Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

December Tamil Current Affairs Online Model Test

December Tamil Current Affairs Online Model Test

Congratulations - you have completed December Tamil Current Affairs Online Model Test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1.இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைப்பண்பு உச்சிமாநாட்டின் 15ம் பதிப்பை நடத்திய நகரம் எது?
A
[பனாஜி / Panaji]
B
[ஜெய்ப்பூர் / Jaipur]
C
[புது டெல்லி / New Delhi]
D
[புனே / Pune]
Question 1 Explanation: 
 நவம்பர் 30 அன்று புது டெல்லியில், இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைப்பண்பு உச்சிமாநாட்டின் 15ம் பதிப்பை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். புரட்சிகரமான திட்டங்களின் மூலம் இந்தியாவின் வளர்ச்சியை முடுக்கிவிடுவதும், சர்வதேச அரங்கில் மதிப்பை உயர்த்துவதையும் நோக்கமாகக்கொண்டு “இந்தியாவின் மறுக்க முடியாத வளர்ச்சி” எனும் மையக்கருத்துடன் இந்த 2 நாள் மாநாடு நடைபெற்றது.  இம்மாநாட்டில், முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஆப்கானிஸ்தான் முதன்மை நிர்வாகி அப்துல்லா அப்துல்லா, ரிலையன்ஸ் நிறுவனத்தலைவர் முகேஷ் அம்பானி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சத்தீஸ்கர் முதல்வர் டாக்டர்.ராமன் சிங் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Question 2
எந்த மாநிலத்தில்,18வது இருவாச்சி திருவிழா-2017 தொடங்கியுள்ளது?
A
[மணிப்பூர் / Manipur]
B
[நாகாலாந்து / Nagaland]
C
[திரிபுரா / Tripura]
D
[அசாம் / Assam]
Question 2 Explanation: 
 டிசம்பர் 1 அன்று கிஸ்மா நகரிலுள்ள நாகா பாரம்பரிய கிராமத்தில், நாகலாந்தின் 54வது மாநிலம் உருவான நாளின் விழா கொண்டாட்டத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கிவைத்தார். 10 நாள் நடைபெறும் இருவாச்சி திருவிழா, இந்திய மாநிலமான நாகாலாந்தில் நடைபெறும் திருவிழாவாகும். இது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது.  ‘திருவிழாக்களின் திருவிழா’ என சிறப்பிக்கப்படும் இது உலகளவில் பிரசித்திபெற்றது. நாகாலாந்தில் உள்ள 17 பழங்குடியின மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் விழா இது. இந்தத் திருவிழா நாகாலாந்து அரசால் 15 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.  பழங்குடியின பாரம்பரிய நாட்டுப்புறக்கதைகளில் இருவாச்சி பறவைக்கு முக்கியத்துவம் உண்டு. அதன்காரணமாக, இந்தத் திருவிழாவுக்கு இந்தப்பறவையின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கலை வேலைப்பாடுகளைக்கொண்ட ஓவியங்களும், சிலைகளும் இவ்விழாவில் பார்வைக்கு வைக்கப்படும். பழங்குடியின மக்கள் தங்கள் நாட்டுப்புறப்பாடல்களை பாடியும், நடனமாடியும், பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடியும் மகிழ்கின்றனர்.
Question 3
மக்களவையின் புதிய பொதுச் செயலாளர் யார்?
A
[கேதார்நாத் குப்தா / Kedarnath Gupta]
B
[கீர்த்தி ஷா / Kirti Shah]
C
[சினேகலதா ஸ்ரீவஸ்தவா / Snehlata Shrivastava]
D
[அனூப் மிஸ்ரா / Anoop Mishra]
Question 3 Explanation: 
 IAS அலுவலரான சினேகலதா ஸ்ரீவஸ்தவா, மக்களவையின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவையின் முதல் பெண் பொதுச்செயலாளர் இவரென்பது குறிப்பிடத்தக்கது. இவர் டிசம்பர் 1 அன்று பதவியேற்றுக்கொண்டார். 2018 நவம்பர் 30 வரை இவர் இப்பொறுப்பை வகிப்பார். இவருக்குமுன் அனூப் மிஸ்ரா மக்களவைச் செயலராக இருந்தார்.  மத்தியப்பிரதேசத்திலிருந்து 1982ல் IAS அதிகாரியான சினேகலதா ஸ்ரீவஸ்தவா, இப்போது சட்டத்துறை அமைச்சகத்தில் செயலராக உள்ளார். நிதியமைச்சகத்திலும் இவர் பணியாற்றியுள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 15 அன்று தொடங்கவுள்ள நிலையில், மக்களவைக்கு புதிய செயலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Question 4
எந்த மாநிலத்தில், 2017-க்கான கொனார்க் நடன திருவிழா தொடங்கியுள்ளது?
A
[A] [தமிழ்நாடு / Tamil Nadu]
B
[B] [கர்நாடகா / Karnataka]
C
[C] [பஞ்சாப் / Punjab]
D
[D] [ஒடிசா / Odisha]
Question 4 Explanation: 
 ஒடிசா மாநிலம் கொனார்க்கில் அமைந்துள்ள சூரியனார் கோவிலில் டிசம்பர் 1 அன்று 2017-க்கான கொனார்க் நடன திருவிழா தொடங்கியது. இது இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய நடன விழாக்களில் ஒன்றாகும். உலகப்புகழ்பெற்ற சூரியனார் கோவிலருகே நிரஞ்சன் குழுவினரின் அறிவுறுத்தலின் பேரில் புவனேசுவரின் நுபுர் நடன அகாடமி நடன கலைஞர்களின் ஒடிசி நடனத்துடன் இந்தத் திருவிழா தொடங்கிவைக்கப்பட்டது.  வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில், ஒடிசா சுற்றுலாத்துறை மலேசியாவிலிருந்து இரண்டு நடனக்குழுக்களின் நிகழ்ச்சிகளை இடம்பெறச்செய்தது. கொனார்க் நடன விழாவுடன் சேர்த்து கொனார்க்கின் சந்திரபாகா கடற்கரையில், மணல் சிற்ப கண்காட்சியையும் ஒடிசாவின் சுற்றுலாத்துறை நடத்தியது. 8 சர்வதேச மணல் சிற்பிகள் மற்றும் 62 தேசிய கலைஞர்கள் இவ்விழாவில் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
Question 5
2017-க்கான உள்ளரங்க உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?
A
[அங்கிதா பகத் / Ankita Bhakat]
B
[நிவேதா கணேசன் / Nivetha Ganesan]
C
[லைஷ்ராம் தேவி / Laishram Devi]
D
[தீபிகா குமாரி / Deepika Kumari]
Question 5 Explanation: 
 டிசம்பர் 3 அன்று தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற உள்ளரங்க உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெண்கலப்பதக்கம் வென்றார். வளை வில்வித்தை (Recurve) பிரிவில் 3வது இடத்திற்கான போட்டியில் ரஷ்ய வீராங்கனை சயானா தைஷ்ரெம்பிலோவாவை தீபிகா 7-3 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.
Question 6
எந்தத் தேதியில், இந்திய கடற்படை நாள் கொண்டாடப்படுகிறது?
A
டிசம்பர் 1
B
டிசம்பர் 2
C
டிசம்பர் 3
D
டிசம்பர் 4
Question 6 Explanation: 
 டிசம்பர் 4 அன்று இந்திய கடற்படை நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1971ல் நடைபெற்ற இந்தியா–பாகிஸ்தான் போரின்போது, டிசம்பர் 4 அன்று கராச்சி துறைமுகத்தின் மீது இந்திய கடற்படை கடல்வழி தாக்குதல் நிகழ்த்தியது. இந்தத் தாக்குதல்களுக்கு ‘ஆபரேஷன் திரிசூலம்’ என பெயரிடப்பட்டது.  இதில் இந்திய ஏவுகணைகள் பாகிஸ்தானின் PNS முகபிஸ் மற்றும் PNS கைபர் கப்பல்களை தாக்கி அழித்தது. மேலும் இந்த ஆபரேஷனின்போது கராச்சி துறைமுக எரிபொருள் கிடங்குகளும், ஒரு சில போர்க்கப்பல்களும் தாக்கியழிக்கப்பட்டன. இந்திய கடற்படையின் இந்த வெற்றித் தாக்குதலை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 4-ம் தேதி இந்திய கடற்படை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
Question 7
2018ம் ஆண்டின் ICC U–19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான, இந்திய அணியின் அணித்தலைவர் யார்?
