Tnpsc

June 2nd Week 2020 Current Affairs Online Test Tamil

நடப்பு நிகழ்வுகள் - June 09 to June 14- 2020

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் - June 09 to June 14- 2020. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சிறு மற்றும் குறு விவசாயிகளிடையே இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்துவதற்காக, கடந்த 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயர் என்ன?
A
பிரதம மந்திரி கிசான் விகாஸ் யோஜனா
B
பரம்பராகத் கிருஷி விகாஸ் யோஜனா
C
இயற்கை வேளாண்மைத் திட்டம்
D
ஆபரேஷன் பசுமை
Question 1 Explanation: 
 சிறு குறு விவசாயிகளிடையே இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக 2015ஆம் ஆண்டில் பரம்பராகத் கிருஷி விகாஸ் திட்டம் தொடங்கப்பட்டது. அண்மையில், NITI ஆயோக், மெய்நிகரான ஓர் உயர்மட்ட வட்டமேசை மாநாட்டை ஏற்பாடுசெய்தது. இதில் பல்வேறு தேசிய & சர்வதேச நிபுணர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் கலந்துகொண்டனர். இது, இந்தியாவில் வேளாண் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வேளாண் முறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 7 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் 8 இலட்சம் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ்கொண்டுவரப்பட்டுள்ளனர் என அமைச்சர் கூறினார்.
Question 2
‘அல்ட்ரா ஸ்வச்’ என்ற பல்நோக்கு கிருமி நீக்கம் செய்யும் அலகை, அரசுக்கு சொந்தமான எந்த அமைப்பு உருவாக்கியுள்ளது?
A
DRDO
B
CSIR
C
HAL
D
BARC
Question 2 Explanation: 
 தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், மின்னணு பொருள்கள், ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களில் கிருமிநீக்கம் செய்வதற்காக, ‘தீவிரத்தூய்மை’ என்னும் கிருமி நீக்கம் செய்யும் அலகை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனம் (DRDO) உருவாக்கியுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனத்தின் தில்லியைச் சார்ந்த ஆய்வகமான அணு மருத்துவம் & தொடர்புடைய அறிவியல் நிறுவனம் (INMAS) இதனை உருவாக்கியுள்ளது. பன்முகத்தடைத் தடுப்பு அணுகுமுறை மற்றும் கிருமிநீக்கத்துக்கான ஒசோனேற்றம் செய்யப்பட்டப்பகுதி தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட ஆக்சிசனேற்ற செயல்முறையை இவ்வமைப்பு பயன்படுத்துகிறது.  தொழிலக, பணிசார்ந்த, தனிப்பட்ட மற்றும் சுற்றுப்புறப் பாதுகாப்புக்கான பன்னாட்டு தரநிலைகளுக்கு உட்பட்டு இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒசோனேற்ற ஸ்பேஸ் மற்றும் திரிநேத்ரா டெக்னாலஜி என்னும் இருவகைகளில், ‘அல்ட்ரா ஸ்வச்’ வருகிறது.
Question 3
சூரியனைச் சுற்றியுள்ள வியாழனின் சுற்றுப்பாதையைப் பகிர்ந்துகொள்ளும் சிறுகோள்களின் மிகப் பெரிய குழு, பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
A
டிரோஜன் சிறுகோள்கள்
B
டிராகன் சிறுகோள்கள்
C
புலம்பெயர்ந்த சிறுகோள்கள்
D
அரசி சிறுகோள்கள்
Question 3 Explanation: 
 சூரியனைச் சுற்றியுள்ள வியாழனின் சுற்றுப்பாதையைப் பகிர்ந்துகொள்ளும் சிறுகோள்களின் பெரிய குழு, பொதுவாக டிரோஜன் சிறுகோள்கள் அல்லது வியாழன் டிரோஜன்கள் என்று அழைக்கப்படுகிறது. டிரோஜான்கள், கோளின் அதே சுற்றுப்பாதையைப் பின்பற்றி சூரியனைச் சுற்றுகின்றன. ஆனால், சுற்றுப்பாதைக்கு 60° முன்னாலோ அல்லது 60° பின்னாலோ அவை சுற்றிவரும்.  அண்மையில், ஹவாய் பல்கலை மற்றும் பெல்பாஸ்டில் அமைந்துள்ள குயின்ஸ் பல்கலையைச் சார்ந்த வானியலாளர்கள் குழு, “2019 LD2” வால்மீனைப்போன்று வால்கொண்ட முதல் அறியப்பட்ட வியாழன் டிரோஜன் சிறுகோள் என்பதைக் கண்டறிந்துள்ளது. இது முதன்முதலில் 2019 ஜூனில் NASAஆல் நிதியளிக்கப்பட்ட ATLAS அமைப்பால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அப்போது அது சூரியனுக்குப் புறத்தே சென்றதால் அதனை சரிவர ஆராய இயலவில்லை.
Question 4
இந்திய வானிலை ஆய்வுமையத்தின் (IMD) கருத்துப்படி, தென்மேற்குப்பருவமழையானது ஓராண்டின் எந்தக் காலக்கட்டத்தில் நிகழ்கிறது?
A
ஜூலை–ஆகஸ்ட்
B
ஜூன்–செப்டம்பர்
C
செப்டம்பர்–டிசம்பர்
D
ஆகஸ்ட்–நவம்பர்
Question 4 Explanation: 
 இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அண்மைய அறிவிப்பின்படி, தென்மேற்குப் பருவமழையானது கேரள கடற்கரையில் மிகவும் சரியான நேரத்தில் தொடங்கியுள்ளது. தென்மேற்குப் பருவமழையானது பொதுவாக ஜூன்-செப்டம்பர் காலங்களில் பொழிகிறது. கேரள மாநிலத்தில் உள்ள 14 மழைப்பொழிவு மையங்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவை 2.5 மிமீ மழைப்பொழிவை அறிவித்தன. மேலைக் காற்று மற்றும் வெளியேறும் நீண்டஅலை கதிரியக்க அளவுகள் ஆகியவை பருவமழையின் பிற இரு காரணிகளாகும். மேலும், நீண்டகால சராசரி மழைப்பொழிவையை 102%ஆக IMD திருத்தியுள்ளது
Question 5
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட புதிய வரையறைகளின்படி, ஒரு நிறுவனத்தை ஒரு நடுத்தர நிறுவனமாக வகைப்படுத்துவதற்கான முதலீட்டு வரம்பு என்ன
A
ரூ.20 கோடி
B
ரூ.25 கோடி
C
ரூ.50 கோடி
D
ரூ.70 கோடி
Question 5 Explanation: 
 நாட்டிலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட புதிய வரையறை மற்றும் அதற்கான தகுதிகள் ஆகியவை பற்றிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் வகையில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சகம் அரசிதழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. திருத்தியமைக்கப்பட்ட புது வரையறைகளும் தகுதிகளும் 2020 ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்.  இவ்வரையறையின்படி, உற்பத்தி & சேவைத்துறைகளுக்கான குறு நிறுவனங்களின் வரையறை 1 கோடி ரூபாய் முதலீடு, 5 கோடி ரூபாய் வர்த்தகம் என்று அதிகரிக்கப்பட்டது. சிறு நிறுவனங்களுக்கான வரையறை `10 கோடி முதலீடு, `50 கோடி வர்த்தகம் என்று அதிகரிக்கப்பட்டது. இதேபோல் நடுத்தர நிறுவனங்களுக்கான வரையறை `20 கோடி முதலீடு, `100 கோடி வர்த்தகம் என அதிகரிக்கப்பட்டது. இந்த வரையறையை மேலும் மேல்நோக்கித் திருத்தியமைக்க மத்திய அரசு 2020 ஜூன் 1 அன்று முடிவெடுத்தது. நடுத்தர நிறுவனங்களுக்கு தற்போது புதிய வரையறையின்கீழ் `50 கோடி முதலீடு, `250 கோடி வர்த்தகம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேலும், சிரமத்திலிருக்கும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு `20,000 கோடி தொகுப்புத்திட்டம், நிதிகளுக்கான நிதியம்மூலம் `50,000 கோடி பங்கு மூலதனம் அளிப்பு என்ற குறு, சிறு & நடுத்தர நிறுவனங்களுக்கான மீதி இரு தொகுப்புத்திட்டங்களை அமல்செய்வதற்கான நடைமுறைகளுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
Question 6
AY2020-21’க்கு அறிவிக்கப்பட்ட அண்மைய வருமானவரி விவர அறிக்கை (ITR) படிவங்கள், எந்த வரம்புக்கு மேலான பண வைப்புபற்றிய தகவல்களைச் சேகரிக்கிறது?
