Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

June 4th Week 2020 Current Affairs Online Test Tamil

நடப்பு நிகழ்வுகள் - June 22 to June 30 - 2020

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் - June 22 to June 30 - 2020. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
எந்த ஒப்பந்தத்தின்கீழ், அயல்நாட்டு உயிரினங்களை இறக்குமதி செய்வதற்கும், வைத்திருப்பதற்கும் அரசாங்கம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது?
A
CITES
B
UNFCCC
C
CBD
D
CMS
Question 1 Explanation: 
 அருகிவரும் உயிரினஞ்சார்ந்த பன்னாட்டு வர்த்தகம் குறித்த ஒப்பந்தம் (Convention on International Trade in Endangered Species-CITES ) என்பது அரசுகளுக்கிடையிலான ஒரு பன்னாட்டு ஒப்பந்தமாகும். இந்தியாவும் CITES ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.  இந்த ஒப்பந்தத்தின் பட்டியலில் இடம்பெற்றுள்ள வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் பன்னாட்டு வணிகம் அவற்றின் உயிர்வாழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்பதை இது உறுதிப்படுத்துகிறது. CITES ஒப்பந்தத்தின்படி, அயல்நாட்டு உயிரினங்களின் இறக்குமதியைக் கையாள்வதற்கும், இந்திய நாட்டிற்குள் அவற்றை வைத்திருப்பதற்குமான விதிகளை சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தாயகம் சாராத உயிரின வகைகள் என்பவை, தங்களது இயல்பான உள்ளூர்ச் சூழலில் இருந்து புதிய சூழலுக்கு மனிதர்களால் கொண்டுவரப்பட்ட தாவரம் அல்லது விலங்கினம் ஆகும்.
Question 2
நடப்பாண்டுக்கான (2020) மதிப்புமிக்க உலக உணவு பரிசை வென்ற இந்திய-அமெரிக்கர் யார்?
A
Dr இரத்தன் லால்
B
A K பத்ரா
C
பிரதீப் டே
D
R S செளத்ரி
Question 2 Explanation: 
 நடப்பாண்டுக்கான (2020) உலக உணவுப்பரிசை இந்திய - அமெரிக்க மண்ணறிவியலாளரான Dr. இரத்தன் லால் வென்றுள்ளார். இந்தப்பரிசு, வேளாண் துறையின் நோபல் பரிசாகக்கருதப்படுகிறது. ஐம்பதாண்டுகளாக நான்கு கண்டங்களில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காக மண் வளத்தை மேம்படுத்தும் உத்திகளை ஐம்பதுகோடி சிறு விவசாயிகளிடம் கொண்டுசேர்த்தமைக்காக அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
Question 3
‘குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலக நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
A
ஜூன் 12
B
ஜூன் 13
C
ஜூன் 14
D
ஜூன் 15
Question 3 Explanation: 
 குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளில் கவனம் செலுத்துவதற்காக, ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.12 அன்று குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான நாள் அனுசரிக்கப்படுகிறது. “COVID-19: Protect children from child labour, now more than ever” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.  இந்நாள் அரசாங்கங்கள், பணியமர்த்துநர்கள், தொழிலாளர் அமைப்புகள், சமூக அமைப்புகள் மற்றும் மில்லியன் கணக்கான மக்களை ஒன்றிணைத்து குழந்தைத் தொழிலாளர்களின் அவலநிலையையும், அவர்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டுகிறது.
Question 4
மின்மயமாக்கப்பட்ட இரயில்வே வழித்தடத்தில் இரட்டை அடுக்கு கொள்கலன்கள்கொண்ட இரயிலை வெற்றிகரமாக இயக்கிய நாடு எது?
A
சீனா
B
இந்தியா
C
தென் கொரியா
D
இஸ்ரேல்
Question 4 Explanation: 
 மிகவுயரமான நிலையில் உள்ள ஓவர் ஹெட் கருவி மின்மயமாக்கப்பட்ட (OHE electrified), மேற்கத்திய இரயில்வே பகுதிகளில், ஈரடுக்கு கொள்கலன்கள்கொண்ட (container) இரயிலை முதன்முறையாக வெற்றிகரமாக இயக்கி, இந்திய இரயில்வே புதிய உலக சாதனை படைத்துள்ளது. நாட்டின், பசுமை இந்தியா திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில், இந்திய இரயில்வேயின் புதிய பசுமை முயற்சியாகும் இது. குஜராத் மாநிலத்தில் உள்ள பாலன்பூர், பொட்டாட் ஆகிய இரயில் நிலையங்களுக்கு இடையே இது வெற்றிகரமாகத் தொடங்கியது.
Question 5
முழுமையாக டிஜிட்டல் தளத்தில் செயல்படும் முதல் கட்டுமானத்துறை அமைப்பு எது?
A
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
B
இந்திய எண்ணெய் நிறுவனம்
C
NTPC நிறுவனம்
D
REC நிறுவனம்
Question 5 Explanation: 
 மிகப்பெரிய சீர்திருத்தங்களில் ஒன்றாக, சாலைப்போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகத்தின்கீழ் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ‘முழுமையாக டிஜிட்டலாக’ தனித்துவமான இணையம் சார்ந்த மற்றும் செயற்கை நுண்ணறிவுமூலம் இயங்கும் பெருந்தரவுப் பகுப்பாய்வுத்தளம் - டேட்டா லேக் மற்றும் திட்ட மேலாண்மை மென்பொருளை தொடக்கியுள்ளது. NHAI’இன் முழுத்திட்ட மேலாண்மைப் பணிகளும் கையேடுகளிலிருந்து இணையமயமாக்கப்படுகிறது,  இதில், ‘நேரக்கணக்குடன் பணிப்பாய்வு’ மற்றும் ‘எச்சரிக்கைப் பொறிமுறை’ உள்ளிட்ட முழுமையான திட்டச்செயலாக்க நடவடிக்கைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. அனைத்துத் திட்ட ஆவணங்கள், ஒப்பந்த முடிவுகள் மற்றும் ஒப்புதல்கள் இப்போது இணையதளம்மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன.
Question 6
‘சகாகர் மித்ரா’ என்ற உள்ளுறைப்பயிற்சித்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
வேளாண் அமைச்சகம்
B
உள்துறை அமைச்சகம்
C
சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்
D
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
Question 6 Explanation: 
 ‘சகாகர் மித்ரா’ என்ற உள்ளுறைப்பயிற்சித் திட்டத்தை மத்திய வேளாண் மற்றும் உழவர்கள்நலத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கிவைத்தார். இந்தப் புதிய திட்டம், இளம் தொழில் நிபுணர்கள் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கழகம் & கூட்டுறவு நிறுவனங்களில் ஊக்கத்தொகையுடன் பயிற்சிபெற உதவும்.  நடைமுறைத் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள இந்தப் பயிற்சி அவர்களுக்கு உதவும். மேலும், கூட்டுறவு துளிர் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் ஒரு சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஊக்கத்தொகையுடன் கூடிய இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெறுபவர் -களுக்கு நான்கு மாத காலத்துக்கு நிதியுதவி கிடைக்கும்.
Question 7
ஊரகங்களில் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களை உருவாக்குவதற்காக, ‘பஞ்சவதி யோஜனா’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
ஹிமாச்சல பிரதேசம்
B
உத்தரகண்ட்
C
அருணாச்சல பிரதேசம்
D
சிக்கிம்
Question 7 Explanation: 
 ஹிமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர், அண்மையில், ‘பஞ்சவதி யோஜனா’ என்ற புதிய திட்டத்தை தொடங்கினார். ஊரக வளர்ச்சித்துறையால் செயல்படுத்தப்பட்டுவரும் இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தில் கிராமப்புறங்களைச்சேர்ந்த மூத்த குடிமக்களுக்காக பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் உருவாக்கப்படும். ஆயுர்வேத மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த தாவரங்களுடன் தூய்மையான சூழலில் ஓய்வுநேரத்தை செலவிட வயதானவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
Question 8
போதுமான அளவுக்கு குடிநீரை வழங்குவதை நோக்கமாகக்கொண்ட, ‘செளனி யோஜனா’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
குஜராத்
B
கர்நாடகா
C
தெலுங்கானா
D
சத்தீஸ்கர்
Question 8 Explanation: 
 செளராஷ்டிரா-நர்மதா அவதாரன் நீர்ப்பாசன (செளனி) யோஜனாவின் இரண்டாம் கட்டம் ஆக.15ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று குஜராத் மாநில முதலமைச்சர் சமீபத்தில் அறிவித்தார். மாநிலத்திற்கு போதுமான குடிநீரை வழங்குவதோடு, நர்மதா ஆற்றிலிருந்து செளராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளின் குடிநீர் மற்றும் பாசன தேவைகளை பூர்த்திசெய்யும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. வறண்ட செளராஷ்டிரா மற்றும் கட்ச் பிராந்தியத்தின் 115 நீர்த்தேக்கங்களையும் இது நிரப்பும். SAUNI (Saurashtra - Narmada Avataran Irrigation) திட்டத்தின் முதல்கட்டம், கடந்த 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
Question 9
எந்தப் பொருளின் அண்மைய இறக்குமதி தீர்வை அதிகரிப்பானது, அகர்பத்தி உற்பத்தியாளர்களுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது?
A
மூங்கில்
B
கரி
C
சந்தன எண்ணெய்
D
நிலக்கரி
Question 9 Explanation: 
 மூங்கில் குச்சிகளுக்கு 10’இலிருந்து 25 விழுக்காடு வரை இறக்குமதி தீர்வையை அதிகரித்து மத்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள முடிவானது நம் நாட்டில் சுயவேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகளை திறந்துவிட்டுள்ளது. அரசின் இந்த முடிவை வரவேற்று, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த எட்டு முதல் பத்து மாதங்களில் அகர்பத்தி தொழிற்துறையில் குறைந்தபட்சம் 1 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள், உருவாகும் என்றும் இது கிராமத்தொழில்துறைக்கு ஊக்கமளிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
Question 10
உள்நாட்டு உற்பத்தியாளர்களின் மூலதன கையகப்படுத்தல் விநியோகங்களை நான்கு மாதங்கள் வரை நீட்டித்துள்ள மத்திய அமைச்சகம் எது?
