Tnpsc

March 2nd Week 2021 Current Affairs Online Test in Tamil

நடப்பு நிகழ்வுகள் March 2nd Week Online Test - 2021 Tamil

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் March 2nd Week Online Test - 2021 Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
நடப்பாண்டில் (2021) வரும் தேசிய பாதுகாப்பு நாளுக்கான கருப் பொருள் என்ன?
A
சதக் சுரக்ஷா
B
நாரி சுரக்ஷா
C
சோஷியல் சுரக்ஷா
D
சைபர் சுரக்ஷா
Question 1 Explanation: 
பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.4 அன்று இந்தியாவில் தேசிய பாதுகாப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டில் (2021) வரும் தேசிய பாதுகாப்பு நாளுக்கான கருப்பொருளாக, ‘சதக் சுரக்ஷா’ (சாலை பாதுகாப்பு) என்பது தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு (2021) மார்ச்.4-10 வரை தேசிய பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படும்.
Question 2
பன்னாட்டு பெண்கள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
A
மார்ச் 7
B
மார்ச் 8
C
மார்ச் 9
D
மார்ச் 10
Question 3
ஆர்க்டிகா-M என்ற செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?
A
பிரேஸில்
B
பிரான்ஸ்
C
இரஷ்யா
D
ஆஸ்திரேலியா
Question 3 Explanation: 
ரஷ்ய விண்வெளி நிறுவனம் தனது ஆர்க்டிகா-M செயற்கைக்கோளை ஏவியது. இந்தச் செயற்கைக்கோள் ஆர்க்டிக் பிராந்தியத்தில் நிலவும் காலநிலையை கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டது. கஜகஸ்தா -னில் உள்ள ஏவுதளத்திலிருந்து சோயுஸ் ஏவுகலம்மூலம் இந்தச்செயற்-கைக்கோள் ஏவப்பட்டது. எரிசக்தி நிறைந்த பிராந்தியத்தை நாட்டின் வளர்ச்சி நலனுக்காக பயன்படுத்த இரஷ்யா முயற்சிசெய்துவருகிறது.
Question 4
அண்மையில் வீழ்ச்சிப்படைப்புழு பாதிப்பு பதிவான இடம் எது?
A
தேனி, தமிழ்நாடு
B
வயநாடு, கேரளா
C
நெல்லூர், ஆந்திர பிரதேசம்
D
மைசூரு, கர்நாடகா
Question 4 Explanation: 
அண்மையில், கேரள மாநிலம் வயநாட்டில் வீழ்ச்சிப்படைப்புழு பாதிப்பு காணப்பட்டது. அது, பயிர்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்காச்சோளம் மற்றும் வாழைப்பழ சாகுபடிகளில் இந்தப் புழு தாக்குதல் பதிவாகியுள்ளது.
Question 5
பிரதம அமைச்சரின் மக்கள் மருந்தகம் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் எது?
A
இந்திய மருந்து பொதுத்துறை நிறுவனங்களின் பணியகம்
B
இந்திய மருந்துகள் நிறுவனம்
C
ஹிந்துஸ்தான் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் லிட்
D
IFFCO
Question 5 Explanation: 
பிரதமர் மக்கள் மருந்தக திட்டம் (PM-BJP) என்பது மருந்துத் துறையின் ஒரு முயற்சியாகும்; இதன்கீழ், தரமான மருந்துகள் பொது மக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டம், இந்திய மருந்து பொதுத்துறை நிறுவனங்களின் பணியகத்தின்மூலம் செயல்படுத்தப்படு -கிறது. மக்கள் மருந்தக திட்டம் குறித்து அதிக விழிப்புணர்வை உருவாக்குவதற்காக, மக்கள் மருந்தக வாரம் நாடு முழுவதும் மார்ச் 1 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது. ‘மக்கள் மருந்தகம் - சேவையும், வேலைவாய்ப்பும்’ என்பது இதன் கருப் பொருளாகும். வாரத்தின் கடைசி நாளான மார்ச்.7 அன்று மக்கள் மருந்தக நாள் கொண்டாடப்படுகிறது.
Question 6
பாலைவனக்கொடி (Desert Flag) என்னும் பன்னாட்டளவிலான பயிற்சியை நடத்தும் நாடு?
A
UAE
B
USA
C
UK
D
பிரான்ஸ்
Question 6 Explanation: 
‘பாலைவனக்கொடி’ என்பது ஒரு பன்னாட்டுப்பயிற்சியாகும். இது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்தியா, பிரான்ஸ் மற்றும் USA உட்பட பத்து நாடுகள் இந்தப்பயிற்சியில் பங்கேற்கவுள்ளன. இப்பயிற்சி, இம்மாதம் மூன்றுவாரகாலத்துக்கு நடைபெறும். இப்பயிற்சியானது பல, தீவிரமான வான்போர்வகை பயிற்சிகளை உள்ளடக்கும். இப்பயிற்சியில் பங்கேற்க இந்திய வான் படையின் Su-30-MKI மற்றும் C-17s போர் வானூர்திகள் சமீபத்தில் புறப்பட்டன.
Question 7
டைட்டனோசரின் புதைப்படிவங்கள் அண்மையில் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டன?
A
அர்ஜென்டினா
B
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
C
ஐக்கிய அரபு அமீரகம்
D
இரஷ்யா
Question 7 Explanation: 
டைட்டனோசர் என்பது நான்கு கால்களில் நடந்துசெல்லும் நீண்ட கழுத்துடைய தாவரம் உண்ணும் டைனோசர்களின் குழுவாகும். 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரெட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்த ‘Ninjatitan zapatai’ என்ற டைனோசர் இனத்தின் புதைப்படிவங்களை அறிவியலாளர்கள் அண்மையில் கண்டுபிடித்தனர். கண்டுபிடிக்கப்பட்ட புதைப்படிவங்கள், டைட்டனோசர்கள் என அழைக்கப்படும் டைனோசர் குழுவின் மிகப்பழமையான உறுப்பினர் என்று கூறப்படுகிறது.
