July 3rd Week 2020 Current Affairs Online Test Tamil

நடப்பு நிகழ்வுகள் -15 July to 21 July 2020

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -15 July to 21 July 2020. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Golden Birdwing’ என்பது கீழ்க்காணும் எந்த உயிரினத்துடன் தொடர்புடையதாகும்?
A
வானம்பாடி
B
வண்ணத்துப்பூச்சி
C
சிலந்தி
D
பாம்பு
Question 2
பன்னாட்டு நிதியியல் சேவை மைய ஆணையத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
இஞ்செட்டி சீனிவாஸ்
B
C இரங்கராஜன்
C
நரசிம்மன்
D
D சுப்பா ராவ்
Question 3
கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் நூறாண்டுகால பங்கேற்பை நிறைவுசெய்ததை கொண்டாடும் விதமாக, தனக்கென ஒரு புதிய இலச்சினையை ஏற்றுக்கொண்டுள்ள விளையாட்டு அமைப்பு எது?
A
ஹாக்கி இந்தியா
B
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு
C
அகில இந்திய டென்னிஸ் சங்கம்
D
இந்திய ஒலிம்பிக் சங்கம்
Question 4
’Self Scan’ என்ற பெயரில் தனது மாநிலத்துக்கென சொந்த ஆவணம் மேவும் திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
A
தெலுங்கானா
B
கேரளா
C
மேற்கு வங்கம்
D
இராஜஸ்தான்
Question 5
தேசிய உயிரியல் அறிவியல் மையத்தின்படி, நாட்டில் அதிகளவில் உட்கலப்பினப் புலிகள் காணப்படும் மாநிலம் எது?
A
மத்தியபிரதேசம்
B
இராஜஸ்தான்
C
மேற்கு வங்கம்
D
கர்நாடகா
Question 6
போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐ. நா அலுவலகத்தின் உலக மருந்து அறிக்கையின்படி, கடந்த 2018ஆம் ஆண்டில் அதிகளவில் அபின் பறிமுதல் செய்யப்பட்ட நாடு எது?
A
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
B
ஈரான்
C
ஜெர்மனி
D
ஐக்கிய அரபு அமீரகம்
Question 7
எந்த உயிரியலாளரின் பணியை நினைவுகூரும் விதமாக உலக விலங்குவழி நோய்கள் நாள் ஜூலை 6 அன்று கொண்டாடப்படுகிறது?
A
லூயி பாஸ்டர்
B
எட்வர்ட் ஜென்னர்
C
அலெக்சாண்டர் பிளமிங்
D
இராபர்ட் கோச்
Question 8
இந்திய வானியற்பியல் நிறுவன ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சூரியன் போன்ற நட்சத்திரங்கள் தங்களின் பிற்கால வாழ்க்கையின்போது பேரண்டத்தில் எந்தத் தனிமத்தை உற்பத்தி செய்கின்றன?
A
ஹைட்ரஜன்
B
லித்தியம்
C
கரிமம்
D
ஆக்ஸிஜன்
Question 9
அதன் முன்னாள் முதலமைச்சரின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக ஜூலை.8 அன்று ‘உழவர் நாளைக்’ கொண்டாடுகிற மாநிலம் எது?
A
ஆந்திர பிரதேசம்
B
மத்திய பிரதேசம்
C
கர்நாடகா
D
உத்தரபிரதேசம்
Question 10
கடல்சார் நல்லுறவை மேம்படுத்துவதற்காக இந்திய கடலோரக் காவல்படையானது எந்த நாட்டின் கடலோரக் காவல்படையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?
A
ஜப்பான்
B
இந்தோனேசியா
C
பிரான்ஸ்
D
இலங்கை
Question 11
மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட வேளாண் உட்கட்டமைப்பு நிதியத்தின் மொத்த மதிப்பு எவ்வளவு?
A
ரூ.25,000 கோடி
B
ரூ.50,000 கோடி
C
ரூ.1,00,000 கோடி
D
ரூ.2,00,000 கோடி
Question 12
எந்தத் திட்டத்தின்கீழ், புலம்பெயர்ந்தோர் மற்றும் ஏழை மக்களுக்காக, மலிவு விலையிலான வாடகை வீடுகள் கட்டப்படவுள்ளன?
A
பிரதம அமைச்சர் ஆவாஸ் யோசனா – நகர்புறம்
B
பிரதம அமைச்சர் சதக் யோசனா
C
தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம்
D
தூய்மை இந்தியா இயக்கம்
Question 12 Explanation: 
 மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம், பிரதமர் வீட்டுவசதித்திட்டம் – நகர்ப்புறம் திட்டத்தின்கீழ் ஒரு துணைத்திட்டமாக நகர்ப்புற புலம்பெயர் தொழிலாளர்கள் & ஏழைகளுக்கென மலிவான வாடகை வீட்டு வளாகங்களை உருவாக்குவதற்கான தனது ஒப்புதலை வழங்கியது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், கடந்த மே மாதத்தில் மலிவான வாடகை வீட்டு வளாகங்கள் துணைத்திட்டத்தைத் தொடங்கியது. இந்தத் திட்டத்தின்கீழ், கிட்டத்தட்ட மூன்று இலட்சம் பயனாளிகள் வரை தொடக்கத்தில் பயனடைவார்கள்.
Question 13
கீழ்காணும் எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ் தேசிய மூலிகைத் தாவரங்கள் வாரியம் செயல்படுகிறது?
