Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
General Tamil

General Tamil Model Question Paper 31

General Tamil Model Question Paper 31

General Tamil Model Question Paper 31: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

1. ‘தமிழுக்குக் கதி’ – என்று பெரியோர்களால் போற்றப்பட்ட நூல்கள்

அ) கம்பராமாயணம், திருக்குறள்

ஆ) திருக்குறள், திரிகடுகம்

இ) திருக்குறள், திருவள்ளுவமாலை

ஈ) சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி

விடை: அ) கம்பராமாயணம், திருக்குறள்

விளக்கம்:

“தமிழுக்குக் கதி” என்று போற்றப்படும் நூல்கள், க – கம்பராமாயணம், தி – திருக்குறள்.

இக்கூற்றினைக் கூறியவர் தமிழ்த்தொண்டாற்றிய செல்வ கேசவராய முதலியார் ஆவார்.

2. தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க.

அ) பைங்கூழ் = பசுமை + கூழ்

ஆ) சிற்றோடை = சிறுமை + ஓடை

இ) சேதாம்பல் = சேது + ஆம்பல்

ஈ) மரவடி = மரம் + அடி

விடை:

விளக்கம்:

பைங்கூழ் = பசுமை + கூழ்

இது பண்புப்பெயர் புணர்ச்சி ஆகும்.

i) ‘ஈறுபோதல்’ விதிப்படி ‘மை’ விகுதி கெட்டு பசு + கூழ் என்றானது.

ii) ‘அடியகரம் ஐயாதல்’ விதிப்படி ‘பைசு+கூழ்’ என்றானது.

iii) ‘இணையவும்’ என்ற விதிப்படி இடையுகரம் ‘ச’கரத்தோடு கெட்டு பை+கூழ் என்றானது.

iv) ‘இனம் மிகல்’ விதிப்படி ‘க’விற்கு இனமான ‘ங்’ தோன்றி பைங்கூழ் என்றானது.

சிற்றோடை – சிறுமை +ஓடை.

இது ‘பண்புப்பெயர் புணர்ச்சி’ மற்றும் ‘குற்றியலுகரப் புணர்ச்சி’ ஆகும்.

i) ‘ஈறுபோதல்’ விதிப்படி சிறு + ஓடை என்றானது.

ii) தன்னொற்றிரட்டல் விதிப்படி சிற்று + ஓடை என்றானது.

iii) உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் என்ற விதிப்படி சிற்ற்+ஓடை என்றானது.

iv) ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்ற விதிப்படி ‘சிற்றோடை’ என்றானது.

சேதாம்பல் = சேது + ஆம்பல்

இது ‘குற்றியலுகரப் புணர்ச்சி’ ஆகும்.

i) ‘உயிர்வரின் உக்குறல் மெய் விட்டோடும்’ என்ற விதிப்படி சேத் + ஆம்பல் என்றானது.

ii) ‘உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்ற விதிப்படி சேதாம்பல் என்றானது.

மரவடி = மரம் + அடி

இது மகர ஈற்றுப் புணர்ச்சி ஆகும்.

i) ‘மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்’ என்ற விதிப்படி மகர ஈறு கெட்டு மர + அடி என்றானது.

ii) ‘இஈ ஐவழி யவ்வும் ஏனை உயிர்வழி வவ்வும்’ என்ற விதிப்படி மர + அடி என்பதில் உள்ள உயிர் + உயிர் (ர – ர்+அ+அ) ஆகியவற்றை இணைக்க வகரம் தோன்று மர +வ்+அடி என்றானது.

iii) ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்ற விதிப்படி ‘மாவடி’ என்றானது. எனவே வினாவில் கொடுக்கப்பட்டுள்ள நான்கு தெரிவுகளுமே சரியானவை ஆகும்.

3. தமக்குரியர் – பிரித்து எழுதுக.

அ) தமக்கு + உரியர்

ஆ) தம + உரியர்

இ) தமக்கு + குரியர்

ஈ) தமக் + உரியர்

விடை: அ) தமக்கு + உரியர்

விளக்கம் :

தமக்குரியர் – தமக்கு + உரியர். இது குற்றியலுகரப் புணர்ச்சி ஆகும்.

i) ‘உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ என்ற விதிப்படி தமக்க்+உரியர் என்றானது.

ii) ‘உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே’ என்ற விதிப்படி ‘தமக்குரியர்’ என்றானது.

4. சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.

அ) இசை தமிழில் வழி நாடகத் தமிழிற்கு இயக்கமில்லை.

ஆ) இசை தமிழில் வழி நாடக தமிழிற்கு இயக்கமில்லை.

இ) இசைத் தமிழில் வழி நாடகதமிழிற்கு இயக்கமில்லை.

ஈ) இசைத் தமிழில் வழி நடகத்தமிழிற்கு இயக்கமில்லை.

விடை: ஈ) இசைத் தமிழில் வழி நடகத்தமிழிற்கு இயக்கமில்லை.

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

5. பொருத்துக.

a) உருபன் 1. Excavation

b) ஒலியன் 2. Phoneme

c) அகழாய்வு 3. Epigraphy

d) கல்வெட்டியல் 4. Morpheme

குறியீடுகள்

a b c d

அ) 4 3 2 1

ஆ) 3 4 1 2

இ) 2 1 4 3

ஈ) 4 2 1 3

விடை: ஈ) 4 2 1 3

6. ஒலி வேறுபாடறிந்து பொருத்துக.

a) களை 1. விலங்கு

b) கழை 2. தழைத்தல்

c) தளை 3. மூங்கில்

d) தழை 4. நீக்கு

குறியீடுகள்

a b c d

அ) 4 3 1 2

ஆ) 3 4 1 2

இ) 4 1 3 2

ஈ) 1 3 4 2

விடை : அ) 4 3 1 2

விளக்கம்:

ஒலி வேறுபாடுகள்

கலை – ஆண்மான், சந்திரன், கல்வி, கலைத்தல்

கழை – மூங்கில், கரும்பு

களை – அழகு, புல்பூண்டு, அயர்வு

தலை – சிரம்

தளை – விலங்கு, கட்டு

தழை – தாவர உறுப்புகள், தழைத்தல்

7. அவன் நல்லவன் – எவ்வகைப்பெயர்?

அ) இடப்பெயர்

ஆ) காலப்பெயர்

இ) குணப்பெயர்

ஈ) தொழிற்பெயர்

விடை: இ) குணப்பெயர்

8. கதிர்வேல் வெற்றிலை தின்றான் என்பது

அ) இனங்குறித்தல்

ஆ) வெளிப்படைச் சொற்கள்

இ) குறிப்புச் சொற்கள்

ஈ) வெளிகுறிப்புச் சொற்கள்

விடை: அ) இனங்குறித்தல்

விளக்கம் :

இனங்குறித்தல்

ஒரு சொல் , தன் பொருளையும் தனக்கு இனமான பொருள்களையும் குறித்து வருவது ‘இனங்குத்தல்’ ஆகும்.

(எ.கா) கதிர்வேல் வெற்றிலை தின்றான்.

இத்தொடரில் வெற்றிலை என்பது அதற்கு இனமான பாக்கு , சுண்ணாம்பு ஆகியவற்றைடும் குறிக்கிறது.

9. பொருந்தாத இலக்கணக்குறிப்பைக் கண்டறிக.

அ) தடக்கை – உரிச்சொற்றொடர்

ஆ) நின்னகர் – ஆறாம் வேற்றுமைத் தொகை

இ) மடக்கொடி – வினைத்தொகை

ஈ) வாழ்தல் – தொழிற்பெயர்

விடை: இ) மடக்கொடி – வினைத்தொகை

விளக்கம் :

மடக்கொடி – அன்மொழித்தொகை.

10. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது

அ) பகுபதம்

ஆ) தனி மொழி

இ) தொடர் மொழி

ஈ) ஓரெழுத்து ஒரு மொழி

விடை: ஆ) தனி மொழி

விளக்கம்:

பகுபதம் : சொற்களானது பிரிக்கக்கூடிய வகையில் அமைந்திருந்தால் அது பகுபதம் ஆகும்.

(எ.கா) படித்தான் – படி + த் + த் + ஆன்.

நடந்தது – நட + த் (ந்) + த்+அ+து

தனிமொழி : ஒரு சொல் தனித்து நின்று பொருளை உணர்த்துவது தனிமொழி ஆகும். (எ.கா) வா, போ, தேன்., நிலம், மான்.

தொடர்மொழி : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வந்து பொருளை உணர்த்துவது தொடர்மொழி ஆகும்.

(எ.கா) கடமை செய், அறநூல் படி, ஆறுதல் கூறு, நிலம் வலிது.

ஓரெழுத்து ஒரு மொழி : தமிழில் உள்ள 247 எழுத்துகளில் 42 எழுத்துகளுக்கு தனியே பொருள் உண்டு.

(எ.கா) ஆ – பசு, கோ – மன்னன், ஐ – தலைவன்.

