Tnpsc
January Tamil Current Affairs Online Test
July Tamil Current Affairs Online Model Test
Congratulations - you have completed July Tamil Current Affairs Online Model Test.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
ஐ. நா-வின் Peace Building Fund (PBF)-க்கு, இந்தியா எவ்வளவு நிதியளித்துள்ளது?
$4 இலட்சம் டாலர்கள்
| |
$5 இலட்சம் டாலர்கள்
| |
$6 இலட்சம் டாலர்கள்
| |
$8 இலட்சம் டாலர்கள்
|
Question 1 Explanation:
உலகம் முழுமைக்கும் சமாதானத்தை உருவாக்கவும் நிலைநாட்டவும் ஐ. நா-வின் செயல்பாடுகளை அதிகரிக்க, ஐ. நா-வின் Peace Building Fund-க்கு இந்தியா $5 இலட்சம் டாலர் நிதியளித்துள்ளது. 2005 டிசம்பரில் தொடங்கியதிலிருந்தே UN Peace Building Commission (PBC)-ன் உறுப்பினராக இருந்துவருகிறது. இதுவரை, $5 மில்லியன் டாலர் அளவுக்கு இந்தியா நிதியளித்துள்ளது. UN Peacebuilding Commission (PBC) என்பது தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் சமாதான முயற்சிகளை ஆதரிக்கும் ஒரு சர்வதேச அரசாங்க ஆலோசனைக்குழுவாகும்.
Question 2 |
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய அரசுத்தலைமை வழக்குரைஞர் (Attorney General of India) யார்?
PJ தாமஸ்
| |
KK வேணுகோபால்
| |
MN கிருஷ்ணாமணி
| |
ரோஹிங்டன் நரிமன் |
Question 2 Explanation:
அரசியலமைப்பு நிபுணர் மற்றும் மூத்த வழக்குரைஞரான KK வேணுகோபால், 2017 ஜூன் 30 முதல் இந்திய அரசின் தலைமை வழக்குரைஞராக (Attorney General of India) நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் பதவிக்காலம் மூன்றாண்டுகளாகும். இவருக்குமுன் Mukul Rohatgi இப்பதவியிலிருந்தார். எழுபதுகளில் மொரார்ஜி தேசாயின் அரசாங்கத்தின்போது ஒரு கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர் (Additional Solicitor General) இருந்த இவர் 2வது முறையாக ஒரு சட்ட அதிகாரியாகிறார். இவர் பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருதுகளை பெற்றுள்ளார். இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரென்பது இந்தியாவின் தலைமை சட்ட ஆலோசகர் மற்றும் உச்சநீதிமன்றத்தின் முதன்மை வழக்குரைஞராகும். இவர் அரசியலமைப்பின் 76(1) பிரிவின் கீழ் இந்திய குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகிறார்.
Question 3 |
(Ministry of External Affairs) வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் புதிய பொருளாதார உறவுகள் செயலராக (Economic Relations Secretary) நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Vinesh Rathore
| |
Madhu Tamble
| |
Kirti Singh
| |
Vijay Gokhale |
Question 3 Explanation:
1981-ல் இந்திய அயல்நாட்டு சேவை (Indian Foreign Service) அதிகாரியாக பணிபுரிந்த விஜய் கோகலே வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் புதிய செயலாளராக (பொருளாதார உறவுகள்) நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, இவர் சீனாவுக்கான இந்திய தூதராவார். இது தவிர, இவர் ஜெர்மனிக்கான இந்திய தூதராகவும் ஹாங்காங், ஹனோய் (Hanoi), பீஜிங் மற்றும் நியூயார்க்கிலுள்ள இந்திய தூதரகங்களிலும் பணியாற்றியுள்ளார்.
Question 4 |
2017 சர்வதேச கூட்டுறவு நாளின் (International Cooperative Day) மையக்கருத்து என்ன?
