகங்கள்

2 – கார மண் உலோகங்கள்

3-12 – இடைநிலை உலோகங்கள்

13 – போரான் குடும்பம்

33) பின்னர் கண்டறியப்பட்ட ஜெர்மானியத்தின் பண்புகளை முன்னரே கூறிப் புகழ்பெற்றவர்?

A) ஹென்றி மோஸ்லே

B) டாபர்னீர்

C) நியூலாந்து

D) மெண்டலீவ்

விளக்கம்: மெண்டலீவ் காலத்தில் 56 தனிமங்கள் மட்டுமே கண்டறிப்பட்டு வகைப்படுத்தப்பட்டிருந்தாலும். அவர் பிற்காலத்தில் கண்டறியப்பட்ட தனிமங்களின் பண்புகளை முன்னரே கூறினார். எ.கா. மெண்டலீவ், அலுமினியம் மற்றும் சிலிகானுக்குக் கீழே வரக்கூடிய தனிமங்களுக்கு எ.கா அலுமினியம் மற்றும் எ.கா சிலிகான் எனப் பெயரிட்டார். மேலும் அவற்றின் பண்புகள் இவ்வாறுதான் இருக்கும் என முன்னறிவித்தார். அவரது காலத்திலேயே பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஜெர்மானியம் அவரின் கூற்று சரி என நிரூபித்தது.

34) ஜெர்மானித்தின் உண்மை பண்பு எப்போது அறியப்பட்டது?

A) 1871

B) 1869

C) 1856

D) 1886

விளக்கம்: ஜெர்மானியத்தின் பண்பு பற்றி 1871ல் கண்டறியப்படும் முன்னரே மெண்டலீவ் கூறினாலும். அதன் உண்மைப் பண்பு 1886-ல் தான் அறியப்பட்டது.

35) மெண்டலீவ் தனிம வரிசை அட்டவணை பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. பண்புகளில் அதிக வேறுபாடுள்ள தனிமங்கள் வெவ்வேறு தொகுதியில் வைக்கப்பட்டன.

2. ஹைட்ரஜனுக்கு தனி இடம் வழங்கினார்

3. ஹைட்ரஜன் ஒரு அலோகம் ஆகும்.

4. ஐசோடோப்புகளுக்கு தனியாக இடம் வழங்கினார்

A) 1, 2 தவறு

B) 3, 4 தவறு

C) 3 மட்டும் சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. பண்புகளில் அதிக வேறுபாடுள்ள தனிமங்கள் ஒரே தொகுதியில் வைக்கப்பட்டன.

2. ஹைட்ரஜனுக்கு தனி இடம் வழங்கப்படவில்லை

3. ஹைட்ரஜன் ஒரு அலோகம் ஆகும்.

4. ஐசோடோப்புகளுக்கு தனியாக இடம் வழங்கவில்லை.

36) கூற்றுகளை ஆராய்க.

1. மும்மை விதியை கூறியவர் – டாபர்னீர்

2. மும்மை விதி என்பது ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று தனிமங்களை வரிசைப்படுத்துதல்.

3. மூன்று தனிமங்களை அவற்றின் நிறையின் அடிப்படையில் ஏறு வரிசையில் அடுக்கும்போது நடுவில் உள்ள தனிமத்தின் அணு நிறை மற்ற இரண்டு தனிமங்களின் அணு நிறையின் சராசரிக்கு சமமாக இருக்காது

4. இவர் 1817-ல் மும்மை விதியை கூறினார்.

A) 1, 2 சரி

B) 1, 2, 4 சரி

C) 2, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. மும்மை விதியை கூறியவர் – டாபர்னீர்

2. மும்மை விதி என்பது ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று தனிமங்களை வரிசைப்படுத்துதல்.

3. மூன்று தனிமங்களை அவற்றின் நிறையின் அடிப்படையில் ஏறு வரிசையில் அடுக்கும்போது நடுவில் உள்ள தனிமத்தின் அணு நிறை மற்ற இரண்டு தனிமங்களின் அணு நிறையின் சராசரிக்கு சமமாக இருக்கும்.

4. இவர் 1817-ல் மும்மை விதியை கூறினார்.

37) ஒவ்வொரு எட்டாவது தனிமமும் சங்கீதத்தில் அமையும் படி தனிமங்களை வகைப்படுத்தியவர்?

A) டாபர்னீர்

B) நியூலாந்து

C) மெண்டலீவ்

D) ஹென்றி மோஸ்லே

விளக்கம்: நியூலாந்து ஒவ்வொரு எட்டாவது தனிமமும் சங்கீதத்தில் எட்டாவது சுருதியும்(ச, ரி, க, ம, ப, த, நி, ச) ஒத்திருப்பது போல முதலாவது தனிமத்தின் பண்பை ஒத்திருப்பதைக் கண்டறிந்தார். இதுவே எண்ம விதி என்று அறியப்பட்டது.

38) ஹென்றி மோஸ்லே என்பவர் யாருடைய அட்டவணையைப் பயன்படுத்தி நவீன அட்டவணையை உருவாக்கினார்?

A) டாபர்னீர்

B) நியூலாந்து

C) மெண்டலீவ்

D) ரூதர்போர்டு

விளக்கம்: நவீன கால அட்டவணை மெண்டலீஃப் அட்டவணையின் ஒரு விரிவு படுத்தலே ஆகும். இதனால் தான் மெண்டலீஃப் அட்டவணை குறும் அட்டவணை என்றும் நவீன அட்டவணை நீண்ட அட்டவணை என்றும்அறியப்படுகிறது.

39) பொருத்துக.

தனிமங்களின் எண்ணிக்கை ஆண்டு

அ. 118 – 1. 1800

ஆ. 31 – 2. 1865

இ. 63 – 3. 2020

A) 2, 3, 1

B) 1, 3, 2

C) 3, 1, 2

D) 3, 2, 1

விளக்கம்:

118 – 2020

31 – 1800

63 – 1865

40) எந்த ஆண்டு டாபர்னீர் மும்மை விதியை கூறினார்,

A) 1800

B) 1817

C) 1835

D) 1865

விளக்கம்: 1817இல் ஜோகன் வுல்ஃப்காங் டாபர்னீர் எனும் ஜெர்மானிய வேதியியலாளர் தனிமங்களை அவற்றின் அணு நிறைiயின் அடிப்படையில் வகைப்படுத்தும் ஒரு கருத்தை எடுத்துரைத்தார். இவர் தனிமங்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று தனிமங்கள் கொண்ட குழுக்களாக அல்லது தொகுதிகளாகப் பிரித்து அமைத்தார். இவர் இந்தக் குழுக்களை “மும்மை” என்று குறிப்பிட்டார் (மும்மை-மூன்று)

41) கூற்றுகளை ஆராய்க.

1. மெண்டலீவின் தனிம வரிசை அட்டவணை 1869இல் கண்டறியப்பட்டது

2. ஆவர்த்தன விதியை கண்டறிந்தவர் மெண்டலீவ்

3. 56 தனிமங்களை மட்டுமே வகைப்படுத்தினார்

4. இவரின் அட்டவணை தனிம வரிசை அட்டவணையின் சுருக்கம் என்று அழைக்கப்படுகிறது.

A) 1, 2 சரி

B) 1, 4 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. மெண்டலீவின் தனிம வரிசை அட்டவணை 1869இல் கண்டறியப்பட்டது

2. ஆவர்த்தன விதியை கண்டறிந்தவர் மெண்டலீவ்

3. 56 தனிமங்களை மட்டுமே வகைப்படுத்தினார்

4. இவரின் அட்டவணை தனிம வரிசை அட்டவணையின் சுருக்கம் என்று அழைக்கப்படுகிறது.

42) கூற்று: நவீன கால தனிம வரிசை அட்டவணையானது அணு எண்ணின் ஏறு வரிசையில் அமைக்கப்பட்டது

காரணம்: ஆங்கில இயற்பியலாளர் ஹென்றி மோஸ்லே என்பவர் தன்னுடைய X-கதிர் சிதைவு சோதனை மூலம் தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணு எண்ணைப் பொறுத்து இருக்குமே தவிர அவற்றின் நிறையைப் பொறுத்து இருக்காது என்று நிரூபித்தார்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: 1913ல் ஆங்கில இயற்பியலாளர் ஹென்றி மோஸ்லே என்பவர் தன்னுடைய X-கதிர் சிதைவு சோதனை மூலம் தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணு எண்ணைப் பொறுத்து இருக்குமே தவிர அவற்றின் நிறையைப் பொறுத்து இருக்காது என்று நிரூபித்தார். இதன் விளைவாக நவீன கால தனிம வரிசை அட்டவணையானது அணு எண்ணின் ஏறு வரிசையில் அமைக்கப்பட்டது.

43) பொருத்துக.

குழு தொகுதிகள்

அ. 14 – 1. அரிய வாயு அல்லது மந்த வாயு

ஆ. 15 ` – 2. ஹாலஜன்கள் அல்லது உப்பீனிகள்

இ. 16 – 3. ஆக்ஸிஜன்கள் அல்லது சால்கோஜன் குடும்பம்

ஈ. 17 – 4. நைட்ரஜன் குடும்பம்

உ. 18 – 5. கார்பன் குடும்பம்

A) 5, 4, 3, 1, 2

B) 5, 4, 3, 2, 1

C) 5, 3, 4, 2, 1

D) 4, 5, 3, 2, 1

விளக்கம்:

குழு தொகுதிகள்

14 – கார்பன் குடும்பம்

15 – நைட்ரஜன் குடும்பம்

16 – ஆக்ஸிஜன்கள் அல்லது சால்கோஜன் குடும்பம்

17 – ஹாலஜன்கள் அல்லது உப்பீனிகள்

18 – அரிய வாயு அல்லது மந்த வாயு

44) கூற்றுகளை ஆராய்க (நீள் வரிசை தனிம அட்டவணை அமைப்புகளின் சிறப்பு பற்றி)

1. அனைத்து தனிமங்களும் அவற்றின் அதிகரிக்கும் நிறை எண்ணிற்கு ஏற்றாற்போல் அமைக்கப்பட்டுள்ளன.

2. தனிம அட்டவணையில் தனிமங்கள் கிடைமட்டமாக வரிசைப்படுத்தப்பட்ட அமைப்பு ‘தொகுதிகள்’ என அழைக்கப்படுகிறது. மொத்தம் 18 தொகுதிகள் உள்ளன.

3. தனிம வரிசை அட்டவணையில் மேலிருந்து கீழாக செங்குத்தாக உள்ள பத்தி ‘தொடர்கள்’ எனப்படும். தனிம அட்டவணையில் மொத்தம் 7 தொடர்கள் உள்ளன.

4. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள தனிமங்கள் பண்பிற்கு ஏற்ப இவை பல குடும்பங்களாகப் பிரிக்கப்படாமல் ஒரே குழுவாக அமைக்கப்பட்டுள்ளன.

A) 1, 4 சரி

B) 2, 3 சரி

C) 1, 2 சரி

D) அனைத்தும் தவறு

விளக்கம்: 1. அனைத்து தனிமங்களும் அவற்றின் அதிகரிக்கும் அணு எண்ணிற்கு ஏற்றாற்போல் அமைக்கப்பட்டுள்ளன.

2. தனிம அட்டவணையில் தனிமங்கள் மேலிருந்து கீழாக செங்குத்தாக வரிசைப்படுத்தப்பட்ட அமைப்பு ‘தொகுதிகள்’ என அழைக்கப்படுகிறது. மொத்தம் 18 தொகுதிகள் உள்ளன.

3. தனிம வரிசை அட்டவணையில் கிடைமட்டமாக உள்ள பத்தி ‘தொடர்கள்’ எனப்படும். தனிம அட்டவணையில் மொத்தம் 7 தொடர்கள் உள்ளன.

4. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள தனிமங்கள் பண்பிற்கு ஏற்ப இவை பல குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

45) மெண்டலீவின் தனிம வரிசை அட்டவணை பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இதில் ஏழு நீண்ட செங்குத்து தொகுதிகளும் எட்டு கிடைமட்ட தொடர்களும் காணப்படுகின்றன.

2. ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு துணைத்தொகுதிகள் A மற்றும் B உண்டு.

3. ஒரு தொகுதியில் காணப்படும் எல்லா தனிமங்களும் ஒத்த பண்பினைப் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை.

4. அப்போது கண்டறியப்படாத தனிமங்களுக்கு என்று பத்தியில் இடம் விடப்பட்டது

A) 1, 2, 4 சரி

B) 1, 3 தவறு

C) 2, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. இதில் எட்டு நீண்ட செங்குத்து தொகுதிகளும் ஏழு கிடைமட்ட தொடர்களும் காணப்படுகின்றன.

2. ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு துணைத்தொகுதிகள் A மற்றும் B உண்டு.

3. ஒரு தொகுதியில் காணப்படும் எல்லா தனிமங்களும் ஒத்த பண்பினைப் பெற்றிருக்கும்

4. அப்போது கண்டறியப்படாத தனிமங்களுக்கு என்று பத்தியில் இடம் விடப்பட்டது

46) கூற்றுகளை ஆராய்க.

1. 1800ல் 63 தனிமங்கள் மட்டுமே அறியப்பட்டிருந்தன.

2. 1835ல் மும்மை விதி அறியப்பட்டது

3. மும்மை விதி என்பது ஒரு தொகுதிக்கு முப்பது தனிமங்களை வரிசைப்படுத்துதல்

4. தற்போது வரை 112 தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன

A) 1, 2 சரி

B) 2, 3 சரி

C) அனைத்தும் சரி

D) அனைத்தும் தவறு

விளக்கம்: 1. 1800ல் 31 தனிமங்கள் மட்டுமே அறியப்பட்டிருந்தன.

2. 1817ல் மும்மை விதி அறியப்பட்டது

3. மும்மை விதி என்பது ஒரு தொகுதிக்கு மூன்று(மும்மை – மூன்று) தனிமங்களை வரிசைப்படுத்துதல்

4. தற்போது வரை 118 தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன

47) பொருத்துக (டாபர்னீர்-ன் மும்மை விதிப்படி அணுவின் நிறை)

அ. லித்தியம் – 1. 35. 5

ஆ. சோடியம் – 2. 23

இ. பொட்டாசியம் – 3. 6. 9

ஈ. குளோரின் – 4. 39. 1

A) 3, 2, 4, 1

B) 3, 4, 2, 1

C) 4, 3, 2, 1

D) 3, 1, 2, 4

விளக்கம்: லித்தியம் – 6. 9

சோடியம் – 23

பொட்டாசியம் – 39. 1

குளோரின் – 35. 5

48) நீள் வரிசை தனிம அட்டவணை அமைப்பில், தனிமங்கள் அவற்றின் அணுக்களில் உள்ள எதன் எண்ணிக்கைக்கு ஏற்ப வரிசையாக அமைக்கப்படும்

A) எலக்ட்ரான்

B) புரோட்டான்

C) நியூட்ரான்

D) அணுக்களில் உள்ள கூடுகள்

விளக்கம்: நீள் வரிசை தனிம அட்டவணை அமைப்பில், தனிமங்கள் அவற்றின் அணுக்களில் உள்ள கூடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வரிசைகளில் அமைக்கப்படும்

49) ஜெர்மானியத்தின் நிறம்?

A) பழுப்பு

B) நீலம்

C) மஞ்சள்

D) அடர் சாம்பல்

விளக்கம்: ஜெர்மானியம் அடர் சாம்பல் நிறம் கொண்டது. இதன் பண்புகள் பற்றி 1871ல் மெண்டலீவ் கூறும் போது அது அடர் சாம்பல் நிறத்தில் இருக்கும் என கணித்தார். அது போல் அதன் உண்மை பண்பு 1886 இல் வெளியிடப்பட்ட போது அடர் சாம்பல் நிறத்துடன் இருப்பது உறுதியானது.

50) கூற்று: ஜான் நியூலாந்து என்பவர் எண்ம விதியை கண்டறிந்தார்

காரணம்:ஒவ்வொரு எட்டாவது தனிமமும் சங்கீத்தில் எட்டாவது சுருதியும் முதல் சுருதியும் ஒத்திருப்பது போல முதலாவது தனிமத்தின் பண்பை ஒத்துள்ளது

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: ஜான் நியூலாந்து என்பவர் தனிமங்களை அவற்றின் அணு நிறையின் அடிப்படையில் ஏறு வரிசையில் ஒழுங்கமைத்தார். ஒவ்வொரு எட்டாவது தனிமமும் சங்கீத்தில் எட்டாவது சுருதியும் முதல் சுருதியும் ஒத்திருப்பது போல முதலாவது தனிமத்தின் பண்பை ஒத்துள்ளது. எனவே நியூலாந்து கண்டறிந்த விதி எண்ம விதி என்று அறியப்பட்டது

51) கூற்றுகளை ஆராய்க.

1. தனிமத்தில் அவற்றின் எலக்ட்ரான்கள் உட்கருவைச் சுற்றி கூடுகளில் வைக்கப்பட்டுள்ளன.

2. இக்கூடுகளுக்கு துணைக் கூடுகள் கிடையாது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இண்டும் தவறு

விளக்கம்: 1. தனிமத்தில் அவற்றின் எலக்ட்ரான்கள் உட்கருவைச் சுற்றி கூடுகளில் வைக்கப்பட்டுள்ளன.

2. இக்கூடுகளுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைக் கூடுகள் உண்டு.

52) கூற்று: தொகுதி 1 என்பது கார உலோகங்கள் என அழைக்கப்படுகிறது (ஹைட்ரஜன் தவிர)

காரணம்: இவை நீருடன் வினைபுரிந்து உருவாக்கும் கரைசலானது காய்கறிகளிலிருந்து கிடைக்கும் ஊதா சாயத்தை சிவப்பு நிறத்திற்கு மாற்றும். இந்தக் கரைசல்கள் அதிக காரத்தன்மை கொண்டதாகக் காணப்படுகின்றன.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டம் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: ஹைட்ரஜன் தவிர தொகுதி ஒன்றின் தனிமங்கள் உலோகங்களாகும். இவை நீருடன் வினைபுரிந்து உருவாக்கும் கரைசலானது காய்கறியிலிருந்து கிடைக்கும் சிவப்பு சாயத்தை ஊதா நிறத்திற்கு மாற்றும். இந்தக் கரைசல்கள் அதிக காரத்தன்மை கொண்டதாகக் காணப்படுகின்றன.

53) எந்த தொகுதி புவி என்று முன்பு அழைக்கப்பட்டன?

A) 2

B) 1

C) 3-12

D) 13

விளக்கம்: தொகுதி 2இன் தனிமங்களும் உலோகங்கள். இவை முன்பு புவி என்று அழைக்கப்பட்டன.

54) உலோகப் போலி என்பது?

A) உலோகத்தின் பண்புகளை மிகுதியாகப் பெற்றது

B) உலோகத்தின் பண்புகளை மட்டுமே பெற்றது

C) உலோகம் மற்றும் அலோகம் ஆகியவற்றின் பண்புகளை பெற்றது

D) உலோகம் மற்றும் அலோகம் ஆகியவற்றின் பண்புகளை பெறாதது.

விளக்கம்: உலோகம் மற்றும் அலோகம் ஆகியவற்றின் பண்புகளைக் கொண்டவை உலோகப் போலிகளாகும். எ. கா போரான், ஆர்செனிக்

55) கீழ்கண்டவற்றில் எது அறைவெப்பநிலையில் திண்மமாக இல்லாத உலோகம்?

A) லித்தியம்

B) பிரான்சியம்

C) பெரிலியம்

D) பாதரசம்

விளக்கம்: உலோகங்களில் பாதரசத்தைத் தவிர அனைத்து உலோகங்களும் அறை வெப்பநிலையில் திண்மமாகவே இருக்கும்.

56) பொருத்துக.

அ. . கார உலோகங்கள் – 1. லித்தியம் முதல் ப்ரான்சியம் வரை

ஆ. கார மண் உலோகங்கள் – 2. Al, , Ga, In, Ti, Sn, Pb மற்றும் Bi

இ. இடைநிலை உலோகங்கள் – 3. பெரிலியம் முதல் ரேடியம் வரை

ஈ. p தொகுதி தனிமங்கள் – 4. தொகுதி 3 முதல் 12 வரை

A) 2, 3, 4, 1

B) 1, 3, 4, 2

C) 1, 2, 4, 3

D) 1, 4, 2, 3

விளக்கம்:கார உலோகங்கள் – லித்தியம் முதல் ப்ரான்சியம் வரை

கார மண் உலோகங்கள் – பெரிலியம் முதல் ரேடியம் வரை

இடைநிலை உலோகங்கள் – தொகுதி 3 முதல் 12 வரை

p தொகுதி தனிமங்கள் – Al, , Ga, In, Ti, Sn, Pb மற்றும் Bi

57) எண்ம விதியில் இடம்பெற்றுள்ள தனிமங்களின் எண்ணிக்கை?

A) 31

B) 63

C) 56

D) 118

விளக்கம்: 1866ல், ஜான் நியூலாந்து 56 அறியப்படட தனிமங்களை அவற்றின் அணு நிறையின் அடிப்படையில் ஏறுவரிசையில் ஒழுங்கமைத்தார். இது எண்ம விதி என்று அறியப்பட்டது.

58) அலோகங்கள் எந்த தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளன?

A) p

B) s

C) d

D) f

விளக்கம்: அலோகமானது p தொகுதியில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. எ. கா. கார்பன், நைட்ரஜன், ஆக்ஸஜன் போன்றவை.

59) கூற்றுகளை ஆராய்க.

1. முதன்மைக் கூடுகள் – K, L, M, N

2. துணைக் கூடுகள் – S, P, D, F

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. முதன்மைக் கூடுகள் – K, L, M, N

2. துணைக் கூடுகள் – s, p, d, f

60) எப்போது மக்கள் வெண்கலம் என்ற ஒரு உலோகக் கலவையை உபயோகித்தனர்?

A) கி. மு 3500

B) கி. மு. 3000

C) கி. மு. 2000

D) கி. மு. 2500

விளக்கம்: கி. மு 3500ல் மக்கள் வெண்கலம் என்ற ஒரு உலோகக் கலவையை உபயோகித்தனர். எனவே, உலோகக் கலவையை உருவாக்குவது மற்றும் உபயோகப்படுத்துவது ஏற்கனவே வழக்கத்தில் இருந்ததுதான்.

61) பித்தளை என்பது எந்த இரண்டு உலோகங்களை சேர்ப்பதன் மூலம் பெறப்படுகிறது?

A) செம்பு மற்றும் துத்தநாகம்

B) செம்பு மற்றும் இரும்பு

C) செம்பு மற்றும் காப்பர்

D) செம்பு மற்றும் கோபால்ட்

விளக்கம்: கி. மு 3500ல் மக்கள் வெண்கலம் என்ற ஒரு உலோகக் கலவையை உபயோகித்தனர். இது செம்பு மற்றும் துத்தநாகம் சேர்ந்த ஒரு கலவையாகும்.

62) உலோக கலவையின் பயன்பாடுகளில் தவறானதை தேர்வு செய்க.

A) இவை விரைவில் துருப்பிடிப்பதும், அரித்துப் போவதும் இல்லை. அப்படியே அரித்தாலும் சிறிதளவே சேதமடையும்

B) இவை தூய உலோகத்தை விட கடினமாகவும் வலிமையாகவும் இருக்கும்

C) இவை தூய உலோகத்தை விட கடத்தும் தன்மை அதிகம் பெற்றவை.

D) சிலவற்றின் உருகுநிலை தூய உலோகத்தின் உருகுநிலையை விட குறைவு.

விளக்கம்: 1. இவை விரைவில் துருப்பிடிப்பதும், அரித்துப் போவதும் இல்லை. அப்படியே அரித்தாலும் சிறிதளவே சேதமடையும்

2. இவை தூய உலோகத்தை விட கடினமாகவும் வலிமையாகவும் இருக்கும் (எ. கா) தங்கம் செம்போடு கலக்கப்படும்போது தூய தங்கத்தை விட வலிமையானதாக இருக்கும்

3. இவை தூய உலோகத்தை விட கடத்தும் தன்மை குறைவு (எ. கா) செம்பு அதன் உலோகக் கலவைகளாகிய பித்தளை மற்றும் வெண்கலத்தை விட நன்கு வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தும்

4. சிலவற்றின் உருகுநிலை தூய உலோகத்தின் உருகுநிலையை விட குறைவு(எ. கா) பற்றாசு என்பது ஈயம் மற்றும் வெள்ளீயத்தின் கலவை. இதன் உருகுநிலை குறைவு.

63) கூற்றுகளை ஆராய்க.

1. 1865ல் 63 தனிமங்கள் அறியப்பட்டிருந்தன.

2. 1866-ல் எண்ம விதி 56 அறியப்பட்ட தனிமங்களை கொண்டு உருவாக்கப்பட்டது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இண்டும் சரி

D) இண்டும் தவறு

விளக்கம்: 1. 1865ல் 63 தனிமங்கள் அறியப்பட்டிருந்தன.

2. 1866-ல் எண்ம விதி 56 அறியப்பட்ட தனிமங்களை கொண்டு உருவாக்கப்பட்டது.

64) எதைத் தவிர தொகுதி 1 உள்ள தனிமங்கள் உலோகங்கள் ஆகும்?

A) லித்தியம்

B) சோடியம்

C) பொட்டாசியம்

D) ஹைட்ரஜன்

விளக்கம்: ஹைட்ரஜன் தவிர தொகுதி 1 ல் உள்ள தனிமங்கள் உலோகங்கள் ஆகும். ஹைட்ரஜன் அலோகம்.

65) பிரதிநிதித்துவ தனிமங்கள் என்று அழைக்கப்படும் தொகுதி எது?

A) p

B) s

C) d

D) f

விளக்கம்: பிரதிநிதித்துவ தனிமங்கள் என்று அழைக்கப்படுவது p தொகுதி தனிமங்கள் ஆகும். 13முதல் 18 வரையுள்ளவை பிரதிநிதித்துவ தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

66) கூற்று: p தொகுதி பெரிய அளவில் வேறுபட்ட தனிமங்களின் சங்கமமாகும்.