A
ரூ.10 இலட்சம்
B
ரூ.50 இலட்சம்
C
ரூ.1 கோடி
D
ரூ.2 கோடி
Question 6 Explanation: 
 தனிநபர், தொழில்முறை மற்றும் பெருநிறுவன வரி செலுத்துவோருக்கான மதிப்பீட்டு ஆண்டு (AY) 2020-21’க்கான வருமான வரி விவர அறிக்கை (ITR) படிவங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. முதல்முறையாக இந்தப் படிவம், 1 கோடிக்கும் அதிகமான பண வைப்பு, 2 இலட்சத்துக்கும் மேல் செலவு செய்யப்பட்ட வெளிநாட்டு பயணங்கள் மற்றும் 1 இலட்சத்துக்கு மேலான மின்சார செலவுகள்பற்றிய தகவல்களை தனித்தனியாக சேகரிக்கிறது.  வரி செலுத்துவோர், ஜூன்.30 வரையிலான நீட்டிக்கப்பட்ட காலத்திற்கு, வரி சேமிப்புக் கருவிகளில் முதலீடு செய்வதன் பலன்களைப்பெறலாம் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. வருமானத்தைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை.31 முதல் நவம்பர்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Question 7
புதிதாக தொடங்கப்பட்ட பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் பயனாளிகள் யார்?
A
MSME
B
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
C
வீதியோர வியாபாரிகள்
D
ஜவுளி தொழில்கள்
Question 7 Explanation: 
 அண்மையில், ‘PM SVANIDHI - Pradhan Mantri Street Vendor’s Atmanirbhar Nidhi’ என்ற புதிய நுண் கடன் வசதி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. வீதியோர வியாபாரிகளுக்கு எளிமையான முறையில் கடன்களை வழங்குவதை நோக்கமாகக்கொண்ட இத்திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப் புற விவகாரங்கள் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. 2022 மார்ச் மாதம் வரை காலக்கெடுவைக் கொண்டுள்ள இந்தத் திட்டம், 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட வீதி ஓர வியாபாரிகளுக்கு பயன்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. `10000 வரையிலான நடப்பு மூலதனக் கடனை வியாபாரிகள் பெறவியலும். அது, ஓராண்டுக்குள் மாதத்தவணைகளில் திருப்பிச்செலுத்தப்பட வேண்டும்
Question 8
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்காக இந்தியப் பிரதமரால் தொடங்கப்பட்ட தொழில்நுட்ப அடிப்படையிலான தளத்தின் பெயர் என்ன?
A
சாம்பியன்ஸ்
B
ஜீவன்
C
நிர்பர்
D
உத்யோக்
Question 8 Explanation: 
 ‘சாம்பியன்ஸ்’ என்னும் தொழில்நுட்பத்தளத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். உற்பத்தி மற்றும் தேசிய வலிமையை அதிகரிப்பதற்கான நவீன நடைமுறைகளைக்கொண்ட இணக்கமான செயலி மற்றும் உருவாக்கத்துக்கு இது தளமாக விளங்கும்.  குறை தீர்ப்பு, நிதி, மூலப்பொருள், தொழிலாளர்கள், ஒழுங்குமுறை அனுமதிகள் உள்ளிட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் சிக்கல்களுக்கு, குறிப்பாக COVID-19 தொற்றால் ஏற்பட்டுள்ள சிரமமான சூழ்நிலைக்குத் தீர்வுகாண்பது; புதிய வாய்ப்புகளைக் கைப்பற்ற அவர்களுக்கு உதவுதல்; மருத்துவ உபகரணங்கள், PPE எனப்படும் தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள், முகக்கவசங்கள் போன்ற துணைப் பொருள்களை உற்பத்தி செய்வது மற்றும் அவற்றை தேசிய, சர்வதேச சந்தைகளில் விநியோகிப்பது; திறமையை அடையாளம் கண்டு ஊக்குவித்தல்; அதாவது, தற்போதைய சூழ்நிலையில் நிலைத்து நிற்கக்கூடிய, தேசிய, சர்வதேச சாம்பியன்களாக உருவெடுக்கக்கூடிய சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் ஆற்றலைக்கண்டறிதல் ஆகியவை இந்தத்தளத்தின் விரிவான நோக்கங்களாகும்.
Question 9
மத்திய அமைச்சரவையில், குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) மாற்றுமாறு பரிந்துரைத்த மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணை அலுவலகம் எது?
A
வேளாண் செலவினங்கள் மற்றும் விலை ஆணையம்
B
மகலனோபிஸ் தேசிய பயிர் முன்னறிவிப்பு மையம்
C
தேசிய இயற்கை வேளாண்மை மையம்
D
பருப்பு வகைகள் மேம்பாட்டு இயக்குநரகம்
Question 9 Explanation: 
 வேளாண் செலவினங்கள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் என்பது வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட ஓரலுவலகமாகும். வேளாண் செலவினங்கள் மற்றும் விலைக -ளுக்கான ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், நடுவணமைச்சரவை குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கிறது.  அண்மையில், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு `53 அதிகரித்து 2020-21 பயிராண்டிற்கான குவிண்டால் ஒன்றுக்கு `1,868 ஆக உயர்த்தியது. இது, பருப்பு வகைகள் மற்றும் வணிகப் பயிர்களுக்கான விலைகளையும் உயர்த்தியது. இது, விவசாயிகளுக்கு, உற்பத்தி செலவைவிட 50-83% அதிக வருமானத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Question 10
மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடற்கரைகளை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் அதிதீவிர சூறாவளிப் புயலாக தீவிரமடைந்துள்ள புயலின் பெயர் என்ன?
