Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
TnpscTnpsc Current Affairs

9th & 10th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

9th & 10th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 9th & 10th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘பிரசாசன் கான் கே சங்’ என்பது எந்த இந்திய மாநிலம் / UT’இன் முன்னெடுப்பாகும்?

அ) குஜராத்

ஆ) பஞ்சாப்

இ) இராஜஸ்தான் 

ஈ) ஹரியானா

  • இராஜஸ்தான் மாநில அரசு ‘பிரசாசன் காவ் கே சங்’ என்ற பெயரில் ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. அம்மாநிலத்திலுள்ள தொலைதூர கிராம மக்களுக்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இதன்மூலம் உள்ளூர் நிர்வாகத்தின் 22 துறைகளை அவர்கள் எளிமை -யாக அணுக முடியும். இதன்கீழ், கிராமங்களில் வாரநாட்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் கண்காணிப்பில் முகாம்கள் நடைபெறும். நிலப் பத்திரங்கள் மற்றும் பல்வேறு சான்றிதழ்களை வழங்குவது தொடர்பான சேவைகளும் செய்யப்படும்.

2. UNESCO’ஆல் அங்கீகரிக்கப்பட்ட நடன மற்றும் இசை விழாவான ‘நட சங்கீர்த்தனா’ நடைபெறுகிற மாநிலம் எது?

அ) அஸ்ஸாம்

ஆ) மணிப்பூர் 

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) பஞ்சாப்

  • UNESCO’ஆல் அங்கீகரிக்கப்பட்ட நடன மற்றும் இசை விழாவான ‘நட சங்கீர்த்தனா’வை மணிப்பூர் ஏற்பாடு செய்கிறது. இந்த ஆண்டுக்கான, 3 நாள் விழா, சமீபத்தில் தலைநகர் இம்பாலிலிருந்து தொடங்கப்பட்டது.
  • பாக்யசந்திராவின் ஆட்சியில் நடா சங்கீர்த்தன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் தனித்துவத்திற்காக, 2013’இல், UNESCO’ஆல் தொட்டுணரமுடியா கலாச்சார பாரம்பரியமாக இது அங்கீகரிக்கப்பட்டது.

3. தேசிய திபெத்திய காட்டெருமை ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள மாநிலம் / UT எது?

அ) லடாக்

ஆ) அருணாச்சல பிரதேசம் 

இ) சிக்கிம்

ஈ) உத்தரகாண்ட்

  • விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபார்டு) திபெத்திய காட்டெருமைக்கான கடன் திட்டத்திற்கு ஒப்புதலளித்துள்ளது. இந்தத் திட்டம் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் டைராங்கில் உள்ள தேசிய திபெத்திய காட்டெருமை ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட் -டது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின்கீழ் இந்த ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. திபெத்திய காட்டெருமைகள் பொதுவாக ‘மலை கால்நடைகள்’ என்று குறிப்பிடப்படுகின்றன.
  • முன்னதாக, காலநிலை மாற்றத்தின் தாக்கத்திற்கு எதிராக இமயமலை காட்டெருமைகளை காப்பீடு செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

4. 2021 – யிடான் பரிசு பெற்ற இந்தியர் யார்?

அ) டாக்டர் ருக்மணி பானர்ஜி 

ஆ) சாந்தனு மிஸ்ரா

இ) ரிப்பன் கபூர்

ஈ) அன்ஷு குப்தா

  • யிடான் பரிசு என்பது கல்வி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கிய தனிநபர்கள் அல்லது குழுக்களை அங்கீகரிக்கும் ஒரு கல்விசார் விருது ஆகும். யிடான் பரிசு அறக்கட்டளை இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ருக்மணி பானர்ஜி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் எரிக் ஹனுசேக் ஆகியோருக்கு மதிப்புமிக்க யிடான் பரிசை வழங்கியுள்ளது. 2016’இல் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை ஒன்பது பேருக்கு யிடான் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • பிரதம் கல்வி அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரியான Dr ருக்மணி பானர்ஜி, கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதற்கான அவரது பணிக்காக கௌரவிக்கப்படுகிறார்.

5. சமீப செய்திகளில் இடம்பெற்ற டிஜிசக்ஷம் திட்டத்தைத் தொடங்கிய மத்திய அமைச்சகம் எது?