காரணம்: இந்த ஒரு தொகுதியில் மட்டுமே உலோகங்கள், அலோகங்கள் மற்றும் உலோகப் போலிகள் என்ற மூன்று வகைப்பாடும் காணப்படுகின்றன.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: p தொகுதி பெரிய அளவில் வேறுபட்ட தனிமங்களின் சங்கமமாகும். இந்த ஒரு தொகுதியில் மட்டுமே உலோகங்கள், அலோகங்கள் மற்றும் உலோகப் போலிகள் என்ற மூன்று வகைப்பாடும் காணப்படுகின்றன.

67) இடைநிலைத் தனிமங்கள் என அழைக்கப்படும் தொகுதி?

A) p

B) s

C) d

D) f

விளக்கம்: d தொகுதி தனிமங்கள் இடைநிலைத் தனிமங்கள் என அழைக்கப்படுகின்றன. 3 முதல் 12 தொகுதி வரையுள்ள தனிமங்கள் இடைநிலைத் தனிமங்கள் ஆகும்

68) f தொகுதி பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இவை லாந்தனத்தை அடுத்துள்ள லாந்தனைடுகள் எனப்படும் 14 தனிமங்களை உள்ளடக்கியதாகும்.

2. இவை ஆக்டினத்தை அடுத்துள்ள ஆக்டினைடுகள் எனப்படும் 10 தனிமங்களையும் உள்ளடக்கியதாகும்.

3. இவை தனிம வரிசை அட்டவணையில் அடிப்பாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

4. இவை இடைநிலைத் தனிமங்கள் என அழைக்கப்படுகின்றன.

A) 1, 3 சரி

B) 2, 4 சரி

C) 1, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. இவை லாந்தனத்தை அடுத்துள்ள லாந்தனைடுகள் எனப்படும் 14 தனிமங்களை உள்ளடக்கியதாகும்.

2. இவை ஆக்டினத்தை அடுத்துள்ள ஆக்டினைடுகள் எனப்படும் 14 தனிமங்களையும் உள்ளடக்கியதாகும்.

3. இவை தனிம வரிசை அட்டவணையில் அடிப்பாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

4. இவை உள் இடைநிலைத் தனிமங்கள் என அழைக்கப்படுகின்றன.

69) கீழ்க்கண்டவற்றில் எது பிரிதிநிதித்துவ தனிமம் அல்ல?

A) போரான்

B) புளுரின்

C) கார்பன்

D) ஹீலியம்

விளக்கம்: p தொகுதி தனிமங்கள் பிரிதிநிதித்துவ தனிமங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை 13-18 தொகுதி வரை உள்ளன. இவற்றில் போரான், கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், புளுரின் குடும்பம் மற்றும் மந்த வாயுக்கள்(ஹீலியம் தவிர) அடங்கும்.

70) நியூலாந்தின் அட்டணைவணையில் எட்டாவது தனிமமான எது முதல் தனிமமான ஹைட்ரஜனுடன் ஒத்திருக்கிறது?

A) கார்பன்

B) நைட்ரஜன்

C) குளோரின்

D) புளுரின்

விளக்கம்: நியூலாந்தின் அட்டவணையில் எட்டாவது தனிமம் புளுரின் முதல் தனிமமான ஹைட்ரஜனுடன் ஒத்திருக்கிறது. நியூலாந்தின் அட்டவணையில் முதல் தனிமமும் எட்டாவது தனிமும் பண்புகளில் ஒத்திருப்பதால் இதனை எண்ம விதி என்று அழைக்கிறோம்.

71) தங்கம் செய்பவர்கள் அதனை வலிமையாக்க கீழக்கண்ட எந்த உலோகத்தை சேர்ப்பார்கள்?

A) பித்தளை

B) காப்பர்

C) செம்பு

D) துத்தநாகம்

விளக்கம்: தங்கம் செம்போடு கலக்கப்படும்போது தூய தங்கத்தை விட வலிமையானதாக இருக்கும். இதுவே உலோக கலவை எனப்படும்

72) d தொகுதி தனிமங்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

A) 3-12 தொகுதி வரை

B) தனிம வரிசை அட்டவணையின் மையத்தில் காணப்படுகிறது.

C) இவற்றின் பண்புகள் s தொகுதி மற்றும் p தொகுதி தனிமங்களுக்கு இடையில் காணப்படும்.

D) உள் இடைநிலை தனிமங்கள் என அழைக்கப்படுகிறது

விளக்கம்: 1. 3-12 தொகுதி வரை

2. தனிம வரிசை அட்டவணையின் மையத்தில் காணப்படுகிறது.

3. இவற்றின் பண்புகள் s தொகுதி மற்றும் p தொகுதி தனிமங்களுக்கு இடையில் காணப்படும்.

4. இடைநிலை தனிமங்கள் என அழைக்கப்படுகிறது

73) உலோகம், அலோகம் மற்றும் உலோகப் போலி என அனைத்து வகையும் உள்ள தொகுதி எது?

A) p

B) s

C) d

D) f

விளக்கம்: p தொகுதி உலோகங்கள், அலோகங்கள் மற்றும் உலோகப் போலிகள் என அனைத்தும் கலந்த தொகுதி ஆகும். இதனை பிரதிநிதித்துவ தனிமங்கள் என்று அழைக்கிறோம்.

74) கூற்று: d தொகுதி தனிமங்கள் இடைநிலைத் தனிமங்கள் என அழைக்கப்படுகின்றன.

காரணம்: இவை தனிம வரிசை அட்டவணையின் அடிப்பாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: d தொகுதி தனிமங்கள் இடைநிலைத் தனிமங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை தனிம அட்டவணையின் மையத்தில் காணப்படுகின்றன. இவற்றின் பண்புகள் ள தொகுதி மற்றும் p தொகுதி தனிமங்களுக்கு இடையில் காணப்படும்.

75) நவீன அட்டவணையில் அலோகங்கள் எங்கு அமைந்துள்ளன?

A) மேல் இடது

B) மேல் வலது

C) கீழ் இடது

D) கீழ் வலது

விளக்கம்: நவீன தனிம வரிசை அட்டவணை உலோகங்களையும் அலோகங்களையும் தனித்தனியாக பிரிக்கிறது. அலோகங்கள் அட்டவணையின் மேல் வலது மூலையில் அமைந்துள்ளன.

76) கூற்றுகளை ஆராய்க (நவீன தனிம வரிசை அட்டவணை)

1. லாந்தனைடுகளும், ஆக்டினைடுகளும் அட்டவணையின் அடியில் வைக்கப்பட்டதற்கு சரியான காரணம் கொடுக்கப்படவில்லை

2. உலோகங்களையும் அலோகங்களையும் தனித்தனியாக பிரிக்கிறது.

3. இடைநிலை தனிமங்களின் பண்புகள் அவற்றின் இடது மற்றும் வலதுபுறம் உள்ள தனிமங்களின் பண்புகளை பெற்றிருப்பதால் அவை நடுவில் வைக்கப்பட்டுள்ளன.

4. ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகள் ஒரே அணு எண்ணைக் கொண்டுள்ளதால் அவற்றிற்கு ஒரே அமைவிடம் போதும் என எடுத்துக் கொள்ளப்பட்டது.

A) 1, 2 சரி

B) 1, 3 தவறு

C) 2, 4 தவறு

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. லாந்தனைடுகளும், ஆக்டினைடுகளும் அட்டவணையின் அடியில் வைக்கப்பட்டதற்கு சரியான காரணம் கொடுக்கப்பட்டுள்ளது

2. உலோகங்களையும் அலோகங்களையும் தனித்தனியாக பிரிக்கிறது.

3. இடைநிலை தனிமங்களின் பண்புகள் அவற்றின் இடது மற்றும் வலதுபுறம் உள்ள தனிமங்களின் பண்புகளுக்கு இடைப்பட்டதாக இருப்பதால் அவை நடுவில் வைக்கப்பட்டுள்ளன.

4. ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகள் ஒரே அணு எண்ணைக் கொண்டுள்ளதால் அவற்றிற்கு ஒரே அமைவிடம் போதும் என எடுத்துக் கொள்ளப்பட்டது.

77) பொருத்துக.

அ. s தொகுதி – 1. உள் இடைநிலைத் தனிமங்கள்

ஆ. p தொகுதி – 2. இடைநிலைத் தனிமங்கள்

இ. d தொகுதி – 3. பிரதிநிதித்துவ தனிமங்கள்

ஈ. f தொகுதி – 4. புவி

A) 3, 2, 1, 4

B) 3, 4, 1, 2

C) 4, 2, 3, 1

D) 4, 3, 2, 1

விளக்கம்: s தொகுதி – புவி

p தொகுதி – பிரதிநிதித்துவ தனிமங்கள்

d தொகுதி – இடைநிலைத் தனிமங்கள்

f தொகுதி – உள் இடைநிலைத் தனிமங்கள்

78) உலோகங்களுக்கு பொருத்தமானது?

1. பொதுவாக கடினமானது 2. பிரகாசமற்றது

3. கம்பியாக நீட்டக்கூடியது 4. தகடாக அடிக்க முடியாது

5. உருகக் கூடியது 6. வெப்பத்தை கடத்தும்

7. மின்சாரத்தை கடத்தாது.

A) 1, 3, 5, 6

B) 2, 4, 7

C) 1, 2, 3, 5, 6

D) 1, 5, 6, 7

விளக்கம்: 1. பொதுவாக கடினமானது 2. பிரகாசமானது

3. கம்பியா நீட்டக்கூடியது 4. தகடாக அடிக்க முடியும்

5. உருக்கக் கூடியது 6. வெப்பத்தை கடத்தும்

7. மின்சாரத்தை கடத்தும்

79) ஹைட்ரஜன் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. மிகவும் லேசான தனிமம்

2. தனிம வரிசை அட்டவணையின் முதல் தனிமம்.

3. இதன் அணு அமைப்பு மிகவும் எளிமையற்றது.

4. இது அட்டவணையில் தனி இடத்தில் உள்ளது.

A) 1, 4 சரி

B) 1, 2, 4 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. மிகவும் லேசான தனிமம்

2. தனிம வரிசை அட்டவணையின் முதல் தனிமம்.

3. இதன் அணு அமைப்பு மிகவும் எளிமையானது

4. இது அட்டவணையில் தனி இடத்தில் உள்ளது.

80) கூற்றுகளை ஆராய்க (நவீன தனிம வரிசை அட்டவணையின் சிறப்புகள் பற்றி)

1. இந்த அட்டவணை அணுவின் மிகுந்த அடிப்படைத் தன்மையை அணு எண்ணை அடிப்படையாகக் கொண்டது

2. ஒரு தனிமத்தின் அமைவிடத்தையும் அணு அமைப்பையும் தெளிவாக ஒருங்கிணைக்கிறது.

3. ஒரு தொடரில் அணு எண் அதிகரிக்க அதிகரிக்க ஆற்றல் கூடுகள் மந்த வாயு வரும் வரை மெதுவாக நிரம்புகின்றன.

4. ஒவ்வொரு தொகுதியும் தற்சார்பு உடையதல்ல. இதனால் துணைத்தொகுதிகள் வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.

A) 1, 4 சரி

B) 1, 2 சரி

C) 1, 2, 3 சரி

D) 1, 3 சரி

விளக்கம்: 1. இந்த அட்டவணை அணுவின் மிகுந்த அடிப்படைத் தன்மையை அணு எண்ணை அடிப்படையாகக் கொண்டது

2. ஒரு தனிமத்தின் அமைவிடத்தையும் அணு அமைப்பையும் தெளிவாக ஒருங்கிணைக்கிறது.

3. ஒரு தொடரில் அணு எண் அதிகரிக்க அதிகரிக்க ஆற்றல் கூடுகள் மந்த வாயு வரும் வரை மெதுவாக நிரம்புகின்றன.

4. ஒவ்வொரு தொகுதியும் தற்சார்பு உடையது. இதனால் துணைத்தொகுதிகள் வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.

81) கூற்று: மெண்டலீவ் அட்டவணையில் இடம் மாறி வைக்கப்பட்டிருந்த தனிமங்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டு தற்போது சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

காரணம்: நிறை எண் அடிப்படையில் நவீன அட்டவணை தயாரிக்கப்பட்டது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: மெண்டலீவ் அட்டவணையில் இடம் மாறி வைக்கப்பட்டிருந்த தனிமங்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டு தற்போது சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அணு எண் அடிப்படையில் நவீன அட்டவணை தயாரிக்கப்பட்டது.

82) கூற்றுகளை ஆராய்க.

1. ஹைட்ரஜன் ஒரு எலக்ட்ரானைப் பெற்று கார உலோகங்களைப் போல நேர் மின் அயனியாக மாறும் தன்மை உடையது

2. இது ஹேலஜன்கள் (உப்பீனிகள்) போல ஒரு எலக்ட்ரானை இழந்து ஹைட்ரேட்டுகளாக மாறும் தன்மை கொண்டுள்ளது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஹைட்ரஜன் ஒரு எலக்ட்ரானை இழந்து கார உலோகங்களைப் போல நேர் மின் அயனியாக மாறும் தன்மை உடையது

2. இது ஹேலஜன்கள் (உப்பீனிகள்) போல ஒரு எலக்ட்ரானை பெற்று ஹைட்ரேட்டுகளாக மாறும் தன்மை கொண்டுள்ளது.

83) கார உலோகங்கள்___________ தன்மையை பெற்றுள்ளன.

A) திரவங்கள்

B) வாயுக்கள்

C) திண்மங்கள்

D) கூற இயலாது

விளக்கம்: கார உலோகங்கள் திண்மங்கள், ஆனால் ஹைட்ரஜன் ஒரு வாயு.

84) கூற்று: தனிம வரிசை அட்டவணையில் ஹைட்ரஜனின் நிலைப்பாடு இன்னும் சர்ச்சைகுரியதாக உள்ளது.

காரணம்: ஹைட்ரஜனின் பண்புகள் தனித்தன்மை கொண்டவையாகும்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

விளக்கம்: தனிம வரிசை அட்டவணையில் ஹைட்ரஜனின் நிலைப்பாடு இன்னும் சர்ச்சைகுரியதாக உள்ளது. ஹைட்ரஜனின் பண்புகள் தனித்தன்மை கொண்டவையாகும்.

9th Science Lesson 13 Questions in Tamil

13] வேதிப்பிணைப்பு

1) அணுக்களின் தொகுதி எவ்வாறு அழைக்கப்படும்?

A) மூலக்கூறு

B) தனிமம்

C) சேர்மம்

D) அணு

விளக்கம்: அணுக்களால் இணைக்கப்பட்ட தொகுதியே மூலக்கூறு எனப்படுகிறது. மந்தவாயு அணுக்களைத் தவிர, மற்ற அணுக்கள் சாதாரண நிலையில் இயற்கையில் தனித்துக் காணப்படுவதில்லை. மூலக்கூறில் உள்ள அணுக்களும் குறிப்பிட்ட கவர்ச்சி விசையினால் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அணுக்களை இணைக்கும் இக்கவர்ச்சி விசையே வேதிப்பிணைப்பு எனப்படுகிறது

2) மந்த வாயு எலக்ட்ரான் அமைப்பு என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஏன் அணுக்கள் இணைந்து மூலக்கூறு உருவாக்குகின்றன என்பதை விளக்கியவர் யார்?

A) கோசல்

B) லூயிஸ்

C) A மற்றும் B

D) ரூதர்போர்டு

விளக்கம்: மந்த வாயு எலக்ட்ரான் அமைப்பு என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஏன் அணுக்கள் இணைந்து மூலக்கூறுகளை உருவாக்குகின்றன என்பதை கோசல் மற்றும் லூயிஸ் விளக்கினார். மந்த வாயு அணுக்கள் தங்களுக்கிடையிலோ அல்லது அணுக்களுடனோ எளிதில் இணைவதில்லை அல்லது அரிதாக இணைகின்றன. அவை ஒரு நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றிருப்பதையே இது காட்டுகிறது.

3) தனிமத்தை அதன் அணு எண்ணுடன் பொருத்துக

அ. ஹீலியம் – 1. 36

ஆ. நியான் – 2. 18

இ. ஆர்கான் – 3. 2

ஈ. கிரிப்டான் – 4. 10

A) 4, 3, 2, 1

B) 3, 4, 1, 2

C) 3, 4, 2, 1

D) 4, 2, 3, 1

விளக்கம்: தனிமம் அணுஎண்

ஹீலியம் – 2

நியான் – 10

ஆர்கான் – 18

கிரிப்டான் – 36

செனான் – 54

ரேடான் – 86

4) தனிமத்தை அதன் குறீட்டுடன் பொருத்துக.

அ. செனான் – 1. Xe

ஆ. ரேடான் – 2. He

இ. ஆர்கான் – 3. சRn

ஈ. ஹீலியம் – 4. Ar

A) 1, 3, 4, 2

B) 4, 3, 2, 1

C) 1, 4, 3, 2

D) 2, 1, 4, 3

விளக்கம்: செனான் – He

ரேடான் – Ne

ஆர்கான் – Ar

ஹீலியம் – Kr

செனான் – Xe

ரேடான் – Rn

5) தனிமத்துடன் அதன் கூடு எலக்ட்ரான் அமைப்புடன் பொருத்துக.

அ. செனான் – 1. 2, 8, 18, 18, 8

ஆ. ஹீலியம் – 2. 2

இ. கிரிப்டான் – 3. 2, 8, 18, 8

ஈ. ஆர்கான் – 4. 2, 8, 8

A) 4, 3, 2, 1

B)2, 4, 1, 3

C) 4, 2, 3, 1

D) 1, 2, 3, 4

விளக்கம்:

தனிமம் கூடு எலக்ட்ரான் அமைப்பு

ஹீலியம் – 2

நியான் – 2, 8

ஆர்கான் – 2, 8, 8

கிரிப்டான் – 2, 8, 18, 8

செனான் – 2, 8, 18, 18, 8

ரேடான் – 2, 8, 18, 32, 18, 8

6) எந்த மந்த வாயுவைத் தவிர மற்ற மந்த வாயுக்கள் அனைத்தும் அவற்றின் இணைதிறன் கூட்டில் 8 எலக்ட்ரான்களைப் பெற்றிருக்கும்?

A) ஹீலியம்

B) கிரிப்டான்

C) ஆர்கான்

D) நியான்

விளக்கம்: ஹீலியத்தைத் தவிர மற்ற வாயுக்கள் அனைத்தும் அவற்றின் இணைதிறன் கூட்டில் 8 எலக்ட்ரான்களைப் பெற்றிருக்கின்றன. ஹீலியம் அணுவும் முழுவதும் நிரம்பிய இணைதிறன் கூட்டைப் பெற்றிருப்பதால், அதில் மேலும் எலக்ட்ரான்களைச் சேர்க்க இயலாது.

7) மந்த வாயுக்களின் இணைதிறன் எவ்வளவு?

A) 0

B) 1

C) 2

D) 3

விளக்கம்: மந்த வாயு அணுக்கள் இணைதிறன் கூட்டில் நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றிருப்பதால் அவை எலக்ட்ரான்களை இழக்கும் அல்லது ஏற்கும் தன்மையைப் பெற்றிருப்பதில்லை. எனவே அவற்றின் இணைதிறன் பூச்சியமாகும்.

8) மந்த வாயுக்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. மிகவும் மந்தத் தன்மையைக் கொண்டிருப்பதால், மந்த வாயுக்கள் ஈரணு மூலக்கூறுகளைக் கூட உருவாக்குகின்றன.

2. ஆகவே, அவை ஓரணு வாயுக்களாகவே காணப்படுகின்றன.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்:மந்த வாயுக்கள், மிகவும் மந்தத்தன்மை பெற்றிருப்பதால் அவை ஈரணு மூலக்கூறுகளைக் கூட உருவாக்குவதில்லை. அவை ஓரணு வாயுக்களாகவே காணப்படுகின்றன.

9) கூற்றுகளை ஆராய்க.

1. ஒரு உலோகத்தின் இணைதிறன் அது ஏற்கும் எலக்ட்ரான் எண்ணிக்கை

2. ஒரு அலோகத்தின் இணைதிறன் அது இழக்கும் எலக்ட்ரான் எண்ணிக்கை

A)1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஒரு உலோகத்தின் இணைதிறன் அது இழக்கும் எலக்ட்ரான் எண்ணிக்கை

2. ஒரு அலோகத்தின் இணைதிறன் அது ஏற்கும் எலக்ட்ரான் எண்ணிக்கை

10) கோசல்-லூயிஸ் கொள்கை எப்போது முன்மொழியப்பட்டது?

A) 1916

B) 1922

C) 1928

D) 1932

விளக்கம்: மந்த வாயு எலக்ட்ரான் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு, 1916 ஆம் ஆண்டு கோசல் மற்றும் லூயிஸ் என்பார் அணுக்களின் வேதிச் சேர்க்கைகளுக்கான கொள்கையை முன்மொழிந்தனர். இதுவே “இணைதிறன் எலக்ட்ரான் கொள்கை” அல்லது “எட்டு எலக்ட்ரான் விதி” எனப்படுகிறது. இக்கொள்கைப்படி, மந்த வாயுக்கள் தவிர, மற்ற தனிமங்களின் அணுக்கள் முழுவதும் நிரப்பப்படாத இணைதிறன் கூட்டைப் பெற்றிருக்கின்றன. எனவே, மந்த வாயுக்கள் போன்று நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெறுவதற்காக அவை மற்ற அணுக்களுடன் இணைந்து மூலக்கூறுகளை உருவாக்குகின்றன.

11) எண்ம விதியை கூறியவர் யார்?

A) லூயிஸ்

B) கோசல்

C) A மற்றும் B

D) ரூதர்போர்டு

விளக்கம்: “எட்டு எலக்ட்ரான் விதி” அல்லது “இணைதிறன் எலக்ட்ரான் கொள்கை” அல்லது “எண்மவிதி” என்பவை கோசல், லூயிஸ் ஆகிய இருவராலும் முன்மொழியப்பட்டது. ஒரு அணுவானது மற்றொரு அணுவிடம் அதன் இணைதிறன் கூடு எலக்ட்ரான்களை இழந்தோ அல்லது பங்கீடு செய்தோ இணைதிறன் கூட்டில் 8 எலக்ட்ரான்களைப் பெற்றிருக்கும் விளைவு ஆகும்.

12) சோடியம் எளிதில் எந்த மந்த வாயுவின் எலக்ட்ரான் அமைப்பைப் பெற இயலும்?

A) He

B) Ne

C) Ar

D) Kr

விளக்கம்: சேடியத்தின் அணு எண் 11. இது தனது இணைதிறன் கூட்டிலிருந்து ஒரு எலக்ட்ரானை எளிதில் இழந்து Ne (நியான்) அணுவின் எலக்ட்ரான் அமைப்பைப் பெறும்.

13) குளோரின் அணுவானது எளிதில் எந்த மந்த வாயுவின் எலக்ட்ரான் அமைப்பைப் பெறும்?

A) He

B) Ne

C) Ar

D) Kr

விளக்கம்: குளோரின் அணுவின் எலக்ட்ரான் அமைப்பு 2, 8, 7. இதற்கு நெருக்கமான மந்த வாயுவான ஆர்கானின் எலக்ட்ரான் அமைப்பைப் பெற இதற்கு மேலும் ஒரு எலக்ட்ரான் மட்டுமே தேவைப்படுகிறது.

14) கூற்றுகளை ஆராய்க.

1. இணைதிறன் கூட்டில் தலா 1, 2, 3 எலக்ட்ரான்களைப் பெற்றிருக்கும் அணுக்கள் எலக்ட்ரான்களை ஏற்கவில்லை.

2. இணைதிறன் கூட்டில் தலா 5, 6, 7 எலக்ட்ரான்களைக் கொண்ட அணுக்கள் எலக்ட்ரான்களை ஏற்கும் தன்மையுடையவை.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: இணைதிறன் கூட்டில் தலா 1, 2, 3 எலக்ட்ரான்களைப் பெற்றிருக்கும் அணுக்கள் எலக்ட்ரான்களை இழக்க வல்லவை.

15) தனிமத்தை அதன் அணு எண்ணுடன் பொருத்துக.

அ. போரான் – 1. 11

ஆ. நைட்ரஜன் – 2. 7

இ. ஆக்ஸிஜன் – 3. 5

ஈ. சோடியம் – 4. 8

A) 3, 2, 4, 1

B) 3, 2, 1, 4

C) 1, 4, 3, 2

D) 4, 1, 3, 2

விளக்கம்:

போரான் – 5

நைட்ரஜன் – 7

ஆக்ஸிஜன் – 8

சோடியம் – 11

16) தனிமத்தை அதன் இணைதிறன் எலக்ட்ரான் எண்ணிகையுடன் பொருத்துக.

அ. போரான் – 1. 1

ஆ. நைட்ரஜன் – 2. 6

இ. ஆக்ஸிஜன் – 3. 3

ஈ. சோடியம் – 4. 5

A) 3, 4, 2, 1

B) 3, 4, 1, 2

C) 4, 3, 2, 1

D) 4, 1, 2, 3

விளக்கம்:

தனிமம் அணு எண் எலக்ட்ரான் இணைதிறன்

அமைப்பு எலக்ட்ரான்

போரான் 5 2, 3 3

நைட்ரஜன் 7 2, 5 5

ஆக்ஸிஜன் 8 2, 6 6

சோடியம் 11 2, 8, 1 1

17) ஒரு அணுவின் குறியீட்டைச் சுற்றி அவ்வணுவின் இணைதிறன் கூடு எலக்ட்ரானைப் புள்ளிகளாகக் குறிக்கும் அமைப்பு எது?