A
[ரியான் பரக் / Riyan Parag]
B
[ஹிமான்ஷு ரானா / Himanshu Rana]
C
[சுப்மன் கில் / Shubman Gill]
D
[பிரித்வி ஷா / Prithvi Shaw]
Question 7 Explanation: 
 ICC U–19 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் அணித்தலைவராக மும்பை வீரர் பிரித்வி ஷா நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்தில் அடுத்த மாதம் 13ம் தேதி தொடங்கி பிப்ரவரி 3ம் தேதிவரை நடைபெறவுள்ள இத்தொடரில் மொத்தம் 16 அணிகள் களமிறங்குகின்றன.  இத்தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பிரித்வி தலைமையிலான அணியில் மொத்தம் 16 பேர் இடம்பெற்றுள்ளனர். U–19 உலகக்கோப்பை போட்டியில், அதிகபட்சமாக இந்தியா (2000, 2008, 2012)-ல் கோப்பையை வென்றுள்ளது. கடந்த 2016ல் இந்திய அணி இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவுகளிடம் வீழ்ந்தது.
Question 8
2017ன் உலக மண் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Soil day for future life
B
Soils & Pulses: Symbiosis for life
C
Healthy soils for a healthy life
D
Caring for the Planet starts from the Ground
Question 8 Explanation: 
 உலகளவில் மண்ணின் மகத்துவத்தை அனைவரும் அறியும்வகையில், ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 5 அன்று சர்வதேச அளவில், உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் மண்வளத்தை காக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது. இது ஆண்டுதோறும் ரோமில் உள்ள உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தலைமையகம், மண்டல அலுவலகங்கள் மற்றும் தேசிய மற்றும் உள்ளூர் நிகழ்வுகளில் கொண்டாடப்படுகிறது.
Question 9
இந்தியாவின் எந்த மாநிலத்தில், மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆற்றல் நிலையம் கட்டப்பட்டுள்ளது?
A
[கேரளா / Kerala]
B
[கர்நாடகா / Karnataka]
C
[ஒடிசா / Odisha]
D
[ஆந்திரப்பிரதேசம் /Andhra Pradesh]
Question 9 Explanation: 
 இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆற்றல் நிலையத்திட்டம் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள பனசுரா சாகர் அணையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் செயல்படவுள்ளது. 500 Kw மின்னுற்பத்தி திறனுடைய இந்நிலையம் நிலத்தடி கேபிள் இணைப்புகள் வழியாக கேரளாவின் மாநில மின்சார வாரியத்தின் மின் விநியோக கட்டமைப்பில் இணைக்கப்படும்.  இம்மிதவை நிலையத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் தண்ணீர் மட்ட மாற்றத்தோடு மிதவை நிலையம் சீராக அமைய நங்கூர அமைப்பு முறை கொண்டு இம்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் கேரளாவின் காயங்குளத்தில் 100 Kw மின்னுற்பத்தி திறனுடைய மிதவை சோலார் நிலையத்தை NETRA (NTPC Energy Technology Research Alliance) அமைப்பானது அமைத்தது குறிப்பிடத்தக்கது.
Question 10
6வது சர்வதேச சுற்றுலா சந்தை-2017ஐ நடத்தும் மாநிலம் எது?
A
[திரிபுரா / Tripura]
B
[அசாம் / Assam]
C
[நாகாலாந்து / Nagaland]
D
[பஞ்சாப் / Punjab]
Question 10 Explanation: 
 டிசம்பர் 5 அன்று அசாமின் கவுகாத்தி நகரில் 6வது சர்வதேச சுற்றுலா சந்தை-2017 தொடங்கியது. இந்த 3 நாள் நிகழ்வை, அனைத்து வடகிழக்கு மாநிலங்களுடனும் இணைந்து சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடுசெய்துள்ளது. குழு விவாதங்கள், பயிற்சிப் பட்டறைகள், வணிக கூட்டங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் போன்றவை இந்நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  ரயில்வே, உள்நாட்டு விமானப் போக்குவரத்து, வடகிழக்கு மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இதில் கலந்துகொண்டு அசாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்கள்.
Question 11
UNICEF-ICC’ன் “இளையோரின் எதிர்காலத்தை வடிவமைக்கும் விளையாட்டின் ஆற்றல்” எனும் பிரச்சாரத்தை தொடங்கிவைத்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
A
[யுவராஜ் சிங் / Yuvraj Singh]
B
[விராட் கோலி / Virat Kohli]
C
[M S தோனி / M S Dhoni]
D
[சச்சின் தெண்டுல்கர் / Sachin Tendulkar]
Question 11 Explanation: 
 தெற்காசியாவில் இளையோருக்கான UNICEF விளையாட்டுத்திட்டத்தை, விளம்பரம் செய்வதற்கான, UNICEF-ICC’ன் “இளையோரின் எதிர்காலத்தை வடிவமைக்கும் விளையாட்டின் ஆற்றல்” எனும் பிரச்சாரத்தை இலங்கையின் கொழும்புவில், இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தொடங்கிவைத்தார்.
Question 12
2017ன் குழந்தைகளுக்கான சர்வதேச அமைதி விருதைப் பெற்றுள்ள முகமது அல் ஜவுந்தே, எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
[ஐக்கிய அரபு அமீரகம் / United Arab Emirates]
B
[சிரியா / Syria]
C
[லைபீரியா / Liberia]
D
[பிலிப்பைன்ஸ் / Philippines]
Question 12 Explanation: 
 சிரிய அகதிக் குழந்தைகளின் உரிமைகளை உறுதிப்படுத்தும் அவரது முயற்சிகளை கெளரவிக்கும் விதமாக, 2017ன் குழந்தைகளுக்கான சர்வதேச அமைதி விருது, சிரிய நாட்டைச்சேர்ந்த முகமது அல் ஜவுந்தேவுக்கு வழங்கப்பட்டது. சிரிய உள்நாட்டுப் போரின் அகதியான அல் ஜவுந்தே, லெபனிய அகதிகள் முகாமில் தனது குடும்பத்துடன் ஒரு பாடசாலையை அமைத்துள்ளார். தற்போது அதில் 200 குழந்தைகள் வரை கல்வி பயின்று வருகின்றனர்.  இவ்விருது, நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் குழந்தைகளுக்கு உதவும் மற்றும் வாதிடும் ‘Kids Rights’ எனும் சர்வதேச அமைப்பினால் வழங்கப்படுகிறது. ஆதரவற்ற குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் HIV /எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலைமையை மேம்படுத்துவதற்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் ஒரு குழந்தைக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது.
Question 13
2017 தெற்காசிய மண்டல பாட்மிண்டன் அணி சாம்பியன்ஷிப்பை வென்ற நாடு எது?
A
[இலங்கை / Sri Lanka]
B
[இந்தியா / India]
C
[மியான்மர் / Myanmar]
D
[நேபாளம் / Nepal]
Question 13 Explanation: 
 இந்தியா முதன்முறையாக தெற்காசிய மண்டல பாட்மிண்டன் அணி சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது. டிசம்பர் 6 அன்று கவுகாத்தியில் நடந்த போட்டியில், இந்தியா நேபாளத்தை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்தது.  ஆர்யமான் டேன்டொன், திபேஷ் தமியை 21-9, 21-15 என்ற கணக்கில் தோற்கடித்தார். மகளிர் ஒற்றையர் பிரிவில், ரஷீலா மகாராஜனை 21-9, 21-6 என்ற கணக்கில் அஷ்மிதா சலிஹா தோற்கடித்தார்.
Question 14
எந்தத் தேதியில், படைவீரர்களுக்கான கொடி நாள் கொண்டாடப்படுகிறது?