அ) MSME அமைச்சகம்

ஆ) நிதி அமைச்சகம்

இ) தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 

ஈ) ஜவுளி அமைச்சகம்

  • மத்திய தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சரான பூபேந்திர யாதவ், மைக்ரோசாப்ட் இந்தியாவுடன் இணைந்து ‘டிஜிசக்ஷம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ‘டிஜிசக்ஷம்’ திட்டத்தின்மூலம், பதிவுசெய்யப்பட்ட 10 மில்லியன் வேலைதேடுவோர், தேசிய தொழில் சேவை வலைதளத் -தில் கணினி மற்றும் கணினி அறிவியல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சியை பெறமுடியும். நிரலாக்க மொழிகள், தரவு பகுப்பாய்வு, மென்பொருள் வளர் -ச்சிபோன்ற பாடங்களில் பயிற்சி அளிப்பதன்மூலம் முதலாம் ஆண்டில் 3,00,000 வேலை தேடுவோரை இது பயிற்றுவிக்கும்.

6. இந்திய அரசின் தலைமை நீரியலாளராக பொறுப்பேற்றவர் யார்?

அ) ஆதிர் அரோரா 

ஆ) வினய் பத்வார்

இ) கௌரவ் ஆர்யா

ஈ) R K மாத்தூர்

  • வைஸ் அட்மிரல் ஆதிர் அரோரா, NM இந்திய அரசாங்கத்தின் தலைமை நீரியலாளராக பொறுப்பேற்றார். இந்த மாதத்தில், துணைவேந்தர் வினய் பத்வார், AVSM, NM ஓய்வுறுவதை அடுத்து ஆதிர் பொறுப்பேற்பார். வங்கதேசத்துடனான நிரந்தர தீர்பாயத்தில் இந்தியாவை பிரதிநிதித்து -வப்படுத்துவது உட்பட கடல் எல்லை அம்சங்களுக்கு ஆதிர் அரோரா பொறுப்பேற்றார். 3ஆவது இந்திய-மொரிஷியஸ் நீரியல் ஒத்துழைப்பு கூட்டத்திற்கும் அவர் இணைத்தலைவராக இருந்தார்.

7. உலகளாவிய நிதிநிலைப்புத்தன்மை அரையாண்டறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) உலக வங்கி

ஆ) IMF 

இ) ADB

ஈ) புதிய வளர்ச்சி வங்கி

  • உலகளாவிய நிதி நிலைப்புத்தன்மை அறிக்கை என்பது பன்னாட்டுச் செலவாணி நிதியத்தின் அரையாண்டறிக்கையாகும். இது உலக நிதிச் சந்தைகளின் நிலைப்புத்தன்மை குறித்த விரிவான மதிப்பாய்வை அளிக்கிறது. சமீபத்திய உலகளாவிய நிதிநிலைப்புத்தன்மை அறிக்கையில், IMF, கிரிப்டோகரன்சிக்கு ஒரு பிரத்யேக அத்தியாயத்தை அர்ப்பணித்துள்ளது. அதன்கீழ், கிரிப்டோ சூழலின் விரைவான வளர்ச்சி புதிய வாய்ப்புகளை அளிக்கிறது என IMF குறிப்பிடுகிறது. நிதிநிலைப்புத் தன்மை சவால்களைப்பற்றியும் அது எச்சரிக்கை செய்துள்ளது.

8. ஆஸ்திரேலியாவில் சதமடித்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை யார்?

அ) ஸ்மிருதி மந்தனா 

ஆ) மிதாலி ராஜ்

இ) ஷபாலி வர்மா

ஈ) பூனம் ரௌத்

  • ஆஸ்திரேலியாவில் சதமடித்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்று இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை படைத்துள்ளார். 1991ஆம் ஆண்டு மெல்போர்ன் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் 58 ரன்கள் எடுத்ததே இதற்கு முன்பிருந்த சாதனையாகும். மந்தனா, 216 பந்துகளில் 22 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 127 ரன்கள் எடுத்தார்.

