Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

June 1st Week 2020 Current Affairs Online Test in Tamil

நடப்பு நிகழ்வுகள் -01 June to 08 June 2020

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -01 June to 08 June 2020. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சமீபத்தில் கண்டறியப்பட்ட Puntius sanctus என்பது கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?
A
சிலந்தி
B
ஆமை
C
மீன்
D
பாம்பு
Question 1 Explanation: 
 அண்மையில், தமிழ்நாட்டின் வேளாங்கண்ணியில், கேரளத்தின் கொல்லம்சார்ந்த கல்லூரியொன்றின் விலங்கியல் துறைத்தலைவர், ஒரு புதிய வெள்ளி மீனினத்தைக் கண்டறிந்தார். இச்சிறிய நன்னீர்மீன், ‘Cyprinidae’ குடும்பத்தைச் சேர்ந்ததாகும். அதற்கு, ‘Puntius sanctus’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அவரது ஆராய்ச்சிக்கு, அறிவியல் & தொழில்நுட்பத்துறை நிதியுதவி செய்துள்ளது. இப்புதிய மீன், இந்திய விலங்கியல் ஆய்வகத்திலும் வைக்கப்பட்டுள்ளது. இது, சர்வதேச விலங்குப் பெயரிடல் ஆணையத்தின் உயிரியல் வங்கியிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
Question 2
Bev Q’ என்ற பெயரில், மெய்நிகரான வரிசை மேலாண்மை செயலியை அறிமுகப்படுத்தவுள்ள மாநில அரசு எது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
ஆந்திர பிரதேசம்
D
ஒடிசா
Question 2 Explanation: 
 கொச்சியைச் சார்ந்த துளிர்நிறுவனம் ஃபேர்கோடு டெக்னாலஜிஸ் உருவாக்கிய ‘Bev Q’ என்னும் மெய்நிகர் வரிசை மேலாண்மை செயலிக்கு, சமீபத்தில், இரண்டு நிலை சோதனைக்குப்பிறகு கூகிள் ஒப்புதல் அளித்தது. மதுக்கடைகளின் வரிசைகளை நிர்வகிக்க இச்செயலி செயல்படுத்தப்படவுள்ளது. வரிசை மேலாண்மை முறை அமல்படுத்தப்படும் வரை மதுக்கடைகள் திறக்கப்படாது என்று கேரள மாநில அரசு அறிவித்துள்ளது. மதுக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, கேரள மாநில பானங்கள் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து இணையவழியில் இதுகுறித்து பயிற்சியளிக்கப்பட்டுவருகிறது.
Question 3
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘The Ickabog’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?
A
ஜான் கிரீன்
B
J K ரெளலிங்
C
மார்கரெட் அட்வுட்
D
பில் பிரைசன்
Question 3 Explanation: 
 ஹாரி பாட்டர் புகழ் எழுத்தாளர் J K ரெளலிங், அண்மையில் தனது கதையை உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்காக இணையத்தில் வெளியிட்டார். ‘தி இக்காபாக்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இது, ஹாரி பாட்டருடன் எந்தத் தொடர்பும் இல்லாத குழந்தைகளுக்கான அவரது முதல் கதையாகும்.  அண்மையில் இக்கதைக்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரத்யேக இணையதளத்தில், இந்தக்கதையின் அத்தியாயங்கள் ஜூலை 10 வரை நாள்தோறும் வெளியிடப்படும். இந்தக் கதையை, பத்தாண்டுக்கு முன்பு தான் எழுதியுள்ளதாகவும் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
Question 4
நெதர்லாந்தைச் சார்ந்த உற்பத்தியாளரான எடெர்கோ BV’ஐ கைப்பற்றியுள்ள வாடகையுந்து சேவை நிறுவனம் எது?
A
உபெர்
B
ஓலா
C
லிப்ட்
D
தீதி
Question 4 Explanation: 
 இந்தியாவின் வாடகையுந்து சேவை நிறுவனமான ஓலாவின் துணை நிறுவனமான ஓலா எலக்ட்ரிக், அண்மையில் நெதர்லாந்தைச் சார்ந்த அசல் கருவி உற்பத்தி நிறுவனமான எடெர்கோ BV’ஐ கையகப்படுத்தியது. இதன்மூலம், ஓலா எலக்ட்ரிக் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பிரீமியம் மின்சார இருசக்கர வாகனச் சந்தையில் நுழையவுள்ளது. ஓலா எலக்ட்ரிக் அதன் ஸ்மார்ட் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை உருவாக்கவும் எதிர்வரும் 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் அதனை அறிமுகப்படுத்தவும் எடெர்கோவின் வடிவமைப்பு மற்றும் பொறியியல் திறன்களைப் பயன்படுத்தவுள்ளது.
Question 5
‘Catch Up’ என்னும் செயலியை அறிமுகம் செய்துள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?
A
மைக்ரோசாப்ட்
B
பேஸ்புக்
C
அமேசான்
D
ஆப்பிள்
Question 5 Explanation: 
 பேஸ்புக் நிறுவனம் அண்மையில், ‘Catch Up’ என்னும் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, பயனர்களை இலவச தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. பேஸ்புக்கின் உள்ளக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவான NPE குழுவால் உருவாக்கப்பட்டுள்ள இப்பயன்பாடு, பயனர்களை ஒரே நேரத்தில் எட்டு பேருக்கு வரை அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது.  சேவையை ஒருங்கிணைக்க இது தொலைபேசியில் உள்ள பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்துகிறது. சோதனை முறை சேவையாக அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள இந்தச் சேவை, விரைவில் உலகம் முழுவதும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Question 6
பிரதமர் மத்ஸ்ய சம்பத யோஜனாவின்படி, 220 இலட்சம் மெட்ரிக் டன் மீனுற்பத்தியை அடைவதற்கான இலக்கு ஆண்டு எது?
A
2021-22
B
2022-23
C
2023-24
D
2024-25
Question 6 Explanation: 
 “பிரதமரின் மத்ஸ்ய சம்பத யோஜனா - இந்தியாவில் மீன்வளத்துறையில் நீடித்த மற்றும் பொறுப்புமிக்க வளர்ச்சி மூலம் நீலப்புரட்சியை உருவாக்கும் திட்டம்” என்ற தலைப்பில் மாநாட்டில் பேசிய மத்திய மீன் வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், இந்தத் திட்டத்துக்கு மே.20 அன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். நாட்டில் மீன் உற்பத்தி 2018-19’இல் 137.58 இலட்சம் மெட்ரிக் டன் என்றிருந்த நிலையில், 2024-25’க்குள் அதை 220 இலட்சம் டன்களாக அதிகரிக்க பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜ்னா திட்டமிட்டுள்ளது. அதாவது 9% வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயித்துக்கொண்டுள்ளது.  `20,050 கோடி முதலீட்டுடன் இந்தத்திட்டம் அமல்செய்யப்படும். இதில் மத்திய அரசின் பங்கு `9,407 கோடியாகவும், மாநில அரசுகளின் பங்கு `4,880 கோடியாகவும், பயனாளிகளின் பங்கு `5,763 கோடியாகவும் இருக்கும்.
Question 7
மின் நிதிக்கழகமானது (PFC) நர்மதா படுகை திட்டங்களுடன் (NBPCL) இணைந்து எந்த மாநிலத்தின் மின் திட்டங்களுக்கு நிதியளிக்கவுள்ளது?