A
டிசம்பர் 6
B
டிசம்பர் 7
C
டிசம்பர் 8
D
டிசம்பர் 9
Question 14 Explanation: 
 கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 7 அன்று படைவீரர் கொடி நாளாக இந்திய அரசு கடைபிடிக்கிறது. இக்கொடி நாள், 1949ம் ஆண்டு டிசம்பர் 7 முதல் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்டுவருகிறது.  தியாக உணர்வுடன் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்பநலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் காக்கும் சமுதாயக்கடமையை நிறைவேற்றும் வகையில், கொடி விற்பனை மற்றும் நன்கொடைகள் மூலம் திரட்டப்படும் நிதியை படைவீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
Question 15
குர்தீப் சிங், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
[குத்துச்சண்டை / Boxing]
B
[மேசைப்பந்தாட்டம் / Table Tennis]
C
[பளுதூக்குதல் / Weightlifting]
D
[சதுரங்கம் / Chess]
Question 15 Explanation: 
 அமெரிக்காவின் அனாஹெய்ம் நகரில் நடைபெற்று வரும் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் குருதீப் சிங் 3 தேசிய சாதனைகள் படைத்தார். இப்போட்டியில் 105 கிலோவுக்கு கூடுதலான எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், ஸ்னாட்ச் பிரிவில் 172, கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 216 என மொத்தமாக 388 கிலோ எடையைத் தூக்கி 13வது இடம் பிடித்தார். எனினும், அவர் தூக்கிய எடையானது இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது.  அதேபோல் ஒட்டுமொத்தமாக சரப்ஜித் சிங் கடந்த 2010 காமன்வெல்த் போட்டியில் 384 கிலோ தூக்கியதே அதிகபட்சமாக இருந்தது. தற்போது குருதீப் சிங் 388 கிலோ எடையை தூக்கி அந்த சாதனையையும் முறியடித்துள்ளார்.
Question 16
டைம் பத்திரிக்கையால், 2017ன் சிறந்த நபராக அறிவிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
The Whistleblowers
B
The Protesters
C
The Dreamers
D
The Silence Breakers
Question 16 Explanation: 
 அமெரிக்காவிலிருந்து வெளியாகும் உலகப்புகழ்பெற்ற பத்திரிக்கையான ‘டைம்’ வார இதழ் ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் ஒருவரைத்தேர்ந்தெடுத்து, அந்த ஆண்டிற்கான உலகின் சிறந்த மனிதர் என்ற கௌரவத்தை வழங்கும்.  இந்த ஆண்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி அதைப்பற்றி துணிச்சலாக வெளியே சொன்ன பெண்களை இந்த ஆண்டின் சிறந்த மனிதர்களாக டைம் பத்திரிக்கை அறிவித்துள்ளது. அவர்களை ‘மௌனத்தை உடைத்தவர்கள்’ (Silence Breakers) என்று வர்ணித்து அவர்களுக்கு புகழாரமும் சூட்டியிருக்கிறது டைம் பத்திரிக்கை.  ஹாலிவுட் நடிகர் ஹார்வி வெய்ன்ஸ்டைனால் பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களின் கதைகளை #MeToo எனும் மேற்கோள் மூலம் டைம் பத்திரிகையில் பகிர்ந்தனர். 65 வயதான வெய்ன்ஸ்டைனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்த முதல் நடிகை ஆஷ்லே ஜட் ஆவார்.
Question 17
2017 உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப்பில் தங்கம்வென்ற முதல் இந்தியரான காஞ்சன்மாலா பாண்டே, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
A
[கேரளா / Kerala]
B
[மகாராஷ்டிரா / Maharashtra]
C
[கர்நாடகா / Karnataka]
D
[ஒடிசா / Odisha]
Question 17 Explanation: 
 உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரானது மெக்சிகோவில், டிசம்பர் 2 முதல் 7 வரை நடைபெற்றது. இதில் மகளிர் 200 மீ., மெட்லி பிரிவில் இந்திய வீராங்கனை காஞ்சன் மாலா பங்கேற்றார். S11 பிரிவில் பங்கேற்ற நாக்பூரைச் சேர்ந்த காஞ்சன்மாலா தங்கம் வென்று அசத்தினார்.  இதன்மூலம், உலக பாரா நீச்சல் தொடரில் தங்கம்வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனையை காஞ்சன்மாலா படைத்தார். முன்னதாக, நடைபெற்ற 100 மீ., ஃப்ரீஸ்டைல், 100 மீ., ப்ரெஸ்ட்ஸ்ட்ரோக் மற்றும் பேக்ஸ்டோர்க் பிரிவில் இவர் 4வது இடத்தை பிடித்தார்.
Question 18
ஆண்டின் சிறந்த வீரருக்கான, Ballon d Or-2017 விருதை வென்றுள்ளவர் யார்?
A
[லயோனல் மெஸ்ஸி / Lionel Messi]
B
[ஜியான்லூகி பஃபான் / Gianluigi Buffon]
C
[லூகா மோட்ரிக் / Luka Modric]
D
[கிறிஸ்டியானோ ரொனால்டோ / Cristiano Ronaldo]
Question 18 Explanation: 
 உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை 5வது முறையாக போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றுள்ளார். இதையடுத்து, அதிகமுறை சிறந்த கால்பந்து வீரருக்கான விருதைவென்ற மெஸ்ஸியின் சாதனையை சமன் செய்துள்ளார்.  உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான Ballon d’Or விருதை தொடர்ந்து 2வது முறையாக வென்றுள்ளார் ரொனால்டோ. மெஸ்ஸிக்கு 2ம் இடமும் நெய்மருக்கு 3ம் இடமும் கிடைத்துள்ளன. இதற்குமுன்பு இவ்விருதை 2008, 2013, 2014, 2016 ஆகிய ஆண்டுகளில் ரொனால்டோ வென்றுள்ளார்.
Question 19
‘Tip Advisor’ எனும் சுற்றுலா இணையதளத்தின் அண்மைய கணக்கெடுப்பின்படி, எந்த இந்திய நினைவுச்சின்னம் உலகின் 2வது சிறந்த UNESCO உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது?
A
செங்கோட்டை
B
தாஜ்மகால்
C
சார்மினார்
D
அஜந்தா குகைகள்
Question 19 Explanation: 
 ஆக்ராவில் அமைந்துள்ள இந்தியாவின் புராதன வெண்பளிங்குச்சின்னமான தாஜ்மகால் UNESCO-வின் உலக பாரம்பரிய இடங்களில் 2வது இடத்தைப்பிடித்துள்ளது.  ‘Trip Advisor’ எனும் சுற்றுலா இணையதளம், உலகம் முழுவதும் சுற்றுலாப்பயணிகளிடம் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, UNESCO-வின் கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரிய இடங்களை வரிசைப்படுத்தியது.  இதில் கம்போடியாவின் அங்கோர் வாட் கோவில் முதலிடத்தைப்பிடித்தது. இந்தியாவின் தாஜ்மஹால் 2வது இடத்தைப்பிடித்தது.  சீனப்பெருஞ்சுவர் மற்றும் பெரு நாட்டின் மச்சு பிச்சு ஆகியவை முறையே 3ம் மற்றும் 4ம் இடத்தைப்பிடித்துள்ளன.  இத்தாலியின் சஸ்ஸி ஆப் மட்டேரா, இஸ்ரேலில் உள்ள பழைய எருசலேம், துருக்கியின் இஸ்தான்புல் வரலாற்றுச்சிறப்புமிக்க பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
Question 20
27வது வியாஸ் சம்மன்-2017 விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர் யார்?
A
[விஸ்வநாத் திரிபாதி / Vishwanath Tripathi]
B
[மம்தா கலியா / Mamta Kalia]
C
[சுரிந்தர் வர்மா / Surinder Verma]
D
[மன்னு பண்டாரி / Mannu Bhandari]
Question 20 Explanation: 
 புகழ்பெற்ற இந்தி அறிஞரும் எழுத்தாளருமான மம்தா கலியா, 27வது வியாஸ் சம்மன்-2017 விருதுக்கு, தனது ‘துக்கம் சுகம்’ புதினத்துக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 1991ல் இவ்விருதை நிர்மாணித்த KK பிர்லா அமைப்பின் கூற்றுப்படி, கடந்த 10 ஆண்டுகளில் இந்திய குடிமக்களால் எழுதப்பட்ட சிறந்த இந்தி இலக்கியத்திற்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது இதுவாகும். 3.50 லட்சம் மதிப்புடையது இவ்விருது.