ஏ – அம்பு, வீ – மலர், சோ – மதில், நகர்.

11. சேவல் என்பதன் எதிர்ப்பால் பெயரென்ன?

அ) கோழி

ஆ) பேடு

இ) குட்டி

ஈ) கன்று

விடை: *

விளக்கம்:

கோழி என்பது பொதுப்பெயராகும்.

ஆண்பால் கோழி – சேவல்

பெண்பால் கோழி – பேடை, பெட்டை

ஆண்பால் கோழியை சேவற்கோழி என்றும் பெண்பால் கோழியை பெட்டைக் கோழி என்றும் குறிப்பிடுவது வழக்கம்.

கோட்டான், கோழி, மயில் ஆகிய பறவைகளின் பெண்பால் ‘அளகு’ என்று குறிப்பிடப்படுகிறது.

12. எல்லா அடிகளும் அளவடியாய் வரும் ஆசிரியப்பாவின் வகை எது?

அ) நேரிசை ஆசிரியப்பா

ஆ) இணைக்குறள் ஆசிரியப்பா

இ) நிலை மண்டல ஆசிரியப்பா

ஈ) அடிமறிமண்டல ஆசிரியப்பா

விடை : இ) நிலை மண்டல ஆசிரியப்பா

விளக்கம்:

 

 

ஆசிரியப்பாவின் வகை விளக்கம் எடுத்துக்காட்டு
நேரிசை ஆசிரியப்பா ஈற்றயலடி முச்சீராகவும் பிற அடிகள் நாற்சீராகவும் வரும் பாரி பாரி என்றுபல ஏத்தி

ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்

பாரி ஒருவனு மல்லன்

மாரியும் உண்டீன் டுலகு புறப்பதுவே

இணைக்குறள் ஆசிரியப்பா முதலடியும் கடைசி அடியும் நாற்சீர் அடிகளாகவும், இடையில் உள்ள அடிகள், இருசீர் அடிகளாகவும் முச்சீர் அடிகளாகவும் வரும். நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்

சாரச் சார்ந்து

தீரத் தீரும்

சாரல் நாடன் கேண்மை

சாரச் சாரச் சார்ந்து

தீரத் தீரத் தீர்பொல் லாதே

நிலைமண்டில ஆசிரியப்பா எல்லா அடிகளும் நாற்சீராக (அளவடி) வரும் நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

அதனால் யானுயிர் என்ப தறிகை

வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே

அடிமறிமண்டில ஆசிரியப்பா எல்லா அடிகளையும் முன்பின்னாக மாற்றி மாற்றிப் படித்தாலும் ஓசையும் பொருளும் மாறாது வரும். சூரக் பம்பிய சிறுகான் யாறே

சூரா மகளிர் ஆரணங் கினடே

வாரல் எனினே யானஞ் சுவலே

சாரல் நாட நீவர லாறே

13. மோனை வகையைக் கண்டுபிடி.

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்

வானம் வழங்கா தெனின்.

அ) முற்று மோனை

ஆ) கூழை மோனை

இ) இணை மோனை

ஈ) ஒரூஉ மோனை

விடை: ஆ) கூழை மோனை

விளக்கம் :

முதற்சீரில் வந்த முதல் எழுத்தே அடுத்தடுத்த சீர்களில் ஒன்றி வருவது மோனைத் தொடையாகும். முதல், இரண்டு, மூன்றாம் சீர்களில் முதல் எழுத்து ஒன்றி வருவது கூழை மோனையாகும்.

தானம் வமிரண்டும் ங்கா வியனுலகம்

வானம் வழங்கா தெனின்.

14. பொருளறிந்து பொருத்துக.

a) ஒல்காமை 1. சிறப்பு

b) விழுமம் 2. வலியர்

c) திண்ணியர் 3. துன்பம்

d) வீறு 4. தளராமை

a b c d

அ) 4 3 2 1

ஆ) 1 3 4 2

இ) 2 3 1 4

ஈ) 1 2 3 4

விடை: அ) 4 3 2 1

15. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண் – இக்குறட்பாவில் அற்றம் என்பதன் பொருள் யாது?

அ) இறுதி

ஆ) அழிவு

இ) உண்மை

ஈ) ஒழுகுவது

விடை: ஆ) அழிவு

திருக்குறள் – அறிவுடைமை

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண் – குறள்: 421

பொருள்: அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும். அன்றி பகை கொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத கோட்டையாகும்.

16. ‘கற்பெனும் பெயர தொன்றும் களிநடம் புரியக் கண்டேன்’ இப்பாடலடி யாரைக் குறிக்கின்றது?

அ) கண்ணகி

ஆ) சீதை

இ) பாஞ்சாலி

ஈ) குந்தி

விடை: ஆ) சீதை

விளக்கம்:

கம்பராமாயணம் – சுந்தர காண்டம்

இலங்கையில் சீதையைப் பார்த்து வந்த அனுமன் சீதாப்பிராட்சி எப்படியிருந்தார் என்று இராமனிடம் கூறும் கூற்று,

“இப்பிறப் பென்ப தொன்றும் இரும்பொறை யென்ப தொன்றும்

கற்பெனும் பெயர தொன்றும் களிநடம் புரியக் கண்டேன்” – கம்பர்

பொருள்: “உயர்குடியில் பிறத்தல் என்ற குணமும், சிறந்த பொறுமை என்பதாகிய குணமும், கற்பு என்னும் பெயரும் உடைய குணமும் ஒருங்கே கூடி களிப்போடு கூடி நடனம் புரிதலை சீதாப் பிராட்டியிடம் கண்டேன்”

17. குறிப்பினால் உணரும் கொள்கையான் யார்?

அ) அனுமன்

ஆ) இராவணன்

இ) வீடணன்

ஈ) இராமன்

விடை: ஈ) இராமன்

விளக்கம்:

கம்பராமாயணம் – சுந்தர காண்டம்

திண்டிறல் அவன்செயல் தெரிய நோக்கினான்

வண்டுறை ஓதியும் வலியள் : மற்றிவன்

கண்டதும் உண்டு: அவள் கற்பும் நன்றெனாக்

கொண்டனன். குறிப்பினால் உணரும் கொள்கையான் – கம்பர்

பொருள்: பிறர் உடல் உறுப்புகளின் குறிப்பினைக் கொண்டே நிகழ்ந்ததை அறியக் கூடிய ஆற்றல் படைத்த இராமன். அனுமனின் செய்கைகளைக் கண்டி, சீதை நலத்துடன் இருக்கிறாள்; இவன் அவனைக் கண்டதுண்டு; அவள் கற்புநிலை தவறாது இருக்கிறாள் என்பதை யூகித்துக் கொண்டான்.

18. ‘தண்டுடைக் கையர் வெண்டலைத் சிதவலர்’ என்ற தொடரில் சிதவலர் என்பதன் பொருள் யாது?

அ) ஊன்றுகோல் உடையவர்

ஆ) தலைப்பாகை கட்டியர்

இ) வலிமை மிக்கவர்

ஈ) முயற்சி அற்றவர்

விடை: ஆ) தலைப்பாகை கட்டியர்

விளக்கம்:

குறுந்தொகை

அம்ம வாழி தோழி நம்மூர்ப்

பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ

தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்

நன்றுநன் என்னும் மாக்களோடு

இன்று பெரிது என்னும் ஆங்கண தவையே – வெள்ளிவீதியார்

பொருள்: ஊர்மக்கள் அவையின் முன்பு பலமுறை தலைவனின் பரிசுப் பொருள்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இன்றோ தலைப்பாகை அணிந்து கையில் தண்டுடன் இருக்கும் முதியவர்கள் மூலமாகத் தலைவன் போதுமென்று சொல்லத்தக்க அளவு பரிசுப் பொருள்களைக் கொண்டு வந்து அவைமுன்பு வைத்துள்ளான். அவையில் இருந்த தலையின் உறவினரும் அவற்றைக் கண்டு, “நன்று நன்று” எனக் கூறி மகிழ்ந்தனர். இக்காட்சியைக் கண்ட தலைவு, “அடி தோழி! நம்முடைய ஊரில் முன்பெல்லாம் பரிசுத்தொகை போதவில்லை என்பதற்காகப் பிரித்துவிடப்பட்ட தலைவன் தலைவியரைப் போதிய பரிசுத்தொகைக் கிடைத்தவுடன் சேர்த்து வைப்போர் இருந்தனரா?” என்று வினவுகிறாள்.

19. நற்றிணை – தொகுப்பித்தவர் யார்?

அ) பன்னாடு தந்த மாறன் வழுதி

ஆ) உக்கிரப்பெருவழுதி

இ) இளம்பெருவழுதி

ஈ) மாறன் வழுதி

விடை: அ) பன்னாடு தந்த மாறன் வழுதி

விளக்கம்

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணையை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி ஆவார். அகநானூற்றைத் தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி ஆவார்.