A
மத்திய பிரதேசம்
B
பீகார்
C
ஹிமாச்சல பிரதேசம்
D
உத்தரபிரதேசம்
Question 7 Explanation: 
 மத்திய எரிசக்தி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமும் இந்தியாவின் வங்கியல்லா முன்னணி நிதி நிறுவனமுமான மின் நிதிக்கழகம், மத்திய பிரதேச மாநில அரசுக்குச் சொந்தமான நர்மதா படுகை திட்டங்கள் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மத்திய பிரசேசத்தில் `22,000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ள 225 MW நீர்மின் திட்டங்கள் மற்றும் பல்நோக்குத்திட்டங்களுக்கு நிதி வழங்குவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  மத்திய பிரதேசத்தில், 225 MW நீர்மின் திட்டங்கள் மற்றும் மின் உபகரணங்களுக்கான 12 பெரிய பல்நோக்குத் திட்டங்களுக்கு NBPCL நிதியளிக்கிறது. இந்த ஒப்பந்தம்மூலம் செயல்படுத்தப்படவுள்ள பெரிய பல்நோக்குத்திட்டங்களுள் பசானியா பல்நோக்குத்திட்டம், திந்தோரி, சிங்கி போரசு பல்நோக்குத் திட்டம், நரசிங்பூர், ரைசன், ஹொசங்காபாத், சக்கர் பெஞ்ச் லிங்க் நரசிங்பூர் சிந்த்வாரா, துதி திட்டம் சிந்த்வாரா ஹொசங்காபாத் உள்ளிட்டவை அடங்கும்.
Question 8
நடப்பாண்டில் (2020) எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் நாடு எது?
A
நேபாளம்
B
இந்தியா
C
சீனா
D
தாய்லாந்து
Question 8 Explanation: 
 நடப்பாண்டு (2020) எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் நாடாக சீனா உள்ளது. எவரெஸ்ட் சிகரத்தின் மறு அளவீடு செய்வதற்கான திட்டத்தின் ஒருபகுதியாக இந்த ஆய்வுக்குழு எவரெஸ்ட் சிகரத்திற்கு பயணித்துள்ளது. COVID-19 தொற்று பரவல் காரணமாக பொதுவாக வசந்த காலத்தில் நடைபெறும் மலையேற்றத்தை நேபாளமும் சீனாவவும் இரத்து செய்துள்ளன. எனவே நடப்பாண்டில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த ஒரே நாடாகவும் அணியாகவும் சீனா ஆய்வுக்குழு உள்ளது
Question 9
‘PAK DA’ என்ற பெயரில் அதன் முதல் மறைந்திருந்து தாக்கும் குண்டுவீச்சு விமானத்தை உருவாக்க தொடங்கியுள்ள நாடு எது?
A
சீனா
B
இரஷ்யா
C
தென் கொரியா
D
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
Question 9 Explanation: 
 அரசாங்க ஆதரவுடைய ரஷ்ய செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, ரஷ்யா தனது முதல் மறைந்திருந்து தாக்கும் குண்டுவீச்சு விமானத்தை, ‘PAK DA’ என்ற பெயரில் உருவாக்கத் தொடங்கியுள்ளது. இந்த விமானம் எதிர்வரும் ஆண்டுக்குள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இது, ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் உட்பட மேம்பட்ட ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை எடுத்துச்செல்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்படும். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் (USA), ‘B2’ என்னும் மறைந்திருந்து தாக்கும் குண்டுவீச்சு விமானத்திற்கு இணையாக இது தயாரிக்கப்படும். சீனாவும் தனது சொந்த மறைந்திருந்து தாக்கும் குண்டுவீச்சு விமானத்தை, ‘சியான் H20’ என்னும் பெயரில் உருவாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளது.
Question 10
டெலாய்ட்டின் ஓர் அண்மைய ஆய்வின்படி, உலகளாவிய மனக்கவலைக் குறியீட்டில் (Global Anxiety Index) முதலிடத்தில் உள்ள நாடு எது?
A
ஸ்பெயின்
B
இத்தாலி
C
இந்தியா
D
பிரேசில்
Question 10 Explanation: 
 பன்னாட்டு சேவைகள் அமைப்பான டெலாய்ட், சமீபத்தில் ஓர் இணையவழி குழுமத்தைப் பயன்படுத்தி ‘உலகளாவிய நுகர்வோர் மனநிலை கண்காணிப்பு’ என்ற ஓர் ஆய்வினை நடத்தியது. இந்த ஆய்வு, உலகெங்கிலும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே நடத்தப்பட்டது.  இந்த ஆய்வின்படி, நெருக்கடிமிக்க இக்காலத்தில், இந்திய நுகர்வோர்கள், மிகவும் மனக்கவலைக்கு உரியவர்களாக உள்ளனர். இதன் காரணமாக, 33 மதிப்பெண்களுடன் உலகளாவிய மனக்கவலைக் குறியீட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து மெக்சிகோ மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளன. இருப்பினும், கடந்த மே மாதத்தில் இந்தியாவின் இம்மதிப்பெண் படிப்படியாக குறைந்து காணப்பட்டது.
Question 11
உலக பசி நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
A
மே 26
B
மே 28
C
மே 30
D
மே 31
Question 11 Explanation: 
 உலக பசி நாள் என்பது, ‘The Hunger’ திட்டத்தின் ஒரு முயற்சியாகும். இது, நியூயார்க்கைச் சார்ந்த ஓர் அமைப்பாகும். உலகெங்கும் உள்ள பசிக்கொடுமையை அறவே ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் மே.28 அன்று உலகம் முழுமைக்கும் உலக பசி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா அவையின் அண்மைய தரவுகளின்படி, 2015ஆம் ஆண்டுக்குப்பிறகு பசியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கடும் பசியின் தாக்கம் மற்றும் பசி மற்றும் வறுமையை ஒழிப்பதற்கான தீர்வுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே உலக பசி நாளின் தலையாய நோக்கமாகும்.
Question 12
‘Pai’ என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான இயலியை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?
A
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம்
B
இந்திய உணவுக் கழகம்
C
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்
D
இந்திய தொழிலகங்கள் கூட்டமைப்பு
Question 12 Explanation: 
 இந்தியாவில் சில்லறை கொடுப்பனவுகள் மற்றும் தீர்வு முறைகளை செயல்படுத்தும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகமானது (NPCI) அண்மையில், ‘PAi’ என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான இயலியை (chatbot) அறிமுகப்படுத்தியுள்ளது. இம்மெய்நிகர் உதவியாளர், NPCI’இன் முதன்மை தயாரிப்புகளான FASTag, RuPay, UPI, AePS போன்றவை குறித்து நிகழ்நேர அடிப்படையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. பயனர்கள், அந்தக் குறிப்பிட்ட தயாரிப்புகளைப்பற்றிய கேள்விகளை இயலியிடம் கேட்கலாம். அதற்குத்தகுந்த பதில்கள் இயலியால் அனுப்பப்படும். உலகளாவிய RuPay அட்டைதாரர்களும் இவ்வியலியை அணுகலாம்.
Question 13
இனப்பெருக்க உரிமைகளுக்கான உலகளாவிய பெண்கள் வலையமைப்பால் மே 28 அன்று கொண் -டாடப்படுகிற நாள் எது?
A
பெண்களின் உடல்நலத்திற்கான பன்னாட்டு நடவடிக்கை நாள் 
B
பன்னாட்டு பெண்கள் இனப்பெருக்க உரிமைகள் நாள்
C
பன்னாட்டு மக்கள்தொகை தினம்
D
பன்னாட்டு பாலின சமத்துவ நாள்
Question 13 Explanation: 
 பெண்களின் உடல்நலத்திற்கான பன்னாட்டு நடவடிக்கை நாளை ஒவ்வோர் ஆண்டும் மே.28 அன்று இனப்பெருக்க உரிமைகளுக்கான உலகளாவிய பெண்கள் வலையமைப்பு (WGNRR) கொண்டாடு வருகிறது. கடந்த 1987ஆம் ஆண்டு முதல் பல்வேறு பெண்கள் உடல்நல ஆதரவாளர்களும் அவர்களது சமூகங்களும் இந்தக் கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கிவருகின்றனர். கோஸ்டாரிகாவில் நடந்த பன்னாட்டு பெண்கள் உடல்நலம் குறித்த சந்திப்பின்போது, லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் மகளிர் உடல்நல வலையமைப்பு, மே.28’ஐ பெண்களின் உடல்நலத்திற்கான பன்னாட்டு நடவடிக்கை நாளாக கொண்டாடுவதற்கு முன்மொழிந்தது
Question 14
இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அமைக்கப்பட்ட 11 உறுப்பினர்கள்கொண்ட வருடாந்திர மானியம் மற்றும் இணைவுக் குழுவின் தலைவர் யார்?