Question 21
வாசினார் கூட்டமைப்பில் 42வதாக இணையும் நாடு எது?
A
[ஐக்கிய இராச்சியம் / United Kingdom]
B
[ஜெர்மனி / Germany]
C
[இந்தியா / India]
D
[ஜப்பான் / Japan]
Question 21 Explanation: 
பேரழிவு ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்வற்குக் கட்டுப்பாடுகளை விதிக்கும் சர்வதேச அமைப்பான "வாசினார் கூட்டமைப்பில்' இந்தியாவும் ஓர் உறுப்பு நாடாக இணையவுள்ளது. வல்லரசு நாடுகள் தங்கள் நட்பு நாடுகளுக்கு ஆயுதம் மற்றும் அதன் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வதை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது இவ்வமைப்பு. இவ்வமைப்பில் பிரிட்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, அர்ஜெண்டினா உள்ளிட்ட 41 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.  டிசம்பர் 8 அன்று ஆஸ்திரிய நாட்டின் தலைநகர் வியன்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் அவ்வமைப்பில் இடம்பெற்றிருக்கும் நாடுகள் அனைத்தும் இதற்கான அனுமதியை அளித்துள்ளன. இதையடுத்து, ‘வாசினார் கூட்டமைப்பில்’ இணையும் 42வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.  NSG-ல் இந்தியா இணைய சீனா தொடர் முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில், கடந்த ஜூன் மாதம் ஏவுகணை கட்டுப்பாட்டு கூட்டமைப்பில் இந்தியா இணைந்தது. தற்போது, ஆயுத பரிமாற்ற வாசினார் கூட்டமைப்பில் இந்தியா இணைந்துள்ளது சீனாவுக்கு சிறிய அதிர்ச்சியாக அமையும் என்று கூறப்படுகிறது.
Question 22
எந்த நாட்டின் அணி, உலக ஹாக்கி லீக் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளது?
A
[இந்தியா / India]
B
[ஜெர்மனி / Germany]
C
[நேபாளம் / Nepal]
D
[இத்தாலி / Italy]
Question 22 Explanation: 
 உலக ஹாக்கி லீக் இறுதிச் சுற்றில், 3,4வது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி, தொடர்ந்து 2வது முறையாக வெண்கலம் வென்றது.  3வது உலக ஹாக்கி லீக் இறுதிச்சுற்று ஆட்டம் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்று வருகிறது. இதில் 2வது அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.  கடந்த 2014-15ல் ராய்ப்பூரில் நடந்த சீசனில் இந்திய அணி 3-2 என ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் நெதர்லாந்தை வீழ்த்தி, வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
Question 23
எந்தத் தேதியில், உலக சுகாதார பாதுகாப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது?
A
டிசம்பர் 10
B
டிசம்பர் 11
C
டிசம்பர் 12
D
டிசம்பர் 13
Question 23 Explanation: 
 உலகின் எந்தப்பகுதியில் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் மலிவான தரமான சுகாதாரப் பராமரிப்பை வழங்க வேண்டும் என நாடுகளுக்கு முதன் முதலில் அறைகூவல் விடுத்த ஐக்கிய நாடுகள் அவையின் ஒருமனதான தீர்மானம் நிறைவேறிய நாளை நினைவுகூரும் விதமாக உலகளாவிய சுகாதார பாதுகப்பு நாள் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 12 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
Question 24
உலக ஹாக்கி லீக் போட்டியில் தங்கம் வென்ற நாடு எது?
A
[அர்ஜென்டினா / Argentina]
B
[இத்தாலி / Italy]
C
[ஜப்பான் / Japan]
D
[ஆஸ்திரேலியா / Australia]
Question 24 Explanation: 
 ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் நடைபெற்று வந்த உலக ஹாக்கி லீக் போட்டியின் இறுதியாட்டம் டிசம்பர் 11 அன்று கலிங்கா அரங்கத்தில் நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியா, ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.  அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை தவறாமல் கோலாக்கினார் ஆஸ்திரேலியாவின் பிளேக் கோவர்ஸ். எஞ்சிய நேரத்தில் அர்ஜென்டினா கோலடிக்காத காரணத்தால், இறுதியில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் ஆனது.  இதனிடையே, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. முன்னதாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் சுனில் 21வது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத் சிங் 54வது நிமிடத்திலும் கோலடித்தனர். ஜெர்மனி வீரர் மார்க் அப்பெல் 36வது நிமிடத்தில் கோலடித்தார். கடந்த சீசனிலும் இந்தியா வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Question 25
இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பின் (FICCI) 90வது ஆண்டு விழாவின் கருப்பொருள் என்ன?
A
Indian Scenario for GST
B
Indian Business in a New India
C
Indian Industry & its effects
D
Indian Business after Demonetization
Question 25 Explanation: 
 இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பின் 90வது ஆண்டுவிழாவில் இந்திய தொழிலதிபர்களிடையே பிரதமர் இன்று உரையாற்றினார். பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, ஒரு தேசிய வர்த்தக கூட்டமைப்பின் ஆண்டுக்கூட்டத்தில் நரேந்திர மோடி உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும்.  சரக்கு மற்றும் சேவைகள் வரி அமலாக்கத்திற்குப் பிறகு தொழில்துறையினருடன் அவர் நடத்தும் முதல் நேரடி சந்திப்பாகும் இது. இவ்வாண்டுக்கான கருப்பொருள் ”புதிய இந்தியாவில் இந்திய வர்த்தகம்” என்பதாகும்.  நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜியோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோரும் உரையாற்றினர். இக்கூட்டத்தில் பீகார், மேற்கு வங்கம், கேரளா, ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர்களும் உரையாற்றினர்.
Question 26
இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய செயல் இயக்குநர் யார்?
A
[உமா சங்கர் / Uma Shankar]
B
[மீனா ஹேமச்சந்திரா / Meena Hemchandra]
C
[தீபாளி பண்ட் ஜோசி / Deepali Pant Joshi]
D
[BP கனுங்கோ / BP Kanungo]
Question 26 Explanation: 
 இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய செயல் இயக்குநராக உமா சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். நவம்பர் மாதம் ஓய்வுபெற்ற, மத்திய வங்கி மேற்பார்வைத்துறையின் செயல் இயக்குநர் மீனா ஹேமசந்திராவிற்குப்பிறகு இவர் இப்பதவியில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.  தற்போது, ரிசர்வ் வங்கிக்கு 11 செயல் இயக்குநர்கள் உள்ளனர். இதற்கு முன்பு, RBIன் நிதி உள்ளடக்கம் மற்றும் மேம்பாட்டுத் துறையின் தலைமை பொது மேலாளராக உமா சங்கர் பொறுப்பிலிருந்தார்.
Question 27
2017ம் ஆண்டுக்கான லெகாடம் செல்வவள குறியீட்டெண் பட்டியலில், இந்தியாவின் தரநிலை என்ன?
A
100 வது
B
149 வது
C
111 வது
D
104 வது
Question 27 Explanation: 
 உலகளவில் செல்வ வளமிக்க நாடுகளின் பட்டியலை லண்டனில் உள்ள லெகாடம் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட 8 பிரிவுகளில் சிறப்பான செயல்பாடுகளை வைத்து 149 நாடுகளின் செல்வவளத்தை தரவரிசைபடுத்தி பட்டியல் வெளியிட்டுள்ளது.  இதில் இந்தியா 100 வது இடத்தைப் பிடித்துள்ளது. பொருளாதார தரம், வணிக சூழல், ஆளுமை, தனிப்பட்ட சுதந்திரம், சமூக மூலதனம், பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் இயற்கைச்சூழல் போன்ற 104 காரணிகளை அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.  நார்வே இப்பட்டியலின் முதலிடத்திலும், நியூசிலாந்து, பின்லாந்து, சுவிச்சர்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
Question 28
வேதங்களைப் பற்றிய உலக மாநாட்டை எந்த நாடு நடத்துகிறது?