Question 8
பின்வரும் எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ், இந்திய தரைவழி துறைமுகங்கள் ஆணையம் செயல்படுகிறது?
A
உள்துறை அமைச்சகம்
B
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
C
துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வழிப்போக்குவரத்து அமைச்சகம்
D
ஜல்சக்தி அமைச்சகம்
Question 8 Explanation: 
இந்திய தரைவழி துறைமுகங்கள் ஆணையம் 2012’இல் நிறுவப்பட்டது. இது உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வமான அமைப்பாகும். இந்தியாவில் தரைவழியாக எல்லையை கடந்துசெல்லும் பல்வேறு வாகனங்களை தணிக்கை செய்வது, எல்லைகடந்து செல்வபர்களை கண்காணிப்பது, ஒருங்கிணைந்த சோதனைச்சாவடிகளை அமைப்பது, அவற்றை பராமரிப்பது, நிர்வகிப்பது ஆகியவை இதன் பொறுப்பாகும். இதன் 9ஆவது நிறுவு நாள், 2021 மார்ச்.20 அன்று அனுசரிக்கப்பட்டது.
Question 9
பின்வரும் எந்த உச்சிமாநாட்டில், சாகர்-மந்தன்: வணிக கடல்சார் தளம் விழிப்புணர்வு மையம் தொடங்கப்பட்டது?
A
இந்திய துறைமுகங்கள் உச்சிமாநாடு
B
இந்திய கப்பல் வாணிப உச்சிமாநாடு
C
இந்திய நீர்வழிப்போக்குவரத்து உச்சிமாநாடு
Question 9 Explanation: 
விளையாட்டு, கப்பல் மற்றும் நீர்வழிப்போக்குவரத்து அமைச்சகத்தால் ஏற்பாடுசெய்யப்பட்ட, ‘இந்திய கடல்சார் உச்சிமாநாடு - 2021’ஐ பிரதமர் மோடி திறந்துவைத்தார். இதன்சமயம், சாகர்-மந்தன்: வணிக கடல்சார் தளம் விழிப்புணர்வு மையம் தொடங்கப்பட்டது. இது கடல்சார் பாதுகாப்பு, தேடல் மற்றும் மீட்புத்திறன்கள், பாதுகாப்பு மற்றும் கடற்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு தகவலமைப்பாகும்.
Question 10
கீழ்க்காணும் எந்த PSLV’ஐ பயன்படுத்தி, ‘சிந்து நேத்ரா’ என்ற செயற்கைக்கோள் அண்மையில் வெற்றிகரமாக ஏவப்பட்டது?
A
PSLV-C51
B
PSLV-C52
C
PSLV-C53
D
PSLV-C54
Question 10 Explanation: 
‘சிந்து நேத்ரா’ என்னும் செயற்கைக்கோள் சமீபத்தில் விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்தியாவின் கண்காணிப்பு திறனை அதிக -ரிப்பதற்கும், இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் நடவடிக்கைகளை கண்காணிப்பதை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இதை உருவாக்கியது. ISRO’இன் PSLV-C51’ஐப் பயன்படுத்தி இச்செயற்கைக்கோள் ஏவப்பட்டது. இந்தச் செயற்கைக்கோள், இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் உலவும் போர்க்கப்பல்கள் மற்றும் வணிகக்கப்பல்களை தானாக அடையாளம் காணும் திறன்கொண்டது.
Question 11
நடப்பாண்டில் (2021) வரும் உலக செவித்திறன் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Hearing care for All
B
Save Hearing
C
Care for hearing
D
Hearing care
Question 11 Explanation: 
செவித்திறன் இழப்பைத் தடுக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மார்ச்.3ஆம் தேதி உலக செவித்திறன் நாள் அனுசரிக்கப்படுகிறது. இது உலக சுகாதார அமைப்பின் குருட்டுத்தன்மை மற்றும் காதுகேளாமை தடுப்பு அலுவலகத்தால் ஒவ்வோர் ஆண்டும் நட -த்தப்படும் ஒரு பிரச்சாரமாகும். 2021ஆம் ஆண்டிற்கான பிரச்சாரத்தின் கருப்பொருள் “Hearing care for All”.
Question 12
உலகின் முதல் வாத்தலகி (platypus) சரணாலயத்தை உருவாக்கு -கிற நாடு எது?
A
இந்தியா
B
இலங்கை
C
பாகிஸ்தான்
D
ஆஸ்திரேலியா
Question 12 Explanation: 
நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கமும் ஆஸ்திரேலியாவின் தரோங்கா பாதுகாப்பு சங்கமும் இணைந்து உலகின் முதல் பிளாட்டிபஸ் சரணாலய -த்தை கட்டுவதாக அறிவித்தன. இது, காலநிலை மாற்றத்தால் அழிவை எதிர்கொண்டுள்ள வாத்தலகி பாலூட்டிகளின் இனப்பெருக்கம் மற்றும் மறுவாழ்வை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிட்னியில் இருந்து 390 கிமீ தூரத்தில் உள்ள மிருகக்காட்சிசாலையில் இந்த வசதி உருவாக்கப்படவுள்ளது.
Question 13
பன்னாட்டு கழிவெடுப்பவர்கள் (Waste Pickers’) நாள் கடைபிடிக் -கப்படுகிற தேதி எது?