A
அதில் சுமரிவாலா
B
D R சைனி
C
வாகிஷ் பதக்
D
அபு மேத்தா
Question 14 Explanation: 
 இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவர் அதில் சுமரிவாலா தலைமையில் 11 பேர்கொண்ட குழுவை இந்திய ஒலிம்பிக்சங்கம் அமைத்துள்ளது. நிதித்துறையுடன் ஒருங்கிணைந்து அதன் உறுப்பினர்களின் வருடாந்திர (2020-2021ஆம் ஆண்டுக்கானது) மானியம் மற்றும் இணைவுக் கட்டணத்தை மதிப்பாய்வு செய்து கண்காணிப்பதற்காக இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் தொடர்புடைய நிலுவையில் உள்ள அனைத்து சிக்கல்கள் குறித்த அறிக்கையையும் IOA தலைவருக்கு இது அனுப்பும்
Question 15
எந்த மாநிலத்தின் சாலை வசதியை மேம்படுத்துவதற்காக, ஆசிய வளர்ச்சி வங்கி (ADB), அண்மையில் இந்தியாவுடனான $177 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
A
மத்திய பிரதேசம்
B
ஆந்திர பிரதேசம்
C
மகாராஷ்டிரா
D
மேற்கு வங்கம்
Question 15 Explanation: 
 மகாராஷ்டிரா மாநிலத்தில் முக்கிய மாவட்ட சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்த $177 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியும் (ADB), மத்திய அரசும் கையெழுத்திட்டன.  இந்தத் திட்டம் மாநிலத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தும். இதன்மூலம் கிராமப்புற மக்கள் சந்தைகள், வேலைவாய்ப்புக்கு மற்றும் சேவைகளுக்கு செல்லமுடியும். மேம்படுத்தப்பட்ட இயங்குதிறன், மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு வெளியேயுள்ள இரண்டாம் நிலை நகரங்களில் வளர்ச்சி மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தும். இதன் மூலம் வருவாய் வித்தியாசங்கள் குறையும். பன்னாட்டுத் தரத்தைப் பின்பற்றி இந்தச் சாலைத்திட்டம் அமைக்கப்படுவதால், சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படும்
Question 16
புதிய பழங்களை இணையவழியில் விற்பனைசெய்வதற்காக, கர்நாடக மாநில மாம்பழ வாரியத்துடன் கூட்டிணைந்துள்ள மின்னணு-வணிகத்தளம் எது?
A
அமேசான்
B
பிளிப்கார்ட்
C
ஸ்னாப்டீல்
D
ஷாப்க்ளுஸ்
Question 16 Explanation: 
 கர்நாடக மாநில மாம்பழ மேம்பாடு & சந்தைப்படுத்தல் கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிளிப்கார்ட் கையெழுத்திட்டுள்ளது. இது, விவசாயிகள் தங்கள் புதிய பழங்களை ஆன்லைனில் விற்க உதவுகிறது. இந்த ஒப்பந்தத்தின்கீழ், இந்திய அஞ்சல் மையங்கள் விநியோகப் பங்காளராக செயல்படும். மாம்பழ வாரியம், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், விற்பனையாளர்கள், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள், பிளிப்கார்ட் தளத்தில் தங்களை இணைத்துக்கொள்வதன்மூலம் மாநிலம் முழுவதும் பல வகையான மாம்பழங்களை விற்கவியலும்
Question 17
“மாநில சுகாதாரப் பதிவேடு" என்னுமொரு திட்டத்தை தொடங்க முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?  
A
ஒடிசா
B
ஆந்திர பிரதேசம்
C
கர்நாடகா
D
இராஜஸ்தான்
Question 17 Explanation: 
 கர்நாடக மாநில அரசானது அண்மையில், “மாநில சுகாதாரப் பதிவேடு” என்று அழைக்கப்படும் இதன் வகையில் முதலான ஒரு திட்டத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்தது. பதிவேட்டில், மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களின் சுகாதாரம் குறித்த தகவல்களை பராமரிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் அம்மாநிலம் அறிவித்துள்ளபடி, ASHA குழுமம், ஆரம்ப சுகாதார மையங்கள், வருவாய் மற்றும் கல்வித் துறைசார் உறுப்பினர்களைப் பயன்படுத்தி, அம்மாநிலத்தில் உள்ள 6.5 கோடி மக்களின் சுகாதாரம் குறித்த தகவல்கள் திரட்டப்படும். இந்தத் திட்டம், முதன்முதலாக, அம்மாநிலத்தில் உள்ள சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் பரிசோதனை முறையில் செயல்படுத்தப்படும்.
Question 18
2019-20ஆம் நிதியாண்டில், இந்தியாவில் அதிக அந்நிய நேரடி முதலீடுகளை மேற்கொண்ட நாடு எது?
A
சிங்கப்பூர்
B
மொரீசியஸ்
C
பிரான்ஸ்
D
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
Question 18 Explanation: 
 தொழிலகம் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறையின் சமீபத்திய தரவுகளின்படி, 2019-20ஆம் ஆண்டில், இந்தியாவில் அதிக அளவு அந்நிய நேரடி முதலீடுகளை மேற்கொண்ட நாடுகளால் $14.67 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளுடன் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து மொரீஷியஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. 2018-19ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-மார்ச் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 4,436 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீட்டைக்காட்டிலும் 2019-20ஆம் நிதியாண்டில் 13% அதிகமாக முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.  அதன்படி, இந்தியா, கடந்த நிதியாண்டில் 4,998 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது. குறிப்பாக, கடந்த 2019-20ஆம் நிதியாண்டில் சேவைத்துறையில் 785 கோடி அமெரிக்க டாலர் முதலீடு ஈர்க்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை அதிகளவிலான அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது.
Question 19
நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக் குழுவின் தலைவர் யார்?
A
நிதியமைச்சர்
B
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர்
C
நிதிச் செயலாளர்
D
SEBI தலைவர்
Question 19 Explanation: 
 நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக் குழுவின் (FSDC) 22ஆவது கூட்டத்துக்கு மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமைதாங்கினார். அதன்சமயம், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் நிதி நிலைத்தன்மை குறித்து அவர் ஆய்வுசெய்தார்.  கடந்த 2010ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தன்னாட்சிமிக்க ஓர் ஒழுங்குமுறை அமைப்பான நிதி நிலைத் தன்மை மற்றும் வளர்ச்சிக்குழுவின் தலைவராக மத்திய நிதியமைச்சர் உள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதிச்செயலாளர் தலைமைப் பொருளாதார ஆலோசகர், SEBI, IRDAI, PFRDA, IBBI ஆகியவற்றின் தலைவர்கள் உள்ளிட்ட இக்குழுவின் பத்து உறுப்பினர்கள்தவிர வேறுசில தகுதியான நபர்களையும் இக்குழுவில் சேர்த்துக்கொள்ள மத்திய நிதியமைச்சருக்கு அதிகாரமுண்டு.
Question 20
ஆதார் எண் அடிப்படையிலான e-KYC’ஐப் பயன்படுத்தும் எந்த நிகழ்நேர வசதியை நிதியமைச்சர் தொடங்கிவைத்துள்ளார்?