A
உம்பன்
B
நிசர்கா
C
ஹரோல்ட்
D
அமந்தா
Question 10 Explanation: 
 இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஓர் அண்மைய அறிவிப்பின்படி, அரபிக்கடலில் உருவாகியுள்ள ‘நிசர்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையானைது அதிதீவிர சூறாவளிப் புயலாக தீவிரமடைந்துள்ளது. இது, இராய்காட் மாவட்டத்திற்கும் டாமனுக்கும் இடையிலான வடக்கு மகாராஷ்டிரா மற்றும் குஜராத் வழியாக கரையைக் கடக்கும். இந்தப்புயல் கரையைக் கடக்கும்போது, காற்றின் வேகம் 90-105 கி.மீ/மணி என்ற வேகத்தில் இருக்கும். முன்னதாக, ‘உம்பன்’ சூறாவளி மேற்கு வங்க மாநிலத்தைத் தாக்கி கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Question 11
அண்மையில் ஜூன் 2 அன்று அதன் மாநில நாளைக் கொண்டாடிய மாநிலம் எது?
A
சத்தீஸ்கர்
B
தெலுங்கானா
C
உத்தரகண்ட்
D
ஜார்க்கண்ட்
Question 11 Explanation: 
 அண்மையில் ஜூன் 2 அன்று தெலுங்கானா மாநிலம் தனது மாநில நாளைக் கொண்டாடியது. 2014ஆம் ஆண்டில், ஆந்திர மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்கீழ் இந்தியாவின் 29ஆவது மாநிலமாக தெலுங்கானா ஆந்திர பிரதேச மாநிலத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரம் ஹைதராபாத் ஆகும். அதன் மக்கள்தொகை சுமார் 3.5 கோடியாக உள்ளது
Question 12
PLI, SPECS மற்றும் EMC 2.0 என்ற திட்டங்களை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?
A
பாதுகாப்பு அமைச்சகம்
B
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம்
C
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
D
வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம்
Question 12 Explanation: 
 நாட்டில் மின்னணுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் இரவிசங்கர் பிரசாத் மூன்று முக்கிய திட்டங்களைத் தொடங்கினார்.  இதில், உற்பத்தி தொடர்பான ஊக்குவிப்புத்திட்டம் (PLI) பெரிய அளவிலான மின்னணுப் பொருட்களின் உற்பத்தியை நோக்கமாகக்கொண்டுள்ளது. பேரளவிலான மின்னுற்பத்தி மின்னணு உபகரணங்கள் குறை கடத்திகள் தயாரிப்பதை ஊக்குவிப்பது (SPECS) மற்றும் திருத்தியமைக்கப்பட்ட மின்னணு உற்பத்தித் தொகுப்பு (EMC 2.0) திட்டம் ஆகிய பிற இரு திட்டங்களும் தொடங்கப்பட்டன. இது, 2025ஆம் ஆண்டளவில் `10 இலட்சம் கோடி மதிப்புள்ள மின்னணு பாகங்கள் உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Question 13
எபோலா வைரஸ் நோய்த்தொற்றின் 11ஆவது பரவலை அறிவித்துள்ள நாடு எது?
A
காங்கோ மக்களாட்சி குடியரசு
B
நைஜீரியா
C
ருவாண்டா
D
உகாண்டா
Question 13 Explanation: 
 அண்மையில் எபோலா வைரஸ் நோய்த்தொற்றின் புதிய பாதிப்பைக் கண்டறிந்துள்ளதாக காங்கோ மக்களாட்சி குடியரசின் அரசாங்கம் அறிவித்தது. கடந்த 1976ஆம் ஆண்டில், இந்த வைரஸ் முதன்முதலில் அந்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.  மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டில் 11ஆவது முறையாக இந்த வைரஸ் தொற்று பாதித்துள்ளது. தற்போது இந்த நோய்த்தொற்று எக்குவடோர் மாகாணத்தில் பரவி வருகிறது. உலக சுகாதார அமைப்பும் (WHO) இந்நோய்குறித்து அறிவித்துள்ளது.
Question 14
பதே இயக்கத்தின்கீழ், COVID-19 தொற்றுநோய்குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக, ஒரு மாதகால நீளும் பரப்புரையைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?
A
இராஜஸ்தான்
B
பஞ்சாப்
C
ஒடிசா
D
ஜார்க்கண்ட்
Question 14 Explanation: 
 COVID-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, ‘பதே இயக்கம்’ என்னும் பெயரில் கடந்த ஏப்ரல் மாதத்தில், பஞ்சாப் மாநிலம், ஒரு நடவடிக்கையைத் தொடங்கியது. அண்மையில், பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங், பதே இயக்கத்தின்கீழ், COVID-19 தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஒருமாத காலம் நீளும் ஒரு பரப்புரையைத் தொடங்கினார். இந்தப் பரப்புரை, முன்கள தொழிலாளர்களை மட்டுமல்லாமல் மாநிலத்தில் உள்ள அனைவருக்குமாக தற்போது விரிவுபடுத்துப்பட் -டுள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
Question 15
பெருமைமிகு இராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ஹாக்கி இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்ட வீரர் / வீராங்கனை யார்?
A
வந்தனா கட்டாரியா
B
மோனிகா
C
இராணி இராம்பால்
D
லால்ரெம்சியாமி
Question 15 Explanation: 
 இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் தலைவி இராணி இராம்பால், இராஜீவ் காந்தி கேல் இரத்னா விருதுக்கு ஹாக்கி இந்தியா அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பெண்கள் அணி தகுதிபெறுவதற்கு இராணி இராம்பால் முக்கியப்பங்குவகித்தார். 2016ஆம் ஆண்டில் ‘அர்ஜூனா’ விருதும் 2020ஆம் ஆண்டில் ‘பத்மஸ்ரீ’ விருதும் வென்ற இராணி இராம்பால், தற்போது இராஜீவ் காந்தி கேல் இரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதுதவிர வந்தனா, மோனிகா, ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் அர்ஜூனா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
Question 16
கிசான் கடனட்டையை (KCC) எவ்வகை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான முன்னெடுப்பை மத்திய அரசு தொடங்கியுள்ளது?
A
பால் பண்ணையாளர்கள்
B
கோழிப்பண்ணையாளர்கள்
C
தோட்டக்கலை விவசாயிகள்
D
மீன்பண்ணையாளர்கள்
Question 16 Explanation: 
 பால் பண்ணையாளர்களுக்கு உதவுவதற்காக கிசான் கடனட்டை (KCC) இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. பால் தொழிற்சங்கங்கள் மற்றும் பால் உற்பத்திசெய்யும் நிறுவனங்களைச் சார்ந்த சுமார் 1.5 கோடி பால் பண்ணையாளர்களுக்கு கிசான் கடனட்டையை அரசு வழங்கவுள்ளது. இது, எதிர்வரும் ஜூலை.31ஆம் தேதிக்கு முன்னதாக, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் விவசாயிகளுக்கு கிசான் கடனட்டையை வழங்க முற்படுகிறது. கிசான் கடனட்டையை வழங்குவதற்கான இந்தச் சிறப்பு இயக்கமானது, பிரதமரின் ஆத்ம நிர்பார் பாரத் தொகுப்பின் ஒருபகுதியாக உள்ளது.