A
மார்ச் 1
B
மார்ச் 2
C
மார்ச் 3
D
மார்ச் 4
Question 13 Explanation: 
11 தொழிலாளர்களின் கொடூரமான இறப்புக்கு வழிவகுத்த கொலம்பிய படுகொலையை குறிக்கும் வகையில் மார்ச்.1ஆம் தேதி பன்னாட்டு கழிவு எடுப்பவர்கள் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் உலகெங்கிலும் உள்ள கழிவெடுப்பவர்கள் / மறுசுழற்சி செய்பவர்களுக்கு குரல் மற்றும் அங்கீகாரத்தை வழங்க முற்படுகிறது.
Question 14
நடப்பாண்டில் (2021) வரும் உலக வனவுயிரிகள் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Forests and Livelihoods: Sustaining People and Planet
B
For people, For planet, For ecosystem
C
Forests – Pillars for people and planet
D
மேற்கண்ட எதுவுமில்லை
Question 14 Explanation: 
வனவுயிரிகளைக் கொண்டாடுவதற்கும், மனித நடவடிக்கைகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் வனவிலங்குகளில் ஏற்படும் பாதகமான தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உலக வனவுயிரி நாள் மார்ச்.3 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு (2021), “Forests and Livelihoods: Sustaining People and Planet” என்ற கருப்பொருளின்கீழ் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
Question 15
NADMP என்பதன் முழு வடிவம் என்ன?
A
National Agriculture Disaster Management Plan
B
Ninth Agriculture Disaster Management Plan
C
New Agriculture Disaster Management Plan
D
Ninth Agriculture Disaster Mitigation Planning
Question 15 Explanation: 
வறட்சி, வெள்ளம் மற்றும் COVID-19 கொள்ளைநோய்போன்ற திடீர் இயற்கை பேரிடர்களுக்கு சரியான நேரத்தில் பதிலளிப்பதை உறுதி செய்வதில் தேசிய வேளாண் பேரிடர் மேலாண்மை திட்டம் (NADMP) மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு வழிகாட்ட முயற்சி செய்கிறது. வேளாண் துறைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 34 இடர்களை இது அடையாளங்காட்டுகிறது. வெப்ப அலைகள், பூகம்பங்கள், விலங்குகளின் தாக்குதல்கள், பாலைவனமாக்கல், வேளாண் தீ, சூறாவளிகள் மற்றும் இரசாயனங்கள் மீது அதிக சார்பு ஆகியவை இவற்றுள் அடங்கும்.
Question 16
இந்திய கடல்சார் துறையை சீரமைக்கும் நோக்குடன் சமீபத்தில் வெளியிடப்பட்ட உத்தி எது?
A
கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030
B
கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2032
C
கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2035
D
கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2040
Question 16 Explanation: 
கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030 என்பது இந்திய கடல்சார் துறையை சீரமைக்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்ட பத்தாண்டுக்கா -ன உத்தியாகும். இது, `3 இலட்சம் கோடி முதலீட்டை ஈர்க்கவும், 20 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் முயல்கிறது. முக்கிய துறைமுகங்களிலிருந்து `20,000 கோடி மதிப்புள்ள ஆண்டு வருவாய்த் திறனை அதிகரிக்கவும் இந்த உத்தி முயல்கிறது.
Question 17
அரோமா திட்டத்தின் ஒருபகுதியாக ஜம்முவில் பயிரிடப்படுகிற மூலிகை எது?
A
லாவெண்டர்
B
வேர்க்கோசு
C
புதினா
D
துளசி
Question 17 Explanation: 
2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அரோமா திட்டத்தின் ஒருபகுதியாக ஜம்முவில் லாவெண்டர் பயிரிடப்பட்டுவருகிறது. ‘லாவெண்டர்’ என்பது மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு நறுமண மூலிகையாகும். இது, வணிகரீதியாக ஒரு முக்கியமான பயிராக கருதப்படுகிறது, முக்கியமாக அத்தியாவசிய எண்ணெய்களை உற்பத்தி செய்வதற்காக இது பயிரிடப்ப -டுகிறது. ஒரு லிட்டர் லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய் 10,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
Question 18
ICLED என்பதன் முழு வடிவம் என்ன?
A
Inter-band cascade light emitting device
B
Interior-based cascade light emitting diode
C
Intern link- band inter-band cascade light emitting
D
மேற்கண்ட எதுவுமில்லை
Question 18 Explanation: 
ICLED அல்லது Interband cascade light emitting device என்பது ஒரு புதிய வகை உயராற்றல்கொண்ட ஒளி உமிழும் டையோடு ஆகும், அவை பல் வேறு வேதிப்பொருட்களின் அளவுபகுப்பாய்வில் பயன்படுத்தப்படுகின்ற -ன. இது இடைநிலை IR அலைநீள பகுதிகளில் ஒளியை வெளியிடுகிற -து. மீத்தேன் உமிழ்வை அதிக துல்லியத்துடன் கண்டறிவதற்கு, மலிவு விலை உணரிகளை உருவாக்க இது சமீபத்தில் பயன்படுத்தப்பட்டது.
Question 19
ஆஸ்திரேலியாவின் கீழைக்கடற்கரையில் அண்மையில் எந்த அரியவகை ஆஸ்திரேலிய தேனீ காணப்பட்டது?
A
Pharohylaeus lactiferous
B
Apis dorsata
C
Apis florea
D
Apis cerana indica
Question 19 Explanation: 
Pharohylaeus lactiferous என்பது ஓர் அரிய வகை ஆஸ்திரேலிய தேனீ வகையாகும். இது சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் கீழைக்கடற்கரையில் தென்பட்டது. இது கடைசியாக, ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, 1923’இல் குயின்ஸ்லாந்தில் காணப்பட்டது. இதுவரை அறுவர் மட்டுமே இதனை கண்டறிந்துள்ளனர். காட்டுத்தீ, நில துண்டாடல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் இந்த முதுகெலு -ம்பிலிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன.
Question 20
இந்தியாவின் மிகப்பெரிய தரைநிலை ஆப்டிகல் தொலைநோக் -கி நிறுவப்பட்டுள்ள மாநிலம் எது?