A
உடனடி டிமாட் கணக்கு
B
உடனடி நிரந்தரக் கணக்கு எண் (PAN)
C
உடனடி கடவுச்சீட்டு
D
உடனடி உத்யோக் ஆதார்
Question 20 Explanation: 
 மத்திய நிதிநிலை அறிக்கையில் செய்யப்பட்ட அறிவிப்பைத்தொடர்ந்து, உடனடியாக நிரந்தரக் கணக்கு எண்ணை (நிகழ்நேரத்தில்) ஒதுக்கும் வசதியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முறைப்படி தொடங்கிவைத்தார். ஆதார் எண் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணை வைத்திருக்கும் நிரந்தரக் கணக்கு எண் விண்ணப்பதாரர்களுக்கு இந்த வசதி தற்போது கிடைக்கும். காகிதமிலா முறையில் செய்யப்படும் இந்த ஒதுக்கீடுமூலம், மின்-நிரந்தக் கணக்கு எண் விண்ணப்பதா -ரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.  இதன் ‘மாதிரிப்பதிப்பு’ சோதனை முறையில் வருமான வரித்துறையின் e-தாக்கல் இணையதளத்தில் 2020 பிப்.12 அன்று தொடங்கப்பட்டது. அன்றுமுதல், வெறும் பத்து நிமிடங்களுக்குள்ளாக நிரந்தரக் கணக்கு எண்கள் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுவருகின்றன.
Question 21
சமீபத்தில், காணொளிவழியில், ‘ஏற்றுமதிகள் குறித்த டிஜிட்டல் உச்சிமாநாட்டை’ ஏற்பாடு செய்திருந்த இந்திய சங்கம் எது?
A
FICCI
B
CII
C
NASSCOM
D
FCI
Question 21 Explanation: 
 இந்திய தொழிற்துறை கூட்டமைப்பால் (CII) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஏற்றுமதிகள் குறித்த டிஜிட்டல் உச்சிமாநாட்டில் மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். காணொளிவழிமூலம் உரையாற்றிய அவர், ஜூன் மாதத்தில் ஏற்றுமதியில் 8-10 சதவீதம் வரை சரிவு இருக்கும் என எதிர்பார்ப்பதாக கூறினார். ஏப்ரல் மாதத்தில், முப்பதில் 28 முக்கிய தயாரிப்புகளின் ஏற்றுமதி, 99 சதவீதம் வரை பெரும் சரிவைக்கண்டதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.  
Question 22
நடப்பாண்டு (2020) வரும் உலக மாதவிடாய் சுகாதார நாளுக்கான கருப்பொருள் என்ன
A
Healthy Menstruation
B
Periods in Pandemic
C
Menstrual Hygiene Management
D
Access to safe menstruation
Question 22 Explanation: 
 ஒவ்வோர் ஆண்டும் மே.28ஆம் தேதியன்று உலகம் முழுமைக்கும் உலக மாதவிடாய் சுகாதார நாள் கொண்டாடப்படுகிறது. இது, WASH United என்ற ஜெர்மனியைச் சார்ந்த ஓர் அரசு சாரா அமைப்பால் தொடங்கப்பட்ட ஒரு சிறப்பு நாளாகும். “Periods in Pandemic” என்பது நடப்பாண்டு (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். பாதுகாப்பான மாதவிடாய் நடைமுறைகள் மற்றும் உடல்நலவாழ்வு மேலாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு அரசாங்க நிறுவனங்கள், தனி நபர்கள், இலாப நோக்கற்றவர்கள் மற்றும் ஊடகங்கள் இந்நாளில் ஒன்றிணைகின்றன.
Question 23
Collab’ என்ற குறுவிசைக் காணொளிப் பயன்பாட்டை (short music video) அறிமுகப்படுத்தியுள்ள பிரபல தொழில்நுட்ப நிறுவனம் எது?
A
அமேசான்
B
பேஸ்புக்
C
கூகிள்
D
மைக்ரோசாப்ட்
Question 23 Explanation: 
 பேஸ்புக் நிறுவனமனது அண்மையில், ‘Collab’ என்ற சோதனை வடிவிலிருக்கும் குறுவிசைக் காணொளிப் பயன்பாட்டை அறிமுகம் செய்தது. ‘Collab’ பயன்பாட்டைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் காணொளிகளை இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் கதைகள் உள்ளிட்ட தளங்களில் வெளியிடலாம். பேஸ்புக்கின் NPE அணிகளின் ஆராய்ச்சிக் குழு இந்தப் பயன்பாட்டை உருவாக்கியுள்ளது. முன்னதாக, இந்தக் குழு, ‘CatchUp’ மற்றும் ‘Hobbi’ உள்ளிட்ட வேறுசில பயன்பாடுகளையும் உருவாக்கியிருந்தது.
Question 24
மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக UNICEF தேர்ந்தெடுத்துள்ள இந்திய ஆளுமை யார்?
A
பிரியங்கா சோப்ரா
B
P V சிந்து
C
மானுஷி சில்லர்
D
ஸ்மிருதி மந்தனா
Question 24 Explanation: 
 2017ஆம் ஆண்டில், ‘மிஸ் வேர்ல்ட்’ பட்டத்தை வென்ற மானுஷி சில்லர், மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐ.நா குழந்தைகள் நிதியத்துடன் (UNICEF) கைகோர்த்துள்ளார். மானுஷி, ‘சக்தி திட்டம்’ என்ற மாதவிடாய் சுகாதாரம் குறித்த ஒரு முன்னெடுப்பை நடத்தி வருகிறார்.  இந்தக்கூட்டாண்மைமூலம், மாதவிடாய் சுகாதாரம் குறித்து சிறுமிகளுக்கு அறிவுறுத்துவதற்கும், நலவாழ்வு வசதிகளை உருவாக்குவதற்குமான முயற்சிகளை அவர் ஊக்குவிப்பார். உலக மாதவிடாய் சுகாதார நாளான மே.28 அன்று, UNICEF நடத்திய ‘ரெட் டாட் சவாலிலும்’ அவர் பங்கேற்றார்.
Question 25
இந்தியாவின் எந்த முதன்மை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயலதிகாரியாக பிரபல நிர்வாகி தியரி டெலாபோர்டே நியமிக்கப்பட்டுள்ளார்?
A
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
B
விப்ரோ
C
இன்போசிஸ்
D
HCL
Question 25 Explanation: 
 இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, அதன் புதிய தலைமைச் செயல் அதிகாரி & மேலாண்மை இயக்குநராக தியரி டெலாபோர்டே நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. விப்ரோவின் தற்போதைய தலைவராக இருந்துவரும் அபிதாலி நீமுச்வாலாவுக்கு மாற்றாக தியரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்திற்கு முன்னர், தியரி டெலாபோர்டே காப்ஜெமினியுடன் தொடர்பு கொண்டிருந்தார். அங்கு, தலைமை இயக்க அதிகாரி, குழு நிர்வாக வாரியத்தின் உறுப்பினர் உட்பட பல பாத்திரங்களை அவர் வகித்தார். இந்திய நிறுவனங்களால் செய்யப்பட்ட முதல் இந்தியர் அல்லாத தலைமைப் பொறுப்பு நியமனம் இதுவாகும்.
Question 26
நடப்பாண்டில் (2020) வரும் பன்னாட்டு ஐ.நா அமைதிகாப்போர் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Women in Peacekeeping: A Key to Peace
B
Honouring Peacekeeping
C
Women, Peace and Security
D
Risk of COVID-19 in peacekeeping
Question 26 Explanation: 
 அமைதிகாக்கும் படையினரின் பங்களிப்புக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மே.29 அன்று பன்னாட்டு ஐ.நா அமைதிகாப்போர் நாள் கொண்டாடப்படுகிறது. “Women in Peacekeeping: A Key to Peace” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம், 1325 நிறைவேற்றப்பட்ட இருபதாம் ஆண்டு நிறைவையும் நடப்பாண்டு (2020) குறிக்கிறது. கடந்த 1948ஆம் ஆண்டு முதல், தங்கள் சேவையின்போது உயிரிழந்த 3,900’க்கும் மேற்பட்ட ஐ.நா அமைதிகாக்கும் படையினரை ஐக்கிய நாடுகள அவை கெளரவித்து வருகிறது.
