Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

July 2nd Week 2020 Current Affairs Online Test Tamil

நடப்பு நிகழ்வுகள் -08 July to 14 July 2020

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -08 July to 14 July 2020. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பதினைந்தாவது நிதிக்குழுவின் தலைவர் யார்?
A
A K சிக்ரி
B
N K சிங்
C
இராஜீவ் குமார்
D
இரஞ்சன் கோகோய்
Question 1 Explanation: 
 பொருளாதார வல்லுநரும் முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியுமான N K சிங், பதினைந்தாவது நிதிக்குழுவின் தலைவராக உள்ளார். `20 இலட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட வேளாண் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு மாநிலங்களை ஊக்குவிப்பு செய்யும் ஒரு செயல்முறையை உருவாக்க நிதிக்குழு அண்மையில் முடிவுசெய்துள்ளது. இக்குழுவில் நிதிக்குழு உறுப்பினர் இரமேஷ் சந்த், வேளாண் செயலாளர் சஞ்சை அகர்வால் மற்றும் வேளாண்மை, ஆராய்ச்சி மற்றும் கல்வி செயலாளர் T மகாபத்ரா ஆகியோர் உள்ளனர்.
Question 2
வருடாந்திர உச்சிமாநாட்டை, மெய்நிகராக நடத்திய ASEAN’இல் (தென்கிழக்காசிய நாடுகளின் சங்கம்) எத்தனை நாடுகள் உறுப்பினராக உள்ளன?
A
எட்டு
B
பத்து
C
பன்னிரண்டு
D
பதினைந்து
Question 2 Explanation: 
 ASEAN (தென்கிழக்காசிய நாடுகளின் சங்கம்) தலைவர்கள் சமீபத்தில் காணொளிவழி நடைபெற்ற அதன் வருடாந்திர உச்சிமாநாட்டின்போது சந்தித்துக் கொண்டனர். ASEAN என்பது 10 நாடுகளை (இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்சு, கம்போடியா, மியான்மர், புருனே, லாவோஸ்) உறுப்பினர்களாகக்கொண்ட ஒரு பிராந்திய சங்கமாகும். 2020ஆம் ஆண்டில் ASEAN’இன் தலைமைப் பொறுப்பு வியட்நாம் வகித்து வருகிறது. COVID-19 தொற்றுக்கு இடையில் விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக இவ்வுச்சிமாநாடு மெய்நிகராக நடத்தப்பட்டது.
Question 3
`35,000 கோடி முதலீடுகளை உருவாக்குவதற்காக பிரதமர் FME திட்டத்தை தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
MSME அமைச்சகம்
B
உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
C
வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சகம்
D
வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்
Question 3 Explanation: 
 உணவுப்பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சரான ஹர்சிம்ரத் கௌர் பாதல், சுயசார்பு இந்தியா இயக்கத்தின் ஒருபகுதியாக பிரதமர் உணவுப் பதப்படுத்துதல் சிறு தொழில்களை முறைப்படுத்தும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.  இத்திட்டமானது மொத்த முதலீடாக `35,000 கோடியை உருவாக்கும் என்றும் தொழில்திறன் மற்றும் ஓரளவு தொழில்திறன் தேவைப்படும் ஒன்பது இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார். தகவல் பெறுதல், பயிற்சி, வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொள்ளுதல் மற்றும் முறைப்படுத்துதல்மூலம் 8 லட்சம் தொழிற்சாலைகள் பலனடையும்.
Question 4
போதைப்பொருள் & குற்றங்கள் தொடர்பான ஐ.நா அலுவலகத்தின் (UNODC) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
ஜெனீவா
B
நியூயார்க்
C
வியன்னா
D
பாரிஸ்
Question 4 Explanation: 
 போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐ.நா அலுவலகம் (UNODC) என்பது ஆஸ்திரியாவின் வியன்னாவை தலைமையிடமாகக்கொண்ட போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் குற்றத்தடுப்புக்கா -ன ஐ.நா அலுவலகமாகும். அண்மைய UNODC உலக போதைமருந்து குறித்த அறிக்கையின்படி, 2018ஆம் ஆண்டில் சுமார் 26.9 கோடி மக்கள் போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளனர். இது, கடந்த 2009ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 30 சதவீதம் அதிகம். இளம்பருவத்தினரும் இளையோருமே அதிகம் போதைப்பொருள் பயன்படுத்துவோராக உள்ளனர். 2004ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஐந்து மடங்காக அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Question 5
“சமற்கிருத சத்பவ மண்டபம்” என்ற சமுதாய மையம் கட்டப்படுகிற மாநிலம் எது?
A
மத்திய பிரதேசம்
B
உத்தர பிரதேசம்
C
மகாராஷ்டிரா
D
பீகார்
Question 5 Explanation: 
 இராம்பூரில் நுமாயிஷ் மைதானத்தில், “சமற்கிருத சத்பவ மண்டப”த்திற்கு மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அடிக்கல் நாட்டினார். இந்த மண்டபம், `92 கோடி செலவில், சிறுபான்மையினர் வசிக்கும் இந்தியாவின் 41 மாவட்டங்களில் அரசின் திட்டங்களைச் செய்ல்படுத்தும் பிரதமர் ஜன் விகாஸ் காரியகிரம் (PMJVK) என்ற திட்டத்தின்கீழ், மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தால் கட்டப்படுகிறது.  இந்தச் சமுதாய மையம் பல்வேறு சமூகப்பொருளாதார செயல்பாடுகளுக்கும், திறன் வளர்ச்சிப்பயிற்சி, இதரப் பயிற்சிகள், COVID-19 போன்ற பேரிடர் காலங்களில் மேற்கொள்வதற்கான செயல்பாடுகள், பல்வேறு விளையாட்டுச் செயல்பாடுகள் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும்.
Question 6
‘PLATINA’ எனப் பெயரிடப்பட்டுள்ள, COVID-19 தொற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான உலகின் மிகப்பெரிய பிணியாற்றும் பிளாஸ்மா சிகிச்சைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
A
தமிழ்நாடு
B
மகாராஷ்டிரா
C
ஆந்திர பிரதேசம்
D
கேரளா
Question 6 Explanation: 
 COVID-19 தொற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக மகாராஷ்டிரா மாநில அரசு உலகின் மிகப்பெரிய பிணியாற்றும் பிளாஸ்மா சிகிச்சைத்திட்டத்தை, ‘PLATINA’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அம்மாநிலத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட COVID-19 நோயாளிகளில், குறைந்தது 500 பேரையாவது காப்பாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் BMC மருத்துவக் கல்லூரிகளில் இந்தப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்தச்சிகிச்சைத்திட்டத்தின்கீழ், அனைத்து நோயாளிகளுக்கும், 200 மில்லி அளவுக்கு பிணியாற்றும் பிளாஸ்மா விலையில்லாமல் வழங்கப்படும்.
Question 7
யாருக்கு, புள்ளியியலுக்கான பங்களிப்புக்காக, ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கப்பட்டுள்ளது?
A
D சுப்பா ராவ்
B
C இரங்கராஜன்
C
பிமல் ஜலான்
D
Y V ரெட்டி
Question 7 Explanation: 
 இந்தியாவில் தேசிய புள்ளியியல் அமைப்பில், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் ஆளுநர் Dr. C இரங்கராஜனின் சிறப்பானப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. “இந்திய புள்ளியியலின் தந்தை” பி.சி.மகலனோபிஸின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.29 அன்று கொண்டாடப்படும் தேசிய புள்ளியியல் நாளை முன்னிட்டு அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. C இரங்கராஜன் அவர்கள், தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
Question 8
இந்திய அரசு அதன் அதிகாரத்தை எச்சட்டத்தின்கீழ் செயல்படுத்தி 59 சீன செயலிகளை தடைசெய்தது?