9. சமீப செய்திகளில் இடம்பெற்ற மானு பாக்கருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) ஓடுதல்

ஆ) நீச்சல்

இ) மல்யுத்தம்

ஈ) துப்பாக்கிச்சுடுதல் 

  • பெருவின் லிமாவில் நடைபெற்ற ISSF ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மானு பாக்கர் முதலிடம் பிடித்துள்ளார். சரப்ஜோத் சிங்குடனான கலப்பணி போட்டியில் & தனிநபர் கைத்துப்பாக்கி நிகழ்விலும் அவர் தங்கம் வென்றார். அவரது பங்களிப்பு, இந்தியா, சாம்பியன்ஷிப் பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற உதவியது.

10. சமீப செய்திகளில் இடம்பெற்ற எடையூர் மற்றும் குட்டியாத்தூர் ஆகிய ஊர்கள் சார்ந்த மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) ஆந்திர பிரதேசம்

இ) கேரளா 

ஈ) கர்நாடகா

  • கேரள மாநிலத்தின் எடையூர் மிளகாய் மற்றும் குட்டியாத்தூர் மாம்பழம் ஆகியவற்றுக்கு அண்மையில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளன. புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பில் நிலைபெறும் பொருட்களி -ன் மீது பயன்படுத்தப்படும் ஒரு அடையாளமாகும்.
  • சரக்குகளின் புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 1999 ‘இன்கீழ் இது கட்டுப்படுத்தப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 2021ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு: இரு பத்திரிகையாளர்களுக்கு அறிவிப்பு

2021ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்கள் மரியா ரெஸ்ஸா மற்றும் டிமிட்ரி முரடோவ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.

கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க தைரியமான போராட்டத்தை முன்னெடுத்த பிலிப்பைன்ஸ்யைச் சேர்ந்த பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸாவுக்கும், ரஷ்யாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவுக்கும் விருது பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2. 68 ஆண்டுக்கு பிறகு மீண்டும் டாடா கையில் ஏர் இந்தியா: மத்திய அரசுக்கு `2,700 கோடி வருமானம்

ஏர் இந்தியா ஏல விற்பனையில் டாடா சன்ஸ் நிறுவனத்தை வெற்றியாளராக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது. சமீபத்திய ஏலத்தில் டாடா சன்ஸ் நிறுவனமும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங்கும் போட்டியிட்டனர். இதில் டாடா சன்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

அஜய் சிங் `15,100 கோடிக்கு விண்ணப்பித்த நிலையில் `18,000 கோடிக்கு விண்ணப்பித்த டாடா சன்ஸ் ஏலத்தில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவதாக முதலீடுகள் மற்றும் பொது சொத்துகள் நிர்வாக துறையின் செயலர் துஹின் காந்தா பாண்டே கூறினார். இதில் `2,700 கோடி அரசுக்கு பணமாகக் கிடைக்கும். மீதமுள்ள `15,300 கோடி ஏர் இந்தியாவின் கடனுக்காக டாடா சன்ஸ் பொறுப்பேற்றுக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையின் மூலம் ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகள், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்ஸின் 100 சதவீத பங்குகள் மற்றும் ஏர் இந்தியா சாட்ஸில் 50 சதவீத பங்குகள் டாடா சன்ஸ் குழுமத்துக்கு சொந்தமாகும்.

ஜேஆர்டி டாடா தொடங்கிய ஏர் இந்தியா 68 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டாடா குழுமத்துக்கே சொந்தமாகியிருப்பது மிகவும் பெருமித மிக்க தருணமாகும்.

ஓராண்டுக்கு ஏர் இந்தியாவின் 51 சதவீத பங்கை டாடா சன்ஸ் நிர்வகித்து வர வேண்டும். மேலும் ஓராண்டுக்குப் பிறகே பங்குகளை விற்பனை செய்ய வேண்டும். ஏர் இந்தியாவின் ஊழியர்களையும் ஓராண்டுக்கு பணியிலிருந்து நீக்கக் கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஏர் இந்தியாவின் மொத்த கடன் `65,562 கோடியாக உள்ளது. இந்த விற்பனைக்கு பிறகு `46,262 கோடி கடன் ஏர் இந்தியா அசெட் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனத்துக்கு மாற்றப்படும். 1932’இல் ஜேஆர்டி டாடாவால் தொடங்கப்பட்ட நிறுவனத்தை 1953’இல் நாட்டுடைமையாக் -கியது. ஏர் இந்தியாவிடம் தற்போது மொத்தமாக 141 விமானங்கள் உள்ளன. ஏர் இந்தியா 42 நாடுகளுக்கு விமான சேவைகளை வழங்கி வருகிறது. ஏர் இந்தியா மற்றும் ஏஐஎக்ஸ்எல் இரண்டிலும் சேர்த்து 13,500 பணியாளர்கள் உள்ளனர்.

