June 3rd Week 2020 Current Affairs Online Test Tamil

நடப்பு நிகழ்வுகள் - June 15 to June 21- 2020

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் - June 15 to June 21- 2020. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
நடப்பாண்டில் (2020) வரும் உலக சுற்றுச்சூழல் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Climate Action
B
Celebrating Biodiversity
C
Enrich Our Environment
D
Environment and SDG
Question 1 Explanation: 
 விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக ஐ.நா அவை ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.5 அன்று உலக சுற்றுச்சூழல் நாளைக் கொண்டாடப்படுகிறது. “Celebrating Biodiversity” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். இந்தச் சிறப்பு நாள், கொலம்பியாவில், ஜெர்மனியுடன் இணைந்து கொண்டாடப்பட்டது. தற்போது வரை சுமார் ஒரு மில்லியன் உயிரினங்கள் அழிவை எதிர்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது, “செயல்திறன்மிக்க கழிவு மேலாண்மைமூலம் பல்லுயிரைக்காத்தல்” என்ற அறிவுறுத்தல் தொடரைத் தொடங்கியுள்ளது.
Question 2
உலக வங்கியின் நிர்வாக இயக்குநரின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?
A
சுர்ஜித் பல்லா
B
சுர்ஜித் பல்லா
C
உர்ஜித் படேல்
D
அபாஸ் ஜா
Question 2 Explanation: 
 பிரதமரின் தனி செயலாளராக பணியாற்றிவந்த 1996ஆம் ஆண்டுத் தொகுதியைச் சேர்ந்த இ.ஆ.ப அதிகாரியான இராஜீவ் டாப்னோ, IAS உலக வங்கியின் நிர்வாக இயக்குநரின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். பணியாளர் அமைச்சகத்தின் உத்தரவுப்படி, அயல்நாட்டில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு கூடுதலாக ஐந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இரவி கோட்டாவை அமைச்சராக (பொருளாதார) நியமித்ததும் இதிலடங்கும். பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆலோசகராக (பொருளாதாரம்) லெகான் தாக்கரும், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிர்வாக இயக்குநரின் ஆலோசகராக H அதெலியும் அவ்வைவருள் அடங்குவர்.
Question 3
நகர்ப்புறக் காடுகளை உருவாக்குவதற்காக சுற்றுச்சூழல் அமைச்சகம் முன்னெடுத்துள்ள முயற்சியின் பெயர் என்ன?
A
நகர்ப்புற வனங்கள்
B
பசுமை இந்தியா
C
பசுமை நகரங்கள் திட்டம்
D
இயற்கை திட்டம்
Question 3 Explanation: 
 நகர்ப்புறங்களில் வனப்பகுதியை அதிகரிப்பதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் “நகர்ப்புற வனங்கள்” திட்டத்தை தொடங்கினார். நடப்பாண்டு (2020) உலக சுற்றுச்சூழல் நாளின் மெய்நிகர் கொண்டாட்டத்தின்போது, இந்தியா முழுவதும் 200 நிறுவனங்கள் மற்றும் நகரங்களுடன் இணைந்து இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. தங்கள் பகுதிகளில் மரங்களின் பரப்பை அதிகரிக்கும் இத் திட்டத்தில் பொதுமக்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார். இந்த ஆண்டு, 145 கோடி மரக்கன்றுகள் நடவேண்டும் என்பது அரசாங்கத்தின் இலக்காக உள்ளது
Question 4
ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் 2022ஆம் ஆண்டுக்கான பெண்கள் ஆசிய கோப்பைப் போட்டியை முதன்முறையாக நடத்தவுள்ள நாடு எது?
A
நேபாளம்
B
ஜப்பான்
C
இந்தியா
D
இலங்கை
Question 4 Explanation: 
 AFC மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து போட்டித்தொடர், 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை எட்டு அணிகள் பங்கேற்றுவந்த நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான தொடரில் 12 அணிகள் களம்காணவுள்ளன. போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் இந்திய அணி நேரடியாக பங்கேற்பது உறுதியாகி உள்ளது. 2023 FIFA மகளிர் உலககோப்பை கால்பந்து போட்டித்தொடருக்கான கடைசி தகுதிச்சுற்று போட்டியாகவும் இது அமையும்.
Question 5
“நெடுஞ்சாலைகளில் மனிதர்கள் மற்றும் விலங்குகள் இறப்பதைத் தடுப்பது” குறித்த UNDP தேசிய பரப்புரையைத் தொடங்கியுள்ள நாடு எது?
A
நேபாளம்
B
ஜப்பான்
C
இந்தியா
D
இலங்கை
Question 5 Explanation: 
 “நெடுஞ்சாலைகளில் மனிதர்கள் மற்றும் விலங்குகள் இறப்பதைத்தடுப்பது” குறித்த ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் தேசிய விழிப்புணர்வுப் பரப்புரையை இந்தியா தொடங்கியுள்ளது. உலக சுற்றுச் சூழல் நாளை முன்னிட்டு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி இதனை தொடங்கினார். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்வதாக அமைச்சர் அப்போது எடுத்துரைத்தார்.
Question 6
விலங்கின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட கீழடி அகழ்வாராய்ச்சி தளம் அமைந்துள்ள மாவட்டம் எது?
A
திருநெல்வேலி
B
சேலம்
C
திருச்சிராப்பள்ளி
D
சிவகங்கை
Question 6 Explanation: 
 தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையானது சிவகங்கை மாவட்டம் கீழடி தளத்தில் மேற்கொண்ட ஆறாவது கட்ட அகழ்வாராய்ச்சி பணியின்கீழ், மதுரைக்கு அருகிலுள்ள மணலூரில் விலங்கொன்றின் எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K பழனிசாமி, ஆறாவது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை, கடந்த பிப்ரவரி மாதத்தின்போது மதுரைக்கு அருகிலுள்ள கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய இடங்களின் தொடங்கிவைத்தார்.  அங்கு மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின்போது, நெசவு, கால்நடை வளர்ப்பு, நீர் மேலாண்மை சார்ந்த பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்தப் பொருட்கள் அனைத்தும் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்ப்பண்பாட்டுக்குரியவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
Question 7
“சட்டத்துக்குப் புறம்பான, பதிவுசெய்யப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தலைத் தடுப்பதற்கான பன்னாட்டு நாள்” அனுசரிக்கப்படுகிற தேதி எது?
A
ஜூன் 2
B
ஜூன் 3
C
ஜூன் 4
D
ஜூன் 5
Question 7 Explanation: 
 “சட்டத்துக்குப் புறம்பான, பதிவுசெய்யப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தலைத் தடுப்பதற்கான பன்னாட்டு நாள்”, ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.5 அன்று அனுசரிக்கப்படுகிறது. கட்டுப்பாடற்ற மீன்பிடி நடவடிக்கைகளால் மீன்வளங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து உணர்தலே இந்த நாளின் நோக்கமாகும். கடந்த 2017 நவம்பரில், ஐ.நா பொது அவை, ஜூன்.5ஆம் தேதியை இந்தச் சிறப்பு நாளாக அறிவித்தது. கடந்த 2018ஆம் ஆண்டில் முதன்முறையாக இந்நாள் கொண்டாடப்பட்டது. துறைமுக நிலை செயல்பாடுகள் குறித்த ஒப்பந்தமும் அதேநாளில் நடைமுறைக்கு வந்தது.