A) லூயிஸ் புள்ளி அமைப்பு

B) கோசல் புள்ளி அமைப்பு

C) பாஸ்டியர் புள்ளி அமைப்பு

D) A மற்றும் B

விளக்கம்: அணுக்கள் இணைந்து சேர்மங்கள் உருவாகும்போது அணுக்களின் இணைதிறன் எலக்ட்ரான்கள் பிணைப்பில் ஈடுபடுகின்றன. ஆகவே, இணைதிறன் எலக்ட்ரான் அமைப்பிற்கான குறியிடும் முறை ஒன்றைப் பெறுவது அவசியம். இதனை லூயிஸ் புள்ளி அமைப்பைக் கொண்டு செய்ய இயலும். ஒரு அணுவின் குறியீட்டைச் சுற்றி அவ்வணுவின் இணைதிறன் கூடு எலக்ட்ரான்களை புள்ளிகளாகக் குறிக்கும் அமைப்பு லூயிஸ் புள்ளி அமைப்பு ஆகும். இது எலக்ட்ரான் புள்ளி அமைப்பு எனவும் கூறப்படும். இணைதிறன் கூட்டிலுள்ள இணையாத எலக்ட்ரான் ஒற்றைப் புள்ளியாகவும், ஜோடியான எலக்ட்ரான் ஜோடிப் புள்ளிகளாகவும் குறிக்கப்படுகின்றன.

மூலக்கூறிலுள்ள வெவ்வேறு தனிமத்தின் எலக்ட்ரான்களைக் குறிப்பதற்கு புள்ளிகளைத் தவிர வட்ட அல்லது குறுக்குக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது

18) வேதிப்பிணைப்பு எத்தனை வகைப்படும்?

A) 2

B) 4

C) 6

D) 8

விளக்கம்: வேதிப்பிணைப்பு 2 வகைப்படும்,

  1. பலமான இணைப்பு
  2. பலவீனமான இணைப்பு

19) பலமான வேதிப்பிணைப்பு எத்தனை வகைப்படும்?

A) 2

B) 4

C) 6

D) 8

விளக்கம்: பலமான வேதிப்பிணைப்பு நான்கு வகைப்படும்.

1. அயனிப்பிணைப்பு

2. சகப்பிணைப்பு

3. ஈதல் சகப்பிணைப்பு

4. உலோகப் பிணைப்பு

20) பலவீனமான வேதிப்பிணைப்பு எத்தனை வகைப்படும்?

A) 2

B) 4

C) 6

D) 8

விளக்கம்: பலவீனமான வேதிப்பிணைப்பு ஹைட்ரஜன் பிணைப்பு, வாண்டர் வால்ஸ் கவர்ச்சி விசை என 2 வகைப்படும்

21) ஒரு நேர்மின் அயனிக்கும் எதிர்மின் அயனிக்கும் இடையே நிலைமின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் பிணைப்பு எவ்வகை பிணைப்பு?

A) அயனிப்பிணைப்பு

B) சகபிணைப்பு

C) ஈதல் சகபிணைப்பு

D) ஹைட்ரஜன் பிணைப்பு

விளக்கம்: ஒரு அணுவின் இணைதிறன் கூட்டிலிருந்து ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களோ மற்றொரு அணுவின் இணைதிறன் கூட்டிற்கு மாற்றப்படும்போது இப்பிணைப்பானது உருவாகிறது. இதில் எலக்ட்ரானை இழக்கும் அணு நேர்மின் அயனியையும், எலக்ட்ரான் ஏற்கும்போது எதிர்மின் அயனியையும் உருவாக்குகின்றன. எதிரெதிர் மின்சுமையுள்ள இந்த இரண்டு அயனிகளும் ஒன்றையொன்று நெருங்கும்போது நிலைமின் கவர்ச்சி விசைக்குட்பட்டு அயனிப் பிணைப்பை உருவாக்குகின்றன. இப்பிணைப்பு இரு அயனிகளுக்கிடையே உருவாவதால் அயனிப்பிணைப்பு எனவும், அயனிகள் நிலைமின் ஈர்ப்பு விசையால் இணைக்கப்படுவதால் நிலைமின் பிணைப்பு எனவும் அழைக்கப்படுகிறது.

22) “எலக்ட்ரான் இணைதிறன் பிணைப்பு” என அழைக்கப்படும் இணைப்பு எது?

A) அயனிப்பிணைப்பு

B) சகபிணைப்பு

C) ஈதல் சகபிணைப்பு

D) ஹைட்ரஜன் பிணைப்பு

விளக்கம்: இணைதிறன் கொள்கை எலக்ட்ரான்களை அடிப்படையாகக் கொண்ட விளக்கப்படுவதால் அயனிப் பிணைப்பு “எலக்ட்ரான் இணைதிறன் பிணைப்பு” எனவும் அழைக்கப்படுகிறது.

ஒரு தனிமத்தின் அணு எலக்ட்ரானிய இணைதிறன் பிணைப்பை உருவாக்கும்போது அவ்வணு இழக்கும் அல்லது ஏற்கும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதன் எலக்ட்ரான் இணைதிறன் எனப்படுகிறது.

23) கூற்றுகளை ஆராய்க.

1. பொதுவாக அயனிப்பிணைப்பு ஒரு உலோகத்திற்கும் மற்றொரு உலோகத்திற்கும் இடையே உருவாகிறது.

2. அயனிப்பிணைப்பைக் கொண்ட சேர்மங்கள் அயனிச் சேர்மங்கள் எனப்படுகின்றன

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: பொதுவாக, அயனிப்பிணைப்பு, ஒரு உலோகத்திற்கும், அலோகத்திற்கும் இடையே உருவாகிறது. இவ்வாறு அயனிப் பிணைப்பைக் கொண்ட சேர்மங்கள் அயனிச் சேர்மங்கள் எனப்படுகின்றன. தனிம அட்டவணையில் முதல் தொகுதி தனிமங்கள், அதாவது கார உலோகங்கள் அலோகங்கள் வினைபுரிந்து அயனிச்சேர்மங்களை உருவாக்குகின்றன.

24) சோடியம் குளோரைடு உருவாதலில் எவ்வகை பிணைப்பு உருவாகிறது?

A) ஈதல் சகபிணைப்பு

B) சகபிணைப்பு

C) அயனிப்பிணைப்பு

D) ஹைட்ரஜன் பிணைப்பு

விளக்கம்: சோடியம் (அணு எண் – 11) மற்றும் குளோரின் (அணு எண் – 17), அணுக்கள் இணையும்போது, சோடியம் அணுவிலிருந்து ஒரு எலக்ட்ரான் குளோரின் அணுவிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டு சோடியம் குளோரைடு மூலக்கூறு உருவாகிறது. இதன் மூலம் இரு அணுக்களும் நிலையான எட்டு எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகின்றன.

25) மெக்னீசியம் குளோரைடு உருவாகும் போது எவ்வகை வேதிப்பிணைப்பு நிகழ்கிறது?

A) ஈதல் சகபிணைப்பு

B) சகபிணைப்பு

C) அயனிப்பிணைப்பு

D) ஹைட்ரஜன் பிணைப்பு

விளக்கம்: மெக்னீசியத்தின் அணு எண் 12 மற்றும் அதன் எலக்ட்ரான் அமைப்பு 2, 8, 2 ஆகும். மெக்னீசியம் அதற்கு நெருக்கமான மந்த வாயுவான நியானை விட 2 எலக்ட்ரான் கூடுதலாகப் பெற்றிருக்கிறது. எனவே, மெக்னீசியம் அதன் வெளிக்கூட்டிலிருந்து 2 எலக்ட்ரான்களை இழந்து நிலையான எலக்ட்ரான் அமைப்பைக் கொண்ட மெக்னீசியம் அயனியாக மாறுகிறது

இதேபோல், குளோரினின் அணுஎண் 17 மற்றும் எலக்ட்ரான் அமைப்பு 2, 8, 7 மெக்னீசியம் இழந்த இரண்டு எலக்ட்ரான்களையும் இரு குளோரின் அணுக்கள் ஏற்றுக்கொண்டு மெக்னீசியம் குளோரைடு மூலக்கூறை உருவாக்குகின்றன.

26) கூற்றுகளை ஆராய்க. தவறானதைத் தேர்க.

A) அயனிச்சேர்மங்கள் அறை வெப்பநிலையில் படிகத் திண்மங்களாக உள்ளன.

B) திண்மநிலையில் அயனிச் சேர்மங்கள் மின்சாரத்தைக் கடத்துவதில்லை. எனினும், உருகிய நிலையில் அல்லது நீர்க்கரைசலில் மின்சாரத்தைக் கடத்துகின்றன

C) அயனிச்சேர்மங்கள் உயர் உருகுநிலை மற்றும் கொதிநிலைகளைக் கொண்டுள்ளன.

D) அயனிச் சேர்மங்கள் நீர் போன்ற முனைவுள்ள கரைப்பான்களில் கரையக் கூடியவை. பென்சீன்(C6H6) மற்றும் கார்பன் டெட்ரா குளோரைடு CCl4) முனைவற்ற கரைப்பானில் கரையும்.

விளக்கம்: அயனிச் சேர்மங்கள் நீர் போன்ற முனைவுள்ள கரைப்பான்களில் கரையக் கூடியவை. பென்சீன் (C6H6) மற்றும் கார்பன் டெட்ரா குளோரைடு CCl4) முனைவற்ற கரைப்பானில் கரைவதில்லை

27) கூற்றுகளை ஆராய்க.

1. அயனிச்சேர்மங்களில் வலிமையான நிலைமின் கவர்ச்சி விசையால் அயனிகள் பிணைக்கப்பட்டுள்ளதால், அவை அதிக கடினத் தன்மையையும், அடர்த்தியையும் கொண்டுள்ளன. ஆனால், அவை எளிதில் நொறுங்கும் தன்மை கொண்டவை.

2. அயனிச்சேர்மங்கள் கண நேரத்தில் தீவிரமாக நடைபெறும் அயனி வினைகளில் ஈடுபடுவதால் அவற்றில் வினை வேகம் குறைவு.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: அயனிச் சேர்மங்கள், கண நேரத்தில் தீவிரமாக நடைபெறும் அயனி வினைகளில் ஈடுபடுவதால் அவற்றின் வினை வேகம் அதிகம்

28) இரு அணுக்கள் சமமாக எலக்ட்ரான்களைப் பங்கீடு செய்து அவற்றிற்கிடையே உருவாகும் பிணைப்பு———–எனப்படுகிறது.

A) ஈதல் சகபிணைப்பு

B) சகபிணைப்பு

C) அயனிப்பிணைப்பு

D) ஹைட்ரஜன் பிணைப்பு

விளக்கம்: இரு அணுக்கள் சமமாக எலக்ட்ரான்களைப் பங்கீடு செய்து அவற்றிற்கிடையே உருவாகும் பிணைப்பு சகபிணைப்பு எனப்படுகிறது.

29) “அணுப்பிணைப்பு” என்று அழைக்கப்படுவது எது?

A) ஈதல் சகபிணைப்பு

B) சகபிணைப்பு

C) அயனிப்பிணைப்பு

D) ஹைட்ரஜன் பிணைப்பு

விளக்கம்: லூயிஸ் விதிப்படி, இரு அணுக்கள் எலக்ட்ரான்களைப் பங்கீடு செய்து, சகப்பிணைப்பை உருவாக்கும் போது, அவ்விரு அணுக்களும் நிலையான மந்தவாயு எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகின்றன. சகப்பிணைப்பில் இரு அணுக்களால் பங்கீடு செய்யப்படும் எலக்ட்ரான்கள் அவ்விரு அணுக்களுக்கும் பொதுவானவை ஆகையால் அது ‘அணுப்பிணைப்பு’ என்றும் அழைக்கப்படுகிறது.

30) சகப்பிணைப்பில் எத்தனை வகைகள் உள்ளன?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: சகப்பிணைப்பில் 3 வகைகள் உள்ளன. அவை,

1. ஒற்றை சகப்பிணைப்பு

2. இரட்டை சகப்பிணைப்பு

3. மும்மை சகப்பிணைப்பு

31) ஹைட்ரஜன் மூலக்கூறு உருவாதலில் என்ன பிணைப்பு ஏற்படுகிறது?

A) ஈதல் சகபிணைப்பு

B) சகபிணைப்பு

C) அயனிப்பிணைப்பு

D) ஹைட்ரஜன் பிணைப்பு

விளக்கம்: இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ர்2 மூலக்கூறு உருவாகிறது. இங்கு இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் தங்களின் ஒரு இணைதிறன் எலக்ட்ரானை பங்கீடு செய்வதன் மூலம் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஹீலியம் அணுவை ஒத்த நிலையான எலக்ட்ரான் அமைப்பை பெறுகின்றன.

32) கூற்றுகளை ஆராய்க.

1. சகப்பிணைப்புச் சேர்மங்களின் மூலக்கூறுகளுக்கு இடையே நிலவும் கவர்ச்சி விசையைப் பொருத்து அவற்றின் பிணைப்பு வலிமையாகவோ அல்லது வலிமையற்றதாகவோ இருக்கலாம்.

2. எனவே சகப்பிணைப்புச் சேர்மங்கள் வாயு நிலையிலோ, நீர்ம நிலையிலோ அல்லது மென்மையான திண்மங்களாகவோ இருக்கின்றன. (எ.கா)ஆக்ஸிஜன் – வாயு, நீர் – நீர்மம், வைரம் -திண்மம்

3. சகப்பிணைப்புச் சேர்மங்கள் மின்சாரத்தை நன்கு கடத்தும்

A) 1, 2 சரி

B) 1, 3 சரி

C) 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்:சகப்பிணைப்புச் சேர்மங்களில் அயனிகள் இல்லை. எனவே இவை மின்சாரத்தைக் கடத்துவதில்லை.

33) கூற்றுகளை ஆராய்க.

1. வைரம், சிலிக்கான் கார்பைடு போன்ற ஒரு சில சகப்பிணைப்புச் சேர்மங்களைத் தவிர மற்றவை அயனிச்சேர்மங்களை விட குறைந்த உருகுநிலையைப் பெறுகின்றன

2. சகப்பிணைப்புச் சேர்மங்கள் பென்சீன்(ஊ6ர்6) போன்ற முனைவற்ற கரைப்பானில் எளிதில் கரையும், நீர் போன்ற முனைவுள்ள கரைப்பான்களிலும் எளிதில் கரையும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: நீர் போன்ற முனைவுள்ள கரைப்பானில் சகப்பிணைப்புச் சேர்மங்கள் எளிதில் கரைவதில்லை

34) கூற்றுகளை ஆராய்க.

1. சகப்பிணைப்புச் சேர்மங்கள் கடினத்தன்மை அற்றவையாகவும், நொறுங்கும் தன்மை அற்றவையாகவும் உள்ளன. இவை மென்மையான திண்மங்களாகக் காணப்படுகின்றன.

2. சகப்பிணைப்புச் சேர்மங்களின் வினைவேகம் அதிகம்

A) 1 மட்டும் சரி

B) 2மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: சகப்பிணைப்புச் சேர்மங்கள் மூலக்கூறு வினைகளில் ஈடுபடுவதால் இவற்றின் வினைவேகம் குறைவு.

35) கூற்றுகளை ஆராய்க.

1. வேறுபட்ட எலக்ட்ரான் கவர்த்தன்மை கொண்ட ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் போன்ற அணுக்கள் இணைவதால் முனைவுள்ள கரைப்பான்கள் உருவாகின்றன.

2. இதற்கு நீர் எத்தனால், அசிட்டிக் அமிலம், அம்மோனியா போன்றவை எடுத்துக்காட்டாகும். அயனிச் சேர்மங்கள் இத்தகைய கரைப்பான்களில் எளிதில் கரைகின்றன.

A) 1 மட்டும் சரி

B)2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: இதேபோல், எலக்ட்ரான் கவர் தன்மையில் குறைந்த அளவே வேறுபாடு கொண்ட கார்பன் மற்றும் ஹைட்ராஜன் போன்ற அணுகு;கள் இணைவதால் முனைவற்ற கரைப்பான்கள் உண்டாகின்றன. (எ.கா) அசிட்டோன், பென்சீன், டொலுவீன், டர்பன்டைன், சகப்பிணைப்புச் சேர்மங்கள் இத்தகைய கரைப்பான்களில் கரைகின்றன.

36) ஒரு சேர்மங்களை அணுக்கள் நேர் மற்றும் எதிர் மின்சுமை கொண்ட அயனிகளாக முற்றிலுமாக பிரிவுறுதல்___________எனப்படும்

A) முனைவுறுதல்

B) நொதியாதல்

C) பிரிதல்

D) எதுவுமில்லை

விளக்கம்: ஒரு சேர்மத்திலுள்ள அணுக்கள் நேர் மற்றும் எதிர் மின்சுமை கொண்ட அயனிகளாக முற்றிலுமாக பிரிவுறுதல் முனைவுறுதல் எனப்படும். அவ்வாறு முனைவுற்ற சேர்மங்கள் அயனிச்சேர்மங்கள் எனப்படுகின்றன.

37) எந்த ஆண்டு ஃபஜான் என்ற அறிவியல் அறிஞர் ஓ-கதிர் படிகநிறமானி ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு சில அயனிச் சேர்மங்கள், சகப்பிணைப்புச் சேர்மங்கள் பண்புகளைப் பெற்றிருப்பதைக் கண்டறிந்தார்?

A) 1923

B) 1928

C) 1932

D) 1922

விளக்கம்: 1923 ஆண்டு ஃபஜான் என்ற அறிவியல் அறிஞர் ஓ-கதில் படிகநிறமானி ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு சில அயனிச் சேர்மங்கள், சகப்பிணைப்புச் சேர்மங்கள் பண்புகளைப் பெற்றிருப்பதைக் கண்டறிந்தார். இந்த ஆய்வுகளின் அடிப்படையில் அவர் ஒரு சேர்மம் அயனிப்பிணைப்பை பெற்றுள்ளதா அல்லது சகப்பிணைப்பைப் பெற்றுள்ளதா என்பதை ஒரு சில காரணிகளைக் கொண்டு கண்டறிய ஒரு விதிமுறையை உருவாக்கினார். இதுவே ஃபஜான் விதி ஆகும்.

38) ஃபஜானின் விதிகளில் தவறானதைத் தேர்க.

A) ஃபஜானின் விதி நேர்மின் அயனியின் மின் சுமையையும், நேர் மற்றும் எதிர் மின் அயனிகளின் உருவ அளிவையும் தொடர்புப்படுத்துகிறது.

B) நேர்மின் அயனியின் உருவ அளவு சிறியதாகவும், எதிர்மின் அயனியின் உருவ அளவு பெரியதாகவும் இருந்தால் பிணைப்பு சகப்பிணைப்புத் தன்மை பெறும்.

C) நேர்மின் அயனியின் மின்சுமை அதிகரிக்க அதிகரிக்க சகப்பிணைப்புத் தன்மை குறையும்.

D) நேர்மின் அயனியின் உருவ அளவு பெரியதாகவும், எதிர்மின் அயனியின் உருவ அளவு சிறியதாகவும் இருந்தால் பிணைப்பு அயனித் தன்மை பெறும்.

விளக்கம்: நேர்மின் அயனியின் தன்மை அதிகரிக்க அதிகரிக்க சகப்பிணைப்புத் தன்மையும், அதிகரிக்கும் அயனித் தன்மையில் குறைந்த நேர்மின் சுமையும், சகப் பிணைப்புத் தன்மையில் அதிக நேர்மின்சுமையும் இருக்கும்.

39) அலுமினியம் டிரை அயோடைடு எவ்வகை பிணைப்பைக் கொண்டது?

A) ஈதல் சகபிணைப்பு

B) சகபிணைப்பு

C) அயனிப்பிணைப்பு

D) ஹைட்ரஜன் பிணைப்பு

விளக்கம்: அலுமினியம் டிரை அயோடைடு ஒரு சகப்பிணைப்புச் சேர்மம் ஆகும்.

40) எந்த பிணைப்பில் ஈடுபடும் எலக்ட்ரான்கள் தனி இரட்டை எனப்படுகின்றன?

A) ஈதல் சகபிணைப்பு

B) சகபிணைப்பு

C) அயனிப்பிணைப்பு

D) ஹைட்ரஜன் பிணைப்பு

விளக்கம்: எளிய சகப்பிணைப்பு உருவாதலின் போது, பிணைப்பில் ஈடுபடும் இரு அணுக்களும் தலா ஒரு எலக்ட்ரான் வீதம் பங்கீடு செய்து பிணைப்பை உருவாக்குகின்றன. எனினும், ஒரு சில சேர்மங்களில் சகப்பிணைப்பு உருவாகத் தேவையான இரு எலக்ட்ரான்களையும் பிணைப்பில் ஈடுபடும் ஏதேனும் ஒரு அணு வழங்கி, பிணைப்பை உருவாக்குகிறது. இத்தகைய பிணைப்பு ஈதல் சகப்பிணைப்பு அல்லது ஈதல் பிணைப்பு எனப்படுகிறது.

ஈதல் பிணைப்பில் ஈடுபடும் எலக்ட்ரான்கள் தனி இரட்டை எனப்படுகின்றன. தனி இரட்டை எலக்ட்ரான்களை வழங்கும் அணு ‘ஈனி அணு’ எனவும், அவற்றை ஏற்கும் அணு ‘ஏற்பி’ எனவும் அழைக்கப்படுகிறது. ஈதல் சகப்பிணைப்பு, ஈனி அணுவிலிருந்து ஏற்பி அணுவிற்கு வரையப்படும் அம்புக்குறி மூலம் குறிக்கப்படுகிறது

41) NH3BF3 மூலக்கூறு என்ன பிணைப்பு உருவாகும்?

A) ஈதல் சகபிணைப்பு

B) சகபிணைப்பு

C) அயனிப்பிணைப்பு

D) ஹைட்ரஜன் பிணைப்பு

விளக்கம்: NH3BF3 மூலக்கூறு இடையே ஈதல் சகப்பிணைப்பு உருவாகும். ஒருசில சேர்மங்களில் ஈதல் சகப்பிணைப்பானது ஒரு மூலக்கூறு, தனித்த இணை எலக்ட்ரான்களை மற்றொரு மூலக்கூறிற்கு வழங்குவதால் உருவாகிறது. இங்கு அம்மோனியா மூலக்கூறு(NH3) தனித்த இணை எலக்ட்ரான்களை போரான் டிரை புளுரைடு(BF3) மூலக்கூறிற்கு வழங்கி ஈதல் சகப்பிணைப்பை உருவாக்குகிறது. இங்கு NH3 ஈனி மூலக்கூறாகவும், BF3 ஏற்பி மூலக்கூறாகவும் உள்ளன.

42) ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களின் பண்புகளில் பொருந்தாததைத் தேர்க.

A) இச்சேர்மங்கள் வாயுநிலை, நீர்மநிலை மற்றும் திண்ம நிலைகளில் காணப்படுகின்றன.

B) சகப்பிணைப்பச் சேர்மங்களைப் போலவே, ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களிலும் அயனிகள் இல்லை.எனவே, இவை அரிதில் மின்கடத்திகள் ஆகும்.

C) ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களின் உருகுநிலை மற்றும் கொதிநிலை சகப்பிணைப்புச் சேர்மங்களை விட அதிகமாகவும் அயனிச் சேர்மங்களை விட குறைவாகவும் காணப்படுகின்றன

D) இச்சேர்மங்கள் வேகமான மூலக்கூறு வினைகளில் ஈடுபடுகின்றன

விளக்கம்: இச்சேர்மங்கள் மெதுவான மூலக்கூறு வினைகளில் ஈடுபடுகின்றன. நீர் போன்ற முனைவுள்ள கரைப்பான்களில் மிகச்சிறியதாகவே கரையும் அல்லது கரைவதில்லை. பென்சீன், டொலுவீன், கார்பன் டெட்ரா குளோரைடு போன்ற முனைவற்ற கரைபான்களில் எளிதில் கரைகிறது.

43) கூற்றுகளை ஆராய்க.

1. ஒரு வேதிவினையில் ஆக்ஸிஜன் சேர்க்கப்படுதலோ, ஹைட்ரஜன் நீக்கப்படுதலோ அல்லது எலக்ட்ரான் நீக்கப்படுதலோ நிகழும் போது அந்த வினை ஆக்ஸிஜனேற்றம் எனப்படுகிறது.

2. 2Mg+O22MgO இது ஆக்ஸிஸனேற்ற வினைக்கு உதாரணமாகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 2Mg+O22MgO (ஆக்ஸிஜன் சேர்க்கப்படுதல்)

CaH2+Ca+H2 (ஹைட்ரஜன் நீக்கப்படுதல்)

Fe2+Fe3++e(எலக்ட்ரான் நீக்கப்படுதல்)

இவை அனைத்தும் ஆக்ஸிஜனேற்ற வினைக்கு உதாரணமாகும்.

44) கூற்றுகளை ஆராய்க.

1. ஒரு வேதிவினையில் ஹைட்ரஜன் சேர்க்கப்படுதலோ, ஆக்ஸிஜன் நீக்கப்படுதலோ அல்லது எலக்ட்ரான் ஏற்கப்படுதலோ நிகழும் போது அந்த வினை ஒடுக்கம் எனப்படுகிறது

2. 2Na + H22NaHஇது ஒடுக்க வினைக்கு உதாரணமாகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 2Na + H22NaH (ஆக்ஸிஜன் நீக்கப்படுதல்)

CuO+H2Cu+H2O(ஹைட்ரஜன் சேர்க்கப்படுதல்)

Fe3++eFe2+(எலக்ட்ரான் சேர்க்கப்படுதல்)

இவை அனைத்தும் ஆக்ஸிஜன் ஒடுக்க வினைக்கு உதாரணமாகும்

45) 2pbO+C2Pb+CO2இதில் என்ன வினை நடைபெறுகிறது?

A) ஆக்ஸிஜனேற்ற வினை

B) ஒடுக்க வினை

C) ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினை

D) எதுவுமில்லை

விளக்கம்: பொதுவாக ஒரு வினையில் ஆக்ஸிஜனேற்றமும் ஒடுக்கமும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. ஒரு வினைபடு பொருள் ஆக்ஸிஜனேற்றம் அடையும் போது மற்றொன்று ஒடுக்கமடைகிறது. எனவே, இவ்வகையான வினைகள் ஆக்ஸிஜனேற்ற-ஒடுக்க வினைகள் எனப்படுகின்றன.

2pbO+C2Pb+CO2

Zn+CuSO4Cu+ZnSO4

46) தவறானக் கூற்றைத் தேர்க.