3. அக்டோபர்.9 – உலக பறவைகள் நாள்

4. பருவநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சி – எம் எஸ் சுவாமிநாதன் அறக்கட்டளையுடன்ஐ.நா. அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்:

இந்தியாவில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்ள MS சுவாமிநாதன் அறக்கட்டளை மற்றும் ஐநா மன்றத்தின் உலக உணவு பாதுகாப்பு திட்டம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதுதொடர்பாக MS சுவாமிநாதன் அறக்கட்டளை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தியாவில் பருவநிலை மாற்றத்தால் வேளாண்மை, உணவு உற்பத்தியில் பாதிப்பு, ஊட்டச்சத்து கிடைக்காத நிலை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் சமுதாயத்தை கட்டமைப்பது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட, ஐநா மன்றத்தின் உலக உணவு பாதுகாப்பு திட்டம் மற்றும் MS சுவாமிநாதன் அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

5. மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க மு க ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்தப்படுவ -தைக் கண்காணிக்க, மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, முதல்வரை தலைவராக கொண்டு மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் துணைத் தலைவராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை செயலர் உறுப்பினர் – செயலராகவும் உள்ளனர்.

மேலும், பல்வேறு அரசுத்துறை செயலர்கள், துறைத் தலைவர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனபிரதிநிதிகள், மாநில அளவிலான வங்கியாளர் குழுவின் மேலாண்மை இயக்குநர் ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.

மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்புக் குழுமற்றும் கண்காணிப்புக் குழுக்களில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பொறுத்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையை மதிப்பாய்வு செய்தல், பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்துவதில் மாநில அரசால் ஈடுபடுத்தப்ப -ட்டுள்ள மனிதவளங்களின் செயல்திறனை வரிசைபடுத்தி மதிப்பாய்வு செய்தல், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்து அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் வடிவமைப்புகளை மேம்படுத்த அல்லதுநடுநிலைப்படுத்த உரிய திருத்தங்களைச்செய்ய பரிந்துரைகளை வழங்குதல் ஆகியன இக்குழுவின் பணிகளாகும்.

மேலும், வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிதி நிலையை மதிப்பாய்வு செய்தல், பல்வேறு திட்டங்களை சரியான நேரத்தில் செயல்படுத்துவதில் உள்ள தடைகளை மறு ஆய்வுசெய்தல், திட்டங்களை செயல்படுத்துவதில் பெறப்பட்ட புகார்கள், முறைகேடுகள், பயனாளிகளி -ன் தவறான தேர்வு, முறைகேடான நிதி, திசைதிருப்புதல் போன்ற புகார்களை பின்தொடர்ந்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தல் ஆகிய பணிகளையும் இக்குழு மேற்கொள்ளும்.

பல்வேறு திட்டங்களின்கீழ் அடையாளம் காணப்பட்ட பயனாளிகளின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு நிதி உதவி வழங்குவது குறித்து உரிய வழிகாட்டுதல்களை வழங்குதல், மத்திய துறை திட்டங்கள், சம்பந்தப்பட்ட மத்திய நிறுவனங்கள் முறையா -க செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அடையாளம் காணுதல், மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின்கீழ் கண்காணிக்கப்படும் திட்டங்கள் தொடர்பான நிகழ்வுகளை மத்திய வளர்ச்சி அமைச்சகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பணிகளையும் இந்தக் குழு மேற்கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

6. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.3 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2021-22ஆம் நிதியாண்டில் 8.3 சதவீதமாக இருக்கும் என உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்காசிய பிராந்தியத்துக்கான தலைமை பொருளாதார நிபுணர் ஹன்ஸ் டிம்மர் பிடிஐ செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொது முதலீடு அதிகரிப்பு, உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஊக்கத்தொகை போன்ற காரணங்களால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிகழ் நிதியாண்டில் 8.3 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இது கரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்ட சுகாதார நெருக்கடிக்கு முன்பு நாங்கள் கணித்ததைவிடக் குறைவானது. இருப்பினும் இது நல்ல செய்தி என்றார். முன்னதாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிகழ் நிதியாண்டில் 7.5 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக இருக்கும் என, மார்ச் 31ஆம் தேதி வெளியிடப்பட்ட தெற்காசி பொருளாதார அறிக்கையில் உலக வங்கி தெரிவித்திருந்தது.