Question 17
ஐக்கியப் பேரரசுக்கான (UK) இந்தியாவின் அடுத்த உயராணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
காயத்ரி I. குமார்
B
ருச்சி கன்ஷ்யம்
C
வினை குமார்
D
அலோக் குமார் சின்கா
Question 17 Explanation: 
 மூத்த தூதரான காயத்ரி I. குமார் ஐக்கிய பேரரசுக்கான இந்தியாவின் அடுத்த உயராணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1986ஆம் ஆண்டுத்தொகுதியைச்சார்ந்த இந்திய வெளியுறவு சேவை (IFS) அதிகாரியான அவர், தற்போது பெல்ஜியம், இலக்சம்பர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதராக பணியாற்றிவருகிறார். ஓய்வுபெற்ற ருச்சி கன்ஷ்யத்திற்கு பதிலாக காயத்ரி I. குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தனது 30 ஆண்டுகால தொழில்முறை வாழ்க்கையில் பாரிஸ், காத்மந்து, லிஸ்பன் மற்றும் ஜெனீவா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் இந்திய தூதராக அவர் பணியாற்றியுள்ளார்.
Question 18
தொடர்பறிதலை எளிதாக்குவதற்காக, முடி திருத்தகம் / அழகு நிலையங்கள் போன்ற சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்கியுள்ள மாநில அரசு எது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
ஆந்திர பிரதேசம்
D
தெலுங்கானா
Question 18 Explanation: 
 தமிழ்நாட்டில் உள்ள முடி திருத்தகங்கள், அழகு நிலையங்களுக்கு செல்வோர் ஆதார் அட்டையை அவசியம் கொண்டு செல்லவேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளரின் பெயர், முகவரி, அலைபேசி எண், ஆதார் விவரங்களைப் பதிவேட்டில் குறித்துக்கொள்ளவேண்டும் என அழகு நிலைய உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுரை வழங்கியுள்ளது. COVID-19 தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும், தொடர்பு தடமறிதலையும் (contact-tracing) இது எளிதாக்கும்
Question 19
ஐம்பத்தைந்து தயாரிப்புகளின் பொது கொள்முதலின்போது, உள்நாட்டு தயாரிப்புகளை கொள்முதல் செய்வதற்கான வரம்பை அண்மையில் நிர்ணயித்த மத்திய அமைச்சகம் எது?
A
இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்
B
வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்
C
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிலகங்களின் அமைச்சகம்
D
வேளாண் மற்றும் உழவர்நல அமைச்சகம்
Question 19 Explanation: 
 தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத்துறை சமீபத்தில் பொது கொள்முதல் (இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு முன்னுரிமை) உத்தரவு, 2017’ஐ மாற்றியமைத்தது. வருமானத்தையும், வேலைவாய்ப்பையும் அதிகரிப்பதைக் கருத்தில்கொண்டு, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை ஊக்குவிக்கவும், உற்பத்திப்பொருள்கள் தயாரிப்பு, சேவைகள் மற்றும் பணிகளுக்கு ஊக்கமளிக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.  இரசாயனங்கள், பெட்ரோ இரசாயனங்கள், பூச்சிமருந்துகள், சாயப்பொருள்கள் என 55 பல்வேறு விதமான பொருள்கள் இனங்காணப்பட்டுள்ளன. இந்த இரசாயனங்கள் & பெட்ரோ இரசாயனங்களில் குறைந்தபட்ச உள்ளடக்கம், துறையால் வரையறுக்கப்பட்டுள்ளது. தொடக்கநிலையாக, 2020-21ஆம் ஆண்டுக்கு உள்ளடக்க விகிதம் 60 சதவீதமாக வரையறுக்கப்பட்டது. அதன்பின்னர் 2021-2023ஆம் ஆண்டுகளுக்கு 70%ஆகவும், 2023-2025ஆம் ஆண்டுகளுக்கு 80%ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது
Question 20
உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சமுதாயப் பயிற்சியாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக விளையாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ள முன்னெடுப்பின் பெயர் என்ன?
A
பாரத் பயிற்சியாளர் மேம்பாட்டுத் திட்டம்
B
கேலோ இந்தியா சமுதாயப் பயிற்சியாளர் மேம்பாட்டுத் திட்டம்
C
கேலோ இந்தியா விளையாட்டு மேம்பாட்டுத் திட்டம்
D
தேசிய விளையாட்டுத் திட்டம்
Question 20 Explanation: 
 மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு, சமீபத்தில், 25 நாள் நீளும் கேலோ இந்தியா சமுதாயப் பயிற்சியாளர் மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்தியா முழுவதும் சுமார் 15,000 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சமுதாயப் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தை இந்தியாவின் அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்த, விளையாட்டு அமைச்சகம் மனிதவள அமைச்சகத்துடன் கூட்டிணையும்
Question 21
வேளாண் அமைச்சகத்தின் 2ஆவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, 2019-20ஆம் ஆண்டில் தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தி மதிப்பீடு என்ன?
A
270.48 மில்லியன் டன்
B
280.48 மில்லியன் டன்
C
290.48 மில்லியன் டன்
D
320.48 மில்லியன் டன்
Question 21 Explanation: 
 2019-20ஆம் ஆண்டு காலகட்டத்திற்கான மொத்த தோட்டக்கலைப்பயிர்களின் உற்பத்தியின் 2ஆவது முன்கூட்டிய மதிப்பீடுகளை வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மதிப்பீட்டின்படி, இந்த ஆண்டில் தோட்டக்கலைப் பயிர்களின் மொத்த உற்பத்தி 320.48 மில்லியன் டன்களாக இருக்கும். இது, கடந்த ஆண்டைவிட 3.13% அதிகமாகும்.  2018-19ஆம் ஆண்டில் 97.97 மில்லியன் டன்களாக இருந்த பழங்கள் உற்பத்தியுடன் ஒப்பிடும்போது, 2019-20ஆம் ஆண்டில் அது 99.07 மில்லியன் டன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2018-19ஆம் ஆண்டில் 183.17 மில்லியன் டன்களாக இருந்த காய்கறிகள் உற்பத்தியுடன் ஒப்பிடும்போது, 2019-20ஆம் ஆண்டில் அது 191.77 மில்லியன் டன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Question 22
“Building India for a New World: Lives, livelihood, growth” என்ற தலைப்பில் தனது 125ஆவது ஆண்டு அமர்வை கொண்டாடிய சங்கம் எது?
A
இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII)
B
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அறைகள் கூட்டமைப்பு (FICCI)
C
தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் சங்கம் (NASSCOM)
D
இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI)
Question 22 Explanation: 
 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இந்திய தொழில் கூட்டமைப்பின் 125ஆவது வருடாந்திர அமர்வில் தொடக்கவுரையாற்றினார். “ஒரு புதிய உலகிற்கான இந்தியாவை உருவாக்குதல்: வாழ்வு, வாழ்வாதாரம், வளர்ச்சி” என்பது நடப்பாண்டு (2020) மாநாட்டின் கருப்பொருளாகும். “Getting Growth Back” என்ற தலைப்பில் இந்த மாநாட்டில் பிரதம அமைச்சர் உரையாற்றினார்.  125 ஆண்டுகளை நிறைவுசெய்மைக்காக தொழிலமைப்பை வாழ்த்திய அவர், சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு நோக்கம், அனைவரையும் உட்படுத்துதல், முதலீடு, கட்டமைப்பு, புதுமையான கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட ஐந்து விஷயங்கள் முக்கியமானது என்றார்.