A
[இந்தியா / India]
B
[நேபாளம் / Nepal]
C
[இலங்கை / Sri Lanka]
D
[வங்கதேசம் / Bangladesh]
Question 28 Explanation: 
 டிசம்பர் 15 அன்று புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில், “விஸ்வா வேத சம்மேளனம்” எனும் வேதங்களைப் பற்றிய உலக மாநாட்டை துணைக் குடியரசுத்தலைவர் வெங்கைய நாயுடு தொடங்கிவைத்தார்.  3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், உலகில் அமைதியை உண்டாக்குதல், மனித உரிமைகளை உறுதிசெய்தல், நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிய பணிகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றை கூறும் பண்டைய நூல்களின் உலக தத்துவங்கள் பற்றி விவாதிக்கப்படும்.  மேலும், வேதங்கள் மற்றும் மனு தர்மங்கள் மீதான தொன்மங்கள் மற்றும் புரட்டுக்கள் பற்றிய விவாதங்களும் இம்மாநாட்டில் மேற்கொள்ளப்படும். டிசம்பர் 17 அன்று நடைபெறும் மாநாட்டின் நிறைவுவிழாவில், முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
Question 29
2022ல் பீஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ சின்னம் எது?
A
Winter Dream
B
Flight
C
Nature
D
Yoggl
Question 29 Explanation: 
 2018-க்கான குளிர்கால ஒலிம்பிக்‍ போட்டிகள் தென்கொரியாவில் நடத்தப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, 2022-க்கான குளிர்கால ஒலிம்பிக்‍ போட்டிகள் மற்றும் பாராலிம்பிக்‍ போட்டிகள் சீனாவின் பீஜிங்கில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  இதனையொட்டி, போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னம் தலைநகர் பீஜிங்கில் உள்ள தேசிய நீரியல் மையத்தில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில், 2022- க்கான பீஜிங் அமைப்புக்குழுவால் வெளியிடப்பட்டது. இந்தச் சின்னத்தில் ‘குளிர்காலம்’ என்ற பொருள் கொண்ட டாங் (Dong) என்ற கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. சீனாவின் பிரபல ஓவியரான லின் குன்சென் இதனை வடிவமைத்துள்ளார்.
Question 30
ஐ.நா. உலக புலம்பெயர் அறிக்கை - 2018ன் படி, எந்த நாட்டு மக்கள் அதிகளவில் புலம்பெயர்ந்துள்ளனர்?
A
[இந்தியா / India]
B
[மெக்சிகோ / Mexico]
C
[ரஷ்யா / Russia]
D
[வங்கதேசம் / Bangladesh]
Question 30 Explanation: 
ஐ.நா அமைப்பு புலம்பெயர் மக்கள் குறித்து கணக்கெடுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நாடுகளிலும் அந்த நாட்டை சேராத மக்கள் எவ்வளவு பேர் வசிக்கிறார்கள் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவ்வறிக்கையின்படி, 1.5 கோடிக்கும் அதிகமான இந்திய மக்கள் வளைகுடா நாடுகளிலும் மற்ற பிற வெளிநாடுகளிலும் வசிப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 2015ன் படி உலகம் முழுக்க 243 மில்லியன் மக்கள் வெளிநாட்டில் வசிப்பதாக கணக்கு எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் மொத்தம் 6% மக்கள் இந்தியர்கள்.  2010ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2015ல் வெளிநாட்டிற்கு குடியேறியவர்களின் எண்ணிக்கை 10% அதிகரித்திருக்கிறது. இதன்படி வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களின் 30 பேரில் ஒருவர் அந்த நாட்டை சேராதவர்.  உலகத்தில் இருக்கும் புலம்பெயர் மக்களில் 50% மக்கள் ஆசியாவை சேர்ந்தவர்கள். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் மெக்சிகோ இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக ரஷ்யா, சீனா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.  இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு சென்றவர்கள் சதவிகிதம் 2010ல் 3.2 சதவிகிதமாக இருந்தது. 2015ல் அதேபோல் 3.3 சதவிகிதமாக மாறாமல் இருக்கிறது.
Question 31
2017 மகளிர் ஒற்றையர் பிரிவில் துபாய் உலக பாட்மிண்டன் சூப்பர் சீரிசில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை யார்?
A
[சாய்னா நேவால் / Saina Nehwal]
B
[பி.வி. சிந்து / P.V. Sindhu]
C
[ஸ்ரீ கிருஷ்ணப்பிரியா / Sri Krishna Priya]
D
[சைலி ரனே / Saili Rane]
Question 31 Explanation: 
 துபாய் உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்ட்டன் போட்டியின் இறுதியாட்டத்தில் இந்தியாவின் பி வி சிந்து ஜப்பானின் அகானே யமகுச்சியிடம் தோல்வியடைந்தார். நேற்று நடைபெற்ற போட்டியில் 21–15, 12–21, 19–21 என்ற செட்கணக்கில் யமகுச்சி வெற்றிபெற்றார்.  இந்தியன் ஓபன் மற்றும் கொரிய ஓபனில் இரண்டு சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்ற சிந்து, இந்த ஆண்டுக்கான ஹாங்காங் ஓபன் மற்றும் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது குறிப்பிடத்தக்கது.
Question 32
இந்திய தானிய ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள மாநிலம் எது?
A
[உத்தரப்பிரதேசம் / Uttar Pradesh]
B
[மத்தியப்பிரதேசம் / Madhya Pradesh]
C
[குஜராத் / Gujarat]
D
[பஞ்சாப் / Punjab]
Question 32 Explanation: 
 முதன்மை தானிய பயிர்கள் மீதான அடிப்படை ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தால் நிறுவப்பட்ட ஒரு தேசிய நிறுவனமே இந்த இந்திய தானிய ஆராய்ச்சி நிறுவனமாகும். இது உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் அமைந்துள்ளது.  இந்நிறுவனம், முழுமையான உற்பத்தி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்குகிறது, மேம்படுத்தப்பட்ட வகைகளின் இனப்பெருக்க விதைகளை உற்பத்தி செய்கிறது மற்றும் தானியங்கள் மீதான ஆராய்ச்சிகளை செய்கிறது.
Question 33
கோவாவின் 56வது விடுதலை நாள், எந்தத் தேதியில் கொண்டாடப்படுகிறது?
A
டிசம்பர் 18
B
டிசம்பர் 19
C
டிசம்பர் 20
D
டிசம்பர் 21
Question 33 Explanation: 
 இன்றைய கோவா மாநிலம் போர்ச்சுகீசியர்களின் பிடியில் சுமார் 450 ஆண்டுகளாக இருந்தது. இடையில் 1812-1815 காலகட்டத்தில் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. 1961ல் டிசம்பர் 19ல்தான் இந்தியாவோடு இணைந்தது. 1947ல் இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றது.  அதன்பின்னும் போர்ச்சுகல் இந்தியாவில், தான் பிடித்துவைத்திருந்த பகுதிகளிலிருந்து வெளியேற மறுத்தது. அதனால், இந்தியா 1961 டிசம்பர் 12ல் ‘ஆபரேஷன் விஜய்’ எனும் ராணுவ நடவடிக்கையை எடுத்தது.  கோவா,டாமன் மற்றும் டையூவை போர்ச்சு கீசியர்களின் பிடியிலிருந்து மீட்டது. 1987 மே 30 அன்று கோவா இந்தியாவின் 25வது மாநிலம் என்ற தகுதியைப்பெற்றது. டாமன் மற்றும் டையூ இரண்டும் யூனியன் பிரதேசங்களாகத் தொடர்கின்றன.