A) மற்ற பொருள்களை ஆக்ஸிஜனேற்றம் அடையச் செய்யும் பொருள்கள் ஆக்ஸிஜனேற்றிகள் எனப்படும்.

B) ஆக்ஸிஜனேற்றிகள், மற்றவற்றிடமிருந்து எலக்ட்ரான்களை வாங்கிக்கொள்வதால் இவற்றை எலக்ட்ரான் ஏற்பிகள் எனவும் அழைக்கிறோம்

C) மற்ற பொருள்களை ஒடுக்கம் அடையச் செய்யும் பொருள்கள் ஒடுக்கிகள் எனப்படும்

D) ஆக்ஸிஜனேற்றிகள், எலக்ட்ரான் ஈனிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

விளக்கம்:ஒடுக்கிகள், மற்றவற்றிற்கு எலக்ட்ரான்களை வழங்குவதால் இவற்றை எலக்ட்ரான் ஈனிகள் எனவும் அழைக்கிறோம். (எ.கா) பல்லேடியம் மற்றும் பிளாட்டினம்

ஆக்ஸிஜனேற்றிக்கு உதாரணம் H2O2, MnO4, CrO3, Cr2O72-

47) சரியானதைத் தேர்க.

A) ஆக்ஸிஜனேற்ற வினைகளால் உலோகங்கள் தங்கள் பளபளப்பை இழக்கின்றன. இதற்கு உலோகங்களின் அரிமானம் என்று பெயர்

B) வெட்டப்பட்ட காய்கறிகளும், பழங்களும் நிறம் மாற காரணம் ஆக்ஸிஜனேற்றம் அடைதலே காரணமாகும்.

C) திறந்து வைக்கப்பட்ட உணவுப்பொருள்கள் கெட்டுப் போதவற்கு அப்பொருட்டகள் ஆக்ஸிஜனேற்றம் அடைதலே காரணமாகும்.

D) அனைத்தும் சரி

விளக்கம்: மேற்கண்ட அனைத்து கூற்றுகளும் சரியானவை ஆகும்.

48) கூற்றுகளை ஆராய்க.

1. ஒரு தனிமத்தின் ஆக்ஸிஜனேற்ற எண் என்பது, அத்தனிமத்தின் அணுவின் அனைத்து எலக்ட்ரான்களும் கணக்கில் கொள்ளப்படும்போது எஞ்சிய மின்சுமை ஆகும்

2. ஆக்ஸிஜனேற்ற எண் என்பதை ஆக்ஸிஜனேற்ற நிலை என்று அழைக்கிறோம்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: ஒரு அணு பிணைப்பில் ஈடுபடும் போது எத்தனை எலக்ட்ரான்களை ஏற்கிறதோ அல்லது இழக்கிறதோ அந்த எண்ணிக்கை ஆக்ஸிஜனேற்ற எண்.

49) ஒரு மூலக்கூறு அனைத்து அணுக்களின் ஆக்ஸிஜனேற்ற எண்களின் கூடுதல் என்ன?

A) 0

B) 1

C) 2

D) -1

விளக்கம்: ஒரு மூலக்கூறிலுள்ள அனைத்து அணுக்களின் ஆக்ஸிஜனேற்ற எண்களின் கூடுதல் 0. அயனிகளைப் பொறுத்த வரையில் இக்கூடுதல் மதிப்பு அயனிகளின் மீதுள்ள நிகர மின்சுமைக்குச் சமம். சேர்மங்கள் ஆக்ஸிஜனேற்ற எண்ணையும், குறைந்த எலக்ட்ரான் கவர் தன்மை கொண்ட அணு நேர் ஆக்ஸிஜனேற்ற எண்ணையும் பெறும்

50) தவறானதைத் தேர்க.

A) KBr மூலக்கூறிலுள்ள K அணு +1 ஆக்ஸிஜனேற்ற எண்ணையும், Br அணு -1 ஆக்ஸிஜனேற்ற எண்ணையும் பெறுகிறது

B) NH3 மூலக்கூறிலுள்ள N –ன் ஆக்ஸிஜனேற்ற எண் -3

C) H–ன் ஆக்ஸிஜனேற்ற எண் +1 (உலோக ஹைட்ரைடுகள் தவிர)

D) பெரும்பாலான சேர்மங்களில் ஆக்ஸிஜனின் ஆக்ஸிஜனேற்ற எண் -1

விளக்கம்:பெரும்பாலான சேர்மங்களில் ஆக்ஸிஜனேற்ற எண் -2

பிணைப்பிலுள்ள இணை எலக்ட்ரான்களை தன்னை நோக்கி கவர்ந்திழுக்கும் தன்மை எலக்ட்ரான் கவர் தன்மை எனப்படும்

51) H2O உள்ள H மற்றும் O-ன் ஆக்ஸிஜனேற்ற எண் என்ன?

A)+1, +2

B) +1, -1

C) +1, 0

D) +1, -2

விளக்கம்:H-ன் ஆக்ஸிஜனேற்ற எண் =-1 எனவும்

O-ன் ஆக்ஸிஜனேற்ற எண் =-2 எனவும் கொள்வோம்.

H2O-ல் 2X(+1)+1X(-2)=0

2-2=0

H=+1 O=-2

52) வேதி வினைகளில் எலக்ட்ரான்களை ஏற்று எதிர் அயனியாக மாறக்கூடிய தனிமம் எது?

A) பொட்டாசியம்

B) கால்சியம்

C) புளுரின்

D) இரும்பு

விளக்கம்: வேதிவினைகளில் எலக்ட்ரான்களை ஏற்று எதிர் அயனியாக மாறக்கூடிய தனிமம் புளுரின்.

53) சகப்பிணைப்பு—————–மூலம் உருவாகிறது?

A) எலக்ட்ரான் பங்கீடு

B) எலக்ட்ரான் பரிமாற்றம்

C) ஒரு இணை எலக்ட்ரானின் பங்கீடு

D) எதுவுமில்லை

விளக்கம்: சகப்பிணைப்பு ஒரு இணை எலக்ட்ரானின் பங்கீடு மூலம் உருவாகிறது.

9th Science Lesson 14 Questions in Tamil

14] அமிலங்கள் , காரங்கள் மற்றும் உப்புகள்

1) நமக்கு உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் அமிலம்?

A) CH3COOH

B) HCl

C) HNO3

D) H2SO4

விளக்கம்: Hcl ஆனது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. அமிலம், காரம் இரண்டுமே சேர்மம் ஆகும். அமிலம் நீரில் கரையும் போது (OH+) அயனிகளையும், காரம் நீரில் கரையும் போது (OH-) அயனிகளையும் கொடுக்கிறது.

2) அமிலத்தின் சுவை எத்தகையது?

A) சாம்பல் சுவை

B) துவர்ப்பு சுவை

C) புளிப்பு சுவை

D) கசப்பு சுவை

விளக்கம்: ஆசிட் என்ற ஆங்கில சொல் அசிட்டஸ் என்ற இலத்தீன் சொல்லிருந்து பெறப்பட்டது. அசிட்டஸ் என்ற இலத்தீன் மொழி சொல்லிற்கு புளிப்பு சுவை என்பது பொருள். புளிப்பு சுவை கொண்ட பொருள் அமிலம் எனப்படும்.

3) தேநீரி(Tea)ல் உள்ள அமிலம்?

A) மாலிக் அமிலம்

B) சிட்ரிக் அமிலம்

C) ஆக்ஸாலிக் அமிலம்

D) டானிக் அமிலம்

விளக்கம்: மாலிக் அமிலம் – ஆப்பிள்

எலுமிச்சை – சிட்ரிக் அமிலம்

தக்காளி – ஆக்ஸாலிக் அமிலம்

தேநீர் – டானிக் அமிலம்

4) அமிலங்கள், காரங்கள் பற்றிய கொள்கைகளை முதன் முதலில் முன்மொழிந்தவர்?

A) நியூலென்ட்

B) அர்ஹீனியஸ்

C) லாமர்க்

D) ஹீன்ஸ்

விளக்கம்: அர்ஹீனியஸ்(1884). இவர் கூற்றுப்படி அமிலங்கள் நீரில் கரையும் பொழுது H+ அயனியையும் H3O+ அயனியையும் தருகிறது.

5) இவற்றில் அமிலம் இல்லாதது?

A) CH4

B) H2SO4

C) NH3

D) A & C

விளக்கம்: ஹைட்ரஜன் உள்ள அனைத்து பொருள்களும் அமிலங்கள் அல்ல. இவைகள் நீர்த்த கரைசலில் ஹைட்ரஜன் அயனிகளை தராது.

6) அமிலத்தின் வகைகள் எத்தனை?

A) 1

B) 2

C) 3

D) 6

விளக்கம்: அமிலங்கள் மூலத்தின் அடிப்படையில் இரண்டு வகையாகும் அவை.

1. கரிம அமிலம்

2. கனிம அமிலம்

7) வலிமை மிக்க அமிலம்?

D) HCOOH

B) CH3COOH

C) HNO3

D) எதுவுமில்லை

விளக்கம்: HN03 என்பது வலிமை மிக்க அமிலமாகும். இவை கனிம அமிலமாகும். கனிம அமிலமானது பாறைகள் மற்றும் கனிம பொருள்களிலிருந்து பெறப்படுகிறது.

8) ஒற்றை காரத்துவ அமிலத்திற்கு எடுத்துகாட்டு

A) H2SO4

B) H2CO3

C) H3PO4

D) HCl

விளக்கம்: நீர்க்கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு ஒரு ஹைட்ரஜன் அயனியை மட்டுமே தருகிறது. இது ஒரு காரத்துவ அமிலமாகும்.

H2SO4, HNO3 – இவைகள் இரு காரத்துவ அமிலமாகும்.

H3PO4 – முக்காரத்துவ அமிலமாகும்.

9) செறிவு மிகு அமிலத்தினுள் நீரை சேர்த்தால் எவ்வகை மாற்றம் நிகழும்?

A) குளிரும்

B) வெப்பம் வெளியேறும்

C) வெப்பம் உட்கவரும்

D) நடுநிலையாக்கப்படும்

விளக்கம்: கனிம அமிலத்தை எப்பொழுதுமே நீரினுள் சிறிது சேர்த்து கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு செய்யாமல் செறிவு மிகுந்த அமிலத்தினுள் நீரை சேர்த்தால் அதிக அளவு வெப்பம் வெளியேறி அமிலம் கொள்கலனிலிருந்து வெளியே தெறித்து உடலில் காயத்தினை ஏற்படுத்தும்

10) அமிலத்துடன் வினைபுரியாத உலோகம்?

A) Ag

B) Cu

C) Fe

D) A & B

விளக்கம்: இவை அனைத்தும் உயரிய உலோகம் என அழைக்கப்படுகிறது.

11) வேறுபட்டு இருப்பதை கண்டுபிடி

A) CH3COOH

B) HCl

C) HNO3

D) H2SO4

விளக்கம்: HCl, HNO3, H2SO4 போன்றவை வலிமை மிகு அமிலங்கள் ஆகும்

CH3COOH வலிமை குறைந்த அமிலம்

12) நீரில் பகுதியலவே கரையும் அமிலம் எது?

A) Hcl

B) CH3COOH

C) HNO3

D) H2SO4

விளக்கம்: வலிமை குறைந்த அமிலங்கள் நீரில் பகுதியளவே அயனியுறும் தன்மை கொண்டவை

CH3COOH ஒரு வலிமை குறைந்த அமிலம். எனவே இது பகுதியளவே அயனியுறும் தன்மை கொண்டது.

13) அமிலங்கள் உலோகங்களுடன் வினைபுரிந்து வெளியேற்றும் வாயு?

A) ஹைட்ரஐன்

B) உப்பு

C) சேர்மம்

D) நடுநிலை கரைசல்

விளக்கம்: உலேகங்கள் நீர்த்த அமிலத்துடன் வினைபுரிந்து ஹைட்ரஐன் வாயுவை தருகிறது

14) வேதி பொருள்களின் அரசன் எனப்படுவது?

A) CH3COOH

B) HF

C) HNO3

D) H2SO4

விளக்கம்: H2SO4 பல சேர்மங்கள் தயாரிப்பிற்க்கு பயன்படுகிறது மேலும் வாகன மின்கலன்களிலும் இது பயன்படுகிறது.

15) விவசாயத்திற்கு உரமாக பயன்படும் அமிலம்?

A) நைட்ரிக் அமிலம்

B) சல்பியுரிக் அமிலம்

C) ஹைட்ரோ குளோரிக் அமிலம்

D) சிட்ரிக் அமிலம்

விளக்கம்: நைட்ரிக் அமிலம் விவசாயத்திற்கு உரமாக பயன்படும் அம்மோனியம் நைட்ரேட் என்ற சேர்மத்தை தயாரிக்க பயன்படுகிறது.

16) குளிர்பானங்களில் பயன்படும் அமிலம் எது?

A) சிட்ரிக் அமிலம்

B) கார்பானிக் அமிலம்

C) டார்டாரிக் அமிலம்

D) ஆக்சாலிக் அமிலம்

விளக்கம்: கார்பானிக் அமிலம் காற்று அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் பயன்படுத்தப்படுகிறது.

இது வயிற்றின் அமிலத்தன்மையை குறைக்கிறது.

17) மரப்பொருள் தூய்மையாக்க பயன்படும் அமிலம் ?

A) சிட்ரிக் அமிலம்

B) கார்பானிக் அமிலம்

C) டார்டாரிக் அமிலம்

D) ஆக்சாலிக் அமிலம்

விளக்கம்: ஆக்சாலிக் அமிலம் மரபொருள்களை தூய்மையாக்கவும் மற்றும் கருப்பு கரைகளை நீக்கவும் பயன்படுகிறது.

18) குவார்ட்ஸ் படிகாரத்தில் ஏற்படும் இரும்பு மற்றும் மாங்கனீசு படிவுகளை சுத்தம் செய்ய பயன்படும் அமிலம்

A) சிட்ரிக் அமிலம்

B) கார்பானிக் அமிலம்

C) டார்டாரிக் அமிலம்

D) ஆக்சாலிக் அமிலம்

விளக்கம்: இரும்பு மற்றும் மாங்கனீசு படிவுகளை சுத்தம் செய்ய ஆக்சாலிக் அமிலம் பயன்படுகிறது. இவை கறைகள் நீக்கவும் பயன்படுகிறது

19) Hcl மற்றும் HNO3 இரண்டும் கலந்த கலவையின் பெயர்?

A) எரி காரம்

B) இராஐ திரவம்

C) சல்பைடுகள்

D) எதுவுமில்லை

விளக்கம்: Hcl + HNO3 இரண்டும் கலந்த கலவையின் பெயர் இராஐ திரவகம் ஆகும் இது தங்கம் மற்றும் வெள்ளியையும் கரைக்கவல்லது.

20) இராஐ திராவகம் உருகுநிலை மற்றும் கொதிநிலை

A) -42oC மற்றும் 100 oC

B) -28 oC மற்றும் 108 oC

C) -42 oC மற்றும் 108 oC

D) 44 oF மற்றும் 226 oF

விளக்கம்: இராஐ திரவகத்தின் உருகுநிலை -42 oC (-44 oF, 231K) கொதி நிலை -108 oC (-226 oF 381 oK)

21) இராஐ திராவகம் என்ற சொல் எதிலிருந்து பெறப்பட்டது?

A) இலத்தின்

B) கிரேக்கம்

C) ஆங்கிலம்

D) தமிழ்

விளக்கம்: இராஐ திரவகம் என்ற சொல் இலத்தீன் மொழியில் பெறப்பட்டது. இதன் பொருள் திரவங்களின் அரசன் என்பதாகும்.

22) அமிலத்துவத்தின் அடிப்படையில் காரத்தின் வகைகள்?

A) 2

B) 3

C) 4

D) 6

விளக்கம்: அமிலத்துவதின் அடிப்படையில் காரங்கள் 3 வகைபடும் அவை

ஓற்றை அமிலத்துவம்

இரட்டை அமிலத்துவம்

மும்மை அமிலத்துவம்

23) NaOH என்பது ஒரு

A) காரம்

B) எரிகாரம்

C) படிகம்

D) வாசமூட்டி

விளக்கம்: NaOH ஒரு எரிகாரம் ஆகும்.

நீரில் முழுவதும் கரையும் காரம் எரிகாரம் ஆகும்

24) எரிகாரம் அல்லாதது

A) Al(OH)3

B) KOH

C) Zn(OH)3

D) A & C

விளக்கம்: Al(OH)3 மற்றும் Zn(OH)3என்பவை நீரில் முழுவதும் கரையாத காரம் ஆகும்.நீரில் முழுவதும் கரையும் காரம் எரிகாரம்.

25) அமிலம் எதனுடன் வினைபுரிந்து கார்பன் டை ஆக்சைடு தருகிறது

A) அலோகங்கள்

B) அலோக உப்புக்கள்

C) உலோகங்கள்

D) உலோக உப்பு

விளக்கம்: அமிலங்கள் பொதுவாக உலோக உப்புக்களான உலோக கார்பனேட்டுகள் மற்றும் உலோக பை கார்பனேட்டுடன் வினைபுரிந்து கார்பன் டை ஆக்சைடுகளை தருகிறது.

26) இராஐ திராவகத்தின் மோலார் விகிதம் ( HCl: HNO3 )

A) 3:1

B) 2:2

C) 1:3

D) 1.5:2.5

விளக்கம்: முன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலமும் ஒரு பங்கு நைட்ரிக் அமிலமும் கலந்த கலவையின் மோலார் விகிதம் உள்ள கலவைக்கு இராஐ திரவம் ஆகும். இது தங்கத்தை கரைக்க வல்லது.

27) பாரீஸ் சாந்துவின் வேதிப்பெயர்?

A) காப்பர் சல்பேட் பென்டா ஹைட்ரேட்

B) கால்சியம் சல்பேட் ஹெமிஹைட்ரேட்

C) கால்சியம் தயோ சல்பேட் பெண்டா ஹைட்ரேட்

D) மெக்னீசியம் குளோரைடு ஹைக்ஸா ஹைட்ரேட்

விளக்கம்: காப்பர் சல்பேட் பென்டா ஹைட்ரேட் என்பது பாரிஸ் சாந்துவின் வேதிப்பெயர் ஆகும்

28) கீழ்க்கண்டவற்றில் இடப்பெயர்ச்சி ஆகும் ஹைட்ரஜனின் எண்ணிக்கை எதில் அதிகம்?

A) HNO3

B) H2SO4

C) H3PO4

D) Hcl

விளக்கம்: H3PO4 என்பது மும்மை காரத்துவ அமிலமாகும். இது நீரில் மூன்று ஹைட்ரஜன் அயனிகளை வெளியேற்றுகிறது.

29) விலங்குளிடத்தில் உற்பத்தியாகும் வலிமைமிகு அமிலம் ?

A) பார்மிக் அமிலம்

B) ஹைட்ரோ குளோரிக் அமிலம்

C) ஆக்ஸாலிக் அமிலம்

D) அசிட்டிக் அமிலம்

விளக்கம்: மனித வயிற்றில் சுரக்கும் அமிலமான ஹைட்ரோகுளோரிக் அமிலம் வலிமை மிகு அமிலமாகும். இது உணவுப் பொருளை செரிமானம் செய்ய பயன்படுகிறது.

30) பொருத்துக.

அ. தயிர் – 1. சிட்ரிக் அமிலம்

ஆ. தேநீர் – 2. லாக்டிக் அமிலம்

இ. திராட்சை – 3. டானிக் அமிலம்

ஈ. எலுமிச்சை – 4. டார்டாரிக் அமிலம்

A) 2, 3, 4, 1

B) 1, 2, 4, 3

C) 4, 1, 2, 3

D) 2, 4, 3, 1

விளக்கம்: தயிர் – லாக்டிக் அமிலம்

தேநீர் – டானிக் அமிலம்

திராட்சை – டார்டாரிக் அமிலம்

எலுமிச்சை – சிட்ரிக் அமிலம்

31) கூற்று: ஹைட்ரோகுளோரிக் அமிலம் நீருடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் அயனியை தருகிறது.

காரணம்: நீர் இல்லாத நிலையில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்திலுள்ள ஹைட்ரஜன் அயனியை பிரிக்க இயலாது.

A) கூற்று காரணம் இரண்டும் சரி

B) கூற்று காரணம் இரண்டும் தவறு

C) கூற்று சரி

D) காரணம் சரி

விளக்கம்: ஹைட்ரோகுளோரிக் அமிலம் நீருடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் அயனியை தருகிறது. காரணம் நீர் இல்லாத நிலையில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்திலுள்ள ஹைட்ரஜன் அயனியை பிரிக்க இயலாது.

32) கூற்று: அனைத்து அமிலங்களும் வலிமை மிகு அமிலங்கள்

காரணம்: இவை தாவரங்கள் மற்றும் விலங்குகளில் காணப்படும் அமிலங்களாகும்

A) கூற்று, காரணம் இரண்டும் சரி

B) கூற்று, காரணம் இரண்டும் தவறு

C) கூற்று சரி காரணம் தவறு

D) கூற்று தவறு காரணம் சரி

விளக்கம்: அனைத்து அமிலங்களும் வலிமை மிகு அமிலங்கள் கிடையாது. தாவரங்கள் மற்றும் விலங்குளில் காணப்படும் அமிலம் வலிமை குறைந்த அமிலமாகும். இவை கரிம அமிலங்கள் எனப்படும்.

33) அமிலத்தின் பண்புகள்

1. அமிலங்கள் கசப்பு சுவையுடையவை

2. அமிலங்கள் மின்சாரத்தை கடத்தும்

3. நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும்

4. அமிலங்கள் உலோகங்களுடன் வினைபுரிந்து CO2 வெளியேற்றும்

A) 1, 3, 4 சரி

B) 2, 3 சரி

C) 1, 2, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. அமிலங்கள் புளிப்பு சுவையுடையவை

2. அமிலங்கள் மின்சாரத்தை கடத்தும்

3. நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும்

4. அமிலங்கள் உலோகங்களுடன் வினைபுரிந்து H2 வெளியேற்றும்

34) அலோக ஆக்ஸைடுகள் எத்தன்மையுடையது?

A) காரத்தன்மை

B) அமிலத்தன்மை

C) அலோக கரைசல்

D) நடுநிலைத்தன்மை

விளக்கம்: காரங்கள் அலோக ஆக்ஸைடுடன் வினைபுரிந்து உப்பையும் நீரையும் தருகிறது. இது அமிலத்திற்கும் காரத்திற்கும் உள்ள வினை போல உள்ளதால் அலோக ஆக்ஸைடுகள் அமில தன்மையுடையது.

35) காரத்துடன் வினைபுரியாத உலேகம்?

A) Cu

B) Ag

C) Ce

D) அனைத்தும்

விளக்கம்: உயரிய உலோகங்கள் சில காரங்களுடன்(NaOH) உடன் வினைபுரிவது இல்லை

36) அ. NaOH – 1. கட்டிடங்களுக்கு சுண்ணாம்பு பூச

ஆ. CaOH – 2. வயிற்று கோளாறு மருந்தாக

இ. MgOH – 3. சோப்பு தயாரிக்க

ஈ. NH3OH – 4. துணிகளின் எண்ணெய் கரையை நீக்க

A) 4, 2, 3, 1

B) 3, 1, 4, 2

C) 3, 2, 1, 4

D) 3, 1, 2, 4

விளக்கம்: NaOH. – கட்டிடங்களுக்கு சுண்ணாம்பு பூச

CaOH – 2. வயிற்று கோளாறு மருந்தாக

MgOH 3. சோப்பு தயாரிக்க

NH3OH 4. துணிகளின் எண்ணெய் கரையை நீக்க

37) சரியானதை தேர்ந்தெடுக்க.

1. அமிலங்கள் சிவப்பு லிட்மஸ் தாளை நீலநிறமாக்கும்

2. காரங்கள் பினாப்தலின் நிறங்காட்டியில் நிறமற்று இருக்கும்

3. மெத்தில் ஆரஞ்சு சோதனையில் காரம் இளஞ்சிவப்பு நிறமாக தோன்றும்

4. நடுநிலை கரைசலின் PH மதிப்பு 7

A) 1, 2, 4 சரி

B) 1, 3, 4 தவறு

C) 1, 2, 3 தவறு

D) 4 தவறு

விளக்கம்: 1. அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை சிவப்பு நிறமாக்கும்

2. காரங்கள் பினாப்தலின் நிறங்காட்டியில் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும்

3. மெத்தில் ஆரஞ்சு சோதனையில் காரம் மஞ்சள் நிறமாக தோன்றும்

4. நடுநிலை கரைசலின் PH மதிப்பு 7

38) ஒரு கரைசலின் தன்மையை அடையாளம் காண உதவுவது?

A) லிட்மஸ் தாள்

B) பினாப்தலின்

C) மெத்தில் ஆரஞ்சு

D) PH மதிப்பு

விளக்கம்: PH மதிப்பானது ஒரு கரைசல் அமிலத்தன்மை, காரத்தன்மை அல்லது நடுநிலைத் தன்மை ஆகியவற்றை அடையாளம் காண உதவுகிறது.

39) PH மதிப்பு எதில் அதிகம்?

A) அமிலம்

B) காரம்

C) நடுநிலை கரைசல்

D) சேர்மம்

விளக்கம்: அமிலத் தன்மை கொண்ட கரைசலில் PH மதிப்பு 7 விட குறைவு

காரத்தன்மை கொண்ட கரைசலில் PH மதிப்பு 7 விட அதிகம்

நடுநிலை கரைசலில் PH மதிப்பு 7க்கு சமம்

40) கீழக்கண்டவற்றில் எதில் PH மதிப்பு அதிகம்?

A) கடல்நீர்

B) அம்மோனியா கரைசல்

C) செரிமானமற்ற மாத்திரை

D) வடிநீர்

விளக்கம்: கடல்நீர்

அம்மோனியா கரைசல்

செரிமானமற்ற மாத்திரை

வடிநீர்

41) வலிமை மிகு அமிலம் எது?