A
உத்தரகண்ட்
B
கோவா
C
கர்நாடகா
D
பஞ்சாப்
Question 20 Explanation: 
உத்தரகண்ட் நைனிடால் பகுதியில் உள்ள தேவஸ்தல் என்ற இடத்தில் உலகத்தரத்திலான 3.6 மீட்டர் ஆப்டிக்கல் தொலைநோக்கி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத்தொலைநோக்கி இந்தோ-பெல்ஜிய கூட்டு முயற்சியின் விளைவாகவும், இரஷ்ய அறிவியல் அகாதமி உதவியுடனும் கடந்த 2007’இல் நிறுவப்பட்டதாகும். தன்னாட்சி ஆராய்ச்சி அமைப்பான ஆர்யபட்டா கூர்நோக்கு அறிவியல் பற்றிய ஆராய்ச்சி நிறுவனத்தால் இந்தத் தொலைநோக்கி இயக்கப்பட உள்ளது. இந்த அமைப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கி வருகிறது.
Question 21
‘உலக செவித்திறன் அறிக்கை’யை வெளியிட்ட அமைப்பு எது?
A
WHO
B
FAO
C
IMF
D
ADB
Question 21 Explanation: 
உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) கேட்புத்திறன் தொடர்பான முதல் அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. இது, மார்ச்.3 அன்று உலக செவித்திறன் நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்த அறிக் -கையின்படி, உலகளவில் கிட்டத்தட்ட 2.5 பில்லியன் மக்கள், அதாவது நான்கில் ஒருவர், வரும் 2050’க்குள் ஓரளவு செவித்திறன் இழப்புடன் வாழ்வார்கள். அவர்களுள் 700 மில்லியன்பேருக்கு செவிப்புலன் மற்றும் மறுவாழ்வு சேவைகளுக்கான அணுகல் தேவைப்படும்.
Question 22
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூக மற்றும் கல்வி நிலைமைகள் குறித்து அதன் முதல் ஆய்வை நடத்தவுள்ள மாநிலம் எது?
A
ஹரியானா
B
ஒடிஸா
C
மத்திய பிரதேசம்
D
மகாராஷ்டிரா
Question 22 Explanation: 
ஒடிஸா மாநில அரசாங்கம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூக மற்றும் கல்வி நிலைமைகள் குறித்த முதல் மாநில ஆய்வைத்தொடங்கவுள்ளது. அம்மாநிலத்தில் கிட்டத்தட்ட 209 சமூகத்தினர் சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இனங்காணப்பட்டுள்ளனர். அது, மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 54 சதவீதத்தை உள்ளடக்கிய -தாகும். இதற்கு ஒடிஸா மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
Question 23
WAN IFRAஆல் ‘2020ஆம் ஆண்டின் சாம்பியன் வெளியீட்டாளர்’ என்று அறிவிக்கப்பட்ட வெளியீட்டு நிறுவனம் எது?
A
தி ஹிந்து
B
எக்ஸ்பிரஸ் வெளியீட்டு நிறுவனம்
C
தினத்தந்தி
D
மேற்கண்ட எதுவுமில்லை
Question 23 Explanation: 
WAN IFRA’இன் தெற்காசிய டிஜிட்டல் மீடியா விருதுகளில், ‘தி ஹிந்து’ குழுமம் 2 தங்கங்களையும் 2 வெள்ளிகளையும் வென்றது. உலக செய்தி வெளியீட்டாளர்கள் சங்கம் அல்லது WAN-IFRA என்பது உலகில் உள்ள பத்திரிகைகளின் அமைப்பாகும். WAN IFRAஆல் ‘2020ஆம் ஆண்டின் சாம்பியன் வெளியீட்டாளர்’ என்று ‘தி ஹிந்து’ குழு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தி ஹிந்து’வின் #KeepTheHabit என்ற பரப்புரை ‘Best Native Advertising/Branded Content Campaign’ பிரிவில் தங்கம் வென்றது. ஸ்போர்ட்ஸ்டாரின் வலைத்தளம் ‘சிறந்த வாழ்க்கை முறை, விளையாட்டு, பொழுதுபோக்கு வலைத்தளம் அல்லது அலைப்பேசி சேவைகள்’ பிரிவில் தங்கம் வென்றது. ________________________________________
Question 24
இந்தியா தலைமையிலான தீர்மானத்தின் அடிப்படையில், UNGA, 2023ஆம் ஆண்டை எந்தச் சிறப்பு ஆண்டாக அறிவித்துள்ளது?
A
சர்வதேச தினை ஆண்டு
B
சர்வதேச முட்டை ஆண்டு
C
சர்வதேச பால் ஆண்டு
D
சர்வதேச அரிசி ஆண்டு
Question 24 Explanation: 
ஐநா பொது அவையானது வரும் 2023ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக ஒருமனதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐநா பொது அவையில் இந்தியா, வங்கதேசம், நேபாளம், நைஜீரியா, ரஷ்யா மற்றும் செனகல் ஆகிய நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்தை எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளும் ஆதரித்தன.
Question 25
சிமிலிபால் உயிர்க்கோள இருப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?
A
ஒடிஸா
B
உத்தரகண்ட்
C
இராஜஸ்தான்
D
கோவா
Question 25 Explanation: 
சிமிலிபால் உயிர்க்கோள இருப்பகம் என்பது சிமிலிபால் தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை உள் -ளடக்கியதாகும். இது, கிழக்குத்தொடர்ச்சிமலையின் கிழக்கு முனையில் ஒடிஸாவில் அமைந்துள்ளது. ‘சிமிலிபால்’ என்ற பெயர் இலவம்பஞ்சு மரம் என்று பொருள்படும் ‘சிமுல்’ என்பதிலிருந்து உருவானதாகும். சமீபத்தில், இந்தத் தேசிய பூங்காவில் காட்டுத்தீ ஏற்பட்டு தொடர்ந்து ஒரு வாரகாலமாக எரிந்துவருகிறது.