7. பதவி விலகினார் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே வி சுப்பிரமணியன்

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரான கே வி சுப்பிரமணியன் பதவி விலகலை அறிவித்தார்.

கடந்த மூன்றாண்டுகளாக அவர் இப்பதிவியில் இருந்துவந்த நிலையில் தனது பதவிக்காலம் முடிந்ததால் பதவியை ராஜினாமா செய்தார். இதனை மத்திய அரசும் உறுதி செய்துள்ளது. மீண்டும் ஆராய்ச்சிப் படிப்புகளைத் தொடர்வதால் பதவி விலகியதாக அவர் தெரிவித்துள்ளார்.

KV சுப்பிரமணியன் தலைமை பொருளாதார ஆலோசகராக கடந்த 2017 டிசம்பரில் பதவியேற்றார், இவர் பதவியேற்றிய 5 மாதத்தில் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் பதவி விலகினார். தற்போது அரவிந்த் சுப்பிரமணியன் தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனை குழுவில் முக்கிய பங்கு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

8. ஐஎம்பிஎஸ் அளவு `5 லட்சமாக உயர்வு: இன்டர்நெட் இல்லாமல் டிஜிட்டல் பரிமாற்றம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

நாட்டில் டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் உடனடி பேமெண்ட் சேவையான ஐஎம்பிஎஸ் பரிமாற்றத்தின் அளவு `2 லட்சத்திலிருந்து `5 லட்சமாக உயர்த்தப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. நிதிக் கொள்கை குறித்து முடிவு எடுக்கும் 6 பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழு நடப்பு நிதியாண்டு தொடங்கியபின் 3ஆவது முறையாக மும்பையில் கூடி விவாதித்தது. 2020ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி வட்டி வீதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைக்கப்பட்டது. அதன்பின் கடந்த ஓராண்டாக வட்டி வீதம் குறைக்கப்படவில்லை.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நிதிக் கொள்கைக்குழு தொடர்ந்து 8ஆவது முறையாக வட்டி வீதத்தில் மாற்றம் இல்லாமல் அறிவித்துள்ளது. இதனால் கடனுக்கான வட்டிவீதம் தொடர்ந்து 4 சதவீதமாகவே நீடிக்கிறது. வங்கிகளுக்கான இறுதிநிலை கடன்வசதி வட்டி வீதம் 4.5 சதவீதமாகவும், ரிசர்வ் ரெப்போ ரேட் 3.35 சதவீதமாகவும் நீடிக்கிறது. இந்தக் கூட்டத்துக்குப் பின் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:

பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யவில்லை. நிதிக்குழு உறுப்பினர்களில் 6 பேரில் 5 பேர் வட்டிவீத மாற்றத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2021- 2022 நிதியாண்டில் 9.5% ஆக இருக்கும். 2ஆவது காலாண்டில் 7.9 சதவீதமாகவும், 3ஆவது காலாண்டில் 6.8 சதவீதாகவும், 4ஆவது காலாண்டில் 6.1 சதவீதாகவும் இருக்கும். 2022-23ஆம் நிதி ஆண்டுக்கான GDP வளர்ச்சி 17.2 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நுகர்வோர் பணவீக்கம் 5.1 சதவீதமாக இருந்தது. நாட்டில் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் ஐஎம்பிஎஸ் பரிமாற்றத்தின் அளவை `2 லட்சத்திலிருந்து `5 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது. இப்போது ஐஎம்பிஎஸ் மூலம் நாள்தோறும் அதிகபட்சமாக `2லட்சம் வரைமட்டுமே பரிமாற்றம் செய்ய முடியும், இனிமேல் ` 5 லட்சம்வரை பரிமாற்றம் செய்யலாம்.