A) மின்கல அமிலம்

B) வயிற்றில் சுரக்கும் அமிலம்

C) வினிகர்

D) ஆரஞ்சு பழச்சாறு

விளக்கம்: PH மதிப்பு குறைவான அமிலம் வலிமை மிகு அமிலமாகும்

மின்கல அமிலம்

வயிற்றில் சுரக்கும் அமிலம்

வினிகர்

ஆரஞ்சு பழச்சாறு

42) மழைநீரின் PH மதிப்பு?

A) 5

B) 6

C) 7

D) 8

விளக்கம்: கருப்பு காபி PH – 5

சிறுநீர் PH – 6

மழைநீர் PH – 7

கடல்நீர் PH – 8

43) இரத்தத்தின் PH மதிப்பு?

A) 7.3-7.5

B) 6.5-7.5

C) 8.5

D) 4.0-4.4

விளக்கம்: இரத்தத்தின் PH மதிப்பு – 7.3-3.5

உமிழ்நீர் PH மதிப்பு – 6.5-7.5

கடல்நீர் PH மதிப்பு – 8.5

தக்காளி சாறு PH மதிப்பு – 4.0-4.4

44) ஒரு முட்டைக்கோஸ் இலையில் சாற்றை பற்பசையுடன் கலந்தால் உண்டாகும் நிறம்?

A) சிவப்பு

B) பச்சை

C) மஞ்சள்

D) நிறமற்றது

விளக்கம்: பற்பசையானது காரத்தன்iயுடைது. எனவே முட்டைக்கோஸ் சாற்றுடன் கலந்தால் பச்சை நிறமாக மாறும்.

45) பொருத்துக.

அ. குளிர்பானம் – 1. 6.5-7.5

ஆ. தக்காளி சாறு – 2. 1.0-3.0

இ. உமிழ்நீர் – 3. 3.0

ஈ. வயிற்றில் சுரக்கும் திரவம் – 4. 4.0-4.4

A) 1, 2, 3, 4

B) 3, 4, 2, 1

C) 3, 2, 4, 1

D) 3, 4, 1, 2

விளக்கம்:குளிர்பானம் – 3.0

தக்காளி சாறு – 4.0-4.4

உமிழ்நீர் – 6.5-7.5

வயிற்றில் சுரக்கும் திரவம் – 1.0-3.0

46) கூற்று: பொதுவாக பற்பசையானது காரத்தன்மையுடையது

காரணம்: இவை அதிகப்படியான அமிலத்தை நடுநிலையாக்கி பற்சிதைவை தடுக்கிறது.

A) கூற்று, காரணம் இரண்டும் தவறு

B) கூற்று சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரியானது

D) காரணம் சரியானது.

விளக்கம்: பொதுவாக பற்பசையானது காரத்தன்மையுடையது. காரணம் இவை அதிகப்படியான அமிலத்தை நடுநிலையாக்கி பற்சிதைவை தடுக்கிறது.

47) வாக்கியத்தை கவனி.

1. சிட்ரஸ் பழங்களுக்கு அமில தன்மையுடைய மண்ணும் தேவைப்படுகிறது

2. அரிசிக்கு காரத்தன்மையுடைய மண்ணும் தேவைப்படுகிறது

3. கரும்பிற்கு நடுநிலை தன்மையுடைய மண்ணும் தேவைப்படுகிறது

A) 1, 3 தவறு

B) 2, 3 தவறு

C) 1, 2 தவறு

D) 3 தவறு

விளக்கம்: 1. சிட்ரஸ் பழங்களுக்கு காரத்தன்மையுடைய மண்ணும் தேவைப்படுகிறது

2. அரிசிக்கு அமிலத்தன்மையுடைய மண்ணும் தேவைப்படுகிறது

48) வாக்கியத்தை கவனி

1. கடல்நீரிலிருந்து பிரித்தெடுக்கும் உப்பு NaOH

2. அனைத்து உப்புகளும் கரைசல்கள் ஆகும்.

3. உப்புகள் நீரில் கரைவதில்லை

4. அமில கார நடுநிலையாக்களின் வினைபொருள் உப்பு

A) 1, 3, 4 சரி

B) 1, 4 சரி

C) 2, 4 சரி

D) 1, 3 சரி

விளக்கம்: 1. கடல்நீரிலிருந்து பிரித்தெடுக்கும் உப்பு NaOH

2. அனைத்து உப்புகளும் அயனிச்சேர்மங்கள் ஆகும்.

3. உப்புகள் நீரில் கரைந்து நேர் மற்றும் எதிர் அயனியை உருவாக்கும்.

4. அமில கார நடுநிலையாக்களின் வினைபொருள் உப்பு

49) பொட்டாஷ் படிகாரத்தின் வாய்ப்பாடு?

A) KAI(SO4)2.12H2O

B) KAI(SO4)2.6H2O

C) KAI(SO4).12H2O

D) KAI(SO4)2.H2O

விளக்கம்: பொட்டாஷ் படிகாரம் என்பது பொட்டாசியம் சல்பேட் மற்றும் அலுமினியம் சல்பேட் கலந்த கலவையாகும். இது ஒரு இரட்டை உப்பு

50) நீரில் கரையாத உப்பு

A) ZnSO4

B) MgCl2

C) AgCl2

D) CaCl2

விளக்கம்: பெரும்பாலான உப்புகள் நீரில் கரையும். ஆனால் சில்வர் குளோரைடு உப்பு மட்டும் நீரில் கரையாது.

51) வாக்கியத்தை கவனி.

1. உப்புகள் நிறமுடையவை. படிக வடிவமுடையவை.

2. நீரை உறிஞ்சும் தன்மையுடைவை.

3. நீரில் கரையக்கூடியது.

4. அதிக வெப்பநிலையில் உருகவும் கொதிக்கவும் செய்கிறது

A) 1, 3 சரி

B) 1, 4 சரி

C) 1, 2, 4 சரி

D) 2, 3, 4 சரி

விளக்கம்: உப்புகள் நிறமற்றது. படிக வடிவமுடையது.

52) பொருத்துக.

அ. செங்கல் சிவப்பு – 1.Na2+

ஆ. பொன்னிற மஞ்சள் – 2. K+

இ. இளஞ்சிவப்பு – 3. Ca2+

ஈ. பச்சை – 4.Zn2+

A) 3, 1, 2, 4

B) 3, 4, 1, 2

C) 3, 1, 4, 2

D) 3, 2, 1, 4

விளக்கம்:செங்கல் சிவப்பு – 1. Ca2+

பொன்னிற மஞ்சள் – 2. Na2+

இளஞ்சிவப்பு – 3. . K+

பச்சை – 4. Zn2+

53) பொருத்துக.

அ. சலவை சோடா – 1.NaHCO3

ஆ. சமையல் சோடா – 2. CaoCl2

இ. சலவை தூள் – 3. Na2CO3

ஈ. சாதாரண உப்பு – 4.NaCl

A) 3, 1, 2, 4

B) 3, 4, 1, 2

C) 3, 1, 4, 2

D) 1, 2, 3, 4

விளக்கம்: சலவை சோடா -Na2CO3

சமையல் சோடா – NaHCO3

சலவை தூள் – CaoCl2

சாதாரண உப்பு – NaCl

9th Science Lesson 15 Questions in Tamil

15] கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

1) கார்பன் என்று பெயர் வைத்தவர் யார்?

A) ஆண்டனி லவாய்சியர்

B) பெஷிஷ்லியஸ்

C) ஸ்மித்ஸன் டென்னன்ட்

D) கார்ல் ஷிலே

விளக்கம்: கார்பன் முக்கியமான அலோகத் தனிமங்களுள் ஒன்றாகும். இலத்தீன் மொழியில் நிலக்கரி என பொருள்படும் கார்போ எனும் வார்த்தையிலிருந்து ஆண்டனி லவாய்சியர் இதற்கு கார்பன் என்று பெயரிட்டார்.

2) எந்த ஆண்டு சுவீடன் நாட்டு அறிவியல் அறிஞர் கார்ல் ஷீலே என்பவர் கிராஃபைட் எனப்படும் பென்சில் கரி எரியும்போது கார்பன் டை ஆக்ஸைடை உருவாக்குகிறது என்று கூறினார்?

A) 1779

B) 1772

C) 1976

D) 2004

விளக்கம்: 1779 ஆண்டு சுவீடன் நாட்டு அறிவியல் அறிஞர் கார்ல் ஷீலே என்பவர் கிராஃபைட் எனப்படும் பென்சில் கரி, எரியும்போது, கார்பன் டை ஆக்ஸைடை உருவாக்குகிறது என்று கூறினார்.

3) இதுவரை எத்தனை இலட்சத்திற்கும் மேலான கார்பன் சேர்மங்கள் கண்டறியப்பட்டுள்ளன?

A) 40

B) 20

C) 30

D) 50

விளக்கம்: இதுவரை 50 இலட்சத்திற்கு மேலான கார்பன் சேர்மங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அநேக புது கார்பன் சேர்மங்கள் அனுதினமும் கண்டுபிடிக்கப்படுகின்றன அல்லது தயாரிக்கப்படுகின்றன.

4) பொருத்துக.

அ. ஒற்றைப் பிணைப்பு – 1. ஆல்கைன்

ஆ. இரட்டைப் பிணைப்பு – 2. ஆல்கீன்

இ முப்பிணைப்பு – 3. ஆல்கேன்

A) 2, 3, 1

B) 1, 2, 3

C) 3, 2, 1

D) 2, 1, 3

விளக்கம்: ஒற்றைப் பிணைப்பு – ஆல்கேன்

இரட்டைப் பிணைப்பு – ஆல்கீன்

முப்பிணைப்பு – ஆல்கைன்

5) கூற்றுகளை ஆராய்க.

1. கார்பன் குறைந்த அளவே இயற்கையில் காணப்படுகிறது

2. கார்பன் சேர்மங்களின் எண்ணிக்கையானது, இயற்கையில் உள்ள மற்ற தனிமங்களுடைய சேர்மங்களின் எண்ணிக்கையைவிட குறைவாக உள்ளது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. கார்பன் குறைந்த அளவே இயற்கையில் காணப்படுகிறது

2. கார்பன் சேர்மங்களின் எண்ணிக்கையானது, இயற்கையில் உள்ள மற்ற தனிமங்களுடைய சேர்மங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது.

6) கார்பன் அணுக்கள் அவற்றுடன் மீண்டும் மீண்டும் இணைந்து_____________பிணைப்பின் மூலம் சங்கிலித் தொடர்களை உருவாக்குகிறது?

A) சகப்பிணைப்பு

B) ஈதல் சகப்பிணைப்பு

C) ஹைட்ரஜன் பிணைப்பு

D) அயனிப்பிணைப்பு

விளக்கம்: கார்பன் அணுக்கள் சங்கிலித் தொடராக்கம் மூலம் மிக நீண்ட சங்கிலிகளை உடைய சேர்மங்களை உருவாக்கக்கூடிய ஒரு முக்கியமான தனிமம் ஆகும். கார்பன் அணுக்கள் அவற்றுடன் மீண்டும் மீண்டும் சகப்பிணைப்பின் மூலமாக இணைந்து சங்கிலித் தொடர்களை உருவாக்குகின்றன.

7) கார்பன் அணுக்கள் எத்தனை சங்கிலித்தொடர்களை உருவாக்குகிறது?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: கார்பன் அணுக்கள் அவற்றுடன் மீண்டும் மீண்டும் சகப்பிணைப்பின் மூலமாக இணைந்து மூன்று சங்கிலித் தொடர்களை உருவாக்குகின்றன. அவை,

1. நீண்ட சங்கிலித் தொடர்

2. கிளைச் சங்கிலித் தொடர்

3. வளையச் சங்கிலி

8) கூற்றுகளை ஆராய்க.

1. சக்கரையும் செல்லுலோஸ-ம் நூற்றுக்கணக்கான கார்பன் அணுக்களால் ஆன சங்கிலிகளைக் கொண்டுள்ளன

2. நெகிழியும் கூட சங்கிலிப்பிணைப்பைக் கொண்ட கார்பனின் பெரிய மூலக்கூறு ஆகும்.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. சக்கரையும் செல்லுலோஸ-ம் நூற்றுக்கணக்கான கார்பன் அணுக்களால் ஆன சங்கிலிகளைக் கொண்டுள்ளன.

2. நெகிழியும் கூட சங்கிலிப்பிணைப்பைக் கொண்ட கார்பனின் பெரிய மூலக்கூறு ஆகும்.

9) மீத்தேன் உருவாக்கத்தின் போது கார்பன் ஹைட்ரஜனுடன் இணைகிறது. இது கீழ்க்கண்ட எதன் மூலம் நடைபெறுகிறது?

A) சகப்பிணைப்பு

B) ஈதல் சகப்பிணைப்பு

C) ஹைட்ரஜன் பிணைப்பு

D) அயனிப்பிணைப்பு

விளக்கம்: மீத்தேனில், கார்பனானது நான்கு ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைந்து நான்கு சகப்பிணைப்புகளை உருவாக்கும். எனவே, இது நான்முக பிணைப்பைக் கொண்டுள்ளது.

10) கார்பனின் மற்றொரு முக்கியமான தன்மை நான்முக இணைதிறன் ஆகும். கார்பனின் எலக்ட்ரான் அமைப்பு?

A) 2, 1

B) 2, 3

C) 2.4

D) 2, 2

விளக்கம்: கார்பனின் மற்றொரு முக்கியமான தன்மை நான்முக இணைதிறன் ஆகும். கார்பனின் அணு எண் 6. முதல் கூட்டில் இரண்டு எலக்ட்ரான் உள்ளது. இரண்டாம் கூட்டில் மீதியுள்ள 4 எலக்ட்ரான் உள்ளது. ஒரு அணுவின் வெளிக்கூட்டில் இருக்கும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையே அதன் இணைதிறன் ஆகும். எனவே கார்பன் நான்முக இணைதிறன் கொண்டது.

11) கூற்றுகளை ஆராய்க.

1. சங்கிலி தொடராக்கம் என்பது ஒரு தனிமம் அதே தனிமத்துடன் மட்டும் இணைந்து நான்முக இணைதிறன் மூலம் திறந்த சங்கிலிச் சேர்மங்களை உருவாக்குதல் ஆகும்.

2. சங்கிலி தொடராக்கம் என்பது ஒரு தனிமம் அதே தனிமத்துடன் மட்டும் இணைந்து நான்முக இணைதிறன் மூலம் மூடிய சங்கிலிச் சேர்மங்களை உருவாக்குதல் ஆகும்.

3. சங்கிலி தொடராக்கம் என்பது ஒரு தனிமம் அதே தனிமத்துடனோ அல்லது மற்ற தனிமங்களுடனோ இணைந்து நான்முக இணைதிறன் மூலம் திறந்த சங்கிலிச் சேர்மங்களை உருவாக்குதல்

ஆகும்.

4. சங்கிலி தொடராக்கம் என்பது ஒரு தனிமம் அதே தனிமத்துடனோ அல்லது மற்ற தனிமங்களுடனோ இணைந்து நான்முக இணைதிறன் மூலம் திறந்த சங்கிலிச் சேர்மங்களையோ அல்லது மூடிய சங்கிலி சேர்மங்களையோ உருவாக்குதல் ஆகும்.

A) 1, 2 சரி

B) 3 மட்டும் சரி

C) 4 மட்டும் சரி

D) 3, 4 சரி

விளக்கம்: சங்கிலி தொடராக்கம் என்பது ஒரு தனிமம் அதே தனிமத்துடனோ அல்லது மற்ற தனிமங்களுடனோ இணைந்து நான்முக இணைதிறன் மூலம் திறந்த சங்கிலிச் சேர்மங்களையோ அல்லது மூடிய சங்கிலி சேர்மங்களையோ உருவாக்குதல் ஆகும்.

12) ஆண்டனி லவாய்சியர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

A) அமெரிக்கா

B) பிரான்ஸ்

C) ரஷ்யா

D) பிரிட்டன்

விளக்கம்: பிரான்ஸ் நாட்டின் அறிவியல் அறிஞர் ஆண்டனி லவாய்சியர் என்பவர் தான் கார்பன் எனப் பெயரிட்டார்.

13) கூற்று: உலகில் பல்வேறு வகையான கார்பன் வடிவங்கள் காணப்படுகின்றன.

காரணம்: கார்பனின் பன்முக இணைப்புத்திறனே பல்வேறு வகையான கார்பன் சேர்மங்கள் உருவாகக் காரணமாகிறது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: கார்பன் குறைந்தளவே இயற்கையில் காணப்பட்டாலும், கார்பன் சேர்மங்களின் எண்ணிக்கையானது, இயற்கையில் உள்ள மற்ற தனிமங்களுடைய சேர்மங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது. கார்பனின் பன்முக இணைப்புத்திறனே பல்வேறு வகையான கார்பன் சேர்மங்கள் உருவாகக் காரணமாகிறது.

14) ஒரு சேர்மத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்பை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது?

A) இணைதிறன் எலக்ட்ரான்களின் எணணிக்கை

B) தனிம வரிசையில் அதன் அமைவிடம்

C) அதன் பிணைப்பு

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: ஒரு சேர்மத்திலுள்ள பிணைப்புதான் அந்த சேர்மத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்பை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

15) கூற்று: சங்கிலித் தொடராக்கம் மூலம் மிக நீண்ட சங்கிலிகளை உடைய சேர்மங்களை உருவாக்கக்கூடிய ஒரு முக்கியமான தனிமம் கார்பன்

காரணம்: அதன் நான்முக இணைதிறன்

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: சங்கிலித் தொடராக்கம் மூலம் மிக நீண்ட சங்கிலிகளை உடைய சேர்மங்களை உருவாக்கக்கூடிய ஒரு முக்கியமான தனிமம் கார்பன். காரணம் அதன் நான்முக இணைதிறன்.

16) கீழ்க்கண்டவற்றுள் எது அமில நீக்கியாகப் பயன்படுகிறது?

A) கால்சியம் கார்பைடு

B) கால்சியம் டை சல்பைடு

C) கால்சியம் கார்பனேட்

D) சோடியம் டை கார்பனேட்

விளக்கம்: கால்சியம் கார்பனேட் அமில நீக்கியாகப் பயன்படுகிறது. இது கார்பன் டை ஆக்ஸைடை நீர்த்த சுண்ணாம்புக் கரைசலில் செலுத்தும் போது தயாரிக்கப்படுகின்றது.

17) கரிமவேதியியல் என்பது சங்கிலித் தொடராக்கத்தின் மூலம் பிணைக்கப்பட்ட____________சேர்மங்களைப் பற்றியதாகும்?

A) ஹைட்ரஜன்

B) நைட்ரஜன்

C) கார்பன்

D) பெரிலியம்

விளக்கம்: கரிமவேதியியல் என்பது சங்கிலித் தொடராக்கத்தின் மூலம் பிணைக்கப்பட்ட கார்பன் சேர்மங்களைப் பற்றியதாகும்.

18) கார்பன் மோனக்சைடு பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. காற்றில் இயற்கையாக காணப்படும் பகுதி பொருள்

2. நிறமற்றது

3. மணமற்றது.

4. நச்சுத்தன்மை உடையது

A) 1, 2, 4 சரி

B) 1, 4 சரி

C) 2, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. காற்றில் இயற்கையாக காணப்படும் பகுதி பொருள் அல்ல.

2. நிறமற்றது

3. மணமற்றது.

4. நச்சுத்தன்மை உடையது

19) கிராபைட் ஹைட்ரஜன் தயாரித்தலில் பயன்படுவது எது?

A) கால்சியம் கார்பைடு

B) கால்சியம் டை சல்பைடு

C) கால்சியம் கார்பனேட்

D) சோடியம் டை கார்பனேட்

விளக்கம்: கால்சியம் கார்பைடு கிராபைட் ஹைட்ரஜன் தயாரித்தலில் பயன்படுகிறது. இது வெல்டிங் தொழிலில் பயன்படும் அசிட்டிலீன் வாயு தயாரித்தலிலும் பயன்படுகிறது.

20) கார்பனின் அருகிலுள்ள மந்த வாயு எது?

A) நியான்

B) ஆர்கான்

C) கிரிப்டான்

D) செனான்

விளக்கம்: எண்ம விதியின்படி கார்பன் தன் அருகிலுள்ள மந்த வாயுவான நியானின் எலக்ட்ரான் அமைப்பை அடைவதற்கு நான்கு எலக்ட்ரான்கள் அதற்குத் தேவை. எனவே எண்ம நிலையை அடைவதற்காக கார்பன் தன்னுடைய நான்கு எலக்ட்ரான்களையும் மற்ற தனிமங்களின் எலக்ட்ரான்களுடன் பகிர்ந்து கொள்ளும் தன்மை உடையது. இதுவே நான்முக பிணைப்பு என அழைக்கப்படுகிறது.

21) கூற்று: கார்பனின் சேர்மங்களின் எண்ணிக்கையானது, இயற்கையில் உள்ள மற்ற தனிமங்களுடைய சேர்மங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது.

காரணம்: கார்பன் சில சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: கார்பன் சில சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளதால், கார்பனின் சேர்மங்களின் எண்ணிக்கையானது, இயற்கையில் உள்ள மற்ற தனிமங்களுடைய சேர்மங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது.

22) 19-ம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் பெர்ஷிலியஸ் என்பவர் கார்பனின் சேர்மங்களை மூலப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு எத்தனை வகைப்படுத்தினார்?

A) 2

B) 3

C) 4

D) 5

விளக்கம்: 19-ம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் பெர்ஷிலியஸ் என்பவர் கார்பனின் சேர்மங்களை மூலப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு 2 வகைப்படுத்தினார். அவை,

1. கரிம கார்பன் சேர்மங்கள்

2. கனிம கார்பன் சேர்மங்கள்

23) வைரமும் கார்பன் தான் என்று கூறியவர்?

A) ஆண்டனி லவாய்சியர்

B) பெஷிஷ்லியஸ்

C) ஸ்மித்ஸன் டென்னன்ட்

D) கார்ல் ஷிலே

விளக்கம்: 1976ல் ஆங்கில வேதியியலாளர் ஸ்மித்ஸன் டென்னன்ட் என்பவர் வைரமானது எரிந்து கார்பன் டை ஆக்ஸைடை உருவாக்கியதால் வைரமும் கார்பன்தான். அது கார்பனின் சேர்மம் இல்லை என்று கூறினார்.

24) எந்த அறிஞர் கிராஃபைட் எனப்படும் பென்சில் கரியும், எரியும்போது, கார்பன் டை ஆக்ஸைடை உருவாக்குகிறது, எனவே இது கார்பனின் மற்றொரு வடிவம் என்று கூறினார்?

A) ஆண்டனி லவாய்சியர்

B) பெஷிஷ்லியஸ்

C) ஸ்மித்ஸன் டென்னன்ட்

D) கார்ல் ஷிலே

விளக்கம்: கார்ல் ஷிலே என்பவர் கிராஃபைட் எனப்படும் பென்சில் கரி எரியும்போது, கார்பன் டை ஆக்ஸைடை உருவாக்குகிறது. எனவே இதுவும் கார்பனின் மற்றொரு வடிவம் என்று 1779ஆம் ஆண்டு கூறினார்.

25) கூற்று: உலகில் கார்பன் சேர்மங்கள் அதிகமாக காணப்படுகின்றன.

காரணம்: கார்பன் சேர்மத்தின் சங்கிலித் தொடராக்கப்பண்பு

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்:கார்பனின் இந்த சங்கிலித் தொடராக்கப்பண்புதான் உலகில் இவ்வளவு கார்பன் சேர்மங்கள் உருவாகக் காரணமாக உள்ளது.

26) கார்பன் டை ஆக்ஸைடின் பயன்களில் பொருந்தாதது எது?

A) தீயணைப்பான்

B) பழங்களை பாதுகாத்தல்

C) ரொட்டி தயாரித்தல்

D) ஹைட்ரஜன் தயாரித்தல்

விளக்கம்: கார்பன் டை ஆக்சைடு பயன்கள்:

1. தீயணைப்பான்

2. பழங்களைப் பாதுகாத்தல்

3. ரொட்டி தயாரித்தல்

4. யூரியா

5. சோடாபானம்

6. நைட்ரஜன் உரங்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டியில் உலர் பனிக்கட்டியாக.

27) சங்கிலி தொடராக்கம் மூலம் மிக நீண்ட சங்கிலிகளை உடைய சேர்மங்களை உருவாக்கக் கூடிய ஒரு முக்கியமான தனிமம்?

A) ஆக்ஸிஜன்

B) ஹைட்ரஜன்

C) ஹைட்ரஜன்

D) கார்பன்

விளக்கம்: சங்கிலி தொடராக்கம் என்பது ஒரு தனிமம் அதே தனிமத்துடனோ அல்லது மற்ற தனிமங்களுடனோ இணைந்து நான்முக இணைதிறன் மூலம் திறந்த சங்கிலிச் சேர்மங்களையோ அல்லது மூடிய சங்கிலி சேர்மங்களையோ உருவாக்குதல் ஆகும். சங்கிலி தொடராக்கம் மூலம் மிக நீண்ட சங்கிலிகளை உடைய சேர்மங்களை உருவாக்கக் கூடிய ஒரு முக்கியமான தனிமம் கார்பன் ஆகும்.

28) கூற்றுகளை ஆராய்க.

1. கனிம கார்பன் சேர்மங்கள்: கால்சியம் கார்பனேட், கார்பன் மோனாக்ஸைடு, கார்பன் டை ஆக்ஸைடு

2. கரிம கார்பன் சேர்மங்கள்: எத்தனால், செல்லுலோஸ், ஸ்டார்ச்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: கனிம கார்பன் சேர்மங்கள்: கால்சியம் கார்பனேட், கார்பன் மோனாக்ஸைடு, கார்பன் டை ஆக்ஸைடு

2. கரிம கார்பன் சேர்மங்கள்: எத்தனால், செல்லுலோஸ், ஸ்டார்ச்

29) கார்பன் டை ஆக்ஸைடு பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. இயற்கையில் தனித்த நிலையில் உள்ளது

2. இயற்கையில் இணைந்த நிலையில் உள்ளது.