20. பொருத்துக.

a) செறு 1. பனையோலைப் பெட்டி

b) வித்து 2. புதுவருவாய்

c) யாணர் 3. விதை

d) வட்டி 4. வயல்

குறியீடுகள்

a b c d

அ) 1 2 3 4

ஆ) 4 3 2 1

இ) 1 3 2 4

ஈ) 4 2 3 1

விடை: ஆ) 4 3 2 1

விளக்கம்:

நற்றிணை

அரிகால் மாறிய அங்கண் அகல்வால்

மறுகால் உழுத ஈரச் செறுவின்

வித்தோடு சென்ற வட்டி பற்பல

மீனோடு பெயரும் யாணர் ஊர. – மிளைகிழான் நல்வேட்டனார்

பொருள்: உழவர் நெற்கதிர்களை அறுவடை செய்த பின்னர் அகன்ற அழகிய வயலை மறுபடியும் பயிர் செய்ய உழுதனர். பனையோலைப் பெட்டியில் விதைகொண்டு சென்று ஈரமுள்ள அந்நிலத்தில் விதைத்தனர். பின்னர் அங்குள்ள நீர்நிலைகளில் பல்வகை மீன்களைப் பிடித்து அப்பெட்டியில் கொண்டு வருகின்ற புதுவருவாயினை உடைய மருதநிலத் தலைவனே!

21. ‘மணநூல்’ என்று அழைக்கப்படும் நூல்

அ) குண்டலகேசி

ஆ) சிலப்பதிகாரம்

இ) சீவகசிந்தாமணி

ஈ) மணிமேகலை

விடை: ஆ) சிலப்பதிகாரம்

விளக்கம்:

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீவகசிந்தாமணி ‘மணநூல்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்நூலின் தலைவனான சீவகன் எட்டுப் பெண்களை மண்ந்து இன்புற்று வாழ்ந்த மண நிகழ்ச்சிகளை சுவைபட விளக்குவதால் இது மணநூல் எனப்படுகிறது.

22. “தேவியும் ஆயமும் சித்திரா பதியும்

மாதவி மகளும் மாதவர்க் காண்டலும்” – என்ற தொடரில் ஆயம் என்பதன் பொருள் யாது?

அ) தோழியர் கூட்டம்

ஆ) பெண்டிர் – ஆடவர் கூட்டம்

இ) மழலைக் கூட்டம்

ஈ) சான்றோர்க் கூட்டம்

விடை: அ) தோழியர் கூட்டம்

விளக்கம்:

மணிமேகலை

தேவியும் ஆயமும் சித்திரா பதியும்

மாதவி மகளும் மாதவர்க் காண்டலும்

எழுந்தெதிர் சென்றாங்கு இணைவளைக் கையால்

தொழுந்தகை மாதவன் துணையடி வணங்க

அறிவுண் டாகவென் றாங்கவன் கூறலும் – சீத்தலைச் சாத்தனார்

பொருள்: அறவன அடிகளைக் கண்ட அளவில் அரசமாதேவியும் தோழியர் கூட்டமும் சித்திராபதியும் மணிமேகலையும் எழுந்து, அவர் எதிரே சென்றனர்.

வணங்கும் தகுதியுடைய அறவணரின் இருபாதத்தைத் தம் இரு கைகளாலும் தொட்டு வணங்கினர். அடிகள் ‘அறிவுண்டாகுக’ என அவர்களை வாழ்த்தினார்.

23. ‘முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து நல்லிலல் பிழந்து நடுங்குதுயர் உறுத்து …… என்ற அடிகள் அமைந்த நூல் யாது?

அ) அகநானூறு

ஆ) மணிமேகலை

இ) சிலப்பதிகாரம்

ஈ) பரிபாடல்

விடை: இ) சிலப்பதிகாரம்

விளக்கம்:

சிலப்பதிகாரம் – காடுகாண் காதை

முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

நல்லியல் பிழந்து நடுங்குதுயருத்துப்

பாலை யென்பதோர் படிவங் கொள்ளும் – இளங்கோவடிகள்

பொருள்: முல்லை, கூறிஞ்சி என்னும் இரு திணைகளும் முறைமை திரிந்து, நல் இயல்புகளை இழந்து, தம்மைச் சேர்ந்தோரை நடுங்குவண்ணம் துன்பத்தைத் தரும் பாலை என்ற வடிவம் கொள்ளும்.

24. “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” – என்ற தொடரைப் பாடியவர் யார்?

அ) கவிமணி தேசிக விநாயகம்

ஆ) மகாகவி பாரதியார்

இ) பாவேந்தர் பாரதிதாசன்

ஈ) நாமக்கல் கவிஞர்

விடை: ஆ) மகாகவி பாரதியார்

25. ‘ஜோசப்’ என்னும் பெயரின் தமிழாக்கம்

அ) வளன்

ஆ) சூசை

இ) கொன்ஸ்டான்

ஈ) தைரியநாதசாமி

விடை: அ) வளன்

விளக்கம்:

வீரமாமுனிவர் இயற்றிய தேம்பாவணி என்ற நூலின் காப்பியத் தலைவன் வளன், தாவீது மன்ன்னின் அரசமரபில் தோன்றிய வரலாற்றை இந்நூலில் கூறப்பட்டுள்ளது. யோசேப்பு, சூசை என்றும் ஒலிபெயர்க்கப்பட்ட ஜோசப் என்னும் பெயரை வீரமாமுனிவர் ‘வளன்’ என்று தமிழ்ப்படுத்தியுள்ளார். வளங்களை வளர்ச் செய்பவன் என்ற பொருளில் ஜோசப் என்ற பெயர் எபிரேய மொழியில் வழங்கப்படுகிறது. அதன் நேரிய மொழிபெயர்ப்பாகவே ‘வளன்’ என்று வீரமாமுனிவர் மொழிபெயர்த்துள்ளார்.

26. போலிப் புலவர்கள் கூட்டம் பெருகாமல் தலையை வெட்டியப் புலவர் யார்?

அ) ஒட்டக்கூத்தர்

ஆ) வில்லிப்புத்தூரார்

இ) அதிவீரராமபாண்டியன்

ஈ) தொல்காப்பியர்

விடை: அ) ஒட்டக்கூத்தர்

விளக்கம்:

தமிழ்விடுதூது

பாத்தனதாக் கொண்ட பிள்ளைப் பாண்டியன் வில்லி ஒட்டக்

கூத்தனிவர் கல்லாது கோட்டிகொளும் – சீத்தயரைக்

குட்டிச் செவியறுத்துக் கூட்டித் தலைகளெல்லாம்

வெட்டிக் களைபறிக்க மேலாய்த்தூர் – கட்டி

வளர்ந்தனை ….

பொருள்: “பயிர்களிடையே வளரும் களைகள் போன்ற போலிப் புலவர்கள் கூட்டம் பெருகாமல் குட்டுவதற்கு அதிவீரராம பாண்டியனும், செவியை அறுப்பதற்கு வில்லிபுத்தூரானும், தலையை வெட்டுவதற்கு ஒட்டக்கூத்தனும் இருந்ததால், தமிழே நீ கிளைத்துச் செழித்து வளர்ந்தாய்”.

27. தொல்காப்பியம் குறிப்பிடும் புலன் என்னும் இலக்கிய வகை நூல்

அ) கலம்பகம்

ஆ) உலா

இ) அந்தாதி

ஈ) பள்ளு

விடை: ஈ) பள்ளு

விளக்கம்:

பள்ளு

இவ்விலக்கியம் மருத நிலத்தை மையமாகக் கொண்டது. ‘பள்’ என்பது பள்ளமான நன்செய் நிலங்களையும் அங்கு நடைபெறும் உழவினையும் குறிக்கும். இது சிற்றியக்கியங்களுள் ஒன்றாகும்.

“சேரி மொழியாற் செவ்விதற் கிளந்து

தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்

புலனென மொழிப் புலனுணர்ந்தோரோ” – தொல்காப்பியம்

தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டு வகைப் பிரிவுகளில் ஒன்றான ‘புலன்’ என்னும் இலக்கிய வகை ‘பள்ளு’ வகை இலக்கியத்திற்குப் பொருந்தும் என்பர்.

28. ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும், பெண்பால் பிள்ளை தமிழுக்கும் பொதுவான பருவங்கள்

அ) 7

ஆ) 6

இ) 8

ஈ) 9

விடை: அ) 7

விளக்கம்:

ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான ஏழு பருவங்கள்,

1. காப்பு 2. செங்கீரை 3. தாலாட்டு 4. சப்பாணி 5. முத்தம் 6. வருகை 7. அம்புலி.

ஆண்பால் பிள்ளைத் தமிழுக்குரிய இறுதி மூன்று பருவங்கள்,

1. சிற்றில் 2. சிறுபறை 3. சிறுதேர்

பெண்பால் பிள்ளைத் தமிழுக்குரிய இறுதி மூன்று பருவங்கள்,

1. கழங்கு (நீராடல்) 2. அம்மானை 3. ஊசல்.