இதன்மூலம் இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் செயலி, வங்கி கிளைகள், ஏடிஎம், எஸ்எம்எஸ், ஐபிஆர்எஸ் ஆகியவைமூலம் பரிமாற்றம் அதிகரிக்கும். தற்போது ஆர்டிஜிஎஸ், நெப்ட் மற்றும் ஐஎம்பிஎஸ் சேவை 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது. ஆன்லைன்மூலம் மட்டுமே டிஜிட்டல் பரிமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் இனிமேல், ஆப் லைன் மூலமும் பரிமாற்றம் செய்யும் முறையை விரைவில் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்ய உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு ஆக.6ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு பரிசோதனை முயற்சிகள் நடந்தன. இதில் இன்டர்நெட் இணைப்பின் சக்தி குறைவாக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் டிஜிட்டல் பரிமாற்றம் செய்யமுடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த 2020 செப்டம்பர் முதல் 2021 ஜூன் வரையில் ஆஃப் லைனில் டிஜிட்டல் பரிமாற்றம் செய்து பரிசோதிக்கப்பட்டது. இதில் வெற்றிகரமாக 2.41 லட்சம் பரிமாற்றத்தில் `1.16 கோடி மதிப்புக்கு டிஜிட்டல்பரிமாற்றம் செய்யப்பட்டது.

பரிசோதனை முயற்சியில் வெற்றிகரமான முடிவுகள் கிடைத்ததால், விரைவில் ஆப் லைன் பரிமாற்றத்துக்கான விதிகள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்படும். இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

9. தமிழக காவல்துறையில் முதல் முறையாக நிர்வாக வசதிக்காக உளவுத்துறை SP பதவி 2ஆக பிரிப்பு: உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு

உளவுத்துறைக்கு தற்போது கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளார். உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி உள்ளார். உளவுப் பிரிவு டிஐஜியாக ஆசியம்மாள், எஸ்பியாக அரவிந்தன் உள்ளனர்.

ஆசியம்மாள் நிர்வாகப் பிரிவுகளை கவனித்து வருகிறார். அரவிந்தன், உளவு தகவல்களை ஒருங்கிணைத்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் சாராத இயக்கங்களின் நடவடிக்கைகள் கண்காணிப்பு, சமூக வலைதங்கள் கண்காணிப்பு ஆகிய பணிகளை கவனித்து வந்தார். மாநில உளவுப்பிரிவில் தற்போது ஒரு SP, 2 ASP’கள், 12 DSP’கள், 85 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தலைமை காவலர், காவலர்கள் என 609 பேர் தமிழகம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர்.

அதேநேரம் மாநிலம் முழுவதும் தற்போது குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மக்கள் தொகையும் அதிகரித்து வருகின்றன. இதனால், மாநில உளவுப் பிரிவு எஸ்பியின் பணிகளை 2ஆக பிரிப்பது என்று முடிவு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது.

காவல் துறையின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, மாநில உளவுத்துறையில் உள்ள எஸ்பி பதவிகளை 2ஆக பிரித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், ஒருங்கிணைந்த குற்ற வழக்குகளை கண்காணிக்கும் பிரிவு எஸ்பி பதவியை உளவுப் பிரிவு பதவியாக மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதனால் ஒருங்கிணைந்த குற்ற வழக்குகளை கண்காணிக்கும் பிரிவு எஸ்பியான சரவணன், உளவுப் பிரிவு பிரிவுக்கு தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறைக்கு தற்போது 2 எஸ்பிக்கள் உள்ளதால் இருவருக்குமான பணிகளை உள்துறை செயலாளர் பிரபாகர் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். அதில் தற்போது எஸ்பி சரவணன், ஒருங்கிணைந்த சென்னை மாநகரம் மற்றும் அரசியல் கட்சிகள், அரசியல் மற்றும் அரசியல் சாராத இயக்கங்கள் கண்காணித்தல், சமூக வலைதளங்கள் என 9 பிரிவுகளை கவனிப்பார். அதேபோல், காவல் கட்டுப்பாட்டு அறை, வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், போட்டோகிராபி பிரிவுகளில் உள்ள நிகழ்வுகளை கண்காணிப்பாளர் அரவிந்தன் கவனிப்பார் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

10. பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் காலமானார்

தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் அக்.8 அன்று காலமானார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 1956ஆம் ஆண்டு பிப்.6ஆம் தேதி பிறந்த கவிஞர் பிறைசூடன், 1985ஆம் ஆண்டு வெளியான சிறை திரைப்படத்தில் ராசாத்தி ரோசாப்பூவே என்ற பாடல் மூலம் மெல்லிசை மன்னர் MS விஸ்வநாதனால் திரைத்துறைக்கு பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டார்.