A
தகவல் தொழில்நுட்பச் சட்டம்
B
தகவலறியும் உரிமைச் சட்டம்
C
வெளிநாட்டு வர்த்தக (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம்
D
ஏற்றுமதி–தரக்கட்டுப்பாடு மற்றும் ஆய்வுச்சட்டம்
Question 8 Explanation: 
 இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குக்கு பாரபட்சம் காட்டும் நோக்கில் உள்ள 59 திறன்பேசி செயலிகளுக்கு (டிக்-டாக், UC உலாவி) மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69A பிரிவின்கீழ் தடைவிதித்துள்ளது. பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து, இச்செயலிகள் குறித்து வந்த புகார்களையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Question 9
2020 ஜூன்.29 அன்று கொண்டாடப்பட்ட தேசிய புள்ளியியல் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Sustainable Development Goals 3 and 5
B
Honouring P. C. Mahalanobis
C
Statistics is Life
D
Indian statistics
Question 9 Explanation: 
 தேசிய புள்ளியியல் அமைப்பை உருவாக்கியதில், பேராசிரியர். PC மகலனோபிஸின் மதிப்பிடவியலாத பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அவரது பிறந்தநாளான ஜூன்.29 அன்று, தேசிய புள்ளியியல் நாள் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு (2020) புள்ளியியல் நாளுக்கான கருப் பொருள், “நீடித்த வளர்ச்சி இலக்கு (SDG) - 3 (நலமான வாழ்வை உறுதிசெய்வது மற்றும் அனைத்து வயதினருக்கான நலத்தை ஊக்குவிப்பது) மற்றும் SDG - 5 ( பாலின சமத்துவத்தை அடைவது மற்றும் அனைத்துப் பெண்கள் மற்றும் வளரிளம்பெண்களுக்கு அதிகாரமளிப்பது). மத்திய அரசு, மாநில அரசு / யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் அமைப்புகளின் அதிகாரப்பூர்வப் புள்ளியியல் நிபுணர்களின், சிறந்த சாதனையை அங்கீகரிப்பதற்காக, திட்ட அமலாக்கத்துறை புதிய விருதுககளை உருவாக்கியுள்ளது.  இதிய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் Dr C இரங்கராஜனுக்கு “பேராசிரியர் P C மகலனோபிஸ் தேசிய விருது” வழங்கப்பட்டது. தேசிய மருத்துவப் புள்ளியல் கழகத்தின் (NIMS) முன்னாள் இயக்குநர் Dr. அரவிந்த் பாண்டே, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR) மற்றும் மத்திய அரசின் திட்ட அமலாக்கத்துறையின் முன்னாள் கூடுதல் தலைமை இயக்குநர் Dr அகிலேஷ் சந்திரா குல்ஸ்ரேஷ்தா ஆகியோருக்குக் கூட்டாக, ‘பேராசிரியர் PV சுகாத்மே தேசிய விருது – 2020’ வழங்கப்பட்டது.
Question 10
மின்சாரப் பணிகளுக்கு தடையின்மைச் சான்றிதழ் (NOC) வழங்குவதற்காக புதியதொரு இணைய தளத்தை உருவாக்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
நிலக்கரி அமைச்சகம்
B
மின்துறை அமைச்சகம்
C
பாதுகாப்பு அமைச்சகம்
D
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
Question 10 Explanation: 
 இராணுவ அமைப்புகளுக்கு அருகில் செயல்படுத்தப்படும் மின்சாரம் / காற்றாலை / சூரியமின்னாற்றல் திட்டங்கள் மற்றும் இந்திய எல்லைக்குட்பட்ட நீர்நிலைகள் & சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஆராய்ச்சி, அளவீடு, துரப்பணப்பணிகள், பயன்பாட்டிற்கு தடையின்மைச் சான்றிதழ் வழங்குவதற்கான புதிய இணையதளத்தை, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கியுள்ளது.  பயனுள்ள, விரைவான, வெளிப்படையான நடைமுறைகளை செயல்படுத்தி, இதுபோன்ற கோரிக்கை -களுக்குத் தீர்வுகாண்பதற்கு இந்த இணையதளச்செயல்பாடு வழிவகுக்கும். வான் கண்காணிப்புக்கு தடையின்மைச் சான்றிதழ் வழங்குவதற்காக, மத்திய பாதுகாப்பு அமைச்சகம், ஏற்கனவே இதுபோன்ற இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Question 11
எந்த மாநிலத்தின் மலிவுவிலை வீட்டுவசதி திட்டங்களுக்கு, உலக வங்கி $250 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது?
A
தமிழ்நாடு
B
மேற்கு வங்கம்
C
ஒடிசா
D
கேரளா
Question 11 Explanation: 
 குறைந்த வருவாய்ப் பிரிவினர் மலிவு விலையில் வீடுகளை பெறுவதற்கு உதவும் வகையில் இந்திய அரசு, தமிழ்நாடு அரசு & உலக வங்கி ஆகியவை சட்டபூர்வமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. $200 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள முதலாவது தமிழ்நாடு வீட்டுவசதி வலுப்படுத்தும் திட்டம் மற்றும் $50 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களுக்கான சட்டபூர்வமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.  இவ்விரு திட்டங்களும் தமிழ்நாட்டின் வீட்டுவசதித்துறைக்கான கொள்கைகள், நிறுவனங்கள் மற்றும் ஒழுங்கமைப்புகள் ஆகியவற்றை வலுப்படுத்துவதாக அமையும். மேலும், இந்தத் துறையில் தனியார் பங்கேற்பினை ஊக்குவிப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக்கொண்டுள்ளது.
Question 12
‘கோலோங்சூ’ என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான முதலாவது கூட்டு நீர்மின் திட்டமாகும்?
A
சிங்கப்பூர்
B
வங்கதேசம்
C
பூட்டான்
D
மியான்மர்
Question 12 Explanation: 
 ‘கோலோங்சூ’ என்பது இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையிலான முதல் கூட்டு நீர்மின் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்திற்கான சலுகை ஒப்பந்தம், அண்மையில், மெய்நிகராக கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் இந்தத் திட்டத்தின் கட்டுமான மற்றும் தொடர்புடைய பணிகளைத் தொடங்கும். 600 MW திறனுடைய இந்தத்திட்டம், கிழக்கு பூட்டானின் கோலோங்சூ ஆற்றில் அமையவுள்ளது. பூட்டானின் DGPC மற்றும் இந்தியாவின் சட்லஜ் ஜல் வித்யுத் நிகாம் லிட் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு நிறுவனமான கோலோங்சூ ஹைட்ரோ எனர்ஜி லிட் இதை செயல்படுத்தும்.
Question 13
விஸ்டனால், ‘இருபத்தொராம் நூற்றாண்டின் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க டெஸ்ட் வீரர்’ என்று அறிவிக்கப்பட்டவர் யார்?
A
மகேந்திர சிங் தோனி
B
விராட் கோலி
C
இரவீந்திர ஜடேஜா
D
R அஸ்வின்
Question 13 Explanation: 
 விஸ்டன், இரவீந்திர ஜடேஜாவை, ‘21ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க டெஸ்ட் வீரர்’ என்று பெயரிட்டுள்ளார். உலகின் இரண்டாவது மதிப்புமிக்க டெஸ்ட் வீரராகவும் அவர் பெயர் பெற்றார். இப்பட்டியலில், இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் முதலிடம் வகிக்கிறார். வீரர்களின் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்வதற்கும் உலக கிரிக்கெட்டில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு ‘MVP மதிப்பீட்டை’ வழங்குவதற்கும் கிரிக்கெட்டில் விரிவான பகுப்பாய்வுக் கருவியாக பயன்படுத்தப்படும் ‘கிரிக்விஸைப்’ விஸ்டன் பயன்படுத்தியுள்ளது. 31 வயதான இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளரான இரவீந்திர ஜடேஜா, 97.3 என்ற MVP மதிப்பீட்டைப் பெற்றுள்ளார்.
Question 14
தொற்றுநோய்போல பரவும் திறன்கொண்ட ஒரு புதிய வகை பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நாடு எது?