A
வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம்
B
சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம்
C
AYUSH அமைச்சகம்
D
MSME அமைச்சகம்
Question 14
ஐக்கியப் பேரரசால் ஏற்பாடு செய்யப்பட்டு மெய்நிகராக நடத்தப்பட்ட, ‘India Global Week 2020’ என்னும் மாநாட்டின் கருப்பொருள் என்ன?
A
Be the Revival: India and a Better New World
B
Atmanirbhar Bharat
C
Spiritual Face of India
D
India winning COVID-19
Question 15
பரஸ்பர தரவு பரிமாற்றத்திற்காக, எந்த அமைப்பு, மத்திய நேரடிவரிகள் வாரியத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது?
A
இந்திய ரிசர்வ் வங்கி
B
இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்
C
NITI ஆயோக்
D
அமலாக்க இயக்குநரகம்
Question 15 Explanation: 
 பரஸ்பர தரவு பரிமாற்றத்திற்காக, மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) மற்றும் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இருநிறுவனங்களும் தத்தம் தரவுத்தளங்களில் உள்ள தேவையான தகவல்களை தானியங்கி மற்றும் வழமையான முறையில் பகிர்ந்துகொள்ளும். மேலும், தரவு பரிமாற்ற நிலையை மதிப்பாய்வு செய்யும் நோக்கத்திற்காக ஒரு தரவு பரிமாற்ற வழிநடத்தும் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
Question 16
அரசாங்க நிலங்களை பாதுகாப்பதற்காக விண்வெளி தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்திய மாநிலம் எது?
A
தெலுங்கானா
B
ஒடிசா
C
இராஜஸ்தான்
D
பஞ்சாப்
Question 17
தென்கிழக்காசியாவில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா ஆகிய நோய்களை முழுவதுமாக ஒழித்த முதல் இரண்டு நாடுகள் எவை?
A
இந்தியா மற்றும் இலங்கை
B
இலங்கை மற்றும் மாலத்தீவுகள்
C
இந்தியா மற்றும் மாலத்தீவுகள்
D
வங்கதேசம் மற்றும் மாலத்தீவுகள்
Question 17 Explanation: 
 உலக நலவாழ்வு அமைப்பின் புதிய அறிக்கையின்படி, மாலத்தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் தென்கிழக்காசிய பிராந்தியத்தில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா ஆகிய நோய்களை முற்றுமுழுவதுமாக ஒழித்துள்ள இரண்டு நாடுகளாக மாறியுள்ளன. 2023 காலக்கெடுவுக்கு முன்னதாகவே இவ்விரண்டு நாடுகளும் அவ்விரண்டு நோய்களை முற்றிலுமாக ஒழித்துள்ளன. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்நோய் பரவுவதற்கான எந்த ஓர் ஆதாரமும் இல்லாதபோது, தட்டம்மை மற்றும் ரூபெல்லாவை ஒரு நாடு ஒழித்ததாக WHO அறிவிக்கின்றது.
Question 18
IIT முன்னாள் மாணவர் பேரவையானது உலகின் மிகப்பெரிய மூலக்கூறு கண்டறியும் ஆய்வகத்தை எந்த நகரத்தில் அமைத்துவருகிறது?
A
மும்பை
B
புது தில்லி
C
பெங்களூரு
D
ஹைதராபாத்
Question 19
இந்திய விண்வெளி ஆய்வுமையத்தால் ஏவப்படவிருக்கும் அமேசானியா-1 என்பது எந்த நாட்டின் செயற்கைக்கோளாகும்?
A
பிரேசில்
B
ஜப்பான்
C
ஆஸ்திரேலியா
D
நியூசிலாந்து
Question 19 Explanation: 
 இந்திய விண்வெளி ஆய்வு மையமானது PSLV ஏவுகலத்தைப் பயன்படுத்தி பிரேசிலின் ‘அமேசானியா -1’ என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவவுள்ளது. பிரேசிலில் வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்டு மற்றும் சோதனை செய்யப்பட்ட இந்தச்செயற்கைகோள் முதல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இந்தச் செயற்கைக்கோள் அடுத்த மாதம் ஏவப்படவுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
Question 20
மங்கோலிய கஞ்சூர்’ உரையின் கையெழுத்துப் பிரதிகளை மறுபதிப்பு மேற்கொள்ளும் திட்டத்தை தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
கலாச்சார அமைச்சகம்
B
சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்
C
தகவல்தொடர்பு அமைச்சகம்
D
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
Question 21
அடுத்த ஐந்தாண்டுகளில் உலகின் சராசரி வெப்பநிலை 1.5° செல்சியஸ் என்ற அளவுக்கு உயரும் என்று மதிப்பிட்டுள்ள அமைப்பு எது?
A
உணவு மற்றும் வேளாண் அமைப்பு
B
உலக வானிலை ஆய்வு அமைப்பு
C
பன்னாட்டு கடல்சார் அமைப்பு
D
பன்னாட்டு அணுவாற்றல் நிறுவனம்
Question 21 Explanation: 
 ஐக்கிய நாடுகள் அவையின் வானிலை நிறுவனமான உலக வானிலை ஆய்வமைப்பின் அண்மைய வெளியீட்டின்படி, அடுத்த ஐந்தாண்டுகளில் உலகின் சராசரி வெப்பநிலை 1.5° C என்ற அளவுக்கு உயரும். இந்த உயர்வு, உலகில் தொழில்மயமாக்கலுக்கு முந்தியிருந்த சராசரி வெப்பநிலையை விட அதிகமாகும். பல்வேறு அறிவியலாளர்களின் ஆய்வின்படி, மனிதனால் உருவாக்கப்பட்ட பைங்குடில் வளி உமிழ்வு காரணமாக, உலகெங்கிலும் நிலவும் தற்போதைய சராசரி வெப்பநிலை, 1850-1900 காலப்பகுதியில் நிலவிவந்த சராசரி வெப்பநிலையைவிட ஏற்கனவே 1° C’க்கு அதிகமாக உள்ளது.