Peace-building through Co-operatives
| |
Co-operative enterprise empowers women
| |
Choose co-operatives, choose equality
| |
Co-operatives ensure no one is left behind |
Question 4 Explanation:
பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சி மற்றும் சமூக கொள்கைகளை அடைவதில் கூட்டுறவின் பங்களிப்பை அங்கீகரிக்கவும் உறுதிசெய்யவும் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமையன்று ஐ.நா.வின் சர்வதேச கூட்டுறவு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு, ஜூலை 1 அன்று “Co-operatives ensure no one is left behind” எனும் மையக்கருத்துடன் இந்நாள் கொண்டாடப்பட்டது. இந்த மையக்கருத்து மாறும் உலகில் வறுமையை ஒழித்து, செழிப்பை உருவாக்க ஊக்கமளிப்பதாக அமைகிறது.
Question 5 |
எந்த நாடு, UNESCO-வின் 41வது உலக பாரம்பரியக்குழு (World Heritage Committee) மாநாட்டை நடத்தவுள்ளது?
போலந்து
| |
ஜெர்மனி
| |
US
| |
இந்தியா |
Question 5 Explanation:
UNESCO-வின் 41வது உலக பாரம்பரியக்குழு (World Heritage Committee) மாநாடு, போலந்திலுள்ள Krakow நகரில் 2017 ஜூலை 2 அன்று தொடங்கி ஜூலை 12 வரை நடைபெறவுள்ளது. UNESCO-வின் உலக பாரம்பரிய பட்டியலில் புதிதாக சேர்க்கப்படவுள்ள கல்வெட்டுத்தலங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கவும், ஏற்கனவே பட்டியலிலுள்ள கல்வெட்டுத்தலங்களின் நிலையை ஆராயவும் மற்றும் உலக பாரம்பரிய மாநாடு நடத்துவதற்கான நடைமுறை பிரச்சனைகள் பற்றிய பல பிரச்சனைகள் இம்மாநாட்டில் விவாதிக்கப்படும். உலக பாரம்பரியக்குழு என்பது உலக கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதற்காக 21 நாடுகளின் பிரதிநிதிகளை உறுப்பினராகக்கொண்டது.
Question 6 |
எந்த கால்பந்தணி, 2017 FIFA (Confederations Cup) கூட்டமைப்பு கோப்பையை வென்றுள்ளது?
மெக்சிக்கோ
| |
சிலி
| |
ஜெர்மனி
| |
போர்ச்சுகல் |
Question 6 Explanation:
இரஷ்யாவிலுள்ள St.Petersburg-ல் நடைபெற்ற இறுதிப்போட்டியில், சிலியின் Copa America சாம்பியனை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, 2017-ல் நடைபெற்று முடிந்த 10வது FIFA (Confederations Cup) கூட்டமைப்பு கோப்பையை ஜெர்மனி வென்றுள்ளது. சிலியின் மிட்ஃபீல்டர் Marcelo Diaz, தனது பக்கத்தில் கோலை தவறவிட்டபோது, ஜெர்மனியின் Lars Stindl அந்த கோலை 20 நிமிடத்தில் அடித்தததே ஜெர்மனி முதன்முதலாக இக்கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தது.
Question 7 |
இந்தியாவில் எந்தத்தேதியில், 2017-க்கான தேசிய மருத்துவர்கள் நாள் (National Doctors Day) கொண்டாடப்படுகிறது?
ஜூலை 1
| |
ஜூலை 2
| |
ஜூலை 3 | |
ஜூலை 4 |
Question 7 Explanation:
புகழ்பெற்ற மருத்துவரும் மேற்கு வங்கத்தின் 2வது முதலமைச்சருமான Dr.Bidhan Chandra Roy அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1 அன்று இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் நாள் (National Doctors Day) கொண்டாடப்படுகிறது. மனித வாழ்வில் மருத்துவர்களின் மதிப்புமிக்க சேவையின் முக்கியத்துவத்தை உணரவும், அவர்களுள் சிறந்தவரை போற்றவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
Question 8 |
எந்த நகரத்தில், இந்தியாவின் மிகப்பெரிய உலகளாவிய திறன் பூங்கா (Global Skill Park) அமைக்கப்படவுள்ளது?