Question 27
திறன்வாய்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக, ‘ரோஜ்கார் சேது’ என்றவொரு திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
மகாராஷ்டிரா
B
மத்திய பிரதேசம்
C
உத்தரபிரதேசம்
D
ஒடிசா
Question 27 Explanation: 
 சொந்த மாநிலத்திற்குத் திரும்பிய திறன்மிகு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் மத்திய பிரதேச மாநில அரசு, அண்மையில், ‘ரோஜ்கார் சேது’ என்றவொரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக, பிற மாநில தொழிலகங்களில் பணிபுரிந்த திறன்மிகு தொழிலாளர்களை அரசு கணக்கெடுத்து வருகிறது. மேலும், தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் சாலை & பாலம் கட்டுமானம் போன்ற உட்கட்டமைப்புத் திட்டங்களுடன் தொடர்புடைய ஒப்பந்தக்காரர்களையும் இதற்காக அம்மாநில அரசாங்கம் தொடர்புகொள்ளும்.
Question 28
பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தால் குறைந்தபட்ச ஆதரவு விலைப் பட்டியலில் எத்தனை சிறிய இரக வன உற்பத்திப் பொருட்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன?
A
25
B
23
C
18
D
33
Question 28 Explanation: 
 வனப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சிறிய இரகப் பொருள்களை, குறைந்தபட்ச ஆதரவு விலையின் மூலமாக விற்பனை செய்யும் முறையை கடந்த 2011ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்தது. இத் திட்டத்தின்கீழ் கூடுதலாக 23 வன உற்பத்தி சிறிய இரகப் பொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலைப் பட்டியலில் சேர்ப்பதைப் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த முடிவின்மூலம் விற்பனைக்கு வரும் வனப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சிறிய இரகப்பொருட்களின் எண்ணிக்கை ஐம்பதிலிருந்து எழுபத்து மூன்றாக அதிகரித்துள்ளது.
Question 29
“அக்னிபிரஸ்தா” என்ற ஏவுகணை பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்பட்ட நகரம் எது?  
A
கொச்சின்
B
மும்பை
C
விசாகப்பட்டினம்
D
அகமதாபாத்
Question 29 Explanation: 
 INS கலிங்காவில், “அக்னிபிரஸ்தா” என்னும் ஏவுகணைப் பூங்காவுக்கு கட்டளை அதிகாரி இராஜேஷ் தேப்நாத் அடிக்கல் நாட்டினார்.  சூரிய ஆற்றலை மேம்படுத்த வேண்டும் என்ற இந்திய அரசின் முன்னெடுப்புகளை கவனத்தில் கொண்டும், தேசிய சூரிய மின்னாற்றல் இயக்கத்தின் ஒருபகுதியாக 2022’க்குள் 100 GW சூரிய மின் ஆற்றலை உற்பத்திசெய்யும் இலக்கை அடையும் குறிக்கோளை கவனத்தில்கொண்டும் INS கலிங்கா -வில் இரண்டு MW சூரிய ஒளிமின்னழுத்த உற்பத்திப்பிரிவை விசாகப்பட்டினத்தில் துணை அட்மிரல் அதுல் குமார் ஜைன் தொடங்கிவைத்தார். கிழக்கு கப்பற்படைப் பிரிவில் உள்ள உற்பத்திப் பிரிவுகளில் இதுவே மிகப்பெரிய உற்பத்திப்பிரிவாகும். இதன் மதிப்பீட்டு ஆயுட்காலம் 25 ஆண்டுகளாகும்.
Question 30
தேசிய வாழ்க்கைத் தொழில் சேவை தளத்தில், “வாழ்க்கைத் தொழில் திறன் பயிற்சி”யைத் தொடங்க, எந்த நிறுவனத்துடன் மத்திய தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம் கூட்டிணைந்துள்ளது?
A
லார்சன் & டூப்ரோ
B
TCS iON
C
இன்போசிஸ்
D
அசெஞ்சர்
Question 30 Explanation: 
 பதிவுசெய்த வேலைதேடுவோருக்காக, மத்திய தொழிலாளர் நலன் & வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய வாழ்க்கைத்தொழில் சேவைத்திட்டமானது TCS iON Digital Learning அமைப்புடன் இணைந்து இலவச ஆன்லைன், “வாழ்க்கைத்தொழில் பயிற்சி”யைத் தொடங்கியுள்ளது. இன்றைய சூழலில் தொழிற்துறை விரும்பக்கூடிய திறமைகளை இந்தப்படிப்பு அளிக்கும். மென்திறன் குறித்த இப் பயிற்சி, பெருவணிக நடைமுறைகளுடனான கற்பவர்களின் ஆளுமை மேம்பாட்டை அதிகரிப்பது, பயனுள்ள விளக்கவுரை ஆகியவற்றுடன் இதர தேவையான மென்திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும். அனைத்துப் பயிற்சிகளும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் தேசிய வாழ்க்கைப்பணி முன்னேற்ற சேவைத்திட்டம் (National Career Service Project - NCS) தளத்தில் கிடைக்கும்.
Question 31
நேஷனல் ஜியோகிராபிக் அலைவரிசையானது மத்திய குடிநீர் அமைச்சகத்துடன் இணைந்து, எந்த அரசுத்திட்டம்பற்றிய ஒரு விளக்கப்படத்தை வெளியிட்டுள்ளது?
A
தூய்மை இந்தியா இயக்கம்
B
பாதுகாப்பான இமயமலை திட்டம்
C
பசுமை திறன் மேம்பாட்டு திட்டம்
D
தேசிய தூய்மையான காற்று திட்டம்
Question 31 Explanation: 
 நேஷனல் ஜியோகிராபிக் அலைவரிசையானது மத்திய குடிநீர் மற்றும் நலத்துறை அமைச்சகத்துடன் இணைந்து, ‘தூய்மை இந்தியா: இந்தியாவின் சுகாதாரப்புரட்சி’ என்ற படத்தை வெளியிட்டுள்ளது. இப் படம், அண்மையில், இந்திய குடியரசுத்தலைவருக்கான சிறப்புத் திரையிடலிலும், நேட் ஜியோ அலை வரிசையிலும் திரையிடப்பட்டது. இப்படம், தூய்மை இந்தியா இயக்க கிராமீனின் யூடியூப் சேனலிலும் கிடைக்கிறது. பல்வேறு ‘தூய்மை தூதர்கள்’, இத்திரைப்படத்தில் விளக்கப்பட்டுள்ள திட்டத்துடனான தங்கள் தொடர்பைப் பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.
Question 32
முந்தைய 2019-20ஆம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் உண்மையான நிதிப்பற்றாக்குறை சதவீதம் என்ன?
A
3.8%
B
3.8%
C
4.25%
D
4.59%
Question 32 Explanation: 
 தலைமை கணக்குக் கட்டுப்பாட்டாளர் தரவின்படி, 2019-20ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 4.59 சதவீதமாக உள்ளது. இது, 3.8 சதவீதமாக இருக்கும் என கடந்த பிப்ரவரி மாதத்தில் மதிப்பிடப்பட்டிருந்தது. நிதிப் பற்றாக்குறை என்பது அரசாங்கத்தின் வருவாய் மற்றும் செலவினங்களுக்கு இடையிலான இடைவெளியாகும். இருப்பினும், மொத்த வரவுசெலவுத்திட்டத்தின் மதிப்பீடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாகும். வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டைவிட 0.5% அதிக பற்றாக்குறையை ஈடுகட்ட, நிதிப்பொறுப்பு மற்றும் வரவுசெலவுத்திட்ட மேலாண்மைச் சட்டத்தின் விடுபடு பிரிவை மத்திய நிதியமைச்சர் செயல்படுத்தியுள்ளார்.