29. பொருத்துக.

a) சரதம் 1. தூய்மை

b) பவித்திரம் 2. அரசன்

c) பெருமாள் 3. கடல்

d) மகோததி 4. வாய்மை

குறியீடுகள்

a b c d

அ) 4 1 2 3

ஆ) 1 4 2 3

இ) 2 3 4 1

ஈ) 1 2 3 4

விடை: அ) 4 1 2 3

விளக்கம்

இராசராச சோழனுலா

சரதப் பவித்ர விசயம் படைப்பரசு ராமன்

கவித்த வபிடேகங் காணீர்

பொருள்: வாய்மை, தூய்மை வெற்றி ஆகியவற்றை உடைய படையாகிய மழுவாயுதத்தைக் கைக் கொண்ட இராசராசனின் மகுடத்தைப் பாரீர்!

கூடற் பெரும்பெருமா ளெவ்வேந்து முன்போதப் பின்பு

வரும் பெருமாள் வந்தனன் பாரீர்.

பொருள்: காவிரிப்பூம்பட்டினத்தை ஆளும் பெரிய பெருமாளாகிய இராசராசசோழன், அனைத்துச் சிற்றரசர்களும் முன்பு செல்லப் பின்வரும் பேரரசனாய் வருவதைப் பாரீர்.

முற்கோலி வட்ட மகோததி வேவ வொருவாளி

விட்ட திருக்கொற்ற விற்காணீர்

பொருள்: உலகை வட்டமாய்ச் சூழ்ந்துள்ள பெருங்கடல் காய்ந்து வற்றுமாறு, முன்பு வளைத்து ஓர் அம்பினை விடுத்த சிறந்த வெற்றிபொருந்திய வில்லினைப் பாரீர்.

30. தாயுமானவர் பிறந்த ஊர்

அ) திருச்சிராப்பள்ளி

ஆ) திருச்செந்தூர்

இ) திருமறைக்காடு

ஈ) திருத்தணி

விடை: இ) திருமறைக்காடு

விளக்கம்

தாயுமானவரின் காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டு ஆகும். இவர் பிறந்த ஊர் திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகும். இவர் திருமூலர் மரபில் வந்த மௌனகுரு ஆவார்.

31. மனுமுறை கண்ட வாசகம் என்ற நூலை எழுதியவர்

அ) இராமலிங்க அடிகளார்

ஆ) நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்

இ) கவிஞரேறு வாணிதாசன்

ஈ) உவமைக் கவிஞர் சுரதா

விடை: அ) இராமலிங்க அடிகளார்

விளக்கம்

இராமலிங்க அடிகளார் இயற்றிய பாடல்கள் ‘திருவருட்பா’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய உரைநடை நூல்கள்,

1. மனுமுறை கண்ட வாசகம் 2. ஜீவகாருண்ய ஒழுக்கம்

32. ‘தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறுற் துறைதோறுற் துடித்தெழுந்தே’ – என்று தமிழர்களைத் தட்டி எழுப்பியவர் யார்?

அ) பாரதியார்

ஆ) திரு.வி.க.

இ) கவிமணி

ஈ) பாரதிதாசன்

விடை: ஈ) பாரதிதாசன்

33. தமிழன் என்றோர் இனமுண்டு

தனியே அவற்கொரு குணமுண்டு – என்று பாடியவர் யார்?

அ) பாரதியார்

ஆ) கவிமணி

இ) சுரதா

ஈ) நாமக்கல் கவிஞர்

விடை: ஈ) நாமக்கல் கவிஞர்

34. “சுதந்திர தாகம்” என்னும் புதினத்திற்கு 2001-ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?

அ) சி.சு.செல்லப்பா

ஆ) நா.பிச்சமுத்து

இ) சி.மணி

ஈ) ஆர். மீனாட்சி

விடை: அ) சி.சு.செல்லப்பா

விளக்கம்

சின்னமனூர் சுப்பிரமணியன் செல்லப்பா என்பதன் சுருக்கமே சி.சு.செல்லப்பா ஆகும். ‘எழுத்து’ என்ற பத்திரிகையை நடத்திவந்தார். விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்று வந்துள்ள இவர் ‘சுதந்திர தாகம்’ என்ற புதினத்திற்காக 2001-இல் சாகித்ய அகாதெமி விருதினைப் பெற்றுள்ளார்.

35. ‘உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம்’ தோன்றக் காரணமாக இருந்தவர் யார்?

அ) சாலை இளந்திரையன்

ஆ) பெருஞ்சித்திரனார்

இ) திரு.வி.க.

ஈ) மறைமலையடிகள்

விளக்கம்

தில்லி பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பணியாற்றி, பின்னர் தமிழ்த்துறை தலைவரானவர் சாலை. இளந்திரையன் ஆவார். உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், தில்லி தமிழ் எழுத்தாளர் சங்கம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ஆகியவை தோன்றுவதற்கு இவர் காரணமாக இருந்தார்.

36. வரதநஞ்சையப் பிள்ளை தான் இயற்றிய ‘தமிழரசி குறவஞ்சி’ என்ற நூலை எங்கு அரங்கேற்றினார்?

அ) தமிழ்ச்சங்கம் தஞ்சை

ஆ) கரந்தை தமிழ்ச்சங்கம்

இ) மதுரை தமிழ்ச்சங்கம்

ஈ) சென்னை பல்கலைக்கழகம்

விடை: ஆ) கரந்தை தமிழ்ச்சங்கம்

விளக்கம்

அ. வரதநஞ்சையப் பிள்ளை அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் ‘ஆசிரியர்’ பட்டம் பெற்றவர். தமிழ்வேள் உமா மகேசுவரனார் இவரிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இவர் “தமிழரசி குறவஞ்சி” என்ற நூலை இயற்றினார். இந்நூலைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் வெள்ளி விழாவின் போது ஞானியாரடிகள் தலைமையில் அரங்கேற்றினார்.

37. சிறை தண்டனைக்காக நீ வருந்துகிறாயா? என வள்ளியம்மையிடம் கேட்டவர் யார்?

அ) காந்தியடிகள்

ஆ) இராமலிங்க அடிகள்

இ) பட்டினத்தடிகள்

ஈ) இளங்கோவடிகள்

விடை: அ) காந்தியடிகள்

விளக்கம்:

தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் வாழ்வுரிமையை மீட்க காந்தியடிகள் நடத்திய அறப் போராட்டத்தில் தில்லையாடி வள்ளியம்மை கலந்து கொண்டு சிறை சென்றார். அங்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் உயிருக்குப் போராடிய வள்ளியம்மை விடுதலை செய்யப்பட்டார். விடுதலையடைந்த வள்ளியம்மை மரணப் படுக்கையில் இருந்தபோது அவரைச் சந்திக்கச் சென்ற காந்தியடிகள் வள்ளியம்மையிடம், “சிறைத் தண்டனைக்காக நீ வருந்துகிறாயா?” எனக் கேட்டார். அதற்கு வள்ளியம்மை. “இல்லையில்லை மீண்டும் சிறை செல்வதற்குத் தயாராக உள்ளேன். இந்தியர்களுக்காக எத்தகு இன்னல்களையும் ஏற்பேன். என் இன்னுயிரையும் தருவேன்” என்று கூறினார்.

39. ஓவியக்கலை எந்த நூற்றாண்டில் தோன்றியது?

அ) ஏறக்குறைய கி.பி. 7-ஆம் நூற்றாண்டு

ஆ) ஏறக்குறைய கி.பி. 11-ஆம் நூற்றாண்டு

இ) ஏறக்குறைய கி.பி. 18-ஆம் நூற்றாண்டு

ஈ) ஏறக்குறைய கி.பி. 10-ஆம் நூற்றாண்டு

விடை:

விளக்கம்

சங்ககாலம் கி.மு. 250-க்கும் கி.பி. 300-க்கும் இடைப்பட்ட காலம் ஆகும். சங்க காலத்திலேயே ஓவியக் கலை மிகவும் செழித்திருந்தது. சங்கத்தொகை நூல்களுள் ஒன்றான நெடுநல்வாடையில் ஆடு முதலான 12 இராசிகளையும் விண்மீன்களையும் வரைந்த செய்தி கூறப்பட்டுள்ளது. கி.பி. 2-ஆம் நூற்றாண்டைச் சிலப்பதிகாரத்தில் ஓவியங்கள் குறித்து அதிகமாகவே கூறப்பட்டுள்ளன.

எட்டுத்தொகையுள் ஒன்றான புறநானூற்றில் “ஓவத்தனைய இடனுடை வனப்பு” என்று வீட்டின் அழகை ஓவியத்திற்கு ஒப்புமையாகக் கூறப்பட்டுள்ளது.

பண்டைத் தமிழர் ஓவியங்களை ‘கண்ணெழுத்து’ என்றே கூறினார்.

சங்ககாலத்தில் செழித்திருந்த ஓவியக்கலை இடைக்காலத்தில் மறையத் தொடங்கியது. பின்னர் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் காலத்தில் ஓவியக்கலை மீண்டும் புத்துயிர் பெற்றது.