A
ஜப்பான்
B
சீனா
C
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
D
வியட்நாம்
Question 14 Explanation: 
 அமெரிக்க அறிவியல் இதழான PNAS’இல் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின்படி, சீன ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வகை பன்றிக்காய்ச்சலைக் கண்டறிந்துள்ளனர். இது ஒரு தொற்றுநோய்போல பரவும் திறன் கொண்டதாகும். இந்த G4 காய்ச்சல், மரபணு ரீதியாக, கடந்த 2009ஆம் ஆண்டில் தொற்றுநோயை ஏற்படுத்திய H1N1 மறபுவகையிலிருந்து வந்ததாகும். சீனாவின் நோய் கட்டுப்பாடு & தடுப்புமையத்தின் கூற்றுப்படி, G4 மிகவும் தொற்றக்கூடியதாகவும், மனித உயிரணுக்களில் பெருக்கமடையக் கூடியதாக –வும் தீவிரமான அறிகுறிகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. அமெரிக்க அறிவியல் இதழான PNAS’இல் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின்படி, சீன ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வகை பன்றிக்காய்ச்சலைக் கண்டறிந்துள்ளனர். இது ஒரு தொற்றுநோய்போல பரவும் திறன் கொண்டதாகும். இந்த G4 காய்ச்சல், மரபணு ரீதியாக, கடந்த 2009ஆம் ஆண்டில் தொற்றுநோயை ஏற்படுத்திய H1N1 மறபுவகையிலிருந்து வந்ததாகும். சீனாவின் நோய் கட்டுப்பாடு & தடுப்புமையத்தின் கூற்றுப்படி, G4 மிகவும் தொற்றக்கூடியதாகவும், மனித உயிரணுக்களில் பெருக்கமடையக் கூடியதாக –வும் தீவிரமான அறிகுறிகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. அமெரிக்க அறிவியல் இதழான PNAS’இல் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின்படி, சீன ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வகை பன்றிக்காய்ச்சலைக் கண்டறிந்துள்ளனர். இது ஒரு தொற்றுநோய்போல பரவும் திறன் கொண்டதாகும். இந்த G4 காய்ச்சல், மரபணு ரீதியாக, கடந்த 2009ஆம் ஆண்டில் தொற்றுநோயை ஏற்படுத்திய H1N1 மறபுவகையிலிருந்து வந்ததாகும். சீனாவின் நோய் கட்டுப்பாடு & தடுப்புமையத்தின் கூற்றுப்படி, G4 மிகவும் தொற்றக்கூடியதாகவும், மனித உயிரணுக்களில் பெருக்கமடையக் கூடியதாக –வும் தீவிரமான அறிகுறிகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. அமெரிக்க அறிவியல் இதழான PNAS’இல் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின்படி, சீன ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வகை பன்றிக்காய்ச்சலைக் கண்டறிந்துள்ளனர். இது ஒரு தொற்றுநோய்போல பரவும் திறன் கொண்டதாகும். இந்த G4 காய்ச்சல், மரபணு ரீதியாக, கடந்த 2009ஆம் ஆண்டில் தொற்றுநோயை ஏற்படுத்திய H1N1 மறபுவகையிலிருந்து வந்ததாகும். சீனாவின் நோய் கட்டுப்பாடு & தடுப்புமையத்தின் கூற்றுப்படி, G4 மிகவும் தொற்றக்கூடியதாகவும், மனித உயிரணுக்களில் பெருக்கமடையக் கூடியதாக –வும் தீவிரமான அறிகுறிகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. அமெரிக்க அறிவியல் இதழான PNAS’இல் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின்படி, சீன ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வகை பன்றிக்காய்ச்சலைக் கண்டறிந்துள்ளனர். இது ஒரு தொற்றுநோய்போல பரவும் திறன் கொண்டதாகும். இந்த G4 காய்ச்சல், மரபணு ரீதியாக, கடந்த 2009ஆம் ஆண்டில் தொற்றுநோயை ஏற்படுத்திய H1N1 மறபுவகையிலிருந்து வந்ததாகும். சீனாவின் நோய் கட்டுப்பாடு & தடுப்புமையத்தின் கூற்றுப்படி, G4 மிகவும் தொற்றக்கூடியதாகவும், மனித உயிரணுக்களில் பெருக்கமடையக் கூடியதாக –வும் தீவிரமான அறிகுறிகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. அமெரிக்க அறிவியல் இதழான PNAS’இல் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின்படி, சீன ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வகை பன்றிக்காய்ச்சலைக் கண்டறிந்துள்ளனர். இது ஒரு தொற்றுநோய்போல பரவும் திறன் கொண்டதாகும். இந்த G4 காய்ச்சல், மரபணு ரீதியாக, கடந்த 2009ஆம் ஆண்டில் தொற்றுநோயை ஏற்படுத்திய H1N1 மறபுவகையிலிருந்து வந்ததாகும். சீனாவின் நோய் கட்டுப்பாடு & தடுப்புமையத்தின் கூற்றுப்படி, G4 மிகவும் தொற்றக்கூடியதாகவும், மனித உயிரணுக்களில் பெருக்கமடையக் கூடியதாக –வும் தீவிரமான அறிகுறிகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. அமெரிக்க அறிவியல் இதழான PNAS’இல் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின்படி, சீன ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வகை பன்றிக்காய்ச்சலைக் கண்டறிந்துள்ளனர். இது ஒரு தொற்றுநோய்போல பரவும் திறன் கொண்டதாகும். இந்த G4 காய்ச்சல், மரபணு ரீதியாக, கடந்த 2009ஆம் ஆண்டில் தொற்றுநோயை ஏற்படுத்திய H1N1 மறபுவகையிலிருந்து வந்ததாகும். சீனாவின் நோய் கட்டுப்பாடு & தடுப்புமையத்தின் கூற்றுப்படி, G4 மிகவும் தொற்றக்கூடியதாகவும், மனித உயிரணுக்களில் பெருக்கமடையக் கூடியதாக –வும் தீவிரமான அறிகுறிகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. அமெரிக்க அறிவியல் இதழான PNAS’இல் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின்படி, சீன ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வகை பன்றிக்காய்ச்சலைக் கண்டறிந்துள்ளனர். இது ஒரு தொற்றுநோய்போல பரவும் திறன் கொண்டதாகும். இந்த G4 காய்ச்சல், மரபணு ரீதியாக, கடந்த 2009ஆம் ஆண்டில் தொற்றுநோயை ஏற்படுத்திய H1N1 மறபுவகையிலிருந்து வந்ததாகும். சீனாவின் நோய் கட்டுப்பாடு & தடுப்புமையத்தின் கூற்றுப்படி, G4 மிகவும் தொற்றக்கூடியதாகவும், மனித உயிரணுக்களில் பெருக்கமடையக் கூடியதாக –வும் தீவிரமான அறிகுறிகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. அமெரிக்க அறிவியல் இதழான PNAS’இல் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின்படி, சீன ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வகை பன்றிக்காய்ச்சலைக் கண்டறிந்துள்ளனர். இது ஒரு தொற்றுநோய்போல பரவும் திறன் கொண்டதாகும். இந்த G4 காய்ச்சல், மரபணு ரீதியாக, கடந்த 2009ஆம் ஆண்டில் தொற்றுநோயை ஏற்படுத்திய H1N1 மறபுவகையிலிருந்து வந்ததாகும். சீனாவின் நோய் கட்டுப்பாடு & தடுப்புமையத்தின் கூற்றுப்படி, G4 மிகவும் தொற்றக்கூடியதாகவும், மனித உயிரணுக்களில் பெருக்கமடையக் கூடியதாக –வும் தீவிரமான அறிகுறிகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. அமெரிக்க அறிவியல் இதழான PNAS’இல் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின்படி, சீன ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வகை பன்றிக்காய்ச்சலைக் கண்டறிந்துள்ளனர். இது ஒரு தொற்றுநோய்போல பரவும் திறன் கொண்டதாகும். இந்த G4 காய்ச்சல், மரபணு ரீதியாக, கடந்த 2009ஆம் ஆண்டில் தொற்றுநோயை ஏற்படுத்திய H1N1 மறபுவகையிலிருந்து வந்ததாகும். சீனாவின் நோய் கட்டுப்பாடு & தடுப்புமையத்தின் கூற்றுப்படி, G4 மிகவும் தொற்றக்கூடியதாகவும், மனித உயிரணுக்களில் பெருக்கமடையக் கூடியதாக –வும் தீவிரமான அறிகுறிகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. அமெரிக்க அறிவியல் இதழான PNAS’இல் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின்படி, சீன ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வகை பன்றிக்காய்ச்சலைக் கண்டறிந்துள்ளனர். இது ஒரு தொற்றுநோய்போல பரவும் திறன் கொண்டதாகும். இந்த G4 காய்ச்சல், மரபணு ரீதியாக, கடந்த 2009ஆம் ஆண்டில் தொற்றுநோயை ஏற்படுத்திய H1N1 மறபுவகையிலிருந்து வந்ததாகும். சீனாவின் நோய் கட்டுப்பாடு & தடுப்புமையத்தின் கூற்றுப்படி, G4 மிகவும் தொற்றக்கூடியதாகவும், மனித உயிரணுக்களில் பெருக்கமடையக் கூடியதாக –வும் தீவிரமான அறிகுறிகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
Question 15
தடைசெய்யப்பட்ட பொருட்கள்குறித்து விளையாட்டு வீரர்/வீராங்கனைகளுக்கு தகவலளிப்பதற்காக அறிமுகப்படுத்தப்படுள்ள செயலியின் பெயர் என்ன?