3. கார்பன் முழுவதுமாக எரிவதால் உருவாகிறது

4. கல்கரி முழுவதுமாக எரிவதால் உருவாகிறது

A) 1, 3 சரி

B) 2, 4 சரி

C) அனைத்தும் சரி

D) அனைத்தும் தவறு

விளக்கம்: 1. இயற்கையில் தனித்த நிலையில் உள்ளது.

2. இயற்கையில் இணைந்த நிலையில் உள்ளது.

3. கார்பன் முழுவதுமாக எரிவதால் உருவாகிறது

4. கல்கரி முழுவதுமாக எரிவதால் உருவாகிறது

30) கீழ்க்கண்டவற்றில் கார்பன் டை சல்பைடுக்கு பொருந்தாதது எது?

A) ரேயான் தயாரித்தல்

B) பூஞ்சைக்கொல்லி

C) பூச்சிகொல்லி

D) அமில நீக்கி

விளக்கம்: கால்சியம் டை சல்பைடு பயன்கள்:

1. கந்தக கரைப்பான்

2. ரேயான் தயாரித்தல்

3. பூஞ்சைக்கொல்லி

4. பூச்சிக்கொல்லி

கால்சியம் கார்பனேட் அமில நீக்கியாக பயன்படுகிறது.

31) கார்பன் மோனாக்சைடு பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. நீரில் பகுதியளவே கரையும்

2. நீர் வாயுவின் முக்கியப் பகுதிப் பொருள் அல்ல

3. இது ஒரு ஒடுக்கும் காரணி

4. எரிபொருள் முழுவதுமாக எரிந்து வளிமண்டலத்தில் சேர்க்கப்படுகின்றது.

A) 1, 4 சரி

B) 1, 3 சரி

C) 2, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. நீரில் பகுதியளவே கரையும்

2. நீர் வாயுவின் முக்கியப் பகுதிப் பொருள்.

3. இது ஒரு ஒடுக்கும் காரணி

4. எரிபொருள் முழுவதுமாக எரியாததால் வளிமண்டலத்தில் சேர்க்கப்படுகின்றது.

32) மாற்றியங்கள் என்பது எது?

A) ஒரே மூலக்கூறு வாய்ப்பாடு, வேறுபட்ட கட்டமைப்பை பெற்ற ஒரு கரிம சேர்மம்

B) ஒரே மூலக்கூறு வாய்ப்பாடு, வேறுபட்ட கட்டமைப்பை பெற்ற ஒரு கனிம சேர்மம்

C) வெவ்வேறு மூலக்கூறு வாய்ப்பாடு, ஒரே கட்டமைப்பை பெற்ற ஒரு கரிம சேர்மம்

D) வெவ்வேறு மூலக்கூறு வாய்ப்பாடு, ஒரே கட்டமைப்பை பெற்ற ஒரு கனிம சேர்மம்

விளக்கம்: ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும், வேறுபட்ட கட்டமைப்பையும் ஒரு கரிமச் சேர்மமானது கொண்டிருக்கும் போது அந்த நிகழ்வின் தன்மை மாற்றியம் என அழைக்கப்படுகிறது. அத்தகைய கரிம சேர்மங்கள் மாற்றியங்கள் என அழைக்கப்படுகின்றன.

33) கூற்றுகளை ஆராய்க.

1. ஒரு ஆக்ஸிஜன் அணுவானது ஒரு கார்பன் மற்றும் ஒரு ஹைட்ரஜன் அணுவுடன் இணைந்தால் அது ஈதர் எனப்படும்

2. ஒரு ஆக்ஸிஜன் அணுவானது இரு கார்பன் அணுக்களோடு இணைந்தால் அது ஆல்கஹால் எனப்படும்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஒரு ஆக்ஸிஜன் அணுவானது ஒரு கார்பன் மற்றும் ஒரு ஹைட்ரஜன் அணுவுடன் இணைந்தால் அது ஆல்கஹால் எனப்படும்

2. ஒரு ஆக்ஸிஜன் அணுவானது இரு கார்பன் அணுக்களோடு இணைந்தால் அது ஈதர் எனப்படும்

34) கூற்றுகளை ஆராய்க.

1. சங்கிலித் தொடராக்கத்தின் மூலம் உருவான கார்பன் சேர்மங்களில் காணப்படும் மேலும் ஒரு சிறப்புத் தன்மை மாற்றியம்

2. ஒரு கரிமச் சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடானது அந்த கரிமச் சேர்மத்தில் உள்ள வேறுபட்ட அணுக்களின் எண்ணிக்கையை மட்டுமே குறிக்கிறது

3. ஒரு மூலக்கூறு வாய்ப்பாடானது ஒன்றுக்கும் மேற்பட்ட அணு அமைப்புக்கு வழிவகுப்பதில்லை.

4. ஒரு கரிமச்சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடானது அணுக்கள் எவ்வாறு தொகுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் அவற்றின் மூலக்கூறு அமைப்பு எவ்வாறு அமைந்துள்ளது என்று கூறுகிறது.

A) 1, 3 சரி

B) 2, 4 சரி

C) 1, 2 சரி

D) 3, 4 சரி

விளக்கம்: 1. சங்கிலித் தொடராக்கத்தின் மூலம் உருவான கார்பன் சேர்மங்களில் காணப்படும் மேலும் ஒரு சிறப்புத் தன்மை மாற்றியம்

2. ஒரு கரிமச் சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடானது அந்த கரிமச் சேர்மத்தில் உள்ள வேறுபட்ட அணுக்களின் எண்ணிக்கையை மட்டுமே குறிக்கிறது

3. ஒரு மூலக்கூறு வாய்ப்பாடானது ஒன்றுக்கும் மேற்பட்ட அணு அமைப்புக்கு வழி வகுக்கும்

4. ஒரு கரிமச்சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடா னது அணுக்கள் எவ்வாறு தொகுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் அவற்றின் மூலக்கூறு அமைப்பு எவ்வாறு அமைந்துள்ளது என்று கூறுவதில்லை

35) தீயணைப்பானாகப் பயன்படுவது எது?

A) கார்பன் மோனாக்ஸைடு

B) கார்பன் டை ஆக்ஸைடு

C) கால்சியம் கார்பைடு

D) சோடியம் பை கார்பனேட்

விளக்கம்: தீயணைப்பானாகப் பயன்படுவது கார்பன் டை ஆக்ஸைடு ஆகும். இது ஒளிச்சேர்க்கையிலும் பயன்படுகிறது.

36) புறவேற்றுமை வடிவத்துவம் என்பது?

A) ஒரு தனிமத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கள் அவற்றின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளில் ஒன்றுபட்டு இருப்பது

B) தனிமத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கள் அவற்றின் இயற்பியல் பண்புகளில் ஒன்றுபட்டும், வேதியியல் பண்புகளில் வேறுபட்டும் இருப்பது

C) தனிமத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கள் அவற்றின் இயற்பியல் பண்புகளில் வேறுபட்டும், வேதியியல் பண்புகளில் ஒன்றுபட்டும் இருப்பது

D) தனிமத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கள் அவற்றின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளில் வேறுபட்டு இருப்பது

விளக்கம்: தனிமத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கள் அவற்றின் இயற்பியல் பண்புகளில் வேறுபட்டும், வேதியியல் பண்புகளில் ஒன்றுபட்டும் இருப்பது புறவேற்றுமை வடிவத்துவம் எனப்படும்

37) கரி மற்றும் வைரம் ஆகிய இரண்டையும் சம எடையளவு எடுத்து, அவற்றை எரிக்கும் போது ஒரே அளவான கார்பன் டை ஆக்ஸைடையே அவை உருவாக்குகின்றன என நிரூபித்தவர்?

A) ஆண்டனி லவாய்சியர்

B) பெஷிஷ்லியஸ்

C) ஸ்மித்ஸன் டென்னன்ட்

D) கார்ல் ஷிலே

விளக்கம்: ஸ்மித்ஸன் டென்னன்ட் என்பவர் வைரமானது எரிந்து கார்பன் டை ஆக்ஸைடை உருவாக்கியதால் வைரமும் கார்பன்தான். அது கார்பனின் சேர்மம் இல்லை என்று கூறினார். மேலும் கரி மற்றும் வைரம் ஆகிய இரண்டையும் சம எடையளவு எடுத்து, அவற்றை எரிக்கும் போது ஒரே அளவான கார்பன் டை ஆக்ஸைடையே அவை உருவாக்குகின்றன என நிரூபித்தார்

38) கார்பன் டை ஆக்ஸைடு இணைந்த நிலையில் கீழக்கண்ட எவற்றில் காணப்படுகிறது?

A) சுண்ணாம்புக்கல்

B) மேக்னசைட்

C) கல்கரி

D) A மற்றும் B

விளக்கம்: கார்பன் டை ஆக்ஸைடு இயற்கையில் தனித்த மற்றும் இணைந்த நிலையில் உள்ளது. இணைந்த நிலையில் சுண்ணாம்புக்கல் மற்றும் மேக்னசைட் ஆகியவற்றில் காணப்படுகின்றது. கார்பன் அல்லது கல்கரியானது முழுவதுமாக எரிவதால் உருவாகிறது.

39) கூற்று: தனிமங்கள் புறவேற்றுமை வடிவங்களை கொண்டிருப்பதில்லை

காரணம்: அவற்றின் தோற்றம் அல்லது தயாரிக்கும் முறை.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: தனிமங்கள் புறவேற்றுமை வடிவங்களை கொண்டிருக்கின்றன. காரணம் அவற்றின் தோற்றம் அல்லது தயாரிக்கும் முறை.

40) கூற்றுகளை ஆராய்க.

1. இதுவரை 50 லட்சத்திற்கும் மேலான கார்பன் சேர்மங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

2. கார்பன் குறைந்த அளவே இயற்கையில் காணப்பட்டாலும்இ கார்பன் சேர்மங்களின் எண்ணிக்கையானது இயற்கையில் உள்ள மற்ற தனிமங்களின் எண்ணிக்கையைவிட குறைவாக உள்ளது.

3. கார்பனின் சங்கிலித் தொடராக்கத்திற்கு காரணம் அதன் நான்முக இணைதிறன் ஆகும்.

4. கார்பன் தனித்தன்மை வாய்ந்த ஒரு அணு ஆகும். காரணம் அது சில சிறப்பியல்புகளை கொண்டுள்ளது.

A) 1 மட்டும் சரி

B) 1, 2 சரி

C) 1, 2, 4 சரி

D) 1, 3, 4 சரி

விளக்கம்: 1. இதுவரை 50 லட்சத்திற்கும் மேலான கார்பன் சேர்மங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

2. கார்பன் குறைந்த அளவே இயற்கையில் காணப்பட்டாலும்இ கார்பன் சேர்மங்களின் எண்ணிக்கையானது இயற்கையில் உள்ள மற்ற தனிமங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது.

3. கார்பனின் சங்கிலித் தொடராக்கத்திற்கு காரணம் அதன் நான்முக இணைதிறன் ஆகும்.

4. கார்பன் தனித்தன்மை வாய்ந்த ஒரு அணு ஆகும். காரணம் அது சில சிறப்பியல்புகளை கொண்டுள்ளது.

41) கூற்றுகளை ஆராய்க.

1. கார்பன் நான்முக இணைதிறன் கொண்டது

2. கார்பனின் அருகிலுள்ள மந்த வாயு ஆர்கான்

3. கார்பன் நான்முகப் பிணைப்பு மூலம் எண்ம நிலையை அடையும்.

4. கார்பன் மற்ற தனிமங்களுடன் ஈதல் சகப்பிணைப்பை உண்டாக்குகிறது.

A) 1, 3 சரி

B) 1, 3, 4 சரி

C) 2, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. கார்பன் நான்முக இணைதிறன் கொண்டது

2. கார்பனின் அருகிலுள்ள மந்த வாயு நியான்

3. கார்பன் நான்முகப் பிணைப்பு மூலம் எண்ம நிலையை அடையும்.

4. கார்பன் மற்ற தனிமங்களுடன் சகப்பிணைப்பை உண்டாக்குகிறது

42) குளிர்சாதனப் பெட்டியில் உலர் பனிக்கட்டியாகப் பயன்படுவது?

A) கார்பன் மோனாக்ஸைடு

B) கார்பன் டை ஆக்ஸைடு

C) கால்சியம் கார்பைடு

D) சோடியம் பை கார்பனேட்

விளக்கம்: குளிர்சாதனப் பெட்டியில் உலர் பனிக்கட்டியாகப் பயன்படுவது கார்பன் டை ஆக்ஸைடு ஆகும்.

43) கூற்றுகளை ஆராய்க (கார்பனின் புறவேற்றுமை வடிவம் பற்றி)

1. படிக வடிவமுடையவை – நிலக்கரி, கல்கரி

2. படிகவடிவமற்றவை – கிராபைட், ஃபுல்லரீன்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. படிக வடிவமுடையவை – வைரம், கிராபைட், ஃபுல்லரீன்

2. படிகவடிவமற்றவை – நிலக்கரி, கல்கரி, புகைக்கரி, வாயு கார்பன்

44) கூற்று: வைரம் ஒரு கடினத்தன்மை மற்றும் திடத்தன்மை உடைய கார்பனின் புறவேற்றுமை வடிவமாகும்.

காரணம்: அணுக்கள் யாவும் மும்மைப் பிணைப்பில் மீண்டும் மீண்டும் அடுக்கப்பட்டுள்ளன. இதனால் இது ஒரு முப்பரிமாண அமைப்பைக் கொடுக்கின்றது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: வைரம் ஒரு கடினத்தன்மை மற்றும் திடத்தன்மை உடைய கார்பனின் புறவேற்றுமை வடிவமாகும்.

காரணம்: அணுக்கள் யாவும் நான்முக பிணைப்பில் மீண்டும் மீண்டும் அடுக்கப்பட்டுள்ளன. இதனால் இது ஒரு முப்பரிமாண அமைப்பைக் கொடுக்கின்றது.

45) கால்சியம் கார்பைடு பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. கல்சியம் ஆக்ஸைடு மற்றும் கல்கரியை வெப்பப்படுத்தும் போது உருவாகிறது

2. நிறம் – சாம்பல் கலந்த கருப்பு நிற திண்மம்

3. பயன்கள் – கிராபைட் ஹைட்ரஜன் தயாரித்தல் மற்றும் வெல்டிங் தொழிலில் பயன்படும் அசிட்டிலீன் வாயு தயாரித்தல்

A) 1 மட்டும் சரி

B) 1, 2 சரி

C) 1, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. கல்சியம் ஆக்ஸைடு மற்றும் கல்கரியை வெப்பப்படுத்தும் போது உருவாகிறது

2. நிறம் – சாம்பல் கலந்த கருப்பு நிற திண்மம்

3. பயன்கள் – கிராபைட் ஹைட்ரஜன் தயாரித்தல் மற்றும் வெல்டிங் தொழிலில் பயன்படும் அசிட்டிலீன் வாயு தயாரித்தல்

46) நைட்ரஜன் உரங்கள் தயாரிக்கப் பயன்படுவது எது?

A) கால்சியம் கார்பைடு

B) கால்சியம் டை சல்பைடு

C) கால்சியம் கார்பனேட்

D) கார்பன் டை ஆக்ஸைடு

விளக்கம்: கார்பன் டை ஆக்ஸைடு நைட்ரஜன் உரங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. கார்பன் டை ஆக்ஸைடின் பிற பயன்கள்:

1. தீயணைப்பான்

2. பழங்களைப் பாதுகாத்தல்

3. ரொட்டி தயாரித்தல்

4. யூரியா

5. சோடாபானம்

6. நைட்ரஜன் உரங்கள் தயாரிக்க மற்றும் குளிர்சாதனப் பெட்டியில் உலர் பனிக்கட்டியாக.

47) தவறான கூற்றை தேர்வு செய்க.

A) கார்பன் டை ஆக்ஸைடு – யூரியா, ஹைட்ரஜன் உரங்கள்

B) கால்சியம் கார்பைடு – கந்தக கரைப்பான்

C) கால்சியம் கார்பனேட் – படிக வடிவமுடைய திண்மம்

D) சோடியம் பை கார்பனேட் – வெண்ணிற படிக வடிவமுடைய திண்மம்

விளக்கம்: கார்பன் டை ஆக்ஸைடு – யூரியா, ஹைட்ரஜன் உரங்கள்

கால்சியம் கார்பைடு – கிராபைட் ஹைட்ரஜன் தயாரித்தல் மற்றும் வெல்டிங் தொழில் பயன்படும் அசிட்டிலீன் வாயு தயாரித்தல்

கால்சியம் கார்பனேட் – படிக வடிவமுடைய திண்மம்

சோடியம் பை கார்பனேட் – வெண்ணிற படிக வடிவமுடைய திண்மம்

48) வைரம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. கடினமானது

2 அடர்த்தியானது

3. ஒளிபுகும் தன்மை கொண்டதல்ல

4. ஒவ்வொரு கார்பனும் மூன்று சகப்பிணைப்புகளைக் கொண்டுள்ளது

A) 1, 3 சரி

B) 1, 4 சரி

C) 1, 2 சரி

D) 3, 4 சரி

விளக்கம்: 1. கடினமானது

2. அடர்த்தியானது

3. ஒளிபுகும் தன்மை கொண்டது

4. ஒவ்வொரு கார்பனும் நான்கு சகப்பிணைப்புகளைக் கொண்டுள்ளது

49) கிராஃபைட் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. ஒவ்வொரு கார்பனும் மூன்று சகப்பிணைப்புகளை கொண்டுள்ளது

2. வைரத்தை விட மிருதுவானது

3. தொடுவதற்கு சொரசொரப்பானது

4. ஒளி புகாத் தன்மை கொண்டது

A) 1, 2, 4 சரி

B) 1, 2 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. ஒவ்வொரு கார்பனும் மூன்று சகப்பிணைப்புகளை கொண்டுள்ளது

2. வைரத்தை விட மிருதுவானது

3. தொடுவதற்கு வழவழப்பானது

4. ஒளி புகாத் தன்மை கொண்டது

50) கார்பன் டை ஆக்ஸைடு பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. நிறமற்றது

2. மணமுள்ளது

3. சுவையற்றது.

4. நிலையற்றது

5. நீரில் அதிக அளவு கரையக்கூடியது

6. ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகிறது.

A) 1, 3, 5, 6 சரி

B) 1, 2.3.5, 6 சரி

C) 2, 3, 4.5.6 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. நிறமற்றது

2. மணமற்றது.

3. சுவையற்றது.

4. நிலையானது.

5. நீரில் அதிக அளவு கரையக்கூடியது.

6. ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகிறது.

51) கூற்றுகளை ஆராய்க.

1. வைரம் முப்பரிமாண அமைப்பைக் கொண்டது.

2. கிராஃபைட் அறுங்கோண அடுக்கைக் கொண்டது.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. வைரம் முப்பரிமாண அமைப்பைக் கொண்டது.

2. கிராஃபைட் அறுங்கோண அடுக்கைக் கொண்டது.

52) நன்றாக அறியப்பட்ட ஃபுல்லரீன் வடிவம்?

A) பக்மினிஸ்டர் ஃபுல்லரீன்

B) இராபர்ட் கார்ல் ஃபுல்லரீன்

C) பெர்ஷ்லியஸ் ஃபுல்லரீன்

D) கார்ல் ஷீலே ஃபுல்லரீன்

விளக்கம்: நன்றாக அறியப்பட்ட ஃபுல்லரீன் வடிவம் பக்மினிஸ்டர் ஃபுல்லரீன் ஆகும்.

53) கூற்று: வைரம் முப்பரிமாண அமைப்பைக் கொடுக்கிறது

காரணம்: இங்கு அணுக்கள் யாவும் மும்மைப் பிணைப்பில் மீண்டும் மீண்டும் அடுக்கப்பட்டள்ளன.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: வைரம் முப்பரிமாண அமைப்பைக் கொடுக்கிறது. காரணம்: இங்கு அணுக்கள் யாவும் நான்முகப் பிணைப்பில் மீண்டும் மீண்டும் அடுக்கப்பட்டள்ளன. இதுவே இதன் கடினத் தன்மை மற்றும் திடத் தன்மைக்குக் காரணமாகும்.

54) கார்பன் மாறுபட்ட புறவேற்றுமை வடிவம் கொண்டது. அவற்றின் இயற்பியல் பண்புகளை கொண்டு அவற்றை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?

A) 4

B) 3

C) 2

D) 5

விளக்கம்: கார்பன் மாறுபட்ட புறவேற்றுமை வடிவம் கொண்டது. அவற்றின் இயற்பியல் பண்புகளை கொண்டு அவற்றை 2 வகைகளாகப் பிரிக்கலாம். அவை,

1. படிக வடிவமுடையவை – வைரம், கிராபைட், ஃபுல்லரீன்

2. படிகவடிவமற்றவை – நிலக்கரி, கல்கரி, புகைக்கரி, வாயு கார்பன்

55) கால்சியம் கார்பைடு பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. கால்சியம் ஆக்ஸைடு மற்றும் கல்கரியை வெப்படுத்தும் போது உருவாகிறது

2. சாம்பல் கலந்த கருப்பு நிற திண்மம்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. கால்சியம் ஆக்ஸைடு மற்றும் கல்கரியை வெப்படுத்தும் போது உருவாகிறது.

2. சாம்பல் கலந்த கருப்பு நிற திண்மம்.

56) கூற்று: கிராஃபைட் வைரத்தை விட மென்மையானவை.

காரணம்: இவை நான்முகப் பிணைப்பில் மீண்டும் மீண்டும் அடுக்கப்பட்டுள்ளன.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: கிராஃபைட்டில் ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற மூன்று கார்பன் அணுக்களுடன் ஒரே தளத்தில் சகப்பிணைப்பில் வலிமை குறைந்த வாண்டர் வால்ஸ் விசை மூலம் பிணைக்கப்பட்டுள்ளன. இது ஒரு வலிமை குறைந்த விசை ஆகும். எனவே கிராஃபைட் வைரத்தை விட மென்மையானவை.

57) கூற்று: நெகிழியாலான உறிஞ்சு குழாய்களை மறுசுழற்சி செய்ய முடியாது.

காரணம்: இவற்றின் எடை மிகவும் குறைவு

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: நெகிழியாலான உறிஞ்சு குழாய்களின் எடை மிகவும் குறைவாக இருப்பதால் இவற்றை மறுசுழற்சி செய்ய முடியாது. உறிஞ்சு குழாய் போன்ற நெகிழிகளை 90 சதவீதம் பறவைகள் உட்கொள்கின்றன.

58) கூற்று: ஃபுல்லரீனின் மூலக்கூறு வாய்ப்பாடு C60

காரணம்: இதில் 60 கார்பன் அணுக்கள் ஒன்றிணைந்த 5 மற்றும் 6 உறுப்புக்களைக் கொண்ட ஒரு வடிவ கால்பந்து போன்ற அமைப்பை உருவாக்கும்.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: ஃபுல்லரீனில் 60 கார்பன் அணுக்கள் ஒன்றிணைந்து 5 மற்றும் 6 உறுப்புக்களைக் கொண்ட ஒரு வடிவ கால்பந்து போன்ற அமைப்பை உருவாக்கும். எனவே, ஃபுல்லரீனின் மூலக்கூறு வாய்ப்பாடு C60

59) எந்த நாட்டு கட்டிட வடிவமைப்பாளர் பெயரால் பக்மினிஸ்டர் ஃபுல்லரீன் என்று அழைக்கப்படுகிறது

A) இங்கிலாந்து

B) பிரான்ஸ்

C) இத்தாலி

D) அமெரிக்கா

விளக்கம்: அமெரிக்க நாட்டு கட்டிட வடிவமைப்பாளர் பெயரால் பக்மினிஸ்டர் ஃபுல்லரீன் என்று அழைக்கப்படுகிறது. மிகவும் நன்கு அறியப்பட்ட ஃபுல்லரீன் வடிவம் பக்மினிஸ்டர் ஃபுல்லரீன் ஆகும்.

60) கார்பன் டை சல்பைடு பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. நேரடியாக கார்பன் மற்றும் கந்தகத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.

2. நிறமற்றது

3. தீப்பற்றக்கூடியது

4. அதிக நச்சுத்தன்மையற்றது

A) 1, 2 சரி

B) 1, 2, 3 சரி

C) 1, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. நேரடியா கார்பன் மற்றும் கந்தகத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.

2. நிறமற்றது

3. தீப்பற்றக்கூடியது

4. அதிக நச்சுத்தன்மை உடையது

61) சோடியம் பை கார்பனேட் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

A) சோடியம் ஹைட்ராக்சைடு மற்றும் கார்பானிக் அமிலத்துடன் சேர்ந்து உருவாகிறது

B) வெண்ணிற படிக வடிவமுடைய திண்மம்

C) ரொட்டி சோடா தயாரித்தலில் பயன்படுகிறது

D) ரேயான் தயாரித்தலில் பயன்படுகிறது

விளக்கம்:சோடியம் பை கார்பனேட்:

  • சோடியம் ஹைட்ராக்சைடு மற்றும் கார்பானிக் அமிலத்துடன் சேர்ந்து உருவாகிறது
  • வெண்ணிற படிக வடிவமுடைய திண்மம்
  • ரொட்டி சோடா தயாரித்தலில் பயன்படுகிறது
  • நீரில் பகுதியளவே கரையக் கூடியது.
  • ரேயான் தயாரிக்கப்பயன்படுவது கார்பன் டை சல்பைடு

62) கால்சியம் கார்பனேட் பற்றிய கூற்றுகளை ஆராய்க

1. கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை நீர்த்த சுண்ணாம்புக் கரைசலில் செலுத்தும் போது தயாரிக்கப்படுகின்றது.

2. படிக வடிவமுடைய திண்மம்

3. நீரில் கரையும்

4. அமில நீக்கியாக பயன்படுகிறது.

A) 1, 2 சரி

B) 1, 2, 4 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை நீர்த்த சுண்ணாம்புக் கரைசலில் செலுத்தும் போது தயாரிக்கப்படுகின்றது.

2. படிக வடிவமுடைய திண்மம்

3. நீரில் கரைவதில்லை

4. அமில நீக்கியாக பயன்படுகிறது.