போபால்
| |
இலக்னோ
| |
கவுகாத்தி
| |
இராஜ்கோட் |
Question 8 Explanation:
2017 ஜூலை 3 அன்று மத்தியப்பிரதேசத்திலுள்ள போபாலில், இந்தியாவின் மிகப்பெரிய உலகளாவிய திறன் பூங்காவுக்கான அடிக்கல்லை மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவ்கானும் மத்தியப்பிரதேச மாநில திறன் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடியும் நாட்டினர். 645 கோடி செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்தப்பூங்காவிற்கு போபாலிலுள்ள நரேலா சங்கரி எனும் பகுதியில் 37 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில் ஒவ்வோர் ஆண்டும் சர்வதேசத்தரம்கொண்ட பயிற்சியாளர்களால் 1000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு இந்தியா மற்றும் அயல்நாடுகளில் பணி வழங்கப்படும். இப்பூங்கா “தொழிற்துறையுடன்-தொழிற்துறைக்காக” (With Industry-For Industry) எனும் முழக்கத்துடன் செயல்படுகிறது.
Question 9 |
செர்பியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
Xavier Bettel
| |
Elio Di Rupo
| |
Calsi Vucic
| |
Ana Brnabic |
Question 9 Explanation:
சுயேச்சை அரசியல்வாதியான Ana Brnabic, செர்பியாவின் முதல் ஓரினச்சேர்க்கையாளர் மற்றும் முதல் பெண் பிரதமருமாவார். இவருக்குமுன் இருந்த Ivica Dacic-ன் ஓய்வுக்குப்பிறகு, 2017 ஜூன் 29 அன்று Brnabic பதவியேற்றுக்கொண்டார். முன்மொழியப்பட்ட அமைச்சர்களின் பட்டியலுட்பட அரசாங்கத்திட்டங்களை தேசிய சட்டமன்றத்திற்கு சமர்பிப்பதும், அரசை வழிநடத்துவதும் செர்பிய பிரதமரின் பணிகளாகும். ஒருவேளை பிரதமர் பதவி விலகினால் அது அரசைக்கவிழ்க்கும்.
Question 10 |
FIA Formula 3 European Championship-ஐ வென்ற முதல் இந்தியர் யார்?
Narain Karthikeyan
| |
Ashwin Sundar
| |
Jehan Daruvala
| |
Karun Chandhok |
Question 10 Explanation:
2017 ஜூலை 2 அன்று Nuremberg சுற்றுப்பாதையில் நடைபெற்ற Race 3 போட்டியில், சகாரா ஃபோர்ஸ் இந்தியா அகாடமியைச்சேர்ந்த Jehan Daruvala வெற்றிபெற்றார். இதன்மூலம், FIA Formula 3 European Championship-ஐ வென்ற முதல் இந்தியர் இவராகிறார். British F3 சாம்பியன்ஷிப் போட்டியில் Narain Karthikeyan வென்று 18 ஆண்டுகளுக்குப்பிறகு Jehan Daruvala Race 3 போட்டியில் வென்றுள்ளார். 2.3 கி.மீ., நீளமுடைய Norisring, அதிவேகமான சுற்றுப்பாதைகளைக்கொண்ட ஒரு சுற்றாகும். இதில் சக்கரத்தடுப்புகளுக்கு (Tyre Barriers) பதிலாக சுவர்தடுப்பு இருக்கும். FIA Formula 3 என்பது உலகின் மிகக்கடுமையான ஜூனியர் நிலை பந்தய வகையாகும்.
Question 11 |
எந்த நகரம், 9வது டெல்லி வசனத்தை (Delhi Dialogue) நடத்தவுள்ளது?