39. சலாம், சபாஷ் என்பன எம்மொழிச் சொற்கள் எனக் கண்டறிக.

அ) வடமொழிச் சொற்கள்

ஆ) கிரேக்கச் சொற்கள்

இ) உருதுச் சொற்கள்

ஈ) போர்ச்சுகீசிய சொற்கள்

விடை: இ) உருதுச் சொற்கள்

40. எது தவறானது?

அ) தமிழர் நாகரிகமும் பண்பாடும் – அ. தட்சிணாமூர்த்தி

ஆ) தமிழர் சால்பு – சு. வித்யானந்தன்

இ) தொல்லியல் நோக்கில் சங்ககாலம் – கா. இராஜன்

ஈ) தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் – க.ரத்னம்

விடை: ஈ) தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் – க.ரத்னம்

விளக்கம்:

‘தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும்’ என்ற நூலை இயற்றியவர் மா. இராசமாணிக்கனார் ஆவார்.

41. “தமிழ் பேரவைச் செம்மல்” என்னும் பட்டத்தை சி.வேங்கடசாமி நாட்டாருக்கும் வழங்கிய பல்கலைக்கழகம் எது?

அ) தஞ்சை பல்கலைக்கழகம்

ஆ) மதுரை பல்கலைக்கழகம்

இ) திருச்சி பல்கலைக்கழகம்

ஈ) திருநெல்வேலி பல்கலைக்கழகம்

விடை: ஆ) மதுரை பல்கலைக்கழகம்

42. தந்தை பெரியாரால் “வைக்கம் போர்” நடத்தப்பட்ட ஆண்டு எது?

அ) 1927

ஆ) 1930

இ) 1916

ஈ) 1924

விடை: ஈ) 1924

விளக்கம்

கேரளாவில் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய நுழைவிற்காக ‘வைக்கம்’ என்ற இடத்தில் போராடி வெற்றி பெற்றதற்காக ஈ.வெ.ரா. பெரியார் ‘வைக்கம் வீரர்’ என்று போற்றப்பட்டார். போராட்டம் நடத்தப்பட்ட ஆண்டு 1924 ஆகும்.

43. தமிழர்களிடம் இன்று பரவியுள்ள பெருநோய் ஒன்று உண்டு? அந்நோய் எது?

அ) பணக்கொடை

ஆ) குருதிக்கொடை

இ) மணக்கொடை

ஈ) ஊர்க்கொடை

விடை: இ) மணக்கொடை

விளக்கம்:

“தமிழர்களிடம் பரவியுஅ பெருநோயான மணக்கொடை (வரதட்சணை) ஒழிக்கப்பட வேண்டும்” என்று ஈ.வெ.ரா. பெரியார் கூறியுள்ளார்.

44. பொருத்துக.

a) புரம் 1. நகரம்

b) பட்டினம் 2. ஊர்

c) பாக்கம் 3. நிலம்

d) புலம் 4. சிற்றூர்

குறியீடுகள்

a b c d

அ) 2 1 4 3

ஆ) 3 4 2 1

இ) 2 3 4 1

ஈ) 2 1 3 4

விடை: அ) 2 1 4 3

விளக்கம்

‘புரம்’ என்ற சொல் சிறந்த ஊர்களைக் குறிப்பதாகும். (எ.கா) காஞ்சிபுரம், பல்லவபுரம் (பல்லாவரம்), கங்கை கொண்ட சோழபுரம், தருமபுரம்.

கடற்கரையில் உருவாகும் நகரங்கள் ‘பட்டினம்’ எனப் பெயர் பெறும். (எ.கா) காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம், சதுரங்கப்பட்டினம்.

கடற்கரையில் உள்ள சிற்றூர்கள் பாக்கம் எனப் பெயர் பெறும் . (எ.கா) பட்டினப்பாக்கம், சேப்பாக்கம்.

‘புலம்’ என்பது நிலத்தைக் குறிக்கும். (எ.கா) மாம்புலம், தாமரைப்புலம், குரவைப்புலம்.

45. ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ எனக் கூறியவர்

அ) சுரதா

ஆ) இராணி மங்கம்மாள்

இ) ஔவையார்

ஈ) திருமங்கையாழ்வார்

விடை: இ) ஔவையார்

46. நோய்க்கு முதல் காரணம்

அ) நொறுக்குத் தீனி

ஆ) உப்பு

இ) காரம்

ஈ) புளிப்பு

விடை: ஆ) உப்பு

விளக்கம்: உடல் ஆரோக்கியத்திற்குத் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருள்கள் உப்பு, கொழுப்பு, காரம், புளிப்பு உடையவை ஆகும். மேலும் சிறுதீனிகளும் தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும். நோய்க்கு முதல் காரணம் உப்பு ஆகும்.

47. ‘சமரசக் கோயிலை’ அமைத்துச் சென்றவர் யார்?

அ) திரு.வி.கல்யாண சுந்தரனார்

ஆ) வெ. இராமலிங்கம் பிள்ளை

இ) கவிமணி

ஈ) இராமலிங்க சுவாமிகள்

விடை: ஈ) இராமலிங்க சுவாமிகள்

விளக்கம்

இராமலிங்க அடிகளார், இறைவன் ஒருவனே, அவன் ஒளி வடிவினன் என்பதையும் அருட்பெருஞ்சோதியாக விளங்கும் இறைவனை அடைவதற்குத் தனிபெருங்கருணையே கருவி என்பதனையும் உலகோர்க்கு உணர்த்த சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை வடலூரில் நிறுவினார்.

இவர், உருவ வழிபாட்டை நீக்கி, ஒளி வழிபாட்டை மக்கள் பின்பற்றுவதற்காக வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார். அங்கு சமரசக் கோயிலை ஏற்படுத்தினார்.

48. “ஜீவகாருண்ய ஒழுக்கம்” என்னும் நூலை இயற்றியவர்

அ) இராமலிங்க அடிகளார்

ஆ) இளங்கோவடிகள்

இ) வீரமாமுனிவர்

ஈ) இராமலிங்கம் பிள்ளை

விடை: அ) இராமலிங்க அடிகளார்

49. “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” – என சிலப்பதிகாரத்தைப் போற்றியவர் யார்?

அ) பாரதிதாசன்

ஆ) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

இ) பாரதியார்

ஈ) சுத்தானந்த பாரதியார்

விடை: இ) பாரதியார்

50. பொருத்துக.

அ) கருமுகில் 1. உரிச்சொற்றொடர்

ஆ) வைவேல் 2. பண்புத்தொகை

இ) உணர்மின் 3. தன்மை ஒரமை வினைமுற்று

ஈ) அளிக்கு வென் 4. ஏவல் வினைமுற்று

குறியீடுகள்

a b c d

அ) 2 1 4 3

ஆ) 2 4 3 1

இ) 3 1 4 2

ஈ) 4 3 2 1

விடை: அ) 2 1 4 3

விளக்கம்

கருமுகில் – கருமை + முகில். மை விகுதி பெற்று வந்ததால் இது பண்புத்தொகை ஆகும்.

வைவேல் – உரிச்சொற்றொடர். ஒரு பெயர்ச்சொல்லின் பொருளை மிகைப்படுத்திக் கூற பயன்படுத்தப்படும் சொற்றொடர் உரிச்சொற்றொடர் ஆகும். வைவேல் என்றால் கூர்மையான வேல் என்று பொருளாகும்.

உணர்மின் – ஏவல் வினைமுற்று. கட்டளைச் சொல்லாக அமைந்துள்ளதால் இது ஏவல் வினைமுற்று ஆகும்.

அளிக்குவென் – தன்மை ஒருமை வினைமுற்று. ‘தருவேன்’ என்று பொருளாகும்.

51. “புலனழுக்கற்ற அந்தணாளன்” இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்

அ) கபிலர்

ஆ) நக்கீரர்

இ) திருவள்ளுவர்

ஈ) கம்பர்

விடை: அ) கபிலர்

விளக்கம்:

“புலனழுக்கற்ற அந்தணாளன்” என்று போற்றப்பட்டவர் கபிலர் ஆவார். போற்றியவர் மாறோகத்து நப்பசலையார்.

52. ‘மிசை’ என்பதன் எதிர்ச்சொல் என்ன?

அ) கீழே

ஆ) மேலே

இ) இசை

ஈ) வரை

விடை: அ) கீழே

விளக்கம்

‘மிசை’ என்றால் மேடு என்று பொருளாகும். இதன் எதிர்ச்சொல் ‘பள்ளம்’ என்பதாகும். கொள்குறியில் ‘கீழே’ என்று கொடுக்கப்பட்டுள்ளது.

53. திருமலை முருகன் பள்ளு கூறும் நெல்வகையில் கூறாத நெல் எது?