Question 33
COVID-19 தொற்றுநோய்க்கு இடையில், இரகசிய வாக்களிப்பைக்கொண்ட தனது தேர்தல்களில் புதிய வாக்களிப்பு நடைமுறையை பின்பற்றியுள்ள பன்னாட்டு அமைப்பு எது?
A
ஐரோப்பிய ஒன்றியம்
B
ஐக்கிய நாடுகள்
C
உலக நலவாழ்வு அமைப்பு
D
வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு
Question 33 Explanation: 
 பாதுகாப்புக்கவுன்சிலின் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக, ஒரு புதுவிதமான வாக்களிப்பு நடைமுறையை ஐக்கிய நாடுகள் பொது அவை அண்மையில் ஏற்றுக்கொண்டுள்ளது.  பேரளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் COVID-19 தொற்றின்போதான சமூக விலகலை உறுதி செய்வதுவுமே இம்மாற்றத்திற்கான காரணமாகும். வழக்கமாக, ஐ.நா. தலைமையகத்தில் குதிரை லாட வடிவில் அமைக்கப்பட்டுள்ள சட்டசபை அறையில் சட்டசபை கூடுகிறது. ஆனால் தற்போது, 193 ஐ.நா. உறுப்பு நாடுகளின் தூதர்களும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட இடத்திலும் நேரத்திலும் இரகசிய வாக்குகளை செலுத்துவார்கள்.
Question 34
ஆண்டுதோறும் வெளியிடப்படும், அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு ஆளுமைகளுக்கான போர்ப்ஸ் தரவரிசையில், முதலிடத்தைப் பிடித்த விளையாட்டு ஆளுமை யார்?
A
கிறிஸ்டியானோ ரொனால்டோ
B
லியோனல் மெஸ்ஸி
C
விராட் கோலி
D
ரோஜர் பெடரர்
Question 34 Explanation: 
 ஆண்டுதோறும் வெளியிடப்படும் அதிக சம்பளம்வாங்கும் விளையாட்டு ஆளுமைகளுக்கான போர்ப்ஸ் தரவரிசையில், சுவிஸ் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவ்விதழின் கூற்றுப்படி, பெடரரின் மொத்த வருவாய் $106.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அவர் இருபது கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதன் பரிசுத்தொகை மட்டும் அவருக்கு $6.3 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டித்தந்துள்ளது.  அவரைத்தொடர்ந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டாமிடத்திலும், லியோனல் மெஸ்ஸி மற்றும் நெய்மர் ஆகியோர் முறையே மூன்றாம் மற்றும் நான்காமிடத்திலும் உள்ளனர். நவோமி ஒசாகா மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் பட்டியலின் முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளாக உள்ளனர்
Question 35
ஜல் ஜீவன் இயக்கத்தை எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு `445 கோடியை ஒதுக்கியுள்ளது?
A
ஜம்மு & காஷ்மீர்
B
சத்தீஸ்கர்
C
உத்தரபிரதேசம்
D
ஒடிசா
Question 35 Explanation: 
 சத்தீஸ்கர் மாநில அரசு தங்களது 2020-21ஆம் ஆண்டுக்கான செயல்திட்டத்தை மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் பரிசீலனைக்கும், அனுமதிக்குமாக சமர்ப்பித்துள்ளது. வரும் 2024ஆம் ஆண்டுக்குள் ஊரகப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் நீண்டகால அடிப்படையில் குறிப்பிட்ட தரத்தில் போதுமான அளவில் குடிநீரை வழங்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் ஜல்சக்தி அமைச்சகமானது ஜல் ஜீவன் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்துக்காக `3.60 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இந்தத் திட்டம், மாநிலத்தில் உள்ள 20 இலட்சம் குடும்பங்களுக்கு குடிநீர்க் குழாய் இணைப்பு தர திட்டமிட்டுள்ளது. இந்த மாநிலத்தில், 2020-21ஆம் ஆண்டுக்குள் ஜல் ஜீவன் இயக்கத்தை அமல்படுத்த இந்திய அரசு `445 கோடியை அனுமதித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்துக்கு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நீர் வழங்கல் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
Question 36
தற்போது BRICS கூட்டமைப்பின் தலைமைப்பதவியை வைத்திருக்கும் நாடும் அண்மையில் BRICS வரித்துறைத்தலைவர்களின் கூட்டத்தை நடத்திய நாடும் எது?
A
பிரேசில்
B
இரஷ்யா
C
சீனா
D
தென் ஆப்பிரிக்கா
Question 36 Explanation: 
 பிரேசில் (B), இரஷ்யா (R), இந்தியா (I), சீனா (C), தென்னாப்பிரிக்கா (S) ஆகிய நாடுகளை உள்ளடக்கிய BRICS அமைப்பின் வரித்துறைத் தலைவர்களின் கூட்டத்தை, தற்போது அதன் தலைமைப் பதவியை வகித்துவரும் இரஷ்யா நடத்தியது. இந்தக் கூட்டம், மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் COVID-19 தொற்றை முன்னிட்டு, இது காணொளிக்காட்சிமூலம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில், மத்திய அரசின் நிதித்துறை செயலாளர் Dr அஜய்பூஷன் பாண்டே கலந்துகொண்டார். வரி விஷயங்களில் ஒத்துழைப்பின் கூறுகளை ஆராய்வதற்கான சாத்தியங்கள் மற்றும் வரி அதிகாரிகளின் தீர்வுமொழிகள் ஆகியவை இதன்சமயம் விவாதிக்கப்பட்டன.
Question 37
சமூக விலகலை உறுதிசெய்ய மக்களுக்கு உதவுவதற்காக,Sodar’ என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?
A
பேஸ்புக்
B
அமேசான்
C
கூகுள்
D
ஆப்பிள்
Question 37 Explanation: 
 சமூக இடைவெளியை கடைப்பிடிக்க பொதுமக்களுக்கு உதவுவதற்காக முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், ‘சோடார்’ என்னும் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச்செயலி மிகை மெய்ம்மை (Augmented Reality) என்னும் வசதியை பயன்படுத்தி இயங்குகிறது. இந்த அம்சம், பயனரின் ஆண்ட்ராய்டு திறன்பேசி நிழற்படக்கருவிகளில் ஒன்றிணைந்து இயங்குகிறது.  இந்த அம்சத்தினை இயக்கியதும், பயனர்களை இது ஒரு வட்டத்தில் நிறுத்துகிறது. திறன்பேசியினை வைத்துக்கொண்டு நடக்கும்போது, பயனர்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்படுமானால், திரையில் அதற்கான எச்சரிக்கை தகவல் தெரியும். முன்னதாக, ஐ.நா. தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஆய்வகங்கள், புளூடூத் சமிக்ஞையைப் பயன்படுத்தி இயங்கும் ஓர் இலவச சமூக இடைவெளி பயன்பாட்டை, ‘1point5’ என்ற பெயரில் வெளியிட்டிருந்தது
Question 38
நடப்பாண்டில் கேரளாவில் செயல்படுத்தப்படவுள்ள K-FON திட்டத்துடன் தொடர்புடைய துறை எது?
A
ஊட்டச்சத்துமிகுந்த உணவு
B
இணைய அணுகல்
C
நீர்ப்பாதுகாப்பு
D
விண்வெளி அறிவியல்
Question 38 Explanation: 
 கேரள நுண்ணிழை ஒளியிய வலையமைப்புத் திட்டமானது (Kerala - Fibre Optic Network) 2020 டிசம்பருக்குள் தொடங்கப்படும் என்று கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். ஏழை மக்களுக்கும் பிறருக்கும் மலிவு விலையில் இலவச இணைய வசதியை வழங்குவதே `1,500 கோடி மதிப்பிலான இத்திட்டத்தின் நோக்கமாகும். இதை கேரளமாநில IT உட்கட்டமைப்பு நிறுவனமும் கேரள மாநில மின்சார வாரியமும் செயல்படுத்துகின்றன. கேரள மாநில மின்சார வாரியத்தின் மின் கம்பங்களைப்பயன்படுத்தி, மாநிலம் முழுவதும் ஒளியிழை வடங்கள் பதிக்கப்படவுள்ளன.