புது டெல்லி
| |
ஜெய்ப்பூர்
| |
போபால்
| |
ஆக்ரா |
Question 11 Explanation:
டெல்லி வசனத்தின் 9வது பதிப்பு 2017 ஜூலை 4 அன்று புது டெல்லியில் “ASEAN-India Relations: Charting the Course for the Next 25 Years” என்ற தலைப்பில் தொடங்கியுள்ளது. இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தொடங்கிவைத்து பின் உரையாற்றினார். இந்த 2 நாள் நிகழ்வில் அரசியல் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், மூத்த அதிகாரிகள், வர்த்தக தலைவர்கள், சிந்தனைக்களஞ்சியங்கள் மற்றும் இந்திய மற்றும் ASEAN நாடுகளின் கல்வியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். ASEAN மற்றும் இந்தியாவிற்கும் இடையே அரசியல் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சமூக-கலாச்சார ஈடுபாடு பற்றி இந்நிகழ்வில் விவாதிக்கப்படும். 2009-லிருந்து இந்நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
Question 12 |
எந்த மாநிலத்தில், Tadoba Andhari புலிகள் காப்பகம் அமைந்துள்ளது?
தமிழ்நாடு
| |
கர்நாடகா
| |
மகாராஷ்டிரா
| |
கோவா |
Question 12 Explanation:
Tadoba Andhari புலிகள் காப்பகம், மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திரபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மகாராஷ்டிராவின் பழமையான மற்றும் மிகப்பெரிய தேசியப்பூங்காவாகும். “Project Tiger” திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 புலிகள் காப்பகத்தில் இதுவும் ஒன்றாகும். இங்கு வங்கப்புலிகள், இந்திய சிறுத்தைப்புலிகள், சோம்பல் கரடிகள், காட்டெருமை, நீலான் பசு, இந்திய தோட்டக்கள்ளன், கொண்டை உழவாரன் போன்றவைகள் உள்ளன.
Question 13 |
தேசிய பேரிடர் நிவாரணப்படையின் (National Disaster Response Force (NDRF)) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
PC தாகூர்
| |
RK பச்நந்தா
| |
சஞ்சய் குமார்
| |
கீர்த்தி சேகர் |
Question 13 Explanation:
1985-ல் இமாச்சலப்பிரதேசத்தில் IPS அதிகாரியாக பணிபுரிந்த சஞ்சய் குமார், தேசிய பேரிடர் நிவாரணப்படையின் (National Disaster Response Force (NDRF)) புதிய தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்குமுன் இப்பதவியிலிருந்த RK பச்நந்தா, இந்தோ-திபெத்திய எல்லைக்காவல் படையின் தலைவரானதால், சஞ்சய் இப்பதவிக்கு வந்துள்ளார். இப்பதவிக்கு வருவதற்குமுன், இவர் இமாச்சலப்பிரதேசத்தில் காவல்துறை தலைவராக (DGP) பணியிலிருந்தார். NDRF, 12 படைப்பிரிவுகளும் 13000 படைவீரர்களையும் கொண்டுள்ளது. பேரிடர் காலங்களில், போர்க்கால அடிப்படையில் உயிர்களையும் உடைமைகளையும் காப்பதே இதன் தலையாய பணியாகும்.
Question 14 |
அண்மையில், இந்தியாவின் எந்த மாநிலத்தில் 2017-க்கான Dree (ட்ரீ) திருவிழா கொண்டாடப்பட்டது?
