Tnpsc

November Tamil Current Affairs Online Model Test

November Tamil Current Affairs Online Model Test

Congratulations - you have completed November Tamil Current Affairs Online Model Test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
2017 – உலகளாவிய பிறவி வளைபாதம் (Clubfoot) மாநாட்டை நடத்தும் நகரம் எது?
A
[கான்பூர் / Kanpur]
B
[இந்தூர் / Indore]
C
[புது டெல்லி / New Delhi]
D
[ஜெய்ப்பூர் / Jaipur]
Question 1 Explanation: 
 நவ.1 அன்று புது டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்ற உலகளாவிய கிளப்ஃபூட் மாநாட்டை, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கிவைத்தார். இந்த 2 நாள் மாநாட்டை, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் கூட்டிணைந்து CURE இந்தியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.  பிறவி வளைபாதம் என்பது பிறவி எலும்பியல் குறைபாடாகும்., இதனை தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிக்காவிட்டால் நிரந்தர குறைபாடாக மாறும். இதனால், குழந்தையின் கல்வி பாதிக்கப்படுவது மற்றும் குழந்தை தனது திறனை வெளிப்படுத்த முடியாமல் போவது போன்றவை தவிர்க்க முடியாததாகிறது.
Question 2
தேசிய புலனாய்வு முகமையின் புதிய தலைமை இயக்குநர் யார்?
A
[ஜைனம் ஷா / Jainam Shah]
B
[அங்கித் அவஸ்தி / Ankit Awasthi]
C
[ஷரத் குமார் சின்ஹா / Sharad Kumar Sinha]
D
[யோகேஷ் சந்தர் மோடி / Yogesh Chander Modi]
Question 2 Explanation: 
தேசிய புலனாய்வு முகமையின் (National Investigation Agency) புதிய தலைமை இயக்குநராக யோகேஷ் சந்தர் மோடி பதவியேற்றுக்கொண்டார். NIA தலைமை இயக்குநராக இருந்த ஷரத் குமாரின் பதவிக்காலம் அக்.31 அன்று முடிவடைந்தது. இதையடுத்து, அந்தப் பணியிடத்துக்கு 1984-ல் அசாம்-மேகாலயா மாநிலத்தில் IPS அதிகாரியாக தேர்வான யோகேஷ் சந்தர் மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.  NIA தலைமை இயக்குநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அந்த அமைப்பில் சிறப்பு பணி அலுவலராக YC மோடி கடந்த செப்.22 அன்று நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு, டெல்லியில் CBI அமைப்பில் கூடுதல் இயக்குநராக அவர் பணியாற்றினார்.
Question 3
7.உலக வங்கியின், 2018–க்கான எளிதாக தொழில் தொடங்கும் சூழல் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் தரநிலை என்ன?
A
111வது
B
130வது
C
115வது
D
100வது
Question 3 Explanation: 
 உலக வங்கியின், 2018–க்கான எளிதாக தொழில் தொடங்கும் சூழல் உள்ள நாடுகள் பட்டியலில், 190 நாடுகளில் இந்தியா 100வது இடத்தைப் பிடித்துள்ளது. வரிவிதிப்பில் சீர்திருத்தம், உரிம வழங்கல், முதலீட்டாளர் பாதுகாப்பு மற்றும் திவால் சட்டம் போன்றவை இந்த முன்னேற்றத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.  இந்தப் பட்டியலில், நியூசிலாந்து முதலிடத்திலும், அதைத்தொடர்ந்து சிங்கப்பூர், டென்மார்க், தென்கொரியா, ஹாங்காங், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
Question 4
கேரளாவின் மிகவுயர்ந்த இலக்கிய விருதான “எழுத்தச்சன் புரஸ்காரம்–2017” விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
A
[புதுசேரி ராமச்சந்திரன் / Puthussery Ramachandran]
B
[விஷ்ணு நாராயணன் / Vishnu Narayanan]
C
[K.சச்சிதானந்தன் / K.Satchidanandan]
D
[C.ராதாகிருஷ்ணன் / C.Radhakrishnan]
Question 4 Explanation: 
 குறிப்பிடத்தக்க மலையாள மொழிக்கவிஞரும், இலக்கிய விமர்சகருமான கே. சச்சிதானந்தன், கேரளாவின் மிகவுயர்ந்த இலக்கிய விருதான “எழுத்தச்சன் புரஸ்காரம்–2017” விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது 5 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழை உள்ளடக்கியது.  இவர் இந்திய இலக்கிய இதழின் முன்னாள் ஆசிரியர் மற்றும் சாகித்ய அகாடமியின் முன்னாள் செயலராவார். மேலும், சமகாலத்திய இந்திய இலக்கியம் தொடர்பான பிரச்சனைகளில் சுற்றுச்சூழல், மனித உரிமைகள் மற்றும் இலவச மென்பொருள் போன்றவற்றுக்கு ஆதரவு தெரிவித்து குரல் தரும் பேச்சாளராவார். மேலும் இவர், கேரள இலக்கிய விழாவின் விழா இயக்குநராவார்.
Question 5
2017–க்கான Tata Literature Live! வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுபவர் யார்?  
A
[கிரிஷ் கர்னாட் / Girish Karnad]
B
[MT வாசுதேவன் / MT Vasudevan]
C
[VS நாய்பால் / VS Naipaul]
D
[அமிதவ் கோஷ் / Amitav Ghosh]
Question 5 Explanation: 
 2017–க்கான Tata Literature Live! வாழ்நாள் சாதனையாளர் விருது, மூத்த நடிகரும் நாடக ஆசிரியருமான கிரிஷ் கர்னாட்டுக்கு நவம்பர் 19 அன்று மும்பையின் நரிமன் முனையிலுள்ள தேசிய கலை மையத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். இந்தவிழா, நவம்பர் 16-19 வரை நடைபெறும்.
Question 6
2வது ‘நோபல் பரிசு சீரிஸ்–இந்தியா’ நிகழ்வை நடத்தவுள்ள மாநிலம் எது?
A
[குஜராத் / Gujarat]
B
[கோவா / Goa]
C
[கர்நாடகா / Karnataka]
D
[அரியானா / Haryana]
Question 6 Explanation: 
 2018 பிப்ரவரி 1-2ல் 2வது ‘நோபல் பரிசு சீரிஸ்–இந்தியா’ நிகழ்வை நடத்துவதற்காக அண்மையில், உயிரித்தொழில்நுட்ப துறையானது நோபல் ஊடகம் AB மற்றும் கோவா அரசுடன் ஒரு முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அறிவு, கல்வி, அறிவியல், உட்கட்டமைப்பு மற்றும் பணிகள் குறித்த மையப் பிரச்சினைகளை இது விவாதிக்கும்.  நோபல் பரிசாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெறும் கருத்துப் பரிமாற்றத்தினால், அவர்களிடையே அறிவியல் ஆர்வம் உண்டாகும். இந்நிகழ்வு, கண்காட்சிகள், கருத்தரங்குகள், விரிவுரைகள், வட்டமேசை விவாதங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். முதல் ‘நோபல் பரிசு சீரிஸ்–இந்தியா’ நிகழ்வானது, 2017 ஜனவரியில் குஜராத்தில் நடைபெற்றது.
Question 7
2. எந்தத் தேதியில், 2017ல் உலக சுனாமி விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது?
A
நவம்பர் 4
B
நவம்பர் 5
C
நவம்பர் 3
D
நவம்பர் 6
Question 7 Explanation: 
 சுனாமி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று (நவம்பர் 5) உலக சுனாமி விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது. சுனாமி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 5 அன்று உலக சுனாமி விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்க ஐ.நா சபையில் கடந்த 2015 டிசம்பரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நாளில், அவசர காலங்களில் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடத்தப்படுகின்றன.