A
பாதுகாப்பு அமைச்சகம்
B
MSME அமைச்சகம்
C
வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்
D
நிதி அமைச்சகம்
Question 10 Explanation: 
 COVID-19 நோய்த்தொற்றால் எழும் விநியோக சங்கிலித் தொடர் இடையூறுகள் காரணமாக இந்திய விற்பனையாளர்களுடன் தற்போதுள்ள அனைத்து மூலதன கையகப்படுத்தல் ஒப்பந்தங்களுக்கான விநியோக காலத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் நான்கு மாதங்கள் வரை நீட்டித்துள்ளது.  இந்த உத்தரவில், "வலுவான தடை காரணமாக, இந்நீட்டிப்பு நான்கு மாத காலத்திற்கு, அதாவது 2020 மார்ச் 25 முதல் 2020 ஜூலை 24 வரை பொருந்தும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. COVID-19 வைரஸ் தொற்றால் ஏற்பட்ட விநியோக சங்கிலி நெருக்கடி காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Question 11
தனியார் வங்கி பங்குதாரர் விதிமுறைகளை மீளாய்வு செய்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) அமைக்கப்பட்ட பணிக்குழுவின் தலைவர் யார்?
A
P K மொஹந்தி
B
R காந்தி
C
B P கனுங்கோ
D
ரபி N.மிஸ்ரா
Question 11 Explanation: 
 தனியார்துறை வங்கிகளின் உரிமைகள் மற்றும் பெருநிறுவன அமைப்புகுறித்த வழிகாட்டுதல்களை மீளாய்வு செய்வதற்காக ஓர் உள்ளக செயற்குழுவை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அமைத்துள்ளது. இப் பணிக்குழுவிற்கு ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநர் P K மொஹந்தி தலைமைதாங்குவார். இந்தக் குழு, வங்கியின் உரிம வழிகாட்டுதல்கள் மற்றும் தனியார்துறை வங்கிகளின் உரிமையைப்பற்றிய விதிமுறைகளை ஆராயும். செயல்படாத நிதிநிறுவனங்கள்மூலம் துணை நிதியியல் நிறுவனங்களை வைத்திருப்பதற்கான விதிமுறைகளையும் இது மதிப்பாய்வு செய்யும்.
Question 12
வனவிலங்கு எண்ணிக்கை கணக்கெடுப்பின்போது, தோராயமாக 2000 இந்திய காட்டெருதுகளை கணக்கெடுத்த மாநில வனத்துறை எது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகா
D
பீகார்
Question 12 Explanation: 
 நீலகிரி வனப்பகுதிகளில், அண்மையில், இந்திய காட்டெருதுகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்ட இந்த எண்ணிக்கை கணக்கெடுப்பின்படி, முழு வனப்பகுதிகளிலும் சேர்த்து ஈராயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய காட்டெருதுகள் உள்ளன. இந்தக் கணக்கெடுப்பின்போது, மனித-விலங்கு மோதல்கள் அதிகம் நிகழும் மனித வாழ்விடங்களுக்கு மிக நெருக்கமான இடங்களிலேயே இந்த விலங்குகள் வாழ்ந்துவருவதாக அறியப்பட்டது. 2000 இந்திய காட்டெருதுகளில் சுமார் 794 காட்டெருதுகள் நேரடியாகவே தென்பட்டன.
Question 13
தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றின்படி, 2020 மே மாதத்தில் மட்டும் 829 ச.கி.மீட்டர் பரப்பளவுக்கு காடழிப்பைச் சந்தித்த காடு எது?
A
அமேசான் மழைக்காடு
B
காங்கோ மழைக்காடு
C
டெய்ன்ட்ரீ மழைக்காடு
D
தென்கிழக்காசிய மழைக்காடுகள்
Question 13 Explanation: 
 கடந்த 2020 மே மாதத்தில் மட்டும், 829 ச.கி.மீட்டர் பரப்பளவிளான காடழிப்புக்கு அமேசான் மழைக் காடுகள் ஆளானதாக பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது 2015ஆம் ஆண்டிலிருந்து அக்காட்டில் மேற்கொள்ளப்பட்ட மிக அதிக மாதாந்திர காடழிப்பு இதுவாகும். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடும்போது, இது, 91 ச.கிலோமீட்டர் அதிகமாகும். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் வேளாண்மை மற்றும் சுரங்கப்பணிகளை ஆதரித்து, பொருளாதாரத்தை வளர்க்கும் பொருட்டு, பிரேசில் பிரதமர் இதற்கு ஆதரவாக இருந்துவருகிறார்.
Question 14
PM CARES நிதிய அறக்கட்டளையின் பதவிவழி தலைவர் யார்?
A
மத்திய நிதியமைச்சர்
B
பிரதம அமைச்சர்
C
மத்திய உள்துறை அமைச்சர்
D
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்
Question 14 Explanation: 
 PM கேர்ஸ் நிதியமானது பிரதம அமைச்சரை அதன் பதவிவழி தலைவராகக்கொண்டுள்ளது. இது, மத்திய பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் நிதியமைச்சகத்தின் அமைச்சர்களை அதன் பதவிவழி அறங்காவலர்களாகக் கொண்டுள்ளது. இவ்வாரியத்திற்கு மூன்று அறங்காவலர்களை நியமிக்கும் அதிகாரம் பிரதமருக்கு உண்டு. அண்மையில் இந்நிதியத்தின் தணிக்கையாளராக SARC அசோசியேட்சை மூன்றாண்டு காலத்துக்கு இந்நிதியத்தின் அறங்காவலர்கள் நியமித்தனர். பிரதமரின் அலுவலகம் PM CARES’இன் தலைமை அலுவலகமாகவும், அவ்வலுவலகத்தின் இரண்டு அதிகாரிகள் அந்நிதியத்தின் கௌரவப்பதவியின் அடிப்படையிலும் இருந்து நிர்வகிப்பார்கள்.
Question 15
NASA’இன் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் பயணத்திட்டத்தின் முதல் பெண் தலைமையாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
ஜெசிகா மீர்
B
கேத்தி லூடர்ஸ்
C
கிறிஸ்டினா கோச்
D
ஆன் மெக்லைன்
Question 15 Explanation: 
 அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA, மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் தனது பயணத்திட்டத்தின் முதல் பெண் தலைமையாக கேத்தி லூடர்சை தேர்ந்தெடுத்துள்ளது. சமீபத்தில், ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 விண்கலத்தில், இரு விண்வெளி வீரர்களை NASA பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக அனுப்பியிருந்தது. அதன் அடுத்த திட்டமானது, 2024ஆம் ஆண்டளவில் மனிதர்களை நிலவில் தரையிறக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது வணிகக் குழுவின் திட்டமேலாளராக இருந்துவரும் கேத்தி லூடர்ஸ், NASA’இன் மனித ஆய்வு மற்றும் செயல்பாட்டு திட்ட இயக்குநரகத்தின் அடுத்த இணை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Question 16
நடப்பாண்டின் (2020) பன்னாட்டு வெளிறல் நோய் விழிப்புணர்வு நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Made To Shine
B
Made to Outperform
C
Albinism Achievers
D
Succeed with Albinism
Question 16 Explanation: 
 உலகெங்கும் வெளிறல் நோயுடன் வாழும் மனிதர்களின் மனித உரிமைகளைக்கொண்டாடுவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.13 அன்று பன்னாட்டு வெளிறல் நோய் விழிப்புணர்வு நாள் (International Albinism Awareness Day) அனுசரிக்கப்படுகிறது. “Made To Shine” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்தச் சிறப்புநாளுக்கான கருப்பொருளாகும். அல்பினிசம் என்பது தோல், முடி மற்றும் கண்களில் நிறமி முழுமையாகவோ / பகுதியாகவோ இல்லாததால் மனிதர்களில் காணப்படும் ஒரு பிறவிநோயாகும்.
Question 17
கோழிவளர்ப்புக்கொள்கை, 2020’ஐயும் கோழிப்பண்ணைசார் நடவடிக்கைகளுக்கு மானியத்தையும் அறிவித்துள்ள இந்திய மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச அரசு எது?
A
தமிழ்நாடு
B
ஜம்மு & காஷ்மீர்
C
ஹிமாச்சல பிரதேசம்
D
சிக்கிம்
Question 17 Explanation: 
 கோழிப்பண்ணைகள் நிறுவலை ஊக்குவிப்பதற்காக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு, 2020ஆம் ஆண்டுக்கான J&K கோழிவளர்ப்புக்கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. கறிக்கோழி / முட்டைக் கோழி மற்றும் பிற கோழிவளர்ப்புடன் தொடர்புடைய நடவடிக்கைகளை நிறுவுவதற்கு மானியம் வழங்குவதற்காக ஆண்டுக்கு `50 கோடி வரை நிதி ஒதுக்கப்படும் எனவும் அவ்வரசு தெரிவித்துள்ளது. கோழி வளர்ப்பு மற்றும் அதுதொடர்புடைய உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்காக, `900 கோடி வரை அவ்வரசு செலவிட்டுவருகிறது. வணிகரீதியிலான கோழிப்பண்ணைகளுக்கு கடன் மற்றும் வட்டிசலுகைகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Question 18
நடுவணரசு தொடங்கியுள்ள நலவாழ்வு விநியோகச்சங்கிலித் தளத்தின் பெயர் என்ன?
A
பாரத் ஆரோக்கியா
B
ஆரோக்கியபாத்
C
ஆரோக்கியமே செல்வம்
D
COVID பராமரிப்பு
Question 18 Explanation: 
 புதிய நலவாழ்வு விநியோகச்சங்கிலித் தளத்தை, “ஆரோக்கியபாத்” என்ற பெயரில் மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையதளத்தை அறிவியல் & தொழிலக ஆராய்ச்சிக்கழகம் (CSIR) அறிமுகப்படுத்தியுள்ளது. உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் மிக்க நலம்சார்பொருட்களின் நிகழ்நேர கிடைப்பை அளிப்பதே இதன் நோக்கமாகும்.  தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, முக்கியத்துவம் மிக்க நலம்சார் பொருட்களைப் பற்றி அறிந்துகொள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்தப்பொதுநலவாழ்வு இணையதளம் உதவும்.
Question 19
நடப்பாண்டில் (2020) வரும், உலக குருதிக்கொடை நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Safe Blood Saves Lives
B
Encourage Blood Donation
C
Blood Donors are Angels
D
Resources for Blood Collection
Question 19 Explanation: 
 பாதுகாப்பான குருதி & குருதித்தயாரிப்புகளின் தேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், குருதிக் கொடையாளிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்குமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.14 அன்று உலக குருதிக்கொடை நாள் (World Blood Donor Day) கடைப்பிடிக்கப்படுகிறது. “Safe Blood Saves Lives” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்
Question 20
மருத்துவப்பரிசோதனை மேற்கொள்வதற்காக, ‘கேப்டன் அர்ஜுன்’ என்ற எந்திர மனிதனை அறிமுகம் செய்துள்ள இந்திய பாதுகாப்புப்படை எது?
A
இரயில்வே பாதுகாப்புப் படை
B
மத்திய தொழிலக பாதுகாப்புப் படை
C
மத்திய சேமக்காவல் படை
D
எல்லைப்பாதுகாப்புப் படை
Question 20 Explanation: 
 இரயிலில் ஏறும் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதற்காக, ‘கேப்டன் அர்ஜுன்’ என்ற எந்திர மனிதனை புனேவைச் சார்ந்த இரயில்வே பாதுகாப்புப்படை அறிமுகப்படுத்தியுள்ளது. “Always be Responsible and Just Use to be Nice” என்பதன் சுருக்கந்தான் ARJUN. இது, இயக்கவுணரி, PTZ (Pan, Tilt, Zoom) நிழற்படக்கருவி & குவிமுக நிழற்படக்கருவி ஆகியவற்றைக்கொண்டுள்ளது.  வெப்பமேவலையும் (thermal scanning) இதனால் செய்யவியலும். மேலும் உணரி அடிப்படையிலான தூய்மையாக்கி மற்றும் முகக்கவசவழங்கியையும் இது தன்னிடத்து கொண்டுள்ளது. ஐயத்திற்கிடமான செயல்பாடு மற்றும் சமூக விரோத செயல்களைக் கண்காணிப்பதற்கு இது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது.
Question 21
உலக மூத்தோர் இழித்தல் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
A
ஜூன் 12
B
ஜூன் 13
C
ஜூன் 14
D
ஜூன் 15
Question 21 Explanation: 
 மூத்தோர் மீதான வன்கொடுமைத் தாக்குதல் மற்றும் இழித்தலுக்கு எதிராக குரலை உயர்த்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.15 அன்று உலக மூத்தோர் இழித்தல் விழிப்புணர்வு தினம் (World Elder Abuse Awareness Day) கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு சமீபத்திய ஆய்வின்படி, அறுபது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையோர்களில் 15.7% பேர் ஏதேனும் ஒருவித இழித்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
Question 22
சமீபத்தில், எந்த மாநிலத்தில், ஆற்றில் புதையுண்ட ஐந்நூறாண்டுகள் பழமையான கோவில் மீண்டும் தென்பட்டது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
ஒடிசா
D
பீகார்
Question 22 Explanation: 
 19ஆம் நூற்றாண்டில் ஒடிசாவின் மகாநதி ஆற்றில் மூழ்கிய 500 ஆண்டுகள் பழமையான திருமால் கோவில், சுமார் 15 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தென்பட்டுள்ளது. ஆறு தனதுபோக்கை மாற்றியதன் காரணத்தால் இந்தக்கோவில் ஆற்றுநீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்திய தேசிய கலை மற்றும் கலாசார பாரம்பரிய அறக்கட்டளையின் தொல்பொருள் ஆய்வுக்குழுவானது நாயகர் மாவட்டத்தில் உள்ள அச்சிற்றூரை பார்வையிட்டு, ஆற்றின் நீர்மட்டம் குறையக்குறைய கோபிநாத் தேவ் கோவிலின் மேற்புறம் தெளிவாகத்தெரியும் எனக் கூறியது.
Question 23
இனவெறிக்கு எதிராக ஆணையம் ஒன்றை நிறுவவுள்ள நாடு எது?
A
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
B
ஐக்கியப் பேரரசு
C
ஆஸ்திரேலியா
D
பிரேசில்
Question 23 Explanation: 
 இங்கிலாந்தில் இன சமத்துவத்தின் நிலைகுறித்து ஆரய்வதற்காக ஓர் ஆணையம் நிறுவப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிசு ஜான்சன் அறிவித்துள்ளார். நிறுவப்படவுள்ள இந்த ஆணையம் பணிவாய்ப்பு, சுகாதார விளைவுகள், கல்வி, குற்றவியல் நீதி அமைப்பு மற்றும் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் உள்ள அனைத்து வகையான ஏற்றத்தாழ்வுகளையும் ஆராயும். மினியாபோலிஸில் ஜார்ஜ் பிலாய்ட் இறந்ததையடுத்து இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
Question 24
IGX எனப்படும் முதல் நாடு தழுவிய எரிவாயு வர்த்தக தளத்தை அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?
A
ஈராக்
B
ஈரான்
C
இந்தியா
D
இந்தோனேசியா
Question 24 Explanation: 
 இந்தியா அண்மையில் தனது முதல் நாடு தழுவிய எரிவாயு வர்த்தக தளத்தை, “Indian Gas Exchange -IGX” என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. இந்த முதல் இணையவழி விநியோக அடிப்படையிலான பரிமாற்றகத்தை, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் கட்டுப்படுத்தப்படும் ஓர் ஆற்றல் வர்த்தக பரிமாற்றகமான இந்திய ஆற்றல் பரிமாற்றகம் தொடங்கியுள்ளது. IGX, இந்திய ஆற்றல் பரிமாற்றகத்தின் ஒரு துணை நிறுவனமாக இணைக்கப்படும். சர்வதேச பரிமாற்றகமான GMEX’இன் தொழில்நுட்பத்தினூடாக இந்தத் தளம் இயக்கப்படுகிறது.
Question 25
பொதுத்துறை நிறுவனமான ALIMCOமூலம், ‘ADPI’ திட்டத்தை நடத்திய மத்திய அமைச்சகம் எது?
A
வேளாண்மை மற்றும் உழவர்நல அமைச்சகம்
B
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
C
உள்துறை அமைச்சகம்
D
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
Question 25 Explanation: 
 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் கருவிகளையும், உபகரணங்களையும் கட்டணமில்லாமல் விநியோகிப்பதற்காக, COVID-19 முடக்கநிலைக்காலத்தில், முதல்முறையாக மெய்நிகர் முகாம் ஒன்று நடுவணரசின் ADPI திட்டத்தின்கீழ், பஞ்சாபில் உள்ள பிரோஸ்பூர் மாவட்டத்தின் தல்வண்டி பாய் வட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தனது பொதுத்துறை நிறுவனமான செயற்கை மூட்டு உற்பத்தி நிறுவனத்தின் (ALIMCO) மூலம் ‘Assistance to Disabled persons for purchasing / fitting of aids / appliances - ADIP’ திட்டத்தை செயல்படுத்துகிறது.
Question 26
மின்னாளுகையை மேம்படுத்துவதற்காக தனது ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலகங்களில், ‘இ-ஆபிஸ்’ பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?
A
மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (CBIC)
B
இந்திய ரிசர்வ் வங்கி (RBI)
C
அயல்நாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT)
D
பணியாளர் வருங்கால வைப்பு நிதியம் (EPFO)
Question 26 Explanation: 
 மத்திய மறைமுகவரி மற்றும் சுங்கவாரியமானது (CBIC) இந்தியா முழுவதும் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய சரக்கு மற்றும் சேவை வரியை (CGST) செலுத்த அனைத்து சுங்க அலுவலகங்களில் இணைய அலுவலகத்தை (e-office) தொடங்கியுள்ளது.  இந்த இணைய-அலுவலகப் பயன்பாடு, தேசியத் தகவல் மையத்தால் (NIC) உருவாக்கப்பட்டதுடன் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுக்குறைகளுக்கான துறை (DARPG) ஆதரிக்கிறது. கோப்புகளை கையாளுவதற்கான உள்-செயல்முறைகளைத் தானியங்குபடுத்துவதன்மூலமும், அரசாங்கத்திற்குள் முடிவுகளை எடுப்பதன்மூலமும் நிர்வாகத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இப்பயன்பாட்டை பயன்படுத்துவார்கள்
Question 27
ஷார்ஜா வேர்ல்ட் ஸ்டார்ஸ் ஆன்லைன் செஸ் போட்டியில் இரண்டாமிடம் பிடித்த இந்திய வீரர் யார்?
A
P ஹரிகிருஷ்ணா
B
அதிபன்
C
கொனேரு ஹம்பி
D
ஹரிகா துரோணவள்ளி
Question 27 Explanation: 
 ஷார்ஜா வேர்ல்ட் ஆன்லைன் செஸ் போட்டியில், இந்திய செஸ் வீரரான P ஹரிகிருஷ்ணா இரண்டாம் இடத்தைப்பிடித்தார். சாக்ரியார் மாமேடியரோவ் பத்துக்கு 7.5 புள்ளிகள் எடுத்து ஆன்லைன் போட்டியில் வென்றார். போலந்து கிராண்ட்மாஸ்டர் ராடோஸ்லா வோஜ்தாசெக் மூன்றாமிடத்தை பிடித்தார்
Question 28
நடப்பாண்டில் (2020) வரும் பாலைவனமயமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான உலக நாளுக்கான (World Day to Combat Desertification and Drought) கருப்பொருள் என்ன?
A
Food.Feed.Fibre: Sustainable production and consumption
B
Combatting Drought in 2020
C
Cooperation in combatting Drought
D
No more desertification
Question 28 Explanation: 
 பாலைவனமயமாதலை தடுப்பதற்காக பன்னாட்டளவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள்குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூன்.17 அன்று பாலைவனமயமா -தல் மற்றும் வறட்சிக்கு எதிரான உலக நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. வலுவான சமுதாய ஈடுபாடு & ஒத்துழைப்புமூலம் நிலச்சீரழிவை தடுக்கமுடியும் என்பதை அனைவருக்கும் நினைவூட்டுவதற்கான ஒரு தனிப்பட்ட தருணமாக இந்நாள் அமைந்துள்ளது. “Food.Feed.Fibre: Sustainable production and consumption” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Question 29
சர்வதேச ‘குடும்பத்திற்கு பணமனுப்புதல்’ நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
A
ஜூன் 15
B
ஜூன் 16
C
ஜூன் 17
D
ஜூன் 18
Question 29 Explanation: 
 சர்வதேச ‘குடும்பத்திற்கு பணமனுப்புதல்’ நாளானது உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.16 அன்று கொண்டாடப்படுகிறது. “Remittances are a lifeline” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். தனிநபர்கள் (அ) கூட்டு நடவடிக்கைகள்மூலம் பணம் அனுப்புவதன் தாக்கத்தை அதிகரிக்கக்கூடிய வழிகளைக்கண்டறிய அரசாங்கங்கள், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு சமூகங்கள் ஆகியவற்றுக்கு இந்நாள் அழைப்புவிடுக்கிறது.
Question 30
ஐ.நா வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு அறிக்கையின்படி, அந்நிய நேரடி முதலீடுகளைப் பெறுவதில் கடந்த ஆண்டில் (2019) இந்தியா அடைந்த நிலை என்ன?
A
ஐந்து
B
ஏழு
C
ஒன்பது
D
பதினொன்று
Question 30 Explanation: 
 ஐ.நா. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பின் (UNCTAD) அண்மைய அறிக்கையின்படி, இந்தியா, கடந்த 2019ஆம் ஆண்டில் $51 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடுகளைப் பெற்றது. இதன்மூலம் அந்நிய நேரடி முதலீடுகளை (FDI) அதிகளவில் ஈர்த்த உலக நாடுகளின் வரிசையில் இந்தியா 9ஆவது பெரிய நாடாக இடம்பிடித்துள்ளது.  இந்தத்தரவரிசை, சமீபத்தில் வெளியான, ‘உலக முதலீட்டு அறிக்கை 2020’ என்ற UNCTAD’இன் முதன்மை அறிக்கையில் வெளியிடப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டான 2018’இல், $42 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்து இந்தியா 12ஆம் இடத்தைப்பிடித்திருந்தது. இந்தியாவின் சந்தை, தொடர்ந்து முதலீடுகளை ஈர்க்கும் என UNCTAD தெரிவித்துள்ளது
Question 31
AYUSH அமைச்சகத்தால் ஊக்குவிக்கப்பட்ட நடப்பாண்டு (2020) பன்னாட்டு யோகாநாளுக்கான பரப்புரைமொழி என்ன?  
A
Yoga at Home, Yoga with Family
B
Yoga during COVID-19
C
Yoga for immunity
D
Yoga for heart
Question 31 Explanation: 
 ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.21 அன்று உலகம் முழுமைக்கும் பன்னாட்டு யோகா நாள் கொண்டாடப்படு -கிறது. அத்தகைய முதல் கொண்டாட்டம், கடந்த 2015ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. நடப்பாண்டு (2020), ஜூன்.21 அன்று நடைபெற்ற பன்னாட்டு யோகா நாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, மத்திய ஆயுஷ் அமைச்சகம் அதன் பல்வேறு முன்னெடுப்புகளினூடாக, ‘வீட்டில் யோகா, குடும்பத்துடன் யோகா’ என்ற பரப்புரைமொழியுடன் யோகா பயிற்சியை ஊக்குவித்துவருகிறது. இது, உடல்நலம் கட்டமைத்தல் மற்றும் மனவழுத்தத்தைக் குறைக்கும் யோகாவின் அம்சங்களை சிறப்பிக்கின்றது
Question 32
TRIFED’இன் சமீபத்திய அறிவிப்பின்படி, வன் தன் சுய உதவிக்குழுக்கள் எவ்வளவு எண்ணிக்கையில் அதிகரிக்கப்படவுள்ளன?
A
10,000
B
20,000
C
30,000
D
50,000
Question 32 Explanation: 
 “வன் தன்: இந்தியாவில் மறுமலர்ச்சிபெறும் பழங்குடியினர் நிறுவனங்கள்” என்ற தலைப்பிலான இணையதளக் கருத்தரங்கு ஒன்றை TRIFED நிறுவனம் நடத்தியது. பிரதமரின் வன் தன் திட்டத்தை விரிவாக்கம் செய்ய மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் உத்தேசித்துள்ளது. இந்த அமைச்சகத்தின் COVID-19 நிவாரணத்திட்டத்தின் வாயிலாக, வன் தன் சுயவுதவிக்குழுக்களின் எண்ணிக்கையை, 18,000’இலிருந்து 50,000’ஆக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்வாயிலாக, காடுகளில் உள்ள வனப்பொருட்களை சேகரிக்கும் 10 இலட்சம் பழங்குடி மக்கள் பயன்பெறுவார்கள்.
Question 33
வாட்ஸ்அப் தனது, ‘வாட்ஸ்அப் பே’ வசதியை அறிமுகப்படுத்திய முதல் நாடு எது?
A
இந்தியா
B
பிரேசில்
C
ஆஸ்திரேலியா
D
தென் கொரியா
Question 33 Explanation: 
 பேஸ்புக்கிற்கு சொந்தமான சமூக ஊடக நிறுவனமான வாட்ஸ்அப் தனது, ‘WhatsApp Pay’ வசதியை முதன்முறையாக பிரேசிலில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஈராண்டுகட்கு முன்பு, வாட்ஸ்அப், இந்தியாவில் பணமனுப்பும் சேவையை சோதனை முறையில் தொடங்கியது; அது, அதன் பயனர்களுக்கு பணத்தை அனுப்பவும் பெறவும் உதவும் வசதியாகும். இருந்தபோதிலும், ஒழுங்குமுறை சிக்கல்கள் காரணமாக அதனை செயல்படுத்த முடியவில்லை. அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைத் தடுப்பதற்காக சிறப்பு 6 இலக்க PIN / கைரேகை அங்கீகாரத்துடன் கட்டண முறையை வாட்ஸ்அப் வடிவமைத்துள்ளது.
Question 34
உலக பொருளாதார மன்றத்தால் தொழில்நுட்ப முன்னோடியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய நிதியியல் துளிர் நிறுவனம் எது?
A
ZestMoney
B
Snapmint
C
PayU
D
CC Avenue
Question 34 Explanation: 
 உலக பொருளாதார மன்றம் (WEF) வெளியிட்டுள்ள தொழில்நுட்ப முன்னோடிகளின் புதிய பட்டியலில் ZestMoney & Stellapps என்ற இரண்டு இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. முன்னோடிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட 100 நிறுவனங்கள், உலக பொருளாதார மன்றத்தால் நடத்தப்படும் பயிலரங்குகள், நிகழ்வுகள் மற்றும் உயர்மட்ட விவாதங்களில் பங்கேற்க அழைக்கப்படும். வழக்கமான கடன் வழங்கல் முறைக்கு மாற்றாக ZestMoney பெறத்தக்க கடன்முறையில் கடன்களை வழங்குகிறது. Stellapps, ஒரு பால்பண்ணை சார்ந்த தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குகிறது.
Question 35
Schizothorax sikusirumensis என்ற புதிய வகை மீனினம் கண்டறியப்பட்டுள்ள மாநிலம் எது?
A
மேற்கு வங்கம்
B
மகாராஷ்டிரா
C
அருணாச்சல பிரதேசம்
D
கேரளா
Question 35 Explanation: 
 பசிகாட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு கல்லூரியின் விலங்கியல் துறைசார் குழு, அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரு புதிய மீனினத்தை கண்டுபிடித்துள்ளது. ’Schizothorax sikusirumensis’ என்று பெயரிடப்பட்ட இந்த மீன் ’Schizothorax’ இனத்தைச் சேர்ந்தது. இம்மீனினம் காணப்பட்ட ஆற்றின் பெயராலேயே இம்மீன் வழங்கப்பெறுகிறது. கிழக்கு சியாங் மாவட்டத்தின் சிகு மற்றும் சிரம் ஆற்றின் சந்திப்பில் இம்மீன் காணப்பட்டது.
Question 36
நடப்பாண்டுக்கான (2020) உலக போட்டித்திறன் குறியீட்டில் இந்தியாவின் தரநிலை (rank) என்ன?
A
37
B
41
C
43
D
47
Question 36 Explanation: 
 மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம் (IMD) தொகுத்த வருடாந்திர உலக போட்டித்திறன் குறியீட்டில் இந்தியா 43ஆவது இடத்தில் உள்ளது. முந்தைய பதிப்பில் பெறப்பட்ட அதே 43ஆவது தரநிலையை இந்தியா தக்கவைத்துக்கொண்டுள்ளது.  அறுபத்துமூன்று நாடுகளை உள்ளடக்கிய 2020 பட்டியலில், சிங்கப்பூர் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதைத்தொடர்ந்து டென்மார்க் மற்றும் சுவிச்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. இதில், சென்றமுறை மூன்றாமிடத்திலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் இந்த முறை சற்று சறுக்கி பத்தாம் இடத்திற்கு சென்றுள்ளது. உயர்தொழில்நுட்ப ஏற்றுமதி, வெளிநாட்டு நாணய இருப்பு போன்றவற்றில் இந்தியா மேம்பட்டிருந்தாலும், அது, பரிமாற்ற விகித நிலைத்தன்மை, மெய்யான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி (GDP) போன்ற பகுதிகளில் கெட்டுச் சீரழிந்த நிலையில் உள்ளது.
Question 37
COVID-19 நோய்த்தொற்றைக் கையாளுவதற்காக இந்தியாவுக்கு $750 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ள பன்னாட்டு நிதி நிறுவனம் எது?
A
பன்னாட்டு செலவாணி நிதியம்
B
ஆசிய உட்கட்டமைப்பு & முதலீட்டு வங்கி
C
உலக வங்கி
D
BRICS வங்கி
Question 37 Explanation: 
 COVID-19 தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை வலுப்படுத்த ஆசிய உட்கட்டமைப்பு & முதலீட்டு வங்கி (AIIB) $750 மில்லியன் டாலர் கூடுதல் கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இக்கடனை ஆசிய வளர்ச்சி வங்கியும் இணைந்தளிக்கும். முறைசாரா துறையில் வணிகத்தை உயர்த்துவதற்கும், தகுதியானவர்களுக்கு சமூகபாதுகாப்பை வழங்குவதற்கும், இந்தியாவின் பொதுநலவாழ்வுப்பாதுகாப்பு முறைகளை வலுப்படுத்துவதற்கும் இந்நிதி பயன்படுத்தப்படும்.
Question 38
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கால்வான் பள்ளத்தாக்கு அமைந்துள்ள இந்திய மாநிலம் / UT எது?
A
ஜம்மு – காஷ்மீர்
B
லடாக்
C
உத்தரகண்ட்
D
சிக்கிம்
Question 38 Explanation: 
 லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த ஒரு வன்முறை மோதலில், 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 35 சீனவீரர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கால்வான் பள்ளத்தாக்கை வான்படைத்தளத்துடன் இணைக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சாலைத்திட்டத்தை இந்தியா அண்மையில் மேற்கொண்ட காரணத்தால் இம்மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது
Question 39
விசாரணை மற்றும் அமலாக்க செயல்முறைகளை மேம்படுத்துவதற்கான தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ள SEBI’ஆல் அமைக்கப்பட்ட உயராற்றல்மிக்க குழுவின் தலைவர் யார்?
A
P K மொஹந்தி
B
AR தேவ்
C
U K சின்ஹா
D
N K சிங்
Question 39 Explanation: 
 சந்தை கட்டுப்பாட்டாளரின் விசாரணை மற்றும் அமலாக்க செயல்முறைகளை மேம்படுத்துவதற்காக SEBI’ஆல் அமைக்கப்பட்ட உயராற்றல் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்தக் குழுவுக்கு தலைமைதாங்கிய உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அனில் R தேவ் தனது விரிவான ஆய்வு அறிக்கையை SEBI’இடம் சமர்ப்பித்துள்ளார். இறுதி உத்தரவுகளை அனுப்புவதற்கான காலக்கெடுவை குறைத்தல், மீட்பு செயல்முறைகளை மேம்படுத்துதல், தண்டம் விதிக்கும்போது குற்றஞ்சாட்டப்பட்ட இலாபங்களை அளவிடுதல் மற்றும் SEBI விதிமுறைகள் மற்றும் திவால் நிலை மற்றும் திவால் குறியீடு ஆகியவற்றின் விதிமுறைகளிலும் இந்த அறிக்கை கவனம் செலுத்துகிறது.
Question 40
முதற்கட்டத்தில், கேலோ இந்தியா உயர்சிறப்பு மாநிலமையத்தை உருவாக்குவதற்காக விளையாட்டு அமைச்சகத்தால் எத்தனை மாநிலங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன?
A
ஐந்து
B
ஏழு
C
எட்டு
D
பதினொன்று
Question 40 Explanation: 
 மத்திய அரசின் விளையாட்டுத்துறை, தனது முன்னோடித்திட்டமான கேலோ இந்தியா திட்டத்தின்கீழ், கேலோ இந்தியா உயர்சிறப்பு மாநில மையங்களை அமைக்கத்திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் வலுவான விளையாட்டுச்சூழலை உருவாக்கும் நோக்கில், ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் தலா ஒரு கேலோ இந்தியா உயர்சிறப்பு மாநில மையங்களை அமைக்க அடையாளம் காணப்பட்டுள்ளது.  முதற்கட்டமமாக, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகாலாந்து உட்பட எட்டு மாநிலங்களில், அரசுக்குச்சொந்தமான விளையாட்டு அரங்கங்களை மத்திய விளையாட்டு அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது. இந்த விளையாட்டு அரங்கங்கள், கேலோ இந்திய உயர்சிறப்பு மாநில மையங்களாக மேம்படுத்தப்படவுள்ளன. விரிவான ஆய்வுக்குப் பிறகு, இந்த எட்டு மையங்களுக்கும் தேவையான நிதியுதவி வழங்கப்படும்.
Question 41
ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை யார்?
A
டூட்டி சந்த்
B
ஹிமா தாஸ்
C
முகமது அனஸ்
D
ஆரோக்கியா இராஜீவ்
Question 41 Explanation: 
 உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற நாட்டின் முதல் தடகள வீராங்கனையான ஹிமா தாஸ், மதிப்புமிக்க, ‘ராஜீவ்காந்தி கேல் ரத்னா’ விருதுக்கு அஸ்ஸாம் மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஹிமா தாஸ், அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள திங் கிராமத்தைச் சார்ந்த 20 வயது நிரம்பிய தடகள வீராங்கனையாவார். மேலும், நடப்பாண்டுக்கான நாட்டின் மிகவுயரிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இளம் விளையாட்டு ஆளுமைகளுள் ஒருவராகவும் அவருள்ளார்.
Question 42
2020 ஆக.31 முதல் செப்.13 முடிய, பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி எது?
A
ஆஸ்திரேலிய சாம்பியன்ஷிப்
B
US ஓப்பன் சாம்பியன்ஷிப்
C
விம்பிள்டன் சாம்பியன்ஷிப்
D
பிரஞ்சு ஓப்பன் சாம்பியன்ஷிப்
Question 42 Explanation: 
 அலுவல்பூர்வ உறுதிப்படுத்தலின்படி, US ஓப்பன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆகஸ்ட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. ஆக.31 முதல் செப்.13 முடிய நியூயார்க்கின் குயின்ஸில் பார்வையாளர்கள் இல்லாமல் இப்போட்டிகள் நடக்கும். நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ இதற்கு தனது முறையான ஒப்புதலை அளித்துள்ளார். பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்படும்.
Question 43
நான்காவது ஆசிய இளையோர் பாரா விளையாட்டுகள் நடைபெறவுள்ள நாடு எது?
A
ஐக்கிய அரபு நாடுகள்
B
பஹ்ரைன்
C
தாய்லாந்து
D
இந்தியா
Question 43 Explanation: 
 அண்மையில், நான்காவது பஹ்ரைன் ஆசிய இளையோர் பாரா விளையாட்டுகள் அடுத்த ஆண்டு டிச.1 முதல் 10 வரை நடத்தும் என ஆசிய பாராலிம்பிக் குழுமம் அறிவித்துள்ளது. பஹ்ரைன் ஒரு பாராலிம்பிக் நிகழ்வை நடத்துவது இதுவே முதல்முறையாகும். இப்போட்டிகள், கலீபா ஸ்போர்ட்ஸ் சிட்டி மற்றும் ஈசா ஸ்போர்ட்ஸ் சிட்டி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன. ஒன்பது வெவ்வேறு விளையாட்டுகளில், இருபது வயதிற்குட்பட்ட எண்ணூறு விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Question 44
BP புள்ளிவிவர மதிப்பாய்வின்படி, 2019ஆம் ஆண்டில், எரிசக்தி நுகர்வின் அடிப்படையில் இந்தியாவின் தரநிலை என்ன?
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
D
ஐந்து
Question 44 Explanation: 
 அண்மையில் வெளியிடப்பட்ட BP புள்ளிவிவர மதிப்பாய்வின்படி, 2019ஆம் ஆண்டில் இந்தியாவின் எரிசக்தி நுகர்வு சீனா (141.70 EJ) மற்றும் அமெரிக்கா (94.65 EJ) ஆகிய நாடுகளை அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது. உலகின் எரிசக்தி நுகர்வானது 583.90 எக்சாஜூல்ஸாக (EJ) உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவின் நுகர்வு 2.3% அதிகரித்து 34.06 EJ ஆக உள்ளது. இந்த வளர்ச்சி, கடந்த 2018’இல் காணப்பட்ட 5.2 சதவீதத்தைவிடக்குறைவாகும். கடந்த 2019ஆம் ஆண்டில் சீனாவை அடுத்து, உலகின் முதன்மை எரிசக்தி நுகர்வின் இரண்டாவது பெரிய வளர்ச்சியை இந்தியா கொண்டுள்ளது.
Question 45
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக பிரதம அமைச்சரால் தொடங்கப்படவுள்ள கிராமப்புற பொதுப்பணித்திட்டத்தின் பெயரென்ன?
A
கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான்
B
பிரதமர் ரோஜ்கர் அபியான்
C
ரோஜ்கர் புரோத்சகான் யோஜனா
D
பிரதமர் ஷ்ரமிக் அபியான்
Question 45 Explanation: 
 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பீகாரில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து, ‘கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான்’ என்ற பெயரில் `50,000 கோடி மதிப்பிலான பணிவாய்ப்புத்திட்டத்தை தொடங்கிவைத்தார். COVID-19 நோய்த்தொற்று காரணமாக மேற்கொள்ளப்பட்ட பொதுமுடக்கத்தின்போது, தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வருவாய் ஆதரவை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.  இது முதன்மையாக பீகார், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், இராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய ஆறு மாநிலங்களில் கவனம் செலுத்தும். இந்தத் திட்டம், 116 மாவட்டங்களைச்சார்ந்த 25,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 125 நாட்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
Question 46
ஐ.நா பொது அவையின் 75ஆவது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
A
கீதா கோபிநாத்
B
வோல்கன் போஸ்கிர்
C
மசாட்சுகு அசகாவா
D
டேவிட் மால்பாஸ்
Question 46 Explanation: 
 அண்மையில் துருக்கிய தூதர் வோல்கன் போஸ்கிரை ஐ.நா பொது அவை அதன் தலைவராக தேர்வு செய்தது. பொது அவைக்கு தலைமைதாங்கிய முதல் துருக்கிய நாட்டவர் இவர். இந்த முடிவு செப்டம்பர் மாதம் கூடவுள்ள 75ஆவது ஐ.நா பொது அவைக்கு முன்னதாக எடுக்கப்பட்டுள்ளது. வோல்கன் போஸ்கிர், துருக்கிய நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் குழுவின் தலைவராக பணியாற்றி வருகிறார். அவர், துருக்கியின் ஐரோப்பிய விவகாரங்கள் அமைச்சராகவும், தலைமை பேச்சுவார்த்தையாளராகவும் பணியாற்றியுள்ளார். 2020 செப்டம்பரில் பதவியேற்கவுள்ள அவர் ஓராண்டுக்கு அப்பதவியை வகிப்பார்.
Question 47
கிராமப்புறங்களில் சோதனை அணுகலை மேம்படுத்துவதற்காக, சுகாதார அமைச்சரால் தொடங்கப்பட்ட முதல் நடமாடும் COVID-19 பரிசோதனை ஆய்வகத்தின் பெயரென்ன?
A
I–Lab
B
Bharat Lab
C
Co–Lab
D
Gram Lab
Question 47 Explanation: 
 இந்தியாவின் ஊரக மற்றும் எளிதில் செல்லவியலாத இடங்களில் COVID-19 பரிசோதனை செய்யும் நாட்டின் முதல் I-பரிசோதனைக்கூடத்தை (தொற்றுநோய் பரிசோதனை மையம்) மத்திய அறிவியல் & தொழில்நுட்பம், புவி அறிவியில் மற்றும் நலவாழ்வு & குடும்பநலத்துறை அமைச்சர் Dr. ஹர்ஷ் வர்தன் தொடங்கிவைத்தார்.  COVID-19 அவசரகால உத்திகளின்கீழ், இத் தொற்றுநோய் கண்டறியும் ஆய்வகம் (I-LAB), அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித்தொழினுட்பத்துறையின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நடமாடும் ஆய்வகம், நாட்டின் தொலைதூர மற்றும் அணுகவியலாத பகுதிகளில் பயன்படுத்தப்படும். இது, ஒரு நாளுக்கு, 25 RT-PCR சோதனைகளையும் 300 ELISA சோதனைகளையும் செய்யும்.
Question 48
‘பத்மஸ்ரீ’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள IM விஜயனுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
A
மட்டைப்பந்து
B
கால்பந்து
C
ஹாக்கி
D
டேபிள்–டென்னிஸ்
Question 48 Explanation: 
 நாட்டின் நான்காவது மிகவுயர்ந்த சிவில் விருதான ‘பத்மஸ்ரீ’ விருதுக்கு முன்னாள் வீரர் IM விஜயன் அவர்களின் பெயரை அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF), அண்மையில் பரிந்துரைத்துள்ளது. 90’களின் முற்பகுதியில் அறிமுகமானதிலிருந்து, இந்தியாவுக்காக 79 போட்டிகளில் 40 கோல்களை அவர் அடித்துள்ளார். 2003ஆம் ஆண்டில் அவருக்கு மதிப்புமிக்க அர்ஜுனா விருதும் வழங்கப்பட்டது. பைசுங் பூட்டியா, சுனில் சேத்ரி உள்ளிட்ட ஆறு இந்திய கால்பந்து வீரர்கள் இதற்குமுன்னர், ‘பத்மஸ்ரீ’ விருதை பெற்றுள்ளனர்.
Question 49
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நெறிமுறை அலுவலராகவும், ஒழுங்காணையராகவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
D K ஜைன்
B
செளரவ் கங்குலி
C
ஜே ஷா
D
W V இராமன்
Question 49 Explanation: 
 முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான D K ஜைன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நெறிமுறை அலுவலராகவும், ஒழுங்காணையராகவும் (ombudsman) மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். BCCI’இன் முதல் ஒழுங்காணையராக நியமிக்கப்பட்ட D K ஜைன், பின்னர் கூடுதலாக நெறிமுறை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2020 பிப்ரவரி.29 அன்று முடிவடைந்தது. ஆனால், அவரது நியமனம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. COVID-19 தொற்றுநோய் பரவல் காரணமாக, ஒழுங்காணையரானவர் தனது விசாரணைகளை மெய்நிகராக மேற்கொள்வார்.
Question 50
வதவன் துறைமுகம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இந்திய மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
A
குஜராத்
B
மகாராஷ்டிரா
C
மேற்கு வங்கம்
D
கேரளா
Question 50 Explanation: 
 மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் `65,544 கோடி செலவில் வதவன் துறைமுகத்தை கட்ட கடந்த பிப்ரவரி மாதத்தில் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அண்மையில், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், பால்கர் மாவட்டத்தில் வதவனை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன்மிக்க தகானு வட்டாரத்தில் ஒரு தொழிலாக துறைமுகங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்று கூறியுள்ளது. ஜவகர்லால் நேரு துறைமுகத்தை ஒரு முன்னணி பங்காளியாகக்கொண்டு இந்தத் துறைமுகம் உருவாக்கப்படவுள்ளது.
Question 51
உலக நீடித்த அறுசுவை உணவியல் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
A
ஜூன் 18
B
ஜூன் 19
C
ஜூன் 20
D
ஜூன் 21
Question 51 Explanation: 
 நீடித்த அறுசுவை உணவியல் ஆற்றக்கூடிய பாத்திரத்தை நோக்கி உலகின் கவனத்தைக் குவிப்பதற் -காக, ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.18ஆம் தேதியன்று உலக நீடித்த அறுசுவை உணவியல் நாள் (World Sustainable Gastronomy Day) அனுசரிக்கப்படுகிறது. அனைத்து பண்பாடுகளும் நாகரிகங்களும் நீடித்த வளர்ச்சியின் பங்காளர்களாக உள்ளன என்பதை இந்நாள் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
Question 52
ஐ.நா பாதுகாப்புக் குழுமத்தின் 2021 ஆகஸ்டுக்கான தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள நாடு எது?
A
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
B
சீனா
C
இந்தியா
D
நார்வே
Question 52 Explanation: 
 ஐ.நா. பாதுகாப்புக்குழுமத்தின் தலைமைப்பொறுப்பை 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இந்தியா ஏற்கவுள்ளது. பாதுகாப்புக்குழுமத்தின் நிரந்தரமற்ற உறுப்பினராக எட்டாவது முறையாக இந்தியா அண்மையில் தெரிவானது. வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஐ.நா பாதுகாப்புக்குழுமத்தின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா செயல்படவுள்ளது.  ஐ.நா. பாதுகாப்புக்குழுமத்தின் ஐந்து நிரந்தர உறுப்புநாடுகளும், பத்து நிரந்தரமற்ற உறுப்புநாடுகளும் உள்ளன. நிரந்தரமற்ற உறுப்புநாடுகளின் பதவிக்காலம் ஈராண்டுகள் ஆகும். பாதுகாப்புக்குழுமத்தின் தலைமைப்பொறுப்பை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு உறுப்புநாடு ஏற்கும். பாதுகாப்புக்குழுமத்தின் 15 உறுப்பு நாட்டுப்பெயர்களுடைய ஆங்கில எழுத்துருவின் அகரவரிசைப்படி ஒவ்வொரு மாதத்துக்கான தலைமைப்பொறுப்பு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
Question 53
$150,000 டாலர் பரிசுத்தொகைகொண்ட செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள முதல் இந்தியர் யார்?
A
B ஆதிபன்
B
P ஹரிகிருஷ்ணா
C
பிரக்ஞானந்தா
D
சசி கிரண்
Question 53 Explanation: 
 $150,000 டாலர் மதிப்புடைய செஸ்ஸபிள் மாஸ்டர்களுடன் தொடரும் மில்லியன் டாலர் மேக்னஸ் கால்சன் செஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் முதல் இந்தியராக இந்திய கிராண்ட்மாஸ்டர் P ஹரி கிருஷ்ணா உள்ளார். செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் என்பது 12 வீரர்கள் பங்கேற்கும் போட்டியாகும். இதில், நார்வேயின் மேக்னஸ் கால்சன், சீனாவின் லிங் டைரன் மற்றும் அமெரிக்காவின் பேபியானோ கருவானா உள்ளிட்ட தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள உலகின் முதல் 6 வீரர்கள் விளையாட உள்ளனர். இந்தக்களம், தலா ஆறு வீரர்களைக்கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது
Question 54
“சிறார்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதற்கான உலகளாவிய நிலையறிக்கை 2020”இன் படி, சிறார்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை அமல்படுத்தும் நாடுகளின் சதவீதம் என்ன?
A
87%
B
47%
C
27%
D
17%
Question 54 Explanation: 
 நடப்பாண்டுக்கான (2020) “சிறார்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதில் உலகின் நிலை குறித்த அறிக்கை”யானது உலக நலவாழ்வு அமைப்பு, UNICEF, UNESCO, குழந்தைளுக்கு எதிரான வன்முறை மற்றும் கூட்டு வன்முறையைத் தடுத்தல் தொடர்பான ஐ.நா பொதுச்செயலாளரின் சிறப்பு பிரதிநிதி ஆகியோரால் வெளியிடப்பட்டது. அறிக்கையின்படி, உலகின் சரிபாதி குழந்தைகளில், சுமார் ஒரு பில்லியனுக்கும் மேலானோர் உடல், பாலியல் அல்லது உளவியல் வன்முறை, காயங்கள் மற்றும் இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். கிட்டத்தட்ட 88% நாடுகளில் சிறார்களைப் பாதுகாக்க சட்டங்கள் இருந்தாலும், அவற்றுள் 47% மட்டுமே சட்டங்களை கடுமையாக அமல்படுத்துகின்றன.
Question 55
ஐக்கிய நாடுகள் அவையின் எந்த நிறுவனம், “புலம்பெயர்வு குறித்த ஆண்டறிக்கை” என்ற தலைப்பில் தனது அறிக்கையை வெளியிடுகிறது?
A
பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு
B
ஏதிலிகளுக்கான ஐ.நா உயராணையரகம்
C
உலக சுற்றுலா அமைப்பு
D
உலக நலவாழ்வு அமைப்பு
Question 55 Explanation: 
 ஏதிலிகளுக்கான ஐ.நா உயராணையரகம் தனது “புலம்பெயர்வு தொடர்பான ஆண்டு அறிக்கை”யை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையின்படி, உலகளவில் 2019ஆம் ஆண்டின் இறுதியில் கிட்டத்தட்ட 80 மில்லியன் மக்கள் வலுக்கட்டாயமாக புலம்பெயர்ந்துள்ளனர். போர், வன்முறை, துன்புறுத்தல் மற்றும் பிற அவசரநிலைகள் புலம்பெயர்வுக்கான முக்கிய காரணங்களாக கூறப்பட்டுள்ளன.  இந்த எண்ணிக்கை, கடந்த பத்தாண்டுகாலத்தின் மொத்த எண்ணிக்கையைவிட இருமடங்காகும். கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் கூடுதலாக 11 மில்லியன் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
Question 56
பன்னாட்டு யோகா நாளைக் குறிக்கும் வகையில், ‘பாரத்: ஒரு கலாச்சார பொக்கிஷம்’ என்ற தலைப்பில் ஒரு சிறப்பு அமர்வை நடத்திய மத்திய அமைச்சகம் எது?
A
கலாச்சார அமைச்சகம்
B
சுற்றுலா அமைச்சகம்
C
வெளியுறவு அமைச்சகம்
D
உள்துறை அமைச்சகம்
Question 56 Explanation: 
 சுற்றுலா அமைச்சகமானது ஜூன்.15 முதல் யோகா நாளை ஒரு வாரகாலத்திற்கு கொண்டாடுகிறது. இது, யோகா செய்வதை மையமாகக்கொண்ட சமூக ஊடக செயற்பாடுகளை, “வீட்டில் யோகா மற்றும் குடும்பத்துடன் யோகா” என்ற கருப்பொருளின்கீழ் தொடங்கியுள்ளது. ‘உங்கள் நாட்டைப் பாருங்கள்’ என்ற திட்டத்தின்கீழ், ‘பாரத்: ஒரு கலாச்சார பொக்கிஷம்’ என்ற சிறப்பு அமர்வையும் மத்திய சுற்றுலா அமைச்சகம் நடத்தியது. பிரபல பங்கேற்பாளர்களுடன் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலத் சிங் படேல் அவர்களும் இந்த அமர்வில் கலந்துகொண்டார்.
Question 57
COVID-19 நோய்த்தொற்றுக்கான ‘Viral Transport Media (VTM)’ கருவிகள் எனப்படும் மலிவுவிலை நோயறியுங்கருவிகளை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?
A
IISc, பெங்களூரு
B
IIT, மெட்ராஸ்
C
IIT, கெளகாத்தி
D
AIIMS
Question 57 Explanation: 
 கெளகாத்தி இந்திய தொழில்நுட்பக்கழகம், R R விலங்குநலப் பராமரிப்பு நிறுவனம், மற்றும் கெளகாத்தி மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை ஆகியவை இணைந்து நோய்த்தொற்றைக்கண்டறியும் மலிவு விலையிலான கருவிகளை உருவாக்கியுள்ளது. இவை, ‘வைரல் டிரான்ஸ்போர்ட் மீடியம்’ கருவிகள், RT-PCR கருவிகள் மற்றும் RNA தனிமைப்படுத்தும் கருவிகளாகும்.  இக்கருவிகள் நோய்த்தொற்றை முதலில் கண்டறிந்துத் தடுக்கும் சாதனமாகும். இதனைப் பயன்படுத்தி மூக்கு மற்றும் வாய்வழியாக மென்துணியால் மாதிரிகளை ஒரு தனிப்பட்ட நபரிடமிருந்து சேகரித்து, பாதுகாப்பாக ஆய்வகத்திற்குக் கொண்டுசென்று திசுக்கள், கிருமிகள் பராமரிப்பு & சோதனைக்காக பயன்படுத்தப்படும்.
Question 58
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘SATYABHAMA’ இணையதளம், எந்தத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?
A
பருவநிலை மாற்றம்
B
சுரங்கப்பணி
C
வைராலஜி
D
தொற்றுநோய்
Question 58 Explanation: 
 சுரங்கத்துறையில் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான அறிவியல் தொழில்நுட்பத்திட்டத்திற் -கான, SATYABHAMA (Science&Technology Yojana for Aatmanirbhar Bharat in Mining Advancement) என்ற இணையதளத்தை, மத்திய சுரங்க அமைச்சகத்தின் அறிவியல் தொழில்நுட்பத் திட்டத்தின்கீழ் நிலக்கரி, சுரங்கங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தொடங்கிவைத்தார். இவ்வலை தளம், சுரங்கத் தகவல் பிரிவின் தேசிய தகவல் மையத்தால் வடிவமைத்து செயல்படுத்தப்படுகிறது.  தற்போது ஆராய்ச்சித் திட்டங்களுக்கான அறிக்கைகள் ஆராய்ச்சியாளர்களால் நேரில் சமர்ப்பிக்கப்படுகி -ன்றன. SATYABHAMA இணையதளம்மூலம் திட்டங்களை ஆன்லைனிலேயே சமர்ப்பிக்க முடியும். திட்டங்களைக் கண்காணிப்பது, நிதி மற்றும் மானியங்கள் பயன்படுத்தப்படுவது ஆகியவை குறித்த தகவல்களும், இவ்விணையதளத்தில் இருக்கும்.
Question 59
உலக அரிவாள் செல் நாள் (World Sickle Cell Day) அனுசரிக்கப்படுகிற தேதி எது?
A
ஜூன் 19
B
ஜூன் 20
C
ஜூன் 21
D
ஜூன் 22
Question 59 Explanation: 
 அரிவாள் செல் நோய் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூன்.19 அன்று உலக அரிவாள்செல் நாள் அனுசரிக்கப்படுகிறது. அரிவாள் செல் நோய் என்பது இரத்தசோகையின் ஒரு மரபுவழி வடிவமாகும். இதில் இரத்த சிவப்பு அணுக்கள் உடல் முழுவதும் போதுமான உயிர்வளியை எடுத்துச்செல்ல முடியாத நிலையிலிருக்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சையளிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு பரப்புரைகளை / திட்டங்களை நடத்தியும் செயல்படுத்தியும் வருகிறது. நடப்பாண்டில் (2020) வரும் இந்த அரிவாள் செல் நாள், அரிவாள் செல் சங்கம் கடைப்பிடிக்கும் 40ஆவது ஆண்டுநாளாகும்.
Question 60
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Swift J1818.0-1607’ என்றால் என்ன?
A
நியூட்ரான் விண்மீன்
B
கருந்துளை
C
வெள்ளை குள்ள விண்மீன்
D
நெபுலா
Question 60 Explanation: 
 அண்மையில், NASA மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவற்றில் உள்ள வானியலாளர்கள் குழு, ‘Swift J1818.0-1607’ என்ற நியூட்ரான் விண்மீனைக் கண்டுபிடித்தது. இந்த நியூட்ரான் விண்மீன் சுமார் 240 வயதுடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முதன்முதலில், 2020 மார்ச்சில், X கதிர்களை வெளியிட்டபோது கண்டுபிடிக்கப்பட்டது.  நியூட்ரான் விண்மீன்கள் என்பன மிகச்சிறியதும் அடர்த்தியானதுமான விண்மீன்களாகும். NASA’இன் கூற்றுப்படி, ‘Swift J1818.0-1607’, சூரியனின் இருமடங்கு நிறையைக்கொண்டுள்ளது
Question 61
‘மைசியஸ் - Micius’ என்னும் குவாண்டம் தகவல்தொடர்பு செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?
A
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
B
சீனா
C
இரஷ்யா
D
இஸ்ரேல்
Question 61 Explanation: 
 ‘மைசியஸ்’ என்னும் உலகின் முதல் குவாண்டம் தகவல்தொடர்பு செயற்கைக்கோளானது சீனாவால் கடந்த 2016ஆம் ஆண்டில் ஏவப்பட்டது. இது குவாண்டம் குறியாக்கத் (Quantum Encryption) துறையில் முன்னோடியாக உள்ளது.  உலகின் மிகவும் பாதுகாப்பான தகவல்தொடர்பு இணைப்பை நிறுவுவதற்கு, புவிக்கு ஒளியின் துகள்களை அனுப்புவதால், இச்செயற்கைக்கோள், அண்மையச் செய்திகளில் இடம்பெற்றது. பாரம்பரிய தகவல்தொடர்பு செயற்கைக்கோள்களின் உதவியின்றி நீண்டதொலைவுக்கு பாதுகாப்பான தகவல் தொடர்புகளைப் பெறமுடியும் என்பதால் இது ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. பாதுகாப்பான நீண்டதொலைவு இணைப்புகள் என்பன ‘குவாண்டம் இணையம்’ எனப்படும் எதிர்கால உலகளாவிய வலையமைப்பிற்கான அடித்தளமாக இருக்கும்.
Question 62
பெருங்கற்காலத்தில் நிலவிவந்த மறுமைகுறித்த நம்பிக்கையை வெளிப்படுத்திய கொடுமணல் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படுகிற மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகா
D
ஆந்திர பிரதேசம்
Question 62 Explanation: 
 தமிழ்நாட்டின் மாநில தொல்லியல் ஆய்வுக்குழுவானது ஈரோடு மாவட்டத்திற்கு அருகே மேற்கொண்டு வரும் கொடுமணல் அகழ்வாராய்ச்சியின்போது, 250 கற்குவைகளை அடையாளம் கண்டுள்ளது. ஒவ்வொரு கற்குவையைச்சுற்றிலும் பேரளவிலான கற்கள் வட்டமாக வைக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு கற்குவை மட்டும் முற்றத்துடன்கூடிய 2 அறைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.  இந்தக் கற்குவையில் இறந்தவரின் உடலை எரித்தபின்பு அவ்வெலும்புகளை ஓரறையிலும், மற்றோர் அறையில் இறந்தவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் வைத்துள்ளனர். இந்தவொரு கற்குவை மட்டும் ஏதாவது முக்கிய நபர் இறந்த கற்குவையாக இருக்கலாம். இதன் அருகில் ஈமச்சடங்கு செய்ய வைத்திருந்த பத்து மண் பானைகள் மண்ணில் புதைந்து காணப்படுகின்றன. மறுமையின் மீதான நம்பிக்கையின் காரணமாக தானியங்கள் நிரப்பப்பட்ட பானைகள் அவ்வறைகளுக்கு வெளியே வைக்கப்பட்டன. இது, பெருங்கற்காலத்தில் நிலவிவந்த மறுமைகுறித்த (இறந்தவர் மீண்டும் பிறப்பர் என்னும் நம்பிக்கை) நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.
Question 63
‘மோதலின்போதான பாலியல் வன்முறைகளை ஒழிப்பதற்கான பன்னாட்டு நாள்’ அனுசரிக்கப்படும் தேதி எது?
A
ஜூன் 19
B
ஜூன் 20
C
ஜூன் 21
D
ஜூன் 22
Question 63 Explanation: 
 மோதல்களின்போது மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகளை ஒரு முடிவுக்குக்கொண்டுவருவத -ற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், உலகம் முழுவதும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப் -பட்டு அதிலிருந்து தப்பிப்பிழைத்து வாழ்வோரை கெளரவிப்பதற்கும் மற்றும் இந்தக் குற்றங்களை ஒழித்துக்கட்டுவதற்காக தங்கள் இன்னுயிரை ஈந்தோருக்கு அஞ்சலி செலுத்தவதற்குமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.19 அன்று மோதலின்போதான பாலியல் வன்முறைகளை ஒழிப்பதற்கான பன்னாட்டு நாள் (International Day for the Elimination of Sexual Violence in Conflict) கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா. பாதுகாப்புக்குழுவின் ‘1820’ (2008) தீர்மானமானது கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன்.19ஆம் தேதியன்று ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் விதமாக இத்தேதி தேர்வுசெய்யப்பட்டது.
Question 64
துறைசார் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் யார்?
A
அமிதேஷ் குமார் சின்ஹா
B
ருச்சின் குப்தா
C
இராஜ்குமார் சிங்
D
கைலாஷ் செளத்ரி
Question 64 Explanation: 
 துறைசார் முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதற்காக மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஒரு திட்ட மேம்பாட்டு பிரிவை உருவாக்கியுள்ளது. இது, மத்திய புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் இணைச்செயலாளர் அமிதேஷ் குமார் சின்ஹா தலைமையிலானது. மேலும் பசுமை ஆற்றலுக்கான நாட்டின் 175 GW இலக்கை அடைவதற்கு இக்குழு உதவும். முதலீட்டாளர்கள் ஏற்றுக்கொள்வதற்கான அனைத்து முன் ஒப்புதல்களையுங்கொண்ட திட்டங்களை உருவாக்குவதை திட்ட மேம்பாட்டு பிரிவு நோக்கமாகக் கொண்டுள்ளது.
Question 65
‘தேசிய அரிவாள் செல் கருத்தரங்கம்’ என்ற தலைப்பில் ஓர் இணையவழிக் கருத்தரங்கை ஏற்பாடு செய்த மத்திய அமைச்சகம் எது?
A
சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்
B
வேளாண்மை மற்றும் உழவர்நல அமைச்சகம்
C
பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
D
அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்
Question 65 Explanation: 
 உலக அரிவாள் செல் நாளை முன்னிட்டு மத்திய பழங்குடியினர் நல அமைச்சகமும், FICCI’உம் மற்றும் இரண்டு தனியார் சுகாதார நிறுவனங்களும் இணைந்து, ‘தேசிய அரிவாள் செல் கருத்தரங்கம்’ என்ற தலைப்பில் ஓர் இணையவழிக் கருத்தரங்கை ஏற்பாடுசெய்தன. இதில் உரையாற்றிய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, அரிவாள் செல் தொடர்பான தேவையான தகவல்களை அளிக்கவும், புள்ளிவிவரங்களைச் சேகரிக்கவும், மத்திய அரசு புதிய இணையதளம் ஒன்றை அரசாங்கம் தொடங்கியுள்ளதாக அறிவித்தார்.  பதிவு செய்து கொள்வதற்கான வசதி, நோய்பற்றிய தகவல்கள், நோயை எதிர்கொள்வதற்காக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள், உடனுக்குடனான புள்ளிவிவரங்கள் கொண்ட அறிவிப்புப்பலகை ஆகிய அனைத்தும் இத்தளத்தில் உள்ளன. SCD நோயாளிகளுக்கு உதவுவதற்காக, ‘அதிரடி ஆராய்ச்சி’ என்னும் திட்டத்தை அமைச்சகம் தொடங்கியுள்ளது. ‘Stepping out of the shadows – Combating Sickle Cell Disease in India’ என்ற தலைப்பிலான அறிக்கையொன்றும் அப்போது வெளியிடப்பட்டது.
Question 66
அடல் புத்தாக்க இயக்கமானது அதன் புதுமைகள் மற்றும் தொழில்முனைவோருக்கான முயற்சிகளை மேம்படுத்துவதற்காக எந்தப் பொதுத்துறை நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ளது?
A
இந்திய எஃகு ஆணையம்
B
இந்திய நிலக்கரி நிறுவனம்
C
GAIL நிறுவனம்
D
NTPC நிறுவனம்
Question 66 Explanation: 
 இந்திய நிலக்கரி நிறுவனமானது (CIL) NITI ஆயோக் அமைப்பின் அடல் புத்த்தாக்க இயக்கத்தின் (AIM) திட்டத்தில் இணைந்து செயலாற்ற ஆதரவளித்துள்ளது. இதன்மூலம், நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளும் புத்தாக்கங்களைப் புகுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இந்தக் கொள்கை உத்தி அளவிலான நோக்க அறிக்கை, ஜூன். 19 அன்று நடந்த மெய்நிகர் மாநாட்டின்போது, அடல் புத்தாக்க இயக்கம் அமைப்புக்கும், இந்திய நிலக்கரி நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்திடப்பட்டது.
Question 67
‘நமஸ்தே யோகா’ என்ற தலைப்பில் நடப்பாண்டு (2020) பன்னாட்டு யோகா நாளைக்கொண்டாடிய மத்திய அமைச்சகம் எது?
A
AYUSH அமைச்சகம்
B
கலாச்சார அமைச்சகம்
C
வெளியுறவு அமைச்சகம்
D
இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
Question 67 Explanation: 
 எல்லோருடைய வாழ்விலும் யோகாவை இன்றியமையாத ஒருபகுதியாக மாற்றும் இலக்கை அடைய 2020 ஜூன்.19-21ஆம் தேதி வரை, ‘நமஸ்தே யோகா’ என்ற பிரச்சாரத்தை ஏற்பாடு செய்வதன்மூலம் கலாச்சார அமைச்சகம் நடப்பாண்டு (2020) பன்னாட்டு யோகா நாளைக் கொண்டாடுகிறது. இந்தச் சிறப்பு நாளை முன்னிட்டு, தனது வீட்டில் ‘கதிரவன் வணக்கம்’ செய்யப்போவதாகவும் அனைவரும் தன்னுடன் இணைந்து அவரவர் வீடுகளில், ‘கதிரவன் வணக்கம்’ செய்யவும் மத்திய கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலத் சிங் படேல் வேண்டுகோள் விடுத்தார்.
Question 68
சர்வதேச கதிர்த்திருப்ப கொண்டாட்ட நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
A
ஜூன் 19
B
ஜூன் 20
C
ஜூன் 21
D
ஜூன் 22
Question 68 Explanation: 
 ஐ.நா பொது அவையானது ஜூன்.21ஆம் தேதியை சர்வதேச கதிர்த்திருப்ப கொண்டாட்ட நாளாக அறிவித்துள்ளது. இந்தச் சிறப்புநாள், உலகெங்கிலும் உள்ள கலாச்சார பாரம்பரியத்தின் ஒற்றுமையைக் குறிப்பதாக கருதப்படுகிறது. கதிர்த்திருப்பம் என்பது சூரியன் தனது போக்கை வடக்கு அல்லது தெற்கு திசைக்கு மாற்றும் ஒரு நிகழ்வாகும். ஜூன்.21ஆம் தேதி கோடைகால கதிர்த்திருப்பமும் டிசம்பர்.21ஆம் தேதி குளிர்கால கதிர்த்திருப்பமும் என ஆண்டுக்கு இரண்டு கதிர்த்திருப்பங்கள் நிகழ்கின்றன
Question 69
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, மெராபி எரிமலை அமைந்துள்ள நாடு எது?
A
பிலிப்பைன்ஸ்
B
இந்தோனேசியா
C
வியட்நாம்
D
ஆஸ்திரேலியா
Question 69 Explanation: 
 மெராபி மலையானது இந்தோனேசிய நாட்டில் அமைந்துள்ள ஒரு எரிமலையாகும். அண்மையில் வெடித்துச் சிதறிய இந்த எரிமலை, சாம்பலையும் வெப்பம் மிகுந்த வாயுவையும் வெளியேற்றியதன் காரணத்தால் அண்மைச் செய்திகளில் இடம்பெற்றது. 2,968 மீட்டர் உயரங்கொண்ட இந்த எரிமலை, இந்தோனேஷியாவில் அதீத செயல்பாட்டில் உள்ள 500 எரிமலைகளுள் ஒன்றாகும். கடந்த ஆண்டு முதலே கரும்புகைகளை கக்கிவந்த இந்த மலை, கடைசியாக கடந்த 2010ஆம் ஆண்டில் வெடித்துச் சிதறி, சுமார் 353 பேர் மரணிக்க காரணமாக அமைந்தது.
Question 70
பள்ளிமாணாக்கர்களுக்காக, ‘ஏக்து கேலோ, ஏக்து பதோ’ என்ற பெயரில் புதியதொரு முன்னெடுப்பைத் தொடங்கவுள்ள மாநில அரசு எது?
A
ஒடிசா
B
திரிபுரா
C
அஸ்ஸாம்
D
சிக்கிம்
Question 70 Explanation: 
 பள்ளிமாணாக்கர்களின் கற்றல் செயல்முறையை மேம்படுத்துவதற்காக திரிபுரா மாநில அரசு, ‘ஏக்து கேலோ, ஏக்து பதோ’ என்ற பெயரில் ஒரு புதியதொரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம், ஜூன்.25 முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்கு தொடங்கப்படவுள்ளது.  மாநில வழிகாட்டுதல்களின்படி, தினமும் காலையில் மாணாக்கர்களுக்கு அலைபேசி வழியாக அவர்களுக்கான பாடங்கள் அனுப்பப்படும். அதன்பின், அவர்களின் செயல்திறன் குறித்த கருத்து, பிற்பகலில் சேகரிக்கப்படும். திரிபுரா மாநிலத்தில், 4733 அரசு பள்ளிகளில் ஐந்து இலட்சம் மாணாக்கர் கல்விபயின்று வருகின்றனர்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 70 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!