Question 8
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஆம்பர்னே ஆறு அமைந்துள்ள நாடு எது?
A
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
B
இரஷ்யா
C
ஜெர்மனி
D
ஆஸ்திரேலியா
Question 8 Explanation: 
 இரஷ்யாவின் நிக்கல் தலைநகரம் என்று அழைக்கப்படும் நோரில்ஸ்கில் 60 கிலோமீட்டர் நீளத்திற்கு பாய்ந்தோடும் ஆம்பர்னே ஆற்றில், 20,000 டன் டீசல் எண்ணெய் கொட்டியதை அடுத்து அவசரகால நிலையை இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். இந்த எண்ணெய் கசிவு ஆம்பர்னே ஆற்றின் மேற்பரப்பை செங்கல் சிவப்பு நிறமாக மாற்றியுள்ளது.  நோரில்சுக் நகரத்துக்கு அருகிலுள்ள மின்னுற்பத்தி நிலையத்தில் அமைந்துள்ள மாபெரும் எரிபொருள் தொட்டி இடிந்து விழுந்ததன் விளைவாக இந்த எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Question 9
‘#iCommit’ என்பது எந்த மத்திய அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட புதியதொரு பரப்புரையாகும்?
A
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
B
எரிசக்தி அமைச்சகம்
C
MSME அமைச்சகம்
D
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்
Question 9 Explanation: 
 உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி மத்திய மின்சாரம் மற்றும் புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) RK சிங், ‘#iCommit’ இயக்கத்தை தொடங்கிவைத்தார். அரசுகள், பெரு நிறுவனங்கள், பன்முக மற்றும் இருதரப்பு நிறுவனங்கள், சிந்தனை அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் என்ற பரவலான பலரையும் ஒருங்கிணைப்பதாக இந்த முன்முயற்சி அமைந்துள்ளது. ‘#iCommit’ என்ற இந்த முன்முயற்சி, மத்திய மின்துறை அமைச்சகத்தின் நிர்வாகத்தின்கீழ் எரிசக்தி சிக்கன சேவைகள் நிறுவனத்தின் (EESL) உந்துதலால் உருவாக்கப்பட்டது.
Question 10
பிரபல கவிஞர் அலெக்சாண்டர் புஷ்கினின் பிறந்தநாளான ஜூன்.6 அன்று, ஐக்கிய நாடுகள் அவை, எந்த மொழிக்கான சிறப்பு நாளைக் கொண்டாடுகிறது?
A
ஸ்பானிய மொழி நாள்
B
உருஷிய மொழி நாள்
C
ஆங்கில மொழி நாள்
D
பிரெஞ்சு மொழி நாள்
Question 10 Explanation: 
 ஐ.நா அதன் ஆறு அலுவல்பூர்வ மொழிகளான ஆங்கிலம், அரபு, ஸ்பானியம், சீனம், உருஷியம் மற்றும் பிரஞ்சு ஆகியவற்றின் வரலாறு, பண்பாடு மற்றும் வளர்ச்சி குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஆறு தனி மொழி நாட்களைக் கொண்டாடுகிறது. ஜூன்.6, ஐக்கிய நாடுகள் உருஷிய மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இது, சிறந்த உருஷிய கவிஞர் அலெக்சாண்டர் புஷ்கினின் பிறந்தநாளும் கூட.  அவர், ‘நவீன உருஷிய இலக்கியத்தின் தந்தை’ எனக்கருதப்படுகிறார். அவரது பிரபலமான இலக்கியப் படைப்புகளுள் சில, “யூஜின் ஒன்ஜின்” என்ற புனைக்கதையும், “வெண்கல குதிரைவீரன்” என்ற தலைப்பில் அவரது கவிதையும் அடங்கும்.
Question 11
‘SPANDAN’ என்பது எந்த இந்திய மாநிலத்தால் தொடங்கப்பட்ட ஒரு பரப்புரையாகும்?
A
ஒடிசா
B
சத்தீஸ்கர்
C
பஞ்சாப்
D
உத்தரகண்ட்
Question 11 Explanation: 
 காவல்துறை பணியாளர்கள் தொடர்புடைய தற்கொலை சம்பவங்களை குறைப்பதற்காக சத்தீஸ்கர் மாநில அரசு, அண்மையில், ‘ஸ்பந்தன்’ என்னும் ஒரு பரப்புரையை அறிமுகப்படுத்தியது. மாவட்ட தலைமையகத்தில் பணிபுரியும் மனச்சோர்வடைந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு மனநல மருத்துவர்கள் அல்லது உளவியலாளர்கள் வழங்கும் ஆலோசனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை தொடர்பான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு மூத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. யோகா வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஈராண்டுகளில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
Question 12
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு, “இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” எனக் கூறுகிறது?
A
பிரிவு 1
B
பிரிவு 2
C
பிரிவு 3
D
பிரிவு 4
Question 12 Explanation: 
 இந்திய அரசியலமைப்பின் பிரிவு 1, “இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” எனக் கூறுகிறது. அண்மையில், உச்சநீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. அது, முதல் பிரிவிலிருந்து, ‘இந்தியா’ என்ற பெயரை நீக்குவதற்கு முற்பட்டது.  ‘பாரத்’ மற்றும் ‘இந்தியா’ இரண்டும் அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் என்றும், இந்தியா ஏற்கனவே அரசியலமைப்பில் ‘பாரத்’ என்று அழைக்கப்படுகிறது என்றும் இந்திய தலைமை நீதிபதி சரத் பாப்டே கூறினார். அதேசமயம், மனுதொடர்பாக உரிய முடிவெடுக்க, நடுவணரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Question 13
நடப்பாண்டில் (2020) வரும் உலக உணவு பாதுகாப்பு நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Future of Food Safety
B
Food Safety, Everyone’s Business
C
Food Safety, First and Foremost
D
Food Safety is still far
Question 13 Explanation: 
 நாம் உண்ணும் உணவு பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்தும் முயற்சிகளை வலுப்படுத்துவதற் –காக, ஜூன்.7 அன்று உலக உணவுப் பாதுகாப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. ‘Food Safety, Everyone’s Business’ என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். உணவுப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும், தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு நாடுகள், உள்நாட்டு சமூகம் மற்றும் தனியார் நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்குமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. உலக நலவாழ்வு அமைப்பானது உணவு மற்றும் வேளாண் அமைப்புடன் கூட்டிணைந்து, உறுப்புநாடுகளை உணவுப் பாதுகாப்பு நாளைக் கொண்டாட வழிவகுக்கிறது.