அ) சீதா போகம்

ஆ) சொரி குரம்பை

இ) புழுகு சம்பா

ஈ) காடை சம்பா

விடை: ஈ) காடை சம்பா

விளக்கம்:

1. சீதாபோகம், 2. ரங்கஞ்சம்பா, 3. மணல்வாரி 4. அதிக்கிராதி 5. அரிக்ராவி 6. முத்துவெள்ளை 7. புழுகுசம்பா 8. சொரிகுரம்பை 9. புத்தன்வாரி 10. சிறை மீட்டான் 11. கருங்சூரை 12. பூம்பாளை 13. குற்றாலன் 14. பாற்கடுக்கன் 15. கற்பூரப்பாளை 16. காடைக்கழுத்தன் 17. மிளகுசம்பா 18. பனை முகத்தான்.

54. பிழையற்ற வாக்கியம் எது?

அ) வருவதும் போவதும் கிடையா

ஆ) வருவதும் போவதும் கிடையாது

இ) வருவதும் போவதும் கிடையது

ஈ) வருவதும் போவதும் கிடையாயது

விடை: அ) வருவதும் போவதும் கிடையா

விளக்கம்

‘கிடையாது’ என்ற சொல் ஒருமைக்கு மட்டுமே பயன்படுவதாகும். வருவதும் கிடையாது, போவதும் கிடையாது என்று அமைந்திருந்தால் சரியான சொற்றொடர் ஆகும்.

‘வருவதும் போவதும்’ என இரண்டு சொற்கள் வந்துள்ளதால், பன்மைச் சொல்லான ‘கிடையா’ என்ற சொல் இறுதியாக அமைந்துள்ளது. ‘வருவதும் போவதும் கிடையா’ என்பது சரியான சொற்றொடராகும்.

55. நான் வாங்கிய நூல் இது அல்ல- ஒருமை பன்மை பிழை நீக்கி எழுது.

அ) நான் வாங்கிய நூல் இது அன்று

ஆ) நான் வாங்கியது இது நூல் அல்ல

இ) நான் வாங்கியவை நூல் இது அல்ல

ஈ) நான் வாங்கிய நூல்கள் இது அல்ல

விடை: அ) நான் வாங்கிய நூல் இது அன்று

விளக்கம்:

‘நூல்’ ஒருமையாகும் எனவே ‘அன்று’ என்ற சொல் அமைவது சரியானதாகும். ‘நூல்கள்’ எனப் பன்மையாக அமைந்திருந்தால் ‘அன்று’ என்ற சொல் அமைவது சரியானதாகும்.

56. ‘தை’ என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்

அ) தொடுத்தல்

ஆ) ஆடல்

இ) திங்களின் பெயர்

ஈ) கொடு

விடை: இ) திங்களின் பெயர்

57. செய்கின்றாள் – வேர்ச்சொல் தருக.

அ) செய்கு

ஆ) செய்

இ) செய்த

ஈ) செய்கிற

விடை: ஆ) செய்

விளக்கம்:

செய் – வேர்ச்சொல்

செய்த – இறந்தகால பெயரெச்சம்

செய்கிற – நிகழ்கால பெயரெச்சம்

செய்யும் – எதிர்கால பெயரெச்சம்

செய்து – வினையெச்சம்

செய்தவன் – வினையாலனையும் பெயர்

செய்தான் – இறந்தகால வினைமுற்று

செய்க – வியங்கோள் வினைமுற்று

செய்யா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

செய்தல் – தொழிற்பெயர்

58. ‘பார்’ என்ற அடிச் சொல்லினை தொழிற்பெயராக்குக.

அ) பார்த்து

ஆ) பார்த்த

இ) பார்த்தல்

ஈ) படித்தல்

விடை: இ) பார்த்தல்

விளக்கம்

பார் – வேர்ச்சொல்

பார்த்த – பெயரெச்சம்

பார்த்து – வினையெச்சம்

பார்த்தல் – தொழிற்பெயர்

59. கீழ்க்காணும் விடையில் அகர வரிசையில் உள்ளதைத் தேர்வு செய்க.

அ) சீப்பு, சங்கு, சிலை, சாவி

ஆ) சங்கு, சிலை, சாவி, சீப்பு

இ) சங்கு, சாவி, சிலை, சீப்பு

ஈ) சிலை, சீப்பு, சங்கு, சாவி

விடை: இ) சங்கு, சாவி, சிலை, சீப்பு

60. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக.

அண்ணன், சென்றார், தம்பி, வீட்டுக்குச்

அ) தம்பி, அண்ணன் வீடு சென்றார்

ஆ) அண்ணனும் தம்பியும் வீட்டுக்கு சென்றார்.

இ) அண்ணன், தம்பி வீட்டுக்குச் சென்றார்

ஈ) அண்ணன், வீட்டுக்கு தம்பி சென்றார்

விடை: இ) அண்ணன், தம்பி வீட்டுக்குச் சென்றார்

61. வேங்கை – என்பது எவ்வகை மொழி?

அ) தனி மொழி

ஆ) பொது மொழி

இ) தொடர் மொழி

ஈ) கலவை மொழி

விடை: ஆ) பொது மொழி

விளக்கம்:

ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் பிரித்தால் வேறொரு பொருளையும் தந்தால் அது பொதுமொழியாகும்.

தனிமொழி : வேங்கை – வேங்கைமரம், புலி.

தொடர்மொழி: வேங்கை – வேம்+கை வேகின்ற கை என்ற பொருளாகும்.

62. வயலில் ஆடுகள் மேய்ந்தில – எவ்வகைத் தொடர் எனக் கண்டெழுதுக.

அ) உடன்பாடு

ஆ) எதிர்மறைத் தொடர்

இ) தன்வினைத் தொடர்

ஈ) பிறவினைத் தொடர்

விடை: ஆ) எதிர்மறைத் தொடர்

விளக்கம்

கற்றாள் – தன்வினை

கற்பித்தாள் – பிறவினை

63. கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் எது பிறவினைச் சொல்?

அ) கற்றாள்

ஆ) கற்பித்தாள்

இ) வந்தாள்

ஈ) போனாள்

விடை: ஆ) கற்பித்தாள்

64. ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல’ இவ்வுவமை வெளிப்படுத்தும் பொருள்

அ) பரந்து விரிந்து இருத்தல்

ஆ) மண்ணின் மாண்பு

இ) நிலத்தைத் தோண்டுதல்

ஈ) பொறுமை

விடை: ஈ) பொறுமை

விளக்கம்

திருக்குறல் – பொறையுடைமை

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வாரைப் பொறுத்தல் தலை. – குறள் எண் – 151

பொருள்: தன்னைத் தோண்டுபவரையும் தாங்கி நிறுகும் நிலத்தைப் போல, தம்மை இகழ்வாரைப் பொறுத்துக் கொள்ளுதல் சிறந்த பண்பாகும்.

65. திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள் எவை?

அ) மா, பலா

ஆ) தென்னை, வாழை

இ) தேக்கு, சந்தனம்

ஈ) பனை, மூங்கில்

விடை: ஈ) பனை, மூங்கில்

66. அடக்கமாய் இருப்பவனின் உயர்வு எதனைக் காட்டிலும் பெரியது?

அ) வானம்

ஆ) கடல்

இ) மலை

ஈ) உலகம்

விடை: இ) மலை

விளக்கம்:

திருக்குறள் – அடக்கமுடைமை

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது – குறள் எண்-124

பொருள்: தன் நிலையிலிருந்து மாறாமல் அடங்கியிருப்பவனின் உயர்வு மலையின் உயர்வைக் காட்டிலும் மிகவும் பெரியதாகும்.

67. பொருட்பாவில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை

அ) 70

ஆ) 25

இ) 38

ஈ) 30

விடை: அ) 70

விளக்கம்

திருக்குறள்

பிரிவு அதிகாரங்களின் எண்ணிக்கை

அறத்துப்பால் 38

பொருட்பால் 70

இன்பத்துப்பால் 25

68. குடியரசுத் தலைவர் உலகத்தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார் – எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.

அ) தன்வினை வாக்கியம்

ஆ) பிறவினை வாக்கியம்

இ) செய்வினை வாக்கியம்

ஈ) செயப்பாட்டுவினை வாக்கியம்

விடை: இ) செய்வினை வாக்கியம்

விளக்கம்:

குடியரசுத் தலைவர் உலகத்தமிழ் மாநாட்டை தொடங்கி வைத்தார் – செய்வினை வாக்கியம்

உலகத் தமிழ் மாநாடு குடியரசுத் தலைவரால் தொடங்கி வைக்கப்பட்டது. – செயப்பட்டுவினை வாக்கியம்

69. பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றாகிய சிறுபஞ்ச மூலத்தில் கூறப்படாத மூலிகைத் தாவர வேர்

அ) கண்டகத்திரி

ஆ) சிறுவழுதுணை

இ) தூதுவளை

ஈ) நெருஞ்சி

விடை: இ) தூதுவளை

விளக்கம்

சிறுபஞ்சமூலத்தில் கூறப்பட்டுள்ள ஐந்து மூலிகை வேர்கள்,

1. கண்டங்கத்திரி 2. சிறுவழுதுணை 3. சிறுமல்லி 4. பெருமல்லி 5. நெருஞ்சில்

70. வயிறு புடைக்க உண்டால் நோய்க்கு இடமளிக்கும் என்று கருதி ‘மீதூண் விரும்பேல்” என்று கூறியவர் யார்?