Question 34
பெருமைமிகு தேசிய வடிவமைப்பு விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
A
[ஜோதி துபே / Jyoti Dubey]
B
[கஞ்சன் குப்தா / Kanchan Gupta]
C
[மிரினல் சக்சேனா / Mrinal Saxena]
D
[G. சதீஷ் ரெட்டி / G. Satheesh Reddy]
Question 34 Explanation: 
 பெருமைமிகு தேசிய வடிவமைப்பு விருதானது பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகராகவும், ஏவுகணைகள் மற்றும் யுக்திசார்ந்த ஆயுதங்களுக்கான தலைமை இயக்குநராகவும் உள்ள G. சதீஷ் ரெட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் திசைகாட்டல் துறையின் நிபுணத்துவம் வாய்ந்தவராக அறியப்படுகிறார்.  மேலும், இங்கிலாந்தில் உள்ள ராயல் வானூர்தி சங்கம் மற்றும் லண்டனில் உள்ள இராயல் திசைகாட்டல் நிறுவனத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்தியர் இவராவார்.  இந்தியாவில் வானூர்தி தொழினுட்பங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் மேம்பாட்டிற்கு நீடித்த முயற்சிகள் எடுத்தமைக்காகவும், தனது முக்கிய தேசிய பங்களிப்புகள் மூலம் உள்நாட்டு வடிவமைப்பு, பலதரப்பு ஏவுகணை மேம்பாடுகள், கட்டுப்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் மின்னணுவியல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு முயற்சிகள் எடுத்தமைக்காகவும் இவ்விருதினை அவர் பெறுகிறார்.
Question 35
e-NAMல் பணமில்லா பரிவர்த்தனையை கொண்டுவர, மத்திய அரசு எந்தத் தனியார் வங்கியுடன் இணைந்துள்ளது?
A
ஐசிஐசிஐ வங்கி
B
ஆக்சிஸ் வங்கி
C
HDFC வங்கி
D
ஃபெடரல் வங்கி
Question 35 Explanation: 
 விவசாயிகளின் விளை பொருட்களுக்கு, உரிய விலை கிடைக்கச்செய்யும் நோக்கில், ‘இ– நாம்’ வலைதளத்தை, 2016ல், மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதில், 14 மாநிலங்களைச்சேர்ந்த, 470 மொத்த விற்பனை சந்தைகள் உறுப்பினராக இணைந்துள்ளன.  விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை, ‘இ–நாம்’ மூலம் விற்பனை செய்கின்றனர். இதற்கான பணப் பரிவர்த்தனை, தற்போது, வங்கி கிளைகள், ‘இணைய வங்கிச் சேவை, பற்று அட்டை’ போன்றவற்றின் மூலம் நடக்கிறது.  இந்நிலையில், இத்தகைய வலைதள பணப் பரிவர்த்தனைகளுக்கு என, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியை, மத்திய அரசு நியமித்துள்ளது. ‘இ–நாம்’ வலைதளத்தில், ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதியை, மத்திய அரசின், BHIM செயலி மற்றும், UPI செயல்பாடுகள் மூலம், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வழங்கும்.  தற்போது, விவசாயிகள், ஒரு சந்தைக்குள் தங்கள் விளைபொருட்களை விற்பனைசெய்யும் வசதியுள்ளது. விரைவில், நாட்டின் எந்த சந்தையிலும் விற்பனைசெய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும்.
Question 36
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தலைவர் யார்?
A
[U D சால்வி / U D Salvi]
B
[மோஹித் சேத் / Mohit Seth]
C
[மதன் B லோகுர் / Madan B Lokur]
D
[B M ராய்கர் /B M Raikar]
Question 36 Explanation: 
 தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்த நீதிபதி ஸ்வதந்தர் குமார் டிசம்பர் 19ம் தேதியுடன் ஓய்வுபெற்றார். இதையடுத்து, அந்தப் பதவிக்கு இடைக்காலத் தலைவராக நீதிபதி U.D. சால்வியை மத்திய அரசு நியமித்து உத்தரவிட்டது. அந்தப் பதவியில் புதியத் தலைவர் நியமிக்கப்படும் வரையிலோ அல்லது தனது பதவி ஓய்வுக் காலம் வரையிலோ (2018 பிப்ரவரி 13), இதில் எது முதலில் வருகிறதோ, அதுவரையிலும் நீதிபதி சால்வி நீடிப்பார்.  நீதிபதி சால்வி கடந்த 1977ல் வழக்குரைஞராக முதலில் பதிவுசெய்தார். மும்பை கூடுதல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக கடந்த 1993ல் அவர் நியமிக்கப்பட்டார். மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக அவருக்கு கடந்த 2009ல் பதவியுயர்வு அளிக்கப்பட்டது.  பின்னர், தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக கடந்த 2013ல் அவர் நியமிக்கப்பட்டார். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தலைவர் ஒருவரும், நீதித்துறையைச் சேர்ந்த உறுப்பினர்கள் 10 பேரும், சுற்றுச்சூழல் நிபுணர்கள் 10 பேரும் இருப்பர்.
Question 37
எந்த மாநிலத்தில், இந்தியாவின் முதல் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது?
A
[ராஜஸ்தான் / Rajasthan]
B
[ஒடிசா / Odisha]
C
[கர்நாடகா / Karnataka]
D
[குஜராத் / Gujarat]
Question 37 Explanation: 
 குஜராத் மாநிலம், வதோதராவில் தேசிய ரயில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. அதன் நிர்வாகப் பணிகளை கவனிப்பதற்காக மேலாண்மைக் குழு ஒன்றை அமைப்பதற்கும் இசைவு தெரிவித்தது.  நாட்டின் ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும், அதற்கான தொழில்நுட்பத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மோடி கடந்த 2014ல் தெரிவித்திருந்தார்.  அதன் ஒரு பகுதியாக ரயில்வே தொடர்பான ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்வதற்காக பிரத்யேக பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.  பல்கலைக்கழகத்துக்குத் தேவையான நிதியுதவி, உள்கட்டமைப்பு வசதி ஆகியவற்றை ரயில்வே அமைச்சகம் வழங்கும். மேலும், அதன் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள தனிக்குழு அமைக்கப்படும்.  வேந்தர், இணைவேந்தர், பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோரை அந்தக் குழுவே தேர்வுசெய்யும். மொத்தம் 3,000 மாணவர்களைப் பயிற்றுவிக்கும் வகையில் அந்தப்பல்கலைக்கழகத்தில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவுள்ளன.
Question 38
மிஸ் இந்தியா அமெரிக்கா-2017 எனும் பட்டத்தை வென்றவர் யார்?
A
[கவிதா மல்கோத்ரா / Kavita Malhotra]
B
[ஸ்ரீ சைனி / Shree Saini]
C
[பிரச்சி சிங் / Prachi Singh]
D
[ஸ்வப்னா மன்னம் / Swapna Mannam]
Question 38 Explanation: 
 அமெரிக்காவில் மிஸ் இந்தியா அமெரிக்கா, மிஸ் டீன் இந்தியா அமெரிக்கா, மிஸஸ் இந்தியா அமெரிக்கா என 3 பிரிவுகளில் 2017-க்கான அழகிப்போட்டி நடந்தது. இதற்காக 24க்கும் கூடுதலான மாநிலங்களிலிருந்து 50 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில், மிஸ் இந்தியா அமெரிக்கா அழகிப்போட்டியில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் 21 வயது மாணவியான ஸ்ரீ சைனி வெற்றிபெற்றுள்ளார்.  அழகிப்போட்டியில் வெற்றிபெற்ற பின்னர், மனித கடத்தலை ஒழிக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார். இப்போட்டியில் 22 வயது நிறைந்த மருத்துவ மாணவியான கனெக்டிகட்டை சேர்ந்த பிராச்சி சிங் 2ம் இடமும், வடகரோலினாவை சேர்ந்த பரீனா 3ம் இடமும்பெற்றனர்.  இதேபோன்று Mrs.இந்தியா அமெரிக்கா 2017 போட்டியில் புளோரிடாவை சேர்ந்த புற்றுநோய் அறுவை சிகிச்சைநிபுணரான கவிதா மல்கோத்ரா பட்டானி வெற்றி பெற்றுள்ளார். 2ம் இடத்தினை பிரேர்ணா மற்றும் 3ம் இடத்தினை ஐஸ்வர்யா பெற்றுள்ளனர்.  டீன் ஏஜ் வயதினருக்கான மிஸ் டீன் இந்தியா அமெரிக்கா 2017 அழகிப்போட்டியில் நியூ ஜெர்சியை சேர்ந்த சுவப்னா மன்னம் (வயது 17) வெற்றிபெற்றார். சிம்ரன் 2ம் இடமும், கிரித்திகா 3ம் இடமும்பெற்றனர்.