Question 14
பெண்கள் & சிறார்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான விஷயங்களை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பணிக்குழுவின் தலைவர் யார்?
A
ஜெயா ஜேட்லி
B
வினோத் பால்
C
நஜ்மா அக்தர்
D
வசுதா காமத்
Question 14 Explanation: 
 மத்திய பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் அண்மைய அறிவிப்பின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான விஷயங்களை ஆராய்வதற்காக பத்துபேர்கொண்ட பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  Ms. ஜெயா ஜேட்லி, அப்பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இதுதொடர்புடைய துறைகளின் செயலாளர்கள், முன்னாள் அலுவலர்கள் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழு தாய்மை அடையும் வயது, பேறுகால உயிரிழப்பைக்குறைப்பதற்கான தேவைகள், ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துதல் போன்றவை தொடர்பான விஷயங்களை ஆராயும்.
Question 15
புத்தாக்கம் & தொழில்முனைவு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக அடல் புத்தாக்க இயக்கத்துடன் கூட்டிணைந்துள்ள நிறுவனம் எது?
A
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், CSIR
B
டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம், TFIR
C
பொருளாதார வளர்ச்சி நிறுவனம்
D
இந்திய அறிவியல் நிறுவனம்
Question 15 Explanation: 
 புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக CSIR’உம், அடல் புத்தாக்க இயக்கமும் கூட்டிணைந்துள்ளன. பல்வேறு துறைகளில் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், இரு அமைப்புகளுக்கும் இடையே விருப்ப ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.  அடல் புத்தாக்க இயக்கத்தின்கீழ், புதிய நிறுவனங்களை உருவாக்குவதற்கான CSIR மையங்கள் மூலம் உலகத்தரம்வாய்ந்த நிறுவனங்களை தொடங்குவதற்கு ஆதரவு தெரிவிப்பது; CSIR புத்தாக்கப் பூங்காக்கள் உள்ளிட்ட புதிய புத்தாக்க மாதிரிகளில் ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்கு ஆதரவு அளிப்பது; ARISE அமைப்புடன் இணைந்து சிறு, குறு, நடுத்தரத் தொழிற்துறைக்கான புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சிகளை CSIR ஊக்குவிப்பது ஆகியவை அவ்வொப்பந்தத்தின் முக்கிய கூறுகளாகும்.
Question 16
இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் என்பது எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ் இயங்கி வரும் ஒரு தன்னாட்சிமிக்க சமூகமாகும்?
A
குறு, சிறு & நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம்
B
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
C
மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
D
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
Question 16 Explanation: 
 மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் ஒரு தன்னாட்சிமிக்க சமுதாயமாக இயங்கிவரும் இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் (STPI), அதன் 29ஆவது நிறுவு நாளை, 2020 ஜூன்.5 அன்று நினைவுகூர்ந்தது. கடந்த 1991 ஜூன்.5 அன்று நிறுவப்பட்ட இது, இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு உற்பத்தித்துறையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களித்து வருகிறது. STPI’இல் பதிவுசெய்யப்பட்ட அலகுகளின் ஏற்றுமதி மதிப்பு, 2019-20ஆம் ஆண்டில் `421,103 கோடியாகும்.
Question 17
தனிச்சிறப்புவாய்ந்த மாநில சுற்றுச்சூழல் மேலாண்மைக் கழகத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
கேரளா
B
மத்திய பிரதேசம்
C
மகாராஷ்டிரா
D
ஆந்திர பிரதேசம்
Question 17 Explanation: 
 உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில் ஆந்திர முதலமைச்சர் Y S ஜெகன் மோகன் ரெட்டி, அண்மையில் ஆந்திர மாநில சுற்றுச்சூழல் மேலாண்மைக் கழகத்தை ஜூன்.5ஆம் தேதி அன்று தொடங்கினார். தொழிற்சாலைக் கழிவுகளை சேகரித்தல், பிரித்தல் மற்றும் அறிவியல் பூர்வமாக அதனை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைக்கப்பட்ட பணிகளை மாநகராட்சி செய்யும். தொழிற்சாலைகள், ஆந்திர பிரதேச அரசால் பிறப்பிக்கப்பட்ட கழிவு மேலாண்மை நெறிமுறைகளைப் பின்பற்றுகின்றனவா என்பதையும் அது உறுதிசெய்யும்.
Question 18
பன்னாட்டு வானூர்தி நிலைய கவுன்சிலின் ஆசியா-பசிபிக் பசுமை வானூர்தி நிலைய அங்கீகாரம் 2020’இல், பிளாட்டினம் அங்கீகாரம் பெற்ற இந்திய வானூர்தி நிலையம் எது?
A
கொச்சின் பன்னாட்டு வானூர்தி நிலையம்
B
ஹைதராபாத் பன்னாட்டு வானூர்தி நிலையம்
C
இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம், புது தில்லி
D
சத்ரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம், மும்பை
Question 18 Explanation: 
 பன்னாட்டு வானூர்தி நிலைய கவுன்சிலின் ஆசியா-பசிபிக் பசுமை வானூர்தி நிலைய அங்கீகாரம் 2020’இல் ஹைதராபாத் பன்னாட்டு வானூர்தி நிலையம் மிகவுயர்ந்த பிளாட்டினம் அங்கீகாரத்தைப் பெற்றது. GMR குழுமத்திற்குச் சொந்தமானதும் அதாலேயே இயக்கப்படுவதுமான இந்த நிலையம், ஆண்டுக்கு 15-35 மில்லியன் பயணிகளைக் கையாளும் பிரிவில் இவ்வங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
Question 19
SEBI’இன் மீண்டும் அமைக்கப்பட்ட, ‘பண்டங்கள் பங்குகள் ஆலோசனைக்குழு’வின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
அசோக் தல்வானி
B
M S சாஹூ
C
அஜய் தியாகி
D
N K சிங்
Question 19 Explanation: 
 இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (SEBI) தனது ‘பண்டங்கள் பங்குகள் ஆலோசனைக்குழு’வை மீண்டும் அமைத்துள்ளது. அண்மைய அறிவிப்பின்படி, 17பேர்கொண்ட இந்தக் குழுவுக்கு ஓய்வுபெற்ற இ.ஆ.ப அதிகாரி அசோக் தல்வானி தலைமைதாங்குவார். இந்தக் குழு, ஒப்பந்த வடிவமைப்புகள் மற்றும் புதிய தயாரிப்புகள் தொடர்பான சிக்கல்களை ஆராய்வதோடு விநியோக வழிமுறை மற்றும் கிடங்குகள் தொடர்பான விஷயங்களில் ஆலோசனை கூறுகிறது. இக்குழுவில் BSE, NSE, NCDEX NITI ஆயோக், NABARD உள்ளிட்ட பிற உறுப்பினர்கள் உள்ளனர்.
Question 20
‘நைமிஷா’ என்பது எந்த அமைப்பால் நடத்தப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்?