Question 22
APStar-6D’ என்ற வணிகரீதியிலான தகவல்தொடர்பு செயற்கைக்கோளை அதன் ‘லாங் மார்ச்’ என்ற ஏவுகலத்தைப் பயன்படுத்தி ஏவிய நாடு எது?
A
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
B
சீனா
C
உருஷ்யா
D
இஸ்ரேல்
Question 22 Explanation: 
 அண்மையில், ‘APStar-6D’ என்ற வணிக ரீதியிலான தகவல்தொடர்பு செயற்கைக்கோளை சீனத்தின் கிரேட் வால் நிறுவனம் ஏவியது. சீனத்தின் விண்வெளித் தொழில்நுட்ப கழகத்தால் உருவாக்கப்பட்ட இச்செயற்கைக்கோள், அந்நாட்டின், ‘லாங் மார்ச்’ ஏவுகலத்தைப் பயன்படுத்தி விண்ணில் ஏவப்பட்டது. கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின்படி, இந்தப் புதிய செயற்கைக்கோள், குறைந்தது 50 Gb / ஒரு வினாடி என்ற வேகத்தில், தகவல்தொடர்பு சேவையை அளிக்கும்.
Question 23
எந்த நாட்டின் ஆராய்ச்சிக் குழு, உலக வங்கியின் சந்தை மேம்பாட்டு விருதை வென்றுள்ளது?
A
வங்கதேசம்
B
மியான்மர்
C
இந்தியா
D
கம்போடியா
Question 23 Explanation: 
 உலக வங்கிக்குழுமம் மற்றும் பாலியல் வன்முறை ஆராய்ச்சி முன்னெடுப்பு ஆகியவற்றின் அண்மைய அறிவிப்பின்படி, கம்போடிய நாட்டைச் சார்ந்த ஆராய்ச்சிக்குழு, நடப்பாண்டுக்கான “சந்தை மேம்பாடு: பாலின அடிப்படையிலான வன்முறைக்கு தீர்வுகாண்பதற்கான கண்டுபிடிப்புகள்” விருதை வென்றது.  கம்போடியாவில் வசிக்கும் பெண் பொழுதுபோக்கு ஊழியர்களுக்கு நிகழும் பாலின- வன்முறைக்கு எதிராக 24×7 ஆதரவை வழங்கும் வாட்ஸ்அப் சேவையைச் செயல்படுத்துவதற்காக, இந்த விருது, அந்த ஆராய்ச்சிக்குழுவுக்கு நிதி உதவி வழங்கும்.
Question 24
பொதுத்துறை நிறுவனமான இந்திய சூரிய மின்னாற்றல் கழகம் செயல்படுகிற மத்திய அமைச்சகம் எது?
A
மின்சார அமைச்சகம்
B
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
C
நிலக்கரி அமைச்சகம்
D
பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
Question 25
இந்தியாவில் தேசிய கடல் வேளாண் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
A
ஜூலை 10
B
ஜூலை 11
C
ஜூலை 12
D
ஜூலை 13
Question 25 Explanation: 
 மீன்வளத்துறை ஆராய்ச்சியாளர்களான Dr. K H அலிகுனி & Dr. H L செளத்ரி ஆகியோர் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை.10ஆம் தேதியன்று தேசிய கடல் வேளாண் நாள் (National Fish Farmers Day) கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, நடுவணரசின் மீன்வள அமைச்சகத்தின்கீழ்வரும் மீன்வளத் துறையும் தேசிய மீன்வள வாரியமும் இணைந்து இணையவழிக்கருத்தரங்கை நடத்தின.  இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த மீனவர்கள், அலுவலர்கள், அறிவியலார்கள், தொழில் முனைவோர் ஆகியோருடன் கலந்துரையாடிய மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், “மீனவர்களின் மீன்வளத் தொழிலின் மேம்பாட்டுக்காக பிரதம மந்திரி மீன்வளத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது” என அறிவித்தார்.
Question 26
பரஸ்பர நிதிகள் குறித்த SEBI’இன் மறுசீரமைக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் தலைவர் யார்?
A
உதய் கோடக்
B
நாராயண மூர்த்தி
C
உஷா தோரத்
D
ஆதி கோத்ரேஜ்
Question 26 Explanation: 
 இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) அண்மையில் பரஸ்பர நிதி தொடர்பான தனது ஆலோசனைக்குழுவை மறுசீரமைத்தது. SEBI’இன் சமீபத்திய வெளியீட்டின்படி, இருபதுபேர்கொண்ட இந்த ஆலோசனைக்குழு, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் உஷா தோரத் தலைமையில் உள்ளது. முதலில் 2013’ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்தக் குழுவில், ஜான்கி பல்லப் தலைமையில் 15 உறுப்பினர்கள் இருந்தனர். பரஸ்பர நிதிகள் துறையின் கட்டுப்பாடு மற்றும் மேம்பாடு குறித்து இந்தக் குழு SEBI’க்கு அறிவுறுத்துகிறது.
Question 27
இந்தியாவின் முதல், ‘NVIDIA AI தொழில்நுட்ப மையத்தை’ நிறுவுவதற்காக, NVIDIA உடன் கூட்டு சேர்ந்துள்ள இந்திய நிறுவனம் எது?