திரிபுரா
| |
மணிப்பூர்
| |
அருணாச்சலப்பிரதேசம்
| |
மிசோரம் |
Question 14 Explanation:
அருணாச்சலப்பிரதேசத்திலுள்ள Apatani (அபதானி) சமுதாயத்தின் மிகப் பிரபலமான திருவிழாவான Dree (ட்ரீ) திருவிழா, மாநிலம் முழுவதும் 2017 ஜூலை 5 அன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவின்போது, அபதானியர்கள் தங்கள் பாரம்பரிய கடவுளர்களை அறுவடைப்பருவத்தில், சமூக நலன்வேண்டி தீயசக்திகள் ஒழிய வணங்குகிறார்கள். இத்திருவிழாவில் பாரம்பரிய இசை, நடனங்கள், சடங்கு மற்றும் சமூக விருந்துகள் நடைபெறும்.
Question 15 |
எந்த நாட்டில், வில்பட்டு தேசியப்பூங்கா அமைந்துள்ளது?
மாலத்தீவுகள்
| |
பூடான்
| |
இந்தியா
| |
இலங்கை |
Question 15 Explanation:
வில்பட்டு தேசியப்பூங்கா இலங்கையின் மிகப்பெரிய மற்றும் பழமையான தேசியப்பூங்காக்களில் ஒன்றாகும். இப்பூங்காவின் தனித்துவமான அம்சம் “Willus” (இயற்கை ஏரிகள்) மற்றும் மணற்பாங்கான நீர்நிலைகளாகும். இப்பூங்கா 1,317 சதுர கிமீ., (131,693 ஹெக்டேர்) பரப்பளவிலும், கடல்மட்டத்திலிருந்து 0 முதல் 152 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. இங்கு யானை, சிறுத்தை, சோம்பல் கரடி, நீர் எருமை முதலிய விலங்கினங்களும், உடும்பு, உவர்நீர் முதலை, நாகப்பாம்பு, சாரைப்பாம்பு, இந்திய மலைப்பாம்பு, குளத்தாமை முதலிய ஊர்வனங்களும் உள்ளன. இப்பூங்காவைக்காண, பிப்ரவரி மற்றும் அக்டோபர் மாதங்கள் உகந்ததாகும்.
Question 16 |
எந்த இந்திய தடகள வீரர், 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் (AAC-2017) போட்டியில், இந்திய அணிக்காக கொடியேந்தி சென்றார்?
ஜித்து ராய்
| |
டிண்டு லூகா
| |
ஸ்ரபாணி நந்தா
| |
தீபா கர்மாகர் |
Question 16 Explanation:
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி, 2017 ஜூலை 6 அன்று ஒடிசாவின் புவனேசுவரிலுள்ள கலிங்கா அரங்கத்தில் தொடங்கியது. இது 2017 ஜூலை 9 வரை நடைபெறும். இதில் கூட்டத்தினரின் எழுச்சியுடன், இந்திய தடகள வீரர் டிண்டு லூகா இந்திய அணிக்காக கொடியேந்தி சென்றார். இந்த தொடக்கவிழாவில் ஒடிய தடகள வீரர் ஸ்ரபாணி நந்தா, வீரர்கள் சார்பில் சத்தியபிரமாணத்தை ஏற்றுக்கொண்டார். ஆசியாவின் 43 நாடுகளிலிருந்து 1,200-க்கும் அதிகமான தடகள வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வை கண்டுகளித்தனர். இப்போட்டியின் அதிகாரப்பூர்வ சின்னம் பிரபல ஆலிவ் ரிட்லி கடலாமையை குறிக்கும் “Olly Turtle” ஆகும்.
Question 17 |
எந்த நாட்டின் அணி, 2017 ஆசிய அணி ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது?
ஜப்பான்
| |
சீனா
| |
இந்தியா
| |
மலேசியா |
Question 17 Explanation:
2017 ஜூலை 5 அன்று கிர்கிஸ்தானின் Bishskek-ல் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்தியாவின் பங்கஜ் அத்வானியும், இலக்ஷ்மன் ராவத்தும் அணியிணைந்து, பாகிஸ்தானை 3-0 என்ற புள்ளியில் தோற்கடித்தனர். இதன் மூலம் குழுப்போட்டிகளில் ஒருமுறைகூட தோற்காதவர் எனும் பெருமை அத்வானியை சேருகிறது. இந்த பருவத்தில் இது அத்வானியின் 2வது ஆசியப்பட்டமும் மொத்தமாக 8வது பட்டமுமாகும். ராவத்துக்கு இது முதல் சர்வதேசப்பட்டமாகும்.