Question 26
10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை பிரிவில், ‘Ease of Living Index-2020’இன்படி, சிறந்த நகரமாக உருவெடுத்த நகரம் எது?
A
புனே
B
சண்டிகர்
C
சென்னை
D
பெங்களூரு
Question 26 Explanation: 
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள, ‘Ease of Living Index-2020’இன்படி பெங்களூரு சிறந்த நகரமாக உருவெடுத்துள்ளது. 2020ஆம் ஆண்டில், மதிப்பீட்டுப் பயிற்சி நடத்தப்பட்ட நகரங்களுக்கான தரவரிசை அறிவிக்கப்பட்டது. மதிப்பீட்டுப் பயிற்சியில் சுமார் 111 நகரங்கள் பங்கேற்றன. இப்பட்டியலில், தமிழ்நாட் -டைச்சார்ந்த சென்னை நான்காவது இடமும், கோயம்புத்தூர் ஏழாவது இடமும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Question 27
பாவோ தான் என்பது கீழ்க்காணும் எந்த இந்திய மாநிலத்தில் பயிரிடப்படுகிற அரிசி வகையாகும்?
A
மேற்கு வங்கம்
B
அஸ்ஸாம்
C
ஒடிஸா
D
கர்நாடகா
Question 27 Explanation: 
‘பாவோ தான்’ என்பது இரும்புச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி வகைகளுள் ஒன்றாகும். இது, அஸ்ஸாம் மாநிலத்தில், பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் உள்ள வண்டல் மண்ணில் பயிரிடப்படுகிறது. சமீபத்தில், இந்தச் ‘சிவப்பு அரிசி’யின் முதல் சரக்கு அமெரிக்காவிற்கு (USA) அனுப்பப்பட்டது. இவ்வ -ரிசியின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், இது எந்த இரசாயன உரத்தையும் பயன்படுத்தாமல் வளர்க்கப்படுகிறது.
Question 28
சமீபத்தில் வெளியிடப்பட்ட நகராட்சி செயல்திறன் குறியீட்டின்படி, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகைகொண்ட நகரங்களின் பிரிவில், முதலிடத்தைப் பிடித்த நகரம் எது?
A
இந்தூர்
B
லக்னோ
C
சூரத்
D
போபால்
Question 28 Explanation: 
மத்திய அரசானது அண்மையில் நகராட்சி செயல்திறன் குறியீட்டை வெளியிட்டது. இந்தக் குறியீட்டில், 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகைகொண்ட நகரங்களின் பிரிவில், இந்தூர் நகரம் முதலிடத்தைப் பிடித்தது. அதைத்தொடர்ந்து சூரத் மற்றும் போபால் ஆகிய நகரங்கள் உள்ளன. பத்து இலட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகைகொண்ட நகரங்களின் பிரிவில் புது தில்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து திருப்பதி மற்றும் காந்திநகர் ஆகிய நகரங்கள் உள்ளன.
Question 29
மத்திய தொழிலகங்கள் பாதுகாப்புப்படையின் (CISF) உதய நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
A
மார்ச் 5
B
மார்ச் 8
C
மார்ச் 10
D
மார்ச் 11
Question 29 Explanation: 
மத்திய தொழிலகங்கள் பாதுகாப்புப்படையின் உருவாக்க நாளானது ஆண்டுதோறும் மார்ச்.10 அன்று கொண்டாடப்படுகிறது. கடந்த 1969ஆம் ஆண்டு இதே நாளில், இந்திய நாடாளுமன்ற சட்டத்தின்கீழ் 2,800 படைவீரர்களுடன் CISF உருவாக்கப்பட்டது. இது நேரடியாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கி வருகிறது. CISF’இன் தலைமை -யகம் புது தில்லியில் அமைந்துள்ளது.
Question 30
அண்மையில், ‘உணவு கழிவு குறியீட்டு அறிக்கை – 2021’ஐ வெளியிட்ட அமைப்பு எது?
A
UNEP
B
UNESCO
C
UNCTAD
D
FAO
Question 30 Explanation: 
ஐநா சுற்றுச்சூழல் திட்டமானது (UNEP) ‘உணவு கழிவு குறியீட்டறிக்கை – 2021’ஐ வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, உலகம் முழுவதும் 931 மில்லியன் டன் உணவு வீணடிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வீணடிக்கப்பட்ட மொத்த உணவில் 61% வீடுகளிலிருந்தும், 26% உண -வு சேவைகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களிலிருந்தும், 13% சில்ல -றை விற்பனை நிறுவனங்களிலிருந்தும் வந்துள்ளதாக இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
Question 31
ஐக்கிய நாடுகளின் ஐரோப்பாவுக்கான பொருளாதார ஆணையத் -தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
A
ஜெனிவா
B
பிரஸ்ஸல்ஸ்
C
ரோம்
D
பாரிஸ்
Question 31 Explanation: 
ஐரோப்பாவுக்கான ஐநா பொருளாதார ஆணையத்தை (UNECE) 1947’இல் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் (ECOSOC) அமைத்தது. இதன் தலைமையகம் சுவிச்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. UNECE வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின்படி, கரியமில வாயு நடுநிலைமைத்தன்மையை அடைவதற்கு, புதைப்படிவ மின்னுற்பத்தியிலும் தொழிலகங்களிலிருந்தும் வெளியேற்றப்படும் கரிய -மிலவாயுவை சேமிப்பது அவசியமாகும்.
Question 32
OPELIP என்பது பின்வரும் எந்த அமைப்பால் நிதியளிக்கப்படுகிற ஒரு பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டமாகும்?