Question 23
எல் சால்வடார் மற்றும் குவாத்தமாலாவை தாக்கிய வெப்பமண்டலச் சூறாவளியின் பெயர் என்ன?
A
உம்பன்
B
நிசர்கா
C
ஹரோல்ட்
D
அமண்டா
Question 23 Explanation: 
 மத்திய அமெரிக்க நாடுகளான எல் சால்வடார் மட்டும் குவாத்தமாலாவை, ‘அமண்டா’ என்ற வெப்ப மண்டலச்சூறாவளி தாக்கியது. இவ்வெப்பமண்டலச்சூறாவளியின் காரணமாக பெய்த கனமழையால் பல்வேறு மக்கள் இறந்தும் காணாமலும் போயுள்ளனர். இந்தச் சூறாவளி, இருநாடுகளிலும் பெருத்த அளவிலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடுகள் சேதமடைந்ததை அடுத்து, மக்கள் தங்குவதற்கான தற்காலிக தங்குமிடங்களை அந்நாடுகள் அமைத்துத்தந்துள்ளன
Question 24
இந்தியாவில் வேளாண் தொழில்நுட்ப துளிர் நிறுவனங்களுக்கான திட்டத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?
A
அமேசான்
B
பேஸ்புக்
C
கூகிள்
D
மைக்ரோசாப்ட்
Question 24 Explanation: 
 “Microsoft for Agritech Startups” என்ற பெயரில் ஒரு திட்டத்தை தொடங்குவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. வேளாண்மையில் மாற்றத்திற்கு உறுதியளிக்கும் துளிர் நிறுவனங்களில் இந்தத் திட்டம் தனது கவனத்தை செலுத்துகிறது. தொழிலகஞ்சார்ந்த தீர்வுகளை உருவாக்குதல், ஆழமான தொழில்நுட்பம் மற்றும் சந்தைகளுக்கான அணுகல் ஆகியவற்றில் துளிர் நிறுவனங்களுக்கு உதவ இத்திட்டம் முற்படுகிறது. தெரிவு செய்யப்பட்ட துளிர் நிறுவனங்கள் (start-ups) , ‘Azure FarmBeats’கான அணுகலைப்பெறலாம். இது, அஸூர் சந்தையில் கிடைக்கப்பெறுகிறது.
Question 25
STIP 2020 என்பது எந்தத்துறையுடன் தொடர்புடைய திட்டமாகும்?
A
வேளாண்மை
B
அறிவியல் & தொழில்நுட்பம்
C
நீடித்த வளர்ச்சி இலக்குகள்
D
மின்னணுப் பொருட்கள் உற்பத்தி
Question 25 Explanation: 
 புதிய அறிவியல் தொழில்நுட்பம், புதுமையான கண்டுபிடிப்புகள் குறித்த (STIP 2020) கொள்கையை வகுப்பதற்காக பரவலாக்கப்பட்ட, கீழிலிருந்து மேல் வரையிலான அனைவரையும் உள்ளடக்கிய வழி முறை ஒன்றை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகமும், மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையும் இணைந்து தொடங்கியுள்ளன. இது, நாட்டின் ஐந்தாவது அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கையாகும்.
Question 26
கூகிள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரியான பேட்ரிக் பிச்செட், எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்தின் வாரியத்தலைவராக நியமிக்கப்பட்டார்?
A
அமேசான்
B
ஆப்பிள்
C
பேஸ்புக்
D
டுவிட்டர்
Question 26 Explanation: 
 அண்மையில், கூகிளின் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரியான பேட்ரிக் பிச்செட்டை டுவிட்டர் அதன் வாரியத்தின் அடுத்த தலைவராக நியமித்து அறிவிப்பு செய்தது. டுவிட்டர் நிறுவன வரலாற்றில் வெளிநாட்டவர் ஒருவர் அதன் வாரியத்திற்கு தலைமைதாங்குவது இதுவே முதல்முறையாகும்.  பேட்ரிக் பிச்செட், டுவிட்டரின் முன்னணி சுயாதீன இயக்குநராக, கடந்த 2018ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து பணியாற்றிவருகிறார். இயக்குநர்களை தலைவராக பணியமர்ந்து வழிநடத்துவதில், ஓமிட் கோர்டெஸ்தானிக்கு பதிலாக அவர் நியமிக்கப்படவுள்ளார்.
Question 27
உலக மிதிவண்டி நாள் கொண்டாடப்படும் தேதி எது?
A
ஜூன் 2
B
ஜூன் 3
C
ஜூன் 4
D
ஜூன் 5
Question 27 Explanation: 
 ஜூன்.3ஆம் தேதியை உலக மிதிவண்டி நாளாக ஐ.நா பொது அவை அறிவித்துள்ளது. நீடித்த வளர்ச்சி மற்றும் உடல்நலத்தை மேம்படுத்துவதற்கான ஒருவழியாக, மிதிவண்டிப் பயன்பாட்டை ஊக்குவிக்க ஐ.நா அதன் இணை அமைப்புகளை ஊக்குவிக்கிறது. தேசிய மற்றும் உள்ளூர் மட்டத்தில் மிதிவண்டிப் பேரணிகளை ஏற்பாடு செய்வதற்கும், சமூகத்தில் மிதிவண்டி ஓட்டுதல் கலாசாரத்தை வளர்ப்பதற்கும் இந்நாள் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அழைப்பு விடுக்கிறது.
Question 28
திரைப்பட ஊடக அமைப்புகளைப் பகுப்பாய்வு செய்தல் /மூடுதல்/ இணைத்தல் தொடர்பான நிபுணர் குழுவின் தலைவர் யார்?
A
பிமல் ஜூல்கா
B
இராகுல் ரவைல்
C
ஷியாமா பிரசாத்
D
நாகாபரணா
Question 28 Explanation: 
 மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் திரைப்பட ஊடக அமைப்புகளைப் பகுப்பாய்வு செய்தல் / மூடுதல் / இணைத்தல் மற்றும் இந்த அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்புகள்பற்றிய பரிசீலனை ஆகியவற்றுக்கான நிபுணர் குழுக்கள், தங்களது அறிக்கைகளை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் சமர்ப்பித்தன. அறிக்கைகளை சமர்ப்பிக்கும் நிகழ்வின்போது இக்குழுக்களின் தலைவர் பிமல் ஜுல்கா உடனிருந்தார்.  தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம், திரைத்துறைப்பிரிவு, தொலைக்காட்சிக்கல்வி அமைப்பு, திரைப்பட விழாக்கள் இயக்குநரகம், இந்திய தேசிய திரைப்பட ஆவணத்தொகுப்பமைப்புபோன்ற அமைப்புகளின் மேம்பாட்டுக்காக வரையறுக்கப்பட்ட வளர்ச்சிப்பாதைகளை இக்குழுக்கள் பரிந்துரை செய்துள்ளன
Question 29
அத்தியாவசிய பொருட்கள் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
A
1952
B
1955
C
1972
D
1985
Question 29 Explanation: 
 உழவர்களுக்கு உதவுதல் மற்றும் வேளாண் துறையை ஒரு புதிய பரிமாணத்துக்கு கொண்டுசெல்லும் நோக்கில், மத்திய அமைச்சரவை அண்மையில் அத்தியாவசிய பொருட்கள் சட்டம், 1955’ஐ திருத்தியது. இத்திருத்தம்மூலம் தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பொருட்கள், அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது.  இதனால், தனியார் துறை / அந்நிய நேரடி முதலீடுகளை வேளாண் துறையில் கொண்டுவரவியலும். மாநிலங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் தடையற்ற வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கும் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான ஒரு சிறந்த களத்தை வழங்குவதற்குமாக இரு அரசாணைகளுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Question 30
சுற்றுச்சூழல் துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது?