A
ஸ்போர்ட்ஸ் செக்
B
NADA இந்தியா
C
NADA செக்
D
செக் & கேல்
Question 15 Explanation: 
 தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுபற்றிய தகவல்களை வழங்குவதற்காக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் முதல் திறன்பேசி செயலியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார். இச்செயலி, NADA’ஐ எளிதில் அணுகக்கூடிய தகவல்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் குறித்து விழிப்புடன் இருப்பார்கள். ஊக்கமருந்து சோதனையை எளிதாக நடத்துவதற்கான வழிமுறைகளையும் இச்செயலி வழங்குகிறது.
Question 16
எம்மாநிலம் / யூனியன் பிரதேசத்தில், கழிவுகளைப்பயன்படுத்தி எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கான ஆலையை நிறுவுவதற்காக, இந்தியன் எண்ணெய் நிறுவனமும் NTPC’உம் கூட்டிணைந்துள்ளன?
A
தமிழ்நாடு
B
புது தில்லி
C
ஆந்திர பிரதேசம்
D
கேரளா
Question 16 Explanation: 
 தில்லி, ஓக்லா பகுதியில் கழிவுகளைப் பயன்படுத்தி எரிபொருள் உற்பத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியன் எண்ணெய் நிறுவனம், தேசிய அனல்மின் கழகம் (NTPC) மற்றும் தெற்கு தில்லி மாநகராட்சி இடையே கையெழுத்தானது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, மாநகராட்சி கழிவுகளில், எரிக்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தி, இந்த நிலையத்தில், ஆண்டுக்கு 17,500 டன் RDF வகை ஒத்திசைவு வாயு உற்பத்தி செய்யப்பட்டு, பின்னர் அதிலிருந்து மின்னுற்பத்தி செய்யப்படவுள்ளது.  மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மின் துறை மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) R K சிங் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் மெய்நிகராக கலந்துகொண்டனர்.
Question 17
ஆசியாவின் முதல் தொடர்ச்சியான துத்தநாகம் பூசப்பட்ட வலிவூட்டுக் கம்பிகள் (Continuous Galvanized Rebar - CGR) உற்பத்தி வசதி தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது?
A
இராஜஸ்தான்
B
பஞ்சாப்
C
மேற்கு வங்கம்
D
சத்தீஸ்கர்
Question 17 Explanation: 
 ஆசியாவின் முதல் தொடர்ச்சியான துத்தநாகம் பூசப்பட்ட வலிவூட்டுக் கம்பிகள் (Continuous Galvanized Rebar) உற்பத்தி வசதியை சர்வதேச துத்தநாக சங்கம் (IZA) பஞ்சாபில் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ஹிந்துஸ்தான் துத்தநாக லிட் ஆதரவளிக்கும். இது ஒரு தனியார் உற்பத்தி நிறுவனமான மாதவ் KRG குழுமத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான துத்தநாகம் பூசப்பட்ட வலிவூட்டுக் கம்பிகள் (CGR) என்று அழைக்கப்படும் இப்புதிய தயாரிப்பு, சிறந்த நீடிப்புத்தன்மை மற்றும் குறைந்த பராமரிப்பு ஆகியவற்றைக்கொண்ட மதிப்பு கூட்டப்பட்ட வலிவூட்டுக் கம்பிகள் ஆகும். ‘Rebar’ என்பது வலிவூட்டுக் கம்பி (Reinforced Bar) என்பதன் சுருக்கமாகும்.
Question 18
‘CogX 2020’ என்ற புகழ்பெற்ற உலக தலைமைப்பண்பு உச்சிமாநாட்டில், இரு விருதுகளை வென்ற இந்திய அரசாங்கத்தின் டிஜிட்டல் தளம் எது?
A
மைகவ் கொரோனா
B
டிஜிட்டல் இந்தியா
C
கட்டுடல் இந்தியா
D
தூய்மை இந்தியா இயக்கம்
Question 18 Explanation: 
 செயற்கை நுண்ணறிவுப் பிரிவால் இயங்கும் அமைப்பான ‘MyGov Corona Helpdesk’, அண்மையில் நடைபெற்ற ‘CogX 2020’, உலக தலைமைப்பண்பு உச்சிமாநாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் உருவெடுக்கும் தொழில்நுட்ப விழாவில் இரண்டு பெருமைமிகு விருதுகளை வென்றுள்ளது. ஆண்டுதோறும் இலண்டனில் நடைபெறும் இந்த விழாவில், MyGov’இன் தொழில்நுட்ப பங்குதார நிறுவனமான ஜியோஹாப்டிக் டெக்னாலஜிஸ், ‘COVID-19 மற்றும் சமுதாயத்துக்கான சிறந்த புதுமை விருது’, ‘COVID-19 ஒட்டுமொத்த வெற்றியாளர் மக்கள் தேர்வு’ ஆகிய விருதுகளை வென்றுள்ளது.
Question 19
சாலை விபத்துக்குள்ளானவர்களுக்கு `2.5 இலட்சம் மதிப்பிலான காப்பீட்டு வரம்புடன் பணமில்லா சிகிச்சைத் திட்டத்தை தொடங்கவுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்
B
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்
C
பெண்கள் மற்றும் சிறார்கள் மேம்பாட்டு அமைச்சகம்
D
உள்துறை அமைச்சகம்
Question 19 Explanation: 
 சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமில்லா சிகிச்சை அளிப்பதற்கென, மோட்டார் வாகனச் சட்டம் – 2019’இன்கீழ் உத்தேசிக்கப்பட்டுள்ளபடி திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான திட்ட வரைபடம் ஒன்றை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. மோட்டார் வாகன விபத்து நிதியம் ஒன்றை ஏற்படுத்துவதும் இத்திட்டத்தில் உள்ளது.  இந்த நிதியம், சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் பயன்படுத்தப்படும். பணம் செலுத்தக்கூடிய திறன் பற்றிய வேறுபாடு இல்லாமல், அனைவருக்கும் உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை கிடைக்கச் செய்யும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Question 20
குற்றவியல் சட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள தேசிய அளவிலான குழுவின் தலைவர் யார்?
A
ரன்பீர் சிங்
B
A K சிக்ரி
C
C இரங்கராஜன்
D
தாவர் சந்த் கெலோட்
Question 20 Explanation: 
 குற்றவியல் சட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள தேசிய அளவிலான குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவுக்கு, தில்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் ரன்பீர் சிங் தலைமைதாங்கவுள்ளார். பல்வேறு மூத்த சட்டக்கல்வியாளர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்திய தண்டனைச்சட்டம், குற்றவியல் நடைமுறைச்சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகியவற்றில் சாத்தியம்மிகுந்த சீர்திருத்தங்களை இந்தக்குழு மேற்கொள்ளும்.