Question 8
2017–க்கான UNESCO–வின் ஆசியா பசிபிக் விருது வென்ற தமிழக கோவில் எது?
A
[தஞ்சைப் பெருவுடையார் திருக்கோவில்]
B
[கங்கைகொண்ட சோழீசுவரர் திருக்கோவில்]
C
[திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில்]
D
[திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில்]
Question 8 Explanation: 
 தமிழகத்திலியே முதன்முறையாக திருச்சியிலுள்ள திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலானது, UNESCOவின் மிகவுயர்ந்த விருதான ஆசியா பசிபிக் பாரம்பரிய விருதினை வென்றுள்ளது.  கோவிலின் கட்டமைப்புகள் தற்போதும் பழமைமாறாமல் புதுப்பொலிவுடன் காட்சியளிப்பதாலும், பாரம்பரிய வழிமுறைகளைக் கடைபிடித்து வருவதாலும் இந்த விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இக்கோவில் காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே திருவரங்கம் ஆற்றுத் தீவில் அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி 7 சுற்றுவரிசைகளும், 21 கோபுரங்களும், 236 அடிவுயர ராஜ கோபுரங்களும் உள்ளன. இத்திருக்கோவில் வைணவ திருத்தலங்களில் முதலிடத்தில் உள்ளது.
Question 9
2017–க்கான உலக இளைஞர் மாநாட்டை நடத்தும் நகரம் எது?
A
[எகிப்து / Egypt]
B
[இந்தியா / India]
C
[இஸ்ரேல் / Israel]
D
[ஆஸ்திரேலியா / Australia]
Question 9 Explanation: 
 நவம்பர் 4 அன்று எகிப்தின் ஷராம் எல் ஷேக் நகரில், 2017–க்கான உலக இளைஞர் மாநாடு தொடங்கியது. இந்த 5 நாள் மாநாட்டை, எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபட்டா தொடங்கிவைத்தார். இந்த மாநாட்டில் மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கலந்துகொண்டார்.  உலக இளைஞர்களுக்கு உலகளவில் உள்ள கொள்கை வடிவமைப்பாளர்களுடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தித்தருவதை இம்மாநாடு குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இதில் 52 நாடுகள் பங்கேற்றன.
Question 10
2017-க்கான மகளிர் ஹாக்கி ஆசிய கோப்பையை வென்ற அணி எது?
A
[சீனா / China]
B
[இங்கிலாந்து / England]
C
[இந்தியா / India]
D
[ஜப்பான் / Japan]
Question 10 Explanation: 
 நவம்பர் 5 அன்று ஜப்பானின் ககாமிகஹாரா நகரில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதியாட்டத்தில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் ‘ஷூட் அவுட்’ முறையில் சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சீசனின் சிறந்த கோல் கீப்பராக இந்திய கோல் கீப்பர் சவீதா தேர்வு செய்யப்பட்டார்.  இதன்மூலம், அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதிபெற்றுள்ளது. இந்தக்கோப்பையை 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மகளிர் அணி மீண்டும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Question 11
2017–க்கான விஷ்ணுதாஸ் பாவே விருதினை வென்றவர் யார்?
A
[ஜெயந்த் சவர்க்கார் / Jayant Sawarkar]
B
[விக்ரம் கோகலே / Vikram Gokhale]
C
[பரேஷ் ராவல் / Paresh Rawal]
D
[மோகன் ஜோஷி / Mohan Joshi]
Question 11 Explanation: 
 திரையரங்க பங்களிப்பிற்காக, மூத்த இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகரான மோகன் ஜோஷிக்கு, நவம்பர் 5 அன்று சங்கிலியில் நடைபெற்ற மராத்தி ரங்பூமி தின் விழாவின் போது, 2017–க்கான விஷ்ணுதாஸ் பாவே விருது வழங்கப்பட்டது. நடப்பு நிகழ்வுகள் பக்கம் 3  இவ்விருது, மராத்தி திரையரங்கின் நிறுவனர் விஷ்ணுதாஸ் பாவேவின் நினைவாக வழந்கப்படுகிறது. இது ஒரு கோப்பை, பாராட்டுப்பத்திரம் மற்றும் ரூ.25,000 ரொக்கப் பரிசினை உள்ளடக்கியது.
Question 12
சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
A
[பாரிஸ் / Paris]
B
[ஜெனிவா / Geneva]
C
[வாஷிங்டன் / Washington DC]
D
[வார்சா / Warsaw]
Question 12 Explanation: 
 நவம்பர் 6 அன்று ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ என்கிற அறிக்கை வெளியானது. இந்த அறிக்கையில் வரிஏய்ப்புசெய்து வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ள தொழில் அதிபர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு இந்தத் தகவல்களை திரட்டியுள்ளது.  இதுவரை வெளிவந்துள்ள நிதிசார்ந்த ஆவணங்களில் பாரடைஸ் பேப்பர்ஸ் அறிக்கைதான் அதிக ஆவணங்களைக்கொண்ட அறிக்கையாகும். 1.34 கோடி ஆவணங்களைக் கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களும், செல்வாக்குமிக்க பல தலைவர்களும், நடிகர்களும், அரசியல்வாதிகளும் இடம் பெற்றுள்ளனர்.  இவர்கள் தங்களது நாட்டிலிருந்து வரிஏய்ப்புசெய்த பணத்தைக் கொண்டு பல்வேறு நாடுகளிலும் சொத்துகளை வாங்கியுள்ளனர். முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர். இதில் 700-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். 180 நாடுகளில், அதிக நபர்களைக் கொண்ட நாடுகள் அடிப்படையில் இந்தியா 19வது இடத்திலுள்ளது.
Question 13
2017 ஆடவர் ஒற்றையர் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை வென்றவர் யார்?
A
[கிடாம்பி ஸ்ரீகாந்த் / Kidambi Srikanth]
B
[பிரணாவ் ஜெர்ரி சோப்ரா / Pranaav Jerry Chopra]
C
[H S பிரணாய் / H S Prannoy]
D
[கஷ்யாப் பருப்பள்ளி / Kashyap Parupalli]
Question 13 Explanation: 
 மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் 82-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித் தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் ஸ்ரீகாந்தை 21-15, 16-21, 21-7 என்ற செட்கணக்கில் H.S. பிரணாய் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
Question 14
எந்த நாடு, 2017 உலக கரிம மாநாட்டை நடத்துகிறது?  
A
[துருக்கி / Turkey]
B
[இந்தியா / India]
C
[சீனா / China]
D
[இஸ்ரேல் / Israel]
Question 14 Explanation: 
 உலக கரிம மாநாட்டின் 19-ஆம் பதிப்பு நவம்பர் 9-11 வரை கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மையத்தில் நடைபெறும். 15 இந்திய மாநிலங்களைச் சேர்ந்த 55 விதைக்குழுக்கள், 4,000 வகையான விதைகளை காட்சிப்படுத்தும் இந்நிகழ்வினை, கரிம வேளாண் இயக்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு (IFOAM) மற்றும் OAFI ஆகியவை இணைந்து ஏற்பாடுசெய்துள்ளன.  110 நாடுகளைச் சேர்ந்த 1400 பிரதிநிதிகளும், இந்தியாவிலிருந்து 2000 பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்கேற்பர். 3 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்நிகழ்வு, இம்முறை இந்தியாவில் நடைபெறுகிறது. இதன் 18-ஆம் பதிப்பு 2014ல் துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்றது.