A
இந்திய தொல்லியல் ஆய்வகம்
B
NITI ஆயோக்
C
நவீன கலைக்கான தேசியக் கலைக்கூடம்
D
TRIFED
Question 20 Explanation: 
 மத்திய கலாசார அமைச்சகத்தின்கீழ் ஓர் இணை அலுவலகமாக புது தில்லியிலிருந்து செயல்படும் நவீன கலைக்கான தேசியக் கலைக்கூடம், இணையவழிமுலம், ‘நைமிஷா’ 2020 - கோடைக்கால கலைநிகழ்ச்சியை 2020 ஜூன்.8 முதல் ஜூலை.3 வரை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி அதன் பங்கேற்பாளர்களுக்கு அவர்களின் உடல்நலத்தில் எந்தப் பாதிப்பும் இல்லாதவகையில், பயிற்றுவிக்கும் கலைஞர்களிடமிருந்து கலைப்படைப்புகள் குறித்து கற்றுக்கொள்வதற்கான ஒரு நல் வாய்ப்பை வழங்கும் முன்முயற்சியாகும்.
Question 21
$150,000 டாலர் மதிப்புடைய லிண்டோர்ஸ் அபே ரேபிட் சேலஞ்ச் செஸ் பட்டத்தை வென்றவர் யார்?
A
மேக்னஸ் கால்சன்
B
விஸ்வநாதன் ஆனந்த்
C
டேனியல் டுபோவ்
D
ஹிகாரு நகாமுரா
Question 21 Explanation: 
 இரஷ்யாவைச் சார்ந்த முன்னாள் உலக ரேபிட் சாம்பியனான டேனியல் டுபோவ், $150,000 டாலர் மதிப்பிலான லிண்டோர்ஸ் அபே ரேபிட் சேலஞ்ச் செஸ் பட்டத்தை வென்றுள்ளார். 24 வயதான அவர், கடந்த இரண்டு போட்டிகளில் தனது சகநாட்டு வீரரான செர்ஜி கர்ஜாகினையும் சீனத்து வீரரான டிங் லிரனையும் வீழ்த்தினார். இறுதிப்போட்டியில், 3-2 என்ற புள்ளிக்கணக்கில், அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நகாமுராவை வீழ்த்தி வெற்றியடைந்தார். டேனியல் டுபோவ் தனது பதினான்காம் வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆனார். மேலும், கடந்த 2018ஆம் ஆண்டில் உலக ரேபிட் சாம்பியனானார்.
Question 22
நடப்பாண்டில் (2020) வரும் உலக பெருங்கடல்கள் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Oceans and GDP
B
Innovation for a Sustainable Ocean
C
Oceans are our real wealth
D
Optimise our Oceans
Question 22 Explanation: 
 உலக பெருங்கடல்கள் நாளானது (World Oceans Day) ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.8 அன்று உலகம் முழுமைக்கும் கொண்டாடப்படுகிறது. பெருங்கடல்களைக் கொண்டாட மக்களை ஊக்குவிப்பதற்கும், கடல் நலத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. “Innovation for a Sustainable Ocean” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.  கடந்த 1992ஆம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த புவி உச்சிமாநாட்டில், உலக பெருங்கடல்கள் நாளைக் கொண்டாடுவதற்கான கருத்தை கனடா நாடு முன்மொழிந்தது. 2008 டிசம்பரில், ஐ.நா அவை ஜூன்.8ஆம் தேதியை உலக பெருங்கடல்கள் நாளாக நியமித்து அறிவித்தது.
Question 23
உத்தரகண்ட் மாநிலத்தின் கோடைகால தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ள நகரம் எது?
A
ஹரித்துவார்
B
ஹல்துவானி
C
கத்கோடம்
D
கேர்சைன்
Question 23 Explanation: 
 உத்தரகண்ட் மாநில தலைமைச்செயலரின் சமீபத்திய அறிவிப்பின்படி, சாமோலி மாவட்டத்தில் உள்ள கேர்சைன் நகரம் உத்தரகண்ட் மாநிலத்தின் கோடைகால தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  உத்தரகண்ட் ஆளுநர் பேபி இராணி மெளரியாவும் இந்த முடிவுக்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளார். தற்போதுள்ள தலைநகரமான டேராடூனிலிருந்து 270 கி.மீ தொலைவில் கேர்சைன் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கோடைகால தலைநகரத்தை அறிவிப்பது என்பது மலைப்பாங்கான பகுதிகளின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Question 24
உலக மூளைக்கட்டி நாள் (World Brain Tumor Day) கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
A
ஜூன் 8
B
ஜூன் 10
C
ஜூன் 12
D
ஜூன் 14
Question 24 Explanation: 
 உலக மூளைக்கட்டி நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.8ஆம் தேதியன்று உலகம் முழுமைக்கும் அனுசரிக்கப்படுகிறது. மூளைக்கட்டி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அதுகுறித்து மக்களுக்கு அறிவுறுத்துவதும் அன்றைய நாளின் நோக்கமாகும். உலக மூளைக்கட்டி நாளை, தொடக்கத்தில், லீப்ஜிக்கைச் சார்ந்த இலாபநோக்கற்ற அமைப்பான ஜெர்மன் மூளைக்கட்டி சங்கம் கடந்த 2000ஆம் ஆண்டில் நியமித்து அறிவித்தது. பின்னர் இது, உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த அனுசரிப்பு, இந்தத்துறைசார்ந்த கூடுதல் ஆராய்ச்சிகளின் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
Question 25
மிஷன் சாகரின்கீழ், அத்தியாவசிய மருந்துப் பொருட்களை வழங்குவதற்காக INS கேசரி, எந்த நாட்டை சென்றடைந்துள்ளது?
A
மடகாஸ்கர்
B
இலங்கை
C
செஷல்ஸ்
D
மொரிஷியஸ்
Question 25 Explanation: 
 மிஷன் சாகரின் ஒருபகுதியாக, இந்திய கடற்படைக் கப்பலான கேசரி, செஷல்சில் உள்ள விக்டோரியா துறைமுகத்துக்கு சென்றடைந்தது. COVID-19 பெருந்தொற்று காலத்தில், நட்புநாடுகளுக்கு இந்திய அரசு உதவி வருகிறது. இதனையொட்டி செஷல்ஸ் நாட்டு மக்களுக்கு, COVID-19 தொற்று தொடர்பான அத்தியாவசிய மருந்துகளை INS கேசரி கப்பல் எடுத்துச்சென்றுள்ளது. வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிற அரசு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது, முன்னர் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட, “பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு & வளர்ச்சி” என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளது
Question 26
அனைத்து BS6 இணக்கமான 4 சக்கர மோட்டார் வாகனங்களிலும் ஒட்டப்படவேண்டிய பட்டைகளின் நிறம் என்ன?