Question 21
நடப்பாண்டில் (2020) வரும் தேசிய மருத்துவர்கள் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Lessen the mortality of COVID–19
B
No violence against Doctors
C
Help those who help us
D
Honouring B.C.Roy
Question 21 Explanation: 
 மரு.பிதன் சந்திர இராயின் பிறந்த மற்றும் நினைவுநாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.1 அன்று இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. நாட்டின் மூத்த மருத்துவரான அவர், மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 1991ஆம் ஆண்டில், இந்திய அரசு, தேசிய மருத்துவர்கள் நாளை நிறுவியது. “Lessen the mortality of COVID–19” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Question 22
.நா அவைக்கான இந்தியாவின் அடுத்த நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
இந்திரா மணி பாண்டே
B
ரோனன் சென்
C
விவேக் கட்ஜூ
D
தரஞ்சித் சிங் சந்து
Question 22 Explanation: 
 ஐ.நா அவை மற்றும் ஜெனீவாவில் உள்ள பிற பன்னாட்டு அமைப்புகளுக்கான இந்தியாவின் அடுத்த நிரந்தர பிரதிநிதியாக மூத்த தூதர் இந்திரா மணி பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான இவர், தற்போது, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக பணியாற்றி வருகிறார். தற்போதைய பிரதிநிதியாக இருந்துவரும் இராஜீவ் K சந்தரைத் தொடர்ந்து அவர் இப்பதவிக்கு வரவுள்ளார். கெய்ரோ, இஸ்லாமாபாத், காபூல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்திரா மணி பாண்டே பணியாற்றியுள்ளார்.
Question 23
அயல்நாட்டிலிருந்து திரும்பும் தனது மாநில மக்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக கேரள மாநிலம் அறிவித்துள்ள திட்டத்தின் பெயர் என்ன?
A
Welcome Back
B
Dream Kerala
C
God’s Own Country
D
Winning Covid
Question 23 Explanation: 
 அயல்நாட்டிலிருந்து திரும்பும் தனது மாநில மக்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக கேரள மாநிலம், சமீபத்தில், ‘Dream Kerala’ என்ற திட்டத்தை அறிவித்தது. கேரளத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பணிகளை மேம்படுத்துவதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.  இது, கேரளத்தின் நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்டமைப்பதற்கான திறன்களையும் அறிவையும் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பல்வேறு துறைகள் கூட்டாக ஒருங்கிணைந்து இத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளன.
Question 24
ஆராய்ச்சிச் சூழலை வலுப்படுத்துவதற்காக அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் (SERB) தொடங்கியுள்ள புதிய திட்டத்தின் பெயர் என்ன?
A
அறிவியலைத் துரிதப்படுத்து
B
பாரத அறிவியல்
C
அறிவியலைப் படி
D
அறிவியல் மையம்
Question 24 Explanation: 
 ஆராய்ச்சி உள்ளகப் பயிற்சிகள், திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள், பயிலரங்குகள் ஆகியவற்றை நாடு முழுவதும் நடத்துவதற்கு ஒரு தளத்தை வழங்கும் வகையில், ‘அறிவியலைத்துரிதப்படுத்து’ (Accelerate Vigyan) என்னும் புதிய திட்டத்தை அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் தொடங்கியுள்ளது. அமைச்சகங்களுக்கிடையிலான இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் உயரிய அறிவியல் ஆராய்ச்சி, அறிவியல் மனித ஆற்றலைத் தயார் செய்வதாகும்.
Question 25
‘ஹமாரா கர் - ஹமாரா வித்யாலயா’ என்ற திட்டத்தை தொடங்கவுள்ள மாநிலம் எது?
A
இராஜஸ்தான்
B
மத்திய பிரதேசம்
C
மேற்கு வங்கம்
D
சத்தீஸ்கர்
Question 25 Explanation: 
 ‘ஹமாரா கர் - ஹமாரா வித்யாலயா’ என்ற புதியதொரு திட்டத்தை மத்திய பிரதேச மாநில அரசு தொடங்கவுள்ளது. ‘எனது வீடு - எனது பள்ளி’ என்பது இந்தத் திட்டத்தின் பொருளாகும். பள்ளிசெல்லும் சிறார்களுக்கு பள்ளிபோன்ற சூழலில் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், மாநில கல்வி மையத்தின் கூற்றுப்படி, குழந்தைகள் யோகாவை படிக்கவும் எழுதவும் அதனை மேற்கொள்ளவும் கற்றுக்கொள்வார்கள்.
Question 26
தரவு அறிவியல் & நிரலாக்கத்தில் உலகின் முதல் இணையவழி இளங்கலை அறிவியல் பட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள இந்திய கல்வி நிறுவனம் எது?
A
இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மெட்ராஸ்
B
இந்திய தொழில்நுட்ப நிறுவனம், பம்பாய்
C
இந்திய அறிவியல் நிறுவனம் (IISc)
D
இந்திய தொழில்நுட்ப நிறுவனம், கெளகாத்தி
Question 26 Explanation: 
 உலகின் முதல் இணையவழி தரவு அறிவியல் & நிரலாக்கத்துக்கான இளநிலைப்பட்டப்படிப்பை (B.Sc) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் இரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’, காணொளிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தார். இந்தத் திட்டத்தை சென்னை IIT தயாரித்து வழங்கியுள்ளது.  இப்பட்டப்படிப்பில் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், ஆங்கிலம் மற்றும் கணிதத்துடன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் மேலும் கல்லூரிகளில் வேறு இளநிலைப் பட்டப்படிப்பில் சேர்ந்தவர்களும் விண்ணபிக்கலாம். இந்தத்தனித்துவமான இணையவழிப் பட்டப்படிப்பு 3 வெவ்வேறு நிலைகளில் வழங்கப்படும் – அடிப்படை பட்டம் (Foundation programme), பட்டயம் (Diploma programme), இளநிலைப்பட்டப்படிப்பு (Degree Programme).
Question 27
“பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா” திட்டத்தை செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?
A
ஊரக வளர்ச்சி அமைச்சகம்
B
குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் அமைச்சகம்
C
உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்
D
வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம்
Question 27 Explanation: 
 “பிரதம அமைச்சர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா” என்ற திட்டத்தை மத்திய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் செயல்படுத்துகிறது. “பிரதம அமைச்சர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா”வின் இரண்டாம் கட்ட விவரங்களை உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் இராம்விலாஸ் பஸ்வான் அண்மையில் வெளியிட்டார். இத்திட்டத்தின்கீழ், ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் 5 கிலோகிராம் கோதுமை / அரிசி மற்றும் 1 கிலோகிராம் கொண்டைக்கடலை ஆகியவை மேலும் ஐந்து மாதங்களுக்கு (எதிர்வரும் நவம்பர் வரை) விலையில்லாமல் வழங்கப்படும்.
Question 28
நடப்பாண்டுக்கான (2020) ‘சிறந்த குடியேறிகள்’ விருதுபெற்ற இந்திய-அமெரிக்க எழுத்தாளர் மற்றும் புற்றுநோயியல் வல்லுநர் யார்?
A
சித்தார்த்தா முகர்ஜி
B
ஜூம்பா லஹிரி
C
பரீத் ஜகாரியா
D
சஞ்சை குப்தா
Question 28 Explanation: 
 புலிட்சர் பரிசு வென்ற இந்திய-அமெரிக்க எழுத்தாளரும், புற்றுநோயியல் வல்லுநருமான சித்தார்த்தா முகர்ஜி, நியூயார்க்கின் கார்னகி நிறுவனத்தால், நடப்பாண்டுக்கான (2020) ‘சிறந்த குடியேறிகள்’ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மற்றொரு இந்திய-அமெரிக்க பொருளாதார பேராசிரியரான ராஜ் செட்டியும் இவ்விருதுக்குத் தேர்வாகியுள்ளார். COVID-19 சிக்கலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு அவர்கள் செய்த பங்களிப்புக்காக அவர்கள் தேர்வாகியுள்ளனர்.
Question 29
எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில், உள்நாட்டு மரவகைகள்கொண்ட புதிய நகர்ப்புற வனத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திறந்துவைத்தார்?
A
மகாராஷ்டிரா
B
மத்திய பிரதேசம்
C
புது தில்லி
D
உத்தரபிரதேசம்
Question 29 Explanation: 
 மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சமீபத்தில், புது தில்லியில் நகர்ப்புற வனங்களை திறந்துவைத்தார். ஐம்பத்தொன்பது உள்நாட்டு மரவகைகளின் 12,000 கன்றுகளுடன் இந்த நகர்ப்புற வனம் உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அலுவலக வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் 2021ஆம் ஆண்டுக்குள் இது ஒரு முழுமையான காடாக உருவாகும் எனவும் தில்லியின் வளித்தரத்தையும் மேம்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Question 30
‘பெளதே லாகோ, பரியவரன் பச்சாவ்’ (மரக்கன்று நடு, சுற்றுச்சூழலைக் காப்பாற்று) என்ற மரம்நடு இயக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநில / யூனியன் பிரதேச அரசு எது?