63) தவறான ஒன் தெரிவு செய்க.

A) கால்சியம் கார்பனேட் – கார்பன் மோனாக்ஸைடு வாயுவை நீர்த்த சுண்ணாம்புக் கரைசலில் செலுத்தும் போது தயாரிக்கப்படுகின்றது

B) சோடியம் பை கார்பனேட் – சோடியம் ஹைட்ராக்ஸைடு மற்றும் கார்பானிக் அமிலத்துடன் சேர்ந்து உருவாகின்றது.

C) கார்பன் டை ஆக்ஸைடு – இணைந்த நிலையில் சுண்ணாம்புக்கல் மற்றும் மேக்னசைட் ஆகியவற்றில் காணப்படுகின்றது

D) கார்பன் டை ஆக்ஸைடு – ஒளிச்சேர்க்கையில் ஈடுபடக்கூடியது

விளக்கம்: கால்சியம் கார்பனேட் – கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை நீர்த்த சுண்ணாம்புக் கரைசலில் செலுத்தும் போது தயாரிக்கப்படுகின்றது

சோடியம் பை கார்பனேட் – சோடியம் ஹைட்ராக்ஸைடு மற்றும் கார்பானிக் அமிலத்துடன் சேர்ந்து உருவாகின்றது.

கார்பன் டை ஆக்ஸைடு – இணைந்த நிலையில் சுண்ணாம்புக்கல் மற்றும் மேக்னசைட் ஆகியவற்றில் காணப்படுகின்றது

கார்பன் டை ஆக்ஸைடு – ஒளிச்சேர்க்கையில் ஈடுபடக்கூடியது

64) கிராஃபைட்டில் ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற மூன்று கார்பன் அணுக்களுடன் ஒரே தளத்தில் எந்த வகையான பிணைப்பில் இணைந்துள்ளது?

A) அயனிப்பிணைப்பு

B) சகப்பிணைப்பு

C) ஹைட்ரஜன் அயனிப் பிணைப்பு

D) ஈதல் சகப்பிணைப்பு

விளக்கம்: கிராஃபைட்டில் ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற மூன்று கார்பன் அணுக்களுடன் ஒரே தளத்தில் சகப்பிணைப்பில் இணைந்துள்ளது

65) கிராஃபைட்டில் எந்த வகையான விசை மூலம் அணுக்கள் பிணைக்கப்பட்டுள்ளன?

A) கொலியாலிஸ் விசை

B) வாண்டர் வால்ஸ் விசை

C) நியூட்டன் விசை

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: கிராஃபைட்டில் ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற மூன்று அணுக்களுடன் ஒரே தளத்தில் சகப்பிணைப்பில் பிணைந்துள்ளது. இந்த அமைப்பு அறுங்கோண அடுக்கை உருவாக்குகிறது. இந்த அடுக்குகள் ஒன்றோடொன்று வலிமை குறைந்த வாண்டர் வால்ஸ் விசை மூலம் பிணைக்கப்பட்டுள்ளன.

66) கூற்று: அமெரிக்க கட்டட வடிவமைப்பாளர் பக்மினிஸ்டர் ஃபுல்லர் என்பவரின் நினைவாக பக்மினிஸ்டர் ஃபுல்லரீன் என்று இது அழைக்கப்படுகிறது.

காரணம்;: இதன் அமைப்பு பன்னாட்டு கண்காட்சிகளுக்காக ஃபுல்லர் என்பவர் வடிவமைத்த குவிந்த மாடம் போன்ற குமிழ் கட்டடங்களின் கட்டமைப்பை ஒத்துள்ளது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: அமெரிக்க கட்டட வடிவமைப்பாளர் பக்மினிஸ்டர் ஃபுல்லர் என்பவரின் நினைவாக பக்மினிஸ்டர் ஃபுல்லரீன் என்று இது அழைக்கப்படுகிறது.

காரணம்;: இதன் அமைப்பு பன்னாட்டு கண்காட்சிகளுக்காக ஃபுல்லர் என்பவர் வடிவமைத்த குவிந்த மாடம் போன்ற குமிழ் கட்டடங்களின் கட்டமைப்பை ஒத்துள்ளது.

67) உலகின் மிகவும் இலேசான சேர்மம்?

A) ஃபுல்லரீன்

B) கிராஃபைட்

C) கிராஃபீன்

D) வைரம்

விளக்கம்: உலகின் மிகவும் இலேசான சேர்மம் கிராஃபீன் ஆகும். இது தற்போது கண்டுபிடிக்கப்பட்ட கார்பனின் புறவேற்றுமை வடிவமாகும்.

68) கிராபீனை எத்தனை நானோ மீட்டர் இடைவெளியில் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கும்போது கிராஃபைட் கிடைக்கிறது?

A) 0.330

B) 0.335

C) 0.430

D) 0.435

விளக்கம்: கிராபீனை 0.335 நானோ மீட்டர் இடைவெளியில் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கும்போது கிராஃபைட் கிடைக்கிறது. ஒரு நானோ மீட்டர் என்பது 109 மீட்டர் ஆகும்.

69) கிராஃபீன் இரும்பைக் காட்டிலும் எத்தனை மடங்கு வலிமையானது?

A) 100-200

B) 100-300

C) 100-400

D) 100-500

விளக்கம்: கிராஃபீன் தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கார்பனின் புறவேற்றுமை வடிவமாகும். இரும்பைக் காட்டிலும் 100-300 மடங்கு வலிமையானது

70) தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்ப ட்டுள்ள கார்பனின் புறவேற்றுமை வடிவம்?

A) கிராஃபைட்

B) கிராஃபீன்

C) கிராஃபைன்

D)கிரிஃபைன்

விளக்கம்: தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்ட்டுள்ள கார்பனின் புறவேற்றுமை வடிவம் கிராஃபீன் ஆகும்.

71) கார்பன் டை ஆக்ஸைடு பற்றிய கூற்றுகளை ஆராய்க

1. தீயணைப்பான்

2. பழங்களை பாதுகாத்தல்

3. ரொட்டி தயாரித்தல்

4. குளிர் சாதனப் பெட்டியில் உலர் பனிகட்டியாக பயன்படுகிறது

A) 1, 4 சரி

B) 1, 3 சரி

C) 1, 2, 3 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. தீயணைப்பான்

2. பழங்களை பாதுகாத்தல்

3. ரொட்டி தயாரித்தல்

4. குளிர் சாதனப் பெட்டியில் உலர் பனிகட்டியாக பயன்படுகிறது

72) காற்றில்லாமல் எரிக்கப்படும் போது கிடைக்கும் கார்பன் வகை?

A) படிக வடிவ கார்பன்கள்

B) கனிம கார்பன்கள்

C) படிக வடிவமற்ற கார்பன்கள்

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: படிக வடிவமற்ற கார்பன்களில் கார்பன் அணுக்கள் அங்குமிங்குமாக அமைக்கப்பட்டிருக்கும். இவ்வகை கார்பன்கள் விறகானது காற்றில்லாமல் எரிக்கப்படும்போது கிடைக்கின்றன.

73) எந்த ஆண்டு ஆங்கில வேதியியலாளர் ஸ்மித்ஸன் டென்னன்ட் என்பவர் வைரம் என்பது கார்பன் தான். அது கார்பனின் சேர்மம் அல்ல என்று கூறினார்?

A) 1772

B) 1779

C) 1855

D) 1976

விளக்கம்: 1976ல் ஆங்கில வேதியியலாளர் ஸ்மித்ஸன் டென்னன்ட் என்பவர் வைரமானது எரிந்து கார்பன் டை ஆக்ஸைடை மட்டுமே உருவாக்கியதால் வைரமும் கார்பன்தான். அது கார்பனின் சேர்மம் இல்லை எனக் கூறினார்.

74) தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) கார்பன் மோனாக்சைடு – காற்றில் இயற்கையாக காணப்படும் பகுதிப்பொருள்

B) கார்பன் டை ஆக்ஸைடு – இயற்கையில் தனித்த மற்றும் இணைந்த நிலையில் உள்ளது

C) கால்சியம் கார்பைடு – கால்சியம் ஆக்ஸைடு மற்றும் கல்கரியை வெப்பபடுத்தும் போது உருவாகிறது

D) கார்பன் டை சல்பைடு – நேரடியாக கார்பன் மற்றும் கந்தகத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது

விளக்கம்:கார்பன் மோனாக்சைடு – காற்றில் இயற்கையாக காணப்படும் பகுதிப்பொருள் அல்ல

கார்பன் டை ஆக்ஸைடு – இயற்கையில் தனித்த மற்றும் இணைந்த நிலையில் உள்ளது

கால்சியம் கார்பைடு – கால்சியம் ஆக்ஸைடு மற்றும் கல்கரியை வெப்பபடுத்தும் போது உருவாகிறது

கார்பன் டை சல்பைடு – நேரடியாக கார்பன் மற்றும் கந்தகத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது

75) கண்டுபிடிக்கப்பட்ட சேர்மங்களிலேயே மிகவும் வலிமையான சேர்மம்?

A) ஃபுல்லரீன்

B) கிராஃபைட்

C) கிராஃபீன்

D) வைரம்

விளக்கம்: கண்டுபிடிக்கப்பட்ட சேர்மங்களிலேயே மிகவும் வலிமையான சேர்மம் கிராஃபீன் ஆகும்.

76) கூற்றுகளை ஆராய்க.

1. கார்பன் ஒரு உலோகம் ஆகும்.

2. இது மென்மையான தூள் முதல் கடினமான திண்மம் வரை பல புறவேற்றுமை வடிவங்களைக் கொண்டுள்ளது.

3. படிகவடிவமற்ற கார்பன்கள் மற்றும் கிராஃபைட் ஆகியவை ஏறக்குறைய கருப்பாகவும், ஒளி ஊடுருவும் பொருள்களாகவும் உள்ளன.

4. வைரம் பளபளப்பாகவும், ஒளி ஊடுருவும் தன்மை உள்ளதாகவும் காணப்படுகின்றது.

A) 1, 4 சரி

B) 1, 2, 4 சரி

C) 1, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. கார்பன் ஒரு உலோகம் ஆகும்.

2. இது மென்மையான தூள் முதல் கடினமான திண்மம் வரை பல புறவேற்றுமை வடிவங்களைக் கொண்டுள்ளது.

3. படிகவடிவமற்ற கார்பன்கள் மற்றும் கிராஃபைட் ஆகியவை ஏறக்குறைய கருப்பாகவும், ஒளி ஊடுருவாப் பொருள்களாகவும் உள்ளன.

4. வைரம் பளபளப்பாகவும், ஒளி ஊடுருவும் தன்மை உள்ளதாகவும் காணப்படுகின்றது.

77) யூரியா மற்றும் நைட்ரஜன் உரங்கள் தயாரிக்கப் பயன்படுவது?

A) கால்சியம் கார்பைடு

B) கால்சியம் டை சல்பைடு

C) கால்சியம் கார்பனேட்

D) கார்பன் டை ஆக்ஸைடு

விளக்கம்: யூரியா மற்றும் ஹைட்ரஜன் உரங்கள் தயாரிக்கப்பயன்படுவது கார்பன் டை ஆக்ஸைடு ஆகும். இது குளிர்சாதனப் பெட்டியில் உலர் பனிக்கட்டியாகவும் பயன்படுகிறது.

78) கார்பனின் அனைத்து புறவேற்றுமை வடிவங்களும்———–நிலையில் உள்ளன?

A) திரவம்

B) திண்மம்

C) வாயு

D) வரையறுக்க இயலாது

விளக்கம்: கார்பனின் அனைத்து புறவேற்றுமை வடிவங்களும் திண்மங்களாகும். உதாரணம் வைரம்

79) கார்பன் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. படிக வடிவங்களைவிட படிகவடிவமற்றவை அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலையைக் கொண்டதாக இருக்கின்றன

2. கார்பன், நீர் மற்றும் பிற கரைப்பான்களில் கரையாது. ஆனால் அவற்றின் சில சேர்மங்கள் நீர் மற்றும் பிற கரைப்பான்களிலும் கரையக் கூடியவை.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: படிக வடிவங்களைவிட படிகவடிவமற்றவை குறைந்த உருகுநிலை மற்றும் கொதிநிலையைக் கொண்டதாக இருக்கின்றன.

2. கார்பன், நீர் மற்றும் பிற கரைப்பான்களில் கரையாது. ஆனால் அவற்றின் சில சேர்மங்கள் நீர் மற்றும் பிற கரைப்பான்களிலும் கரையக் கூடியவை. (எ.கா) எத்தனால் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு ஆகியவை நீரில் கரையும் தன்மையுடையவை.

80) எந்த வகை நெகிழிகள் நமக்கு தீங்கு விளைவிப்பவை என்பதை அறிவதற்கு நெகிழிகளின் ரகசிய மொழியாக____________குறியீடுகளைப் பற்றி அறிந்து கொள்க வேண்டும்?

A) அக்மார்க்

B) ISI

C) ரெசின்

D) பாலிமர்

விளக்கம்: எந்த வகை நெகிழிகள் நமக்கு தீங்கு விளைவிப்பவை என்பதை அறிவதற்கு நெகிழிகளின் ரகசிய மொழியாக ரெசின் குறியீடுகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்

81) கூற்றுகளை ஆராய்க

1. உயர் வெப்பநிலையில் கார்பனானது ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து கார்பன் மோனாக்ஸைடு வாயுவை வெப்பத்துடன் உருவாக்குகிறது.

2. உயர் வெப்பநிலையில் கார்பனானது ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெப்பத்துடன் உருவாக்குகிறது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1.உயர் வெப்பநிலையில் கார்பனானது ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து கார்பன் மோனாக்ஸைடு வாயுவை வெப்பத்துடன் உருவாக்குகிறது.

2. உயர் வெப்பநிலையில் கார்பனானது ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெப்பத்துடன் உருவாக்குகிறது

82) பழங்களை பாதுகாக்கவும் ரொட்டி தயாரித்தலிலும் பயன்படுவது எது?

A) கால்சியம் கார்பைடு

B) கால்சியம் டை சல்பைடு

C) கால்சியம் கார்பனேட்

D) கார்பன் டை ஆக்ஸைடு

விளக்கம்: கார்பன் டை ஆக்ஸைடு பழங்களைப் பாதுகாக்கவும், ரொட்டி தயாரித்தலிலும் பயன்படுகிறது. இது ஒளிச்சேர்க்கையிலும் ஈடுபடுகிறது.

83) நெகிழிகள் என்பவை?

A) சங்கிலித் தொடராக்கத்தினாலான கரிமச் சேர்மங்களின் ஒரு வகை

B) சங்கிலித் தொடராக்கத்தினாலான கனிமச் சேர்மங்களின் ஒரு வகை

C) பலபடி ரெசின்கள் எனப்படும் நீண்ட நெடிய சங்கிலித் தொடராலான கரிமச் சேர்மங்கள்

D) A மற்றும் C

விளக்கம்: நெகிழிகள் என்பவை சங்கிலித் தொடராக்கத்தினாலான கரிமச் சேர்மங்களின் ஒரு வகை ஆகும். இவை பலபடி ரெசின்கள் எனப்படும் நீண்ட நெடிய சங்கிலித் தொடராலான கரிமச் சேர்மங்களுடன் தங்களுக்கென்று சில வேறுபட்ட பண்புகளைத் தரும் சில வேதிச்சேர்க்கைகளைச் சேர்த்து, உருவாக்கப்படுகின்றன.

84) கரி மற்றும் வைரம் ஆகிய இரண்டையும் சம எடையளவு எடுத்து, அவற்றை எரிக்கும்போது, ஒரே அளவான கார்பன் டை ஆக்ஸைடையே அவை உருவாக்குகின்றன என நிரூபித்தவர் யார்?

A) கார்ல் ஷீலே

B) ஸ்மித்ஸன் டென்ன்னட்

C) ஆண்டனி லவாய்சியர்

D) பெர்ஷிலியஸ்

விளக்கம்: கரி மற்றும் வைரம் ஆகிய இரண்டையும் சம எடையளவு எடுத்து, அவற்றை எரிக்கும்போது, ஒரே அளவான கார்பன் டை ஆக்ஸைடையே அவை உருவாக்குகின்றன என நிரூபித்தவர் ஸ்மித்ஸன் டென்னன்ட். இவர் வைரம் என்பதும் கார்பன் தான். அது கார்பனின் சேர்மம் அல்ல என்று கூறினார்.

85) உலகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடிமன் குறைவான சேர்மம்?

A) ஃபுல்லரீன்

B) கிராஃபைட்

C) கிராஃபீன்

D) வைரம்

விளக்கம்: உலகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடிமன் குறைவான சேர்மம் கிராஃபீன்.

86) நெகிழியின் குறைகளில் பொருந்தாது?

A) நெகிழிகள் இயற்கையாக சிதைவடைவதற்கு நீண்ட நெடுநாள்களாகும்.

B) நெகிழிகளை சிதைவடையச் செய்யும் இயற்கையிலுள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையானது, நாம் உருவாக்கும் நெகழிகளின் எண்ணிக்கையைவிட குறைவு..

C) நாம் பயன்படுத்தும் நெகிழிகளில் பல மறுசுழற்சி செய்ய முடிந்தவை.

D) சில நெகிழி வகைகள் நமது உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் வேதியியல் சேர்க்கைகளைக் கொண்டுள்ளது.

விளக்கம்: நெகிழிகள் இயற்கையாக சிதைவடைவதற்கு நீண்ட நெடு நாள்களாகும்.

நெகிழிகளை சிதைவடையச் செய்யும் இயற்கையிலுள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையானது, நாம் உருவாக்கும் நெகழிகளின் எண்ணிகை;கையைவிட குறைவு..

நாம் பயன்படுத்தும் நெகிழிகளில் பல மறுசுழற்சி செய்ய முடியாதவை. மேலும் அவை நமது சுற்றுப்புறத்தை மாசுபடுத்துகின்றன.

சில நெகிழி வகைகள் நமது உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் வேதியியல் சேர்க்கைகளைக் கொண்டுள்ளது.

87) கீழ்க்கண்டவற்றுள் எது நிறமற்ற வாயு அல்ல?

A) கார்பன் மோனாக்ஸைடு

B) கார்பன் டை ஆக்ஸைடு

C) கால்சியம் கார்பைடு

D) கார்பன் டை சல்பைடு

விளக்கம்: கால்சியம் கார்பைடு சாம்பல் கலந்த கருப்பு நிற திண்மம் ஆகும்.

நிறமற்றது,

1. கார்பன் மோனாக்ஸைடு

2. கார்பன் டை ஆக்ஸைடு

3. கார்பன் டை சல்பைடு

88) ரெசின் குறியீடு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

A) 1988

B) 1989

C) 1990

D) 1991

விளக்கம்: 1988-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட, ரெசின் குறியீடுகள் வெவ்வேறு வகையான நெகிழிகளை வகைப்படுத்துவதற்கான சீரான வழிமுறையாகும். இது நெகிழிகளை வகைப்படுத்துவதில், மறுசுழற்சியாளர்களுக்கு உதவுகிறது.

89) கார்பன் நீராவியுடன் வினைபுரிந்து எதை தரும்?

A) கார்பன் மோனாக்ஸைடு

B) கார்பன் டை ஆக்ஸைடு

C) ஹைட்ரஜன்

D) A மற்றும் C

விளக்கம்: கார்பன் நீராவியுடன் வினைபுரிந்து கார்பன் மோனக்ஸைடையும் ஹைட்ரனையும் தருகிறது. இந்த கலவைக்கு நீர் வாயு என்று பெயர்.

90) பொருத்துக.

ரெசின் குறியீடு ரெசின் சுருக்கக் குறியீடு

அ. 1 – 1. LDPEM

ஆ. 2 – 2. PVC

இ. 3 – 3. HDPE

ஈ. 4 – 4. PET

A) 1, 2, 3, 4

B) 4, 3, 2, 1

C) 2, 3, 1, 4

D) 3, 4, 2, 1

விளக்கம்:

ரெசின் குறியீடு ரெசின் சுருக்கக் குறியீடு

1 – PET

2 – HDPE

3 – PVC

4 – LDPEM

91) ரெசின் குறியீடுகளில்________முதல்_________வரை உள்ள குறியீடுகள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களை அடையாளப்படுத்துகின்றன.

A) 1-7

B) 1-6

C) 1-5

D) 1-9

விளக்கம்: ரெசின் குறியீடுகள் 1 முதல் 7 வரையிலான எண்களால் குறிக்கப்பட்டிருக்கும். 1 முதல் 6 வரையிலான ரெசின் குறியீடுகள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களை அடையாளப்படுத்துகின்றன.

92) கூற்றுகளை ஆராய்க.

1. கார்பனின் அனைத்து புறவேற்றுமை வடிவங்களும் திண்மங்களாகும்.

2. கார்பனின் அனைத்து சேர்மங்களும் திண்மம், திரவம் மற்றும் வாயு நிலையில் காணப்படுகின்றன

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. கார்பனின் அனைத்து புறவேற்றுமை வடிவங்களும் திண்மங்களாகும்.

2. கார்பனின் அனைத்து சேர்மங்களும் திண்மம், திரவம் மற்றும் வாயு நிலையில் காணப்படுகின்றன

93) ரெசின் குறியீடு 7 என்பது எந்த ஆண்டு முதல் பயன்படுத்தப்படுகிறது?

A) 1995

B) 2000

C) 1999

D) 1988

விளக்கம்: ரெசின் குறியீடு 7 என்பது 1 முதல் 6 வரையிலான ரெசின் குறியீடுகளுக்குள் வராத நெகிழியின் வகையைக் குறிப்பதற்கு 1988ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படுகிறது. ரெசின் குறியீடுகள் ரெசின் மறுசுழற்சிக்கான சின்னத்தைப் போலவே இருக்கும். ஆனால் அனைத்துவித நெகிழிகளையும் மறுசுழற்சி செய்யலாம் என்பதை இது குறிக்கவில்லை

94) கூற்றுகளை ஆராய்க.

1. ரெசின் குறியீடுகள் நெகிழிப் பொருள்களின் அடியில் இருக்கும்.

2. ரெசின் குறியீடு மூன்று அம்புக்குறிகளைக் கொண்ட ஒரு முக்கோணம் மூலம் காண்பிக்கப்பட்டுள்ளன.

3. ரெசின் குறியீட்டில் முக்கோணத்தின் நடுவில் எழுத்துக்கள் இருக்கலாம்

4. ரெசின் குறியீட்டில் முக்ககோணத்தின் கீழே எண்கள் இருக்கலாம்

A) 1, 3 சரி

B) 2, 4 சரி

C) 1, 2 சரி

D) 3, 4 சரி

விளக்கம்: 1. ரெசின் குறியீடுகள் நெகிழிப் பொருள்களின் அடியில் இருக்கும்.

2. ரெசின் குறியீடு மூன்று அம்புக்குறிகளைக் கொண்ட ஒரு முக்கோணம் மூலம் காண்பிக்கப்பட்டுள்ளன.

3. ரெசின் குறியீட்டில் முக்கோணத்தின் நடுவில் எண்கள்இருக்கலாம்

4. ரெசின் குறியீட்டில் முக்ககோணத்தின் கீழே எழுத்துக்கள் இருக்கலாம்

95) தவறாக பொருந்தியுள்ளதை தேர்க.

A) கார்பன் மோனாக்ஸைடு – ஒடுக்கும் காரணி

B) கார்பன் டை ஆக்ஸைடு – அமில நீக்கி

C) கால்சியம் கார்பைடு – கிராபைட் ஹைட்ரஜன் தயாரித்தல்

D) சோடியம் பை கார்பனேட் – ரொட்டி சோடா தயாரித்தல்

விளக்கம்: கார்பன் மோனாக்ஸைடு – ஒடுக்கும் காரணி

கார்பன் டை ஆக்ஸைடு – தீயணைப்பான், பழங்களை பாதுகாத்தல்

கால்சியம் கார்பைடு – கிராபைட் ஹைட்ரஜன் தயாரித்தல்

சோடியம் பை கார்பனேட் – ரொட்டி சோடா தயாரித்தல்

96) மூன்று வகையான நெகிழிப் பொருள்கள் நச்சுத்தன்மையுள்ள மற்றும் தீங்கு தரும் வேதிப்பொருள்களைக் கொண்டுள்ளன. அவைகளில் பொருந்தாதது எது?

A) PN ரெசின் குறியீடு 4

B) PVC ரெசின் குறியீடு 3

C) PS ரெசின் குறியீடு 6

D) PA/ABS ரெசின் குறியீடு 7

விளக்கம்: மூன்று வகையான நெகிழிப் பொருள்கள் நச்சுத்தன்மையுள்ள மற்றும் தீங்கு தரும் வேதிப்பொருள்களைக் கொண்டுள்ளன. அவை,

PVC ரெசின் குறியீடு 3

PS ரெசின் குறியீடு 6 – இது பொதுவாக தெர்மாக்கோல் எனப்படும்.

PA/ABS ரெசின் குறியீடு 7

97) வைரம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. வெப்பத்தை கடத்தும்

2. மின்சாரத்தை கடத்தாது

3. நான்முகி அலகுகள் முப்பரிமாண அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன

4. ஒளி புகும் தன்மை கொண்டது

A) 2, 3 சரி

B) 2, 3, 4 சரி

C) 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. வெப்பத்தை கடத்தாது

2. மின்சாரத்தை கடத்தாது

3. நான்முகி அலகுகள் முப்பரிமாண அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன

4. ஒளி புகும் தன்மை கொண்டது

98) PVC தயாரிக்க அதனுடன் சேர்க்கப்படும் கன உலோகங்கள்?

A) காட்மியம்

B) சல்பர்

C) கந்தகம்

D) துத்தநாகம்

விளக்கம்: கன உலோகங்களான காட்மியம் மற்றும் காரீயம் ஆகியவை PVCயுடன் சேர்க்கப்படுகின்றன.

99) நமது ஹார்மோன்களை பாதிக்கும் PVCயின் பகுதிப்பொருள்?