A
சிவப்பு
B
பச்சை
C
கருப்பு
D
வெள்ளை
Question 26 Explanation: 
 சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் ஓர் அண்மைய அறிவிப்பின்படி, பதிவு விவரங்களை வழங்கும் 1 செ.மீ அகல பச்சை நிற ஒட்டி, அனைத்து BS 6 இணக்கமான மோட்டார் வாகனங்களிலும் ஒட்டப்படவேண்டும். இந்த உத்தரவு 2020 அக்டோபர்.1 முதல் அமலுக்குவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு, அனைத்து மோட்டார் வாகனங்களிலும் கிழித்தெறியவியலாத, உயர்பாதுகாப்புகொண்ட பதிவெண் தகடுகள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  இந்தப் பச்சைநிறப்பட்டை, பதிவெண் தகட்டுக்கு மேலே ஒட்டப்படும். இது, பெட்ரோல் அல்லது இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனத்திற்கு வெளிர்நீலவண்ணப் பட்டையாகவும், டீசல் வாகனங்களுக்கு ஆரஞ்சுநிறப்பட்டையாகவும் இருக்கும்.
Question 27
‘ARPIT’ என்ற போக்குவரத்து அமைப்புடன் தொடர்புடைய இந்திய ஆயுதப்படை எது?
A
இந்திய கடற்படை
B
இந்திய இராணுவம்
C
இந்திய வான்படை
D
இந்திய கடலோர காவல்படை
Question 27 Explanation: 
 தனித்தப் போக்குவரத்துக்காக வான்படை மீட்புக்கருவி ஒன்றை (Airborne Rescue Pod for Isolated Transportation - ARPIT) இந்திய வான்படை, உள்நாட்டிலேயே வடிவமைத்து, தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. தொலைதூர, தனித்த, மிகவும் உயரமான பகுதிகளில் COVID-19 உட்பட நோய்த்தொற்று நோயால் பாதிக்கப்பட்ட, நெருக்கடி நிலையிலுள்ள நோயாளிகளை வெளியேற்றிக்கொண்டு வருதற்கு இந்தக்கருவி பயன்படுத்தப்படும்.  உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இக்கருவி `60,000 செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட இதேபோன்ற கருவிகளின் விலையான `60 இலட்சத்துடன் ஒப்பிடுகையில், இது மிகவும் குறைவாகும். தற்போதைய நிலவரப்படி, இந்திய வான்படை 7 ARPIT’களை உருவாக்கியுள்ளது
Question 28
யேல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் (EPI குறியீடு 2020) இந்தியா பெற்றுள்ள இடம் என்ன?
A
120
B
146
C
168
D
171
Question 28 Explanation: 
 யேல் பல்கலையால் ஈராண்டுக்கொருமுறை வெளியிடப்படும் சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டின் (EPI குறியீடு 2020) 12ஆவது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 180 நாடுகளின் சுற்றுச்சூழல் செயல்திறனை அளவிடும் இக்குறியீட்டில், இந்தியா நூற்றுக்கு 27.6 மதிப்பெண்ணுடன் 168ஆவது இடத்தைப்பிடித்தது. கடந்த ஆண்டு, 30.57 மதிப்பெண்கள் பெற்று 177ஆவது இடத்தை இந்தியா பிடித்திருந்தது. டென்மார்க் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்த இடங்களில் லக்சம்பர்க் மற்றும் சுவிச்சர்லாந்து ஆகிய நாடுகளும் உள்ளன. அமெரிக்க ஐக்கிய நாடுகள், இந்தக் குறியீட்டில் 24ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.
Question 29
மதிப்புமிக்க ரிச்சர்ட் டாக்கின்ஸ் விருதை வென்ற முதல் இந்தியர் யார்?
A
அருந்ததி இராய்
B
ஜாவெத் அக்தர்
C
குல்சார்
D
சண்டி பிரசாத் பட்
Question 29 Explanation: 
 இந்திய கவிஞரும் எழுத்தாளருமான ஜாவெத் அக்தர், நடப்பாண்டிற்கான (2020) மதிப்புமிக்க ரிச்சர்ட் டாக்கின்ஸ் விருதைப்பெறுவதன்மூலம், இவ்விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஆங்கில பரிணாம உயிரியலாளர் ரிச்சர்ட் டாக்கின்ஸின் பெயரால் இது வழங்கப்பட்டு வருகிறது. மதச்சார்பின்மை, பகுத்தறிவுவாதத்தின் கூறுகளை வெளிப்படையாக அறிவித்து அறிவியல் பூர்வமாக மெய்யினை நிலைநிறுத்தும் அறிவியல், கல்வி அல்லது பொழுதுபோக்கு ஆகிய துறைகளைச் சேர்ந்த நபர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 2003’லிருந்து இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
Question 30
2019-20ஆம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடுவணரசு வரிகளின் விகிதம் என்ன?
A
11.25 %
B
10.95 %
C
10.25 %
D
9.88 %
Question 30 Explanation: 
 சுங்க வரி மற்றும் மாநகராட்சி வரியிலிருந்து வசூல் குறைந்துவருவதால், மத்திய வரிகளின் விகிதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2019-20ஆம் நிதியாண்டில் 9.88%ஆக குறைந்தது. 2018-19ஆம் நிதியாண்டில் 10.97 சதவீதமாகவும், 2017-18ஆம் நிதியாண்டில் 11.22 சதவீதமாகவும் இருந்த இந்த விகிதம், கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.  பொருளாதார நடவடிக்கைகளில் தேக்கநிலை காரணமாக, இது மேலும் குறையும் என எதிர்பார்க்கப்ப -டுகிறது. மொத்த வரி வருவாயும், 2019-20ஆம் நிதியாண்டில் 3.39% அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இது, இவ்வாண்டின் திருத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட இலக்குடன் ஒப்பிடும்போது `1.5 டிரில்லியன் பற்றாக்குறையாகும்.
Question 31
குறுஞ்செய்திமூலம் GST வரியைத் தாக்கல்செய்வதற்கான வரம்பு எவ்வளவு?
A
NIL கணக்கு
B
ரூ. 1,000
C
ரூ. 1,0000
D
ரூ. 1,00000
Question 31 Explanation: 
 வரிசெலுத்துவோர் வசதிக்காக குறுஞ்செய்திமூலம் GSTR – 3B விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து NIL GST மாதாந்திர வரிக்கணக்கைத் தாக்கல்செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ளது. இது 22 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவுசெய்த வரி செலுத்துவோருக்கு GST வரி செலுத்தும் இணக்கத்தைக் கணிசமாக மேம்படுத்துகிறது. அவர்கள் பொதுவான இணையதளம்மூலம் தங்கள் கணக்கில் உள்நுழைந்து ஒவ்வொரு மாதமும் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்யவேண்டும்.  தற்போது, NIL கணக்கைத் தாக்கல்செய்வோர் இந்த GST இணையதளத்தில் உள்நுழைய தேவை இல்லை. மேலும் குறுஞ்செய்திமூலம் தங்கள் NIL கணக்கை தாக்கல்செய்யலாம். இந்நோக்கத்திற்காக, குறுஞ்செய்திமூலம் NIL Form GSTR–3B’ஐ தாக்கல்செய்வதற்கான செயல்பாடு GSTN வலைத்தளத்தில் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. எளிதான வரிசெலுத்தும் நடைமுறைகளைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் 190 நாடுகளுள் இந்தியா 115ஆவது இடத்தைப்பிடித்துள்ளது
Question 32
நடப்பாண்டு (2020) நிலவரப்படி, இந்திய இரயில்வேயில், முதன்முறையாக சுழிய பயணிகள் இறப்பு நிகழ்ந்துள்ள மிகவும் பாதுகாப்பான ஆண்டு காலகட்டம் எது?