Question 39
பரப்பளவில் இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமும் மே 30 அன்று அதன் மாநில நாளைக் கொண்டாடும் மாநிலமும் எது?
A
கோவா
B
சிக்கிம்
C
திரிபுரா
D
மேகாலயா
Question 39 Explanation: 
 கோவா இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடிப்படையில் நான்காவது சிறிய மாநிலமாகவும் உள்ளது. அண்மையில் இது தனது மாநில நாளை மே.30 அன்று கொண்டாடியது. 1961ஆம் ஆண்டில், ‘ஆபரேஷன் விஜய்’மூலம் இந்திய ராணுவம் கோவா, டாமன் & டையூ ஆகியவற்றை இந்திய ஒன்றியத்துடன் இணைத்தது. அதன்பிறகு கோவா, டாமன் மற்றும் டையூவுடன் இணைந்து இந்தியாவின் மத்திய நிர்வாக யூனியன் பிரதேசமாக வகைப்படுத்தப்பட்டது. கடந்த 1987 மே.30 அன்று அந்த யூனியன் பிரதேசம் பிளவுபட்டு, கோவா இந்தியாவின் 25ஆவது மாநிலமாக அறிவிக்கப்பட்டது. டாமன் மற்றும் டையூ தொடர்ந்து யூனியன் பிரதேசமாகவே இருந்தது.
Question 40
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கடன் வழங்குவதற்காக உத்தரகண்ட் மாநில அரசு தொடங்கியுள்ள புதிய திட்டத்தின் பெயர் என்ன?
A
முக்கிய மந்திரி சம்ரிதி யோஜனா
B
முக்கிய மந்திரி யாத்ரா யோஜனா
C
முக்கிய மந்திரி பிரவாசி யோஜனா
D
முக்கிய மந்திரி ஸ்வரோஜ்கர் யோஜனா
Question 40 Explanation: 
 COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கடன் வழங்குவதற்காக உத்தரகண்ட் மாநில அரசு, அண்மையில், “முக்கிய மந்திரி ஸ்வரோஜ்கர் யோஜனா” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், உற்பத்தித் துறையில் `25 இலட்சம் வரையிலும், சேவைத் துறையில் `10 இலட்சம் வரையிலுமான கடன்களை உத்தரகண்ட் அரசு வழங்கும். மாநிலத்திற்குத் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், இவ்வகை கடனுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வரையறுக்கப்பட்ட வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றின்மூலம் விண்ணப்பதாரர்களுக்கு கடனுதவி வழங்கப்படும்.
Question 41
எந்த கோப்புப்பகிர்வு வலைத்தளத்துக்கு தடைவிதித்து தொலைத்தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது?
A
Media Fire
B
WeTransfer
C
Drop Box
D
One Drive
Question 41 Explanation: 
 சமீபத்தில் தொலைத்தொடர்புத்துறை வெளியிட்ட ஓர் உத்தரவின்படி, பாதுகாப்பு காரணங்களுக்காக கணினி கோப்புப்பகிர்வு வலைத்தளமான, ‘We Transfer’ஐத் தடைசெய்ய அனைத்து இணைய சேவை வழங்குநர்களும் (ISP) அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து இணைய சேவை வழங்குநர்களும் ‘We Transfer’ வலைத்தளத்தில் உள்ள இரண்டு பதிவிறக்க இணைப்புகளையும், முழு வலைத்தளத்தையும் தடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ‘We Transfer’ என்பது நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நிறுவப்பட்ட, ஓர் இணைய அடிப்படையிலான கணினி கோப்புப்பரிமாற்ற சேவைத்தளமாகும்.
Question 42
எந்த இந்திய பொதுத்துறை வங்கியின் புதிய மேலாண்மை இயக்குநராக (MD) அஸ்வனி பாட்டியா நியமிக்கப்பட்டுள்ளார்?
A
பஞ்சாப் தேசிய வங்கி
B
பேங்க் ஆப் இந்தியா
C
பாரத ஸ்டேட் வங்கி
D
யூனியன் பேங்க் ஆப் இந்தியா
Question 42 Explanation: 
 மூன்று பொதுத்துறை வங்கிகளின் உயர்நிலை பதவிக்கான நியமனத்தை மேற்கொள்ள சமீபத்தில் வங்கி வாரிய பணியகம் (BBB) பரிந்துரை செய்தது. பாரத ஸ்டேட் வங்கியின் அடுத்த மேலாண்மை இயக்குநராக அஸ்வனி பாட்டியாவை நியமிக்க BBB பரிந்துரை செய்துள்ளது. அஸ்வனி பாட்டியா, தற்போது SBI’இன் துணை மேலாண்மை இயக்குநராக உள்ளார். சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக மாதம் வெங்கட் ராவையும், இந்திய ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக PP செங்குப்தா அவர்களையும் நியமிக்க அவ்வாரியம் பரிந்துரைத்துள்ளது.
Question 43
COVID-19 கொள்ளைநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள நடப்பாண்டுக்கான (2020) 47ஆவது G7 உச்சிமாநாடு, முதலில் எந்த நாட்டில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது?
A
பிரேசில்
B
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
C
சீனா
D
தென் ஆப்பிரிக்கா
Question 43 Explanation: 
 G7 என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய உலகின் மிகப்பெரிய ஏழு பொருளாதாரங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பாகும். முன்னதாக இது இரஷ்யாவை உள்ளடக்கியிருந்தபோது G8 என அழைக்கப்பட்டது.  47ஆவது G7 உச்சிமாநாடு முதலில் அமெரிக்காவின் கேம்ப் டேவிட் நகரத்தில் 2020 ஜூன் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அண்மையில், இந்த 47ஆவது உச்சிமாநாட்டை செப்டம்பர் அல்லது நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். ஆஸ்திரேலியா, தென் கொரியா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளை உள்ளடக்கி G7 கூட்டமைப்பை விரிவுபடுத்தவும் அவர் அப்போது பரிந்துரைத்தார்.
Question 44
இராஜீவ்காந்தி கேல் இரத்னா விருதுக்கு இந்திய மட்டைப்பந்து கட்டுப்பாட்டு வாரியத்தால் (BCCI) பரிந்துரைக்கப்பட்டுள்ளவர் யார்?
A
ஷிகர் தவான்
B
ரோகித் சர்மா
C
ஜஸ்பிரீத் பும்ரா
D
இரவீந்திர ஜடேஜா
Question 44 Explanation: 
 இந்திய மட்டைப்பந்து கட்டுப்பாட்டு வாரியமானது (BCCI) இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவை மதிப்புமிக்க இராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைத்துள்ளது. அர்ஜுனா விருதுக்கு இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், தீப்தி யாதவ் உள்ளிட்ட பிற கிரிக்கெட் வீரர்களை BCCI பரிந்துரைத்துள்ளது. விருதுகளுக்கான பரிசீலிப்பு காலம் 2016 ஜன.1 முதல் 2019 டிசம்பர் 31 வரையாகும். கடந்த 2019ஆம் ஆண்டுக்கான ICC ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும் ரோகித் சர்மா தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
Question 45
இன்டெல் இந்தியாவுடன் இணைந்து மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தொடங்கியுள்ள திட்டத்தின் பெயரென்ன?