A
சிக்கிம்
B
மேற்கு வங்கம்
C
புது தில்லி
D
ஜார்க்கண்ட்
Question 30 Explanation: 
 ‘பெளதே லாகோ, பரியவரன் பச்சாவ்’ (மரக்கன்று நடு, சுற்றுச்சூழலைக் காப்பாற்று) என்றழைக்கப்படும் ஒரு மரம்நடு இயக்கத்தை தில்லி யூனியன் பிரதேசம் அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கூற்றுப்படி, 17 நாள் நீளும் இவ்வியக்கம் தில்லியில் 31 இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு நோக்கம் கொண்டுள்ளது. எதிர்வரும் 2021ஆம் ஆண்டுக்குள் 350 சதுரகிமீ அளவுக்கு வனப்பரப்பை அதிகரிப்பதே இதன் இலக்காகும். தில்லியில் நிலவிவரும் மாசுபாட்டைக் குறைக்க வனப்பரப்பை அதிகரிப்பதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இவ்வியக்கம் நீளும் காலம் முற்றிலும் “விரிக்ஷரூபன் பகவாடா” என்று கடைப்பிடிக்கப்படும்.
Question 31
‘Striped Hairstreak மற்றும் Elusive Prince’ என்பவை கீழ்க்காணும் எவ்வுயிரியுடன் தொடர்புடையவை?
A
ஆமை
B
பாம்பு
C
வண்ணத்துப்பூச்சி
D
சிலந்தி
Question 31 Explanation: 
 அந்துப்பூச்சி மற்றும் வண்ணத்துப்பூச்சிகளைப் ஆரய்ந்தறிவதில் நிபுணத்துவம்வாய்ந்த செதிலிறக்கை இன ஆராய்ச்சியாளர்கள், அருணாச்சல பிரதேசத்தில் ஸ்ட்ரைப்ட் ஹேர்ஸ்ட்ரீக் மற்றும் எலுசிவ் பிரின்ஸ் ஆகிய 2 புதியவகை வண்ணத்துப்பூச்சிகளை சமீபத்தில் கண்டுபிடித்தனர். ஸ்ட்ரைப்ட் ஹேர்ஸ்ட்ரீக் வகை வண்ணத்துப்பூச்சி முதன்முதலில் ஜப்பானிலும் எலுசிவ் பிரின்ஸ் வகை வண்ணத்துப்பூச்சி முதன்முதலில் வியட்நாமிலும் கண்டுபிடிக்கப்பட்டது. கல்வி மற்றும் சூழல் மேம்பாட்டுச் சங்கத்தின் கூற்றுப்படி, இவ்விரண்டு புதிய உயிரினங்களின் கண்டுபிடிப்பு, நாட்டில் உள்ள வண்ணத்துப்பூச்சி இனங்களின் எண்ணிக்கையை 1327’ஆக உயர்த்தியுள்ளது.
Question 32
கங்கையாற்றை புதுப்பிப்பதற்கான இந்தியாவின் திட்டத்திற்கு $400 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதியுதவி ஆதரவை வழங்கவுள்ள பன்னாட்டு அமைப்பு எது?
A
பன்னாட்டுச் செலவாணி நிதியம்
B
உலக வங்கி
C
ஆசிய வளர்ச்சி வங்கி
D
BRICS வங்கி
Question 32 Explanation: 
 கங்கையாற்றை புதுப்பிப்பதற்கு முற்படும், “நமாமி கங்கை” திட்டத்திற்கான ஆதரவை மேம்படுத்துவத -ற்காக உலக வங்கியும், இந்திய அரசும் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இரண்டாவது தேசிய சின்னமான கங்கையாறு மாசுபடுவதைத் தடுப்பதற்கும், ஐந்நூறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ஆற்றுப்படுகையின் நிர்வாகத்தை வலுப்படுத்தவும் இந்தத்திட்டம் உதவும். $400 மில்லியன் டாலர் செயல்பாட்டில், $381 மில்லியன் கடன் மற்றும் $19 மில்லியன் டாலர் வரை முன்மொழியப்பட்ட உத்தரவாதம் ஆகியவை அடங்கும்.  $381 மில்லியன் அமெரிக்க டாலர் கடன்தொகை ஐந்தாண்டு சலுகைக்காலம் உட்பட 18.5 ஆண்டுகள் முதிர்ச்சியைக்கொண்டுள்ளது. $19 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உத்தரவாதத்தின் காலாவதி தேதி உத்தரவாத செயல்திறன் தேதியிலிருந்து 18 ஆண்டுகள் ஆகும்.
Question 33
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற USMCA ஒப்பந்தத்தில் எத்தனை நாடுகள் இடம்பெற்றுள்ளன?
A
மூன்று
B
நான்கு
C
ஐந்து
D
ஆறு
Question 33 Explanation: 
 அமெரிக்கா-மெக்ஸிகோ-கனடா ஒப்பந்தமானது (USMCA) 25 ஆண்டுகள் பழைமையான NAFTA’ஐ (North American Free Trade Agreement) மாற்றியமைத்துள்ளது. மாற்றியமைக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் ஜூலை.1 அன்று நடைமுறைக்கு வந்தது. USMCA என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகள் (US), மெக்ஸிகோ (M) மற்றும் கனடா (CA) ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒப்பந்தமாகும்.  இந்த ஒப்பந்தம் முதன்முதலில் 2018’இல் கையெழுத்தானது. இது, தொழில்நுட்பத் துறையை ஆதரிக்க முற்படுவதோடு சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண்பதற்காக $600 மில்லியன் அமெரிக்க டாலர்களை உள்ளடக்கிய நிதியத்தையும் கொண்டுள்ளது.
Question 34
COVID-19 தொற்றுக்கு எதிரான மருந்துகளை கண்டறிவதற்காக, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகம் தொடங்கியுள்ள இணையவழி போட்டியின் பெயரென்ன?
A
Corona Care Hackathon
B
Drug Discovery Hackathon
C
Bharat Medico Hackathon
D
Bharat Medico Hackathon
Question 34 Explanation: 
 COVID-19 தொற்றுக்கு எதிரான மருந்துகளை கண்டறிவதற்காக, “Drug Discovery Hackathon” என்ற பெயரிலான இணையவழிப் போட்டியை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் இரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ அவர்களும் சுகாதார அமைச்சர் Dr. ஹர்ஷ் வர்தன் ஆகியோரும் இணைந்து தொடங்கிவைத்தனர். உள்நாடு மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் இந்தப் போட்டியில் பங்குகொண்டு, சாத்தியமான மருந்துகள் குறித்த தங்கள் கண்டுபிடிப்புகளை சமர்ப்பிக்கலாம்.  இந்த முன்முயற்சியில், ஹேக்கத்தான் வாயிலாக, சக்திவாய்ந்த மருந்து மூலக்கூறுகளை அடையாளம் காண்பதில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் புதுமைக் கண்டுபிடிப்புப் பிரிவு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆகிய அமைப்புகள் தீவிர கவனம் செலுத்தும் அதேவேளையில், அடையாளங்காணப்பட்ட மூலக்கூறுகளை முன்னெடுத்துச்சென்று, பகுப்பாய்வு மற்றும் ஆய்வுக்கூட சோதனை அடிப்படையில், செயல்திறன், நச்சுத்தன்மை, உணர்திறன் மற்றும் தனித்தன்மைகள் குறித்து அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சில் ஆய்வுமேற்கொள்ளும்.