Question 39
ஜீ சினி விருதுகள்-2018ல், ‘Global Icon’ விருதுவென்ற இந்தியர் யார்?
A
[பிரியங்கா சோப்ரா / Priyanka Chopra]
B
[கத்ரினா கைஃப் / Katrina Kaif]
C
[அமிதாப்பச்சன் / Amitabh Bachchan]
D
[அக்ஷய் குமார் / Akshay Kumar]
Question 39 Explanation: 
 டிசம்பர் 19 அன்று மும்பையில் நடைபெற்ற ஜீ சினி விருதுகள்-2018ல், ‘Global Icon’ விருதை, பிரியங்கா சோப்ரா வென்றார். சிறந்த நடிகை – ஸ்ரீ தேவி (திரைப்படம் - மாம்), சிறந்த நடிகர் – வருண் தவான் (திரைப்படம் – பத்ரிநாத் கி துல்கனியா), சிறந்த திரைப்படம் – கோல்மால் அகைன் (இயக்குநர் – ரோகித் ஷெட்டி). அசாதாரண மேதை விருது – அமிதாப்பச்சன்.
Question 40
நிகழாண்டுக்கான ICC மற்றும் T20 அணிகள் இரண்டிலும் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வீராங்கனை யார்?
A
[ஏக்தா பிஷ்த் / Ekta Bisht]
B
[ஹர்மன்ப்ரீத் கெளர் / Harmanpreet Kaur]
C
[மிதாலி ராஜ் / Mithali Raj]
D
[ஜூலன் கோஸ்வாமி / Jhulan Goswami]
Question 40 Explanation: 
 2017-க்கான ICC மகளிர் அணியில் இந்திய வீராங்கனைகள் மிதாலி ராஜ், ஏக்தா பிஷ்த், ஹர்மன்பிரீத் கெளர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதில் இந்திய கேப்டன் மிதாலி ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க, ஹர்மன்பிரீத் கெளர் T20 அணிக்கு தேர்வாகியுள்ளார். பந்துவீச்சாளரான ஏக்தா பிஷ்த் இரு அணிகளிலுமே இடம்பிடித்து அசத்தியுள்ளார். இத்தகைய பெருமைமிகு வீராங்கனை அவர் ஒருவரே ஆவார்.  உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த ஏக்தா, 19 ஒருநாள் போட்டிகளில் 34 விக்கெட்டுகளும், 7 T20 போட்டிகளில் 11 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். அதேபோல், மகளிர் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில், மிதாலி மற்றும் ஹர்மன்பிரீத் முறையே தங்களது அணிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.  2016 செப்டம்பர் 21 முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் வீராங்கனைகளின் செயல்பாடு அடிப்படையில் அவர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். ICC டிசம்பர் 21 அன்று வெளியிட்ட இந்த அணிகளில் ஒருநாள் அணி கேப்டனாக இங்கிலாந்தின் ஹீதர் நைட்டும், T20 அணி கேப்டனாக மேற்கிந்திய தீவுகளின் ஸ்டெஃபானி டெய்லரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இதில் ஹீதர் நைட் உலகக் கோப்பை போட்டியிலும், ஸ்டெஃபானி டி20 கோப்பை போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் கேப்டன்களாகியுள்ளனர்.
Question 41
எந்த மாநிலத்தில், இந்தியாவின் முதல் மற்றும் ஒரே வடிவமைப்புப் பல்கலைக்கழகமான “உலக வடிவமைப்பு பல்கலைக்கழகம்” திறக்கப்பட்டுள்ளது?
A
[கேரளா / Kerala]
B
[மேற்கு வங்கம் / West Bengal]
C
[அரியானா / Haryana]
D
[ஆந்திரப்பிரதேசம் / Andhra Pradesh]
Question 41 Explanation: 
 இந்தியாவின் முதல் மற்றும் ஒரே வடிவமைப்பு பல்கலைக்கழகமான “உலக வடிவமைப்பு பல்கலைக்கழகம்“ (World University of Design) அரியானாவின் சோனிபட் நகரில் திறக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பின் ஓம் பிரகாஷ் பன்சால் கல்வியியல் மற்றும் சமூக நல்வாழ்வு அறக்கட்டளையால் இப்பல்கலைக்கழகம் மேம்படுத்தப்பட்டுள்ளது.  இந்தியாவின் மிகப்பெரிய திட்டமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த கல்விக்கான நகரமான சோனிபட்டில், தேசிய நெடுஞ்சாலை 1ல் அமைந்துள்ள ராஜீவ் காந்தி கல்வி நகரில் இப்பல்கலைக் கழகம் தற்போது அமைந்துள்ளது. புத்தாக்க தளத்தினில் கல்விக்காக முழுவதும் அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் இந்த “வடிவமைப்புக்கான உலக பல்கலைக்கழகம்” ஆகும்.  வடிவமைப்பு, புதுப்பாங்கு, தகவல் தொடர்பு, காட்சிக்கலை, வடிவமைப்பு மற்றும் சில்லறை மேலாண்மை மற்றும் கட்டடக்கலை போன்ற பல்வேறு வடிவமைப்பு சார்ந்த 23 பிரத்யேக இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை இந்தப் பல்கலைக்கழகம் வழங்கும். ஆராய்ச்சி, சிறப்பான கல்வி, தொழிற்சாலை தயார்நிலை மற்றும் சமூக புத்தாக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஒரு தனித்துவமான பாடத்திட்டத்தை இது பின்பற்றும்.
Question 42
எந்த நகரம், 2022 காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது?
A
[புது டெல்லி / New Delhi]
B
[பர்மிங்காம் / Birmingham]
C
[லண்டன் / London]
D
[டர்பன் / Durban]
Question 42 Explanation: 
 2022-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தென்னாப்பிரிக்க அரசு நிதி பிரச்சினை காரணமாக டர்பனில் போட்டியை நடத்தவியலாது என்று கூறியது. இதனால் புதிதாக விண்ணப்பம் கோரப்பட்டது. இதில் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகர் போட்டியை நடத்த முன்வந்தது. இதற்கு காமன்வெல்த் கேம்ஸ் ஃபெடரேசன் அனுமதியளித்துள்ளது.  இந்த விளையாட்டுப் போட்டிகள் 27 ஜூலை முதல் 7 ஆகஸ்ட் 2022 வரையிலும் நடைபெறும். 1934ல் லண்டன், 2022ல் மான்செஸ்டர் நகருக்குப் பிறகு இங்கிலாந்தில் நடைபெறும் 3வது காமன்வெல்த் போட்டி இதுவாகும்.
Question 43
2018-க்கான ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள வணிகம் செய்வதற்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள நாடு எது?
A
[நியூசிலாந்து / New Zealand]
B
[ஐக்கிய இராஜ்ஜியம் / United Kingdom]
C
[சுவீடன் / Sweden]
D
[கனடா / Canada]
Question 43 Explanation: 
 ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள 2018ம் ஆண்டின் வணிகம் செய்வதற்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் கடந்தாண்டு 5வது இடத்திலிருந்த இங்கிலாந்து முதன்முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. சொத்துரிமை, புத்தாக்கம், வரிகள் மற்றும் சிவப்பு நாடா போன்றவற்றை உள்ளடக்கிய 15 காரணிகளின் அடிப்படையில் மொத்தம் 153 நாடுகள் இப்பட்டியலில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.  இங்கிலாந்தைத் தொடர்ந்து அடுத்த 2 இடங்களில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. இப்பட்டியலில் இந்தியா 62 வது இடத்தைப் பெற்றுள்ளது.
Question 44
ஹிந்தி மொழியில் நிகழாண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வென்றவர் யார்?