A
Responsible AI for Youth
B
Sustainable AI for Youth
C
Artificial Intelligence for India
D
Bharat AI
Question 45 Explanation: 
 “இளையோருக்கான பொறுப்புள்ள செயற்கைப்புலனறிவு (AI)” என்ற இளையோருக்கான தேசியத் திட்டத்தையும் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், மற்றும் சட்டம், நீதித்துறை அமைச்சர் இரவிசங்கர் பிரசாத் தொடங்கிவைத்தார். இந்தத்திட்டத்தின் நோக்கம் என்பது நமது நாட்டில் உள்ள இளம் மாணவர்களுக்கு செயற்கைப் புலனறிவுத்தொழினுட்பங்களைக் கிடைக்கச்செய்வதாகும்.  இந்தத்திட்டத்தை இன்டெல் இந்தியாவுடன் இணைந்தும், மத்திய மனிதவள மேம்பாட்டமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறையின் ஆதரவுடனும் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின்னாளுகைப் பிரிவு உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது.  நரேந்திர மோடி அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்று ஓராண்டுகாலம் நிறைவடைந்ததை ஒட்டி, www.ai.gov.in என்ற பெயரில் இந்தியாவின் தேசிய செயற்கைப்புலனறிவு வலைத்தளத்தை மத்திய மின்னணுவியல் & தகவல் தொழில்நுட்ப அமைச்சர் இரவிசங்கர் பிரசாத் தொடங்கிவைத்தார். மின்னணுவியல் & IT அமைச்சகம் மற்றும் IT நிறுவனங்கள் இணைந்து இந்த வலைத்தளத்தை உருவாக்கியுள்ளன. மின்னணுவியல் & IT அமைச்சகத்தின் தேசிய மின்னாளுகைப்பிரிவு மற்றும் IT தொழில்துறையின் NASSCOM ஆகியவை இணைந்து இந்த வலைத்தளத்தை இயக்கும்.
Question 46
நடப்பாண்டில் (2020) வரும் உலக பால் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Milk connecting Nations
B
Milk for All
C
Milk for SDGs
D
20th Anniversary of World Milk Day
Question 46 Explanation: 
 உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 1 அன்று உலக பால் நாள் கொண்டாடப்படுகிறது. முதல் உலக பால் நாள், 2001ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. பாலின் பங்கை சிறப்பித்துக்காட்டுவதற்கும், பால் மற்றும் பால் தொழிற்துறையுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை விளம்பரப்படுத்துவதற்குமாக ஐ.நா அவையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, ஜூன்.1ஆம் தேதியை உலக பால் நாளாக தேர்வுசெய்தது. “20th Anniversary of World Milk Day” என்பது நடப்பாண்டில் வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். மே 29-31 வரை, ‘Enjoy Dairy Rally’ என்ற மெய்நிகர் பரப்புரை பேரணியும் நடந்தது.
Question 47
அமல்படுத்தும் மாநிலங்களின் மொத்த எண்ணிக்கையை இருபதாகக்கொண்டுவர ஒடிசா, சிக்கிம் மற்றும் மிசோரம் ஆகிய மூன்று மாநிலங்கள், கீழ்க்காணும் எந்தத் திட்டத்தில் இணைந்துள்ளன?
A
P M கிசான்
B
ஒரே நாடு ஒரே – குடும்ப அட்டை
C
P M பசல் பீமா யோஜனா
D
பிரதமர் கிசான் மன் தன் யோஜனா
Question 47 Explanation: 
 உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின் அண்மைய அறிவிப்பின்படி, ஒடிசா, சிக்கிம் மற்றும் மிசோரம் ஆகிய 3 மாநிலங்கள் அண்மையில், ‘ஒரே நாடு - ஒரே குடும்ப அட்டை’த் திட்டத்தில் திட்டத்தில் இணைந்துள்ளன. இதன்மூலம், இந்தத்திட்டத்தில் சேர்ந்துள்ள மொத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை இருபதாக உயர்ந்துள்ளது.  இந்த முயற்சியில், மத்திய தேசிய தகவலியல் மையத்தின் குழுவினரோடு இணைந்து, இந்த மூன்று மாநிலங்களை தேசியத்தொகுப்புடன் இணைக்கத்தேவையான தயாரிப்பு நடவடிக்கைகளான மின்ன -ணு விற்பனை முனையக்கருவி (e-PoS) மென்பொருளை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டத்தில் சேர தேவையான உட்கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.
Question 48
ஒவ்வோர் ஆண்டும் ஐ.நா அவையால் உலக பெற்றோர் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
A
மே 31
B
ஜூன் 1
C
ஜூன் 2
D
ஜூன் 3
Question 48 Explanation: 
 ஜூன்.1ஆம் தேதியை உலக பெற்றோர் நாளாக 2012’இல் ஐ.நா பொது அவை அறிவித்தது. அதன்பின்னர், ஆண்டுதோறும் ஜூன்.1 அன்று உலக பெற்றோர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கும் உள்ள அனைத்து பெற்றோர்களையும், தங்கள் குழந்தைகளுக்காக அவர்கள் செய்யும் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்காக அவர்களை கெளரவிக்கும் நோக்கத்துடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. சமூக மேம்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில், UNGA, 1994ஆம் ஆண்டை பன்னாட்டு குடும்ப ஆண்டாகவும், ஒவ்வோர் ஆண்டும் மே.15’ஐ பன்னாட்டு குடும்ப நாளாகவும் அறிவித்தது
Question 49
உயர்தர ஆஸ்திரேலிய மெரினோ செம்மறி கம்பளியை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடிவுசெய்துள்ள மாநில / யூனியன் பிரதேச அரசு எது?
A
குஜராத்
B
உத்தரகண்ட்
C
ஹிமாச்சல பிரதேசம்
D
அஸ்ஸாம்
Question 49 Explanation: 
 உத்தரகண்ட் மாநில கால்நடை பராமரிப்புத்துறையின் சோதனை அறிக்கையின்படி, தொகுக்கப்பட்ட உத்தரகண்ட் மாநில ஆடுகளின் கம்பளியின் தரம் மெரினோ செம்மறி கம்பளிக்கு ஒத்ததாக உள்ளது. ஆஸ்திரேலிய மெரினோ செம்மறி கம்பளி அதன் சிறந்த அமைப்புக்காக, ஜவுளித்தொழிலில் உலகம் முழுவதும் பிரபலமானதாக உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 8000 மெட்ரிக் டன் கம்பளியை இந்தியா இறக்குமதி செய்கிறது. கடந்த ஆண்டின் தேசிய கால்நடைத் திட்டத்தின்கீழ், உத்தரகண்ட் 250 மெரினோ ஆடுகளை வாங்கியது. பொருத்தமான இனப்பெருக்கத் திட்டங்களுடன், உத்தரகண்ட் உயர்தரமான மெரினோ கம்பளியை உற்பத்திசெய்யவுள்ளது.
Question 50
எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ், பிரதம மந்திரி பாரதிய ஜனசாதி பரியோஜனா (PMBJP) திட்டம் செயல்படுத்தப்படுகிறது?
A
நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம்
B
உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம்
C
இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்
D
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம்
Question 50 Explanation: 
 மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம், பிரதம மந்திரி பாரதிய ஜனசாதி பரியோஜனா (PMBJP) திட்டத்தை பிரதம மந்திரி பாரதிய ஜனசாதி மையங்களின் (PMBJK) வலையமைப்புமூலம் செயல்படுத்துகிறது. தரமான மருந்துகள் அனைவருக்கும் மலிவு விலையில் கிடைக்கச்செய்வதும், நலவாழ்வுக்கான செலவுகளைக் குறைப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.  இந்தத் திட்டம், 2020- 21ஆம் ஆண்டின் முதலிரண்டு மாதங்களில், `100.4 கோடி அளவிற்கு விற்பனை செய்து சாதனை புரிந்துள்ளன. 2019- 20ஆம் ஆண்டில் இதே காலத்தில் விற்பனை `40 கோடி என்ற அளவிற்கு இருந்தது. மார்ச், ஏப்ரல், மே 2020 வரையிலான காலத்தில் சுமார் `144 கோடி மதிப்பிலான தரமான, மலிவுவிலையிலான மருந்துப் பொருள்களை இந்த மையங்கள் விற்பனை செய்துள்ளன
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!