A
2011–12
B
2014–15
C
2018–19
D
2019–20
Question 32 Explanation: 
 2019 ஏப்ரல் - 2020 மார்ச் வரையான காலகட்டத்தில், இந்திய இரயில்வே மிகச்சிறந்த பாதுகாப்பு சாதனையைப் பதிவுசெய்துள்ளது. இந்த ஆண்டு (01.04.2019 முதல் 08.06.2020 வரை) எந்தவொரு இரயில் விபத்திலும் எந்தவொரு இரயில் பயணிக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை. 166 ஆண்டுகளுக்கு முன்பு 1853ஆம் ஆண்டில், இந்தியாவில், இரயில்வே அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், 2019-2020ஆம் ஆண்டில் முதன்முறையாக இந்தக் குறிப்பிடத்தக்க சாதனை அடையப்பட்டுள்ளது.  மனிதர்களால் இயக்கப்படும் 1274 இருப்புப்பாதை கடவுகள் 2019-2020’இல் அகற்றப்பட்டுள்ளன. இதுவே மனிதரால் இயக்கப்படும் இருப்புப்பாதை கடவுகளை (level-crossing) அகற்றுவதில் உச்சபட்ச எண்ணிக்கையாகும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன மற்றும் பல்வேறு தண்டவாளங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
Question 33
2020-2021ஆம் நிதியாண்டில், எந்தத் திட்டத்தின்கீழ் `101,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது?
A
பிரதமர் கிசான்
B
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்
C
பிரதமர் ஜன் தன் யோஜனா
D
பிரதமர் ஜன் ஆரோக்ய யோஜனா
Question 33 Explanation: 
 நடப்பு நிதியாண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்திற்கு இதுவரை இல்லாத அளவில் `101,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக அதிக அளவில் ஒதுக்கப்பட்ட நிதி இதுவே. 2020-21ஆம் நிதியாண்டில் இத்திட்டத்திற்காக `31,493 கோடி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியை விடவும் 50 சதவீதம் அதிகமாகும்
Question 34
“ஆசியாவின் நோபல் பரிசு” என்றழைக்கப்படும் பிரபல விருது எது?
A
புலிட்சர் பரிசு
B
ரமோன் மகசேசே விருது
C
வாழ்வுரிமை விருது
D
புக்கர் பரிசு
Question 34 Explanation: 
 “ஆசியாவின் நோபல் பரிசு” எனக்கருதப்படும் ரமோன் மகசேசே விருதுகள், COVID-19 தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு இரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 60 ஆண்டுகளில், இவ்விருதுகள் இரத்து செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக, கடந்த 1970ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் 1990ஆம் ஆண்டில் பிலிப்பைன்சைத் தாக்கிய பயங்கர நிலநடுக்கம் ஆகியவற்றின் காரணமாக இவ்விருதுகள் இரத்து செய்யப்பட்டன.  இந்த விருதுகள், மணிலாவைச்சார்ந்த ஓர் அறக்கட்டளையால் வழங்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, பிலிப்பைன்ஸ் குடியரசின் மூன்றாவது தலைவராக இருந்தவரின் பெயரால் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
Question 35
இந்திய சூரிய மின்னாற்றல் கழகத்திடமிருந்து உலகின் மிகப்பெரிய சூரிய மின்னாற்றல் ஒப்பந்தம் ஒன்றைப்பெற்றுள்ள இந்திய நிறுவனம் எது?
A
டாடா எரிசக்தி நிறுவனம்
B
அதானி தூய ஆற்றல் நிறுவனம்
C
ReNew Power
D
Avadaa Energy
Question 35 Explanation: 
 இந்திய சூரிய மின்னாற்றல் கழகத்தின் சூரிய மின்னுற்பத்தி திட்டத்துக்கான ஒப்பந்தத்தை அதானி தூய ஆற்றல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தத் திட்டத்தின் மொத்த உற்பத்தித் திறன், 8 GW என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 2 GW சூரிய ஆற்றலைச் சேமிக்கும் மின்கல உற்பத்தி திட்டத்தையும் அது செயல்படுத்தவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு `45 ஆயிரம் கோடியாகும். இந்த ஒப்பந்தத்தின்மூலம், தற்போது அதானி தூய ஆற்றல் நிறுவனத்தின் வசமிருக்கும் சூரிய மின்னுற்பத்தி திட்டத்தின் திறன் 15 GW (கிகாவாட்) ஆகும்.
Question 36
எந்த இந்திய மாநிலத்தின் மாநில கீதமாக, ‘வந்தே உத்கல ஜனனி’ ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது?
A
மேற்கு வங்கம்
B
ஒடிசா
C
சத்தீஸ்கர்
D
உத்தரகண்ட்
Question 36 Explanation: 
 ‘வந்தே உத்கல ஜனனி’ என்னும் பாடலை ஒடிசாவின் மாநில அமைச்சரவை அண்மையில் அதன் மாநில கீதமாக ஏற்றுக்கொண்டது. கவிஞர் லட்சுமிகனாதா மோகபத்ரா என்பவரால் எழுதப்பட்ட இந்தப் பாடல், முதன்முதலில் 1912’இல் பாலசூரில் நடைபெற்ற உத்கல் சம்மிலானியின் மாநாட்டில் பாடப்பட்டது. இப்பாடலுக்கு, ‘மாநில கீதம்’ என்ற அந்தஸ்தை வழங்கவேண்டும் என்பது ஒடிசா மாநில மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். அதிகாரப்பூர்வ பாடல் வெளியானபிறகு, ஒடிசா மாநிலத்தின் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் இப்பாடல் ஒலிக்கப்படும்.
Question 37
அனைத்து NCERT தொலைக்காட்சிகளிலும், மின்-கற்றலுக்கான பாடங்களை ஒளிபரப்புவதற்காக, எந்த அறக்கட்டளையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் NCERT கையெழுத்திட்டுள்ளது?