A
IIT – மெட்ராஸ்
B
IIT – மெட்ராஸ்
C
IIT – ஹைதராபாத்
D
IIT – காரக்பூர்
Question 27 Explanation: 
 இந்தியாவின் முதல், ‘NVIDIA AI தொழில்நுட்ப மையத்தை’ நிறுவுவதற்காக, ஹைதராபாத் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT-H), பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான NVIDIA நிறுவனத்துடன் கூட்டுசேர்ந்துள்ளது. செயற்கை நுண்ணறிவுபற்றிய ஆராய்ச்சியை விரைவுபடுத்துவதை இம்மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.  இந்தத் தொழில்நுட்ப மையத்தில், இருநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இத்துறைசார் ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள். ஹைதராபாத் நகரத்தை சிறந்த 25 உலகளாவிய AI கண்டுபிடிப்பு மையங்களுள் ஒன்றாக நிறுவும் திட்டத்தில், NVIDIA, தெலுங்கானா அரசாங்கத்தின் ஒரு பங்காளராக உள்ளது.
Question 28
ஆசியா-பசிபிக்கில் புற்றுநோய் தயார்நிலை’ குறித்த EIU’இன் அறிக்கையில் இந்தியா அடைந்துள்ள தரநிலை (rank) என்ன?
A
ஏழு
B
எட்டு
C
ஒன்பது
D
பத்து
Question 28 Explanation: 
புற்றுநோய்க்கு எதிரான தயார்நிலை: உலகளாவிய புற்றுநோய் கட்டுப்பாட்டை நோக்கிய முன்னேற்றம்” குறித்த அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 10 ஆசிய - பசிபிக் நாடுகளில் புற்றுநோய்க்கு எதிரான தயார்நிலையில் இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது.  ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், தென் கொரியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் முறையே இரண்டு மற்றும் மூன்றாமிடத்திலும் உள்ளன.
Question 29
செவ்வாய் கோளின் சுற்றுப்பாதைக்கு விண்கலம் அனுப்பவுள்ள முதல் அரபு நாடு எது?
A
ஐக்கிய அரபு அமீரகம்
B
குவைத்
C
கத்தார்
D
சவூதி அரேபியா
Question 29 Explanation: 
 செவ்வாய்கோளுக்கு விண்கலம் அனுப்பும் தனது முதல் திட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் அறிவித்தது. இதன்மூலம் செவ்வாய் கோளுக்கு விண்கலம் ஏவிய முதல் அரபுநாடாக அது திகழ்கிறது. தற்போதுவரை அமெரிக்க ஐக்கிய நாடுகள், இந்தியா, சோவியத் ருஷியா & ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை மட்டுமே செவ்வாய் கோளுக்கு விண்கலங்களை ஏவியுள்ளன. சீனா தனது முதல் செவ்வாய் ஆராயும் ஊர்தியை ஏவும் பணியில் ஈடுபட்டுள்ளது. முகமது பின் ரஷீத் விண்வெளி மையம், ஐக்கிய அரபு அமீரகத்தின் செவ்வாய் திட்டத்துக்கான முகமையாக உள்ளது.
Question 30
உலக மக்கள்தொகை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
A
ஜூலை 10
B
ஜூலை 11
C
ஜூலை 12
D
ஜூலை 13
Question 30 Explanation: 
 ஆண்டுதோறும் ஜூலை.11 அன்று உலக மக்கள்தொகை நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், முதன் முதலில், 1990ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. 1987ஆம் ஆண்டு இதேநாளன்று உலக மக்கள்தொகை ஐந்து பில்லியனை எட்டியபோது, ‘ஐந்து பில்லியன் நாள்’ உருவாக்கிய விழிப்புணர்வால் ஈர்க்கப்பட்ட UNDP, ஜூலை.11ஆம் தேதியை மக்கள்தொகை நாளென கடைப்பிடிக்க பரிந்துரைத்தது. “Putting the brakes on COVID-19: how to safeguard the health and rights of women and girls now” என்பது 2020ஆம் ஆண்டிற்கான பரப்புரையின் கருப்பொருளாகும்.
Question 31
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஸ்வபிமான் அஞ்சல்’ என்ற இடம் அமைந்துள்ள மாநிலம் எது?
A
மேற்கு வங்கம்
B
ஒடிசா
C
சத்தீஸ்கர்
D
மத்திய பிரதேசம்
Question 31 Explanation: 
 விடுதலைக்குப் பிறகு முதன்முறையாக பேருந்து சேவை தொடங்கப்பட்டதன் காரணமாக, ஒடிசாவின் மால்கான்கிரி மாவட்டத்தில் அமைந்துள்ள, ‘ஸ்வபிமான் அஞ்சல்’ என்ற இடம் அண்மைச் செய்திகளில் இடம்பெற்றது. தனித்துவிடப்பட்ட பகுதி என அழைக்கப்படும் இவ்விடம் மூன்று பக்கங்களிலும் நீரால் சூழப்பட்டுள்ளது. குருப்ரியா பாலம், இந்தத் தொலைதூரப் பகுதியை மாநிலத்தின் மற்ற பகுதிகளுடன் இணைக்கிறது. இந்தப் பயணிகள் பேருந்து சேவைக்கு முன்னர் வரை, மோட்டார் படகுகள் மற்றும் சாதாரண படகுகள் மட்டுமே பயண முறைகளாக அங்கு இருந்து வந்தன.
Question 32
ஹுருன் ஆராய்ச்சியின்படி, உலக கோடீசுவரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி பெற்றுள்ள இடம் என்ன?