கிட்டத்தட்ட தமிழில் இதுவரை 400’க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களையும், ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்திப்பாடல்களையும் இவர் எழுதியுள்ளார்.

11. அக்டோபர்.9 – உலக மனநல நாள்.

12. செவ்வாய் கிரகத்தில் நீர்நிலை இருந்ததற்கான கூடுதல் ஆதாரம்: ஆற்றுப்படுகையின் துல்லிய புகைப்படம் மூலம் நாசா உறுதி!!

செவ்வாய் கிரகத்தில் உள்ள ஆற்றுப்படுகையின் துல்லிய புகைப் படத்தை நாசா வெளியிட்டுள்ளது. பெர்சவரன்ஸ் ரோவர்மூலம் கிடைத்து உள்ள இப்புகைப்படம் செவ்வாயில் நீர்நிலை இருந்ததற்கான ஆதாரத்
-தை வலுப்படுத்தியுள்ளது. செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வுசெய்வதற்கு கடந்த பிப்ரவரியில் பெர்சவரன்ஸ் ரோவர் என்ற பெயரில் விண்கலத்தை நாசா அனுப்பியது. சுமார் ஏழு வாரங்கள் பணம் செய்து செவ்வாயை அடைந்த பெர்சவரன்ஸ் பல்வேறு புகைப்படங்களை அனுப்பி வருகிறது.

இந்த நிலையில் ‘ezero’ என்ற பள்ளத்தாக்கில் இருந்து தற்போது அனுப்பி உள்ள ஆற்றுப் படுகையின் துல்லிய புகைப்படங்கள் செவ்வாயில் நீர்நிலைகள் இருந்ததற்கான ஆதாரத்தை வலுப்படுத்தியுள்ளன. இந்த புகைப்படங்கள் புதையுண்ட ஏரி உருவாக்கிய ஆற்றுப்படுகையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆற்றுப்படுகையின் கீழே உள்ள 3 அடுக்குகளின் வடிவங்கள் நீர் தொடர்ந்து ஓடியதை உறுதிப்படுத்தியுள்ளன. இதனால் சுமார் 370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயில் நீர் சுழற்சி இருந்திருக்கலாம் என்றும் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆற்றுப்படுகையின் புகைப் படங்கள் புவி எல்லையை ஒட்டி இருப்பதாக நாசா கூறியுள்ளது. ஆற்றுப் படுகையை கடந்து புதையுண்ட ஏரியின் கரையை மற்றும் பள்ளத் தாக்கின் விளிம்புகளை ரோவர் புகைப்படங்களாக எடுத்து அனுப்ப உள்ளது. அதன் முடிவில் செவ்வாய் குறித்து கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

1. ‘Prashasan Gaon ke Sang’, is an initiative of which Indian state / UT?

A) Gujarat

B) Punjab

C) Rajasthan 

D) Haryana

  • The state government of Rajasthan has launched a campaign named ‘Prashasan Gaon ke Sang’. It aims to enable access to 22 departments of the local administration for the people of remote villages in the state.
  • Under the campaign, the camps in villages would be held under the observation of respective District Collectors on weekdays. Services related to land deeds and issuance of various certificates are also done.

2. ‘Nata Sankirtana’ is a UNESCO–recognised Festival of Dance and Music held in which Indian state?

A) Assam

B) Manipur 

C) Andhra Pradesh

D) Punjab

  • Manipur organises the UNESCO–recognised Festival of Dance and Music ‘Nata Sankirtana’. This year, the 3–Day Festival was inaugurated recently from the capital Imphal. Nata Sankirtan was introduced during the reign of Bhagyachandra and recognised as intangible cultural heritage by UNESCO in 2013 for its uniqueness.