அ) ஔவையார்

ஆ) பரணர்

இ) கபிலர்

ஈ) திருமூலர்

விடை: அ) ஔவையார்

71. நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் – இப்பாடலடிகள் இடம் பெற்றுள்ள நூல்

அ) கலித்தொகை

ஆ) அகநானூறு

இ) புறநானூறு

ஈ) முல்லைப்பாட்டு

விடை: இ) புறநானூறு

விளக்கம்

புறநானூறு

நெல்லும் உயிரன்றே நீரும்உயி ரன்றே

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

அதனால் யான்உயிர் என்பது அறிகை

வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே – மோசிகீரனார்

பொருள்: இவ்வுலகத்தார்க்கு நெல்லும் நீரும் உயிராகா. முறை செய்து காத்தலினால் மன்னவனே உயிராவான். வேற்படையை உடைய வேந்தனின் கடமை நாட்டைப் பேணிக் காப்பதாகும்.

72. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்வு செய்க.

அ) பரிபாடல் எட்டுத்தொகை நூல்களும் ஒன்று

ஆ) பரிபாடல் ஓர் அகப்புற நூல்

இ) பரிபாடலில் வையை ஆறு பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது

ஈ) பரிபாடலில் 400 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

விடை: ஈ) பரிபாடலில் 400 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

விளக்கம்: பரிபாடலில் 70 பாடல்கள் உள்ளன. ஆனால் 22 பாடல்களே கிடைத்துள்ளன.

73. கான மஞ்ஞைக்குக் கலிங்கம் ஈந்தவன்

அ) பாரி

ஆ) காரி

இ) பேகன்

ஈ) அதியமான்

விடை: இ) பேகன்

விளக்கம்:

காட்டில் குளிரால் நடுங்கிய மயிலுக்கு (கான மஞ்ஞை) தன்னுடைய ஆடையை (கலிங்கம்) ஈந்தவன் பேகன் ஆவான்.

பற்றிப்படர இடமில்லாமல் இருந்த முல்லைக் கொடிக்கு தன் தேரினை ஈந்தவன் பாரி ஆவான்.

தன்னை நாடி வந்த இரவலர்க்கு குதிரைகளையும் ஏனைய செல்வங்களையும் ஈந்தவன் காரி ஆவான்.

தனக்குக் கிடைத்த அரிய நெல்லிக்கனியை தான் உண்ணாமல் ஔவைக்கு ஈந்தவன் அதியமான்.

74. கூற்று 1: அகநானூற்றுப் பாடல்கள் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

கூற்று 2: அவற்றுள், களிற்றியானை நிரை 100 பாடல்களைக் கொண்டுள்ளது.

சரியான விடையைத் தேர்ந்தெடு.

அ) கூற்று இரண்டு சரி

ஆ) கூற்று 1 மட்டும் சரி

இ) கூற்று 2 மட்டும் சரி

ஈ) கூற்று இரண்டும் தவறு

விடை: ஆ) கூற்று 1 மட்டும் சரி

விளக்கம்:

அகநானூற்றுப் பாடல்களின் மூன்று பெரும்பிரிவுகள்.

களிற்றியானை நிரை – முதல் 120 பாடல்கள்

மணிமிடை பவளம் – அடுத்த 180 பாடல்கள்

நித்திலக்கோவை – அடுத்த 100 பாடல்கள்

75. பொருத்தமுள்ள இணையினை தேர்ந்தெடு.

அ) கம்பர் – தாயுமானவர்

ஆ) சீத்தலைச்சாத்தனார் – இளங்கோவடிகள்

இ) கபிலர் – சேக்கிழார்

ஈ) ஔவையார் – காளிதாசர்

விடை: ஆ) சீத்தலைச்சாத்தனார் – இளங்கோவடிகள்

விளக்கம்:

சீத்தலைச் சாத்தனாரும் இளங்கோவடிகளும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள். ஏனையவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள்.

76. கிறித்துவ சமயத்தாரின் கலைக் களஞ்சியம் என்றழைக்கப்படும் நூல் எது?

அ) சதுரகராதி

ஆ) தேம்பாவணி

இ) வேதியர் ஒழுக்கம்

ஈ) இரட்சணிய ய்யாத்திரிகம்

விளக்கம்

கிறித்துவ சமயத்தாரின் கலைக் களஞ்சியம் என்றழைக்கப்படும் நூல் தேம்பாவணி ஆகும். இந்நூலை இயற்றியவர் வீரமாமுனிவர் ஆவார்.

77. சீறாபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

அ) 5086

ஆ) 4355

இ) 5027

ஈ) 5315

விடை: இ) 5027

விளக்கம்:

சீறாப்புராணத்தை இயற்றியவர் உமறுப்புலவர் ஆவர். இந்நூல் மூன்று காண்டங்களையும் 92 படலங்களையும் 5027 விருத்தப் பாடல்களையும் உடையது.

78. பிரபந்தம் என்ற வடசொல்லுக்குப் பொருள் யாது?

அ) தூது நூல்

ஆ) நன்கு கட்டப்பட்டது

இ) நகைச்சுவை

ஈ) அறிவுரை நூல்

விடை: ஆ) நன்கு கட்டப்பட்டது

விளக்கம்:

பரணி இலக்கியங்களுள் முதலில் தோன்றியது கலிங்கத்துப் பரணியாகும். போரில் தோற்றவர் பெயரில் பரணி இலக்கியம் இயற்றப்படும். கலிங்க மன்னன் அனந்தபத்மன் மீது முதலாம் ‘குலோத்துங்கச் சோழன் போர் தொடுத்து வெற்றி பெற்றதை கலிங்கத்துப்பரணி கூறுகிறது. இந்நூலை இயற்றியவர் ஜெயங்கொண்டார்.

80. முதற்குலோத்துங்க சோழனின் படைத்தளபதி யார்?

அ) கருணாகரத் தொண்டைமான்

ஆ) புருடோத்தமன்

இ) தாண்டவராயன்

ஈ) மகேந்திரவர்மன்

விடை: அ) கருணாகரத் தொண்டைமான்

விளக்கம்:

முதலாம் குலோத்துங்கச் சோழனின் நண்பனும் படைத்தளபதியுமான கருணாகரத் தொண்டைமானின் வெற்றிச் சிறப்புகள் கலிங்கத்துப் பரணியில் கூறப்பட்டுள்ளன.

81. பண்டைய கலிங்கம் தற்போது எந்த மாநிலமாக வழங்கப்படுகிறது?

அ) ஆந்திரம்

ஆ) தமிழ்நாடு

இ) ஒடிசா

ஈ) தெலுங்கானா

விடை: இ) ஒடிசா

82. நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் என்று பாடியவர்

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) வாணிதாசன்

ஈ) கண்ணதாசன்

விடை: அ) பாரதியார்

83. துரியோதனனின் தந்தை பெயர்

அ) சகுனி

ஆ) விதுரன்

இ) அர்ச்சுனன்

ஈ) திருதராட்டினன்

விடை: ஈ) திருதராட்டினன்

84. சுந்தரம்பிள்ளை அவர்களுக்கு ‘ராவ்பகதூர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்த அரசு எது?

அ) கேரள அரசு

ஆ) சென்னை மாகாண அரசு

இ) கர்நாடக அரசு

ஈ) ஆந்திர அரசு

விடை: ஆ) சென்னை மாகாண அரசு

விளக்கம்:

பாண்டிய நாட்டு மன்னனாகிய சீவகவழுதியின் மகள் மனோன்மணியின் வரலாற்றைக் குஊறும் ‘மனோன்மணீயம்’ என்ற நாடகநூலை இயற்றியவர் பெ.சுந்தரம் பிள்ளை ஆவார். “நீராடுங் கடலுடுத்த” என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை இயற்றியவர். அந்நாளைய சென்னை மாகாண அரசு இவருக்கு “ராவ் பகதூர்” பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

85. சிலப்பதிகாரத்தில் கூறப்படும் “வரியும் குரவையும் நாட்டுப்புறப் பாடல்களே” எனக் கூறிய தமிழறிஞர்

அ) இராமலிங்கனார்

ஆ) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

இ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

ஈ) மு.சண்முகனார்

விடை: ஆ) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

86. ‘பிசி’ என்ற சொல்லின் பொருள் யாது?

அ) பழமொழி

ஆ) விடுகதை

இ) பாடல்

ஈ) கதை

விடை: ஆ) விடுகதை

87. மழைவரும் என்றே மந்திரம் செபிச்சது அந்தக்காலம் – அது

மழையைப் பொழிய வைக்கவே எந்திரம் வந்தது

இந்தக்காலம் – என்ற பாடலைப் பாடியவர் யார்?