A
ஐந்து
B
ஆறு
C
ஏழு
D
எட்டு
Question 32 Explanation: 
 ரிலையன்ஸ் தொழிற்சாலைகள் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, ஹுருன் ஆராய்ச்சியின்படி, உலகின் ஐந்தாவது கோடீசுவரர் என்ற பெருமையைப்பெற்றார். கடந்த மாதம், கோடீசுவரர் பட்டியலில் எட்டாவது இடத்தில் அவர் இருந்தார்.  தற்போது அவர், வாரன் பபேவை விஞ்சி, டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் மற்றும் மைக்ரோசாப்ட் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மருடன் 5ஆம் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு $78 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. முன்னதாக, ஜியோ இயங்குதளங்கள், உலக முதலீட்டாளர்களிடமிருந்து `117,588 கோடி நிதியைத் திரட்டியிருந்தன.
Question 33
மத்திய கப்பல் அமைச்சகத்தின் “கடற்பயண மசோதா - 2020ஆம் ஆண்டுக்கான உதவி” முன்வரைவு, எந்த ஆங்கிலேய காலத்துச் சட்டத்தை மாற்ற முற்படுகிறது?
A
கலங்கரை விளக்கம் சட்டம், 1927
B
கடலோர கப்பல்கள் சட்டம், 1838
C
உள்நாட்டு கப்பல்கள் சட்டம், 1917
D
கடல்வழியாக சரக்குகளைக் கொண்டு செல்லும் இந்தியக் கப்பல்கள், 1925
Question 33 Explanation: 
 பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பரிந்துரைகளைப் பெறுவதற்கு ஏதுவாக, ‘கடற்பயண மசோதா – 2020ஆம் ஆண்டுக்கான உதவி’ முன்வரைவை மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த வரைவு மசோதா, 90 ஆண்டுகால பழமையான கலங்கரை விளக்கச்சட்டம், 1927, என்பதற்கு மாற்றீடாக முன்மொழியப்பட்டுள்ளது.  இச்சட்ட வரைவு மசோதாவானது, கலங்கரை விளக்கங்கள் மற்றும் வழிகாட்டும் விளக்கு கப்பல்களின் தலைமை இயக்குநருக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும். பன்னாட்டளவில் கடைப்பிடிக்கப்படும் சிறந்த நடைமுறைகள், பயணிக்கும் கப்பலுக்கு வழிகாட்டும் உதவிகள் தொடர்பான இந்தியாவின் பன்னாட்டு கடமைபொறுப்புணர்வு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த வரைவு மசோதா உள்ளது.
Question 34
India Cycles4Change Challenge’ என்பது எந்த மத்திய அமைச்சகத்தின் முன்னெடுப்பாகும்?
A
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
B
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
C
எரிசக்தி அமைச்சகம்
D
MSME அமைச்சகம்
Question 34 Explanation: 
இந்தியாவில் மாற்றம் காணவும் சவால்களை எதிர்கொள்ளவும் மிதிவண்டி ஓட்டுவோம்” என்ற இயக்கத்தில் பங்கேற்பதற்கான பதிவு ஜூலை.10 அன்று தொடங்கியது. இந்த இயக்கத் திட்டத்தை பொலிவுறு நகர இயக்கத்தின் ஓர் அம்சமாக நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதித் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ஹர்தீப் சிங் புரி கடந்த ஜூன்.25 அன்று தொடங்கிவைத்தார். இந்தியா எதிர்கொள்ளும் சவால்குறித்து விவரிப்பதற்கான அந்நிகழ்வின்போது, பொலிவுறு நகர உருவாக்கத்தில் பங்கேற்போர் பதிவிடுவதற்கு உதவும் வகையில் இணையமும் தொடங்கிவைக்கப்பட்டது.  இந்தச் சவால் பணியில் பொலிவுறு நகர இயக்கத்தின்கீழ்வரும் அனைத்து நகரங்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைநகரங்கள், குறிப்பாக ஐந்து இலட்சம் மக்கள்தொகையுள்ள அனைத்து நகரங்களும் பங்கேற்கலாம்.
Question 35
முதன்முறையாக, இந்திய இரயில்வே, ஆந்திராவின் காய்ந்த மிளகாயை, சிறப்பு சரக்கு ரயில்கள்மூலம் எந்த நாட்டிற்கு கொண்டுசென்றது?
A
வங்கதேசம்
B
மியான்மர்
C
நேபாளம்
D
லாவோஸ்
Question 35 Explanation: 
 இந்திய இரயில்வே, ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாலத்திலிருந்து வரமிளகாயுடன் நாட்டின் எல்லையைத்தாண்டி சிறப்பு சரக்கு இரயிலை வங்கதேசத்தின் பெனாபோல் என்ற இடத்துக்கு இயக்கியது. இதற்கு முன்னர்வரை, குண்டூர் பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகளும், வணிகர்களும் வரமிளகாயை சாலைவழியாகவே வங்கதேசத்திற்கு சிறிய அளவில் கொண்டுசென்று வந்தனர், அதற்கு, டன் ஒன்றுனுக்கு `7000 வரை செலவாகியது.
Question 36
போட்டி இரத்துசெய்யப்பட்டதை அடுத்து, வீரர்/வீராங்கனைகளுக்கு $12.5 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையை வழங்க முடிவுசெய்துள்ள போட்டி எது?