A
ரோட்டரி இந்தியா
B
குழந்தைகள் உரிமைகளும் நீங்களும்
C
ஸ்மைல் அறக்கட்டளை
D
அக்ஷய பாத்திரம் அறக்கட்டளை
Question 37 Explanation: 
 மின்-கற்றலை மேலும் பயனுள்ளதாக்கும் வகையில், அனைத்து தேசிய கல்வி, ஆராய்ச்சிக்குழுமத்தின் (NCERT) தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், முதலாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான, மின் கற்றலுக்கான பாடங்களை ஒளிபரப்புவதற்காக, NCERT’உம் ரோட்டரி இந்தியாவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ முன்னிலையில் டிஜிட்டல் முறையில் புது தில்லியில் கையெழுத்தானது.  1-12ஆம் வகுப்புவரை அனைத்து பாடங்களுக்குமான பாடத்திட்டங்களை இணையவழிகற்றல்மூலமாக கற்றுக்கொள்ளும் வகையில், ஹிந்தி மொழியில் வடிவமைத்து ரோட்டரி இன்டர்நேஷனல், ‘வித்யா தான் 2.0’ என்ற திட்டத்தின்கீழ் NCERT’இடம் அளிக்கும். இதுமட்டுமன்றி, சிறப்புத்தேவைகள் உள்ள சிறார்களுக்காக பாடங்களை அவர்களுக்கேற்ற வகையில் வடிவமைத்து ரோட்டரி அமைப்பு அளிக்கும்
Question 38
COVID-19 சிகிச்சைக்காக பிளாஸ்மா பரிமாற்ற வலையமைப்பை அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?
A
தென் கொரியா
B
ஐக்கியப் பேரரசு
C
வங்கதேசம்
D
வியட்நாம்
Question 38 Explanation: 
 ஊனீர் (plasma) பரிமாற்றத்தை எளிதாக்குவதற்காக, ‘ஷோஹோஜோதா’ என்ற பெயரில், வங்கதேசம், சமீபத்தில் ஓர் இணையவழி வலையமைப்பை அறிமுகப்படுத்தியது. இது COVID-19 தொற்றிலிருந்து குணமான நோயாளிகளுக்கும், COVID-19 தொற்றுக்கு சிகிச்சையளிக்கப்படுபவர்களுக்கும் இடையில் பரிமாற்றகமாக செயல்படுகிறது. இருப்பினும், வங்கதேசத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிளாஸ்மா சிகிச்சைமுறை, இன்னமும் சோதனைமுறையிலேயே உள்ளது. அரசாங்கத்தின் இறுதி ஒப்புதலுக்காக இது காத்திருக்கிறது.
Question 39
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நீர்மின்னுற்பத்தி அணை என்று கூறப்படும் GERD அணை அமைந்துள்ள நாடு எது?
A
எத்தியோப்பியா
B
நைஜீரியா
C
தென்னாப்பிரிக்கா
D
சூடான்
Question 39 Explanation: 
 $4.6 பில்லியன் டாலர் செலவிலான Grand Ethiopian Renaissance Dam (GERD), எத்தியோப்பியாவின் மிகப்பெரிய திட்டமாகும். இந்த அணை நீல நைல் நதியில் அமைந்துள்ளது. இதன் கட்டுமானம் கடந்த 2011ஆம் ஆண்டில் தொடங்கியது. சமீபத்தில் நைல் படுகை நாடுகளான எத்தியோப்பியா, எகிப்து மற்றும் சூடான் மீண்டும் பேச்சுவார்த்தைகளைத்தொடங்கின. எத்தியோப்பியா ஒரு பெரிய மின்னுற்பத்தியாள -ராக மாற விரும்பும் அதேவேளையில், இத்திட்டம், எகிப்திற்கான நீர் விநியோகத்தை மட்டுப்படுத்தும் என எகிப்து அஞ்சுகிறது. சூடான் இருநாடுகளையும் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளது.
Question 40
நடப்பாண்டில் (2020) வரும் உலக அங்கீகார நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Accreditation: Improving Food Safety
B
Safety Accreditation
C
Quality Accreditation
D
Quality Certification
Question 40 Explanation: 
 வணிகம் மற்றும் பொருளாதாரத்தில் அங்கீகாரத்தின் பங்கை முன்னிலைப்படுத்தவும் ஊக்குவிக்கவும் உலக அங்கீகார நாள், ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.9 அன்று கொண்டாடப்படுகிறது. “Accreditation: Improving Food Safety” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். இது, பன்னாட்டு அங்கீகார மன்றம் மற்றும் பன்னாட்டு ஆய்வக அங்கீகார ஒத்துழைப்பு ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது. இந்தச் சிறப்புநாளை நினைவுகூரும் வகையில் இந்திய தர ஆணையம் (QCI) ஓர் இணையவழி கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருந்தது.
Question 41
வனத்துறை அறிக்கையின்படி, கீழ்க்காணும் எந்த விலங்கினத்தின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 29% அளவுக்கு அதிகரித்துள்ளது?
A
வங்கப்புலி
B
ஆசிய சிங்கம்
C
ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம்
D
பனிச்சிறுத்தை
Question 41 Explanation: 
 குஜராத் மாநில வனத்துறையின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, குஜராத்தில் உள்ள கிர் காடுகளில் வசிக்கும் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 29% அதிகரித்துள்ளது. சிங்கங்கள் வசிக்கும் பரப்பளவும், 36 சதவீதம் அதிகரித்துள்ளது. மாநில மக்களின் பங்களிப்பு காரணமாக ஆசிய சிங்கத்தின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேற்கொள்ளப்படும் நிலத்திட்டம் ஆசிய சிங்கங்களின் பாதுகாப்பிற்கு மேலும் உதவும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Question 42
அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின்கீழ், MSME நிறுவனங்களுக்கு கடன்வழங்குவதில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
இராஜஸ்தான்
C
மத்திய பிரதேசம்
D
அஸ்ஸாம்
Question 42 Explanation: 
 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கான `3 இலட்சம் கோடி அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின்கீழ், ஜூன்.9 வரை பொதுத்துறை வங்கிகள்மூலம் `12,200.65 கோடி வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. வங்கிகள்மூலம் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த `2,637 கோடியிலிருந்து மொத்தம் `1,727 கோடியை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி, தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து `1,225 கோடி நிதியை வழங்கி உத்தரபிரதேசம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
Question 43
வருடாந்திர, “பன்னாட்டு சமய சுதந்திர உரிமை அறிக்கை”யை வெளியிட்டுள்ள நாடு எது?
A
இந்தியா
B
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
C
நியூசிலாந்து
D
சீனா
Question 43 Explanation: 
 பன்னாட்டு சமயவுரிமைச்சட்டம், 1998’இன்படி, ஐக்கிய அமெரிக்க வெளியுறவுத்துறை ஆண்டுதோறும் ‘பன்னாட்டு சமயவுரிமை அறிக்கை’யை வெளியிட்டுவருகிறது. அமெரிக்க காங்ரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட இவ்வறிக்கை, ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் சமய உரிமையின் நிலையை விவரிக்கிறது.  இந்த அறிக்கை, இந்தியாவில் நிலவும் சமய உரிமை குறித்து கண்டனம் எழுப்பியதால் அது அண்மைய செய்திகளில் இடம்பெற்றது. ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்தது மற்றும் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Question 44
பெண்கள் கால்பந்து போட்டிக்கு, அண்மையில், தொழிற்முறை அந்தஸ்தை வழங்கிய நாடு எது?