A
நியூசிலாந்து
B
பூடான்
C
ஜப்பான்
D
பின்லாந்து
Question 30 Explanation: 
 சுற்றுச்சூழல் துறையில் ஒத்துழைப்பு நல்குதல் தொடர்பாக இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்கீழ், ஒவ்வொரு நாட்டிலும் பொருந்தக்கூடிய சட்டவிதிகளை கணக்கில்கொள்வதன்மூலம் வளி, கழிவு, வேதி மேலாண்மை, காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை வளங்களை நிர்வகித்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறைகளில் இவ்விரண்டு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும்.
Question 31
SWADES என்ற புதிய முன்னெடுப்பின் நோக்கம் என்ன?
A
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
B
வேலைவாய்ப்பு உருவாக்கம்
C
பாதுகாப்புசார் கொள்முதல்
D
உழவர் நலன்
Question 31 Explanation: 
 திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம், உள்நாட்டு வான் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஆகியவை இணைந்து, ‘SWADES’ என்ற புதியதொரு முன்னெடுப்பை தொடங்கியுள்ளன. Skilled Workers Arrival Database for Employment Support என்பதன் சுருக்கந்தான் SWADES. பல இந்திய குடிமக்கள் வந்தே பாரத் திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கே திரும்பிவருவதால், இந்தத்திட்டம் தகுதிவாய்ந்த நபர்களின் திறன்களை அறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  நாட்டில் பொருத்தமான வேலைவாய்ப்பினை அவர்களுக்கு பெற்றுத்தருதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களுடன் சேகரிக்கப்பட்ட இந்தத் தகவல்கள் பகிரப்படும்.
Question 32
பின்லாந்துக்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
வாணி இராவ்
B
ரவீஷ் குமார்
C
காயத்ரி I. குமார்
D
வினை குமார்
Question 32 Explanation: 
 மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், பின்லாந்துக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வெளியுறவுப்பணியின் (IFS) 1995ஆம் ஆண்டு பிரிவு அதிகாரியான ரவீஷ் குமார், மத்திய வெளியுறவு அமைச்சத்தின் செய்தித்தொடர்பாளராக கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் வரை பணியாற்றினார். தற்போது பணியில் உள்ள வாணி இராவுக்குப் பதிலாக பின்லாந்துக்கான இந்திய தூதராக ரவீஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Question 33
156 பீரங்கிகள் செய்வதற்காக மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து `1,094 கோடி மதிப்பிலான பணிப்பைப் பெற்றுள்ள அமைப்பு எது?
A
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு
B
ஆயுதத்தொழிற்சாலை வாரியம்
C
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம்
D
பாரத் மின்னணு நிறுவனம்
Question 33 Explanation: 
 இந்திய இராணுவத்தின் தரைப்படைக்கு உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் 156 பிஎம்பி 2/2 K இரக டாங்கிகளை பாதுகாப்புத்துறை தருவிக்கிறது. இதற்கான பணிப்பை ஆயுதத்தொழிற்சாலை வாரியம் (Infantry Combat Vehicles) பாதுகாப்புத்துறையிடம் பெற்றுள்ளது. உள்நாட்டிலேயே உற்பத்தி செய் (Make in India) என்ற திட்டத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்த வணிகம் நடைபெறுகிறது. தெலுங்கானா மாநிலம் மேடக்கில் அமைந்துள்ள ஆயுத உற்பத்தி ஆலையில் இந்தப் பீரங்கிகள் `1,094 கோடி மதிப்பில் தயாரிக்கப்படும். இந்திய ராணுவத்தில் அதிநவீன வசதிகளுடன் இவை இடம்பெறும்.
Question 34
நடப்பாண்டு (2020) காமன்வெல்த் சிறுகதை பரிசின் ஆசிய பிராந்தியத்திற்கான விருதை வென்ற இந்திய எழுத்தாளர் யார்?
A
கிருத்திகா பாண்டே
B
மாதுரி விஜய்
C
அரவிந்த் அடிகா
D
விக்ரம் சேத்
Question 34 Explanation: 
 நடப்பாண்டுக்கான (2020) காமன்வெல்த் சிறுகதை பரிசின் ஆசிய பிராந்தியத்திற்கான விருதை இந்திய எழுத்தாளர் கிருத்திகா பாண்டே வென்றுள்ளார். “The Great Indian Tee and Snakes” என்ற தலைப்பிலான அவரது படைப்புக்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இப்பரிசு, ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படாத சிறந்த சிறுகதையொன்றுக்கு வழங்கப்படுகிறது. புஷ்கர்ட் பரிசுக்கும் அவர் முன்னர் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இந்த விருதுக்கு தகுதிபெறுதற்கு, ஒருவர், 18 வயது நிரம்பிய காமன்வெல்த் குடிமகனாக இருக்க வேண்டும்.
Question 35
பன்னாட்டு பாலியல் தொழிலாளர்கள் நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
A
ஜூன் 2
B
ஜூன் 3
C
ஜூன் 4
D
ஜூன் 5
Question 35 Explanation: 
 பாலியல் தொழிலாளர்களின் அவலநிலையை எடுத்துக்காட்டுவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.2 அன்று உலகெங்கிலும் பன்னாட்டு பாலியல் தொழிலாளர்கள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 1975ஆம் ஆண்டு இதேநாளன்று, நூற்றுக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் பிரான்சில் உள்ள புனித நிசியர் தேவாலயத்தில் ஒன்றுகூடி, அவர்களின் வாழ்கைச் சுரண்டல் நிலை குறித்து பொதுமக்கள் உணரவும், அவர்களின் மீதான காவல் துறையின் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் கோரினர்.  புவனேஸ்வரில் உள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு நியாயவிலைப்பொருட்கள் & பிற உதவிகளை வழங்குமாறு ஒடிசா மாநில மனித உரிமைகள் ஆணையம் புவனேசுவர் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது
Question 36
உலக நலவாழ்வு அமைப்பால் (WHO) நடப்பாண்டுக்கான (2020) உலக புகையிலை ஒழிப்பு நாள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட இந்திய அரசு சாரா அமைப்பு எது?