A
[ரமேஷ் குந்தல் மெக் / Ramesh Kuntal Megh]
B
[சமன் லால் / Chaman Lal]
C
[முல்க் ராஜ் ஆனந்த் / Mulk Raj Anand]
D
[மஹ்மூத் அஹ்மத் / Mahmood Ahmad]
Question 44 Explanation: 
 இலக்கிய விமர்சனத்தை முன்வைக்கும் “விஷ்வ் மிதக் சரித் சாகர்” எனும் தனது நூலுக்காக ரமேஷ் குந்தல் மெக், ஹிந்தி மொழியில் நிகழாண்டுக்கான சாகித்ய அகாடமி விருதினை வென்றுள்ளார்.  செம்புத் தகட்டில் பொறிக்கப்பட்டு கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னம், பொன்னாடை மற்றும் ஒரு லட்சம் ரொக்கப்பரிசு ஆகியவற்றை உள்ளடக்கிய இவ்விருது, 2018 பிப்ரவரி 12 அன்று நடைபெறும் ஒரு சிறப்பு விழாவில் அவருக்கு வழங்கப்படும்.
Question 45
32வது இந்திய பொறியியல் மாநாட்டை (IEC-2017) நடத்திய நகரம் எது?
A
[புது டெல்லி / New Delhi]
B
[சென்னை / Chennai]
C
[கொல்கத்தா / Kolkata]
D
[கொச்சின் / Kochi]
Question 45 Explanation: 
 டிசம்பர் 21-23 வரை இந்திய பொறியாளர்கள் நிறுவனத்தின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர உணவகம் ஒன்றில் 32வது இந்திய பொறியியல் மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டின் நிறைவு விழாவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் கெளரவ விருந்தினராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டார்.
Question 46
தேசிய கணித நாள், இந்தியாவில் எந்தத் தேதியில் கொண்டாடப்படுகிறது?
A
டிசம்பர் 21
B
டிசம்பர் 22
C
டிசம்பர் 23
D
டிசம்பர் 24
Question 46 Explanation: 
 இந்தியாவின் புகழ்பெற்ற கணிதவியலாளரான ஸ்ரீனிவாச ராமானுஜன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் 22 அன்று தேசிய கணித நாள் கொண்டாடப்படுகிறது.  இராமானுஜத்தின் 125வது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் இராமனுஜரின் பிறந்தநாளானது தேசிய கணித நாளாக நிறுவப்பட்டது. மேலும் 2012ம் ஆண்டு தேசிய கணித ஆண்டாகவும் அறிவிக்கப்பட்டது. 1918ல் ராமானுஜன் லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினரானார் (FRS பட்டம்). 1920 ஏப்ரல் 6 அன்று காலமானார்.
Question 47
தேசிய விவசாயிகள் நாள், இந்தியாவில் எந்தத் தேதியில் கொண்டாடப்படுகிறது?
A
டிசம்பர் 21
B
டிசம்பர் 22
C
டிசம்பர் 23
D
டிசம்பர் 24
Question 47 Explanation: 
 ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23ம் தேதி ‘தேசிய விவசாயிகள் நாளாக’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பிறந்தநாளே கடந்த 16 ஆண்டுகளாக விவசாயிகள் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.  பல்வேறு நெருக்கடியான அரசியல் சூழல்களுக்கிடையே 1979 ஜூலையில், இந்தியாவின் 5வது பிரதமராக பதவியேற்றார் சவுத்ரி சரண் சிங். பின்னர் 1980 ஜனவரி 14 வரை 7 மாதங்கள் ஆட்சியிலிருந்த சரண் சிங் ‘ஜமீன்தாரி ஒழிப்புமுறை’ சட்டத்தை கொண்டு வந்தார்.  அவருடைய ஆட்சியின்போதே விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக ‘வேளாண் விளைபொருள் சந்தை மசோதா’வையும் அறிமுகப்படுத்தினார். இதுதான் அவர் ஆட்சியின்போது விவசாயிகளின் நலன்களுக்காக கொண்டுவரப்பட்ட முக்கிய அம்சங்கள்.
Question 48
இமாச்சலப்பிரதேசத்தின் புதிய முதல்வர் யார்?
A
[சுரேஷ் பரத்வாஜ் / Suresh Bharadwaj]
B
[மஹேந்தர் சிங் / Mahender Singh]
C
[ஜெய்ராம் தாகூர் / Jairam Thakur]
D
[நீரஜ் நய்யர் / Neeraj Nayyar]
Question 48 Explanation: 
 இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் ஆண்ட காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து பாஜக வெற்றிபெற்றுள்ளது. 68 சீட்டுகள் கொண்ட சட்டசபையில் 44 சீட்டுகளை பாஜகவும், 21 சீட்டுகளை காங்கிரசம் பெற்றன. இதையடுத்து புதிய முதல்வரை தேர்வுசெய்வதற்கான கூட்டம் கூடியது. அதில் பாஜக மூத்த தலைவர் ஜெய்ராம் தாகூர் தேர்வுசெய்யப்பட்டார்.  அவர் சட்டசபைக்கு 5வது முறையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மண்டி மாவட்டத்தில் உள்ள செராஜ் சட்டமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தாகூர், டிசம்பர் 27 அன்று மாநிலத்தின் 13வது முதல்வராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்கிறார்.
Question 49
BCCI-ன் புதிய பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
[சபா கரீம் / Saba Karim]
B
[ஸ்ரீதர் / MV Sridhar]
C
[கபில் தேவ் / Kapil Dev]
D
[திலிப் சர்தேசாய் / Dilip Sardesai]
Question 49 Explanation: 
 BCCI-ன் கிரிக்கெட் செயல்பாடுகளுக்கான பொது மேலாளராக, இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரீம் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அந்தப்பதவியில் இருந்த M.V. ஸ்ரீதர், இரட்டைப்பதவி விவகாரம் காரணமாக செப்டம்பர் மாதத்தில் ராஜினாமா செய்தார்.  ஜனவரி 1 அன்று பொறுப்பேற்றுக்கொள்ளும் சபா கரீம், தனது பணிகள் தொடர்பான அறிக்கைகளை BCCI தலைமை நிர்வாக அலுவலர் ராகுல் ஜோரியிடம் அளிப்பார். கிரிக்கெட் துறைக்கான வியூகங்கள் வகுப்பது, செயல்திட்டங்களை அமலாக்கம் செய்வது, விதிகள் பின்பற்றப்படுவதை கண்காணிப்பது, மைதானங்களின் தரத்தை கட்டுப்பாட்டில் வைப்பது உள்ளிட்டவை சபா கரீமின் முக்கியமான பணிகளில் சிலவாகும்.
Question 50
எந்த நாட்டில், உலகின் மிகவுயரமான மற்றும் நீளமான கண்ணாடிப்பாலம் திறக்கப்படுள்ளது?
A
[சீனா / China]
B
[வட கொரியா / North Korea]
C
[தென் கொரியா / South Korea]
D
[ஜப்பான் / Japan]
Question 50 Explanation: 
 உலகின் மிகவுயரமான மற்றும் நீளமான கண்ணாடிப்பாலம் சீனாவின் ஷிஜியாஷுவாங்கில் திறக்கப்பட்டுள்ளது. இப்பாலமானது 488 மீ., நீளமும் 2 மீ., அகலமும் உள்ளது. இது பிங்ஷான் கவுண்டியில் உள்ள ஹாங்யகு பகுதியில் இரண்டு செங்குத்தான பாறைகளுக்கிடையேயான பள்ளத்தாக்கின் மேல் 218 மீ., உயரத்தில் அமைந்துள்ளது.  இப்பாலம், 1,077 ஒளிபுகும் கண்ணாடியாலானது. ஒவ்வொரு கண்ணாடியும் 4 செ.மீ., தடிமனுடையது. இப்பாலத்தின் மொத்த எடை 70 மெட்ரிக் டன்களாகும்.  பார்வையாளர்கள் இப்பாலத்தின் மையத்தை அடையும்போது, லேசாக ஆடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தில், 2,000 மக்கள் வரை ஒரே நேரத்தில் செல்ல முடியும். எனினும், 500 பேர் வரை மட்டுமே தற்போது அனுமதிக்கப்படுகிறது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!