A
உலக வங்கி
B
IFAD
C
IMF
D
ADB
Question 32 Explanation: 
ஒடிஸா மாநிலத்தில் வாழும் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியி -னர் குழுக்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் (Odisha Particularly Vulnerable Tribal Groups Empowerment and Livelihoods Improvement Programme - OPELIP) என்பது வேளாண் மேம்பாட்டுக்கான பன்னாட்டு நிதியத்தால் (IFAD) நிதியளிக்கப்பட்ட ஒரு திட்டமாகும். திறன் மேம்பாடு மற்றும் நவீன விவசாய நடைமுறைகள் மூலம் வாழ்வை மேம்படுத்துதல் மற்றும் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களிடையே வறுமையை குறைப்பதே இதன் நோக்கம்.
Question 33
ICRISAT’இன் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
A
ஹைதராபாத்
B
சென்னை
C
மும்பை
D
பெங்களூரு
Question 33 Explanation: 
மித வறட்சியான வெப்பமண்டலங்களுக்கான சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனம் (ICRISAT) என்பது கிராமப்புற மேம்பாட்டுக்கான வேளாண் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இதன் தலை -மையகம் ஹைதராபாத்தின் பதஞ்செருவில் அமைந்துள்ளது. OPELIP திட்டத்தின்மூலம், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்க -ளுக்கான திறன்மேம்பாட்டு முயற்சிகளை வழங்குவதற்காக ஒடிஸா அரசாங்கத்தால் இது சமீபத்தில் இணைக்கப்பட்டது.
Question 34
CARICOM’இன் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
A
தென்னாப்பிரிக்கா
B
கயானா
C
ஜிம்பாப்வே
D
நமீபியா
Question 34 Explanation: 
CARICOM என்பது கரீபிய சமூகத்தை குறிக்கிறது. இது, கடந்த 1973’இல் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் கயானாவின் ஜார்ஜ்டெளனில் அமைந்துள்ளது. இது கரீபிய சமூகம் மற்றும் பொதுவான சந்தை என்றும் அழைக்கப்படுகிறது.
Question 35
COVID-19 தடுப்பூசிகளை நட்புநாடுகளுக்கு வழங்கும் இந்தியாவி -ன் முன்னெடுப்பின் பெயர் என்ன?
A
Vaccine Maitri
B
Vaccine to Mitron
C
Bharat Vaccine Mitra
D
India contributes
Question 35 Explanation: 
‘Vaccine Maitri’ முன்னெடுப்பானது கடந்த ஜன.20 அன்று தொடங்கப்பட் -டது. இந்த முன்னெடுப்பின்கீழ், இந்தியா தனது அண்டை நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட COVID-19 தடுப்பூசிகளை வழங்குகிறது. பூடான் மற்றும் மாலத்தீவுகள்தான் தடுப்பூசிகளைப்பெற்ற முதல் நாடுகள். இவ்விரு நாடுகளைத்தொடர்ந்து வங்காளதேசம், நேபாளம், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. அண்மையில் கயானா, சமைக்கா மற்றும் நிகரகுவா ஆகிய நாடுகளுக்கு COVID-19 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன.
Question 36
நாகர்ஹோளே புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?
A
கர்நாடகா
B
ஆந்திர பிரதேசம்
C
மகாராஷ்டிரா
D
கோவா
Question 36 Explanation: 
முன்பு ராஜீவ் காந்தி (நாகர்ஹோளே) தேசிய பூங்கா என்றழைக்கப்பட்ட நாகர்ஹோளே புலிகள் காப்பகம் என்பது கர்நாடகா மாநிலத்தில் உள்ள வனவுயிரி காப்பகமாகும். இது நீலகிரி உயிர்க்கோள இருப்பகதத்தின் ஒருபகுதியாகும். இதற்கு நாகர்ஹோளே ஆற்றின் பெயரிடப்பட்டுள்ளது, கன்னட மொழியில் இதற்கு ‘பாம்பாறு’ எனப்பொருள். சமீபத்தில் இந்தக் காப்பகத்தில் ஏற்பட்ட ஒரு பெரிய காட்டுத்தீயில் சிக்கி பல ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதிகள் அழிந்தன.
Question 37
அண்மையில் கண்டறியப்பட்ட, ‘விண்வெளி சூறாவளி’, புவியின் எந்தப்பகுதியில் காணப்பட்டது?
A
வட துருவம்
B
தென் துருவம்
C
வெப்பமண்டலத்திடை காற்றழுத்தத்தாழ்வு மண்டலம்
D
டுக்கோட்டுப்பகுதி
Question 37 Explanation: 
அறிவியலாளர்கள் முதன்முறையாக ஒரு ‘விண்வெளி சூறாவளி’யைக் கண்டுபிடித்தனர். இச்சூறாவளி, புவியின் மேல் வளிமண்டலத்தில், வட துருவத்தின் மீது எட்டு மணி நேரம் வீசியது. அமெரிக்கா, நார்வே, சீனா மற்றும் ஐக்கியப்பேரரசு ஆகிய நாடுகளின் அறிவியலாளர்கள் குழுமம், பாதுகாப்பு வானிலை செயற்கைக்கோள் திட்டத்தின் செயற்கைக்கோள் -கள் மற்றும் ஒரு முப்பரிமாண காந்த மண்டலத்தை மாதிரியாகப் பயன்படுத்தி அச்சூறாவளியின் படத்தைக் கூர்ந்து தயாரித்தது.
Question 38
உலக உணவுவிலைக்குறியீட்டை’ வெளியிடுகிற அமைப்பு எது?