3. National Research Centre on Yak is located in which state/UT?

A) Ladakh

B) Arunachal Pradesh 

C) Sikkim

D) Uttarakhand

  • The National Bank for Agriculture and Rural Development (NABARD) has approved a credit plan for Yaks. The scheme was developed by the National Research Centre on Yak (NRCY) at Dirang in Arunachal Pradesh.
  • The NRCY functions under the Indian Council of Agricultural Research (ICAR). The high–altitude animal is also referred to as “mountain cattle”. Earlier, a scheme was announced to insure the Himalayan yaks against the impact of climate change.

4. Which Indian is one among the 2021 Yidan Prize awardees?

A) Dr Rukmini Banerji 

B) Santanu Mishra

C) Rippan Kapur

D) Anshu Gupta

  • The Yidan Prize is an education award that recognizes individuals, or teams, who have contributed significantly to education research and development. The Yidan Prize Foundation have awarded India–based Dr Rukmini Banerji and US–based Professor Eric Hanushek the prestigious Yidan Prize 2021. Nine laureates have been awarded the Yidan Prize since its inception in 2016.
  • Dr Rukmini Banerji, Chief Executive Officer of the Pratham Education Foundation, is awarded for her work in improving learning outcomes.

5. DigiSaksham programme, which was making news recently, was launched by which Union Ministry?

A) Ministry of MSME

B) Ministry of Finance

C) Ministry of Labour and Employment

D) Ministry of Textiles

  • Union Labour and Employment Minister Bhupendra Yadav announced a collaboration with Microsoft India to launch DigiSaksham programme. Through DigiSaksham, 10 million active registered job seekers will be able to access the training including computing and computer science training on the National Career Service Portal.
  • The programme is aimed to impact 3,00,000 job seekers in the first year by training them in subjects like programming languages, data analytics, software development etc.

6. Who took charge as the Chief Hydrographer to the Government of India?

A) Adhir Arora 

B) Vinay Badhwar

C) Gaurav Arya

D) R K Mathur

  • Vice Admiral Adhir Arora, NM has taken charge as the Chief Hydrographer to the Government of India. He succeeded Vice Admiral Vinay Badhwar, AVSM, NM who superannuated in this month.
  • Adhir Arora was responsible for maritime boundaries aspects including representing India in the Permanent Court of Arbitration (PCA) during the arbitration with Bangladesh. He was also the co–chair for the 3rd Indo – Mauritius hydrographic cooperation meeting.

7. Which institution publishes the Global Financial Stability Report semi–annually?

A) World Bank

B) IMF 

C) ADB

D) New Development Bank

  • The Global Financial Stability Report is a semi–annual publication by the International Monetary Fund, which gives detailed review on the stability of global financial markets. In the recent Global Financial Stability Report, the IMF has dedicated an exclusive chapter to cryptocurrency. Under it, IMF mentions that rapid growth of the crypto ecosystem presents new opportunities at the same time, it has cautioned about the financial stability challenges.

8. Who has become the first Indian Woman cricketer to score a century in Australia?

A) Smriti Mandhana 

B) Mithali Raj

C) Shafali Verma

D) Punam Raut

  • Indian ace woman cricketer Smriti Mandhana has created a new record by becoming the very first Indian woman to score a century in Australia. The previously held record in this regard was 58 runs in the second innings of the Melbourne Test in 1991. Mandhana scored 127 runs off 216 balls, which included 22 boundaries and a six.

9. Manu Bhaker, who was seen in the news recently, is associated with which sports?

A) Running

B) Swimming

C) Wrestling

D) Shooting 

  • Indian shooter Manu Bhaker has made a top podium finish in the ISSF Junior World Championship held at Lime, Peru. She won Gold in individual pistol event as well as in a mixed team pistol with Sarabjot Singh. Her contribution helped India to rise to the top of the medal tally at the championship.

10. Edayur and Kuttiattoor, which were in news recently, belongs to which state?

A) Tamil Nadu

B) Andhra Pradesh

C) Kerala 

D) Karnataka

  • Edayur Chilli and Kuttiattoor Mango of the state of Kerala have received Geographical Indication tag (GI Tag) recently. Geographical Indication (GI) is a sign used on products that have a specific geographical origin and is regulated under the Geographical Indications of Goods (Registration and Protection) Act of 1999.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!