Question 15
2018–க்கான இஸ்ரேலின் ஜெனிசிஸ் பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
A
[மைக்கேல் புளூம்பெர்க் / Michael Bloomberg]
B
[இட்ஷாக் பெல்மேன் / Itzhak Perlman]
C
[அனிஷ் கபூர் / Anish Kapoor]
D
[நடாலி போர்ட்மேன் / Natalie Portman]
Question 15 Explanation: 
 சமூகத்தின் மீதான அர்ப்பணிப்பு மற்றும் யூத மற்றும் இஸ்ரேலிய உறவுகளின் மீதான ஆழ்ந்த இணைப்பினை அங்கீகரிக்கும் விதமாக, இஸ்ரேலை பிறப்பிடமாகக் கொண்ட நடிகை மற்றும் இயக்குநர் நடாலி போர்ட்மேனுக்கு 2018–க்கான இஸ்ரேலின் ஜெனிசிஸ் பரிசு வழங்கப்பட்டுள்ளது.  இது, ஜெனிசிஸ் பரிசளிப்பு அறக்கட்டளையால் நவம்பர் 7 அன்று அறிவிக்கப்பட்டது. $1 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய “யூதர்களின் நோபல்பரிசு” என அழைக்கப்படும் இவ்விருது, ஒவ்வோர் ஆண்டும் தொழிற்முறை சாதனை மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் யூதர்களின் மதிப்பை அடுத்த தலைமுறை யூதர்களுக்கு ஓர் ஊக்கமாக கொண்டுசெல்வோருக்கு வழங்கப்படுகிறது. இவர் இவ்விருதைப் பெறும் 5வது நபர் மற்றும் முதல் பெண்மணியாவார்.
Question 16
2017 மகளிர் ஒற்றையர் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை வென்றவர் யார்?
A
[ஸ்ரீயான்ஷி பரதேசி / Shriyanshi Pardeshi]
B
[பிரஜக்தா சாவந்த் / Prajakta Sawant]
C
[சாய்னா நேவால் / Saina Nehwal]
D
[PV சிந்து / PV Sindhu]
Question 16 Explanation: 
 நவம்பர் 8 அன்று மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடைபெற்ற 82வது மகளிர் ஒற்றையர் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் போட்டியில், 21-17, 27-25 என்ற நேர் செட்டில் PV சிந்துவை வீழ்த்தி சாய்னா நேவால் பட்டத்தை வென்றார். சாய்னா நேவால் இப்பட்டத்தை 3வது முறையாக வென்றுள்ளார்.
Question 17
எந்த நாடு, UNESCO–வின் பொது மாநாட்டின் 39வது அமர்வை நடத்தியது?
A
[பிரான்சு / France]
B
[இந்தியா / India]
C
[ஜெர்மனி / Germany]
D
[இத்தாலி / Italy]
Question 17 Explanation: 
 ஐ.நாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO) பொது மாநாட்டின் 39வது அமர்வு பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்றது. இதில், UNESCO–வின் மிகவுயர்ந்த முடிவெடுக்கும் செயற்குழுவில், உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது.  2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த சந்திப்பில்., உறுப்பினர்கள், இணை உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினரல்லாத நாடுகளின் பிரதிநிதிகள், அரசுகளுக்கு இடையேயான அமைப்புகள் மற்றும் அரசுசாரா அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த பொது மாநாடு, அமைப்பின் பணிகளுக்கான முக்கிய வழிகாட்டல்களை நிர்ணயிக்கிறது.
Question 18
எந்தத் தேதியில், இந்தியாவில் தேசிய சட்ட சேவைகள் நாள் கடைபிடிக்கப்படுகிறது?
A
[A] நவம்பர் 9
B
[B] நவம்பர் 10
C
[C] நவம்பர் 11
D
[D] நவம்பர் 12
Question 18 Explanation: 
 ஏழை எளிய மக்களுக்கும் நீதிபெறுவதில் சம வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதன் அடிப்படையில் “Legal services Authority act 1987” ஆனது கடந்த 09.11.1995 அன்று நடைமுறைக்கு வந்தது. அவ்வாறு நடைமுறைக்குவந்த நாளான நவம்பர் 9ஐ ஒவ்வோர் ஆண்டும் தேசிய சட்ட சேவைகள் நாளாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது.  இளம்வயதில் மாணவர்கள் மற்றும் குழந்தைகள் அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் அதுதொடர்பான சட்டங்களை அறிந்துகொள்ள இந்நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
Question 19
12வது கிழக்காசிய உச்சிமாநாட்டை நடத்தும் நாடு எது?
A
[A] [பிலிப்பைன்ஸ் / Philippines]
B
[B] [இந்தியா / India]
C
[C] [வியட்நாம் / Vietnam]
D
[D] [மலேசியா / Malaysia]
Question 19 Explanation: 
 தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ASEAN அமைப்பில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பின்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புரூனே, கம்போடியா, லாவோஸ், மியான்மர், வியட்நாம் ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இவைதவிர, இந்தியா, சீனா, ஜப்பான், கொரிய குடியரசு, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய 8 நாடுகள் கிழக்காசிய உச்சிமாநாட்டில் இடம்பெற்றுள்ளன.  இந்நிலையில், இந்தியாவுக்கும், ASEAN அமைப்புக்கும் இடையிலான 15வது உச்சிமாநாடும், 12வது கிழக்காசிய உச்சிமாநாடும் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் வரும் 14 அன்று நடைபெறவுள்ளது. ASEAN உச்சிமாநாட்டிலும், கிழக்காசிய உச்சிமாநாட்டிலும் விவாதிக்கப்படவுள்ள விவகாரங்களில் பயங்கரவாதமும் ஒன்றாகும்.
Question 20
2017–க்கான IBSF உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பை வென்றவர் யார்?
A
[பங்கஜ் அத்வானி / Pankaj Advani]
B
[கீத் சேதி / Geet Sethi]
C
[அசோக் சாண்டில்யா / Ashok Shandilya]
D
[சுபாஷ் அகர்வால் / Subhash Agarwal]
Question 20 Explanation: 
 நவம்பர் 12 அன்று தோகாவில் நடைபெற்ற உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச்சுற்றில் இந்தியவீரர் பங்கஜ் அத்வானி இங்கிலாந்து வீரர் மைக் ரசலை 6-2 என வீழ்த்தி சாம்பியன் பட்டம்வென்றார்.  பங்கஜ் வெல்லும் 12வது 150-up format பிரிவின் உலக சாம்பியன்ஷிப் பட்டம் மற்றும் 17வது உலக சாம்பியன்ஷிப் பட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 13 அன்று நடைபெறவுள்ள ‘Grand Double’ போட்டியின் இறுதியாட்டத்தில் பங்கஜ் கலந்து கொள்ளவுள்ளார்.
Question 21
37வது இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பங்குதாரர் நாடு எது?
A
[கிர்கிஸ்தான் / Kyrgyzstan]
B
[வியட்னாம் / Vietnam]
C
[ஜப்பான் / Japan]
D
[மலேசியா / Malaysia]
Question 21 Explanation: 
 37வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி புது டெல்லியில் பிரகதி மைதானத்தில் நவம்பர் 14 அன்று தொடங்கியது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இதனைத் தொடங்கிவைத்தார். இந்திய வர்த்தக மேம்பாட்டமைப்பு, இந்த 14 நாள் கண்காட்சிக்கு ஏற்பாடுசெய்துள்ளது. இதில், வியட்நாம் பங்குதாரர் நாடாகவும், கிர்கிஸ்தான் சிறப்புப் பார்வை நாடாகவும், ஜார்க்கண்ட் பங்குதாரர் மாநிலமாகவும் இருக்கும்.  “நிமிர்ந்து நில் இந்தியா, தொடங்கிடு இந்தியா” என்பது இந்த ஆண்டு கண்காட்சியின் மையக்கருத்தாகும். 22 நாடுகளைச்சேர்ந்த சுமார் 7000 பங்கேற்பாளர்கள் மின்னணு சாதனங்கள் தொடங்கி ஜவுளிப்பொருட்கள் வரையிலான தங்களது உற்பத்தி பொருட்களை இதில் காட்சிக்குவைத்துள்ளனர்.
Question 22
அண்மையில், யோகாவை விளையாட்டின் ஒரு பகுதியாக அறிவித்த நாடு எது?
A
[சவுதி அரேபியா / Saudi Arabia]
B
[ஈரான் / Iran]
C
[இஸ்ரேல் / Israel]
D
[துர்க்மெனிஸ்தான் / Turkmenistan]
Question 22 Explanation: 
 சவுதி வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகம், யோகாவை விளையாட்டாக அங்கீகரித்து, ஒப்புதலளித்துள்ளது. இனி சவுதி அரேபியாவில் எவரும் யோகா கற்க, யோகா ஆசிரியராக பணிபுரிய உரிமம்பெறலாம். சவுதி அரேபியாவின் முதல் யோகா பயிற்சியாளரான நௌவ் மர்வா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், யோகா ஒரு விளையாட்டாக சவுதி அரசால் அங்கீகாரம் செய்யபட்டுள்ளது என பகிர்ந்திருந்தார்.
Question 23
IFFI-ல் 2017-ம் ஆண்டுக்கான சிறந்த பண்பாளர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
A
[பிரியங்கா சோப்ரா / Priyanka Chopra]
B
[அமிதாப்பச்சன் / Amitabh Bachchan]
C
[ரஜினிகாந்த் / Rajinikanth]
D
[சாருக்கான் / Shahrukh Khan]
Question 23 Explanation: 
 மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் கோவாவில் நவம்பர் 20–28 வரை இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு இந்திய சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் இந்த ஆண்டுக்கான சிறந்த பண்பாளர் விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும்போது இவ்விருது அவருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 75 வயதாகும் அமிதாப்பச்சன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் சாதனைபடைத்துள்ளார். 190 படங்களில் நடித்துள்ளார். 4 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், 15 முறை பிலிம்பேர் விருதுகளும் பெற்றுள்ளார்.
Question 24
61வது தேசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்சிப்பில் வென்றவர் யார்?
A
[ஸ்ரேயாசி சிங் / Shreyasi Singh]
B
[ராஜேஸ்வரி குமாரி / Rajeshwari Kumari]
C
[ஷகன் செளத்ரி / Shagun Chowdhary]
D
[செளமியா குப்தா / Soumya Gupta]
Question 24 Explanation: 
 நவம்பர் 16 அன்று புது டெல்லியில் நடைபெற்ற 61வது தேசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்சிப்பில், மகளிர் ‘டிராப்’ நிகழ்வில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஷகன் செளத்ரி, பஞ்சாப்பைச் சேர்ந்த ராஜேஸ்வரி குமாரியை 41-38 என்ற கணக்கில் தோற்கடித்து, தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.  ஒலிம்பிக் ‘டிராப்’ நிகழ்வுக்கு தகுதிபெற்றுள்ள முதல் இந்தியப்பெண்மணி இவராவார். 2012ல் லண்டனில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கின் ‘டிராப்’ துப்பாக்கிச்சுடுதல் போட்டியில், 20வது இடத்தைப் பிடித்தார். ஒலிம்பிக் கோல்ட் கொஸ்ட் அமைப்பு இவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
Question 25
மும்பை பங்குச்சந்தையின் புதிய தலைவர் யார்?
A
[சேதுரத்னம் ரவி / Sethurathnam Ravi]
B
[S ராமதுரை / S Ramadorai]
C
[பிரேம் குமார் / Prem Kumar]
D
[சுதாகர் ராவ் / Sudhakar Rao]
Question 25 Explanation: 
 நவம்பர் 13 அன்று மும்பை பங்குச்சந்தையின் புதிய தலைவராக, குறிப்பிடத்தக்க பட்டய கணக்காளரான சேதுரத்னம் ரவி நியமிக்கப்பட்டார். இவருக்குமுன் திரேந்திர ஸ்வரூப் இதன் தலைவராக இருந்தார். தற்சமயம், UTI அறக்கட்டளை நிறுவனம், S ரவி நிதிமேலாண்மை சேவை நிறுவனம், SMERA மதிப்பீடுகள், SBI-SG Global Securities, IDBI வங்கி, STCI நிதி நிறுவனம், இந்திய சுற்றுலா நிதிநிறுவனம் மற்றும் BOI வணிக வங்கியாளர்கள் போன்ற பல நிறுவனங்களில் இயக்குநராக ரவி செயல்படுகிறார்.  இதுதவிர, அவர் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு விஷயங்களில் ஒரு நிறுவன கட்டமைப்பை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை பரிந்துரைக்க, கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொது நிறுவனங்கள் அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட பணிக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். மேலும், இவர் SEBI-ன் கையகப்படுத்தும் குழு மற்றும் பரஸ்பர நிதி ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக உள்ளார்.
Question 26
2017–க்கான பேராசிரியர். யஷ்வந்த் ராவ் கேல்கர் இளைஞர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர் யார்?
A
[அருணிமா சின்ஹா / Arunima Sinha]
B
[கோபிநாத் R / Gopinath R]
C
[நாகேஷ் தாகூர் / Nagesh Thakur]
D
[RK விஸ்வஜித் சிங் / RK Viswajit Singh]
Question 26 Explanation: 
 2017 பேரா. யஷ்வந்த் ராவ் கேல்கர் இளைஞர் விருதுக்கு, பெங்களூரைச்சேர்ந்த பிரபல குழந்தை பராமரிப்பு ஆர்வலர் கோபிநாத் R தெரிவுசெய்யப்பட்டுள்ளார். குழந்தை பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் இவரின் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் விதமாக இவ்விருது வழங்கப்படுகிறது. டிசம்பர் 2 அன்று ஜார்கண்டில் ராஞ்சியில் நடைபெறும் 63வது தேசிய மாநாட்டில் அவருக்கு இவ்விருது வழங்கப்படும்.  ரூ.50,000 ரொக்கம், சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு ஆகியவற்றை உள்ளடக்கியது இவ்விருது. இவ்விருது, பேரா. யஷ்வந்தராவ் கேல்கரின் நினைவாக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தால் (ABVP) நிறுவப்பட்டது.
Question 27
2017–ம் ஆண்டுக்கான இந்திராகாந்தி அமைதி விருது யாருக்கு வழங்கப்படவுள்ளது?
A
[ரகுராம் ராஜன் / Raghuram Rajan]
B
[மம்தா பானர்ஜி / Mamata Banerjee]
C
[மன்மோகன் சிங் / Manmohan Singh]
D
[பிரணாப் முகர்ஜி / Pranab Mukherjee]
Question 27 Explanation: 
 முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்திராகாந்தி அமைதி விருது வழங்கப்படவுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பெயரில் அமைதி விருது கடந்த 1986ல் உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளான நவம்பர் 19 அன்று இவ்விருது வழங்கப்படுகிறது.  இவ்விருதுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான பன்னாட்டு நடுவர் குழுவானது ஒருமனதாக தேர்வுசெய்துள்ளது. நாட்டை 2004 முதல் 2014 வரை சிறப்பான முறையில் தலைமைதாங்கியதற்காகவும், உலகளவில் இந்தியாவின் புகழை உயர்த்தியற்காகவும் அவருக்கு இவ்விருது வழங்கப்படவுள்ளது.
Question 28
“Age of Anger: A History of the Present” எனும் நூலின் ஆசிரியர் யார்?
A
[மிலன் வைஷ்ணவ் / Milan Vaishnav]
B
[நவநீத தேவ் சென் / Nabaneeta Dev Sen]
C
[சஷி தரூர் / Shashi Tharoor]
D
[பங்கஜ் மிஸ்ரா / Pankaj Mishra]
Question 28 Explanation: 
 8வது டாடா இலக்கிய விழாவில், கற்பனையல்லாத பிரிவில், ‘இந்த ஆண்டுக்கான நூல்’ எனும் விருது பங்கஜ் மிஸ்ரா எழுதிய “Age of Anger: A History of the Present” எனும் நூலுக்கு வழங்கப்பட்டது. புனைகதைக்கான பிரிவில், ஈஸ்டரின் கிரே-வின், ‘Son of the Thundercloud’ எனும் நூலுக்கு விருது வழங்கப்பட்டது.  வங்கமொழி குழந்தைகள் இலக்கிய ஆசிரியர்களுக்கான டாடா அறக்கட்டளையின், ‘Big Little Book Awards’ நவநீத தேவ் சென்னுக்கு வழங்கப்பட்டது. நவம்பர் 20 அன்று மும்பையில் நடைபெற்ற டாடா இலக்கிய நேரலை விழாவில், திரைத்துறைக்கான சிறந்த பங்களிப்பிற்காக, நடிகர் மற்றும் நாடக ஆசிரியரான கிரிஷ் கர்னாடுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
Question 29
IMD வெளியிட்டுள்ள 2017 திறன் தரவரிசையில், இந்தியாவின் தரநிலை என்ன?
A
43வது
B
51வது
C
29வது
D
62வது
Question 29 Explanation: 
 பன்னாட்டு வர்த்தகப்பள்ளி, ஐஎம்டி வெளியிட்டுள்ள, ஆற்றல்மிக்க பணியாளர்களை ஈர்த்து, மேம்படுத்தி, தக்கவைத்துக்கொள்ளும் உலக தரவரிசைப்பட்டியலில் 3 இடங்கள் உயர்ந்து 51வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இதில் சுவிச்சர்லாந்து முதலிடம் வகிக்கிறது.  உலகளவில் இந்த அளவுகோலில் கோலோச்சி வருவது ஐரோப்பாவாகும் சுவிச்சர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் இதில் போட்டிபோடும் நாடுகளாகும். ஆஸ்திரியா, பின்லாந்து, நார்வே, ஜெர்மனி, சுவீடன், லக்சம்பர்க் உள்ளிட்ட நாடுகள் முதல் 10 இடங்களிலிருக்கும் பிறநாடுகளாகும். ஐஎம்டி, உலக நாடுகளின் தரவரிசைக் கணிப்பிற்காக 63 நாடுகளைத் தேர்வுசெய்து, அந்நாடுகளில் பணியாளர்களை ஈர்த்து, மேம்படுத்தி, தக்கவைத்துக்கொள்ள மேற்கொண்ட வழிமுறைகளை ஆராய்ந்தது.  முதலீடுகள், ஈர்ப்பு மற்றும் தயார்நிலை ஆகிய அளவுகோள்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், இந்தியா முறையே, 62,43 மற்றும் 29வது இடங்களைப்பெற்றிருந்தது. பிரிக்ஸ் நாடுகளில், சீனா, 40வது இடத்தில் முன்னிலையிலும், அதனைத்தொடர்ந்து ரஷ்யா 43வது இடத்திலும் உள்ளது. இந்தியாவுக்கு ஒரு இடம் தள்ளி, 52வது இடத்தில் பிரேசில் உள்ளது.
Question 30
இந்திய மலையேறுவோர் அமைப்பின் சார்பாக 2017க்கான வாழ்நாள் சாதனையாளர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
A
[RS ஜம்வால் / RS Jamwal]
B
[அஜித் பை / Ajit Pai]
C
[தரசங்கர் / Tarasankar]
D
[மானிக் பானர்ஜி / Manik Banerjee]
Question 30 Explanation: 
 40 ஆண்டுகளுக்கும் மேலாக மலையேறுதலில் சாதனை புரிந்ததற்காகவும், மலையேறும் கலையை ஊக்குவித்ததற்காகவும், மூத்த பத்திரிகையாளரும் மலையேற்ற வீரருமான மானிக் பானர்ஜிக்கு, இந்திய மலையேறுவோர் அமைப்பின் சார்பாக 2017-க்கான நைன் சிங்–கிஷேன் சிங் வாழ்நாள் சாதனையாளர் விருது நவம்பர் 19 அன்று வழங்கப்பட்டது.  இதுதவிர, கர்னல். RS ஜம்வால் அவர்களுக்கு இந்திய மலையேறுவோர் அமைப்பின் சார்பாக தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இவர் 3 முறை (2013, 2016 மற்றும் 2017ல்) எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியினை அடைந்துள்ளார்.
Question 31
5வது சர்வதேச இணைய பாதுகாப்பு மாநாட்டை தொடங்கிவைத்தவர் யார்?
A
[நரேந்திர மோடி / Narendra Modi]
B
[ராம்நாத் கோவிந்த் / Ram Nath Kovind]
C
[ராஜ்நாத் சிங் / Raj Nath Singh]
D
[ஸ்மிரிதி இராணி / Smriti Irani]
Question 31 Explanation: 
 நவம்பர் 23 அன்று புது டெல்லியில், 5வது சர்வதேச இணைய பாதுகாப்பு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். “Cyber for All: A Secure and Inclusive Cyberspace for Sustainable Development” என்பது இம்மாநாட்டின் மையக்கருத்தாகும். இணைய பாதுகாப்பில் பன்னாட்டளவில் ஒத்துழைப்பை அதிகரிப்பதே, இம்மாநாட்டின் நோக்கமாகும்.  முதல்முறையாக, இந்நிகழ்வு இந்தியாவில் நடத்தப்படுகிறது. இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங் உட்பட 31 நாடுகளைச் சேர்ந்த 33 அமைச்சர்கள் மற்றும் 124 நாடுகளைச்சேர்ந்த பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொள்வார்கள்.  பன்னாட்டு தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழிற்வல்லுநர்கள், மதியுரைஞர்கள் மற்றும் இணைய வல்லுநர்கள் ஆகியோர் இணையத்தை உகந்த வகையில் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல் மற்றும் சவால்களைப்பற்றி ஆராய்வர்.
Question 32
இந்திய கடற்படையின் முதல் பெண் விமானி யார்?
A
[சக்தி மயா S / Sakthi Maya S]
B
[அஸ்தா சேகல் / Astha Segal]
C
[ரூபா A / Roopa A]
D
[சுபாங்கி ஸ்வரூப் / Shubhangi Swaroop]
Question 32 Explanation: 
 கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள எழிமலா கடற்படை அகாடமியில் உ.பி.யைச் சேர்ந்த சுபாங்கி ஸ்வரூப், டெல்லியைச்சேர்ந்த அஸ்தா சேகல், புதுச்சேரியைச் சேர்ந்த ரூபா, கேரளாவைச்சேர்ந்த சக்தி மயா ஆகிய நான்கு பெண் அதிகாரிகள் நவம்பர் 22 அன்று பயிற்சியை நிறைவுசெய்தனர். இந்தப் பயிற்சி நிறைவு விழாவில் கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லம்பா கலந்துகொண்டார்.  இவர்களில் சுபாங்கி ஸ்வரூப் தவிர மற்ற 3 பெண் அதிகாரிகளும் கடற்படை ஆயுதப்பிரிவில்(NIA) இணைக்கப்பட்டனர். இப்பிரிவில் பெண்கள் சேர்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும். சுபாங்கி ஸ்வரூப் மட்டும் கடற்படை விமானப்பிரிவில் விமானியாக சேர்க்கப்பட்டார்.
Question 33
எந்த மாநிலத்தில், ஆசியாவின் மிகப்பெரிய திட நிலை பிணைப்புறு (Solid State Interlocking (SSI)) அமைப்பை இந்திய இரயில்வே நிறுவியுள்ளது?
A
[தமிழ்நாடு / Tamil Nadu]
B
[மேற்கு வங்கம் / West Bengal]
C
[மத்தியப்பிரதேசம் / Madhya Pradesh]
D
[பஞ்சாப் / Punjab]
Question 33 Explanation: 
 ஆசியாவின் மிகப்பெரிய திடநிலை பிணைப்புறு (Solid State Interlocking (SSI)) அமைப்பை இந்திய இரயில்வே மேற்கு வங்க மாநிலம் கரக்பூரில் நிறுவியுள்ளது. இதன்மூலம், ரயில்களுக்கான 800 வெவ்வேறு பாதைகளை நிலையத் தலைவர்கள் நிமிடத்தில் அமைக்கமுடியும்.  பிணைப்புறு என்பது ஒரு சமிக்ஞை கருவியாகும்., இது ரயில்வே சந்திப்புகள் மற்றும் இருப்புப்பாதை கடவுகளில் விபத்துகள் நடவாமல் தடுக்க உதவுகிறது. இந்த புதிய முறையானது, 423 பாதைகள் மட்டுமே அமைக்கமுடிந்த பழைய 1989 ரிலே அமைப்பு முறைக்கு மாற்றாக உள்ளது.  இதன் மென்பொருள், ரயிலுக்கான சரியான பாதையை நிலைய தலைவருக்கு தெரிவிக்கும். இதன்மூலம், வேலை நேரம் மற்றும் மனிதப்பிழைகள் ஆகியவை குறையும். இது விபத்துகளின் சாத்தியத்தை குறைக்கும்.
Question 34
IKEA அதன் முதல் அனுபவ மையமான ‘IKEA Hej HOME’ஐ, இந்தியாவின் எந்த மாநிலத்தில் தொடங்கியுள்ளது?
A
[ஐதராபாத் / Hyderabad]
B
[பெங்களூரு / Bengaluru]
C
[டெல்லி / Delhi NCR]
D
[மும்பை / Mumbai]
Question 34 Explanation: 
 சுவீட நாட்டு சில்லறை விற்பனை நிறுவனமான IKEA, அதன் முதல் அனுபவ மையமான ‘IKEA Hej HOME’ஐ, ஐதராபாத் மாநிலத்தில் தொடங்கியுள்ளது. 6 மாத காலத்தில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள இந்த ஹெஜ் ஹோம், சில்லறை வணிகத்தின் சிறப்பினை கூறும் மற்றும் IKEAவின் பொருட்கள் மற்றும் தீர்வுகளை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் மற்றும் விற்பனையையும் மேற்கொள்ளும்.  இந்தக் கண்காட்சியில், வீட்டு உபயோகப்பொருட்கள், சமையலறை பொருட்கள் மற்றும் கட்டில் மரச்சாமான்கள் விற்பனையில் இடம்பெறும். ஐதராபாத்துக்கு அடுத்தபடியாக, 2019ல் மும்பையில் இரண்டாவது கடை திறக்கப்படும், அதன்பிறகு பெங்களூரு மற்றும் டெல்லியிலும் திறக்கப்படும்.
Question 35
2017–க்கான சர்வதேச கீதை மகோத்சவத்தை தொடங்கிவைப்பவர் யார்?
A
[நரேந்திர மோடி / Narendra Modi]
B
[ராம்நாத் கோவிந்த் / Ram Nath Kovind]
C
[உமா பாரதி / Uma Bharti]
D
[ஸ்மிரிதி இராணி / Smriti Irani]
Question 35 Explanation: 
 நவம்பர் 25 அன்று அரியானாவின் குருக்ஷேத்திரத்தில் நடைபெறவுள்ள 2017–க்கான சர்வதேச கீதை மகோத்சவத்தை, இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கிவைப்பார். மேலும், பிரம்ம சரோவர், கீதை யக்னா மற்றும் கீதை பூஜை ஆகிய விழாக்களில் குடியரசுத்தலைவர் பங்கேற்கவுள்ளார்.  கீதை அறிவு மையத்தில் அமையவுள்ள கீதை ஆராய்ச்சி மையத்துக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டுவார். டிசம்பர் 3 அன்று முடிவடையும் இந்நிகழ்வில், மொரிசியசு பங்குதாரர் நாடாகவும், உத்தரப்பிரதேச மாநிலம் பங்குதாரர் மாநிலமாகவும் இருக்கும். இந்த மகோத்சவத்தில் சுமார் 25-30 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.
Question 36
2019ல் நடைபெறவுள்ள பாட்மிண்டன் மற்றும் பாரா பாட்மிண்டன் உலக சாம்பியன்சிப் போட்டிகளை ஒருங்கிணைந்து நடத்தும் முதல் நகரம் எது?
A
[பசேல் / Basel]
B
[லண்டன் / London]
C
[டோக்கியோ / Tokyo]
D
[புது டெல்லி / New Delhi]
Question 36 Explanation: 
 வடமேற்கு சுவிச்சர்லாந்தில் ஒரு நகரமான பசேல், 2019ல் நடைபெறவுள்ள பாட்மிண்டன் மற்றும் பாரா பாட்மிண்டன் உலக சாம்பியன்சிப் போட்டிகளை ஒருங்கிணைந்து நடத்தும் முதல் நகரமாகிறது.  இரண்டு போட்டிகளும் ஒரே நேரத்தில் நடத்தப்படும் என்று உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு நவம்பர் 23 அன்று அறிவித்தது. 2020 பாராலிம்பிக் விளையாட்டுகளில் பாட்மிண்டனில் 14 விதமான பதக்க நிகழ்வுகள் நடைபெறும்.
Question 37
36வது சர்வதேச புவியியல் மாநாட்டை (IGC–2020) நடத்தவிருக்கும் நாடு எது?
A
[நேபாளம் / Nepal]
B
[இந்தியா / India]
C
[வங்கதேசம் / Bangladesh]
D
[இலங்கை / Sri Lanka]
Question 37 Explanation: 
 36வது சர்வதேச புவியியல் மாநாடு (IGC–2020) புது டெல்லியில், வரும் 2020ம் ஆண்டில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை, மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் மற்றும் புவி அறிவியல் அமைச்சகம் ஆகியவை இணைந்து நடத்துகிறது.  இந்தியா மற்றும் அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாட்டு அறிவியலாளர்களின் ஒத்துழைப்புடன் இம்மாநாடு நடத்தப்படும். உலகெங்குமிருந்து 7000க்கும் அதிகமான புவியியல் விஞ்ஞானிகள் இதில் பங்கேற்பார்களென எதிர்பார்கப்படுகிறது. இந்த மாநாட்டை சர்வதேச புவி அறிவியல் சங்கம் அதன் சட்டவிதிமுறைகளின்படி நடத்துகிறது.
Question 38
இந்தியாவில், எந்தத் தேதியில் அரசியலமைப்பு நாள் கொண்டாடப்படுகிறது?
A
நவம்பர் 23
B
நவம்பர் 24
C
நவம்பர் 25
D
நவம்பர் 26
Question 38 Explanation: 
 இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னர் கடந்த 1949-ம் ஆண்டு Dr. B.R அம்பேத்கர் தலைமையில் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் இந்தியா குடியரசு பெற்ற 1950 ஜனவரி 26 அன்று அரசியலமைப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்தது.  இந்நிலையில், அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட தேதியான நவம்பர் 26ஐ சிறப்பிக்கும் வகையில், 2015-ம் ஆண்டு முதல் இந்த நாள் அரசியலமைப்பு நாளாக ஒவ்வோர் ஆண்டும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.  இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கைக்கொள்ளவும், அரசியலமைப்பில் உள்ள அடிப்படை கடமைகள்பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கவும், அரசியலமைப்பு நாளன்று, மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஒரு எண்ம (டிஜிட்டல்) கையொப்ப பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இணையத்தில் ஒரு படிவத்தை நிரப்புவதன்மூலம் மக்கள் இந்தப் பிரச்சாரத்தில் இணையலாம்.
Question 39
ஆவணப்படம், குறும்படம், அனிமேசன் திரைப்படத்திற்கான 15வது MIFFஐ நடத்தும் நகரம் எது?
A
[மும்பை / Mumbai]
B
[புனே / Pune]
C
[புது டெல்லி / New Delhi]
D
[பனாஜி / Panaji]
Question 39 Explanation: 
 இந்திய அரசின் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் திரைப்படப்பிரிவு ஏற்பாடுசெய்துள்ள 2 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ஆவணப்படம், குறும்படம், அனிமேஷன் திரைப்படம் ஆகியவற்றுக்கான மும்பை சர்வதேச திரைப்பட விழாவானது, மும்பையில் வரும் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 வரை நடைபெறும்.  இந்த விழாவில், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படும். இந்தியா மற்றும் அயல்நாடுகளில் தயாரிக்கப்பட்ட சிறந்த ஆவணப்படம், குறும்படம் மற்றும் அனிமேஷன் படங்களும், சிறப்புக் காட்சிகளாக திரையிடப்படும்.
Question 40
2017–க்கான ஆசிய பசிபிக் ஸ்க்ரீன் விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதினை வென்றவர் யார்?
A
[வருண் தவான் / Varun Dhawan]
B
[அக்ஷய் குமார் / Akshay Kumar]
C
[ராஜ்குமார் ராவ் / Rajkummar Rao]
D
[ஷாஹித் கபூர் / Shahid Kapoor]
Question 40 Explanation: 
 11வது ஆசியா பசிபிக் ஸ்க்ரீன் விருதுகளில் ‘நியூட்டன்’ எனும் படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதை ராஜ்குமார் ராவ் பெற்றார். தவிர, சிறந்த திரைக்கதைக்கான விருது அமித் V மசுர்கார் மற்றும் மயங் திவாரி ஆகியோருக்கு ‘நியூட்டன்’ எனும் படத்துக்காக கிடைத்துள்ளது.  இத்திரைப்படம், 2018 அகாடமி விருதுகளில் வெளிநாட்டு மொழிப்பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுத்திரைப்படமாகும். இதனை திரிஷ்யம் பிலிம்ஸ் தயாரிக்க இயக்குனர் மசுர்கார் இயக்கியுள்ளார்.
Question 41
பின்வருவனவற்றுள், 2019ல் சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவிலிருந்து அணுப்பப்படும் முதல் விண்கலம் எது?
A
ஆதித்யா LL
B
ஆதித்யா L1
C
ஆதித்யா XL
D
ஆதித்யா X1
Question 41 Explanation: 
 சூரியனை ஆய்வுசெய்வதற்காக இந்தியாவிலிருந்து முதல் விண்கலம் 2019ல் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவையும், செவ்வாய் கிரகத்தையும் ஆய்வுசெய்ய விண்கலங்களை அனுப்பிய இஸ்ரோ, அடுத்தகட்டமாக சூரியனை ஆய்வுசெய்வதற்காக ஆதித்யா 1 என்ற விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், அதில் சில மாற்றங்களை செய்து ஆதித்யா L1 என பெயர்சூட்டியுள்ளது.  ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து PSLV – XL எனும் ஏவுகணை மூலம் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படும். 400 கிலோ எடைகொண்ட இவ்விண்கலம், சூரிய-புவி அமைப்பின் லாக்ரேஞ்சியன் புள்ளி (L1) 1ல் நிலைநிறுத்தப்படும். புவி வட்டப்பாதையிலிருந்து சூரியனை ஆராய்வதற்காக, அதிநவீன ஆய்வுக்கருவிகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் இந்த விண்கலத்தில் இடம்பெற்றிருக்கும்.
Question 42
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநர் யார்?
A
[அணில் மாதவ் தேவ் / Anil Madhav Dave]
B
[பங்கஜ ரெட்டி / R. Pankaja Reddy]
C
[செளமியா சுவாமிநாதன் / Soumya Swaminathan]
D
[திரிலோசன் மோகபத்ரா / Trilochan Mohapatra]
Question 42 Explanation: 
 இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் என்பது உயிரியல் மருத்துவ ஆய்விற்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான உச்சபட்ச அதிகாரங்கொண்ட இந்திய நிறுவனமாகும். இந்தக் கழகத்திற்கு தேவையான நிதியை இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் வழங்குகிறது.  உலக சுகாதார நிறுவனத்தின் துணை இயக்குநராக, செளமியா சுவாமிநாதன் அடுத்த மாதம் பொறுப்பேற்கவுள்ளார். இவரை, துணை இயக்குநராக, ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது. அந்நிறுவனத்தின் 2வது உயரிய பொறுப்பு இதுவாகும்.  இவர், வேளாண் விஞ்ஞானியும், ‘பசுமைப்புரட்சி’யை ஏற்படுத்தியவருமான M.S. சுவாமிநாதனின் மகளாவார். குழந்தைகள் நல மருத்துவரான செளமியா சுவாமிநாதன், காசநோய் மற்றும் HIV நோய்த்தொற்று குறித்த ஆராய்ச்சியில் 30 ஆண்டுகால அனுபவம்மிக்கவர். இவர், தற்போது, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராகவுள்ளார்.
Question 43
8வது சர்வதேச தொழில்முனைவோர் உச்சிமாநாட்டை தொடங்கிவைத்தவர் யார்?
A
[சுரேஷ் பிரபு / Suresh Prabhu]
B
[அமிதாப் காந்த் / Amitabh Kant]
C
[நரேந்திர மோடி / Narendra Modi]
D
[சுஷ்மா சுவராஜ் / Sushma Swaraj]
Question 43 Explanation: 
 நவம்பர் 28 அன்று ஐதராபாத்தில் தொடங்கும் சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை, தெற்காசியாவிலேயே முதல்முறையாக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து ஏற்பாடுசெய்துள்ளன.  ‘பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் அனைவருக்குமான வளர்ச்சி’ எனும் மையக்கருத்துடன் நடைபெறும் இம்மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகரும், அவரின் மகளுமான இவாங்கா டிரம்ப் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதி குழு பங்கேற்றது.  8வது முறையாக நடைபெறவுள்ள இம்மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள் கலந்துகொள்கின்றனர். இஸ்ரேல், ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளைச்சேர்ந்த பெண் தொழில்முனைவோர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.
Question 44
15வது IBSF உலக ஸ்னூக்கர் ஆடவர் சாம்பியன்ஷிப்–2017ல் வென்றவர் யார்?
A
[பங்கஜ் அத்வானி / Pankaj Advani]
B
[சுபாஷ் / Subhash]
C
[யாசின் / Yasin]
D
[லக்கி வத்னானி / Lucky Vatnani]
Question 44 Explanation: 
 நவம்பர் 28 அன்று தோகாவிலுள்ள அல் அரபி விளையாட்டு சங்கத்தில் நடைபெற்ற உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டத்தை வென்றார். நடைபெற்ற இறுதியாட்டத்தில், ஈரானின் அமீர் சர்கோசை 8-2 (19-71, 79-53, 98-23, 69-62, 60- 05, 0-134, 75-07, 103-4, 77-13, 67-47) என்ற புள்ளிக்கணக்கில் பங்கஜ் தோற்கடித்தார். இது இவர் பெறும் 18வது பட்டமாகும்.
Question 45
இந்திய விளையாட்டு விருதுகளின் முதற்பதிப்பில் “ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்” விருதை வென்றவர் யார்?
A
[விராத் கோலி / Virat Kohli]
B
[பங்கஜ் அத்வானி / Pankaj Advani]
C
[ரவிச்சந்திரன் அஷ்வின் / Ravichandran Ashwin]
D
[கிடாம்பி ஸ்ரீகாந்த் / Kidambi Srikanth]
Question 45 Explanation: 
 நவம்பர் 27 அன்று மும்பையில் நடைபெற்ற இந்திய விளையாட்டு விருதுகளின் முதற்பதிப்பில், 2017ல் 4 சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு “ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்” விருது வழங்கப்பட்டது. தனிநபர் விளையாட்டுப் பிரிவில், ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பி.வி.சிந்துவுக்கு, “ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை” விருது வழங்கப்பட்டது.  அணி விளையாட்டுப் பிரிவில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ‘கிளப் 300’ஐ அடைந்த அதிவேக பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு, “ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்” விருது       வழங்கப்பட்டது. அதேசமயம், மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி மித்தலி ராஜ்க்கு, “ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனை” விருது வழங்கப்பட்டது.  ICC மகளிர் உலகக்கோப்பை போட்டியில் 2ம் இடத்தைப்பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ‘ஆண்டின் சிறந்த அணி’யாக அறிவிக்கப்பட்டது. இந்திய விளையாட்டு விருதுகள் என்பது இந்திய விளையாட்டு மேம்பாட்டுக்கு ஆதரவு அளிப்பதற்காக, விராத் கோலி மற்றும் சஞ்சீவ் கோயங்கா ஆகியோரின் பங்களிப்புடன் கூடிய ஒரு முயற்சியாகும்.
Question 46
ஏர் இந்தியாவின் புதிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் யார்?
A
[ராஜீவ் பன்சால் / Rajiv Bansal]
B
[அஷ்வனி லோஹனி / Ashwani Lohani]
C
[பிரதீப் சிங் கரோலா / Pradeep Singh Kharola]
D
[ரித்துராஜ் சிங் / Rituraj Singh]
Question 46 Explanation: 
 ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக பிரதீப்சிங் கரோலா நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்திலிருந்து IAS பதவிக்கு தேர்வான இவர் தற்போது, பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவுள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது இடைக்கால தலைவராக பதவிவகிக்கும் ராஜீவ் பன்சாலுக்கு பிறகு அவர் இந்தப்பொறுப்பை ஏற்கவுள்ளார்.
Question 47
யார் தலைமையின் கீழ், இந்திய ஆடவர் தேசிய அணி 2017 ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது?
A
[தீபக் நிவாஸ் ஹூடா / Deepak Nivas Hooda]
B
[விஷால் பரத்வாஜ் / Vishal Bharadwaj]
C
[அஜய் தாக்கூர் / Ajay Thakur]
D
[ராகுல் செளதாரி / Rahul Chaudhari]
Question 47 Explanation: 
 நவம்பர் 26 அன்று ஈரானின் கோர்கனில் நடைபெற்ற 2017-க்கான ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தானை 36-22 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய ஆண்கள் கபடி அணி தங்கம் வென்றுள்ளது. ஈரானின் கோர்கனில் நடைபெற்ற 2017- க்கான இதே ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் தென் கொரியாவை 42-20 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்றுள்ளது.
Question 48
கலாச்சார உறவுகளுக்கான இந்திய கழகத்தின் 3வது புகழ்பெற்ற இந்தியவியலாளர் விருது பெற்றவர் யார்?
A
[ஹிரோஷி மருய் / Hiroshi Marui]
B
[சோ யுன் ரென் / Chao Yuen Ren]
C
[ஷின்யா யமனகா / Shinya Yamanaka]
D
[அகிரா எண்டோ / Akira Endo]
Question 48 Explanation: 
 ஜப்பானிய பேராசிரியரான ஹிரோஷி மருய்க்கு, 2017-ம் ஆண்டின் கலாச்சார உறவுகளுக்கான இந்திய கழகத்தின் 3வது புகழ்பெற்ற இந்தியவியலாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியவியலுக்கான இவரின் அளப்பரிய பங்களிப்பிற்காக, புது டெல்லியில் நடைபெற்ற விழாவில், இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இவ்விருதை அவருக்கு வழங்கினார்.  இந்திய தத்துவவியல் மற்றும் பௌத்த ஆய்வுகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிரியர் மருய் பணியாற்றியுள்ளார். இவரின் பல புகழ்பெற்ற பிரசுரங்களும், ஆராய்ச்சிக்கட்டுரைகளும் உலகெங்கும் பல பாடங்களின் இறுதி அத்தியாயமாக கருதப்படுகின்றன.
Question 49
எந்த கட்டண நுழைவு மூலம், இந்தியாவின் முதல் கிரிப்டோ நாணய பரிமாற்றமான ‘Coinome’ தொடங்கப்பட்டுள்ளது?
A
[டைரக்பே / Direcpay]
B
[சிட்ரஸ் பே / Citrus Pay]
C
[பில்டெஸ்க் / Billdesk]
D
[பேசிப்பி / Payzippy]
Question 49 Explanation: 
 இந்தியாவின் முதல் கிரிப்டோ நாணய பரிமாற்றமான ‘Coinome’ஐ, மும்பையை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் கட்டண நுழைவு நிறுவனமான பில்டெஸ்க் தொடங்கியுள்ளது. பில்டெஸ்க்கின் ஒரு முழுமையான துணை நிறுவனமான Hatio Innovations நிறுவனத்தின் கீழ் இந்த ‘Coinome’ இணைக்கப்பட்டுள்ளது.  உடனடி e-KYC-ன் மூலமாக பயனர்கள் இதில் இணையமுடியும். மேலும், அனைத்து நாட்களிலும் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ளமுடியும். தற்போது​​ Coinome, Bitcoin மற்றும் Bitcoin Cash வர்த்தக வசதிகளை மட்டும் வழங்குகிறது, 2018 வாக்கில் 20 முக்கிய கிரிப்டோ நாணயங்களை ஆதரிக்க திட்டமிட்டுள்ளது.
Question 50
எந்த நாடு, சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின், 7வது இராணுவ உலக விளையாட்டுகள்–2019ஐ நடத்தவுள்ளது?
A
[இந்தியா / India]
B
[ரஷ்யா / Russia]
C
[சீனா / China]
D
[தென் கொரியா / South Korea]
Question 50 Explanation: 
 சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின், 7வது இராணுவ உலக விளையாட்டுகள்–2019ஐ, 2019 அக்டோபர் 18–27 வரை மத்திய சீனாவின் ஊபி மாகாண தலைநகர் வுகன் நகரில் நடைபெறும். இது ராணுவத்தினருக்கான கண்கவர் விளையாட்டுப் போட்டியாகும்.  27 பிரிவுகளில் 329 போட்டிகளைக்கொண்டுள்ள இதில், 100க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் மண்டலங்களிலிருந்து 8,000 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பன்னாட்டு நிகழ்வாகும், மேலும் இது சீனா மற்றும் அதன் ராணுவத்தைப்பற்றி அறிந்துகொள்ள வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு ஒரு வாய்ப்பினை வழங்குகிறது.  இதன் சின்னத்தில், ஒரு புறா, ஒரு நட்சத்திரம், நாடாக்கள் மற்றும் பிற கூறுகள் உள்ளன மற்றும் இது ‘பிங் பிங்’ என்று அழைக்கப்படுகிறது. இது சீனாவில் உணவுக்கு பயன்படும், பொதுவாக ‘தண்ணீரில் பாண்டா’ என அறியப்படும் ஓர் அபாயகரமான மீனை அடிப்படையாகக்கொண்டது.  இந்த விளையாட்டுக்கான முழக்கம் “ராணுவத்தின் சிறப்பு, உலகின் அமைதி” என்பதாகும். 1995ல் ரோம் நகரில் தொடங்கப்பட்ட இந்த விளையாட்டுகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Whatsapp Group

Telegram Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!