A
CARE India
B
Goonj
C
SEEDS
D
Deccan Development Society
Question 36 Explanation: 
 இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனமான Socio-Economic and Educational Development Society (SEEDS), உலக சுகாதார அமைப்பால் (WHO) தென்கிழக்காசிய பிராந்தியத்துக்கான நடப்பாண்டுக்கான (2020) உலக புகையிலை ஒழிப்பு நாள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. விருதுபெற்ற 3 வெற்றியாளர்களுள் ஒன்றான இவ்வமைப்பு, பீகார் மற்றும் ஜார்க்கண்டில் பான் மசாலா, குட்கா, இ-சிகரெட் மற்றும் ஹூக்கா போன்ற போதைப்பொருட்களை தடைசெய்வதற்கு அது தான் மேற்கொண்ட முயற்சிகளுக்காக இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.  பன்னாட்டு புகையிலை ஒழிப்பு நாளான மே.31 அன்று, உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) அதன் ஆறு பிராந்தியங்களிலிருந்தும் புகையிலை ஒழிப்புத் துறையில் சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும் தனிநபர் / அமைப்புகளை தேர்வுசெய்து விருது வழங்கி கெளரவிக்கிறது.
Question 37
இந்திய பறவைகள் அறிக்கையின்படி, எந்த மாநிலத்தைச் சார்ந்த 15 பறவையினங்கள், “அக்கறை தேவைப்படும் இனங்கள் – Species of Concern” எனக் குறியிடப்பட்டுள்ளன?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
அஸ்ஸாம்
D
ஹிமாச்சல பிரதேசம்
Question 37 Explanation: 
 தேசிய பல்லுயிர் ஆணையமானது சமீபத்தில் இந்திய பறவைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, கேரள மாநிலத்தைச் சார்ந்த 15 பறவையினங்கள், “அக்கறை தேவைப்படும் இனங்கள்” எனக்குறியிடப்பட்டுள்ளன. இப்பட்டியலில் உள்ள பறவையினங்களுள் பானசுரச் சிரிப்பான், அசம்புச்சிரிப்பான், குட்டை சோலைக்கிளி, போத்தகாலி, நீலகிரிப் பூங்குருவி, நெட்டைக்காலி மற்றும் வெண்முதுகுக்கழுகு ஆகியவை அடங்கும். இதில் கரும்புள்ளி மரங்கொத்தி & கொடிக்கால் வாலாட்டி ஆகிய 2 பறவையினங்களும் ‘மிகுந்த அக்கறை தேவைப்படும் இனங்களாக’ உள்ளதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Question 38
தெற்கு மெக்ஸிகோ வளைகுடாவில் உருவாகியுள்ள வெப்பமண்டலச் சூறாவளியின் பெயர் என்ன?
A
அம்பான்
B
அமண்டா
C
கிறிஸ்டோபல்
D
ஹரோல்ட்
Question 38 Explanation: 
 தெற்கு மெக்ஸிகோ வளைகுடாவில், ‘கிறிஸ்டோபல்’ என்ற வெப்பமண்டலப்புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக, மெக்ஸிகோவுக்கு கடும் வெள்ள அச்சுறுத்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2016ஆம் ஆண்டில், அவ்வளைகுடாவில், ‘காலின்’ என்ற வெப்பமண்டலப் புயல் உருவானது. அமெரிக்க தேசிய புயல் மையத்தின் எச்சரிக்கையின்படி, இந்தப் புயலானது வடக்கு நோக்கி திரும்பி அமெரிக்க வளைகுடா கடற்கரையை நோக்கிச்செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, அண்மைய வெப்ப மண்டலப் புயலான அமண்டாவிலிருந்து உருவாகிய துணைப்புயலாகும்.
Question 39
மெய்நிகராக நடத்தப்பட்ட பன்னாட்டு தடுப்பூசி உச்சிமாநாட்டை நடத்திய நாடு எது?
A
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
B
ஐக்கியப் பேரரசு
C
ஜப்பான்
D
தென் கொரியா
Question 39 Explanation: 
 ஐக்கியப் பேரரசானது அண்மையில் பன்னாட்டு தடுப்பூசி உச்சிமாநாட்டை நடத்தியது. இது, COVID-19 தொற்றின் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் காரணமாக மெய்நிகராக நடைபெற்றது. இதில், தடுப்பு மருந்துகள் தயாரிப்பதற்கான, பன்னாட்டளவிலான கூட்டமைப்பான GAVI அமைப்புக்கு $15 மில்லியன் அமெரிக்க டாலர் அளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது. எதிர்வருங்காலத்தில் தொற்று நோய்கள் பாதிப்பிலிருந்து உலகமக்களின் உயிரைக்காக்கும் தடுப்பு மருந்துகளுக்கான நிதியை சேமித்து வைக்குமாறு பிரிட்டிஷ் பிரதமர் அனைத்து நாடுகளையும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.
Question 40
இந்திய தொழிலக கூட்டமைப்பின் (CII) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
V K கிர்லோஸ்கர்
B
உதய் கோடக்
C
ஆதி கோத்ரேஜ்
D
சஞ்சீவ் பஜாஜ்
Question 40 Explanation: 
 இந்திய தொழிலக கூட்டமைப்பின் (CII) 2020-21ஆம் ஆண்டுக்கான தலைவராக கோடக் மகிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் உதய் கோடக் பொறுப்பேற்றுள்ளார். CII தலைவராக பதவிவகித்துவந்த கிர்லோஸ்கர் நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குநருமான விக்ரம் கிர்லோஸ்கருக்கு மாற்றாக உதய் கோடக் நியமிக்கப்பட்டுள்ளார்.  மேலும், 2020-21ஆம் ஆண்டுக்கான CII நியமன தலைவராக TATA எஃகு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான T V நரேந்திரன் பொறுப்பேற்றுள்ளார்.
Question 41
நிரந்தரமற்ற உறுப்புத்துவத்துக்கான ஆசிய-பசிபிக் இருக்கைக்கான ஒரே போட்டியாளராக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவில் மீண்டும் நுழையவுள்ள நாடு எது?
A
தாய்லாந்து
B
இந்தியா
C
சீனா
D
இலங்கை
Question 41 Explanation: 
 ஐ.நா பாதுகாப்புக்குழுவின் (UNSC) நிரந்தரமற்ற பிரிவில், ஆசிய-பசிபிக் இருக்கைக்கான ஒரே நிரந்தரம் அற்ற உறுப்பினராக இந்தியா போட்டியிடுகிறது. UNSC’இல் காலியாக உள்ள ஐந்து நிரந்தரமற்ற உறுப் -பினர்களுக்கான தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது. COVID-19 கட்டுப்பாடுகள் காரணமாக புதிய இரகசிய வாக்களிப்பு ஏற்பாடுகளையும் இது முன்மொழிந்துள்ளது. 1950-51 முதல் 2011-12 வரை ஏழு முறை இந்தியா UNSC’இன் நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
Question 42
‘The Great Reset’ என்பது எந்தப் பன்னாட்டு அமைப்பின் உச்சிமாநாட்டிற்கென முன்மொழியப்பட்டுள்ள கருப்பொருளாகும்?