A
உலக வங்கி
B
உணவு மற்றும் உழவு அமைப்பு
C
பன்னாட்டுச் செலவாணி நிதியம்
D
IFAD
Question 38 Explanation: 
உணவு மற்றும் உழவு அமைப்பு (FAO) உணவு விலைக்குறியீட்டை வெளியிட்டு வருகிறது. இது தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பால் பொருட்கள், இறைச்சி மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் மாதாந்திர விலை ஏற்ற இறக்கங்களை அளவிடுகிறது. சமீபத்திய ஜனவரி மாத புள்ளிவிவரத்தின்படி, பிப்ரவரி மாதத்தில் உலக உணவுவிலைகள் தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக உயர்ந்தன. 2014 ஜூலை முதல் இந்தக் குறியீட்டு எண் உயர்ந்துகொண்டே செல்கிறது. சர்க்கரை மற்றும் தாவர எண்ணெய்களின் விலை உயர்வே இந்தக் குறியீட்டு எண்ணின் உயர்வுக்கு வழிவகுக்கிறது.
Question 39
எந்த ஆற்றின்மீது, ‘நட்புப்பாலம்’ கட்டப்பட்டுள்ளது?
A
பிரம்மபுத்திரா
B
யமுனை
C
கோசி
D
பெனி
Question 39 Explanation: 
திரிபுரா மாநிலத்தில் பாயும் பெனி ஆற்றின்மீது, 1.9 கிமீ நீளத்திற்கு கட்டப் -பட்டுள்ள பாலந்தான், ‘நட்புப்பாலம்’. இந்தப்பாலம், இந்தியாவையும் வங் -காளதேசத்தையும் இணைக்கிறது. இப்பாலத்தை தேசிய நெடுஞ்சாலை -கள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கழகம், `133 கோடி செலவில் கட்டியுள்ளது.
Question 40
பிரம்மோஸ் ஏவுகணையை வாங்குவதற்காக அண்மையில் இந் -தியாவுடன் ஒப்பந்தம் செய்த நாடு எது?
A
பாகிஸ்தான்
B
பிலிப்பைன்ஸ்
C
இலங்கை
D
இந்தோனேசியா
Question 40 Explanation: 
பிரம்மோஸ் என்பது ஒரு நடுத்தர சூப்பர்சோனிக் ஏவுகணை ஆகும். இது இந்தியாவின் DRDO மற்றும் இரஷ்யாவின் மஷினோஸ்ட்ரோயீனியா ஆகியவற்றால் அமைக்கப்பட்ட கூட்டு நிறுவனமான பிரம்மோஸ் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது மற்றும் தயாரிக்கப்பட்டதாகும். நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், வானூர்திகள் அல்லது நிலஞ்சார் தளங்களிலிருந்து இதை ஏவலாம். இந்த ஏவுகணையை வாங்குவதற்காக பிலிப்பைன்ஸ் நாடு சமீபத்தில் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது.
Question 41
நடப்பாண்டில் (2021) வந்த பன்னாட்டு பெண்கள் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Educate Organise and Agitate
B
Gender Equality: March against Patriarchy
C
Women in leadership: Achieving an equal future in a COVID-19 world
D
Impact of COVID-19 on women
Question 41 Explanation: 
மகளிர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் அவர்களது சாதனைகளை முன்னிலைப்படுத்தும் நோக்கோடு சர்வதேச பெண்கள் நாள் ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.8 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான (2021) கருப்பொருள் “Women in leadership: Achieving an equal future in a COVID-19 world” என்பதாகும். ஐநா அவையின் பெண்கள் அமைப்பை பொருத்தவரை, உலகெங்கிலும் தலைமைப்பாத்திரங்களில் பெண்கள் குறைவாகவே உள்ளனர்.
Question 42
சமீபசெய்திகளில் இடம்பெற்ற, சிங்கோர்கர் கோட்டை அமைந்துள மாநிலம் எது?
A
மகாராஷ்டிரா
B
மத்திய பிரதேசம்
C
ஒடிஸா
D
கேரளா
Question 42 Explanation: 
மத்திய பிரதேச மாநிலத்தின் தாமோ மாவட்டத்தில் உள்ள சிங்கோர்கர் கோட்டையின் பாதுகாப்புப் பணிகளுக்கு இந்தியக்குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் அடிக்கல் நாட்டினார். கலாசார அமைச்சகம் மற்றும் மாநில பழங்குடியினர் விவகாரத்துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வின் போது, புதிதாக அமைக்கப்பட்ட இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையி -ன் ஜபல்பூர் சரகத்தை அவர் தொடங்கிவைத்தார்.
Question 43
INS குலிஷ் & INS சுமேதா ஆகிய இந்திய கடற்படைக் கப்பல்கள், எந்நாட்டின் துறைமுகத்துக்கு முதன்முறையாக சென்றன?
A
இலங்கை
B
வங்காளதேசம்
C
மியான்மர்
D
ஜப்பான்
Question 43 Explanation: 
INS குலிஷ் மற்றும் INS சுமேதா ஆகிய இந்திய கடற்படைக் கப்பல்கள் அண்மையில் வங்கதேசத்தின் துறைமுக நகரமான மோங்லாவுக்கு சென்றன. நடைபெற்றுகொண்டிருக்கும், ‘ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்’ (1971 விடுதலைப்போர்) நினைவாக அவை அங்கு சென்றன. INS சுமேதா என்பது உள்நாட்டில் கட்டப்பட்ட கடல் ரோந்துக்கப்பலாகும். INS குலிஷ் என்பது உள்நாட்டில் கட்டப்பட்ட வழிகாட்டப்பட்ட ஏவுகணை கப்பலாகும்.
Question 44
இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பெல்லோஷிப் – 2021’க்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள அறிஞர்களின் எண்ணிக்கை என்ன?