A
ஆஸ்திரேலிய ஓப்பன்
B
ஆஸ்திரேலிய ஓப்பன்
C
விம்பிள்டன்
D
US ஓப்பன்
Question 36 Explanation: 
 போட்டி இரத்துசெய்யப்பட்டபோதிலும், அறுநூற்றுக்கும் மேற்பட்ட வீரர் / வீராங்கனைகளுக்கு, $12.5 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையை பகிர்ந்தளிப்பதாக விம்பிள்டன் கிளப்பின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். உலகின் மிகப்பழமையான டென்னிஸ் விளையாட்டுப்போட்டியான இலண்டனைச் சார்ந்த மதிப்புமிக்க விம்பிள்டன் சாம்பியன்ஷிப், COVID-19 தொற்றுநோயால் இரத்துசெய்யப்பட்டது. காப்பீட்டு சேவை வழங்குநருடன் கலந்தாலோசித்த பிறகு, முக்கிய நிகழ்வில் போட்டியிட்ட அனைத்து 256 வீரர்களுக்கும் பரிசுத்தொகை சமமாக பகிர்ந்தளிக்கப்படும்.
Question 37
சிறந்த சாதனைகள் படைத்த பெருநிறுவனங்கள்பிரிவின்கீழ், மதிப்புமிக்க ‘CII-ITC நிலைத்தன்மை விருது - 2019’ஐ வென்ற மத்திய பொதுத்துறை நிறுவனம் எது?
A
SAIL
B
NTPC Ltd.,
C
OIL
D
ONGC
Question 37 Explanation: 
 சிறந்த சாதனைகள் படைத்த பெருநிறுவனங்கள்பிரிவின்கீழ், மத்திய எரிசக்தி அமைச்சகத்தின்கீழுள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல்மின் கழக நிறுவனம் (NTPC) மதிப்புமிக்க CII-ITC நிலைத்தன்மை விருது 2019’ஐ வென்றுள்ளது. மேலும், பெருநிறுவன சமூகப்பொறுப்புணர்வு பிரிவில், குறிப்பிடத்தக்க சாதனைக்கான பாராட்டுகளை அந்நிறுவனம் பெற்றுள்ளது.  மின்நிலையங்களைச் சுற்றியுள்ள அதன் சமூகங்களின் நீடித்த வளர்ச்சிக்கு தேசிய அனல்மின் கழக நிறுவனம் எப்போதும் பாடுபடுகிறது. அதன் முதன்மை பெருநிறுவன சமூகப்பொறுப்புணர்வு திட்டமான GEM (பெண்களுக்கு அதிகாரமளித்தல் இயக்கம்), அதன் மின்நிலையங்களுக்கு அருகே, பள்ளிக்குச் செல்லும் சிறுமிகளின் நலனுக்காக, பின்தங்கிய பின்னணியிலிருந்துவரும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஆதரவளிக்க நான்கு வார குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
Question 38
ஆண்டுதோறும் மலாலா நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
A
ஜூலை 12
B
ஜூலை 13
C
ஜூலை 14
D
ஜூலை 15
Question 38 Explanation: 
 சிறுமிகளின் கல்வியை மேம்படுத்துவதற்காக வாதிட்ட பதினாறு வயது பாகிஸ்தான் ஆர்வலர் மலாலா யூசுப்சாயை கெளரவிப்பதற்காக, ஐ. நா அவை, ஜூலை.12ஆம் தேதியை ‘மலாலா நாள்’ என அறிவித்தது. 2013ஆம் ஆண்டில் இதே நாளில், கல்வியில் பாலின சமத்துவத்தின் அவசியம்குறித்து ஐக்கிய நாடுகள் அவையின் தலைமையகத்தில் ஓர் எழுச்சியூட்டும் உரையை மலாலா நிகழ்த்தினார்.  அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்ற அவர், அண்மையில், ஆக்ஸ்போர்டு பல்கலையில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.
Question 39
e-crop’ என்ற பெயரில் பயிர்களை இணையவழியில் பதிவு செய்யத்தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
கர்நாடகா
B
ஆந்திர பிரதேசம்
C
ஒடிசா
D
தெலுங்கானா
Question 39 Explanation: 
 ‘இ-பயிர்’ என்ற பெயரில் பயிர்களை இணையவழியில் பதிவுசெய்வதற்கான முன்னெடுப்பை ஆந்திர பிரதேச மாநில அரசு மேற்கொண்டுள்ளது. மாநில வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் கூட்டாக இணைந்து இணையவழியில் பயிர்கள் குறித்து விவரங்களைப் பதிவுசெய்வார்கள். கிராம வருவாய் அதிகாரிகள் மற்றும் கிராம வேளாண் உதவியாளர்கள் ஆகியோர் உழவர்களின் பெயர்கள், அவர்களின் நிலம், வங்கிக் கணக்கு மற்றும் அவர் பயிரிட்ட பயிர்கள்பற்றிய விவரங்களை சிற்றூர் அளவில் பதிவு செய்வார்கள்.
Question 40
முகக்கவசம் அணியுமாறு மக்களை வலியுறுத்துவதற்காக, ‘ரோகோ-டோகோ’ என்ற பரப்புரையைத் தொடங்கவுள்ள மாநில அரசு எது?
A
மகாராஷ்டிரா
B
குஜராத்
C
மத்திய பிரதேசம்
D
ஹரியானா
Question 40 Explanation: 
 முகக்கவசம் அணியுமாறு மக்களை வலியுறுத்துவதற்காக மத்திய பிரதேச மாநில அரசு, ‘ரோகோ -டோகோ’ என்ற பரப்புரையைத் தொடங்கவுள்ளது. ஹிந்தி மொழியில், ‘ரோகோ – டோகோ’ என்றால் ‘நிறுத்து - பரப்புரை’ என்று பொருளாகும்.  பொதுவிடங்களில் முகக்கவசம் அணியாத மக்களிடையே முகக்கவசம் அணியும்பழக்கத்தை ஏற்படுத்த இது முற்படுகிறது. ‘ஜீவன் சக்தி யோஜனா’ என்ற திட்டத்தையும் அம்மாநில அரசு நடத்துகிறது; இதன் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள், மாநில மக்களுக்கு ஒரு முகக்கவசத்தை `20 என்ற விலையில் வழங்கும்.
