Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
JobsTnpsc

Tamil Motivational Lines For Tnpsc Govt Jobs Aspirants

Tamil Motivational Lines For Tnpsc Govt Jobs Aspirants:


நண்பர்களே,

தோல்வி கண்டால் தான் வெற்றி காண முடியும்.

போட்டிபோடாமல் என்ன தேவை வெற்றிக்கு இங்கு.

 

போட்டியாளர்கள் இங்கு வெற்றி பெறுவதில்லை.

வெற்றிதான் இங்கு போட்டியாளர்களை அடைகிறது.

 

இதுவும் கடந்து போகும்.

 

இதைவிட பெரிய சவாலையும் கஷ்டங்களையும் கொடுத்தாலும் வெற்றி கொள்ளும் வெறியில் இருங்கள்.

 

தேனில் ஊறிய பலாவைப் போல் ஊறிப் படியுங்கள். உங்கள் வாழ்க்கை இனிமையாகும்.

 

கஷ்டப்பட்டவனுக்கு மட்டுமே இங்கு வெற்றி.

 

ஓடிக்கொண்டே இருங்கள்  சிறு சிறு வாசிப்புகளுடன்…

 

நம்மால் முடியாதது யாராலும் முடியாது…

 

நாம் அதிகம் பேசக்கூடாது, செயலில் இறங்குங்கள்… அடுத்தவர்களை நம்மை பற்றி பேச வையுங்கள்.

 

இன்று உங்களை ஏளனம் செய்பவன் நாளை உங்களை புகழ்வான். அவனை கண்டுகொள்ளாமல் செல்லுங்கள்.

 

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண 
நன்னயம் செய்து விடல். 

 

யாரையும் பார்த்து பொறாமை கொள்ள நீ ஒன்றும் தகுதியற்றவன் இல்லை. உன் தகுதிக்கான வேலை காத்துகொண்டு இருக்கிறது.

 

அதிகாலையில் எழு. சீக்கிரம் இரவில் தூங்கு. திட்டமிட்டு படி. ஒரு ஒரு பாடமாக சிறு சிறு வாசிப்புடன் பொறுமையாக படி.

 

அரசு வேலைக்கு ஆறு மாதம் தன்னை அர்ப்பணி.

 

எப்பொழுதும் நேர்மறையான எண்ணங்களை உன்னில் விதை.

 

உன்னை ஒரு வீரனாக கற்பனை செய்துகொள். இறுதிவரை போட்டித்தேர்வில் போரிடு. வெற்றி நமதே. அரசு வேலையும் நமதே. நாளையும் நமதே.

 

என்றும் உங்களுடன்

குமரகுரு

Winmeen.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!