A
2
B
5
C
17
D
40
Question 44 Explanation: 
இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பெல்லோஷிப் – 2021’க்கு, 40 அறிஞர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சி அறிஞர்கள் ஆறு நாடுகளைச்சார்ந்தவர்களாவர். மேலும், பல்வேறு இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி நடத்துவதற்கான பெல்லோசிப் அவர்கட்கு வழங்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சித்திட்டம், அனுபவம், கல்வித்தகுதி மற்றும் வெளியீட்டு பதிவின் அடிப்படையில் அறிஞரின் தேர்வு அமைந்துள்ளது.
Question 45
குற்றத்தடுப்பு தொடர்பான ஐநா மாநாட்டை நடத்தும் நாடு எது?
A
இந்தியா
B
சீனா
C
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
D
ஜப்பான்
Question 45 Explanation: 
குற்றத்தடுப்பு தொடர்பான ஐநா மாநாடு ஜப்பானின் கியோட்டோவில் தொடங்கியது. 1970’க்குப்பின் முதன்முறையாக ஜப்பான் இம்மாநாட்டை நடத்துகிறது. குற்றவியல் நீதி, குற்றத்தடுப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி -யை ஊக்குவிப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய பிரச்னைகள், கூட்டத்தின்போது நடைபெறும் விவாதத்திற்கான நிகழ்வு நிரல்களாக வைக்கப்பட்டுள்ளன.
Question 46
உலக சிறுநீரக நாள் கொண்டாடப்படுகிற மாதம் எது?
A
ஜனவரி
B
பிப்ரவரி
C
மார்ச்
D
ஏப்ரல்
Question 46 Explanation: 
உலக சிறுநீரக நாளானது ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் வரும் இரண்டாம் வியாழக்கிழமை அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படு -கிறது. “Living Well with Kidney Disease” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். பன்னாட்டு சிறுநீரகவியல் சங்கமும் பன்னாட்டு சிறுநீரக அறக்கட்டளைகள் கூட்டமைப்பும் இணைந்து இந்த உலகளாவிய பிரச்சாரத்தை ஏற்பாடுசெய்கின்றன.
Question 47
பொருளாதார விடுதலைக் குறியீடு – 2021’இல் முதலிடம் பிடித்த நாடு எது?
A
இந்தியா
B
இலங்கை
C
சிங்கப்பூர்
D
பூடான்
Question 47 Explanation: 
• அமெரிக்க மதியுரையகமான தி ஹெரிடேஜ் அறக்கட்டளை வெளியிட்ட பொருளாதார விடுதலைக் குறியீடு – 2021’இல் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. 89.7 புள்ளிகளுடன், சிங்கப்பூரைத் தொடர்ந்து நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும், அதைத்தொடர்ந்த முதல் ஐந்து இடங்களுள் ஆஸ்திரேலியா, சுவிச்சர்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. ஆசிய–பசிபிக் நாடுகளுள் இந்தியா இருபத்தாறாவது இடத்தில் உள்ளது.
Question 48
டஸ்ட்லிக்’ என்பது இந்தியாவிற்கும் பின்வரும் எந்த நாட்டிற்கும் இடையிலான இராணுவப் பயிற்சியாகும்?
A
பிரான்ஸ்
B
மியான்மர்
C
உஸ்பெகிஸ்தான்
D
ஜப்பான்
Question 48 Explanation: 
• ‘டஸ்ட்லிக் – Dustlik’ என்பது இந்தியாவிற்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையிலான ஒரு இராணுவப்பயிற்சியாகும். இந்தக் கூட்டு இராணுவப் பயிற்சியின் இரண்டாம் பதிப்பு (டஸ்ட்லிக்–2) உத்தரகண்ட் மாநிலத்தின் செளபதியாவில் தொடங்கியது. • இருநாடுகளின் படைகளைச்சார்ந்த சுமார் 45 இராணுவ வீரர்கள் இப் பயிற்சியில் பங்கேற்கின்றனர். இக்கூட்டு இராணுவப்பயிற்சியின் முதல் பதிப்பு, கடந்த 2019 நவம்பரில் தாஷ்கண்டில் மேற்கொள்ளப்பட்டது.
Question 49
தொழிலாளர் பணியகத்தின் PLFS & வருடாந்திர ஆய்வின்படி, இந்தியாவில் தொழிலாளர் எண்ணிக்கை விகிதம் என்ன?
A
27.3%
B
37.3%
C
47.3%
D
57.3%
Question 49 Explanation: 
• 2017–18 மற்றும் 2018–19ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு மற்றும் தொழிலாளர் பணியகம் நடத்திய வருடாந்திர வேலைவாய்ப்பு – வேலையின்மை ஆய்வுகளின் படி, தொழிலாளர் எண்ணிக்கை விகிதம் (WPR) 47.3 சதவீதமாகவும், வேலையின்மை விகிதம் 5.8 சதவீதமாகவும் உள்ளது. இந்தத் தகவலை மத்திய தொழிலாளர் அமைச்சகம் மக்களவையில் வழங்கியது.
Question 50
அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, ‘SMS ஸ்க்ரப்பிங்’ என்பதுடன் தொடர்புடைய அமைப்பு எது?
A
TRAI
B
RBI
C
தொலைத்தொடர்பு அமைச்சகம்
D
நிதி அமைச்சகம்
Question 50 Explanation: 
• ஒவ்வொரு குறுந்தகவலின் (SMS) உள்ளடக்கத்தையும் சரிபார்க்கும் செயல்முறையானது அந்தக் குறுந்தகவல் பயனரைச் சென்றடையும் முன்பே மேற்கொள்ளப்படவேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டது. • இச்செயல்முறை ‘SMS Scrubbing’ என்று அழைக்கப்படுகிறது. சமீபத்தில், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள், குறுந்தகவல் ஒழுங்குமுறை –யின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியபோது, சரிபார்க் –கப்படாத / பதிவுசெய்யப்படாத பல குறுந்தகவல்கள் தடுக்கப்பட்டன.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!