Question 41
நிகர சுழிய கரியமிலவாயு (CO2) உமிழ்வை அடைதற்கு, இந்திய இரயில்வே நிர்ணயித்துள்ள இலக்கு ஆண்டு என்ன?
A
2025
B
2027
C
2030
D
2035
Question 41 Explanation: 
 இந்திய இரயில்வே 2030ஆம் ஆண்டளவில் நிகர சுழிய கரியமில வாயு உமிழ்வை அடைவதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளது. ‘பசுமை இரயில்வே’யாக வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கான, முயற்சிகளை அது விரைவுபடுத்தியுள்ளது. மின்மயமாக்கல், இரயில்களின் ஆற்றல் செயல்திறனை மேம்படுத்துதல், நிலையங்களுக்கு பசுமை சான்றிதழ், இரயில் பெட்டிகளில் உயிரி-கழிப்பறைகளை பொருத்துதல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களுக்கு மாறுதல் ஆகியவை அதன் சில முயற்சிகளில் அடங்கும். அண்மையில், மத்திய பிரதேச மாநிலத்தின் பினாவில், 1.7 மெகாவாட் திறன் கொண்ட ஆலை, BHEL உடன் இணைந்து நிறுவப்பட்டது.
Question 42
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘NEOWISE’ என்றால் என்ன?
A
வால்மீன்
B
சிறுகோள்
C
விண்மீன்
D
புறக்கோள்
Question 42 Explanation: 
 ‘NEOWISE’ என்றும் அழைக்கப்படுகிற C/2020 F3 என்கிற வால்மீன், இந்த ஆண்டு மார்ச்.27 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வால்மீன், வானில் தெரியும் என்பதால் அண்மைச் செய்திகளில் இது இடம் பெற்றது. இந்தியாவில், அடிவானத்திலிருந்து 20° தொலைவில் உள்ள வடமேற்கு வானில், ‘NEOWISE’ வால்மீன் தெரியும். இது, 2020 ஜூலை.14 முதல் 20 நாட்களுக்கு சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு 20 நிமிடங்களுக்கு தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் அது மங்கிவிடும்.
Question 43
பன்னாட்டு விண்வெளி அகாடமியின், நடப்பாண்டுக்கான (2020) வான் கர்மன் விருதைப் பெற்றவர் யார்?
A
Dr. K சிவன்
B
Dr. G சதீஷ் ரெட்டி
C
டெஸ்ஸி தாமஸ்
D
ரிது கரிதால்
Question 43 Explanation: 
 இந்திய விண்வெளி ஆய்வுமையத்தின் தலைவர் Dr. K சிவன், நடப்பாண்டுக்கான (2020) வான் கர்மன் விருதைப் பெற்றவர் என அறிவிக்கப்பட்டுள்ளார். பன்னாட்டு விண்வெளி அகாடமியால் நிறுவப்பட்ட இவ்விருது, எதிர்வரும் 2021 மார்ச்சில் பாரிஸில் வழங்கப்படும். விண்வெளி பொறியாளர் மற்றும் ஏரோடைனமிக்ஸ் நிபுணர் தியோடர் வான் கர்மனின் பெயரால் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. கஸ்துரி ரங்கன் மற்றும் U R இராவுக்குப்பிறகு இவ்விருதைப் பெற்ற மூன்றாவது இந்தியராக K சிவன் உள்ளார்.
Question 44
நிதியளித்தலில் தாமதித்ததால் சபாஹர் திட்டத்திலிருந்து இந்தியாவை வெளியேற்றிய நாடு எது?
A
ஆப்கானிஸ்தான்
B
ஈரான்
C
மியான்மர்
D
நேபாளம்
Question 44 Explanation: 
 இந்தியாவும் ஈரானும் நான்காண்டுகளுக்குமுன்பு ஆப்கானிஸ்தானின் எல்லையில் சபாஹர் துறைமு -கத்திலிருந்து ஜாகேதன் வரை ரயில் பாதை அமைப்பதற்காக கூட்டினைந்தன. அண்மையில், ஈரான், இந்தியாவின் உதவியின்றி இத்திட்டத்தைத் தொடர முடிவுசெய்தது. சபாஹர்-ஜாகேதன் வரை ரயில் பாதை அமைக்கும் பணியை ஈரான் போக்குவரத்து அமைச்சர் அண்மையில் தொடங்கினார். சமீபத்தில், ஈரானுடனான 25 ஆண்டுகால $400 பில்லியன் ஒப்பந்தத்தை சீனா இறுதிசெய்தது.
Question 45
$10 பில்லியன் டாலர் மதிப்பிலான, ‘இந்தியா டிஜிட்டல்மயமாக்கல் நிதியம்’ என்றாவொன்றைத் தொடங்கவுள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?
A
பேஸ்புக்
B
கூகிள்
C
அமேசான்
D
ஆப்பிள்
Question 45 Explanation: 
 கூகிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, சமீபத்தில், $10 பில்லியன் டாலர் மதிப்பிலான, ‘இந்திய டிஜிட்டல்மயமாக்கல் நிதியம்’ என்றவொன்றை தொடங்குவதாக அறிவித்தார். இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரைவுபடுத்துவதில் கவனஞ்செலுத்திய, ‘கூகிள் ஃபார் இந்தியா’ என்ற மெய்நிகர் நிகழ்வில் இது அறிவிக்கப்பட்டது. இந்த முயற்சியின்மூலம், கூகிள், அடுத்த 5 முதல் ஏழாண்டுகளில், இந்தியாவில், சுமார் `75000 கோடி நிதியை முதலீடு செய்யும். ஒவ்வொரு இந்தியருக்கும் மலிவு விலையிலான அணுகல் & தகவல்களை வழங்குவதில் இது கவனம் செலுத்தும்.