அ) உடுமலை நாராயண கவிஞர்

ஆ) தெய்வக் கவிஞர்

இ) இராஜ் கவிஞர்

ஈ) ஈரோடு தமிழன்பன்

விடை: அ) உடுமலை நாராயண கவிஞர்

88. தமிழக அரசின் பரிசு பெற்ற முடியரசனின் காவியம் எது?

அ) தேன்மழை

ஆ) பால்வீதி

இ) எழிலோவியம்

ஈ) பூங்கொடி

விடை: ஈ) பூங்கொடி

விளக்கம்:

கவிஞர் முடியரசன் ‘பூங்கொடி’ என்ற காவியத்திற்காக 1966-ஆம் ஆண்டு தமிழக அரசின் பரிசினைப் பெற்றார்.

‘தேன்மழை’ என்ற நூலின் ஆசிரியர் சுரதா ஆவார். ‘பால்வீதி’ என்ற நூலின் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் ஆவார். ‘எழிலோவியம்’ என்ற நூலின் ஆசிரியர் கவிஞர் வாணிதாசன் ஆவார்.

89. “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்து கொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை, பாடலும் அப்படித்தான்” என்றவர்

அ) மு.மேத்தா

ஆ) அப்துல் ரகுமான்

இ) பசுவய்யா

ஈ) ஈரோடு தமிழன்பன்

விடை: ஈ) ஈரோடு தமிழன்பன்

விளக்கம்:

ஈரோடு தமிழன்பன்: இவர் ‘ஆயிரம் அரங்கம் கண்ட கவியரங்கக் கவிஞர்’ என்று புகழப்படுகிறார். இவர் எழுதிய ‘தமிழோவியம்’ என்ற நூலின் முன்னுரையில் ‘ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்து கொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

90. தமிழின் தொன்மையான கலை வடிவம் எது?

அ) நாடகம்

ஆ) நடனம்

இ) நாட்டியம்

ஈ) சிற்பம்

விடை: அ) நாடகம்

விளக்கம்:

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் நூல்களான முறுவல், சம்பந்தம், செயிற்றியம், மதிவாண நாடகத் தமிழ்நூல், விளக்கத்தார் கூத்து, குணநூல், கூத்து நூல் போன்றவை நாடகத்திற்கு இலக்கணம் வகுத்துள்ளன.

தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்துள்ளது.

தமிழின் தொன்மையான கலைவடிவான நாடகம் மற்றும் நாட்டியம் இரண்டையுமே ‘கூத்து’ என்றே படைத் தமிழர் குறிப்பிட்டுள்ளனர்.

91. மதங்க சூளாமணி என்னும் நாடகம் பற்றிய ஆராய்ச்சி நூலை எழுதியவர் யார்?

அ) விவேகானந்தர்

ஆ) விபுலானந்தர்

இ) வில்லிப்புத்தூரார்

ஈ) வீரமாமுனிவர்

விளக்கம்:

சுவாமி விபுலானந்தரின் ‘மதங்க சூளாமணி’ என்ற நூல் நாடக ஆராய்ச்சி நூலாகும்.

92. கூற்று 1: ‘பேனா’ என்ற புனைப் பெயரில் பல நூல்களை எழுத்யவர் பெ.நா.அப்புசாமி.

கூற்று 2: மதுரைப் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற பட்டத்தைப் பெற்றவர் பெ.நா.அப்புசாமி.

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) கூற்று இரண்டும் தவறு

ஈ) கூற்று இரண்டும் சரி

விடை: ஈ) கூற்று இரண்டும் சரி

விளக்கம்:

பெ.நா.அப்புசாமி (1891 – 1986)

அறிவியல் தமிழின் முன்னோடி ஆவார். வழக்கறிஞராகப் பணியாற்றியவர். அறிவியல் தமிழுக்காக 70 ஆண்டுகள் தொண்டாற்றினார். ‘பேனா’ என்ற புனைப் பெயரில் பல நூல்களை எழுதியுள்ளார். மதுரைப் பல்கலைக்கழகம் இவருக்கு ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற பட்டத்தை வழங்கியுள்ளது.

93. “வானம் வசப்படும்” என்ற நூலின் ஆசிரியர்

அ) பிரபஞ்சன்

ஆ) யுகபாரதி

இ) தாரா பாரதி

ஈ) மனுஷ்ட புத்திரன்

விடை: அ) பிரபஞ்சன்

விளக்கம்:

எழுத்தாளர் பிரபஞ்சன் (1945 – 2018) ‘வானம் வசப்படும்’ என்ற புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றுள்ளார்.

94. தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர்?

அ) வள்ளுவர்

ஆ) உ.வே.சா.

இ) வள்ளலார்

ஈ) மறைமலையடிகள்

விடை: ஆ) உ.வே.சா.

விளக்கம்:

தமிழ்த்தாத்தா – உ.வே.சாமிநாதர்

வள்ளலார் – புதுநெறிகண்ட புலவர்

மறைமலையடிகள் – பல்லாவரம் முனிவர்

95. பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த மாவட்டம் எது?

அ) சேலம்

ஆ) தருமபுரி

இ) கிருஷ்ணகிரி

ஈ) நாமக்கல்

விடை: அ) சேலம்

விளக்கம்:

பாவலரேறு பெருஞ்சித்திரனார் சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம் என்ற ஊரில் 1933-இல் பிறந்தார்.

96. ஜி.யூ.போப் அவர்கள் திருக்குறளை எத்தனை ஆண்டுகள் படித்துச் சுவைத்தார்?

அ) முப்பதாண்டுகள்

ஆ) நாற்பதாண்டுகள்

இ) ஐம்பதாண்டுகள்

ஈ) அறுபதாண்டுகள்

விடை: ஆ) நாற்பதாண்டுகள்

விளக்கம்:

திருக்குறளை 40 ஆண்டுகள் படித்துச் சுவைத்த ஜி.யூ.போப் அவர்கள் 1886-ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

97. சாதி என்னும் பாறை உடைந்து சுக்குநூறானது

இதற்கு காரணமாக இருந்த இருவர் யார்?

அ) பெரியார், அம்பேத்கர்

ஆ) பெரியார், அறிஞர் அண்ணா

இ) அம்பேதகர், அறிஞர் அண்ணா

ஈ) அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி

விடை: அ) பெரியார், அம்பேத்கர்

விளக்கம்:

தமிழகத்தில் ஈ.வெ.ரா. பெரியார் அவர்களும் மராட்டிய மாநிலத்தில் அம்பேத்கரும் சாதிக் கொடுமையை நீக்குவதற்காக அரும்பாடுபட்டனர். “மனிதர்களை இழிவுபடுத்தும் சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும்” என்று பெரியாரும் “சாதி என்பது களையப்பட வேண்டிய களை” என்று அம்பேத்கரும் கூறியுள்ளனர்.

98. சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்றான் என்பதை குறிப்பிடும் நூல்

அ) சீவகசிந்தாமணி

ஆ) வளையாபதி

இ) மணிமேகலை

ஈ) குண்டலகேசி

விடை: இ) மணிமேகலை

விளக்கம்:

மணிமேகலை காப்பியத்தில் மணிமேகலை கொண்டு வந்த அட்சயப் பாத்திரத்தில் முதன்முதலில் பிச்சையிடும் கற்புக்கரசி ஆதிரை ஆவாள். அவளின் கணவான சாதுவன் வணிகம் செய்யும் பொருட்டு கடல் கடந்து சென்றான்.

99. ஒளியின் திசைவேகத்தை உலகிற்கு வெளிப்படுத்தியவர் யார்?

அ) இராமர்

ஆ) ரோவர்

இ) ஆட்டோ டியட்டர்ஸ்

ஈ) டெஸ்கார்ட்டெஸ்

விடை: ஆ) ரோவர்

100. எந்தெந்த ஊருக்கு இடையே அமைந்த நெடுஞ்சாலை, மங்கம்மாள் சாலை என அழைக்கப்படுகிறது?

அ) இராமேஸ்வரம் – மதுரை

ஆ) திருச்சி – மதுரை

இ) திண்டுக்கல் – மதுரை

ஈ) கன்னியாகுமரி – மதுரை

விடை: ஈ) கன்னியாகுமரி – மதுரை

விளக்கம் :

மதுரையை ஆண்டுவந்த சொக்கநாத நாயக்கர் மறைந்தவுடன் அவரது மனைவியான ராணிமங்கம்மாள் அரச பதவியை ஏற்று திறமையாக ஆட்சி செய்தார். எதிரிகளும் அவரை கண்டு நடுங்கும்படி ஆட்சி செய்தார். பல அறப்பணிகளை மேற்கொண்டார். பல அன்னச் சத்திரங்களைக் கட்டினார். பல புதிய சாலைகளை அமைத்தார். கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அவர் அமைத்த நெடுஞ்சாலை ‘மங்கம்மாள் சாலை’ என்று அழைக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!