A
உணவு மற்றும் வேளாண் அமைப்பு
B
ஐ.நா சிறார்கள் நிதியம்
C
உலக பொருளாதார மன்றம்
D
உலக நலவாழ்வு அமைப்பு
Question 42 Explanation: 
 உலக பொருளாதார மன்றத்தின் அண்மைய அறிவிப்பின்படி, அதன் அடுத்த வருடாந்த உச்சிமாநாட்டில் புதிய இரட்டை-உச்சிமாநாடு வடிவத்தை அது ஏற்றுக்கொள்ளவுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் தாவோஸ் உச்சிமாநாடு, ‘The Great Reset’ என்ற கருப்பொருளுடன் எதிர்வரும் 2021 ஜனவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 51ஆம் உச்சிமாநாடு, உலகெங்கிலும் உள்ள தலைவர்களை நேரில் அழைத்தோ அல்லது மெய்நிகராகவோ ஒன்றிணைப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இவ்வாண்டு, கடந்த 2020 ஜன.21-24 வரை உலக பொருளாதார மன்றத்தின் 50ஆம் உச்சிமாநாடு நடைபெற்றது
Question 43
எந்த நாட்டுடனான, “பரஸ்பர தளவாட ஆதரவு ஒப்பந்த”த்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?
A
ஜப்பான்
B
ஆஸ்திரேலியா
C
பின்லாந்து
D
ஜெர்மனி
Question 43 Explanation: 
 ஆஸ்திரேலிய தலைவருடனான தனது முதல் மெய்நிகரான இருதரப்பு உச்சிமாநாட்டின்போது, இந்திய பிரதமர் மோடி, பாதுகாப்பு தொடர்பான ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ‘Mutual Logistics Support Agreement (MLSA)’ எனப் பெயரிடப்பட்ட இந்த ஒப்பந்தம் இருநாடுகளின் இராணுவங்களையும் பழுதுபார்ப்பு நோக்கங்களுக்காக ஒருவருக்கொருவரின் தளங்களை பயன்படுத்த அனுமதிக்கிறது.  அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் சிங்கப்பூருடன் இந்தியா ஏற்கனவே இதேபோன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஓர் ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் மீண்டும் ஈடுபடுவதற்கும் இவ்விருநாடுகளும் அப்போது முடிவுசெய்தன
Question 44
அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும், புதிய பட்டதாரிகளுக்கு உள்ளுறைப் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட உள்ளுறைப் பயிற்சித் திட்டத்தின் பெயர் என்ன?
A
Champions
B
Tulip
C
Bharat Intern
D
Urban Intern
Question 44 Explanation: 
 மனிதவள மேம்பாட்டு அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் “நிஷாங்க்” மற்றும் வீட்டுவசதி, நகர உறவுகள் இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இணைந்து, “நகரப்பகுதி கற்றல் உள்ளுறைப்பயிற்சித் திட்டத்தை (The Urban Learning Internship Program (TULIP))” தொடங்கிவைத்தனர். நாடு முழுவதும் உள்ள அனைத்து நகர உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொலிவுறு நகரங்களில் புதிய பட்டதாரிகளுக் -கான உள்ளுறைப்பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இத்திட்டம். தொடக்கத்தில் இது, ‘Aspirational India’ என்ற கருப்பொருளின்கீழ் அறிவிக்கப்பட்டது.
Question 45
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, அதிகபட்ச புலிகள் இறப்பைப் பதிவு செய்துள்ள மாநில அரசு எது?
A
மகாராஷ்டிரா
B
மத்திய பிரதேசம்
C
உத்தர பிரதேசம்
D
கர்நாடகா
Question 45 Explanation: 
 தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் சமீபத்திய தகவல்களின்படி, கடந்த எட்டு ஆண்டுகளில் 750 புலிகள் இந்தியாவில் இறந்துள்ளன. மொத்த இறப்புகளில், 369 இயற்கை காரணங்களாலும், 168 வேட்டையாடுதலாலும் நிகழ்ந்துள்ளன. அதிகபட்சமாக, மத்தியபிரதேசம், 173 புலிகள் உயிரிழப்பைப் பதிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான எட்டாண்டு காலத்தில், 101 புலிகள் பல்வேறு மாநில வனத்துறை அதிகாரிகளால் பிடிப்பட்டுள்ளன என்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2019 டிசம்பர் மாத நிலையின்படி, நாட்டில் 2976 புலிகள் இருந்தன.
Question 46
PPE அணிபவர்களுக்கு உதவுவதற்காக, SUMERU-PACS’ என்ற சாதனத்தை உருவாக்கியுள்ள அமைப்பு எது?
A
இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம்
B
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு
C
பாரத் மின்னணு நிறுவனம்
D
ஆயுதத்தொழிற்சாலை வாரியம்
Question 46 Explanation: 
 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (DRDO), ‘SUMERU-PACS’ என்ற சாதனத்தை உருவாக்கியுள்ளது. இது, தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை (PPE) அணிபவர்களுக்கு வியர்வை இல்லாமல் வசதியாக இருக்க உதவுகிறது. PPE அணிந்த மக்கள் எதிர்கொள்ளும் அசெளகரியம் குறித்து கருத்துகளைப்பெற்றதன் பின்னணியில், DRDO, PPE’க்குள் பயன்படுத்தக்கூடிய தனிப்பட்ட காற்று சுழற்சி முறையை உருவாக்கியது. சுமார் 500 கிராம் எடையுள்ள இந்த அமைப்பு ஒரு சிறிய பை போன்ற அமைப்புடன் செயல்படுகிறது
Question 47
உலக வர்த்தக அமைப்புக்கான இந்தியாவின் தூதராகவும் நிரந்தர பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள் -ளவர் யார்?
A
பிரஜேந்திர நவ்நீத்
B
நிருபேந்திர மிஸ்ரா
C
அபாஸ் ஜா
D
K V காமத்
Question 47 Explanation: 
 மூத்த அதிகாரியும், 1999ஆம் ஆண்டுத்தொகுதியின் IAS அதிகாரியுமான பிரஜேந்திர நவ்நீத் மூன்று ஆண்டு காலத்திற்கு உலக வர்த்தக அமைப்பின் தூதராகவும், இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்திற்கு முன்னர் அவர் பிரதமர் அலுவலகத்தில் இணைச்செயலராக இருந்தார். ஜெனீவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பிற்கு, இந்திய நிரந்தரத் திட்டத்தின்கீழ் அவர் அனுப்பப்படுவார். IRTS அதிகாரியான அன்வர் உசேன் ஷேக்கை ஆலோசகர் பதவிக்கு நியமிப்பதற்கும் அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
Question 48
ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறார்களுக்கான பன்னாட்டு நாள் (International Day of Innocent Children Victims of Aggression) கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
A
ஜூன் 4
B
ஜூன் 5
C
ஜூன் 2
D
ஜூன் 6
Question 48 Explanation: 
 ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறார்களுக்கான பன்னாட்டு நாள் என்பது ஆண்டுதோறும் ஜூன்.4 அன்று ஐ.நா அமைப்பால் நினைவுகூரப்படும் ஒரு நாளாகும். இது, 1982 ஆகஸ்ட் 19 முதல் ஆண்டுதோறும் நினைவுகூரப்பட்டு வருகிறது. உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியான பாதிப்புகளுக்கு ஆளான உலகெங்கிலும் உள்ள சிறார்கள் அனுபவிக்கும் வலியை உணர்ந்துகொள்வதே இதன் இதன் நோக்கமாகும். இந்நாள் சிறார்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐ.நா’இன் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 48 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!