A
பிரேசில்
B
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
C
ஸ்பெயின்
D
அர்ஜென்டினா
Question 44 Explanation: 
 அண்மையில், பெண்கள் கால்பந்து போட்டிக்கு தொழிற்முறை அந்தஸ்தை ஸ்பெயின் வழங்கியுள்ளது. ஸ்பானிஷ் கூட்டமைப்பின் கூற்றுப்படி, ஸ்பெயினில் உள்ள இரண்டு முன்னணி பெண்கள் கால்பந்து பிரிவுகளும் தொழிற்முறை தகுதியைப்பெற்றுள்ளன. இம்முடிவு தொழிற்முறையற்ற கால்பந்து என்று கருதப்பட்ட இந்தப் போட்டிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் விளையாட்டுக்குழுவும் இப்போட்டிகளுக்கான தகுதியை ஒப்புக்கொண்டுள்ளது. இது, நாட்டின் ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து போட்டிகளுக்கும் செல்லுபடியாகும்
Question 45
சில்வர் லைன்’ என்று பெயரிடப்பட்ட அரை அதிவேக இரயில் வழித்தடத்துக்கு ஒப்புதல் அளித்துள்ள மாநில அரசு எது?
A
உத்தரகண்ட்
B
சிக்கிம்
C
கேரளா
D
மகாராஷ்டிரா
Question 45 Explanation: 
• திருவனந்தபுரம்–காசர்கோடு அரை அதிவேக இரயில் வழித்தடம் (அ) ‘சில்வர் லைன்’ திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு கேரள மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடுக்கு இடைப்பட்ட 529.45 கி.மீ., தொலைவை 4 மணிநேரத்தில் கடப்பதே, ‘சில்வர் லைன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வழித்தடத்தின் நோக்கமாகும். • இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமான கேரள இரயில் மேம்பாட்டுக்கழகம் லிட் (கே-இரயில்) என்பது இந்திய இரயில்வே மற்றும் கேரள அரசின் ஒரு கூட்டு நிறுவனமாகும். இந்த வழித்தடத்தில், புதுச்சேரியின் மாகேவைத்தவிர்ப்பதற்காக, அமைச்சரவை, இத்திட்டத்தில் சிறுமாற்றம் மேற்கொண்டது. இத்திட்டத்திற்கான தோராய செலவு `63,941 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்குள் இந்தத்திட்டம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Question 46
இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பப்புவா நியூ கினியா, சாலமன் தீவுகள் மற்றும் டிமோர் லெஸ்டே முழுவதும் பரவியிருக்கும் கடற்பரப்பின் பெயர் என்ன?
A
பவள முக்கோணம்
B
நிலக்கரி முக்கோணம்
C
மத்திய முக்கோணம்
D
காங்கோ முக்கோணம்
Question 46 Explanation: 
• பவள முக்கோண நாளானது ஒவ்வொரு ஜூன்.9 அன்றும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பவள முக்கோணம் என்பது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஆறு நாடுகளில் (இந்தோனேசியா, மலேசியா, பப்புவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ், சாலமன் தீவுகள் & திமோர் லெஸ்டே) பரவியிருக்கும் கடற்பரப்பாகும். இந்நாடுகள், “CT6” நாடுகள் என்றும் அழைக்கப்படுகிறது. • பவள முக்கோணத்தின் வளமான கடல்சார் வளங்களால் பயனடைகின்ற அனைத்து நாடுகளும் இந்த நாளை கொண்டாடுகின்றன. காங்கோ வடிநிலப்பரப்பு மற்றும் அமேசான் மழைக்காடுகளுடன் சேர்த்து நமது புவியில் உள்ள மூன்று மிகப்பெரிய சுற்றுச்சூழல் வளாகங்களுள் இதுவும் ஒன்றாகும்.
Question 47

தென்கிழக்காசியாவில் COVID-19 தொற்றுச்சூழலைக் கையாளுவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றுள்ள ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் யார்?

A
உர்ஜித் படேல்
B
இரகுராம் இராஜன்
C
D சுப்பா ராவ்
D
Y V ரெட்டி
Question 47 Explanation: 
• தென்கிழக்காசிய நாடுகள் COVID-19 தொற்றுச்சூழலைக் கையாளுவதற்கு உதவும் வகையில், ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகாவா முன்னணி வல்லுநர்கள் அடங்கிய ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளார். இந்தக் குழுவை ADB துணைத்தலைவர் அகமது M சையீத் நிர்வகிக்கிறார். இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் இரகுராம் இராஜன் நிதி, சுகாதாரம் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய பட்டியலில் இடம்பெற்றுள்ளார். கட்டமைப்பு சீர்திருத்தங்கள், உள்நாட்டு வள அணிதிரட்டலில் புதுமை ஆகியவற்றில் இந்தக்குழு தனது முழுகவனத்தையும் செலுத்தும்.
Question 48

வர்த்தகம் மற்றும் தொழிலக திறன்களில் இளையோர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக தொழிற்துறை பயிற்சி நிறுவனங்களுடன் கூட்டிணைந்துள்ள மத்திய பொதுத்துறை நிறுவனம் எது?

A
தேசிய உரங்கள் நிறுவனம்
B
இந்திய நிலக்கரி நிறுவனம்
C
இந்திய எஃகு ஆணையம்
D
தேசிய அலுமினிய நிறுவனம்
Question 48 Explanation: 
• இந்திய அரசின், “திறன் இந்தியா” திட்டத்துக்கு அழுத்தந்தரும்வகையில், தேசிய உரங்கள் நிறுவனம், தொழிற்பயிற்சி மையங்களுடன் (ITI) இணைந்து இளையோர்களுக்கு, பல்வேறு தொழில்களில் பயிற்சி அளிக்கவுள்ளது. இந்த நிறுவனத்தின் தொழிற்சாலைகளுக்கு அருகிலுள்ள ITI’களுடன் இணைந்து அந்தப் பகுதியில் உள்ள இளையோர்களுக்கு பயிற்சியளிக்க திட்டமிட்டுள்ளது. • கனரக தொழில்கள் உள்ளிட்ட பலதொழில்களில் இளையோர்கள் வேலைவாய்பைப்பெற இது உதவும். இதனையொட்டி தேசிய உரங்கள் நிறுவனத்தின், பஞ்சாபில் உள்ள நங்கல் தொழிற்சாலை அங்குள்ள ITI’உடன், இளைஞர்களுக்கு 12 தொழிற்துறைகளில் பயிற்சியளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
Question 49

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல்முறையில் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்காக எதனோடு கூட்டிணைந்துள்ளது?

A
இந்திய அஞ்சல்துறை கொடுப்பனவு வங்கி
B
பொதுச்சேவை மையம்
C
கடவுச்சீட்டு சேவை மையம்
D
UIDAI
Question 50
இந்திய வர்த்தக சபையின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
A
புது தில்லி
B
கொல்கத்தா
C
மும்பை
D
அகமதாபாத்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

One comment

  1. Hi sir, last few days before u posted history questions, I have doubt from that quiz…

    1. Rajaji started suthanithra part year of 1959??
    2.burma separated from act of 1935??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *