Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

March 4th Week 2021 Current Affairs Online Test in Tamil

நடப்பு நிகழ்வுகள் March 4th Week Online Test - 2021 Tamil

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் March 4th Week Online Test - 2021 Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பின்வரும் எவ்வாண்டில், கட்சித்தாவல் தடைச்சட்டம் என்றழைக் -கப்படும் 10ஆவது அட்டவணை அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது?
A
1972
B
1985
C
1992
D
2005
Question 1 Explanation: 
கட்சித்தாவல் தடைச்சட்டம் என்று பொதுவாக அறியப்படும் பத்தாவது அட்டவணை, 1985ஆம் ஆண்டில் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. கட்சித்தாவல் தடைச்சட்டத்தின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்வபன் தாஸ்குப்தா தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு ஓராண்டுக்கு முன்னதாகவே மாநிலங்களவையில் இருந்து விலகினார். மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் அவர் வேட்பாளராக நிறுத்த -ப்பட்டுள்ளார். 2016’இல் அவர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட் -டார். ஒரு நியமன நாடாளுமன்ற உறுப்பினர், பதவி ஏற்ற 6 மாதத்துக்கு பிறகு ஏதேனும் ஓர் அரசியல் கட்சியில் சேர்ந்தால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என அரசியல் சட்டத்தின் பத்தாவது அட்டவணை கூறுகிறது.
Question 2
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற P K சின்ஹா, தனது எந்தப் பதவியிலிருந்து அண்மையில் விலகினார்?
A
பொருளாதார விவகாரங்கள் செயலாளர்
B
பிரதமரின் முதன்மை ஆலோசகர்
C
நிதி செயலாளர்
D
NITI ஆயோக்கின் தலைமைச் செயலதிகாரி
Question 2 Explanation: 
பிரதமரின் முதன்மை ஆலோசகராக பதவி வகித்து வந்த P K சின்ஹா, சமீபத்தில் தனது பதவியிலிருந்து விலகினார். பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் முதல் பதவிக்காலத்தில், அமைச்சரவை செயலாளராக P K சின்ஹா பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Question 3
திறன் மேம்பாட்டிற்காக, `81 இலட்சம் மதிப்புள்ள பயிற்சிக்கருவிக -ளை, எந்த நாட்டில் உள்ள இந்திய தூதர் ஒப்படைத்தார்?
A
நேபாளம்
B
மியான்மர்
C
மாலத்தீவு
D
இலங்கை
Question 3 Explanation: 
இலங்கையில் உள்ள இந்திய தூதர், அண்மையில், சுமார் `81,00,000 மதிப்புள்ள பயிற்சிக்கருவி உதவிகளை இலங்கையின் கடற்படைக்கு திறன் மேம்பாட்டிற்காக வழங்கியுள்ளார். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்தபோது, உயராணையர் கோபால் பாக்லே பயிற்சிக்கருவிகளை முறையாக வழங்கினார். அவர், கின்டெல் மின்னூல்களையும் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் நூலகத்தில் ஒப்படைத்தார்.
Question 4
இந்திய கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி ஏற்றுமதிக் கழகம் அமைந்துள்ள இடம் எது?
A
புது தில்லி
B
உத்தர பிரதேசம்
C
குஜராத்
D
மத்திய பிரதேசம்
Question 4 Explanation: 
உத்தர பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் அமைந்துள்ள கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி ஏற்றுமதிக்கழகத்தை மூட, அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி ஏற்றுமதிக்கழகம் என்பது மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள, அரசுக்கு சொந்தமான ஒரு நிறுவனமாகும். இது, கடந்த 2015-16 காலகட்டம் முதல் தொடர்ச்சியாக இழப்புகளைச் சந்தித்ததாக கூறப்படுகிறது. அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கப்படவுள்ளது.
Question 5
உலகின் பழங்குடி மக்களின் நிலை’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?
A
உலக வங்கி
B
பன்னாட்டு செலவாணி நிதியம்
C
ஐக்கிய நாடுகள் அவை
D
ஆசிய வளர்ச்சி வங்கி
Question 5 Explanation: 
ஐநா பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையானது ‘உலகின் பழங்குடி மக்களின் நிலை’ குறித்த அறிக்கையின் அண்மைய பதிப்பை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, பழங்குடி மக்கள் புவியின் பல்லுயிர் வகைமையில் 80% பகுதிகளில் வாழ்கின்றனர். ஆனால் அவர்களுள் பலர், நிலம் மற்றும் வளங்களுக்கான சட்ட உரிமைகளை காப்பதற்கு இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
Question 6
பேரிடர் தடுப்பு உட்கட்டமைப்பிற்கான கூட்டணி’யின் தலைமை -யகம் அமைந்துள்ள இடம் எது?
A
ஜெனிவா
B
பாரிஸ்
C
புது தில்லி
D
ஜாகர்த்தா
Question 6 Explanation: 
பேரிடர் தடுப்பு உட்கட்டமைப்பிற்கான கூட்டணி என்பது நாடுகள், ஐநா முகமைகள், பலதரப்பு வளர்ச்சி வங்கிகள், தனியார்துறை மற்றும் கல்வி -யாளர்களின் ஓர் உலகளாவிய கூட்டணியாகும். இது பேரிடர் நெகிழ் திறன்மிக்க உட்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண் -டுள்ளது. இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது. பேரிடர் தடுப்பு உட்கட்டமைப்பிற்கான கூட்டணியானது அதன் உறுப்பு நாடுகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து,  பேரிடர் தடுப்பு உட் -கட்டமைப்பு தொடர்பான பன்னாட்டு மாநாட்டை சமீபத்தில் நடத்தியது.
Question 7
அண்மையில், மத்திய இந்தியாவில் விபத்துக்குள்ளான இந்திய வான்படையின் வானூர்தி எது?
A
MiG-21 பைசன்
B
மிராஜ் 2000
C
சுகோய் சு -30
D
ரபேல்
Question 7 Explanation: 
மத்திய இந்தியாவில் அமைந்துள்ள இந்திய வான்படைதளம் ஒன்றில் இருந்து, பயிற்சிக்காக புறப்பட்ட MiG-21 பைசன் இரக விமானம் ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியது. இந்தக் கோர விபத்தில் இந்திய வான்படை குழு கேப்டனான ஆஷிஷ் குப்தா உயிரிழந்தார். உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இலகுரக போர்விமானமான தேஜஸ் விமானங்கள், MiG-21 இரக விமானங்களுக்கு மாற்றாக உள்ளன. MiG -21 இரக விமானங்கள் தொடர்ந்து விபத்துக்களில் சிக்கி வருகின்றன.
Question 8
புதிதாக உருவாக்கப்பட்ட இந்தியன் எண்ணெய் நிறுவனம் - பினெர்ஜி ஆகிய கூட்டு நிறுவனமானது, மின்சார வாகனங்களுக்கு மின்கலங்களை உருவாக்குவதற்காக லித்தியத்திற்கு மாற்றாக எந்த உலோகத்தை பயன்படுத்தவுள்ளன?
A
வெள்ளி
B
தாமிரம்
C
அலுமினியம்
D
பாதரசம்
Question 8 Explanation: 
அரசுக்கு சொந்தமான இந்தியன் எண்ணெய் நிறுவனமும் இஸ்ரேலிய மின்கல உற்பத்தியாளரான பினெர்ஜியும் மின்சார வாகனங்களுக்கு அதி-லேசான உலோகக்காற்று மின்கலங்களை தயாரிப்பதற்காக ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டு நிறுவனம், மின்சார வாகனங்களுக்கு மின்கலங்களை உருவாக்குவதற்காக லித்தியத்திற்கு மாற்றாக அலுமினியத்தை பயன்படுத்தும். இதன்மூலம், விரைவாக மின்னேற்றம் செய்யவும் முடியும், அதிக நேரம் வேலைசெய்ய வைக்கவும் முடியும். மாருதி சுசூகியும் அசோக் லேலண்ட் நிறுவனமும் அந்நிறுவனத்தின் முதல் வாடிக்கையாளர்களாக மாறியுள் -ளன. இந்தியன் எண்ணெய் நிறுவனமானது கடந்த ஆண்டில், பினெர்ஜி நிறுவனத்தில் சிறு பங்குகளை வாங்கியது.
Question 9
மிகை-பணவீக்கம் காரணமாக பெருமதிப்புள்ள பணத்தாட்களை வெளியிட்ட நாடு எது?
A
ஈரான்
B
வெனிசுலா
C
சூடான்
D
நைஜீரியா
Question 9 Explanation: 
மிகை-பணவீக்கம் காரணமாக வெனிசுலா சமீபத்தில் பெருமதிப்புள்ள பணத்தாட்களை வெளியிட்டது. தென்னமெரிக்க நாடான வெனிசுலாவி -ன் பொலிவர் பணம் அதன் மதிப்பை பெருமளவில் இழந்துவருகிறது. முறையே 10 மற்றும் 27 அமெரிக்க சென்ட் மதிப்புள்ள 200,000 மற்றும் 500,000 பொலிவர் பணம் அந்நாட்டில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. வெனிசுலாவின் மத்திய வங்கி, வெறும் 50 அமெரிக்க சென்ட் மதிப்புள்ள 1 மில்லியன் பொலிவரை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.
Question 10
கரியமிலவாயுவை (CO2) பிடித்து சூரிய எரிபொருளாக மாற்றும் செயல்முறைக்கு என்ன பெயர்?
A
செயற்கை ஒளிச்சேர்க்கை
B
இயற்கை ஒளிச்சேர்க்கை
C
ஆற்றல் மாற்றம்
D
ஆற்றல் உற்பத்தி
Question 10 Explanation: 
அண்மையில், ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் வளிமண்டலத்திலிருந்து கரியமில வாயுவைப்பிடித்து சூரிய எரிபொருளாக மாற்றக்கூடிய ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்தச் செயல்முறை செயற்கை ஒளிச்சேர்க்கை என்று அழைக்கப்படுகிறது. இச்செயல்முறை, உயிர்வளியை துணைப்பொருளாக உருவாக்குகிறது. இந்தச்செயல்முறை புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம், ஏற்படும் தீங்குகளைத் தணிக்கும் என்று கூறப்படுகிறது.
Question 11
கீழ்காணும் எந்தக்கொள்கையின்படி, 2024 ஜூன்.1 முதல் இருபது ஆண்டுக்கும் மேற்பட்ட தனிப்பட்ட வாகனங்களின் பதிவு நீக்கம் செய்யப்படும்?
A
புதிய வாகன கொள்கை
B
உமிழ்வுக் கட்டுப்பாட்டுக் கொள்கை
C
பாரத் நிலை – 7
D
பழைய வாகனங்களை அழித்தல் கொள்கை
Question 11 Explanation: 
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ள பழைய வாகனங்களை அழித்தல் கொள்கையின்படி, தானியங்கு உடல்தகுதி பரிசோதனையில் தோல்வியுற்றால், 20 ஆண்டுக்கும் மேற்பட்ட பழைய வாகனங்கள், 2024 ஜூன்.1 முதல் பதிவு நீக்கம் செய்யப்படும். வணிக வாகனங்களைப் பொருத்தவரை, 2023 ஏப்ரல்.1 முதல் 15 ஆண்டுக்கும் மேற்பட்ட பழைய வாகனங்கள் பதிவு நீக்கம் செய்யப்படும்.
Question 12
புதிய கொரோனா வைரஸுக்கு எதிரான பிறபொருளெதிர்ப்பி உடன் பிறந்த உலகின் முதல் குழந்தை, பின்வரும் எந்த நாட்டில் பிறந்தது?
A
ரஷியா
B
அமெரிக்கா
C
பிரேசில்
D
இத்தாலி
Question 12 Explanation: 
புதிய கொரோனா வைரஸுக்கு எதிரான பிறபொருளெதிர்ப்பிகளைக் கொண்ட உலகின் முதல் குழந்தை அமெரிக்காவில் பிறந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கருவுற்று 36ஆவது வாரத்தில் தாய்க்கு COVID-19 தடுப்பூசி போடப்பட்டது. இதன் விளைவாக தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் பிறபொருளெதிர்ப்பிகள் உருவாகியுள்ளன.
Question 13
கன்வர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிட் அறிமுகப்படுத்திய கிராம் உஜாலா திட்டத்தின்கீழ் வழங்கப்படும் LED விளக்குகளின் விலை என்ன?
A
ரூ.5
B
ரூ.10
C
ரூ.25
D
ரூ.1
Question 13 Explanation: 
LED விளக்குகளை ஒரு விளக்குக்கு `10 என்ற விலையில் வழங்கும் ‘கிராம் உஜாலா’ என்ற புதிய திட்டத்தை மின் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் இராஜ்குமார் சிங் தொடங்கினார். இந்தத் திட்டம், பீகாரிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த விலை கொண்ட இந்த LED விளக்குகளை, எரிசக்தி திறன் சேவைகள் நிறுவனத்தின் துணை நிறுவனமான கன்வர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிட் தயாரிக்கின்றது.
Question 14
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பிராட்காஸ்ட் எஞ்சினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிட் (BECIL) என்பது எந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்?
A
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
B
உள்துறை அமைச்சகம்
C
எரிசக்தி அமைச்சகம்
D
ஜவுளி அமைச்சகம்
Question 14 Explanation: 
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் என்பது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். சமூக ஊடக தளங்களில் பதியப்படும் தகவல்களின் உண்மைதன்மை -யை சரிபார்ப்பதற்கும் தவறான தகவல்களைக் கண்டறிவதற்குமான தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்க, முகமைகளுக்கு அழைப்புவிடுக் -கும் ஒப்பந்தப்புள்ளியை BECIL சமீபத்தில் வெளியிட்டது. BECIL, முகமை -களை அதிகாரபூர்வ பட்டியலில் வைத்திருக்க முற்படுகிறது.
Question 15
2021ஆம் ஆண்டுக்கான மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?
A
139
B
145
C
108
D
5
Question 15 Explanation: 
உலக மகிழ்ச்சி அறிக்கை-2021 ஐநா நீடித்த வளர்ச்சிக்கான தீர்வுகள் வலையமைப்பால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. வாழ்க்கை மதிப்பீடுகள், நேர்மறை உணர்ச்சிகள் மற்றும் எதிர்மறை உணர்ச்சிகள் ஆகிய 3 முக்கிய குறிகாட்டிகளின்கீழ் இவ்வறிக்கை நல்வாழ்வை அளவிடுகிறது. 149 நாடுகளில், இந்தியா 139ஆவது இடத்திலுள்ளது. அறிக்கையின்படி பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Question 16
கீழ்காணும் எந்த நாட்டோடு இணைந்து, இந்தியா, சமீபத்தில் ஒரு செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி & மேம்பாட்டு முன்னெடுப்பைத் தொடங்கியது?
A
ஜப்பான்
B
பிரான்ஸ்
C
அமெரிக்கா
D
பின்லாந்து
Question 16 Explanation: 
இந்தோ-அமெரிக்க அறிவியல் & தொழில்நுட்ப மன்றமானது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் செயலர் முன்னிலையில் அமெரிக்க இந்தியா செயற்கை நுண்ணறிவு முன்னெடுப்பைத் தொடங்கியது. இந்தோ-அமெரிக்க அறிவியல் மற்றும் தொழினுட்ப மன்றம் என்பது இரு நாடுகளாலும் 2000ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இருதரப்பு அமைப்பாகும். இது, பரஸ்பர தொடர்புகளின்மூலம் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துகிறது. அமெரிக்க இந்தியா செயற்கை நுண்ணறிவு முன்னெடுப்பின்கீழ், புதிய ஆராய்ச்சி & வளர்ச்சிப்பகுதிகள் மற்றும் வாய்ப்புகள் அடையாளம் காணப்படும்.
Question 17
இந்திய கடற்படையானது எந்த அமைப்பால் கட்டப்பட்ட நீர்ப்படை கப்பலான L58’ஐ பணியில் சேர்த்துள்ளது?
A
DRDO
B
ISRO
C
GRSE
D
HAL
Question 17 Explanation: 
போர்ட் பிளேரில் நடந்த ஒரு நிகழ்வில், இந்திய கடற்படை நீர்ப்படை கப்பலான L58’ஐ அறிமுகப்படுத்தியது. இது, நீர்ப்படை கப்பல் Mk-IV வகுப்பு கப்பலின் வரிசையில் எட்டாவதும் கடைசியுமாகும். இந்தக் கப்பல் கொல்கத்தாவின் அரசு ரீதியான கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் எஞ்சினியர்ஸ் நிறுவனத்தால் (GRSE) உள்நாட்டிலேயே வடிவமைத்து கட்டப்பட்டது. போர் பீரங்கிகள் மற்றும் கனரக ஆயுத அமைப்புகள் போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கு இது பயன்படுத்தப்படும்.
Question 18
ஆபரேஷன் சங்கல்பின்கீழ் பாரசீக வளைகுடாவில், பின்வரும் எந்த நாட்டோடு இணைந்து, இந்திய கடற்படை, ‘பாஸேஜ்’ என்னும் பயிற்சியை (PASSEX) மேற்கொண்டது?
A
ஐக்கிய அரபு அமீரகம்
B
கத்தார்
C
பக்ரைன்
D
ஓமான்
Question 18 Explanation: 
ஆபரேஷன் சங்கல்பின்கீழ் பாரசீக வளைகுடாவில் ராயல் பக்ரைன் கடற்படையுடன் இந்திய கடற்படை ‘பாஸேஜ்’ என்னும் பயிற்சியை (PASSEX) மேற்கொண்டது. இப்பயிற்சியானது இந்திய நட்பு நாடுகளின் கடற்படையினருடன் இணைந்து இந்திய கடற்படையால் தவறாமல் நடத்தப்படுகின்றது. கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற குறியீடு பெயரிலான ‘ஆபரேஷன் சங்கல்ப்’, கடந்த 2019’இல் வளைகுடாவில் தொடங்கப்பட்டது.
Question 19
காப்பீட்டு (திருத்த) மசோதா, 2021’இன்படி, காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டின் புதிய வரம்பு என்ன?
A
26%
B
49%
C
74%
D
100%
Question 19 Explanation: 
அண்மையில் மாநிலங்களவையால் காப்பீட்டு (திருத்த) மசோதா, 2021 அங்கீகரிக்கப்பட்டது. காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம் -பை தற்போதைய 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்த இது முற்படுகிறது. மசோதாவின்படி, இயக்குநர்கள் குழுவில் உள்ளவர்களில் பெரும்பாலோர் மற்றும் முக்கிய நிர்வாக நபர்கள், குடியுரிமைபெற்ற இந்தியர்களாக இருப்பார்கள், குறைந்தபட்சம் 50 சதவீத இயக்குநர்கள் சுயாதீன இயக்குநர்களாக இருப்பார்கள்.
Question 20
மேகக்கணிமை குறித்து மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக கீழ்காணும் எந்த தொழில்நுட்ப நிறுவனத்துடன் NITI ஆயோக் கூட்டு சேர்ந்துள்ளது?
A
HP
B
அமேசான்
C
சாம்சங்
D
ஹூவாவே
Question 20 Explanation: 
அடல் டிங்கரிங் ஆய்வகங்கள்மூலம் மேகக்கணிமையின் அடிப்படைகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக NITI ஆயோக், அமேசன் வலைத்தள சேவைகள் (AWS) உடன் கூட்டுசேர்ந்துள்ளது. திட்டத்தின் கீழ், கிளவுட் ஸ்டோரேஜ், வெப் ஹோஸ்டிங், செயற்கை நுண்ணறிவு, எந்திரகற்றல் மற்றும் மெய்நிகர்போன்ற மேகக்கணிமை கருத்துக்களை AWS, மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும்.
Question 21
இந்தியாவின் H2Ooooh – நீர்குறித்த விழிப்புணர்வுத்திட்டத்திற் -கு தனது ஆதரவை நீட்டித்துள்ள நிறுவனம் எது?
A
உலக வங்கி
B
UNESCO
C
UNICEF
D
OECD
Question 21 Explanation: 
நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்திற்காக, UNESCO யுனைடெட் ஸ்கூ -ல்ஸ் ஆர்கனைசேஷன் இந்தியா (USO இந்தியா), வாட்டர் டைஜஸ்ட் இதழ் மற்றும் டூன்ஸ் மீடியா குழுமத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.
Question 22
ஆற்றல் சுவராஜ் யாத்திரை’ பேருந்தை உருவாக்கிய நிறுவனம் எது?
A
IIT பாம்பே
B
IIT மெட்ராஸ்
C
IIT கெளகாத்தி
D
IIT , பெங்களூரு
Question 22 Explanation: 
மத்திய கல்வி அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, ஆற்றல் சுவராஜ் யாத்திரை பேருந்தில் பயணம் செய்தார். இந்தப் பேருந்தை, பாம்பே இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் சேதன் சிங் சோலங்கி வடிவமைத்து உருவாக்கியுள்ளார். இது, சூரிய ஆற்றலில் இயங்கும் ஒரு வாகனமாகும்.
Question 23
சாமர் (SAAMAR) என்ற திட்டம் தொடங்கப்பட்ட மாநிலம் எது?
A
பீகார்
B
ஜார்க்கண்ட்
C
ஹரியானா
D
உத்தர பிரதேசம்
Question 23 Explanation: 
ஜார்கண்ட் மாநில அரசானது SAAMAR (Strategic Action for Alleviation of Malnutrition and Anaemia Reduction) என்ற திட்டத்தைத்தொடங்கியது. இரத்தசோகை உடைய பெண்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறார்களை அடையாளங்காண்பதன்மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டை கையாளுவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரத்தசோகை நோயை திறம்பட குறைப்பதற்காக பல்வேறு மாநில துறைகள் மற்றும் நிறுவனங்களை ஒன்றிணைக்கும்.
Question 24
67ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் ‘சிறந்த திரைப்படம்’ விருதை வென்ற இந்திய திரைப்படம் எது?
A
அசுரன்
B
மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்
C
ஒத்த செருப்பு
D
சூரரைப்போற்று
Question 24 Explanation: 
67ஆவது தேசிய திரைப்பட விருதுகள், கடந்த 2019ஆம் ஆண்டைச் சார்ந்த திரைப்படங்களை கெளரவிப்பதாக அறிவிக்கப்பட்டன. இந்நிகழ்ச் -சியை திரைப்பட விழாக்கள் இயக்குநரகம், தகவல் & ஒலிபரப்பு அமைச் -சகம் ஏற்பாடு செய்தன. இயக்குநர் பிரியதர்ஷனின் மலையாளப் போர் காவியமான மோகன்லால் நடித்த ‘மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’ என்ற திரைப்படம் ‘சிறந்த திரைப்படத்’துக்கான விருதை வென்றது.சிறந்த நடிகருக்கான விருது ‘போன்ஸ்லே’ திரைப்படத்தில் நடித்ததற்கா -க மனோஜ் பாஜ்பாய்க்கும், தமிழ்ப்படமான ‘அசுரனுக்காக’ தனுஷுக்கும் வழங்கப்பட்டது.
Question 25
இமயமலை பனிப்பாறைகளின் தடிமனை மதிப்பிடுவதற்காக வான்வழி ரேடார் ஆய்வுகளை நடத்தும் நாடு எது?
A
நேபாளம்
B
இந்தியா
C
வங்காளதேசம்
D
ரஷியா
Question 25 Explanation: 
இமயமலை பனிப்பாறைகளின் தடிமனை மதிப்பிடுவதற்காக, இந்தியா, வான்வழி ரேடார் ஆய்வுகளை நடத்தவுள்ளது. இமாச்சல பிரதேசத்தின் லஹால்-ஸ்பிட்டி படுகையில் சோதனை அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்படவுள்ளது. இந்தச் சோதனை திட்டத்திற்குப் பிறகு, சிந்து, கங்கா மற்றும் பிரம்மபுத்திரா துணைப்படுகைகளிலும் இதேபோன்ற ஆய்வுகள் நடத்தப்படும். துருவ & பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம், புவி அறிவியல் அமைச்சகம் இந்த ஆய்வை முன்மொழிந்தது.
Question 26
அண்மையில், ‘டயல் 112’ ERSS மற்றும் மாநில அவசரநிலை பதிலளிப்பு மையத்தை தொடங்கிய மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
ஒடிஸா
D
மத்திய பிரதேசம்
Question 26 Explanation: 
ஒடிஸா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் `157 கோடி மதிப்புள்ள ‘டயல் 112’ - மாநில அவசரகால ஆதரவு அமைப்பை அறிமுகப்படுத்தியுள் -ளார். காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் நலவாழ்வு உள்ளிட்ட அனைத்து அவசர சேவைகளுக்கும், இந்தக் கட்டணமில்லா எண்ணை மக்கள் பயன்படுத்தலாம். மாநில அவசரநிலை பதிலளிப்பு மையம் மற்றும் மொபைல் டேடா டெர்மினல்கள் பொருத்தப்பட்ட அவசரகால மீட்பு வாகனங்களும் தொடங்கிவைக்கப்பட்டன.
Question 27
தேசிய கணக்குகள் புள்ளிவிவரங்கள் – 2021’இன்படி, எந்தத் துறையின் தனியார் இறுதி நுகர்வு செலவு அதிகபட்ச உயர்வைக் கொண்டிருந்தது?
A
கல்வி
B
உணவகங்கள்
C
நலவாழ்வு
D
மதுபானங்கள்
Question 27 Explanation: 
நடுவண் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தேசிய கணக்குகள் புள்ளிவிவரங்கள் - 2021’இன்படி, சுகாதாரம், கல்வி மற்றும் உணவகங்களுக்கான தனியார் இறுதிநுகர்வு செலவு, 2019-20ஆம் ஆண்டில் அதிகபட்ச உயர்வைக் கொண்டுள்ளன.
Question 28
ஐநா அறிவித்தபடி, உலகம் முழுவதும் பன்னாட்டு மகிழ்ச்சி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
A
மார்ச் 18
B
மார்ச் 20
C
மார்ச் 22
D
மார்ச் 24
Question 28 Explanation: 
ஐநா அவையின் பொது அவை, கடந்த 2012ஆம் ஆண்டில், மார்ச்.20’ஐ பன்னாட்டு மகிழ்ச்சி நாளாக அறிவித்தது. உலகெங்குமுள்ள மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க, இது, 2013 முதல் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலக மகிழ்ச்சி அறிக் -கையின்படி, இந்த ஆண்டு, பின்லாந்து, உலகின் மகிழ்ச்சியான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Question 29
கிராமப்புற இந்தியாவில் பெண்கள் தொழில்முனைவோரை வளர் -த்தெடுப்பதற்காக ‘சகி திஷா’ திட்டத்தைத் தொடங்கியுள்ள அமைப்பு எது?
A
உலக வங்கி
B
ஐநா வளர்ச்சித் திட்டம்
C
ஆசிய வளர்ச்சி வங்கி
D
புதிய வளர்ச்சி வங்கி
Question 29 Explanation: 
ஐநா வளர்ச்சித் திட்டமானது கிராமப்புற இந்தியாவில், பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில்முனைவை மேம்படுத்துவதற்காக ‘சகி திஷா’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டமானது ஐநா வளர்ச்சித் திட்டம் மற்றும் IKEA அறக்கட்டளைக்கு இடையிலான ஐந்தா -ண்டு ஒப்பந்தமாகும். தில்லி NCR, மகாராஷ்டிரா உள்ளிட்ட ஐந்து மாநி -லங்களில் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை அணுக, இது, ஏற்கனவே ஒரு மில்லியன் பெண்களுக்கு ஆதரவளித்துள்ளது.
Question 30
INSACOG கூட்டமைப்பானது சமீப செய்திகளில் இடம்பெற்றது. இதில், IN என்பது கீழ்காணும் எதைக்குறிக்கிறது?
A
Integrated
B
Indian
C
Inspection
D
Innovation
Question 30 Explanation: 
INSACOG என்பது இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப் -பைக் குறிக்கிறது. இது, நாடு முழுவதும் SARS-CoV-2 கண்காணிப்பு -க்காக இந்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. புவனேசுவரம், புனே, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் புது தில்லி ஆகிய இடங்களில் உள்ள 10 பிராந்திய மரபணு வரிசைமுறை ஆய்வகங்களால் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
Question 31
அண்மையில், ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றதற்காக செய்திகளில் இடம்பெற்ற ஷரத் கமல், சத்தியன், சுதிர்தா முகர்ஜி ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது?
A
பூப்பந்து
B
டேபிள் டென்னிஸ்
C
மல்யுத்தம்
D
வாள் சண்டை
Question 31 Explanation: 
சமீபத்தில் தோகாவில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் தகுதிப்போட்டியில் நான்கு இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றனர். மூத்த டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல், நான்காவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ளார். G சத்தியன், மணிகா பத்ரா மற்றும் சுதிர்தா முகர்ஜி ஆகியோர் பிற மூன்று வீரர் / வீரங்கனைகளாவர்.
Question 32
NDHM பயிற்சியக சூழலானது சமீப செய்திகளில் காணப்பட்டது. NDHM’இல் ‘H’ என்பது எதைக் குறிக்கிறது?
A
Health
B
Horticulture
C
Hurricane
D
Hospital
Question 32 Explanation: 
‘NDHM’ என்பது தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தைக் குறிக்கிறது. NDHM பயிற்சியக சூழலானது நலவாழ்வுச் சேவை வழங்குநர்கள் முதல் செயலி உருவாக்குநர்கள் வரை அனைவருக்குமானதாகும். NDHM’இன் பயிற்சியக சூழல் சேவையானது, NDHM சேவைகளுடன் ஒருங்கிணை -க்கப்படவேண்டிய மென்பொருள் சேவைகள் & செயலிகள் உருவாக்க விரும்பும் எவருக்கும் பயனுள்ள கட்டமைப்புச் சூழலை வழங்குகிறது.
Question 33
Threadit’ என்பது கீழ்காணும் எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு முழுமையான வலைத்தளமாகும்?
A
இன்டெல்
B
மைக்ரோசாப்ட்
C
சாம்சங்
D
கூகிள்
Question 33 Explanation: 
‘Threadit’ என்பது கூகிள் அதன் பணியிடங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு முழுமையான வலைத்தளமாகும். தொலைநிலையிலிருந்து ஒரு பணியை மிகத்திறமையாக செய்வதற்காக இப்புதிய கருவி உருவாக்கப் -பட்டுள்ளது. பணிதொடர்பான சிக்கல்களை, குழு உறுப்பினர்களுக்கு சிறு காணொளிகளாகப் பதிவுசெய்து அனுப்ப, ‘Threadit’ பயனர்களுக்கு உதவுகிறது. இது டிக்-டாக் செயலியைப்போல உருவாக்கப்பட்டுள்ளது.
Question 34
NIT’களில் மூன்று விண்வெளி அடைவு மையங்களை தொடங்கி -யுள்ள அமைப்பு எது?
A
NASA
B
DRDO
C
ISRO
D
BARC
Question 34 Explanation: 
இந்திய விண்வெளி ஆய்வு மையமான (ISRO) அண்மையில் NIT - நாக்பூர், போபால் மற்றும் ரூர்கேலா ஆகியவற்றில் மூன்று விண்வெளி அடைவு தொழில்நுட்ப மையங்களை திறந்துவைத்தது. இது இந்தியாவில் உள்ள விண்வெளிதுறைசார் தொழில்முனைவோரு -க்கு ஊக்கமளிப்பதற்கு ஒரு தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொ -ண்டுள்ளது. ISRO, ஏற்கனவே NIT அகர்தலா, திருச்சி மற்றும் ஜலந்தரில் இதுபோன்ற மூன்று மையங்களைத் திறந்துள்ளது
Question 35
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிரந்தர சிந்து ஆணையத்தின் 116ஆவது கூட்டம் நடைபெற்ற இடம் எது?
A
லாகூர்
B
புது தில்லி
C
ஜெய்ப்பூர்
D
ஜலந்தர்
Question 35 Explanation: 
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிரந்தர சிந்து ஆணை -யக்கூட்டத்தின் 116ஆவது கூட்டம் சமீபத்தில் புது தில்லியில் நடந்தது. இந்தச் சந்திப்பு, இரண்டரை ஆண்டுகளுக்கு மேலான இடைவெளிக்குப் பின்னர் நடந்தது. பாகிஸ்தான் தேசிய நாளுடன் இச்சந்திப்பு ஒத்துப்போ -னது. இரண்டு நாள் நடைபெற்ற இக்கூட்டம், இந்திய தரப்பில் சிந்து நீர் ஆணையர் பிரதீப் குமார் சக்சேனா தலைமையில் நடைபெற்றது.
Question 36
நடப்பாண்டில் (2021) வரும் இனப்பாகுபாட்டை ஒழிப்பதற்கான பன்னாட்டு நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Disqualify Racism
B
Racial profiling and incitement to hatred, including in the context of migration
C
Mitigating and countering rising nationalist populism and extreme supremacist ideologies
D
Youth standing up against racism
Question 36 Explanation: 
வகையான இனவெறி மற்றும் இனப்பாகுபாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்குமாக, ஐநா அவை, மார்ச்.21’ஆம் தேதியை இனப் பாகுபாட்டை ஒழிப்பதற்கான சர்வதேச நாளாகக் கடைபிடித்து வருகிறது. “Youth standing up against racism” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Question 37
அட்லாண்டிக் பகுதிகளில் நிகழும் அடிமைத்தனம் மற்றும் அடிமை -கள் வர்த்தக முறையால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் பன்னாட்டு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
A
மார்ச் 23
B
மார்ச் 24
C
மார்ச் 25
D
மார்ச் 26
Question 37 Explanation: 
ஆண்டுதோறும் மார்ச்.25 அன்று, அட்லாண்டிக் பகுதிகளில் நிகழும் அடிமைத்தனம் மற்றும் அடிமைகள் வர்த்தக முறையால் பாதிக்கப்பட்டவ -ர்களை நினைவுகூரும் பன்னாட்டு நாள் ஐக்கிய நாடுகள் அவையால் அனுசரிக்கப்படுகிறது. மிருகத்தனமான அடிமை முறையின் கைகளில் துன்பப்பட்டு இறந்தவர்களை இந்த நாள் நினைவுகூர்கிறது. இனவெறி மற்றும் ஓரவஞ்சனையின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. “Ending Slavery’s Legacy of Racism: A Global Imperative for Justice” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Question 38
“PRANIT” என்ற பெயரில் மின்னணு வணிக வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ள பொதுத்துறை நிறுவனம் எது?
A
பவர் கிரிட்
B
NTPC
C
HAL
D
IOL
Question 38 Explanation: 
மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் ‘மகாரத்னா’ தகுதிபெற்ற பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட், மின்னணு முறையிலான ஒப்பந்தப்புள்ளி கோரும் “PRANIT” என்ற வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வலைத்தளம், ஒப்பந்தப்புள்ளி செயல்முறையை மிகவும் வெளிப்ப -டையானதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், தாள் செயல்பாடுகளை குறைக்கிறது. இவ்வலைத்தளத்திற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தரப்படுத்தல், சோதனை மற்றும் தரச்சான்றிதழ் இயக்குநரகம் சான்றளித்துள்ளது.
Question 39
பெப்சூ முசாரா இயக்கம் என்பது எந்த இந்திய மாநிலத்தில் நடந்த ஒரு விவசாயிகள் இயக்கமாகும்?
A
கர்நாடகா
B
இராஜஸ்தான்
C
பஞ்சாப்
D
ஹிமாச்சல பிரதேசம்
Question 39 Explanation: 
முசாரா இயக்கமானது 1930’களில் பஞ்சாப் கிராமங்களில் தொடங்கியது. விடுதலைக்குப் பிறகு பஞ்சாப் என்று பெயரிடப்படுவதற்கு முன்னர் வரை இந்த மாகாணம் பெப்சூ என்று அழைக்கப்பட்டது. ‘முசாரா’ என்றால் ஒருவரின் நிலத்தில் வேலை செய்த நிலமற்ற உழவர் என்று பொருளாகும். இவ்வியக்கம் பல்லாண்டுகளாக நிலத்தை உழுத -வர்களுக்கே நிலம் என்ற கோட்பாட்டைக் கொண்டது. இறுதியாக, 1952ஆம் ஆண்டில், ஒருமுறை இழப்பீடு செலுத்திய பின்னர் மக்களுக்கு நிலவுரிமை வழங்கப்பட்டது. அண்மையில், புது தில்லியில் நடந்த விவசா -யிகள் போராட்ட இடங்களிலும், பஞ்சாப் மாநிலத்திலும் இந்த இயக்கம் நினைவுகூரப்பட்டது.
Question 40
பின்வரும் எந்த மாநிலம், மியான்மருடன் 510 கிலோமீட்டர் நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது?
A
அஸ்ஸாம்
B
மிசோரம்
C
மணிப்பூர்
D
மேகாலயா
Question 40 Explanation: 
மிசோரம் மாநிலம் மியான்மருடன் 510 கிமீ நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. மியான்மரைச் சார்ந்த “அரசியல் ஏதிலிகளுக்கு” அரசியல் தஞ்சம் வழங்குமாறு மிசோரம் மாநில முதலமைச்சர் சோரம்தங்கா நடுவணரசிடம் கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக, எந்தவொரு வெளி நாட்டினருக்கும் “ஏதிலி” என்ற அந்தஸ்தை வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்றும், 1951 ஐநா அகதிகள் மாநாடு மற்றும் அதன் 1967 நெறிமுறையில் இந்தியா கையெழுத்திடவில்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
Question 41
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற திவ்யன்ஷ் சிங் பன்வார் மற்றும் இளவேனில் வாலறிவன் ஆகியோர் கீழ்காணும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்களாவர்?
A
டென்னிஸ்
B
துப்பாக்கிச்சுடுதல்
C
தடகளம்
D
டேபிள் டென்னிஸ்
Question 41 Explanation: 
தில்லியில் நடைபெற்று வரும் ISSF உலகக்கோப்பையில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி போட்டியில் இந்தியாவின் இளம் துப்பாக்கி சுடும் வீரர்களான திவ்யன்ஷ் சிங் பன்வார் மற்றும் இளவேனில் வாலறிவன் ஆகியோர் தங்கம் வென்றனர். பெண்கள் ஸ்கீட் போட்டியில் மற்றொரு இந்திய துப்பாக்கிச்சுடும் வீராங்கனை கணேமத் சேகோன் வெண்கலம் வென்றார். முன்னதாக, புது தில்லியில் நடந்து வரும் ISSF உலகக்கோப் -பையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டிகளில் இந்திய பெண்கள் மற்றும் ஆண்கள் அணிகள் தங்கப்பதக்கங்களை வென்றன.
Question 42
ஓமான் வளைகுடா அருகே, ‘அரபிக்கடல் குழு போர்ப்பயிற்சி’யை நடத்தவுள்ள நாடு எது?
A
இந்தியா
B
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
C
சீனா
D
ஜப்பான்
Question 42 Explanation: 
அமெரிக்க கடற்படையானது பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகியவற்றுடன் இணைந்து மைடாஸ்டில் ஒரு மிகப்பெரிய கடற்படைப் பயிற்சியை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது. ‘அரபிக்கடல் குழு போர்ப் பயிற்சி’யில் நான்கு நாடுகளைச் சார்ந்த கப்பல்கள் பங்கேற்கவுள்ளன. ஈரானின் அணுவாற்றல் திட்டம் குறித்த பதட்டங்களுக்கு மத்தியில் அந்த பிராந்தியத்தில் இப்பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Question 43
முதன்முறையாக ‘கட்டற்ற விண்வெளி குவாண்டம் தகவல்தொட -ர்பை’ விளக்கிக்காட்டிய இந்திய அமைப்பு எது?
A
HAL
B
BEL
C
ISRO
D
DRDO
Question 43 Explanation: 
• முதன்முறையாக, இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) சமீபத்தில் 300 மீட்டர் உயரத்திற்குமேல் விண்வெளி குவாண்டம் தகவல்தொடர்பு -களின் இருப்பை நிரூபித்துள்ளது. குவாண்டம்-கீ-மறைகுறியாக்கப்பட் -ட சமிக்ஞைகளைப் பயன்படுத்தி நேரலையில் இதனை நிரூபித்தது. ஆமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தில், கட்டற்ற-விண்வெளி குவாண்டம் விசை விநியோகம் நிரூபிக்கப்பட்டது.
Question 44
கடந்த ஈராண்டுகளில் தனது 4ஆவது நாடாளுமன்ற தேர்தலை நடத்துகிற நாடு எது?
A
வெனிசுலா
B
தான்சானியா
C
இஸ்ரேல்
D
சிலி
Question 44 Explanation: 
• கடந்த ஈராண்டுகளில் இஸ்ரேல் தனது 4ஆவது நாடாளுமன்றத் தேர்த -லை நடத்தியுள்ளது. இந்தத் தேர்தல், 2020 டிசம்பரில், அந்நாட்டின் நாடாளுமன்றம் ஒரு பட்ஜெட்டை ஏற்கத்தவறியதை அடுத்து தூண்டப்பட் -டது. இது, நேதன்யாகு மற்றும் அவரது முக்கிய போட்டியாளரான பென்னி காண்ட்ஸ் இடையே ஏழுமாதகால அதிகாரப்பகிர்வு ஏற்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்தது.
Question 45
எந்த நாடு தனது சோயுஸ்-2.1 என்ற ஏந்தி ஏவூர்தியைப் பயன்படு -த்தி 18 நாடுகளைச் சார்ந்த 38 செயற்கைக்கோள்களை வெற்றிகர -மாக விண்ணில் ஏவியது?
A
சீனா
B
ஜப்பான்
C
இரஷ்யா
D
ஐக்கிய அரபு அமீரகம்
Question 45 Explanation: 
• கஜகஸ்தானில் உள்ள பைக்கானூர் காஸ்மோட்ரோமில் இருந்து 38 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இரஷ்யா வெற்றிகரமாக ஏவியது. இந்தச் செயற்கைக்கோள்கள் தென் கொரியா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட 18 நாடுகளைச் சார்ந்தவை. சோயுஸ்-2.1 என்ற ஏந்தி ஏவூர்தி, அனைத்து 38 செயற்கைக்கோள்களையும் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியது. இச்செயற்கைக்கோள்களுள் சேலஞ்ச்-1 ஆனது, துனிசியா -வில் முழுமையாக தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் ஆகும்.
Question 46
நீர்வளத்துறையில் ஒத்துழைப்பிற்காக, பின்வரும் எந்நாட்டுடனா -ன ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?
A
நேபாளம்
B
ஜப்பான்
C
ஆஸ்திரேலியா
D
ஜெர்மனி
Question 46 Explanation: 
• இந்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் நீர்வளம், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்கத் துறை மற்றும் ஜப்பான் அரசின் நிலம், உட்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின்கீழ் இயங்கும் நீர் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகம் ஆகியவற்றுக்கிடையே நீர்வளம் தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. • தகவல், அறிவு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் அறிவியல்சார்ந்த அனுபவம் ஆகியவற்றை அதிகரிக்கவும், இருநாடுகளுக்கு இடையேயான கூட்டுத்திட்டங்களை செயல்படுத்தவும், நீர் மற்றும் டெல்டா மேலாண்மை, மற்றும் நீர் தொழில்நுட்பத் துறையில் நீண்டகால ஒத்துழைப்பை உருவாக்குவதற்காகவும் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. நீர் பாதுகாப்பு, மேம்படுத்தப்பட்ட நீர்ப்பாசன வசதிகள் மற்றும் நீர்வள மேம்பாட்டில் நிலைத்தன்மை ஆகியவற்றை அடைவதற்கு இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம் உதவும்.
Question 47
இந்தியாவுடன் தாயக பாதுகாப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவுள்ள நாடு எது?
A
ஜப்பான்
B
அமெரிக்கா
C
ஐக்கியப் பேரரசு
D
இரஷ்யா
Question 47 Explanation: 
• US தாயக பாதுகாப்புத் துறையின் அறிவிப்பின்படி, US – இந்தியா தாயக பாதுகாப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இந்தியாவும் அமெரிக்காவும் முடிவு செய்துள்ளன. இணைவெளிப் பாதுகாப்பு மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பம் போன்ற முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிப்பதை இப்பேச்சுவார்த்தை நோக்கமாகக் கொண்டுள்ளது. • வன்முறை தீவிரவாதத்தை ஒழித்துக் கட்டுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான முதல் தாயக பாதுகா -ப்பு பேச்சுவார்த்தை, கடந்த 2011ஆம் ஆண்டில் நடைபெற்றது.
Question 48
எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் ஷாஹீத் பகத் சிங் ஸ்மாரக்கை, மத்திய கல்வி அமைச்சர் திறந்துவைத்தார்?
A
பஞ்சாப்
B
தில்லி
C
உத்தர பிரதேசம்
D
ஹரியானா
Question 48 Explanation: 
• தில்லி பல்கலைக்கழகமானது பகத்சிங், சுக்தேவ் தாப்பர் மற்றும் சிவராம் இராஜ்குரு ஆகியோரின் தியாகத்தின் 90 ஆண்டுகால நிறைவை நினைவுகூருவதற்காக ‘ஷாஹீத் திவாஸ்’ என்றவொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. மத்திய கல்வியமைச்சர் ரமேஸ் பொக்ரியால், மெய்நிக -ராக இந்த நிகழ்வைத் தொடங்கிவைத்தார். • பகத்சிங் ஸ்மராகில் தற்போதுள்ள விடுதலைப் போராளிகள் பற்றிய நூல் -களின் தொகுப்பு “ஷாஹித் ஸ்மிருதி புஸ்தகாலயா” என்று மாற்றப்படுவ -தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Question 49
7.5% என்ற விகிதத்தில், காசநோய் பாதிப்பில் மிகப்பெரிய சரிவை பதிவுசெய்துள்ள மாநில அரசு எது?
A
தமிழ்நாடு
B
கேரளம்
C
மகாராஷ்டிரம்
D
ஹிமாச்சல பிரதேசம்
Question 49 Explanation: 
• கேரள மாநிலத்தில், 2015-20’க்கு இடையில் காசநோய் பாதிப்பு 37.5% குறைந்துள்ளது. இதன்மூலம், ஆண்டு சரிவு விகிதத்தை 7.5% ஆக அம் மாநிலம் பதிவுசெய்துள்ளது. உலகளாவிய சரிவு விகிதம் 2-3% மட்டுமே இருக்கும் நிலையில், கேரளத்தின் இந்தச் சரிவு விகிதம் மிகவும் குறிப்பிட -த்தக்கதாகும். • காசநோய் ஒழிப்பை நோக்கிய முன்னெடுப்புகளுக்காக, மத்திய சுகாதார அமைச்சகத்தால் வழங்கப்படும் சான்றிதழில், வெண்கலப்பதக்கத்தையும் கேரள மாநில அரசு வென்றுள்ளது.
Question 50
அண்மைய பன்னாட்டு அறிவுசார் சொத்துக் குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?
A
20
B
30
C
40
D
50
Question 50 Explanation: 
• பன்னாட்டு அறிவுசார் சொத்துக் குறியீட்டின் சமீபத்திய ஆண்டு பதிப்பில் இந்தியா 40ஆம் இடத்தில் உள்ளது. இக்குறியீட்டை, US Chamber of Commerce Global Innovation Policy Centre (GIPC) ஆண்டுதோறும் வெளியிடுகிறது. காப்புரிமை மற்றும் பதிப்புரிமை கொள்கைகள் முதல் அறிவுசார் சொத்துக்களை வணிகமயமாக்குதல் வரை பல கூறுகளில், 53 உலக பொருளாதாரங்களில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகளை இந்தக் குறியீடு மதிப்பிடுகிறது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!