General TamilTnpsc

General Tamil Model Question Paper 9

General Tamil Model Question Paper 9

General Tamil Model Question Paper 9: Tnpsc Aspirants can use this opportunity to check General Tamil Model Question Papers For Tnpsc. General Tamil Model Question Papers For Tnpsc With Answers Pdf Online Test Quiz is now free to download from our winmeen.com site. Now Tamil Eligibility Test is mandatory for all Tnpsc and Tamilnadu government exams. So these Tnpsc Pothu Tamil Model Questions are very useful for your preparation. It is also useful to Unit 8 – Tamilnadu History Culture Part.

61. உவமைக் கவிஞர் சுரதா இயற்றிய நூல் எது?

(அ) நிலவுப் பூ

(ஆ) சூரியகாந்தி

(இ) தேன்மழை

(ஈ) பூங்கொடி

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) தேன்மழை

நிலவுப்பூ-சிற்பி: சூரியகாந்தி-நா.காமராசன், தேன்மழை-சுரதா, பூங்கொடி-முடியரசன்

62. தம்மை நாயகியாகக் கற்பனை செய்து நாரையைத் தூது விட்ட ஆழ்வார் யார்?

(அ) பொய்கையாழ்வார்

(ஆ) நம்மாழ்வார்

(இ) குலசேகர ஆழ்வார்

(ஈ) பெரியாழ்வார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) நம்மாழ்வார்

நம்மாழ்வார் தம்மை நாயகியாக எண்ணிப் பாடும் அகப்பாடற் போக்கில் அமைந்த பாசுரங்களில் இவர் தம் ஏக்கமும், தவிப்பும், இறையன்பும் நன்கு வெளிப்படுகின்றன.

63. உமர்கய்யாம், “ரூபாயத்” என்ற பெயரில் எழுதிய நூலைக் கவிமணி மொழி பெயர்த்தார். அடிக்கோடிட்ட சொல்லின் பொருளை எழுதுக:

(அ) எட்டடிச் செய்யுள்

(ஆ) இரண்டடிச் செய்யுள்

(இ) நான்கடிச் செய்யுள்

(ஈ) இவை எல்லாம் தவறானவை

விடை மற்றும் விளக்கம்

விடை: (இ) நான்கடிச் செய்யுள்

64. கீழ்க்காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை?

(அ) நச்சர்

(ஆ) திருமலையர்

(இ) அடியார்க்கு நல்லார்

(ஈ) தாமத்தர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) அடியார்க்கு நல்லார்

1. அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர். இவரது காலம் கி.பி.12-ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.14-ஆம் நூற்றாண்டு என்றும் பலவிதமான கருத்துகளினால் உறுதியான முடிவுக்கு வர இயலவில்லை.

2. “தருமர் மணக்குடவர் தாமதத்தர் நச்சர்.

பரிதி பரிமேலழகர்-திருமலையார்

மல்லர் பரிப் பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற்கு

எல்லையுரை செய்தார் இவர்” – திருக்குறளுக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர் பதின்மர் பற்றி மேற்கண்ட பழம் பாடல் கூறுகிறது.

65. “ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும்

ஆள்கவெனத் துஞ்சாமல், தனது நாட்டின்

மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவான்” – என்று பாடியவர் யார்?

(அ) பாரதிதாசன்

(ஆ) கண்ணதாசன்

(இ) முடியரசன்

(ஈ) பாரதியார்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(இ) முடியரசன்

“முடியரசன்” என்ற புனைப்பெயரில் எழுதியவர் துரைராசு ஆவார். இவர் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞருள் மூத்தவர். “யார் கவிஞன்?” என்ற தலைப்பில் இவர் எழுதிய கவிதையிலிருந்து வினாவில் உள்ள வரிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

66. “கோவலன் பொட்டல்” என வழங்கப்படும் இடம்

(அ) கோவலன் பொட்டலம் விரித்து உணவு அருந்திய இடம்

(ஆ) கோவலன் கொலைக்களப்பட்ட இடம்

(இ) கோவலன் சிலம்பு விற்க வந்த இடம்

(ஈ) கண்ணகி கோவலன் வாழ்ந்த இடம்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஆ) கோவலன் கொலைக்களப்பட்ட இடம்

மதுரையில் கோவலன் கொலைக்களப்பட்ட இடம் “கோவலன் பொட்டல்” என வழங்கப்படுகிறது.

67. பாரதிக்கு “மகாகவி” என்ற பட்டம் கொடுத்தவர் யார்?

(அ) வ.ரா.

(ஆ) உ.வே.சா

(இ) கி.ஆ.பெ.வி

(ஈ) லா.ச.ரா.

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(அ) வ.ரா.

பாரதியாருக்கு மகாகவி என்ற பட்டத்தை வழங்கியவர் வ.ராமசாமி ஐயங்கார் ஆவார்.

68. பொருந்தாத இணையைக் கண்டறிய:

(அ) வீரமாமுனிவர்-பரமார்த்த குருகதை

(ஆ) தேவநேயப் பாவாணர்-தமிழர் திருமணம்

(இ) திரு.வி.க-சைவத்திறவு

(ஈ) பெருஞ்சித்திரனார்-தமிழ்ச்சோலை

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) பெருஞ்சித்திரனார்-தமிழ்ச்சோலை

பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள்: கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி, பாவியக் கொத்து, பள்ளிப் பறவைகள், நூறாசிரியம்.

69. பின்வருவனவற்றுள் பொருந்தும் இணையைத் தேர்ந்தெடு:

செரு செறு

(அ) சண்டை – 1. வயல்

(ஆ) போர் – 2. சிறிய

(இ) போர்க்களம் – 3. குளம்

(ஈ) கோபப்படு – 4. போரிடு

விடை மற்றும் விளக்கம்

விடை: (அ) சண்டை – 1. வயல்

General Tamil Study Materials

General Tamil Model Questions Pdf

70. “அழுது அடியடைந்த அன்பர்” என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது?

(அ) அருணகிரியார்

(ஆ) சம்பந்தர்

(இ) சுந்தரர்

(ஈ) மாணிக்கவாசகர்

விடை மற்றும் விளக்கம்

விளக்கம்:

(ஈ) மாணிக்கவாசகர்

திருப்பெருந்துறை இறைவனை மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்கி அழுது தொழுததால் மாணிக்க வாசகர் “அழுது அடியடைந்த அன்பர்” எனப்படுகிறார்.

1 2Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!