Question 18 |
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை தேர்தல் ஆணையர் யார்?
VS சம்பத்
| |
ஓம் பிரகாஷ் ராவத்
| |
HS பிரம்மா
| |
அச்சல் குமார் ஜோதி |
Question 18 Explanation:
1975-ல் குஜராத்தில் IAS அதிகாரியாக பணிபுரிந்த அச்சல் குமார் ஜோதி (64), புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2017 ஜூலை 6 அன்று புது டெல்லியில் பொறுப்பேற்றுக்கொண்டார். இவரது பதவிக்காலம், 2018 ஜனவரி 17 வரையாகும். இவருக்குமுன், நசீம் சைதி இப்பதவியிலிருந்தார்.
Question 19 |
எந்த நகரம், 2017-ல் நடைபெறும் 12வது G20 உச்சிமாநாட்டை நடத்தவுள்ளது?
ஹாம்பர்க்
| |
பெர்லின்
| |
டோக்கியோ
| |
பீஜிங் |
Question 19 Explanation:
12வது G20 உச்சிமாநாடு 2017 ஜூலை 7 அன்று ஜெர்மனியிலுள்ள ஹாம்பர்கில், “Shaping an interconnected world” எனும் மையக்கருத்துடன் நடைபெறுகிறது. இந்த 2 நாள் உச்சிமாநாட்டில், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, G20 சந்திப்பில் இந்தியாவின் சார்பாக கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கு தலைமை தாங்குவார் மற்றும் உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தல் பற்றிய கருத்தினை வெளிப்படுத்துவார். மொத்த உலக உற்பத்தியில் 5-ல் 4 பங்கும், உலக வர்த்தகத்தில் ¾ பங்கிற்கும் அதிகமாக G20 நாடுகளால் உற்பத்திசெய்யப்படுகிறது. உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 3-ல் 2 பங்கினர் G20 நாடுகளில் வசிக்கின்றனர். G20 என்பது சர்வதேச நிதி நிலைத்தன்மையை ஊக்குவிப்பதிலுள்ள கொள்கை சிக்கல்களை ஆய்வு செய்தல் மற்றும் ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களைக்கொண்ட 20 முக்கிய பொருளாதாரங்களில் இருக்கும் அரசாங்கங்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கான ஒரு சர்வதேச மன்றமாகும்.
Question 20 |
எந்த நாடு, 7வது BRICS சுகாதார அமைச்சர்கள் சந்திப்பு-2017-ஐ நடத்தவுள்ளது?
சீனா
| |
தென்னாப்பிரிக்கா
| |
இரஷ்யா
| |
இந்தியா |
Question 20 Explanation:
7வது BRICS (Brazil, Russia, India, China and South Africa) சுகாதார அமைச்சர்கள் சந்திப்பு, 2017 ஜூலை 6 அன்று சீனாவின் தியான்ஜினில் தொடங்கியது. இதன் கவனம், பாரம்பரிய மருத்துவ வளர்ச்சியில் சர்வதேச ஒத்துழைப்பை அளிப்பதில் உள்ளது. இந்தியாவிலிருந்து சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா, சுகாதாரத்துறையில் இந்தியாவின் சாதனைகளை “உடல்நலத் துறையை பலப்படுத்துவோம்” என்ற தலைப்பில் உயர்த்திப்பேசியுள்ளார். இந்த 2 நாள் சந்திப்பில், BRICS நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்கள், சர்வதேச நிறுவனங்கள் உட்பட சுமார் 300 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 20 questions to complete.
hello i start a online test series for tnpsc and i wants questionsin tamil and i give amount ……..