A) காட்மியம்

B) தாலேட்ஸ்

C) கந்தகம்

D) கார்பன்

விளக்கம்: தாலேட்ஸ் (வேதியியல் சேர்க்கைப்பொருள்) நமது ஹார்மோன்களைப் பாதிக்கின்றன.

100) கூற்றுகளை ஆராய்க.

1. கார்பன் பொதுவாக அறைவெப்பநிலையில் எந்த வேதிவினையிலும் ஈடுபடுவதில்லை.

2. கார்பனின் சேர்மங்கள் அறை வெப்பநிலையில்கூட அதிகளவு வேதிவினைகளில் ஈடுபடுகின்றன

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. கார்பன் பொதுவாக அறைவெப்பநிலையில் எந்த வேதிவினையிலும் ஈடுபடுவதில்லை.

2. கார்பனின் சேர்மங்கள் அறை வெப்பநிலையில்கூட அதிகளவு வேதிவினைகளில் ஈடுபடுகின்றன.

101) கிராஃபைட் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. அறுங்கோண அலகுகள் தள அடுக்குகளில் அமைந்துள்ளன.

2. இது வெப்பத்தை கடத்தும்

3. மின்சாரத்தை கடத்தும்

4. ஒளி புகாத் தன்மை கொண்டது.

A) 1, 2, 4 சரி

B) 1, 3, 4 சரி

C) 1, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. அறுங்கோண அலகுகள் தள அடுக்குகளில் அமைந்துள்ளன.

2. இது வெப்பத்தை கடத்தும்

3. மின்சாரத்தை கடத்தும்

4. ஒளி புகாத் தன்மை கொண்டது.

102) கார்பன் எதனுடன் வினையுரியும் போது ஹைட்ரஜன் வாயுவை தருகிறது?

A) ஆக்ஸிஜன்

B) நீராவி

C) கந்தம்

D) சல்பர்

விளக்கம்: கார்பன் நீராவியுடன் வினைபுரிந்து கார்பன் மோனாக்ஸைடையும் ஹைட்ரஜனையும் தருகிறது. இந்த கலவைக்கு நீர் வாயு என்று பெயர்.

103) PVC எரிப்பதன் மூலம்——————–வெளியிடப்படுகின்றன. இது மனிதர்களுக்கு மிகவும் தீமையான நச்சுத்தன்மையுள்ள வேதிப்பொருள்கள் ஆகும்.

A) டை ஆக்ஸின்கள்

B) ட்ரை ஆக்ஸின்கள்

C) டை ஹைட்ரேட்

D) ட்ரை ஹைட்ரேட்

விளக்கம்: PVC எரிப்பதன் மூலம் டை ஆக்ஸின்கள் வெளியிடப்படுகின்றன. இது மனிதர்களுக்கு மிகவும் தீமையான நச்சுத்தன்மையுள்ள வேதிப்பொருள்கள் ஆகும்.

104) தவறாக பொருந்தியுள்ளதை தேர்க.

A) சோடியம் பை கார்பனேட் – அமில நீக்கி தயாரித்தல்

B) கால்சியம் கார்பனேட் – அமில நீக்கி

C) கார்பன் டை சல்பைடு – பூச்சிக்கொல்லி

D) கால்சியம் கார்பைடு – உலர் பனிக்கட்டி

விளக்கம்: சோடியம் பை கார்பனேட் – அமில நீக்கி தயாரித்தல்

கால்சியம் கார்பனேட் – அமில நீக்கி

கார்பன் டை சல்பைடு – பூச்சிக்கொல்லி

கால்சியம் கார்பைடு – வெல்டிங் தொழிலில் பயன்படும் அசிட்டிலீன் வாயு தயாரித்தல்

105) புற்றுநோயை விளைவிக்கும் நெகிழி எது?

A) PVC

B) PS

C) PC

D) ABS

விளக்கம்: ஸ்டைரின் (PS) என்பது பாலிஸ்டைரின் நெகிழிகள் ஆகும். இது மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும்.

106) சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது?

A) 1988

B) 1986

C) 1992

D) 2000

விளக்கம்: சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டம் 1988-ஆம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தில் ஒரு சில அம்சங்களைச் சேர்ப்பது மற்றும் திருத்துவதன் மூலம், நெகிழிமாசுபாட்டைத் தடுப்பதற்கு, இந்திய அரசாங்கமானது, பல்வேறு விதமான சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

107) கூற்றுகளை ஆராய்க

1. உணவுப்பொருள்கள் நெகிழிப்பைகளில் அடைக்கப்படுவதால் அவற்றை விலங்குகள் உண்கின்றன. ஒரு பசுவின் வயிற்றில் 70 கிலோவிற்கும் அதிக எடையுள்ள நெகிழிப்பைகள் இருந்தன.

2. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பெரும்பாலான தட்டுகள் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாலிஸ்டரின் (ரெசின் குறியீடு 6) என்ற பொருளால் ஆனவை

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. உணவுப்பொருள்கள் நெகிழிப்பைகளில் அடைக்கப்படுவதால் அவற்றை விலங்குகள் உண்கின்றன. ஒரு பசுவின் வயிற்றில் 70 கிலோவிற்கும் அதிக எடையுள்ள நெகிழிப்பைகள் இருந்தன.

2. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பெரும்பாலான தட்டுகள் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாலிஸ்டரின்(ரெசின் குறியீடு 6) என்ற பொருளால் ஆனவை.

108) டங்ஸ்டனை குறிக்கும் குறியீடு எது?

A) W

B) T

C) D

D) Z

விளக்கம்: W என்ற எழுத்தானது டங்ஸ்டன் என்ற எழுத்தைக் குறிக்கப்பயன்படுத்தப்படுகிறது. இது மின்சார பல்புகளில் உள்ள இழையாக பயன்படுகிறது.

109) கூற்றுகளை ஆராய்க.

1. ஹைட்ரோ கார்பன் போன்ற கரிம கார்பன் சேர்மங்கள் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து ஆக்ஸைடுகளையும் நீராவியையும் உருவாக்குகின்றன.

2. அவற்றோடு வெப்பமும் தீச்சுடரும் வெளிப்படும். இதற்கு எரிதல் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி;

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. ஹைட்ரோ கார்பன் போன்ற கரிம கார்பன் சேர்மங்கள் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து ஆக்ஸைடுகளையும் நீராவியையும் உருவாக்குகின்றன.

2. அவற்றோடு வெப்பமும் தீச்சுடரும் வெளிப்படும். இதற்கு எரிதல் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

110) கடலுக்கடியில் காணப்படும் நெகிழி மாசுபாட்டிற்குக் காரணமான முதல் பத்து பொருள்களில் ஒன்று?

A) நெகிழித் தட்டுகள்

B) குடிநீர் பாக்கெட்டுகள்

C) நெகிழியாலான உறிஞ்சு குழாய்கள்

D) நெகிழித் தாள்கள்

விளக்கம்: கடலுக்கு அடியில் காணப்படும் நெகிழி மாசுபாட்டிற்குக் காரணமான முதல் பத்து பொருள்களில் நெகிழியாலான உறிஞ்சு குழாய்கள் ஒன்று. நெகிழியாலான உறிஞ்சு குழாய்களின் எடை மிகவும் குறைவாக இருப்பதால் இவற்றை மறுசுழற்சி செய்ய முடியாது. உறிஞ்சு குழாய் போன்ற நெகிழிகளை, 90 சதவீதம் பறவைகள் உட்கொள்கின்றன.

111) சிதைவுறுவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் நெகிழி வகை எது?

A)PVC

B) PS

C) PC

D) ABS

விளக்கம்: இது சிதைவுறுதற்கு நீண்ட காலம் ஆகும்.(100 முதல் 10 இலட்சம் ஆண்டுகள்) ஸ்டைரின் என்பது பாலிஸ்டைரின்(PS) நெகிழிகள் ஆகும். இது மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும்.

112) கூற்று: தமிழக அரசு 2019 ஜனவரி 1 முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய மற்றும் பயன்படுத்தியபின் தூக்கியெறியப்பட வேண்டிய நெகிழிகளின் பயன்பாட்டை தடைசெய்துள்ளது.

காரணம்: சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1988ஐ பயன்படுத்தி இச்சட்டம் இயற்றப்பட்டது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம்-1988 என்ற சட்டத்தை பார்வையாகக் கொண்டு தமிழக அரசானது ஒருசில நெகிழிப் பொருள்களை ஒழிப்பதற்கான முயற்சியாக 2019 ஜனவரி 1 முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய மற்றும் பயன்படுத்தியப்பின் தூக்கியெறியப்பட வேண்டிய நெகிழிகளின் பயன்பாட்டை தடைசெய்துள்ளது.

113) தமிழகத்தில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப்பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கான அரசாணை எப்போது வெளியிடப்பட்டது?

A) 2018 ஜுன் 25

B) 2018 ஜுன் 5

C) 2018 ஜுலை 25

D) 2018 ஜுலை 5

விளக்கம்: 2019 ஜனவரி 1 முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய மற்றும் பயன்படுத்தியப்பின் தூக்கியெறியப்பட வேண்டிய நெகிழிகளின் பயன்பாட்டை தடைசெய்துள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசாணை எண் 84 நாள் 2018/06/25 வழிவகுக்கிறது

114) தவறாக பொருந்தியுள்ளதை தேர்க.

A) கார்பன் மோனாக்ஸைடு – நீர் வாயுவின் முக்கியப் பகுதிப்பொருள்

B) கார்பன் டை ஆக்ஸைடு – யூரியா மற்றும் நைட்ரஜன் உரங்கள் தயாரித்தல்

C) கால்சியம் கார்பைடு – நைட்ரஜன் தயாரித்தல்

D) கால்சியம் கார்பனேட் – பூச்சிக்கொல்லி

விளக்கம்: கார்பன் மோனாக்ஸைடு – நீர் வாயுவின் முக்கியப் பகுதிப்பொருள்

கார்பன் டை ஆக்ஸைடு – யூரியா மற்றும் நைட்ரஜன் உரங்கள் தயாரித்தல்

கால்சியம் கார்பைடு – நைட்ரஜன் தயாரித்தல்

கால்சியம் கார்பனேட் – அமில நீக்கி

115) ஒரு சில ஹார்மோன்களின் அளவை அதிகரித்தோ அல்லது குறைத்தோ நமது உடல் செயல்படும் விதத்தை மாற்றும் பொருள் எது?

A) PVC

B) PS

C) BPA

D) ABS

விளக்கம்: BPA என்ற பொருளானது, ஒருசில ஹார்மோன்களின் அளவை அதிகரித்தோ அல்லது குறைத்தோ உடல் செயல்படும் விதத்தை மாற்றுகிறது.

116) நமது கண்கள், தோல், செரிமான மண்டலம் மற்றும் நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நெகிழி வகை?

A) PVC

B) PS

C) PC

D) ABS

விளக்கம்: நமது கண்கள், தோல், செரிமான மண்டலம் மற்றும் நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நெகிழி ABS – அக்ரைலோ நைட்ரைல் பியூட்டாடையீன் ஸ்டைரின் நெகிழிகள் ஆகும்.

117) உலகம் முழுவதும் எத்தனை சதவீதம் நெகிழிப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை?

A) 70

B) 80

C) 89

D) 97

விளக்கம்: உலகம் முழுவதும் 97 சதவீதம் நெகிழிப் பைகள் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

118) வளி மண்டலத்தில் எத்தனை சதவீதம் கார்பன் காணப்படுகிறது?

A) 0.3

B) 0.03

C) 3

D) 0.003

விளக்கம்: வளி மண்டலத்தில் 0.03 சதவீதம் மட்டுமே கார்பன் காணப்படுகிறது. இது ஒரு மில்லியன் எடையில் 300 பாகம் ஆகும். கார்பன் இயற்கையில் மிகச்சிறிய அளவே காணப்பட்டாலும், கார்பன் சேர்மங்கள் நம் அன்றாட வாழ்வில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன.

119) எந்த ஆண்டு வைரம் என்பது கார்பனின் ஒரு வடிவம் என்று கண்டறியப்பட்டது?

A) 1772

B) 1779

C) 1855

D) 1976

விளக்கம்: 1772ல் பிரான்சு நாட்டின் அறிவியல் அறிஞர் ஆண்டனி லவாய்சியர், மற்ற வேதியியல் அறிஞர்களுடன் சேர்ந்து, பணம் சேகரித்து, ஒரு வைரத்தை வாங்கி அதை ஒரு மூடிய கண்ணாடிக் குடுவையில் வைத்தார். அதன் மீது அவர்கள் ஒரு மிகப்பெரிய இராட்சத உருப்பெருக்கிக் கண்ணாடி மூலம் சூரிய ஒளியை விழும்படி செய்தனர். அவ்வாறு செய்யும் போது வைரம் எரிந்து காணாமல் போனது. அந்த கண்ணாடி குடுவையின் மொத்த நிறை மாறாததையும், எரியும்போது வைரம் கண்ணாடி குடுவையிலுள்ள ஆக்ஸிஜனுடன் சேர்ந்து கார்பன் டை ஆக்ஸைடாக மாறியதையுடன் கவனித்தார். அதன் மூலம் கரி மற்றும் வைரம் ஆகிய இரண்டும் கார்பன் எனும் ஒரே தனிமத்தால் ஆனவை என்ற முடிவுக்கு வந்தார்.

120) கூற்றுகளை ஆராய்க.

1. கார்பனின் புறவேற்றுமை வடிவங்களில் ஒன்று ஃபுல்லரீன்

2. மிகவும் நான்றாக அறியப்பட்ட ஃபுல்லரீன் வடிவம் பக்மினிஸ்டர் ஃபுல்லரீன்

3. இதில் 60 கார்பன் அணுக்கள் ஒன்றிணைந்து 5 மற்றும் 6 உறுப்புகளைக் கொண்ட ஒரு கோள வடிவ கால்பந்து போன்ற அமைப்பை உருவாக்கும்

4. இதன் மூலக்கூறு வாய்ப்பாடு C60

A) 1, 2 சரி

B) 1, 2, 3 சரி

C) 1, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. கார்பனின் புறவேற்றுமை வடிவங்களில் ஒன்று ஃபுல்லரீன்

2. மிகவும் நான்றாக அறியப்பட்ட ஃபுல்லரீன் வடிவம் பக்மினிஸ்டர் ஃபுல்லரீன்

3. இதில் 60 கார்பன் அணுக்கள் ஒன்றிணைந்து 5 மற்றும் 6 உறுப்புகளைக் கொண்ட ஒரு கோள வடிவ கால்பந்து போன்ற அமைப்பை உருவாக்கும்

4. இதன் மூலக்கூறு வாய்ப்பாடு C60

121) உலகம் முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் எத்தனை இலட்சம் நெகிழிப்பைகள் பயன்படுத்தப்படுகின்றன?

A) 10

B) 15

C) 20

D) 25

விளக்கம்: உலகம் முழுவதும், ஒவ்வொரு நிமிடமும் 20 இலட்சம் நெகிழிப்பைகள் பயன்படுத்தப்படுகின்றன என்ற ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

122) நச்சுத்தன்மையுள்ள வேதிப்பொருள்கள் எவ்வகை நெகிழியிலிருந்து கசிகின்றன?

A) PVC

B) PS

C) PC

D) ABS

விளக்கம்: ABS – அக்ரைலோ நைட்ரைல் பியூட்டாடையீன் ஸ்டைரின் நெகிழிகளிலிருந்து நச்சுத் தன்மையுள்ள வேதிப்பொருள்கள் கசிகின்றன.

123) கார்பன் உயர் வெப்பநிலையில் கந்தகத்துடன் வினைபுரிந்து கீழ்க்கண்ட எதனைத் தருகிறது?

A) கந்தக டை சல்பைடு

B) கார்பன் டை சல்பைடு

C) கார்பன் மோனக்ஸைடு

D) கார்பன் டை ஆக்ஸைடு

விளக்கம்: உயர்வெப்பநிலையில் கார்பன் கந்கத்துடன் இணைந்து கார்பன் டை சல்பைட்டை உருவாக்குகிறது.

124) தவறான ஒன்றை தெரிவு செய்க.

A) சோடியம் பை கார்பனேட் – நீரில் பகுதியளவு கரையக் கூடியது

B) கால்சியம் கார்பனேட் – நீரில் கரைவதில்லை

C) கார்பன் டை சல்பைடு – நச்சுத் தன்மை அற்றது

D) கால்சியம் கார்பைடு – சாம்பல் கலந்த கருப்பு நிற திண்மம்

விளக்கம்:சோடியம் பை கார்பனேட் – நீரில் பகுதியளவு கரையக் கூடியது

கால்சியம் கார்பனேட் – நீரில் கரைவதில்லை

கார்பன் டை சல்பைடு – நச்சுத் தன்மை உடையது

கால்சியம் கார்பைடு – சாம்பல் கலந்த கருப்பு நிற திண்மம்

125) கார்பனின் சேர்மங்களை மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தியவர்?

A) கார்ல் ஷீலே

B) ஸ்மித்ஸன் டென்ன்னட்

C) ஆண்டனி லவாய்சியர்

D) பெர்ஷிலியஸ்

விளக்கம்: 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெர்ஷ்லியஸ் என்பவர் கார்பனின் சேர்மங்களை மூலப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு இரண்டு வகையாகப் பிரித்தார்.அவை,

1. கரிம கார்பன் சேர்மங்கள்

2. கனிம கார்பன் சேர்மங்கள்

126) கூற்று: வைரம் என்பது கார்பன்தான். அது கார்பன் சேர்மம் அல்ல – ஸ்மிஸன் டென்னன்ட்

காரணம்: வைரமானது எரிந்து கார்பன் டை ஆக்ஸைடை மட்டுமே உருவாக்கியது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: 1976ல் ஆங்கில வேதியியலாளர் ஸ்மித்ஸன் டென்னன்ட் என்பவர் வைரமானது எரிந்து கார்பன் டை ஆக்ஸைடை மட்டுமே உருவாக்கியதால் வைரமும் கார்பன்தான். அது கார்பனின் சேர்மம் இல்லை எனக் கூறினார்.

127) கிராஃபீன் பற்றிய கூற்றுகளை ஆராய்க.

1. கிராஃபைட்டில் உள்ள கிராஃபீன் அடுக்குகள் வலிமை குறைந்த வாண்டர் வால்ஸ் விசை மூலம் பிணைக்கப்பட்டள்ளன.

2. அறை வெப்பநிலையில் இது மிகச்சிறந்த வெப்பக்கடத்தி ஆகும்.

3. கிராஃபீனை 0.335 நானோ மீட்டர் இடைவெளியில் அடுக்கும்போது கிராஃபைட் கிடைக்கிறது.

4. இது இரும்பைக் காட்டிலும் 100-200 மடங்கு வலிமையானது

A) 1, 4 சரி

B) 1, 2, 3 சரி

C) 1, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. கிராஃபைட்டில் உள்ள கிராஃபீன் அடுக்குகள் வலிமை குறைந்த வாண்டர் வால்ஸ் விசை மூலம் பிணைக்கப்பட்டள்ளன.

2. அறை வெப்பநிலையில் இது மிகச்சிறந்த வெப்பக்கடத்தி ஆகும்.

3. கிராபீனை 0.335 நானோ மீட்டர் இடைவெளியில் அடுக்கும்போது கிராஃபைட் கிடைக்கிறது.

4. இது இரும்பைக் காட்டிலும் 100-300 மடங்கு வலிமையானது

128) ஃபுல்லரீன் என்று அழைக்கப்படக் கூடிய கரிம பந்து எந்த ஆண்டு கண்டறியப்பட்டது?

A) 1772

B) 1779

C) 1985

D) 1976

விளக்கம்: 1985இல் இராபர்ட் கார்ல், ஹார்ரி க்ரோடோ மற்றும் ரிச்சர்ட் ஸ்மாலி என்பவர்கள் கால்பந்து வடிவில் கார்பன் அணுக்களால் அமையப்பெற்ற ஃபுல்லரீன் என்று அழைக்கப்படக் கூடிய கரிமப் பந்தைக் கண்டுபிடித்தனர்.

129) பூமியின் மேலடுக்கானது எத்தனை சதவீதம் கார்பனால் ஆனது?

A) 0.32

B) 0.032

C) 0.0032

D) 3

விளக்கம்: பூமியின் மேலடுக்கானது 0.032 சதவீதம் கார்பனால் ஆனது.அதாவது ஒரு மில்லியன் எடையில் 320 பாகம் ஆகும். இவை கார்பனின் கனிமச் சேர்மங்களாகிய கார்பனேட்டுகள்இ கரி மற்றும் பெட்ரோலியப் பொருட்களால் ஆனவை.

130) கூற்றுகளை ஆராய்க.

1. வைரம் என்பது கார்பனின் ஒரு வடிவம் – ஆண்டனி லவாய்சியர்

2. கிராஃபைட் என்பது கார்பனின் மற்றொரு வடிவம் – கார்ல் ஷீலே

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

விளக்கம்: 1. வைரம் என்பது கார்பனின் ஒரு வடிவம் – ஆண்டனி லவாய்சியர்

2. கிராஃபைட் என்பது கார்பனின் மற்றொரு வடிவம் – கார்ல் ஷீலே

131) கிரஃபீனில் கண்டுபிடிப்பு எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது?

A) 1985

B) 1772

C) 1899

D) 2004

விளக்கம்: கிராஃபீனில் கார்பன் அணுக்கள் அறுங்கோண வடிவில் ஒரே வரிசையில் அடுக்கப்பட்டிருக்கும் கிராஃபீனின் கண்டுபிடிப்பு கோஸ்ட்யா நொவோ மற்றும் அண்டரே ஜெய்ம் ஆகியோர்களால் 2004ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

132) எந்த நெகிழிகளை எரிப்பதன் மூலம் வெளியாகும் டையாக்சீன் என்ற வேதிப்பொருள்hனது மனிதர்களுக்கு அதிகக்கேடு விளைவிக்கும்?

A) PVC

B) PS

C) ABS

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: PVC நெகிழிகளை எரிப்பதன் மூலம் வெளியாகும் டையாக்சீன் என்ற வேதிப்பொருளானது மனிதர்களுக்கு அதிககேடு விளைவிக்கும்

133) கூற்றுகளை ஆராய்க.

1. கார்பன் என்று பெயரிடப்பட்டது – 1772

2. வைரம் என்பது கார்பன், கார்பனின் சேர்மம் அல்ல – 1779

3. கிராஃபைட் என்பது கார்பனின் ஒரு வடிவம் – 1855

4. பென்சில் கரியும் ஒரு கார்பன் – 1976

A) 1, 2 சரி

B) 1, 3 சரி

C) 2, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. கார்பன் என்று பெயரிடப்பட்டது – 1772

2. வைரம் என்பது கார்பன், கார்பனின் சேர்மம் அல்ல – 1976

3. கிராஃபைட் என்பது கார்பனின் ஒரு வடிவம் – 1855

4. பென்சில் கரியும் ஒரு கார்பன் – 1779

134) கூற்று: குடிநீர் பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்ய வாய்ப்பு குறைவு

காரணம்: அவற்றின் மீது அச்சடிக்கப்பட்டுள்ள ஊதா நிற மை.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

C) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

விளக்கம்: குடிநீர் பாக்கெட்டானது மறுசுழற்சி செய்வதை அவற்றின் மீது அச்சடிக்கப்பட்டுள்ள ஊதா நிற மையானது குறைக்கிறது

135) சரியாக பொருந்தாததை தேர்க.

A) சோடியம் பை கார்பனேட் – நீரில் பகுதியளவு கரையக் கூடியது

B) கால்சியம் கார்பனேட் – நீரில் பகுதியளவு கரையக் கூடியது

C) கார்பன் டை ஆக்ஸைடு – நீரில் அதிக அளவு கரையக் கூடியது

D) கார்பன் மோனாக்சைடு – நீரில் பகுதியளவு கரையும்

விளக்கம்: சோடியம் பை கார்பனேட் – நீரில் பகுதியளவு கரையக் கூடியது.

கால்சியம் கார்பனேட் – நீரில் கரைவதில்லை

கார்பன் டை ஆக்ஸைடு – நீரில் அதிக அளவு கரையக் கூடியது

கார்பன் மோனாக்சைடு – நீரில் பகுதியளவு கரையும்

136) உயர் வெப்பநிலையில் கார்பன் சில உலோகங்களுடன் வினைபுரிந்து அவற்றின்___________களை உருவாக்குகிறது?

A) சல்பைடு

B) கார்பைடு

C) டை ஆக்ஸைடு

D) மேற்கண்ட எதுவுமில்லை

விளக்கம்: கார்பன் உயர் வெப்பநிலையில சில உலோகங்களுடன் வினைபுரிந்து அவற்றின் கார்பைடுகளை உருவாக்குகிறது.

137) கூற்றுகளை ஆராய்க.

1. கிராஃபைட்டிலிருந்த ஒரு வரிசை அணுக்களை பிரித்து கிராஃபீனைத் தயாரித்தனர்.

2. கிராஃபீனை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கினால் கிராஃபைட் உருவாகின்றது.

3. கிராஃபீன் என்பது ஒரு அணு அளவிலான தடிமனை மட்டும் கொண்டது

4. கிராஃபீன் 1985இல் கண்டறியப்பட்டது.

A) 1, 2, 3 சரி

B) 1, 2 சரி

C) 1, 3, 4 சரி

D) அனைத்தும் சரி

விளக்கம்: 1. கிராஃபைட்டிலிருந்த ஒரு வரிசை அணுக்களை பிரித்து கிராஃபீனைத் தயாரித்தனர்.

2. கிராஃபீனை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கினால் கிராஃபைட் உருவாகின்றது.

3. கிராஃபீன் என்பது ஒரு அணு அளவிலான தடிமனை மட்டும் கொண்டது

4. கிராஃபீன் 2004இல் கண்டறியப்பட்டது.

138) தெர்மகோலின் ரெசின் குறியீடு என்ன?

A) 3

B) 6

C) 7

D) 2

விளக்கம்: பொதுவாக தெர்மகோலின் ரெசின் குறியீடு 6.

ரெசின் 3 – PVC

ரெசின் 7 – ABS

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!