Question 35
‘பிரேரக் தெளர் சம்மன்’ என்ற பெயரில் புதியதொரு விருதை நிறுவியுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
கலாச்சார அமைச்சகம்
B
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
C
உள்துறை அமைச்சகம்
D
ஊரக வளர்ச்சி அமைச்சகம்
Question 35 Explanation: 
 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையில் நடத்தப்படும் நகர்ப்புற இந்தியாவின் வருடாந்திர தூய்மைப்பணிக் கணக்கெடுப்பான, “ஸ்வச் சர்வேக்ஷன் – 2021”க்கான ஆறாவது கணக்கெடுப்புப் பணிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தொடங்கியுள்ளது.  இதனையொட்டி, ‘ஊக்கமளிக்கும் மரியாதை’ எனப்பொருள்படும் ‘பிரேரக் தெளர் சம்மன்’ (Prerak Dauur Samman) எனப்படும் புதிய விருது ஒன்று அறிமுகப்படுத்தப்படுவதாக அவ்வமைச்காகம் அறிவித்தது. பிளாட்டினம், தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் ஆர்வத்துடன் பணியாற்றுவோர் ஆகிய 5 பிரிவின் கீழ் இவ்விருது வழங்கப்படுவதுடன், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று நகரங்கள் அங்கீகரிக்கப்படும். மக்கள் தொகை அடிப்டையில் நகரங்களை மதிப்பீடு செய்யும் தற்போதைய நடைமுறை கைவிடப்பட்டு, ஆறு குறிகாட்டிச் செயல்பாடுகள் அடிப்படையில் நகரங்கள் தேர்வு செய்யப்படவுள்ளன.
Question 36
CMFRI’இன் அறிக்கையின்படி, கடந்த 2019ஆம் ஆண்டில் கடல்மீன்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கோவா
D
ஒடிசா
Question 36 Explanation: 
 இந்தியாவின் கடல் உணவு உற்பத்தியானது 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019ஆம் ஆண்டில் 2.1 சதவீதம் உயர்ந்து புதிய இலக்கை எட்டியுள்ளது. இதில், கடல்மீன் உற்பத்தியில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பெற்றுள்ளது என்று மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI) தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் 3.56 மில்லியன் டன் அளவுக்கு கடல் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு, 7.75 இலட்சம் டன் அளவுக்கு கடல் உணவுகளை உற்பத்தி செய்துள்ளது. அதைத்தொடர்ந்த இடங்களில் குஜராத் மாநிலமும், கேரள மாநிலமும் உள்ளன.
Question 37
பன்னாட்டு விளையாட்டுத்துறை பத்திரிகைக் கழகத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜூலை.2 அன்று கொண்டாடப்படுகிற சிறப்பு நாள் எது?
A
உலக விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் நாள்
B
உலக விளையாட்டு சங்கங்கள் நாள்
C
உலக விளையாட்டு வீரர்கள் நாள்
D
உலக பயிற்சியாளர்கள் நாள்
Question 37 Explanation: 
 ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.2 அன்று உலக விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் நாளாகவோ அல்லது பன்னாட்டு விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் நாளாகவோ கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்களின் முக்கியத்துவத்தையும் இந்நாள் அங்கீகரிக்கிறது. இது, கடந்த 1924ஆம் ஆண்டில் நடந்த பாரிசு ஒலிம்பிக்கின்போது நிறுவப்பட்ட சர்வதேச விளையாட்டுத்துறை பத்திரிகைக் கழகத்தின் (AIPS) ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. AIPS என்பது பன்னாட்டு விளையாட்டுத்துறை ஊடகங்களைக்குறிக்கும் மிகவுயரிய தொழில்முறை அமைப்பாகும்.
Question 38
போபோஸ் என்பது எந்தக் கோளின் மிகப்பெரிய இயற்கை செயற்கைக்கோளாகும்?
A
வியாழன்
B
செவ்வாய்
C
சனி
D
வெள்ளி
Question 38 Explanation: 
 செவ்வாய் கோளுக்கு மிகவருகில் இருக்கக்கூடிய அதன் மிகப்பெரிய துணைக்கோளான ‘போபோஸ்’ஐ ISRO’இன் மங்கள்யான் படம்பிடித்து அனுப்பியுள்ளது. இந்தப் படங்களை MoM விண்கலத்திலிருக்கும் Mars Colour Camera (MCC) என்னும் நிழற்படக் கருவி எடுத்துள்ளது. இந்தப் படங்கள் செவ்வாய் கோளிலிருந்து 7,200 கிலோமீட்டர் தொலைவும், ’போபோஸ்’ துணைக்கோளிலிருந்து 4,200 கிலோ மீட்டர் தொலைவும்கொண்ட சுற்றுப்பாதையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
Question 39
பிரான்சின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
ஜீன் காஸ்டெக்ஸ்
B
இம்மானுவேல் மேக்ரோன்
C
எட்வர்ட் பிலிப்
D
மிகைல் மிஷூஸ்டின்
Question 39 Explanation: 
 பிரான்சின் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், ஜீன் காஸ்டெக்ஸை பிரான்சின் அடுத்த பிரதமராக நியமித்துள்ளார். முன்னதாக பிரான்சின் முன்னாள் பிரதமர் எட்வர்ட் பிலிப் தனது பதவிவிலகலைச் சமர்ப்பித்தார். பிரான்ஸின் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்வதற்காக, அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அரசாங்கத்தை மாற்றியமைத்துள்ளார். 55 வயதான அரசாங்க ஊழியர் ஜீன் காஸ்டெக்ஸ், நாட்டின் மறுதொடக்க உத்திகளை ஒருங்கிணைத்துள்ளார்.
Question 40
பசுமை ஆற்றலை உருவாக்குவதற்காக, கூட்டு நிறுவனத்தை நிறுவும் நோக்கில், எந்தப்பொதுத்துறை நிறுவனத்துடன் இந்திய நிலக்கரி நிறுவனம் கூட்டுசேர்ந்துள்ளது?
A
NLC இந்தியா
B
GAIL
C
ONGC
D
NTPC நிறுவனம்
Question 40 Explanation: 
 நிலக்கரி அமைச்சகத்தின் கீழுள்ள இரு மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், அதாவது NLC இந்தியா நிறுவனம் மற்றும் இந்திய நிலக்கரி நிறுவனம் ஆகியவை பசுமை ஆற்றலை உற்பத்தி செய்வதற்காக ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இக்கூட்டு நிறுவனம் நாடு முழுவதும் 5000 மெகாவாட் (5 கிகாவாட்) சூரிய ஆற்றல் மற்றும் வெப்பமின்னாற்றல் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முன்மொழியப்பட்ட நிறுவனத்தில், இரு நிறுவனங்களும் 50:50 என்ற விகிதத்தில் முதலீடு செய்யும். இரு பொதுத்துறை நிறுவனங்களின் நிபுணத்துவம், மின்சாரத்துறையை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும்.
Question 41
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முதல் சமூக ஊடக மீ-செயலியின் பெயர் என்ன?
A
Elyments
B
Incorporate
C
Homegrown
D
Inspire
Question 41 Explanation: 
 இந்தியாவின் குடியரசுத்துணைத்தலைவர், நாட்டின் முதல் சமூக ஊடக மீ-செயலியை ‘எலிமென்ட்ஸ்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தவுள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து இச்செயலியை உருவாக்கியுள்ளனர். எட்டுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் கிடைக்கப் பெறும் இந்தச்செயலி, சமகாலத்தில் பிரபலமாக இயங்கும் சமூக ஊடக பயன்பாடுகளின் அம்சங்களை ஒன்றிணைத்து ஒருங்கே வழங்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இலவச குரல் & காணொளி அழைப்புகள் மற்றும் அரட்டைகள் போன்ற அம்சங்களும் இந்தச் செயலியில் இடம்பெற்றுள்ளன.
Question 42
சமற்கிருத மொழியில், ‘சமற்கிருத சப்தகிகி’ என்ற பெயரில் அதன் முதலாவது செய்தி இதழ் நிகழ்ச்சியை தொடங்கவுள்ள அமைப்பு எது?
A
தூர்தர்ஷன் செய்திகள்
B
அகில இந்திய வானொலி (AIR)
C
DD கிசான்
D
DD அருண்பிரபா
Question 42 Explanation: 
 இந்திய அரசின் வானொலி சேவையான அகில இந்திய வானொலி (AIR) தனது முதல் செய்தி இதழ் நிகழ்ச்சியை சமற்கிருத மொழியில் ஒலிபரப்பவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு, ‘சமற்கிருத சப்தகிகி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஒலிபரப்பப்படும்.  இந்நிகழ்ச்சியில், சமற்கிருதம் சார்ந்த செய்திகள் மற்றும் அவ்வாரத்தைய முக்கிய நிகழ்வுகள் சமற்கிருத மொழியில் ஒலிபரப்பப்படும். 20 நிமிடங்கள் நீளும் இந்நிகழ்வை, அகில இந்திய வானொலியின் பண்பலையிலும் (FM) கேட்கவியலும்.