Question 46
வங்கதேசத்துக்கான இந்தியாவின் புதிய உயராணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
விக்ரம் துரைசாமி
B
அகிலேஷ் மிஸ்ரா
C
இந்திர மணி பாண்டே
D
அருண் K.சட்டர்ஜி
Question 46 Explanation: 
 விக்ரம் துரைசாமியை வங்கதேசத்துக்கான இந்தியாவின் புதிய உயராணையராக மத்திய அரசு நியமித்துள்ளது. இந்நியமனத்திற்கு முன்னர், வெளியுறவு அமைச்சகத்தின் பன்னாட்டு அமைப்புகளின் கூடுதல் செயலாளராக இருந்தார். ஆப்கானிஸ்தானின் புதிய தூதராக மற்றொரு வெளியுறவு சேவை அதிகாரி ருத்ரேந்திர டாண்டன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது ஜகார்த்தாவில் ASEAN’க்கான இந்திய தூதராக பணியில் உள்ளார்.
Question 47
காணாமல்போன குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்காக, ‘ஆபரேஷன் முஸ்கான்’ என்றவொன்றைத் தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
மேற்கு வங்கம்
B
மகாராஷ்டிரா
C
ஆந்திர பிரதேசம்
D
குஜராத்
Question 47 Explanation: 
 ஆந்திர பிரதேச மாநிலத்தின் அரசு அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்களுடன் (தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்) இணைந்து அம்மாநிலத்தில், ‘ஆபரேஷன் முஸ்கான்’ என்றவொன்றைத் தொடங்கினர். காணாமல்போன சிறார்களைக் கண்டுபிடிப்பது, குழந்தைத் தொழிலாளர்கள் & வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படும் சிறார்களை மீட்பது ஆகியவற்றை இது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இயக்கத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மீட்கப்படுவார்கள். மேலும் அவர்கள், பெற்றோருடன் ஒன்றுசேர்க்கப்படுவார்கள் அல்லது தங்குமிடத்தில் பாதுகாப்பாக இருத்தப்படுவார்கள்.
Question 48
சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2025ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எத்தனை சதவீத அளவுக்கு பொது சுகாதாரத்திற்கு செலவிடப்படும்?
A
1.5%
B
2.0%
C
2.5%
D
5%
Question 48 Explanation: 
 மத்திய சுகாதார அமைச்சர் Dr. ஹர்ஷ் வர்தன், பதினைந்தாவது நிதி ஆணையத்துடனான சந்திப்பின் போது, பொதுநலவாழ்வு செலவினங்களை படிப்படியாக, எதிர்வரும் 2025ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்தார். இது, 2017ஆம் ஆண்டின் தேசிய சுகாதாரக்கொள்கையில் இடம்பெற்றுள்ள அரசாங்கத்தின் இலக்காகும். நாட்டின் மொத்த பொது நலவாழ்வுச் செலவினங்களுள், மூன்றில் இரண்டு பங்கு ஆரம்ப நலவாழ்வுச் செலவுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
Question 49
இந்தியாவின் முதல் கப்பல்விட்டு கப்பலுக்கு சரக்கு மாற்றும் மையமான வல்லற்பாதம் முனையம் உருவாக்கப்படுகிற மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
ஆந்திர பிரதேசம்
C
கேரளா
D
கோவா
Question 49 Explanation: 
 உள்ளூரில் வல்லற்பாதம் முனையம் என்று அழைக்கப்படும் கொச்சி சர்வதேச சரக்குப் பெட்டகக் கப்பல் விட்டு கப்பல் மாற்றும் முனையம், இந்திய கடற்கரைப்பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த வகையிலான இடத்தில் அமைந்துள்ளது. இது, இந்தியாவின் முதல் கப்பல்விட்டு கப்பலுக்கு சரக்குகளை மாற்றும் முனையம் எனக் கூறப்படுகிறது. அண்மையில், இந்த முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளை மத்திய கப்பல் துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா ஆய்வுசெய்தார்.  துறைமுகத்தில் உள்ள இந்த முனையம், கொள்கலன்களைக் கையாளுகிறது, அவற்றை சேமித்து வைக்கிறது மற்றும் அவற்றை மற்ற கப்பல்களுக்கு மாற்றுகிறது. இது, சரக்குகளை மாற்றும் முனையம் என்றும் அழைக்கப்படுகிறது.
Question 50
முதியோர்களில் COVID-19 இறப்பைக் குறைப்பதில் BCG தடுப்பூசியின் செயல்திறனைப்பற்றி ஆய்வு செய்வதற்காக சோதனையொன்றை நடத்தவுள்ள மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
ஆந்திர பிரதேசம்
C
மகாராஷ்டிரா
D
கர்நாடகா
Question 50 Explanation: 
 முதியோர்களில் COVID-19 இறப்பைக் குறைப்பதில் BCG தடுப்பூசியின் செயல்திறனைப்பற்றி ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசு சோதனையொன்றைத் தொடங்கவுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) ஒப்புதல் அளித்துள்ள இந்தச் சோதனையை, சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொள்ளும். BCG (Bacille Calmette-Guerin) ஆனது காசநோய்க்கு எதிரான தடுப்பூசியாக, 50 ஆண்டுகளாக பச்சிளங்குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *