Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

June Current Affairs 2020 Online Test in Tamil

நடப்பு நிகழ்வுகள் -June 2020

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -June 2020. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மின் நிதிக்கழகமானது (PFC) நர்மதா படுகை திட்டங்களுடன் (NBPCL) இணைந்து எந்த மாநிலத்தின் மின் திட்டங்களுக்கு நிதியளிக்கவுள்ளது?
A
உத்தரபிரதேசம்
B
ஹிமாச்சல பிரதேசம்
C
பீகார்
D
மத்திய பிரதேசம்
Question 1 Explanation: 
 மத்திய எரிசக்தி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமும் இந்தியாவின் வங்கியல்லா முன்னணி நிதி நிறுவனமுமான மின் நிதிக்கழகம், மத்திய பிரதேச மாநில அரசுக்குச் சொந்தமான நர்மதா படுகை திட்டங்கள் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மத்திய பிரசேசத்தில் `22,000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ள 225 MW நீர்மின் திட்டங்கள் மற்றும் பல்நோக்குத்திட்டங்களுக்கு நிதி வழங்குவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  மத்திய பிரதேசத்தில், 225 MW நீர்மின் திட்டங்கள் மற்றும் மின் உபகரணங்களுக்கான 12 பெரிய பல்நோக்குத் திட்டங்களுக்கு NBPCL நிதியளிக்கிறது. இந்த ஒப்பந்தம்மூலம் செயல்படுத்தப்படவுள்ள பெரிய பல்நோக்குத்திட்டங்களுள் பசானியா பல்நோக்குத்திட்டம், திந்தோரி, சிங்கி போரசு பல்நோக்குத் திட்டம், நரசிங்பூர், ரைசன், ஹொசங்காபாத், சக்கர் பெஞ்ச் லிங்க் நரசிங்பூர் சிந்த்வாரா, துதி திட்டம் சிந்த்வாரா ஹொசங்காபாத் உள்ளிட்டவை அடங்கும்.
Question 2
‘Catch Up’ என்னும் செயலியை அறிமுகம் செய்துள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?
A
மைக்ரோசாப்ட்
B
பேஸ்புக்
C
அமேசான்
D
ஆப்பிள்
Question 2 Explanation: 
 பேஸ்புக் நிறுவனம் அண்மையில், ‘Catch Up’ என்னும் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, பயனர்களை இலவச தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. பேஸ்புக்கின் உள்ளக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவான NPE குழுவால் உருவாக்கப்பட்டுள்ள இப்பயன்பாடு, பயனர்களை ஒரே நேரத்தில் எட்டு பேருக்கு வரை அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது.  சேவையை ஒருங்கிணைக்க இது தொலைபேசியில் உள்ள பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்துகிறது. சோதனை முறை சேவையாக அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள இந்தச் சேவை, விரைவில் உலகம் முழுவதும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Question 3
‘Bev Q’ என்ற பெயரில், மெய்நிகரான வரிசை மேலாண்மை செயலியை அறிமுகப்படுத்தவுள்ள மாநில அரசு எது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
ஆந்திர பிரதேசம்
D
ஒடிசா
Question 3 Explanation: 
 கொச்சியைச் சார்ந்த துளிர்நிறுவனம் ஃபேர்கோடு டெக்னாலஜிஸ் உருவாக்கிய ‘Bev Q’ என்னும் மெய்நிகர் வரிசை மேலாண்மை செயலிக்கு, சமீபத்தில், இரண்டு நிலை சோதனைக்குப்பிறகு கூகிள் ஒப்புதல் அளித்தது. மதுக்கடைகளின் வரிசைகளை நிர்வகிக்க இச்செயலி செயல்படுத்தப்படவுள்ளது. வரிசை மேலாண்மை முறை அமல்படுத்தப்படும் வரை மதுக்கடைகள் திறக்கப்படாது என்று கேரள மாநில அரசு அறிவித்துள்ளது. மதுக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, கேரள மாநில பானங்கள் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து இணையவழியில் இதுகுறித்து பயிற்சியளிக்கப்பட்டுவருகிறது.
Question 4
புதிய பழங்களை இணையவழியில் விற்பனைசெய்வதற்காக, கர்நாடக மாநில மாம்பழ வாரியத்துடன் கூட்டிணைந்துள்ள மின்னணு-வணிகத்தளம் எது?
A
அமேசான்
B
பிளிப்கார்ட்
C
ஸ்னாப்டீல்
D
ஷாப்க்ளுஸ்
Question 4 Explanation: 
 கர்நாடக மாநில மாம்பழ மேம்பாடு & சந்தைப்படுத்தல் கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிளிப்கார்ட் கையெழுத்திட்டுள்ளது. இது, விவசாயிகள் தங்கள் புதிய பழங்களை ஆன்லைனில் விற்க உதவுகிறது. இந்த ஒப்பந்தத்தின்கீழ், இந்திய அஞ்சல் மையங்கள் விநியோகப் பங்காளராக செயல்படும். மாம்பழ வாரியம், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், விற்பனையாளர்கள், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள், பிளிப்கார்ட் தளத்தில் தங்களை இணைத்துக்கொள்வதன்மூலம் மாநிலம் முழுவதும் பல வகையான மாம்பழங்களை விற்கவியலும்
Question 5
எந்த மாநிலத்தின் சாலை வசதியை மேம்படுத்துவதற்காக, ஆசிய வளர்ச்சி வங்கி (ADB), அண்மையில் இந்தியாவுடனான $177 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
A
மத்திய பிரதேசம்
B
ஆந்திர பிரதேசம்
C
மகாராஷ்டிரா
D
மேற்கு வங்கம்
Question 5 Explanation: 
 மகாராஷ்டிரா மாநிலத்தில் முக்கிய மாவட்ட சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்த $177 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியும் (ADB), மத்திய அரசும் கையெழுத்திட்டன.  இந்தத் திட்டம் மாநிலத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தும். இதன்மூலம் கிராமப்புற மக்கள் சந்தைகள், வேலைவாய்ப்புக்கு மற்றும் சேவைகளுக்கு செல்லமுடியும். மேம்படுத்தப்பட்ட இயங்குதிறன், மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு வெளியேயுள்ள இரண்டாம் நிலை நகரங்களில் வளர்ச்சி மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தும். இதன் மூலம் வருவாய் வித்தியாசங்கள் குறையும். பன்னாட்டுத் தரத்தைப் பின்பற்றி இந்தச் சாலைத்திட்டம் அமைக்கப்படுவதால், சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படும்.
Question 6
இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அமைக்கப்பட்ட 11 உறுப்பினர்கள்கொண்ட வருடாந்திர மானியம் மற்றும் இணைவுக் குழுவின் தலைவர் யார்?
A
அதில் சுமரிவாலா
B
D R சைனி
C
வாகிஷ் பதக்
D
அபு மேத்தா
Question 6 Explanation: 
 இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவர் அதில் சுமரிவாலா தலைமையில் 11 பேர்கொண்ட குழுவை இந்திய ஒலிம்பிக்சங்கம் அமைத்துள்ளது. நிதித்துறையுடன் ஒருங்கிணைந்து அதன் உறுப்பினர்களின் வருடாந்திர (2020-2021ஆம் ஆண்டுக்கானது) மானியம் மற்றும் இணைவுக் கட்டணத்தை மதிப்பாய்வு செய்து கண்காணிப்பதற்காக இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் தொடர்புடைய நிலுவையில் உள்ள அனைத்து சிக்கல்கள் குறித்த அறிக்கையையும் IOA தலைவருக்கு இது அனுப்பும்.
Question 7
இந்தியாவின் எந்த முதன்மை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயலதிகாரியாக பிரபல நிர்வாகி தியரி டெலாபோர்டே நியமிக்கப்பட்டுள்ளார்?
A
HCL
B
இன்போசிஸ்
C
விப்ரோ
D
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
Question 7 Explanation: 
 இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, அதன் புதிய தலைமைச் செயல் அதிகாரி & மேலாண்மை இயக்குநராக தியரி டெலாபோர்டே நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. விப்ரோவின் தற்போதைய தலைவராக இருந்துவரும் அபிதாலி நீமுச்வாலாவுக்கு மாற்றாக தியரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்திற்கு முன்னர், தியரி டெலாபோர்டே காப்ஜெமினியுடன் தொடர்பு கொண்டிருந்தார். அங்கு, தலைமை இயக்க அதிகாரி, குழு நிர்வாக வாரியத்தின் உறுப்பினர் உட்பட பல பாத்திரங்களை அவர் வகித்தார். இந்திய நிறுவனங்களால் செய்யப்பட்ட முதல் இந்தியர் அல்லாத தலைமைப் பொறுப்பு நியமனம் இதுவாகும்.
Question 8
Collab’ என்ற குறுவிசைக் காணொளிப் பயன்பாட்டை (short music video) அறிமுகப்படுத்தியுள்ள பிரபல தொழில்நுட்ப நிறுவனம் எது?
A
அமேசான்
B
பேஸ்புக்
C
மைக்ரோசாப்ட்
D
கூகிள்
Question 8 Explanation: 
 பேஸ்புக் நிறுவனமனது அண்மையில், ‘Collab’ என்ற சோதனை வடிவிலிருக்கும் குறுவிசைக் காணொளிப் பயன்பாட்டை அறிமுகம் செய்தது. ‘Collab’ பயன்பாட்டைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் காணொளிகளை இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் கதைகள் உள்ளிட்ட தளங்களில் வெளியிடலாம். பேஸ்புக்கின் NPE அணிகளின் ஆராய்ச்சிக் குழு இந்தப் பயன்பாட்டை உருவாக்கியுள்ளது. முன்னதாக, இந்தக் குழு, ‘CatchUp’ மற்றும் ‘Hobbi’ உள்ளிட்ட வேறுசில பயன்பாடுகளையும் உருவாக்கியிருந்தது.
Question 9
ஆதார் எண் அடிப்படையிலான e-KYC’ஐப் பயன்படுத்தும் எந்த நிகழ்நேர வசதியை நிதியமைச்சர் தொடங்கிவைத்துள்ளார்?
A
உடனடி டிமாட் கணக்கு
B
உடனடி நிரந்தரக் கணக்கு எண் (PAN)
C
உடனடி கடவுச்சீட்டு
D
உடனடி உத்யோக் ஆதார்
Question 9 Explanation: 
 மத்திய நிதிநிலை அறிக்கையில் செய்யப்பட்ட அறிவிப்பைத்தொடர்ந்து, உடனடியாக நிரந்தரக் கணக்கு எண்ணை (நிகழ்நேரத்தில்) ஒதுக்கும் வசதியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முறைப்படி தொடங்கிவைத்தார். ஆதார் எண் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணை வைத்திருக்கும் நிரந்தரக் கணக்கு எண் விண்ணப்பதாரர்களுக்கு இந்த வசதி தற்போது கிடைக்கும். காகிதமிலா முறையில் செய்யப்படும் இந்த ஒதுக்கீடுமூலம், மின்-நிரந்தக் கணக்கு எண் விண்ணப்பதா -ரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.  இதன் ‘மாதிரிப்பதிப்பு’ சோதனை முறையில் வருமான வரித்துறையின் e-தாக்கல் இணையதளத்தில் 2020 பிப்.12 அன்று தொடங்கப்பட்டது. அன்றுமுதல், வெறும் பத்து நிமிடங்களுக்குள்ளாக நிரந்தரக் கணக்கு எண்கள் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுவருகின்றன.
Question 10
COVID-19 தொற்றுநோய்க்கு இடையில், இரகசிய வாக்களிப்பைக்கொண்ட தனது தேர்தல்களில் புதிய வாக்களிப்பு நடைமுறையை பின்பற்றியுள்ள பன்னாட்டு அமைப்பு எது?
A
ஐரோப்பிய ஒன்றியம்
B
ஐக்கிய நாடுகள்
C
உலக நலவாழ்வு அமைப்பு
D
வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு
Question 10 Explanation: 
 பாதுகாப்புக்கவுன்சிலின் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக, ஒரு புதுவிதமான வாக்களிப்பு நடைமுறையை ஐக்கிய நாடுகள் பொது அவை அண்மையில் ஏற்றுக்கொண்டுள்ளது.  பேரளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் COVID-19 தொற்றின்போதான சமூக விலகலை உறுதி செய்வதுவுமே இம்மாற்றத்திற்கான காரணமாகும். வழக்கமாக, ஐ.நா. தலைமையகத்தில் குதிரை லாட வடிவில் அமைக்கப்பட்டுள்ள சட்டசபை அறையில் சட்டசபை கூடுகிறது. ஆனால் தற்போது, 193 ஐ.நா. உறுப்பு நாடுகளின் தூதர்களும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட இடத்திலும் நேரத்திலும் இரகசிய வாக்குகளை செலுத்துவார்கள்.
Question 11
நடப்பாண்டில் (2020) வரும் உலக புகையிலை ஒழிப்பு நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Tobacco: deadly in any form or disguise
B
Tobacco – a threat to development
C
Tobacco kills, don’t be duped
D
Protecting Youth
Question 11 Explanation: 
 உலகளாவிய புகையிலை நுகர்வினை 24 மணிநேர காலத்திற்கு தவிர்ப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒவ்வோர் ஆண்டும் மே.31 அன்று உலக புகையிலை ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. புகைப்பிடிப்பதனால் ஏற்படும் எதிர்மறை உடல்நலச்சீர்கேடு விளைவுகளால் தற்போது உலகெங்கிலும் கிட்டத்தட்ட ஆறு மில்லியனுக்கும் அதிகமானோர் மரணிக்கின்றனர். இதில் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் புகைப்பவர்களின் அருகில் இருப்பதாலேயே நோய்த்தாக்கத்திற்கு ஆளாகிறார்கள். ‘Protecting Youth’ என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Question 12
திறன்வாய்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக, ‘ரோஜ்கார் சேது’ என்றவொரு திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
மகாராஷ்டிரா
B
மத்திய பிரதேசம்
C
உத்தரபிரதேசம்
D
ஒடிசா
Question 12 Explanation: 
 சொந்த மாநிலத்திற்குத் திரும்பிய திறன்மிகு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் மத்திய பிரதேச மாநில அரசு, அண்மையில், ‘ரோஜ்கார் சேது’ என்றவொரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக, பிற மாநில தொழிலகங்களில் பணிபுரிந்த திறன்மிகு தொழிலாளர்களை அரசு கணக்கெடுத்து வருகிறது. மேலும், தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் சாலை & பாலம் கட்டுமானம் போன்ற உட்கட்டமைப்புத் திட்டங்களுடன் தொடர்புடைய ஒப்பந்தக்காரர்களையும் இதற்காக அம்மாநில அரசாங்கம் தொடர்புகொள்ளும்.
Question 13
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கடன் வழங்குவதற்காக உத்தரகண்ட் மாநில அரசு தொடங்கியுள்ள புதிய திட்டத்தின் பெயர் என்ன?
A
முக்கிய மந்திரி சம்ரிதி யோஜனா
B
முக்கிய மந்திரி யாத்ரா யோஜனா
C
முக்கிய மந்திரி பிரவாசி யோஜனா
D
முக்கிய மந்திரி ஸ்வரோஜ்கர் யோஜனா
Question 13 Explanation: 
 COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கடன் வழங்குவதற்காக உத்தரகண்ட் மாநில அரசு, அண்மையில், “முக்கிய மந்திரி ஸ்வரோஜ்கர் யோஜனா” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், உற்பத்தித் துறையில் `25 இலட்சம் வரையிலும், சேவைத் துறையில் `10 இலட்சம் வரையிலுமான கடன்களை உத்தரகண்ட் அரசு வழங்கும். மாநிலத்திற்குத் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், இவ்வகை கடனுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வரையறுக்கப்பட்ட வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றின்மூலம் விண்ணப்பதாரர்களுக்கு கடனுதவி வழங்கப்படும்.
Question 14
நடப்பாண்டில் கேரளாவில் செயல்படுத்தப்படவுள்ள K-FON திட்டத்துடன் தொடர்புடைய துறை எது?  
A
ஊட்டச்சத்துமிகுந்த உணவு
B
இணைய அணுகல்
C
நீர்ப்பாதுகாப்பு
D
விண்வெளி அறிவியல்
Question 14 Explanation: 
 கேரள நுண்ணிழை ஒளியிய வலையமைப்புத் திட்டமானது (Kerala - Fibre Optic Network) 2020 டிசம்பருக்குள் தொடங்கப்படும் என்று கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். ஏழை மக்களுக்கும் பிறருக்கும் மலிவு விலையில் இலவச இணைய வசதியை வழங்குவதே `1,500 கோடி மதிப்பிலான இத்திட்டத்தின் நோக்கமாகும். இதை கேரளமாநில IT உட்கட்டமைப்பு நிறுவனமும் கேரள மாநில மின்சார வாரியமும் செயல்படுத்துகின்றன. கேரள மாநில மின்சார வாரியத்தின் மின் கம்பங்களைப்பயன்படுத்தி, மாநிலம் முழுவதும் ஒளியிழை வடங்கள் பதிக்கப்படவுள்ளன.
Question 15
ஆண்டுதோறும் வெளியிடப்படும், அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு ஆளுமைகளுக்கான போர்ப்ஸ் தரவரிசையில், முதலிடத்தைப் பிடித்த விளையாட்டு ஆளுமை யார்?
A
கிறிஸ்டியானோ ரொனால்டோ
B
லியோனல் மெஸ்ஸி
C
விராட் கோலி
D
ரோஜர் பெடரர்
Question 15 Explanation: 
 ஆண்டுதோறும் வெளியிடப்படும் அதிக சம்பளம்வாங்கும் விளையாட்டு ஆளுமைகளுக்கான போர்ப்ஸ் தரவரிசையில், சுவிஸ் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவ்விதழின் கூற்றுப்படி, பெடரரின் மொத்த வருவாய் $106.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அவர் இருபது கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதன் பரிசுத்தொகை மட்டும் அவருக்கு $6.3 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டித்தந்துள்ளது.  அவரைத்தொடர்ந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டாமிடத்திலும், லியோனல் மெஸ்ஸி மற்றும் நெய்மர் ஆகியோர் முறையே மூன்றாம் மற்றும் நான்காமிடத்திலும் உள்ளனர். நவோமி ஒசாகா மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் பட்டியலின் முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளாக உள்ளனர்
Question 16
ஜல் ஜீவன் இயக்கத்தை எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு `445 கோடியை ஒதுக்கியுள்ளது?
A
ஜம்மு & காஷ்மீர்
B
சத்தீஸ்கர்
C
உத்தரபிரதேசம்
D
ஒடிசா
Question 16 Explanation: 
 சத்தீஸ்கர் மாநில அரசு தங்களது 2020-21ஆம் ஆண்டுக்கான செயல்திட்டத்தை மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் பரிசீலனைக்கும், அனுமதிக்குமாக சமர்ப்பித்துள்ளது. வரும் 2024ஆம் ஆண்டுக்குள் ஊரகப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் நீண்டகால அடிப்படையில் குறிப்பிட்ட தரத்தில் போதுமான அளவில் குடிநீரை வழங்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் ஜல்சக்தி அமைச்சகமானது ஜல் ஜீவன் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்துக்காக `3.60 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இந்தத் திட்டம், மாநிலத்தில் உள்ள 20 இலட்சம் குடும்பங்களுக்கு குடிநீர்க் குழாய் இணைப்பு தர திட்டமிட்டுள்ளது. இந்த மாநிலத்தில், 2020-21ஆம் ஆண்டுக்குள் ஜல் ஜீவன் இயக்கத்தை அமல்படுத்த இந்திய அரசு `445 கோடியை அனுமதித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்துக்கு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நீர் வழங்கல் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
Question 17
தற்போது BRICS கூட்டமைப்பின் தலைமைப்பதவியை வைத்திருக்கும் நாடும் அண்மையில் BRICS வரித்துறைத்தலைவர்களின் கூட்டத்தை நடத்திய நாடும் எது?
A
பிரேசில்
B
இரஷ்யா
C
சீனா
D
தென் ஆப்பிரிக்கா
Question 17 Explanation: 
 பிரேசில் (B), இரஷ்யா (R), இந்தியா (I), சீனா (C), தென்னாப்பிரிக்கா (S) ஆகிய நாடுகளை உள்ளடக்கிய BRICS அமைப்பின் வரித்துறைத் தலைவர்களின் கூட்டத்தை, தற்போது அதன் தலைமைப் பதவியை வகித்துவரும் இரஷ்யா நடத்தியது. இந்தக் கூட்டம், மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் COVID-19 தொற்றை முன்னிட்டு, இது காணொளிக்காட்சிமூலம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில், மத்திய அரசின் நிதித்துறை செயலாளர் Dr அஜய்பூஷன் பாண்டே கலந்துகொண்டார். வரி விஷயங்களில் ஒத்துழைப்பின் கூறுகளை ஆராய்வதற்கான சாத்தியங்கள் மற்றும் வரி அதிகாரிகளின் தீர்வுமொழிகள் ஆகியவை இதன்சமயம் விவாதிக்கப்பட்டன.
Question 18
நடப்பாண்டில் கேரளாவில் செயல்படுத்தப்படவுள்ள K-FON திட்டத்துடன் தொடர்புடைய துறை எது?
A
ஊட்டச்சத்துமிகுந்த உணவு
B
இணைய அணுகல்
C
நீர்ப்பாதுகாப்பு
D
விண்வெளி அறிவியல்
Question 18 Explanation: 
 கேரள நுண்ணிழை ஒளியிய வலையமைப்புத் திட்டமானது (Kerala - Fibre Optic Network) 2020 டிசம்பருக்குள் தொடங்கப்படும் என்று கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். ஏழை மக்களுக்கும் பிறருக்கும் மலிவு விலையில் இலவச இணைய வசதியை வழங்குவதே `1,500 கோடி மதிப்பிலான இத்திட்டத்தின் நோக்கமாகும். இதை கேரளமாநில IT உட்கட்டமைப்பு நிறுவனமும் கேரள மாநில மின்சார வாரியமும் செயல்படுத்துகின்றன. கேரள மாநில மின்சார வாரியத்தின் மின் கம்பங்களைப்பயன்படுத்தி, மாநிலம் முழுவதும் ஒளியிழை வடங்கள் பதிக்கப்படவுள்ளன
Question 19
எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ், பிரதம மந்திரி பாரதிய ஜனசாதி பரியோஜனா (PMBJP) திட்டம் செயல்படுத்தப்படுகிறது?
A
நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம்
B
உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம்
C
இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்
D
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம்
Question 19 Explanation: 
 மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம், பிரதம மந்திரி பாரதிய ஜனசாதி பரியோஜனா (PMBJP) திட்டத்தை பிரதம மந்திரி பாரதிய ஜனசாதி மையங்களின் (PMBJK) வலையமைப்புமூலம் செயல்படுத்துகிறது. தரமான மருந்துகள் அனைவருக்கும் மலிவு விலையில் கிடைக்கச்செய்வதும், நலவாழ்வுக்கான செலவுகளைக் குறைப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.  இந்தத் திட்டம், 2020- 21ஆம் ஆண்டின் முதலிரண்டு மாதங்களில், `100.4 கோடி அளவிற்கு விற்பனை செய்து சாதனை புரிந்துள்ளன. 2019- 20ஆம் ஆண்டில் இதே காலத்தில் விற்பனை `40 கோடி என்ற அளவிற்கு இருந்தது. மார்ச், ஏப்ரல், மே 2020 வரையிலான காலத்தில் சுமார் `144 கோடி மதிப்பிலான தரமான, மலிவுவிலையிலான மருந்துப் பொருள்களை இந்த மையங்கள் விற்பனை செய்துள்ளன
Question 20
ஒவ்வோர் ஆண்டும் ஐ.நா அவையால் உலக பெற்றோர் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
A
மே 31
B
ஜூன் 1
C
ஜூன் 2
D
ஜூன் 3
Question 20 Explanation: 
 ஜூன்.1ஆம் தேதியை உலக பெற்றோர் நாளாக 2012’இல் ஐ.நா பொது அவை அறிவித்தது. அதன்பின்னர், ஆண்டுதோறும் ஜூன்.1 அன்று உலக பெற்றோர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கும் உள்ள அனைத்து பெற்றோர்களையும், தங்கள் குழந்தைகளுக்காக அவர்கள் செய்யும் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்காக அவர்களை கெளரவிக்கும் நோக்கத்துடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. சமூக மேம்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில், UNGA, 1994ஆம் ஆண்டை பன்னாட்டு குடும்ப ஆண்டாகவும், ஒவ்வோர் ஆண்டும் மே.15’ஐ பன்னாட்டு குடும்ப நாளாகவும் அறிவித்தது.
Question 21
COVID-19 கொள்ளைநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள நடப்பாண்டுக்கான (2020) 47ஆவது G7 உச்சிமாநாடு, முதலில் எந்த நாட்டில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது?
A
பிரேசில்
B
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
C
சீனா
D
தென் ஆப்பிரிக்கா
Question 21 Explanation: 
 G7 என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய உலகின் மிகப்பெரிய ஏழு பொருளாதாரங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பாகும். முன்னதாக இது இரஷ்யாவை உள்ளடக்கியிருந்தபோது G8 என அழைக்கப்பட்டது.  47ஆவது G7 உச்சிமாநாடு முதலில் அமெரிக்காவின் கேம்ப் டேவிட் நகரத்தில் 2020 ஜூன் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அண்மையில், இந்த 47ஆவது உச்சிமாநாட்டை செப்டம்பர் அல்லது நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். ஆஸ்திரேலியா, தென் கொரியா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளை உள்ளடக்கி G7 கூட்டமைப்பை விரிவுபடுத்தவும் அவர் அப்போது பரிந்துரைத்தார்
Question 22
இராஜீவ்காந்தி கேல் இரத்னா விருதுக்கு இந்திய மட்டைப்பந்து கட்டுப்பாட்டு வாரியத்தால் (BCCI) பரிந்துரைக்கப்பட்டுள்ளவர் யார்?
A
ஷிகர் தவான்
B
ரோகித் சர்மா
C
ஜஸ்பிரீத் பும்ரா
D
இரவீந்திர ஜடேஜா
Question 22 Explanation: 
 இந்திய மட்டைப்பந்து கட்டுப்பாட்டு வாரியமானது (BCCI) இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவை மதிப்புமிக்க இராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைத்துள்ளது. அர்ஜுனா விருதுக்கு இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், தீப்தி யாதவ் உள்ளிட்ட பிற கிரிக்கெட் வீரர்களை BCCI பரிந்துரைத்துள்ளது. விருதுகளுக்கான பரிசீலிப்பு காலம் 2016 ஜன.1 முதல் 2019 டிசம்பர் 31 வரையாகும். கடந்த 2019ஆம் ஆண்டுக்கான ICC ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும் ரோகித் சர்மா தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
Question 23
இன்டெல் இந்தியாவுடன் இணைந்து மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தொடங்கியுள்ள திட்டத்தின் பெயரென்ன?
A
Responsible AI for Youth
B
Sustainable AI for Youth
C
Artificial Intelligence for India
D
Bharat AI
Question 23 Explanation: 
 “இளையோருக்கான பொறுப்புள்ள செயற்கைப்புலனறிவு (AI)” என்ற இளையோருக்கான தேசியத் திட்டத்தையும் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், மற்றும் சட்டம், நீதித்துறை அமைச்சர் இரவிசங்கர் பிரசாத் தொடங்கிவைத்தார். இந்தத்திட்டத்தின் நோக்கம் என்பது நமது நாட்டில் உள்ள இளம் மாணவர்களுக்கு செயற்கைப் புலனறிவுத்தொழினுட்பங்களைக் கிடைக்கச்செய்வதாகும்.  இந்தத்திட்டத்தை இன்டெல் இந்தியாவுடன் இணைந்தும், மத்திய மனிதவள மேம்பாட்டமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறையின் ஆதரவுடனும் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின்னாளுகைப் பிரிவு உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது.  நரேந்திர மோடி அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்று ஓராண்டுகாலம் நிறைவடைந்ததை ஒட்டி, www.ai.gov.in என்ற பெயரில் இந்தியாவின் தேசிய செயற்கைப்புலனறிவு வலைத்தளத்தை மத்திய மின்னணுவியல் & தகவல் தொழில்நுட்ப அமைச்சர் இரவிசங்கர் பிரசாத் தொடங்கிவைத்தார். மின்னணுவியல் & IT அமைச்சகம் மற்றும் IT நிறுவனங்கள் இணைந்து இந்த வலைத்தளத்தை உருவாக்கியுள்ளன. மின்னணுவியல் & IT அமைச்சகத்தின் தேசிய மின்னாளுகைப்பிரிவு மற்றும் IT தொழில்துறையின் NASSCOM ஆகியவை இணைந்து இந்த வலைத்தளத்தை இயக்கும்.
Question 24
நடப்பாண்டில் (2020) வரும் உலக பால் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Milk connecting Nations
B
Milk for All
C
Milk for SDGs
D
20th Anniversary of World Milk Day
Question 24 Explanation: 
 உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 1 அன்று உலக பால் நாள் கொண்டாடப்படுகிறது. முதல் உலக பால் நாள், 2001ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. பாலின் பங்கை சிறப்பித்துக்காட்டுவதற்கும், பால் மற்றும் பால் தொழிற்துறையுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை விளம்பரப்படுத்துவதற்குமாக ஐ.நா அவையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, ஜூன்.1ஆம் தேதியை உலக பால் நாளாக தேர்வுசெய்தது. “20th Anniversary of World Milk Day” என்பது நடப்பாண்டில் வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். மே 29-31 வரை, ‘Enjoy Dairy Rally’ என்ற மெய்நிகர் பரப்புரை பேரணியும் நடந்தது.
Question 25
மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடற்கரைகளை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் அதிதீவிர சூறாவளிப் புயலாக தீவிரமடைந்துள்ள புயலின் பெயர் என்ன?
A
நிசர்கா
B
ஹரோல்ட்
C
அமந்தா
D
உம்பன்
Question 25 Explanation: 
 இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஓர் அண்மைய அறிவிப்பின்படி, அரபிக்கடலில் உருவாகியுள்ள ‘நிசர்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையானைது அதிதீவிர சூறாவளிப் புயலாக தீவிரமடைந்துள்ளது. இது, இராய்காட் மாவட்டத்திற்கும் டாமனுக்கும் இடையிலான வடக்கு மகாராஷ்டிரா மற்றும் குஜராத் வழியாக கரையைக் கடக்கும். இந்தப்புயல் கரையைக் கடக்கும்போது, காற்றின் வேகம் 90-105 கி.மீ/மணி என்ற வேகத்தில் இருக்கும். முன்னதாக, ‘உம்பன்’ சூறாவளி மேற்கு வங்க மாநிலத்தைத் தாக்கி கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Question 26
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்காக இந்தியப் பிரதமரால் தொடங்கப்பட்ட தொழில்நுட்ப அடிப்படையிலான தளத்தின் பெயர் என்ன?
A
சாம்பியன்ஸ்
B
ஜீவன்
C
நிர்பர்
D
உத்யோக்
Question 26 Explanation: 
 ‘சாம்பியன்ஸ்’ என்னும் தொழில்நுட்பத்தளத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். உற்பத்தி மற்றும் தேசிய வலிமையை அதிகரிப்பதற்கான நவீன நடைமுறைகளைக்கொண்ட இணக்கமான செயலி மற்றும் உருவாக்கத்துக்கு இது தளமாக விளங்கும்.  குறை தீர்ப்பு, நிதி, மூலப்பொருள், தொழிலாளர்கள், ஒழுங்குமுறை அனுமதிகள் உள்ளிட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் சிக்கல்களுக்கு, குறிப்பாக COVID-19 தொற்றால் ஏற்பட்டுள்ள சிரமமான சூழ்நிலைக்குத் தீர்வுகாண்பது; புதிய வாய்ப்புகளைக் கைப்பற்ற அவர்களுக்கு உதவுதல்; மருத்துவ உபகரணங்கள், PPE எனப்படும் தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள், முகக்கவசங்கள் போன்ற துணைப் பொருள்களை உற்பத்தி செய்வது மற்றும் அவற்றை தேசிய, சர்வதேச சந்தைகளில் விநியோகிப்பது; திறமையை அடையாளம் கண்டு ஊக்குவித்தல்; அதாவது, தற்போதைய சூழ்நிலையில் நிலைத்து நிற்கக்கூடிய, தேசிய, சர்வதேச சாம்பியன்களாக உருவெடுக்கக்கூடிய சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் ஆற்றலைக்கண்டறிதல் ஆகியவை இந்தத்தளத்தின் விரிவான நோக்கங்களாகும்.
Question 27
சூரியனைச் சுற்றியுள்ள வியாழனின் சுற்றுப்பாதையைப் பகிர்ந்துகொள்ளும் சிறுகோள்களின் மிகப் பெரிய குழு, பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
A
டிரோஜன் சிறுகோள்கள்
B
டிராகன் சிறுகோள்கள்
C
புலம்பெயர்ந்த சிறுகோள்கள்
D
அரசி சிறுகோள்கள்
Question 27 Explanation: 
 சூரியனைச் சுற்றியுள்ள வியாழனின் சுற்றுப்பாதையைப் பகிர்ந்துகொள்ளும் சிறுகோள்களின் பெரிய குழு, பொதுவாக டிரோஜன் சிறுகோள்கள் அல்லது வியாழன் டிரோஜன்கள் என்று அழைக்கப்படுகிறது. டிரோஜான்கள், கோளின் அதே சுற்றுப்பாதையைப் பின்பற்றி சூரியனைச் சுற்றுகின்றன. ஆனால், சுற்றுப்பாதைக்கு 60° முன்னாலோ அல்லது 60° பின்னாலோ அவை சுற்றிவரும்.  அண்மையில், ஹவாய் பல்கலை மற்றும் பெல்பாஸ்டில் அமைந்துள்ள குயின்ஸ் பல்கலையைச் சார்ந்த வானியலாளர்கள் குழு, “2019 LD2” வால்மீனைப்போன்று வால்கொண்ட முதல் அறியப்பட்ட வியாழன் டிரோஜன் சிறுகோள் என்பதைக் கண்டறிந்துள்ளது. இது முதன்முதலில் 2019 ஜூனில் NASAஆல் நிதியளிக்கப்பட்ட ATLAS அமைப்பால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அப்போது அது சூரியனுக்குப் புறத்தே சென்றதால் அதனை சரிவர ஆராய இயலவில்லை.
Question 28
உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சமுதாயப் பயிற்சியாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக விளையாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ள முன்னெடுப்பின் பெயர் என்ன?
A
பாரத் பயிற்சியாளர் மேம்பாட்டுத் திட்டம்
B
கேலோ இந்தியா சமுதாயப் பயிற்சியாளர் மேம்பாட்டுத் திட்டம்
C
கேலோ இந்தியா விளையாட்டு மேம்பாட்டுத் திட்டம்
D
தேசிய விளையாட்டுத் திட்டம்
Question 28 Explanation: 
 மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு, சமீபத்தில், 25 நாள் நீளும் கேலோ இந்தியா சமுதாயப் பயிற்சியாளர் மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்தியா முழுவதும் சுமார் 15,000 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சமுதாயப் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தை இந்தியாவின் அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்த, விளையாட்டு அமைச்சகம் மனிதவள அமைச்சகத்துடன் கூட்டிணையும்
Question 29
பெருமைமிகு இராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ஹாக்கி இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்ட வீரர் / வீராங்கனை யார்?
A
வந்தனா கட்டாரியா
B
மோனிகா
C
இராணி இராம்பால்
D
லால்ரெம்சியாமி
Question 29 Explanation: 
 இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் தலைவி இராணி இராம்பால், இராஜீவ் காந்தி கேல் இரத்னா விருதுக்கு ஹாக்கி இந்தியா அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பெண்கள் அணி தகுதிபெறுவதற்கு இராணி இராம்பால் முக்கியப்பங்குவகித்தார். 2016ஆம் ஆண்டில் ‘அர்ஜூனா’ விருதும் 2020ஆம் ஆண்டில் ‘பத்மஸ்ரீ’ விருதும் வென்ற இராணி இராம்பால், தற்போது இராஜீவ் காந்தி கேல் இரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதுதவிர வந்தனா, மோனிகா, ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் அர்ஜூனா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்
Question 30
எபோலா வைரஸ் நோய்த்தொற்றின் 11ஆவது பரவலை அறிவித்துள்ள நாடு எது?
A
காங்கோ மக்களாட்சி குடியரசு
B
நைஜீரியா
C
ருவாண்டா
D
உகாண்டா
Question 30 Explanation: 
 அண்மையில் எபோலா வைரஸ் நோய்த்தொற்றின் புதிய பாதிப்பைக் கண்டறிந்துள்ளதாக காங்கோ மக்களாட்சி குடியரசின் அரசாங்கம் அறிவித்தது. கடந்த 1976ஆம் ஆண்டில், இந்த வைரஸ் முதன்முதலில் அந்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.  மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டில் 11ஆவது முறையாக இந்த வைரஸ் தொற்று பாதித்துள்ளது. தற்போது இந்த நோய்த்தொற்று எக்குவடோர் மாகாணத்தில் பரவி வருகிறது. உலக சுகாதார அமைப்பும் (WHO) இந்நோய்குறித்து அறிவித்துள்ளது
Question 31
திரைப்பட ஊடக அமைப்புகளைப் பகுப்பாய்வு செய்தல் /மூடுதல்/ இணைத்தல் தொடர்பான நிபுணர் குழுவின் தலைவர் யார்?
A
பிமல் ஜூல்கா
B
இராகுல் ரவைல்
C
ஷியாமா பிரசாத்
D
நாகாபரணா
Question 31 Explanation: 
 மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் திரைப்பட ஊடக அமைப்புகளைப் பகுப்பாய்வு செய்தல் / மூடுதல் / இணைத்தல் மற்றும் இந்த அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்புகள்பற்றிய பரிசீலனை ஆகியவற்றுக்கான நிபுணர் குழுக்கள், தங்களது அறிக்கைகளை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் சமர்ப்பித்தன. அறிக்கைகளை சமர்ப்பிக்கும் நிகழ்வின்போது இக்குழுக்களின் தலைவர் பிமல் ஜுல்கா உடனிருந்தார்.  தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம், திரைத்துறைப்பிரிவு, தொலைக்காட்சிக்கல்வி அமைப்பு, திரைப்பட விழாக்கள் இயக்குநரகம், இந்திய தேசிய திரைப்பட ஆவணத்தொகுப்பமைப்புபோன்ற அமைப்புகளின் மேம்பாட்டுக்காக வரையறுக்கப்பட்ட வளர்ச்சிப்பாதைகளை இக்குழுக்கள் பரிந்துரை செய்துள்ளன
Question 32
உலக மிதிவண்டி நாள் கொண்டாடப்படும் தேதி எது?
A
ஜூன் 2
B
ஜூன் 3
C
ஜூன் 4
D
ஜூன் 5
Question 32 Explanation: 
 ஜூன்.3ஆம் தேதியை உலக மிதிவண்டி நாளாக ஐ.நா பொது அவை அறிவித்துள்ளது. நீடித்த வளர்ச்சி மற்றும் உடல்நலத்தை மேம்படுத்துவதற்கான ஒருவழியாக, மிதிவண்டிப் பயன்பாட்டை ஊக்குவிக்க ஐ.நா அதன் இணை அமைப்புகளை ஊக்குவிக்கிறது. தேசிய மற்றும் உள்ளூர் மட்டத்தில் மிதிவண்டிப் பேரணிகளை ஏற்பாடு செய்வதற்கும், சமூகத்தில் மிதிவண்டி ஓட்டுதல் கலாசாரத்தை வளர்ப்பதற்கும் இந்நாள் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அழைப்பு விடுக்கிறது
Question 33
“Building India for a New World: Lives, livelihood, growth” என்ற தலைப்பில் தனது 125ஆவது ஆண்டு அமர்வை கொண்டாடிய சங்கம் எது?
A
இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII)
B
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அறைகள் கூட்டமைப்பு (FICCI)
C
தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் சங்கம் (NASSCOM)
D
இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI)
Question 33 Explanation: 
 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இந்திய தொழில் கூட்டமைப்பின் 125ஆவது வருடாந்திர அமர்வில் தொடக்கவுரையாற்றினார். “ஒரு புதிய உலகிற்கான இந்தியாவை உருவாக்குதல்: வாழ்வு, வாழ்வாதாரம், வளர்ச்சி” என்பது நடப்பாண்டு (2020) மாநாட்டின் கருப்பொருளாகும். “Getting Growth Back” என்ற தலைப்பில் இந்த மாநாட்டில் பிரதம அமைச்சர் உரையாற்றினார்.  125 ஆண்டுகளை நிறைவுசெய்மைக்காக தொழிலமைப்பை வாழ்த்திய அவர், சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு நோக்கம், அனைவரையும் உட்படுத்துதல், முதலீடு, கட்டமைப்பு, புதுமையான கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட ஐந்து விஷயங்கள் முக்கியமானது என்றார்.
Question 34
தெற்கு மெக்ஸிகோ வளைகுடாவில் உருவாகியுள்ள வெப்பமண்டலச் சூறாவளியின் பெயர் என்ன?
A
அம்பான்
B
அமண்டா
C
கிறிஸ்டோபல்
D
ஹரோல்ட்
Question 34 Explanation: 
 தெற்கு மெக்ஸிகோ வளைகுடாவில், ‘கிறிஸ்டோபல்’ என்ற வெப்பமண்டலப்புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக, மெக்ஸிகோவுக்கு கடும் வெள்ள அச்சுறுத்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2016ஆம் ஆண்டில், அவ்வளைகுடாவில், ‘காலின்’ என்ற வெப்பமண்டலப் புயல் உருவானது. அமெரிக்க தேசிய புயல் மையத்தின் எச்சரிக்கையின்படி, இந்தப் புயலானது வடக்கு நோக்கி திரும்பி அமெரிக்க வளைகுடா கடற்கரையை நோக்கிச்செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, அண்மைய வெப்ப மண்டலப் புயலான அமண்டாவிலிருந்து உருவாகிய துணைப்புயலாகும்.
Question 35
பன்னாட்டு பாலியல் தொழிலாளர்கள் நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
A
ஜூன் 2
B
ஜூன் 3
C
ஜூன் 4
D
ஜூன் 5
Question 35 Explanation: 
 பாலியல் தொழிலாளர்களின் அவலநிலையை எடுத்துக்காட்டுவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.2 அன்று உலகெங்கிலும் பன்னாட்டு பாலியல் தொழிலாளர்கள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 1975ஆம் ஆண்டு இதேநாளன்று, நூற்றுக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் பிரான்சில் உள்ள புனித நிசியர் தேவாலயத்தில் ஒன்றுகூடி, அவர்களின் வாழ்கைச் சுரண்டல் நிலை குறித்து பொதுமக்கள் உணரவும், அவர்களின் மீதான காவல் துறையின் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் கோரினர்.  புவனேஸ்வரில் உள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு நியாயவிலைப்பொருட்கள் & பிற உதவிகளை வழங்குமாறு ஒடிசா மாநில மனித உரிமைகள் ஆணையம் புவனேசுவர் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.
Question 36
156 பீரங்கிகள் செய்வதற்காக மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து `1,094 கோடி மதிப்பிலான பணிப்பைப் பெற்றுள்ள அமைப்பு எது?
A
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு
B
ஆயுதத்தொழிற்சாலை வாரியம்
C
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம்
D
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம்
Question 36 Explanation: 
 இந்திய இராணுவத்தின் தரைப்படைக்கு உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் 156 பிஎம்பி 2/2 K இரக டாங்கிகளை பாதுகாப்புத்துறை தருவிக்கிறது. இதற்கான பணிப்பை ஆயுதத்தொழிற்சாலை வாரியம் (Infantry Combat Vehicles) பாதுகாப்புத்துறையிடம் பெற்றுள்ளது. உள்நாட்டிலேயே உற்பத்தி செய் (Make in India) என்ற திட்டத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்த வணிகம் நடைபெறுகிறது. தெலுங்கானா மாநிலம் மேடக்கில் அமைந்துள்ள ஆயுத உற்பத்தி ஆலையில் இந்தப் பீரங்கிகள் `1,094 கோடி மதிப்பில் தயாரிக்கப்படும். இந்திய ராணுவத்தில் அதிநவீன வசதிகளுடன் இவை இடம்பெறும்
Question 37
ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறார்களுக்கான பன்னாட்டு நாள் (International Day of Innocent Children Victims of Aggression) கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
A
ஜூன் 4
B
ஜூன் 5
C
ஜூன் 6
D
ஜூன் 7
Question 37 Explanation: 
 ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறார்களுக்கான பன்னாட்டு நாள் என்பது ஆண்டுதோறும் ஜூன்.4 அன்று ஐ.நா அமைப்பால் நினைவுகூரப்படும் ஒரு நாளாகும். இது, 1982 ஆகஸ்ட் 19 முதல் ஆண்டுதோறும் நினைவுகூரப்பட்டு வருகிறது. உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியான பாதிப்புகளுக்கு ஆளான உலகெங்கிலும் உள்ள சிறார்கள் அனுபவிக்கும் வலியை உணர்ந்துகொள்வதே இதன் இதன் நோக்கமாகும். இந்நாள் சிறார்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐ.நா’இன் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.
Question 38
உலக வர்த்தக அமைப்புக்கான இந்தியாவின் தூதராகவும் நிரந்தர பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள் -ளவர் யார்?
A
பிரஜேந்திர நவ்நீத்
B
நிருபேந்திர மிஸ்ரா
C
அபாஸ் ஜா
D
K V காமத்
Question 38 Explanation: 
 மூத்த அதிகாரியும், 1999ஆம் ஆண்டுத்தொகுதியின் IAS அதிகாரியுமான பிரஜேந்திர நவ்நீத் மூன்று ஆண்டு காலத்திற்கு உலக வர்த்தக அமைப்பின் தூதராகவும், இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்திற்கு முன்னர் அவர் பிரதமர் அலுவலகத்தில் இணைச்செயலராக இருந்தார். ஜெனீவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பிற்கு, இந்திய நிரந்தரத் திட்டத்தின்கீழ் அவர் அனுப்பப்படுவார். IRTS அதிகாரியான அன்வர் உசேன் ஷேக்கை ஆலோசகர் பதவிக்கு நியமிப்பதற்கும் அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
Question 39
PPE அணிபவர்களுக்கு உதவுவதற்காக, SUMERU-PACS’ என்ற சாதனத்தை உருவாக்கியுள்ள அமைப்பு எது?
A
இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம்
B
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு
C
பாரத் மின்னணு நிறுவனம்
D
ஆயுதத்தொழிற்சாலை வாரியம்
Question 39 Explanation: 
 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (DRDO), ‘SUMERU-PACS’ என்ற சாதனத்தை உருவாக்கியுள்ளது. இது, தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை (PPE) அணிபவர்களுக்கு வியர்வை இல்லாமல் வசதியாக இருக்க உதவுகிறது. PPE அணிந்த மக்கள் எதிர்கொள்ளும் அசெளகரியம் குறித்து கருத்துகளைப்பெற்றதன் பின்னணியில், DRDO, PPE’க்குள் பயன்படுத்தக்கூடிய தனிப்பட்ட காற்று சுழற்சி முறையை உருவாக்கியது. சுமார் 500 கிராம் எடையுள்ள இந்த அமைப்பு ஒரு சிறிய பை போன்ற அமைப்புடன் செயல்படுகிறது.
Question 40
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, அதிகபட்ச புலிகள் இறப்பைப் பதிவு செய்துள்ள மாநில அரசு எது?
A
மகாராஷ்டிரா
B
மத்திய பிரதேசம்
C
உத்தர பிரதேசம்
D
கர்நாடகா
Question 40 Explanation: 
 தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் சமீபத்திய தகவல்களின்படி, கடந்த எட்டு ஆண்டுகளில் 750 புலிகள் இந்தியாவில் இறந்துள்ளன. மொத்த இறப்புகளில், 369 இயற்கை காரணங்களாலும், 168 வேட்டையாடுதலாலும் நிகழ்ந்துள்ளன. அதிகபட்சமாக, மத்தியபிரதேசம், 173 புலிகள் உயிரிழப்பைப் பதிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான எட்டாண்டு காலத்தில், 101 புலிகள் பல்வேறு மாநில வனத்துறை அதிகாரிகளால் பிடிப்பட்டுள்ளன என்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2019 டிசம்பர் மாத நிலையின்படி, நாட்டில் 2976 புலிகள் இருந்தன.
Question 41
எந்த நாட்டுடனான, “பரஸ்பர தளவாட ஆதரவு ஒப்பந்த”த்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?
A
ஜப்பான்
B
ஆஸ்திரேலியா
C
பின்லாந்து
D
ஜெர்மனி
Question 41 Explanation: 
 ஆஸ்திரேலிய தலைவருடனான தனது முதல் மெய்நிகரான இருதரப்பு உச்சிமாநாட்டின்போது, இந்திய பிரதமர் மோடி, பாதுகாப்பு தொடர்பான ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ‘Mutual Logistics Support Agreement (MLSA)’ எனப் பெயரிடப்பட்ட இந்த ஒப்பந்தம் இருநாடுகளின் இராணுவங்களையும் பழுதுபார்ப்பு நோக்கங்களுக்காக ஒருவருக்கொருவரின் தளங்களை பயன்படுத்த அனுமதிக்கிறது.  அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் சிங்கப்பூருடன் இந்தியா ஏற்கனவே இதேபோன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஓர் ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் மீண்டும் ஈடுபடுவதற்கும் இவ்விருநாடுகளும் அப்போது முடிவுசெய்தன.
Question 42
இந்திய தொழிலக கூட்டமைப்பின் (CII) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
V K கிர்லோஸ்கர்
B
உதய் கோடக்
C
ஆதி கோத்ரேஜ்
D
சஞ்சீவ் பஜாஜ்
Question 42 Explanation: 
 இந்திய தொழிலக கூட்டமைப்பின் (CII) 2020-21ஆம் ஆண்டுக்கான தலைவராக கோடக் மகிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் உதய் கோடக் பொறுப்பேற்றுள்ளார். CII தலைவராக பதவிவகித்துவந்த கிர்லோஸ்கர் நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குநருமான விக்ரம் கிர்லோஸ்கருக்கு மாற்றாக உதய் கோடக் நியமிக்கப்பட்டுள்ளார்.  மேலும், 2020-21ஆம் ஆண்டுக்கான CII நியமன தலைவராக TATA எஃகு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான T V நரேந்திரன் பொறுப்பேற்றுள்ளார்.
Question 43
பிரபல கவிஞர் அலெக்சாண்டர் புஷ்கினின் பிறந்தநாளான ஜூன்.6 அன்று, ஐக்கிய நாடுகள் அவை, எந்த மொழிக்கான சிறப்பு நாளைக் கொண்டாடுகிறது?
A
ஸ்பானிய மொழி நாள்
B
உருஷிய மொழி நாள்
C
ஆங்கில மொழி நாள்
D
ஆங்கில மொழி நாள்
Question 43 Explanation: 
 ஐ.நா அதன் ஆறு அலுவல்பூர்வ மொழிகளான ஆங்கிலம், அரபு, ஸ்பானியம், சீனம், உருஷியம் மற்றும் பிரஞ்சு ஆகியவற்றின் வரலாறு, பண்பாடு மற்றும் வளர்ச்சி குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஆறு தனி மொழி நாட்களைக் கொண்டாடுகிறது. ஜூன்.6, ஐக்கிய நாடுகள் உருஷிய மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இது, சிறந்த உருஷிய கவிஞர் அலெக்சாண்டர் புஷ்கினின் பிறந்தநாளும் கூட.  அவர், ‘நவீன உருஷிய இலக்கியத்தின் தந்தை’ எனக்கருதப்படுகிறார். அவரது பிரபலமான இலக்கியப் படைப்புகளுள் சில, “யூஜின் ஒன்ஜின்” என்ற புனைக்கதையும், “வெண்கல குதிரைவீரன்” என்ற தலைப்பில் அவரது கவிதையும் அடங்கும்.
Question 44
“சட்டத்துக்குப் புறம்பான, பதிவுசெய்யப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தலைத் தடுப்பதற்கான பன்னாட்டு நாள்” அனுசரிக்கப்படுகிற தேதி எது?
A
ஜூன் 2
B
ஜூன் 3
C
ஜூன் 4
D
ஜூன் 5
Question 44 Explanation: 
 “சட்டத்துக்குப் புறம்பான, பதிவுசெய்யப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தலைத் தடுப்பதற்கான பன்னாட்டு நாள்”, ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.5 அன்று அனுசரிக்கப்படுகிறது. கட்டுப்பாடற்ற மீன்பிடி நடவடிக்கைகளால் மீன்வளங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து உணர்தலே இந்த நாளின் நோக்கமாகும். கடந்த 2017 நவம்பரில், ஐ.நா பொது அவை, ஜூன்.5ஆம் தேதியை இந்தச் சிறப்பு நாளாக அறிவித்தது. கடந்த 2018ஆம் ஆண்டில் முதன்முறையாக இந்நாள் கொண்டாடப்பட்டது. துறைமுக நிலை செயல்பாடுகள் குறித்த ஒப்பந்தமும் அதேநாளில் நடைமுறைக்கு வந்தது
Question 45
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஆம்பர்னே ஆறு அமைந்துள்ள நாடு எது?
A
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
B
இரஷ்யா
C
ஜெர்மனி
D
ஆஸ்திரேலியா
Question 45 Explanation: 
 இரஷ்யாவின் நிக்கல் தலைநகரம் என்று அழைக்கப்படும் நோரில்ஸ்கில் 60 கிலோமீட்டர் நீளத்திற்கு பாய்ந்தோடும் ஆம்பர்னே ஆற்றில், 20,000 டன் டீசல் எண்ணெய் கொட்டியதை அடுத்து அவசரகால நிலையை இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். இந்த எண்ணெய் கசிவு ஆம்பர்னே ஆற்றின் மேற்பரப்பை செங்கல் சிவப்பு நிறமாக மாற்றியுள்ளது.  நோரில்சுக் நகரத்துக்கு அருகிலுள்ள மின்னுற்பத்தி நிலையத்தில் அமைந்துள்ள மாபெரும் எரிபொருள் தொட்டி இடிந்து விழுந்ததன் விளைவாக இந்த எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Question 46
‘நைமிஷா’ என்பது எந்த அமைப்பால் நடத்தப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்?
A
இந்திய தொல்லியல் ஆய்வகம்
B
NITI ஆயோக்
C
நவீன கலைக்கான தேசியக் கலைக்கூடம்
D
TRIFED
Question 46 Explanation: 
 மத்திய கலாசார அமைச்சகத்தின்கீழ் ஓர் இணை அலுவலகமாக புது தில்லியிலிருந்து செயல்படும் நவீன கலைக்கான தேசியக் கலைக்கூடம், இணையவழிமுலம், ‘நைமிஷா’ 2020 - கோடைக்கால கலைநிகழ்ச்சியை 2020 ஜூன்.8 முதல் ஜூலை.3 வரை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி அதன் பங்கேற்பாளர்களுக்கு அவர்களின் உடல்நலத்தில் எந்தப் பாதிப்பும் இல்லாதவகையில், பயிற்றுவிக்கும் கலைஞர்களிடமிருந்து கலைப்படைப்புகள் குறித்து கற்றுக்கொள்வதற்கான ஒரு நல் வாய்ப்பை வழங்கும் முன்முயற்சியாகும்.
Question 47
இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் என்பது எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ் இயங்கி வரும் ஒரு தன்னாட்சிமிக்க சமூகமாகும்?
A
குறு, சிறு & நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம்
B
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
C
மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
D
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
Question 47 Explanation: 
 மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் ஒரு தன்னாட்சிமிக்க சமுதாயமாக இயங்கிவரும் இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் (STPI), அதன் 29ஆவது நிறுவு நாளை, 2020 ஜூன்.5 அன்று நினைவுகூர்ந்தது. கடந்த 1991 ஜூன்.5 அன்று நிறுவப்பட்ட இது, இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு உற்பத்தித்துறையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களித்து வருகிறது. STPI’இல் பதிவுசெய்யப்பட்ட அலகுகளின் ஏற்றுமதி மதிப்பு, 2019-20ஆம் ஆண்டில் `421,103 கோடியாகும்.
Question 48
புத்தாக்கம் & தொழில்முனைவு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக அடல் புத்தாக்க இயக்கத்துடன் கூட்டிணைந்துள்ள நிறுவனம் எது?
A
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், CSIR
B
டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம், TFIR
C
பொருளாதார வளர்ச்சி நிறுவனம்
D
இந்திய அறிவியல் நிறுவனம்
Question 48 Explanation: 
 புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக CSIR’உம், அடல் புத்தாக்க இயக்கமும் கூட்டிணைந்துள்ளன. பல்வேறு துறைகளில் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், இரு அமைப்புகளுக்கும் இடையே விருப்ப ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.  அடல் புத்தாக்க இயக்கத்தின்கீழ், புதிய நிறுவனங்களை உருவாக்குவதற்கான CSIR மையங்கள் மூலம் உலகத்தரம்வாய்ந்த நிறுவனங்களை தொடங்குவதற்கு ஆதரவு தெரிவிப்பது; CSIR புத்தாக்கப் பூங்காக்கள் உள்ளிட்ட புதிய புத்தாக்க மாதிரிகளில் ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்கு ஆதரவு அளிப்பது; ARISE அமைப்புடன் இணைந்து சிறு, குறு, நடுத்தரத் தொழிற்துறைக்கான புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சிகளை CSIR ஊக்குவிப்பது ஆகியவை அவ்வொப்பந்தத்தின் முக்கிய கூறுகளாகும்.
Question 49
2019-20ஆம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடுவணரசு வரிகளின் விகிதம் என்ன?
A
11.25 %
B
10.95 %
C
10.25 %
D
9.88 %
Question 49 Explanation: 
 சுங்க வரி மற்றும் மாநகராட்சி வரியிலிருந்து வசூல் குறைந்துவருவதால், மத்திய வரிகளின் விகிதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2019-20ஆம் நிதியாண்டில் 9.88%ஆக குறைந்தது. 2018-19ஆம் நிதியாண்டில் 10.97 சதவீதமாகவும், 2017-18ஆம் நிதியாண்டில் 11.22 சதவீதமாகவும் இருந்த இந்த விகிதம், கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.  பொருளாதார நடவடிக்கைகளில் தேக்கநிலை காரணமாக, இது மேலும் குறையும் என எதிர்பார்க்கப்ப -டுகிறது. மொத்த வரி வருவாயும், 2019-20ஆம் நிதியாண்டில் 3.39% அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இது, இவ்வாண்டின் திருத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட இலக்குடன் ஒப்பிடும்போது `1.5 டிரில்லியன் பற்றாக்குறையாகும்.
Question 50
மதிப்புமிக்க ரிச்சர்ட் டாக்கின்ஸ் விருதை வென்ற முதல் இந்தியர் யார்?
A
அருந்ததி இராய்
B
ஜாவெத் அக்தர்
C
குல்சார்
D
சண்டி பிரசாத் பட்
Question 50 Explanation: 
 இந்திய கவிஞரும் எழுத்தாளருமான ஜாவெத் அக்தர், நடப்பாண்டிற்கான (2020) மதிப்புமிக்க ரிச்சர்ட் டாக்கின்ஸ் விருதைப்பெறுவதன்மூலம், இவ்விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஆங்கில பரிணாம உயிரியலாளர் ரிச்சர்ட் டாக்கின்ஸின் பெயரால் இது வழங்கப்பட்டு வருகிறது. மதச்சார்பின்மை, பகுத்தறிவுவாதத்தின் கூறுகளை வெளிப்படையாக அறிவித்து அறிவியல் பூர்வமாக மெய்யினை நிலைநிறுத்தும் அறிவியல், கல்வி அல்லது பொழுதுபோக்கு ஆகிய துறைகளைச் சேர்ந்த நபர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 2003’லிருந்து இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
Question 51
அனைத்து BS6 இணக்கமான 4 சக்கர மோட்டார் வாகனங்களிலும் ஒட்டப்படவேண்டிய பட்டைகளின் நிறம் என்ன?
A
சிவப்பு
B
பச்சை
C
கருப்பு
D
வெள்ளை
Question 51 Explanation: 
 சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் ஓர் அண்மைய அறிவிப்பின்படி, பதிவு விவரங்களை வழங்கும் 1 செ.மீ அகல பச்சை நிற ஒட்டி, அனைத்து BS 6 இணக்கமான மோட்டார் வாகனங்களிலும் ஒட்டப்படவேண்டும். இந்த உத்தரவு 2020 அக்டோபர்.1 முதல் அமலுக்குவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு, அனைத்து மோட்டார் வாகனங்களிலும் கிழித்தெறியவியலாத, உயர்பாதுகாப்புகொண்ட பதிவெண் தகடுகள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  இந்தப் பச்சைநிறப்பட்டை, பதிவெண் தகட்டுக்கு மேலே ஒட்டப்படும். இது, பெட்ரோல் அல்லது இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனத்திற்கு வெளிர்நீலவண்ணப் பட்டையாகவும், டீசல் வாகனங்களுக்கு ஆரஞ்சுநிறப்பட்டையாகவும் இருக்கும்.
Question 52
இந்திய சூரிய மின்னாற்றல் கழகத்திடமிருந்து உலகின் மிகப்பெரிய சூரிய மின்னாற்றல் ஒப்பந்தம் ஒன்றைப்பெற்றுள்ள இந்திய நிறுவனம் எது?
A
டாடா எரிசக்தி நிறுவனம்
B
அதானி தூய ஆற்றல் நிறுவனம்
C
ReNew Power
D
Avadaa Energy
Question 52 Explanation: 
 இந்திய சூரிய மின்னாற்றல் கழகத்தின் சூரிய மின்னுற்பத்தி திட்டத்துக்கான ஒப்பந்தத்தை அதானி தூய ஆற்றல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தத் திட்டத்தின் மொத்த உற்பத்தித் திறன், 8 GW என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 2 GW சூரிய ஆற்றலைச் சேமிக்கும் மின்கல உற்பத்தி திட்டத்தையும் அது செயல்படுத்தவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு `45 ஆயிரம் கோடியாகும். இந்த ஒப்பந்தத்தின்மூலம், தற்போது அதானி தூய ஆற்றல் நிறுவனத்தின் வசமிருக்கும் சூரிய மின்னுற்பத்தி திட்டத்தின் திறன் 15 GW (கிகாவாட்) ஆகும்.
Question 53
மெர்சரின், 2020 வாழ்க்கைச்செலவின ஆய்வின்படி, இந்தியாவிலேயே அதிக வாழ்க்கைச்செலவினம் கொண்ட நகரம் எது?
A
புது தில்லி
B
மும்பை
C
சென்னை
D
பெங்களூரு
Question 53 Explanation: 
 மெர்சரின், நடப்பாண்டு (2020) வாழ்க்கைச்செலவின ஆய்வின்படி, வெளிநாட்டவர்களுக்கு, மும்பை நகரம் இந்தியாவின் மிகவும் செலவுமிகுந்த நகரமாக உள்ளது. உலகளவில், வெளிநாட்டவர்களுக்கு இது அறுபதாவது மிகவும் செலவுமிகுந்த நகரமாகும். மேலும் இது, ஆசியாவில் 19ஆவது இடத்தில் உள்ளது.  இந்தியாவில், மும்பை நகர்த்தை அடுத்து புது தில்லியும் (உலகளவில் 101ஆவது இடம்) சென்னை நகரமும் (உலகளவில் 143ஆவது இடம்) உள்ளன. உலகளாவிய பட்டியலில் ஹாங்காங் நகரம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. துர்க்மெனிஸ்தானின் அஷ்கபாத் இரண்டாமிடமும், டோக்கியோ & சூரிச் (சுவிச்சர்லாந்து) ஆகிய நகரங்கள் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திலும் உள்ளன.
Question 54
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘அனன்யா - ANANYA’ என்றால் என்ன?
A
சோதனைக்கருவி
B
கிருமிநாசினி தெளிப்பு
C
தனிநபர் பாதுகாப்பு ஆடை
D
செயற்கை சுவாசக்கருவி
Question 54 Explanation: 
 COVID-19 நோய்த்தொற்றை எதிர்த்துப்போராடுவதற்காக புனேவில் உள்ள பாதுகாப்புசார்ந்த மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கான நிறுவனம், ‘அனன்யா’ என்ற நானோ தொழில்நுட்ப அடிப்படையிலான கிருமிநாசினி தெளிப்பை (disinfectant spray) உருவாக்கியுள்ளது. முகக்கவசங்கள், தனிநபர் பாதுகாப்பு ஆடைகள், மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் கைத்தறிகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வகையானவற்றின் மேற்பரப்புகளையும் கிருமிநீக்கம் செய்ய இது பயனுள்ளதாக இருக்கும்.  மின்தூக்கியின் பொத்தான்கள் மற்றும் கதவு கைப்பிடிகள் போன்ற அனைவரும் தொடும் பொதுவான இடங்களை கிருமிநீக்கம் செய்யவும் இதனை பயன்படுத்தப்படலாம். வெள்ளி நானோ துகள்கள் மற்றும் வணிகரீதியாக கிடைக்கக்கூடிய ஆம்பிசிலின் மருந்து ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்தப்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வணிகரீதியிலான உற்பத்தி விரைவில் தொடங்கப்படவுள்ளது.
Question 55
நடப்பாண்டில் (2020) வரும் உலக அங்கீகார நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Accreditation: Improving Food Safety
B
Safety Accreditation
C
Quality Certification
D
Quality Accreditation
Question 55 Explanation: 
 வணிகம் மற்றும் பொருளாதாரத்தில் அங்கீகாரத்தின் பங்கை முன்னிலைப்படுத்தவும் ஊக்குவிக்கவும் உலக அங்கீகார நாள், ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.9 அன்று கொண்டாடப்படுகிறது. “Accreditation: Improving Food Safety” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். இது, பன்னாட்டு அங்கீகார மன்றம் மற்றும் பன்னாட்டு ஆய்வக அங்கீகார ஒத்துழைப்பு ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது. இந்தச் சிறப்புநாளை நினைவுகூரும் வகையில் இந்திய தர ஆணையம் (QCI) ஓர் இணையவழி கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருந்தது.
Question 56
கடலோர காவல்படைக்கு, ‘ICGS கனக்லதா பருவா’ என்ற பெயரிலான விரைவுரோந்துக் கப்பலைக் கட்டி, வழங்கியுள்ள கப்பல்கட்டும் நிறுவனம் எது?
A
கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் மற்றும் பொறியாளர்கள்
B
கொச்சின் கப்பல்கட்டுந்தளம்
C
மசகன் கப்பல்கட்டுந்தளம்
D
கோவா கப்பல்கட்டுந்தளம்
Question 56 Explanation: 
 இந்தியாவின் முன்னணி கப்பல்கட்டும் நிறுவனமான கொல்கத்தாவைச் சார்ந்த கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் மற்றும் பொறியாளர்கள் (GRSE) அண்மையில், ‘ICGS கனக்லதா பருவா’ என்ற பெயரிலான விரைவு ரோந்துக்கப்பலை வழங்கியது. இது, இந்திய கடலோர காவல்படையினருக்கு வழங்கப்பட வேண்டிய விரைவு ரோந்துக்கப்பல்கள் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிக்கப்பலாகும். இது, அரசுக்கு சொந்தமான பாதுகாப்பு நிறுவனமான GRSE’ஆல் வழங்கப்பட்ட 105ஆவது கப்பலாகும். இந்தத் தொடரில், ICGS பிரியதர்ஷினி, ICGS அன்னி பெசன்ட் மற்றும் ICGS அம்ரித் கெளர் ஆகிய கப்பல்கள் கடலோர காவல்படைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது.
Question 57
எந்த இந்திய மாநிலத்தின் மாநில கீதமாக, ‘வந்தே உத்கல ஜனனி’ ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது?
A
மேற்கு வங்கம்
B
ஒடிசா
C
சத்தீஸ்கர்
D
உத்தரகண்ட்
Question 57 Explanation: 
 ‘வந்தே உத்கல ஜனனி’ என்னும் பாடலை ஒடிசாவின் மாநில அமைச்சரவை அண்மையில் அதன் மாநில கீதமாக ஏற்றுக்கொண்டது. கவிஞர் லட்சுமிகனாதா மோகபத்ரா என்பவரால் எழுதப்பட்ட இந்தப் பாடல், முதன்முதலில் 1912’இல் பாலசூரில் நடைபெற்ற உத்கல் சம்மிலானியின் மாநாட்டில் பாடப்பட்டது. இப்பாடலுக்கு, ‘மாநில கீதம்’ என்ற அந்தஸ்தை வழங்கவேண்டும் என்பது ஒடிசா மாநில மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். அதிகாரப்பூர்வ பாடல் வெளியானபிறகு, ஒடிசா மாநிலத்தின் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் இப்பாடல் ஒலிக்கப்படும்.
Question 58
சில்வர் லைன்’ என்று பெயரிடப்பட்ட அரை அதிவேக இரயில் வழித்தடத்துக்கு ஒப்புதல் அளித்துள்ள மாநில அரசு எது?
A
உத்தரகண்ட்
B
சிக்கிம்
C
கேரளா
D
மகாராஷ்டிரா
Question 58 Explanation: 
• திருவனந்தபுரம்–காசர்கோடு அரை அதிவேக இரயில் வழித்தடம் (அ) ‘சில்வர் லைன்’ திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு கேரள மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடுக்கு இடைப்பட்ட 529.45 கி.மீ., தொலைவை 4 மணிநேரத்தில் கடப்பதே, ‘சில்வர் லைன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வழித்தடத்தின் நோக்கமாகும். • இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமான கேரள இரயில் மேம்பாட்டுக்கழகம் லிட் (கே-இரயில்) என்பது இந்திய இரயில்வே மற்றும் கேரள அரசின் ஒரு கூட்டு நிறுவனமாகும். இந்த வழித்தடத்தில், புதுச்சேரியின் மாகேவைத்தவிர்ப்பதற்காக, அமைச்சரவை, இத்திட்டத்தில் சிறுமாற்றம் மேற்கொண்டது. இத்திட்டத்திற்கான தோராய செலவு `63,941 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்குள் இந்தத்திட்டம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Question 59
இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பப்புவா நியூ கினியா, சாலமன் தீவுகள் மற்றும் டிமோர் லெஸ்டே முழுவதும் பரவியிருக்கும் கடற்பரப்பின் பெயர் என்ன?
A
பவள முக்கோணம்
B
நிலக்கரி முக்கோணம்
C
மத்திய முக்கோணம்
D
காங்கோ முக்கோணம்
Question 60

தென்கிழக்காசியாவில் COVID-19 தொற்றுச்சூழலைக் கையாளுவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றுள்ள ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் யார்?

A
உர்ஜித் படேல்
B
இரகுராம் இராஜன்
C
D சுப்பா ராவ்
D
Y V ரெட்டி
Question 60 Explanation: 
• தென்கிழக்காசிய நாடுகள் COVID-19 தொற்றுச்சூழலைக் கையாளுவதற்கு உதவும் வகையில், ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகாவா முன்னணி வல்லுநர்கள் அடங்கிய ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளார். இந்தக் குழுவை ADB துணைத்தலைவர் அகமது M சையீத் நிர்வகிக்கிறார். இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் இரகுராம் இராஜன் நிதி, சுகாதாரம் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய பட்டியலில் இடம்பெற்றுள்ளார். கட்டமைப்பு சீர்திருத்தங்கள், உள்நாட்டு வள அணிதிரட்டலில் புதுமை ஆகியவற்றில் இந்தக்குழு தனது முழுகவனத்தையும் செலுத்தும்.
Question 61

வர்த்தகம் மற்றும் தொழிலக திறன்களில் இளையோர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக தொழிற்துறை பயிற்சி நிறுவனங்களுடன் கூட்டிணைந்துள்ள மத்திய பொதுத்துறை நிறுவனம் எது?

A
தேசிய உரங்கள் நிறுவனம்
B
இந்திய நிலக்கரி நிறுவனம்
C
இந்திய எஃகு ஆணையம்
D
தேசிய அலுமினிய நிறுவனம்
Question 61 Explanation: 
• இந்திய அரசின், “திறன் இந்தியா” திட்டத்துக்கு அழுத்தந்தரும்வகையில், தேசிய உரங்கள் நிறுவனம், தொழிற்பயிற்சி மையங்களுடன் (ITI) இணைந்து இளையோர்களுக்கு, பல்வேறு தொழில்களில் பயிற்சி அளிக்கவுள்ளது. இந்த நிறுவனத்தின் தொழிற்சாலைகளுக்கு அருகிலுள்ள ITI’களுடன் இணைந்து அந்தப் பகுதியில் உள்ள இளையோர்களுக்கு பயிற்சியளிக்க திட்டமிட்டுள்ளது. • கனரக தொழில்கள் உள்ளிட்ட பலதொழில்களில் இளையோர்கள் வேலைவாய்பைப்பெற இது உதவும். இதனையொட்டி தேசிய உரங்கள் நிறுவனத்தின், பஞ்சாபில் உள்ள நங்கல் தொழிற்சாலை அங்குள்ள ITI’உடன், இளைஞர்களுக்கு 12 தொழிற்துறைகளில் பயிற்சியளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
Question 62

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல்முறையில் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்காக எதனோடு கூட்டிணைந்துள்ளது?

A
இந்திய அஞ்சல்துறை கொடுப்பனவு வங்கி
B
பொதுச்சேவை மையம்
C
கடவுச்சீட்டு சேவை மையம்
D
UIDAI
Question 63
இந்திய வர்த்தக சபையின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
A
புது தில்லி
B
கொல்கத்தா
C
மும்பை
D
அகமதாபாத்
Question 64
உள்நாட்டு உற்பத்தியாளர்களின் மூலதன கையகப்படுத்தல் விநியோகங்களை நான்கு மாதங்கள் வரை நீட்டித்துள்ள மத்திய அமைச்சகம் எது?
A
பாதுகாப்பு அமைச்சகம்
B
MSME அமைச்சகம்
C
வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்
D
நிதி அமைச்சகம்
Question 64 Explanation: 
 COVID-19 நோய்த்தொற்றால் எழும் விநியோக சங்கிலித் தொடர் இடையூறுகள் காரணமாக இந்திய விற்பனையாளர்களுடன் தற்போதுள்ள அனைத்து மூலதன கையகப்படுத்தல் ஒப்பந்தங்களுக்கான விநியோக காலத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் நான்கு மாதங்கள் வரை நீட்டித்துள்ளது.  இந்த உத்தரவில், "வலுவான தடை காரணமாக, இந்நீட்டிப்பு நான்கு மாத காலத்திற்கு, அதாவது 2020 மார்ச் 25 முதல் 2020 ஜூலை 24 வரை பொருந்தும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. COVID-19 வைரஸ் தொற்றால் ஏற்பட்ட விநியோக சங்கிலி நெருக்கடி காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Question 65
எந்தப் பொருளின் அண்மைய இறக்குமதி தீர்வை அதிகரிப்பானது, அகர்பத்தி உற்பத்தியாளர்களுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது?
A
மூங்கில்
B
கரி
C
சந்தன எண்ணெய்
D
நிலக்கரி
Question 65 Explanation: 
 மூங்கில் குச்சிகளுக்கு 10’இலிருந்து 25 விழுக்காடு வரை இறக்குமதி தீர்வையை அதிகரித்து மத்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள முடிவானது நம் நாட்டில் சுயவேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகளை திறந்துவிட்டுள்ளது. அரசின் இந்த முடிவை வரவேற்று, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த எட்டு முதல் பத்து மாதங்களில் அகர்பத்தி தொழிற்துறையில் குறைந்தபட்சம் 1 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள், உருவாகும் என்றும் இது கிராமத்தொழில்துறைக்கு ஊக்கமளிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
Question 66
போதுமான அளவுக்கு குடிநீரை வழங்குவதை நோக்கமாகக்கொண்ட, ‘செளனி யோஜனா’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
குஜராத்
B
கர்நாடகா
C
தெலுங்கானா
D
சத்தீஸ்கர்
Question 66 Explanation: 
 செளராஷ்டிரா-நர்மதா அவதாரன் நீர்ப்பாசன (செளனி) யோஜனாவின் இரண்டாம் கட்டம் ஆக.15ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று குஜராத் மாநில முதலமைச்சர் சமீபத்தில் அறிவித்தார். மாநிலத்திற்கு போதுமான குடிநீரை வழங்குவதோடு, நர்மதா ஆற்றிலிருந்து செளராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளின் குடிநீர் மற்றும் பாசன தேவைகளை பூர்த்திசெய்யும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. வறண்ட செளராஷ்டிரா மற்றும் கட்ச் பிராந்தியத்தின் 115 நீர்த்தேக்கங்களையும் இது நிரப்பும். SAUNI (Saurashtra - Narmada Avataran Irrigation) திட்டத்தின் முதல்கட்டம், கடந்த 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
Question 67
மருத்துவப்பரிசோதனை மேற்கொள்வதற்காக, ‘கேப்டன் அர்ஜுன்’ என்ற எந்திர மனிதனை அறிமுகம் செய்துள்ள இந்திய பாதுகாப்புப்படை எது?
A
இரயில்வே பாதுகாப்புப் படை
B
மத்திய தொழிலக பாதுகாப்புப் படை
C
மத்திய சேமக்காவல் படை
D
எல்லைப்பாதுகாப்புப் படை
Question 67 Explanation: 
 இரயிலில் ஏறும் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதற்காக, ‘கேப்டன் அர்ஜுன்’ என்ற எந்திர மனிதனை புனேவைச் சார்ந்த இரயில்வே பாதுகாப்புப்படை அறிமுகப்படுத்தியுள்ளது. “Always be Responsible and Just Use to be Nice” என்பதன் சுருக்கந்தான் ARJUN. இது, இயக்கவுணரி, PTZ (Pan, Tilt, Zoom) நிழற்படக்கருவி & குவிமுக நிழற்படக்கருவி ஆகியவற்றைக்கொண்டுள்ளது.  வெப்பமேவலையும் (thermal scanning) இதனால் செய்யவியலும். மேலும் உணரி அடிப்படையிலான தூய்மையாக்கி மற்றும் முகக்கவசவழங்கியையும் இது தன்னிடத்து கொண்டுள்ளது. ஐயத்திற்கிடமான செயல்பாடு மற்றும் சமூக விரோத செயல்களைக் கண்காணிப்பதற்கு இது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது.
Question 68
நடுவணரசு தொடங்கியுள்ள நலவாழ்வு விநியோகச்சங்கிலித் தளத்தின் பெயர் என்ன?
A
பாரத் ஆரோக்கியா
B
ஆரோக்கியபாத்
C
ஆரோக்கியமே செல்வம்
D
COVID பராமரிப்பு
Question 68 Explanation: 
 புதிய நலவாழ்வு விநியோகச்சங்கிலித் தளத்தை, “ஆரோக்கியபாத்” என்ற பெயரில் மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையதளத்தை அறிவியல் & தொழிலக ஆராய்ச்சிக்கழகம் (CSIR) அறிமுகப்படுத்தியுள்ளது. உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் மிக்க நலம்சார்பொருட்களின் நிகழ்நேர கிடைப்பை அளிப்பதே இதன் நோக்கமாகும்.  தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, முக்கியத்துவம் மிக்க நலம்சார் பொருட்களைப் பற்றி அறிந்துகொள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்தப்பொதுநலவாழ்வு இணையதளம் உதவும்.
Question 69
நடப்பாண்டின் (2020) பன்னாட்டு வெளிறல் நோய் விழிப்புணர்வு நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Made To Shine
B
Made to Outperform
C
Albinism Achievers
D
Succeed with Albinism
Question 69 Explanation: 
 உலகெங்கும் வெளிறல் நோயுடன் வாழும் மனிதர்களின் மனித உரிமைகளைக்கொண்டாடுவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.13 அன்று பன்னாட்டு வெளிறல் நோய் விழிப்புணர்வு நாள் (International Albinism Awareness Day) அனுசரிக்கப்படுகிறது. “Made To Shine” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்தச் சிறப்புநாளுக்கான கருப்பொருளாகும். அல்பினிசம் என்பது தோல், முடி மற்றும் கண்களில் நிறமி முழுமையாகவோ / பகுதியாகவோ இல்லாததால் மனிதர்களில் காணப்படும் ஒரு பிறவிநோயாகும்.
Question 70
ஐ.நா வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு அறிக்கையின்படி, அந்நிய நேரடி முதலீடுகளைப் பெறுவதில் கடந்த ஆண்டில் (2019) இந்தியா அடைந்த நிலை என்ன?
A
ஐந்து
B
ஏழு
C
ஒன்பது
D
பதினொன்று
Question 70 Explanation: 
 ஐ.நா. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பின் (UNCTAD) அண்மைய அறிக்கையின்படி, இந்தியா, கடந்த 2019ஆம் ஆண்டில் $51 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடுகளைப் பெற்றது. இதன்மூலம் அந்நிய நேரடி முதலீடுகளை (FDI) அதிகளவில் ஈர்த்த உலக நாடுகளின் வரிசையில் இந்தியா 9ஆவது பெரிய நாடாக இடம்பிடித்துள்ளது.  இந்தத்தரவரிசை, சமீபத்தில் வெளியான, ‘உலக முதலீட்டு அறிக்கை 2020’ என்ற UNCTAD’இன் முதன்மை அறிக்கையில் வெளியிடப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டான 2018’இல், $42 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்து இந்தியா 12ஆம் இடத்தைப்பிடித்திருந்தது. இந்தியாவின் சந்தை, தொடர்ந்து முதலீடுகளை ஈர்க்கும் என UNCTAD தெரிவித்துள்ளது
Question 71
சர்வதேச ‘குடும்பத்திற்கு பணமனுப்புதல்’ நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
A
ஜூன் 15
B
ஜூன் 16
C
ஜூன் 17
D
ஜூன் 18
Question 71 Explanation: 
 சர்வதேச ‘குடும்பத்திற்கு பணமனுப்புதல்’ நாளானது உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.16 அன்று கொண்டாடப்படுகிறது. “Remittances are a lifeline” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். தனிநபர்கள் (அ) கூட்டு நடவடிக்கைகள்மூலம் பணம் அனுப்புவதன் தாக்கத்தை அதிகரிக்கக்கூடிய வழிகளைக்கண்டறிய அரசாங்கங்கள், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு சமூகங்கள் ஆகியவற்றுக்கு இந்நாள் அழைப்புவிடுக்கிறது.
Question 72
ஷார்ஜா வேர்ல்ட் ஸ்டார்ஸ் ஆன்லைன் செஸ் போட்டியில் இரண்டாமிடம் பிடித்த இந்திய வீரர் யார்?
A
P ஹரிகிருஷ்ணா
B
அதிபன்
C
கொனேரு ஹம்பி
D
ஹரிகா துரோணவள்ளி
Question 72 Explanation: 
 ஷார்ஜா வேர்ல்ட் ஆன்லைன் செஸ் போட்டியில், இந்திய செஸ் வீரரான P ஹரிகிருஷ்ணா இரண்டாம் இடத்தைப்பிடித்தார். சாக்ரியார் மாமேடியரோவ் பத்துக்கு 7.5 புள்ளிகள் எடுத்து ஆன்லைன் போட்டியில் வென்றார். போலந்து கிராண்ட்மாஸ்டர் ராடோஸ்லா வோஜ்தாசெக் மூன்றாமிடத்தை பிடித்தார்.
Question 73
மின்னாளுகையை மேம்படுத்துவதற்காக தனது ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலகங்களில், ‘இ-ஆபிஸ்’ பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?
A
மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (CBIC)
B
இந்திய ரிசர்வ் வங்கி (RBI)
C
அயல்நாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT)
D
பணியாளர் வருங்கால வைப்பு நிதியம் (EPFO)
Question 73 Explanation: 
 மத்திய மறைமுகவரி மற்றும் சுங்கவாரியமானது (CBIC) இந்தியா முழுவதும் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய சரக்கு மற்றும் சேவை வரியை (CGST) செலுத்த அனைத்து சுங்க அலுவலகங்களில் இணைய அலுவலகத்தை (e-office) தொடங்கியுள்ளது.  இந்த இணைய-அலுவலகப் பயன்பாடு, தேசியத் தகவல் மையத்தால் (NIC) உருவாக்கப்பட்டதுடன் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுக்குறைகளுக்கான துறை (DARPG) ஆதரிக்கிறது. கோப்புகளை கையாளுவதற்கான உள்-செயல்முறைகளைத் தானியங்குபடுத்துவதன்மூலமும், அரசாங்கத்திற்குள் முடிவுகளை எடுப்பதன்மூலமும் நிர்வாகத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இப்பயன்பாட்டை பயன்படுத்துவார்கள்.
Question 74
பொதுத்துறை நிறுவனமான ALIMCOமூலம், ‘ADPI’ திட்டத்தை நடத்திய மத்திய அமைச்சகம் எது?
A
வேளாண்மை மற்றும் உழவர்நல அமைச்சகம்
B
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
C
உள்துறை அமைச்சகம்
D
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
Question 74 Explanation: 
 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் கருவிகளையும், உபகரணங்களையும் கட்டணமில்லாமல் விநியோகிப்பதற்காக, COVID-19 முடக்கநிலைக்காலத்தில், முதல்முறையாக மெய்நிகர் முகாம் ஒன்று நடுவணரசின் ADPI திட்டத்தின்கீழ், பஞ்சாபில் உள்ள பிரோஸ்பூர் மாவட்டத்தின் தல்வண்டி பாய் வட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தனது பொதுத்துறை நிறுவனமான செயற்கை மூட்டு உற்பத்தி நிறுவனத்தின் (ALIMCO) மூலம் ‘Assistance to Disabled persons for purchasing / fitting of aids / appliances - ADIP’ திட்டத்தை செயல்படுத்துகிறது.
Question 75
முதற்கட்டத்தில், கேலோ இந்தியா உயர்சிறப்பு மாநிலமையத்தை உருவாக்குவதற்காக விளையாட்டு அமைச்சகத்தால் எத்தனை மாநிலங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன?
A
ஐந்து
B
ஏழு
C
எட்டு
D
பதினொன்று
Question 75 Explanation: 
 மத்திய அரசின் விளையாட்டுத்துறை, தனது முன்னோடித்திட்டமான கேலோ இந்தியா திட்டத்தின்கீழ், கேலோ இந்தியா உயர்சிறப்பு மாநில மையங்களை அமைக்கத்திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் வலுவான விளையாட்டுச்சூழலை உருவாக்கும் நோக்கில், ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் தலா ஒரு கேலோ இந்தியா உயர்சிறப்பு மாநில மையங்களை அமைக்க அடையாளம் காணப்பட்டுள்ளது.  முதற்கட்டமமாக, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகாலாந்து உட்பட எட்டு மாநிலங்களில், அரசுக்குச்சொந்தமான விளையாட்டு அரங்கங்களை மத்திய விளையாட்டு அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது. இந்த விளையாட்டு அரங்கங்கள், கேலோ இந்திய உயர்சிறப்பு மாநில மையங்களாக மேம்படுத்தப்படவுள்ளன. விரிவான ஆய்வுக்குப் பிறகு, இந்த எட்டு மையங்களுக்கும் தேவையான நிதியுதவி வழங்கப்படும்.
Question 76
விசாரணை மற்றும் அமலாக்க செயல்முறைகளை மேம்படுத்துவதற்கான தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ள SEBI’ஆல் அமைக்கப்பட்ட உயராற்றல்மிக்க குழுவின் தலைவர் யார்?
A
P K மொஹந்தி
B
AR தேவ்
C
U K சின்ஹா
D
N K சிங்
Question 76 Explanation: 
 சந்தை கட்டுப்பாட்டாளரின் விசாரணை மற்றும் அமலாக்க செயல்முறைகளை மேம்படுத்துவதற்காக SEBI’ஆல் அமைக்கப்பட்ட உயராற்றல் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்தக் குழுவுக்கு தலைமைதாங்கிய உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அனில் R தேவ் தனது விரிவான ஆய்வு அறிக்கையை SEBI’இடம் சமர்ப்பித்துள்ளார். இறுதி உத்தரவுகளை அனுப்புவதற்கான காலக்கெடுவை குறைத்தல், மீட்பு செயல்முறைகளை மேம்படுத்துதல், தண்டம் விதிக்கும்போது குற்றஞ்சாட்டப்பட்ட இலாபங்களை அளவிடுதல் மற்றும் SEBI விதிமுறைகள் மற்றும் திவால் நிலை மற்றும் திவால் குறியீடு ஆகியவற்றின் விதிமுறைகளிலும் இந்த அறிக்கை கவனம் செலுத்துகிறது.
Question 77
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கால்வான் பள்ளத்தாக்கு அமைந்துள்ள இந்திய மாநிலம் / UT எது?
A
ஜம்மு – காஷ்மீர்
B
லடாக்
C
உத்தரகண்ட்
D
சிக்கிம்
Question 77 Explanation: 
 லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த ஒரு வன்முறை மோதலில், 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 35 சீனவீரர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கால்வான் பள்ளத்தாக்கை வான்படைத்தளத்துடன் இணைக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சாலைத்திட்டத்தை இந்தியா அண்மையில் மேற்கொண்ட காரணத்தால் இம்மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Question 78
நடப்பாண்டுக்கான (2020) உலக போட்டித்திறன் குறியீட்டில் இந்தியாவின் தரநிலை (rank) என்ன?
A
37
B
41
C
43
D
45
Question 78 Explanation: 
 மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம் (IMD) தொகுத்த வருடாந்திர உலக போட்டித்திறன் குறியீட்டில் இந்தியா 43ஆவது இடத்தில் உள்ளது. முந்தைய பதிப்பில் பெறப்பட்ட அதே 43ஆவது தரநிலையை இந்தியா தக்கவைத்துக்கொண்டுள்ளது.  அறுபத்துமூன்று நாடுகளை உள்ளடக்கிய 2020 பட்டியலில், சிங்கப்பூர் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதைத்தொடர்ந்து டென்மார்க் மற்றும் சுவிச்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. இதில், சென்றமுறை மூன்றாமிடத்திலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் இந்த முறை சற்று சறுக்கி பத்தாம் இடத்திற்கு சென்றுள்ளது. உயர்தொழில்நுட்ப ஏற்றுமதி, வெளிநாட்டு நாணய இருப்பு போன்றவற்றில் இந்தியா மேம்பட்டிருந்தாலும், அது, பரிமாற்ற விகித நிலைத்தன்மை, மெய்யான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி (GDP) போன்ற பகுதிகளில் கெட்டுச் சீரழிந்த நிலையில் உள்ளது
Question 79
வதவன் துறைமுகம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இந்திய மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
A
குஜராத்
B
மகாராஷ்டிரா
C
மேற்கு வங்கம்
D
கேரளா
Question 79 Explanation: 
 மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் `65,544 கோடி செலவில் வதவன் துறைமுகத்தை கட்ட கடந்த பிப்ரவரி மாதத்தில் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அண்மையில், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், பால்கர் மாவட்டத்தில் வதவனை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன்மிக்க தகானு வட்டாரத்தில் ஒரு தொழிலாக துறைமுகங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்று கூறியுள்ளது. ஜவகர்லால் நேரு துறைமுகத்தை ஒரு முன்னணி பங்காளியாகக்கொண்டு இந்தத் துறைமுகம் உருவாக்கப்படவுள்ளது.
Question 80
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நெறிமுறை அலுவலராகவும், ஒழுங்காணையராகவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
D K ஜைன்
B
செளரவ் கங்குலி
C
ஜே ஷா
D
W V இராமன்
Question 80 Explanation: 
 முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான D K ஜைன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நெறிமுறை அலுவலராகவும், ஒழுங்காணையராகவும் (ombudsman) மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். BCCI’இன் முதல் ஒழுங்காணையராக நியமிக்கப்பட்ட D K ஜைன், பின்னர் கூடுதலாக நெறிமுறை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2020 பிப்ரவரி.29 அன்று முடிவடைந்தது. ஆனால், அவரது நியமனம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. COVID-19 தொற்றுநோய் பரவல் காரணமாக, ஒழுங்காணையரானவர் தனது விசாரணைகளை மெய்நிகராக மேற்கொள்வார்.
Question 81
‘பத்மஸ்ரீ’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள IM விஜயனுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
A
மட்டைப்பந்து
B
கால்பந்து
C
ஹாக்கி
D
டேபிள்–டென்னிஸ்
Question 81 Explanation: 
 நாட்டின் நான்காவது மிகவுயர்ந்த சிவில் விருதான ‘பத்மஸ்ரீ’ விருதுக்கு முன்னாள் வீரர் IM விஜயன் அவர்களின் பெயரை அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF), அண்மையில் பரிந்துரைத்துள்ளது. 90’களின் முற்பகுதியில் அறிமுகமானதிலிருந்து, இந்தியாவுக்காக 79 போட்டிகளில் 40 கோல்களை அவர் அடித்துள்ளார். 2003ஆம் ஆண்டில் அவருக்கு மதிப்புமிக்க அர்ஜுனா விருதும் வழங்கப்பட்டது. பைசுங் பூட்டியா, சுனில் சேத்ரி உள்ளிட்ட ஆறு இந்திய கால்பந்து வீரர்கள் இதற்குமுன்னர், ‘பத்மஸ்ரீ’ விருதை பெற்றுள்ளனர்.
Question 82
கிராமப்புறங்களில் சோதனை அணுகலை மேம்படுத்துவதற்காக, சுகாதார அமைச்சரால் தொடங்கப்பட்ட முதல் நடமாடும் COVID-19 பரிசோதனை ஆய்வகத்தின் பெயரென்ன?
A
I–Lab
B
Bharat Lab
C
Co–Lab
D
Gram Lab
Question 82 Explanation: 
 இந்தியாவின் ஊரக மற்றும் எளிதில் செல்லவியலாத இடங்களில் COVID-19 பரிசோதனை செய்யும் நாட்டின் முதல் I-பரிசோதனைக்கூடத்தை (தொற்றுநோய் பரிசோதனை மையம்) மத்திய அறிவியல் & தொழில்நுட்பம், புவி அறிவியில் மற்றும் நலவாழ்வு & குடும்பநலத்துறை அமைச்சர் Dr. ஹர்ஷ் வர்தன் தொடங்கிவைத்தார்.  COVID-19 அவசரகால உத்திகளின்கீழ், இத் தொற்றுநோய் கண்டறியும் ஆய்வகம் (I-LAB), அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித்தொழினுட்பத்துறையின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நடமாடும் ஆய்வகம், நாட்டின் தொலைதூர மற்றும் அணுகவியலாத பகுதிகளில் பயன்படுத்தப்படும். இது, ஒரு நாளுக்கு, 25 RT-PCR சோதனைகளையும் 300 ELISA சோதனைகளையும் செய்யும்.
Question 83
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Swift J1818.0-1607’ என்றால் என்ன?
A
நியூட்ரான் விண்மீன்
B
கருந்துளை
C
வெள்ளை குள்ள விண்மீன்
D
நெபுலா
Question 83 Explanation: 
 அண்மையில், NASA மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவற்றில் உள்ள வானியலாளர்கள் குழு, ‘Swift J1818.0-1607’ என்ற நியூட்ரான் விண்மீனைக் கண்டுபிடித்தது. இந்த நியூட்ரான் விண்மீன் சுமார் 240 வயதுடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முதன்முதலில், 2020 மார்ச்சில், X கதிர்களை வெளியிட்டபோது கண்டுபிடிக்கப்பட்டது.  நியூட்ரான் விண்மீன்கள் என்பன மிகச்சிறியதும் அடர்த்தியானதுமான விண்மீன்களாகும். NASA’இன் கூற்றுப்படி, ‘Swift J1818.0-1607’, சூரியனின் இருமடங்கு நிறையைக்கொண்டுள்ளது
Question 84
உலக அரிவாள் செல் நாள் (World Sickle Cell Day) அனுசரிக்கப்படுகிற தேதி எது?
A
ஜூன் 19
B
ஜூன் 20
C
ஜூன் 21
D
ஜூன் 22
Question 84 Explanation: 
 அரிவாள் செல் நோய் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூன்.19 அன்று உலக அரிவாள்செல் நாள் அனுசரிக்கப்படுகிறது. அரிவாள் செல் நோய் என்பது இரத்தசோகையின் ஒரு மரபுவழி வடிவமாகும். இதில் இரத்த சிவப்பு அணுக்கள் உடல் முழுவதும் போதுமான உயிர்வளியை எடுத்துச்செல்ல முடியாத நிலையிலிருக்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சையளிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு பரப்புரைகளை / திட்டங்களை நடத்தியும் செயல்படுத்தியும் வருகிறது. நடப்பாண்டில் (2020) வரும் இந்த அரிவாள் செல் நாள், அரிவாள் செல் சங்கம் கடைப்பிடிக்கும் 40ஆவது ஆண்டுநாளாகும்.
Question 85
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘SATYABHAMA’ இணையதளம், எந்தத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?
A
பருவநிலை மாற்றம்
B
சுரங்கப்பணி
C
வைராலஜி
D
தொற்றுநோய்
Question 85 Explanation: 
 சுரங்கத்துறையில் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான அறிவியல் தொழில்நுட்பத்திட்டத்திற் -கான, SATYABHAMA (Science&Technology Yojana for Aatmanirbhar Bharat in Mining Advancement) என்ற இணையதளத்தை, மத்திய சுரங்க அமைச்சகத்தின் அறிவியல் தொழில்நுட்பத் திட்டத்தின்கீழ் நிலக்கரி, சுரங்கங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தொடங்கிவைத்தார். இவ்வலை தளம், சுரங்கத் தகவல் பிரிவின் தேசிய தகவல் மையத்தால் வடிவமைத்து செயல்படுத்தப்படுகிறது.  தற்போது ஆராய்ச்சித் திட்டங்களுக்கான அறிக்கைகள் ஆராய்ச்சியாளர்களால் நேரில் சமர்ப்பிக்கப்படுகி -ன்றன. SATYABHAMA இணையதளம்மூலம் திட்டங்களை ஆன்லைனிலேயே சமர்ப்பிக்க முடியும். திட்டங்களைக் கண்காணிப்பது, நிதி மற்றும் மானியங்கள் பயன்படுத்தப்படுவது ஆகியவை குறித்த தகவல்களும், இவ்விணையதளத்தில் இருக்கும்.
Question 86
‘மைசியஸ் - Micius’ என்னும் குவாண்டம் தகவல்தொடர்பு செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?
A
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
B
சீனா
C
இரஷ்யா
D
இஸ்ரேல்
Question 86 Explanation: 
 ‘மைசியஸ்’ என்னும் உலகின் முதல் குவாண்டம் தகவல்தொடர்பு செயற்கைக்கோளானது சீனாவால் கடந்த 2016ஆம் ஆண்டில் ஏவப்பட்டது. இது குவாண்டம் குறியாக்கத் (Quantum Encryption) துறையில் முன்னோடியாக உள்ளது.  உலகின் மிகவும் பாதுகாப்பான தகவல்தொடர்பு இணைப்பை நிறுவுவதற்கு, புவிக்கு ஒளியின் துகள்களை அனுப்புவதால், இச்செயற்கைக்கோள், அண்மையச் செய்திகளில் இடம்பெற்றது. பாரம்பரிய தகவல்தொடர்பு செயற்கைக்கோள்களின் உதவியின்றி நீண்டதொலைவுக்கு பாதுகாப்பான தகவல் தொடர்புகளைப் பெறமுடியும் என்பதால் இது ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. பாதுகாப்பான நீண்டதொலைவு இணைப்புகள் என்பன ‘குவாண்டம் இணையம்’ எனப்படும் எதிர்கால உலகளாவிய வலையமைப்பிற்கான அடித்தளமாக இருக்கும்.
Question 87
பெருங்கற்காலத்தில் நிலவிவந்த மறுமைகுறித்த நம்பிக்கையை வெளிப்படுத்திய கொடுமணல் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படுகிற மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகா
D
ஆந்திர பிரதேசம்
Question 87 Explanation: 
 தமிழ்நாட்டின் மாநில தொல்லியல் ஆய்வுக்குழுவானது ஈரோடு மாவட்டத்திற்கு அருகே மேற்கொண்டு வரும் கொடுமணல் அகழ்வாராய்ச்சியின்போது, 250 கற்குவைகளை அடையாளம் கண்டுள்ளது. ஒவ்வொரு கற்குவையைச்சுற்றிலும் பேரளவிலான கற்கள் வட்டமாக வைக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு கற்குவை மட்டும் முற்றத்துடன்கூடிய 2 அறைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.  இந்தக் கற்குவையில் இறந்தவரின் உடலை எரித்தபின்பு அவ்வெலும்புகளை ஓரறையிலும், மற்றோர் அறையில் இறந்தவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் வைத்துள்ளனர். இந்தவொரு கற்குவை மட்டும் ஏதாவது முக்கிய நபர் இறந்த கற்குவையாக இருக்கலாம். இதன் அருகில் ஈமச்சடங்கு செய்ய வைத்திருந்த பத்து மண் பானைகள் மண்ணில் புதைந்து காணப்படுகின்றன. மறுமையின் மீதான நம்பிக்கையின் காரணமாக தானியங்கள் நிரப்பப்பட்ட பானைகள் அவ்வறைகளுக்கு வெளியே வைக்கப்பட்டன. இது, பெருங்கற்காலத்தில் நிலவிவந்த மறுமைகுறித்த (இறந்தவர் மீண்டும் பிறப்பர் என்னும் நம்பிக்கை) நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.
Question 88
‘மோதலின்போதான பாலியல் வன்முறைகளை ஒழிப்பதற்கான பன்னாட்டு நாள்’ அனுசரிக்கப்படும் தேதி எது?
A
ஜூன் 19
B
ஜூன் 20
C
ஜூன் 21
D
ஜூன் 22
Question 88 Explanation: 
 மோதல்களின்போது மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகளை ஒரு முடிவுக்குக்கொண்டுவருவத -ற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், உலகம் முழுவதும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப் -பட்டு அதிலிருந்து தப்பிப்பிழைத்து வாழ்வோரை கெளரவிப்பதற்கும் மற்றும் இந்தக் குற்றங்களை ஒழித்துக்கட்டுவதற்காக தங்கள் இன்னுயிரை ஈந்தோருக்கு அஞ்சலி செலுத்தவதற்குமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.19 அன்று மோதலின்போதான பாலியல் வன்முறைகளை ஒழிப்பதற்கான பன்னாட்டு நாள் (International Day for the Elimination of Sexual Violence in Conflict) கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா. பாதுகாப்புக்குழுவின் ‘1820’ (2008) தீர்மானமானது கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன்.19ஆம் தேதியன்று ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் விதமாக இத்தேதி தேர்வுசெய்யப்பட்டது.
Question 89
துறைசார் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் யார்?
A
அமிதேஷ் குமார் சின்ஹா
B
ருச்சின் குப்தா
C
இராஜ்குமார் சிங்
D
கைலாஷ் செளத்ரி
Question 89 Explanation: 
 துறைசார் முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதற்காக மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஒரு திட்ட மேம்பாட்டு பிரிவை உருவாக்கியுள்ளது. இது, மத்திய புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் இணைச்செயலாளர் அமிதேஷ் குமார் சின்ஹா தலைமையிலானது. மேலும் பசுமை ஆற்றலுக்கான நாட்டின் 175 GW இலக்கை அடைவதற்கு இக்குழு உதவும். முதலீட்டாளர்கள் ஏற்றுக்கொள்வதற்கான அனைத்து முன் ஒப்புதல்களையுங்கொண்ட திட்டங்களை உருவாக்குவதை திட்ட மேம்பாட்டு பிரிவு நோக்கமாகக் கொண்டுள்ளது.
Question 90
‘தேசிய அரிவாள் செல் கருத்தரங்கம்’ என்ற தலைப்பில் ஓர் இணையவழிக் கருத்தரங்கை ஏற்பாடு செய்த மத்திய அமைச்சகம் எது?
A
சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்
B
வேளாண்மை மற்றும் உழவர்நல அமைச்சகம்
C
பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
D
அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்
Question 90 Explanation: 
 உலக அரிவாள் செல் நாளை முன்னிட்டு மத்திய பழங்குடியினர் நல அமைச்சகமும், FICCI’உம் மற்றும் இரண்டு தனியார் சுகாதார நிறுவனங்களும் இணைந்து, ‘தேசிய அரிவாள் செல் கருத்தரங்கம்’ என்ற தலைப்பில் ஓர் இணையவழிக் கருத்தரங்கை ஏற்பாடுசெய்தன. இதில் உரையாற்றிய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, அரிவாள் செல் தொடர்பான தேவையான தகவல்களை அளிக்கவும், புள்ளிவிவரங்களைச் சேகரிக்கவும், மத்திய அரசு புதிய இணையதளம் ஒன்றை அரசாங்கம் தொடங்கியுள்ளதாக அறிவித்தார்.  பதிவு செய்து கொள்வதற்கான வசதி, நோய்பற்றிய தகவல்கள், நோயை எதிர்கொள்வதற்காக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள், உடனுக்குடனான புள்ளிவிவரங்கள் கொண்ட அறிவிப்புப்பலகை ஆகிய அனைத்தும் இத்தளத்தில் உள்ளன. SCD நோயாளிகளுக்கு உதவுவதற்காக, ‘அதிரடி ஆராய்ச்சி’ என்னும் திட்டத்தை அமைச்சகம் தொடங்கியுள்ளது. ‘Stepping out of the shadows – Combating Sickle Cell Disease in India’ என்ற தலைப்பிலான அறிக்கையொன்றும் அப்போது வெளியிடப்பட்டது.
Question 91
அண்மையச் செய்திகளில் இடம்பெற்ற, ‘நவரக்ஷக்’ என்றால் என்ன?
A
இலகுரக தடுப்பு விமானம்
B
போர் விமானம்
C
தனிநபர் பாதுகாப்பு உடை
D
COVID–19 மருந்து
Question 91 Explanation: 
 தேசிய ஆராய்ச்சி வளர்ச்சிக்கழகம், ‘நவரக்ஷக்’ எனப்படும் தனிநபர் பாதுகாப்பு உடையை உற்பத்தி செய்வதற்கு ஐந்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியுள்ளது. கொல்கத்தா, பெங்களூரு, வதோதாரா, மும்பையைச் சார்ந்த இந்த ஐந்து உற்பத்தியாளர்களும் ஆண்டுக்கு பத்து லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில், கவச உடைகளை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளனர்.  ‘நவரக்ஷக்’ தனிநபர் பாதுகாப்பு உடையை, இந்திய கடற்படை மும்பை அஸ்வினி மருத்துவமனையின் கடற்படை மருத்துவ நிறுவனத்தின் புத்தாக்க மையம் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த உடையை, பாதுகாப்பு வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் பரிசோதித்து, சான்றளித்துள்ளது.
Question 92
தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
இரகுராம் இராஜன்
B
உர்ஜித் படேல்
C
U K சின்ஹா
D
M S சாஹூ
Question 92 Explanation: 
 இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல், தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 2020 ஜூன்.22 முதல் நான்காண்டு காலத்திற்கு உர்ஜித் படேல் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் தலைவராக இருப்பார். 2014ஆம் முதல் அந்நிறுவனத்தின் தலைவராக இருந்த விஜய் லக்ஷ்மன் கேல்கருக்கு பதிலாக உர்ஜித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2013’இல் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராகவும், 2016 முதல் 2018 வரை ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் உர்ஜித் படேல் பணியாற்றியுள்ளார்.
Question 93
நடப்பாண்டில் (2020) வரும் உலக ஏதிலிகள் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Every Action Counts
B
Everyone on Earth Matters
C
Anti–racism wins
D
Rights of Refugees
Question 93 Explanation: 
 உலகெங்குமுள்ள ஏதிலிகளின் நிலைகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூன்.20 அன்று உலக ஏதிலிகள் நாள் அனுசரிக்கப்படுகிறது. “Every Action Counts” என்பது இந்த ஆண்டில் (2020) வரும் இந்தச் சிறப்பு நாளுக்கான கருப்பொருளாகும். 2000 டிசம்பர்.4 அன்று, ஐ.நா பொது அவை, ஜூன்.20ஆம் தேதி உலக ஏதிலிகள் நாளாகக் கொண்டாடப்படும் என்று முடிவுசெய்தது. 1951ஆம் ஆண்டு நடைபெற்ற ஏதிலிகள் மாநாடும் அதன் 1967 நெறிமுறையும் உலகெங்கிலும் உள்ள ஏதிலிகளைப் பாதுகாக்கின்றன.
Question 94
அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய-அமெரிக்க அறிவியலாளர் யார்?
A
சேதுராமன் பஞ்சநாதன்
B
கேட்டினா மைக்கேல்
C
K சுப்பராவ்
D
சிட்டா பரல்
Question 94 Explanation: 
 மூத்த இந்திய-அமெரிக்க அறிவியலாளரான Dr.சேதுராமன் பஞ்சநாதனை அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (NSF) இயக்குநராக அமெரிக்க செனட் நியமித்துள்ளது. NSF என்பது அமெரிக்காவின் ஒரு முன்னணி அமைப்பாகும். இது அறிவியல் மற்றும் பொறியியல் அல்லாத மருத்துவத்துறைகளில் அடிப்படை ஆராய்ச்சியை ஊக்குவிக்கிறது. 58 வயதான சேதுராமன் பஞ்சநாதன், தற்போது, அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் தலைமை ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு அதிகாரியாக உள்ளார். அவர், பிரான்ஸ் கோர்டோவாவுக்கு பதிலாக NSF’இன் பதினைந்தாவது இயக்குநராக நியமிக்கப்படவுள்ளார். இந்தப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட இரண்டாவது இந்திய-அமெரிக்கராவார் இவர்.
Question 95
ஜூன்.24 அன்று மாஸ்கோவில் நடைபெற்ற இரஷ்ய வெற்றி அணிவகுப்பில் கலந்துகொண்ட இந்திய மத்திய அமைச்சர் யார்?
A
வெளியுறவுத்துறை அமைச்சர்
B
பாதுகாப்பு அமைச்சர்
C
வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர்
D
உள்துறை அமைச்சர்
Question 95 Explanation: 
 இரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஜூன்.24ஆம் தேதி நடைபெற்ற இரஷ்ய வெற்றி அணிவகுப்பில் இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். இரண்டாம் உலகப்போரில் இரஷ்யா அடைந்த வெற்றியின் 75ஆவது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, ‘வெற்றி அணிவகுப்பு’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  முன்னதாக, தனித்தனியாக, ஒரு முத்தரப்பு சேவை 75 உறுப்பினர்கொண்ட இந்திய இராணுவக்குழு இரஷ்ய இராணுவக்குழு மற்றும் அழைக்கப்பட்ட பிற குழுக்களுடன் வெற்றி அணிவகுப்பில் பங்கேற்க ஏற்கனவே மாஸ்கோ சென்றடைந்தது.
Question 96
பள்ளிமாணாக்கர்களுக்காக, ‘ஏக்து கேலோ, ஏக்து பதோ’ என்ற பெயரில் புதியதொரு முன்னெடுப்பைத் தொடங்கவுள்ள மாநில அரசு எது?
A
ஒடிசா
B
திரிபுரா
C
அஸ்ஸாம்
D
சிக்கிம்
Question 96 Explanation: 
 பள்ளிமாணாக்கர்களின் கற்றல் செயல்முறையை மேம்படுத்துவதற்காக திரிபுரா மாநில அரசு, ‘ஏக்து கேலோ, ஏக்து பதோ’ என்ற பெயரில் ஒரு புதியதொரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம், ஜூன்.25 முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்கு தொடங்கப்படவுள்ளது.  மாநில வழிகாட்டுதல்களின்படி, தினமும் காலையில் மாணாக்கர்களுக்கு அலைபேசி வழியாக அவர்களுக்கான பாடங்கள் அனுப்பப்படும். அதன்பின், அவர்களின் செயல்திறன் குறித்த கருத்து, பிற்பகலில் சேகரிக்கப்படும். திரிபுரா மாநிலத்தில், 4733 அரசு பள்ளிகளில் ஐந்து இலட்சம் மாணாக்கர் கல்விபயின்று வருகின்றனர்.
Question 97
பன்னாட்டுப் போக்குவரத்து அமைப்புடன் இணைந்து, “இந்தியாவில் கரியமிலவாயு வெளியேற்றமற்ற போக்குவரத்து” என்றவொன்றை தொடங்கவுள்ள அமைப்பு எது?
A
NITI ஆயோக்
B
இயற்கைக்கான உலகளாவிய நிதியம் – இந்தியா
C
இந்திய வனவியல் ஆராய்ச்சிக் கழகம்
D
இந்திய வன மேலாண்மை நிறுவனம்
Question 97 Explanation: 
 இந்தியாவில் கரியமில வாயு பயன்பாடு குறைவாகவுள்ள போக்குவரத்துக்கு வழிவகுக்கக்கூடிய “இந்தியாவில் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத போக்குவரத்து” குறித்த ஆய்வை, NITI ஆயோக் அமைப்பு பன்னாட்டு போக்குவரத்து அமைப்புடன் இணைந்து, ஜுன்.24ஆம் தேதியன்று தொடங்கியது. போக்குவரத்துக் கொள்கை வகுத்தல் தொடர்பான அரசுகளுக்கிடையேயான அமைப்பான, சர்வதேசப் போக்குவரத்து அமைப்பில், 2008ஆம் ஆண்டு முதல் இந்தியா உறுப்பினராக உள்ளது.  சர்வதேச போக்குவரத்து அமைப்பின் விரிவான நோக்கத்திற்கேற்ப, “கரியமில வாயு வெளியேற்றமற்ற போக்குவரத்து” திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்படும். இது, “வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் கரியமில வாயு வெளியற்றமற்ற போக்குவரத்து” என்ற திட்டத்தின் ஒருபகுதியாக மேற்கொள்ளப்பட உள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் கரியமில வாயு வெளியேற்றமற்ற போக்குவரத்துக்கான ஆலோசனைகளை வழங்கிவருகிறது. இந்தியா, அர்ஜென்டினா, அசர்பைஜான் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் தற்போது இதன் பங்குதாரர்களாக உள்ளன.
Question 98
திருநங்கைகளுக்கான சிறப்பு வசதிகளுடன் வட இந்தியாவின் முதல் She-Man நிலையமாக மாறியுள்ள இந்தியாவின் முதல் மெட்ரோ இரயில் நிலையம் எது?
A
தில்லி மெட்ரோ
B
நொய்டா மெட்ரோ
C
கொல்கத்தா மெட்ரோ
D
குருகிராம் மெட்ரோ
Question 98 Explanation: 
 பிரிவு 50 மெட்ரோ நிலையத்தை, ‘She-Man’ மெட்ரோ நிலையமாக மாற்றும் திட்டத்தை நொய்டா மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. செயல்படுத்தப்பட்டதும், திருநங்கைகளுக்கான வேலை வாய்ப்புகளுடன் கூடிய சிறப்பு வசதிகளுடன் வட இந்தியாவின் முதல், ‘She-Man’ மெட்ரோ இரயில் நிலையமாக இது மாறும். இந்த நிலையம் இளஞ்சிவப்பு வண்ண மெட்ரோ இரயில் நிலையங்களின் வரிசையில் இருக்கும். ‘She-Man’ நிலையம் அனைத்து பயணிகளுக்குமானது என்றபோதிலும், இது குறிப்பாக திருநங்கைகள் பயணிகளுக்கு உதவும்.
Question 99
‘COVID-19’ நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக, ‘மிஷன் ஜீரோ’ என்றவொரு திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
தமிழ்நாடு
B
மகாராஷ்டிரா
C
புது தில்லி
D
குஜராத்
Question 99 Explanation: 
 மகாராஷ்டிராவின் பிரகன் மும்பை மாநகராட்சி, COVID-19 தொற்றை எதிர்த்துப்போராடுவதற்காக ‘மிஷன் ஜீரோ’ என்னும் விரைவான செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இச்செயல்திட்டத்தின்கீழ், 50 மருந்தக வாகனங்கள் மும்பையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று 2 முதல் 3 வாரங்களுக்குள் சென்று நோயாளிகளுக்கு முதற்கட்ட பரிசோதனையை மேற்கொள்ளும். சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் தரவுகளின்படி, COVID-19 நோய்த்தொற்று பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது.
Question 100
நகர்ப்புற ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலம் எது?
A
மேற்கு வங்கம்
B
ஜார்க்கண்ட்
C
சத்தீஸ்கர்
D
ஆந்திர பிரதேசம்
Question 100 Explanation: 
 மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தின்படி நகர்ப்புற ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு உறுதியளிப்புத்திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக ஜார்க்கண்ட் அமைகிறது. ‘முக்யமந்திரி ஷ்ரமிக் யோஜனா’ என்று பெயரிடப்பட்ட இந்தத்திட்டம், நகர்ப்புறத்தில் வாழ்ந்துவரும் திறனேதுமற்ற தொழிலாளர்களுக்கு, ஒரு நிதியாண்டில், நூறு நாள் வேலைக்கு உறுதியளிக்கும்.  இத்திட்டத்தின்கீழ், கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட 15 நாளுக்குள் அந்நபருக்கு பணி கிடைக்கவில்லை என்றால், வேலையின்மை காரணமாக அந்நபருக்கு உதவித்தொகை வழங்கப்படும். முதலமைச்சர் தலைமை தாங்க, நகர அபிவிருத்தி அமைச்சர் துணைத்தலைவராக இருக்க நகர்ப்புற பணிவாய்ப்பு உத்தரவாத அவை ஒன்றும் அமைக்கப்படும்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!