Question 43
மக்களுக்கு அத்தியாவசிய நலவாழ்வுச்சேவைகளை வழங்கும், ‘தன்வந்திரி ரதம்’ என்ற வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
A
மகாராஷ்டிரா
B
குஜராத்
C
ஒடிசா
D
மேற்கு வங்கம்
Question 43 Explanation: 
 அகமதாபாத் மாநகராட்சியானது அந்நகரம் முழுவதும், ‘தன்வந்திரி ரதம்’ என்ற பெயரில் 120 மருத்துவ வாகனங்களை பணியமர்த்தியுள்ளது. இந்த வாகனம், மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று COVID-19 தவிர்த்த பிற அத்தியாவசிய நலவாழ்வுச் சேவைகளை வழங்குகிறது. ஒவ்வொரு வாகனத்திலும் ஓர் ஆயுஷ் மருத்துவர், ஓர் உதவி மருத்துவ மற்றும் செவிலியர்கள் மற்றும் நகர்ப்புற நலவாழ்வு மையத்தைச் சார்ந்த உள்ளூர் மருத்துவ அதிகாரி ஆகியோர் இருப்பார்கள். இது, வழக்கமான வெளிப்புற நோயாளிகளுக்கான ஆலோசனைகளையும் வழங்கும்.
Question 44
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) உருவாக்கக்கூடிய COVID-19 தடுப்பூசியின் பெயரென்ன?
A
கொவிடின்
B
கொவேக்ஸின்
C
கொவிரோ
D
கொவதா
Question 44 Explanation: 
 ‘கொவேக்ஸின்’ என்னும் COVID-19 தடுப்பூசியை உருவாக்குவதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) பாரத் பயோடெக் நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ளது. கட்டம்-1 மற்றும் 2 மருத்துவ பரிசோதனைகளை நடத்த இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டகம் அனுமதி வழங்கியுள்ளது. தடுப்பூசியை உருவாக்குவதற்கு உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரத்திற்கு ஏற்ப செயல்படுவதாக அண்மையில் ICMR அறிவித்தது.
Question 45
நடப்பாண்டில் (2020) வரும் பன்னாட்டு கூட்டுறவு நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Co-operatives for Climate Action
B
Co-operatives and SDGs
C
Co-operatives and their challenges
D
Co-operatives across the globe
Question 45 Explanation: 
 ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமையன்று பன்னாட்டு கூட்டுறவு நாள் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு (2020) ஜூலை.4 அன்று இச்சிறப்புநாள் அனுசரிக்கப்பட்டது. “Co-operatives for Climate Action” என்பது நடப்பாண்டு (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். கூட்டுறவுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், உலகின் வளர்ச்சிக்கு கூட்டுறவு இயக்கத்தின் பங்களிப்புகளை முன்னிலைப்படுத்துவதும் அன்றைய நாளின் நோக்கமாகும்.
Question 46
மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் LPG இணைப்புகளை வழங்கியுள்ள முதல் மாநிலம் எது?
A
குஜராத்
B
ஹிமாச்சல பிரதேசம்
C
ஆந்திர பிரதேசம்
D
ஒடிசா
Question 46 Explanation: 
 அண்மையில் மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் LPG இணைப்புகளை வழங்கிய முதல் மாநிலமாக ஹிமாச்சல பிரதேச மாநிலம் மாறியது. இதனை செயல்படுத்துவதற்காக அம்மாநில அரசு ‘ஹிமாச்சல கிரிஹினி சுவிதா’ என்றவொரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத்திட்டத்தின்கீழ், மாநிலத்தில் உள்ள சுமார் 2.76 இலட்சம் குடும்பங்கள், LPG இணைப்பு பெற்று பயனடைந்துள்ளன. வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு இலவச LPG இணைப்பை வழங்க, ‘பிரதம அமைச்சர் உஜ்வாலா யோஜனா’வையும் அம்மாநில அரசு செயல்படுத்தியது.
Question 47
‘பலராம் யோஜனா’ என்ற பெயரிலான நிதியுதவித்திட்டத்தை தொடங்கவுள்ள மாநில அரசு எது?
A
குஜராத்
B
ஹிமாச்சல பிரதேசம்
C
ஆந்திர பிரதேசம்
D
ஒடிசா
Question 47 Explanation: 
 ‘பலராம் யோஜனா’ என்ற பெயரிலான ஒரு புதிய நிதியுதவித்திட்டத்தை ஒடிசா மாநில அரசு தொடங்க உள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவி வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட, ‘KALIA’ திட்டத்தின் தொடர்ச்சியாக இத்திட்டம் உள்ளது. இப்புதிய திட்டத்தின்கீழ், அடுத்த ஈராண்டுகளில் கூட்டு கடப்பாடுக் குழுக்கள்மூலம் மாநிலத்தில் உள்ள 7 இலட்சம் நிலமற்ற வாரச் சாகுபடியாளர்களுக்கு பயிர் கடன்களை ஒடிசா மாநில அரசு வழங்கும்.
Question 48
எந்த மாநிலத்தில், ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்னுற்பத்தி ஆலை என்று அழைக்கப்படும் ரேவா அதிபெரும் சூரிய மின்னுற்பத்தி ஆலை திறக்கப்படவுள்ளது?
A
மத்திய பிரதேசம்
B
ஹிமாச்சல பிரதேசம்
C
ஆந்திர பிரதேசம்
D
ஒடிசா
Question 48 Explanation: 
 இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் செளகான் ஆகியோர் இணைந்து ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்னுற்பத்தி ஆலையை திறந்துவைத்தனர். 750 மெகாவாட் உற்பத்தித்திறன்கொண்ட இந்த ரேவா அதிபெரும் சூரிய மின்னுற்பத்தி ஆலையை, அவர்கள், காணொளிவழியில் திறந்துவைத்தனர்.  இது, ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய சூரிய மின்னுற்பத்தி ஆலைகளுள் ஒன்றென கூறப்படுகிறது. இந்த ஆலை, ம.பி மாநிலத்தின் விந்திய பிராந்தியத்தின் ரேவா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
Question 49
கல்வி உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, இந்தியா, அண்மையில், எந்த நாட்டுடனான ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டது?
A
கானா
B
ஆப்கனிஸ்தான்
C
மலாவி
D
சிரியா
Question 49 Explanation: 
 ஆப்கனிஸ்தானில் கல்வி உட்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்தியாவும் ஆப்கனிஸ்தானும் கையொப்பமிட்டன. உயர்தாக்கங்கள்கொண்ட சமூக வளர்ச்சித் திட்டங்களின்கீழ் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவதற்காக இந்தியா இதை செயல்படுத்துகிறது. நான்கு ஆப்கானிஸ்தான் மாகாணங்களான நூரிஸ்தான், படாக்ஷன், பரா மற்றும் கபீசாவில் கல்வி உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படவுள்ளது.
Question 50
மின்சார இரயில்களை நேரடியாக இயக்குவதற்காக, உலகிலேயே முதன்முறையாக, தனக்கென ஒரு சொந்த சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்கவுள்ள நாட்டின் இரயில்வே எது?
A
சீனா
B
இந்தியா
C
அமெரிக்கா ஐக்கிய நாடுகள்
D
சிங்கப்பூர்
Question 50 Explanation: 
 பாரத் மிகுமின் நிறுவனத்துடன் இணைந்து மின்சார இரயில்களை நேரடியாக இயக்குவதற்காக, உலகிலேயே முதன்முறையாக, தனக்கென ஒரு சொந்த சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை இந்திய இரயில்வே அமைத்துள்ளது. அத்தகைய சூரிய மின்னுற்பத்தி நிலையம், மத்திய பிரதேச மாநிலத்தின் பினா இழுவை துணைமின்நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது. 1.7 மெகாவாட் சூரிய மின்னுற்பத்தித் திறன்கொண்ட இந்நிலையத்தால் ஓராண்டில் சுமார் 25 இலட்சம் அலகு மின்னாற்றலை உற்பத்தி செய்ய முடியும். இதன்மூலம், ஓராண்டுக்கு சுமார் `1.37 கோடியைச் சேமிக்க முடியும்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!